ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஆராதனப்பெருமாள் -ஸ்ரீ இள வாயர் கொழுந்து
ஸ்ரீ பெரிய ஜீயருடைய திருக் குமாரரான ஸ்ரீ ராமானுஜ ஐயன்
ஸ்ரீ ராமானுஜ ஐயன் அவர்களின் திருக் குமாரர் ஸ்ரீ அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் என்ற திரு நாமம் சூட்ட ஸ்ரீ பெரிய ஜீயர் பணித்தார்
அவருக்கு இரண்டாம் திருக் குமாரரும் திரு அவதரிக்க -அவருக்கு ஸ்ரீ பெரியாழ்வார் ஐயன் என்ற திரு நாமம் சூட்டப் பணித்தார்
விளக்கு ஏற்றின பெரு விளக்கு போல் பிரகாசித்தனர்
ஸ்ரீ ஜீயர் நாயனாருக்கு ஸ்ரீ பாஷ்யம் பிரதிவாதி பயங்கர அண்ணனும்
ஈடு கால க்ஷேபம் கோயில் கந்தாடை அண்ணனும் ப்ரசாதித்து அருளினார்கள்
இவர் உபதேச ரத்ன மாலையை வடமொழியில் ஸ்லோகமாக அருளிச் செய்துள்ளார்
பராங்குச நக்ஷத்ர மாலையையும் சாதித்து அருளி உள்ளார்
சீராரும் வர முனிவன் செழும் குலத்தோன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோம் வாழியே
பாராரும் எதிராசன் பதம் பணியுமவன் வாழியே
பாடியத்தின் உட் பொருளை பகருமவன் வாழியே
ஆரம் சூழ் குருகையில் அவதரித்தோன் வாழியே
ஆழ்வார்கள் கலைப் பொருளை ஆதரிப்போன் வாழியே
வரத குரு கருணையால் வாழ்வுடையோன் வாழியே
வான் சீர் நயினார் மலர்ப்பதங்கள் வாழியே
பாகவதர் வாழ பராங்குசன் தன் சீர் வாழ
தமுடன் வந்து அணைந்தோன் தாம் வாழ
போதமிகு தென்னரங்கம் வாழ சீயர் நயினார்
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
————-
அஸ்மாஸூ வத்சல தயா க்ருபயா ச பூயஸ் ஸ்வேச்சா வதீர்ணமிவ -ஸும்ய வரம் முநீந்த்ரம் –
ஆச்சார்ய பவ்த்ரம் அபிராம வரர்பிதாநம் அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி –தனியன் –
மா முனிகளே வாத்சல்யம் கிருபை அடியாக நித்ய விபூதியில் இருந்து மீண்டும் திருவவதரித்தாரோ என்று சங்கிக்க வேண்டும் படி –
அவரோடு ஓக்க ஞான அனுஷ்டானங்கள் உடையவராய் -அவருடைய திருப் பேரனார் -பரம காருணிகராய்-அபிராமவராச்சார்யர் என்று வட மொழியிலும்
ஜீயர் நாயனார் என்று தென் மொழியிலும் -வழங்கப் பெற்ற ஆசிரியரை வணங்குகின்றேன் –
லோகார்ய வர்ய சரணாம் புருஹே ப்ரபத்திம்
லோகாவநாய க்ருதவான் சமுதார தீர்ய
ஸும்யோ பயந்தரு முனி பவுத்ர மஹம் ப்ரபத்யே
ஸும்யோ பயந்தரு குரும் ஆத்ம விதாம் ப்ரதாநம்–தனியன் –
லோகார்ய வர்ய சரணாம் புருஹே ப்ரபத்திம்-பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் -குமார லோகாச்சார்யார் ஸ்வாமிகள் இடம் பிரபத்தி
புருஷகார ரூபமாக -பற்றுகிறார்–அடியார்க்கு என்னை ஆட்படுத்தி அருளிய விமலன்
செல்வர் பெரியர்–அவர் தம் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது நாம் காணவோமே
மார்கழி -மார்க்க ஸீர்ஷம்
லோகங்களே வரிக்கும் படியான பிரபாவம் கொண்டவர்
லோகாவநாய க்ருதவான் சமுதார தீர்யம் -உலகமே வாழும் படி
தொண்டர்க்கு அமுது -பக்தாம்ருதம் -தீ -ஞான விசேஷம் -ப்ரகாஸிதமான —
ஸும்யோ பயந்தரு முனி பவுத்ர மஹம் ப்ரபத்யே-சாஷாத் மா முலைகளின் பேர -அபிராம வரதாச்சார்யரை சரணம் அடைவோம்
ஸும்யோ பயந்தரு குரு மாத்ம விதாம் ப்ரதாநம் -பிரதானமாக இத்தையே கொண்டு -அவரே இவர் என்னும்படி திரு அவதரித்தவர் அன்றோ
ஸ்ரீ மன் யதீந்த்ர சரண ப்ரவண அந்தரங்க
தீ பக்தி சாந்தி முக ஸத் குண வாரி ராஸே
ஸ்ரீ வத்ஸ வம்ஸ வர மௌத்திக கார்ஷ்ண பாதே
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-
ஸ்ரீ மன் யதீந்த்ர சரண ப்ரவண அந்தரங்க -யதீந்த்ர பிரவணத்து அந்தரங்கர்
தீ பக்தி சாந்தி முக ஸத் குண வாரி ராஸே –ஞானம் –தீ விழித்து -ஞான கடாக்ஷம் –
ஞானம் கனிந்த நலம் -மயர்வற மதி நலம் -சாந்தி -வைராக்யம்
போன்ற ஸத் குணக்கடல் –அனைத்துக்கும் கொள் காலம் இவரே
வாக்குல பூஷண பாஸ்கர –கலி திவாகரன் ராமானுஜ திவாகரம் -நாமும் ஸூர்ய குலமே
ஸ்ரீ வத்ஸ வம்ஸ வர மௌத்திக கார்ஷ்ண பாதே -வள்ளல் வடக்குத் திரு வீதிப்பிள்ளை திருகுமாரர்
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -தேவாதி ராஜர் -பேர் அருளாளப் பெருமாள் அம்சம்
நம்பிள்ளை திருநாமம் சாத்தப் பெற்றவர்
இவரது அடி இணைகளே நமக்குத் தஞ்சம் –
ந்யாஸம் -அடைக்கலம் -நித்தியமாக -வர்த்தமானம் போக்யம் அன்றோ –
————
ஸ்ரீ மத் பராங்குச வஸோ அம்ருத வார்தி லப்த
ஸ்ரீ காந்த ஸத் குண மணே ஸ்ரித பவ்ய மூர்த்தே
நாதார்ய யாமுந முநீந்த்ர முகார்ய ஸூக்தி
தத்வார்த்த நிஷ்ட சரணவ் சரணம் ப்ரபத்யே -2-
ஸ்ரீ மத் பராங்குச வஸோ அம்ருத வார்தி லப்த -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலை –
இதுவே பக்தாம்ருதம் தனியனாக நாதமுனிகள் அருளிச் செய்தார்
வார்தி லப்த -வ்ருத்தி யாக வியாக்யானங்களில் அருளிச் செய்யப்பட்டவை அனைத்தையும் கிடைக்கப் பெற்ற
ஸ்ரீ காந்த ஸத் குண மணே -திருமாலின் கல்யாண குணங்களின் கொள் காலமாக உள்ளவரே
ஸ்ரித பவ்ய மூர்த்தே -ஆஸ்ரித வர்களையும் பவ்யமாக இருந்த திவ்ய மங்கள விக்ரஹம்
சம்பந்தி சம்பந்திகளுக்கும் மோக்ஷம் என்றதுமே ஜந்துக்கள் மரங்கள் இவற்றையும் ஸ்பர்ஸித்து பேற்றை அளித்தவர் அன்றோ
மாதவிப்பந்தல் மேல் பல் கால் குயில் இனங்கள் -அருளிச் செய்த இனிய வியாக்கியானங்கள்
பராங்குச அங்கி -அனைத்து அங்கங்களையும் உப அங்கங்களையும் ராமானுஜ நூற்றந்தாதியையும் சொன்னவாறே
நாதார்ய யாமுந முநீந்த்ர முகார்ய ஸூக்தி தத்வார்த்த நிஷ்ட –பூர்வாச்சார்யர்களுடைய அனைத்து ஸ்ரீ ஸூக்தி களையும் கொண்டே ஸ்ரீ வசன பூஷணம் அருளிச் செய்துள்ளார் அன்றோ-திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக நிஷ்டராய் இருந்து –
முனி த்ரய -நாத யமுன ராமானுஜ மணவாள ஜீயர் பர்யந்தம்
சரணவ் சரணம் ப்ரபத்யே -இவரையே தஞ்சமாகப் போற்றுவோம்
————
பத்மா ஸஹாய கமநீய பாதாப்ஜ யுக்ம
ப்ரேமாப்தி மக்ந ஹ்ருதய ஆஸ்ரித கல்ப வ்ருஷ
ஸ்ரீ மத் சடாரி கலிஜிந் முக ஸூரி ஸூக்தி
நித்ய ஆஸ்பதாந்தர குரோ சரணவ் ப்ரபத்யே -3-
பத்மா ஸஹாய -ரக்ஷிக்க பிராட்டி சந்நிதி அவஸ்யம் –
கமநீய பாதாப்ஜ யுக்ம -பரதனுக்கு புண்யமே பாபமானது -குகனுக்கு பாபமே புண்யம் ஆனதே
பாபமும் புண்ணியமும் அவன் திரு உள்ளக் கருத்துக்கு மாறியும் ஒத்தும் போவதே
ப்ரேமாப்தி மக்ந ஹ்ருதய ஆஸ்ரித -படியாய் கிடந்தது அவன் பவள வாய் காண வேண்டுமே
அவனது திரு முக விலாஸமே வேண்டுவது
அப்தி -சமுத்திரம் -அதில் மக்நம் -ஆழ்ந்து -இருக்கும் ஆஸ்ரிதர்கள்
கல்ப வ்ருஷ -எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
மாலுக்கு -மாலை நண்ணி தொழுது எழுமினோ வினை கெட
பூர்வாச்சார்களே இங்கு கற்பகம்
ஸ்ரீ மத் சடாரி கலிஜிந் முக ஸூரி ஸூக்தி -அருளிச் செயல்களில் உள்ள அர்த்தங்களையே திரு உள்ளத்தில் கொண்டு
நித்ய ஆஸ்பதாந்தர –இதுவே கால ஷேப அர்த்தமாகக் கொண்டு -அவற்றிலே ஆழ்ந்து அருளிச் செய்த ஸ்ரீ வசன பூஷணாதிகள் அருளிச் செய்த
குரோ சரணவ் ப்ரபத்யே -சரணம் அர்த்தாத ஸித்தம் -ஸ்ரோத்ரியம் -ஸமித் பாணிம் ப்ரஹ்ம நிஷ்டர்
ராமாநுஜார்ய கருணாதிசய ப்ரணீத
ஸ்ரீ பாஷ்ய நித்ய பரி ஸீலந ஸீல சேத
தத் பாத பத்ம யுக லார்ப்பித ஸர்வ பார
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -4-
ராமாநுஜார்ய கருணாதிசய ப்ரணீத ஸ்ரீ பாஷ்ய –ஸ்வாமி யுடைய அதிசய கருணையால் -அருளிச் செய்த -9000 கிரந்தங்கள் -இவற்றில் ப்ரவணம் மிக்கு
நித்ய பரி ஸீலந ஸீல சேத -நித்தியமாக பரி ஸீலநம் பண்ணிக் கொண்டு -பகவத் ஸீல குண அனுபவத்தில் ஆழ்ந்து இவரும் ஸீலவான் ஆகி அருளி
ஸ்ருத பிரகாசிகா பட்டர் -வேத வியாச பட்டர் உடைய திருப்பேரனார்-36000 படி வியாக்யானம் –
ஸ்நேஹிதனுக்கு லக்ஷணம் மூன்று பாஷ்யகாரர் -முதலில் அஸ்தான பய சங்கித்தவம்
தோஷம் கண்ணில் பட்டாலும் காணாக் கண் இட்டு இருந்து-அதிலேயே குணம் பார்ப்பவன்
இது போன்ற விஷயங்களில் ஆழ்ந்து -அதிலேயே ப்ரவணராய் இருந்த பிள்ளை லோகாச்சார்யார்
தத் பாத பத்ம யுக லார்ப்பித ஸர்வ பார -உடையவர் இடம் ஸர்வ பாரங்களை பொகட்டு –
நம்முடைய -ஸர்வ பாரங்களை நமக்காகவே அவரிடம் பொகட்டு -அருளிய
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -பிள்ளை லோகாச்சார்யரை தஞ்சமாகப் பற்றுவோம்
————
கோவிந்த ஸூரி குருகேஸ்வர கூர நாத
ஸ்ரீ தேவ ராஜ முனி ஸூக்திஷு ஸம் ப்ரவீண
தத்வார்த்த சார ரசிதாதுல ஸூ ப்ரபந்த
தேஷாம் ப்ரியார்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -5-
கோவிந்த ஸூரி ஸூக்திஷு ஸம் ப்ரவீண–எம்பார் பூர்வாஸ்ரம திரு நாமம் -ஸம்யக் ந்யாஸம் சந்நியாசி -எம்பெருமானார் இடம் நன்றாக ந்யாஸம் செய்து
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருக்க பட்டருக்கு உபதேசம்
குருகேஸ்வர -ஸூக்திஷு ஸம் ப்ரவீண-திருக்குருகைப்பிரான் பிள்ளான் -ஆறாயிரப்படி
கூர நாத -ஸூக்திஷு–ஸம் ப்ரவீண–ஆழ்வான் ப்ரஸித்தி -ஸ்தவங்கள் -உபய காவேரி நடுவில் சாதித்து -ஸ்ரீ பாஷ்யம்
ஸ்ரீ தேவ ராஜ முனி ஸூக்திஷு ஸம் ப்ரவீண–தேவ ராஜன் பேர் அருளால் -அருளாளப்பெருமாள் எம்பெருமானார் –
ஞான சாரம் ப்ரமேய சாரம் -இவற்றில் நன்றாக ப்ராவண்யம் கொண்டவர்
ஸம் ப்ரவீண–இவை அனைத்திலும் அதீத ப்ராவண்யம் கொண்ட ஸ்வாமி பிள்ளை லோகாச்சார்யார்
தத்வார்த்த சார ரசித அதுல ஸூ ப்ரபந்த -சமானம் இல்லாத அஷ்டாதச ரஹஸ்யங்கள் -பூர்வர் வசன பூஷணங்களைக் கொண்டு சாதித்த பிரபந்தங்கள்
தேஷாம் ப்ரியார்ய –பூர்வாச்சார்யர்கள் அனைவருக்கும் மானசீகமான பிரியம் கொண்டவர்
அவர்கள் உகக்கும்படியான பிரபந்தங்கள் சாதித்து அருளிய ஸ்வாமியை
சரணவ் சரணம் ப்ரபத்யே –
—————–
பட்டார்யா ஸூரி நிகமாந்த முனீந்த்ர நிஷ்டா
நிஷ்ணாத தத் பத ஸரோஜ நிவிஷ்ட பக்தே
அஸ்மா த்ருசாம் ச ஜகதாம் மஹதாம் ஸ்ரவ்யவ்
ப்ராப்யவ் ஸூஸீல சரணவ் சரணம் ப்ரபத்யே -6–
பட்டார்யா ஸூரி நிஷ்டா நிஷ்ணாத -பராசர பட்டர் ஸ்ரீ ஸூக்திகளிலும் –மிதுன லாலி தத்வம் –
யாம் பெரும் சம்மணம் -தோள் மாலை சாத்தப்பெற்றாள் -கேட்டதும் திருவடிகளைப் பற்றி போர நடவாதே என்றார் பெருமாள் என்று ஐந்து வயதில் சொன்னதைக் கேட்டு ஆழ்வான் உகந்தான் அன்றோ
நிகமாந்த முனீந்த்ர நிஷ்டா நிஷ்ணாத -நஞ்சீயர் ஸ்ரீ ஸூக்திகளிலும் –பட்டர் படுக்கையில் ஈரம் கண்டு உகப்பவர் –
ஒன்பதினாயிரப்படி -பல வியாக்கியானங்களை அருளிச் செய்தவர்
நிஷ்டா நிஷ்ணாத –இவற்றிலே மக்நராய் இருந்து
தத் பத ஸரோஜ நிவிஷ்ட பக்தே –இவர்கள் இடம் பக்தி கொண்டே
அஸ்மா த்ருசாம் ச ஜகதாம் மஹதாம் ஸ்ரவ்யவ் –சரங்கள் -போல் சமர்ப்பணம் பண்ணியவர்
அஸ்மாத் நம்மையும் சேர்த்துக் கொண்டு அருளிச் செய்கிறார் –
ப்ராப்யவ் ஸூஸீல சரணவ் சரணம் ப்ரபத்யே -இவரது திருவடிகளே நமக்குத் தஞ்சம்
வர்த்த மானம் -அப்பொழுதைக்கு அப்போகுது நவம் நவமாய் இருக்குமே
————–
ஸ்வாமின் ஜகத் குரும் அஹோ கலி வைரி தாஸம்
த்யாயந் நிதாந்தம் அநகம் புலகாந் விதாங்க
ஸேவ்யவ் ஸமஸ்த ஜகதாம் நிகிலாத்ம பந்தோ
கம்யவ் தவ ஆர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -7–
ஸ்வாமின் ஜகத் குரும் அஹோ கலி வைரி தாஸம்-நம்பூர் வரதாச்சார்யாருக்கு கந்தாடை தோழப்பர் சாத்திய திரு நாமம் கொண்டே
நமது ஸ்வாமிக்கும் ஆச்சார்யர் அருளால் திரு அவதரித்ததால் வள்ளல் வடக்கு திருவீதிப்பிள்ளையும் சாத்தி அருளினார் அன்றோ
பிள்ளாய் -பஸ்மம் சன்ன இவா -நீர் பூத்த நெருப்பு போல் ஞானம் மிக்கு இருந்தார் அன்றோ
ஈடு சாதித்த பெருமை நம்பிள்ளைக்கும் உண்டே -பெரிய பெருமாள் தமது அர்ச்சா திரு மேனியையும் குலைத்து எழுந்து இருந்த பெருமையும் உண்டே
நடுவில் திரு வீதிப் பிள்ளை -ஸத்யேந லோகான் ஜயதி –வ்ருத்தாந்தம் –
கவியின் பொருள் எல்லாம் கற்கலாம் –திருக்கலி கன்றி தாஸர்
த்யாயந் நிதாந்தம் அநகம் புலகாந் விதாங்க–குற்றம் அற்ற -புழக்கங்க தேகம் -ஈடுபாடு
ஸேவ்யவ் ஸமஸ்த ஜகதாம் நிகிலாத்ம பந்தோ–ஸமஸ்த ஆத்மாக்களும் பந்து இவரே
கம்யவ் தவ ஆர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே-மீண்டும் மீண்டும் தஞ்சம் அடைகிறோம்
துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் தம்முகப்பால்
என்ன உலகாரியரோ என்று உரைக்கப் -பின்னை
உலகாரியர் என்னும் பேர் நம் பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்றும் மேல்————51-
————-
ஸ்ரீ கிருஷ்ண பாத கருணார்ப்பித வேத மௌலி
யுக்ம அகிலார்த்த கருணா நிலய த்வதீயவ்
வஜ்ர த்வஜ அங்குச ஸரோஜி நிசங்க சிஹ்னவ்
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -8–
ஸ்ரீ கிருஷ்ண பாத கருணார்ப்பித -வள்ளல் வடக்குத் திரு வீதிப் பிள்ளை -ஈடு ஏடுபடுத்தி அருளிய வள்ளல் —
வேத மௌலி யுக்ம -வேத வேதாந்த -தமிழ் மறைகளையும்
அகிலார்த்த -அனைத்து பொருள்களையும் தேக்கி வைத்து அருளி
கருணா நிலய த்வதீயவ் வஜ்ர த்வஜ அங்குச ஸரோஜி நிசங்க சிஹ்னவ் –சிஹனங்கள் பதிந்த திருவடிகள்
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -அடியேன் தஞ்சம் அடைகிறேன்
காந்தோ பயந்த்ரு குரு வர்ய ஸதா நுபாவ்யவ்
கூராந்வ யோத்தம ஸூரம்ய வராபி நந்த்யவ்
போம் யாவ நந்த புர பாஹ்ய வநாந்த வாஸி
நாராயணேட்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -9-
காந்தோ பயந்த்ரு குரு –திருவாய் மொழிப்பிள்ளை
வர்ய ஸதா நுபாவ்யவ் —எப்பொழுதும் அனுபவித்து இருக்கும் -விளாஞ்சோலைப்பிள்ளை – நாராயணன் இயல் திரு நாமம்
ஸப்த காதை இயற்றி அருளியவர்
கூராந்வ யோத்தம ஸூரம்ய வராபி நந்த்யவ்-கூர குலோத்தம தாஸர்-இவரும் பிள்ளை லோகாச்சார் ஸத் சிஷ்யர்
போம் யாவ நந்த புர பாஹ்ய வநாந்த வாஸி -திருவனந்தபுரத்தில் வெளியிலே நித்ய வாஸம் செய்து அருளி –திருவாய் மொழிப் பிள்ளைக்கு ஸ்ரீ வசன பூஷணார்த்தம் அருளிச் செய்து
புத்ர க்ருத்யம் -சரம கைங்கர்யமும் செய்து அருளினார் இவருக்கும் –
நாராயணேட்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –
———
ஸ்ரீ ஸைல நாத குரு தீப்ரஸ யார்ய வந்த்யவ்
ஸும்யோ பயந்த்ரு முனி மானஸ ராஜ ஹம்சவ்
அஸ்மாகம் அப் யதிஸய அநக நித்ய போக்யவ்
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே–10-
ஸ்ரீ ஸைல நாத குரு -மானசீகமான குரு பிள்ளை லோகாச்சார்யார்
தீ ப்ரஸ யார்ய வந்த்யவ்–ஞான கடாக்ஷம் மூலம் பெற்ற ப்ரஸாத லப்ய
ஸும்யோ பயந்த்ரு முனி மானஸ ராஜ ஹம்சவ் -சாரதமம் அள்ளிக் கொடுக்கும் கோ ததாதி —
மந்த்ர ராஜ மந்த்ர ரத்னம் -திருவாய் மொழியின் சாரங்கள் -ஆஸ்ரித பாரதந்த்ரன் -சேஷனாக —
வேண்டிய வேதங்கள் ஓதும் பெரியாழ்வார் -மங்களா ஸாஸன பரர்கள்
அஸ்மாகம் அப் யதிஸய அநக நித்ய போக்யவ் –பொய்யில்லாத மா முனிகள் -மெய்யயையே காட்டி அருளும் –
அதிசய பர ப்ரஹ்மத்தைக் காட்டி அருளி -ரஷ்ய ரக்ஷக -ஸ்வாமி சொத்து பாவம் போல்வன காட்டி அருளி –
லோகார்ய வர்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -தஞ்சம் புகுகிறேன்
——
அஸ்மத் குலாதிப ஜகத் குரு வர்ய தேவ
வாதீப கேஸரி முனீந்த்ர ஸமாஸ்ரிதாங்க்ரே
அஞ்ஞம் க்ருதாக ஸம் அபீஹ பவத் கிருபாயா
பாத்ரம் குருஷ்வ பகவன் ஸரணாகதம் மாம் –11-
அஸ்மத் குலாதிப ஜகத் குரு வர்ய தேவ –குரு பரம்பரையில் அந்வயம் உண்டே -ஜெகதாசார்யர்
வாதீப கேஸரி முனீந்த்ர ஸமாஸ்ரிதாங்க்ரே -ப்ரதிபாத பயங்கரர் போல்வாரும் ஆஸ்ரயிக்கும் படியான திருவடித் தாமரைகள்
அஞ்ஞம் க்ருதாகஸம் அபீஹ -நைச்யாநு சந்தானம்
பவத் கிருபாயா பாத்ரம் குருஷ்வ பகவன் ஸரணாகதம் மாம் –இசைவித்து அடியேனை ஆட் கொண்டு அருள வேண்டும்
கைங்கர்ய பிரார்த்தனை -அல்ல -சேதனன் பாசுரம் கேட்டவாறே திருமுகம் உகக்குமே-ஸித்த உபாயம் உபேயம் -ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம்
——————————–
ஸ்ரீ குமார லோகாச்சார்ய மங்களா ஸாஸனம்
——————————————————–———————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஜீயர் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply