அயோத்தியா காண்டம் சக்கிரவர்த்தி முடிசூட ஸ்ரீராமரை வேண்டுதல் மணவாள வனிதை மணிச் சீதையுடன் அயோத்தி மேவி ராமன் என இருந்த நாளில் கனிவுபெறப் பரதனை சத்துருக்கனனோடே கைகயன் பால் விடுத்து சின்னாள் கழிந்த பின்பு இனிய தசரதன் வதிஷ்டன் மந்திரி மாரும் இசைந்தபடித் துறந்திட ராகவனைக் கூவித் தனி மகுடம் புனை யெனவே அவனுக் கன்பாய்ச் சாற்றுவான் தன் கவலை ஆற்றுவானே பல்லவி இந்த மனுத்தர வேணும் மகனே - ராமா இந்தமனுத்தர வேணும் மகனே ( இந்த ) இந்த மனுத்தர் வேணும் * இந்திரனேபுவி ஆளத் தகும் நீஉத் மகனே - ராமச் தமனே ( இந்த ) அறுபதி னாவிர வருஷ அதிலே காணாதெல்லாங் கண்டறிந்தேன் பருவதமோ என் காயஸ் பார்க்க வேணும் என் கண்ணார நீ பாராளும் காலம் -- வாழ்ந்தேன் இந்திர சாலம் தூலம் இனிப் கோலம் ( இந்த ) காரம் முடியாத மோகாந்த முதுமையிலும் துறவாமல் இருந்தென்ன சாரம் குடி தாங்கி எனக்கோர் உபகாரம் குவலயம் கைக் கொண்டு முத்தி கொடுப்பதுன்றன் பாரம் ( இந்த ) ஒருவன் அறுபதினாயிரத் உதவி முத்தி கொடுத்தானே பகிரதன் முன் இருநிலத்தில் அது போல் உன் எனக்கு முத்திதந்தாள்வாய் இப் தோரை - கங்கை னோரை பேரை பாணர ( இந்த ) உள்ளத்தை உன்னோடே சொன் ஊமைகண்ட கனவாய் உள்ளடக்கி பிள்ளைக்கலி தீர்த்த பெரு பெரும் புவி நீகொள்ள முத்திபெறவேணும் னேனே - முன்னாள் சீனனே மானே நானே ( இந்த ) மலர்க்கையால் பிடிப்பாய் செங் கோலே - என் தன் வார்த்தை தடுக்காய் எனவே உரைத்தேன் ஒரு காலே தலைச்சுமை தந்தான் என்றென் மேலே தாழ்வாய் எண்ணாதே இனித் தாங்காதென் னாலே காலே வாழையடி வாழையென மண்டலத்தை ஆண்ட துண்டு மன்னர் ஒரு சூழ் மதில் அயோத்தியை அது சுமந்தாள வேணும் என் தன் சொல்வழியி நீயும் போலே னாலே ( இந்த ) 7. குலத்தில் உள்ள குறையெல்லாம் குணத்தாலே உலகெல்லாம் மென் மேலே மலைக்கு மலையல்லவோ மண்டலத்தை நீ தாங்கினால் என் கவலை வாங்கும் - உன் தன் ஓங்கும் தாங்கும் நீங்கும் ( இந்த ) ஐம்பத்தாறு தேசத்து ராஜர்கள் வருதல் ஈங்கிவை இப்படி மகனன இசையக் கூறி இனிய தசரதராசன் கணிதர் சொல்லப் பாங்கு பெறு தேசராசர்க்கு ராமன் பட்டாபி ஷேகம் இன்றைக் கறிவீர் என்றும் நீங்களெல்லாம் அயோத்தி நகர் வருவீர் என்றும் நினைப்பினால் தன் ஓலை அனுப்பி விட்டான ஆங்கவரும் மிக மிகச் சந் தோஷம் மீறி அந்தந்த தேசம் விட்டே அணு கினாரே பல்லவி வந்தனர் எங்கள் கலியாண - ராமச் சந்திரன் முடிகாண ( வர் ) சரணங்கள் நாடும் வந்தனர் அந்தந்த தேசத்துள்ளோர் மன்னன் ராமனைச் சொர்ண முடி சந்திரிக ஓலையைக் கண்டெ திரே கொண்டு தம் தலை மேல் வைத்துக் கண்களிலே ஒற்றி ( வந் ) சோனா வங்களர் சிங்களர் மாளவர் மராடர் கன்னாடர் மகதர் கொங்கணர் டங்கணர் குச்சரர் குலிங்கர் கலிங்கர் தெலுங்கர் குருதர்கள் மச்சர் முதலாக ( வந் ) சேரலர் சாளுவர் உற்களர் பப்பரர் சேதிபர் குந்தளர் சித்தர் அவந்திகர் ஆரியர் சீனர் விதர்ப்பார் விதேநர்கள் ஒளட்டர் பராஷ்டிரர் சுராஷ்டிரர் முதலாக ( வந் ) என்று புண்டரீகக் கண் ராமனுக்கு முடி பூணச் செய்தான் இது காணப்பெற்றோம் பண்டு ஐம் பத்தாறு தேசத்து ராசரும் மன்றாடி மன்றாடிக் கொண்டாடிக் கொண்டாடி ( வந் ) திரு அயோத்தியை அலங்கரித்தல் தேசத்தில்வந்த ராசர் எல்லாம் தெசரதரா சனசமுகந் தனிலே கூடி நேசமுடன் ராமனுக்கு மகுடம் சூட்ட நினைந்தபடி செய்யெனவே மகிழ்ந்து கூற ஆசகலும் அயோத்திமா நகரில் வேந்தன் ஆனைமேல் துந்துமிகள் அடிப்பீர் என்னப் பூசுரரும் ராசர்களும் அறிந்து கொண்டு பூரிப்பார் நகரம் அலங் காரிப் பாரே விசைய துந்துபி அடித்தார் - நகர் எங்கும் தசரதன் அருளியமொழி படித்தார் திசைதிசை சொல்லி விடுத்தார் வாசலில் அசையும் விசைய கேதனம் எடுத்தார் பூரண கும்பம் அமைத்தார் தருவெங்கும் தோரணம் அழகுடனே சமைத்தாரி வாரணம் அலங் கரித்தார் முனிவர்கள் ஆரணம் முறை முறை ஆர்ப் பரித்தார் மாலிகை தொடுத்து வைத்தார் முத்து முளைப் பாலிகை பலபல படுத்து வைத்தார் ஆலயம் விளக்கு வித்தார் சோலையும் சாலையும் துலங்கு வித்தார் அத்திகள் துத்துக் குடை பிடித்து சித்திரம் கஸ்தூரி களபத்தால் சிந்தூரம் சந்தனத் தால் தரை பொருவாரும் - வெள்ளை வட்ட வருவாரும் புனைவாரும் சந்தன நனை வாரும் எழுதிடுவார் பரிமளச் மெழுகிடுவார் கந்தப் பொடிகள் இறைப்பார் மாவணப் பந்தலிட்டந் தரவெளி மறைப்பார் வானவர்கள் வந்து திரிவார் அடிக்கடி மேனகை ஊர்வசி நடம் புரிவார் கான வித்தைகள் படிப்பார் அதுக்கினம் ஆனகோகிலம் போலச்சதி பிடிப்பார் அங்கே எதிர் சொல்லுவார் இடங்காட்டி இங்கே இரும் இரும் எனச் சொல்லுவார் சிங்காசனம் அணிவார் ளசலை கண்காணவே இணையடி பணிவார் சடங்குகள் செய்வாரும் - சமித்துகள் இடம்படு தருப்பைகள் கொய்வாரும் உடந்தையாய்த் திரிவாரும் இடங்கண்டவர்க் கெலாம் சொரிவாரும் பொன் மழை ரம்பையர் தும்புரு நாரதர் செம்பொன் நடமாட வீணையில் இசைபாட மௌலிசூட - ராமற்குச் எழுந்தோட சம்பிரம் சொல்ல மன்னர் தாளம் துந்துமி மேளம் கோளம் - கிழிபட நீளம் சல்லரி பேரி மல்லரியொடு நரகெச சொல்லிய அண்ட எல்லையும் குமுறிடுமே இப்படிக் கொன் ஒப்பனை செய்வதேதென அப்போது தோய்ப் வெப்புடன் வந்தாளே குடி டாடி ராமனுக்கு நாடி பாடி - கூனியும் கேடி கூனி கைகேசியைக் கலைக்கவருதல் துதித்திடும் அயோத்தி ஆளும் சொர்ணமா முடிரா மற்கே பதித்திட வேணு மென்று பலரும் ஆர்ப் பரிப்பக் கண்டாள் இதைக்கலைத் திடுவேன் என்று ராமன்வில் உண்டை யாலே கொதித்திடும் மனத்தா ளான கூனியும் தான் வந் தாளே பல்லவி பொல்லாத கூனி வந்தா ளே கூனி வந்தா ளே ( கூனி) அநுபல்லவி போனநாள் ராமன் செய்த பகையால் பூனைபோ லிருந்து புலி போலப் காய்ந்து பாய்ந்து ( கூனி ) சரணங்கள் காலே மேலே அடுக்குமோ ராமனுக்கு அரசொருக் ஆர்கொடுக்கிறார் அத்தை அறிகிறேன் கெடுக்கிறேன் நான் என்று புறக்கடத் கிணறு வெட்டப்பூதம் புறப்பட்டாற் தாலே போலே (கூனி) உரைக்க கரைக்க பூமி பரதனுக்குத் தகும் என பூவை கைகேசிதன் மனமதைக் ராமன் பகையை நினைந்தடிவாய் நடுங்கிவிழுந் தலைந்து பெருமூச் நுரைக்க சிரைக்க ( கூனி ) கொட்டிய பஞ்சுபோல் உடம்பெல்லாம் கூனிகுறு குறுத்து வில்லைப்போல் பட்டங்கட்ட ஒட்டுவேனோ நான் என் பழைய பகையை எண்ணிப் பழமுள்ளு தளர்ந்து வளைந்து றளைந்து களைந்து ( கூனி ) சந்தானது போய் முடங்கிய சனைபோலே நரைத்துத் திரங்கிய இந்திராதி தேவருக்கு அனு இலங்கை ராட்சதர்கள் குடிக்கொரு காலி தோலி கூலி நீலி ( கூனி ) கைகேசி கூனியைக் கோபித்தல் வந்ததொரு கூனிமன தெரிச்ச லாலே வல்லியெனும் கைகேசி தனை எழுப்பி இந்தமன்னன் ராமனுக்கு மகுடம் சூட்ட எண்ணினான் என்னுமொழி சொல்லு முன்னே விந்தைமுக மலர்ந்து நவ ரத்தின மாலை வெகுமானம் செய்திடவும் அவமா னித்துச் சிந்தைவஞ்சத் தொடுகலைத்த கூனி நாக்கைச் சேதிப்பேன் என்று கைகை போதிப் பாளே பல்லவி தாலே ராமனுக்கு மன்னன் முடி தரித் நன்மையுண் டொருக் காலே ( ராம ) அநுபல்லவி பேச்சே பாமரமே உனக் கென்னடி பழம்ந ழுவிப் பாலில் விழுந்தாற்போ லாச்சே (ராம ) இந்தவார்த்தை சொன்னாய் எனக்கெவர் நேரடி பிர்ம்மாதியர்களும் வரு வாரடி இதுவே நல்ல வாயா டாதே பாரடி ஆரடி எனக்குச்சரி பரசுராமன் கெர்வம் தீர்த்தவன் டி நம்மை எல்லாம் காத்தவன் டி பட்டங்கட்ட ஏத்தவன் மூத்தவன் டி அவன் டி என் கண்மணி பரதன்பட்டம் கட்டாவிட்டால் நட்டியோ அவன் சர்க்கரைக் கட்டியோ நாலு பேரில் ( ராம ) என்பிள்ளை ராமன் நான் தா னென்ன வெட்டிப் போடுவேன்உன்னை எட்டியோ மட்டியோ (ராம ) கைகேசியைக் கூனி கலைத்தல் துங்கமம் அயோத்தி ஆளச் சொல்லிய ராம னுக்கே தங்கமா முடிகொ டாமல் சடைமுடி கொடுப்பேன் என்று பங்கயார் கூனி முன்னாள் பகையினா லேகை கேசி மங்கையாள் எதிரே பின்னும் வார்த்தையால் கலைக்கின் றாளே . கண்ணிகள் ராமன் முடி சூடுமென்ற பேய்மதி உனக்குவந்தது ஏதம்மா - என்ன வாதம்மா அடி சீமாட்டி உன் பிள்ளை பர தன் காமாட்டி ஆனானே என்ன செய்கையே அம்பா கைகையே உன் மகன் ஊர்க்கில்லாவேளை தன்மகனை முடிசூட்ட உன்னினாள் கோசலை எண்ணினாள் அந்த மன்னவனும் அவள் சொன்ன வார்த்தை கடவாமலுன்னை வாதித்தான் போதித்தான் கண்ணுள்ள போதல்லவோ கண்காட்சி என்பதறியாயோ கன்னியே என்ன உன்னியேர்க்கும் பண்ணிய பயிரில் அல்லவோ புண்ணியம் தெரியுமடி பாவியே என் தன் ஆவியே ஓடம் விட்ட ஆறும் அடிச்சுடுமென்று சொல்லும் வார்த்தை உள்ளதோ பெண்ணே இல்லதோ அதுபோல் ஈடழிந்துன் தாய்தந்தைமார் உன்னைவந் தடைந்த போதில் என்செய்வாய் எவரைக் கெஞ்சுவாய் ஊருக்கோ பால் வார்த்துண்பது உடலுக்கோ பால்வார்த் துண்பது ஓதடி செய்வ அடி ஆருக்கும் பெண்ணே மண்பிள்ளையானாலும் தன் பிள்ளை என்பது அறியாயோ ஒன்றும் குறிய யோ கௌசலை பிள்ளைக்குப்பட்டம் கட்டினால் உன் பிள்ளைக்கென்ன கட்டுவாய் எவரைக் கிட்டுவாய் பரதன் தவசியாய் சந்நியாசியாகிப் பரதேசம் போவதே நல்ல சமர்த்தடி கோபத்தை அமர்த்தடி சீரான கோசலை வீட்டுச் சிறுக்கிக்கும் சிறுக்கியாக செகுத்தாயோ - என்னை வகுத்தாயோ - அடி யாரார்கையிலென்ன பட வேணுமோ அதெல்லாம் பட லபித்ததே - தெய்வம் சபித்ததே பலநாளும் உன்னோடே நான் தான் பாடுபட்டதெல்லாம் வீணே பாதகி அடி தோதகி ஐயோ இலவு காத்த கிளிபோலே போகவோ நான் உன்னை நம்பி எண்ணினேன் - வீம்பு பண்ணினேன் நண்ணும் தன்மகன் மேலேபோல் உன் மகள் மேலே கோசலை நைவாளோ - பட்சம் -- செய்வாளே . அடி கண்ணில் எண்ணெயே கரிக்கும் பிடரியில் எண்ணெய் தானென்ன கரிக்குமோ அன்பு - தரிக்குமோ நாயகன் கோசலை பிள்ளையாகில் உனக்கென்னவரும் கம் நன்மை யே - சொல்வாய் உண்மையே ஆர்க்கும் தாய்கையிற்பசும் பொன்னிலும் தன்கையில் தவிடேமேலாம் தையலே இதென்ன மையலே என்ன செய்வேன் என்கிறாய் நீ முன்னே கொண்ட வரம் இரண்டும் இல்லையோ தரச் சொல்லையோ அந்த மன்னவன் உனக்குச் சொன்ன வார்த்தைக் கிரண்டு சொல்வானோ வாங்கடி இதுவே - பாங்கடி ஒருவரம் பர தன் நாடாள ஓதடி சூதடி ஒருவரம் ராமன் காடாள இந்த இருவரமும் கொண்டால் உனக் கீடுசோடுண் டோடிமக என் தன் கை கேசியே ராசியே கைகேசிக்கும் சக்கிரவர்த்திக்கும் சம்வாதம் அந்தவகை கூனி சொல்ல மனது வேறாய் அப்படியே செய்வேனென மானம் செய்து கொந்தளகம் சோரவளை சோர மண்மேல் குப்புறவே கிடந்திடுகை கேசி தன்னை வந்ததச ரதராசன் கையால் தூக்கி மலர் மேனி துடைத்தெனது மானே தேனே பைந்தொடியே உன் குறையே தெனப் , பட்டோலை படிக்கின்றாள் தசரதனும் துடிக்கின்றானே . இந்த அலங் கோலமும் இந்தமனோ துக்கமும் ஏன் வந்ததோ கைகை மின்னரசே --உன்தன் சிந்தையில் நினைந்ததை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெரியச் சொல்லாய் கைகை மின்னரசே மன்னவரே - உந்தன் மருவும் மலரும் போலப் பாலும் நீரும்போல மானம் வைத்தாண்டீரே கருவிழி மணிபோலக் கரிசனம் ஆகஎன்னை கண்ணுண்டாய்க் காத்தீரே மன்னவரே காத்ததற் கென்ன குறை இப்போதும் என்ன உன்னைக் கைநழுவ விட்டேனோ மின்னரசே - நீ பார்த்தெது கேட்கிலும் எந்தவரமானாலும் பரிந்து தருகிறேன் காண் மின்னரசே மற்றொன்றும் இல்லைவரம் எனக்குமுன் நீர் கொடுத்த வரம் இரண்டும் கேட்கிறேன் மன்னவரே- என்றும் உற்றது சொன்னால் அல்லோ அற்றது பொருந்தும் நான் உள்ளது சொன்னேன் காணும் மன்னவரே உன் அந்தவரம் இரண்டும் தந்தேன் இனிஉனக்கு அட்டிசொல்வேனோ கைகை மின்னரசே மைந்தன் ராமன் ஆணை வார்த்தை பிரட்டறியேன் வாங்கிக் கொள்வாய் கைகை மின்னரசே மன்னவரே- அதின் முன் ஒருவரம் பர தன் நாடாள மாணிக்க முடிபெற வேணும் அய்யா பின் ஒருவரம் ராமன் காடாளச் சடைமுடி பெற வேணும் தாரும் அய்யா மன்னவரே மலைப்போல் ஒருவர் செய்த வஞ்சனையோ என்ன வார்த்தை சொன்னாய் கைகை மின்னரசே - அது கலைப்பார் கலைத்தாக்கால் கல்லும் கரையுமென்ற கதைபோல ஆச்சுது கைகை மின்னரசே கலைப்பாள் கௌசலை உமக்குண்டெனக் குவேறே கலைப்பார் ஒருவரில்லை மன்னவரே - நீர் சலத்தால் சொல்லுகிறீரோ சொன்னதே சொன்ன துநான் தடுமாறிச் சொல அறியேன் மன்னவரே மூத்தவனைத் தள்ளிவிட்டு இளையவனைப் பட்டங்கட்டல் முறைமை அல்லவே கைகை மின்னரசே - யாரும் ஏத்தும் மனுவிக்யான சாஸ்திரத்தினில் மூன்னம் இசைத்த படி இதுவே மின்னரசே மூத்தவன் இந்திரனோ உபேந்திரனோ அகிலாண்டம முழுதும் செலுத்துகிறான் மன்னவரே வெகு நேத்தியிது முன்சொன்ன வார்த்தையை விட்டுசாஸ்திர நெறிகள் போதிக்கல் ஆமோ மன்னவரே ஆனை இருந்து கொண்டு அரசாளும் மண்டபத்தில் அறியாப் பிள்ளை பரதன் மின்னரசே சிறு பூனை இருந்து கொண்டு புலம்புகிறது போலப் புலம்பல் ஆமோ கைகை மின்னரசே ஆனையும் பூனையும் நீர்பெற்ற பிள்ளையல்லால் அசலார் பெற்ற ள்ளையோ மன்வனரே - நீர் மானம் வைத்தால் போதும் அணுவும் மலையாம் அந்த வகையை நான் அறியேனோ மன்னவரே ஆயிரம் ஆனாலும் பெண் புத்தியை அறிய ஆராலும் முடியுமோ மின்னரசே - நல்லது போயினது போகட்டும் ராமனை ஊரை விட்டேன் போகச் சொல்கின்றாய் கைகை மின்னரசே எதுக்கு ராமனை ஊர் விட்டுப் போகச் சொல்லும் என்கிறாய் என்று கேட்கவந்தீரே மன்னவரே - நடுப் பாதிக்குள் பாதனை ஊரில் தங்க வொட்டாமல் பண்டேன் துரத்திவிட்டீர் மன்னவரே அவனும் சம்மதிக்கவே பாட்டனூர் போவென்றேன் அநியாயம் சொன்னேனோ மின்னரசே - உனக்கு கவனம் இல்லையோ என்ன என்ன காரணமோ இந்த கபடம் பேசாதே கைகை மின்னரசே கவனமும் உண்டு ஒரு காரணமும் இல்லை கபடமும் பேசவில்லை மன்னவரே - இன்று இவனும் சம்மதிக்கவே ஊர்விட்டுப் போச் சொல்லும் என்றேன் என்ன தப்பிதம் சொன்னேன் மன்னவரே பூமியும் தருகிறேன் பரதற்குப் பொன் முடியும் பூட்டுகிறேன் கைகை மின்னரசே- என் சாமியை என் உயிரை ராமனைப் பிரிந்தால் நான் தரிக்கரியேன் கைகை மின்னரசே என்னுயிர் அவன் போனால் தரிக்கறியா தென்றீர் என்ன சத்திய மிது மன்னவரே - அவனை சின்னஞ் சிறுவயதில் முனிபின் போகச் சொன்னீர் உம் சீவனுக் குண்டோ துன்பம் மன்னவரே கும்பிடுகிறேன் உன் தன் காலையும் பிடிக்கிறேன் கோபம் செய்யாதே கைகை மின்னரசே - நீ எம்பெருமானை என் தன் கண்மணிராமனை கிருக்கச் சொல் என்பாய் கைகை மின்னரசே தாரைநீர் ஏற்றபோதே என்சரீரம் உமது தம்சரீரம் அல்லவோ மன்னவரே - நீர் ஆரைக்கும் பிடுகிறீர் ஆர் காலில் விழுகிறீர் அசலார் என்றெண்ணலாமோ மன்னவரே 21. அடியில் விழுவேன் என்றும் அடங்கி ஒடுங்கியே நான் அனந்தம் வார்த்தை சொல்லியும் மின்னரசே - சற்றும் இல்லாது போலே ஈரச்சீலையைப் போட்டு கழுத்தை அறுக்கலாமோ மின்னரசே கடினம் காட்டுப் புறாவுக்காகச் சதையரிந்த மன்னனை கதையிலும் கேட்டிலீரோ மன்னவரே - உந்தன் வீட்டுப்பெண் சாதிக்காக இத்தனை சாகசமும் வேணுமோ போதும் போதும் மன்னவரே : கண்ணும் கருத்தும் ராமன் கண்ணாளனும் ராமன் காப்பவனும் ராமனே மின்னரசே - நான் எண்ணும் தெய்வமும் அவன் அவன் போனால் என்உயிர்போம் இருக்கச்சொல் என்பாய் மின்னரசே கைகை எனக்குப்பொய் வாராது பொய்சொன்னால் தோஷமென்றீர் எந்த மதியாற் சொன்னீர் மன்னவரே -- நான் வனத்தில்போச் சொல்லும் என்ற சொல் திருப்பி விட்டாலது மகத்தான பொய்யல்லவோ மன்னவரே ஆனால் ராமனை வன வனத்திற் போகச் சொல்வதால் ஆவதுண்டோ கைகை மின்னரசே - அருங் கானிலே ராமனைப் போகச்சொல்வ திலும் என் கண் கேட்கிலும் தருவேன் மின்னரசே நானாகச் சொல்லவில்லை தெய்வம் சொல்லியத் துக்கு நான் என்ன செய்வேன் காணும் மன்னவரே - ராமன் போனாலும் கானகத்திலே அவனுக்கு வரும் பொல்லாங்கும் உண்டோ சொல்வீர் மன்னவரே போவென்று சொன்னவுடன் பொறி கலங்கி என் சீவன் போய்விடுமே கைகை சண்டாளி - நான் ஆஎன்று போனபின்னை அள்ளி இடுவார் உனக்கு ஆரடி கைகேசி சண்டாளி நீ ஒட்டாரம் கட்டுகிறாய் ராமன் போனால் என்சீவன் உடனே போமடி கைகை சண்டாளி - நீ கட்டியதாலிக் கயிற்றை உன் மகற்குப் பட்டங்கட்ட காப்புகட்ட்டி கைகை சண்டாளி தெய்வமே - அந்த வரதமுனிவனான வதிஷ்டமுனியே உன்னை வரம் கேட்கிறேன் தாராய் என் பரதன் வந்தால் அவன் உற்றுரிமை செய்யாமல் பத்து தரமாய் சொல் என் தெய்வமே தெய்வமே - தீமுன் அண்டர் முனிவர் அல்ல பகையாளிகள் அல்ல அசலார் ஒருவர் அல்ல காண்ட பெண் சாத்தானே தசரதன் ஆவிக்கு கூற்றுவன் ஆய்வந்தாளே தெய்வமே ஒளிவாய் இருந்து கொன்ற பிள்ளைப் பழிக்குமுனி உரைத்த சாபமிதுவோ தெய்வமே- உலகம் எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் கேட்கும் என்பதும் இதுதானோ தெய்வமே பண்ணிட்ட எறும்புக்கா புருஷனைக் கொல்ல வந்த பாவிதன் பெண் இவள் அல்லோ தெய்வமே இந்த மண்ணுக்குள் தாயைப் பார்த்துப் பெண்ணைக் கொள் என்று சொல்லலும் வசனம் பிசக வருமோ தெய்வமே உதிக்கும் கண் போனாலென்ன உயிர் போனாலும் என் உத்தமன் ராமன் மாத்திரம் தெய்வமே - அயோத்தி பதிக்குப் பதியாகியே இருக்கிறான் என்றுசுணாப் பாவி நான் ஆயினேனே தெய்வமே கைகேசி ஸ்ரீராமரை வனத்துக்கு ஏவுதல் கொன்றவன் போல் தசரதனிப் படிபு லம்பக் கூற்றுவன் போல் கைகேகி ராமன் தன்னை நின்றநிலைக் கழைத்துவர என்ன வந்து நெடுமனைவா சலுக்குள்ளே புகுந்த போதில் என்றும் அர சன் சொல்லான் நானே சொல்வேன் என்றீரேழ் வருஷம்ரா மா நீ காட்டில் சென்று தவம் செய்பர தன் உலகம் ஆள்வான் செல் என்றாள் இதுவேந்தன் சொல் என்றாளே ஸ்ரீ ராமர் வனம் ஏகக் கைகேசியின் விடை பெறல் உளம்மகிழ்ந் தொருகை கேசி உரைத்தவாய் மொழியைக் கேட்டுக் களங்கம் இல் லாத ராமன் கானகம் செல்ல நானே தெளிந்தபார் பரதன் ஆளச் செய்ததே மேன்மை தளர்ந்திடாத் தாயை வாழ்த்தித்தாழ்ந்து பின் விடை கொண்டானே . என்று பல்லவி என்பாக் கியமே பாக்கியம் எவர்க்குண்டிந்தசிலாக்கியம் ( என் ) அநுபல்லவி அன்பாக வனம் போக அனுக்கிரகம் செய்தாயே ( என் ) குழியிற் பயிர் தனை எடுத்துக் கூரைமேல் ஏற விட்டு வழுவான களைமாற்றி வளர்க்கி றதுபோலே சுழலும் இந்த ராச்சியத்துக்கு சூடுமணி முடிமாற்றித் தழுவும் முத்தி ராச்சியத்துக்குச் சடைமுடி தந்தாயே ( என் ) கொக்கரித்த பேர் எல்லாம் கூடத்தீப் பாய்வாரோ பக்கமுள்ள பேர் என்னைக் காப்பாற்ற நினைப்பாரோ சிக்குமிந்த வலை நீக்கி தேடும்பர கதிசேரத் தக்கதவம் செய்யென்று நீ தயவு செய்தாயே ( என் ) ஒருபிள்ளை ராமன்பர லோகசா தகம் செய்ய ஒருபிள்ளை பர தனிந்த உலகம் தன்னையாள இருபிள்ளை யாலும் கைகை இகபரம் பெற்றாள் என்ன வருசொல் உண்டாச்சு தென்ன மாதவம் செய்தேனோ ( என் ) --- ஸ்ரீ ராமர் வனம் ஏகுதற்காகக் கோசலை புலம்பல் இப்படிச் சிறுதா யாரை இறைஞ்சியே அனுப்பிக் கொண்டு மைப்படி வண்ண ராமன் வந்துகோ சலையம் மைக்குத் தப்பிலா தவ்வா றெல்லாம் தான் சொல்லக் கன்றைத் தேடி வெப்புறும் பசுப்போல் அன்னை விழுகின்றாள் அழுகின் றாளே . 1-அய்யைய்யோ ரகுராமா - வனம் போக - தெய்வ சம்மதியாமா -உனை நான் எவ்வகை பிறிவேனோ- நான் இனி செய்குவதறிவேனோ 2-என்ஒரு தாயகமே - ரவிகுல - மன்னவர் நாயகமே- அரசன் உன்னையும் வெறுத்தானோ - வெறுத்தும் - தன்னுயிர் பொறுத்தானோ 3 -சுடர் மணி முடிபோச்சோ- தலைமேல் -சடைமுடி வரலாச்சோ -கேட்க உடல்பதறு தேமகனே - மனம் விட - விட உ . தறுதே மகனே 4--தாய்வரம் அதுகண்டு - பூமியை- காவல் பரதன் கொண்டு -ஆளட்டும் நீவனம் போவான் ஏன்- இப்படி -- தீவினை ஆவான் ஏன் 5. கலியுகம் மேலிட்டதோ ரிய - குலமுறை போய்விட்டதோ - நீ இந்த நிலைமை விண்டிடலாமோ பரதன் - தலைமை கொண்டிடலாமோ 6. எப்படி நான் சகிப்பேன் - உனைப்பிரிந்து எப்படி நிர்வகிப்பேன் - ராவினில் எப்படி கண் விழிப்பேன் யிர்கொண்டு எப்படி நான் கழிப்பேன் பொன் அடி கசங்காதோ - மேனியில் - வன்ன மும்மசங்காதோ - வெயில்பட்டால் என் என்று குதிப்பாயோ- கல்லும் முள்ளும் - என் என்று மிதிப்பாயோ நீசெலும் வனந்தானே - உன்னுட -னே செல்லுவேன்நானே என்னிட ஆசையெல்லாம் மறந்தேன் - இதுக்கோ - கோசலை பெண்பிறந்தேன் ஸ்ரீராமர் கோசலையைத் தேற்றி வினட கொளல் தாய்வருந் திட இவ் வாறு தளருவாள் தன்னை நோக்கிப் பாய்வரும் பதினா லாண்டும் பதினாலு நாளே யம்மா நீவருந் திடுவ தேனோ நின்கிருபை யாலே கானில் போய்வரு வேன்கே ளென்று போற்றுவான் தேற்று வானே பல்லவி வனம்போய் வருகிறேன் அம்மா - கோசலை அ b மா வனம் போய் வருகிறேன் அம்மா (வனம் ) பெற்ற தானே வனம் போய் வருகிறேன் நானே மாதா பிதாவசனம் தனம் தனி மந்திரமும் சகல மந்திரமும் சத்தியமும் முத்தியும் பர் அது தானே ( வனம் ) வேணும் கானம் நான் போக கணவனைக் காப்பாற்றும் நானிலம் பரதனுக்கு அல்ல என்னப் போமோ நானிருந்தரசனைப் பொய் சொல்லச் சொல்லல் ஆமோ ( வனம் ) ஆதிகதை அறிவீர் நீரும் சகரர் அறுபதினாயிரம் பேரும் தாதைசொற்படிதங்கள் உயிர் கொடுத்தாரே தகப்பன் சொற்படிக்கு நான் தவஞ்செய்வதோ கடினம் முனம் ஈன்றவன் சொல் வேதம் தானே பரசுராமன் தாயை வெட்டி னானே ஆண்டுபதி னாலும் போய் வருவான் எனக்கண்டோ அரசன் எனைப் போவென்றால் திருவாக்கெதிர்வாக்குண்டோ ( வன ) ஸ்ரீராமர் வனம் ஏகலைப் பற்றி லெட்சுமணர் கோபம் கொளல் சிந்தையை கௌச லைக்குத் தேற்றிய ராமன் மீண்டு சுந்தரி சுமித்திரா தேவி துணையடி வணங்கும் போதில் இந்தமா மகுடம் சாமிக் கீகிறேன் இப்போ தென்ன அந்தமாம் லட்சும ணன்தான் ஆக்கிரகம் செய்கின் றானே பல்லவி நானே கொடுக்கிறேன் நானே லட்சுமணன் ராமனுக்கு மகுடம் ( நானே ) அநீயல்லவி சேனைபேர் என்னோ டெதிர்க்கட்டும் குதிக்கட்டும் சித்திரக் கணையால் அத்தனைப் பேரையும் கொன்று வென்று (நானே ) சரணங்கள் குருடன் ராசமுழி முழிக்கிறாப் போலே பட்டம் கொள்ளுமோ பரதற்கு முடிசூட தரணியில் சர்க்கரையும் மாவும் சரியாயெண்ணும் தசரதனும் கிடந்து மனம்வாட இரவிமுன் பனிபோல என்னோ டெதிர்ந்த மன்னர் எவரும் பயந்துவிடு துகள் போட அரசிட்ட சாமிக்குத் தவசிட்ட நீலிமகன் ஆட்டுக்குட்டிபோலே ஓடக்கேட்டும் கைகையும் தள்ளாட ( நானே ) படமாட்டி கடல் மூட்டி தொகுத்த காளிநடிக்க கூளிதாளம் பிடிக்க துண்டங்கள் எதிராகப் பகைத்த ராசர் தலை பனங்குலை போல் உதிரப் படுகளம் எங்கும் ரத்தக் இகத்தில் நானே அடிமை ராமனே ஆண்டவன் என்ப தெல்லார்க்கும் தெரி வகுத்தபிர் மாதிதேவர் வந்தாலும் அவரவர் மர்மம் எல்லாத்தையும் ஓட்டி தர்மத்தை வுறக்காட்டி நிலைநாட்டி ( நானே ) சுட்ட மண்ணும் பச்சைமண்ணும் ஒட்டுமோசாமி துணையல்லால் எனக்குண்டோ உபகாரம் எட்டிப்பறந்தாலும் ஊர்க்குருவி கருடன் மோ இந்தப் பரதனுக்கேன் அதிகாரம் வெட்டித்தலை தலையாக் குவியா விட்டால் என்கை வில்லாலே ஆவதுண்டோ வீரம் பொட்டெனவே அயோத்திப் பட்டணம் எல்லாம்வந்து போர் தொடுத்தாலும் விட்டூரம் ஆர் தொடுத்தாலும் இந்நேரம் ஸ்ரீராமர் லட்சுமணர் கோபத்தைத் தணித்தல் சினங்கொண்ட இளையோன் இங்கே சீறியே சொல்லும் ஓசை களங்கொண்ட ராமச்சந்திரன் காதிலே விழக்கண் டோடி இனங்கொண்ட தந்தை வார்த்தைக் கெதிர் உண்டோ தம்பி என்று மனங்கொண்டு தேற்றிக் கோபம் மாற்றுவான் ஆற்று வானே பல்லவி இத்தனைக் கோபமும் நல்லாய் தம்பி இது சொல்லாய் வந்தது ஏதடா ( இத்தனை ) அநு பல்லவி தத்துவம் ஆக உன்தன் தகப்பன் பேர் விளக்கிற புத்தியெல்லாம் வெள்ளை பிள்ளை அல்லோ பிள்ளை ( இத் ) சரணங்கள் இரும்போ தாய்மனம் காட்டிலே என்னவும் வாய்வருமோ நீ அத்தைப் கரும்பு கசப்ப தெல்லாம் வாய்க்குற்ற காலம் செய்த தல்லாமல் ஆர்செய்தார் போய்த்திரி பரிகரி மேசரி அரிகரி தி ) தகப்பனைச் சத்திய வாக்கியன் அல்லனென்று தாய்கொண்ட விரதத்தை முடியாமல் அகத்துணை ஆம்பரதன் செல்வத்தை அப்புறம் உனைக்கண்ட பேரெல்லாம் கழிக்கவோ அழிக்கவோ ஒழிக்கவோ பழிக்கவோ உரமாகும் தவஞ்செய்தால் உனக்கு நல்ல தோதீதோ ஒன்றும் பேசாதே கோட்டைக்குள்ளே படை வெட்டாதே அரசுபர தன் கொண்டால் நமக்கினிமேல் வாராதோ ஆக்கப்பொறுத்தநமக் காறும் மட்டும் பொறாதோ சுமித்திரை லட்சுமணருக்குப் புத்தி சொல்லல் ஏவ அற்புதத் தம்பி கோபம் ஆற்றியே ராமன் தாயார் பொற்பதம் வணங்கும் போது பூனவனக கேசி வற்கலை மா தர்காட்ட வாங்கிலட்சுமணா நீ என் சொற்படி கொடுபோ என்று சுமித்திரை கூறு வாளே கண்ணிகள் லட்சுமணா இந்தாமரவுரி அந்த வனத்தில் கொண் டேகுடன் ஈதென் வார்த்தை அந்த வார்த்தையே மந்திரமா அண்ணன் அடிபூசை செய்யடா லட்சுமணா அண்ணன் இவன்மணி வண்ணனே என்றெண்ணி அரைநொடி பிரியாதே கண்ணின் இமைபோலே எண்ணமெல்லாம் செய்து கட்டிக்காத்திருடா லட்சுமணா லட்சுமணா வெம்பிய காட்டினில் அரக்கர் வந்தால் அண்ணன் முன் போய்நீ நில்லாடா தம்பி உடையவன் படைக்கஞ்சான் என்னும் சொல் சாதித்துக் கொள் அடா லட்சுமணா லட்சுமணா அலையாழி புரண்டாலும் அண்ணன் இருக்கஉன்னை ஆரால் என்ன செய்யல் ஆம் மலைமீதில் இருப்பாரை பன்றி பாய்வதுண்டோ மயங்காதே தியங்காதே லட்சுமணா லட்சுமணா உளங்கொண்டு அண்ணன் எப்படிச் சொல்வானப்படி ஊழியங் கேளடா இளங்கன்று பயம் அறியா தென்றாற் போல நீ எதிர்த் தொன்றும் சொல்லாதே லட்சுமணா வட்சுமணா தாயே சீதைஉன் தகப்பன் ராமன் இந்த தலமே வனம் அடா ஆயாசம் பாராதே எள் என்னு முன் எண்ணெய் ஆகச் செய்துவாடா லட்சுமணா பின்னும் சடையும் மரவுரியும் காணவோ ராமன் பிறகே வந்தேன் என்று லட்சுமணா குன்னமா எண்ணாதே தெய்வம் பண்ணியதிருக் கூத்துக் கென்ன செய்யலாம் லட்சுமணா லட்சுமணா கர்த்தன் ஆனராமன் சித்தத்திலே எண்ணும் கட்டளைப் படிதானே புத்தியாகச் செய்தால் அப்போதல்லோ என்தன் புத்திரன் நீ போய்வாடா லட்சுமணா ஸ்ரீ ராமர் பிரிதலைக் குறித்துச் சீதை இரங்கல் மண்ணும் இரங்க மரமிரங்க மறுதா யாரை அனுப்பிக்கொண் டெண்ணும் இரங்கும் லட்சுமணன் இசைந்து வரவே ரகுராமன் நண்ணும் சனகி தனைப்பார்த்து நான்போய் வருவேன் ஈரேழு பண்ணும் பருவம் வனமென்றான் பரந்தாள் சீதை கரைந்தாளே பல்லவி எப்படி மனந்து ணிந்ததோ சாமி வனம் போய் வருகிறேன் என்றால் இதை ஏற்குமோ பூமி ( எப்ப ) அநுபல்லவி எப்பிறப்பிலும் பிரிய விடேன் என்றுகை ஏழையான சீதையை நட்டாற்றிலே தொட்டாரே விட்டீரே ( எப் ) சரணங்கள் கரும்பு முறித்தாற் போலே சொல்ல ஒருக் காலும் பிரியேன் என்று சொன்ன சொல் வருந்தி வருந்தித் தேவரீர் வார்த்னதயால் கொல்லாமல் இரும்பு மனது உண்டாச்சு என்னை விட்டுப் போகிறேன் என்று லாச்சுதோ போச்சுதோ கொல்ல தல்லோ சொல்ல ( எப் ) அன்னை கொண்டவரம் என்னஎன்னைத் தள்ளவோ அழகுக் கோயில் எடுத்தது நிலம் ஊன்றிக் கொள்ளவோ குன்னமோ உனக்கென்னைத் கொடுத்தவன் மேலல்லோ நேரம் என்னை இட்டுக் கொண்டுபோவதோ பாரம் துவோ ஆண் பிள்ளைக்கு வீரம் தாரம் ( எப் ) நாடிநீர் போயிருக்கும் வனத்தின் பேர் சொல்ல வேணும் - அத்தை நான் நினைத்துக் கொண்டிறந்தால் அங்கேபிறக்கலாம் காணும் காடு தாடு கூடி நாம் உகந்திருக்கும் குறைவில்லா என்மிதிலை காடு நீர் இல்லாத கால்வையும் தெரியும் என் வீடு பாடு ( எப் ) ஸ்ரீராமர் வனம் ஏகலகல் புரசனங்கள் புலம்பல் ஆவ தனால் சீதைமன தறிந்த ராமன் அப்படியே வருகஎன்றான் வெளியே வந்தாள் தேவர்களும் முனிவர்களும் கலங்கி நின்றார் செயராமன் லட்சுமணன் சீதை என்னும் மூவர்களும் மரவுரியை உடுத்திக் கொண்டார் முறையாலே அயோத்தி நகர்த் தெருவின் மேலே போவது கண் டவ்வூரில் ஆணும் பெண்ணும் புலம்பினார் கண்ணீர்விட் டலம்பினாரே கண்ணிகள் 1 -அரசுமணி முடியொடு ஆனைமேல் வருகிற திருக்காட்சியைக் காணாமல் அந்தத்தத் தெருவீதியிலே வந்து நொந்தார் சிலபேர்கள் மரவுரியும் சடைமுடியும் காணு வதற்கோ குதிகுதித்தோம் எனத்தங்கள் வாயோடுவாய் பேசாமலே மனம் மடிந்தார் சிலபேர்கள் தழுதார் சிலபேர்கள் 2. அய்யோ இந்த அருமைத் திருமகன் மெய்யே வனம் போனால் நமக்கினி ஆறுதலை ஏதெனக் கண்பிசைந் செய்யாவினை செய்திடும் பாதகி கைகேசிக்கு இன்றைக்கு நெஞ்சுக்கல் திடுக்கெனவே விழுந்ததோ எனமனம் திகைத்தார் சிலபேர்கள் 3 . கண்ணுக்குக்கண் அருகே எண்ணின எண்ணமெல்லாம் போச்சே நாம் அந்தக் காடே கதியாய்ப் போவோம் என்று கரைந்தார் சிலபேர்கள் பண்ணின தவம் இதுக்கோ தசரதன் புண்ணியவான் ஆனால் ஒருதரம் பழிகாரி சற்றழையாளோ என்று பதைத்தார் சிலபேர்கள் 4 சொல்லிய வரம் தாவென்று கணவனைக் கொல்லவே வழிபார்த்தாள் அல்லாமல் தூரதிருஷ்டியாப் பார்த்தாளோ என்று துடித்தார் சிலபேர்கள் கல்உருகவும் புல்உருகவும் கண்ட கைகேசிக்குத் தன் மகன் மாத்திரம் கரும்போ இவன் வேம்போ எனமனம் கசிந்தார் சிலபேர்கள் 5. முறையோ என்ன மூடப்பிள்ளையாகிலும் முந்தின பிள்ளை என்று சொல்லும்பழ மொழியாகிலும் ராமனுக் கில்லையோ என் றழுவார் சிலபேர்கள் குறையாமலே இருக்கின்ற சூரிய குலத்திலே நல்ல மரத்தில் புல்லுருவிபோல் குடிகேடி எங்கிருந்தாள் எனக்குலை குலைந்தார் சிலபேர்கள் 6மையார் கண்ணி இளையவள் தோதக வலையிலே சிக்கித் தலைமகன் ராமனை மன்னவன் செய்ததென் சொல்லு வேமென்று வைதார் சிலபேர்கள் கைகேசியும் பிள்ளையும் கூனியும் கட்டாந்தரை அட்டையைப் போல் பண்ணைக் கட்டிக் கொண்டினிப் பரளட்டும் எனக்குடி கலைந்தார் சிலபேர்கள் சானகி எனும் லட்சுமி போனபின் மாநகரத்தில் ஆர் இருப்பார் அவள் தமக்கை யல்லவோ இருப்பாள் எனத்தவி , தவித்தார் சிலபேர்கள் கானகம் புகுவது முன்னே தசரதன் வானகம் புகுவது நிலைவரம் பென்று கரை காணாக் கப்பலோர் போலவே பரிவார் சிலபேர்கள் 8--சத்திய ராமனை வரச் சொல்லி பற்றொரு வருக்கு முடி கொடுத்தான் இந்த தசரதன் மெத்த நல்லவனோ என்று தளர்ந்தார் சிலபேர்கள் எத்தனை பேர் சந்தைக்கு வந்தாலும் எல்லோரும் துணை ஆவாரோ ரரமனுக்கு இளையவனோ துணை இந்த ஊரில் என்று இடிந்தார் சிலபேர்கள் 9 , மணிமுடி வரச் சொல்லிய முகுர்த்தத்தில் சடைமுடி வரச் சொன்னானே இந்த வசிஷ்டனை போல விசிஷ்டன் உண்டோ என்று வைதார் சிலபேர்கள் துணியுமோ மனம் அடடா உண்கிற சோற்றிலே நஞ்சு கலந்தார் போலவே தொடுத்தாள் பழிகொடுத்தாள் கைகை என்று சொன்னார் சிலபேர்கள் 10. பாவமும் வரும் பழியும் மிக வரும் தீபமில்லா மனைபோலே இந்தப் பட்டணம் பறியே மே என்றுமண் படிந்தார் சிலபேர்கள் தாவரம் இல்லா இளங்கொடி போலவும் பாய்மரம் இல்லா மரக்கலம் போலவும் தாமரை இலைத் தண்ணீர் போலவும் தவித்தார் சிலபேர்கள் சுமந்திரன் புலம்பல் மா நகர் இப் படிபுலம்பத் தேர்மேற் கொண்டு வழியில் ஓரு சோலையிற்போய் பாதிச்சாமம் ஆனதிது வந்தவரோ உறங்கி விட்டார் அயோத்தியிலே அவர் போக வேணும் தேரைத் தானுருவ வடதிசையில் விட்டால் என்னைத் தான் மீண்டான் எனப்பலரும் அங்கே மீள்வார் ஏனித்தா மதமென்று ராமன் சொல்லி எழுகென்றான் சுமந்திரன் நொந் தெழுகின் றானே கண்ணிகள் என் தன் 1. செகம் மகிழும் ராமச் திருப்பு வான் அல்லோ மகன் வருவானென் வாய்கொண்டுசொல்ல சந்திரன் போகாமல் தேரைத் சுமந்திரன் றிருப்பானே ராசனுக்கெந்த இருப்பேனே 2 -ஊரில் என்னைக் கண்டபேர் சொல்ல - தசரதனுக் கோர் உடம்பீர் உடம்பாம் அல்லோ உன் பிள்ளைகளை தேரிறக்கி விட்டேன் என்பேனோ முகமறி யாத் தேசத்திலே விட்டேன் என் பேனோ 3 தானே தானே மக்களைவிட் டோடிவந் மன்னவனும் உயிர்நைந் தெற்கிலே நின்றல்லோ சேவகன் போலல்லோ என்ற உடன் இப்போது நான் போகுவேன் எமன்விடுத்த ஆகுவென் கூவி மேவி இன்னம் உன்னைக் கூவிக் கிருக்குமே நல்லுயிர் சொன்னவுடன் போமே சுமக்கவோ நான் வந்தேன் தசரதனுகி நானிந்த வார்த்தை இந்தப்பழியை ஆவி ஸ்ரீ ராமர் சுமந்திரனுக்கு நீதி ஓதுதல் மந்திரி சுமந்திரன் இந்த வண்ணமே கூற ராமச் சந்திரன் அவனை நோக்கிச் சகலமும் தெரிந்த நீரே எந்தன் தாய் சொன்ன வார்த்தைக் கிரண்டு தான் செப்ப லாமோ சிந்தைஏன் இனிமே லென்று தெளிவிப்பான் தெரிவிப் பானே பல்லவி சொல்லும் சொல்லும் - சுமந்திரரே நில்லும் நில்லும் ( சொல் ) அநுபல்லவி நல்ல ராத்திரி இதுபோல் இல்லை காணும் நகர் உள்ளோர்களும் நீரும் போக வேணும் அல்ல நீர் வேறே சொன்னால் விரும்புமோ அணை கடந்த வெள்ளம் அழைத்தால் திரும்புமோ ( சொல் ) சாணங்கள் 1.வீரம் பேசிக் கொண்டெழுந்த சேவகன் வெட்டுங் களம் கண்டு முதுகை இடல் ஆமோ ஆருங் காணவே தவசுக் கென்று வத்து அதுக்கெல்லாம் பயந்தச்சப் படல் ஆமோ வாருங்காணும் பெற்றதாய் சொல் விரதத்தை மறந்து பின்னை ஒரு விரதத்தைக் தொடல் ஆமோ சூரிய குலத்திலே பிறந்து முந்தி முந்தி தொடுத்த காரியத்தை நடுவே விடல் ஆமோ ( சொல் ) 2 -தேன் என்றும் மன்னன் பரதற்கு நான் இருக்கிறேன் வருகிறேன் இளக்கரிப்ப பின்னும் அறிந்தறி யாததுக்கும் மன்னன் பெரிய உதவியே உதவி தான் என்றும் என் இடத்தில் வைத்த அன்பு போல் கைகை டத்தில் வைக்கா விட்டால் வனம்போ றேன் என்றும் அன்னைமார்க்கும் மன்னனுக்கும் பதினாலும் ஆண்டும் போய்வந்து வணங்குவேன் என்றும் ( சொல் ) 3. உலகிலே ஒரு நன்மை செய்ய இடை யூறுமெத்தவரும் ஆகை யால் அதை நிலையி தென்னலாமோ காலம் போம் வார்த்தை நிற்குமே பின்னை வேறே உண் டோவதை பலரும் தவிக்கிறார் என்று தாய்மொழி பழிக்கவோ நான் வந்தேன் என்ன கதை மலை விழுந்தாலும் தலையே தாங்க வேணும் மலைத்த வர்க்குப்பலன் பலிக்குமோ இதை ஸ்ரீ ராமரை நினைந்து சக்கிரவர்த்தி புலம்பல் வீரன் எனும் ராமனுரை சுமந்திரன் கொண்டான் மீண்ட தோர் வழிபலரும் மீண்டார் சேதி ஊரதிலே வசிஷ்டமுனி உடன் போய்ச் சீவன் ண்டிலை என் றிடும் வேந்த னுடனே சொன்னான் கூரெரியி லேவிழுந்த வெண்ணெய் போலும் கொதித்திடும் கொப்பரையில்விழும் புழுவைப் போலும் சீருளதன் மகனை நினைந் தேங்கிச் சிந்தை சிதறினான் தசரதனும் சுதறினானே கண்ணிகள் 1. சின்னஞ்சிறு தாமரைபோல் பொன்னான பாதங்கள் நோவத் தேடிவனம் ஓடிவிட்டாய் ரகுராமா ராமா என்னை இந்தவேளை நடுத்தண்ணீரில் கைவிட்டாற்போலே எப்படித் துணிந்துவிட்டாய் ரகுராமா -ராமா 2. முடிக்கும் குடஞ்சூட்டி முகம்பார்க்க இருந்தேனே மோசம் கைகேசி செய்தாள் ரகுராமா ராமா உடுத்த புடவைதரினே பாம்பாய்க் கடிக்குமென்னும் உளவறியாமற் போனேன் ரகுராமா ராமா 3. மாலையிட்ட கைகேசிதான் காலனைப் போலே வந்தென் வாணாளைக் கொண்டாள் அய்யோ ரகுராமா ராமா வேலிக்கு முள்ளிடவே என் காலுக்கு முள் ஆகவந்து விளைந்ததென் விதிவசம் ரகுராமா 4 . ஆனைமேல் பவனியாக அபிஷேக முடிசூடும் அலங்காரம் என்று காண்பேன் ரகுராமா ராமா நானொன்று நினைக்கத்தெய்வம் தானொன்று நினைத்ததையோ நான் செய்த பாவம் ஈதோ ரகுராமா தாயும் நீ தந்தையும் நீ சற்புத்திர மாணிக்கமும் நீ சகல பாக்கிய மும் நீயே ரகுராமா நீயில்லஈ நாடிதெல்லாம் நிலவில்லா முற்றம் போலே நெடும்பாழ் அடைந்த தையோ ரகுராமா ராமா 6. படித்துப் படித்துச் சொல்லிக் காலும் பிடித்துக்கொண்டேன் பாவிகை கேசி அய்யோ ரகுராமா அடிக்க அடிக்கப் பந்து விசை கொண்டெழுந்தாற்போல் ஆயுசுக்குலை வைத்தாளே ரகுராமா குடைமகு டந்தரித்துக் குலவியம் தன்னையாளும் கோலங் காணும் முன்னாக சடைமகுடந் தரித்துக் காட்டிலேபோ என்றேனே சண்டாளன் என்போல் உண்டோ ரகுராமா ரகுராமா ராமா ராமா 8. தேறுதல் எங்குங் காணேன் திக்குத் திசையுங்காணேன் தெய்வமும் துணை காணேன் ரகுராமா ஆறுதல் எங்கும் காணேன் அந்தரத்தில் கோல்எறிந்த அந்தகன் போல் ஆனேன் அய்யோ ரகுராமா 9. பாரெல்லாம் பரதன்கொள்ள உன்னையுமென் கண்ணின் முன்னே பறிகாட்டில் போ என்றாளே ரகுராமா கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற்போலே கெடுகாலி எங்கேவந்தாள் ரகுராமா 10. சேனைசாவலர்கூட நான்கூடமுடிசூட்டி சிங்காசனம் வைக்கும் முன்னே ரகுராமா ஆனை நிழலைப் பார்க்க தவளை கலங்கினாற்போல் ஆனாளே கூனி அய்யோ ரகுராமா 11. சற்றே பொறுத்துச் சென்றால் சகுனதோஷம் என்றோ நான் சாவேன் என்றறிவாயோ ரகுராமா சுற்றும் அழுகைக்குரல் கேட்கிறத்துக்குமுன்னே சுருக்கா நடந்துவிட்டாய் ரகுராமா ராமா - ராமா 12. குலத்தை விளக்கவந்த மகனே உனக்குப்பட்டம் கொடுத்து வாங்கிக் கொண்டது ரகுராமா கலத்திலே சோற்றையிட்டு கைப்பிடித்தாற்போலாச்சே காலம் இப்படி ஆமா ரகுராமா - ராமா 13. பாயும் அமுதமும்பொன் பள்ளயமும் இங்கிருக்க பறிகாட்டிலே நடந்து ரகுராமா காயும் கிழங்கும் தின்னல் ஆச்சோ தெய்வத்துக்கும் கண் இல்லையோ மகனே ரகுராமா 14. வீசும்நெருப்பைப் போல கடுங்கோடையும் கானலும் வெய்யிலும் மேல் படுமே ரகுராமா காசாம் பூமேனியெல்லாம் வேர்வை முத்து முத்தாகக் காண்பாளோ கௌசலை ரகுராமா ராமா 15. பூமேலே விழுந்தாலும் தழும்புபடுமே உன் தன் பொன் ஆன மேனி அய்யோ ரகுராமா ராமா மாமனலயும் கொடியும் செடியும் பொடியும் தாக்க வழிநடந்தறிவாயோ ரகுராமா 16. முடிக்கபிஷேகம் செய்துன் அடிக்கீழே ஓடுந்தண்ணீர் முந்திக்கொண் டாரானாலும் ரகுராமா ராமா பிடித்தொரு படிதந்தால் குடிக்கேனோ குடித்தென்தன் பெருந்தாகந் தணியேனோ ரகுராமா-ரகுராமா ரகுராமா 17. இழையாயிரம் பொன்பெற்ற பீதாம்பரம் உடுத்த இடைமீதிலே மகனே பழிகாரி தான் கொடுத்த மரஉரிதான் உடுக்கப் பார்த்தாரோ ஊர் உள்ளோர்கள் ரகுராமா ராமா ராமா 18. பார்த்தாலும் பசிபோமே பால்வடியுமே உன் தன் பவளவாய் முகந்தன்னை ரகுராமா காற்றோட்ட மாகவந்து சற்றே நீகாட்டி என்னைக் கரையேற்றி விட ஒண்ணாதோ ரகுராமா ராமா 19 -பிள்ளை தன் தொடைமேலே பெற்றவன் சீவன்விட்டால் பெருங்கதி உண்டென்பாரே ரகுராமா கள்ளக்கை கேசிகையில் காட்டிக் கொடுத்துவிட்டு கடக்கப்போய் நிற்கல் ஆமோ ரகுராமா ராமா 20--கண்ணும் இருண்டதைய்யோ கருத்தும் அழிந்ததையோ கைகாலும் ஓய்ந்ததையோ ரகுராமா ராமா எண்ணம் குலைந்ததைய்யோ என்று நான் காண்பேன் உன் தன் எழுதரு முகந்தன்னை ரகுராமா ராமா ஸ்ரீ நாமரைக் குகன் தன் ஊரில் இருக்க வேண்டல் புலம்பியமன் னன் இவ்வா றிடிந்து சீவன் போயினான் வைகுண்ட புரத்தைச் சேர்ந்தான் பெலந்தரும் மன்னவர் அவனை எடுத்தார் எண்ணெய் பெருந்தோணி யில்இட்டார் , இப்பால் ராமன் நலந்தரும் லட்சுமணன் சீதையுடனே கங்கா நதியடைந்தான் முனிவரொடும் கலந்தான் அந்த சலந்தனையும் குசன்விடுத்த தோணியாலே தாண்டினான் அவனிருக்க வேண்டினானே . பல்லவி இங்கே இருங் காணும் - தரிசனம் தந் தென்னை ரட்சிக்க வேணும் ( இங்கே ) அநுபல்லவி மங்கையாம் என் தாயும் ராமா நீயும் இந்த வரிசைத்தம்பியும் அய்ய ஒருபத்தன்குகன் உய்ய ( இங்கே ) சரணங்கள் 1 , பூவுண்டு கனியுண்டு ஊன்உண்டு தேன் உண்டு புதுமர உரிகளும் போர்வையும் உண்டு தாழ்வுண்டு தடம்உண்டு கங்காந்தி உண்டு தான்வேண பட்சணம் உண்டு நானே செய் ரட்சணம் உண்டு 2. எட்டுத் திக்கிலும் செல்லுவேன் கிழங்குவகை கெல்லுவேன் எதிர்த்தவரை வெல்லுவேன் வழி சொல்லுவேன் கட்டிக்காத்து நானேகண் இமைபோலே காலாலே காட்டின தெல்லாம் கையாலே செய்கு வேனே ( இங் ) தானே 3. நித்தியம் உம்மைப் பிரியேன் மற்றொன்றையும் நிணறு மறக்கறியேன் நான் முற்றிலும் நிறைதிங்கள் எனவே விளங்கும் முகங்கண்டாற் பரிபோமே முத்திமோட்சம் குறியேன் சிறியேன் உங்கள் உண்டோமே ( இங் ) ஸ்ரீ ராமர் குகனைச் சினேகங் கொள்ளல் தனது புகலும் குகனேசன் தம்பி உனது தம்பி கண்டாய் எனது துணைவன் நீகண்டாய் இச்சீனதயும் உன்மதனி கண்டாய் மனது பொருந்தத் தாய் சொன்ன வரத்தால் காட்டில் இருப்பதல்லால் உனது நாட்டில் இருப்பாமோ உனரப்பாய் இதையா தரிப்பாயே அடதாள் சாய காட்டில் இருக்கவந்து நாட்டுக் கருகான நாட்டில் இருக்கலாமோ பூட்டகமோ இது குளிக்கப்போயும் சேறு பூசிக் கொள்ளல் ஆமோ குகனே குகனே குகனே பதினாலு வருஷம்போய் நாமெல்லாம் ஒருமிக்க பதியில் இருக்கல் ஆமே மதிமோ சமோ ஆனை ஏறியும் திட்டி வாசலில் நுழைவான் ஏன் குகனே 3 உன்பரிசனம் என்னது உன்ஊரும் என்னது உன் உறவும் என் உறவாச்சே என்பிறகே நீவந்தால் இந்த உறவைக்காக்க எவருண்டு நீ சொல்லுவாய் குகனே குகனே 4. பொறுத்த எனது தவம் முடிக்க வேணும் அந்தப் பொறுப்பு உனக்கில்லையோ குறுக்கப் பேசாதேமுதல் கோணினால் முட்டக் கோணும் தடைசொல்லாதே குகனே குகனே 5. ராமன் பரதன் லட்சு மணன்சத்து ருக்கன் என நால்வர் பிறந்திருந்தோம் ஆமுன் உடனே ஐந்து பேரானோம் சீரானோம் அதிக பலவான் ஆனோம் குகனே குகனே 6. குருவியின் தலைமேலே பனங்காய்ப்போற் புவியாளக் குழந்தை பரதனடா அருகில் இருக்கிறாயே நான் இருக்கிறாப் போலே அடிக்கடி பார்த்துக் கொள்வாய் குகனே குகனே 7 உடன் ஆன தம்பியிவன் உனது மதனி இவள் உனது துணைவன் நானே இடர் ஏன் படுகிறாய் நான் என்றும் நீ என்றும் ரண்டாக எண்ணாதே குகனே குகனே 8. சற்றே காணும் முன்னே கங்கைக் கரை ஏற்றி என் தலையும் கரைஏற்றின சித்திர கூடத்துக்கு வழியெங்கே நீ இங்கே திரும்ப ஒன்றும் பேசாதே குகனே குகனே ஸ்ரீ ராமர் சீதைக்குச் சித்திரகூட வளங்காட்டல் வரதன் என்னும் ரகுராமன் குகனை இந்த வகைத் தேற்றி பரத்துவாசக் குரவன் அனுமதியாலே தம்பியும் சீதையும் தானும் கூடிப்போனான் பரமுள சித்திர கூடமலை சேர்ந்தான் முகமலர்ந்து பார்த்தான் அங்கே கரதலத்தைச் சீதை முன்னே நீட்டுவான் மலைவளங்கள் காட்டுவானே . அடதாள சாப்பு பல்லன் பாராய் பெண்ணே பாராய் பெண்ணே பாக்கிய சனகன் கண்ணே ( பாரா ) அபயல்லவி சீராக நமக்குநேர் ஆகிற.இந்த சித்திர கூட. மலை ரத்தின பீடம்போலே ( பாரா ) 1. மாதவர் முனிவர் சொல் வேதங்களைக்கிளி வாடிக்கை யாற்கற்று வனமெங்கும் படிப்பதும் கோதும்தினைக் கொல்லையினிற் பம்பைகள் எடுத்துக் குரங்குகள் அடிப்பதும் ஆதவன் குதிரையைப் போல் பசும்பாறை ஒளிபாய்ந்த ஆடுகள் பசுமையாய கோடேறி நடிப்பதும் பேதகம் இல்லாமல் மேல்ஓடும் மேகத்தைப் பெண்யானை எனக்கையால் ஆண் யானை பிடிப்பதும் 2. மூலமுனிவர்க்குமலை ஏறப் படிபோலே முடங்கி அடங்கிக்கொண்டு மலைநாகம் கிடப்பதும் காலில் அழுந்தாமல் புல் எல்லாம் கொம்பாலே கரும் பன்றிகள் இடப்பதும் ( பா ) படப்பதும் கோல அயோத்தியில் இட்ட கொடி போலே கோல்மூங்கிலிற் பாம்புத் தோல்பட வாலைப் பிடிகொடுத்துக் குறுகுங்கண் முனிவர்க்கு மந்திகள் அங்கங்கே வழிகாட்டி நடப்பதும் ( பா ) விடுப்பதும் கொடுப்பதும் 3. அருவி நீரை மொண்டு துதிக்கையா லானைகள் அருந்தவர் பெருங்கமண்டலந் தனில் , குருவிகள் தினைக்கதிர் மூக்கினால் மடத்திற் கொண்டு போய்க் பரவும் ஓமக்குண்டத்தெரி வளர்ந்திட மயில் பசுமையாம் சிறகை விசிறிபோல் திருமா முனிவர்முப் புரிநூல் அணிவதற்குச் சிலந்தி நூல் கொண்டுபோய்க் குரங்குகள் எடுப்பதும் கொடுப்பதும் ( பா ) சக்கிரவர்த்தியைக் குறித்துப் பரதர் புலம்புதல் துய்யமலை வளங்களை இவ்வாறு காட்டித் தோகையுடன் சாமிலட்சுமணன் தான் செய்த செய்யபர்ண சாலையினில் இருந்தான் இப்பால் செயமுளகே கயநாட்டில் வதிஷ்டன் ஓலை பைய அறிந் துடன் மீண்டான் தாய்கை கேசி பதத்தினிற்சத் துருக்கனுடன் பரதன் வீழ்ந்தான் அய்யன் எனும் தசரதன்சீர் அறிந்தான் தேம்பி அழுகின்றான் அழுதழுது விழுகின் றானே கண்ணிகள் 1 . அரசே எனதய்யனே எனதப்பனே எங்கே நடந்தாய் கரைசேரும் விண்ணவரோ டே நீ உற வாடவோ தொடர்ந்தாய் 2. முறையும் உன் தன் நிறையும் எக்கிய துறையும் எல்லாம் பிறகே கொண்டுபோன தென் குறையோ அறியேனே தானே 3. சத்தியமும் சுபகீர்த்தியமும் நித்தியமும் நித்தியம் அல்லோ சிறந்தாய் மித்திரனை தர்மபுத்திரனை ராமபத்திரனை எங்கே மறந்தாய் 4 அழகா உன்னைத் தொழ ஆசை கொண்ட டுத்தேன் இது பொய்யோ எமுதாப் பொறிக் கழுதால் இதில் என்ன தான் வரும் அய்யோ முன்னே 5. சீலராகவன் மேலே மாமுடி கோலிநீ வைக்கும் காலம் செய்திடும் கோலம் தன்னை என்னால் என்ன செய்யல் ஆம் மன்னே 6-அம்பரந்தனில் சம்பராசுரன் துன்ப மேசெய்கி உன் பிராணனை ராமன் மேல் வைத்த அன் பெலாம் இது றானே தானோ 7. அய்யன்முனி வசிஷ்டன் விட்டகை ஓலையின் மெய் யென்றிருந்தேனே நான் விழித்தேன் கனவாச்சே 8 -எண்ணினால் என்ன அண்ணன்ராமன் இருக்கின்றானே புண்ணிய வானை என் கண்ணிற் காணவே போமே என்வி நேரம் சாரம் பரதர் னகேசினயக் கோபித்தல் வருதுயரம் ஒருவிதத்தால் பரதன் தேறி மன்னன் இறந் தாலுமென்ன அண்ணன் ராமன் திருமுகங்கண் டாற்போதும் எங்கே என்றான் தேசமெல்லாம் ஒருவரத்தால் உனக்கே சொன்னேன் ஒருவரத்தால் அவனைவனம் போகச் சொன்னேன் ள்ளபடி இதுமகனே பிள்ளை நீங்கப் பெரியமன்னன் இறந்தான் என் றுரைத்தாள் கண்ணீர் பெருகினான் கைகையை நொந் துருகினானே என்ன பாவிகைகேசி என்னடி செய்தாய்நீ என்னடீ பாவி கைகேசி -- என்னடி செய்தாய் ( என் ) நாம் ஆமோடீ சரணங்கள் 1 .. மன்னவனைக் கொன்று அண்ணன் வனம் போக விடுத்தாய் இன்னம் இன்னம் உண்டோபாவி என்னை ஏண்டி கெடுத்தாய் ( எ ) 2. என்று பாவியுன் வயிற்றினில் வந்தேனே - நான் அன்றுதாயே அன்று பேய்என்று நொந்தேனே ( எ ) 3. அய்யன் ராமன் காய்கிழங்கு கிண்டல் ஆமோடி நெய்யும் பாலும் சோறும் வாரிமண்டல் ( எ ) 4 . உன்னைக்கொன்று என்பழியைப் பின்னே தீர்க்கிறேன் எங்கள் மன்னவன் ராமன் வைவான் என்றெண்ணிப் பார்க்கிறேன் ( எ ) 5. தின்றால் அல்லோ நஞ்சு கொல்லும் என்பது பொய்யோ ஒன்றும் அறியேன் இதுக்கென்ன செய்வேன் அய்யோ ( எ ) 6. மன்னவன் பின்னோடே நீபோகல்லோ வேணும் - இனி என்னையும் கொன்றாகிலும் நீசாகல்லோ வேணும் ( எ ) 7. தரமோ நான்புவி ஆளத்தரமோ கண்டாய் ரண்டு வரமோ கழுத்தறுக்க அரமோ கொண்டாய் ( எ ) 8. நாயகன் ராமனுக் கிணை சொல்லப் போமோட் ஓர் ஆயிரம் நட்சத்திரம் ஒரு சந்திரன் ஆமோட் ( என் ) பாதர் கோசலாதேவிக்குச் சத்தியங் கூறுதல் கோவித்த பரதனந்த கைகை விட்டப்புறம் கோசலையைக் கண்டான் சேவித்தான் கைகை செய்த தறிந்திலையோ என்றந்தத் தேவி கேட்டாள் ஆவிக்கும் ஆவி அண்ணன் ராமனை வஞ்சித் தறியேன் அறிந்தேனாகில் பாவிக்கும் பாவியாய் விடுவன் என்று சத்தியங்கள் பண்ணுவானே . பல்லவி சேருங் கதியில் சேருவேன் அம்மா இந்த ராமத்துரோகம் தெரிந்தால் அனுபவிக்கிறேன் அம்மா ( சேரு ) அநுபல்லவி ( சேரு ) தீராத நெஞ்சுக்குத் தெய்மே சாட்சி திரும்பத் திரும்ப என்னகண் காட்சி ஓரிபோற் பெரியோரை வைதவன் உண்டவீட்டுக்கு ரண்டகம் செய்தவன் 1. அய்யம் இட்டு உண்ணாதவன் குடிகெடுத்தவன் அப் அகத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றும் செய்யும் துர்க்குண செய்த நன்றி விடுத்தவன் தீங்கெடுத்தவன் பிரம்ம செய்யும் அவரைக்குறுக்கே தடைசெய்தவன் கொலை ஐயம் தீர்த்து நெஞ்சை உறந்தவன் அசல் உடைமைக்குப் பேயாய்ப் பறந்தவன் கையடித்துக் கொண்டு ஆணை மறந்தவன் கன்றுக்குப் பாலை விடாமற் கறந்தவன் வாதகன் போதகன் காதகன் பாதகன் ( சேரு ) 2. தீர்த்தக்கரை பாவியும் கடுங்கோலியும் செனத்து ரோகியும் செபதப விரதஈனனும் பரஸ்திரீசென அனு போகியும் பூர்த்தியாம் மதுபாணியும் அக்கியானியும் அவி வேகியும் பூமிக்குச்சுமை யாகவந்தபுகழ் இல்லாத தேகியும் வார்த்தையாற் பிரட்டும் படு கோளனும் வழக்கழிவு சொல்லும் அசட் டாளனும் தூர்த்த விர்த்திவிடா மிண் (டாளனும் சோற்றிலே நஞ்சிடும் சண்டாளனும் ( சேரு ) 3. ஆறுகுளத்தில் உடையில்லாமல் அம்மணத்துடன் நடந்தவன் அன்னைவார்த்தை தந்தை வார்த்தை குருவின் வார்த்தை கடந்தவன் தேறும் நல் லோர் பெரியோரைக்கண் டெழுந்திராமற் கிடந்தவன் திருடனுக் கிடங்கொடுத்தவன் இடங்கொடுத்தவன்பின்னே தொடர்ந்தவன் வேறில்லாரைப் பகைத்து வேட்டகந்தன்னிலே இருந் சீறும் படையைப் பயந்து செடியிலே தலை துறுத்துக் விண்டவன் துண்டவன் தண்டவன் கொண்ட்டவன் ( சேரும் ) குகன் பாதர் சேனையைக் கண்டு கோபித்தல் சத்தியஞ்செய் துடனேசத் துருக்கனோடே தசரதன்செய் கடன் முடித்து நானே ராம பத்திரனை அழைப்பேன் என் றெழுந்தூராரும் படைகளுந்தா யாரும்வதிஷ்ட முனியும் சூழச் சுற்று சடா முடிமுடிந்துப் பரதன் கங்கைத் துறைக்கு வட கரைக்கு வந்தான் வரக்கண்டாங்கே த்திசையில் ராமன் மேற் பகைகொண்டன்றோ ஏறினான் என்று குகன் சீறினானே என்னத்துக்குப் பரதன் படைவந்தது திராணி பாருங்கள் வேடரே ( என்ன ) அநுபல்லவி மன்னவனுக் கடிமை நானென்று தெரியாமல் வனத்தில் வந்தும் துரத்திப் பிடிக்க வந்தாரோ ( என்ன ) 1. ஆழநெடுந்திரைக்கை ஆறுகடந்தாலும் என்ன தோழன் என்று ராமன் என்னைச் சொல்லியருளியதொரு சொல் லேனோ சொன்னபடிக்கு நில்லே னோ நான் பிடித்தகை வில்லே னோ இவரைக் கொல்லேனோ ( என்ன ) 2. அடி ஓட்டின் மேற்கரணம் போடவந்தது போலே முடியத்துரத்தி என்ன மோசஞ்செய்ய வந்தாலும் முறியேனோ வளை தடி கொண் டெறியேனோ தலைதலையாப் பறியேனோ கொல்ல அறியேனோ ( என்ன ) 3. ஆனை கட்டச் சங்கிலிதான் எடுத்துக் கொடுத்தாற்போல் ஏனெதிர்த்துக் கொண்டாரென்னை இவரைப் பொடிபொடியா இடியேனோ வரவொட்டாமல் அடியேனோ வந்தமன்னரைப் பிடியேனோ என்சொல் முடியேனோ ( என்ன ) லட்சுமணர் பரதர் சேனையைக் கண்டு கோபித்தல் திடம் பெருகு குகன் இவ்வா றெண்ணி ஐயம் தெளிந்து தெரி சிக்கவந்தான் பரதன் அன்பால் நடந்ததெல்லாம் குகனுக்குச் சொன்னான் கங்கா நதிகடந்தான் சேனைகளைப் பரத்து வாசன் மடந்தனிலே இளைப்பாற்றிச் சித்திர கூட மருங்குவந்தான் அவனை லட்சு மணன் கண் டிங்கே தொடர்ந்து கொல்ல வருமிவனைக் கொல்வேன் என்று துடிக்கின்றான் ராமன் முன்னே படிக்கின்றானே ஒருமொழி மாத்திரம் தாரும் சாமி எனக்குத் தாரும் ஒருமொழி மாத்திரம் தாரும் சாமி அநுபல்லவி பரதன் சேனையிது நான்மரம் ஏறிப் பார்க்கத் தெரிந்த தைய்யா , பழி வரவிடுக்க வந்தான் நம்மைச் சீறி வரட்டும் ஒருகை பார்க்கிறேன் எனத் தேறி சரணங்கள் 1. வஞ்சகம் பரதன் செய்த கோரம் தீர்த்தாலல்லாமல் வாங்குமோ என துவங்கை வாரம் தேவரீரிந்த வஞ்சியும் நீரும் போய்ச்சற்றே இருப்பீரிந்த மட்டு மே செய்திடும் உப காரம் கொஞ்ச நேரத்திலே என்சிலை பூட்டி குரைக்கும் நரிக்கு இரையாகவே மாட்டி பிஞ்சிடாமல் இந்தச் சேனையைக் பிரளய கால ருத்திரனைப் போல் மாட்டி நஞ்சுநஞ்சு பஞ்சு பஞ்சா எவர்களும் நெஞ்சிரங்க வெஞ்சரங்களைத் தொடுக்கிறேன் கூட்டி ( ஒரு ) அதிலே ரத்த எதிர்த்த மன்னர் பேயும் பூதமும் 2. வண்டிலும் தேரும் கம்பல்போல் வாரிவெள்ளம் கரைபுரண் மண்டைகள் மலைமலையாப் போட மகிழ்ந்து கொண்டு தலைகள் பந்தாட. அண்டொணாத பெரும்படைகள் மென் ஆடிக்காற்றில் விழுஞ் சருகுகள் சண்டவார்கணைகள் தொடுக்கிற சரிந்து நிலை குலைந் தொரு விண்டு விண்டு பிண்டு பிண்டு கண்ட கண்ட துண்ட துண்டம் மேலே போலே தாலே காலே விழவிழ ஆக்கிறேன் ( ஒரு ) 3 ஆள் அடிமை லட்சுமணன் தொட்ட அம்புகள் பாய்ந்து ஆனைமத்தகம் பிளந்து கொட்ட அதில் வந்த பேர் வாள் எல்லாம் மீன்போல் புகுந்து கிட்ட அந்தச் சேனையை வாரிக் கொண்டிரத்தம் கடல் முட்ட தோளும் தாளும் அறுந்துதுடி துள்ளித்துள்ளி சிலகவந்தங்கள் மூளைச் சேற்றில் விழுந்திடுப்புகள் வெடிக்க முகங்கண்டவர்க் கெல்லாம் குறளிகள் படிக்க வாளியாட கூளி ஆட கூளி ஆட தூளி ஆட அடிக்கிறேன் துடிக்க நடிக்க பலபல ( ஒரு ) ஸ்ரீ ராமர் சக்கிரவர்த்தியைக் குறித்துப் புலம்பல் இந்தவகை சொல்லத்தம்பீ உனக்கு லோகம் ஈரேழும் நேர் ஆமோ நமக்கு பூமி தந்திடவும் வணங்கிடவும் வந்தான் கண்டாய் தம்பிபர தனும் என்னை விரோதிப் பானோ அந்தமதி விடுவிடென்னப் படையை நீக்கி அண்ணன் முன்னே பரதன்வந்து பணிந்தபோது தந்தைஉளனோ இலனோ என்றான் கேட்டான் தயங்கினான் ரகுராமன் மயங்கினானே கண்ணிகள் 1 -மெய்யை நிறுத்திஉன் மெய்யை விட்டுப் போனதென்ன மெய்த்தவனே என்னைப் - பெத்தவனே கையிலே வளர்ந்த என்னை இப்படிக்கண் கலக்கங்கள் கண்டாயோ என்னை விண்டாயோ 2. வீட்டில் இருந்து முகத்தைக் காட்டுவாய் என்றிருந்தேனே வெறுத்தாயோ என்னை ஒறுத்தாயோ காட்டிலே போம் முன்னாக விண் நாட்டிலே நீபோ னதென்ன காரியமோ வீரியமோ 3. தத்தளிக்கும் பரதற்குப் புத்திமதி யோசனனகள் சாற்றுவையே - பயம் - மாற்றுவையே எத்தனை காரியத்துக்கும் என் கர்த்தன் இருக்கிறான் என்றே எண்ணினேனே அவம் பண்ணினேனே 4 -எண்ணும் என் உயிரிருக்க உன்உயிரை மாத்திரம் இறந்தாயோ - என்னைத் - துறந்தாயோ கண்ணுக் குற்றம் கண்ணுக்குத் தெரியா தென்று சொன்ன சுனதயாச்சே -- நல்ல - வதையாச்சே 5. இந்திரன் பழைய போல வந்துனது முன்னே முறை இட்டானோ குறை - பட்டானோ அந்தரத்தி லேசென்றாலும் எந்தாய் இங்கே யிருக்க ஆர்படுவார் - தேர் யார்விடுவார் 6. என்னிரண்டு கால்மிதித்த உன்னிட மார்பும் வயிறும் இருதாளும் -- உன் -- இருதோளும் வன்னிதின்னக் கண்டேனே என்னைப்போல் ஒரு பிள்ளை வாச்சுதல்லோ பேய் ஆச்சுதல்லோ 7. தள்ளரிய தாறுவந்து தாய்வாழையைக் கெடுத்த சதிதானோ தலை விதிதானோ பிள்ளை என்று நான் பிறந்து பெற்றவனைக் கொன்றான் என்று பேர் எடுத்தேன் நல்ல சீர் எடுத்தேன் 8 -கண்ணில் எண்ணெய்க் குத்தி என்னைக் காத்துக் கொண்டிருந்துபட்டடம் கட்டுமுன்னே - பலன் - கிட்டுமுன்னே வெண்ணெய் திரண்டு வரச்சே தாழி உடைந்தாற்போலே விடுத்தாயே - என்னைக் - கெடுத்தாயே 9 -நாலுபேர் பிள்ளையிலும் என் மேல் உன் மானமெல்லாம் நாட்டினையே ராட்டினையே காலிலே தைத்தது உன் கண்ணிலே தைத்ததுபோலக் காத்தாயே இன்று - தீர்த்தாயே 10. வெந்தவனம் கடந்துன் ஊரினில் வந்தார் முகத்தில் விழிப்பேனோ ஆரை அழைப்பேனோ என் தன் முகந்திருத்தி உச்சிமோந்து தழுவி எடுப்பார்ஆர் - முத்தம் - கொடுப்பார்ஆர் 11. மாமந்திர சாலையும் சிங்காதனமும் ஒளி வாங்காதோ கண்டால் -- ஏங்காதோ பூமண்டலாதிபர்கள் தாம் வந்து பணியும் அம் புசபதனே அய்யோ ஸ்ரீ ராமனர வதிஷ்டர் தேற்றுதல் அரசனை எண்ணி இவ்வாறழும் இராகவனை நோக்கி வரமுனி வதிஷ்டன் அங்கே மலர்க்கையால் கண்ணீர்மாற்றி விரகினால் எவரானாலும் விதியினை வெல்வாருண்டோ புரவலா கேளாய் என்று போற்றுவான் தேற்றுவானே பல்லவி ராமா இப்படி நீ கிலேசிக்கல் ஆமா என் சாமீ ( ராமா ) அநு பல்லவி பூமான் என்னும் தசரதன் போ கையினாலே புலம்பிப் புலம்பிக்கொண்டு குழந்தைப் பிள்ளையைப் போலே ( ரா ) சரணங்கள் 1. கனிந்து கண்ணீர் இறைத்தா வதுண் டோசாரம் கையால் எள்ளுந்தண்ணீரும் இறைச் கவேணும் இந்நேரம் நினைந்து பார்க்கில் இதுமகன் செய்யும் உபகாரம் நீயறியாத துண்டோ உனக்கேன் இந்த விசாரம் ( ராமா ) 2. புண்ணிய பாவம் இரண்டும் மெய் யென்று பூட்டும் வாணாள் அதிற்போட்டு உண்ணும் இவ்விரண்டிலும் உயிர் விளக் இரண்டும் போனால் விளக்கிருக்குமோ மனஸ்கரி வைத்ததிரி கேசரி அரிகரி ( ராமா ) 3. பெறுதவன் முன் எவர்க்கும் அடிக்கடி மேதினி பிராணபயம் உண்டென்று சொல்லுமேபெ ருந்தொனி அறுபதாயிரம் ஆண்டு அரசிருந் தான் தனி அதுவும் போதாதென்று அழலாமோ அ வற்கினி ( ராமா ) ஸ்ரீ ராமர் மூன்னே பரதர் புலம்பல் அலகில்லாக் குறைநீக்கி வதிஷ்டன்தேற்ற அறிந்து கங்கா நதிமூழ்கித் தந்தைக்குள்ள குலவிதி எல் லாம்செய்தான் சீதை தானும் குளிர்ந்தகங்கா நதிமூழ்கித் தெளிந்தபோது தலம் முழுதும் ஆளும்முடி தரிக்காய்தம்பி சடைமுடி ஏன் தரித்தாய் என் றுரைக்கக்கண்ணீர் பலபலென உதிர்ந்திடத்தன் மனதில் உள்ள படிராமன் முன்பர தன் பகருவானே கன்னி 1 . மன்னவன் தன்னையும் கொன்று உன்னையும் , இந்தப்படி வைத்தாள் வயிற்றுக்குள்ளே அவம் சென்மித்த நானல்லோ மா தவம் செய்ய வேணும் தேவா உனக்கேன் இந்த மாதவம் 2. உறவுபோலே இருந்து குளவிபோலே கொட்டி உன்னையும் போகச் சொன்னாளே படுபாவி மறுபடியும் வந்து சந்தோஷம் சொன்னாளே வைத்திருக்க வேணுமோ என் ஆவி 3. உடனாம் துணைபிரிக்க தந்தை உயிர்மரிக்க ஊரும் சிரிக்கவரம் கொண்டேனே இடறின காலிலே இடறும் என்ப தெல்லாம் என்னிடத்தில் தானே கண்டேனே 4. அருந்துணையே எனது ஐயாவே என தரசே நீபர தேசியோ பிரிந்தென்னைப் போவென் றாய்பழிகார னோ நான் பிள்ளை பிறந்த நேர் வாசியோ 5. உலகம் எல்லாத்தையும் நீயாள வேணும்பின் ஒருவர் ஆண்டு குறை வாங்குமோ மலை தாங்கும் பாரத்தை மலையே தாங்கவேணும் மண்ணாங் கட்டி என்ன தாங்குமோ கோலமோ காலமோ 6. ஆனைமேல் இட்டபாரம்பூனைமேல் இட்டாற்பேேேல அரசாளுவதென்ன கானகம் நீயிருக்க நான்போய் அரசிருக்கல்கயையோ இது கலி 7. தன் இனம் தன்னைக் காக்கும் வேலி பயிரைக்காக்கும் தப்பிதம் இல்லை இந்தப் உன் இனம் தன்னை நீயே வந்து காத்தருள் என்னால் ஒன்றும் ஆகாது சொன்னேன் 8. தேவேந்திரனுக்கும் மகுடம் தரித்து வைத்த தெசரத மகாராசன் நீ வேறெண்ணலாமோ நீயே வரவேணும் நீ ஆள வேணும் என் படிதானே அடியேனே பூமியே சாமியே ஸ்ரீ ராமர் பரதருக்கு புத்தி சொல்லுதல் பரதன் இவ்வாறு கூறப் பரிந்துஸ்ரீ ராமன் தாயார் விரதன் ஏன் விட்டாய் இந்த விரதம் ஏன் கொண்டாய் நான்போய் -ரமுடன் பதினா லாண்டும் தவஞ்செய்ய வேணும் நீபோய்த் திரமுடன் புவி ஆள் என்று தெரிவிப்பான் விவரிப்பானே . பல்லவி இன்னஞ் சிறுபிள்ளை போ லே என்னை அழைக்கிறாய் உன்னை என்ன சொல்வேன் பரதாஎன் கண்ணின் மணியே ( இன் ) அநுபல்லவி அன்னை தந்த பணிவிடையே தன்மம் என்று மதித்தேனே அப்படி நீ மதிக்காமல் இப்படி வந்திதில் தானே (இன் ) 1. வாய்த்தமழை விட்டுந்தூ வானவிட்டதில்லை ராமன் வனத்தில் வந்த பின்னும் என்ன சொல்லையா நேத்தியாய்ப் பதினாலு வருஷமட்டும் சொன்னபடி நில்லென்றால் நில்லாமல் என்ன தொல்லையா தகப்பன் சொன்ன வார்த்தைகொண்டு புவியாள இசைத்தேனே அந்தநாள் அறிந்தாய் அல்லையா மூத்தவனும் ஒருவிதத்தில் தகப்பன் ஆமே சொன்ன மொழிகொண்டு புவியா ளொணாதோ வல்லமை இல்லையா ( இன் ) 2. மத்தர் போல் பொய்யுரைத்துத் தகப்பன்வினை கட்டிக்கொள்ள மகனிருந்து பட்டங்கட்டிக் கொள்ளலாமோ சத்தியமாய் வேதமெல்லாம் கண்கண்ட தெய்வம் என்னும் தாய்தகப்பன் உரைகடந்து துள்ளலாமோ பத்தியாத் தவம் எனக்கும் புவிஉனக்கும் பிரித்திருக்க பங்கல்லாப் பங்கை விழுந்து அள்ளலாமோ பித்தன் அல்லடா தம்பி நீ சமர்த்தன் என்றிருந்தேனே பேய் ஆகிலும் பெற்றதாய் வார்த்தை தள்ளலாமோ( இன் ) 3. முன்னாக நான் கொண்டு பின்னாக அரசுனக்கு முறையாலே தந்தேன் என் உரை பொய்யாமல் உன்னாலும் என்னாலும் சொன்னபடி நடக்கும் என்று உசரப்போன தசரதற்கு வசை வையாமல் சின்னாபின்னங்களாய் பட்டணமும் பரிசனமும் சேற்றில் நட்ட கம்பம் போலே தொய்யாமல் என் ஆணை தம்பி நீ உன்நாட்டை ஆளடா எப்படி நான் சொன்னாலும் அப்படி நீ செய்யாமல் ( இன் ) பாதுகைக்குப் பரதர் பட்டாபிஷேகம் செய்தல் பதியெனும்ரா கவனிவ்வா றுரைக்கக்கேட்டான் பரதனும்சம் மதிகொண்டான் மதி கொண்டான் பதினால் ஆண்டாம் அதில்வாரா விடில் முடிவேன் என்று கொண்டான் அண்ணன்மிதி யடிகொண்டான் அனுப்பிக்கொண்டான் துதி அயோத் தியில் புகுந்தான் நந்திக் கிராமம் துன்னினான் சுமந்திரன் அதிகாரஞ் செய்ய மிதியடிக்கு முடிதரித்தான் தெற்கே நோக்கி விழிக்கின்றான் தன்பழியைக் கழிக்கின்றானே . அயோத்தியா காண்டம் முற்றிற்று . சக்கிரவர்த்தி திருமகனார் திருவடிகளே சரணம் . -------------- அயோத்தியா காண்டம் ( கம்பராமாயண ஒப்புமைப் பகுதி ) சக்கிரவர்த்தி முடிசூட ஸ்ரீ ராமரை வேண்டுதல்
1-சந்திரற் குவமைசெய் தரள வெண்குடை அந்தரத் தளவும் நின் றளிக்கும் ஆணையான் இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்ததன் மந்திரக் கிழவரை வருகென் றேவினான் கன்னியர்க் கமைவரும் கற்பின் மாநிலம் தன்னையித் தகையதாய்த் தருமம் கைதர மன்னுயிர்க் குறுவதே செய்து வைகினேன் என்னுயிர்க் குறுவதும் செய்ய எண்ணினேன் விரும்பிய மூப்பெனும் வீடு கண்டயான் இரும்பியல் அநந்தனும் இசைந்த யானையும் பெரும்பெயர்க் கிரிகளும் பெயரத் தாங்கிய அரும்பொறை இனிச்சிறி தாற்ற ஆற்றலேன் புரசை மாக்கரி நிருபர்க்கும் புரத்துறை வோர்க்கும் உரைசெய் மந்திரக் கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம் மு ) ச மார்ப்பநின் முதன் மணிப் புதல்வனை முறையால் அரசனாக்கிப்பின் அப்புறத் தடுத்தது புரிவாய் என்ற வாசகம் சுமந்திரன் இயம்பலும் இறைவன் நன்று சொல்லினை நம்பியை நளிமுடி சூட்டி நின்று நின்றது செய்வது விரைவினில் நீயே சென்று கொண்டு அணை திருமகள் கொழுநனை என்றான் ஐய சாலவும் அலசினென் அரும்பெரு மூப்பும் மெய்ய தாயது வியலிடப் பெரும்பரம் விசித்த தொய்யல் மாநிலச் சுமைஉறு சிறைதுறந் து இனியான் உய்ய லாவதோர் நெறிபுக உதவிட வேண்டும் ஒருத்தல் எட்டொடு திருத்தலை பன்மைசால் உரக எருத்தம் மேல்படி புயம் அறச் சுமந்து இடர் உழக்கும் வருத்தம் நீங்கியவ் வரம்பறு திருவினை மருவும் அருத்தியுண் டெனக்கு ஐய ஈதருளிட வேண்டும் அனைய தாதலின் அருந்துயர்ப் பெரும்பரம் அரசன் வினையின் என்வயின் வைத்தனன் எனக்கொள வேண்டா புனையும் மாமுடி புனைந்து இந்த நல்லறம் புரக்க நினையல் வேண்டும் யான் , நின்வயிற் பெறுவது ஈதென்றான் ( மந்திரப்படலம் 3 , 14 , 15 , 46 , 47 , 61 , 65 , 68 ) ஐம்பத்தாறு தேசத்து ராஜர்களும் வருதல் வென்றி வேந்தரை வருக என்று உவணம் வீற்றிருந்த பொன் திணிந்த தோட் டரும்பெறல் இலச்சினை போக்கி நன்று சித்திர நளிர்முடி கவித்தற்கு நல்லோய் சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க எனச்செப்ப உரியமாதவன் ஒள்ளிதென்று வந்தனன் விரைந்தோர் பொருவில் தேர்மிசை அந்தணர் குழாத்தொடும் போக நிருபர் கேண்மின்கள் இராமற்கு நெறிமுறை மையினால் திருவும் பூமியும் சீதையிற் சிறந்தன என்றான் இறைவன் சொல் எனும் இன்னறவு அருந்தினர் யாரும் முறையின் நின்றிலர் முந்துறு களியிடை மூழ்கி நிறையும் நெஞ்சிடை உவகைபோய் மயிர்வழி நிமிர உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார் ஒத்தசிந்தையர் உவகையின் ஒருவரின் ஒருவர் தத்தமக்கு உற்ற அரசெனத் தழைக்கின்ற மனத்தர் முத்தவெண்குடை மன்னனை முறைமுறை தொழுதார் அத்த நன்றென அன்பினோ டறிவிப்ப தானார் மூவெழு முறைமை எம் குலங்கள் முற்றுறப் பூவெழு மழுவினோன் பொருது போக்கிய சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு ஆவ இவ்வுலகம் ஈது அறனென்றானரோ [ மந்திரப்படலம் 72 - 76 ] திரு அயோத்தினய அலங்கரித்தல் நிருப நின்குல மன்னவர் நேமி பண்டு உருட்டிப் பெருமை எய்தினர் யாவரே இராமனனப் பெற்றார் கரும் மும் இது கற்றுணர்ந்தோர்க்கு இனிக்கடவ தருமமும் இது தக்கதே உரைத்தனை தகவோய் (மந்திரப்படலம் 34 ] ஏற்றிட ஆண்தகை இனிது இருந்துழி நூற்றட மார்பனும் நொய்தின் எய்தப்போய் -ஆற்றல்சால் அரசனுக் கறிவித்தான் அவன் சாற்றுக நகரணி சமைக்க என்றனன் ஏவின வள்ளுவர் இராமன் நாளையே பூமகள் கொழுநனாய் புனையும் மௌலி இக் கோநகர் அணிகஎனக் கொட்டும் பேர் இயம் தேவரும் களிகொளத் திரிந்து சாற்றினார் திணிசுடர் இரவியைத் திருத்துமாறு போல் பணியிடைப் பள்ளியான் பரந்த மார்பிடை. மணியினை வேகடம் வகுக்கு மாறுபோல் அணிநகர் அணிந்தனர் அருத்திமாக்களே மங்கையர் குறங்கென வகுத்த வாழைகள் அங்கவர் கழுத்தெனக் கமுகும் ஆர்த்தன தங்கொளி முறுவலின் தாமம் நான்றன கொங்கையின் நிறைந்த கனக கும்பமே துனியறு செம்மணித் தூணில் நீல்நிறம் வனிதையோர் கூற்றினன் வடிவு காட்டின புனை துகில் உறைதொறும் புனைந்து தோன்றின பனிபொதி கதிர் எனப் பவளத் தூண்களே முத்தினின் முழுநில வெறிப்ப மொய்ம்மணிப் பத்தியின் இளவெயில் பரப்ப நீலத்தின் தொத்தினம் இருள்வரத் தூண்ட சோதிட வித்தகர் விரித்தநாள் ஒத்த வீதியே ( மந்தரைசூழ்ச்சிப்படலம் 32 , 33 , 15 , 37 , 39 , 401 கூனி கைகேசியைக் கலைக்க வருதல் அந்நகர் அணிவுறும் அமலை வானவர் பொன்னகர் இயல்பெனப் பொலியும் ஏல்வையில் இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல் துன்னருங் கொடுமனக் கூனி தோன்றினாள் தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினாள் ஊன்றிய வெகுளியாள் உளைக்கும் உள்ளத்தாள் கான்றெரி நயனத்தாள் கதிக்கும் சொல்லினாள் மூன்றுல கினுக்குமோர் இடுக்கண் மூட்டுவாள் தொண்டை வாய்க் கேகயன் தோகை கோயில் மேல் மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள் பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ் உண்டை உண்டதனைத்தன் உள்ளத் துன்னுவாள் ( மந்தரைசூழ்ச்சிப்படலம் 46 , 47 , 48 ] கைகேசி கூனியைக் கோபித்தல் ஆயபே ரன்பெனும் அளக்கர் ஆர்த்தெழ தேய்விலா முகமதி விளங்கித் தேசுற தூயவள் உவகைபோய் மிகுசுடர்க் கெலாம் நாயகம் அனையதோர் மாலைநல் கினாள் வெயில் முறைக்குலக் கதிரவன் முதலிய மேலோர் உயிர்முதல் பொருள் திறம்பினும் உரை திறம்பா தோர் மயில்முறைக் குலத்துரிமையை மனுமுதல் மரபைச் செயிர்உறப் புலைச்சிந்தையால் என் சொனாய் தீயோய் எனக்கு நல்லையும் அல்லை நீ என்மகன் பரதன் தனக்கு நல்லையும் அல்லை நீ தரூமமே நோக்கின் உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ் வினை தூண்ட மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய் போதி என் எதிர் நின்றுநின் பொறி நாவைச் சேதியாதிது பொறுத்தனென் புறஞ்சிலர் அறியின் நீதி அல்லவும் நெறிமுறை அல்லவும் நினைந்தாய் ஆதி யாதலின் அறிவிலி அடங்குதி என்றாள் ( மந்தரைசூழ்ச்சிப்படலம் 59 , 71 , 72 , 74 ] இதுவும் கைகேசியைக் கூனி கலைத்தல் தெழித்தனள் உரப்பினள் சிறுகண் தீயுக விழித்தனள் வைதனள் வெய்துயிர்த்தனள் அழித்தனள் அழுதனள் அம்பொன் மாலையால் குழித்தனள் நிலத்தை அக் கொடிய கூனியே வேதனை கூனிபின் வெகுண்டு நோக்கியே பேதை நீ பித்திநிற் பிறந்த சேயொடும் மாதுயர் படுகநான் நெடிதுன் மாற்றவள் தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன் என்றான் சிவந்தவாய்ச் சீதையும் கரிய செம்மலும் நிவந்த ஆசனத் தினிதிருப்ப , நின்மகன் அவந்தனாய் வெறிநிலத் திருக்கல் ஆனபோது உவந்தவாறென் இதற்கு உறுதியாதென்றாள் மறந்திலள் கோசலை உறுதி மைந்தனும் சிறந்தனன் திருவினின் திருவின் நீங்கினான் இறந்திலன் இருந்தனன் என்செய் தாற்றுவான் பிறந்திலன் பரதன் நீ பெற்றதால் என்றாள் சரதம் இப்புவியெலாம் தம்பியோடும் இவ் வரதனே காக்குமேல் வரம்பில் காலமும் பரதனும் இளவலும் பதியின் நீங்கிப் போய் விரதமா தவஞ்செய் விடுதல் நன்றென்றாள் பண்ணுறு கடகரிப் பரதன் பார்மகள் கண்ணுறு கவினராய் இனிது காத்த அம் மண்ணுறு முரசுடை மன்னர் மாலையில் எண்ணுறப் பிறந்திலன் இறத்தல் நன்றென்றாள் அரசரில் பிறந்துபின் அரசரில் வளர்ந்து அரசரில் புகுந்துபே ரரசியான நீ கரைசெயற் கருந்து பார் கடலில் வீழ்கின்றாய் உரைசெயக் கேட்கிலை உணர்தியோ என்றாள் புரியும் தன்மகன் அரசெனின் பூதலம் எல்லாம் எரியும் சிந்தனைக் கோசலைக் குரிமையாம் எனறாள் பரியும் நின்குலப் புதல்வற்கும் நினக்கும் இப்பார்மேல் உரியது என் அவள் உதவிய ஒருபொருள் அல்லால் தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால் ஈண்டு வந்துனை இரந்தவர்க்கு அவளை வேண்டி ஈதியோ வெள்குதியோ விம்மல் நோயால் மாண்டு போதியோ மறுத்தியோ எங்ஙனம் வாழ்தி நாடி ஒன்றுனக் குரைசெய்வேன் நளிர்மணி நகையாய் தோடிவர்ந்த தார்ச் சம்பரன் தொலைவுற்ற வேலை ஆடல் வென்றியான் அருளிய வரமவை இரண்டும் கோடி என்றனள் உள்ளமும் கோடிய கொடியாள் இருவரத்தினில் ஒன்றினால் அரசுகொண்டு இராமன் பெருவனத்திடை ஏழிரு பருவங்கள் பெயர்ந்து திரிதரச்செய்தி ஒன்றினால் செழுநிலமெல்லாம் ஒருவழிப்படும் உன்மகற்கு உபாயம் ஈதென்றாள் ( மந்தரைசூழ்ச்சிப்படலம் 60 , 65 , 68 , 78 , 79 , 88 , 89 ) கைகேசிக்கும் சக்கிரவர்த்திக்கும் சம்வாதம் அடைந்தவண் நோக்கி அரந்தை என்கொல் வந்து தொடர்ந்த தெனத்துயர் கொண்டு சோரும் நெஞ்சன் மடந்தையை மானை எடுக்கும் ஆனை யேபோல் தடங்கைகள் கொண்டு தழீ இஎடுக்க லுற்றான் நின்று தொடர்ந்த நெடுங்கைதமை நீக்கி மின்துவள்கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள் ஒன்று மியம்பலள் நீடுயிர்க்க லுற்றாள் மன்றல் அருந்தொடை மன்னன் ஆவி அன்னாள் அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி என்னை நிகழ்ந்தது இவ் ஏழுஞாலம் - வாழ்வார் உன்னை இகழ்ந்தவர் மாள்வர்உற்ற தெல்லாம் சொன்னபின் என் செயல் காண்டி சொல்லிடென்றான் வண்டுளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை கொண்ட நெடுங்கணின் ஆலிகொங்கை கோப்ப உண்டுதொ லாம் அருள் என் கண் உன் கண் ஒக்கின் பண்டைய இன்று பரிந்தளித்தி என்றாள் கள்ளவிழ் கோதை கருத்துணராத மன்னன் வெள்ள நெடுஞ்சுடர் மின்னின் மின்ன நக்கான் உள்ளம் உவந்தது செய்வென் ஒன்றும் உலோவேன் வள்ளல் இராமன்உன் மைந்தன் ஆணை என்றான் ஆன்றவன் அவ்வுரைகூற அன்னம் அன்னாள் . தோன்றிய பேரவலம் துடைத்தல் உண்டேல் சான்றிமையோர் குலம் ஆக மன்னநீ அன்று ஏன்றவரங்கள் இரண்டும் ஈதி என்றாள் வரங்கொள இத்துணைமம்மர் அல்லல் எய்தி இரங்கிட வேண்டுவ தில்லை ஈவென் என்பால் பரங்கெட இப்பொழுதே பகர்ந்திடு என்றான் உரங்கொள் மனத்தவன் வஞ்சம் ஓர்கிலாதான் ஏய வரங்கள் இரண்டில் ஒன்றினால் என் சேய் உலகாள்வது சீதைகேள்வன் ஒன்றால் போய்வனம் ஆள்வது எனப்புகன்று நின்றாள் தீயவை யாவை யினும் சிறந்த தீயாள் இந்நிலை நின்றவள் தன்னை எய்த நோக்கி நெய்ந்நிலை வேலவன் நீதிசைத்ததுண்டோ பொய்ந்நிலை யோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ அந்நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான் திசைத்ததும் இல்லை எனக்குவந்து தீயோர் இசைத்ததும் இல்லை முன் ஈந்த இவ் வரங்கள் குசைப்பரி யோய்தரின் இன்று கொள்வென் அன்றேல் வசைத்திறன் நின்வ பின் நிற்கமாள்வென் என்றாள் கொள்ளான் நின்சேய் இவ்வர சன்னான் கொண்டாலும் நள்ளா திந்த நானிலம் ஞாலம் தனில் என்றும் உள்ளார் எல்லாம் ஓதஉவக்கும் புகழ்கொள்ளாய் எள்ளா நிற்கும் வன்பழி கொண் டென்பயன் என்றான் கண்ணே வேண்டும் என்னினும் ஈயக்கடவேன் என் உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ பெண்ணே வண்மைக் கேகயன்மானே பெறுவாயேல் மண்ணே கொள்நீ மற்றைய தொன்றும் மறவென்றான் இன்னே இன்னே பன்னியிரந்தான் இகல்வேந்தன் தன்னே ரில்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள் முன்னே தந்தாய் இவ்வரம் நல்காய் முனிவாயேல் என்னே மன்னா யார்உளர் வாய்மைக் கினிஎன்றாள் நின்மகன் ஆள்வான் நீ இனிதாள்வாய் நிலமெல்லாம் உன்வயமாமே ஆளுதி தந்தேன் உரைகுன்றேன் என்மகன் என் கண் என்உயிர் எல்லா உயிர்கட்கும் நன்மகன் இந்த நாடிறவாமை நயவென்றான் மெய்யே என்றன் வேர் அற நூறும் வினைநோக்கி நையா நின்றேன் நாவு முலர்ந்தேன் நளினம்போல் கையான் இன்றென் கண்ணெதிர் நின்றும் கழிவானேல் உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிர் என்றான் இரந்தான் சொல்லும் இன்னுரை கொள்ளாள் முனிவெஞ்சாள் மரந்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வசைபாராள் சரந்தாழ் வில்லாய் தந்தவரத்தைத் தவிர்கஎன்றல் உரந்தான் அல்லால் நல்லற மாமோ உரை என்ன கொடியாள் கூறினள் கூறக் குலவேந்தன் முடிசூடா மல் வெம்பரல் மொய்கா னிடைமெய்யே நெடியான் நீங்க நீங்குவென் ஆவி இனி என்னா இடியேறுண்ட மால்வரைபோல் மண்ணிடை வீழ்ந்தான் ஒன்றா நின்ற அருயிரோடும் உயர்கேள்வர் பொன்றா முன்னம் பொன்றினர் என்னும் புகழல்லால் இன்றோர் காறும் எல்வளையார்தம் இறையோ ரைக் கொன்றாரில்லை கொல்லுதியோ நீ கொடியாளே ஆழிப் பொற்றேர் மன்னவன் இவ்வாறயர் வெய்திப் பூழிப் பொற்றார் முழுதுமடங்கப் புரள் போதில் ஊழின் பெற்றாய் என்றுரை இன்றேல் உயிர் மாய்வென் பாழிப் பொற்றோள் மன்னவ என்றாள் பசையற்றாள் அரிந்தான் முன்னோர் மன்னவனன்றோ அருமேனி வரிந்தார் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம் நல்கிப் பரிந்தால் என்னாம் என்றனள் பாயும் கனலே போல் எரிந்தா றாதே இன்னுயிர் உண்ணும் எரியன்னாள் வீழ்ந்தாளே இவ்வெய்யவள் என்னா மிடல் வேந்தன் ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம் என்சேய் வனம் ஆள மாய்ந்தே நான்போய் வானுல காள்வென்வசை வெள்ளம் நீந்தாய் நீந்தாய் நின்மகனோடும் நெடி தென்றான் ( கைசேயி சூழ்வினைப்படலம் 7 , 14 , 22 , 23 , 30 , 32 , 34 , 36 , 37 , 39 , 41 , 46 , 47 , 48 ) கைகேசி ஸ்ரீராமரை வனத்துக்கு ஏவுதல் ஆயன நிகழும் வேலை அண்ணலும் அயர்ந்து தேறாத் தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி நாயகன் உரையான் வாயால் நானிது பகர்வென் என்னாத் தாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியள் வந்தாள் வந்தவள் தன்னைச் சென்னி மண்ணுற வணங்கி வாசச் சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையின் புதைத்து மற்றைச் சுந்தரத் தடக்கை தானை மடக்குறத் துவண்டு நின்றான் அந்தி வந்தடைந்ததாயைக் கண்ட ஆன் கன்றின் அன்னான் நின்றவன் தன்னை நோக்கி இரும்பினால் இயன்ற நெஞ்சின் கொன்றுறழ் கூற்றம் என்னும் பெயரின்றிக் கொடுமை பூண்டாள் இன்றுனக் குணர்த்தலாவது ஏயதே என்னின் ஆகும் ஒன்றுனக்கு உந்தை மைந்த உரைப்பதோர் உரையுண் டென்றாள் எந்தையே ஏவ நீரே உரைசெய இயைவதுண்டேல் உய்ந்தனென் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோவாழி வந்ததென் தவத்தினாய வருபயன் மற்றொன்றுண்டோ தந்தையும் தாயும் நீரே தலைநின்றேன் பணிமின் என்றான் ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள நீ போய் தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற்கொண்டு பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணிய புனல்களாடி ஏழிரண் டாண்டில் வாஎன்றியம்பினன் அரசன் என்றாள் [ கைகேயி சூழ்வினைப்படலம் 107 - 111 ] ஸ்ரீ ராமர் வனம் ஏகக் கைகேசியின் விடைபெறல் தெருளுடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி இருளுடை உலகந்தாங்கும் ன்னலுக்கியைந்து நின்றான் உரு ளுடைச் சகடம்பூண்- உடையவன் உய்த்தகார் ஏறு அருளுடை ஒருவன் நீக்க அப்பிணி அவிழ்ந்த தொத்தான் மன்னவன் பணி அன்றாகின் நும்பணி மறுப்பெனோ என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ என்னி உறுதி அப்பால் இப்பணிதலை மேற்கொண்டேன் மின்ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் [ கைகேயி சூழ்வினைப் படலம் 113 , 114 ) ஸ்ரீ ராமர் வனம் ஏகுதற்காகக் கோசலை புலம்பல் ஆங்கவ் வாசசம் என்னும் அனல் குழை தூங்குதன் செவியில் தொடரா முனம் ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம் வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள் அரோ வஞ்ச மோமக னே உனை மாநிலம் தஞ்ச மாகநீ தாங்கென் வாசகம் நஞ்ச மோயினி நான் உயிர் வாழ்வெனோ அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால் கையைக் கையின் நெரிக்கும் தன் காதலன் வைகும் ஆலிலை அன்ன வயிற்றினை பெய்வளைத் தளிரால் பிசையும் புகை வெய்துயிர்க்கும் விழுங்கும் புழுங்குமால் நன்று மன்னன் கருணை எனாநகும் நின்ற மைந்தனை நோக்கி நெடுஞ் சுரத்து என்று போவது எனா எழும் இன்னுயிர் பொனறும் போதுற்றது உற்றனள் போலுமே அறம் எனக் கிலையோ எனும் ஆவிநைந்து இறவிடுத்ததென் தெய்வதம் காள் எனும் பிற உரைப்பதென் கன்று பிரிந்துழிக் கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள் ( நகர் நீங்குபடலம் 8 , 11 , 13 ) ஸ்ரீராமர் கோசலையைத் தேற்றி விடைகொளல் சிறந்த தம்பி திருவுற எந்தையை மறந்தும் பொய்யிலன் ஆக்கி வனத்திடை உறைந்து போகும் உறுதிபெற்றேன் இதின் பிறந்து யான் பெறும் பேறென்பதியா வதோ விண்ணும் மண்ணும் இவ் வேலையும் மற்றும் வேறு எண்ணும் பூதம் எலாம் அழிந் தேகினும் அண்டால் ஏவல்மறுக்க அடிய னேற்கு ஒண்ணு மோ இதற்கு உள்ளழியேல் என்றான் சித்தம் நீதிகைக் கின்றதேன் தேவரும் ஒத்த மாதவம் செய்துயர்ந்தார் அன்றே எத்தனைக் குள ஆண்டுகள் ஈண்டவை பத்து நாலு பகல் அலவோ என்றான் மகர வேலை மண் தொட்டவண் டாடுதார் சகரர் தாதை பணிதலை நின்றுதம் புகரில் யாக்கையின் இன்னுயிர் போக்கிய நிகரில் மாப்புகழ் நின்றதன்றோ எனா மான்மறிக் கரத்தான் மழு ஏந்துவான் தான் மறுத்திலன் தாதைசொல் , தாயையே ஊனறக் குறைத்தான் உரவோன் உரை யான் மறுப்ப தென்றெண்ணுவதோ என்றான் [ நகர் நீங்குபடலம் 16 , 17 , 21 , 24 , 251 ஸ்ரீராமர் வனம் ஏகலைப்பற்றி லட்சுமணர் கோபம் கொளல் கண்ணின் கடைத்தீஉக நெற்றியில் கற்றைநாற விண்ணில் சுடரும் கெட மெய்யினில் நீர்விரிப்ப உள்நிற்கும் உயிர்ப்பெனும் ஊதை பிறக்க நின்ற அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான் சிங்கக் குருளைக் கிடும் தீஞ்சுவை ஊனை நாயின் வெங்கண் சிறுகுட்டனுக் கூட்ட விரும் பினாளால் நங்கைக்கு அறிவின் திறம் நன்று இது நன்றிதென்னா கங்கைக் கிறைவன் கடகக்கைபுடைத்து , நக்கான் புவிப்பாவை பரங்கெடப் போரில் வந்தோரை எல்லாம் அவிப்பானும் அவித்தவர் ஆக்கையை அண்டம்முற்றக் குவிப்பானும் இன்றே என் கோவினைக் கொற்ற மௌலி கவிப்பானும் நின் றேன் இது காக்குநர் காமின் என்றாள் மெய்யைச் சிதைவித்து நின்மேல் முறை நீத்த நெஞ்சம் மை பின் கரியாள் எதிர்நின்னை அம்மௌலி சூட்டல் செய்யக்கருதி தடை செய்குநர் தேவரேனும் துய்யைச் சுடுவெங்கன லி சு சுடுவான் . துணிந்தேன் வலக்கார்முகம் என்கையதாக அவ்வானுளோரும் விலக்கார் அவர்வந்து விலக்கினும் என்கைவாளிக்கு இலக்கா எரிவித்து உலகேழினொடு ஏழும் மன்னர் குலக்காவலும் இன்று உனக்குயான் - தரக் கோடி என்றான் ( நகர் நீங்குபடலம் 112 , 113 , 117 , 123 , 124 ] ஸ்ரீராமர் லட்சுமணர் கோபத்தைத் தனித்தல் மின்னொத்த சீற்றம் கனல் விட்டு விளங்கநின்ற பொன்னொத்த மேனி புயலொத்த தடக்கை யானை என் அத்த என் நீ இறையேனும் முனிந்தி லாதாய் சன்னத்த னாகித் தனுஏந்து தற்கு ஏது என்றான் பின் குற்றம் மண்ணும் பயக்கும் அரசு என்றல் பேணேன் முன் கொற்ற மன்னன் முடிகொள்க எனக் கொள்ள மூண்டது என்குற்றம் அன்றோ இகல் மன்னவன் குற்றம் யாதோ மின்குற்று ஒளிரும் வெய்யில் தீக்கொடு அமைந்த வேலோய் நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே பதியின் பிழையன்று பயந்து நமைப்புரந்தான் மதியின் பிழையன்று , மகன் பிழையன்று மைந்த விதியின் பிழை இதற்கு என்கொல் வெகுண்ட தென்றான் நற்றாதையும் நீ தனிநாய கன் நீ வயிற்றில் பெற்றாயும் நீயே பிறரில்லை பிறர்க்கு நல்கக் கற்றாய் இது காணுதி இன்று எனக் கைமறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான் வரதன் பகர்வான் வரம் பெற்றவள் தான் இவ்வையம் சரதம் உடையாள் அவள் என் தனித்தாதை செப்பப் பரதன் பெறுவான் இனியான படைக்கின்ற செல்வம் விரதம் இதின் நல்லது வேறினியாவது என்றான் [ நகர் நீங்குப்படலம் 122. 128 , 129 , 132 , 133 ] சுமித்திரை லட்சுமணருக்குப் புத்தி சொல்லல் அன்னான் அவர் தந்தன ஆதரத் தொடும் ஏந்தி இன்னா இடர்தீர்ந்து உடன் ஏகுஎன எம்பிராட்டி சொன்னால் அதுவே துணையாம் எனத்தூய நங்கை பொன்னார் அடிமேல் பணிந்தான் அவளும் புகல்வாள் ஆகாத தன்றால் உனக்கவ்வனம் இவ்வயோத்தி மாகாதல் இராமன் அம்மன்னவன் வையம் ஈந்தும் போகா உயிர்த்தாயர் நம்பூங்குழல் சீனத் என்றே ஏகாய் இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் என்றாள் பின்னும் பகர்வாள் மகனே இவன் பின் செல்தம்பி என்னும் படியன்று அடியாரின் ஏவல் செய்தி மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அதுவன்றேல் முன்னம் முடி என்றனள் வார்விழி சோர நின்றாள் ( நகர் நீங்குபடலம் 145 , 147 ] ஸ்ரீராமர் பிரிதலைக் குறித்துச் சீதை இரங்கல் பொருவில் எம்பி புவிபுரப் பான் புகழ் இருவர் ஆணையும் ஏந்தினென் - இன்றுபோய் கருவி மாமழைக் கற்றடம் கண்டு நான் வருவென் ஈண்டு வருந்தலை என்றான் நாய கன்வனம் நண்ணலுற் றான் என்றும் மேய மண் இழந் தான் என்றும் விம்மலள் நீவ ருந்தலை நீங்குவென் யான் என்ற தீய வெஞ்சொல் செவிசுடத் தேம்புவாள் வல்ல ரக்கரின் மால்வரை போய்விழுந்து அல்ல ரக்கின் உருக்கழல் காட்ட தர்க் கல்ல ரக்கும் கடுமைய அல்லநின் சில்ல ரக்குண்ட சேவடிப் போதென்றான் பரிவி கந்த மனத்தொரு பற்றிலாது ஒருவு கின்றனை ஊழி அருக்கனும் எரியும் என்பது யாண்டையது ஈண்டுநின் பிரிவி னும்சுடு மோபெருங் காடென்றாள் [ நகர்நீங்குப்படலம் 216 , 217 , 220 , 221 ] --- ஸ்ரீராமர் வனம் ஏகலால் புரசனங்கள் புலம்பல் சீரை சுற்றித் திருமகள் பின்செல மூரி விற்கை இளையவன் முன் செல காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ் ஊரை உற்றது உணர்த்தவும் வேண்டுமோ ஆரும் பின்னர் அழுதவ லித்திலர் சோரும் சிந்தையர் யாவரும் சூழ்ந்தனர் வீரன் முன்வனம் மேவுதும் யாம் எனா போரென்று ஒல்லொலி கைம்மிகப் பொம்மினார் [ நகர் நீங்குப்படலம் 228 , 229 ] குறிப்பு :- இராமன் காடு செல்வான் எனக் கேட்டோர் துயரம் நகரமாந்தர் புலம்பல் என்ற பகுதியில் உள்ள சில பாடல்களின் கருத்துக்கள் சில திபதையில் ஆளப் பட்டுள்ளன . சுமந்திரன் புலம்பல் செவ்விய குரிசில் கூறத் தேர்வலான் செப்புவான் அவ் வெவ்விய தாயின் தீய விதியினின் மேலன் போலாம் இவ்வயின் நின்னை நீக்கி இன்னுயிர் தீர்ந்தே னல்லேன் அவ்வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றால் தேவியும் இளவலும் தொடரச் செல்வனைப் பூவியல் கானகம் புகஉய்த் தேன் என்கோ கோவினை உடன்கொடு குறுகினேன் என்கோ யாவது கூறுவேன் இரும்பின் நெஞ்சினேன் தாருடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா வாருடை முலையொடும் மதுகை மைந்தரைப் பாரிடைச் செலுத்தினேன் பழைய நண்பினேன் தேரிடை வந்தனென் தீதிலேன் என்கோ வன்புலக் கல்மன மதியில் வஞ்சனேன் என்புலப் புறஉடைந்து இரங்கும் மன்னன்பால் உன்புலக் குரியசொல் உணர்த்தச் செல்கெனோ தென்புலக் கோமகன் தூதின் செல்கெனோ நாற்றிசை மாந்தரும் நகர மக்களும் தேற்றினர் கொணர்வர் என் சிறுவன் தன்னை என்று ஆற்றின அரசனை ஐய வெய்ய என் கூற்றுறழ் சொல்லினான் கொலைசெய் வேன் கொலோ அங்கிமேல் வேள்விசெய் தரிதின்பெற்றநின் சிங்கஏறு அகன்றது என்றுணர்த்தச் செல்கெனோ எங்கள்கோ மகற்கினி என்னின் கேகயன் நங்கையே கடைமுறை நல்லள் போலுமால் ( சுமந்திரன் மீட்சிப்படலம் 19-24) ஸ்ரீராமர் சுமந்திரனுக்கு நீதி ஓதுதல் பிறத்தல் என் றுற்றபின் பெறுவ யாவையும் திறத்துளி உணர்வதோர் செம்மை உள்ளத்தாய் புறத்துறு பெரும்பழி பொதுவின் றெய்தலும் அறத்தினை மறத்தியோ அவலம் உண்டெனா முன்பு நின் றிசை நிறீஇ முடிவு முற்றிய பின்பும் நின்று உறுதியைப் பயக்கும் பேரறம் இன்பம் வந்துறும் எனின் இனியதாய் இடைத் துன்பம் வந்துறும் எனின் துறக்கல் ஆகுமோ நிறப்பெரும் படைக்கலம் நிறத்தின் நேர்உற மறப்பயன் விளைத்திடல் வன்மை யன்றரோ இறப்பினும் திருவெலாம் இழப்ப எய்தினும் துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே கான் புறம் சேறலின் அருமை காண்டலால் வான்பிறங் கியபுகழ் மன்னர் தொல்குலம் யான்பிறந் தறத்தினின்று இழுக்கிற் றென்னவோ ஊன்திறந் துயிர்குடித் துழலும் வேலினாய் வினைக்கரு மெய்ம்மையின் வனத்துள் விட்டனன் மனக்கரும் புதல்வனை என்றல் மன்னவன் தனக்கருந் தவமது தலைக்கொண் டேகுதல் எனக்கருந் தவம் இதற்கு இரங்கல் எந்தை நீ முனிவனை எம்பியை முறையில் நின்றரும் புனித வேதியர்க்கும் மேல்உறை புத்தேளிர்க்கும் இனியன இழைத்தி என் றியம்பி எற்பிரி தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி தன்மையால் முறைமையால் எற்பயந் தெடுத்த மூவர்க்கும் குறையிலா என்நெடும் வணக்கம் கூறிப்பின் இறைமகன் துயர் துடைத்து இருத்திமா டென்றான் மறைகளை மறந்துபோய் வனத்துள் வைகுவான் ( சுமந்திரன் மீட்சிப்படலம் 27 – 31 , 33 - 37 ] ஸ்ரீராமரை நினைந்து சக்கிரவர்த்தி புலம்பல் இரதம்வந் துற்ற தென்றாங் கியாவரும் இயம்ப லோடும் வர தன்வந் துற்றான் என்ன மன்னனும் மயக்கந் தீர்ந்தான் புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி வி ரதமா தவனைக் கண்டான் வீரன்வந் தனனோ என்றான் நாயகன் பின்னும் தன்தேர்ப் பாகனை நோக்கி நம்பி சேயனோ அணிய னோஎன் றுரைத்தலும் தேர்வ லானும் வேயுயர் கானில் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினான் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான் ( தயரதன் மோட்சப் படலம் ஸ்ரீராமரைக் குகன் தன் ஊரில் இருக்கவேண்டல் பல் நந்துகு தாளம் தொகு படர்பங்கய நல்நீர் அன்னந்துயில் வதிதண்டலை அயல் நந்துறை புளினம் சின்னந்தரு மலர்சிந்திய செறிநந்தவனம் நன் பொன்னுந்திய நதிகண்டுளம் மகிழ்ந்தனர் போனார் கங்கை என்னும் கடவுள் திருந்தி தங்கி வைகும் தபோதனர் யாவரும் எங்கள் செல்கதி வந்ததென்று ஏமுறா அங்கண் நாயகற் காணவந்து அண்மினார் ( கங்கைப்படல் 7 , 10 ] சிந்தனை உணர்கிற்பான் சென்றனன் விரைவோடும் தந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான் அந்தணர் தமையெல்லாம் அருளுதிர் விடை என்னா இந்துவின் ந தலாளொடு இளவலொடு இனிதுறா விடுநனி கடிதென்றான் மெய்யுயிர் அனையானும் முடுகினன் நெடுநாவாய் முரிதிரை நெடுநீர்வாய் கடிதினின் மடஅன்னக் கதியது செல நின்றார் இடர்உற மறையோரும் எரிஉறு மெழுகானார் பாலுடை மொழியாளும் பகலவன் அனையானும் சேலுடை நெடுநன்னீர் சிந்தினர் விளையாட தோலுடை நிமிர்கோலின் துழவிய நெடுநாவாய் காலுடை நெடுஞெண்டின் சென்றது கடிதம்மா ஏவிய மொழிகேளா இழிபுனல் பொழிகண்ணான் ஆவியும் உலைகின்றான் அடியிணை பிரிகல்லான் காவியின் மலர்காசாக் கடல்மலை தேவியொடு அடிதாழாச் சிந்தனை உரைசெய்வான் யனையானை பொய்ம்முறை இலரேம்எம் புகலிடம் வனமேயால் கொய்ம்முறை உறுதாராய் குறைவிலெம் வலியேமால் செய்ம்முறை குற்றேவல் செய்குதும் அடியோமை இம்முறை உறவென்ன இனிதிரு நெடிதெம்மூர் தேன்உள தினைஉண்டால் தேவரும் நுகர்தற்காம் ஊன்உள துணை நாயேம் உயிர்உள விளையாட கான்உள புனலாடக் கங்கையும் உளதன்றே நான் உள தனையும்நீ இனிதிரு நடஎம்பால் தோல்உள துகில்போலும் சுவையுள தொடர்மஞ்சம் போல்உள பரண் வைகப் புரையுள கடிதோடும் கால்உள சிலைபூணும் கையுள கலிவானின் மேல்உள பொருளேனும் விரைவொடு கொணர்வேமால் [ குகப்படலம் 31 , 32 , 33 , 25 - 28 ) ஸ்ரீராமர் குகனைச் சினேகம் கொள்ளல் அன்னவன் உரைகேளா அமலனும் உரைநேர்வான் என்னுயிர் அனையாய்நீ இளவல்உன் இளையான் இந் நன்னுதல வள்நின்கேள் நளிர்கடல் நிலமெல்லாம் உன்னுடைய துநான்உன் உரிமையின் உளென் என்னா துன்புள தெனின் அன்றோ சுகமுளது அதுவன்றிப் பின்புளது இடைமன்னும் பிரிவுளது எனஉன்னேல் முன்புளெம் ஒருநால்வேம் முடிவுளது எனஉன்னா அன்புள இனிநாம்ஓர் ஐவர்கள் உளரானேம் படருற உளன்உம்பி கான்உறை பகல் எல்லாம் இடர்உறு பகையா யோய் யான் என உரியாய்நீ சுடருறு வடிவேலோய் சொல்முறை கடவேன்யான் வடதிசை வரும் அந்நாள் நின்னுழை வருகின்றேன் அங்குள கிளை காவற்கு அமைதியின் உளன்உம்பி இங்குள கிளைகாவற்கு யாருளர் இசையாய் நீ உன்கிளை என தன்றோ உறுதுயர் உறல் ஆமோ என்கிளை இதுகாஎன் ஏவலின் இனிதென்றான் ( குகப்படலம் 40 - 43 ] ஸ்ரீராமர் சீதைக்குச் சித்திரகூட வளங்காட்டல் வாளும் வேலும்விட் டளாயின அனையகண் மயிலே தாளின் ஏலமும் தமாலமும் தொடர் தரு சாரல் நீள மாலைய துயில்வன நீர்உண்ட கமஞ்சூல் காள மேகமும் நாகமும் தெரிகில காணாய் குருதி வாள் எனச் செவ்வரி பரந்தகண் குயிலே மருவி மால்வரை உம்பரில் குதிக்கின்ற வருடை சுருதி போல் தெளி மரகதக் கொழுஞ்சுடர் சுற்றப் பருதி வானவன் பசும்பரி புரைவன பாராய் வடங்கொள் பூண்முலை வனமயி லே மழைமதமா அடங்கு பேழ்வயிற் றரவுரி அமைதொறும் தொடக்கித் தடங்கள் தோறும் நின்றாடுவ தண்டலை அயோத்தி நுடங்கு மாளிகைத் துகிற் கொடி நிகர்ப்பன நோக்கோய் உவரி வாயன்றிப் பாற்கடல் உதவிய அமுதே துவரின் நீள்மணித் தடந்தொறும் இடந்தொறும் துவன்றிக் கவரி பால்நிற வால்புடை . பெயர்வன கடிதின் மால்வரை அருவியைப் பொருவன பாராய் பவள சலந்தலைக் கொண்ட சீயத்தால் தனிமதக் கதமா உலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில் மடவார் புலந்த காலை அற்று உக்கன குங்குமப் பொதியில் கலந்த முத்தென வேழமுத் திமைப்பன காணாய் உருகு காதலின் தழை கொண்டு மழலை வண்டோச்சி முருகு நாறு செந்தேனினை முழைநின்றும் வாங்கிப் பெருகு சூல் இளம்பிடிக்கு ஒரு பிறை மருப்புயானை பருக வாயினில் கையினின் றளிப்பது பாராய் ஆடு கின்றமா மயிலினும் அழகிய குயிலே கூடு கின்றிலர் கொடிச்சியர் தம்மனம் கொதிப்ப ஊடு கின்றனர் கொழுநருக் குருகினர் உவக்கப் பாடு கின்றன கின்னர மிதுனங்கள் பாராய் காணாய் ஒருவில் பெண்மை என் றுரைக்கின்ற உடலினுக் குயிரே மருவு காதலின் இனிதுடன் ஆடிய மந்தி அருவி நீர்கொடு வீசத்தான் அப்புறத் தேறிக் கருவி மாமழை உதிர்ப்பதோர் கடுவனைக் அறைகழற்சிலை குன்றவர் அகன்புனங் காவல் பறை எடுத்தொரு கடுவன் அடிப்பது பாராய் பிறையை ஏட்டினள் பிடித்து இதற்கிது பிழைஎன்னாக் கறைதுடைக்குறு பேதை ஓர் கொடிச்சியைக் காணாய் வடுவின் மாவகிர் இவையெனப் பொலிந்தகண் மயிலே இடுகு கண்ணினர் இடர்உறு மூப்பினர் ஏக நெடுகு கூனல்வால் நீட்டின உறுகுறு நெஞ்சக் கடுவன் மாதவர்க்கு அருநெறி காட்டுவ காணாய் பாந்தள் தேர் இவை பழிபடப் பரந்தபேர் அல்குல் ! ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயையக் கூந்தல் மென்மயில் குறுகின நெடுஞ்சிறை கோலி காந்து குண்டத்தில் அடங்கெரி எழுப்புவ காணாய் ! அலம்பு வார்குழல் ஆய்மயில் பெண்ணருங் கலமே நலம்பெய் வேதியர் மார்பினுக்கு இயைவுற நாடிச் சிலம்பி பஞ்சினில் சிக்கறத் தெரிந்த நூல் தேமாம் பலம்பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய் தெரிவை மார்க்கொரு கட்டளை எனச்செய் திருவே பெரிய மாக்கனி பலாக்கனி பிறங்கிய வாழை அரிய மாக்கனி கடுவன்கள் அன்பு கொண் டளிப்பக் கரிய மாகிழங் ககழ்ந்தன கொணர்வன காணாய் இனைய யாவையும் ஏந்திழைக்கு இயைவன காட்டி அனைய மாதவர் அருந்தவர் எதிர்வர வணங்கி வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான் மனையில் மெய்யெனும் மாதவம் புரிந்தவன் மைந்தன் [சித்திரகூடப் படலம் 2 - 6 , 10 , 12 , 14 , 22 , 30-32 , 37 ] சக்கிரவர்த்தியைக் குறித்துப் பரதர் புலம்பல் மூண்டெழு காதலால் முளரித் தாள் தொழ வேண்டினன் எய்தினன் உள்ளம் விம்முமால் ஆண்டகை நெடுமுடி அரசர் கோமகன் யாண்டையான் பணித்திர் என்று இருகை கூப்பினான் ஆனவன் உரைசெய அழிவில் சிந்தையாள் தானவர் வலிதொலைத்து அவனி தாங்கிய தேனமர் தெரியலான் தேவர் கைதொழ வானகம் எய்தினான் வருந்தல் நீ என்றாள் எறிந்தன கடியசொல் செவியுள் எய்தலும் நெறிந்தலர் குஞ்சியான் நெடிது வீழ்ந்தனன் அறிந்திலன் உயிர்த்திலன் அசனி ஏற்றினால் மறிந்துயர் மராமரம் மண்னுற் றென்னவே வாய்ஒளி மழுங்கதன் மலர்ந்த தாமரை ஆய்மலர் நயனங்கள் அருவி சோர்தரத் தீயெரி செவி யில்னவத் தனைய தீயசொல் நீயலது உரைசெய நினைப்பரோ என்றான் எழுந்தனன் ஏங்கினன் ஏங்கிப் பின்னரும் விழுந்தனன் விம்மினன் வெய்து யிர்த்தனன் அழிந்தனன் அரற்றினன் அரற்றி இன்ன மொழிந்தனன் பின்னரும் முகிலின் செவ்வியான் அறந்தனை வேர் அறுத் தருளைக் சொன்றுயர் சிறந்தநின் தண்ணளித் திருவை தேசழித்து இறந்தனை ஆம்எனின் இறைவ நீதினய மறந்தனை உனக்கிதன் மாசுமேல் உண்டோ சினக்குறும் பெறிந்துஎழு காமத் தீயவித்து இனக்குறும்பு யாவையும் எற்றி யாவர்க்கும் மனக்குறு நெறிசெலும் வள்ளியோய் மறந்து உனக்குறு நெறிசெலல் ஒழுங்கின் பாலதோ முதலவன் முதலிய முந்தையோர் பழங் கதையையும் புதுக்கிய தலைவன் கண்ணுடை நுதலவன் சிலைவிலின் நோன்மை நூறிய புதல்வனை எங்ஙனம் பிரிந்து போயினாய் செவ்வழி உருட்டிய திகிரி மன்னவ எவ்வழி மருங்கினும் இரவ லாளர்தாம் இவ்வழி உலகினில் இன்மை நண்ணினோர் அவ்வழி உலகினும் உளர்கொலோ ஐய பல்பசல் நிழற்றும் நின் கவிகைப் பாய்நிழல் நிற்பன பல்லுயிர் உணங்க நீ நெடும் கற்பக நெடுநிழல் காத லித்தியோ மற்பக மலர்ந்ததோள் மன்னர் மன்னனே இம்பர் நின் றேகினை இருக்கும் சார்பிழந்து உம்பர்வந் துன்கழல் ஒதுங்கி னார்களோ சம்பரன் அனைய.அத் தானைத் தானவர் அம்பரத் தின்னமும் உளர் கொலாம் ஐய இயங்கெழு தானையர் இறுத்த மாத்திரை உயங்கலில் மறையவர்க் குதவி உம்பரின் அயங்கெழு வேள்வியோ டரசர்க் கோதிய வயங்கெரி வளர்க்கலை வைக வல்லையோ ஏழுயர் மதகளிற் றிறைவ ஏகினை வாழிய கரியவன் வறியன் கையெனப் பாழியம் புயத்து நின் பணியின் நீங்கலா ஆழியை இனி அவற்கு அளிக்க எண்ணியோ பற்றுறு தவத்தினின் பயந்த மைந்தர்க்கு முற்றுல களித்து நீ முறையின் எய்திய கொற்ற நல் முடிமணக் கோலங் காணவும் பெற்றிலை போலும் நின் பெரிய கண்களால் ( பள்ளிபடைப்படலம் 42 , 55 ] பரதர் கைகேசியைக் கோபித்தல் எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும் அந்தமில் பெருங்குணத்து இராமன் ஆதலால் வந்தனை அவன்கழல் வைத்த போதலால் சிந்தைவெங் கொடுந்துயர் தீர்கலா தென்றான் அவ்வுரை கேட்டலும் அசனிஏறென வெவ்வுரை வல்லவள் மீட்டும் கூறுவாள் தெவ்வடு சிலையினாய் தேவிதம்பி என்று இவ்விரு வோரொடும் கானத்தான் என்றாள் வனத்தினன் என்றவள் இசைத்த மாற்றத்தை நினைத்தனன் இருந்தனன் நெருப்புண் டான்என வினைத்திறம் யாதினி விளைப்பது இன்னமும் எனைத்துள கேட்பன துன்பம்யான் என்றான் வாக்கினால் வரம்தரக் கொண்டு மைந்தனைப் போக்கினேன் வனத்திடைப் போக்கி பார்உனக்கு ஆக்கினேன் அன்னது பொறுக்க லாமையால் நீக்கினான் தன்னுயிர் நேமிவேந் தென்றாள் மாண்டனன் எந்தை என் தம்முன் மா தவம் பூண்டனன் நின்கொடும் புணர்ப்பினால் என்றால் கீண்டிலன் வாய் அது கேட்டும் நின்றயான் ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால் நீயினம் இருந்தனை யானும் நின்றனென் ஏயெனும் மாத்திரத்து ஏற்று கிற்றிலேன் ஆயவன் முனியும் என்று அஞ்சினென் அல்லால் தாய் எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ மாளவும் உளன் ஒரு மன்னன் வன்சொலால் மீளவும் உளன் ஒரு வீரன் மேயபார் ஆளவும் உளன் ஒரு பரதன் ஆகினால் கோளில் அறநெறி குறைவுண் டாகுமோ சுழியுடைத் தாய்சொலும் கொடிய சூழ்ச்சியால் வழியுடைத்தாய்வரும் மரபை மாய்த்து ஒரு பழி உடைத் தாக்கினன் பரதன் பண்டெனும் மொழி உடைத் தாக்கலின் முறைமை வேறுண்டோ நோயீர் அல்லீர் நுங்கண வன்றன் உயிர் உண்டீர் போயீரே நீர் இன்னம் இருக்கப் பெறு வீரே மாயீர் மாயா வன்பழி தந்தீர் , முலை தந்தீர் தாயீரே நீர் இன்னும் எனக்கென் தருவீரே ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் உயிரோடும் தின்றும் தீரா வன்பழி கொண்டீர் திரு எய்தி என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏகக் கன்றும் தாயும் போல்வன கண்டு கழியீரே மாளும் என்றே தந்தையை உன்னான் வசைகொண்டாள் கோளும் என்னா லே எனல் கொண்டான் அதுவன்றேல் மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகெல்லாம் ஆளும் என்றே போயினன் அன்றோ அரசாள்வான் உய்யா நின்றேன் இன்னமும் என் முன் உடன்வந்தோன் கையார் கல்லைப் புல்லட குண்ணக் கையேந்தி வெய்யோன் நான் சாலியின் வெண்சோறமுது என்ன நெய்யோ டுண்ண நின்றது நின்றார் நினையாரோ வில்லார் தோளான் மேவினன் வெங்கா னகம் என்ன நல்லான் அன்றே துஞ்சினன் நஞ்சே அனையாளை கொல்லேன் மாயேன் வன்பழியாலே குறைவற்றேன் அல்லேனோயான் அன்புடையார் போல் அழுகின்றேன் ஏன்றுன் பாவிக் கும்பிவயிற்றின் இடைவைகித் தோன்றும் தீராப் பாதகம் அற்றென் துயர் தீரச் சான்றும் தானே நல்லறமாக தகைஞாலம் மூன்றும் காண மாதவம் யானே முயல்கின்றேன் [ பள்ளிபடைப்படலம் 57-59 , 64 , 70-75 , 77 , 79 , 80 , 84 ) பரதர் கோசலாதேவிக்குச் சத்தியம் கூறுதல் ஆண்தகை கோசலை அருகர் எய்தினன் மீண்டும் மண் இழிதர வீழ்ந்து கேழ்கிளர் காண்டகு தடக்கையின் கமலச் சீறடி பூண்டனன் கிடந்தனன் புலம்பி னானரோ எந்தை எவ் வுலகுளான் எம்முன் யாண்டையான் வந்தது தமியென் இவ் மறுக்கம் காணவோ சிந்தையின் உறுதுயர் தீர்த்திரால் எனும் அந்தரத் தமரரும் அழுது சோரவே அடித்தளம் கண்டிலன் யான் என் ஐயனைப் படித்தலங் காவலன் பெயரற் பாலனோ பிடித்திலிர் போலும் நீர் பிழைத்திரால் எனும் பொடித்தலம் தோளுறப் புரண்டு சோர்கின்றான் கொடியவர் யாவரும் குலங்கள் வேரற நொடி.குவென் யானது நுவல்வ தெங்ஙனம் கடியவள் வயிற்றினிற் பிறந்த கள்வனேன் முடிகுவென் அருந்துயர் முடிய என்னுமால் இரதம் ஒன் றூர்ந்துபார் இருளை நீக்குமவ் வரதனில் ஒளிபெற மலர்ந்த தொல் குலம் பரதனென் றொருபழி படைத்த தென்னுமால் மரகத மலையென வளர்ந்த தோளினான் மையறு மனத்தொரு மாசுளான் அலன் செய்யனே என்பது தேறும் சிந்தையாள் கைகயர் கோமகள் இழைத்த கைதவம் ஐநீ அறிந்திலை போலுமால் என்றாள் தாளுறு குரிசில் அத் தாய்சொல் கேட்டலும் கோளுறு மடங்கலின் குமுறி விம்முவான் நாளுறு நல்லறம் நடுங்க நாவினால் சூளுறு கட்டுரை சொல்லல் மேயினான் அறங்கெட முயன்றவன் அருளில் நெஞ்சினன் பிறன்கடை நின்றவன் பிறரைச் சீறினோன் மறங்கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன் துறந்தமா தவர்க்கருந் துன்பம் சூழ்ந்துளோன் குரவரை மகளிரை வாளின் கொன்றுளோன் புரவலன் தன்னொடும் அமரிற் புக்குடன் விரவலர் வெரிநிடை விழிக்க மீண்டுளோன் இரவலர் அருநிதி எறிந்து வௌவினோன் தாய்பசி உழந்துயிர் தளரத் தான் தனி பாய்பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும் நாயகன் படநடந் தவனும் நண்ணுமத் தீயெரி நரகத்துக் கடிது செல்கயான் தாளினில் அடைந்தவர் தம்மைத் தற்கொரு கோளுற அஞ்சினன் கொடுத்த பேதையும் நாளினும் அறம்மறந் தவனும் நண்ணுறும் மீளரு நரகிடைக் கடிது வீழ்கயான் அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன் மைந்தரைக் கொன்றுளோன் வழக்கில் பொய்த்துளோன் நிந்தனை தேவரை நிகழ்த்தி னோன் புகும் வெந்துயர் நரகத்து வீழ்க யானுமே கன்றுயிர் ஓய்ந்துகக் கறந்துபால் உண்டோன் மன்றிடைப் பிறர்பொருள் மறைத்து வௌவினோன் நன்றியை மறந்திடும் நயமில் நாவினோன் என்றிவர் உறு நாகு என்ன தாகவே ஆறுதன் னுடன் வரும் அஞ்சொல் மாதரை ஊறுகொண் டலைக்கதன் உயிர்கொண் டேகினோன் சோறுதன் அயலுளோர் பசிக்கத் துய்த்துளோன் ஏறும்அக் கதியிடை யானும் ஏறவே எஃகெறி செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு ஓஃகினன் உயிர் வளர்த்துண்ணும் ஆசையான் அஃகலில் அறநெறி யகற்றி ஒண்பொருள் வெஃகிய மன்னன் வீழ் நரகில் வீழ்கயான் அழிவரும் அரசியல் எய்தி ஆகுமென்று இழிவரு சிறுதொழில் இயற்றி ஆண்டு தன் வழிவரு தருமத்தை மறந்து மற்றொரு பழிவரு நெறிபடர் பதகன் ஆகயான் தஞ்சென ஒதுங்கினோர் தனது பார் உளோர் எஞ்சலில் மறுக்கினோடு இரியல் போயுற வஞ்சிசென் றிறுத்தவன் வாகை மீக்கொள அஞ்சின மன்னவன் ஆக யானுமே கன்னியை அழிசெயக் கருதி னோன்குரு பன்னியை நோக்னோன் பருகினோன் நறை பொன்னிகழ் களவினில் பொருந்தி னோன் எனும் இன்னவர் உறுகதி என்ன தாகவே ஊண் அல உண்வழி நாயின் உண்டவன் ஆண் அலன் பெண் அலன் ஆர்கொ லாம்என நாணலன் நரகம் உண்டெனும் நல்லுரை பேணலன் பிறர்பழி பிதற்றி யாகயான் மறுவில்தொல் குலங்களை மாசிட்டு ஏற்றினோன் சிறுவிலை எளியவர் உணவு சிந்தினோன் நறியன அயலவர் நாவில் நீர்வர உறுபதம் நுங்கிய ஒருவன் ஆகயான் சுரும்பலர் செந்நல்அம் கழனிக் கானநாடு அரும்பகை கவர்ந்துண ஆவி பேணினென் இரும்பலர் நெடுந்தளை ஈர்த்த காலொடும் விரும்பலர் முகத்தெதிர் விழித்து நிற்தயான் ( பள்ளிபடைப்படலம் 27-91 , 94-97 , 99-109 , 113 ) குகன் பரதர் சேனையைக்கண்டு கோபித்தல் மூன்றுல கினுக்குமோர் முதல்வ னாய்முதல் தோன்றினன் இருக்கயான் மகுடம் சூடுதல் சான்றவர் உரைசெயத் தருமம் ஆயதேல் ஈன்றவள் செய்கையில் இழுக்குண் டாகுமோ நன்னெறி என்னினும் நான் இந் நானில் மன்னுயிர்ப் பொறைசுமந்து இருந்து வாழ்கிலேன் அன்னவன் தனைக்கொணர்ந்து அலங்கல் மாமுடி தொன்னெறி முறைமையின் சூட்டக் காண்டிரால் ( ஆறு செல்படலம் 14 , 17 ) அப்படை கங்கையை அடைந்தது ஆயிடைத் துப்புடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை ஒப்புடை அண்ணலோ டுடற்றவே கொலாம் இப்படை எழுந்ததென்று எடுத்த சீற்றத்தான் குகன் எனப் பெயரிய கூற்றின் ஆற்றலான் தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான் நகைமிகக் கண்கள் தீ நாற நாசியில் புகையுறக் குனிப்புறும் புருவப் போர்விலான் அஞ்சன வண்ணன் என் உயிர் நாயகன் ஆளாமே வஞ்சனை யால்அர செய்திய மன்னரும் வந்தாரே செஞ்சரம் என்பன தீயுமிழ் கின்றன செல்லாவோ உஞ்சிவர் போய்விடின் நாய்க்குகன் என்றெனை ஓதாரோ ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ தோழமை என்றவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ முன்னவன் என்று நினைந்திலன் மொய்புலி அன்னான் ஓர் பின்னவன் நின்றனன் என்றிலன் அன்னவை பேசானேல் என் இவன் என்னை இகழ்ந்தது இவ்வெல்லை கிடந்தன்றோ மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும்சரம் வாயாவோ பாவமும் நின்ற பெரும்பழியும் பகை நண்போடும் ஏவமும் என்பவை மண்ணுல காள்பவர் எண்ணாரோ ஆவது போக என் அருயிர்த் தோழமை தந்தான் மேல் போவது சேனையும் ஆருயிரும் கொடு போயன்றோ அருந்தவம் என் துணை ஆள இவன்புவி ஆற்வானோ மருந்தெனின் அன்றுயிர் வண்புகழ் கொண்டுபின் மாயேனோ பொருந்திய கேண்மை உகந்தவர் தம்மொடும் போகாதே இருந்தது நன்று கழிக்குவென் என் கடன் இன்றோடே தும்பியும் மாவும் மிடைந்த பெறும்படை சூழ்வாரும் வம்பியல் தாரிவர் வாள்வலி கங்கை கடந்தன்றோ வெம்பிய வேடர் உளீர் துறைஓடம் விலக்கீரோ நம்பிமுன் னே இனிநம் உயிர் மாய்வது நன்றன்றோ போனபடைத்தலை வீரர்தமக்கிரை போதாதோ சேனைக் கிடைக்கிடு தேவர் வரின்சிலை மாமேகம் சோனை படக்குடர் சூறைபடச் சுடர் வாளோடும் தானை படத்தனி யானைபடத் திரள் சாயேனோ நின்ற கொடைக்கைஎன் அன்பன் உடுக்க நெடுஞ்சீரை அன்று கொடுத்தவன் மைந்தர்பலத் தை என் அம்பாலே கொன்று குவித்த நிணங்கொள் பிணக்குவை கொண்டோடித் துன்று திரைக்கடல் கங்கை மடுத்தினி தூராதோ ஆடு கொடிப்படை சாடிஅறத்தவ ரே ஆள வேடு கொடுத்தது பார் எனும் இப்புகழ் மேவீரோ நாடு கொடுத்த என் நாயக னுக்கிவர் , நாம் ஆளும் நம் காடு கொடுக்கில ராகி எடுத்தது காணிரோ மாமுனி வர்க்குற வாகி வனத்திடை யேவாழும் கோமுனி யத்தகும் என்று மனத்திறை கொள்ளாதே ஏமுனை உற்றிடில் ஏழுகடற் படைஎன்றாலும் ஆமுனை யிற்சிறுகூழ்என இப்பொழு தாகாதோ ( கங்கைகாண்படலம் 6 , 7.1 லட்சுமணர் பரதர் சேனையைக் கண்டுகோபித்தல் என்றெழுந்த தம்பியொடும் எழுகின்ற காதலொடும் குன்றெழுந்து சென்றதெனக் குளிர்கங்கைக் கரைகுறுகி நின்றவனை நோக்கினான் திருமேனி நிலை உணர்ந்தான் துன்றுகரு நறுங்குஞ்சி எயினர்கோன் துண்ணென்றான் வற்கலையின் உடையானை மாசடைந்த மெய்யானை நற்கலையில் மதியென்ன நகையிழந்த முகத்தானை கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான் விற்கையினின் றிடைவீழ விம்முற்று நிற்கின்றான் நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான் தம்பியையும் ஒக்கின்றான் தவவேடம் தலைநின்றான் துன்பம் ஒரு முடிவில்லைத் திசைநோக்கித் தொழுகின்றான் எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான் பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும்பேர் வரத்தின் மிக்குயர் மாதவன் வைகிடம் அருத்தி கூர அணுகினன் ஆண்டவன் விருத்தி வேதிய ரோடெதிர் மேவினான் ( கங்கைகாண்படலம் 28 , ! ஆய காதலோடு ஐயனைக் கொண்டு தன் தூய சாலை உறைவிடம் துன்னினான் மேய சேனைக்கு அமைப்பென் விருந்தெனா தீயின் ஆகுதிச் செல்வனும் சிந்தித்தான் எழுந்தனன் இளையவன் ஏறினான் நிலம் கொழுந்துயர்ந் தனையதோர் நெடிய குன்றின்மேல் செழுந்திரைப் பரவையைச் சிறுமை செய்த அக் கழுந்துடை வரிசிலைக் கடலை நோக்கினான் பரதன் இப்படையொடு பார்கொண் டாள்மறம் கருதிஉட் கிடந்ததோர் கறுவு காந்தலால் விரதம்உற் றிருந்தவன் மேல்வந்தான் இது சரதம் மற்றிலது எனத் தழங்கு சீற்றத்தான் கட்டினன் சுரிகையும் கழலும் பல்கணைப் புட்டிலும் பொறுத்தனன் கவசம் பூண்டமைத்து இட்டனன் எடுத்தனன் வரிவில் , ஏந்தலைத் தொட்டடி வணங்கிநின்று இனைய சொல்லினான் இருமையும் இகழ்ந்த அப் பரதன் ஏந்துதோள் பருமையும் அன்னவன் படைத்த சேனையின் பெருமையும் நின்னொரு பின்புவந்த என் ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம் நீ படர் எலாம் படப்படும் பரும யானையின் திடர் எலாம் உருட்டின தேரும் ஈர்த்தன குடர்எலாம் திரைத்தன குருதி ஆறுகள் கடர் எலாம் மடுப்பன பலவும் காண்டியால் கருவியும் கைகளும் கவச மார்பமும் உருவின உயிரினோடு உதிரம் தோய்வில திரிவன சுடர்க்கணை திசைக்கை யானைகள் வெருவரச் செய்வன காண்டி வீரநீ பண்முதிர் களிற்றொடு பரந்த சேனையின் எண்முதல் அறுத்து நான் இமைப்பின் நீக்கலால் விண்முதுகு உளுக்கவும் வேலை ஆடையின் மண்முது காற்றவும் காண்டி வள்ளல் நீ நிவந்த வான்குருதி பின் நீத்தம் நீந்தி மெய் சிவந்த சாதகரொடு சிறுகண் கூளியும் கவந்தமும் உலகம் நின் கையதாயது என்று உவந்தன குனிப்பன காண்டி உம்பர்போல் சூழிவெங் கடகரி துரக ராசிகள் பாழிவன் புயத்திகல் வயவர் பட்டற ஆழிவெங் குருதியால் அலைந்து வேலைகள் ஏழும் ஒன் றாகிநின்று இரைப்பக் காண்டியால் ஒருமகள் காதலின் உலகை நோய் செய்த பெருமகன் ஏவலின் பரதன் தான்பெறும் இருநிலம் ஆள்கைவிட்டு இன்றென் ஏவலால் அருநர காள்வது காண்டி ஆழியாய் வையகம் துறந்து வந்து அடவி வைகுதல் எய்தியது உனக்கென நின்னை ஈன்றவள் நைதல்கண் டுவந்தவள் நவையின் ஓங்கிய கைகயன் மகள்விழுந்து அரற்றக் காண்டியால் அரம்சுட அழல்நிமிர் அலங்கல் வேலினாய் விரைஞ்சொரு நொடியில் இவ் அனிக வேலையை உரஞ்சுடு வெடிக்கணை ஒன்றில் வென்றுமுப் புரஞ்சுடும் ஒருவனின் பொலிவென் யான் என்றான் ( திருவடி சூட்டுபடலம் 6 , 26-31 , 37-39 ஸ்ரீராமர் சக்கிரவர்த்தியைக் குறித்துப் புலப்பல் இலக்குவ உலகம் ஓர் ஏழும் ஏழும்நீ கலக்குவென் என்பது கருதினால் அது விலக்குவாரரிதது விளம்ப வேண்டுமோ புலக்குரித் தொருபொருள் புகலக் கேட்டியால் நங்குலத் துதித்தவர் நவையின் நீங்கினர் எங்குலப் புறுவர்கள் எண்ணில் யாவரே தங்குலத்து ஒருவு அரும் தருமம் நீங்கினர் பொங்குலத் திரளொடு பொருத தோளினாய் எனைத்துள மறையவை இயம்பற் பாலன பனைத்திரள் சுரக்கரி பரதன் செய்கையே அனைத்திறம் அல்லன அல்ல அன்னது நினைத்திலை என்வயின் நேய நெஞ்சினால் பெருமகன் என் வயின் பிறந்த காதலின் வரும் என நினைகையும் மண்ணை என்வயின் தரும் என நினைகையும் தவிரத் தானையால் பொரும் என நினைகையும் புலமைப் பாலதோ பொன்னொடும் பொருகழல் பரதன் போந்தனன் நன்னெடும் பெரும்படை நல்கல் அன்றியே என்னொடும் பொரும் என இயம்பற் பாலதோ மின்னொடும் பொருவுற விளங்கும் வேலினாய் சேணுயர் தருமத்தின் தேயை செம்மையின் ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ பூணியல் மொய்ம்பினாய் போந்தது ஈண்டெனைக் காணிய நீயிது பின்னும் காண்டியால் கோதறத் தவஞ்செய்து குறிப்பின் எய்திய நாதனைப் பிரிந்தனள் நலத்தின் நீங்கினாள் வேதனைத் திருமகள் மெலிகின்றாள் விடு தூதெனப் பரதனும் தொழுது தோன்றினான் அயாவுயிர்த் தழுகணீர் அருவி மார்பிடை உயாவுறத் திருவுளம் உருகப் புல்லினான் நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலைய மாயினான் தயாமுதல் அறத்தினைத் தழீஇய தென்னவே புல்லி நின்று அவன் புனைந்த வேடத்தைப் பல்முறை நோக்கினான் பலவும் உன்னினான் அல்லலின் அமுங்கினை ஐய ஆளுடை . மல்லுயர் தோளினான் வலியனோ என்றான் அரியவன் உரைசெய பரதன் ஐயநின் பிரிவெனும் பிணியினால் என்னைப் பெற்ற அக் கரியவள் வரம் எனும் காலனால் தனக்கு உரியமெய்ந் நிறுவிப்போய் உம்பரான் என்றான் நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர் தந்தாய் தனியறத்தின் தாயே தயாநிலையே எந்தாய் இகல் வேந்தர் ஏறே இறந்தனையே அந்தோ இனிவாய்மைக்கு ஆர்உளரே மற்றென்றான் சொற்பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி நற்பெற்ற வேள்வி நவைநீங்க நீ இயற்றி எற்பெற்று நீ பெற்றது இன்னுயிர் போய் நீங்கவோ கொற்பெற்ற வெற்றிக் கொலைபெற்ற கூர்வேலோய் மன்னுயிர்க்கு நல்லுரிமை மண்பாரம் நான் சுமக்க பொன்னுயிர்க்குந் தாரோய் பொறைஉயிர்த்தவாறிதுவோ உன்உயிர்க்குக் கூற்றாய் உலகாள உற்றேனோ மின்உயிர்க்கும் தீவாய் வெயிலுயிர்க்கும் வெள்வேலோய் எம்பரத்ததாக்கி அரசுரிமை இந்தியங்கள் தம்பரத்த வாக்கித் தவமிழைத்த வாறிதுவோ சம்பரப்பேர்த் தானவனைத் தள்ளி சதமகற்கன்று அம்பரத்தின் நீங்கா அரசளித்த ஆழியாய் தேனடைந்த சோலைத் திருநாடு கைவிட்டுக் கானடைந்தேன் என்னத் தரியாது காவலநீ வானடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வுகந்தே ஊனடைந்த தெவ்வ ருயிர் அடைத்த வெள்வே லோய் வண்மையும் மானமுமேல் வானவர்க்கும் பேர்க்ககிலாத் திண்மையும் செங்கோல் நெறியும் திறம்பாத உண்மையும் எல்லாம் உடனோகொண் டேகினையே தண்மை தகை மதிக்கும் ஈத்த தனிக்குடையோய் ( திருமுடி சூட்டுபடலம் 40 45 , 50 , 53 , 54 , 58-61 , 63 , 64 ] ஸ்ரீ ராமரை வதிஷ்டர் தேற்றுதல் துறத்தலும் நல்லறத் துறையும் அல்லது புறத்தொரு துணையிலை பொருந்தும் மன்னுயிர்க்கு இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதை மறத்தியோ மறைகளின் வரம்பு கண்டநீ பெறுவதன் முன்உயிர் பிரிதல் காண்டியால் மறுவறு கற்பினில் வையம் யாவையும் அறுபதி னாயிரம் ஆண்டும் ஆண்டவன் இறுவது கண்டவற்கு இரங்கல் வேண்டுமோ செய்த புண்ணிய நறு நெயில் பொருவில் காலமாம் திண்ணிய திரியினில் விதியென் தீயினில் எண்ணிய விளக்கவை இரண்டும் எஞ்சினால் அண்ணலே அவிவதற்கு ஐயம் ஆவதோ இவ்வுல கத்தினும் இடரினே கிடந்து அவ்வுல கத்தினும் நரகில் ஆழ்ந்துபின் வெவ்வினை துய்ப்பன விரிந்த யோனிகள் எவ்வள வில் செல எண்ணல் ஆகுமோ ( திருவடி சூட்டுபடலம் 68 , 70 , 73 , 74 ] ஸ்ரீ ராயர் முன்னே பரதர் புலம்பல் விண்ணு நீர் மொக்குளின் விளியும் யாக்கையை எண்ணி நீ அழுங்குதல் இழுதைப் பாலதால் கண்ணின் நீர் உகுத்தலின் கண்ட தில்லை, போய் மண்ணு நீர் உகுத்திநீ மலர்க்கையால் என்றான் புக்கனன் புனலிடை மூழ்கிப் போந்தனன் தக்க நல் மறையவன் சடங்கு காட்ட தான் முக்கையின் நீர்விதி முறையின் ஈந்தனன் ஒக்கநின் றுயிர்தொறும் உணர்வு நல்குவான் வரதன் துஞ்சினான் ; வையம் ஆணையால் சரதம் நின்னதே மகுடம் தாங்கலாய் விரத வேடம் நீ என் கொல் மேவினாய் பரத ! கூறெனாப் பரிந்து கூறினான் மனக்கொன் றாதன வரத்தின் நின்னையும் நினக்கொன் றாநிலை நிறுவி நேமியான் தனைக்கொன் றாள் தரும் தனையன் ஆதலால் எனக்கொன் றாத்தவம் அடுப்பது எண்ணெனால் பாவ காரியின் பிறந்த பாவியேன் சாவ தோர்கிலேன் தவம் செய் வேனலேன் யாவ னாகியிப் பழிநின் றேறுவேன் தொகையில் அன்பினால் இறைவன் துஞ்சநீ புகையும் வெஞ்சுரம் புகுத புந்தியால் வகையில் வஞ்சனாய் அரசு வவ்வயான் பகைவனே கொலாம் இறவு பார்க்கின்றேன் உந்தை தீமையும் உலகுறாத நோய் தந்த தீவினைத் தாய் செய் தீமையும் எந்தை நீங்க மீண் டரசு செய்கெனாச் சிந்தை யாவதும் தெரியக் கூறினான் [ திருவடிசூட்டுபடலம் 77 , 79 , 94 , 96 , 97 , 100 , 101 ] ஸ்ரீ ராமர் பரதருக்குப் புத்தி சொல்லுதல் சொற்ற வாசகம் துணிவு ணர்ந்தபின் இற்றதோ இவன் மனமென் றெண்ணுவான் வெற்றி வீரயான் விளம்பக் கேள் எனா முற்றும் நோக்கினான் மொழிதல் மேயினான் பரவு கேள்வியும் பழுதில் ஞானமும் விரவு சீலமும் வினையின் மேன்மையும் உரவிலோய் தொழற் குரிய தேவரும் குரவரே எனப் பெரிது கோடியால் தாய் வரங்கொளத் தந்தை ஏவலால் மேய நங்குலத் தருமம் மேவினேன் நீவரங் கொளத் தவிர்தல் மேன்மைபோ ஆய்வரும் புலத் தறிவு மேயினாய் தனைய ராயினும் தந்தை தாயரை வினையின் நல்லதோர் இசையை வேய்தலோ நினையல் ஓவிடா நெடிய வன்பழி புனைதலோ ஐய புதல்வர் ஆதல் தான் இம்மை பொய்உரைத்து இவறி எந்தையார் அம்மை வெம்மைசேர் நரகம் -ஆளயான் கொம்மை நல்நிதிக் குவையின் வைகிவாழ் செம்மை சேர்நிலத்து அரசு செய்வெனோ வரனில் உந்தைசொல் மரபினால் உடைத் தரணி நின்னது என் றியைந்த தன்மையால் உரனின் நீபிறந்து உரிமை யாதலால் அரசு நின்னதே ஆள்க என்னவே மன்னவன் இருக்க வேயும் மணியணி மகுடம் சூடுக என்னயான் இயைந்த தன்னான் ஏயது மறுக்க அஞ்சி அன்னது நினைந்தும் நீஎன் ஆணையை மறுக்க லாமோ சொன்னது செய்தி ஐய துயருழந்து அயரல் என்றான் ( திருவடி சூட்டு படலம் 102 , 104 , 106-109 , 115 ] பாதுகைக்குப் பரதர் பட்டாபிஷேகம் செய்தல் ஆம் எனில் ஏழிரண்டு ஆண்டில் ஐயநீ நாம நீர் நெடுநகர் நண்ணி நானிலம் கோமுறை புரிகிலை என்னின் கூர்எரி சாம் இது சரதம் நின் ஆணை சாற்றினேன் விம்மினன் பரதனும் வேறு செய்வதொன்று இன்மையின் அரிதென எண்ணி ஏங்குவான் செம்மையின் திருவடித் தலம் தந்து ஈகென எம்மையும் தருவன இரண்டும் நல்கினான் அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான் முடித்தலம் இவைஎன முறையின் சூடினான் படித்தலத் திறைஞ்சினன் பரதன் போயினான் பொடித் தலம் இலங்குறு பொலங்கொள் மேனியான்
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
March 12, 2024 at 5:23 am |
பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி…