ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே:
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்:
கூரத்தாழ்வான் அருளிய பஞ்சஸ்தவம் வேதத்திற்கு மங்கள சூத்திரமாக (திருமாங்கல்யம்) உள்ளது (அதாவது இது இல்லாமல் பரதேவதை யார் என்ற தெளிவு நமக்கு கிடைத்திருக்காது), அவரை நான் வணங்குகிறேன்.
அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத:
கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்.
ஸ்ரீ சீராமப்பிள்ளை என்னும் வேத வியாஸ பட்டரின் திரு மகனாரான ஸ்ரீ ஸர்வஞ்ஞ பட்டர் என்கிற ஸ்ரீ நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ கூரேச விம்சதி
ஸ்ரீ ஸூத்த ஸத்வம் தொட்டாச்சார்யார் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ கூரேச பஞ்சாஸாத்
——-
ஸ்ரீ ரங்க உஜ்ஜ்வல மத்ய வீதி நிலயம் ஸ்ரீ ராம மிஸ்ராத் மஜம்
ஸ்ரீ பட்டார்ய பதாஸ்ரயம் ஸூப குணம் வாஸாம் ஜயி ப்ராதரம்
லோகார்ய ப்ரணவம் ததுக்தி ரஸிகம் ஸர்வஜ்ஞ பட்டாரகம்
வந்தே தம் புவி விம்சதிம் வ்யதநுத ஸ்ரீ வத்ஸ சிஹ்னஸ்ய ய–ஸ்வாமி பற்றிய தனியன் இவர் வம்சத்தவர் அருளிச் செய்தது
ய-யாவர் ஒருவர்
புவி -உலகில்
ஸ்ரீ வத்ஸ சிஹ்னஸ்ய–கூரத்தாழ்வானைப் பற்றிய
விம்சதிம்-இருபது ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்தோத்ரத்தை
வ்யதநுத- –அருளிச் செய்தாரோ
தம் -அப்படிப்பட்ட
ஸ்ரீ ரங்க உஜ்ஜ்வல மத்ய வீதி நிலயம்-ஸ்ரீ ரெங்கத்தில் விளங்குகிற நடுவில் திருவீதியை இருப்பிடமாகக் கொண்டவரும்
ஸ்ரீ ராம மிஸ்ராத் மஜம் -வேத வியாஸ பட்டர் என்னும் ஸ்ரீ ராம மிஸ்ரரின் திருக்குமாரரும்
வாஸாம் ஜயி ப்ராதரம் –வாக் விஜயி பட்டரின் ஸஹோதரும்
ஸ்ரீ பட்டார்ய பதாஸ்ரயம் –ஸ்ரீ பராசர பட்டரின் திருவடிகளை ஆஸ்ரயித்தவரும்
லோகார்ய ப்ரணவம்-லோகாச்சார்யராகிய நம்பிள்ளையிடம் பக்தியை யுடையவரும்
ததுக்தி ரஸிகம் –அந்த நம்பிள்ளையின் ஸ்ரீ ஸூக்திகளின் சுவை யறிந்தவரும்
ஸூப குணம் –நல்ல குணங்களைக் கொண்டவருமான
ஸர்வஜ்ஞ பட்டாரகம் –ஸர்வஜ்ஞ பட்டரை
வந்தே –வணங்கி ஸ்துதி செய்கிறேன்
கூரத்தாழ்வானின் திருக்குமாரர்கள் இருவருக்கும் ரெங்கநாதன் ராம மிஸ்ரர் இயற் பெயர்கள்
எம்பெருமானார் இவர்களுக்கு பராசர பட்டர் என்றும் வேத வ்யாஸ பட்டர் என்றும் திரு நாமம் சாத்தி அருளினார்-இவரது சகோதரரே வாக் விஜயீ பட்டர்
———
ஸ்ரீ ரங்க ராஜ கருணாமய த்ருஷ்டி வீஷா
ஸம் ப்ராப்த ஸர்வ குண ராஜி விராஜமாநே
ஸ்ரீ மச் சட ப்ரமதநே ஸ்திர பாவ பந்தம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரு மந்வஹம் ஆஸ்ரயாமி –1-
ஸ்ரீ ரங்க ராஜ கருணாமய த்ருஷ்டி வீஷா ஸம் ப்ராப்த ஸர்வ குண ராஜி விராஜமாநே–திருவரங்க நாதனுடைய கருணை பொங்கிய திருக்கண் பார்வையினால் அடையப் பெற்ற ஸகல ஸத் குண ஸமூஹங்களாலே மிகவும் விளங்குகின்ற
ஸ்ரீ மச் சட ப்ரமதநே -ஸ்ரீ கிருஷ்ண பக்தியாகிற செல்வத்தைப் பெற்ற சடகோப முனிவரிடத்தில்
ஸ்திர பாவ பந்தம்–நிலை பெற்ற திரு உள்ளப் பிணைப்பை யுடையவரான
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் –கூரத்தாழ்வானாகிய ஆசார்யரை-திரு மறு மார்பன் -ஆழ்வானுக்கு தந்தையரால் இந்த திரு நாம கரணம்
அந்வஹம் –தினந்தோறும்
ஆஸ்ரயாமி –ஆஸ்ரயிக்கிறேன் -ஸேவிக்கிறேன்
ஆழ்வார் இடம் பக்தியை ஆழ்வானுக்கு முதல் யோக்யதையாக அருளிச் செய்கிறார்
சடவாயுவை ஹூங்காரத்தாலே ஒறுத்து ஒட்டிய ஆழ்வார்
சட -வஞ்சனை -வேதத்தை இல்லை செய்யும் பாஹ்யர் -விபரீத அர்த்தங்களை சொல்லும் குத்ருஷ்டிகள் -ஆகிய வஞ்சகர்களை நிரஸித்து அருளியவர் என்றுமாம்
த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-2-
யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே சர்வகாலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ
அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம் –
தத் வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸம்ஸ்ரயேம–மகிழ் மாலை மார்பினன் -என்று தாமே
பேசிக் கொள்ளலாம் படி வகுளமாலையை நிரூபகமாக உடையவர்
யத்-த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம்
த்ரை வித்ய வ்ருத்தர் ஆகிறார் மதுரகவிகள் போல்வார்
மேவினேன் பொன்னடி மெய்ம்மையே
குருகூர் நம்பீ முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –
ப்ராவண்யம் உடையார் தம் தலைக்கு பூஷணமாக கொள்வர்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ண மாட்டேன்
மற்ற அரசு தானே
இங்கு -த்ரை வித்ய வ்ருத்தம் -சப்தம்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசனையே கருத்தில் கொண்டதாகும்
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்த
ராமானுஜன் போன்ற மஹ நீயர்கள் என்கை
சாத்விக ஜனஸ்ய-நித்யம் -யதேவ -சம்பத்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -என்று அன்றோ
சாத்விகர்களது அத்யவசாயம்
லௌகீகர்கள் சம்பத்தாக நினைத்து இருக்கும் வஸ்து வஸ்து ஸ்திதியில் விபத்தமாய் இருக்கும்
உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யம் உடையவர் இட்ட வழக்காய் இருக்குமே
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேந மத் அந்வயா நாம் -என்று அருளிச் செய்த
ஆளவந்தார் போல்வாரை இங்கே சாத்விக ஜனம் என்கிறது
நித்யம்
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்-என்னுமா போலே
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கைவிடப்பட்டவர்கள்
அசரண்யர்
அவர்களையும் வலியப் பிடித்து இழுத்து –
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ –இத்யாதிகளை உபதேசித்து
திருத்திப் பணி கொண்டவர் அன்றோ
புண்யம்
புநா தீதி புண்
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி
சகல ஆத்மாக்களை பரிசுத்தமாக்க வல்லவை
புண்யம் ஸூந்தரம் -பர்யாயம் -அழகிய திருவடிகள் என்றுமாம் -என்றாலும் பாவனத்வத்திலே இங்கு நோக்கு
ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கின படி சொல்லிற்று ஆயிற்று
ஆழ்வாருக்கு மங்களா சாசனம் -கடலாக உருவகம் -நான்கு விசேஷணங்கள்
பயோநிதிக்கு இருக்கக் கடவ தன்மைகள் ஆழ்வார் இடம் குறைவற இருக்கும் படியை மூதலித்து அருளுகிறார்
பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-3-
பக்தியின் கனத்தினால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப்பட்ட சார பூதமான
ப்ரணயமாகிற தீர்த்தத்தினுடைய ப்ரவாஹத்தாலே
நவ ரஸ சமூகத்தால் நிறைந்ததாயும் வேதப்பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும்
எம்பெருமானுக்கு திவ்யமான ஸ்தானமாயும்
அளவில்லாப் பெருமையையும் உடைத்தாய் இருக்கிற நம்மாழ்வார் ஆகிற கடல் நெடு நாள் வாழ வேணும்
பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
கடலானது ரஸவ்க சப்த வாஸ்யமான ஜல பிரவாகத்தாலே பரிபூர்ணமாய் இருக்கும்
ஆழ்வாரோ சிருங்கார வீர கருணை அத்புத ஹாஸ்ய பய அநக ரௌத்ர பீபத்ச பக்தி ரசங்களாலே பரிபூர்ணராய் இரா நின்றார்
இவை விளைந்தமைக்கு நிதானம் விலக்ஷண பக்தி விசேஷத்தாலே ஆச்சர்யமான பாவ பந்தங்கள் உண்டாகி-
அவை பல தலைத்து நாநா ரஸ பரிபாகங்கள் ஆயின
பக்தி ப்ரபாவ
ஆழ்வார் பக்திக்கு ஒப்புச் சொலலாவது இல்லையே
காதல் கடல் புரைய விளைவித்த காரமார் மேனி -என்று முதலிலே கடல் போலதாய்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அநந்தரம்
சூழ்ந்த அதனில் பெரிய என் அவா -என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய்
ஆக இப்படி மென்மேலும் பெருகிச் செல்லும் பக்தி பிரபாவத்தாலே
பவத் அத்புத பாவ பந்த
உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே -அதாவது
அந்த பக்தி தானே சிருங்கார வ்ருத்தயா பரிணமித்து -தலைமகள் -தாய் -தோழி பாசுரங்களாக பேசும்படிக்கு ஈடான ஆச்சர்யமான பாவ பந்தங்கள்
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண–
அப்படிப்பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரசத்தை வளரச் செய்யுமாயிற்று
உயர்வற உயர் நலம் உடையவன்
வீடுமின் முற்றவும்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறவித்துயர் அற
பொரு மா நீள் படை –இத்யாதிகளில் சாதாரண பக்தி ரசம் விளங்கும்
அஞ்சிறைய மட நாராய்
மின்னிடை மடவார்கள்
வேய் மறு தோளிணை–இவற்றில் அன்றோ அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சாரம் விளங்குவது
அப்படிப்பட்ட ப்ரணய மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீ ஸூக்தி களில் நவ ரசமும் பொலிய நிற்கும் அன்றோ –
நவ ரசங்களுள் சிருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயாநகம் சாந்தி ஆகிய பக்தி இந்த ரசங்கள்
ஓரோ திருவாய் மொழிகளிலே பிரதானமாகப் பொதிந்து இருக்கும்
மற்ற ஹாஸ்ய பீபீஸ்ய ரௌத்ர ரசங்கள் ஒரோ இடங்களிலே மறைய நின்று சிறிது சிறுது தலைக்கட்டி நிற்கும்
மின்னிடை மடவார்கள் -நங்கள் வரிவளை-வேய் மறு தோளிணை -முதலான திருவாய் மொழிகளில்
சிருங்கார ரசம் தலை எடுக்கும்
மாயா வாமனனே-புகழு நல் ஒருவன் -நல் குறைவும் செல்வமும் –இவற்றில் அத்புத ரசம் தலை எடுக்கும்
உண்ணிலாய ஐவரால் இத்யாதிகளில் பயாநக ரசம்
ஊரெல்லாம் துஞ்சி -வாயும் திரையுகளும் -ஆடியாடி யகம் கரைந்து இத்யாதிகளில் கருணரசம்
குரவை ஆய்ச்சியாரோடும் கோத்ததும் -வீற்று இருந்து ஏழு உலகும் -இத்யாதிகளில் வீர ரசம்
ஆக இங்கனே நாநா ரசங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூக்தி கள்-ரஸவ்க பரிபூர்ணராய் இருப்பார் ஆய்த்து ஆழ்வார் –
வேதார்த்த ரத்ன நிதிர்
கடல் ரத்நாகாரம் -பராங்குச பயோ நிதியும் -ஓதம் போல் கிளர் வேதம் என்றும் –
சுருதி சாகரம் என்றும் கடல் போன்ற சாஸ்திரங்களில் அல்ப சாரம் சாரம் சாரதமம் –
போக சார தமமாய் உள்ள அர்த்தங்கள் ரத்னமாகும்
த்ரை குண்யா விஷயங் வேதா -போல் இல்லாமல் மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
குருகூர் சடகோபன் சொன்ன சொற்களில் சாரதமமான அர்த்தங்களேயாய் இருக்கும் –
அப்படிப்பட்ட ரத்னங்களுக்கு நிதியாய் இருப்பர் ஆழ்வார்
அச்யுத திவ்ய தாம
மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று –என்கிறபடியே
எம்பெருமானுக்கு திவ்ய ஆலயமாய் இருக்கும்
ஆழ்வாரும் அப்படியேயாய் இருப்பர்
கல்லும் கனை கடலும் வைகுண்ட வான் நாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்து அகம் -என்றும்
கொண்டல் வண்ணன் சுடர் முடியின் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே -என்றும்
ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாய் இருப்பவர் அன்றோ
இவையும் அவையும் -திருவாய் மொழியில் இத்தை விசத தமமாக காணலாமே
அஸீம பூமா-
ப்ருஹத்வம் என்கிறபடியே -ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமாய் இருக்குமே ப்ருஹத்வம்
பெரிய மலை -பெரிய குளம்-பெரிய மாளிகை –இவை ஆகாரத்தினால் ப்ருஹத்வம்
பெரிய மனுஷர் -குணங்களால் ப்ருஹத்வம்
இருவகையில் ஆகார ப்ரயுக்தம் கடலுக்கும் குண ப்ரயுக்தம் ஆழ்வாருக்கும் உண்டே
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
எல்லை காண ஒண்ணாத கிருபா குணம் ஒன்றின் பெருமையே போதுமே
ஆக நான்கு விசேஷணங்களால்
நம்மாழ்வாருக்கு கடலுக்கும் உள்ள சாதரம்யம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று
இப்படிப்பட்ட
பராங்குச பயோதிர் –ஜீயாத் —
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணும் -என்றதாயிற்று –
—————–
ஸ்ரீ யாமுநார்ய பத பங்கஜ ஸக்த ஸித்தே
ஸ்ரீ மத் பராங்குஸ குரூத்தம லப்த வித்யே
ஸ்ரீ லஷ்மணே முநிவரே அர்ப்பித ஸர்வ பாரம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் அன்வஹம் ஆஸ்ரயாமி –2-
ஸ்ரீ யாமுநார்ய பத பங்கஜ ஸக்த ஸித்தே –ஆளவந்தாருடைய திருவடித் தாமரைகளில் ஈடுபட்ட திரு உள்ளமுடையவரும்
ஸ்ரீ மத் பராங்குஸ குரூத்தம லப்த வித்யே -பெரிய நம்பிகள் என்னும் ஆச்சார்ய ஸ்ரேஷ்டரிடம் இருந்து பெறப்பட்ட மோக்ஷ உபாயம் யுடையவருமான
ஸ்ரீ லஷ்மணே முநிவரே –பகவத் ராமானுஜராகிய முனிவர் இடத்திலே
அர்ப்பித ஸர்வ பாரம் –ஒப்படைக்கப்பட்ட -தம்மைக் காக்கும் -பொறுப்பு அனைத்தையும் யுடைய
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் –ஸ்ரீ வத்ஸ சிஹ்நர் என்னும் ஆச்சார்யரை
அன்வஹம் ஆஸ்ரயாமி –தினந்தோறும் ஸேவிக்கிறேன்
பெரிய நம்பிகளுடைய இயற்பெயர் ஸ்ரீ மத் பராங்குஸர் -பெரிய வண் குருகூர் நம்பி -என்பதனுடைய ஸங்க்ரஹம் என்பர்
யோ நித்யம் அச்சுத -ஸ்லோகத்தில் ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -ப்ரஸித்தம் அன்றோ -பர ஸமர்ப்பணம் சரணாகதனுக்கு ஏற்படும் ஸ்வ பாவம் தானே
லஷ்மீ வாந் லஷ்மண -ஸ்ரீ இவ ஸ்ரீ மான் -இளைய பெருமாள் தானே பெரிய திருமலை இவருக்குச் சாற்றிய திரு நாமம்
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-
யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில் உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்
விஞ்ஞாபநாம் வநகிரீஸ்வர சத்யரூபாம்
அங்கீ குருஷ்வ கருணார்ணவ மாமகீநாம்
ஸ்ரீ ரெங்க தாமநீ யதாபுர மேகதோஹம்
ராமாநுஜார்ய வசகஸ் பரி வர்த்திஷீய–ஸூந்தர பாஹு ஸ்தவம்-129-
ஆச்சார்ய விஸ்லேஷம் அஸஹ்யமாய் இருக்கையாலே இந்த விஸ்லேஷ வியசனம் நீங்கப் பெற பிரார்த்திக்கிறார்
கருணார்ணவ -வநகிரீஸ்வர-
சத்யரூபாம் –மாமகீநாம்-விஞ்ஞாபநாம் -அங்கீ குருஷ்வ –யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தை
திரு உள்ளம் பற்றி அருள வேணும்
அஹம் யதாபுரம் ஸ்ரீ ரெங்க தாமநீ ஏகத-ராமாநுஜார்ய வசகஸ் பரி வர்த்திஷீய–அடியேன் முன்பு போலே
திருவரங்கம் பெரிய கோயிலிலே ஒரு புறத்திலே எம்பெருமானார் திருவடி நிழலிலே வாழ்வேனாக –
எம்பெருமானாரும் கோயில் வந்து சேர –
அடியேன் அவர் திருவடிகளில் சேர்ந்து வாழ்வேனாம் படி அருள் செய்ய வேணும் என்கிறார் –
ஆசார்ய வர்ய விபவஸ்ய ச ஸிஷ்ய வ்ருத்தே
ஸீமேதி தேஸிக வரை பரி துஷ்யமாணம்
நித்யாநவத்ய கருணா விலஸத் கடாக்ஷம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் அந்வஹம் ஆஸ்ரயாமி –-3-
ஆசார்ய வர்ய விபவஸ்ய -மஹா ஆச்சார்யருக்கு உரிய பெருமையும்
ச ஸிஷ்ய வ்ருத்தே –சத் சிஷ்யருக்குத் தக்க நடத்தையும்
ஸீமேதி –இவரே எல்லை நிறமானவர் என்று
தேஸிக வரை –ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களாலே
பரி துஷ்யமாணம் –மிக மகிழ்ச்சியோடு கொண்டாடப் பெற்றவரும்
நித்யாநவத்ய கருணா விலஸத் கடாக்ஷம் –எப்போதும் உள்ளதாய் குற்றம் அற்றதுமான கருணையினால் குளிர்ந்து விளங்குகின்ற கடைக்கண் பார்வையை யுடையவருமான
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் -கூரத்தாழ்வானை
அந்வஹம் ஆஸ்ரயாமி –தினமும் ஸேவிக்கிறேன்
இவ்விடத்தில்
வைநதேய விருத்தாந்தத்தைத்தையும்-
பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-சூர்ணிகை -203-
ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —சூரணை -333-
ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் —-65-
நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும் -என்று பேர் அருளாளன் இடம் வேண்டிக் கொண்டதால் இவருடைய ஆத்ம குணம் தோன்றும்
நாலூரான் தனக்கு முக்தி நல்கினான் வாழியே -என்கிறோம்
எம்பெருமானார் திருமேனி ரக்ஷணம் இவர் சோழ ராஜன் இடம் அவரது காஷாய த்ரி தண்டங்களைத் தாங்கிச் சென்று பரத்வ நிர்ணயம் செய்து நம் தர்சனத்திக்காக தர்சனம் இழந்தார் அன்றோ
வ்யக்தீ குர்வன் நிகம சிரசாமர்த்த மந்தர் நிகூடம்
ஸ்ரீ வைகுண்ட ஸ்துதி மக்ருத ய ஸ்ரயசே சஞ்சநாநாம்
கூரா தீசம் குரு தர தயா துக்த சிந்தும் த மீடே
ஸ்ரீ வத் சாங்கம் ஸ்ருதி மத குருச் சாத்ர சீலைக தாமா–வைகுந்த ஸ்தவம்-முடிவு தனியன்
வேதாந்தங்களிலே பொதிந்து கிடக்கிற பொருள்களை விஸதீ கரித்து அருள நினைத்து
சத் புருஷர்களின் ஸ்ரேயஸ்ஸுக்காக
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தை அருளிச் செய்தவராயும்
மிகுந்த கருணைக் கடலாயும்
சாஸ்த்ர ஸித்தமான ஆச்சார்ய லக்ஷண
சிஷ்ய லக்ஷணங்களுக்கு
முக்கிய வாஸஸ் ஸ்தானமாயும்
உள்ள ஸ்ரீ கூரத்தாழ்வானை ஸ்துதிக்கிறேன்
ராஜேந்திர சோழனில் ஒரு பிராமணன் மகன்
புத்தரோடு சம்ப்ரதாயம் உண்டாய்
பூண நூலையும் குடுமியையும் அறுத்துப் பொகட்டான் –
கூரத் தாழ்வான் அங்கே நடந்த அளவிலே
சிகா யஞ்ஞா பவீதங்களைத் தரித்துக் கொண்டு வந்து புகுந்தான் –
பிதாவானவன்
ஸ்ரீ கூரத்தாழ்வானைச் சந்தித்தாயோ என்று கேட்க
புறம்பு உள்ளார் -நீ அறிந்த படி எங்கனே -என்று கேட்க
ஸ்ரீ ஆழ்வான் சந்நிதியில் தமோபி பூதரும் சத்வஸ்தர் ஆவார்கள் காண் -என்கின்றான் –பெரிய திருமொழி -8-1- வியாக்யானத்தில் அருளிச் செய்யப்பட ஐதிக்யம்
———-
ராமாநுஜார்ய மத ஸிந்து விதோ குத்ருஷ்டி
பாஹ்யாந்த கார படலீ ஹரணாப் ஜபந்தோ
அஸ்மத் குரோர் ஐநக பட்ட பராஸரஸ்ய
ஸ்ரீ வத் சிஹ்ந ஸரணம் பவ மே தயாளோ –4-
ராமாநுஜார்ய மத ஸிந்து –எம்பெருமானாருக்கு இஷ்டமான விசிஷ்டாத்வைத மதம் என்கிற கடலுக்குப் பொங்குதலை யுண்டு பண்ணும் சந்த்ரனே
விதோ குத்ருஷ்டி பாஹ்யாந்த கார படலீ ஹரணாப் ஜபந்தோ –வேதத்துக்கு அவப்பொருள் கூறும் சங்கராதிகளாலும் வேதத்துக்குப் புறம்பான ஜைன புத்தாதிகளாலும் உண்டாக்கப்பட்ட அஞ்ஞானமாகிய இருளின் திரட்சியைப் போக்கும் ஸூர்யனே
அஸ்மத் குரோர் ஐநக பட்ட பராஸரஸ்ய –அடியேனுடைய ஆச்சார்யரான ஸ்ரீ பராசர பட்டருக்கு தந்தையானவரே
தயாளோ –தயையை யுடையவரே
ஸ்ரீ வத் சிஹ்ந ஸரணம் பவ மே –கூரத்தாழ்வானே தேவரீர் அடியேனுக்கு தஞ்சமாக வேணும்
கீழ் மூன்று ஸ்லோகங்களாலே தாம் ஆஸ்ரயிப்பதாகக் கூறி –
இதில் அவரையே ஸம் போதித்து அடியேனுக்கு உபாயமாக வேணும் என்று பிரார்திக்கிறார்
ஆச்சார்யரை சரண் அடைவது போல் பரமாச்சார்யாரையும் சரணம் அடைய வேண்டும் என்பதை
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-என்ற அநந்தரம்
த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –2–என்று மாறன் அடி பணிந்து உயந்த ராமானுஜன் திரு உள்ளம் உகக்க ஆழ்வாரைத் தொழுது இறைஞ்சுகிறார்
——–
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் சரணார விந்த
ஸேவாம்ருதைக ரஸிகாந் கருணா ஸூ பூர்ணாந்
பட்டார்ய வர்ய நிகமாந்த முனீந்த்ர லோக
குர்வாதி தேஸிக வராந் சரணம் ப்ரபத்யே –5-
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் –கூரத்தாழ்வான் தேவரீருடைய
சரணார விந்த ஸேவாம்ருதைக ரஸிகாந் –திருவடித் தாமரைகளில் பண்ணும் கைங்கர்யமாகிய அம்ருதம் ஒன்றையே சுவைப்பவர்களும்
கருணா ஸூ பூர்ணாந் –தயையினால் மிகவும் நிறையப் பெற்றவர்களுமான
பட்டார்ய வர்ய –தேவரீர் திருக்குமாரராய் அடியேனுக்கு ஆசார்யரான ஸ்ரீ பராசர பட்டர் என்ன
நிகமாந்த முனீந்த்ர லோக குர்வாதி தேஸிக வராந் -அவரை ஆஸ்ரயித்த நஞ்சீயர் என்ன -அந்த நஞ்சீயர் சிஷ்யரான நம்பிள்ளை என்ன -இவர்கள் முதலான ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களை
சரணம் ப்ரபத்யே –சரணம் பற்றுகிறேன்
கீழ் ஆழ்வானைச் சரணம் பற்றியவர் அவருடைய உகப்புக்கு இலக்காகிய சிஷ்ய பரம்பரையும் சரணம் புகுகிறார்
லோக குரு –நம்பிள்ளைக்கு -கந்தாடை தோழப்பரால் உகந்து சாற்றப் பெற்ற நாமம்
தேசிக திசதி –உபதிசநீதி தேசிக வ்யுத்பத்தி -ஹித உபதேசம் பண்ணும் ஆச்சார்யனுக்குப் பெயர் ஆயிற்று
புருஷகார சரணாகதியாகவும் ஆழ்வானுக்கு ப்ரீதி கார்யமாகவும் சரணம் புகுகிறார்
மா முனிகளும் ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாநி மூர்த்நா என்றும் ஸ்ரீ வத்ஸ சிஹ்ந சரணம் யதிராஜ மீடே –
கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம் பாதாநு சிந்தந பர –என்று அருளிச் செய்துள்ளார் அன்றோ
——————
ஸ்ரீ ரங்க ராஜ மஹிஷீ கர லாலநேந
ஸம் ப்ராப்த ஸர்வ விபவஸ்ய பராஸரஸ்ய
குர்யாம் மதந்வய குரோ குருதாம் கதஸ்ய
கூராதி பஸ்ய குண சிந்த மந்தரங்கை –6-
ஸ்ரீ ரங்க ராஜ மஹிஷீ கர லாலநேந –ஸ்ரீ ரெங்க நாச்சியாரால் தமது திருக்கைகளாலே எடுத்துச் சீராட்டப் பெற்றதனால்
ஸம் ப்ராப்த ஸர்வ விபவஸ்ய –நன்றாகக் பெற்ற எல்லாப் பெருமைகளையும் யுடையவரும்
மதந்வய குரோ-அடியேனுடைய குலத்திற்குத் தலைவருமான
பராஸரஸ்ய -ஸ்ரீ பராசர பட்டருக்கு
குருதாம் கதஸ்ய –தமப்பனார் உகந்த தன்மையை அடைந்த
கூராதி பஸ்ய –கூரத்தாழ்வானுடைய
குண சிந்தநம் –குண அனுபவத்தை
அந்தரங்கை (ஸஹ )–நெருங்கிய நண்பர்களுடன் கூடி
குர்யாம் -செய்யக் கடவேன்
கீழ் ஆழ்வானுடைய சிஷ்ய பரம்பரைகளைச் சரணம் பற்றி இதில் அவர்களுடன் சேர்ந்து ஆழ்வானுடைய திருக்கல்யாண குணங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறார்
ஸதாச்சார்யனுடைய குண அனுசந்தானம் அன்றோ ஸச் சிஷ்யனுக்கு உத்தாரகம்
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உசாத்துணையாக இருந்த ஞானமும்
பகவத் குணங்களில் ஆழங்கால் பட்டதால் ஆழ்வான் என்று உடையவரால் திரு நாமம் சாத்தப் பெற்றவரும்
வெள்ளித் தட்டையும் வீசி எறிந்து வைராக்யத்தையும் காட்டியதால்
நாலூரானுக்கும் பேற்றை பிராரத்த தயை போன்ற குணங்கள்
ஓரிருவர் அனுபவித்தாள் பரியாப்தி பிறவாமல் அந்தரங்கற்களான பலருடன் சேர்ந்து ஆனந்திக்க ஆசைப்படுவது யுக்தம் இறே
தமது ஆச்சார்யரான பராசர பட்டருக்கு பிதாவையும் ஆச்சார்யராகவும் இருக்கும் பெருமையும் அசாதாரணம் அன்றோ
பல தலைகளை யுடைத்தாய் ஸ்வ ஸ்பர்சத்தாலே பணைத்து என்றுமாம்
பிரஜையை மடியில் வைத்து இருக்கும் தாயைப் போலே
பெரிய பெருமாளை மடியிலே வைத்து இருக்கும் தாய் தானாம் –
ஸ்ரீ அனந்தாழ்வான் திருக்கோட்டியூருக்கு நடந்த இடத்தில்-( அகளங்கனோடே உண்டான மனஸ்தாபத்தாலே இவர் அங்கு
இருக்க மடியிலே அமர்த்தி ) ஸ்ரீ பட்டரைக் கண்டு அவர் திருமேனியில் இப்படிச் செய்தானாம் –
ஸ்ரீ ஆண்டாளுக்கு முந்துற ஒரு பிள்ளை உண்டாய் அவனை இழக்க –
அங்கனே செய்ய ஒண்ணாது இவன் ஜீவிக்க வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நீராட்டி
அந்த திருமஞ்சநீரைப் பிள்ளைக்குப் புகட்டி -மஞ்ச நீர் கொடுத்த பிள்ளையாய் வளர்க்க வேணும் -என்று
காட்டிக் கொடுத்து அருளினார் ஆயிற்று –
அந்த வாசனையாலேயே ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு மகன் -என்று தான்
ஸ்ரீ பட்டரை ஸ்ரீ அனந்தாழ்வான் சொல்வானாம் –திருவாசிரியம் முதல் பாசுர வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள்
கிந்து பிரபத்தி பல தாரித விஷ்ணு மாய மத் வம்சய ராஜ குல துர் லலிதம் கில ஏவம்
ஸ்ரீ ரெங்க ராஜ கமலா பத லாலி தத்வம் யத்வா அபராத்யதி மம ஸ்துதி சாஹசே அஸ்மின் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ சதகம்17-
கிந்து பிரபத்தி பல–ஆனாலும் பிரபத்தியின் மிடுக்காலே
தாரித விஷ்ணு மாய-தாண்டுவிக்கப்பட்ட எம்பெருமானுடைய மாயையை யுடையவர்களான
மம மாயா துரத்யயா–மாமேவ யே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே –
மத் வம்சய ராஜ குல துர் லலிதம்–எனது முன்னோர்களுடைய சிறந்த குலத்தினில் பிறந்ததனால் உண்டான செருக்கு
வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடத்தும் ஸ்ரீ கூரத்தாழ்வான் திரு வம்ச பிறப்பால் வந்த செருக்கு
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ எம்பெருமானார் முதலான முன்னோர்களைக் கடாக்ஷித்துத் தம்மை க்ஷமிக்கக் கூடும்
என்ற தைர்யத்தால் என்றபடி
துர் லலிதம்-துஷ்ட சேஷ்டிதம் என்றவாறு
கில ஏவம்-இப்படி ஸ்தோத்ரத்தில் கை வைக்கும்படி யாயிற்று அன்றோ –
யத்வா-அல்லது
ஸ்ரீ ரெங்க ராஜ –ஸ்ரீ ரெங்க நாதன் என்ன
கமலா -ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்ன –
இவர்களுடைய
பத லாலி தத்வம்–திருவடிகளில் சீராட்டி வளர்க்கப் பெற்றமை –
புத்ர ஸ்வீகாரம் செய்து கொண்டு சீராட்டி வளர்த்ததால்
எனது மழலைச் சொற்கள் இனிதாக அவர்களுக்கு இருக்குமே -இதனால் உண்டான ப்ரேம அதிசயத்தாலோ
மம -எனக்கு உண்டான
ஸ்துதி சாஹசே அஸ்மின் –-இந்த ஸ்தோத்ரம் ஆகிற துணிந்த ஸாஹஸச் செயலிலே
அபராத்யதி-குற்றவாளி யாகின்றது –
—————
வைராக்ய பக்தி ஜலதே க்ருதி நஸ்ச ஸத்ய
ஸங்கல்பநஸ்ய ம்ருதி தாரிகணஸ்ய நாத
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந புரதஸ்தவ கந்து மேவ
நார்ஹோ அஹமேவமதுநா ப்ரலாபமி ஹந்த –-7-
நாத ஸ்ரீ வத்ஸ சிஹ்ந –ஸ்வாமீ கூரத்தாழ்வானே
வைராக்ய பக்தி ஜலதே -வைராக்யத்துக்கும் பக்திக்கும் கடல் போன்றவரும்
க்ருதி நஸ் ச -பண்டிதரும்
ஸத்ய ஸங்கல்பநஸ்ய -நினைத்த மாத்திரத்திலேயே அனைத்தையும் சாதிக்க வல்லவரும்
ம்ருதித அரிகணஸ்ய –காமம் வெகுளி மயக்கம் போன்ற உட் பகைக்கூட்டத்தை அழித்தவருமாகிய
புரதஸ் தவ –தேவரீருடைய எதிரில்
கந்து மேவ -சென்று நிற்பதற்கும் கூட
ந அர்ஹோ அஹம் -குற்றங்கள் நிறைந்து குண லவ லேசமும் இல்லாத அடியேன் தகுந்தவன் அல்லன் -இப்படி இருக்க
ஏவம் அதுநா ப்ரலாபமி ஹந்த -இப்போது இங்கனம் ஸ்தோத்ரம் என்றிட்டு எதையோ பிதற்றுகிறேன் -கஷடம் அந்தோ -நைச்ய அனுசந்தானம் செய்கிறார்
க்ருதிந் -சப்தத்துக்கு தீ மான் ஸூரி க்ருதீ –க்ருதீ குசல -அமரகோசம் -பண்டிதன் -சமர்த்தன் –பண்டா ஞானம் -ஞானமுடையவன் என்றபடி
————
மயா விதூர மநஸாம் மதுராக்ருதீநாம்
மாத்ஸர்ய லோப மத மாந விவர்ஜிதாம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் சரணாஸ்ரிதாநாம்
அந்தர் கதோ அஸ்ய மஹோ விபயஸ் சராமி –-8-
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந–வாரீர் கூரத்தாழ்வானே
மயா விதூர மநஸாம் –கபடத்திற்கு வெகு தூரத்தில் உள்ள மனதை யுடையவர்களும்
மதுராக்ருதீநாம் –காண்பதற்கு இனிய திரு மேனியை உடையவர்களும்
மாத்ஸர்ய லோப மத மாந விவர்ஜிதாம் –பொறாமை உலோபித்தனம் விஷய போகக்களிப்பு செருக்கு இவற்றால் அடியோடு விடப்பட்டவர்களுமான
பவதஸ் சரணாஸ்ரிதாநாம் –தேவரீர் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினவர்களுக்குள்ளே
அஹம் அபி -அடியேனும்
அந்தர் கத –உட் பட்டவனாய்க் கொண்டு
விபயஸ் சாராமி -பயமற்றவனாய்த் திரிகிறேன்
அஹோ –ஆச்சர்யம்
ரூபமேவ அஸ்ய ஏதத் மஹிமாநம் வ்யாஸஷ்டே –திருமேனி அழகே இவருடைய பெருமையை விளக்கும்
ஆழ்வானுடைய அடியவர்களின் பெருமையைச் சொன்னபடி
அவர்களில் ஒருவனாய்த் திரிகிறேனே
————-
கூராதிப த்ரி வித தாப நிதாந மேதத்
ஸம் ரஷ்ய ஹேயதர மேவ கலே பரம் ஹா
ஆத்ம ஸ்வரூபமதி நிர்மல மத்யுபேஷ்ய
தஸ்யா நுரூப பல ஸூந்ய இஹைவ வர்தே –9-
ஹே கூராதிப –கூரத்தாழ்வானே
த்ரி வித தாப நிதாநம் அத ஏவ –மூன்று வித தாபங்களுக்கும் மூல காரணமாகையாலே
ஹேயதரம் –அடியோடே விடத்தக்கதான
ஏதத் -இந்த அசுத்தமான
மேவ கலே பரம் –சரீரத்தை மட்டுமே
ஸம் ரஷ்ய –நன்றாகக் காப்பாற்றி
அதி நிர்மலம் -மிகவும் பரி சுத்தமான
ஆத்ம ஸ்வரூபம் -பகவச் சேஷமான எனது ஆத்ம ஸ்வரூபத்தை
அதி யுபேஷ்ய -மிகவும் அலக்ஷியம் செய்து
தஸ்யா நுரூப பல ஸூந்ய -அத்தகைய ஆத்ம ஸ்வரூபத்துக்குத் தக்க மோக்ஷமாகிய பயன் பெறாதவனாய்
இஹைவ வர்தே –இவ்வுலகிலேயே இருக்கிறேனே
ஹா -கஷ்டம் -அந்தோ
மணத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் விரும்புமா போலே சேஷம் என்றே ஆத்மாவை ஆதரிக்கிறது –
தேஹ யாத்திரையில் உபேக்ஷையும் ஆத்ம யாத்திரையில் அபேக்ஷையும் வேணும்
இவ்விரண்டும் இப்போது இல்லாவிட்டாலும் ஆழ்வான் சிஷ்யர்களோடு சேர்ந்து அவற்றையும் சம்பாதித்திக் கொண்டு ஆச்சார்ய அபிமானத்துக்கு இலக்காகி நிச்சயமாக முக்தி பெறலாம் என்று இந்த ஸ்லோகத்தினால் கருதினார் ஆயிற்று
————
ஜ்ஞாத்வாப் யக்ருத்ய கரணம் விஹிதா ப்ரவ்ருத்திம்
க்ரூர ப்ரமத்த இவ ஜாத்வநுதாபா ஸூந்ய
பாபாக்ருதிஸ் த்வதநு பந்தி ஷுஸஜ் ஐநேஷு
கூராதி பாஹமபி ஹ்ருஷ்ட மநாஸ் சராமி –-10-
கூராதிப -கூரத்தாழ்வானே
யக்ருத்ய கரணம்-செய்யத் தகாத கார்யங்களை நாம் செய்கிறோமே என்றும்
விஹிதா ப்ரவ்ருத்திம் -ஸாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட நல்ல கார்யங்களை நாம் செய்கிறோம் அல்லன் யென்றும்
ஜ்ஞாத்வா அபி -அடியேன் அறிந்து வைத்தும்
க்ரூர ப்ரமத்த இவ -கொலையாளியாக காம வெறியும் பிடித்தவன் போலே
ஜாது -ஒருக்காலும்
வநுதாபா ஸூந்ய -பச்சாதாபம் அற்றவனாய்
பாபாக்ருதிஸ் -மேலும் பாபாபிகளைச் செய்து -பாபமே வடிவு எடுத்தவனாக
அஹமபி -அடியேனும்
த்வதநு பந்தி ஷு ஸஜ் ஐநேஷு-தேவரீரைச் சேர்ந்த நல்லோர்கள் நடுவில்
ஹ்ருஷ்ட மநாஸ் -மனம் மகிழப்பெற்று
சராமி –ஸஞ்சரிக்கிறேன்
ஹா -கஷ்டம் அந்தோ
————
கூராந் வயஸ்ய தவ தோஷ சயஸ் தவேஹம்
ஸர்வ ஆத்மநாபி மத ஏவ ஹி வத்ஸலஸ்ய
ஸ்வாமிந் ஸ்ததாபி மம தத் கரேண து ஹந்த
தாபோ பவத் யஹரஹ கத முத்ஸஹேய –-11-
ஸ்வாமிந் –ஸ்வாமீ கூரத்தாழ்வானே
தோஷ சயஸ் தவே–சொற் குற்றம் பொருள் குற்றமே வடிவெடுத்த தேவரீரைப் பற்றிய ஸ்தோத்ரம் செய்யும் விஷயத்தில்
கூராந் வயஸ்ய –அடியேன் போல் கூர குலத்தில் உதித்தவரும்
வத்ஸலஸ்ய-தோஷங்களைக் குணமாக நினைப்பவருமாகிய
தவ –தேவரீருக்கு
அஹம் –அடியேன்
ஸர்வ ஆத்மந-எல்லா வகையாலும்
அபி மத ஏவ ஹி –இஷ்டமானவனே அன்றோ
ததாபி -அப்படி இருந்தாலும்
மம து -எனக்கோ என்றால்
தத் கரேண -அத்தகைய ஸ்தோத்ரம் செய்வதில்
யஹரஹ -தினம் தோறும்
தாப பவதி –கஷ்டம் உண்டாகிறது
கத முத்ஸஹேய –எங்கனம் இதில் முயல்வேன்
ஹந்த -கஷ்டம்
நம் குலக்கொழுந்து வாயில் இருந்து ஏதாவது வருமோ -என்று எதிர்பார்த்து உள்ளீர் -குலக்கொழுந்தோ இறாய்க்கிறாரே என்று அன்றோ உள்ளீர்
————–
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந தவ பூரி தயாபகாயாம்
ஸ்நாத்வாதி நிர்மல மோபி மிதம்ப சோஹம்
நிந்த்யேஷு கர்ம நிசயேஷு நிரூட புத்தி
மஜ்ஜாம்யத ஸ்தமஸி ஹா தவ நிர் பரோஸ்மி –12-
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந –வாரீர் ஆழ்வானே
தவ –தேவரீருடைய
பூரி தயா ஆபகாயாம் –பெரும் கருணை யாகிய ஆற்றில்
ஸ்நாத்வா–நீராடியதனால்
அதி நிர்மல மோபி -மிகப் பரி ஸூத்தனாய் இருந்த போதிலும்
மிதம்ப சோஹம் –நீசனான அடியேன்
நிந்த்யேஷு –இகழத்தக்க
கர்ம நிசயேஷு –பாப காரிய ஸமூஹங்களிலே
நிரூட புத்தி -வேரூன்றிய எண்ணம் யுடையவனாய்
தமஸி-தம குணம் நிறைந்த இந்த ஸம்ஸாரத்திலே
மஜ்ஜாமி -மூழ்கிறேன் -ஆகையால்
தவ -தேவரீருடைய
நிர் பரோஸ்மி -ரக்ஷணப் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்
ஹா -ஐயோ
பெரியோர்கள் எதிரில் ஸ்வ தோஷங்களை விண்ணப்பம் செய்வதும் ஸ்தோத்ரங்களிலே அடங்குமே
தேவ த்வதீய சரண ப்ரணய ப்ரவீண ராமாநுஜார்ய விஷயீ க்ருதம் அப்யஹோ மாம்
பூய பிரதர்ஷயதி வைஷயிகோ விமோஹ
மத் கர்மண கதரத் அத்ர சமானசாரம்–வைகுண்ட ஸ்தவம்-90-
எம்பெருமானே உன் திருவடிகளில் அன்பு பூண்டு இருப்பதில் தலை சிறந்தவரான எம்பெருமானாரால்
ஆட்படுத்திக் கொள்ளப்பட்ட அடியேனையும் விஷய வியாமோஹம் பரிபவிக்கின்றது அந்தோ
என்னுடைய கருமத்தோடு ஒத்த வலிதான கருமம் வேறு ஒருவருக்கு
உண்டோ இவ்வுலகில்
இந்த நிலைமையில் ஆச்சார்ய நாம உச்சாரணம் செய்வது ஸ்ரேயஸ்கரம் என்று திரு உள்ளம் பற்றி
ஒருவாறு அது தன்னைச் செய்கிறார்
————-
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் சரணாஸ்ரிதாநாம்
அஸ்மாக மப்யநுசிதேஷு பவேச் சிகீர்ஷா
ஸா ஸர்வதா பவதி துக்கரீ தவைவ
தஸ்மாத் த்வமேவ ஹர தாத்ருஸ கர்ம சிந்தாம் –-13-
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந -ஆழ்வானே
பவதஸ் சரணாஸ்ரிதாநாம் அபி -தேவரீருடைய திருவடிகளை ஆஸ்ரயித்து இருந்த போதிலும்
அஸ்மாகம் –அடியோங்களுக்கு
யநுசிதேஷு –தகாத காரியங்களில்
சிகீர்ஷா -செய்ய வேண்டும் என்னும் ஆசையானது
பவேத் -உண்டாக்க கூடும்
ஸா -அந்த ஆசை
ஸர்வதா –எல்லா வகையிலும்
தவைவ-தவ ஏவ -தேவரீருக்கே
பவதி துக்கரீ –வருத்தத்தை உண்டு பண்ணுவதாக ஆகிறது
தஸ்மாத் –ஆகையால்
த்வமேவ –தேவரீரே
ஹர தாத்ருஸ கர்ம சிந்தாம் –அத் தீய செயகைகளைப் பற்றிய சிந்தனையைப் போக்கி அருள வேணும்
——–
கூராதி பால மதி வேல க்ருதேந கர்ம
மூலேந யத் ஸூகமவாப்த மதாபி துக்கம்
தச் சக்நுமோநு ந நிவாரயிதும் ச சோடும்
தத் சங்க மேவ விநிவர்த்தய தே ப்ரபாவாத் –14-
கூராதிப-கூரேசரே
அதி வேல க்ருதேந -அடியேனால் எல்லை கடந்து செய்யப்பட
கர்ம மூலேந –தீ வினை என்னும் காரணமானது
அலம் -இனி வேண்டாம் –செய்தன போதும்
யத் அவாப்தம் -அதனால் எது அடையப்பட்டதோ
தத் ஸூகம் அபி -அது ஸூகம் என்று மேல் எழத் தோன்றினாலும்
துக்கம் -ஆராய்ந்து பார்த்தால் துக்கமே யாகும்
தத் -அந்தத் துக்கத்தை
நிவாரயிதும்-வராமல் தடுப்பதற்கும்
ச சோடும் -வந்தால் பொறுத்துக்க கொள்ளுவதற்கும்
சக்நுமோநு ந -அடியோங்கள் வல்லமை யுடையோமோ -அல்லோம் ஆகையால்
தே ப்ரபாவாத் –தேவரீருடைய மஹிமையினாலேயே
தத் சங்க மேவ -அது தீ வினையில் அடியோமுக்கு உண்டாகும் ஆசையை
விநிவர்த்தய -நன்றாகக் போக்கி அருள வேணும்
————-
ஸ்ம்ருத்வா மதீய விபரீத கதீஸ் ததைவ
பக்நாஸயோப் யத ச ஹ்ருஷ்ட மநஸ் சராமி
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் த்வதி வேல ஸீல
வாத்ஸல்ய ஸுஹ்ரு தயாதி குணாந் விம்ருஸ்ய –15-
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந–ஆழ்வானே
மதீய விபரீத கதீஸ்–அடியேனுடைய நியாய விருத்தமான நடத்தைகளை
ஸ்ம்ருத்வா –நினைத்து
பக்நா ஸ யோபி –நமக்கு நன்மை கிடைக்கப் போகிறது இல்லை என்று மனம் உடையப் பெற்றவனாக இருந்த போதிலும்
அஹம் -அடியேன்
அத ச -அதற்கு அடுத்த ஷணத்திலேயே
பவத -தேவரீருடைய
அதி வேல ஸீல வாத்ஸல்ய ஸுஹ்ரு தயாதி குணாந் -எல்லை கடந்த நீர்மை பேர் அன்பு நல்ல மனமுடைமை கருணை முதலிய நற் குணங்களை
விம்ருஸ்ய து -ஆராய்ந்து பார்த்தாலோ என்றால்
ஹ்ருஷ்ட மநஸ் –நமக்கு கிடைப்பது உறுதி என்று மனம் மகிழப் பெற்றவனாய்
சராமி -ஸஞ்சரிக்கிறேன்
———–
கூராதி நாத குண சந்ததி சிந்தநேந
கஸ்யாஸயஸ் தவ ந யாதி பரம் ப்ரமோதம்
நிஸ் ஸம்ஸயத்வமத நிர் பயதாம் ச ஸம்யக்
வ்ருத்தி ப்ரவ்ருத்தயபி ரதிம் பரமாம் விரக்திம் –-16-
கூராதி நாத –வாரீர் கூரேசரே
தவ -தேவரீருடைய
குண சந்ததி சிந்தநேந –குண ஸமூஹத்தை நினைப்பதனால்
கஸ்யாஸயஸ் -எவனுடைய மனம் தான்
பரம் ப்ரமோதம் -உயர்ந்த மகிழ்ச்சியையும்
நிஸ் ஸம்ஸயத்வமதம் -உய்வு பெறுவதில் ஸந்தேஹம் இல்லாமையும்
அத -மேலும்
நிர் பயதாம் -ஸம்ஸார பயம் இல்லாமையும்
ஸம்யக் வ்ருத்தி ப்ரவ்ருத்தயபி ரதிம் -நல்ல பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யத்தில் உண்டாகும் முயற்சியில் விருப்பத்தையும்
பரமாம் –மிக உயர்ந்த
விரக்திம்–இதர விஷயங்களில் பற்று இல்லாமையும்
ந யாதி -அடைய மாட்டாது
————
ஸ்ரீ ரங்க நாயக பவத் ப்ரதி பாஷணாதி
ஸ்ருத்வா ப்ர ஹ்ருஷ்ட மநஸா யதி சேகரேண
உக்தாம் ஸூபாக்ஷித ஸூதாம் ச நிஸம்ய நாத
த்வத் பந்து தாஸ்தி மம சேத் யபயஸ் சராமி –17-
நாத –ஸ்வாமீ ஆச்சார்யனே
ஸ்ரீ ரங்க நாயக பவத் ப்ரதி பாஷணாதி –ஸ்ரீ ரெங்கநாதனால் தேவரீருக்கு அருளிச் செய்யப்பட்ட விடை வார்த்தைகளை
ஸ்ருத்வா –கேட்டு
ப்ர ஹ்ருஷ்ட மநஸா -ஸந்தோஷமுடையவரான
யதி சேகரேண -யதிராஜரான எம்பெருமானாராலே
உக்தாம் –அருளிச் செய்யப் பெற்ற
ஸூபாக்ஷித ஸூதாம் –அமுதம் போல் இனிய நல் வார்த்தையை
நிஸம்ய -கேட்டு
மம ச -அடியேனுக்கும்
த்வத் பந்துதா–தேவரீரோடு உறவானது
அஸ்தி இதி -இருக்கிறது என்று நினைத்து
யபயஸ் சராமி –ஸம்ஸார பயம் அற்றவனாய் அடியேன் திரிகிறேன்
ஆழ்வார் சம்பந்த சம்பந்திகளுக்கு எல்லாம் மோக்ஷம் அளிப்பதாக ஸ்ரீ பெரிய பெருமாள் அருளிச் செய்ததால்
எம்பெருமானாரும் சந்தோஷித்து உடுத்த காஷாயத்தை வாங்கி ஆகாசத்தில் எறிந்து ஏற்றுக் கொண்ட ஐதிக்யம்
இவரும் பயம் கெட்டுத் திரிகிறார் என்கிறார்
————–
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவாதாப் யபிமாநி தோஹம்
இத்யா தரேண ஸததம் மயி ரங்க நாத
குர்வந் தயாம் ந விஜஹாதி க்ருதாக ஸம் மாம்
ரக்ஷத்யஹோ த்வயிது கீத்ருக நுக்ர ஹோஸ்ய –18-
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந –ஆழ்வானே
பவதா அபி -தேவரீ ராலும்
அஹம் -அடியேன்
யபிமாநித–இவன் நம்முடையவன் என்று அபிமானிக்கப் பட்டவன்
இதி -என்ற காரணத்தினால்
ரங்க நாத-திருவரங்க நாதன்
யா தரேண –அன்புடன்
ஸததம் -எப்போதும்
தயாம் குர் வந்-தயை புரியுமவராய்
க்ருதாக ஸம் -பாபங்களை செய்திருக்கிற
மாம்-அடியேனை
ந விஜஹாதி -அது காரணமாக விடுவது இல்லை
ரக்ஷதி -அதற்கு எதிராக காப்பாற்றுகிறார்
யஹோ -ஆச்சர்யம்
அஸ்ய –இந்தத் திருவரங்க நாதனுக்குத் தான்
த்வயி–தேவரீர் திறத்தில்
கீத்ருக் அநுக்ரஹ–எத்தகைய அநுக்ரஹம்
பெரிய பெருமாளின் ஆழ்வான் மீது உள்ள அனுக்ரஹம் இவ்வாறு தமது அளவும் ஏறிப் பாய்வதே என்று ஆச்சார்யப் படுகிறார்
—————-
ஸ்ரீ வத்ஸ லக்ஷண சரீரவ ஸோபி நித்யம்
நாதாநு தப்த இவ ச ப்ரலபாமி தே அக்ரே
மைத்ர்யா ஸடஸ் ச கல ஏஷ இதீஹ மத்வா
மாமந் வஹம் ஸமபி ஷிஞ்ச க்ருபா கடாஷை –19-
நாத ஸ்ரீ வத்ஸ லக்ஷண –ஸ்வாமீ கூரத்தாழ்வானே
அஹம் –அடியேன்
நித்யம் -எப்போதும்
சரீரவ ஸோபி -சரீர பரதந்த்ரனாய் அஃது ஒன்றையே பேணுமவனாய் இருந்த போதிலும்
அநு தப்த இவ -பச்சா தாபப்படுகின்ற நல்லவன் போலே
தே அக்ரே–தேவரீர் திரு முன்பே
ச ப்ரலபாமி -வந்து நிற்பதே யன்றிச் சிலவற்றைப் பிதற்றவும் செய்கின்றேன்
ஸடஸ் ச கல ஏஷ-இவன் வஞ்சகனாயும் துஷ்டனாகவும் இருக்கிறான் -இவனுக்குத் தாம் அல்லது வேறு கதியில்லை
இதி மத்வா –என்று திரு உள்ளம் பற்றி
இஹ மாம் -இப்போது அடியேனை
மைத்ர்யா -ஸ்நேஹத்துடன்
க்ருபா கடாஷை –கிருபையிதே கூடிய திருக்கண் பார்வை களாலேயே
அந் வஹம் அபி ஷிஞ்ச –தினம் தோறும் நீராட்டி அருள வேணும் –
————————
ஆபந்நதீ ந ஜந ரக்ஷண பந்த தீக்ஷ
விஜ்ஞ்ஞாபநம் த்வி ஹ மயோதித முக்தி மாத்ரம்
ஸார்த விசார்ய ஸஹ ஸாத்ய தவைவ பூர்த்யா
கூராதி போந்ந மய மாமிஹ ஸர்வ தாத்வம் –-20-
ஆபந்நதீ ந ஜந ரக்ஷண பந்த தீக்ஷ –ஆபத்தை அடைந்து அதனால் இரங்கத் தக்க ஜனங்களை ரக்ஷிப்பதில் விரதம் பூண்டவரே
கூராதிப –கூரத்தாழ்வானே
இஹ -இப்போது
மயோதி தம் -அடியேனால் சொல்லப்பட்ட
உக்தி மாத்ரம் –அர்த்தம் இல்லாமல் வெறும் பேச்சான
விஜ்ஞ்ஞாபநம் து -விண்ணப்ப வார்த்தைகளையே
தவைவ பூர்த்யா -அடியேனுடைய தோஷ பூர்த்தியைப் பாராமல் -தேவரீருடைய குண பூர்த்தியினாலேயே மட்டுமே
ஸார்த்தம் விசார்ய -அர்த்தத்தோடு கூடியதாக எண்ணி
அத்ய இஹ –இப்போது இவ்விடத்தில்
ஸஹஸா–தாமதம் செய்யாமல்
த்வம் -தேவரீர்
மாம் -அடியேனை
உந்ந மய –உத்தரித்து அருள வேணும் -முக்தி நல்க வேணும் –
அடியேனுடைய இந்த விண்ணப்பமும் மனப்பூர்வகமாக செய்தது அன்று
வெறும் வேஷமே தான்
இருந்தாலும் தேவரீருடைய குண பூர்த்தியாலேயே அடியேனை இந்த சம்சாரக் கடலில் இருந்து எடுத்து
பரமபத அனுபவத்தையும் தந்து அருள வேணும் என்று பிரார்த்தித்து
இந்த கூரேச விம்சதியைத் தலைக்கட்டி அருளினார் ஆய்த்து-
———————————-
ஸ்ரீ ஸூத்த ஸத்வம் தொட்டாச்சார்யார் அருளிச் செய்த-ஸ்ரீ கூர நாத பஞ்சாஸத்
ஸ்ரீ சைல லஷ்மண முநேஸ் சரணாப்ஜ யுக்மம்
ஸ்ரேயஸ் கரம் தநு ப்ருதா மகிலாக ஹந்தரு
நத்வா கரோமி விபுதா வலி துஷ்டயே அஹம்
கூராதிப ஸ்துதி மிமாம் குஸல ப்ரதாத்ரீம் –மங்கள ஸ்லோகம்
தநுப்ருதாம் –உடல் எடுத்த மனிதர்களுக்கு
ஸ்ரேயஸ் கரம்–நன்மைகளை செய்ய வல்லதும்
அகில அக ஹந்தரு–எல்லாப் பாபங்களையும் அழிக்க வல்லதுமான
ஸ்ரீ சைல லஷ்மண முநேஸ் –திருவேங்கட ராமானுஜ முனிவருடைய
சரணாப்ஜ யுக்மம்-திருவடித்தாமரை இணையை
நத்வா –வணங்கி
அஹம்-அடியேன்
விபுத ஆவலி துஷ்டயே –ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்தின் சந்தோஷத்தின் பொருட்டு
இமாம் -இந்த
குஸல ப்ரதாத் ரீம் -க்ஷேமத்தை அளிக்க வல்லதான
கூராதிப ஸ்துதிம் –கூரத்தாழ்வானைப் பற்றிய ஸ்தோத்ரத்தை
கரோமி -இயற்றுகிறேன்
இந்த கிரந்தத்தில் இறுதியில் -ஸ்ரீ மதா ஸூத்த ஸத்வேந தொட்டார்யேண மஹாத்மநா பஞ்சா ஸத் கூர நாத்தஸ்ய ஸ்தோத்ரமீரிதம் உத்தமம் -என்ற ஸ்லோகத்தில் இதன் கர்த்தாவின் திரு நாமமும்
இவர் ஆச்சார்யர் ஸ்ரீ சைல லஷ்மண முனி -என்பவர் ஸ்ரீ பெரும் பூதூரில் எம்பார் ஜீயர் திருமடத்தை ஸ்தாபித்த முதல் ஜீயரான திருவேங்கட ராமானுஜ ஜீயர்
இவர் ஸ்ரீ வான மா மலை மடத்தைச் சேர்ந்தவர்
இவர் திருமாளிகை 2 ஸ்வாமி -திருவாழி அண்ணன் ஸ்வாமிக்குத் திருத் தகப்பனார்
——-
ஜய ஜய யதிராஜ ஸ்ரீ பதாம் போஜ யுக்ம
ப்ரஸ்ருமர மகரந்தாஸ்வாத லுப்தாந்த ரங்க
ஜய ஜய குமதேப வ்ராத ஹர்யஷ வித் வந்
மணி வர நிகமாந்தா கல்ப கூராதி நாத –1-பல்லாண்டு பாடித் தொடங்குகிறார்
யதிராஜ ஸ்ரீ பதாம் போஜ யுக்ம ப்ரஸ்ருமர மகரந்தாஸ்வாத லுப்தாந்த ரங்க –யதிராஜரான அம்பெருமானாருடைய திருவடித் தாமரை இணையில் இருந்து பெருகுகின்ற தேனைச் சுவைப்பதில் ஆசை கொண்ட திரு உள்ளமுடையவரே
குமதேப வ்ராத ஹர்யஷ–நீசச் சமயிகள் என்கிற யானைகளின் கூட்டங்களுக்கு ஸிம்ஹம் போன்றவரே
வித் வந் மணி வர –பண்டித ஸ்ரேஷ்டர்களிலே தலைவரே
நிகமாந்தா கல்ப –வேதாந்தங்களுக்கு அணி செய்தவரே-மங்கள ஸூத்ரம் போன்ற ஸ்தவங்களை அருளிச் செய்தவர் அன்றோ
கூராதி நாத –கூரத்தாழ்வானே
ஜய ஜய -ஜய ஜய –தேவரீர் எல்லோரினும் மேம்பட்டு விளங்க வேணும்
————
ஜயதி ஜகதி நைஜோத் வேல மேதா விசேஷாத்
அதி கத தம போதாவாஸ வ்ருத்யர்த்த ஜால
ஜநி தயதி வரேண்யஸ்வாந்த நிஸ் ஸீம மோத
ஸ்ரித ஐந பரி ரஷாதீக்ஷித க்ஷித கூர நாத –-2-
ஜயதி ஜகதி
நைஜோத் வேல மேதா விசேஷாத் –தமக்கு இயற்கையாக ஏற்பட்டதும் எல்லை கடந்ததுமான அறிவின் மேன்மையினாலே
அதி கத தம போதாவாஸ வ்ருத்யர்த்த ஜால -நன்றாக அறியப்பட்ட போதாயன முனிவர் இயற்றிய வ்யாஸ ஸூத்ர வ்ருத்தியின் அர்த்த ஸமூஹத்தை உடையவரும் –
அது காரணமாக
ஜநி தயதி வரேண்யஸ்வாந்த நிஸ் ஸீம மோத –உண்டாக்கப்பட்ட யதிராஜர் திரு உள்ளத்தில் எல்லையற்ற உகப்பை யுடையவரும்
ஸ்ரித ஐந பரி ரஷாதீக்ஷித -தம்மை அடைந்த ஜனங்களை நன்றாகக் காப்பாற்றுவதில் விரதம் பூண்டவருமான
கூர நாத –ஜயதி -கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குகிறார்
————-
ஜயதி ஹரி பரத்வ ஸ்தாபநோத் வேல மோதாத்
உப நிஷது பகூடாந் ந்யாய தோர்த்தாந் விவ்ருண்வந்
அத ரித ஸிவ பாரம் யார்த்தி சோலாதி ராஜ
சமித விமத வாத ஸாந்திமாந் கூர நாத –-3-
ஜயதி
ஹரி பரத்வ ஸ்தாபநோத் வேல மோதாத் –திருமாலின் பரம் பொருட்டாண்மையை நிலை நாட்டுவதில் எல்லை கடந்த மகிழ்ச்சியினால்
உப நிஷது பகூடாந் –உப நிஷத்துக்களில் மறைந்து கிடக்கிற
அர்த்தாத் -அர்த்தங்களை
ந்யாயத -உபய மீமாம்ஸா யுக்திகளைக் கொண்டு
விவ்ருண்வந் –விளங்கா நின்றவராய்
அத ரித ஸிவ பாரம் யார்த்தி சோலாதி ராஜ –வெல்லப்பட்ட சிவனுடைய பரத்வத்தைத் தம்மிடம் கேட்க விரும்பிய சோழ அரசனை யுடையவரும்
அது காரணமாக
சமித விமத வாத -ஓயச் செய்யப்பட சிவனே பரண் என்று கூறுமவர்களின் எதிர் வாதத்தை யுடையவரும்
ஸாந்திமாந் –பொறுமை யுடையவருமாகிய
கூர நாத –ஜயதி –கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குகிறார்
———-
பவ ஜலதி நிமக்ந உத்தாரணே பத்த தீஷா
கிமு புவமவ தீர்ண ஸ்ரீ பதி கிந்நு ஸைந்யேட்
உத ஸடரிபுரித் யுல்லிக் யமாநோ மஹத்பி
ஜயதி குரு வரேண்ய கூர நாதோ மஹாத்மா –-4-
பவ ஜலதி நிமக்ந உத்தாரணே –ஸம்ஸாரமாகிய கடலிலே ஆழ அழுந்தியவர்களை உயரத் தூங்குவதில்
பத்த தீஷா –நியமம் பூண்டவராய்
புவமவ தீர்ண –பூ உலகில் அவதரித்த
ஸ்ரீ பதி கிமு –திருவின் மணவாளனோ
கிந்நு ஸைந்ய ஈட–சேனை முதல்வரோ
உத ஸடரிபு -நம்மாழ்வாரோ
இவர்
இதி -என்று
மஹத்பி–பெரியோர்களால்
யுல்லிக் யமாந-ஊகிக்கப் படுமவரும்
குரு வரேண்ய –ஆச்சார்ய ஸ்ரேஷ்டரும்
மஹாத்மா–பரந்த மனமுடையவருமான
கூர நாத ஜயதி – கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குகிறார்
மூவரைச் சொன்னது திரு மகளுக்கும் உப லக்ஷணம் -திருமால் திரு மகள் சேனை முதலியார் நம்மாழ்வார் –உத்தர உத்தர கருணையில் மிக்கு
அனைவருமாகச் சேர்ந்தே கூரத்தாழ்வான் -காரேய் கருணை எதிராஜரை ஆஸ்ரயித்து அவருக்கு பவித்ரம் ஸ்தானீயம் ஆனார்
————
நிரவதிக தயாப்திர் நாயமாவிர்ப வேச் சேத்
இஹ புவி விமலாத்மா கூர நாதோ மஹீ யாந்
விவித விஷய நக்ரக் ராம ஜூடம் கதம் வா
பவ ஜல நிதி பூரம் நிஸ் தரே யுர்ஜ நவ்கா –5-
நிரவதிக தயாப்திர் -எல்லையற்ற கருணைக்கு கடல் போன்றவரும்
விமலாத்மா-மலம் அற்ற மனம் படைத்தவரும்
மஹீ யாந்-அதனால் மிகப் பெரியவருமான
அயம் கூர நாதோ –இந்தக் கூரத்தாழ்வான்
இஹ புவி-இந்த உலகில்
ந ஆவிர்பவேத் சேத்-அவதரிக்கவில்லை என்றால்
விவித விஷய நக்ரக்ராம ஜூடம்-பலவகைப்பட்ட ஸப்தாதி விஷயங்கள் ஆகிய முதலைகளின் கூட்டங்களால் அடையப்பட்ட
பவ ஜல நிதி பூரம் –ஸம்ஸாரமாகிய கடல் வெள்ளத்தை
ஜந ஓகா–மனிதர்கள் திரள்கள்
கதம் வாநிஸ்தரேயுர்–எப்படித்தான் தாண்ட முடியும் –
கடலில் முதலைகள் இருக்குமே -சம்சாரக் கடல் என்றதால் இங்கு ஸப்தாதி விஷயங்களை முதலைகள் என்கிறார்
ஸ்வரூப நாசத்தை உண்டாக்கும் அன்றோ
————–
ஸூ சரித பரி பாகோஸ் மாத் ருசாம் கிந்நு பத்மா
கமிது ரகில நேது ப்ரேம ஸார க்ருதாத்மா
விலஸதி புவி கூரேசாத்ம நோதீர்ய மாண
ஜயதி விபுத வர்யை கூர நாத க்ருபாலு –-6-
ய –யாவர் ஒருவர்
கூரேசாத்ம-கூரேசர் என்னும் உருவமுடையவராக
விலஸதி புவி -உலகில் விளங்குகிறாரோ
ஸ க்ருபாலு –கூர நாத -அந்த தயை மிக்க கூரத்தாழ்வான்
அஸ் மாகம் – நம்முடைய
ஸூ சரித பரி பாகஸ் –புண்ணியத்தின் பயனானது
க்ருதாத்மா கிந்நு-வடிவெடுத்து வந்தவரோ –
அல்லது
பத்மா கமிது-திருமகள் மணவாளனாய்
அகில நேது–ஸர்வேஸ்வரனாகிய எம்பெருமானுடைய
ப்ரேம ஸார –சிறந்த ப்ரீதியானது
க்ருதாத்மா கிந்நு -வடிவெடுத்து வந்தவரோ
இதி -என்று
விபுத வர்யை –ப்ராஹ்மண உத்தமர்களால்
உதீர்ய மாண –புகழப் பட்டவராய்க் கொண்டு
ஜயதி -மேம்பட்டுத் திகழ்கிறார்
ஆழ்வான் அவதரிக்க நாம் செய்த புண்ணியம் எல்லாம் சேர்த்தாலும் செய்ய முடியாமையைக் கருதி பகவானுடைய பேர் அன்பே ஆழ்வானாக அவதரித்ததோ என்று பெரியவர்கள் கூறுவதாக அருளிச் செய்கிறார்-
———–
அபஹ்ருத பவதாப (பை )பாவநை ப்ரேம சாந்த்ரை
அம்ருத ரஸ நிதாநை ஆத்ம பாஜாம் கடாஷை
அநு கலமுப குர்வன் ஸேமுஷீம் ஸேக்ஷ தாயா
ஜலதி துஹி த்ருஜாநே ப்ராஜதே கூர நாத –-7-
கூர நாத –கூரத்தாழ்வான்
ப்ரேம சாந்த்ரை -அன்பு செறிந்தவைகளும்
பாவநை –பரிசுத்தியை உண்டாக்குமவைகளும்
அம்ருத ரஸ நிதாநை-மோக்ஷ ஆனந்துக்கு மூல காரணமானவைகளுமான
கடாஷை -தமது கடைக்கண் பார்வைகளாலே
ஆத்ம பாஜாம் –உடல் எடுத்த ஜீவாத்மாக்களுக்கு
ஜலதி துஹித்ரு ஜாநே–கடல் அரசன் பெண்ணான திருமகள் மணவாளனைக் குறித்து
ஸேமுஷீம் ஸேக்ஷ தாயா-நாம் எல்லாருக்கும் அடிமை என்னும் அறிவை
அநு கலமுப குர்வன் –க்ஷணம் தோறும் உண்டாக்கிக் கொண்டு
அதனால்
அபஹ்ருத பவதாப (பை )-அவர்களுடைய ஸம்ஸார தாபத்தைப் போக்குமவராய்
ப்ராஜதே –விளங்குகிறார்-
ஞானக்கை தா என்றார் இறே ஆழ்வாரும்
சேஷத்வ ஞானத்தை உண்டாக்கி ஸம்ஸார தாபத்தைப் போக்கி மோக்ஷம் அடைவிப்பர் ஆழ்வான் என்கிறார் இதில்
ஆழ்வானுடைய கடாக்ஷமே இவற்றைச் செய்யுமே –
—————-
க்ருத குவலய மோத கோச பூத கலாநாம்
த்விஜ பதிரகிலாசா சோபயந் நைஜதாம்நா
ப்ரஸமித பரிதாப ப்ராப்ய விஷ்ணோ பதம்தத்
விலஸதி விபு தேட்ய கூர நாதவ்க்ஷதீ ச–8-
க்ருத குவலய மோத –1-பூ மண்டலத்துக்கு மகிழ்ச்சியைத் தருமவராய் -2- நெய்தல் மலருக்கு மலர்ச்சியைத் தருமவனாய்
கோச பூத கலாநாம் –1- ஸாஸ்த்ரங்களுக்கு நிதியானவராய் -2-சந்த்ர கலைகளுக்கு நிதியானவனாய்
த்விஜ பதிர் -1- ப்ராஹ்மணர்களுக்குத் தலைவராய் -2-யாகத்துக்கு வேண்டிய ஓஷதிகளை வளர்க்கையால் யாகம் செய்யும் ப்ராஹ்மணர்க்குத் தலைவனாய்
நைஜதாம்நா -1- தனது ஞான ஒளியாலே -2- தனது காந்தியாலே -நிலாவினால் –
அகில ஆசா –1-எல்லாத் திக்குகளில் உள்ளவர்களையும் -எ2-ல்லாத் திக்குகளையும்
சோபயந் -1-2- விளங்கச் செய்து கொண்டு
ப்ரஸமித பரிதாப -1- ஸம்ஸார தாபத்தைத் தணிப்பவராய் -2- வெயிலின் வெப்பத்தைத் தணிப்பவனாய்
விபுதேட்ய-விபூத ஈடய -1- ப்ராஹ்மணர்களாலே ஸ்துதிக்கத் தக்கவராய் -2-யாகத்துக்கு வேண்டிய ஓஷதிகளை வளர்க்கையாலே யாகத்தில் ஹவிஸ்ஸை ஏற்றுக் கொள்ளுகிற தேவர்களால் ஸ்துதிக்கத் தக்கவனாய்
தத் -1-2- பிரஸித்தமான
ப்ராப்ய விஷ்ணோ பதம்–1- பரமபதத்தை அடைந்து -2- ஆகாசத்தை அடைந்து
கூர நாத ஓக்ஷதீ ச -1- கூரத்தாழ்வான் ஆகிற 2- சந்திரன்
விலஸதி -விசேஷமாகப் பிரகாசிக்கிறான்
ஆழ்வான் சந்திரன் போன்றவர் என்று கொண்டு உபம அலங்காரம்
ஆழ்வானையே சந்த்ரனாகக் கொண்டு ரூப அலங்காரம் -ரூபகம் -உருவகம்
———–
ஸூ ஜந ஹ்ருதய பத்மோல்லா ஸமாராத் விதந்வந்
குஜந குவலயாநாம் மீலநம் சாபி குர்வன்
உதய மதி கதோ அசவ் கூர நாதாம் ஸூமாலீ
துரித திமிர ஜாலம் தேஹ பாஜாம் ஹி நஸ்தி--9-
அசவ் கூர நாதாம் ஸூமாலீ -அந்த கூரத்தாழ்வான் ஆகிற ஸூர்யன்
உதய மதி கதோ -உதயத்தை அடைந்தவனாய்க் கொண்டு
ஆராத் –தூரத்தில் இருந்தே
ஸூ ஜந ஹ்ருதய -நல்லோர்களுடைய மனமாகிய
பத்மோல்லா ஸம் -தாமரையின் மலர்ச்சியை
விதந்வந்-செய்து கொண்டும்
குஜந குவலயாநாம் –தீயவர்களாகிய ஆம்பல் மலர்களினுடைய
மீலநம் சாபி குர்வன் –கூம்புதலையும் செய்து கொண்டும்
தேஹ பாஜாம்–உடல் எடுத்த மனிதர்களுடைய
துரித திமிர ஜாலம் –பாபங்களாகிய இருளின் திரட்சியை
ஹி நஸ்தி–நாஸம் செய்கின்றான் –
கீழ் சந்தனுக்கு ஒப்புமை சிலேடையில்
இங்கு அடை மொழிகளில் உள்ள பொருள்களை -ஒன்றை மற்ற ஒன்றாக உருவகம் க்ருத குவலய மோத –என்பதன் கண் குவலயம் என்பதற்கு பூ மண்டலம் என்றும் நெய்தல் மலர் என்றும் காட்டி அருளுகிறார்
————–
அம்ருத ஜநந பூமி ஸம்ஸ்ரிதா நந்த தாயீ
ஸகல ஸூகுண ரத்நா வாஸபூ பூர்ண ஸத்த்வ
விமதகத கவர்யைர் நாவிகைரப்ய லங்க்ய
ஸ்புரதி புவி கபீர கூர நாதாம் ருதாப்தி –-10-
அம்ருத -1- மோக்ஷத்திற்கு -2-அம்ருதத்திற்கு
ஜநந பூமி –பிறப்பிடமாய்
ஸம்ஸ்ரிதா நந்த தாயீ –தன்னை அடைந்த 1- முமுஷுக்களுக்கு -2- இந்த்ராதி தேவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருமவராய்
ஸகல ஸூகுண ரத்ந ஆ வாஸபூ -எல்லா 1- நல்ல குணங்களாகிற 2- ரத்னங்களுக்கு இருப்பிடமாய்
பூர்ண ஸத்த்வ –1- சத்துவ குணம் நிறைந்தவராய் -2- முதலை முதலிய பிராணிகளால் நிறைந்ததாய்
விமத கதக வர்யைர் -1- வாதம் செய்யும் புறமதத்தவர்களாகிய 2- படகோட்டிகளாலே
அஸங்க்ய –1- எதிர்க்க முடியாதவராய் -2- தாண்ட முடியாததாய்
கபீர-1- ஆழ்ந்த மனமுடையவருமான -2- ஆழமுடையதுமான
நாவிகைரப்ய ல
கூர நாதாம் ருதாப்தி –1-கூரத்தாழ்வானாகிய -2- அமுதக்கடல் -பாற் கடல்
புவி -பூமியில்
ஸ்புரதி –விளங்குகிறது
——————
ஸதாபி வ்ருத்தி மாஸ்ரிதோஷயோ ஜடாஸ யோதயோ
கலங்க பாவ பாஸூரோ நிராக்ருதோக்ர சங்கம
விராஜ மாந விக்ரஹோ திவாபி மித்ர ஸந்நிதவ்
விநாக்ருதாஸ் தாஸ்த ஸம்ஸ்ரயோ விபாதி கூர ராட் விது –11-
ஸதாபி வ்ருத்தி மாஸ்ரித-எப்போதும் வளர்ச்சியை அடைந்ததும்
அஷய –தேய்வில்லாததும்
அஜடாஸயோதயோ –ஜலா சயமான கடலில் தோன்றாததும் புத்திமான்களுடைய மனதில் தோன்றுவதும்
அகலங்க பாவ பாஸூரோ -மறு -குற்றம் -இல்லாமையால் பிரகாசிக்குமதும்
நிராக்ருதோக்ர சங்கம–சிவபெருமானுடைய -தலையோடு சேர்த்தியை மறுத்ததும்
மித்ர ஸந்நிதவ் -ஸூர்யனுடைய சமீபத்தில்
திவாபி-பகலிலும்
விராஜ மாந விக்ரஹோ –பிரகாசிக்கின்ற பிம்பத்தை -திருமேனியை உடையதும்
விநாக்ருதாஸ் தாஸ்த ஸம்ஸ்ரயோ –மேற்கு மலையை அடைந்து அஸ்தமியாததுமான
விபாதி கூர ராட் விது -கூரத்தாழ்வான் ஆகிய மதி சந்திரன் விளங்குகிறது
கீழ் 8 ஸ்லோகத்தில் சந்திரனுக்கு உள்ள தன்மை அனைத்தும் ஆழ்வான் இடம் உள்ளமையைக் காட்டி அருளி
இதில் அதில் உள்ள தீமைகள் ஒன்றுமே ஆழ்வான் இடம் இல்லை என்று கூறப்படுகிறது
ஸதா -என்பதை அனைத்திலும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்
ஜலாசய -என்பதே ஜடாசய என்றதாயிற்று டலயோ அபேத -தகரமும் லகாரமும் ஒன்றே -ஜலாசய -ஜலம் தங்கும் கடல் ஜடாசய -ஜடம் அறிவில்லாதவன்
———-
ப்ரஸாத மேயிவாந் ஸதா ப்ரகாம வீஷ்ய விக்ரஹ
ப்ராபோத மாவஹந் ந்ருணாம் ப்ராணா ஸயம்ஸ்தமஸ்ததி
ஸதோத்தராயணாந் விதோ விமுக்ததாம ஸக்ரஹ
த்ரயீ மயோத்ர கூர ராட் வாகரோ விராஜதே –12-
ஸதா–எப்போதும்
ப்ரஸாத மேயிவாந் -1-அநுக்ரஹத்தை அடைந்தவராய் -2-உக்ரமாக அல்லாமல் தெளிவை அடைந்தவனாய்
ப்ரகாம வீஷ்ய விக்ரஹ -1- நன்றாக ஸேவிக்கத்தக்க திருமேனியை யுடையவராய் -2-கண் கூசாமல் காணத்தக்க பிம்பத்தை யுடையவனாய்
ப்ராபோத மாவஹந் ந்ருணாம் -மனிதர்களுக்கு நல்ல அறிவை உண்டாக்குமவராய் –2- மனிதர்களுக்கு தூக்கத்தில் இருந்து விழிப்பை உண்டாக்குமவனாய்
ப்ராணா ஸயம்ஸ்தமஸ்ததிம் -1- அறியாமைத் திரட்சியை அழிப்பவராய் -2- இருளின் திரட்சியை அழிப்பவனாய்
ஸதா -எப்போதும்
உத்தராயணாந் விதோ -1- உயர்ந்த வழியில் சேர்ந்தவராய் -2-உத்தராயணத்தில் சேர்ந்தவனாய்
விமுக்ததாம ஸக்ரஹ –1-தமோ குணமுடையவர்களால் பற்றப்படாதவராய் 2- ராகுவினால் பீடிக்கப்பட்டாதவனாய் -கிரஹணம் இல்லாதவனாய்
த்ரயீ மயீ -1- வேத விசாரம் செய்வதனால் வேத மயராய் -2- மொன்று வேதத்தையே உருவமாக யுடையவனாய் இருக்கிற
கூர ராட் வாகரோ –கூரத்தாழ்வான் ஆகிற ஸூர்யன்
அத்ர-இவ்வுலகில்
விராஜதே-மிகவும் விளங்குகிறான்–இதில் தீமை அற்ற ஸூர்யனாக ரூபணம்
—————-
ஸ்வகீய ஹ்ருத் குஹாஸயாலு ஸாரஸாக்ஷ கேஸரீ
பரீத வாக்ஜ ரீபரோ விரக்த முக்ய ஸம்ஸ்ரய
விஸேக்ஷ ஸாஸ்த்ர யுக்திபி விசித்ரதாது பிர்யுத
விபாதி கூரராண் மஹீதர புமர்த்த ஸித்தயே –-13-
ஸ்வகீய ஹ்ருத் குஹாஸயாலு ஸாரஸாக்ஷ கேஸரீ –தன்னுடையதாக ஹ்ருதயமாகிய குகையில் கிடந்தது உறங்குகிற புண்டரீகாக்ஷனாகிய -ஸ்ரீ யபதியான -ஸிம்ஹத்தை யுடையதும்
பரீத வாக்ஜ ரீபரோ –நிறைந்த ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிய அருவிகள் மிகப் பெற்றதும்
விரக்த முக்ய ஸம்ஸ்ரய–ஆசை அற்றவர்களுக்கு முக்கியமான புகலிடமானதும்
விஸேக்ஷ ஸாஸ்த்ர யுக்திபி –சிறந்த ஸ்ரீ ஸூக்திகளாகிய
விசித்ரதாது பிர் –பலவகைப்பட்ட தாதுக்களோடு
யுத –கூடியதுமான
கூரராண் மஹீதர-கூரத்தாழ்வான் ஆகிய பர்வதமானது
விபாதி புமர்த்த ஸித்தயே -மோக்ஷ புருஷார்த்தம் ஸித்திப்பதன் பொருட்டு மிகவும் விளங்குகிறது
சந்த்ர ஸூர்யர்கள் குதிப்பதும் அஸ்தமிப்பதும் மலையிலே ஆகையாலே மலையாக ரூபணம் இதில்
மலை முழைஞ்சில் ஸிம்ஹம் -ஆழ்வான் திரு உள்ளத்தில் சீரியஸிம்ஹமான நரஸிம்ஹப் பெருமாள்
ஆழ்வானுக்குத் திருவாராதனப் பெருமாள் அழகிய சிங்கர் என்று பெரிய திருமுடி அடைவில் உள்ளமை காண்க
———-
யதீஸ வாக் ஸூதாஜரீ ஸதாநு பூதி மத்த தீ
த்ரயீ ஸிரோர்த புங்கிதா ஸூ யுக்தி ஸாய காவலீ
ஸ்ருஜந் குவாதி வித்விஷ ப்ரகாலயந் குரோ பதே
அபி ஷிக்த ஏஷ கூரராட் ப்ரஸாஸ்தி வஷ்ணவீம்ஸ்ரியம் –14-
யதீஸ வாக் ஸூதாஜரீ ஸதாநு பூதி மத்த தீ –யதிராஜருடைய ஸ்ரீ ஸூக்திகளாகிய அம்ருதத்தின் வெல்லத்தை எப்போதும் அனுபவிப்பதனால் செருக்குக் கொண்ட அறிவையுடையவராய்
த்ரயீ ஸிரோர்த புங்கிதா –வேதாந்த அர்த்தங்களை மூலமாகக் கொண்ட தொடுக்கப்பட்ட
ஸூ யுக்தி ஸாய காவலீ –நல்ல யுக்திகளாகிய பாணங்களின் வரிசைகளை
ஸ்ருஜந் -விடுமவராய்க் கொண்டு
குவாதி வித்விஷ –துர் வாதம் செய்யும் புற மத்தவராகிய பகைவர்களை
ப்ரகாலயந் –மிகவும் அழிப்பவராயும் -மறுப்பவராயும் –
குரோ பதே –ஆச்சார்யருடைய ஸ்தானத்திலே
அபி ஷிக்த –பட்டாபிஷேகம் செய்யப் பட்டவராயும் உள்ள
ஏஷ கூரராட் –இந்தக் கூரத்தாழ்வான்
ப்ரஸாஸ்தி வஷ்ணவீம்ஸ்ரியம் –ஸ்ரீ வைஷ்ணவர்கள் செல்வத்தை ஆளுகிறார்
ஆச்சார்ய ஸ்தானத்தில் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைப் பரிபாலனம் செய்யும் வகையை அருளிச் செய்கிறார்
———–
கதாஹவோந் முகாந் பஹுந் கபர்தி துர்மதாஸ் ரயாந்
முதாக்ருதாக மஸ்ரமாந் விதாய வாதி ந பராந்
புதாத ரீக்ருதி க்ஷமை ஸ்வ வாக் ஜரீ பரை ரஸவ்
புதா வலீ ஸமீடி தஸ் சகாஸ்தி கூர பூபதி –-15-
அஸவ் கூர பூபதி –அந்தக் கூரத்தாழ்வான் –
கதா ஆஹவ உந் முகாந் –வாதம் என்று போர் செய்வதற்காகத் தம்மை எதிர் நோக்கி நின்றவர்களும்
கபர்தி துர்மதாஸ் ரயாந் –சிவனுடைய கெட்ட மதத்தைப் பின்பற்றியவர்களுமாகிய
பஹுந் வாதி ந-பல வாதம் செய்யுமவர்களை
புத அதரீ க்ருதி க்ஷமை –புற மதப் புலவர்களை வெல்வதற்கு உரிய
ஸ்வ வாக் ஜரீ பரைர் -தமது ஸ்ரீ ஸூ க்திகளாகிற அதிகமான வெள்ளப் பெருக்கினால்
முதாக்ருத ஆகம ஸ்ரமாந் -பயன் அற்றதாகச் செய்யப்பட தமது சைவ ஆகமப் பயிற்சியை யுடையவர்களாக
விதாய –செய்து விட்டு
புதா வலீ ஸமீடி தஸ் -மத்யஸ்தரான பண்டிதர்களின் திறலினால் மிகவும் ஸ்துதிக்கப் பட்டவராய்
சகாஸ்தி –விளங்குகிறார்-
————-
விபூதிமைஹி கீப்த்ய ஜந்வி மோஹதாயி நீம் ப்ருசம்
விதாத்ரு முக்ய ஸேவிதாம் அஹந்தயா அதி தூஷிதாம்
ஸ்ருதீடி தாம நிந்தி தாம் ஸ்வரூப ஸேமுஷீ மதாம்
ஸ்ரியம் ஸமாஸ்ரயந் அசவ் விபாதி கூர பூ பதி –-16-
அசவ் கூர பூ பதி —அந்தக் கூரத்தாழ்வான்
விதாத்ரு முக்ய ஸேவிதாம்-பிரமன் முதலியவர்களாலே வஹிக்கப் பெற்றதும் -அதனால்
அஹந்தயா அதி தூஷிதாம் –அஹங்காரத்தால் மிகவும் கெடுக்கப்பட்டதும் -அதனால்
வி மோஹ தாயி நீம் ப்ருசம் –விஷயங்களே அனுபவிக்கத்தக்கவை என்ற அஞ்ஞானத்தை மிகவும் தரக்கூடியதுமான
விபூதிமைஹிகீம் -இந்த உலகத்தை
த்ய ஜந் –விட்டு ஒழிப்பவராய்க் கொண்டு
அநிந்தி தாம் -இகழப்படாததும்
ஸ்ருதீடி தாம –வேதத்தால் புகழப் பட்டதுமான
ஸ்வரூப ஸேமுஷீ மதாம் –ஜீவாத்ம ஸ்வரூப ஞானமுடையவர்களுடைய
ஸ்ரியம் –மோக்ஷமாகிய செல்வத்தை
ஸமாஸ்ரயந் விபாதி –அடைந்தவராய் விளங்குகிறார்
நித்ய ஸூரிகள் போல் இவ்வுலகிலே ஸ்வரூப ஞானம் பெற்று நீதி வானவர் போல் இருக்கும் கூரத்தாழ்வானைப் புகழ்ந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்
——————–
ம்ருஷா மதம் விதாய தந் ம்ருஷா ஸ்வ யுக்திபிர் ஜகந்
ம்ருஷாத்வ பாதக ப்ரமாப்ரகாஸிகாபி ராத்மநாம்
அநேக தாம ஸேக்ஷதாம் ப்ரகாஸயந் வ்யபோஹயந்
ப்ரமாத்ருஸேக ரஸ்துத ப்ரகாஸ தேத்ர கூரராட் –17-
கூரராட் –கூரத்தாழ்வான்
ஜகந் ம்ருஷாத்வ பாதக ப்ரமாப்ரகாஸிகாபி –உலகம் பொய் என்பதை மறுக்கிற அறிவை வெளிப்படுத்துகின்ற
ஸ்வ யுக்திபிர்-தம்முடைய யுக்திகளாலே
தத் ம்ருஷா மதம் -உலகம் பொய் என்கிற அந்த அத்வைத மதத்தை
விதாய ம்ருஷா –பொய்யாக ஆக்கி மறுத்து
ஆத்மநாம் –ஆத்மாக்களுடைய
அநேக தாம் –பன்மையை
ப்ரகாஸயந்-வெளிப்படுத்துமவராயும்
அஸேக்ஷதாம் -ஆத்மாக்கள் பகவானுக்கு அடிமையல்ல என்பதை
வ்யபோஹயந் –மறுத்து உரைப்பவராயும் ஆகி
ப்ரமாத்ருஸேக ரஸ்துத -உண்மை அறிவுடையவர்களில் தலைவர்களாலே புகழப்பட்டவராய்க் கொண்டு
ப்ரகாஸ தேத்ர -இவ்வுலகில் திகழ்கிறார்
கீழ் சைவ மத நிரசனம் இதில் அத்வைத மத நிரசனம்
————-
ஸ்ருதிம் த்ருட ப்ராமணயந் ஜகத் விதாத ரீஸ்வரே
ப்ரோக்தமாநுமாநி கேஸ்வரத்வ மப்யதோ நயந்
அணோர் ஜகந் நிதாந தாம போஹயந் விராஜதே
ஸ்வ ஸூ க்திபிர் ஸ்வ யுக்திபிர் ஸூதீவ ரோத்ர கூரராட்–18-
ஸூதீவ ரோத்ர கூரராட் –புக்திமான்களில் சிறந்தவராகிய
ஜகத் விதாத ரீஸ்வரே–உலகத்தைப் படைத்த ஈஸ்வரனாகிய ஸ்ரீ மன் நாராயணன் விஷயத்தில்
ஸ்ருதிம் –வேதத்தை
த்ருட ப்ராமணயந் -அசைக்க முடியாத திடமான அத்தாட்சி நூலாகக் கொண்டு
ப்ரோக்தமாநுமாநி கேஸ்வரத்வம் –கணாதர் மதம் -வை சேஷிகர்களால் சொல்லப்பட்ட(பரம அணு வாதிகள் ) ஸ்ருஷ்டி கர்த்தாவான சிவன் அனுமான ப்ரமாணத்தினால் ஸித்திக்கிறான் என்ற விஷயத்தை
யதோ நயந் –கீழே தள்ளுகிறவராயும்
அணோர் -பரம அணுவுக்கு
ஜகந் நிதாந தாமபி –உலகத்தைக் குறித்து முதல் காரணமாய் இருத்தலையும்
ஸ்வ ஸூ க்திபிர் –தமது பேச்சுக்களாலும்
ஸ்வ யுக்திபிர் –தம்முடைய யுக்திகளாலும்
அபோஹயந் –மறுப்பவராயும்
விராஜதே –மிகவும் விளங்குகிறார்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந -போன்ற ஸ்ருதி வாக்யங்களைக் கொண்டு ஸூவ மத ஸ்தாபனம்
———–
ஸிவாத் பரம் நஹீதி வை லிகேதிசோல பூபதே
வசஸ் ஸ்ருதேரநந்தரம் ததுத்தரம் வாஸோ லிகந்
அபாஹஸந் மஹீ ஸூரைர்ய ஈடிதோ மஹீ பதிம்
விபாதி கூரராட் குருஸ் ஸஸர்வ ஸாஸ்த்ர பாரக –19-
ஸர்வ ஸாஸ்த்ர பாரக –எல்லா ஸாஸ்த்ரங்களையும் கரை கண்டா -நன்றாக அறிந்த
ய -யாவர் ஒருவர்
ஸிவாத் பரம் –சிவனை விட உயர்ந்த தத்வம்
நஹீதி வை –இல்லவே இல்லை என்றே
லிகேதி–நீர் எழுதும் என்று
சோல பூபதே வசஸ் –சோழ ராஜன் கூறிய வார்த்தையை
ஸ்ருதேரநந்தரம் –கேட்ட வுடனே
ததுத்தரம் வாஸோ -அத்தை எழுதாமல் அதன் விடையான வார்த்தையை
லிகந் –எழுதுமவராய்
மஹீ பதிம் –அச் சோழ ராஜன்
அபாஹஸந் –பரி ஹாஸம் -ஏளனம் -செய்தாரோ
மஹீ ஸூரைர்ய ஈடிதோ விபாதி கூரராட் குருஸ் ஸ -அந்த கூரத்தாழ்வான் ஆகிய ஆசார்யர் ஸ்ரீ வைஷ்ணவர்களால் ஸ்துதிக்கப்பட்டு விளங்குகிறார்
த்ரோணம் அஸ்தி தத பரம் -என்று எழுதிக் கையெழுத்திட்ட வ்ருத்தாந்தம் -சிவ சப்தம் எட்டுப்படி அளவு கொண்ட குறுணிக்கும் பெயர்
பதினாறு படியளவு கொண்ட பாதைக்கு குறுணியை விடப் பெரியது
நம் தரிசனத்துக்காக தம் தரிசனத்தை இழந்தார் -தர்சனம் சித்தாந்தம் -கண்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந
————–
யதீஸ்வர க்ரஹாகதாந் படாந் விலோக்ய பூபதே
ஸ்வயம் த்ரி தண்டிதாம் பஜந் ததீய ரக்ஷண இச்சயா
ஸிலீ முகால் பகீடயோர் நயம் ஸதார்ய ஸிஷ்யயோ
ப்ரதர்ஸயந் ஸ்வசர்யயா சகாஸ்தி கூர பூபதி —20-யதீஸ்வர ஆஸ்ரம ஆகதாந் -பாட பேதம் –
கூர பூபதி –கூறத்துக்கு அரசரான ஆழ்வான்
யதீஸ்வர க்ரஹாகதாந் -யதீஸ்வரரான எம்பெருமானாரைப் பிடித்துப் போவதற்காக வந்த
படாந் விலோக்ய பூபதே –அரசனுடைய வேலையாட்களைப் பார்த்து
ததீய ரக்ஷண இச்சயா –அவருடைய ரக்ஷணத்தில் தாம் கொண்ட ஆசையினால்
ஸ்வயம் –தாமே
த்ரி தண்டிதாம் பஜந் –த்ரி தண்டத்தைக் கைப்பற்றியவராய்
ஸ்வசர்யயா–இத்தகைய தமது நடத்தையினால்
ஸிலீ முக அல்ப கீடயோர் –குளவிக்கும் சிறு புழுவுக்கும் உண்டான நியாயத்தை
ஸதார்ய ஸிஷ்யயோ –நல்ல ஆச்சார்யருக்கும் நல்ல சிஷ்யருக்கும் உள்ளதான
ந்யாயம் -நியாயத்தை
ப்ரதர்ஸயந் சகாஸ்தி –வெளிப்படுத்திக் கொண்டு விளங்குகிறார்
ஒரு குளவி சிறு புழுவைக் கொண்டு வந்து தன் கூட்டில் வைத்து அதை எப்போதும் கொட்டிக்கொண்டு இருந்தால் அப்புழு அக்குழவியின் உருவத்தையே எப்போதும் நினைத்துக் கொண்டு இருந்து அக்குளவியாகவே ஆகி விடும் என்னும் நியாயம்
எம்பெருமானாராலேயே வளர்க்கப் பட்ட கூரத்தாழ்வான் அவரையே தியானித்து தியானித்து அவரைப் போலவே திரிதாண்டா காஷாயங்களைத் தரித்து எம்பெருமானாராகவே ஆகி விட்ட படியால் இந்த நியாத்தைக் காட்டி அருளினார்
———–
நிரா கர்த்தும் மோஹம் நிகில ஐந சித்தாஸ் ரயம் அசவ்
தயா ஸிந்து ஸாந்த்ராத் நிரவதிக விஞ்ஞாந விபவாத்
மஹீ பாகே மாஸே மகர மஹிதாக்யே ஸமஜநி
ப்ரஸஸ்தே ஹஸ்தர்ஷே சுப குண நிதி கூர ந்ருபதி –21-
சுப குண நிதி–நல்ல குணங்களுக்கு நிதியான
அசவ் கூர ந்ருபதி —-அந்த கூரத்தாழ்வான்
தயா ஸிந்து ஸந்–அக்குணங்களில் முக்கியமான தயைக்குக் கடலாய் இருந்து
ஸாந் த்ராத்-அதிகமான
நிரவதிக–எல்லையில்லாத
விஞ்ஞாந விபவாத் –தமது ஞானத்தின் பெருமையினாலே
நிகில ஐந சித்தாஸ் ரயம் -எல்லா மக்களுடைய மனத்தையும் பற்றி இருக்கிற
நிரா கர்த்தும் மோஹம் –அறியாமையை அகற்றுவதற்காக
மஹீ பாகே -இந்த பூ ப்ரதேசத்திலே
மகர மஹிதாக்யே -மகரம் -தை -எனப்படுகின்ற கௌரவிக்கப்பட்ட
மாஸே –மாதத்தில்
ப்ரஸஸ்தே-கொண்டாடப்பெற்ற
ஹஸ்தர்ஷே -ஹஸ்தம் என்னும் நக்ஷத்திரத்தில்
ஸமஜநி -திரு அவதரித்தார்
மகரம் -மங்களம் கரோதி -உத்பாதயதி இதி மகர
அலங்காரம் ததாதி இதி மகர -சோபையைத் தரும் மாதம்
ஹஸ்த நக்ஷத்ர அதி தேவதை ஸூர்யன்
திருமழிசைப் பிரான் போல் பரதத்வ நிர்ணயம் பண்ணவே இவரும் இந்த மாதத்தில் அவதரித்தார்
பேர் அருளாளன் ஆறு வார்த்தைகள் அருளிச் செய்து உபகரித்தார் போல் இவரும் வ்ருத்தி கிரந்தத்தை நினைவில் கொண்டு விண்ணப்பித்து உபகாரம் புரிந்தார்
ஆகவே இவரும் பேர் அருளாளன் போலவே தயா ஸிந்து
——————-
அநாத் ருஷ்யாம் ப்ரஹ்மாதி பிரபி ஸூரைரத்ம க்ருதிபிர்
ஸதாப் யேகா காராம் அநதி கத வ்ருத்தி க்ஷய கதாம்
அஹந்தா மஜ்ஞாநாம் ப்ரக்ருதி மநு ரூபாம் மம க்ருதே
பரா குர்வன் கூர ப்ரபு ரகில நிரூணாம் விஜயதே–22-
கூர ப்ரபு-கூரத்தாழ்வான்
ப்ரஹ்மாதி பிரபி ஸூரை–பிரமதேவன் முதலிய தேவர்களாலும்
அநாத் ருஷ்யாம் –போக்க முடியாததும்
அநதி கத வ்ருத்தி க்ஷய கதாம் –வளர்வது தேய்வது என்னும் பேச்சைக் கூட அறியாததும்
ஸதாப்யே காகாராம் –ஸதாபி ஏக ஆகாரம் –பூரணமான வளர்ச்சி என்கிற ஒரே விதமான வடிவை யுடையதும்
மம க்ருதே -மமகாரத்துக்கு
ப்ரக்ருதிம் அநு ரூபாம்–ஏற்ற மூல காரணமானதுமான
அஜ்ஞாநாம்–அறிவிலிகளான
அகில நிரூணாம்–எல்லா மனிதர்களுடையவும்
அஹந்தாம் -அஹாங்காரத்தை
பரா குர்வன் ஸந் விஜயதே –போக்கடித்துக் கொண்டே வெற்றி பெறுகிறார்
கீழ் அஞ்ஞானம் போக்கவே ஆழ்வான் அவதாரம் -இதில் அதனால் உண்டாகும் அஹங்கார மமகாரங்களைப் போக்கும்படி கூறப்படுகிறது
ஸ்வரூப ஞானத்தை உண்டாக்குவதன் வாயிலாகப் போக்கி பகைவர்களை வென்று முடி சூடிய அரசர் போல் விளங்குகிறார் என்கிறார்-
அமோகைருத் கூலைரநு பதி ஸமுத்தை ரநுபமை
கடாஷை ப்ரேமார்த்ரை கலி மலம ஸேக்ஷம் வ்யபநயந்
ஜநாநாமா நந்தம் நிரவதிக மத்யாபி ஜநயந்
ஜயத்யேக்ஷ ஸ்ரீ மாந் மம குல குரு கூர ந்ருபதி–23-
மம குல குரு–அடியேனுடைய குல குரு வானவரும்
ஸ்ரீ மாந்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை யுடையவருமான
யேக்ஷ கூர ந்ருபதி -இந்தக் கூரத்தாழ்வான்
அமோகை–வீணாகாதவையும்
அநுபமை -நிகரில்லாதவையும்
ப்ரேமார்த்ரை-அன்பினால் குளிர்ந்தவையும்
அநு பதி ஸமுத்தைர் –நிர் ஹேதுகமாக உண்டானவையும்
உத் கூலைர–கரை கடந்தவையுமான
கடாஷை –தமது கடைக்கண் பார்வை களாலேயே
கலி மலம் –கலியினால் உண்டாகிற தோஷத்தை
அஸேக்ஷம் வ்யபநயந் –மிச்சம் இல்லாமல் போக்குவராய்க் கொண்டும் -அதனால்
ஜநாநாம் -மக்களுக்கு
ஆநந்தம் நிரவதிகம் -எல்லையில்லா மகிழ்ச்சியை
அத்யாபி ஜநயந் -இன்றும் உண்டாக்குமவராய்க் கொண்டும்
ஜயதி -மேம்பட்டு விளங்குகிறார்
கீழ் அஹங்கார மமகாரங்களைப் போக்கியமையை அருளிச் செய்து இதில் அவை காரணமாக உண்டாகும் பாபங்கள் -கலியுகக் குற்றங்கள் அனைத்தையும் போக்கி மக்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறார் என்கிறார்
கடாக்ஷங்களுக்கு அனைத்து விசேஷணங்களையும் அருளிச் செய்து -ஆழ்வானுடைய கடாக்ஷம் தயை அசாதாரணம் என்கிறார்
இவ்வாசிரியர் ஆழ்வான் திருவம்சத்தவர் போலும் -மம குல குரு என்பதால் -மஹாந்த ப்ரமாணம்
—————
அவித்யா மஹாத்ம்யாத விதித நிஜாகார விபவாந்
அசேஷா நுத்தர்த்தும் பவ ஜலதி மக்நாந் ஜநிப்ருத
அசவ் கூராதீஸ ஸ்வயமவதரந் பூரிக்ருபயா
நயந் நாவம் விஷ்ணும் விகததர பண்யாம் விஜயதே –-24-
அசவ் கூராதீஸ –அந்தக் கூரத்தாழ்வான்
அவித்யா மஹாத்ம்யாத் –தீ வினையின் மஹிமையால்
அவிதித நிஜாகார விபவாந் –அறியப்படாத தமது உண்மை வசிவமாகிய -பகவத் சேஷத்வமாகிய -பெருமையை உடையவர்களாய் –
அதனால்
பவ ஜலதி மக்நாந் –இவ்வுலக வாழ்வாகிய துன்பக்கடலில் மூழ்கி இருக்கிற
அசேஷாந் ஜநிப்ருத –பிறவி எடுத்த அனைவரையும்
உத்தர்த்தும்–உயரத் தூங்குவதற்காக
பூரிக்ருபயா-பெரும் கருணையினாலே
ஸ்வயமவதரந் -தாமே அவதரித்து நின்று
நாவம் விஷ்ணும் –விஷ்ணு என்னும் படகை
விகததர பண்யாம்-ஓடக்கூலி இல்லாமல்
நயந் -ஓட்டுமவராய்
விஜயதே –விளங்குகிறார்
ஸ்வரூப ஞானம் உண்டாக்கப் பெற்ற சம்சாரிகளைத் தானே படகு போல் இருந்து முகுந்தன் ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பானே
ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடையனான குருவை அடைந்தக்கால் –மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -அன்றோ
———-
பலாயத்வம் வேகாத் க்வசந கதகா காநந தலே
நிலீநா பூயாஸ்த ப்ரதிகதக மத்தேப ம்ருகராட்
ஜயீ நாநா தந்த்ர ப்ரவசந சணை ப்ரவ்ட வசநை
ஸமேத ஸிஷ்யவ்கை ரடதி வஸூதாம் கூர ந்ருபதி–25-
ப்ரதிகதக மத்தேப ம்ருகராட் –எதிர்வாதம் செய்யுமவர்களாகிய மதம் பிடித்த யானைகளைக் கொள்ளும் ஸிம்ஹமாகிற
கூர ந்ருபதி -கூரத்தாழ்வான்
நாநா தந்த்ர ப்ரவசந சணை-பலவகையான ஸாஸ்த்ர அர்த்தங்களை விளக்குவதில் ஆற்றல் படைத்த
ப்ரவ்ட வசநை -கம்பீரமான தமது ஸ்ரீ ஸூக்திகளாலே
ஜயீ –உங்களை வெல்லுமவராய்க் கொண்டு
ஸமேத ஸிஷ்யவ்கை-தம்மைப் போன்ற சிஷ்ய ஸமூஹங்களோடு கூடியவராய்
அடதி வஸூதாம் –பூமியில் ஸஞ்சரிக்கிறார்
கதகா–வீண் வாதம் செய்யுமவர்களே
வேகாத்-விரைவாக
பலாயத்வம் க்வசந –எங்கேயாவது ஓடிப்போய் விடுங்கள்
காநந தலே –காட்டிடத்திலே
நிலீநா பூயாஸ்த –ஒளிந்து கொள்ளுங்கள்
ஆழ்வானை ஸிம்ஹமாகவும் -புறச் சமயிகளை மத யானைகளாகவும் உருவகம்
————–
ஸ்ருதி ஸ்ரேணீ ஸூடாய ஸமுஸல மாதாய ஸடஜித்
வஸஸ் ஸ்ரேணீ நித்ய அநுபவ நிரதோ ஜ்ரும்பித மத
ப்ரதாவந் நப்யேதி ப்ரதிகதக வாதாஹவ ருசிம்
நிருந்தந் கூரேஸ த்விரத ந்ருபதிர்ப்ரும் ஹிதரவை –26-
ஹே கதகா –ஓ வாதம் செய்யுமவர்களே
ஸடஜித் வஸஸ் ஸ்ரேணீ நித்ய அநுபவ நிரதோ -திருவாய் மொழி முதலிய ஸ்ரீ ஸூக்தி திரளை எப்போதும் அனுபவிப்பதில் மிகவும் விருப்பமுடையதாயும்
ஜ்ரும்பித மத–வளர்ந்த மதத்தை யுடையதாயும் இருக்கிற
கூரேஸ த்விரத ந்ருபதிர்–கூரத்தாழ்வானாகிய உயர்ந்த யானை
ஸ்ருதி ஸ்ரேணீ ஸூடா ஆயஸ முஸலம் -உபநிஷத்துக்களாகிய இரும்பு உலக்கையை
ஆதாய -எடுத்துக் கொண்டு
ப்ரும் ஹிதரவை –பிளிறல்களின் ஒலிகளாலே
ப்ரதிகதக வாத ஆஹவ ருசிம் –எதிர்வாதம் செய்பவர்களின் -வாதப்போரில் உண்டான ருசியை
நிருந்தந் –தடை செய்து கொண்டு
ப்ரதாவந் அப்யேதி –உங்களை நோக்கி ஓடி வருகிறது
எங்காவது ஓடி விடுங்கள் -காட்டில் ஒழிந்து கொள்ளுங்கள் -என்று முன் ஸ்லோகத்தில் உள்ளதை இங்கும் சேர்த்து கொள்ள வேண்டும்
கதகா -என்பதையும் அத்யாஹாரம்-கூட்டிக் கொள்ள வேண்டும்
கீழ் கலி மிக்க செந்நெல் –வலி மிக்க சீயம் போல் ஸிம்ஹம்
இங்கு பண் தரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மாதமாய் விண்டிட எங்கள் ராமானுஜ முனி வெள்ளம் மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழுந்தண்டம் ஏந்திக் குவலயத்தே மண்டி வந்தேன்றது வாத்தியார்கள் உங்கள் வாழ்வற்றதே -போல் மதயானையாக உருவகம்
அஸாரம் ஸம்ஸாரம் பஹுலதர துக்கா கரம் இமம்
விஸ்ருஜ்ய ஸ்ரீ மந்தம் பஜத விபுமாநந்தபரிதம்
உதாரஸ் ஸர்வேப்யோ விதரதி ஜநா ஸ்வேந ஸமதாம்
அஸாவித் யத்ரத் யாநுபதிஸதி கூராதிப குரு–27-
ஹே ஜநா –ஓ மக்களே
கூராதிப குரு –கூரத்தாழ்வானாகிய ஆச்சாரியர்
பஹுலதர துக்கா கரம்–மிகவும் அதிகமான துன்பங்களுக்குப் பிறப்பிடமானதும்
அஸாரம் -ஸாரமான ஆனந்தம் சிறிதும் இல்லாததுமான
ஸம்ஸாரம் இமம் இந்த உலக வாழ்க்கையை
விஸ்ருஜ்ய –அறவே விட்டுத் தொலைத்து
ஆநந்த பரிதம் –ஆனந்தம் நிறைந்தவனாய்
விபும் -எல்லாம் வல்லவனான
ஸ்ரீ மந்தம் –திருவின் மணாளனான திருமாலை
பஜத –அடையுங்கள்
உதாரஸ் அசவ் –கொடையாளியாகிய அத் திருமால் ஸர்வேப்யோ -இன்னார் இனையார் என்று பாராமல் தன்னை அடைந்த அனைவருக்கும்
ஸ்வேந ஸமதாம் –தன்னோடே ஒப்புமையை -சமானமான ஆனந்தத்தை
விதரதி –அளிக்கிறான்
இதி -என்று
அத்ர த்யாம் -இவ்வுலகில் உள்ள மக்களைக் குறித்து
உபதிஸதி–உபதேசிக்கிறார்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவாருக்குத் தம்மையே ஓக்க அருள் செய்வர் –பெரிய திருமொழி –11-3-5-
——————–
விரக்தா நாமக்ர்யோ விமல சரிதோ வைதிக வர
விநேதா ஆசாராணாம் விகத மத மோஹாதிம குண
அஸூயா நிர்முக்த ஸமதம முகாநந்த ஸூகுண
ஸதாஸ்ரோத்ரா நந்தம் கலயதி பரம் கூர ந்ருபதி –28-
விரக்தா நாம் –ஆசை யற்றவர்களில்
அக்ர்யோ –முதல்வரும்
விமல சரிதோ –குற்றமற்ற நடத்தை யுடையவரும்
வைதிக வர –வேதத்தைப் ப்ரமாணமாகக் கொள்பவர்களில் சிறந்தவரும்
ஆசாராணாம்-அவ்வேதத்தில் கூறப்பட்ட ஆசாரங்களை
விநேதா –சிஷ்யர்கள் அனுஷ்ட்டிக்கும் படி செய்பவரும்
விகத மத மோஹ ஆதிம குண –செருக்கு அறியாமை முதலான கெட்ட குணங்கள் இல்லாதவரும்
அஸூயா நிர்முக்த –பொறாமையினால் விடப்பட்டவரும்
ஸம தம முகாநந்த ஸூகுண –மனவடக்கம் புலன் அடக்கம் முதலிய எல்லையில்லாத நற் குணங்களை உடையவருமான
கூர ந்ருபதி –கூரத்தாழ்வான்
ஸதா-எப்போதும்
ஸ்ரோத்ரா நந்தம் -செவிக்கு இனிமையை
கலயதி பரம் –மிகவும் உண்டாக்குகிறார்
ஆசிநோதி ஹி ஸாஸ்த்ரார்தாந் ஆஸாரேஸ்தாப யத்யபி ஸ்வயம் ஆஸரதே ஸோ அபிதீயதே –ஆசார்ய லக்ஷணம்
————
யதீயோஷா பாத்ரம் பஜதி மநுஜ ப்ரேம பததாம்
பரம் பத்மா பர்த்து பதித ஐந ஸூடாமணிரபி
யதீயா ஸ்ரீ ஸூக்தி நிகில நிகமாந்தார்த்த விவ்ருதி
ஸ ஜீயாத் கூரேஸ ஸகல ஸூப ஸந்தாந ஸரணி –29-
யதீயோஷா பாத்ரம் –யாருடையதான பார்வைக்கு இலக்கான
மநுஜ-மனிதன்
பதித ஐந ஸூடாமணிரபி-ஜாதி ஆசாரங்களில் இருந்து நழுவி விழுந்தவர்களில் தலைவனாய் இருந்த போதிலும்
பரம் பத்மா பர்த்து–திருமகள் மணவாளனாகிய திருமாளுடைய
ப்ரேம பததாம் -அன்புக்கு இலக்காகும் தன்மையை
பஜதி -அடைகிறானோ
யதீயா ஸ்ரீ ஸூக்தி -யாருடையதான நல் வார்த்தையானது
நிகில நிகமாந்தார்த்த விவ்ருதி –எல்லா வேதாந்தப் பொருள்களுக்கும் விளக்க வுரை யாகிறதோ
ஸ -அந்த
ஸகல ஸூப ஸந்தாந ஸரணி –ஸகல மங்கள சமூஹத்திற்கும் வழியான -உபாயமான
ஸ ஜீயாத் கூரேஸ –கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குக
—————-
விஸூத்த ஜ்ஞாநாப்தி விகத மமகார ஸ்வ பரயோ
விநேதா ஸர்வேஷா மதி விமல போதஸ்ய விதுஷாப்
விஹர்த்தா ஸ்ரீ ரங்கி ப்ரிய தமயதீஸாந பதயோ
ப்ரஹர்த்தா அசவ்ம்யாநாம் பவதி பவிநாம் கூர ந்ருபதி –30-
கூர ந்ருபதி –கூரத்தாழ்வான்
விஸூத்த ஜ்ஞாநாப்தி –மிகத் தூய்மையான அறிவுக்கு கடலாகவும்
ஸ்வ பரயோ-தன்னிடத்திலும் பிற பொருள்கள் இடத்திலும்
விகத மமகார –யான் என்னுடையவன் இவை எல்லாம் எனது -என்று செருக்குக் கழியப் பெற்றவராகவும்
ஸர்வேஷாம் விதுஷாம் -அறிவுடையார் அனைவருக்கும்
அதி விமல போதஸ்ய –தமது அறிவைப் போன்றே மிகவும் நிர்மலமான -தூய்மையான அறிவை
விநேதா -நன்றாக அடைவிப்பராகவும்
ஸ்ரீ ரங்கி ப்ரிய தமயதீஸாந பதயோ-ஸ்ரீ ரெங்கநாதனுடைய அன்பிற்கு மிகவும் இலக்காகிய யதிராஜருடைய திருவடிகளில்
விஹர்த்தா -விளையாடுமவராகவும்
அசவ்ம்யாநாம்-முரடர்களான
பவிநாம்-ஸம்ஸாரிகளை
ப்ரஹர்த்தா பவதி –துன்புறுத்துமவராகவும் இருக்கிறார் –
————-
புராணா நாம்பும் ஸாம் ஸரணி மநுயந் தத்த்வ விவ்ருதவ்
ப்ரக்ருத் யாத்மேஸாநாம் பரமதபாஸ்யந் நந்ருததாம்
பரா குர்வந் தத்த்வ ப்ரமிதபதயோ ஜீவ தமஸோ
ஸமிந்தே கூரேஸ ஸ்ருதி ஸிகர ஸந்தாந ஸரணம் –31-
கூரேஸ–கூரத்தாழ்வான்
ப்ரக்ருத் யாத்மேஸாநாம்-மூல ப்ரக்ருதி ஜீவாத்மா பரமாத்மா என்ற மூன்றினுடையவும்
தத்த்வ விவ்ருதவ் -ஸத்யத்வத்தை விளக்குவதில்
புராணா நாம் பும் ஸாம் –பூர்வர்களான புருஷர்களுடைய
ஸரணி மநுயந் -வழியைப் பின் செல்லுமவராயும்
தத்த்வ ப்ரமிதபதயோ–உண்மைப் பொருள்கள் என்று வேதத்தின் மூலமாக அறியப்பட்ட பொருள்களாகிய
ஜீவ தமஸோ -ஜீவாத்மா மூலப்பிரக்ருதி என்ற இவற்றினுடைய
அந்ருததாம் –பொய்ப் பொருளாம் தன்மையை
பரா குர்வந் –மறுப்பவராய் -மறுப்பதில் வாயிலாக
பரமதம் –அத்வைத மதத்தை
அபாஸ்யந்–வெகு தூரத்தில் தள்ளுமவராயும்
ஸ்ருதி ஸிகர ஸந்தாந ஸரணம் — வேதாந்த வாக்ய ஸமூஹங்களை ரக்ஷிப்பவராய்க் கொண்டு
ஸமிந்தே –நன்றாக விளங்குகிறார்
பூர்வர்கள் -பராசர வ்யாஸ போதாய நாதி மஹரிஷிகள் என்ன -நம்மாழ்வார் நுதலிய ஆழ்வார்கள் என்ன -ஸ்ரீ மன் நாதமுனிகள் ஆளவந்தார் எம்பெருமானார் ஆகிய ஆசார்யர்கள் என்ன –தத்வத்ரயமும் நித்யம் ஸத்யம் என்ற வேதாந்த வாக்கியங்கள் அனைத்தையும் காப்பாற்றிக் கொண்டு விளங்குகிறார்
தத்த்வ ப்ரமித பதயோ –என்ற இடத்திலுள்ள பதம் -கால் இடம் வஸ்து
தமஸ் -தமோ குணத்தை அதிகமாகப் பெற்ற மூல பிரக்ருதியைச் சொன்னவாறு –
—————-
ஸ்வரூபாபி வ்யக்திம் ஸ்ருதி ஸிகர ஸித்தாமபித தத்
நிரூப்யாம் வ்ருத்த்யை வாகில தநு ப்ருதாம்தாம் ச கதயன்
ததீ யார்ச்சா ஸீமாம் ஸ்வயமபி விதன்வந் யதி பதே
அசேஷம் கைங்கர்யம் ஜயதி ஸூமதி கூர ந்ருபதி –32-
ஸூமதி கூர ந்ருபதி –நல்லறிவு படைத்த ஆழ்வான்
அகில தநு ப்ருதாம்–எல்லா ஸம்ஸாரி ஜீவர்களுடையவும்
ஸ்ருதி ஸிகர ஸித்தாம் –வேதாந்த ஸாஸ்த்ரத்தில் இருந்து தேறிய
ஸ்வரூபாபி வ்யக்திம் –இது வரையில் மறைத்து இருந்த ஸ்வரூபத்தை ப்ரகாசமான மோக்ஷத்தை
வ்ருத்த்யைவ –பகவத் கைங்கர்யத்தைக் கொண்டே
நிரூப்யாம்-அறுதியிடத் தக்கதாக
அபித தத் –கூறுமவராயும்
தாம் ச -அந்த வ்ருத்தியாகிய பகவத் கைங்கர்யத்தையும்
ததீ யார்ச்சா ஸீமாம் -பாகவத கைங்கர்யத்தைத் தனது எல்லையாக உடையதாக
கதயன்-சொல்லுமவராயும்
ஸ்வயமபி-தாமும்
யதி பதே -யதிராஜருடையதான
அசேஷம் கைங்கர்யம்-கைங்கர்யங்கள் அனைத்தையும்
விதன்வந் –பரக்கத் செய்பவராயும்
ஜயதி –மேம்ப்பட்டு விளங்குகிறார்
ஏஷ ஸம் ப்ரஸாத அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய் பரம் ஜ்யோதி உப ஸம் பத்ய ஸ்வேந ரூபேண அபி நிபத்யதே
அபஹத பாப்மா விஜர விம்ருத்யு விசோக விஜிகத்ஸ அபிபாஸ ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப —
யதிபதே-ஷஷ்ட்டி விபக்தி -யாதிபதிக்கு அபிமதமான பகவத் பாகவத கைங்கர்யங்கள் தம் கைங்கர்யம் ஆகிய மூன்றையும் நேராகவே குறிக்கும் என்றுமாம்
———
நிரா லம்பம் கௌதஸ் குதம ஸாரம் நிஜ வச
ப்ரபஞ்சை வேதாந்த ப்ரசுர பணி தார்த்தா நநுக தை
பரா குர்வன் ப்ரவ்ட ப்ரமிதி ஜநகைர் லஷ்மண முநே
பரிஷ் குர்வன் பாஷ்யம் ப்ரதயதி மதம் கூர ந்ருபதி –33-
கூர ந்ருபதி –கூரத்தாழ்வான்
வேதாந்த ப்ரசுர பணி தார்த்தாந் –உப நிஷத்துக்களில் ஒரு பொருளைப் பற்றிய பெரும்பாலான வாக்கியங்களின் அர்த்தங்களை
அநு கதை–பின்பற்றியவைகளும் -அதனால்
ப்ரவ்ட ப்ரமிதி ஜநகைர்–பரிபக்குவமான தெளிந்த அறிவை உண்டாக்குமவைகளுமான
நிஜ வச ப்ரபஞ்சை -தம்முடைய வார்த்தைகளின் பரப்பினால் -விளக்கமான பேச்சுக்களினால்
நிரா லம்பம் -ஆதாரம் ஏற்றதும்
அஸாரம்–ஸாரமான பொருள் அற்றதுமான
கௌதஸ் குத மதம் -ஏன் ஏன் என்று கேட்க்கும் -விதண்டா யுக்தி மாத்ர வாதிகளின் மதத்தை
பரா குர்வன் -மறுப்பவராயும்
லஷ்மண முநே -பகவத் ராமானுஜருடைய
பரிஷ் குர்வன் பாஷ்யம் -ஸ்ரீ பாஷ்யத்தைப் ப்ரகாசப்படுத்துமவராயும்
லஷ்மண முநே மதம் -ஸ்ரீ ராமானுஜ முனிவரின் மதத்தை
ப்ரதயதி -ப்ரஸித்தமாக்குகிறார் –
கிம் சாதன க்வ நிவசந் கிம் உபாதநாந
கஸ்மை பலாய ஸ்ருஜதீச இதம் சமஸ்தம்
இத்யாதி அநிஷ்டித குதர்க்கம் அதர்க்கயந்த
த்வத் வைபவம் சுருதி வித விது அப்ரதர்க்யம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்38-
பகவான் எதை சாதனமாகக் கொண்ட எவ்விடத்தில் இருந்து கொண்டு எப்பொருளை உதானமாகக் கொண்டு
எந்தப் பலனுக்காக இவ்வுலகங்களை எல்லாம் படைக்கிறான் -என்று இப்படி எல்லாம்
அமர்யாதமாகச் சிலர் செய்யும் குதர்க்கங்களைச் சிறிதும் பொருள் படுத்தாத வேதாந்திகள் –
எம்பெருமானே -தேவரீருடைய வைபவத்தை அப்ரமேயமாக அறிந்துள்ளார்கள்
யஸ் ஸர்வஞ்ஞஸ்
பரா அஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்
ஸ்வே மஹிம்நி ப்ரதி டித
க்ரீடதோ பாலகஸ்யேவ சேடாம் தஸ்ய நிசாமய -விஷ்ணு புராணம் -1-2-18-
—————
பிரவால ருசிராத ரஸ் புரித சாரு மந்த ஸ்மித
ப்ரகாமமது ராக்ஷரைரபி நவை ஸ்வ வாக் கும்பநை
ஸதாவ்ய வஹரந்கலா ஸமிதி ஸாத்த்வி காக்ரேஸராந்
தநோதி பஹு விஸ்மயாதி ஸய சித்ரிதாந் கூரப —34-
கூரப –கூரத்தாழ்வான்
பிரவால ருசிராத ரஸ் புரித சாரு மந்த ஸ்மித –பவழம் போல் அழகிய உதடுகளில் விளங்குகிற அழகான புன் சிரிப்பை உடையவராய்
ப்ரகாமமது ராக்ஷரைர் –மிகவும் இனிமையான எழுத்துக்களைக் கொண்டவர்களும்
அபி நவை –இதற்கு முன்பு கேட்டிராதவைகளுமான
ஸ்வ வாக் கும்பநை –தமது சொற்களின் சேர்க்கைகளால்
ஸமிதி–வாதப்போரில்(ஸமித் -யுத்தம் -இங்கு வாத யுத்தம்)
ஸதா–எப்போதும்
கலா -ஸாஸ்த்ர அர்த்தங்களை
வ்ய வஹரந்–தெரிவித்துக் கொண்டு
ஸாத்த்வி காக்ரேஸராந் -ஸத்வ குணம் படைத்தவர்களின் தலைவர்களை
பஹு விஸ்மயாதி ஸய சித்ரிதாந் –பலவகைப்பட்ட ஆஸ்சர்யங்களின் மிகுதியினால் சித்திரத்தில் எழுதப்பட்டவர் போல்
தநோதி –செய்கிறார்
திரண்டு எழு தழை மழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தால் ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா வெழுது சித்திரங்கள் போலே நின்றனவே -3-6-9- –
—————-
கதாஹவக்ருதோத் யமாந் கலிமலாநுலிப்தாஸயாந்
ததாக தமதாநுகாந் ததிதராந் த்விஷத்வாதி ந
முதாக்ருத பரிஸ்ரமாந் முகுலிதாத்மவாக் ஜ்ரும்பணாந்
விதாய விபுதஸ்துதோ ஜயதி கூர நாதோ குரு –-35-
கூர நாதோ குரு –கூர நாதர் என்னும் ஆச்சார்யர்
கலி மல அநுலிப்த ஆஸயாந்–காளியின் குற்றத்தினால் கெடுக்கப்பட்ட மனத்தை யுடையவர்களாய்
கத ஆஹவ க்ருதோத் யமாந் –வாதமாகிய போரிலே மூண்டவர்களான
ததாக தமதாநுகாந் –புத்தனுடைய மதத்தை பின்பற்றியவர்களையும் (ததாகத -புத்தன் )
ததிதராந் –அவர்களை விட வேறான
த்விஷத்வாதி ந –எதிரிகளாய் வாதம் செய்யுமவர்களையும்
முகுலிதாத்மவாக் ஜ்ரும்பணாந்-மூடப்பட்ட தமது பேச்சின் வளர்ச்சியை யுடையவர்களாயும்
முதாக்ருத பரிஸ்ரமாந் –பயன் அற்றதாகச் செய்யப்பட தமது உழைப்பை யுடையவர்களாகவும்
விதாய –செய்து
விபுத ஸ்துதோ ஜயதி -ஸாத்விக பண்டிதர்களால் ஸ்துதிக்கப்பட்டவராய்க் கொண்டு மேம்பட்டு விளங்குகிறார்-
——————-
நிராக்ருதது ரீஹிதை நிகம ஸார ஸந்தர்ஸிபி
நிரஸ்தது ரிதாலிபி நிகில ஸம்ஸயச் சேதி பிர்
நிதாந்த்தை மதுரைஸ் ஸூபை நிகில சவுக்ய ஸம்பாதகை
நிஜைர் வசந கும்பநை ஜயதி கூர நாதோ குரு –-36-
கூர நாதோ குரு –ஆழ்வானாகிய ஆச்சார்யர்
நிகம ஸார ஸந்தர்ஸிபி –வேதாந்தங்கள் ஸாரார்த்தங்களை அறிவிப்பனவும்
நிகில ஸம்ஸயச் சேதி பிர் –எல்லா சந்தேகங்களையும் அறுக்க வல்லனவும்
நிதாந்த்தை மதுரைஸ் –மிகவும் இனியனவாகவும்
ஸூபை –நன்மை பயப்பனவாகவும்
நிகில சவுக்ய ஸம்பாதகை –எல்லா விதமான சவுக்யத்தை உண்டாக்குவனவும்
நிராக்ருத துரீஹிதை –போக்கடிக்கப்பட்ட மாறுபட்ட கருத்துக்களை யுடையனவும்
நிரஸ்த துரிதாலிபி –மாறுபட்ட கருத்து உண்டாவதற்குக் காரணமான பாப ஸமூஹத்தைத் தூக்கி எறிவனவாவுமான
நிஜைர் –தம்முடைய
வசந கும்பநை –ஸ்ரீ ஸூக்திகளின் சேர்த்திகளால்
ஜயதி -வெற்றி பெறுகிறார்-
—————
கலிர் ஹதபவோ அபவத் கலுக்ஷ ஜாதமுந் மூலிதம்
தமஸ் ச ரஜஸா ஸமம் விலய மாப ஸத்த்வம் புந
ஸமேத் யுபசிதம் ந்ருணா முதயமேதி தீ வல்லரீ
மஹீதல முபாகதே மஹதி கூர நாதே குரவ்--37-
மஹதி கூர நாதே குரவ்–கூரத்தாழ்வானாகிற மஹாச்சார்யார்
மஹீதல முபாகதே –பூமியை அடைந்த அளவிலே
கலிர் ஹதபவோ –கலியுகமானது நாசம் செய்யப்பட உண்மையை யுடையதாக
அபவத்–ஆயிற்று –
எப்படி எனில்
கலுக்ஷ ஜாதம் –பாப ஸமூஹமானது
உந் மூலிதம் –வேரோடு களைந்து எறியப்பட்டது
தமஸ் ச ரஜஸா ஸமம் –தமோ குணம் ரஜோ குணத்தோடு
விலய மாப –அழிவை அடைந்தது
ஸத்த்வம் புந –ஸத்வ குணமோ என்னில்
ஸமேத் யுபசிதம் –வளர்ச்சியை மிகவும் அடைந்து கொண்டே இருக்கிறது
அதனால்
தீ வல்லரீ –அறிவு என்னும் கொடியானது
உதயமேதி –வளர்ச்சியை அடைகிறது
கலியும் கெடும் -கண்டு கொண்மின் –அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே நாயனாருக்கு ஆளாயினரே -க்ருதயுக தர்மமான ஸத்வ குணம் வளர்ந்து ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பெற்றனர்-
————-
தயாதி ஸூகுணா வலி தநுஜ வைரிணா ஸ்வாமிநா
நியாந்த்ரித நிஜாக்ருதி நிலயமேத்ய கூராதிபம்
ப்ரதி க்ஷண விஜ்ரும்பிதாக்ருதிரவாப்ய லஷ்யம் பரம்
ப்ரகாஸ மதி கச்சதி ப்ரதி ஹதாத்ம துலயாதிக–38-
தநுஜ வைரிணா–அஸூர ஸத்ருவான
ஸ்வாமிநா–எம்பெருமானாலே
நியாந்த்ரித நிஜாக்ருதி –குறைக்கப்பட தத் தம் வடிவுகளை யுடைய
தயாதி ஸூகுண ஆவலி –தயை முதலிய நற் குணங்களின் கூட்டமானது
நிலயமேத்ய கூராதிபம் –கூரத்தாழ்வானாகிற ஒளி விடத்தை அடைந்து
ப்ரதி க்ஷண விஜ்ரும்பித ஆக்ருதிர் –க்ஷணம் தோறும் வளர்ந்த தத்தம் வடிவுகளை யுடையதாய்
அவாப்ய லஷ்யம் பரம் –வளர்ச்சியில் உயர்ந்த குறிக்கோளை அடைந்து
ப்ரதி ஹதாத்ம துலயாதிக–தன்னோடு ஓத்ததும் மிக்கதுமான குணத்தொகுதி மற்று ஓன்று இல்லாதாய்க் கொண்டு
ப்ரகாஸ மதி கச்சதி –விளக்கத்தை அடைகிறது
தயாதி –ஆதி சப்தத்தால் வாத்சல்யம் ஸுசீல்யம் ஸுலப்யம் உதாரகுணம் போன்றவற்றையும் சொன்னவாறு-
————–
ஸ்ரீ யபதி உதாரதீ ஸ்ருதி கணைக கண்ட் யேடிதாம்
விஹாய பரமேஸதாம் புவி யதாத்மநா ஆசார்யதாம்
அவாப்து மவதீர்ய தத் ஸமுப லப்தயே ஸிஷ்ய தாம்
அவாப யதி பூபதே விஜயதாம் ஸ கூராதிப —39-
ஸ்ரீ யபதி உதாரதீ –உயர்ந்த திரு உள்ளம் கொண்ட ஸ்ரீ மந் நாராயணன்
ஸ்ருதி கணைக கண்ட் யேடிதாம் –வேத வாக்ய ஸமூஹத்தினால் ஒரு மிடறாக ஸ்தோத்ரம் செய்யப்பட
விஹாய பரமேஸதாம் –மிக உயர்ந்த ஸர்வேஸ்வரத் வத்தை விட்டு ஒழித்து
ஆசார்யதாம் அவாப்தும் –ஆச்சார்யத்வத்தை அடைவதற்காக
புவி யதாத்மநா வதீர்ய –பூமியில் யாருடைய வடிவுடையவனாக அவதரித்து
தத் ஸமுப லப்தயே -அவ்வாச்சர்யத்வத்தைப் பூர்ணமாகப் பெறுவதற்காக
யதி பூபதே -யதிராஜரான எம்பெருமானாருக்கு
ஸிஷ்ய தாம் –சிஷ்யராக தன்மையை
அவாப்ய –அடைந்தானோ
விஜயதாம் ஸ கூராதிப –அந்தக் கூரத்தாழ்வான் வெற்றி பெற்றிடுக-
————-
வஸோபிர் அந்ருதேதரை அகில ஜீவ ஜீவாதுபிர்
முமுஷு ஜநதாமுதே முரரிபோர் மஹா வைபவம்
ஸ பாஷப நயநம் ப்ருவந் ஸ புல கோத்கமம் ஸாதரம்
ஸமித்த மதுரஸ்மிதோ ஜயதி கூர ப்ருத்வீ பதி –40-
கூர ப்ருத்வீ பதி –கூரத்தாழ்வான்
அகில ஜீவ ஜீவாதுபிர் –எல்லா ஜனங்களுக்கும் ஜீவ ஒவ்ஷதமாய்
வஸோபிர் அந்ருதேதரை –பொய்யில்லாத-ஸத்யமான -வேத வாக்யங்களைக் கொண்டு -பொய்யில் பாடலான திருவாய் மொழி முதலியவற்றைக் கொண்டு
முரரிபோர்-முர அசுரனை அழித்த எம்பெருமானுடைய
மஹா வைபவம் –மிக உயர்ந்த பெருமையை
முமுஷு ஜநதாமுதே –முக்தி பெற விரும்பும் மக்களின் மகிழ்ச்சிக்காக
ஸ பாஷப நயநம் –கண்ணீர் பெருகும் கண்களோடும்
ஸ புல கோத்கமம் –மயிர் கூச் செறிதலோடும்
ஸமித்த மதுரஸ்மிதோ -மிக விளங்கிய இனிய புன் சிரிப்பை யுடையவராய்க் கொண்டு
ஸாதரம் –ப்ரீதியோடே
ப்ருவந் –பேசுமவராய்
ஜயதி –மேம்பட்டு விளங்குகிறார்-
————–
பவாக்ய மருமேதி நீவலந ஜாததாபாதுராந்
ஜநாந் ஹரி கதாம்ருதை மதுர ஸீதலைர் ஜீவயன்
ததீய பத ஸேக்ஷ தாதி யமபாரமுத்பாத யந்
விபாதி புவி கூரராட் விபுத சங்க ஸம்ஸேவித –41-
கூரராட்–கூரத்தாழ்வான்
பவாக்ய மருமேதி நீவலந ஜாத–ஸம்ஸாரம் என்று பெயர் பெற்ற பாலை நிலத்தில் ஸஞ்சரிப்பதனால் உண்டான்
தாப ஆதுராந் –தாபத்தினால் வருந்திய
ஜநாந் –மக்களை
மதுர ஸீதலைர் –இனியவனாய்க் குளிர்ந்தவையுமான
ஹரி கதாம்ருதை –பகவத் கதைகளாகிற அமுதப் பெருக்குகளால்
ஜீவயன் –பிழைப்பிப்பவராயும்
ததீய பத ஸேக்ஷ தாதி யம் –ஜீவாத்மாக்கள் அவ்வெம்பெருமான் அடியார்களுடைய அடியவர்களுடைய திருவடிகளுக்கு அடியவர்கள் என்னும் அறிவை
அபாரம் உத்பாத யந் –அதிகமாக உண்டாக்குமவராயும்
விபுத சங்க ஸம்ஸேவித –வித்வத் கோசடியினால் ஸேவிக்கப் பெற்றவராய்
விபாதி புவி –பூமியில் விளங்குகிறார்
அழகிய மணவாளன் திருவேங்கடமுடையான் பேர் அருளாள பெருமாள் மூவரும் தமது அடியரான திருப்பாண் ஆழ்வார் தொண்டைமான் சக்ரவர்த்தி எம்பெருமானார் ஆகிய மூவரையும் முன்பே தமக்கு அடியவராய் இருக்கிற லோக ஸாரங்க மா முனிகள் -குறும்பறுத்த நம்பிகள் -திருக்கச்சி நம்பிகள் என்னும் மூவருக்கும் அடியவைகளாக ஆக்கி இவ்வர்த்தம் காட்டி அருளினார்கள் அன்றோ-
————
அஸத்பிர் அநுபத்ருதாம் அநிதமாதி வாணீம் ஸதீம்
அனன்ய பத ஸம்ஸ்ரிதாம் ஹரி பதாநு ஷக்தாம் பரம்
ஜநார்தன பரத்வ தீ ஜநித பாவ பத்தாஸயை
வஸோபி ருபலாலயந் ஜயதி கூர நாதோ குரு –-42-
கூர நாதோ குரு –கூரேசர் என்றும் ஆசாரியர்
அநிதமாதி வாணீம் -இது தான் பிறந்த காலம் என்பது இல்லாத -அநாதியான -வேத வாக்கை
ஜநார்தன பரத்வ தீ ஜநித –எம்பெருமானையே பரம் பொருளாகக் கொண்டது வேதம் என்னும் அறிவினால் உண்டு பண்ணப்பட்ட
பாவ பத்த ஆஸயை –மனதில் ஊன்றிய கருத்தைத் தெரிவிக்கிற
வஸோபி–தமது ஸ்ரீ ஸூக்திகளினால்
ஸதீம் -பதி வ்ரதையாகவும்
அஸத்பிர் –அசத்துக்களான புறச் சமயிகளாலே
அநுபத்ருதாம்–தமக்குத் தோற்றிய படி எல்லாம் பொருள் சொல்லிக் கெடுக்கப் படாததாகவும்
அனன்ய பத ஸம்ஸ்ரிதாம் -மற்ற ஒரு தேவர்களின் காலில் குனியாததாகவும்
பரம்-மிகவும் மேம்பட்ட
ஹரி பதா அநு ஷக்தாம் –எம்பெருமான் திருவடிகளிலே ஆசை கொண்டதாகவும்
உபலாலயந் ஜயதி –உபதேசித்திக் கொண்டாடப்படுமவராய் மேம்பட்டு விளங்குகிறார்-
—————-
அநந்த குண மவ்க்திகை அகில சேதநா மோதகை
அநந்த நய ஸாகராத் ஸ்வயமுபாஹ்ருதைஸ் ஸோபநை
அநந்த பத ஸம்ஸ்ரிதாநபி விபூஷயன் ஸோபதே
ஹ்யநந்த குண ஸேவதிர் ஜயதி கூர நாதோ குரு –43-
அநந்த குண ஸேவதிர் –எல்லையில்லா நற் குணங்களுக்கு நிதியான
கூர நாதோ குரு –கூரத்தாழ்வானாகிய ஆசார்யர்
அநந்த நய ஸாகராத் –எல்லையில்லா ஸாஸ்திரங்களாகிய கடலில் இருந்து
ஸ்வயம் –தானாகவே
உபாஹ்ருதைஸ் –எடுக்கப்பட்டவைகளும்
அகில சேதந ஆமோதகை-மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஊட்டுவனவும்
ஸோபநை–நல்லவைகளுமான
அநந்த –நற் குணம் நிறைந்த எம்பெருமானுடைய
குண மவ்க்திகை –நற் குணங்களாகிய முத்துக்களினாலே
அநந்த பத ஸம்ஸ்ரிதாந் –எம்பெருமான் திருவடிகளை பற்றிய பக்தர்களை
அபி விபூஷயன் ஸோபதே ஹ்யஜயதி – –நன்றாக அலங்கரிப்பவராய்க் கொண்டு பிரகாசித்து விளங்குகிறார்-
———————–
அவாங் மநஸ கோசர அமல தயா குணைகாஸ் பதம்
குலாதி மத தூஷிதோத்த ரண பத்த தீக்ஷ ஸ்வயம்
யதீஸ்வர மகா பஹம் நிகில தேஹிநாம் தர்சயந்
விலக்ஷண ஜநாஸ்ரிதோ ஜயதி கூர நாதோ குரு –-44-
அவாங் மநஸ கோசர அமல தயா குண ஏகாஸ் பதம் –வாக்குக்கும் மனஸ்ஸூக்கும் எட்டாத குற்றமற்ற தயையாகிய குணத்துக்கு ஒரே கொள் காலமாகிய
கூர நாதோ குரு –ஆழ்வான் என்னும் ஆச்சார்யர்
ஸ்வயம்-தாமாகவே -யாரும் வேண்டாமல் –
குலாதி மத தூஷிதோத்த ரண பத்த தீக்ஷ –நற் குலப்பிறப்பு முதலியவற்றால் உண்டான செருக்கினால் கெடுக்கப் பட்டவர்களை ,மோக்ஷம் அடைவிப்பதில் விரதம் பூண்டவராய்
நிகில தேஹிநாம் –எல்லா மக்களுக்கும்
யதீஸ்வரம் –யதிராஜரான எம்பெருமானாரை
அகா பஹம் –பாபம் போக்கி மோக்ஷம் அடைவிப்பராக -உத்தாரக ஆச்சார்யராக
தர்சயந் –காட்டுமவராய்க் கொண்டு
விலக்ஷண ஜநாஸ்ரிதோ ஜயதி –உயர்ந்த ஜனங்களால் அடையப்பட்டு மேம்பட்டு விளங்குகிறார் –
தயா குண ஏக ஆஸ்பதம் என்பதால் ஆழ்வானுடைய தயை எம்பெருமானுடைய தயையைக் காட்டிலும் மேம்பட்டது என்றவாறு-
———
யதீஸிதுரதீ ஸதாம ஸஹதோ அபி ரங்க அம்ருதாத்
ஸ்வகைஸ் ஸம முகை குண ஸ்வபத ஸிஷ்யதாமே யுஷா
குரோஸ் ஸமுபலப் தயா நிகில யாபி ரங்கஸ்ரியா
யதீஸமபி நந்த யந் ஜயதி கூர நாதோ குரு –45-
கூர நாதோ குரு –கூரத்தாழ்வானாகிய ஆசார்யர்
யதீஸிதுர் –யதிராஜரான எம்பெருமானுடைய
அதீ ஸதாமபி -மஹா ஆசார்யத்வத்தையும்
அஸஹதோ -பொறுக்காதவராய்
ஸ்வகைஸ் ஸம முகை குண –தம்முடையவையான சாந்தி முதலிய குணங்களினாலே
ஸ்வபத ஸிஷ்யதாம் –தம் திருவடிகளில் சிஷ்யராய் இருத்தலை
ஏயுஷ-அடைந்தவருமான
ராங்க அம்ருதாத் குரோஸ் –திருவரங்கத்து அமுதனார் என்ற ஆசார்யரிடம் இருந்து
ஸமுபலப் தயா -பெறப்பட்ட
நிகில யாபி ரங்கஸ்ரியா –ஸமஸ்த மான ஸ்ரீ ரெங்க ஐஸ்வர்யத்தாலும்
யதீஸம் -எம்பெருமானாரை
அபி நந்த யந் ஜயதி –மிகவும் மகிழ்விப்பவராய் விளங்குகிறார்
தென் அரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே -ஆர்த்தி பிரபந்தம் -31
குரும் பிரகாசயேத் தீ மான் –அமுத்தனாரைத் திருத்தி எம்பெருமானாருக்கு ஆளாக்கி பிரபன்ன காயத்ரியையும் அருளிச் செய்ய அருளினை பெருமை
ஆக 28 ஸ்லோகம் தொடங்கி இது வரை 18 ஸ்லோகன்களால் ஆழ்வானுடைய பெருமைகளை அருளிச் செய்தார் ஆயிற்று-
————
அநர்க விபுலாம் ஸூவ ஸூலஸ தூரத்வ புண்ட்ரங்கித
ஸரோஜ துளஸீ மணி ப்ரசுர மாலிகா லங்க்ருத
கிரீட கடகாதிபிர் விவித பூஷணைர் பூஷித
ஸமா வஹதி கூர ராட் அகில லோக நேத்ரோத்ஸ வம் –47-
அநர்க விபுல அம் ஸூவ –விலை மதிப்பில்லாத பெரிய திருப்பரிவட்டங்களை அணிந்தவரும்
ஸூலஸ தூரத்வ புண்ட்ரங்கித –பளிச்சு என்று விளங்குகிற திருமண் காப்புக்களால் உண்டான ஸ்ரீ வைஷ்ணவ குறியை யுடையவரும்
ஸரோஜ துளஸீ மணி ப்ரசுர மாலிகா லங்க்ருத –தாமரை மணி துளஸீ மணிகள் நிறைந்த மாலைகளால் அலங்கரிக்கப் பட்டவரும்
கிரீட கடகாதிபிர் கிரீடம் காப்பு முதலிய
விவித பூஷணைர் பூஷித –பல வகையான திரு ஆபரணங்களால் பூஷிக்கப் பட்டவருயுமாய்க் கொண்டு
கூர ராட் –கூரத்தாழ்வான்
அகில லோக நேத்ரோத்ஸ வம் –மக்கள் அனைவரின் கண்களுக்கு ஸந்தோஷத்தை
ஸமாவஹதி –உண்டாக்குகிறார்
இது முதல் மேல் ஐந்து ஸ்லோகன்களால் அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹ அனுபவமும் திருத் தை திரு ஹஸ்த அவதார உத்ஸவ மகிமையையும் அருளிச் செய்து ஸ்தோத்ரத்தைத் தலைக்கட்டி அருளுகிறார்-
—————-
மஹார்க மகுடோஜ்வல ஸ்புரது தாரீ ஹாராவலி
விலோல மணி குண்ட லோல் லஸித பீந கண்டஸ்தல
விசித்ர குஸூமா வலீ கலித திவ்ய மால் யாஞ்சித
விபாத மது ராக்ருதி ஜயதி கூரராட் தேஸிக –47–
விபாத மது ராக்ருதி -மிக விளங்குகிற –காண்பதற்கு இனிய திரு மேனியை உடையவரான
கூரராட் தேஸிக –கூரத்தாழ்வான் என்னும் ஆச்சார்யர்
மஹார்க மகுடோஜ்வல –பெரு விலையனான திரு அபிஷேகத்தினால் விளங்குமவராகவும்
ஸ்புரத் உ தாரீ ஹார ஆவலி –மின்னுகின்ற பெரிய முத்து மாலைகளின் வரிசைகளை அணிந்தவரும்
விலோல மணி குண்டல உல் லஸித பீந கண்டஸ்தல –அசைகின்ற ரத்ந குண்டலங்களாலே ஒளி வீசப் பெற்ற பருத்த கன்னங்களை யுடையவராகவும்
விசித்ர குஸூமா வலீ கலித திவ்ய மால் யாஞ்சித -பல நிறமுள்ள மலர்த் தொகுதிகளால் தொடுக்கப் பட்ட மாலைகளினால் அலங்கரிக்கப் பற்றவராகவும்
ஜயதி -மேம்பட்டு விளங்குகிறார்-
———————–
உபாருடே பாநாவுதய மதி ருஹ்யாநு திவஸம்
விசித்ரா மாந்தோ லீம் விவித மணிபிர் காஞ்சந மயீம்
அலங்குர்வந் வீதீ அநு பத க்ருதா கல்ப ஸூபகா
ஸமிந்தே கூரேஸோ மகர மஹ காலே அதிருசிர –48-
கூரேஸோ–கூரத்தாழ்வான்
மகர மஹ காலே–தைமாத உத்ஸவ சமயத்தில்
யநு திவஸம் -ஒவ்வொரு நாளும்
உபாருடே பாநாவுதய -ஸூர்யன் உதயத்தை அடைந்த அளவில்
விவித மணிபிர்–பலவகையான ரத்னங்களால்
விசித்ராம் –பல வர்ணங்களை யுடையதான
காஞ்சந மயீம் -ஸ்வர்ண மயமான
ஆந்தோ லீம் –திருப் பல்லக்கை
அதிருஹ்ய –ஏறி வீற்று இருந்து
அதிருசிர –முற் கூறிய இருவகை அழகுகளும் மிகப்பெற்றவராய்
அநு பத க்ருத ஆகல்ப ஸூபகா –அடி தோறும் செய்யப்பட கோலம் வாழை மரம் பாக்குமரம் மாலிலைத் தோரணம் முதலிய அலங்காரங்களால் அழகு பெற்று இருக்கிற
வீதீ-திரு வீதிகளை தமது புறப்பாட்டினால்
அலங்குர்வந் ஸமிந்தே –அலங்கரித்துக் கொண்டு மிகவும் பிரகாசிக்கிறார்
———————–
ஸமாஸ்தாய ஸ்ரீ மாந் நிஸி புஜா போக்ய மதுலம்
மஹாயாநம் ப்ரஹ்ம ப்ரபமகில பூஷாஞ்சிததநு
த்ரயீ காதா ஸக்தைர் நிபிட ஸவிதோ வைஷ்ணவ வரை
சரந் ஸ்ரீ வத்சாங்கே ஜயதி விஸிகாம் கூர நகரே –-49-ஸ்ரீ மாந் ஸ்ரீ வத்சாங்கே–திருவாளரான கூரத்தாழ்வான்
கூர நகரே –கூரம் என்னும் நகரத்தில்
நிஸி நிஸி–இரவுகள் தோறும்
ஸமாஸ்தாய புஜா போக்ய மதுலம்
அகில பூஷா அஞ்சிததநு –ஸமஸ்த ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பட்ட திருமேனியை யுடையவராய்
ப்ரஹ்ம ப்ரபம் -ப்ரஹ்ம தேஜஸ்ஸை உடையதும்
அதுலம் -நிகரற்றதும்
புஜா போக்யம் மஹாயாநம் –தோளுக்கு இனியான் என்ற பெரிய வாஹனத்தை
ஸமாஸ்தாய –ஏறி வீற்றிருந்து
த்ரயீ காதா ஸக்தைர் –ருக் யஜுஸ் ஸாம வேதங்களைப் பாடுவதில் ஊற்றமுள்ள
வைஷ்ணவ வரை –ஸ்ரீ வைஷ்ணவ உத்தமர்களாலே
நிபிட ஸவிதோ –நெருக்கமுடைய ஸமீப ப்ரதேசத்தை யுடையராய்க் கொண்டு
சரந் ஜயதி விஸிகாம் –பெரிய தெருவில் எழுந்து அருளுமவராய் விளங்குகிறார் –
மஹா யாநம் -புஜா போக்யம் -இரண்டையும் சேர்த்து பெரிய தோளுக்கு இனியான் –மங்கள கிரி என்றுமாம்-
————
ஸதாம் பூலைந்தை குஸூம ஸஹிதை க்ஷய நிவஹை
குடாந் நாத்யை ரந்நைரபி நிஜ மஹாஸ்வாதா மஹிதை
க்ருதார்த்தா நாதந்வந் நிகில மநுஜாந் கூர ந்ருபதி
ஸ்வ ஜந்மர்ஷே ஹஸ்தே மகர மஹ காலே விஜயதாம்--50-
கூர ந்ருபதி–கூரத்தாழ்வான்
மகர மஹ காலே-தைமாத யுத்ஸவ சமயத்தில்
ஸ்வ ஜந்மர்ஷே –தமது திரு அவதார நக்ஷத்திரமான
ஹஸ்தே –ஹஸ்தத்திலே
நிஜ மஹாஸ்வாதா மஹிதை –தாம் அனுபவித்துச் சிறப்பிக்கப் பட்டவைகளான
ஸதாம் பூலை-வெற்றிலை பாக்குக்களோடு கூடியவைகளும்
குஸூம ஸஹிதை–புஷபங்களோடு கூடியவைகளுமான
கந்தை –சந்தனங்களாலும்
குடாந் ந ஆத்யை–சக்கரைப்பொங்கல் முதலான
அந்நைரபி –ப்ரஸாதங்களாலும்
பஷ்ய நிவஹை –பஷண ஸமூஹங்களாலும்
நிகில மநுஜாந் -மக்கள் அனைவரையும்
க்ருதார்த்தாந் ஆதந்வந் –தன்யர்களாக ஆக்குமவராய்க் கொண்டு
விஜயதாம்-வெற்றி பெற்று வாழ்க
ஜய ஜய -என்று முதலில் செய்த மங்களா ஸாஸனத்தை விஜயதாம் என்று நிகமித்து அருளிச் செய்கிறார்
————–
ஸ்ரீ மதா ஸூத்த ஸத்வேந தொட்டார்யேண மஹாத்மநா
பஞ்சாஸத் கூர நாதஸ்ய ஸ்தோத்ர மீரிதம் உத்தமம்
ஸூத்த ஸத்வேந–ஸூத்த ஸத்த்வம் என்று கூறப்படும் வம்சத்தில் தோன்றியவராய்
மஹாத்மநா -பரந்த மனம் படைத்தவராய்
ஸ்ரீ மதா தொட்டார்யேண –ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யால் நிறைந்தவருமான தொட்டாச்சார்யராலே
கூர நாதஸ்ய–கூரத்தாழ்வான் விஷயமான
பஞ்சாஸத் ஸ்தோத்ர மீரிதம் உத்தமம் –50 ஸ்லோகங்களைக் கொண்ட மிக உயர்ந்த ஸ்தோத்ரமானது விண்ணப்பிக்கப்பட்டது
கன்னட மொழியில் தொட்ட -என்பது பெரிய என்னும் பொருள் யுடையது
—————————————–
ஸ்ரீ பகவத் கீதா, அத்யாயம் 13, ஸ்லோகம் 7 – 11
அமானித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் ।
ஆசார்யோபாஸனம் சௌசம் ஸ்தைர்யமாத்மவினிக்ரஹ: ॥
இந்த்ரியார்த்தேஷு வைராக்யம் அநஹங்கார ஏவ ச ।
ஜன்மம்ருத்யுஜராவ்யாதிதுக்க தோஷானுதர்ஸனம் ॥
அஸக்திர் அநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு ।
நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டானிஷ்டேபபத்திஷு ॥
மயி சாநந்யயோகேன பக்திர் அவ்யபிச்ஹாரிணி ।
விவிக்ததேசசேவித்வம் அரதிர்ஜனஸம்ஸதி ॥
அத்யாத்மஞானநித்யத்வம் தத்த்வஞானார்த்த தர்ஸனம் ।
ஏதத் ஞானம் இதி ப்ரோக்தமஜ்ஞானம் யததோந்யதா ॥
- அமானித்வம் – பணிவு
- இவர் உயர்ந்த மற்றும் பணக்காரக் குடும்பத்தில் அவதரித்திருந்தாலும் கூட, ஸ்ரீரங்கத்திற்குச் சென்று எம்பெருமானாருக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்பதற்காக இவர் இவை அனைத்தயும் கைவிட்டார்.
- முன்பொருகாலத்தில் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார், தீமைகள் செய்வோரிடமிருந்து கோயிலைக் காப்பாற்றுவதற்காக அதைச் சுற்றி மந்திதிரிக்கப்பட்ட மணலைத் தூவுமாறு பெரிய நம்பியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பெரிய நம்பி அவருடன் யாரேனும் ஒருவர் வரவேண்டும் என்று கேட்டார் – ஆனால் அவர் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் – மேலும் ஏன் நான் மற்றொருவர் பின்னால் நடக்க வேண்டும் என்று அவர் ஒரு கணம் கூட நினைக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். ஒரு நிமிடம் எம்பெருமானார் இதைச் சிந்தித்து, தன்னுடைய சிஷ்யர்களைப் பார்க்கும் பொழுது, “கூரத்தாழ்வானை அனுப்பும், ஏனென்றால் அவரைவிட மிகவும் எளிமையாக யவரும் இருக்க முடியாது” என்று பெரிய நம்பியே கூறிவிட்டார்.
- அதம்பித்வம் – செறுக்கின்மை
- போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை (ப்ரஹ்ம சூத்திரத்தினுடைய சுருக்கமான வ்யாக்யானம்) மீட்டெடுக்க எம்பெருமானாருடன் இவர் சென்று, அந்த க்ரந்தத்தை மீட்டெடுத்துத் திரும்பினார்கள். அந்த நேரத்தில் எம்பெருமானாரைப் பிடிக்காத ஒரு சிலர் (அங்கு இருக்கும் உள்ளூர் பண்டிதர்கள்) சில வீரர்களை அனுப்பி அந்த க்ரந்தத்தை மீண்டும் அவரிடமிருந்து பறித்து விட்டார்கள். அப்பொழுது எம்பெருமானார் அதிர்ச்சியுடன், மிகுந்த வருத்ததிலும் இருந்தபோது, கூரத்தாழ்வான் எம்பெருமானாரிடம் “தேவரீருக்குக் கைங்கர்யத்தை முடித்துவிட்டு, இரவு நேரத்தில் அந்த க்ரந்தம் முழுவதையும் மனனம் செய்துவிட்டேன்” என்றுகூறினார். அந்த நேரத்திலும் கூட அவர் சிறு துளி அளவும் செறுக்கைக் காட்டவில்லை.
- அஹிம்ஸா – வன்முறையின்மை
- ஒரு பாம்பு, தவளையை உண்ணும் போது தவளை அழும் சப்தத்தை ஆழ்வான் கேட்டார். உடனே அவரும் வருத்தப்பட்டு அழுது பின்பு மயக்கம் அடைந்தார். இதன் மூலம் இவர் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு வைத்திருந்தது தெரிகிறது. அயோத்தி மக்கள் யவரேனும் ஒருவருக்கு ஏதாவது தீங்கு நடந்தால், பாதிக்கப்பட்ட நபர் வருந்துவதற்கு முன் ஸ்ரீராமர் மிகவும் வருந்தி அழுவார். அதேபோல், யவரேனும் ஒருவருக்கு ஏதாவது நன்மை நடந்தால், அந்த நபர் சந்தோஷப்படுவதற்கு முன் ஸ்ரீராமன் மிகவும் சந்தோஷப்படுவார். இவ்வாறு வால்மீகி ராமாணத்தில் கூறிய படி இருப்பதால், இவர் ஸ்ரீராமருடைய அவதாரமாகக் கருதப்படுகிறார்.
- க்ஷாந்திர் – சகிப்புத்தன்மை
- எம்பெருமானார், ஸ்ரீபகவத் கீதா சரமச்லோகத்தின் (சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்…..) அர்த்தத்தை, திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கற்றுக்கொண்டார். கடினமான சோதனைகளுக்கு பிறகு தான் இந்த அர்த்தத்தை தனது சிஷ்யர்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்று ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானாருக்கு அறிவுறுத்தினார். கூரத்தாழ்வான் இந்த அர்த்த விசேஷத்தை உபதேசிக்குமாறு கேட்ட பொழுது, எம்பெருமானார் நம்பி கூறியதைக் கூறினார். அதற்கு ஆழ்வான் 1 மாத காலம் மடத்து வாசலில் உபவாசம் இருந்தார். இறுதியில் சரம ச்லோகார்த்தத்தை எம்பெருமானாரிடம் பெற்றுக் கொண்டார்.
- இவர் நாலூரானை க்ஷமித்து, அவனுக்கும் (இவர் சைவ ராஜா சபையில் தன் கண்களை இழக்க ஒரு காரணமாக இருந்தவன்) மோக்ஷம் கொடுக்குமாறு கேட்டார்.
- ஆர்ஜவம் – நேர்மை
- ஆழ்வான், திருவரங்கத்தமுதனாருக்கு பகவத் விஷயம் உபதேசித்த பிறகு, அமுதனார் இவரிடம் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும் படி கேட்ட பொழுது, அதற்கு “எம்பெருமானார் திருவடிகளையே சார்ந்து இரும்” என்று ஆழ்வான் கூறினார்.
- பிள்ளைப் பிள்ளை ஆழ்வானை திருத்திய பிறகு, அவரையும் எம்பெருமானாரையே சார்ந்து இருக்குமாறு கூறினார்.
- ஆசார்ய-உபாஸனம் – எப்பொழுதும் ஆசார்யரையே சார்ந்திருப்பது
- எம்பெருமானார் தனது திருவடிகளை திருவரங்கத்தில் இருக்கும் வாய் பேசமுடியாத (ஊமை) மற்றும் காது கேட்காத (செவிடு) ஒருவனுடைய தலையில் வைத்தார். இதைப் பார்த்த கூரத்தாழ்வான் மிகவும் வருந்தி அழுதார். ஏனென்றால் “ஸ்வாசர்யரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை தலையில் பெறுவதை ஒப்பிடும்போது வேதாந்தங்களை கற்றுத் தேர்ந்து என்ன பயன்?”. “த்ருணி க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதய: ராமானுஜ பதாம்போஜ ஸமாச்ரயண சாலின:” – இந்த ச்லோகத்தினுடைய அர்த்தமும் அதே பொருளைக் குறிக்கிறது.
- சௌசம் – தூய்மை – அகத் தூய்மை மற்றும் புறத் தூய்மை
இப்பேர்ப்பட்ட ஆசார்யன் நிச்சயமாக புறத் தூய்மையுடன் தான் இருப்பார் என்று வெளிப்படையாக தெரிகிறது. மேலே அவருடைய அகம் எப்படி தூய்மையாக உள்ளது என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.
- சைவ ராஜவினுடைய செயல்களினால் எம்பெருமானார் திருவரங்கத்தை விட்டு மேல்கோட்டைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் ஆழ்வான் திருவரங்கத்திலேயே வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவர் கோயிலுக்குச் செல்லும் போது, ஒரு காவலாளி அவரைத் தடுத்து “எம்பெருமானருடைய சம்பந்திகள் யவரேனும் வந்தால் கோயிலினுள் அனுமதிக்கக் கூடாது என்று அரசனின் ஆணை” என்று கூறினார். அதற்கு மற்றொரு காவலாளி “கூரத்தாழ்வான் மிகவும் நல்ல குணங்களுடன் கூடியவர். ஆதலால் நாம் அவரை உள்ளே விடவேண்டும்” என்று கூறினார். அதற்குக் கூரத்தாழ்வான் “என்னிடம் ஏதேனும் நல்ல குணங்கள் இருந்தால் அது எம்பெருமானாருடைய சம்பந்தத்தினாலேயே வந்தது” என்று கூறி கோயிலுக்குள் நுழையாமலேயே சென்று விட்டார். யாரேனும் இவரைத் தனித்து நல்லவர் என்று கருதினால், ஸ்ரீரங்கநாதனை சேவிப்பதற்காகக் கூட அதை அவர் ஒப்புக் கொள்வதில்லை. இந்த அளவுக்கு அவருடைய மனம் தூய்மையாக இருந்தது.
- ஸ்தைர்யம் – மன உறுதி
- “ஏன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் தேவதாந்தரங்களை வணங்குவதில்லை?” என்று சில பக்தர்கள் கேட்டபொழுது, “நமது முன்னோர்கள் (பூர்வாசாரியர்கள் – வேதங்களை நன்றாக அறிந்தவர்கள்) அதைச் செய்ததில்லை, அதனால் நாங்களும் செய்வதில்லை” என்று கூரத்தாழ்வான் கூறினார். இப்படி நமது பூர்வாசாரியர்கள் மீது இவர் ஸ்திரமான மனமும், நம்பிக்கையும் வைத்திருந்தார்.
- ஆத்ம-வினிக்ரஹ: – சுய கட்டுப்பாடு (வைராக்யம்)
- அவருடைய திருக்குமாரர்களுக்கு திருமணமாகும் வயது வந்தவுடன் (யுவா பருவம்) அவருடய தர்ம பத்னி மற்றும் பலரும், தகுந்த மணப்பெண் பார்க்குமாறு கேட்டபொழுது, “ஈச்வர குடும்பதுக்கு நாம் யார் கரைவது?” என்று கூரத்தாழ்வான் கூறினார். அதாவது “பகவானுடைய குடும்பத்திற்கு நான் ஏன் கவலைப்படவேண்டும்? இது ஸ்ரீரங்கனாதனுடைய கடமை” என்று கூறினார்.
- எம்பெருமானார் கூரத்தாழ்வானை தேவப்பெருமாளிடம் ஸ்தோத்ரம் செய்து கண்களை அவரிடம் வேண்டுமாறு நியமித்த பொழுது, கூரத்தாழ்வான் அவரிடம், அவருக்கும் நாலூரனுக்கும் (அவருடைய கண்களை இழக்கக் காரணமாக இருந்தவன்) மோக்ஷம் கேட்டார்.
- இந்த்ரிய-அர்த்தேஷு வைராக்யம் – புலன்களின் ஆசையை துறத்தல்
- திருவரங்கத்து அமுதனார் தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் (தங்கம் மற்றும் பல) ஆழ்வானிடம் கொடுத்த பொழுது, கூரத்தாழ்வான் அனைத்தயும் தெருவிலே விட்டெறிந்து விட்டு, எம்பெருமானாரிடம் “தான் அனைத்து தேவையற்ற சுமைகளையும் கைவிட்டேன்” என்று கூறினார்.
- அனஹங்கார – தற்பெருமை கொள்ளாமல் இருத்தல்
- மிகச்சிறந்த ஞானியாகவும், மிகுந்த செல்வந்தராக இருந்தலும் கூட, கூரத்தாழ்வான் ஸ்ரீபாஷ்யம் எழுதும் போது, ஒரு நேரத்தில் எம்பெருமானாருக்கு கூரத்தாழ்வான் மீது வருத்தம் ஏற்பட்டது. அதற்கு ஆழ்வான் “எம்பெருமானார் என் ஸ்வாமி, நான் அவருக்கு தாசன். ஆதனால் அவர் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினார்.
- ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-துக்க-தோஷானுதர்ஸனம் – எப்பொழுதும் இந்த சம்சாரத்தில் உள்ள கஷ்டத்தை பார்பது
- ஒருமுறை யாரோ ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற விஷயத்தை கேட்டவுடன், கூரத்தாழ்வான் ரங்கநாதர் திருமுன்பே சென்று அழுதார். ஏன்? என்று சிலர் கேட்டதற்கு, “யவரேனும் ஒருவர் இந்த சம்சாரம் என்கிற சிறையில் பிறக்கும் போது, இந்த சம்சாரதிலிருந்து யாரால் விடுவிக்க முடியுமோ அவரிடம் சென்று நாம் அழவேண்டும். ரங்கநாதர் மட்டுமே நாம் அனைவரையும் இந்த சம்சாரத்திலிருந்து விடுவிக்க முடியும் என்பதால் தான், நான் அவரிடம் சென்று இந்த குழந்தை பிறந்ததற்காக அழுதுவிட்டு வந்தேன்” என்று கூறினார்.
- அஸக்திர் – பற்றின்மை
- எம்பெருமானாருடைய திருவடி சம்பந்தத்தை பெறுவதற்காகக் காடு வழியே ஆழ்வானும், ஆண்டாளும் ஸ்ரீரங்கத்திற்குச் செல்லும் போது, ஆழ்வானுடைய தர்மபத்னி ஆண்டாள் மிகவும் பயத்துடன் காணப்பட்டார். ஏன் பயம் என்று ஆழ்வான் கேட்டபொழுது, தேவரீர் அமுது செய்ய உபயோகப்படுத்தும் தங்கப் பாத்திரத்தைக் கொண்டு வந்ததாகக் கூறினார். உடனே அதை வாங்கித் தூக்கி எறிந்துவிட்டு, ரங்கநாதரும், எம்பெருமானாரும் இருக்கும்பொழுது இந்தப் பாதிரத்தால் என்ன பயன் என்று கேட்டார். இதன் மூலம் ஆழ்வானுக்கு சிறிதளவும் கூட எந்தப் பொருளிலும் ஆசை இல்லை என்று நன்றாகத் தெரிகிறது.
- புத்ரதாரக்ருஹாதிஷு அனபிஷ்வங்க: – குழந்தை, மனைவி , வீடு மற்றும் பல விஷயங்களில் பற்றில்லாமல் இருத்தல்
- அவர் அனைத்து சொத்தையும் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், அவர் ஸ்ரீரங்கம் சென்று உஞ்சவ்ருத்தி (பிக்ஷை) செய்து தான் வாழ்ந்து வந்தார். தனக்கென்று ஒரு குடும்பம் இருந்த பொழுதிலும், இவர் சாஸ்திரத்தை கண்டிப்பாக பின்பற்றி வந்தார்.
- ஒரு நாள் இவர் தனது சிஷ்யர்களுக்கு ரஹஸ்யத்ரய (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) காலக்ஷேபம் சாதித்துக் கொண்டிருக்கும் பொழுது, முதலில் அவருடைய குழந்தைகளை அந்த இடத்தை விட்டுச் செல்லச் சொன்னார். ஆனால் பின்னர் அவர்களை அழைத்து விசேஷார்த்தங்களைக் (உட்கருத்துக்களை) கூறினார். ஏன் என்று கேட்டபொழுது “யாருக்குத் தெரியும் இவர்கள் எவ்வளவு நாட்கள் இருப்பர்கள் என்று. இவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன் தங்களுடைய உயிரை இழந்து விடலாம், அதனால் தான் அவர்களுக்கு இதைக் கற்றுக் கொடுத்தேன்” என்று கூறினார். இது இவர் தன் குழந்தைகள் மீது உள்ள பற்றினால் அல்ல, அவர்களையும் ஒரு ஆத்மாவாகப் பார்த்து, அவர்களும் உண்மையான அறிவைப் பெற வேண்டும் என்றும், அவர்களும் இந்த சம்சாரதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகச் செய்தார் என்பதை மிகத் தெளிவாக் காட்டுகிறது.
- இவர் தனது தர்மபத்னியுடன் உடல் சம்பந்தம் வைத்துகொண்டதில்லை என்றும், இவருடைய குழந்தைகள் (பராசர பட்டர் மற்றும் வேதவ்யாச பட்டர்) ஸ்ரீரங்கநாதனுடைய கடாக்ஷத்தினாலேயே அதாவது அவருடைய அரவணைப் பிரசாதத்தினாலேயே அவதரித்தனர் என்றும் கூறுவர்கள்.
- இஷ்ட அனிஷ்ட உபபத்திஷு நித்யம் ச ஸமசித்தத்வம் – விருப்பு வெறுப்பு அற்று ஸம நிலையுடன் இருத்தல்
- கூரத்தாழ்வான் தனது கண்களை இழந்த போது பெரிதும் வருத்தமில்லாமல் இருந்தார். “பகவானுடைய விரோதியான அந்த ராஜாவைப் பார்த்த பிறகு இந்தக் கண்களினால் என்ன பயன் ?” என்று அவர் கேட்டார். எம்பெருமானார், கூரத்தாழ்வானை, காஞ்சி வரதரிடம் கண்களை திருப்பித் தருமாறு கேட்க வேண்டும் என்று நியமித்த பொழுது, கூரத்தாழ்வானுக்கு ஒன்றும் அவ்வளவாக சந்தோஷமாக இல்லை, அதோடு அவர் “நான் ஏற்கனவே எம்பெருமானார் மற்றும் எம்பெருமானை தன்னுடைய அகக்கண்களால் சேவித்துக் கொண்டிருக்கிறேன், புறக்கண்களுக்கு என்ன அவசியம்?” என்று கேட்டார்.
- மயி சாநந்யயோகேன பக்திர் அவ்யபிசாரிணி – என் (கிருஷ்ணன்) மேல் மட்டுமே நிலையான பக்தி
- மிகவும் பாதகமான நேரத்தில் கூட, அதாவது தனது கண்களை இழந்த போதிலும், திருவரங்கத்தை விட்டு வெளியே செல்லவேண்டும் என்ற நிர்பந்தத்திலும் மற்றும் பல நிலைகளிலும் கூரத்தாழ்வான் நிலையான பக்தியோடு எம்பெருமானை மட்டுமே வழிபட்டார். அவர் ஒருகலத்திலும் இதர தேவதைகளிடம் சென்றது இல்லை, அதுமட்டுமல்லாமல் எம்பெருமானிடமும் பக்தியைத் தவிர வேறு எதையும் கேட்டதில்லை.
- விவிக்ததேசசேவித்வம் – தனிமையான இடத்தில் வசித்தல்
- ஒரு ஸ்ரீவைஷ்ணவர், தனிமையான இடத்தில் வசிக்க வேண்டும் என்பது, புனிதமான இடத்தில் வசிப்பது அதாவது அந்தச் சுற்றுச்சூழலில் பகவானைப் பற்றி மட்டுமே பல விசேஷங்கள் நடக்கும் என்பது தான் அதன் பொருள். கூரத்தாழ்வான் எப்பொழுதுமே தனது ஆசார்யரான எம்பெருமானாரோடே வசித்து வந்தார் மற்றும் எப்பொழுதுமே எம்பெருமான், எம்பெருமானாருடைய கைங்கர்யத்தையே சிந்தித்தும் செய்தும் வந்தார்.
- அரதிர்ஜனஸம்ஸதி – பொது மக்களிடம் பற்றில்லாமல் இருத்தல்
- சிறந்த பக்தர்கள் பொது மக்களோடு சேர்ந்து இருந்தாலும் கூட, அவர்கள் மீது பற்றில்லாமல் இருப்பார்கள். கூரத்தாழ்வான் ஒரு சில சாதாரண மக்களோடு (ராஜா,.. மற்றும் பலர்) இருந்தாலும், அதாவது அவரிடம் அறிவுரைகளைக் கேட்கும் சிலரோடு இருந்தாலும் கூட, அவர்களிடம் எந்த வித பற்றையும் காட்டியதில்லை.
- அத்யாத்மஞானநித்யத்வம் – நித்யமான ஆத்ம ஞானம்
- தனது சிறு வயதிலிருந்தே, கூரத்தாழ்வான் ஆத்ம ஞானத்தில் ஈடுபாடு காட்டினார். அனைத்து ஜீவாத்மாக்களும், பரமாத்மாவுக்கு அடிமைப்பட்டது என்பதைத் தெளிவாக இருந்தார்.
- தத்த்வ-ஞான அர்த்த சிந்தனம் – உண்மையான அறிவைப் பற்றி சிந்தனை செய்வது
- அனைத்து ஜீவாத்மக்களும் ஸ்ரீமந் நாரயணணுக்கே அடிமைப் பட்டவர்கள் என்று. கூரத்தாழ்வான் எப்பொழுதுமே உண்மையான அறிவைப் பற்றிச் சிந்தனை செய்வார். அதனால்தான் அவர் பரமபதித்த பொழுது, எம்பெருமானார் த்வய மஹா மந்திரத்தைக் கூரத்தாழ்வான் திருச்செவியில் ஓதுமாறு ஸ்ரீவைஷ்னவர்களை நியமித்தார். ஏனென்றால் அதைத் தான் அவர் எப்பொழுதுமே சிந்தனை செய்தார்.
முடிவுரை
இந்த அனைத்து சிறந்த குணங்களும் ஒருவரிடம் இருப்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அதனால் தான் பெரியவாச்சான் பிள்ளை “ஆசார்யன் மற்றும் சிஷ்ய லக்ஷணம் இரண்டுமே கூரத்தாழ்வானிடத்தில் முழுமையாக வெளிப்பட்டது” என்று மாணிக்க மாலையில் கூறியுள்ளார். நாம் இதிலுள்ள சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு, நமது வாழ்கையில் நடைமுறைப்படுத்தி, கூரத்தாழ்வான் மற்றும் அனைத்து பூர்வாசாரியர்களையும் மகிழ்விப்போம்.
—————–————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வம் தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ ஸர்வஞ்ஞ பட்டர் என்கிற ஸ்ரீ நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.
Leave a Reply