ஸ்ரீ பிரார்த்தனா பஞ்சகம்

ஸ்ரீ பிரார்த்தனா பஞ்சகம்

யதீஸ்வர ஸ்ருணுஸ் ஸ்ரீமன் கிருபயா பரயா தவ
மம விஞ்ஞாபனம் இதம் விலோக்ய வரதம் குரும்
–1-

யதிகளின் தலைவரே சரியான வழி மூலம் உமக்கு அளிக்கப்படும் என்னுடைய விண்ணப்பத்தை நீவிர் கேட்ப்பாராக

அநாதி பாப ரசிதாம் அந்தக் கரணம் நிஷ்டிதாம்
யதீந்த்ர விஷயே சாந்த்ராம் விநிர்வாசய வாசநாம்
-2-

எண்ணற்ற காலங்கள் பாபங்களையே செய்து அதன் வாசனையானது என்னுள்ளே ஊறிக் கிடக்கிறது
யதிராஜரே இதனால் நான் தவறுகளைத் தொடர்ந்த படி செய்து கொண்டே இருக்கிறேன்
இவ்விதம் இருக்கும் எனது புலன்களை உலக விஷயங்களில் இருந்து மீட்டு அருளப் பிரார்த்திக்கிறேன்

அபி பிரார்த்தய மாநாநாம் புத்ர ஷேத்ராதி சம்பதாம்
குரு வைராக்ய மேவ அத்ர ஹித காரின் யதீந்த்ரந
–3-

யதிராஜரே நான் உம்மிடம் புத்ரன் வீடு செல்வம் முதலானவற்றைக் கேட்க்க கூடும்
ஆனால் அவற்றை விலக்கி நீவிர் எனக்கு வைராக்கியத்தை அளித்து அருள வேண்டும்
காரணம் தேவரீர் எனக்கு நன்மையையே மட்டுமே அளிக்க திரு உள்ளம் கொண்டுள்ளீர்

யத் அபராதா நஸ்யுர்மே பக்தேஷூ பகவத்யபி
யதா லஷ்மண யோகீந்த்ர யாவத் தேஹம் ப்ரவர்த்தய
–4-

யதிராஜரே முக்தி அடையும் வரையில் இந்த உடலுடன் இங்கு வாழும் நான் ஒரு போதும் பகவானையே அடியார்களையோ அவமதிக்காமல் இருக்கவும் தேவரீரே அருள வேண்டும்

ஆ மோக்ஷம் லஷ்மணார்ய த்வத் ப்ரபந்ந பரிசீலநை
காலஷேப அஸ்து ந சத்பி ஸஹ வாசம் உபேயுஷாம் –
-5-

லஷ்மண முனியே இந்த உடல் பிரியும் காலம் வரை அடியேன் உமது பிரபந்தங்களையே ஆராய்ந்த படி-அவற்றிலேயே கால க்ஷேபம் செய்யும் படி அருள வேண்டும்

பராங்குச முனீந்த்ராதி பரமாச்சார்ய ஸூக்தயா
ஸ்வாதந்தாம் மம ஜிஹ்வா ஸ்வத ஏவ யதீஸ்வர–
6

ஏய்ந்த பெரும் கீர்த்தி ராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன்
ஆய்ந்த பெரும் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத வுள்ளம் பெற –ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தது 

எங்கள் கதியே ராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா –ஸ்ரீ எம்பார் அருளிச் செய்த தனியன்

இத்யேதத சாதாரம் வித்வான் பிரார்த்தனா பஞ்சகம் படன்
ப்ராப்நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பாதாப்ஜயோ–
7-

யதிராஜரின் திருவடிகளின் மேல் வைக்கப்பட்ட இந்த ஐந்து விண்ணப்பங்களை யார் ஒருவர் பக்தியுடன் படிக்கிறார்களா அவர்கள் எம்பெருமானாருடைய திருவடிகளிலே மேலும் அதீத பக்தி யுடையவர்கள் ஆவார்கள்

பிரார்த்தனா பஞ்சகம் ஸமாப்தம்

———–

காஷாய சோபி கமநீய சிகா நிவேசம்
தண்ட த்ரயோஜ் ஜ்வலகரம் விமலோபவீதம்
உத்யத்தி நேச நிப முல்லஸ தூர்த்வ புண்டரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –பூர்வர்கள்-ஸ்ரீ கூரத் தாழ்வான்-என்பர் – அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

One Response to “ஸ்ரீ பிரார்த்தனா பஞ்சகம்”

  1. Devanathan Says:

    🙏

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading