முதலாம் பாதத்தில் யோகம் இன்னது-என்பதும் -இரண்டாம் பாதத்தில் யோக ஸாதநங்களும்,- மூன்றாம் பாதத்தில் ஒரு அப்யாஸி அனுஷ்டிக்கும் ஸாதநங்கள் நேர்மையாக நடை பெறுகின்றனவா அல்லவா என்பதைப் பரிக்ஷித்துக் கொள்ளுகிறதற்கும்
அதனால் யோகாப்யாஸத்தில் ருசி உண்டு பண்ணும் இயல்பினவான யோக ஸித்திகளும், சொல்லப்பட்டிருக்கின்றன.
இந்த அத்யாயத்தில் யோகத்தின் பலனான கைவல்யமும் தர்மமேக ஸமாதியும் இன்னும் சில விஷயங்களும் சொல்லப்படுகின்றன.
ஜாதியாலும் (பிறப்பாலும்) ஓஷதங்களினாலும், மந்த்ரத்தினாலும்,தபஸ்ஸினாலும், ஸமாதியினாலும், (முன் சொன்ன) சித்திகள் உண்டாகின்றன-1-
தேவனாகப் பிறந்தவனுக்கு ஜந்மத்தினாலேயே அணிமாதி ஸித்திகள் ஏற்படுகின்றன. மேலும் போன ஜந்ம கர்ம விசேஷத்தினால் ௮த்தகைய ஸித்திகள் ஏற்படக் கூடும். ஸாங்கய சாஸ்திரத்தை உபதேசித்த கபில மஹரிஷி பிறக்கும் போதே சித்தராகப் பிறந்தாரென்று சொல்லப் படுகிறது.
மாண்டவ்யர் முதலிய முநிகள் ஒளஷதங்களினால் ஸித்திகளைப் பெற்றார்கள். தமிழ் நாட்டில் ஓளஷதங்களினால் ஸித்தி பெற்றவர் அநேகர் இருந்திருக்கிறார்கள், ஓளஷதத்தினால் காய ஸித்தி பெற்றவர்கள் ரஸாயநர்கள் என்று பெயர் பெறுவரர்கள். பிறந்து இறந்து புதிது புதிதாய் சரீரங்களை யெடுக்கிறதைப் பார்க்கிலும் எடுத்த சரீரத்தை நீடி.த்த காலம் சிரஞ்சீவியாக இருக்கும்படி. செய்தல் கூடும் என்பது இவர்களின் மதம்.
வாலரஸத்திலும் கந்தகத்திலும் அதிக அத்புதமான சக்திகள் ௮மைந்திருக்கின்றன என்பது இவர்களின் கொள்கை,
சில சில மூலிகைகளுக்கு ஸித்திசள் ஸாதிக்கக் கூடிய யோக்கியதைகளுண்டென்றும் இவர்களுடைய ஸித்தாந்தம்.
இவைகளினால் தங்கள் காயத்தை சிரஞ்சீவியாக இருக்கும்படி செய்தவர்கள் அநேகர் இருக்கிறார்கள் என்று இவர்கள் சொல்லுகிறார்கள்…
மந்த்ரங்களும் இத்தகைய ஸித்திகளைக் கொடுக்க இயலும் என்று சிலர் அபிமதம். சரியான முறையாய். மந்த்ரங்களை ஜபிக்கும் பக்ஷத்தில் ஸித்திகள் கை கூடும், விச்வாமித்ரர் முதலியவர்கள் தபஸ்ஸினாலும், மந்தரத்தினலும் ஸித்தி பெற்றவர்கள். தபஸ் என்றால் விரதங்களினால் காயக் கிலேசம் செய்தல், ஹடயோக முறைகளும் இதில் அடங்கும்-ஸ்மாதி அல்லது ஸித்த ஐகாக்ரியம், இது தான் பதஞ்சலியாருடைய அபிமதம், இதைப் பற்றித்தான் இந்த சாஸ்திரம் நிகழ்கிறது இது தான் உண்மையான யோக முறை.
(மூல) பிரகிருதியினுடைய பிரவேசத்தினால், (வேறு) ஜாதிப். பரிணாமம் உண்டாகும்,–2-
ஒரு ஐந்மத்தில் பிறந்தவன் வேறு ஸரீரத்தைப் பெறுதல் எங்கனம்? ௮தன் முறையை அடுத்த சூத்திரத்தில் சொல்லுகிறார்
அதன் தத்துவத்தை இதில் உபதேசிக்கின்றார்
வேறு தேஹம் உண்டாவதற்கு ஹேதுலான பிரகிகுதி” அணுக்களை (புண்ணிய கர்மங்களான) நிமித்தம் உண்டாக்குகின்றதில்லை;
ஆனால் (திவ்ய தேஹ்த்தை அடைவதில்) தடைகளைப். புண்ணிய கருமமானது குடியானவன் போல, நீக்கி வைக்கின்றது;–3-
ஒரு குடியானவன் ஜலத்தை வயலுக்குப்: பாய்ச்சும் கர்மத்தில் தடைகளை மாத்திரம் விலக்குகிறான். பின்னர் ஜலம் ஓடுகின்றது
அம் மாதிரியாகவே புண்ய கருமம் திவ்ய தேஹம் பிராப்திக்குத் தடையாயிருக்கும் இடையூறுகனை விலக்குகின்றது ..
ஒவ்வொரு ஜீவராசியிலும், ஒவ்வொரு மனிதனிடமும், பரிபூர்ணமான புருஷன் உண்டாகும்படியாண ௪க்திகள், யோக்யதாம்சங்கள் குப்தமாக விருக்கின்றன.
ஒவ்ஷதியினிடம் பிராணிகளாகும் அம்சமும் பிராணிகளிடம் மிருகமாகும் அம்சமும், மிருகத்தினிடம் மனிதனாகும் அம்சமும் மனிதனிடம் தேவனாகும் அம்சமும் குப்தமாக அமைந்திருக்கின்றன-அந்த மறைப்பான தடையை விலக்கவே , விகாஸம் படிப்படியாக உண்டாகும். நற்கருமங்கள் அவ்விடையூறான தடையைத் தவிர்க்கும்.
(தன்னுடைய ஸித்தியால்) உண்டு பண்ணப்பட்ட சரிரங்களில் (யோகி யானவன்) அகங்காரத்தின் நின்று மாத்திரம் பல மநஸ்களை (உண்டு பண்ணுகிறான்,,–4-
மேற் கண்ட தடைகள் தபஸ் முதலானவைகளால், நீக்கப் பெறவே யோகி யானவன் ஓரே சமயத்தில் பல விஷயங்களை அனுபவிக்க விரும்பிப் பல சரீரங்களை உண்டு பண்ணிக் கொண்டால், ௮வைகளில் தனித் தனி ஓரோர் மநத்தையும் நிர்மாணம் செய்து கொள்ளுகிறான்… அம் மனங்களை எதினின்று நிர்மிக்கிறானென்றால்-௮ஸ்மிதையி (அகங்கார தத்தவத்தி) னின்று என இந்த சூத்திரம் உபதேிக்கின்றது –
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் வருகின்ற, சவ்பரியின் கதை இங்கு கவனிக்கத் தக்கது. இத் தன்மையான யோகி மஹத் தத்வத்தை ஐயிச்சவன். அகங்காரம் மஹத் தத்துவத்தினின்று உண்டாகிறது
(பல மநஸ்கள் உண்டாக்கப் படுகின்றமையால், பல, ப்ரவ்ருத்தி பேதங்கள் எற்பட்டாலும் ஒரே சித்தமானது (அஸ்மிதை, மேற்கண்ட), பல மந்ஸ்களை நடத்துகிறது.–5-
ஒரு சரீரம் மனிதன், ஒரூ, சரீரம் மிருகம் இவ்கவிதமாக இருந்தாலும் கூட (அஸ்மிகதை) நான் என்ற ஒரே பிரத்யயம்,எல்லாவற்றினுமிருக்கின்றமையால் பல மநஸ்கள் பல சரிரங்களில் இருந்தாலும் தோஷமில்லை… ஒரே சரீரத்தில் பல இந்த்ரியங்கள் இருப்பினும், ஒரே மநஸ் அவைகளின் அனுபவங்களையெல்லாம். ஒன்று படுத்து்கிறது-தன் மயப்படுத்துகின்றது – ௮துபோல யோகியானவன் பல சரீரங்களையும் அவைகளின் கண் பல மநஸ்களையும் உண்டு பண்ணிக் கொண்டு ௮வைகளின் மூலமாய் ஏற்படும் ௮நுபவங்களைத் தன் மயப் படுத்துகிறான்.
இவ்வர்த்தத்தை வைத்துக் கொண்டு, “ஓரே சரீரத்தில் இரண்டு பக்ஷிகள் உண்டு. ஒன்று போக்தா. மற்றோன்று ஸாஷீ -என்ற வசநத்தை ஒருவிதமாகப். பொருள் கொள்ளலாம்.“ஓரே ஈஸ்வான் தம்முடைய மநஸ் ஸங்கல்பத்தால் பல சரீரங்களை உண்டு பண்ணுகிறான், அவைகளை நடத்துகிறான், பின்பு அவைகளைத். தன்னிடம் லயப்படுத்திக் கொள்ளுகிறான்.– பத்மபுராணம்.
இவ்வபிப்பிராயம் இங்கு கவனிக்கத் தக்கது.. இதுபோல: யோகியும் செய்கிறான்.
அவைகளில் (ஜன்மம், மந்தரம், ஒளஷதம், தபஸ், ஸமாதி முதலான முறைகளின்படி கற்பிக்கப்படும் மநஸ்களில்) ஸமாதியினால் ஏற்படும்
மநஸ்ஸூக்கு மாத்திரம் (ராகாதிகள், புண்ய பாபங்கள் தங்க) உறைவிடமிராது. (மற்றைய மநஸ்களில் தங்க இடமுண்டு;)–6-
தியாக ஸமாதியால் ஏற்படுத்தப்படும் மநஸ்களில்! ராகாதிகள், புண்ய பாபங்கள் தங்க இடம் கிடையாது
மந்த்ரத்தினாலும் , ஓளஷதத்தினாலும், காயக் கிலேசமான தபஸ்ஸினாலும் உண்டு பண்ணப் படும் மநஸ்ஸூக்கும், ராகாதிகள்,புண்ணிய பாபங்கள் இருக்கின்றன. ௮ம் மநஸானது ஆசை ப,ற்றியதாகவே இருக்கும்.
யோகிக்கு கர்மங்கள் வெளுப்பு கறுப்பு என்பது இல்லை,-மற்றவர்களுக்கு (கறுப்பு , வெளுப்பு, இரண்டும் கலந்தவை என)கர்மங்கள் மூன்று ,விதம்.–7-
முன் சூத்திரங்களில் கோகியின் சித்தம் மற்றவர்களுடைய சித்தத்தை விட வேறானது என்று சொன்னார். இதில் அவன் கர்மமும் மற்றவர்களுடைய. கர்மத்தை விட வேறானது. என்கிறார் –
கர்மங்கள் நான்கு விதம்:
(1) தமோ குணத்தை விருத்தி பண்ணுகிறது
(8) ஸத்துவ குணத்தை விருத்தி பண்ணுகிறது .
(8) ரஜோ குணத்தை விருத்தி பண்ணுறது
(க) முக் குணங்களைத் தாண்டிய நிலை.
கிருஷ்ணம்: இஹத்தில் துக்கத்திற்கும், பரத்தில் நரகத்திற்க்கும் ஹேதுவான கர்மம்.
சுக்லம்: (மநம், வாக்கினால் ஏற்படும் புண்ய கர்மம்) இஹத்திலும் பரத்திலும் சுகத்திற்குக் காரணமான கர்மம்,
சுக்ல கிருஷ்ணம்: (புண்ய பாபம் கலந்து )ஸாங்கியர்களின் மதப்படி. ஸோம யாகங்கள் முதலியன.
சுக்ல கிருஷ்ணமில்லாதது: ௮தாவது புண்ய பாபமில்லாதது.
முதல் மூன்று ஸாதாரண ஐநங்களின் கர்மம், 4-வது யோகியின் கர்ம நிலை. அவித்யை, ௮ஸ்மிதை, ராகம், துவேஷம், அபிநிவேசம் என்ற கிலேசங்கள் இன்மையாலும், கர்ம பல ஸந்யாஸம் செய்கின்றமையாலும், யோகிக்குக் கர்மமிருந்தாலும் புண்ய பாபத்தின் பலானுபவமில்லை.
தைத்திரீய உபநிஷத் 2-ம் வல்லியிம் கடைசி அனுவாகத்திற் சொல்லியபடி. **நான் புண்ய கர்மத்தைச் செய்ய வில்லையே பாப கர்மத்தைச் செய்தேனே”? என்ற. தாபம் இல்லாத நிலை யுள்ளவனாக யோகி ஆகிறான் என்பது இங்கு கவனிக்கத் தக்கது,
த்யக்த்வா கர்ம பலா ஸங்கம் நித்ய த்ருப்தோ நிராஸ்ரய–
கர்மண்யபி ப்ரவ்ருத்தோபி நைவ கிஞ்சித் கரோதி ஸ—৷৷4.20৷৷
கர்ம பலன்களில் பற்றைக் கை விட்டு -நித்தியமான ஆத்மாவில் திருப்தி பெற்றவனாய் –
அநித்யமான உடலில் பற்று அற்றவனாய் -எவன் ஒருவன் கர்மம் செய்கின்றானோ –
அவன் கர்மங்களில் ஒரு முகமாய் ஈடுபட்டவனாயினும் எக்கர்மத்தையும் செய்யாதவன் ஆவான்
எப்போதும் திருப்தி அடைந்தவன் என்று கொள்ளாமல்
நித்தியமான ஆத்மாவில் திருப்தி அடைந்தவன் என்றே கொள்ள வேண்டும் -ராமானுஜர் பாஷ்யம்
இப்படிக் கொண்டால் தான் திருப்தி அடையும் கார்யம் சொல்லி முன் சொன்ன ஸ்லோகத்தின் தொடர்ச்சி வரும்
யஸ்ய நாஹங்க்ருதோ பாவோ புத்திர் யஸ்ய ந லிப்யதே–
ஹத்வாபி ஸ இமாந் லோகாந் ந ஹந்தி ந நிபத்யதே–৷৷18.17৷৷
‘*பிரஹ்மலித் ஆனவன் ஆத்மாவிடம் க்ரீடிக்கிறவனாகவும், பிரியமுள்ளவ னாகவும், அசுக்ல அகிருஷ்ண கர்மம் உடையவனாயுமிருக்கிறான்.-ஸ்ருதி வசனம்
*யோகிகள் சரீரம், மநம், புத்தி, இந்த்ரி யங்களால் மாத்ரம் ராகம் முதலியவை யில்லாமல் ஆத்ம ஞானத்தின் பொருட்டுக் கர்மத்தை அனுஷ்டிக்கிறார்கள்
மேல் விவரித்த இந்த நிலைமைக்கு. யோகி வருவானாகில் பிரக்ருத ஜென்மம் அவனுக்குக் கடைசி ஜென்மம் ஆகும்
(மேற் கண்ட முதல் மூன்று வித)கர்மங்களினின்று அந்தந்த கர்ம பரிபாகத்திற்கு அநுகூலமான வாஸனைகளின் மலர்ச்சி ஏற்படும்.–8-
வாஸனைகள் இருவிதம், (1) ஜாதி, ஆயுஸ், போகம் இவைகளைக் கொடுக்கும் வாஸனை (2) வெளி வராமல் ஸம்ஸ்கார ரூபமாக மாத்ரம் இருக்கிற வாஸனை.முன் வினைப் பயனை ௮னுபவிக்க நேரிடும் சமயத்தில் இரண்டாவதான வாஸனைகளில் ௮வ் வினைப் பயனுக்கு அனு கூலமான வாஸனை மாத்திரம் வெளிப்படும்-மலரும் , மனிதனாகப் பிறக்கும் காலம் வந்திட, தேவ, நரகர் ஸம்பந்தமான வாஸனைகள் வெளி வாரா. மனிதனாகப் பிறத்தலுக்கு அனுகூலமான கர்ம வாஸனைகள் மாத்திரம் பிராதுர்பாவத்தை யடையும், அவ் விதமே தேவ ஜக்மம் ,நேரிடும் காலத்தில் மனித சம்பந்மான வாஸனைகள் வெளி வரா.
ஜாதி, தேசம், காலம் இவைகளால் மறைக்கப்பட்ட (இடைவிட்ட) வாசனைகளுங்கூட அடுத்து (இப்போதே யநுபவிக்கும்படியாக) வெளிப்படும் தன்மையைப் பெறுகின்றன. ஸ்ம்ருதியும் ஸம்ஸ்காரமும் ஏக ரூபமாய் இருத்தலால் –9-
ஸ்வர்க்கத்தில் தேவனாக இருந்து பெற்ற போகாதி வாஸனைகள், பின்பு அநேக ஆயிரம் ஜந்மங்களில் மனிதன் முதலான வர்க்கங்களில் பிறந்து அவைகளால் மறைக்கப் பெற்றாலும், மறுபடி தேவனாக எற்படும் காலத்தில் அப் பூர்வ வாஸனைகள் எவ்விதம் திரும்ப வெளிப்படும்? என்ற கேள்விக்கு இந்த சூத்திரம் விடை.யளிக்கின்றது.
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”–திருக்குறள்
ஒருவனுக்குத் தூங்கு முன் எந்த வாளனை இருந்ததோ அது தான் விழிக்கிற காலத்தில் வெளிப்படுகிறது. அம் மாதிரியாக ஒரு ஐந்மத்தில் உண்டான வாஸனைகள், அதற்கடுத்த பின் ஐந்மத்தில் தானே மலர வேண்டும்? அவ்விதமின்றி ௮நேக ஜென்மங்களில் மறைவாக விருந்து பின்னர் எவ்விதம் ௮பிவ்யக்தி எற்படுமென்றால்,-அதற்கு அடியிற் கண்ட உதாஹரணம் ஸமாதாநமாகும்.
வெகு காலத்துக்கு முன் நடந்த ஸம்பவம் ஒன்று ஒருவனைப் பார்க்குங்கால் நம் ஸ்மரணைக்கு வருகிறது , அதற்கடுத்து வெகு சமீப காலத்தில் நடந்த முக்கியமான விஷயங்கள் ஞாபகத்திற்கு வராமல் தடைபடுகின்றன என்பதை நாம் எல்லோரும் ஸ்வானுபவத்தில் அறிகிறோம்
அடுத்திருக்கிற விஷயங்கள் மறைபட்டு, முந்திய நாள் சென்ற விஷயம் எவ்விதம் பிராதுர்பாவத்தை யடைகிறதோ, அவ்விதமே பூர்வ வாஸனைகள் கர்ம பரிபாகத்தை யனுசரித்து வெளிப்படுகின்றன.
ஸ்மிருதி என்பது பிரகிருத அனுபவத்தின் வாஸனை.-ஸம்ஸ்காரங்கள் பூர்வ ஜென்மங்களில் ஏற்பட்ட வாஸனைகள். இவை யிரண்டும் ஒரே தன்மையனவாம். ஸம்ஸ்காரமானது வெளிப்படும் பக்ஷத்தில் ஸ்மிருதி போன்று வெளிபடும். ஸ்மிருதியானது ஸம்ஸ்கார ரூபமாக லயப்படுகிறது. வேறு ஐந்மம், வேறு தேசம், வேறு காலம் இவைகளின் கண் நாம் இருந்து செய்த கரமங்கள் ஸம்ஸ்கார ரூபமாக ஏற்படுகின்றன.
அவைகளுங்கூட வெகு காலத்திற்குப் பின்னும் வேறு ஜாதி, வேறு தேசத்தில் நாம் பிறந்தாலும், அவைகள் விகஸித்து, நாம் அநுபவிக்கும்படியாகவும் கர்மங்களுடைய பக்குவ காலம் வரும் காலத்தில் நேரிடும். அந்தவந்த ஸம்ஸ்காரம் அந்தவந்த , விதமாகப் பரிணமிக்கிறது. அதாவது ஞாந ஸம்ஸ்காரம் ஸ்மிருதியாகவும், இச்சா ஸம்ஸ்காரம் இச்சையாசவும், கிரியா ஸம்ஸ்காரம் கிரியையாகவும் பரிணமிக்கின்றன.
நான் என்றும் இருக்க வேண்டும் என்ற பிரியம் நித்தியமாதலின் முன் பிரஸ்தாபித்த வாஸ்னைகள் அநாதி யானவை.-10-
அவ் வாஸனைகளுக்கு ஆரம்பம் இல்லை **நான் இல்லாமல் போகக் கூடாது, எப்போதும் இருக்க வேண்டும்”* என்ற எண்ணமானது ஒவ்வொரு பிராணியிடமும் இருக்கின்றது;-இது சுபாவமாக உண்டாகிறது என்று சொல்ல இயலாது ,பிறக்கும் பொழுதே மரண பயம், துக்கம், துவேஷம், முதலான விருத்திகள் நிமித்தம் ஏற்படும் போது வெளியாகின்றன.முன் அனுபவம் இருந்து, அது ஸம்ஸ்கார் ரூபமாக இருக்கின்றமையால் தான் நிமித்தம் ஏற்படும் போது அந்த ஸம்ஸ்கார ரூபமான விர்த்திகள் வெளியாகின்றன என்று ௮றிய வேண்டும்.
இலர் அபிப்பிராய்,த்தில் (சார்வாகர் மதத்தில்) மநத்தின் அளவு அது இயங்கும் சரீரத்தின் அளவைப் பொருத்ததாக இருக்கிறது என்பார்கள்.
தீபம் குட.த்திலிருந்தால் குறுகியும், பெரிய விட்டில் இருந்தால் பெருகியும் ஆதல் போல மநமும் சரீர ஆக்ருதியைப் பற்றியே குறுகியும் பெருகியும் ஆகின்றது என்று சொல்லுகிறூர்கள்,அது சரி அன்று,
ஜ்வாலை குறுகியும் பெருகியும் ஆகின்றதில்லை. தீபத்தின் பிரபை, (காந்தி) தீபம் இருக்குக் ஆவரணத்துக்குத் தக்கபடி ஸங்கோசம், விசாஸம் பெறுகிறது.
அது போலவே மநத்தின் விர்த்திக்கு, நிமித்தம் உண்டாக ஸங்கோசம் அல்லது விகாஸம் ஏற்படுகின்றதே யல்லாமல், மநத்துற்கன்று. அது ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றது
நிமித்தம் பாஹ்யம், ஆந்தரம் என இருவகை -. பஹிர் முகமான நிமித்தங்கள் என்பது வெளிச் சாதநங்கள். அவையாவன? ஸ்துதி, தாநம், நமஸ்காராதிகள்.! -அந்தர்முகமான நிமித்தம் ஸ்ரத்தை முதலியன.
மைத்ரீ , கருணை முதிதை உபேக்ஷை முதலிய செய்கைகள் யோகியானவன். உலகத்த்தில் நடைபெறும் காலத்தில் அவன் செய்யும் விளையாட்டுகளாம்.
இவைகள் வெவி நிமித்தங்களினால் உண்டாகின்றவையல்ல, அந்த யோகியின் மநத்தின் உயர் நலத்தால் ஏ.ற்படுகின்றன.
மேற்படி இரண்டு நிமித்தங்களில் அந்தர் முகமான நிமித்தம் விசேஷ யோக்யதையை உடையது -, ௮திக உயர்வானது , ஞாநம் வைராக்யம் இவை யிரண்டையும் விட மேலானது யாதுளது?
சித்த பலமின்றி யாரால் தண்ட காவநத்தை அழிக்கக் கூடும்? சுக்ராசார்யர் ஒரு காலத்தில் தம் மநோ பலத்தால் தண்ட காவநத்தை யழித்ததாகப் புராணக் கதை, ஸமுத்ரத்தை அசுஸ்தியரைப் போல் மநோ பலமுடையவர்களாலன்றி வேறு யாரால் பாநம் பண்ணக் கூடும்
நான் என்பது இல்லா காலத்தை நினைத்தல் கூடாமையால், நான் என்பது தொடர்பறாது எப்போது முள்ளது. அதனால் பூர்வ ஜந்மங்கள் இருந்திருக்கின்றனவென்று ஏற்படுகிறது.
மநஸ் ஆனது எத் தன்மையதாக இருக்கிறதென்று விசாரணை ஏற்பட அது மஹா ஸூஷ்மமாக போல் ஆகாசம் போல் பரவி யிருக்கிறது என்று ஸித்தாந்தப் பட்டிருக்கிறது,
ஹேது, பலம், ஆஸ்ரயம், விஷயம் என்றவைகள் மநத்தின் கண் வாஸனைகள் தங்கும்படி செய்கின்றன. அவைகள் பொய்த்துப் போனால் வாஸனைகளும் போம்,–11-
ஹேது: தர்மத்தினால் சுகமும், அதர்மத்தரல் துக்கமும் உண்டாகும். ஸுகம் ஆசைக்குக் காரணம், துக்கம் துவேஷத்திற்குக் காரணம். இவைகளால் முயற்சி உண்டாகிறது, இம் முயற்சி மநம், மெய், மொழிகளால் வெளிப்பட்டு ஒருவனுக்கு நன்மையையும், மற்றவனுக்குத் தீமையையும் செய்கிறது.
இச் செய்கைகளால் தர்மம், அதர்மம், அவைகளால் சுகம், துக்கம், அவைகளால் ஆசை,துவேஷம் மறுபடியும் உண்டாகின்றன. இவ்விதமாக ஸம்ஸாரம்
மேற்கண்ட ஆறு ஆரைசக்கால்கள் உள்ள; என்றும் சுழலுகிற சக்ரம் போன்றதாம் . -இச் சக்கரத்தைள் சுழலச் செய்கிறது “ அலித்யை -இதுவே கிலேசங்களுக்கு மூலம். இத தான் ஹேது;
பலம்:–ஜாதி (பிறப்பு), ஆயுஸ், போகங்கள் இவை அபூர்வம் பின் விளைகின்றவை
ஆஸ்ரயம்:–எல்லாச் செயல்களுக்கும் மநஸ் தான் காரணம்.-எல்லா வாஸனைகளும் அதில் இருக்கின்றன. சாந்தி, தாந்திகளால்: மநத் தூய்மை பெற்ற யோகியை. சுக துக்கங்கள் பற்றாவாம்;-அதனால் சுக துக்கங்கள் அலன் மநத்தைத் தாக்காவாம். சுக துக்கங்களுக்கு ஆஸ்ரயம் போய் விடும்.
விஷயம்: வெளியிலுள்ள: விஷயங்கள், பற்றுதலை உண்டாக்கும், வெளியிலுள்ள பதார்த்தங்கள். இது ஆலம்பநம் எனப்படும்
இவை நான்கும் தான் வாஸனைகளைத் தங்கும்படி செய்விக்கின்றன -இவை நான்கும் அற்றுப் போனால், இவைகளை ஆஸ்ரயித்துத் தங்கும் வாஸனைகளும் அற்றுப்போம்.
சென்று போன வஸ்துவும், வரப் போகும் வஸ்துவும் உண்மையில் எப்போதும் உள்ளவை. தர்மங்கள் நிகழும் நெறியில் பேதங்கள். இருப்பதால் வஸ்;து இல்லாமை தோன்றுகிறது–12-
இறந்த காலம், வருங்காலம்; நிகழ் காலம் இவை மூன்றும் குணங்கள் பரிணமிக்கின்ற கிரமத்தைக் சூறிப்பிடுகின்றன.
குணங்கள் வித்யாஸப்படுகின்றமையால். அவ் வேற்றுமையான பாவம் ஏற்படுகிறது. பரிணாமங்கள் ஒரு பிரவாஹமாக, நடைபெறுகின்றன;
ஒரு குறிப்பிட்ட லஷ்யத்தை வைத்துக் கொண்டு.நாம் . பார்க்கிறதில் அதை நோக்கி .முன்னதை வருங்கால மென்றும் பின்னதை இறந்த காலமென்றும் இலஷித்து அனுபவிக்கிறதை நிகழ்காலம் என்றும் சொல்லுகிறோம்.
கார்யம் காரணத்திற்குன் இருக்கின்றமையால் சங்கோசமாக இருந்ததே பின் விகாஸம் பெறுகிறது…-மொட்டு, மவர், காய், கனி போல் என்று அறிக
இறந்த காலம், நிகழ் காலம், வரும் காலமென்ற. பரிணாம பேதங்களாகிய மூன்று போர்வைகளை வஸ்துக்கள் தரிக்கின்றன -. வஸ்து என்றுமுள்ளது
போர்வைகள் மாறுகின்றன, போர்வைகள் மாறி மாறி , குணங்கள் ஏற்படுகின்றன. (3ம் பாதம், -13- 14-வறது சூத்திரங்களைப் பார்க்க)
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத-
உபயோரபி த்ருஷ்டோந்த ஸ்த்வநயோஸ் தத்வ தர்ஸிபி–৷৷2.16৷৷
இல்லது எனப்படும் உடலுக்கு உள்ளதின் தன்மையாகிற நித்யத்வம் உண்டாகாது -உடல் அநித்யமானது
உள்ளது எனப்படும் ஆத்மாவுக்கு இல்லதின் தன்மையாகிற அநித்யத்வம் உண்டாகாது -ஆத்மா நித்தியமானது
உடல் ஆத்மா இவ்விரண்டையும் பற்றிய முடிவானது உண்மை அறிவாளிகளால் இவ்வாறு அறியப் பட்டுள்ளது
வேதா₃ஹம் ஸமதீதாநி வர்த்தமாநாநி சார்ஜுந ।-
ப₄விஷ்யாணி ச பூ₄தாநி மாம் வேத₃ ந கஶ்சந ॥ 7–26-
அர்ஜுனா இறந்த காலத்தவரும் -நிகழ் காலத்தவரும் -வரும் காலத்தவருமான எல்லாவித பக்த ஜீவர்களையும்
நான் அறிவேன் -என்னையோ என்னில் இவர்களில் ஒருவனும் உள்ளபடி அறிவது இல்லை –
அவைகள் (தர்மங்கள் ] விபக்தமாகவும் ஸூஷ்ம மாகவும் குணங்களை ஸ்வரூபமாக உடையவைகளாகவும் இருக்கின்றன.–13-
இந்த தர்மங்கள் இறந்த காலத்திலும், வருங்காலத்திலும் ஸுூஷ்மமாகவும் நிகழ் காலத்தில் வியக்தமாவும் இருக்கின்றன
குணங்கள் மூன்றும் , கால்ம் மூன்றும் ஸூஷ்ம மானவைகள்.–ஸ்தாவர ஐங்கம ரூபமான எல்லா ஐகத்தும் குணங்களுடைய பரிணாடம பேதமே.
எல்லா வஸ்துக்களும் சுகம், துக்கம், மோஹங்களை யுடைய குணங்களுடன் சேர்ந்திருக்கின்றமையாலும் குணங்களினின்று . உண்டாயினமையாலும் வஸ்துக்கள் யாவும் குண ஸ்வரூபலங்கள் எனச் சொல்லப்படுகின்றன. உண்மையில் ஐகத்தானது குணங்கள் தான்.
அப்படியே ஹிரண்ய கர்ப்பர் சொல்கிறார் “குணங்களின் வாஸ்தவமான ஸ்வரூபம் இந்த்ரியங்களின் வரம்புக்குள்
வராது, எது இந்த்ரியங்களுக்குப் புலப்படுகிறதோ அது மாயை -நாசத்தை. உடையது. அது இல்லாமை.போலவேயாம்.
இந்த்ர ஜாலம் செய்பவனால் உண்டாக்கப்படும் வஸ்துவைப் போல் பிரபஞ்சம் இருக்கிறது. ஒவ்வொரு க்ஷணமும். ௮து . நாசத்தை யடை.கிறது
குணங்கள் மூன்றாகவும், ௮வைகளில் பரிணமிக்கின்ற வஸ்து ஓன்றாகவும் எப்படி எற்படும்? ‘* என்ற. ஆக்ஷேபத்திற்கு அடியில் வரும் ஸுத்ரம் ஸமாதாநத்தைச் சொல்லுகிறது.
பரிணாமம் ஒன்றாயிருப்பின் வஸ்து ஒன்றேயாம்,-14-
மூன்று குணங்கள் ஒரூ வஸ்துவில் இருக்கிற இல்லை -ஒன்று முக்யமாகவும் மற்ற இரண்டும் ௮முக்யமாகவும்.இருக்கின்றமையால் ஒரே பரிணாமம் ஏற்படுகிறது.
ஸத்துவ குணம் முக்யமாகவும் மாகவும், ரஜஸ், தமஸ் அமுக்கியமாகவும் இருக்கும் போது ஞாந இந்த்ரியங்களும் ரஜஸ் மேலாகவும், மற்ற விரண்டும் கீழாகவும் இருக்கும்போது கர்ம இந்த்ரியங்களும்; அவ்விதமே தமஸ் மேலாகவும், மற்றவை தாழ்ந்தும் இருக்கும் போது விஷயங்கள் (பதார்த்தங்கள் ) உண்டாகின்றன,
விக்ஞாநவாதிகளின் ஸித்தாந்தம் என்னவென்றால், **வெளியில் பதார்த்தங்களே இல்லை. எல்லாம் ஸ்வப்நத்தில் போல ஞாநத்தால் கல்பிதம், அதனால் குணங்கள் அல்லது பிரதாநம் ப்ருதக்காக(வேறாக) இருக்கின்றமை கிடையாது” என்பதேயாம். இது சரியன்று
ஸ்வப்நத்தில் அவனவனுக்குத் தனித் தனியாக வேறு வேறாக வஸ்துக்கள் தோன்றுகின்றன. ஆனால், பிரபஞ்சத்தில், எல்லாக் காலத்திலும் எல்லா தேசங்களிலும்; எல்லாருக்கும் ஓரே மாதிரியாகப் பதார்த்தங்கள் தோன்றுகின்றன, எல்லாராலும் ஓரே மாதிரியாக அனுபலிக்கப்படுகின்றன.. ௮தனால் ஸவப்ந வவஸ்தையைப் யோல்: விஷயம் இல்லை யென்பது சரியன்று.
வஸ்து ஒன்றாய் இருப்பினும் (அதை கிரஹிக்கின்ற) மநஸ்கள் பேதம்படுகின்றமையால, (ஞானம் அர்த்தம் என்ற) இரண்டினுடைய வழிகள் வேறாக ஏற்படுகின்றன.–15-
ஞாநம் வஸ்துவை உண்டு பண்ணாது . ஓரே வஸ்து.பலருடைய ஞானத்தால் உண்டாக்கப் பட மாட்டாது. ஞாந பேதங்கள் இருக்கின்றமையால் ஒருவன் ஞாநத்தாலும் அது உண்டாக்கப் படுவதில்லை. பலர் ஒரே விதமாக வஸ்துலைப் பார்க்கின்றமையால் ஞாநம் அல்வஸ்துவாகப் பரிணமிக்கற.தென்று கொண்டால், ஞாநம் சேதநம், பிரகாசமுள்ளது; ஸூஷ்மமானது -,
விஷயம்(வஸ்து ) ஜடம், கநம், இலசு , பெரிது, சிறுசு , குட்டை, நெட்டை..இவ் வித பேதங்களுள்ளதாயுமிருக்கின்றது .
ஞாநம் விஷயத்துகுக் காரணமாயின் விஷயமாகிய கார்யம் எவ்விதமாகவாவது காரணமாகிய ஞாநத்தில் முன் இருக்க வேண்டும். அப்படி இல்லை. ஓரே.வஸ்து வெளியில் ஸ்வயமாக ஞாநத்தை அபேஷிக்காமல் இருக்கின்றது என்பது வஸ்துவையும் அதைப் . பிரசாசிப்பிக்கின்ற விளக்கையும் போன்றதாம். அப்படியானால் பலர் ஓரே வஸ்துவைப் பல விதமாக கிரஹிக்கின்றார்களே என்றால் அவரவர்கள் பூர்வ ஸம்ஸ்கார விசேஷத்தினாலும், ஸத்வ, ரஜஸ், தமஸ், அவரவர்களின் மநத்தில் ஏற்றத் தாழ்ச்சி யாக இருக்கின்றமையாலும் அவ்விதம் ஒரே வஸ்துவைப் பற்றி வேற்றுமை பாலங்கள் நிகழ்கின்றன.
ஒருவன் ஒரு வஸ்துவைப் பிரியத்துடன் பார்க்கிறான் , மற்றொருவன் வெறுப்புடன் பார்க்கிறான். வேறு ஒரூவன் இரண்டுமின்றி மத்யஸ்தனாக இருந்து கொண்டு உதாஸீநனாகப். பார்க்கிறான். ஒரு சிறு திருஷ் டாந்தம்.- ஒரு ஸ்த்ரீ ஒருவனுக்குப் பத்நீ யாகவும், வேறு ஒருவனுக்குப் புத்திரீயாகவும், மற்ற ஓருவனுக்குசத் தாயாராகவும் இருக்கிறாள்.அந்தப் பல புருஷர்களின் மநங்களில் பலவித பாவங்கள் உண்டாகின்றன. பத்நீயாகக் கொள்பவனுக்கு காமமும், புத்ரீயாகக் கொள்பவனுக்குக், காமமில்லாத. அன்பும், தாயாராசக் கொள்பவனுக்கு பக்தியும் உண்டாகின்றன. சிலர் அபிப்பிராயத்தில் ஞாநம் எப்போது உண்டாகிறதோ அப்போது வஸ்து உண்டாகிறது .. அப்படி உண்டாதல் சு௧ம், துக்கம் உண்டாதல் போலவாம்.-இது .சரியன்று. வஸ்து இல்லாமல் பூர்வ அனுபவத்தினால் ஒரு வஸ்துவின் ஸ்மரணை உண்டாகிறது, வஸ்து எதிரில் இல்லை.
வஸ்து சித்தத்தினின்று உண்டாக வில்லை என்பதை. அடுத்த சூத்திரம் தெளிவிக்கிறது
வஸ்துவானது ஒருவனுடைய சித்தம் பற்றியதாக இல்லை. அப்படி இருக்குமாகில் (அது பிரமையாகும் உண்மையிலில்லை.)
சித்தம் வேறிடத்,தில் போயிருக்கும் போது வஸ்து இருக்கிறதன்றோ ,–16-
ஒருவன் சித்த நிரோதம் பண்ணினாலும் சித்தத்தை லேறு விஷயத்தில் செலுத்தினாலும். வஸ்துவுடன் சம் பந்திக்கிறான் இல்லை
அப்போது வேறொருவன் சித்தத்திற்கு அவ் வஸ்து உண்டா அல்லவா? வஸ்து இல்லாமல் போய் விடுமா ஸமாதி கலைந்து. அல்லது வேறு விஷயத்தை நாடின மநஸ் திரும்பினால், ௮வ் வஸ்துவைப்.பார்க்கிறானே, எங்கே நின்று ௮வ் வஸ்து, திரும்ப. வருகின்றது ஒருவன் ஒரு வஸ்துவின் முன் பக்கத்தைப் பார்க்கின்றான் அல்லது பின் பக்கத்தைப் பார்க்கின்றான. அப்படியானால் முறையே, பின் பக்கம் இல்லை யென்றும் முன் பக்கம் இல்லை யென்றும் ஏற்படும், அது சரியன்று. வஸ்து புத்தி தந்தரம் அன்று, வஸ்து தந்தரமே தானாக உள்ளது
விஷயங்களுடைய ஸம்பந்தத்தை மநஸ் எதிர் பார்க்கின்றமையால் அறியப்படும், அறியப்படாத என்ற தன்மை யுள்ளவையாக (வஸ்துக்கள் ஆகின்றன.) –17-
விஷயங்கள் அயஸ் காந்தத்திற்கு ஸமாநமாகவும், மனஸ் அயத்திற்கு ஸமாநமாகவும் இருக்கின்றன. வஸ்துக்கள்
மநத்தை ஆகர்ஷித்து மநத்தின் கண் காமக் குரோத முதலிய தோஷங்களை உண்டு பண்ணுகின்றன , ஸ்வயமாக மனத்திற்கு விஷயங்களால் அன்றி காமக் குரோத முதலிய தோஷங்களில்லை.
அறியப்படும் விஷயகம் ஞாதம் என்றும், அறியப்படாத விஷயம் அக்ஞாநம் என்றும் சொல்லப்படுகிறது , அறியப்படும் விஷயத்தில் மநத்திற்கு ஒருவித பரிணாமமும், அறியப் படாத விஷயத்தில் வேறு ஒரு பரிணாமமும் உண்டாகின்றன.
(புருஷனால்)மநோ விர்த்திகள் எப்போதும் அறியப் படுகின்றன; மநத்திற்கு ஸ்வாமியான புருஷனுக்கு எப்போதும் பரிணாமமின்மையால்,–18-
பரிணாமம் -மாறுதல் , மநத்தை லிடப் புருஷன் வேறு என்பதை அறிய வேண்டும். மநஸ் என்பதில் அடியில் வரும் நான்கும் அடங்கும்.
சித்தம் = ஸ்மரணை
புத்தி = வஸ்துக்களின் உண்மையை அறிதல்.
அகங்காரம் = நான் என்த அபிமாநம்,
மநஸ்– விஷயங்களை கிரஹித்தல்,
விஷயங்களை மநம் கிரஹிக்கிறது என்றால் மநம் அவ் வஸ்துவின் பரிணாமத்தைப் பெறுகிறது, வஸ்துக்களெல்லாம் பரிணாமம் உள்ளவை . புருஷனும் பரிணாமாம் உள்ளவனாக ஏற்படுவானாகில்-மநம் அந்த புருஷ ரூபமாக ஒரு சமயத்தில் ஆகியும் ஒரு சமயத்தில் ஆகாமலும் இருத்தல் கூடும்,
ஆனால் அப்படியின்றி நான்(புருஷன்) விரத்தி எப்போதுமிருக்கின்றமையால், புருஷ்ன் விஷயமன்று, மநஸ்ஸைப் போலப் புருஷனும் மாறிக் கொண்டிருப்பானாகில், புருஷனைப் பற்றிய மநோ லிர்த்திகள் சப்தாதி விஷயங்களைப் போல அறியப்பட்டும் ௮றியப்படாமம் இருக்கும்.
புருஷன் மாறாமல் இருக்கின்றமையால் புருஷனைப் பற்றிய மநோ விர்த்தி எப்போதும் இருக்கின்றது. புருஷனுக்கு சூத்திரத்தில் பிரபு என்ற பதம் உபயோகம் இிருக்கிறது. அதன் பொருள் ஸ்வாமி என்பதால் மநஸ்ஸை விடப் புருஷன் உயர்வானவன், வேறானவன்
என்பதைக் குறிப்பதற்கு பிரபு என்ற பதம் உபயோத்திருக்கிறது -புருஷனுக்கு வேறு தன்மை என்னவென்றால்) பரிணாமமின்மையாம்.
அது (மநம்) ஸ்வ ப்ரகாஸமுன்ளதன்று. அது. (வேறே ஒன்றால் ) அறியப் படுகின்றமையால், அதாவது அது ஜடமாகிறபடியால்,–19-
அக்நியைப் போல மநஸ் தானும் பிரகாசமுன்ளது வஸ்துக்களையும் பிரகாசப்படுத்துகிறது என்று வைநாஸிகர் சொல்லுகின்றதை மறுத்தற் பொருட்டு இந்த சூத்திரம் ஏற்பட்டது,
மநம் ஸ்வ ப்ரகாசம் உள்ளதன்று, ௮து ஜடம், மற்ற இந்த்ரியங்கள் மநத்தால் பிரகாஸிக்கின்றமை போல மநமும் வேறு ஒன்றால் பிரகாசிக்கின்றது.
அக்நி உபமாநம் சரியன்று, சில வஸ்துக்களின் சேர்க்கையால் ஓரு கிரியை ஏற்பட்டு, அதன் மூலமாக அக்நியின் பிரகாசம் உண்டாகிறது,
புருஷனோ ஸ்வ பாவத்தில் பிரகாசமுள்ளவன்,-பரிணாமமில்லாதவன். பிரகாசித்தற்கு வேறு வஸ்துவின்
அபேஷை வேண்டுகின்றான் இல்லை. மநஸ் வேறொன்றின் உதவியால் பிரகாஸிக்கின்றதில்லை என்று சொல்ல முடியாது.
நான் கோபமாக இருக்கிறேன், நான் துக்கமாக இருக்கிறேன், நான் பயந்தவன் ” இப்பேர்க்கொத்த அனு பவங்களால் சித்தத்திற்குப் பரிணாமங்கள் ஏற்படுகின்றன வென்று ௮னுபவ ரூபமாக சித்தத்தின் ஸ்வருபத்தை யறிகிறோம்
ஒரே சமயத்தில் இரண்டையும் கிரஹிக்க முடியாது.–20-
இரண்டு -மநஸ், விஷயம். வைநாசிகர் (அதாவது க்ஷணிக விக்ஞாந வாதிகளின்) ஸித்தாந்தத்தில் செயலும் இருத்தலும் ஒன்றே.
ஒரே சமயத்தில் தன்னுடைய ஸ்வரூபத்தையும் வெளி வஸ்துவையும் தீர்மானிக்க முடியாது. க்ஷணிக விக்ஞாந வாதிகளின் அபிப்ராயத்தில் ஒரு வஸ்து , அதன் செய்கை, அதன் ஞானம் எல்லாம் ஒரே சமயத்தில் ஒரே ஷணத்தில் நிகழ்கின்றன என்பதாம்.
முன் க்ஷணத்தில் உண்டாகும் விர்த்தியானது; பின் க்ஷணத்தில்’ உண்டாகும் வேறு விர்த்தியால் பிரகாசம் பெறுமாகில், பின் க்ஷணத்தில் உண்டாகும் விர்த்தி அதற்குப் பின் க்ஷணத்தில் விர்த்தியை வேண்டுகிறது. . அதனுல் அநவஸ்தா தோஷம் உண்டாகிறது. ஸ்மிருதியில் குழப்பல் உண்டாகும்.–21-
புத்திக்கு ஸ்வாமியாகவும் போக்தாவாகவும். உள்ள். புருஷனை அங்கீ கரிக்காததினால் லோக வ்யவஹாரங்கள் குழப்பமாயிருக்கின்றன.
பஞ்ச ஸ்கந்தங்களை ஓப்புக் கொண்டு, அவைகளை நுகரும் புருஷனை ஓப்புக் கொள்ளாததினால் சிரஸ் இல்லாத சரீரத்திற்கு அலங்காரம் செய்தமை போல் ஆகும்.ஸ்கந்தங்களைத் தவிர்க்கவும் சாந்த நிலை பெறவும் குருவை நாடி. குருகுல வாஸம் செய்தல் வேண்டும் என்று சொல்லுகின்றார்கள் .
ஆனால் *எதற்காக இத், தன்மையான வழியோ! அது இல்லை!” சன்று சொல்துவது,அறிவீநம். நம்முடைய சித்தாந்தத்தில் புருஷனான ஸ்வாமியை ஒப்புக் கொள்ளுகிறபடியால் ஸ்மிருதி, ஞாந முதலான எல்லா வ்யவஹாரங்களும் நேர்மையாக ஏற்படுகின்றன.
வைநாசிகர் ஆஷேபத்தின் அலதாரிகை,–மநஸ் ஸ்வப் பிரகாசமுடைய தன்று, புருஷனால் பிரகாசப் படுத்தப் படுகின்றது.”
இது சரியில்லை. பரிணாமமில்லா தலராயும் அஸங்கராகவும் ஸ்வப் ப்ரகாசகராகவும் இருக்கிற ஆத்மாவை மநஸ் சம்பந்தத்தினால் ஒருவித கிரியைக்கும் கர்த்தாவாகச் சொல்ல முடியாது.-ஆத்மாவுக்கும் மனஸிற்கும் ஆகாசத்திற்கும் மற்ற பூதங்களுக்கு முள்ளது போல ஒரு வித சம்பந்தம் ஏற்படக் கூடியதில்லை.
அதனால் போக்தா என்று ஆத்மாவைச் சொல்லுகிறது எங்கனம்? இந்த ஆஷேபத்திற்கு அடுத்த சூத்திரத்தில் ஸமாதாநம் வருகிறது.
ஒன்றிலும் சம்பந்த மில்லாத அஸங்கமான சைதந்யம் (புருஷன் புத்தியில் பிரதி பிம்பிக்கும் போது) புத்தி யானது புருஷ ஸ்வரூபத்தை வடைகிறது.
அப்போது தனது (புருஷனுடைய) காரணமான புத்தி விர்த்தி பிரகாசிக்கிறது. –22-
ஒன்றிலும் சம்பந்த மில்லாத, யாதொரு பரிணாமமுமில்லாத சைதன்யம் பரிணாமமுள்ளதாகவும் சலநத்துடன் இருக்கின்ற விஷயங்களுடன் ஸம்பந்தப் படும் பொழுது சைதந்யமும் பரிணாமமுள்ளது போலும் சம்பந்தமுள்ளது போலும் காணப்படுகிறது.
ஸுர்ய பிம்பம் ஜலத்தில் தோன்றுவது போல புருஷனிடமுள்ள ஞாந விர்த்தியானது புத்தி விர்தியைத் தவிர வேறானதாக இல்லை. இதற்குப் பிரமாணம், ஸத்யமான பிரஹ்மத்தின்(புருஷனின், ஆத்மாவின்) ஸ்தாநமாக உபநிஷத்துகளில் குகை யென்று சொல்லி யிருப்பது பாதாள லோகமன்று, மலைக் குகை யன்று , இருள் அன்று, கடல் ௮ன்று, பள்ளத் தாக்குகள் அல்ல.-ஆனால் சரீரத்தின் கண்ணுள்ள புத்தி விர்த்தியேயாம்,-பிரஹ்ம சைதந்யமானது புத்தி விர்த்தியடன் அபிந்நமாகக் கலந்து இருக்கின்றது
சித்தமானது (மநமானது) புருஷனுடனும் விஷயங்களுடனும் சம்பந்தப் படுகின்றமையால், எல்லா விஷயங்களையும் அறியும் தன்மையை உடையதாகிறது.-23-
சுத்தமான விர்த்தியால் புருஷனுடனும், அசுத்தமான விர்த்தியால் விஷயங்களுடனும் மநமானது சம்பந்தம் பெறுகிறது .
புருஷனுடன் நேரில் சம்பந் திக்குங்கால் அறிவு மயமாகவும்,
விஷயங்களுடன் இந்த்ரியங்கள் மூலமாய். ஸம்பந் திக்குங்கால் பரிணாம.முள்ளாதாகவும் ஆகிறது .
மநஸுக்குப். புருஷனுடன் சம் பந்த மில்லாத காலமின்மையால் சிலர் மநஸே ஆத்மா வென்று பிரமிக்கின்றார்கள் ,
ஸ்படிகம் அதன் ௪மீபத்திலுள்ள செம்பருத்திப் புஷ்பத்தின் சாயையைப்: பெற்று, இரண்டும் அபேதமாகத் தோன்றுகின்றன போல,
மநமானது புருஷனுடனும் விஷயங்களுட,னும் மைபந் திக்கும் போது தந் மயமாக ஆகிறது. புருஷனுடன்
ஸம்பந்தித்து புருஷனாகத் தோன்று கிறதினால் மநம் தான் ஆத்மா அல்லது புருஷன் என விக்ஞாந வாதிகள் ,தவறாகக் கொள்கிறார்கள்-
என்றுமுள்ள சைதந்பமே புருஷன்.
விக்ஞாந வாதிகள் மநஸ் ஸ்வார்த்தம்” அதாவது -தனக்காகவே உள்ளது என்று சொல்வதை மறுக்க அடியில் வரும் சூத்திரம் எற்பட்டது
மநமானது எண்ணிறந்த வித்தியாஸமான வாஸனைகளால் நாதாவித மாகத் தோன்றினும் (இந்த்ரியாதிகளுடள்) சேர்ந்து காரயங்களைச் செய்வதால் ஸ்வார்த்தம் அன்று -ஸ்வ ப்ரயோஜநத்திதிற்காக அன்று பரார்த்தமாம் -(அந்யனின் பரயோஜநத்திற்காகவாம்),–24-
பரார்த்தம்–போக்யம், –ஸ்வார்த் தம் – போக்தா. சரீரம் இந்த்ரியங்களுக்கு எப்படி பரார்த்தமோ இர்த்ரியங்கள் எப்படி,மனஸுக்குப் பார்ர்த்தமோ ,
அப்படியே மநஸும் புருஷனுக்கு பரார்த்தம்,-புருஷன் ஸூக துக்கங்களை அனுபவிப்பதற்காகவும்,. விஷயங்களைத் தெரிந்து கொள்ளுவதற்காகவும் மனம் ஏற்பட்டுள்ளது பரம்பரையாக சரீரம் குணங்களினின்று ஏற்பட்டிருக்கிறது. இந்திரியங்களும் அவ்விதமே -சித்தமும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்று குணங்களினின்று ஸாஷாத்த்தாக ஏற்பட்டு இருக்கிறது-அதனால் மநம் ஸ்வார்த்தமன்று, பரார்த்தமே. புருஷன் ஒருவனே ஸ்வார்தம். மற்றவை யாவும் குணங்களும் அவைகளின் காரியங்களும், பரார்த்தம்.
இந்த ௮டியிற் கண்ட. கடோபநிஷத்தின் மந்த்ரம் -புருஷனை விட மேலானது ஒன்றுமில்லை.அது தான் எல்லாராலும் அடைய வேண்டிய, ஸ்தாநம்,-என்கிறது
விசேஷத்தை (பிரகிருதி புருஷர்களை) நன்றாய் . அறிந்தவனுக்கு அஹம்.பாவனை ஒழியும், நீங்கி விடும்,–25-
நன்றாய். அறிந்தவன் என்பதற்கு மனஸ் இத்தன்மையது -புருஷன் இத் தன்மையன் என்று. உண்மையை. யறிந்தவன் என்று பொருள்.
மழைக்காலத்தில் புல், பூண்டுகள் உண்டாகின்றமையால், வித்துக்கள் முன்னமேயே, இருக்க வேண்டுமென நாம் யூகிக்ன்றமை போல, மோக்ஷ, மார்க்கக்தைப் பற்றிக், கேட்கும் போது. ஸந்தோஷமடைந்து ஆநந்த பாஷ்பம் விடுகிறவன் முன் ஜந்மத்தில். புருஷனுக்கும் ஸத்வத்திற்கும் (மநத்திற்கும்) உள்ள வித்யாஸத்தை உள்ளபடி. அறிய. யத்தநம் செய்திருக்கிறான் என்று. தெரிய வரும்.
புருஷன் இத் தன்மையன் என அறிய அவா வுள்ளவனாக. இருப்பான் – ௮தை அறிந்து நான் என்ற பாவனையையும் அற்று விடுவான்.,
(அவ்விதம் அஹம் பாவனை அற்றுப் போன ), போழ்து மநமானது விவேகம் பெற்று கைவல்ய நிலையை, அடைகிறது -26-
இது காறும் விவேகமில்லாமையால் விஷயாதிகள்- மனத்தைப் பற்றிக் கொண்டிருந்தன. அதனால் மநம் ஸம்ஸார மார்க்கத்தை நோக்கி நடை பெற்தது,
இப்போது புருஷன், பிரகிருதி ‘இவைகள் வேறு என விவேகம், அடைந்தது, கைவல்ய பாவனையை யுடையதாக மநம் ஆகிறது
கைவல்யத்தை நோக்கி: ஸமாதி கொன்ளும் காலம் நீங்கலாக. இடைவெளிகளான மற்ற காலங்களில் பூர்வ வாஸனைகளினின்று. வேறு விர்த்திகள் உண்டாகும்–27-..
ஒரே வித. பிரத்யயம் இருத்தல் என்றால், ஒரே விர்த்தி-ஒன் றின் பின் ஓன்றாய் தொடர்பாய் தைல. தாரை போல் நிகழ்தல் என்பதாம்.
ஒரு விர்த்திக்கும் மற்றொரு விர்த்திக்கும் இடைவெளிகள் இருக்கின்றன வல்லவா? இவ் விடை.வெளிகளின் பூர்வ வாலனையால் அந்த விர்த்திகள் உண்டாகக்கூடும்.
ஆனால் இப்பூர்வ வாஸநா விர்த்திகள் பாதிக்கின்றன வல்ல.-கிலேசங்களைப் போல தஹிக்கப் பட்டிருக்கின்றமையால், வறுக்கப் பட்டிருக்கின்றமையால்,–28-
அந்த விர்த்திகள் இவன் பிரக்ஜ்க்ஷைக்கு வந்தாலும், .இந்த யோகியை பாதிக்கின்றன வல்ல. நாளடைவில் அவைகளின் ;வேகமும் வீர்யமும் குறைந்து கொண்டே வந்திருக்கின்றமையால் வறுக்கப்பட்ட விதைகள் போல விர்த்திகள் ஏற்படுகின்றன.
பிரகிருதி புருஷ விவேகம் ஏற்பட அந் நிலையிலும் கொஞ்சமேனும் பற்றில்லாமல் இருக்கிற யோகிக்கு எல்லா வழியிலும் ‘ விவேகம்.பரவி யிருக்கின்றமையால் தர்மமேகம் என்ற ஸமாதி கை கூடுகிறது.–29-
26 தத்வங்களை நன்றாய் .உணர்ந்து பிரக்ருதி புருஷ. விவேகம் பெற்ற யோகிக்கு எல்லா வற்றையும் அறியக் கூடிய தன்மையும் எல்லாவற்றிற்கும் அதிபதியாகும் தன்மையும் உண்டாகின்றன.இந் நிலைக்கு பிரஸம்க்யாநம் என்று பெயர்…இந் நிலையிலும் பற்றில்லாத யோகிக்கு விவேக க்யாதி எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் அவிச்சிந்நமாக.இடையறாமல் தொடர்பாய் உண்டாகிறது. இதற்குத் தான் தர்மமேகம் என்று பெயர்
யஸ்து ஸர்வாணி பூ4தான்ய ஆத்மன்ய ஏவானுபஶ்யதி |
ஸர்வபூ4தேஶு சாத்மானம் ததோ ந விஜுகு3ப்ஸதே ||ஈசாவாஸ உபநிஷத்-6-
யஹ து – யாரொருவன்
ஸர்வாணி பூதானி – எல்லா ஜீவராசிகளையும், பூதங்களையும்
ஆத்மனி ஏவ – தன்னிடத்திலேயும்
ஸர்வ பூ4தேஷு – எல்லா பூதங்களிடத்திலும், ஜீவராசிகளிடத்திலும்
சாத்மானம் – தன்னை பார்க்கின்றானோ
தத3 – இப்படிபட்ட பார்வையினால்
ந விஜுகு3ப்தஸதே – யாரையும் நிந்திக்கவோ, வெறுக்கவோ மாட்டான், யாரிடத்திலும் பரிதாபப்படவோ மாட்டான் கருணையே கொள்வான்
———-
யஸ்மின் ஸர்வாணி பூதான்ய ஆத்மைவாபூ4த்3 விஜானத: |
தத்ர கோ மோஹ:: க: ஶோக ஏகத்வம் அனுபஶ்யத: ||ஈசாவாஸ உபநிஷத்-7-
விஜானத: – ஆத்ம ஞானத்தை அடைந்த ஞானிக்கு
யஸ்மின் – எப்பொழுது, எந்தக் காலத்திலும்
ஸர்வாணி பூதானி – எல்லா ஜீவராசிகளிடத்திலும்
ஏகத்வம் அனுபஶ்யதஹ – ஒன்றையே பார்ப்பவனாக இருப்பதால்
தத்ர – அந்த காலத்தில்
கஹ மோஹ கஹ ஶோக – மோகமும் இல்லை, சோகமும் இல்லை
ஆட்சேப முறையில் சொல்லுதல் கருத்து அதன் இருப்பை ஆழமாக சொல்வதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஞானமானது அவ்வளவு சுலபமாக மனதில் பதியாது. எனவே எந்த நேரத்தில் இந்த அறிவு மனதில் இருக்கிறதோ
அந்த நேரத்தில் கோபமும், மோகமும் இருக்காது. எந்த ஞானியிடத்தில் எல்லா ஜீவராசிகளிடத்தில்
தானாகவே இருப்பதாக அறிவுடன் இருக்கின்றானோ அவனிடத்தில் சோகமும், மோகமும் இல்லை.
மோகம் – ஆத்ம ஆவரண லட்சணம், ஆத்மாவை மறைக்கும் நிலை
ஶோகம் – விக்ஷேபம் – பொய்யானவை தோற்றுவிக்கும், மனம் கொந்தளிப்பை கொடுப்பது
ஆத்மாவைப்பற்றிய அக்ஞானம் இல்லை, தன்னைக் குறித்து எந்த சோகமும் இருக்காது. மோகத்துக்கும், சோகத்துக்கும் அனுபவங்கள்,
சம்பவங்கள் இருந்து கொண்டிருக்கும். ஆனால் அதை பொருட்படுத்துவதும் விதத்தில் அவைகளில் இல்லாமை உணரப்படும்.
அவைகளால் பாதிக்கப்படாமல் இருப்போம். சோகத்திற்கு காரணம் மோகத்தினால்தான் என்று சொல்லப்படுகிறது.
————
அக்ருஷ்ணம்* -பாப கர்மத்தில் பற்று இன்மை என்றும், அசுக்லம் -புண்ய கர்மத்தில் பற்று இன்மை -என்றும் சொல்லப்பட்ட உத்தம தர்மத்தின் பலனான கைவல்ய ஸ்தியை இடை விடாமல் இந் த ஸமாதி வர்ஷிக்கிறதினால் இதற்கு தர்மமேகம் என்று பெயர்,
“ மேலென்றும் கீழென்றும் இரண்டறக்க காணும் கால்
தான் என்று நான் என்று தன்மைகள் ஓர் ஆறும்
பார் எங்குமாகிப் பரந்த பரா பரம்
காரென்று கற்பகமாக நின்றானே ‘”–திரு மந்த்ரம் ,
கார்–மேகம், ஓர் ஆறும் = தான், நான் , நீ , அவன், அவள், ௮து என்ற தன்மைகள்.
அதனால் (தர்ம மேக ஸமாதியினால் ) கிலேசங்கள், கர்மங்கள் இவைகள் ஓழிவை அடைகின்றன.–30-
இவைகள் ஒழிவை யடையவே. யோகி உயிரோடிருக்கும் போதே முக்தனாகிறான் , வாஸனைகளோடு கூடிய: கிலேசங்கள்,.கர்மங்கள் தான் ஸம்ஸாரத்திற்குக் காரணம். அவைகள் நீங்கவே.ஸம்லாரம் விடும்
அப் பொழுது ஸகலமான ஆவரணமம் (மறைவு ), மலங்களும்(கிலேச கர்ம ரூபமான மலங்கள்) நீங்கப் பெற்ற ஞாநத்திற்கு அளவில்லாமையால் ,அறிய வேண்டியதானது (விஷயமானது) அல்பமாம். –31-
ஆசாசத்தில் மின்மினிப் பூச்சிபோல விஷயமும்,-ஆகாசம் போல ஞாநமும், ஏற்படுகின்றன. கண்ணின்றி முத்தில் ஓட்டை பண்ணுகிறான், விரலின்றி நூல் கோர்க்கிறான். கழுத்,தின்றி அணிகிறான், நாவின்றி ஸ்துதிக்கிறான். அதாவது ஒரு வித சாதநங்களுமின்றி எல்லாக் .காரியங்களையும் அவன் செய்கிறான். ஸங்கல்பமே எல்லாவற்றையும் ஸித்திக்கும்படி செய்கிறது .
நோக்கின்றி கண்டு நற் கையின்றிக் கொடுத்து மறை நுவல்வதாய
நோக்கின்றி அறு சுவையும் இனிது உணர்ந்தும் காலின்றி நடத்தல் செய்து
மூக்கின்றி மணம் கவர்ந்தும் செவியின்றிக் கேட்டும்-”என்ற பெரியார் பாசுரம் இந் நிலையிலுள்ள யோகியின் தகைமையை அறிவிக்கிறது :
அதற்தப் பிறகு (தர்மமேக ஸமாதி யடைந்த பிறகு ) குணங்கள் செய்ய வேண்டிய காரியம் முடிவு பெற்றமையால், குணங்கள் ஒன்றின்
பின் ஒன்றாய் வரிசையாய்ப் பரிணமிக்கும் தன்மையும் முடிவு பெறுகிறது,–32-
குணங்கள் புருஷனுக்கு போகம், அபவர்க்கம் இவை யிரண்டையும் கொடுப்பதாக ஏற்பட்டன… கைவல்ய நிலையைப் பெற்ற புருஷனுக்கு இவை வேண்டுவன வல்ல.
ஒவ்லொரு க்ஷணத்திலும் (மாறி மாறிக் கொண்டு இருக்கிற) குணங்களின் பரிணமிக்கும் வரிசையானது (யோகியால்) பரிணாமத்தின் அபராந்தத்தில் விலக்கத் தக்கதாக ஆகிறது.–33-
பூர்வாந்தம் என்றும், அபராந்த மென்றும் பரிணாமங்கள் இரு வகை.– பூர்வாந்த மென்பது, காரணமானது காரியமாகப் பரிணமிக்கும் வரையும்,
அபராந்தம் என்பது, அக் காரியமானது மறுபடி வர வரக் காரணமாகப் பரிணமிக்கும் வரையுமாம்.
வஸ்துக்கள் கூடஸ்த நித்யம், பரிணாம நித்யம் என இரண்டு வித நிலைகளில் இருக்கின்றன. புருஷர்கள் கூடஸ்த நித்யர்களாம்.-குணங்கள் பரிணாம நித்யமாம்.
எந்த வஸ்து வானது தர்மம் (குணம்) மாறிக் கொண்டிருக்கும் போது, மாறாமல் இருக்கிறதோ அது நித்யம்.
குணங்களின் கார்யங்களான புத்தி, மநம் முதலியவைகள் யோகாப்யாஸத்தினால் வரவர ௮திக ஸூஷ்மமாகப் பரிணமித்துக் கொண்டு வருகின்றது. ௮ப் பரிணாமம் முடிவு பெறும் காலத்தில் அபராந்தம் என்ன பெயர். அந்த ஸ்திதியில் புருஷ ஸாஷாத் காரத்தை யோகி பெறுவான். அதற்கு மேல் புத்திக்கு யாதொரு பரிணாமமும் இல்லை. இதுவே தர்மமேசு ஸமாதியாம்.
கைவல்யம் என்பது புருஷனுக்கு (போகம், அபலர்க்கம் இரண்டிற்கும் காரணமான)குணங்கலின் லயம் அல்லது , (யோகி) தன் ஸ்வரூபத்தில் நிற்றல், அல்லது சைதந்ய ரூபமாக இருத்தலாம்.–34-
கைவல்யம் சரீர ஸம்பந்தம் , விஷய ஸம்பந்தம் இன்றி தனித்திருத்தல்.-பிரதி ப்ரஸவை: — நாநா வித வாஸநைகள்.
ஸமாதி விஷயமான விர்த்திகள், வ்யுத்தாந ஸம்ஸ்காரங்கள், முதலியன மநத்தில் லயம் அடைகின்றன. மநஸ் அஸ்மிதையில், லயம் அடைகின்றது அஸ்மிதை மஹத் தத்துவத்திலும், மஹத் தத்துவம் குணங்களிலும் லயம் ௮டை.கின்றன. குணங்கள் கைவல்யம் பெற்றவனைத் தொடருகின்றனவல்ல. ஸம்பந்திக்கின்றனவல்ல,
கைவல்ய பாதம் முற்றிற்று.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply