ஸ்ரீ பகவாந்‌ பதஞ்ஜலி மஹரிஷி அருளிச் செய்த யோக ஸூத்திரம்‌ -3-விபூதி பாதம் —

ஸம் யமம் எனப்படும் தாரணை முதலிய அந்தரங்க சாதனங்களையும் -அவைகளால் பெறக்கூடிய ஸித்திகளையும் இந்த அத்தியாயத்தில் பகவான் பதாஞ்சலி சொல்லுகின்றார்

தாரணை என்பது மநத்தை, (ஒரு குறித்த), இடத்தில்‌ கட்டுதலாம்‌.–1-

(1) மூலாதாரம்‌, ஸ்வாதிஷ்டாநம்‌, நாபி சக்ரம்‌, ஹிரு,தய புண்டரீகம்‌, பிரஹ்மரந்த்ர ஜ்யோதிஸ்‌, புருவ மத்யம்‌, நாஸி நுனி, உள் நாக்கின்‌ நுனி, சரீரத்தில்‌ இவை போன்ற. இடங்களிலாவது அல்லது வெளியிலுள்ள விஷயங்களிலாவது , மநோ விர்த்தியை நிறுத்தல்‌, ஒரே! விர்த்‌திபில்‌ நிற்கும்படி. மநத்தைக்‌ கட்டுதல்‌ தாரணை எனப்படும்‌.
அடியிற் கண்ட திரு மந்த்ர வசநம்‌ கவனிக்கத்‌ தக்கது …

கோணா மநத்தைக் குறி கொண்டு கீழ்க் கட்டி
வீணாத் தண்‌டூடே வெளியுறத் தானோக்கிக்
காணாக் கண்‌ கேளாச்‌ செவியென்‌ றிருப்பார்க்கு,
வாணா ளடைக்கும்‌ வழியது வாமே.

பிராணாயாமத்தினால்‌ வாயுவையும்‌, பிரத்யாஹாரத்தினால்‌ இந்திரியங்களையும்‌ ஜயித்து மநத்தை ஒரு இடத்தில்‌ நிறுத்த.முயல வேண்டும்‌.
முதலில்‌ பகவானுக்கு எல்லாசக் கல்யாண குணங்களுடன்‌ கூடியவும்‌ பல ஆபரணங்களுடையவுமான ஸ்வரூபத்தைக்‌. கற்பித்து, ௮தில்‌ நிற்கும்‌ திறமை பெற்ற பின்பு. அந்தக்‌ கற்பித்த ஸ்வரூபத்தினின்று ஒவ்வொரு, ஆபரணத்தின்‌ குணத்தை ஒன்றின்‌ பின்‌ ஒன்றாய்த்‌ தள்ளி, அந்த அந்த ஆபரணாமின்றியும்‌ அந்த அந்தத்தனித் தனி குணமின்‌றியுமுள்ள ஸ்வரூபத்தில்‌ மநத்தை நிறுத்தவேண்டும்‌.
பின்பு அந்த ஸ்வருபத்திலும்‌ பல ௮வயவங்களையும்‌தள்ளி, நேதி பண்ணிக் கொண்டே போக, ஒரு நிலையில்‌ ஜ்யோதிஸ்ஸை யோகி யானவன்‌ காண்பான்‌, ௮தில்‌ மநம்‌ நிற்கும்படி. செய்யவே பின்பு அறிபவன்‌, அறிவு அறியப் படும்‌ பொருள்‌ எல்லாம்‌ ஒன்றாகும்‌ நிலை ஸித்திக்கும் ௮துவே நிர்விகல்ப ஸமாதி.
ஸ்ரீமாணிக்‌க வாசகரின்‌ அடியில்‌ வரும்‌ பாசுரம்‌ இங்கு கவனிக்கத் தக்கது.
இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்தில் எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீ யல்லால் பிரிது மற்றின்மை–இது பஹிஷ் பிரபஞ்ச லய சிந்தனையைச்‌ சொல்‌லுகின்‌றது.

“நேதி”பண்ணிக் கொண்டு போகும்‌ முறை தன்‌ சம்பந்தமாகவும்‌-சரீர சம்பந்தமான சக்கரங்கள் – வெளிப்பிரபஞ்சம்‌ சம்பந்தமாகவும்‌ நிகழும்‌.
கட உபநிஷத் 3-10 3-11 மந்த்ரங்கள் பஹிஷ் பிரபஞ்ச லய சிந்தனையைப் பற்றியும்
6-7 6-8 மந்த்ரங்கள் ஆந்த்ர பிரபஞ்ச உள் நோக்கிய லய சிந்தனையைப் பற்றியும் சொல்லும்

அதில்‌ (அவ்விதம்‌ மநம்‌ ஒரு இடத்தில்‌ கட்டுண்டு. இருப்பதில்‌) மநம் ஓரே விர்த்தி ரூபமாக இருத்தல்‌-தியாதமாம்‌.–2-

(1) தியாநிக்கப்படும்‌ வஸ்துவில்‌ பிரவாகம் போல இடையறாது மநத்தை இருக்கும்படி செய்தல்‌ தியாநம்‌.
(2) விஷ்ணு, புராணத்தில்‌ கேசித்வஜனுக்கும்‌ காண்டிக ஜநகருக்கும்‌ நடந்த ஸம்வாதத்தில்‌ பின்வரும்‌ விஷயமுள்ளது
பலவாறான விர்த்திகளைத்‌ தள்ளி ஒரு லஷ்யத்தில்‌ நிகழும்‌ ஏக ருபமான விர்த்‌திப்‌ பிரவாகம்‌ தியாநமாகும்‌. முற் கூறிய யமம்‌ முதலிய அங்கங்கள்‌ ஸ்திரப்பட்டால்‌ தான்‌ புத்தி ஏகாக்ரதை பெற்று தியாநத்‌திற்கு யோக்யமாக அமையும்‌,
(3) பிர்த்யாஹாரம்‌ –இந்திரியங்களை ஜயித்தல்‌. தாரணை என்பது ஒரு லஷ்யத்தில்‌ சொற்ப காலம்‌ மநத்தை நிறுத்தல் – தியாநம்‌ என்பது ஒரு லஷ்யத்தில்‌ மனத்தை தீர்க்க காலம்‌ நிறுத்தல்‌, ஸமாதி, என்பது தான்‌ நினைத்தபடி 10 நாள்‌, ஒரு மாதம்‌, ஒரு வருஷம்‌ மநத்தை நிறுத்தல் – இவ்வாறாக விக்ஞாரபிகஷு – என்பாரின்‌ அபிப்பிராயம்‌.

தியானம் பயன்பட.வேண்டுமானால்‌, குறித்த காலம்‌, குறித்த இடம்‌, நியமிக்த முறை இலை மாறாமல்‌ தினம் தினம் நேர்மையாய்ச் செய்தல்‌ வேண்டும்‌,
ஒருநாள்‌ ஒரு இடத்திலும்‌ ஒரு காலத்திலும்‌ ஒரு முறையாகவும்‌ மறு நாள்‌ இவைகளை மாற்றுதலும் அல்லது தியானம் செய்யாமல்‌ இருத்தலும்‌,
வேறு ஒரு நாள் சாவகாசம்‌ அதிகம்‌ உளது என எண்ணி அதிக காலம்‌ ,தியாநித்தலும்‌ பயன்படாவாம்‌. –ஆனால்‌  தியானம் நிகழும் காலத்தைச்‌ சிறுகச்
சிறுக அதிகப் படுத்திக் கொண்டு போதல்‌ நலம்‌ தரும்‌.

அந்த தியாநமே, வஸ்து ஸ்வரூபமாக மாத்திரம்‌ தோன்றுவதாயும்‌-தியாநம்‌ -தியாநிக்கிறவன்‌ என்ற இரண்டின்‌ ஸ்வரூபமும்‌
இல்லனபோலிருப்பதாயும்‌ நிகழ்கின்ற மநத்தின்‌ நிலையில்‌ ஸமாதி எனப்‌ பெயர்‌ பெறும்‌. –-3-

(1) ஸ்வருப சூந்யம் போல்‌ : தியாநம்‌, தியானிகிக்கறவன்‌ என்ற ஸ்வரூபங்கள்‌ உள்ளன. அவை அழியவில்லை. ஆனால்‌ அவைகளின்‌ அறிவு இன்றாம்‌ என்பது கருத்து.-நிர்மலமான்‌ ஸ்படிகம்‌, அதன்‌ சமீபத்தில்‌ உள்ள செம்பருத்திப் புஷ்பத்தின்‌ ரூபமாக அதாவது நிறமாகத்‌ தோன்றுவது போல, நிர்மலமான மநம்‌ அது லஷிக்கிற வஸ்து ரூபமாக இருப்பதாகத்‌ தோன்றலாம்‌.

தாரணையில்‌ பல விஷயங்களைத் தவிர்த்து, ஒரு வஸ்துவில்‌ மநம்‌ கட்டப் படுகிறது .
தியாநம்‌, ஓரே வஸ்துவை திரிபுடியுடன் சிந்தித்தல்
ஸமாதி திரிபுடி அற்று த்யேய ரூபமாக (வஸ்து ரூபமாக) மநம்‌ ஆகுதலாம்
அந் நி லையில்‌ தீர்க்க காலம்‌ மநம்‌ இருந்தால் ஸம் ப்ரக்ஞாத ஸமாதி.
த்யேய வஸ்‌துவின்‌ ஞாநம்‌ கூட இல்லாமல்‌ வெகு காலம்‌ மநம்‌ இருத்தல்‌ அஸம்ப்ரக்ஞாத ஸமாதியாம்‌,
இவ்‌ விதமான தாரதம்யங்கள்‌ அறியத்தக்கன.

மேற் கண்ட மூன்றும்‌ (தாரணை, தியாநம்‌, ஸமாதி) ஒருங்காக ஸம் யமம்‌ (மநத்தை நன்றாய்‌ அடக்குதல்‌. )என்று சொல்லப் பெறும்‌.–4-

அதை ஸம் யமத்தை ஜெயிப்பதால் பிரஞ்ஜைக்கு பிரகாசம் உண்டாகிறது.–5-

எவ்வளவுக்‌ கெவ்வளவு ஸம்யமம்‌ ஸ்திரப்படுறதோ ,
அவ்வளவுக்கவ்வளவு பிராரந்தி ஸம்சயங்கள்‌ நிவிர்த்தியாகி ஸமாதி பிரஞ்ஜை நிர்மலமாகிறது.

அந்த ஸம் யமமானது (உயர்‌) பூமிகளில்‌ (ஏறுவதற்கு ) பிர யோஜநமானது. –6–

மேற் கண்ட தாரணை, தியானம் , ஸமாதி என்பவைகளில்‌ ஏறியவனுக்கு இனி வரும்‌ யோக பூமிகளில்‌ ஸம் யமம்‌ உப கீழான பூமிகளை ஸ்வாதீநப் படுத்தாமல்‌ மேல்‌ பூமிகளில்‌ பிரவேசித்தல்‌ இயலாதாம்‌. ஓருகால்‌ ஆயினும்‌ அவைகளில் ப்ரக்‌ஞப்‌ பிரகாசம்‌ நிகழாதாம்‌.
கீழான பூமிகளில் ஸித்திகளில் ஆசைப்‌பட்டு அவைகளை அப்யஸிக்கிறவன் -௮தாலது தூர தர்சனம் , தூரக்‌ கேள்வி முதலியன- மேல்‌ பூமிபில்‌ ஏற இயலான்‌.-கீழ்‌ பூமி பிரவிர்‌த்திகளை விட்டு மேல்‌ நோக்க வேண்டும்‌. ஒரு பூமிக்கு அடுத்து மேலான இன்ன பூமி இருக்கிறது என்பது யோகிக்குத்‌ தனக்குத் தானே தெரிய வரும்‌. இதை வேறே ஒருவர்‌ உபதேசிக்க வேண்டியதில்லை.
முந்திய பூமியில்‌ இருக்கின்றவன்‌ அதன்‌ ௮னுபவத்தால்‌ இனி வரும்‌ பூமியின்‌ தன்மையைசத் தெரிந்து கொள்வான்‌. அந்த உயர் பூமியைத் தர்சித்து ஸந்தோஷிப்பான்‌. ஓர் ஓர்‌ பூமியில்‌ யோகம்‌ ஸ்‌திரப் படுவதால்‌ மேன் மேலும்‌ யோகம்‌ நலம் பெறும்‌,

மேற்கண்ட விஷயங்களின் தாத்பரியம் –ஒரு பூமியின் யோக அப்யாஸத்தினால் அதன் அடுத்த மேல் பூமி இன்ன தன்மையது என அறியப்படுகிறது
பூர்வ பூமியை ஜெயிப்பதால் மேலான பூமியில் பிரவேசம் ஏற்படுகிறது
எந்த யோகி யோக அப்யாஸத்தினால் உண்டாகும் ஸித்திகளில் மயங்கி மோசம் போகானோ அவன் யோகத்தின் சுகத்தை நீடித்த காலம் அனுபவிக்கிறான்

பல பூமிகள்‌ என்பது தியானத்தில் பல படிகள்‌ என அறிய வேண்டும்‌. முகலில்‌ ஈஸ்வரனைப்‌ பல ஆபரணங்கள்‌ உள்ளவனாகத் த்யாநிக்க வேண்டும்‌. அந்தத்‌ த்யானம் ஸ்திரப்பட ௮வைகளில்‌ ஓன்றொன்றாக விட்டு அவரைத் தியானிக்க வேண்டும்‌. பின்பு எல்லாவற்றையும்‌ முற்றும்‌ விட்டு அவரைத்‌ த்யாநிக்கவும்‌, பின்பு அவருடைய பல அங்கங்களைத்‌ த்யாநிக்கவும்‌, பின்பு அவரும்‌ தியாநிக்கிறவனும்‌ ஒருவர்‌ என தியானிக்க வேண்டும்‌. அதாவது-ஸோஹம்‌? *: ஹம்ஸ: ” என்ற விதமாய்‌ * அவரே நாம்‌”? “நாமே அவர்‌ ”* என்பதாகத் தியாநிக்க வேண்டும்‌. பின்பு இந்த வித துவைத நாட்டமும்‌ அற்று, “நான்‌!” என்ற பிரக்ஞை மாத்திரம்‌ நிகழும்‌ நிலைைமை வரையில்‌ தியாநம்‌ உயர் நலம்‌ பெறுவதாகும்‌.

முன்‌ சொன்ன (யமம்‌-முதவியவற்றைப்‌ பார்க்கிலும்‌ இவை மூன்றும்‌(ஸ்ம் ப்ரக்ஜாத ஸமாதிக்கு) அந்தரங்க ஸாதநங்களாம்‌.–7-

இயமம்‌, நியமம்‌ முதலிய ஐந்தும்‌ சரீரம்‌, பிராணன்‌,இந்திரியம்‌, மநம்‌ இவைகளின்‌ மலங்களை விலக்குகின்றன
தாரணை முதலிய மூன்றும்‌ ஸமாதியின்‌ ஸ்வருபத்‌திற்கு ஸாக்ஷாத்தாக உதவுகின்றமையால்‌ அந்தரங்கமெனச்‌ சொல்லப்படுகின்‌றன.

இவை மூன்றும்‌ கூட, நிர்பிஜ ஸமாதிக்கு வமாதிக்த (அஸம் ப்ரக்ஞாத ஸமாதிக்கு ) வெளிப் படையான ஸாதநங்களாம்‌.–8-

(1) தாரணை முதலியவை ஓய்வடைந்த நிலையே அஸம் ப்ரக்ஞாத ஸமாதியாகும்‌. இந் நிலையில்‌ தாரணை முதலியவை இல்லாமற்‌ போகின்றன, அதனால்‌ இவை பஹிரங்க (வெளிப்படை,யான) சாதநங்கள்‌ எனச்‌ சொல்லப்படுகின்‌றன;
(2) தாரணை முதலியவை யாதேனும்‌ ஒரு விர்த்தியுடன்‌ நிகழ்வது. இவை மூன்றின்‌ அப்பியாஸத்தினால்‌ ஸம் ப்ரக்ஞாத ஸமாதியின்‌ மேன்மையை யோகி அடைகிறான் – பர வைராக்யம்‌ என்ற பிரக்ஞா ப்‌ரஸாதத்தைப்‌ பெறுகிறான்‌. இதனால்‌ அஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு அர்ஹனாகிறான்‌,
தாரணை முதலியவை பிரக்ஞா ப்‌ரஸாதத்தை உண்டு பண்ணுகிறதே தவிர ஸாஷாத்தாக அஸம் பிரக்ஞா ஸமாதியை உண்டு பண்ணுகிறது இல்லை;

பஹிர் முகமான வாஸனைகள்‌ என்ன, அவைகளைத்‌ தடுக்கின்ற வாஸனைகள்‌ (என்ன அதாவது நிரோத வாஸனைகள் என்ன), இவைகள்‌ முறையே
குறைதலும்‌ விருத்தி பெறுதலும்‌ (ஏற்படுங்காலத்தில)நிரோதம்‌ என்ற பூமியில்‌ மநம்‌ இடையறாது நிற்கும் -அது நிரோத பரிணாமம் (நிரோத விர்த்தியாக மநம்‌ மாற்றம் பெறுதல்‌) எளப்‌ பெயர்‌ பெறும்‌,
(1) புருஷன்‌ அசலன்‌. குணம்‌, குண காரியம்‌ எல்‌லாம்‌ சலநமுள்ளவை . குண காரியமான மநமும்‌ சலநமுள்ளதினால்‌, அஸம் ப்ரக்ஞாத ஸமாதியிற் கூட மநம்‌ சலனமுற்று இருக்கும்‌. -அதாவது பரிணாமம்‌ பெற்று நிகழும்‌. அந் நிலையில்‌ உள்ள பரிணாமம்‌
எத் தன்மையது என்பதை இச் சூத்திரம்‌ விளக்குகின்றது…

வ்யுத்தாநம்‌ என்பது மநம்‌ பஹிர் முகப்படுதல்‌. இந்த இடத்தில்‌ ௮ஸம் ப்‌ரக்ஞாத ஸமாதியை நோக்க, ஸம் ப்‌ரக்ஞாத ஸமாதி. பஹிர் முகமாக இருத்தலால்‌, வ்யுத் தாநம்‌ என்பது ஸம் ப்‌ரக்ஞாத ஸமாதியைக்‌ குறிக்கிறது – நிரோதம்‌ என்பது பர வைராக்யம்‌. இஃது ஏற்படுதல்‌ அலம் ப்ரக்ஞாத ஸமாதி நிலை;பாம்‌.

அதற்கு (அந் நிலையிலுள்ள மநத்திற்கு மேற்படி நிரோத: ஸம் ஸ்கார அப்பியாசத்தினால்‌, சாந்த நிலை பிரவாகமாக ஏற்படுகிறது..–10-

பிரவாகம்‌ – இடையறாமல்‌! இருத்தல்‌, ‘-வ்யுத்தாக .ஸம்ஸ்காரம்‌ குறைவு படவும்‌ நிரோத. ஸம்ஸ்காரம்‌ ஸ்‌திரப்படுதலை இச்சூத்திரம்‌ விளக்குகின்‌றது.

எல்லா வஸ்துக்களையும்‌ பற்றிச்‌ செல்லும் மநத்தின்‌ தன்னை குறையவும்‌, ஐகாக்ரியம்‌ பெறும்‌ தன்மை விருத்தியாகவும்‌ மநம்‌ ஸமாதி நிலைமைப்‌ பெறுகிறது. –11-

இது ஸம் பிரஞ்ஞாத ஸமாதியைப்‌ பற்றியது. மநத்திற்கு இரண்டு தன்மைகள்‌ உண்டு. ஒன்று எல்லா வஸ்‌துக்களையும்‌ கிரஹிக்கும் தன்மை,
மற்றது ஒரே வஸ்துவினிடம்‌ ஒருமுகப்பட்‌டிருக்கும்‌ தன்மை, இவைகளில்‌ முன்னது ஸாதாரணமாய்‌ நடை பெறுகிறது -பின்னது குப்தமாக இருக்கிறது-
முன்னதை அடக்கி அல்லது குறை பண்ணிப்‌ பின்னதை வெளிப்படுத்தி விருத்தி செய்தால்‌, ஸமாதி கைகூடும்‌. இதுவே மநம்‌ ஐகாக்ரியம்‌ பெரும் நெறி

பிறகு (விக்ஷேப விர்ந்தி குறைந்த பிறகு) சித்தத்தின்‌ சென்ற விர்த்‌தியும்‌, நிகழும்‌ விர்த்தியும் ஒரே ரூபமாக இருந்தால்‌, மநம்‌ எகாக்கிர நிலயைப்‌ பெறும்‌.-12-

(1) ஒரே வஸ்துவைப்‌ பார்ப்பதில்‌ அவ்வஸ்‌துவின்‌ பல பாகங்களைப்‌ பார்த்தால்‌ வித்‌தியாஸமான விஷயங்கள்‌ மனத்தை உண்டாகின்றன.
அப்படியின்றி ஒரு வஸ்‌துவின்‌ ஒரே பாகத்தை அதாவது அகன்‌ ஓரே விஷயத்தை மநத்தில்‌ நிறுத்‌தி அவ்விர்த்‌தி ரூபமாக மநம்‌ நிற்கும்‌ நிலை மநத்தின்‌ ஒருமுகப்பட்ட நிலை. இந் நிலையில்‌ காலங்கழிதல்‌ தோன்றாது
எவ்வளவுக்கு எவ்வளவு கால நிகழ்‌சி பிரஞ்ஜைக்கு வராமல்‌ இருக்கின்‌றதோ அவ் வளவுக்கவ்‌வளவு
மனத்தின் ஏகாக்ர நிலை உறுதிப்பட்டது என்பதற்கு அறிகுறியாம்‌.
சாதாரணமாய்‌ ஏதேனும்‌ ஒரு விஷயத்தைப்பற்றிய சிந்தனை நீடித்து நிகழுமாகில்‌ அப்போது கால நிகழ்ச்சி
தோன்றாமல் இருக்கின்றமையைக்‌ காண்கின்றோம்‌. எவ்வளவு காலம்‌ கழிந்து விட்டது என்று நாமே ஆச்சரியமாகக் காண்கின்றோம் .
இச் சூத்திர த்தில்‌ அத்தன்‌மையான நிலையைப் பற்றிச்‌ சொல்லி யிருக்கிறது -. விர்த்தியின்‌ பிரவாகம்‌ ஒரே தன்மையாக நிகழற்பாலது என்பு இச் சூத்திரத்தின்‌ தேர்ந்த பொருள்‌.-

(2)முன்‌ சூத்‌திரத்தில்‌ ஸமாதி நிலையைப் பெற முயன்ற மநத்தின்‌ நிலையையும்‌, இச் சூத்திரத்தில்‌ ஸமாதி நிலையைப்‌ பெற்ற மநத்தின்‌ நிலையையும்‌ சொல்‌லுகிறார்‌.

அதனால்‌ (முன்‌ சூத்திரங்களில்‌ மநத்தின்‌ பரிணாமங்களைச்‌ சொல்லி விட்டபடியால்‌) பூதங்களுடையவும்‌, இந்திரியங்களுடையவும்‌
தர்மம்‌,லக்ஷணம்‌, அலஸ்தை என்ற மூன்று பரிணாமங்கள்‌ தெளிவாகச்‌ சொல்‌லப் பட்டனவாக் ஏற்படுகிறது.–13-

ஒவ்வொரு வஸ்‌துவும்‌, தர்மம்‌, தர்மி என இரு பான்‌மையதாக நினைக்கற் பாலது -, தர்மத்தை உத்தேசிக்க, தர்மி திலையுள்ளதாகவும்‌, தர்மம்‌ நிலை யில்லாத தாகவும்‌ இருக்கின்றன.-வஸ்துவின்‌ உண்மையான நிலை ஸ்திரமானதாக இருக்கின்றமையால்‌, ௮து கூடஸ்த தன்மையை உடையது என்று சொல்லப்படுகின்‌றது.தர்மங்களோ மாறி மாறிக் கொண்டிருக்கும்‌ தன்மையனவாகையால்‌ அவைகள்‌ பரிணாமங்கள்‌ எனச்‌ சொல்லப்படுகின்‌றன.
இப்பரிணாமங்கள்‌ மூப்பான்மையன,– தர்மம்‌, லகஷணம்‌,, அவஸ்தை என்பனவாம்‌.

தர்மம்‌ என்பது வஸ்துவை நோக்கும்‌ காலத்தில்‌ அதன் கண்‌ முன்னுள்ள ஒரு குணத்தின்‌ நிலைமை வெளிப்படுதல்‌.

அவஸ்தை: அந் நிலைமை விருத்தி யடைதலும்‌ அல்லது குறைத்தாலும்

லக்ஷணம்‌:ஒரு குணம்‌ அல்லது தர்மம்‌ நிகழும்‌ காலத்தில்‌ மற்றைய தர்மங்கள்‌ சென்றிருக்கலாம்‌, இனி மேல்‌ வரலாம்‌. இதில்‌ கால வித்தியாசம்‌ ஏற்படும்‌.

உதாரணமாக அந்தக் கரணம்‌ என்பது தர்மி, அதன் கண்‌ வ்யுத்தாநம்‌, நிரோதம் , ஏகாக்கரம்‌ என்ற மூன்று தர்மங்‌கள்‌ ஏர்படுகின்றன .
ஒரு தர்மம்‌ நிகழுங்‌ காலத்தில்‌ மற்றைய இரண்டில்‌ ஒன்று அதீதமாகவும்‌ (சென்று போனதாகவும்‌), மற்ற ஓன்‌று ௮நாகதமாகவும்‌ (இனி வரப் போகின்றதாகவும்‌) இருக்‌கின்றன.
அந்தக் கரணத்தை உத்தேசித்து நிகழும்‌ குணம்‌ தர்ம பரிணாமம்‌ என்றும்‌,
சென்று போனதை அல்லது வரப்‌ போகின்றதை உத்தஸித்து ல௬டிண பரிணாமம்‌ என்றும்‌,
நிகழும்‌ தர்மம்‌ விருத்தி யடைந் தாலும் குறைந்தாலும்‌ அது அவஸ்தாபரிணாமம்‌ என்றும்‌ சொல்லப் படுகின்‌றன
இவ்விதமே பூதங்களிலும்‌ இந்திரியங்களிலும்‌ இந்த மூன்று பரிணாமங்கள்‌ எற்படுன்றன.

தர்மம்‌ ஒரு குணம்‌ உற்பத்‌தி – அவஸ்‌தை அதுவே விருத்திப் படுதல்‌ அல்லது குறைவு படுதல்‌, –லக்ஷணம்‌ ஒரு குணம்‌ நிகழ்தல்‌, ஒன்று முன்னமேயே நிகழ்ந்தது , ஒன்று இனி நிகழப் போகின்றது.
இவைகளை முறையே ஆங்கில நூல்களில்‌ causality (காரண காரிய பரம்பரை ), space (தேசம்‌), time(காலம் ) என மூன்றாகச்‌ சொல்லப் படுகின்‌றன.
தர்மம்‌, தர்மி என்ற சம்பந்தமானது எப்போதும்‌ ஓரே நிலையில் யுள்ளதன்று -.
ஒரு தர்மத்தை நோக்க, மற்றொன்று தர்மியாக இருக்கலாம்‌. அந்தத்‌ தர்மியே வேறு ஓன்றை நோக்க தர்மமாக அமைவுறும்‌.
தர்மி, தர்மம்‌ என்‌ற பரம்பரை, காரண காரியப் பிரவாகத்தில்‌ உள்ளே நோக்கிச்‌ செல்லச்‌ செல்ல கடை முறையில்‌ மூலப் பிரகிருதி தர்மியாக முடியம்‌, இது சாங்கிய சாஸ்திரத்தின்‌.துணிபு. அத்வைத சாஸ்‌திரத்தில்‌ கடை முறையில் உள்ள மூலப் பிரகிருதியான தர்மியே அநிர் வநீயமான ஈஸ்வர சக்தி அல்லது மாயை என்ற தர்மமாக ஏற்படும்‌,
சிலர் அபிப்பிராயத்தில்‌ தர்மங்களுடைய தொகுதியைத் தவிர தர்மி: என்பது தனித்து வேறாக ஒன்றுமில்லை என்பதாம்‌.
யோகிகள்‌ மதத்தில்‌ தர்மங்கள்‌ மாறி மாறிக்‌ கொண்டிருகந்தாலும்‌ அவைகளை விட வேறாக மாறாததாக ஓன்று உளது என்பதாம்‌, அது தர்மி தர்மத்தை உடையது.

தர்மி என்பது சாந்தம்‌, உதிதம்‌, அவ்பபதேசியம்‌ என்ற தர்மங்களில்‌: நுழைந்துள்ள தொடர்பான வஸ்துவாம்‌.–14-

சாந்தம்‌ = அடங்கிப் போன, சென்று போன.-உதிதம்‌–உற்பத்தி யாகின்றன, நிகழ்கின்ற, அவ்யபதேசியம்‌– சூஷ்மமான,
அதனால்‌ சொல்ல முடியாத, குப்தமாயுள்ள, காரண ரூபமாயுள்ள,
இனி வெளியாகக் கூடிய, அந்தர் கதமாக வுள்ள, இனி வரப் போகின்ற –, மேலும்‌ அவ்யபதேசியம்‌, என்ற வார்த்தை இன்ன காரணத்தினின்று இன்ன காரியம்‌ உண்டாகும்‌ என்பதைச்‌ சொல்லக்‌ கூடாமையைசத் தெரிவிக்கும்‌ பொருட்டு உபயோகிக்கப் பட்டிருக்கிறது
தைத்திரியோபநிஷத்‌ வசநத்தை யனுசரித்து எல்லாக்‌ காரணமும் எல்லாக்‌ காரியமாகவும்‌ ஆகலாம்‌ என்பது பாஷ்‌யகாரரான வியாஸ ரிஷியின்‌ அபிப்பிராயம்‌.

அதனால்‌ நீர்‌, நிலம்‌, சீதம்‌, உஷ்ணம்‌ முதலானவைகளின்‌ பரிணாமத்தால் தேச காலங்களை ௮னுசரித்து , காரண ரூபமான பீஜத்தில்‌ இருக்கின்ற சிற்சில சக்திகள்‌ விசித்திரமான இலை, மலர்‌, காய்‌, கனிகளாக வெளிப்படுகின்றன, இவைகளைத்‌ தவிர, வெளிப்படாத
சக்திகள்‌ அநேகம்‌ குப்‌தமாயிருக்கின்றன. ஒவ்வொரு காரணத்திலும்‌ எல்லாக்‌ காரியங்களும்‌ உள்ளன. ஆனால்‌ அவை வெளிப்படுதல்‌ கால சேச வர்த்தமாநங்களைப்‌ பொறுத்ததாக இருக்கிறது,
அநேக சக்திகள்‌ வெளிப்படாமைக்கு அநேக தடைகள்‌ இருக்கின்‌றன. அத்தடைகளை விலக்கிக் கொள்ளும் சக்தியை யுடையவனாகையால்‌, : எந்தக்‌ காரியத்தையும்‌ எந்‌தக் காரணத்தினின்றும்‌ உண்டு பண்ணுவான்‌.

தர்மியின் கண்‌ பரிணாமங்கள் வெவ்வேறாக இருத்தலுக்கு (தர்மியில்‌ தர்மங்கள்‌ ஒன்றின் பின்‌ ஒன்றாய்த்‌ தோன்றும்‌) கிரமம்‌ காரணமாம்‌.–15-

(1)உதாரணமாக, மண்‌ ஒன்றே பொடியாகவும்‌, பிண்ட மாகவும்‌, கடமாகவும்‌ இருக்கிறது. “மண்‌ ஒன்று தான்‌ பல நற் கலமாயிடும் ” என்ற திரு மந்திர வசநம்‌ இங்கு கவனிக்கத் தக்கது . பல மாற்றங்கள்‌ இருந்தாலும் தர்மியாகிய மண்‌ ஒன்றே என்று அறிக.-தர்மங்களைத் தவிர, தர்மி என்பதாக வேறு ஓன்று இல்லை என்னும்‌ பக்ஷத்தில்‌, ஓவ்வொரு பரிணாமமும்‌ உண்டாகும்‌ காலத்தில்‌ மண்‌ என்ற ஞாஈம்‌ வாராமல்‌ போம்‌. அனுபவத்தில்‌ ௮ப்படியன்று. மண்‌
என்ற ஞாநம்‌ உள்ளது.-இப் பரிணாமங்கள்‌ ஒன்றின் பின் ஒன்றாய் தோன்‌றலில்‌ ஒருபரிணாமம்‌ தர்மியாகவும்‌ மற்றொன்று தர்ம மாகவும்‌ ஏற்படுகிறது -. கடாதிகளை நோக்க, மண்‌ தர்மி, –ஜலத்தை நோக்க மண்‌ தர்மம்‌, ஜலம்‌ தர்மி.

இவ் விதமே தேஜஸ்‌, வாயு, ஆகாசம்‌ பஞ்சு தந்மாத்திரைகள்‌, பூதாதி, அகங்காரம்‌, மஹத் தத்துவம்‌, மூலப் ப்ரக்ருதி வரை ஆராய்ச்சி நிகழில்‌,
கீழானது தர்மமாகவும்‌, மேலானது தர்மி யாகவும்‌ கடை முறையில்‌, மூலப் பிரகிருதி தான்‌ பரம தர்மியாக ஏற்படும்‌. இது சாங்கியர்களின்‌ சித்தாந்தம்‌.
புருஷன்‌ தவிர, மற்றெல்லா வஸ்‌துக்களும்‌ ஒவ்வாரு ஷணத்திலும்‌ பரிணாமமுள்ளவை , ௮தனால்‌ ஒரு லஸ்து புதிதாகத்‌ தோன்றினும்‌ பழமையைப்‌ பெற்று ஷிண தசையை ௮டையினும்‌, சிறுகச் சிறுக மாறுதல்‌ அடைந்து அவ்விதம்‌ தோன்றுதல்‌ ஏற்படுகிறதே அல்லாமல்‌,
முன் பின்‌ காரணமின்றி திடீரென, ௮வ்விதம் தோன்றுதல்‌ இன்றாம்‌,

(2)சில பரிணா மங்கள் மநத்திற்குப்‌ பிரத்தியஷமானைவை , சில பரோக்ஷமானவை. அவைகளில்‌, காமம்‌, சுகம்‌, துக்கம்‌, பிரமாணமங்கள்‌ முதலியவை பிரத்தியஷமானவை.-நிரோதம்‌ (அஸம்‌ ப்ரக்ஞாத ஸ்மாதி நிலை, புண்ணியாபுண்ணிய தர்மங்கள்‌, மநத்தின்‌ வாசனைகள்‌)
சத்வ குண, ரஜோ குண, தமோ குணங்கள்‌ மேலிடுவதால் உண்டாம்‌ மநத்தின்‌ பரிணாமங்கள்‌, சரீரத்தின் கண்‌ பிராணன்‌ இருக்கின்‌ற நிலை, சரீர சேஷ்டைகளுக்கும்‌ மநச்‌ சேஷ்டைகளுக்கும்‌ உள்ள சம்பந்தம்‌, வஸ்துக்களின்‌ சக்தி, இவை ஏழும்‌ பரோக்ஷமானவை.

முன்று பரிணமங்க (தர்மல்ம் , லஷணம்‌, அவஸ்தை) ளிலும் ஸம் யமம்‌ செய்வதினால்‌ (மநத்தை நிறுத்துவதினால்‌)
சென்ற விஷயங்களினுடையவும்‌, வரப் போகின்ற விஷயங்களினுடையவும்‌ ஸாஷாத் காரமான ஞானம் உண்டாகிறது.–16-

“வஸ்துக்களின்‌ உண்மையான நிலையை அறிந்தால்‌-அதாவது அவைகளின்‌ சூஷ்மமான பரிணாமங்களை அறிந்தால்‌, அவை மூலமாய்‌ முன் பின்‌ ௮றியலாம்‌.-ஸம் யமம்‌- தாரணை, தியாநம்‌, ஸமாதி ,

சப்த்ம் , அர்த்தம்‌, மநோ விர்த்தி, ஞாநம்‌ இவைகளில்‌ ஒன்றை மற்றென்றில்‌ ஆரோபம்‌ செய்வதினால்‌, அவைகைள் கலந்து போகின்றன.
“அவைகளைப்‌ பிரித்துத்‌ தனிப் படுத்திய ஸமயத்தில்‌ அவைகளின்‌ மேல்‌ ஸம்‌ யமம்‌ செய்தால்‌, எல்லாப்‌ பிராணிகளின்‌ சப்தத்தையும்‌ அறியும்‌ தகைமை உண்டாகும்‌–17-
.
வர்ணங்களை (அஷரங்களை) ப் பார்க்க வேறானதாகவும்‌, ஆனால்‌ அஷரங்களால்‌ வ்யக்தமாகவும்‌ (வெளிப்படுத்தக் கூடியதாகவும்‌) நித்தியமாசவும்‌, சூஷ்ம மாகவும்‌ உள்ள சப்த நிலைமை ஒன்‌று உண்டு.-௮தற்கு ஸ்போடம்‌ என்று பெயர்‌, ஸ்போடம்‌ குமிழி போன்று வெடித்தல்‌.
பதஸ்போடம்‌ என்றும்‌, வாக்யஸ்போடம்‌ என்றும்‌ ஸ்போடம்‌ இரண்டு விதம்‌. ஒரு பதத்தைச்‌ சொன்னவுடனே, அதன்‌ ஞாநத்தை உண்டு பண்ணும்‌ தன்மை பதஸ்போடமாம்‌.-அவ்விதமே வாக்பத்தின்‌ ஞாநத்தை உண்டு பண்ணும்‌ தன்மை வாக்‌ய ஸ்போடமாம்‌.
உதாநன்‌ சான்ற வாயுவானது மார்பு முதலிய ஸ்‌தாங்களுடன்‌ சம்பந்தித்‌து, எல்லா அஷரங்களையும்‌ உண்டு பண்‌ணு கின்றது
எல்லா அஷரங்களும்‌ எல்லா அர்த்தங்களையம்‌ கொடுக்கும்‌ இயல்பினவாயினும்‌ அவைகளால்‌ அமைக்கப் பெற்ற பதங்கள்‌, வாக்யங்கள்‌ எல்லா அர்த்‌தங்களையும்‌ வெளிப்படுத்‌தாமல் அறிஞர் களுடைய ஸங்கேதத்தால் ஓரோர் பதமும்‌ வாச்யமும் ஓரோ ர்‌ அர்ததத்தை மாத்திரம்‌ கொடுக்கின்றன.
அப்படி ஸங்கேதத்தினால்‌ ஏற்படும்‌ அர்த்தத்தைத்‌ தவிர்‌தது, வர்ண ஸ்வரூபமான சப்தத்தில்‌ ஸம் யமம்‌ செய்வதினால்‌, சூத்திரத்தில்‌ கண்டபடி. எல்லாப்‌ ப்ராணிகளின்‌ சப்‌த்தையும்‌, அதாவது பாஷையை அறியும்‌ தகமை உண்‌டாகும்‌,
அதாவது அந்தவந்தப் பிராணிகளின் மனத்தில் உண்டாகும் அர்த்தத்துடன் ஸப்தத்தை அறிய இயலும்‌. இன்ன சப்தம்‌ இன்ன பிராணியினுடையது என்பதை சாதாரணப்‌ பழக்கத்தில்‌ யாரும்‌ அறிதல்‌ கூடும்‌, அதற்கு யோகாப்பியாலம்‌ வேண்டுவதில்லை,

ஸம்ஸ்காரத்தை ஸம் யமம்‌ செய்வதினால்‌ பூர்வ ஐந்மத்தின்‌ ஞாநம்‌ உண்டாகிறது.–18-

(1) ஸம்ஸ்காரம்‌ இரு விதம்‌. 1. சில பிரகிருத அனுபவத்தால்‌ உண்டாகின்றன. -2-. சில முன்னனுபவங்களின்‌ ஸ்மரணையால்‌ உண்டாகின்றன.
ஒரு ஸம்ஸ்காரத்தை ஸம்யமம்‌ செய்தல் என்றால்‌, தேச; கால, காரணம்‌ இவைகளுடன்‌ சம்பந்தித்து ஸம்யமம்‌ செய்தால்‌ முந்திய ஜன்மத்தின்‌ ஞாநம்‌ உண்டாகும்‌.

ஒரு கதை:–ஜைகீஷவ்யர்‌ என்ற ஒரு ரிஷி இருந்தார்‌,-அவர்‌ மஹா யோகி, பூர்வம்‌ 10 மஹாப் பிரளயங்களில்‌ தான்‌ இருந்தா ஜந்மங்களைகத் தொடர்பாய்‌ அறிந்தவர்‌.-ஆவட்யர்‌ என்ற வேரொரு ரிஷி அடியில்‌ வருமாறு அவரை வினவினார்‌:–
அடிக்கடி. ஜநநம்‌ எடுத்தலினால்‌ துக்கம்‌ ஏற்படுமே? பல மிருகங்களாகப்‌ பிறத்தலினால்‌ துக்கம்‌ உண்டாயிருக்குமே?
நரக வாதனைகள்‌ என்ன? ஸ்வர்‌க்க அநு பவங்கள்‌ என்ன ? மனிதனாகப் பிறத்தலில்‌ துக்கம்‌ அதிகமா, சுகம்‌ அதிகமா r?”
ஜைகீஷவ்யர்‌ அடியில்‌ வருமாறு மறுமொழி சொன்னார்‌:–*எல்லாம்‌ துக்கமாகவே இருக்கின்றன. சுகம்‌ இல்லை?”
“ஆனால்‌, பிரகிருதி லயம்‌ என்பதைச்‌ செய்வதினால்‌ ஏற்படும சந்தோஷமும்‌ அந்த துக்கத்தில்‌ சேருமோ என்று ஆவட்யர்‌ திரும்ப வினவினார்‌.
விஷய சுகத்தை உத்தேசிக்க, இந் த பிரகிருதி லயத்தால்‌ உண்டாகும்‌ சந்தோஷம்‌ உயர்வாக இருப்பினும்‌, கைவல்யத்‌தை உத்தேசிக்க, இந்த சரந்தோஷம்‌ குண த்ரயங்களின்‌ காரியமாகையால்‌ துக்கமே.
இதில்‌ திருஷ்ண தந்து ( ஆசையின்‌ நூலான தொடர்‌) இருக்கின்றதே, அதுவும்‌ நீங்க வேண்டும்‌. அப்போது தான்‌
சுத்த கைவல்யம்‌ ஏற்படும்‌ என மறுமொழி கூறினர்‌,

விர்த்திகளை ஸம்யமம்‌ செய்வதினால்‌ பிறர்‌ மநத்தில்‌ உண்டாகும்‌ எண்ணங்களை அறியலாம்‌,–19-

விர்த்திகளை ஸம்யமம்‌ செய்தல்‌ என்பது தன்னு;டைய அல்லது பிரருடைய விர்த்திகளை ஸம்யமம்‌ செய்தல்‌ என அறிய வேண்டும்‌.
மநம்‌ திரிகுணாத்மகம்‌, ஓவ்வொரு தனித்த மநமும்‌ ஒளபாதிக பேதம்‌ பெறுகிறது, மநத்‌திற்ரு ஸ்வாபாவிக பேதமில்லை. ஒளபாதிக பேதம்‌ யதார்த்‌தமல்ல.
௮தனால்‌ மநத்தின்‌ விர்‌த்திப்‌ பிரவாஹமானது எல்லாருக்கும்‌ ஒரே மாதிரியானது. ௮தனால்‌ ஒரு. விர்த்தியை ஸம்யமம்‌ செய்வதால்‌ எல்லாருடைய எண்ணங்களையும்‌ அறியலாகும்‌.-அடுத்த சூத்திரம்‌ இதைத்‌ தெளிவு பண்ணுகிறது,

அது (மற்றவனுடைய மநோ விர்ததியை அறிவதானது) விஷயத்துடன்‌ கூடியதல்ல. இவன் (ஸம் யமம்‌ பண்ணுபவன்‌] விர்த்தியில்‌ அது இன்மையால்‌..–20-

ஸம்யமம்‌ பண்‌ணுபவன்‌ மற்றவனுடைய விர்த்தியில்‌, ஸம்யமம்‌ செய்கிறானே யல்லாமல்‌, அவ் விர்த்திக்குக் . காரணமாண விஷயத்தில்‌ ஸம்யமம்‌ செய்கிறானில்லை. அதனால்‌ மற்றவனுடைய விர்த்தியின்‌ வெளி விஷயம்‌ ஸம் யமம்‌ செய்கிறவனுக்கு. நேரில் சாதாரணமாகத்‌ தெரியாது
ஆனால்‌, அவ்விஷயத்தை அறிய வேண்டுமென இச்சித்தால்‌ மற்றவன்‌ விர்த்தியின்‌. மூலமாய்‌: அவ்விஷயத்தில் ஸம்யமம்‌ செய்தால்‌ கூடும்‌..

ஒரு சரீரத்தின் ஸ்வரூபத்தில் ஸம் யமம் செய்தலினால் அதின் கண் இந்த்ரியத்தினால் கிரஹிக்கக் கூடிய தன்மைக்குத் தடை ஏற்படுகிறது
அதனால் பார்க்கிறவன் கண்ணுக்கும் அந்த சரீரத்துக்கு சம்பந்தம் அற்றுப் போவதால் அச் சரீரத்துக்கு மறைவு அந்த ஸ்தான சக்தி உண்டாகிறது –-21-

ரூபத்தைக் கிரஹிக்கும்‌ சக்தியைசத் . தடுத்தல்‌–: ஒரு வஸ்துவைப்‌ பார்த்‌சல்‌: என்றால்‌, அந்த வஸ்துவினின்று ரஸ்மியின்‌ சலனம் (Vibrations of -ether) வெளிக் கிளம்பிப்‌ போய்ப்‌. பார்க்கும் கண்ணைத் தாக்‌கி , அக் கண்ணின்‌ திரவியத்தில்‌ ஒரு ஸம்ஸ் காரத்தை -மாறுதலை உண்டாக்குறது.-அதன்‌ காரியமாக மநத்தில்‌ ரூபம்‌ புலப்‌ படுகிறது,
தடுத்தல்‌ என்றால்‌ அந்த வஸ்‌துலினின்‌று ௮தன்‌ ரஸ்மியை வெளிப்‌ போகாமல்‌ தடுத்தல்‌, நிறுத்‌தி வைத்தல்‌ ; இதனால்‌ பார்க்கிறவன்‌ கண்‌ வஸ்துவைப்‌ பார்க்காமல்‌ போகிறது,
இவ்விதமே சப்தம்‌, ரஸம்‌, முதலியவைகளில்‌ ஸம்யமம்‌ செய்தலினால்‌, யோகி தான்‌ பேசுகிற வார்த்தையையும்‌, தான்‌ அனுபவிக்கும்‌ ரஸத்‌தையும்‌ மாற்றான்‌ அறியாதபடி செய்து கொள்ளலாம்‌.

(கர்மங்கள்‌ இருவிதம்‌) உடனே பலனைக்‌ கொடுக்க ஆரம்பித்தவை ,-வெகு தாமஸித்தில்‌ பலனைக்‌ கொடுக்க ஆரம்பிக்கின்றவை;
இவைகளில்‌ ஸம் யமம்‌ செய்வதினால்‌ யோகி, மரண காலத்தை அறிகிறான்‌. ‘
அவ் விதமே அநிஷடங்களின்‌ அறி குறியாலும்‌ (அம் மரண காலம்‌ தெரிய வரும்‌),

(1) பூர்வ ஜந்ம கர்மங்கள்‌ இருவகை, 1 ஸோபக்‌ கிரமம்‌ -சீக்கிரத்தில்‌ பலனைக்‌ கொடுக்கின்றவை , நன்றாய்ப் பிழிந்த ஈர வஸ்திரம்‌ வெய்யிலில்‌ உலர்ரத்த விடுவது போல சிக்கரத்தில்‌ பலனைக்‌ கொடுக்கின்றவை, (2)நிருபக்கிரமம்‌-பிரியாத ஈர வஸ்திரம் வெய்யிலில்லாதவும்‌ காற்றிலலாதவும்‌, ௮டர்ந்த நிழலில்‌ உலர்வது “போல தாமஸத்தில்‌ பலனைக்‌ கொடுக்கின்‌றவை.
(2) மரண காலத்தை அறிதல்‌ என்றால்‌, தேசம்‌, காரணம்‌ முதலியவற்றையும்‌ அறிதலரம்‌,
(3) அபராந்தம்‌–சாதாரண ஜநங்களின்‌ மரணம்‌–, பாராந்தம்‌ பிரஹ்மாவின்‌ பிரளயம்‌. தாமஸத்தில்‌ பலனைக்‌ கொடுக்கும்‌ கர்மங்களைக்கூட யேரகியானலன்‌ தன்‌ யோக பலத்தால்‌ ௮நேக சரீரங்கள்‌ எடுத்துங்கூட சீக்கிரத்தில் அப் பலன்‌ நிகழும்படி செய்து கொள்ளுகிறான் .
பட்டினத்தடிகள்‌ ஏழரை நாட்டுச்‌ சநி தசையின்‌ கஷ்டங்களை ஏழரை நாழிகைகளில்‌ அநுபவிக்கும்படி. செய்து கொண்டமை இங்‌கு கவநிக்கத்‌ தக்கது –

அரிஷ்டங்கள்‌ சம்பவங்கள்‌ பயமுறுத்தும்‌ தன்மையன வாக இருக்கின்‌றமையால்‌ அப்பெயர்‌ ஏற்பட்டது. இவை மூன்று விதம்‌:–ஆத்யாத்மிகம்‌, ஆதிபேளதிகம்‌, ஆதிதைவிகம்‌.
ஆத்யாத்மிகம்‌: உதாரணமாகக்‌ காதை மூடினால்‌ ஒருவித சப்தம்‌.சாதாரணமாய்க்‌ கேட்கிறது. மரணம்‌ சமீபித்தால்‌, அவ்விதம்‌ கேட்காது. கண்களின்‌ பக்கம்களை அழுத்தினால்‌ சாதாரணமாய்த்‌ தோன்றும்‌ ஐ்யோதிஸ்‌ தோன்றாது. மரணத்திற்கு 6 மாதததிற்கு முன் முதல்‌ துருவ நஷத்திரம்‌ தெரியாமற்போம்‌.
சாயா புருஷ தர்சநத்‌திலும்‌, இந்திர தனுஸ்ஸிலும்‌ அநேக விபரீதமான தோற்றங்கள்‌ உண்டாகும்‌, அவை மரணத்தின்‌ அறிகுறிகளாம்‌. பின்னும்‌ -இவை போன்றவை.
ஆதி பவ்திகம்‌: யம தூதர்கள்‌ வருதல்‌ போன்ற தோற்றம்‌,நிஷ் காரணமாய்‌ முன்னிறந்தவர்‌களின்‌ தர்சநம்‌.
ஆதிதைவிகம்‌: ஸ்வர்க்க லோக தர்சநம்‌. ஸித்தர்கனின்‌ காட்சி,வழக்‌கமாய்ப்‌ பார்க்கும்‌ ஒவ்வொன்றும்‌ இந்த லோகத்தின்‌ ௮னுபவத்தில்‌ தலைகீழாய்த்‌ தோன்றும்‌.

மைத்ரீ முதலான (கருணா , முதிதா- முதிதா பற்றிய விளக்கம் முதலாம்‌ பாதம்‌ 88-வது சூத்திரம்‌ பர்க்க, )பாவனைகவில்‌ ஸக்யமம்‌ செய்தால்‌ ‘விசேஷ சக்திகள்‌ உண்டாகின்றன.உபேஷை என்பது இதில்‌ சேரவில்லை, –23-

உபேஷை என்பது பாபிகளுடைய நன்மை தீமைகளைக்‌ கவனியாமல்‌ இருத்தல்‌. ௮து அபாவ பாவம்‌- அதனால்‌ உபேக்ஷை என்‌பதும் ஸமாதியில்‌ சேரவில்லை.யோகிக்கு இந்த ஸம் யமத்தினால்‌ மைத்ரீ முதலிய நற் ஸ்வ பாவங்கள்‌ விருத்தி யடைகின்றன. மேலும்‌,
தான்‌ சங்கற்பித்தால்‌, பிறர் இடமும்‌, இச் சுபாவங்களை உண்டு பண்ண இயலும்‌.
ரிஷிகளின்‌ ஆஸ்ரமத்தைச்‌ சுற்றி வைரியான பிராணிகள்‌”கூட ஒன்றோடொன்று ஸ்நேகம்‌ பாராட்டுகின்றன என்று புராணாதி களில் பார்க்கிறோம்‌.
அதற்குக்‌ காரணம்‌, ரிஷிகள்‌ தங்களுடைய மைத்ரீ, கருணா, முதிதா என்ற பாவனைகளைத்‌ தங்களைச் சுற்றி எங்கும்‌ பரவும்படி செய்கின்‌றமையால்‌ என்றறிக,

எதன்‌ பலம்‌ வேண்டும் என்று நினைத்து அதில்‌ ஸம் யமம்‌ செய்யப்படுகிறதோ அந்தப் பலம்‌ கிடைப்பதாகும்‌, யானை முதலியவையின்‌ பலம்‌ உண்‌டாகும்‌.–24-

முதலியவை – கருடன்‌, ஹனுமான்‌; ஸிம்ஹம்‌.என்பவையாம்‌, மநத்திற்கு ஸ்வயமாக எல்லாவித ஸாமர்‌த்‌தியமும்‌.இருப்பதால்‌, இத்‌,தகைய சக்திகள்‌ உண்டாகின்‌றன.

ஜ்யோதிஷ்மதீ என்ற பிரவிர்த்தி காலத்தில்‌ இருக்கும்‌ புத்தியை ஒரு வஸ்துவை நோக்கிச்‌ செலுத்தினால்‌, சூஷ்மமான வஸ்துக்கள்‌, மறைந்த.வஸ்துக்கள்‌, தூரத்தில்‌ உள்ள வஸ்துக்கள்‌ இவைகளின்‌ ஞாநம்‌ உண்டாகும்‌,–25-

ஜ்யோதிஸ்மதீ என்பதைப்பற்றி முதல்பாதம்‌ 86-ம்‌: சூத்திரத்தைப்‌ பார்க்க: இந்த சூத்திரம்‌ ஸுூஷ்ம திருஷ்டி, தூர திருஷ்டி முதலிய ஸித்திகளைப்‌ பற்‌றியது .

ஸூர்யனில் ஸம் யமம்‌ செய்லதினால்‌ புவநங்களின்‌ ஞாநம்‌ உண்டாகிறது–26-

(1) புவநங்கள்‌ – லோகங்கள்‌,” பவநங்கள்‌ – ஜிவிக்‌கும்‌ இடம்‌, கிரஹங்கள்‌ – Planets.
1. லோகங்கள்‌ ஏழு. தெற்கே யுள்ள அவீசி முதல்‌ வடக்கே மேரு வரை பூமி -. மேரு முதல்‌ துருவ நக்ஷத்திரம்‌ வரை ௮திலடங்‌கிய நக்ஷத்திரங்களின்‌ மண்டலங்கள்‌ உள்பட
புவர்லோகம்‌– 2.-அதன்மேல்‌ ஸுவர்லோகம்‌–3, இது 5 படிகள்‌ உடையது, ஸ்வர்க்‌க லோகத்திற்கு மஹேந்த்ர லோகம் என்றும்‌ பெயர்‌,
பிரஜாபதியை.தேவதையாக வுடைய மஹர் லோகம்‌–4. இது ஜ்யோதிர் மயமானது..
இதற்கு மேல்‌ 3 படிகளை யுடைய பிர்ஹ்ம லோகம்‌- அதாவது, ஜந லோகம் தபோலோகம்‌, ஸத்திய லோகம்‌,

அவீசிக்கு மேல்‌ 6 வித நரகங்கள்‌ உள்ளன? (1) மஹா கால(2) அம்பரீஷா (3) ரெளரவ (4) மஹா ரெளரவ (5) காலசூத்திர (6)அந்ததாமிஸ்‌ர,
முூதலானதான நரகம்‌ கநமானது. ௮து பூமி. இரண்டாவது ஜலத் தன்மையானது. மூன்றாவது அக்நி மயமானது,
நான்காவது வாயு மயமானது. ஐந்தாவது ஆகாச ரூபமானது. ஆறாவது ௮திக இருள்‌ உள்ளது.
ஜீவர்கள்‌ இந்த 6 நரகங்களில்‌ தங்களுடைய துஷ் கர்ம பலன்களை ௮னுபலிக்க வெகு காலம்‌ ஓரே ஜென்மத்தில் இருந்து கொண்டு வசிக்கிறார்கள்‌

மேல் சொன்ன நரகங்களுக்குக் கீழாக 7 பாதாள லோகங்கள்‌ உள்‌ளன: (1) மஹாதல (8) ரஸாதல (8) அதல (4) ஸுதல (5) விதல(6) தலாதல (7) பாதள:
இந்த 7 லோகங்களான த்வீபங்களுஉன்‌ கூடிய இப் பூமியானது 8-வது என்று சொல்லப் படுகிறது. மேல்‌ ஏழு லோகங்கள்‌, கீழ்‌ ஏழு லோகங்கள்‌, இவைகளில்‌ மேலிருந்தும்‌ கீழிருந்தும் பார்த்தால்‌ 8-வது பூமியாம்‌. இந்த பூமியின்‌ மத்ய பாகத்‌தில்‌ மேரு மலை இருக்கிறது . – ௮து ஸுவர்ண மயமானது. அதின்‌ சிகரங்கள்‌ வெள்ளி, பச்சை, ஸ்படிகம்‌, ஸுவர்ணம்‌,நாநா விதமான மணிகள்‌ இவைகளாலானவை போல்‌ தோன்றுகின்றன.

இந்த மேரு மலைக்குத்‌ தென் பார்சத்தில்‌ நாவல் பழம்‌ போன்ற உருண்டை வடிவான பூமி இருக்கின்‌றமையால்‌, இப் பூமிக்கு நாவலன்தீவு (ஜம்பூத்‌வீபம்‌) என்ற பெயர்‌ அமைந்து இருக்கிறது .-ஸுர்ய ௪லநத்தினால்‌்‌ இராப்பகல்‌ என்ற கால வித்யாஸத்தித்கு இஃது உட் பட்டிருக்கிறது .
மேருவுக்கு வடக்கில்‌ 3 மலைகள்‌ இருக்கின்றன.-அவைகளுக்கு ‘வெளுப்பு, கறுப்பான கொடு முடிகள்‌ உள்ளன. அந்த மூன்று பர்‌வதங்களின்‌ மத்தியில்‌ மூன்று! வர்ஷங்கள்‌ இருக்கின்றன (வர்ஷம்‌- என்றால்‌ கண்டம்‌) :–(1) ரமணகம்‌ (8) ஹிரண்மயம்‌ (8) உத்‌தர குரு.

மஹா மேருலிக்குத்‌ தெற்கே (1) நிஷதம்‌, (8) ஹேமகூடம்‌ (3) ஹிமாசலம்‌ என்ற மூன்று மலைகள்‌ இருக்கின்‌றன. இம்மூன்று மலைகளை அடுத்தடுத்து ௮ததன்‌ சார்பில்‌ தரு வர்ஷமாக 3 வர்ஷங்‌களிருக்கின்றன, அவையாவன: ஹரி வர்ஷம்‌, கிம் புருஷம்‌; பாரத வர்ஷம்‌,
மேருவிற்குக் கிழக்கே, பத்ராசலம்‌, என்ற ஒரு வர்ஷம் இருக்கின்றது -மால்யவான் என்ற மலை ௮தன்‌ கிழக்கெல்லை.
மேருவுக்கு மேற்கே கேதுமாலம்‌ என்ற வர்ஷம்‌ கந்தமாதந பர்வதம்‌ வரையில்‌ விஸ்தரித்து இருக்கிறது, பத்திராசலம்‌, கேதுமாலம்‌ என்ற வர்ஷன்‌களுக்கு மத்தியில்‌ இளாவர்ஷம்‌ என்றது இருக்கிறது .

மேருவைச்‌ சுற்றி இந்த 9 வர்ஷங்கள்‌ இருக்கின்றன. இந்த 9 வர்ஷங்கள் அடங்கியது ஜம்பூத்வீபம்‌. ௮தன் நீளம்‌ லஷ யோஜந தூரம்‌, அதன்‌ இரண்டு மடங்கு விஸ்தாரமுள்ள லவண ஸமுத்ரத்தால்‌ ௮து சூழப்‌ பெற்றிருக்கிறது. இதற்கப்பால்‌ 6 த்வீபங்கள்‌ இருக்கின்றன.
அவைகளாவன: சாகம்‌, குசம்‌, கிரெளஞ்ச, சால்மலி, பிலக்ஷ. புஷ்கர. –அவைகள்‌ முறையே கருப்பஞ்சாறு, கள்ளு, நெய்‌, தயிர்‌ பால்‌, சுத்‌த ஜலம்‌ இவைகளாலாய ஸமுத்ரங்களினால்‌ சூழப் பெற்றிருக்கின்றன, இந்த ஏழு தவிபங்களும்‌ 50 கோடி யோஜந விஸ்தீர்ணமுள்ளதாக இருக்கின்றன,
இவைகள்‌ (இந்த பூமி உள்பட) அண்டத்தின்‌ மத்தியில்‌ இருக்கின்றன,

இந்த 14 லோகங்கள்‌ கொண்ட ௮ண்டமானது மினுமினுப்‌ பூச்சியைப் போன்று மூலப்‌ பிரகிருதியின்‌ சூஷ்மமான அவயவம்‌.
அந்த அண்டத்தில்‌ பாதாளம்‌ ஸமுத்ரம்‌, பர்வதங்கள்‌ இவைகளில்‌ தேவர்கள்‌ வகுப்பில்‌ சேர்ந்த அஸுஃரர்கள்‌, கந்தர்வர்கள்‌, கிந் நரர்கள்‌, கிம்புருஷர்கள்‌, யஷர்கள்‌ ராக்ஷஸர்கள் . பூதங்கள்‌, பிரேதங்கள்‌, பிசாசங்கள்‌, அபஸ்மாரகர்கள்‌ ௮ப்ஸரஸ்கள்‌, பிரஹ்ம ராக்ஷலர்கள்‌, கூஷ்மாண்டர்கள்‌, விநாயகர்கள்‌
இவர்கள்‌ வாஸம்‌ பண்ணுகிறார்கள்‌. மற்ற இடங்களில்‌ புண்ணியரான தேவ, மனுஷ்யர்கள்‌ வாஸஞ்செய்கிறார்கள்‌. மேரு பர்வதத்தில்‌ தேவர்கள்‌ விளையாடும்‌ தோட்டமும்‌ அதில்‌ தேவர்கள்‌ கூடும்‌, சபா மண்டபமும்‌ இருக்கின்றன அதன்‌ பெயர்‌ ஸுுதர்மா.
ஸ-தர்‌சநம்‌ என்‌று ஓரு பட்டணமிருக்கிறது – திரிதசர்கள்‌ (மூன்‌று அவஸ்‌தைகளை யுடையவர்கள்‌; ௮தாவது பால்யம்‌, யெளவகம்‌, கெளமாரம்‌ என்ற மூன்று தசைகளை யுடையவர்கள்‌), அக்நிஷ்வாத்தர்கள்‌, யாம்‌யர்கள்‌, துஷிதர்கள்‌, அபரி நிர்மித வச வர்த்திகள்‌, பரி நிர்மித வச வர்த்திகள்‌ ஆகிய இந்த 6 தேவ ஜாதிகள்‌ மஹேந்தர லோகத்தில்‌ வஸிக்கிறார்கள்‌. இதுவே ஸ்வர்க்க லோகம்‌, இவர்‌கள்‌ நினைத்த மாத்‌திரத்தில்‌ கார்யங்கள்‌ செய்கிறவர்கள்‌,

இவர்கள்‌ அணிமாதி ஐஸ்வர்யமுள்ளவர்கள்‌. ஒரு மந்வந்தரம்‌ வரை ஆயுஸ்‌ உள்ளவர்கள்‌ ,காம நுகர்ச்சி யுள்‌ளவர்கள்‌.
ஸங்கல்பத்தினால்‌ மாதா பிதாக்களின்‌ ஸம்பந்தமின்‌றி சரீரங்களை உண்டு பண்ணிக் கொள்ளுகிறவர்கள்‌. அப்ஸரஸ்‌த்ரீகளால்‌ சூழப்பட்டிருக்கிறார்கள்‌.
மஹர் லோகத்தில்‌ (பிரஜாபதியின்‌ லோகத்தில்‌) 5 வகை தேவர்‌கள்‌ இருக்கிறார்கள்‌; (1) குமுதர்கள்‌ (2) ரிபுக்கள்‌ (3) பிரதர்தநர்கள்‌(4)அஞ்சநாபர்கள்‌ (5) பிரசிதாபர்கள்‌. இவர்கள்‌ பஞ்ச மஹா பூதங்களை வசத்திலுடையவர்கள்‌. தியாநத்தை ஆகாரமாக வுடையவர்கள்‌;-1000 கல்பம்‌ வரை ஆயுஸ்‌ உள்ளவர்கள்‌.
பிரஹ்மாவை அதிபதியாகவுடைய ஜநோ லோகத்தில்‌ வசிக்கிற தேவர்கள் நாலு விதம் (1) பிரஹ்ம புரோகிதர்களுக்கு 1000 கல்பம்‌ ஆயுஸ்‌,
(2) பிரஹ்ம காயிகர்களுக்கு 2000 கல்பம்‌ ஆயுஸ்‌,(3)ப்ரஹ்ம மஹா காயிகர்களுக்கு 4000 கல்பம்‌ ஆயுஸ்‌,(4)அமரர்களுக்கு 8000 கல்பம்‌ , ஆயுஸ்‌, இவர்கள்‌ பஞ்ச மஹா பூதங்களையும்‌ இந்திரியங்களையும்‌ வஸப்படுத்தினவர்கள்‌. முன்னவரை விடப்‌ பின்னவர்‌ 2 மடங்கு ஆயுஸை அதிகமாக உடையவர்கள்‌.
தபோ லோகத்தில்‌ உள்ளவர்கள்‌ 3 வகை:–(1) அஹாஹாஸ்ரர்கள்‌ (2) மஹாஹாஸ்வரர்கள்‌ (3) ஸத்திய மஹா ஹாஸ்வார்கள்‌. இவர்‌கள்‌ பூதங்கள்‌, இந்திரியங்கள்‌, பஞ்ச தந் மாத்திரைகளை வசப்‌ படுத்தினவர்கள்‌.
ஜநோ லோகத்தில்‌ வஸிக்கின்ற அமரர்களை விட்‌, தபோ லோகத்திலுள்ளமேல் சொன்ன மூன்று வருப்பினரும்‌, முறையே முன்னவரைக் காட்டிலும் பின்னவர் 2 மடங்கு ஆயுஸ் யுடையவர்கள் -முன் போலே விவரித்துக் கொள்ளுக
இவர்கள்‌ ஊர்த்வ ரேதஸ்ஸை உடையவர்கள்‌. மேல்‌ லோகங்களிலும்‌ கீழ் லோக்ங்களிலும்‌ ஆவரணமில்லாதவர்கள்‌. எல்லாவற்றையும்‌ அறியக் கூடியவர்கள்‌.
ஸத்ய லோகத்திலுள்ளவர்கள்‌ 4 வகையினர்‌, *தமக்கு’ என்று தேசம் வாசஸ்தானம் இல்லாதவர்கள்‌. யாதொரு ஆதாரமுமில்லா தவர்களாய்‌ தம்‌ ஸ்வரூபத்திலுள்ளவர்கள்‌:–(1) அச்யுதர்கள்‌- (2) சுத்த நிவாஸர்கள்‌. (8) ஸத்யா பாக்கள்‌.(4) ஹுதாஹகுழர்கள்‌.
இவர்கள்‌ முறையே ஸவிதர்க்கம்‌, ஸலிசாரம்‌, ஆநந்தம்‌, அஸ்மிதை இந்நான்கு முறையாக தியாநத்தைச்‌ செய்கின்றவர்கள்‌. இவர்கள்‌ மூலப் பிரகிருதியை .தம் வசத்தில்‌ வைத்துக் கொண்டு இருக்கிறவர்கள்
மேற்கண்ட லோகங்களெல்லாம்‌, ஒரு பிரஹ்மாண்டத்திற்குட்‌பட்டவைகள்‌. அவைகளிலுள்ளவர்கள்‌ அதைக்‌ கடந்து போக இயலாதவர்கள்‌:
விதேஹர்கள்‌, பிரகிருதி லயர்கள்‌ இவ்விருவரும்‌ பிரஹ்மாண்ட த்தைக்‌ கடந்தவர்களாகையால்‌, மேற் கண்டவர்களில்‌ சேரவில்லை.
மேற்கண்ட விஷயங்கள்‌ ஸூர்பனிட த்தில்‌ ஸம் யமம்‌ செய்வதினால்‌ யோகிக்குத்‌ தெரிய வரும்‌,

சந்திரனிடத்தில்‌ ஸம் யமம் செய்வதினால்‌ நக்ஷத்ரங்களின்‌ அமைப்பை அறியலாம்‌, –27-

ஸூர்யனின்‌ காந்தி நக்ஷத்ரங்களின்‌ காந்தியைக்‌ கீழ்ப் படுத்தலினால்‌, ஸூர்யனின் மேல்‌ ஸம்யமம்‌ செய்தால்‌, நக்ஷத்‌ரங்களைப் பற்றிய ஞாநம்‌ உண்டாகாது.

துருவ நக்ஷத்ரத்தினிடத்தில்‌ ஸம்யமம்‌ செய்வதினால்‌ நக்ஷத்ரங்களின்‌ கதிகளை (சலநங்களை) அறியலாம்‌.–28-

முந்திய சூத்திரத்தில்‌ நக்ஷத்ரங்களின்‌ அமைப்பும்‌,-இதில்‌ அவைகளின்‌ கதியும்‌ சொல்லப் பட்டிருக்கின்‌றன.

(நம்‌ சரீரத்திலுள்ள) நாபி சக்கரத்தில்‌ ஸம் யமம்‌ செய்வதினால் சரீரத்தின் அமைப்பை அறியலாம்‌.-29-

இது வரை வெளியிலுள்ள விஷயங்களுடைய ஸித்‌தியைச்‌ சொன்னார்‌. இனி சரீரத்திற்குள்ளே உள்ள விஷயங்களின்‌
ஸித்தியைச்‌ சொல்லுகிறார்‌.-நாபியானது சரீரத்தின்‌ மத்தியிலிருக்கிறது. அது வேர்க் கிழங்கு போலிருக்கின்றமையால்‌ நாபி கந்தம்‌ என்று பெயர்‌.
சரீரத்தின்‌ அமைப்பு:–தோல்‌, ரக்தம்‌, மாம்ஸம்‌,-நரம்புகள்‌ (ஸ்நாயு), அஸ்தி , மஜ்ஜை, வாதம்‌, பித்தம்‌, சிலேஷ்மம்‌,சுக்லம்‌ ஆகிய இப் பத்தும்‌. சரீரத்திலுள்ளன. இவைகளில்‌ முன்‌னுள்ளது பிந்தியதற்குப்‌: புறம்பே யுள்ளது

(கண்ட கூபத்தில்‌) கழுத்தில் உள்ள கண்ட நாளத்தில்‌-ஸம்யமம்‌ செய்வதினால் பசி தாகங்களிள்‌ நிவிர்த்தி உண்டாகும்‌–30-.

கூர்ம (ஆமை போன்ற) நாடியில்‌ ஸம் யமம்‌ செய்வதினால் (மநம்‌) ஸ்திரமான இருப்பைப்‌. பெறலாம்‌.–31-

இந் நாடி கழு,த்‌துக்குக்‌ கீழ்‌ மார்பில்‌ உள்ளது. இது ஸர்ப்பத்தையும்‌ உடும்பையும்‌ போலுள்ளது .
விக்ஞாந பிக்ஷு என்பார்‌ அபிப்பிராயப்படிமண்டலாகாரமாக இருக்கின்ற ஹிருதயமே கூர்மாகாரமாக இருக்கின்றது ; அதுவே இக்கு சொல்லப்படுகிறது. மற்றவர்கள்‌ அபிப்பிராயத்தில்‌ ௮து வேறு நாடி, -ஹிருதயம் அன்று

சிரஸில்‌ உள்ள ஜ்யோதிஸ்ஸில்‌ ஸம்யமம்‌ செய்வதினால்‌, ஸித்தர்களை நேரில்‌ பார்க்கலாம்‌.–32-

சித்தர்கள்‌ பூமிக்கும்‌ அந்தரிக்ஷத்திற்கும்‌ மத்தியிலிருக்கிறார்கள்‌.

பிரக்ருதி புருஷ விவேகம்‌ உதயமாவதற்கு முன்‌;. முன்‌ சொன்ன ஸம் யமம்‌. இன்றியே எல்லாவற்றையும்‌ அறியக் கூடியது,–33-

முன்‌ என்றால்‌, பிரகிருதி புருஷ லிவேகம்‌ உதயமாகும்‌ சமயத்தில்‌ எனப்‌ பொருள் படுகிறது . பிராதிபம்‌ என்று மூலத்தில்‌ உள்ளது,
அந் நிலையை அடைந்தவன்‌ ஸம்யமம்‌ செய்யாமலே எல்லாவற்றையும்‌ ௮றிவான்‌.
இந்த பிராதிபம்‌ என்பது தாரக ஞாநம்‌ என்று சொல்லப் பெறும்‌. இது மோக்ஷத்திற்குக் கொண்டு விடும்‌.
இதற்கு அடுத்த படியைப் பற்றி 54-ம்‌. சூத்ரத்தைப்‌ பர்க்க.

முன்‌ சொன்ன ஸம்யமம்‌ எல்லாம்‌, அப்பியாஸி தன்‌ அனுஷ்டாசம்‌ ஸரியா அல்லது பிழையா என்று திர்மானித்துக் கொள்‌ளப்‌ பரீஷை போன்றவையாம்‌. மேற்படியில்‌ இருக்கின்ற யோகி யானவன்‌ புருஷ விவேகம்‌ பெறு முன்‌, சூரியன்‌ உதயமாகுமுன்‌ உடைத்தாயிருக்கின்‌ற ஞாநத்திற்கு, அருணோதயம்‌ போன்றதான ஞாநம்‌ பிராதிபம்‌ என்று பெயர்‌,
பின்பு அடுத்த. சூத்திரத்தில்‌ புருஷ ஞாநம்‌, பூர்ணம்‌ எவ்வித உபாயத்‌தால்‌ ஏற்படும்‌ என்பதை விவரிக்கின்றார்‌.

ஹிருதயத்தில்‌ ஸம் யமம்‌ செய்தலினால்‌ மநத்தின்‌ ஸ்வரூப ஞானம் உண்டாகிறது.–34-

சரீரத்திற்குப்‌ பிரஹ்ம புரமென்று பெயர்‌, ௮தின்‌ ஹிருதய ஆகாசத்தில்‌ அந்தக் கரணம்‌ இருக்கிறது.-அது ஜீவாத்மாவுக்கும்‌ பரமாத்மாவுக்கும்‌ இருப்பிடம்‌.
அந்த இடத்தில்‌ ஸம்‌,யமம்‌ செய்‌தலினால்‌ வாஸனையுடன்‌ கூடிய மநத்தின்‌ உண்மையான ஸ்வருபம்‌ தெரிய வரும்‌.

உண்மையில்‌ வேறு வேறான ஸத்வம்‌ (புத்தி), என்ன,புருஷன்‌ என்ன இவை, இரண்டையும்‌ ஒன்றேடொன்று சேர்ந்து அறிவதானது. போகத்திற்குக்காரணமாம்‌. (இந்த போகமானது)ஸத்வத்திற்து ஸாதகமன்று .
மற்றதற்கு (புநஷனுக்கு ) ஸாதகமாம்‌. புருஷ ஸ்வரூபத்தில்‌ தனித்து ஸம்‌,யமம்‌ செய்வதால் புருஷ் ஞாநம்‌ உண்டாகும்‌.–35-

ஸத்துவம்‌ ஸமஷ்டியில்‌ பிரகிருதி என்றும் , வியஷ்டியில் புத்தி யென்றும்‌ பொருள் படும்‌. ஸ்வார்த்தம்‌, அதாவது
ல்வா — அர்த்தம்‌, ஸ்வா-புருஷனின்‌, அர்த்தம்‌ -பொருள்‌,-புருஷன் குண த்ரயத்திற்கு உட்படாத சின் மயமான விர்த்தி சந்தானம் -ப்ரவாஹம்
புத்தி(பிரக்ஜை) புருஷனை அறிகிறதில்‌லை, ஆனால்‌ புருஷன்‌ பிரக்ஜையை அறிகிறான்‌. புருஷன்‌ ஜடமான்‌ புத்திக்கு சைதந்யத்தைக்‌ கொடுத்து , அதன்‌ மூலம்‌ ௮றிகிறான்‌., ஆனால்‌ புத்தி. புருஷனுக்கு அடுத்‌திருக்கின்றமையால்‌ புத்தி அறிகின்றதென நினைக்கிறோம் .
புருஷனைப்‌ புருஷன்‌ தான்‌ அறியலாமே ஒழிய, புத்தியானது ஐடமாகையால்‌ ௮றிய முடியாது.

ப்ருஹதாரண்ய உபநிஷத் புருஷன் ஸ்வயம் ப்ரகாஸகன் என்பதைக் காட்டுமே

(மேற்கண்ட ழறைப்படி அடைந்த புருஷ ஸாக்ஷாத் காரத்திற்கு)ப்‌ பிறகு (ஸம்யமம்‌ இல்லாமலே) புத்திக்கு ஸூஷ்மமான விஷயங்கள்‌,மறைவான விஷயங்கள்‌, தூரத்திலுள்ள விஷயங்கள்‌, சென்றவைகள்‌  வரப் போகிறவைகள்‌ இவைகளை அறியும்‌ தெளிவும்‌, பஞ்ச இந்திரியங்களுக்கு கேட்டல்‌, ஸ்பரிசித்தல்‌, பார்த்தல்‌, நுகர்தல்‌, முதலிய திவ்ய சக்திகளின்‌ விகாஸமும்‌ உண்டாகின்றன.–36-

மேற் கண்ட அப்யாஸ முறையின்‌ பயனாக இந்திரியங்களின்‌ திவ்ய சக்‌தியும்‌, புத்திக்கு திவ்விய சக்தியும்‌ யோகிக்கு உண்டாகும்‌.
எப்போதும்‌ எல்லாம்‌ அவருக்குத்‌ தெரிய வரும்‌.-உள்ளே நோக்குகின்‌றமையால்‌ முக்கண்‌ திறக்கும்‌, நினைப்பில்லாமலே ஸகல விஷயங்களும்‌ அவருக்குப்‌: புலப்படும்‌.

அவைகள்‌ முன்‌ (சொல்லியவை) ஸமாதிக்கு (அந்தர்முகப்பட்டு புருஷ ஸாஷாத்காரம்‌ பெறுதலில்‌) தடைகளாகும்‌.
பஹிர் முகமாகச்‌ சொல்லுமிடத்து (உலக வியாபார தசையில்‌) அவைகள்‌. ஸித்திகளாகும்‌.–37-

ஸமாதி என்பது இங்கு அஸம்ப்ரக்ஞாத. ஸமாதி! என்று அறியத் தக்கது , இந் நிலையில்‌ உள்ளவனுக்கு பிராதிபாதி ஸித்திகள் இடையூறுகளாகும்‌.
கைவல்யத்தை நோக்குகிறவன்‌ எந்த ஸித்திகளையும்‌ விரும்பான்‌, எவ்வளவு உயர்வுள்ள ஸித்திகளை யடைந்தாலும்‌ இவன்‌ கிருதகிருத்யனாக மாட்டான்‌. அதாவது செய்‌ய வேண்டிய கார்யத்தைச்‌ செய்‌தவனாக மாட்டான்‌. அவன்‌ செய்ய வேண்டியது வெகு கார்யங்களுள்ளன,

இதி குஹ்ய தமம் ஸாஸ்த்ர மிதமுக்தம் மயாநக–
ஏதத் புத்த்வா புத்திமாந் ஸ்யாத் க்ருத க்ருத்யஸ்ச பாரத–৷৷15.20৷৷

குற்றம் அற்றவனே -பரத குலத்தில் உதித்தவனே -இவ் வண்ணமாக இப்புருஷோத்தம வித்யையாகிற
பரம ரஹஸ்யமான சாஸ்திரம் என்னால் உனக்கு உபதேசிக்கப்பட்டது –
இத்தை அறிந்தவன் என்னை அடைவதற்கு வேண்டிய அறிவு அனைத்தையும் பெற்றவன் ஆகிறான் –
அதற்குச் செய்ய வேண்டியவை அனைத்தையும் செய்தவன் ஆகிறான்-

இதுவரை ஞாந ரூபமான விபூதிகளை (சித்‌திகளை) விவரித்தார்‌.-இனி அடுத்த சூத்திரம்‌ முதற் கொண்டு கிரியா ரூபமான ஸித்திகளை விவரிக்கிறார்‌.

பந்தத்திற்தக்‌ காரணமானதை (புண்ணிய பாப கர்மத்தை ஸமாதியினால்‌) நழவும்படி செய்தலினாலும்‌, மநஸ்‌ ஸஞ்சலிக்கும்
(நாடிகளின்‌)மார்க்கத்தை அறிவதினாலும்‌ மநத்திற்குப்‌ பர காயப்‌ பிரவேசம்‌ செய்யும்‌ தகைமை உண்டாகிறது.–38-

யோகி யானவன்‌ தன்‌ மநம்‌ எந்தக் கர்மத்தின்‌ காரணமாகத்‌ தன்னுடைய சரீரத்தில்‌ கட்டுப் பட்டிருக்கிறது. என்பதை அறிந்தும்‌,
யோகாப்யாஸத்தினால்‌ கர்ம பந்தங்களில் நின்றும் தன்னை விடுவித்துச்‌ கொள்ளக் கூடுமாகையால்‌ மநஸ்‌, இந்திரியங்களை அந்தக்‌ கட்டினின்று நழுவும்படி. செய்தும்‌, எந்த நாடிகளில்‌ மநஸ்‌, இந்த்ரியங்கள்‌ நடை பெறுகின்றன என்பதை அறிந்து, பின்னர்‌ எவ்வழியால்‌, எந் நாடி வழியாகத் தன்னுடைய சரீரத்தை விட்டு வெளியேறலாமென்று அறிந்தும்‌, வேறு சரீரத்தில்‌ எந்நாடி, வழியாக நுழையலாமென்று உணர்ந்தும்‌, தன்‌ சரிரத்தில்‌ திரும்பவும்‌ எவ்விதம்‌ நுழையலாமென்று தெரிந்தும்‌, பர காயப் பிரவேசம்‌ செய்யலாம்‌.-மநஸ்‌ வெளியேறும் போது மற்ற இந்த்ரியங்களும்‌, ராணித்தேனீ யானது வெளி யேறுங்காலத்தில்‌ மற்றையத்‌ தேனீக்களும்‌ வெளிக்‌ கிளம்புமாறு போல மற்ற இந்தரியங்களும் வெளிக்கிளம்பும் (ப்ரஸ்ன உப நிஷத்‌, 2 வது பிரச்நத்தைப்‌ பார்க்க.)

உதாந வாயுவை ஜயித்தலினால்‌, ஜலம்‌,சேர்‌,முள்‌.முதலியவைகளில்‌ சம்பந்திக்காமல்‌ சலித்தலும்‌, (வேண்டும் காலத்தில்‌) சரீரத்தை விட்டே வெளி யேறுதலும்‌ செய்து கொள்ளலாம்‌.–39-

இந்த்ரியங்களின்‌ பிரவிர்த்தி இருவிதம்‌. பார்னவ முதலிய வெளி நோக்கிய பிரவிர்த்தி. ஜீவிப்பதற்காக எல்லா இந்தரியங்களின்‌ உள் நோக்கிய (ஆந்தர) பிரவிர்த்தி மற்றது.
இந்த உள்‌ நோக்கிய பிரவிர்த்தியின்‌ கார்பங்கள்‌ பஞ்ச பிராணன்கள்‌. அவையாவன:-.
(1) பிராணன்‌ உச்வாஸ நிச்வாஸ ரூபமாக நாஸிகை
முதல்‌ ஹிருதயம்‌ வரை சஞ்சரிக்கும்‌.
(2) ஸமாநன்‌ ஆகாரங்களை ஸமப் படுத்துகிறது, ஹிருதயம்‌ முதல்‌ நாபி வரை ஸஞ்சரிக்கிறது.
(3) அபாநன்‌ நாபி ஸ்தாநத்‌தினின்று பாதம்‌ வரை வியாபித்துக்‌ கொண்டிருக்‌கிறது -இது மல மூத்‌ராதிகளை வெளியேற்றும்‌,
(4)உதாநன்‌: நாஸி நுனியினின்‌று சிரஸ் வரை வியாபித்திருக்கிறது ,-சரீரத்தை விட்டு மநம்‌, இந்த்ரியங்கள்‌ முதலியன வெளியேறுவதற்க்குக் காரணம்‌ இது .(5) விமாநன்‌ சரீரம்‌ முழுமையும்‌ வியாபித்‌திருக்கறது,
இந்த ஐந்து வாயுக்களில்‌ பிராணன்‌ பிரதாநமானது,-முக்கியப்‌ பிராணன்‌ எனப்‌ பெயர் பெறும்‌, பிராணாதிகளுக்குள்‌ ஏற்பட்ட சண்டையைப் பற்றி பிரஸ்நம்‌, சாந்தோக்கியம்‌, ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்துக்களைப்‌ பார்க்க. உதாநனின்‌ மேல்‌ ஸம் யமம்‌ செய்து ௮தை ஜயிப்பதனால்‌ ஜலம்‌, சேர்‌, முள்‌ முதலியவைகளில்‌ .படாமல்‌ நடக்கலாம்‌. ஸுஷும்நா நாடியின்‌ மூலமாய்‌ ஜீவன்‌ சரீரத்தை விட்டு ௮ர்ச்சிராதி மார்க்க மாய்ச் செல்லலாம்‌.

ஸமாந வாயுவை ஜயித்தலினல்‌, சரீரத்திற்கு ஜ்வலிக்கும்‌ தன்மை உண்டாகிறது.–40-

ஸமாநவாயுவை ஜயித்த யோகி யானவன்‌ உயிருடன்‌ இருக்குங்‌ காலத்தில்‌ தேஜஸ்வீயாக இருப்பான்‌: மரணம்‌ வேண்‌டுங்காலத்தில்‌ ‘தன்னிடமிரும்து அக்நி ஜ்வாலையை உண்டு பண்ணிக்‌ கொண்டு தன்‌ சரிரத்தை தஹநஞ்‌ செய்‌து கொள்ளலாம்‌,
சர பங்கர்‌ ஸ்ரீ இராமாயணத்தில்‌ ஸ்ரீராமனை தர்சநம்‌ செய்த பின்பு தன்னிடமிருந்து ஒரு தேஜஸ்ஸை உண்டு பண்ணித்‌ தன்னுடைய சரீரத்தைத் தஹநஞ்செய்‌து விட்டு திவ்ய சரீரத்துடன்‌ பிரஹ்ம லோகத்திற்கு ஏகினார்-இதை ஆரண்ய காண்டத்திற்‌ கண்டு கொளளுக. பதி வ்ரதா
ஸ்த்ரீயானவள்‌ புருஷன்‌ இறந்த மேல்‌ எப்படி.த் தன்‌னுடைய தேஜஸ்ஸால்‌ தன்‌ சரீரத்தை தஹநம்‌ பண்ணிக்‌ கொள்ளுவாளோ, அவ்விதமே யோகிகள்‌ தாங்கள்‌ உலகத்திற்கு.வந்த கார்யம்‌ ஆகி விட்டது என்று அப்படிச்‌ செய்து கொள்ளுகிறது உண்டு.

சுரோத்ரேந்த்ரியத்திற்கும்‌, ஆகாசத்திற்கும்‌ உள்ள்‌ ஸம்பந்தத்தை ஸம் யமம்‌ செய்தலினால்‌,
யோகியின்‌ சுரோத்ரேந்திரியமானது நுண்ணிய சப்தங்களைக்‌ கேட்கும்‌ தகைமையைப்‌ பெறுகிறது.–41-

கேட்கும்‌ தன்மை பூர்த்தியடைகிறது. ஆகாசம்‌ ஆவரணமின்‌றி எங்கும்‌ வியாபகமாக இருத்தலினால்‌ இந்த ஸம்யமத்தினால்‌ ஸித்தி பெற்ற யோகி நினைத்த மாத்ரத்தில்‌ எந்த சப்தத்தையும்‌ கேட்கக்‌ கூடியவனாவன்‌. இவ் விதமே ஒவ்வொரு இந்த்ரியத்‌திற்கும்‌ அததன்‌ அநிஷ்டாந பூதங்களுக்கும்‌ உள்ள சம்பந்தத்தில்‌ ஸம் யமஞ்‌ செய்‌தலினால்‌, அந்த இந்தரியத்‌தின்‌ பூர்ண சக்தி உண்டாகிறது.

த்வக் இந்த்ரியத்துக்கு அதிஷ்டான தேவதை வாயு -கண்ணுக்கு தேஜஸ் -நாக்குக்கு ஜலம் -நாஸிக்குப் பிருத்வீ–42-

சரீரத்திற்கும்‌ ஆகாசத்திற்கும்‌ உள்ள சம்பந்தத்தை ஸம் யமம்‌ செய்தலினால் சரீரத்திற்குப்‌ பஞ்சு போன்று லகத்துவம்‌ உண்டாகும்‌. அதனல்‌ ஆகாசக மந சக்தி (யோகிக்கு) ஏற்படும்‌.-ஆகாசத்தின்‌ குணங்கள்‌ யோகிக்கு உண்டாகும்‌.-ஜலத்தில்‌ மிதக்கலாம்‌. ஆகாசத்தில்‌ நிற்கலாம் , வாயுவில்‌ ஸஞ்சரிக்கலாம்‌:
அக்நி அவனுக்கு ஒருவிதக்‌ கெடுதியும்‌ செய்யாது .-சிலந்திப்‌ பூச்சியின்‌ நுண்ணிய இழை நூலில்‌ சஞ்சரிக்கலாம்‌. ஸூர்ய கிரஹணங்களில்‌ ஸஞ்சரிக்கலாம்‌. அவன்‌ போக்குக்கு எங்கும்‌ தடையில்லை

வெளியிலுள்ள விஷயங்களால்‌ கற்பிக்கப்படாத மநோ விர்த்திக்கு -மஹா விதேஹா”’ என்று பெயர்‌.-அந்த நிலைமையை, அடைவதினால்‌ பிரகாசத்திற்தத்‌ தடையாயுள்ள ஆவரணத்தின்‌ க்ஷயம்‌. ஏற்படுகிறது.–43-

முன்‌ வெளியிலிருக்கின்‌ ற விஷயங்களைப்‌ பற்‌றி யுண்டாகும்‌ மநோ விர்த்திகளில்‌ ஸம் யமம் செய்‌தல் சொல்லப்பட்டது.-அவ் விர்த்‌திகளுக்கு கல்பிதம்‌’ என்‌,று பெயர்‌. வெளி விஷயங்கள்‌ சம்பந்தமின்‌றி மநஸ்‌ தன்‌ ஸ்வரூபத்தில்‌ இருப்பதானது *அகல்பிதம்‌”என்றழைக்கப்படுகிறது. அதை மஹா விதேஹா” என்று சூத்‌திரத்‌தில்‌ சொல்லப் பட்டிருக்கிறது . வெளியில்‌ பிரவிர்த்தி இல்லை. புருஷ தர்சனமும் உண்டாக வில்லை. -ஸூஷுப்தியும் இல்லை.
இவ்விதம்‌ இல்லாமல்‌ மநத்திற்கு ஒரு நிலை உண்டு. அஃது இந்த சூத்திரத்‌தில்‌ சொல்லப்படுகிறது கட்டுப்பட்ட இந்த சரீரத்தினின்று இயங்கும்‌ மநஸ்‌ இந்தக்‌ கட்டை விட்டு வெளியேறி ஸர்வ வியாபியாகி எங்கும்‌ நினைக்கும்‌ தன்மை உண்டாகும்‌ நிலை இதில்‌ சொல்லப்பட்டு இருக்கிறது .
இந் நிலையில்‌ பர காயப்‌ பிரவேசம்‌ செய்யலாம்‌. -துக்கம் கர்மம்‌, அஞ்ஞானம் இவை நீங்கும் -புத்தியின்‌ உயர் நலம்‌ உண்டாகும் –
மல பரிபாகம்‌ என்று சைவ,ஸித்தாந்திகள் சொல்லுவது இங்கே கவனிக்கத் தக்கது, தமோ குணம்‌ ரஜோ குணம்‌ இரண்டும்‌ அற்று ஸத்வ குணநிலையில்‌, மநஸ்‌ இருக்கின்ற ஸ்திதிதான்‌ இச் சூத்திரத்தில்‌ விவரிக்கப்படும்‌ “மஹா விதேஹா ”என்பது . இந் நிலையில் செய்யும்‌ பர காயப் பிரவேஸம்‌ :முன் 38-வது சூத்திரத்தில்‌ சொல்லியபடி, ஸாதநங்களின்றி நினைத்த மாத்திரத்தில்‌ நிகழும்‌. இந் நிலையில்‌ யோகி ஸத்ய காமனாகவும்‌, ஸத்ய ஸங்கல்பனாகவும்‌ ஆகிறான்‌.

வஸ்துக்களின்‌ ஸ்தூலமான வெளித் தோற்றம்‌, யதார்த்த ஸ்வரூபம்‌- ஸூஷ் மமான நிலைமை, அந்வயம்‌, அர்த்தவத்வம்‌ இந்த 5 தன்மைகளை ஸம் யமம்‌ செய்தலினால்‌ பூத ஜயம்‌ உண்டாகும்‌.–44-

அடிக்கடி. மாறாத தன்‌ நிலைமை யென்பது யதார்‌த்த ஸ்வரூபம்‌. அதாவது தங்கமும்‌ நகையும்‌ போல.-ப்ருதிவீக்குக்‌ கடிநத்‌ தன்மையும்‌, அப்புவிற்கு
நெகிழ்ச்சியான தன்மையும்‌, தேஜஸ்ஸுக்கு உஷ்ணமும்‌, வாயுவுக்குச்‌ சலநமும்‌, ஆகாசத்திற்கு ‘ எங்கும்
பரவியிருத்தலும்‌ தனித் தனி ௮ததன்‌ ஸ்வரூபம்‌. என்று பெயர்‌.
ஸூஷ்ம நிலைமை.–தன் மாத்ரை, அந்வயம்‌- எல்லாப்‌ பதார்த்தங்களிலும்‌ ஊடுருவிப் பாய்ந்து இருக்கின்‌றவை. அவையாவன ஸ்த்வ,ரஜஸ்‌, தமஸ்‌ என்ற முக் குணங்களுமாம்‌.-அர்த்தவத்வம்‌“குணங்களின்‌ சக்தி, போகம்‌, அபவர்க்கம்‌ (மோக்ஷம்‌)களைக்‌ கொடுக்கும்‌ தன்மை.
குணங்கள்‌ ஒல்வொரு வஸ்துவினிடமுமிருக்கின்‌றமையால்‌ மேற்படி தன்மை ஒவ்வொரு வஸ்துவினிடமும்‌ உள்ளது.
முன்னே இந்த பாதம்‌ 18-ம்‌ சூத்திரத்தில்‌ தர்மம்‌, லக்ஷணம்‌, அவஸ்தை என்ற பரிணாமங்களைச்‌ சொல்லி, பரிணாமமில்லாத நிலைமையை அறியும்‌ முறை சொல்லப்பட்டது. இந்த சூத்திரத்தில்‌ உலகக்‌தில்‌ தோன்றும்‌ விஷயங்களின்‌ உண்மையை அறியும்படி 5 தன்‌மைகள்‌ சொல்லப்பட்டிருக்கின்‌றன.
பூத ஜெயம் பெற்ற யோகியின்‌ சங்கற்பத்தை அனுஸரித்து எல்லா பூதங்களும்‌, பசு தன்‌ கன்றை அனு ஸரிப்பது போல, நடை பெறுகின்றன.

அதனால் (பூத ஜயத்தினால்‌) அணிமாதி ஸித்திகளும்‌, காய ஸம்பத்‌தும் உண்டாகின்றன.
பிருதிவ்யாதி பூதங்களின்‌ அததன்‌ தர்மங்களிலால்‌ நிகழும் தடைகள்‌ அந்ற நிலைமையை யோகி பெறுகிறான்‌,–45-

அணுவாகும்‌ தன்மை (அணிமா), இலேசாகும்‌.தன்மை (லகிமா), பெரிதாகும்‌ தன்மை (மஹிமா ), கனமாகும்‌-தன்மை (கரிமா), தூரத்திலிருக்கின்ற. வஸ்துவை அணுகும்‌ தன்மை-(பிராப்தி), கர்மங்களுக்குத் தடையின்‌றி இருத்தல்‌ (பிராகாம்யம்‌)பிராணிகளை ஸ்ருஷ்டித்தல்‌(ஈசத்துவம்‌),எல்லா வற்றையும்‌ ஸ்வாதீநப்‌படுத்தல்‌ ; (வசித்துவம்‌)-இத்தகைய: சக்திகள்‌ இருந்தும்‌ உண்மையான யோகிகள்‌ இவைகளை விணாகச்‌ செய்ய மாட்டார்கள்‌. பூதங்களின்‌ தர்மங்களால்‌ தடைகளில்லை. என்றால்‌ பூமிக்குள்‌ நுழைய:லாம்‌, ஜலத்தில்‌ உட்காரலாம்‌, ஆகாசத்‌தில்‌ நிற்கலாம்‌, தன்னை ஆகாசமும் கூட மறைக்கும் படியாகச் செய்து கொள்ளலாம்‌.

காய ஸம்பத் என்றால்‌ அழகு, லாவண்யம்‌, பலம்‌, வைரம் போன்ற உறுதி என்பனவாம்‌. –46–

கிரஹணம்‌, ஸ்வருபம்‌, அஸ்மிதை, அந்வயம்‌, அர்த்தவத்வம் இவைகளில்‌ ஸம் யமம் செய்வதினால்‌ இந்த்ரிய ஐயம்‌ உண்டாகும்‌-47-

கிரஹணம்‌-சப்‌தாதி. விஷயங்களை ‘கிரஹித்தல் –இந்திரிய ப்ரவ்ருத்தி இது இருவிதம்‌: ஸாமாந்யம்‌,-விசேஷம்‌. ஸ்வருபம்‌–இந்திரியங்கள் ஸாத்விக அஹங்காரத்தில் நின்று உண்டாயின; இந்த்ரியங்கள்‌ உண்டான அந் நிலை, பிரகாசத் தன்மையுள்ள ஸாத்விக அஹங்காரத்‌தினின்று உற்பவித்த தத் ஸமயத்தின் அஸ்மிதை அந்த ௮ஹங்காரம்‌. அந்வயம்‌-அவ்வஹங்காரம் எதினின்று உண்டானதோ அந்த ஸத்ய ரஜஸ்‌ தமோ குணங்களுள்ள மஹத்‌ தத்துவம்‌, அர்த்தவத்வம்‌ -போக அப வர்க்கங்கள் .

(1) இந்திரியங்கள் விஷயங்களை கிரஹிக்கும்‌ நிலை, (2) இந்திரியங்களின்‌ நிர்மலமான ஸ்வருபம்‌, (3)இந்த்ரியங்களுக்குக்‌ காரணமான ஸாத்விக அஹங்காரமான அஸ்மிதை, (4) மேற்கண்டவைகளில்‌ ௮னுசரித்து இருக்கின்‌ற மூன்று குணங்கள் (ஸாத்விகம்‌, ராஜஸம்‌,தாமஸம்‌.)(5) இக் குணங்களிலிருக்கின்‌ற போகாபவர்க்கங்களை உண்டு பண்‌ணும்‌ சக்தி ஆகிய இவைகள்‌ ஒன்‌றின்‌ பின்‌ ஓன்றாய் உண்டான பரிணாமங்கள்‌.
இவைகளின்‌ மேல்‌ ஸம் யமம்‌ செய்‌தலினால்‌ இந்திரியஜயம்‌ உண்டாகிறது, இந்த்ரியங்கள்‌ ௮ததன்‌ பிரயவிர்‌த்தியின்‌றியும் லயமின்றியும்‌ தத்தம்‌ நிலையில்‌ இருப்பதை யோகி செய்‌து கொள்ளுவானாகில்‌ அப்போது ஒருவித ஆநந்தம்‌ ஜநிக்கும்‌. அதற்கு“ ஸாநந்தம்‌ ‘” என்று பெயர்‌.

அதனால்‌ (இந்த்ரிய ஜயத்தினால் ) மநோ வேகம்‌ போன்ற வேகத்தை யோகியின்‌ சரீரம்‌ பெறுகிறது. சரீரத்தின்‌ சலநமில்லாமலே அதன்‌ உதவியின்றியே
(எல்லா தேசங்களிலும்‌, காலங்களிலும்‌ உண்டாகும்‌. எல்லா விஷயங்களையும்‌ உள்ள படி) இந்த்ரியங்களுக்கு, கிரஹிக்கும்‌ சக்தி யுண்டாகிறது. பிரதாந ஜயம்‌ உண்டாகிறது.–48-

பூத ஜயம்‌, அதனால்‌ இந்த்ரிய ஜயம்‌, ௮தனால்‌ பிரதாந ஜயம்‌ இம் மூன்று ஸித்‌திகளும்‌ சேர்ந்து மது பிரதீகா என்று.
சொல்லப்படுகிறது.-இந்த நிலையில்‌ போகியானவன்‌ ரிதம்பரா. பிரக்‌ஞையை உடையவனாகிறான்‌ .

ஸத்வம்‌ வேறு, புருஷன்‌ வேறு என்று . நிச்சயமாக அறிந்திருக்கிற யோகிக்கு எல்லா வஸ்துக்களுக்கும்‌ அதிபதியாக விருக்கும்‌ தன்மையும்‌.
எல்லா வஸ்‌துக்களையும்‌ அறியும்‌ சக்தியும்‌ உண்டாகின்றன–48-

ஸத்துவம்‌(ரஜோ குணம்‌, தமோ குணமில்லாத நிலைமையில் புத்தியானது சுத்த ஸத்துவ குண . ஸம்பந்தியாக. இருக்கிற புத்தி தத்துவம்‌) புருஷன்‌ இவை யிரண்டும்‌ -அ விவேகத்தினால்‌ ஸாதாரண ஜனங்களுக்கு அபேதமாகக்‌ காணப்படுகின்றன. இவை யிரண்டையும்‌ வேறென்று யோகி அறிகிறான்‌.
எல்லா வஸ்துக்களையும்‌ ஸ்வாதீநமாக வைத்துக் கொள்ளும்‌ தகைமையும்‌(ஆதிபத்யமும்‌) ஸர்வ க்ஞாந சக்தியும்‌ உண்டாகின்‌றன.
இந்த ஸித்திக்கு * விசோகம்‌”” என்று பெயர்‌. எப்போதும்‌ எந்நிலையிலும்‌ வியஸந மற்ற நிலமையை யுடையவனாக ஆகிறான்‌. விருப்பு வெறுப்பற்றவனாக. இருக்கின்றான்‌,

முன் பிரஸ்தாபித்த விசோகம்  என்ற ஸித்தியில் வைராக்யத்தைப் பெறுவதினால் தோஷங்களுக்கும்‌ அவைகளின்‌ காரணமான பூர்வ கர்மம்‌ அவித்யை முதலானவைகளுக்கும்‌ நாசம்‌ உண்டாகும்‌. அதன்‌ பிறகு யோகீ கைவல்யத்தைப்‌ பெறுகிறான் –50-.

(1) பூத ஜயம்‌, இந்த்ரிய ஐயம்‌, பிரக்ருதி ஜயம் ஆகியஇவை மூன்றும் ஸித்திகள்‌.
(2) தோஷங்கள்‌–கிலேசங்கள்‌, ௮ஸ்மிதை, ராகம்‌, த்வே ஷம்‌, ௮பிநிவேசம்‌.
(3) பீஜம்‌–பூர்வ கர்ம ஸம்ஸ்காரங்கள்‌, அவித்யை,
(4) கைவல்யம்‌–ஸாத்விக, ராஜஸ தாமஸ குணக்களினின்று விலகித் தனிப்பட இருத்தல்‌, இதுவே ௮மநஸ்க நிலை ,-மநம்‌ அற்ற ஸ்தாநம்‌, இந்த ஸித்திக்கு ஸம்ஸ்கார சேஷம்‌ என்று பெயர் .
(5) ஈஸ்வரனுக்கும்‌ இந் நிலை பெற்ற கோகி யான புருஷனுக்‌கும்‌ இருக்கும்‌ பேதம்‌ என்ன வென்றால்
ஈஸ்வரன் குணங்கள்‌ மூலமாய்‌. நிமித்த காரணமாயிருந்து கொண்டு ஸ்ருஷ்டி, ஸ்திதி முதலிய கிருத்யங்களைச்‌ செய்‌து கொண்டு வருகிறார்‌.
யோகியான புருஷன்‌ அவர்‌ ஆளுகையின்று விலகி ஸ்வாராஜ்யம்‌ பெறுகிறான்‌.

தேவர்களால்‌ அழைக்கப்படும்‌ காலத்தில்‌ பிரியத்தையும்‌ கர்வத்தையும்‌ கொள்ளற்க. திரும்பவும்‌ அநிஷ்டங்கள்‌ உண்டாகின்றமையால்‌.–51-

யோகிகள் 4 படியில்‌ உள்ளவர்கள்‌ :–(1) பிரதம்‌ கல்பிகர்‌ (2) மதூபூமிகர்‌ (3) பிரக்ஞாஜ்யோதிஸ்‌ (4) அதிக்ராந்த பாவநீயர்‌,
பிரதம கல்பிகர்‌:–இவர்‌ அப்பியாஸீ , யோகத்தில்‌ புகுந்தவர்‌.
ஸம் யமத்தில்‌ ஆரம்பித்‌தவர்‌. ஆனால்‌ ஒரு ஸித்‌தியும்‌ பெறாதவர்‌.
மதூபூமிகர்‌:– மதுமதி என்ற ரிதம்பரா பிரக்ஞா நிலையில்‌: இருக்கின்றவர் . பூத ஜயம்‌, இந்திரிய ஜயம்‌ பெற முயன்று, அவைகளை ஸாக்ஷாத் கரித்து ஜயித்தவர்‌.மதுபிரதீக, விசோக, ஸம்ஸ்கார சேஷம்‌ என்ற மூன்று பூமிகளை அடைய முயலுகின்‌றவர்‌..
பிரக்ஞாஜ்யோதிஸ்‌:–பூத ஐயம்‌, இந்த்ரிய ஜயம்‌ பெற்றதினால்‌ தேவர்களால்‌ எவ்வித சல நத்திற்குமுட்படுத்தப்படாதவன்‌,
மதுமதி, மது பிரதீக என்ற பூமிகளை ௮டைந்தவன்‌, விசோக, ஸம்ஸ்கார சேஷம்‌ என்ற பூமிகளை புருஷ ஸாக்ஷத்காரம்‌ பெறுவதற்காக அடையும்படி (சித்திகள்‌ பெற அன்று) ஸம்யமம்‌ செய்கிறவன்‌.அதிக்ராந்தபாவநீயர்‌:–மதாபூமிகா, மது: பிரதீகா, விசோகா
என்ற மூன்று பூமிகளை யடைந்த ஜீவந் முக்தன்‌; கைவல்யத்தை யடைந்தவன்‌. 2-ம்‌ பாதம்‌, 27-ம்‌ சூத்‌திரத்தில்‌ இவனைப் பற்றிப்‌ பிரஸ்‌தாபித்‌ திருக்கிறது.
இவர்களில்‌ இரண்டாவது படி ஏறியவனுக்கே இந்த சூத்திரத்தில்‌ சொல்லிய அபாயம்‌,நேரிடும்‌. தேவர்கள்‌, இவன்‌ மேலேறாமல்‌ பல மயக்கங்களான உலக கவிஷயங்களினால்‌ இவனை இழுப்‌பார்கள்‌. கட உபநிஷத் நசிகேதஸ் யம தேவன் ஸம்வாதம் இங்கு கவனிக்கத் தக்கதே – பல ஆசைகள்‌ வந்து பீடிக்கும்‌. தன்னை தேவர்கள்‌ வந்து கூப்பிடும்படியான தகைமை தனக்குண்டாயிருக்கிறது என்று அகம்பாவமும்‌ கருவமும்‌ கொள்ளுவான்‌. அப்படி. யேற் படுமாகில்‌ யோக முயற்சி தளரும்‌, குறையும்‌, சோர்வு உண்டாகும்‌.இந்தப்‌ படியினின்று நழுவும்படியான நிலைமை உண்டாகும்‌; அதை; நோக்கியே எச்சரிக்கையாய்‌ இருக்கும்படி. இந்த சூத்திரம்‌ உபதேசிக்கிறது -அப்படித்‌ தளருவானாகில்‌ எவ்வளவோ கஷ்டப்பட்டு அடைந்த இந்த மாயா உலக வாழ்வை விட்டு உயர் நலமமைந்த.ஞாநத்தை உள்ளபடி அறியும்‌ நிலமையினின்று கீழே விழுவான்‌.. உலகக் களேபரத்தில்‌ மறுபடியும்‌ அழுந்துவான்‌, ௮தில்‌ மூழ்குவான் -இம் மயக்கங்களுக்கு உள்ளாகாமல்‌ நேரே படியேறி மேல்‌ நோக்குகின்றவனே கைவல்யம்‌ பெறுவான்‌.

க்ஷணத்தையும்‌ அதன்‌ கிரமத்தையும்‌ ஸம்யமம்‌ செய்தலினால்‌ விவேக ஞாநம்‌ உண்டாகும்‌.–52-

க்ஷணம்‌ – காலத்தின்‌ பரம அணு.- அதாவது அதற்கு மேல்‌ பபகுக்கக் கூடாதது: கிரமம்‌- வரிசை, அந்த க்ஷணம்‌ ஒன்றின் பின்‌ ஒன்றாய்‌ நிகழும்‌ தொடர்பு:
பதார்‌த்தங்களைப்‌ பிரித்துக் கொண்டே போசு கடை முறையில்‌ பரம அணு மிஞ்சும்‌.
“சென்று சென்று அணுவாய்ச்‌ தேய்ந்து ஒன்றாம்‌. அது போலக்‌ காலத்தைப்‌ பிரித்‌துக் கொண்டே போகக்‌ கடை, முறையில்‌.க்ஷணம்‌ மிஞ்சும்‌. அதைப்‌ பிரிக்க இயலாது. ஒரு பரம அணு சென்று அடுத்த பரம அணு ஆரம்பிக்கிற வரையுள்ள காலத்திற்கு க்ஷணமென்று பெயர்‌.
அந்த க்ஷணங்களுடைய பிரவாஹத்திற்குக்‌ கிரமம்‌ என்று பெயர்‌, பரம அணுக்களைத்‌ தவிர உண்மையில்‌ வேறாக வஸ்‌துக்களும்‌,க்ஷணத்தைத் தவிர வேறாக மாதம்‌, தினம் முதலான காலங்களும் இல்லை. அனவகள்‌ நம்முடைய புத்தியில்‌ ஏற்படும்‌ தோற்றங்கள்‌,
காலம்‌ (மாஸம்‌ முதலியன) பிரத்யேகமான வெளிப்படையான வஸ்து அன்று, (no entity ). அவை புத்தியின்‌ கற்பிதம்‌. ஸாதாரண ஐநங்கள்‌ பஹிர்முசு நோக்கானவர்‌களாகையால்‌ அவைகளை (மாசம்‌, தினம் முதலியவற்றை) வஸ்துக்களாககிரஹிக்கிறார்கள் -க்ஷணம் ஒன்றே வாஸ்தவம்‌. அது எப்‌பொழுதும்‌ தொடர்பாய்‌ நிகழ்கிறது . இதைத் தான்‌ காலத்தின்‌ தத்வம் அறிந்தவர்கள்‌ காலம்‌ என்று சொல்‌கிறார்கள்.
இரண்டு க்ஷணங்கள்‌ ஒன்று சேர்ந்து நிகழா; இடைவெளி உண்டு,

வஸ்துக்களின்‌ இடைவெளியும்‌ காலத்தின்‌ இடைவெளியும்‌ இருக்‌கின்றன. அவை ௮திக ஸுஷ்மமாக நிகழ்கின்றமையால்‌ இடைவெளிகள்‌ இல்லை போலத்‌ தோன்றுகின்‌றன; வாஸ்தவத்தில்‌ உள்ளன. வர்த்தமாந க்ஷணம்‌ நிகழ்‌ காலம்‌: மாத்திரம்‌ உண்மை,-சென்ற காலமும்‌, வருங்காலமும வாஸ்‌தவமில்லை.
ஒவ்வொரு ஷணத்‌திலும்‌ பரம அணுக்களின்‌ சலநங்கள்‌ ஏற்படுகின்றன.-அவைகளால்‌ நாநாவித பரிணாமங்கள்‌ உண்டாகின்றன… உலக முழுவதும்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாகப்‌ பரிணாமங்களை யடைகின்றது-ஜகத்‌திலுள்ள எல்லா வஸ்‌.துக்களின்‌ தர்மங்களும்‌ க்ஷணத்தை அனு ஸரித்‌திருக்கின்றன, அதின்‌ மேல்‌ அளவுகள்‌ ஆரோபமாகவிருக்கின்‌றன. விவேக ஞாநம்‌: பிரகிருதி புருஷ விவேகம்‌,

ஜாதி, லக்ஷணம்‌, தேசம்‌ இவைகளினால்‌ வேறு வேறாக அறிய முடியாத வஸ்துக்களையும்‌,முன்‌ சொன்ன ஸம் யமத்தினல்‌ வேறு வேறாக அறிதல்‌ யோகிக்கு ஏற்படும்‌,–53-

ஜாதி, லக்ஷணம்‌, தேசம்‌ இவை மூன்றினால்‌ தான்‌ வஸ்‌துக்களை வேறு வேறாக அறிகின்றோம் .-சூஷ்மமான ஸ்‌திதியில்‌ இந்த சாதநம்‌ உபயோகமில்லாமல்‌ போகும்‌.-அந் நிலையில்‌ யோகி முன் சொன்ன ஸம்யமத்தினால்‌ வஸ்துக்களின்‌ வேற்றுமை ஞாநத்தை அறிகிறான்‌, ஸ்தூலமான வித்யாஸங்களும்‌ ஸுஷ்மமான வித்யாஸங்களும்‌ யோகிக்குத்‌ தெரிய வரும்‌.

விவேகத்தினால்‌ உண்டான ஞாநம்‌ தாரகம்‌ என்று பெயர்‌, இந்த ஞாநம்‌ எல்லா விஷயங்களையும்‌ எல்லாக்‌ காலங்களிலும்‌ ஒரே சமயத்‌தில்‌ (யோககி இருக்கிற பிரகாரம்‌) அறியும்‌ தகைமை உண்டாகிறது.–54-

தாரகம்‌ என்பதாவது கரை யேற்றி வைக்கும்‌ ஞாநம்‌.-மோக்ஷத்திற்குக்‌ கொண்டு போகும்‌ இயல்பினது -, மதுமதி முதல்‌ ஆரம்பிக்கிற யோகப்‌. பிரபையானது இந்த ஞாநத்தின்‌ ஒருபாகம்‌,-ஒரே சமயத்தில்‌ என்றால்‌ யாதொரு ஸாதநமுமின்‌றி,-முறையுமின்‌றி ஓரே காலத்தில்‌ நினைத்த மாத்திரையில்‌ எல்லா விஷயங்களையும்‌ அறிகிறான் -அதாவது ஸர்வக்ஞன்‌ என்றபடி.

புத்தியானது புருஷனைப் போன்று பரிசுத்தமடையும்‌ காலத்தில்‌ கைவல்யம்‌ உண்டாகும்‌.–55-

கைவல்யம்‌, தன்னிலையிலிருத்தல்‌.– ஸத்துவம்‌, அதாவது புத்தி தத்வம்‌, அதில்‌ புருஷன்‌ பிரதி பிம்பிக்கிறான்‌, ஸத்வம்‌
தான்‌ ஞாநத்திற்கும்‌ அகங்காாரத்திற்கும்‌ காரணம் –
அதுவே அந்தக் கரணம்‌. அது சலநமற்று ஓய்வை யடைந்து ஸமாதாநமான நிலையிலிருக்கும் போது புருஷனைப்‌ போல்‌ ஸ்வரூபமடை,கிறது, விஷயங்களைப்‌ பற்றாமல்‌ அந்தக்கரணம்‌ அழிந்தாற் போல இருக்கின்‌ற நிலைமையில்‌ புருஷன்‌ பிரஹ்மாதி ஸ்தம்ப பரியந்தமுள்ள எந்த வஸ்துவினுடைய அபேக்ஷையுமில்லாமல்‌ ஸ்வ தந்தரனாகிறான்–ஆனந்த ஸ்வரூபி யாகிறான்‌. அதுவே கைவல்யம்‌.

விபூதி பாதம்‌ முற்றிற்று,

——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading