ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் விஷயமான மந்த்ரம்
ஓம் ரிக் யஜுஸ் ஸாம ரூபாய வேதா ஹரண கர்மணே
ப்ரணவ உத்கீத வபுஷே மஹா ஸ்வ ஸ்ரஸே நம–
ஓம்–ரிக்–ய–ஜுஸ்–ஸா –ம–ரூ–பா–ய–வே–தா–ஹ–ர-ண
கர்–ம–ணே–ப்ர–ண–வ–உத்–கீ–த– வ–பு–ஷே -ம–ஹா-ஸ்வ
ஸ்ர-ஸே-ந-ம-32- அக்ஷரங்கள் -அநுஷ்டுப் சந்தஸ்ஸில் ஸ்லோகம் –
ரிக் யஜுஸ் ஸாம வேதங்களைத் தன்னுடைய வடிவமாகக் கொண்டவனும்
வேதத்தை மீட்டு பிரமனுக்கு கொடுத்து அருளியவனும்
பிரணவம் என்றே குறிப்பிடப்படும் -ஸாம அவயவங்கள் ஒன்றான -உத்கீதமே வடிவு எடுத்தவனுமாகிய
அந்தப்பெரிய பரி முகனுக்கு நமஸ்காரங்கள்
இந்த அஷரங்களை முதல் எழுத்தாகாக் கொண்டு ஸ்ரக் தரா -சொல் மாலையாக -21 அக்ஷரங்கள் கொண்ட ஸ்லோகங்கள் கொண்ட மாலை
——-
ஓம் இத் யாத்மானம் அந்தர் நியமித கரணைர் த்யாயதாம் த்யாய தீ ஹாம்
ஓம் இத்யேவ ஸ்வயம் யஸ் பரிஹ்ருத விஹிதம் சித்திம் ஆதாது காம
வக்த்ரே வாஹஸ்ய தஸ்ய ஸ்துதி மதிமிதவாக் ப்ரஸ்துவே தன் மநூத்யத்
வர்ணாத்ய ஸ்ரக் தரா பிர் விம்ருதித விவிதாவத்ய தாராபிரத்ய –1-
புலன்களை அடக்கி ஓம் என்ற மா பெரும் மந்த்ரத்தைக் கொண்டு எம்பெருமானைத் த்யானம் செய்வர் பெரியோர் –
அவர்களுடைய தியானத்தினால் மகிழ்ந்து அவர்களுக்கு குதிரை முகனான எம்பெருமான்
தடைகள் எல்லாவற்றையும் நீக்கி -அவர்கள் ஸித்தி பெற்றிட விரும்பி -ஓம் என்று தானே ஸங்கல்பம் செய்து அருள்கிறான்
ஓம் -ஆமாம் -அப்படியே ஆகுக -ஸத்ய ஸங்கல்பன் அன்றோ –
அத்தகைய குதிரை முகப்பெருமானை மிகவும் குறுகிய சொல் வளமுடைய அடியேன் ஸ்ரக் தரா என்னும் வகையில் பாட விரும்புகிறேன்
இந்த ஸ்லோகங்கள் அவனைப் பற்றியவையே என்பதால்
இதில் சொல் குற்றம்- பொருள் குற்றம்- சொல்பவர் பால் உள்ள குற்றம் -சொல்லும் முறையில் உள்ள குற்றம்
இவை போன்றவை எல்லாம் வலிமையுடன் அணி வகுத்து இருந்தாலும் அவைகளை பொடி செய்து விளங்கக் கூடியவை ஆகுமே
————
ரிக்பி ஸாஸஸ்ய மானோ மஹி மஜூஷி யஜுஸ் யேஷு ஜோ குஹ்யமானோ
ஸாம் நா தோஷ் டூய மானோ முனி ஜன ஹ்ருதயாப் ஜேஜூ ராராஜ்ய மான
நீஹாரோர் வீத ராபா ப்ரதிபட ருசிபிர் கிஞ்சி பாபாஸ்ய மான
ஸ்ரேயஸ் ஸ்தேயோ விதத்தாம் மம ஹித வதன அபிக்யயா க்யாய மான –2-
குதிரை முகன் என்ற திரு நாமத்தால் குலவப்படும் பெருமான் எத்தகையவன் தெரியுமோ என்னில்
அவன் ரிக் வேத மந்திரங்களால் பல இடங்களில் சிறப்பான வகையில் போற்றப்படுபவன்
பெருமையுடைய யஜுர் வேதத்தால் அடிக்கடி சிறப்பான முறையில் பலமுறை ஸ்துதிக்கப் படுபவன்
ஸாம வேதத்தால் நன்கு ஸ்தோத்ரம் செய்யப்படுபவன்
முனிவர்களின் ஹிருதயத் தாமரையில் சிறப்பாக இடம் பெற்றுத் திகழும்படி த்யானம் செய்யப்படுபவன்
அவன் வெள்ளைப் பரி முகன்
அவன் திருமேனி பனிமலையில் ஒலியுடன் போட்டி போடும் கதிர்களை வீசுகிறது
அக்கதிர்களினால் அவன் மிகவும் சிறப்பாக ஒளிர்கிறான்
நம்பிக்கைக்கு உரியனான அவன் நமக்கு நீங்காத செல்வதை அருளும்படி செய்து அருள வேண்டும் –
———–
யச் சத்வச் சாச்ச போத ப்ரஸ்ரமிஹ ஸ நஸ் சந்த மாத்ர ப்ரக் லுப்தா
சிச் சிச் சித்ர ப்ரபஞ்சஸ் திதி கதிர் நியதிர் மூர்த்தி துங்கஸ் துரங்க
பங்க வ்யாஸங்க தூர ப்ரஸ்ரு மரஸர துத் பூதராகா ஸூ தாம் ஸூ
ஜ்யோத்ஸ் நா சச்சாய வித்யா விசர விதரணஸ் தூல லஷோ வலஷ–3-
வெள்ளைக்குதிரை முகமான உயர்ந்த தெய்வமான ஹயக்ரீவப் பெருமாள் ஞானத்தை வாரி வழங்குகிறார்
பனி அற்ற ஸரத்கால பூர்ண சந்திரன் தனது தடையில்லாத கிரணங்களை எங்கும் பரவச் செய்து அமுதை பொழிவது போல் –
உலகை உய்விக்கும் அவன் வாரி வழங்கும் ஞானச் செல்வத்தாலே
தனது நித்தியமான ஸத்ய சங்கல்பத்தினாலே ஸமஸ்த சித் அசித் நிறைந்த ப்ரபஞ்சத்தைக் காத்து அருளி
செயல்படச் செய்து அனைத்தையும் ஆள்பவன்
அப்படிப்பட்ட வள்ளலான வெள்ளைப் பரி முகன் நமக்குத் தெளிவான ஞானப் பரப்பை அளித்து அருள வேணும் –
அ பங்குர கலா தானஸ் தூல லக்ஷத் வமீயுஷே
துங்காய மஹஸே தஸ்மை துரங்காய முகே நம–நடாதூர் அம்மாள் அருளிச் செய்த ப்ரபந்ந பாரிஜாத ஸ்லோகத்தை அடி ஒற்றி அருளிய ஸ்லோகம்
——————–
ஜூஷ்டோ தேவ்யா தயா வ்யாந்தி கமஸ முதய த்ரோஹ ஸம் ரம்ப கர்ஜத்
தைதே யாரண்ய வாஹ த்விஷது திதர வன்யக் சிகீர்ஷாஸ் அகுலஸ்ய
வக்த்ரே வாஹஸ்ய ஹேஷா ஹல ஹல நிநிதே அபூத பூர்வே ப்ரவ்ருத்தே
ப்ராந்த் வோரஸ்தோ அவதீர்ய த்ருத தரம முமாஸ்விஷ்யயா விஸ்மிதாஸ் அஸ்தே –4-
அகலகில்லேன் இறையும் என்று திருமார்பில் நித்ய வாஸம் செய்யும் பிராட்டி
இவர் திருமடியிலே அமர்ந்ததுக்கு ஹேது அருளிச் செய்கிறார் இதில்
வேதங்களுக்கு சிதைவு உண்டாக்கி த்ரோஹம் செய்யும் காட்டு எருமைகளை அடக்க இவனது கனைக்கும் த்வநியே போதுமே
ஹேஷா என்றும் ஹல ஹல ஹல -என்றும் கனைக்கும் த்வநி
அதைக் கேட்டு திருமார்பில் அமர்ந்த பிராட்டி அச்சமுற்று அதிர்ந்து போனாள்
திரு மார்பில் இருந்து இறங்கி அவனை அணைத்துக் கொண்டு வியப்புடன் விளங்குகிறாள்
அனைத்துக் கொண்டே மடி மீது அமர்ந்து உள்ளாள்
இந்த மிதுன சேஷி தம்பதி நம்மை ரக்ஷித்து அருள வேண்டும் –
—————
ஸார ஸாம்நாம் உதார ஸர ஸதர ருசாம் ருத்தி ரந்திர்தி தூரா
பத்ரா வஷ்டம் பயஷ்டிர் விதி நிதி யஜுஷாம் பாக்ய மாதர்வணாநாம்
அங்காநாம் துங்க ஸ்ருங்கம் ஸகது மம துரங்கோத்த மாங்கோ அந்தரங்கே
ஸத்யோ ஹ்ருத் யாநி பத்யான் யபி பரி கலயன் விஸ்வ வித்யா நிஷத்யா –5-
உலகில் உள்ள பல கலைகளும் அளிக்கும் அங்காடி இவனே
இவனே சாம வேதத்தின் கவர்ச்சியான ஸாரம் -ரிக் வேதங்களின் செழிப்பு –
மறப்பு இல்லாதபடி யஜுர் வேதம் ஓதுவது எளிவது அல்ல –
பல இடங்களில் ஒரே மாதிரியான சொல் தொடர்கள் வரும் –
யஜுர் வேதத்தில் இப்படிச் செய்ய வேண்டும் என்னும் கட்டளைகள் நிறைந்ததாகவும் இருக்கும்
இவற்றை குறையின்றி ஓத பரி முக்கண் அருள் வேண்டும்
அவனே பாதுகாப்பான மறையாத கைத்தடி போன்றவன்
அதர்வண வேதத்தின் பாக்கியமே வடிவு எடுத்தவன்
வேதங்களை உள்ளபடி உணர
வியாகரணம் நிருத்தம் சந்தஸ்ஸாஸ்த்ரம் சீக்ஷை கல்பம் ஜ்யோதிஷம்
ஆகிய ஆறு அங்கங்களிலும் பயிற்சி வேண்டும்
வெறும் பயிற்சி போதாது -இமயமலை ஏற வேண்டிய பயிற்சியுடன் பயில வேண்டும்
இவற்றுக்கும் பரிமுகனின் அருள் வேண்டும்
எனவே இவற்றுக்கும் அவனே வான் அளாவிய முகடு என்பர்
ஸ்மாஹாரஸ் ஸாம்நாம் -என்று தொடங்கும் ஹயக்ரீவ ஸ்லோகத்தை அடி ஒற்றி அருளிச் செய்த ஸ்லோகம் இது –
ஸ்மாஹாரஸ் ஸாம்நாம் ப்ரதிபதம் ருசாம் தாம யஜுஷாம் –
லய ப்ரத்யூ ஹாநாம் லஹரி வித திர்ப்போத ஜலதே
கதா தர்ப்ப பஷூப் யத்கதககுல கோலாஹல பவம்
ஹரத் வந்தரத் வாந்தம் ஹய வதன ஹேஷா ஹல ஹல –3-
சாம வேதங்களின் தொகுதி ஆகவும் -எல்லாக் கிளைகளும் ஓன்று கூடிய வடிவாகவும் – –
ருக் வேதங்களுக்கு ஒரு பொருள் கிளவி யாகவும் -மந்திரங்களின் பொருளைக் கூறும் மற்று ஒரு சொல்லோ என்னும் படியாயும் —
யஜுர் வேதங்களுக்கு உறைவிடம் ஆகவும்-மந்திரங்களின் கருத்துக்கள் அனைத்தும் தன்னுள் அடங்கப் பெற்றதோ என்னும்படியாகவும் –
இப்படி மூன்று வேத சாரமாயும் -கல்வி கற்பதற்கு வரும் -தடைகளின் அழிவுக்குக் காரணம் ஆகவும் –
ஞானக் கடலின் அலை வரிசையாகவும் உள்ள ஸ்ரீ ஹயக்ரீவனுடைய ஹல ஹல என்னும் கனைப்பு ஒலி த்வனி
வாதம் புரிவதில் உண்டான செருக்கினால் கலங்கி நிற்கும் பிற மத வாதிகளின் கூட்டத்தின் ஆரவாரத்தால் உண்டான
அஞ்ஞான இருளை ஒழிக்க வேண்டும் –
இவனது ஹல ஹல -சப்தமே -அஞ்ஞானங்களை போக்கும் -ஞானக் கடலில் இருந்து வீசும் அலைகள் -இவையே –
தார்க்கிகள் வேத பாஹ்யர்களால் விளையும் அஞ்ஞானங்களை போக்கி அருளுபவர் –
ச கோஷ–ஸ்ரீ பாஞ்ச ஜன்ய -ஹிருதயாநி உளுத்து போகும் படி பண்ணிது போலே-
அனுகூல பிரதிகூல -ப்ரீதி பய ஹேது வாகுமே –
யஜுர் வேதம் தாரணம் -சாம வேதம்-பகவத் விஷய அனுபவ போகம்-வாக் சக்தி –
ரிக் வேதம் விநயம் —ஆராதன பொருள்
த்ரையந்தம் -வேதாந்தம் -அர்த்த அனுசரித்து பாதம் முடிந்து ரிக் வேதம் –முடியாமல் யஜுர் வேதம் —
கான ரூபம் சாமம் -மிஸ்ரமம் அதர்வண –என்றுமாம் –
ஹல அஹல -அச்சு எழுத்து அல் எழுத்து சேர்ந்த வேதம் –
லய ப்ரத்யூ ஹாநாம்–தடங்கலை போக்கி அருளி –ஸ்ரேஷ்டர் செய்யும் கார்யங்கள் தடங்கல் -நிறைய –
ராமன் -ராவணன் -கார்யங்கள் மூலம் அறிவோம் —
————-
மத்யே பிம்பம் ஸூதாம் ஸோர் த்யுமணி நிப மணிஸ்ரேணி பாராஜி ராஜத்
ஹாரைஸ் தாரை ருதாரை ரபஹஸித ஸூதா சாகரோத் ஸாரி பூரை
வா மாங்கவாஸ லீலா குதுகுல விதயா அப்யங்கித பங்கஜாஷ்யா
சங்கா தங்கம் ச பங்கம் திரயது கருணா பங்கில கஸ்சி தர்வா –6-
அமுதக்கடல் –பொங்கும் வெள்ளம் -வெண்மையாய் இருந்து நகையாடுவது போல் உள்ளது
இனிய முத்து மாலைகள் பல அணிந்து கொண்டு ஒளி கற்றைகளால் திகழ்கின்றன
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரிந்தால் ஒத்து அணிமணிகளை உடைய பெருமான்
ஸூர்யனே சந்த்ர மண்டலத்தில் இருப்பது போல் அமர்ந்து இருக்கிறான் –
அவன் திருமார்பில் வசிக்கும் பிராட்டியும் இடது தொடையில் வீற்று இருந்து விளையாடும் ஆர்வத்தால்
அங்கே அமர்ந்து பேர் அழகுடன் பொலிகிறாள்
இப்படி ஒப்பற்ற ஹரி வதன பிரான் எவ்வித கலக்கமும் இல்லாமல்
நம் மீது கருணை கொண்டு ஸம்சயங்கள் துயரங்கள் போன்ற அழுக்கை எல்லாம் போக்கி அருளட்டும்
———
ரூடா ப்ரவ்டாஸூ புருஷ மதி வ்யாப்ருதி வ்யாப்த்ய போடா ஸூ
ஆதா தாந்தாஸூ தாஸூ ப்ரதிஹத கதிதா த்வந்து தாவான னேர்வன்
இத்தம் ஸத்ய ப்யஹம் யத் தவ குண கண னாரம்ப ஸம் ரம்ப நீக்ன
ஸ்தானே தத் யேன பாலோப்யதி விதத புஜோ விஸ்த்ருதிம் வக்தி ஸிந்தோ-7
யதோ வாஸோ நிவர்த்தந்தே -வேதத்துக்கும் எட்டாத வைபவம் கொண்டவனே
அவற்றாலும் ஸ்துதி பண்ணி முடிக்க முடியாதே-அப்படிப்பட்ட உன்னை ஸ்துதிக்க இழிந்தேனே
கடலை அளவிட்டுக் காண இயலாது என்றாலும் ஒரு குழந்தை இரண்டு கைகளாலும் அகல விரித்துக் காட்டி
கடல் இவ்வளவு அகலம் கொண்டது என்று சொல்வது உண்டு அல்லவா –
————-
பாதா பாதால பூம் யம்பர தல நிலயா வாஸ ஜாயாஸ ஸாராத்
யாதா யாதாநு பூர் வ்யாத விகத ஜனனீ கர்ப்ப வி ப்ராந்தி யோகாத்
வேத்யா வேத்யா வமர் ஸாஸ் கலிதக தியதீ ஸான ராஜ்யா ஸ பாஜ்ய
சாந்தா சாந்தம் ஸம் ருத்திம் விதரது ஸ மம வ்யாஜ வாஜீ விராஜீ –8-
பக்தனான பிரம்மனிடம் இருந்து வேதங்களை மது கைடபர்கள் பறித்துக் கொண்டு போன போது
மீட்டுத் தரும் வ்யாஜத்தில் ஹயக்ரீவ வடிவம் கொண்ட எம்பெருமான் நமக்கு கருணை பொழியட்டும்
ப்ரயோஜனாந்த பரத்தைத் தவிர்த்து -நிரதிசய ஆனந்தம் பெற அருள வேண்டும்
நீ ரக்ஷிக்க இருக்கும் போது வேறே யாரும் வேண்டாமே –
பிறவிச் சுழலில் இருந்து மீட்டு அருளும் உனது பெருமையை அறிந்து –வேதி -கலைமகளும் போற்றுவாள்
வேதி -உபா தேய த்யாஜ்யங்களை பகுத்து அறிந்த யதிகளின் தலைவரான எம்பெருமானுடைய
சிஷ்யர்கள் அனைவரும் – -பரகால ஜீயர் -போன்றோரும் ஆராதிப்பார்கள் அன்றோ –
—————–
யஸ்மின் விஞ்ஞான வார் தாவதி ஜகதி புரோ ஜ்ரும்ப மாணே அஷ்ட மூர்த்தே
மூர்த்திஸ் ஸா தக்ஷிணாக்யா த்ரி தச பரீஷதா பிந்துரா லஷ்ய தஷா
வாணீ ஸ பத்ம சத்ம ப்ரிய தம க்ருஹணீ கா அப்ய பாணீ ஹ வேணீ
பாராசர்ய ப்ரதானோ அப்ய கணி முனி கண பல் வலம் பாது ஸோ அர்வா –9-
ஹயக்ரீவர் ஞான சாகரம் -அந்தக்கடல் தேவர்களின் சமூகத்துக்கு முன்னர் பொங்கிப் பொலியும் போது
அவர்கள் இந்தப் பரிமுக பரமனின் பெருமையை உணர்ந்தார்கள்
ஞானத்தில் சிறந்த ருத்ரன் -தக்ஷிணா மூர்த்தி ஆலமரத்துக்கு அடியில் இவனின் ஞான லவலேசம் கொண்டு உபதேசித்தார்
தாமரை மலரில் இருக்கும் பிரமனின் பத்தினியான கலைமகள் இந்தக்கடலை ஒப்பிடும் பொழுது சிறிய வாய்க்கால் போன்றவளே
வ்யாஸாதி முனிவர் குழாங்களும் சிறிய குட்டை போலவே ஆவார்கள்
அவர் நம்மைக் காத்து அருளட்டும்
இந்த ஸ்லோகம் தாஷிண்யரம்பா -என்று தொடங்கும் ஹயக்ரீவ ஸ்லோகத்தின் அடிப்படியில் வந்தது
தாக்ஷிண்ய கிரி ஸஸ்யரம்யா மூர்த்தி
தேவீ சரோஜா ஸந தர்ம பத்நீ
வ்யாசாதயோ அபி வ்யப தேஸ்ய வாச
ஸ்புரந்தி சர்வே தவ சக்தி லேஸை—7-
சிவனுடைய தெற்கு நோக்கி அமர்ந்த தக்ஷிணா மூர்த்தியும் -ஆல மலர்த்தின் நிழலில் இருந்து
அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் நான்கு முனிவர்களுக்கும் உபதேசித்தார் —
தாமரையில் அமர்ந்த பிரமனுடைய தர்ம பத்னியான சரஸ்வதி தேவியும் மிகப் போற்றுதலுக்கு உரிய
பேச்சை உடைய வியாசர் பராசரர் வால்மீகி முதலிய அனைவரும் உன்னுடைய
சக்தியின் திவலையால் உயர்ந்து விளங்குகின்றனர் –
தக்ஷிணா ரம்ய மூர்த்தி –தாக்ஷிண்யம் -அழகே வடிவு கொண்ட தக்ஷிணா மூர்த்தி -கிருபையால் கொடுக்கும் மூர்த்தி
கிரி ஸஸ்யரம்யா மூர்த்தி -கைலாச மூர்த்தி -வாக்குக்கு மூர்த்தி -பேச்சு வன்மை ஞானம்
தேவீ சரோஜா ஸந தர்ம பத்நீ–சரஸ்வதி –தாமரை ஆசனமாக கொண்ட நான்முகனுக்கு தர்ம பத்னி –
இவள் அனுக்ரஹம் பிரம்மன் அனுக்ரஹம் அடியாகவே என்று காட்ட –
வால்மீகி –மச்சந்தா தேவ -சங்கல்பம் அடியாகவே சரஸ்வதி உம வாக்கில்
ஆரோக்யம் பாஸ்கரன் -செல்வம் அக்னி -ஞானம் ருத்ரன் -மோக்ஷம் நாராயணன் -கலியுகம் பாஷாண்டிகள் நிறைந்து –
வாக் தேவி -சரஸ்வதி -தக்ஷிணா மூர்த்தி -இவன் அனுக்ரஹம் அடியாகவே –
வ்யாசாதயோ அபி வ்யப தேஸ்ய வாச -வ்யாஸாதிகளும் கூட
ஸ்புரந்தி சர்வே தவ சக்தி லேஸை–ஒளி விடுவது தேவரீர் சக்தியினொரு துளியாலேயே –
அந்தராத்மதயா –சர்வமும் இவன் அம்சம் -சர்வ ரஸ சர்வ கந்த
———-
வேத உத்தர ரோத்யதம் தத் ப்ரதி ஸது மிதுனம் ஸர்வ ஸர்வாதி மானாம்
சேவாஹேவாக பூ மோத்ய தஹ மிஹ மிகா குஞ்ச தன் வேஷி மூர்த்னாம்
ஸ்ரீர் ஷேஷ்வா பாந்தி யஸ்ய த்வி குண மணி லதா பாவ பாஜ கடாஷா
கல்யோத் புல்லாம் புஜாத ப்ரமத பர நிராகார நிஸ் தந்த்ர த்ருஷ்டே–10-
ஸ்ரீ லஷ்மீ சமேத ஹயக்ரீவ மிதுனம் நமக்கு மங்களங்கள் அருள வேண்டும்
வேதத்தை மீட்டு அருளியதால் தேவர்கள் நான் முன்னே நான் முன்னே என்று
இத்தைக் கண்ட மிதுன தம்பதிகள் அவர்களைக் கடாக்ஷித்து அருள்கிறார்
மிதுன கடாக்ஷமாகிற ரத்ன லதா கொடி அவர்கள் தலைகளை அலங்கரிக்கிறது –
இந்த கடாக்ஷ தேஜஸ்ஸு காலைக் கதிரவன் ஒளியால் மலர்ந்த தாமரைகள் ஒளியை விஞ்சி பீடு பெற்றவை
இந்த மிதுன திவ்ய தம்பதிகள் நமக்கு அருளட்டும் –
———
தாஷ்யம் லஷ்யதே தாது க்வ னு கலு ஜததீ ஜால நிர்மாண லீலா
ரம்பே சஞ்ஞா விதா வாப்யதே ச ததுசி தானேக மூர்த்தி ப்ரக்லுப்தவ்
தத் தத் க்ருத்ய ப்ரபஞ்சேஷ் வபி ச திவிஷதாம் தைத்ய பாஸா ஹ்ருதானாம்
ஆம்னா யாயாம் தயார்த்ரோ யதி ஹய வதனோ நோத் த்ருதிம் ஸம் விதத்யாத் –11-
நான்முகன் ஸ்ருஷ்ட்டி செய்யும் பொழுது நாம ரூபங்களைக் கொடுத்து அமைக்கத் துணை செய்யும் கையேடு வேதமே
இதே போல் இந்திராதி தேவர்களும் அவர் அவர்கள் செயல்களைச் செய்வதற்கும் வேதமே கையேடு –
இந்த வேதங்களை அபஹரித்துப் போன மது கைடபர்களை நிரஸித்து மீட்டு வந்து அருளியதும் பரி முகப் பெருமானே
இவரது அருள் இல்லாமல் எவருமே தங்கள் தங்கள் பணிகளை செய்ய முடியாதே
இந்த ஸ்லோகம் மந்தோஸ் பவிஷ்யன் -என்று தொடங்கும் ஹயக்ரீவ ஸ்லோகத்தின் அடிப்படையிலே அமைந்தது-
மந்தோஸ் பவிஷ்யன் நியதம் விரிஞ்சோ
வாசம் நிதே வஞ்சித பாகதேய
தைத்யாப நீதாந் தயயைவ பூயோ அபி
அத்யா பயிஷ்யோ நிகமான் ந சேத் த்வம்—8-
கலைகளுக்கு உறைவிடம் ஆனவனே -நீ -மது கைடவர் ஆகிய அசுரர்களால் கவரப்பட்ட வேதங்களை
கருணையாலேயே மறுபடியும் பிரமனுக்கு உபதேசிக்கா விட்டால் பிரம தேவன் பாக்யத்தை இழந்து
நிச்சயமாக மூடனாக ஆகி இருப்பான் –
மது கைடபர் அபஹரித்த வேதங்களை மீட்டு நான்முகனுக்கு உனது தயா குணம் அடியாக அன்றோ
மீண்டும் வழங்கினாய் –
மந்தோஸ் பவிஷ்யன் நியதம் விரிஞ்சோ –விரிஞ்சன்-மந்த புத்தியுடன் -நிச்சயமாக இருந்து இருப்பர்
மந்த -விவேக ஞானம் இல்லாமல் -சம்சயம் விபர்யயம் –சாஸனாத் சாஸ்திரம் -க்ருத்யமும் அக்ருத்யமும் -விதிக்கும்
வாசம் நிதே வஞ்சித பாகதேய–வாக்குக்கு நிதியே -வஞ்சிக்கப்பட்டவராய் -பாக்யம் இல்லாமல் இருப்பவராய்
தைத்யாப நீதாந் தயயைவ பூயோ அபி -அசுரர்களால் திருடி செல்லப்பட்ட –
பூயோபி –மறு படியும் -கீழே ஸ்ருஷ்ட்டி காலத்தில் அருளிச் செய்ததும் உண்டே
அத்யா பயிஷ்யோ –ப்ரஹ்மாவுக்கு சொல்லிக் கொடுத்தீர்
நிகமான் ந சேத் த்வம்–கொடுக்காமல் போயிருந்தால்
வேத அபகார குரு பாதக தைத்ய பீடா -பிரஜாபதி -பசு பதி -சசி பதி-மூவருக்கும் ஆபன் நிவாரகன் நீ அன்றோ
கபாலீத்வம் -பவிஷ்யஸி -சாபம் -ப்ரஹ்ம கபாலம் -பிண்டியார் மண்டை ஏந்தி —
இடர் கெடுத்த மணவாளன் -ஹர சாப விமோசனம் -மார்பில் விலங்கு அமுத நீர் தெளித்து
———
ஹஸ்தா லம்பாய பூயாத் ஸ மம பதி ஸதாம் ஸ்ரஸ் தவ் வ்ருத்தஸ்ய நித்யம்
ந்யஸ்தா சேஷாக மாப்தேரதி கமபி சமம் வஸ்துணீ யஸ்ய ந ஸ்த
ஸஸ்தா மஸ்தோகதீ ஸம் ஸ்துதி மபி ஜனயன் யோ நயந்மோஹ மஸ்தம்
ந்யஸ்தம் யஸ் சவ்ய ஹஸ்தே கலயதி ச முதா புஸ்தகம் மஸ்தகே அர்வா –12-
பரிமுகப்பெருமாள் இடது திருக் கையில் புஸ்தகத்தை மகிழ்ச்சியுடன் ஏந்தி உள்ளான்
புகழ் பெறக்கூடிய பரந்த ஞானம் கொண்டு ஸ்துதிகளைப் படைக்கும் திறமையை அடியோங்களுக்கு அருளுகிறான்
வேதங்களை மீட்டு பிரமனுக்கு அளித்த இவனுக்கு ஓத்தார் மிக்கார் இல்லையே
நல்ல வழியில் பயணம் செய்ய விரும்பும் அடியோங்களுக்கு இவனே கைத் தாங்கலாக இருந்து வழி நடத்துகிறான்
அடியோங்களின் பிரதிபந்தங்களைப் போக்கி அருளி அற நெறிகளில் நடத்தி அருள்கிறான்
இந்த ஸ்லோகத்தில் ஸ் -அக்ஷரம் 15 தடவை வருகிறதே
இத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் ஆனந்தம் பெருகுமே –
———-
ரத்னம் யத் ப்ரத்ந வாஸாம் நிருபம ஸூஷமா காந்த ஸீமந்தி நீநாம்
ஸீ மந்தே நித்ய லால்யம் ஹ்ருதய ஸரஸிஜே அஜஸ்ர தார்யம் புதானாம்
துக் தோத வத்தனூன் ஜாகர ஜல ஜயுகீ லாலநோத் யந்ம்ருஜாதோ
நித்யம் தூத்னம் ஹ்யாஸ்யம் மம கலயது தந்நிஸ்ஸ பத்னம் ப்ரயத்னம் –13–
இந்த பரிமுக ப்ரஹ்மம் ஒப்பற்ற ரத்னம் –
வேதாந்தங்கள் இடையறாது கொஞ்சிச் சூட்டப்படும் ரத்னம்
ஸாத்விகர்கள் த்யானம் செய்து ஹ்ருதயத்தில் வைத்துக் கொள்ளும் ரத்னம் –
திருப்பாற் கடலில் பிறந்த பெண்ணமுதம் தனது திருக்கைத் தாமரைகளால் திருவடிகளை வருடி விடும் ரத்னம்
தடங்கல் அற்ற முயற்ச்சிகளைச் செய்து ஸ்தோத்ரம் பண்ணி சமர்ப்பிக்கும் படி அருள வேண்டும்
——–
ணத்வம் யத் பின்ன விருத்தாவ கடிதம் உபலப் யோத்ய மாத்ராத்ரக் விரேமு
தே தே நாராயணா க்யாம் இதர விபுத ஸாதாரணீம் கர்த்து காமா
யஸ்மின் ஸ்தன் யோக ரூட்யோர் குண மணி ஜலதவ் புஷ்கலம் வர்த்தனம் ஸ்யாத்
தேவோ மாயா தயோ அசவ் தயதி ஹ்ருதி ருஜாம் சைந்தவோ பாந்தவோ ந –14-
நமக்கு ஒழிக்க ஒழியாத நல் சுற்றம் இந்தப் பரி முகப் பெருமான்
நாராயண பர ப்ரஹ்மம் தத்வம் நாராயண பர நாராயண பரோ ஜ்யோதி ஆத்மா நாராயண பர
ண த்வம் இருப்பதால் வீர சைவர்கள் பின் வாங்கும் படி ஆனதே
இந்த நாராயண பதம் யோக அர்த்தமாகவும் ரூடி அர்த்தமாகவும் இவன் இடமே பொருந்தும்
இவனே ஸ்ரீ யபதி -நம்முடை நல் சுற்றம் –
நம்முடைய நல்ல சிந்தனைகளை வளர்த்து அருள வேண்டும் –
வடமொழியில் ண அக்ஷரம் இல்லாவிடில் ணத்வம் பத பிரயோகம் செய்யும் படி ஹயக்ரீவர் ஸ்வாமிக்கு அருள் செய்துள்ளார்
பக்தர்களின் அபீஷ்டங்களை அருளுவான் என்பதற்கு இதுவே நல்ல த்ருஷ்டாந்தம் –
———-
கர்ணா வர்ணோ ஜராஜன் முகுலதல ஸமா வர்த்தோ அனர்வணோ மே
ப்ரோர் ணூயாஸ்தம் லலாடே குடில விதிசம் உத்கீர்ண ஸங்கீர்ண வர்ணாந்
வர்ண்யேதே யாவமுஷ்ய த்ரி புவன வபுஷோ வ்யோம பாதாள ரூபவ்
பர்ணைர் வா அப்யர்ணஸா வா ஸததமபி ருசிம் பூர்ண யத்பிர் மஹத்பிர்–15-
யாராலும் வெறுக்க முடியாத ஹயகிரீவப் பெருமாள் உடைய இரண்டு காதுகளும் தாமரை மொட்டுக்கள் போல் உள்ளன
இல்லை நீர் இவற்றையே உண்டு தவம் செய்யும் மஹான்கள் மூ உலகையும் வடிவாக யுடைய
இவனுடைய ஒரு காதை வானமாகவும் மற்ற ஒன்றை பாதாளமாகவும் வர்ணிக்கிறார்கள் –
அந்தக் காதுகள் அவனை அணுகத் தயங்கி இருக்கும் அடியோங்கள் அளவும் நீண்டு
என்னுடைய தலையினிலே துரதிருஷ்ட வசமாகக் கோணலாக எழுதப்பட்டவை அனைத்தையும் அழித்து அருள வேண்டும் –
அடியோங்கள் தலை எழுத்தை நல்லதாக மாற்றி அமைத்து அருள வேண்டும்
———–
மண்டல்யா மண்டனானாம் மணி கண க்ருணி பிர் கூர்ணி தத்யோ மணிநாம்
நீரந்த்ரம் மண்டி தாங்கஸ் ஸிதகர ருசிரே புண்டரீகே நிஷண்ண
ஆம்னா யானாம் ஸிகண்டை ரவகதகரிமா கண்டிதா கண்ட லாரி
தண்டம் பாஷண்ட ஷண்டே ஷிபது ஸ தரஸா வாஜி துண்ட ப்ரகாண்ட –16–
இவன் பல திவ்ய அணிகலன்கள் அணிந்துள்ளான்
அந்த அணிகக மண்டலங்களில் இருந்து ஒளிவரும் ரத்தினங்கள் பல பல-
இவற்றின் கதிர்களினால் ஆயிரம் ஸூர்யர்களின் ஒளிகள் குன்றிப் போகின்றன-
சந்திரனைப் போன்ற குளிர்ச்சி கவர்ச்சி வெண்மை -இவைகளால் நிறைந்த வெண் தாமரைப் பூவில் அவன் வீற்று இருக்கிறான் –
அவனுடைய பெருமைகளை உபநிஷத்துக்கள் மூலமே உணர முடிகிறது –
அஸூர சக்திகளை நிரஸித்து அருள்பவன் –
பாஷண்ட சமூகங்களை நிரஸித்து உலகை ரக்ஷித்து அருள்பவன்
மணே –மண் ஏ என்று பிரித்து இதில் மண் தொடங்கி அடுத்த ஸ்லோகம் ஏ என்பதில் தொடங்கும்
ணே-தொடங்கும் எழுத்து வடமொழியில் கிடையாது என்பதால் இப்படிப் பிரித்து அருளும்படி செய்வித்து அருளுகிறார்
————
ஏகோ அக்ரே லோக மாத்ரா ஸஹ மஹித விஹ்ருத் யுன்மனாஸ் தன்முதே யோ
நாபீ பத்மே விதாதுர் ஜனி மபி கலயன் யோ நயத்யாக மாம்ஸ்தம்
லோகாம் நாயைக மூலாக்ஷர ருசிர கலா மாத்ருகா ஸா யதீயா
ஸோ அஸாவிஷ்டம் ப்ரக்ருஷ்டம் கடயிது திதி ஐஸ் போடகோ கோடகோ ந –-17–
மது கைடபர்களை சிதைத்து ஓட வைத்தவன் -ஒப்பற்றவன்
ஆதியில் திருமகளும் தானுமாக இருந்து அவளது மகிழ்ச்சிக்காக ஸ்ருஷ்ட்டியை லீலையாகச் செய்து அருள எண்ணி
தன்னுடைய கொப்பூழில் ஒரு தாமரைப் பூவை எழுவித்தான்
அதில் இருந்து நான்முகனைப் படைத்தான்
அவனுக்கு வேதங்களை உபதேசித்து அருளினான்
உலக இலக்கியங்கள் வேதம் அனைத்துக்கும் முதல் படிவம் அவன் தான்
இவன் நமக்கு அனைத்து அபீஷ்டங்களையும் அருளிச் செய்து
அதற்கும் மேல் அவனுக்கு நித்ய கைங்கர்ய பரர்களாக ஆக்கி அருளட்டும் –
————
ப்ரண்யா யேநாத் வராணாம் மனு மய தனு மாதாய விஷ்வக் வி நிர்யத்
ஜ்வாலா மாலா ஜடாலான லஹுத ஹவிஷாம் ஸாரமா ஆஸ்வாத்ய சாரும்
கீர் வாணாந் வார வாணாந் நியமித கரணாம்ஸ் தூர்ண மாப் யாய்ய காம
கல்ப்யந்தே யாஜ மானா கலயது ஸ முதம் கோ அப்யனர்வாஸ் அந நேர்வா –18-
மந்த்ரங்களாலான வடிவு யுடையவன்
பல பக்கங்களிலும் ஜ்வாலைகள் ஆகிய பின்னல்கள் நிறைந்து கொழுந்து விட்டு எரியும் அக்னியில்
அம் மந்த்ரங்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் யாகங்களை அவனே செய்விக்கிறான்
அதில் சாரமான ஹவிர்பாகத்தை தேவர்கள் சுவைத்து மகிழச் செய்கிறான்
அவர்களுக்கு இவனே அந்தர்யாமி -அவர்கள் இவனுக்கு சட்டைகள் போன்றவர்
அவர்கள் பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் எல்லாமே இவனது நியமம் படியே
இப்படி அனைவருக்கும் நன்மைகளை அளித்து அருளும் இவன் நமக்கும் ஆனந்தம் அருளிச் செய்ய வேண்டும்
போக்தாராம் யஜ்ஞ தபஸாம் -கீதா ஸ்லோகம் அடிப்படியில் அமைந்த ஸ்லோகம்
ண -தொடங்கும் எழுத்து வடமொழியில் இல்லாததால்
இதில் ப்ரண் -அடுத்த ஸ்லோகம் அ-என்று தொடங்குகிறது
———–
அவ்யா தவ்யாஹ தார்த்தோ தியமுப ஜனயன் அவ்யயோ வ்யாஜ வாஜீ
பவ்யா பவ்யா க்ருதாத் யாக்ருதி மதனுத யோ நாம ரூபத்வயஸ்ய
யோ யந்தர் யந்தம் ச மந்தம் வ்யது சிது மதி ஸஜ் ஐந்து ஜாதஸ்ய யோ வா
கல்பாந்தே அல்பான்ய லோக க்ரஸனஸ முதி தாபீனதா நந்தி துந்த –19-
தடைபடாத ஞான பிரதானம் செய்து அருளுபவர்
உலகில் பெயர் வடிவம் இரண்டிலும் மங்களமும் அமங்களமும் -ஆகிய இரண்டு நிலைகளும் உண்டு
அவற்றை அமைத்தவனும் இவனே –
அனைவரும் கட்டுப்பாடுடன் இருக்கவும் தவறுகளை அகற்றவும் ஏற்றவகையில் நெறிகளை அருள் செய்தவனும் இவனே
கல்ப காலம் முடிவில் உலகங்களை விழுங்கி மகிழ்பவன் இவனே -இதனால் பெரு வயிற்றன் -நம்மை ரக்ஷித்து அருளட்டும் –
——–
ஒதன்வந் மேகலாந்தாத் பலி நிலய யுதாத்ஷ் மாத லாதா லோகாத்
நாலீ காவாஸ வாஸா தவஹி தமன ஸா அபீஷிதே ஸ்தாஸ்னு ஜாதே
யாத் ருங்னாலஷி கஸ்சித் ஸக்ருதபி நமதாம் ஸாத்வ ஸத்வ ம் சதஷ
பக்த அனுக்ரோச லஷ்மா ஷபயது மம ஹ்ருத் ஷோபமஷ்ணா வா வாஜீ –-20-
பக்தர்களுக்கு இரங்கி அருளும் தன்மையையே இயல்பாகக் கொண்டவன் –
பாதாளத்துடன் கூடிய பூ லோகத்தில் இருந்து பிரமன் உலகம் வரை எங்கு தேடிப் பார்த்தாலும்
இவனைப் போல் அடியார்களின் அச்சத்தைப் போக்கி அருளும் ஒருவன் காணக்கிடைக்காது
அவனது கடாக்ஷம் நமது மனக் கவலைகளையும் தீர்த்து அருள வேண்டும் –
—————–
கீதே தைதேய மோஹம் கலயிது மனஸோ யஸ்ய ஹேஷா நு ஷக்தே
ப்ரக்யாதோத் கீத பக்திம் ஸ்ரீரிதவதி ஜனிதே ரோதஸீரோதகே த்ராக்
தேவாஸ் ஸம் ப்ராந்த பாவா திதிஜகுல மலம் வ்யாகுலம் தூதகர்வா
கந்தர்வா மோஹ சேஷம் சம ஜனி ஜகதீ சேஷ மேஷோ அவதான் மாம் –21-
அரக்கர்களை மயக்க இவன் கனைப்பு உண்டு
அதன் ஒலியுடன் கூடியதே உத்கீதம் என்னும் சாமம் –
அதன் அவயவங்கள் -பக்தி -பல பகுதிகளைக் கொண்டவை
அவற்றில் இரு பகுதிகள் இணைந்து வாசனையையும் பூமியையும் ஆக்கிரமிக்கும் கானம்
உண்டாகும் போது தேவர்கள் பரவசம் அடைவார்கள்
அசுரர் கூட்டம் துயரத்தால் அலைக்கழிப்பு அடையும்
கந்தர்வர்களுடைய கர்வம் பறந்தோடும்
மிஞ்சியவர்கள் மோஹம் அடைவார்கள்
இத்தகைய ஹயக்ரீவப்பெருமாள் நம்மை ரக்ஷித்து அருளட்டும் –
———
தம் கிம் சப்தஸ்ய மூர்த்தி க்வசி துதித முபஸ்ருத்ய யத் தத் பதா திஷு
அப்யேதத் யோஜயித்வா கடுர டனபடு ஸ்வைர வாஸோ அபி ஐந்தோ
ஸத்யஸ் ஸித்த்யந்தி வாண்யோ நமதமஸி ரஸ் சத்ம யத் பாத பத்ம
த்யாநாத் த்ராஷா ஸத்ருஷா கலித குரு ஸிர கம்பனா பாது ஸோ அர்வா –22-
தம் என்பது கிம் என்பதுடன் இணைந்து -கிதம் -எப்படி என்னும் பொருள்
வாதங்களில் இந்தப் பதம் அடிக்கடி பயன்படுத்தப்படும்
இது காதில் பட்டு அது எப்படியோ இது அப்படி –யதம் ததம் –
என்று உருவாக்கி வாதம் செய்பவர்களும் உண்டு
யதா ததா என்று ஆர்வத்தையும் அறியாமல் யதம் ததம் என்பார்கள்
இப்படி இலக்கண வரம்பை கருவாக உடைப்பார்கள்
இத்தகைய அரை குறை அறிவாளிகள் கூட
இவனைத் த்யானம் செய்வார்களாகில் ப்ருஹஸ்பதி கூடாது தலையாட்டிக் பாராட்டும்படி
திராட்ச்சையிலும் இனிய சுவையுடன் பேசும் திறனைப் பெறுவார்கள்
இவனைப் பல தேவர்களும் பணிந்து வணங்குகிறார்கள்
அவர்கள் முடியே இவன் இருப்பிடம் ஆகிறது
அவன் அடியோங்களை ரக்ஷித்து அருளட்டும் –
———–
வக்தும் ஸூக்தம் ஸூ தாக்தம் ப்ரதீக தக வஸோ வீசி வேகம் ச ஹர்தும்
கர்தும் காவ்யம் ச பவ்யம் ஹிதமயீ புருஷார்த்தம் ச தத்வம் ச வேத்தும்
வாஞ்சா சேன்மான சாஞ்ச ஸ்படிக மணி மயஷ் மாதார பாதரீ க்ருத்
ரோசிர் வீசி பிராராத கீலமபி ஜகாத் ப்லா வயந்தம் ஹயம் தம்–23-
மனமே உனக்கு அமுத்தினாள் நனைந்த ஸூக்தங்களைச் சொல்ல விருப்பமா
எதிரிகளின் வாத வேகத்தை எதிர்த்து வாதிட விருப்பமா
மங்களகரமான காப்பியங்களை இயற்றிட ஆசையா
தத்வ ஹித புருஷார்த்த யாதாத்ம்ய ஞானம் பெற ஆசையா
ஸ்படிக்கக் கல்லிலான மலையை வென்றிடும் வெண்மையான திருமேனியின் தேஜஸ்ஸு அலைகளினால்
சுற்றி உள்ள அனைத்தையும் வெண்மையாக்கும் வெள்ளைப் பறிமுகனைச் சரண் அடைய வேண்டும் –
——–
புஷ்ணன் ஹர்ஷம் ஸூராணாம் ஜனி மய மயதி ஸ்மேதிநோ வக்துமீஸே
ப்ராகே வாஸீத் பிரமத்தாஸூர க்ருஹ நிகரே யத் ஸூ ராணாம் ப்ரஹர்ஷ
ஸ்ருதியாவிர் பூதி ஹேது ஸ்ரவண சமுத யானந்த ரேஸ்மின் து யுக்த
தஸ்மா தஸ்மாத னன்யான் த்ருவமவிது மஸாவி விராஸ அஸ்வ பாஸா –24-
மது கைடபர் வேதங்களைக் கவர்ந்து செல்ல
ஹயக்ரீவர் அவற்றை மீட்க திரு அவதரித்தார் என்னும் செய்தி அசுரர் கூட்டங்களுக்கு எட்டியது
இவர் அவற்றை மீட்டு தேவர்களை மகிழ்ச் செய்ய வல்லரோ என்ற சங்கை அவர்களுக்கு வந்தது
இவரால் மீட்க முடியாது என்று இறுமாந்து இருந்தனர்
ஆனால் ஸ்ரவணத்தில் அவதரித்து வேதங்களை மீட்டு தேவர்களை மகிழச் செய்தார்
ஸ்ரவணம் -காதால் கேட்பது என்ற பொருளும் உண்டே
ஸ்ருதி -எழுதா மறை -ஒருவர் ஓத கேட்டு அறியுமது
ஸ்ருதியை மீட்டும் பணியை ஸ்ரவணத்தில் அவதாரம் செய்த இவன் மிக்கப் பொருத்தமாய் இருந்ததே
அநந்ய கதிகளான அடியோங்களை ரக்ஷித்து அருளவே இப்படி குதிரை ஒளியுடன் ஆவிர்பவித்தான் –
அஸ்வ பாஸா -உடனடி தேஜஸ்ஸு என்றும் குதிரை தேஜஸ்ஸு என்றும் பொருள்கள் உண்டே
பு -24 எழுத்தாய் இருக்க -இங்கு புஷ் -என்று தொடங்கி-அடுத்த ஸ்லோகம் -ஏ -தொடங்கி –புஷே -ஆகும்
ஷ-எழுத்தில் தொடங்குவது அரிது என்பதால் -இங்கு புஷ்
———
ஏஷ ஸ்வேதோ அபி ராஜத் ரஜத கிரி வராகாரா திக்கார காரீ
வித்யுத் வித்யோதிபா ஸோத்ய தருண கிரணோன் நித்ர பத்மம் வஹந்த்யா
காவிந்தீ மந்திரேன் தீவர ருசி ருசிரா பாங்க தாராபி ராதாத்
சிஞ்சந் த்யாங்கானி தேவ்யா சதத க்ருத பரிஷ்வங்கதோ அவ்யாத் துரங்க -25-
இவன் வெள்ளி மலையின் வெண்மையையும் ஒளி மங்கத் செய்யும் தேஜஸ்ஸு கொண்டவன்
இவன் திரு மடியில் ஸ்ரீ மஹாலஷ்மீ பிராட்டி அமர்ந்து இருக்கிறாள்
அவள் மின்னலை வென்றிடும் பொன்னிறத்தனள்
அவள் தனது திருக்கையிலே அருணோதய வேளையில் மலர்ந்த செந்தாமரையை வைத்து இருப்பள்
அவளது விழிகள் மை இடாமலேயே இயற்கையாக கறுத்தவை –
அவள் மைய கண்ணாள் -அவள் கரும் தடம் கண்ணி அன்றோ –
பண்பாட்டுக்காக மையும் இட்டுக் கொண்டாள் -மைத்தடம் கண்ணி யாகி விட்டாள்
இவளது கரு விழிகளின் கடாக்ஷம் கருத்த யமுனையில் மலர்ந்த கரு நெய்தல் மலர்கள் போல் ஆயின
இவள் பார்வைகளால் ஹயக்ரீவப்பெருமானை நீராட்டுகிறாள்
மேலும் இடையறாது அணைத்துக் கொண்டும் இருக்கிறாள்
எனவே வெள்ளி மலையை வெல்லும் வெண்மையில் சில மஞ்சள் கோடுகளும் சில கரு நீலக் கோடுகளும் படிந்து இருந்தன
இத்தகைய பரிமுகப்பெருமாள் நம்மை ரக்ஷித்து அருளட்டும் –
——-
மஞ்ஜீரம் மஞ்ஜூலம் தே ஹய முக மம ஸஞ்சீவனா யாஸ்து சிஞ்ஜா
வ்யாஜேநாம் னாய வாஸாமநி தர பரதாம் வ்யஞ்ஜ யத்த்வத் பதோர்யத்
லக்னம் தத் தாரணாஸூ த்வி குண முனி ஜன ஸ்தோம ஹ்ருத் பத்ம நித்யோல்
வாஸாதி தாத்மத் வயமிவ ஸவிதே ஜாக்ரதர் கஸ்ய பிம்பம் —26-
இவருடைய இனிய சதங்கைகள் எனக்கு உயிர்ப்பளிப்பவையாக இருக்க வேண்டும்
அவை கல கல இனிய ஒலியினை எழுப்புகின்றன அல்லவா
இவை உனது திருவடிகளில் ஒட்டிக் கொண்டு அன்றோ இவ்வாறு சப்திக்கின்றன –
இவை வெறும் சதங்கை ஒலிகள் அல்ல
கல கல ஒலியால் -வியாஜ்யமாக -வேதங்களே பேசுகின்றன என்னும் கருத்தையே மொழிகின்றன –
உனது திருவடிகளைத் த்யானம் செய்யும் முனிவர்கள் ஸமூஹங்களின்
ஹ்ருதயத் தாமரைகளை நாள் தோறும் இரு மடங்காக மலர்த்திட வேண்டும் என்று ஆவல் கொள்வார்களுக்கு
இரு வடிவங்கள் ஏற்றுக்கொண்டு திருவடிகளின் மேல் ஸூர்யன் பிம்பம் படிந்தது போல் சதங்கைகள் விளங்குகின்றன –
———-
ஹாரித்ரம் கின்னு ஸூத்ரம் கருதிததி ஸூததி கண்ட பூஷார்த்த க்லுப்தம்
ஹ்ரோதஸ் சாரஸ்வதம் வாங்மய ஜனன கிரேர் நிஸ் ஸ்ருதம் வேதி சங்க்யம்
வக்த்ரே வாஹஸ்ய வாம ப்ரஸ்ருதி தலல சத்தைம ஸத் புஸ்த காந்த
தீவ்யத் ஸூத்ரம் பவித்ரம் மம கலயது ஸம் பானு பானோஸ் ஸ கோத்ரம்--27-
இடது கீழ்க் கை விரல்கள் நீட்டப்பட்ட நிலையில் உள்ளன
கைத்தலத்தில் பொன் போன்ற புஸ்தகம் உள்ளது –
அதில் சுவடிகளில் கோர்க்கும் கயிறு உள்ளது
மஞ்சள் வெயிலின் பொன் கிரணங்களை போல் -அதன் உடன் பிறப்பு போல் இருக்குமே அந்தப்பொன் கயிறு
வேதக்கூட்டங்களே ஒரு மங்கையாகவும் -அவள் கழுத்தில் கட்டுவதற்கு ஏற்ற அணியான
மஞ்சள் படுத்தின திரு மாங்கல்யக் கயிறு தான் இந்தப் பொற் கயிறோ ஏற்று ஐயம் படும்படி இருக்குமே
அன்றிக்கே
சரஸ்வதியின் வெள்ளமே மொழிகள் உண்டாகும் மலையில் இருந்து தோன்றி நூல் பிடித்தால் போல் ஓடுகின்றதோ என்று ஐயம் வரும்படியும் இருக்குமே
அத்தகைய சுவடிக் கயிறு அடியோங்களுக்கு நலன்களை அளித்து அருள வேண்டும்
———–
ஸ்வ ப்ரேஷ்வப்ரே அபி யாதாத் திதி தனு ஜனுஷோ ப்ராமயித்வா விபந்தன்
ஸீர்ணாங்காத் கீர்ண கேஸான் ப்ருஸமதிர பஸம் பாதயன் நிர்ஜராணாம்
ஸ்வா ராஜ்யம் ப்ராஜ்ய யந்யோ மிஹிர இவ ஹிமஜ் யாதாரா துஜ் ஜிஹான்
பாபாத் யஸ் வாஸ்ய வாமே தரகர வித்ருதஸ் சாகராஜஸ் ஸ தோ அவ்யாத்–28-
இவனுடைய வலது திருக்கரங்களில் உள்ள சக்ரராஜன் அசுரர்களை வானத்தில் உள்ள பள்ளங்களில் அலைக்கழித்து அவர்களை நிரஸிக்கிறார்
அவர்கள் கை கால் முதலிய அவயவங்கள் சிதைந்திட மிகுந்த விரைவில் வீழ்த்தப்படுகின்றனர்
பனிமலையில் இருந்து புறப்படும் கதிரவன் போலே அவ்வெள்ளைப் பரிமுகன் தோளில் இருந்து சக்ரராஜன் புறப்படுகிறான்
அசுரர்களை வீழ்த்தி தேவலோகத்தை பரப்பி தேவர்களுக்கு அளித்து மகிழ்கிறான்
அத்தாலேயே மிகுந்த தேஜஸ்ஸூ டன் திகழ்கிறான்
அத்தகைய சக்ரராஜன் அடியோங்களைக் காத்து அருள வேண்டும்
—————-
சிஷ்யாணாம் சித்த பூமவ் ப்ரசுர தர தம கண்ட கானி வ்யபோஹ்ய
ஆஸிஸ் யாத்யர்தம் கடாஷாம் ருதர ஸவிஸ ரைஸ் ஸாஸ்த்ர பீஜானி வப்தும்
நிர் நித்ரோ ஞான முத்ரா ருசிர கர தலே தஷிணே யோ அஷ மாலாம்
பிப்ரத் பாத்யஸ் வவக்த்ரே ஸ ஹரது நிதரா மம்ஹஸாம் ஸம் ஹதிம் மே–29-
வலது கீழ்க்கரம் ஞான முத்திரையுடன் இருந்து அழகுடன் திகழ்கிறது
அந்த ஞான முத்திரை யுடன் கூடிய கையில் அக்ஷ மாலையும் உள்ளது
ஜெப மணிக் கொட்டைகளாலான மாலை அன்றோ அந்த மாலை –
ஞான முத்திரையில் ஆள் காட்டும் விரலும் கட்டை விரலும் இணைந்து இலங்குகின்றன –
ஆக இந்த பீஜங்களால் -கொட்டைகளால் -விதைகளாலான -மாலை இரு விரல்களால் தாங்கப் பட்டுத் தொங்குகிறது –
இந்த ஹயக்ரீவப் பெருமாள் ஏதோ ஒரு விதையை விதைப்பது போல் உள்ளது –
ஆம் -சீடர்களின் நெஞ்சில் படர்ந்த அறியாமை என்னும் முட் புதர்களாகிய இருளை அகற்றி
அந்த நிலத்தைப் பண் படுத்துகிறான் பரிமுகனாம் இந்தப் பக்தி உழவன்
பிறகு வர்ணனைக்கு அப்பால் பட்ட தனது கடாக்ஷம் என்னும் அமுத நீரைப்பாய்ச்சி
ஸாஸ்த்ர ஞானப்பயிர் செழிப்பாக வளர்ந்திடும் என்று அங்கே அவர்கட்க்கு விதையை விதைக்க விளைகிறான்
விதை எடுக்க விதை மாலையை வலது கரத்தில் வைத்துள்ளான்
இரு விரல்களால் மண்ணில் புதைப்பதற்கு ஏற்ற நிலையில் விதையை எடுத்துக் கொண்டு இருக்கும்
ஹயக்ரீவன் என்னும் இந்தப் பக்தி உழவன் சோம்பாது திகழ்கிறான்
அவன் அடியோங்களின் பாபக் கூட்டங்களை அபஹரித்து அருள வேண்டும் –
——–
ரம்யம் ஸ்யாத் பிம்ப விந்தோ சர துதி தரு சேரம்பான் நிர்யதேதத்
கிம் வா டிண்டீர கண்டம் கலச ஜல நிதே கிம் வா து புண்டரீகம்
வாக் ப்ரம்மோத்தா மலீலா க்ருஹமிதி விபுதை ரூஹ்யை மானோ ஹ்யாஸ்யே
நோ பாத்த ஸவ்ய ஹஸ்தே மம பவது ஸூபா லம்பனம் கம்புராஜ--30-
பரி முகப் பெருமான் இடது மேற் கரத்தில் சங்க ராஜன் விளங்குகிறான் –
சரத்கால மேகம் போல் வெளுத்து இருக்கிறான்
சரத்கால வெண் மேகக்குவியலின் பின்னணியில் உதித்த சந்திரனோ இவன் என்று என்னும்படி இருந்தது –
வெள்ளையான பாற்கடலின் நுரை திரண்டு இப்படித் தோன்றுகிறதோ என்னலாம் படி இருக்கிறான் –
கலைமகள் ப்ரம்மா இரண்டும் குடியிருந்து நன்கு லீலை செய்ய அழகியதோர்
வெள்ளைத் தாமரைப்பூவோ என்னலாம் படியாய் இருக்கிறான்
இப்படிப்பலவிதமாகப் புலவர்கள் ஊகிக்கலாம் படியாய் உள்ள இந்தப் பாஞ்ச ஜன்யம் எனக்கு
ஹயமுகனின் வடிவைத் த்யானம் பண்ணப் பிடித்துக் கொள்ளும் துணையாக
நல்லதோர் பிடியாக இருந்து அருள வேண்டும் –
———-
ஸேவ்யா ஸர்வாதி ஸர்வத்ரி தச பரிஷதா ஸஸ்வதா ஸாஸ்வினீ ஸ்ரீ
அஸ்மாகம் யா ஸ பத்னீ லஸதி பத ஸிரோ அஸ்யதி ரூடேதி ஸேர்ஷ்யம்
ஜேதும் தாம் ஸந்ததோ தித் வர வர மஹஸா பாதி நக்ஷத்ர மாலா
தேவஸ் கந்தே ஸ்தி தேயம் ஸததமபி சாமாராத யந்தீவ ஸா அவ்யாத்–31-
வேதத்தில் நக்ஷத்திரங்கள் கிருத்திகை முதல் நக்ஷத்ரமாகப் படிக்கப் படுகிறது
அஸ்வினி -இருபத்தாறாம் நக்ஷத்ரம்
பரணி இருபத்தேழாம் நக்ஷத்ரம்
ஆனால் உலக வழக்கில் அஸ்வினி முதலாகவும் பரணி இரண்டாகவும் கார்த்திகை மூன்றாகவும் படிக்கப்படுகிறது
எப்படி அஸ்வினி முதல் இடம் பெற்றது
அது ஹயக்ரீவப் பெருமானை வழி பட்டது போலும்
அவன் அருளுடன் தனது தலையில் தூக்கி வைத்துக் கொண்டான் போலும் –
அவன் தலையில் அஸ்வினி ஸ்ரீ உள்ளது -அதாவது குதிரையின் அழகு எல்லாம் நிறைந்த அந்தப் பெரும் ஸ்ரீ -திரு –
அவன் திரு முகத்தில் உள்ளதே =ஆம் அஸ்வினீ ஸ்ரீ
குதிரைத் திருவைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டான் ஆயிற்றே
இதனால் சிவன் முதலிய தேவர் ஸமூஹம் பணிந்து இவனை வணங்குகிறது
எனவே அஸ்வினி முதல் இடம் பெற்றது போலும்
இத்தைப் பார்த்த மற்ற நக்ஷத்திரங்கள் -நம்மில் ஒன்றான இது நம்மை எல்லாம் விஞ்சி விட்டதே என்று வியந்தன
ஹயக்ரீவப் பெருமாளுக்கு அவன் உகக்கும் படி கைங்கர்யம் செய்தால் நமக்கும் இத்தகைய
பேறு ஸித்திக்கும் என்று உணர்ந்து அவன் விருப்பப்படி இயங்குகின்றன
இப்படி நக்ஷத்திரங்கள் மாலையாக அவனைப் போற்றுகின்றன
ஹயக்ரீவப் பெருமாளுடைய இந்த மாலை நம்மை ரக்ஷித்து அருள வேண்டும்
———-
நந்துஸ் ஸந்த்ரா ஸஹாரீ தததபி ஹரிதாம் சச்வதாத் மன்ய நூநாம்
யஸ்தாம் மூர்த்ன்யேவ நித்யம் ப்ரகடயதி ஹரே புருஷஸ் யாபி ஸத்யம்
ஸ்ரவ்தீம் முக்யே தரத்வாவ கதிமபி விசிஷ்டாத்வி தீயத்வ த்ருஷ்டிம்
ஸ்பஷ்டீ கர்த்தும் ஜகத்யாம் ஸ்புடயதுஸ ஜடித்யஸ்ம திஷ்டம் விஸிஷ்டம்–32-
ஹயக்ரீவன் ஹரி நாராயணனே அன்றோ
அடி பணிந்தவர்களின் அம்சங்களை எல்லாம் அபஹரிக்கிறான்
இப்படி ஹரித்தன்மை கொண்டு இருந்தாலும் குதிரை முகத்தை ஏறிட்டுக் கொள்கிறான்
மனித உடலைத் தலைக்கு கீழ் கொண்டுள்ளான்
குதிரைக்கும் ஹரி என்ற பெயர் உண்டே
ஆக இவன் தலையில் ஹரித்தன்மை உள்ளது
திருமேனியில் மனிதத்தன்மை உள்ளது
இதன் மூலம் -நமக்கு தலை வஹிக்கும் பரமாத்மா ஒருவன் உள்ளான்
அவன் ஒருவனே -தலையானவன் –
அதன் கீழ் ஜீவாத்மாக்களும் சேஷ பூதர்களாக உள்ளார்கள் என்று உணர்த்தி அருள்கிறான்
ஸத் ஏகம் ஏவ அத்விதீயம்
விஸிஷ்ட அத்வைதம்
தெளிவாக உணர்த்திய புற மத வாதங்களை தனது உருவத்தாலேயே நிரஸித்து அருள்கிறான்
————–
மஸ்தே அர்வன் விஸ்தரை கிம் விஹர மம மநோ மந்துராயா மமந்தம்
கல்பந்தே அநு ப்லவாஸ்தே மம சததமிமே ஹீந்த்ரியாஸ்வா தஸா அபி
கிம் சாத்ரா நல்ப கல்பா வஸரவி சர துச்சாவ சாகர மூர்த்தி
ஸ்பூர்த்திஸ் பீதோரு கர்ம ப்ர குணத் குண கணஸ் ச வர்ணாய ப்ரணீத--33-
பரிமுகப்பெருமாளே இனி மேல் என்ன சொல்ல இருக்கிறது
எனது மனம் என்னும் லாயத்திலே நித்ய வாஸம் செய்து அருள்வாயாக
இங்கே உனக்குத் துணையாக உன்னையே தொடர்ந்து இருக்க விரும்பும் மனத்தின்
தொண்டர்களாக பத்து குதிரைகள் உள்ளன –ஞான கர்ம இந்திரியங்கள்
இவைகள் உன்னையே தொடர இருக்கும் பாஸிடி நீயே அருள் புரிய வேண்டும்
இங்கு உனக்கு புல்லும் நிறைய உண்டு -பாலக்கோடு கல்பமாக வலிமையுடன் புஷ்டியாக செழுமையுடன்
உள்ள உயர் ரகப் புல்லான எனது கர்மாக்கள் இங்கே மண்டி உள்ளன
அவைகளே நீ மேய்த்து ஒழித்திட்டு அருள வேண்டும்
————
வஸ்தூரீ கர்து மர்சா விதிஷு சமுசிதம் நான்ய தஸ்யேதி ஜாநந்
கஸ்தூரீ ரெங்க நாதஸ் ஸ்தவம் இமம் உபதாமாதி மாஸ் வஸ்ய தத்தே
யஸ் தூனோ யோ அதிரிக்தஸ் சகலமபி ச தம் ஹ்ருத்யந்தர் தமஸ்மின்
ஸ்வ ஸ்தூலீ கார தீராம் விதரது படதாம் வாகாதீச ஸ புத்திம் –34-
ஆதியாம் ஹயக்ரீவப்பெருமாளுக்கு பூசனை செய்யப் பயன்படுத்திய இந்தச் சொல் மாலையைத் தவிர
வேறே எந்தப் பொருளும் கிஞ்சித்தும் தன்னிடம் இல்லை என்று தேறி கஸ்தூரி ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் இதனைக் காணிக்கை யாக்கினார்
இதில் குறையோ நீரையோ இருக்கலாம்
அவற்றைக் கணிசியாதே அனைத்தையும் தனது திரு உள்ளத்துக்கு உகப்பாகவே ஏற்று அருளுவான்
இதனைப் படிப்பவர்களுக்கு இஹ பர லோக ஐஸ்வர்யங்கள் பெரும் ஞான பிரகாசம் அருள்வான்
ஒழிவில் காலம் எல்லாம் வழு விலா அடிமை கொண்டு அருள்வான் என்று பலம் சொல்லி இந்த ஸ்துதி நிகமனம்
———
வாஜி மஸ்தக ஸ்ரீ மனூத் த்ருத ஸ்வாதி மாரக்ஷ ஸ்லோக மாலிகாம்
தர்க்க தீர்த்த ஜாம் கும்பஜ ப்ரியாம் ஸாஸ்த்ர ஸாஹி தீ வல்லபோ அகரோத்
ஸ்ரீ தர்க்க தீர்க்க ஸ்வாமி அருளிச் செய்த இந்த மாலையை
அகஸ்தியருக்கு அன்புக்கு உரித்தான தமிழில்
ஸாஸ்த்ர சாஹீத வல்லபன் என்ற விருதுடைய கருணாகர தாஸன் அருளினான்
—————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கஸ்தூரி ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மீ ஸமேத ஸ்ரீ ஹய வதன பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply