ஸ்ரீர் உவாஸ
ஸ்ருணு வத்ஸ ஸூரேசாந வித்யா யாஸ் தாரிகா க்ருதே
அங்கோ பாங்காநி மந்த்ராணி நாநா மந்த்ர மயாநி மே –1-
குழந்தாய் -தேவர்களின் தலைவனே –
தாருகா வித்யையில் உள்ள மந்த்ரங்களையும்
அங்க உப அங்க மந்திரங்களையும் இப்போது நான் கூறக் கேட்பாயாக-
கோபநம் பஞ்ச பிந்தும் சான் ஹி ஊர்ஜம் ஐராவணம் ததா
ஒவ்ர்வம் ச பஞ்சகம் சைதே ப்ரத்யேகம் வ்யாபிநாந் விதம் -2-
ப்ராண அலோ பரிஸ்தம் து க்ருத்வைதத் பிண்ட பஞ்சகம்
ஹ்ருதாநி நேத்ர பர்யந்தம் அங்க பீஜம் இதம் ஸ்மரேத் –3-
ப்ராண -ஹ -மற்றும் அநல -ர -அக்ஷரங்கள் இரண்டும்
கோபநம் -அ-என்றும் பஞ்ச பிந்து -ஈ -என்றும் -ஊர்ஜம் -ஊ-என்றும் -ஐராவணம்-ஐ -என்றும் ஒவ்ர்வம் -ஒவ் -என்றும்
உள்ள ஐந்து எழுத்துக்களுடன் தனித்தனியாக சேர்க்கப் பட்டு
இறுதியில் அநு ஸ்வரமும் இணைக்கப் படுகிறது
இவை பிண்டங்களை உருவாக்குகின்றன –
இவையே ஐந்து அங்கங்களில் ஐந்து பீஜங்களாக -ஹ்ராம் -ஹ்ரீம் -ஹ்ரூம் -ஹ்ரைம் -ஹரவ்ம் -கொள்ளப்பட வேண்டும்
இவை ஹ்ருதயம் தொடங்கி கண் முடிய உள்ளவை ஆகும்
மேலே கூறப்பட்ட ஐந்து பீஜங்கள்
ஓம் ஹ்ராம் ஹ்ருதயாய நம
ஓம் ஹ்ரீம் சிரஸே நம
ஓம் ஹ்ரூம் சிகாயை நம
ஓம் ஹ்ரைம் கவசாயை நம
ஓம் ஹரவ்ம் நேத்ராப்யாம் நம –
ஹ்ருத் பீஜாத் பரதோ யோஜ்யம் ஞான யேதி பதம் தத
ஹ்ருதயாய நமஸ் சைவ மந்த்ர அயம் தாரண பிரத –4-
ப்ரணவாதி நம அந்த அயம் மந்த்ர ஏகாதச அக்ஷர –5-1-
இதயத்தின் பீஜமான -ஹ்ராம் -என்பதைத் தொடர்ந்து -ஞானாய ஹ்ருதயாய நம -என்பதைச் சேர்க்க வேண்டும்
இந்த மந்திரமானது தாரணை நிலையை உண்டாக்குகிறது
பிரணவம் தொடங்கி -நம -முடிய உள்ள இந்த மந்திரமானது பதினோரு அக்ஷரங்களைக் கொண்டதாக உள்ளது –
பரம் ப்ரணவ பீஜாப்யாம் ஐஸ்வர்யாய பதம் ந்யசேத் –5-2-
சிரஸே ச ததா ஸ்வாஹா ஹி ஏஷ ஏகாதஸ அக்ஷர -6-1-
பிரணவம் மற்றும் இரண்டாவது பீஜத்துக்குப் பின்னர் -ஐஸ்வர்யாய–சிரஸே–ஸ்வாஹா-என்னும் மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும்
இது பதினோரு அக்ஷரங்கள் கொண்டதாகும் -ஓம் ஹ்ரீம் ஐஸ்வர்யாய சிரஸே ஸ்வாஹா –
பரம் ப்ரணவ பீஜாப்யாம் சக்தயே ச பதம் ந்யசேத் -6-2-
சிகாயை வவ்ஷத் இதி ஏவம் சைக அயம் து தச அக்ஷர –7-1-
பிரணவம் மற்றும் மூன்றாவது பீஜத்துக்குப் பின்னர் -சக்தயே சிகாயை வவ்ஷத் -என்னும் மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும் –
இது பத்து அக்ஷரங்கள் கொண்டதாகும் -ஓம் ஹ்ரூம் சக்தயே சிகாயை வவ்ஷத் –
பரம் ப்ரணவ பீஜாப்யாம் பலாயேதி பதம் ந்யசேத் –7-2-
கவசாய ஹும் இதி ஏவம் மந்த்ர அயம் ச தச அக்ஷர -8-1-
பிரணவம் மற்றும் நான்காவது பீஜத்துக்குப் பின்னர் -பலாய கவசாய ஹும் என்னும் மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும்
இது பத்து அக்ஷரங்கள் கொண்டதாகும் -ஓம் ஹ்ரைம் பலாய கவசாய ஹும் –
பரம் ப்ரணவ பீஜாப்யாம் தேஜஸே ச பதம் ந்யசேத் -8-2-
நேத்ராப்யாம் வவ்ஷத் இதி ஏவம் நேத்ர மந்த்ர தச அக்ஷர –9-1-
பிரணவம் மற்றும் ஐந்தாவது பீஜத்திற்குப் பின்னர் தேஜஸே -என்பதைச் சேர்த்துக் கொண்டு -நேத்ராப்யாம் வவ்ஷத் என்னும் மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும் –
இது பத்து அக்ஷரங்கள் கொண்ட நேத்ர மந்திரமாகும் -ஓம் ஹ்ரவம் தேஜஸே நேத்ராப்யாம் வவ்ஷத்-
ப்ராண அநல உபரிஸ்தம் து வின்யசேத் பரமேஸ்வரம் -9-2-
தஸ்மாத் ப்ரணவ பூர்வாத் து வீர்யாய வின்யசேத்
அத்ஸ்ராய ச பட் இதி ஏவம் மந்த்ர அயம் ச தச அக்ஷர -10-
பிரணவத்தை முதலில் நிறுத்தி -அஸ்த்ராய ச பட் -என்னும் மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும்
இது பத்து அக்ஷரங்கள் கொண்டதாகும் -ஓம் ஹ்ரஸ் அஸ்த்ராய ச பட்
அங்க ஷட்கம் இதம் ப்ரோக்தம் உபாங்க த்ரி யுகம் ஸ்ருணு
தாரி காந்தே க்ரமாத் தத்யாத் பூர்வ வத் ஷட் குணம் பதம் -11-
ஞானாதி தேஜஸ் பர்யந்தம் ததந்தே ச க்ரமான் ந்யசேத்
உதாராய ச ப்ருஷ்டாய பாஹுப்யாம் இதி வை பதம் –12-
ஊருப்யாம் அத ஜானுப்யாம் சரணாப்யாம் இதி க்ரமாத்
நமச்ச பரதோ யோஜ்யம் உபாங்கா நாம் அயம் விதி -12-
ஆறு உப அங்க மந்த்ரங்களைக் குறித்து நான் கூறுகிறேன் -கேள்
ஒவ்வொரு மந்திரத்தின் முதலில் ஞானம் தொடங்கி தேஜஸ் முடிய ஆறு குணங்களை சேர்க்க வேணும்
இவற்றுடன் -உதாராய -ப்ருஷ்டாய -பாஹுப்யாம் -ஊருப்யாம்-ஜானுப்யாம் மற்றும் சரணாப்யாம் ஆகியவை சேர்க்கப் பட வேண்டும்
1- ஓம் ஹ்ரீம் ஞானாயா உதாராய நம –
2- ஓம் ஹ்ரீம் சக்தாய ப்ருஷ்டாய நம
3-ஓம் ஹ்ரீம் பலாய பாஹுப்யாம் நம
4-ஓம் ஹ்ரீம் ஐஸ்வர்யாய ஊருப்யாம் நம
5- ஓம் ஹ்ரீம் வீர்யாய ஜானுப்யாம் நம
6-ஓம் ஹ்ரீம் தேஜஸாய சரணாப்யாம் நம-
இதி ஏவம் அங்க உபாங்கா நாம் மந்த்ரா த்வாதஸ கீர்த்திநா
அலங்கார அஸ்த்ர மந்த்ராம்ஸ்து ப்ருவத்யா மே நிசா மய –14-
இது வரை 11 அங்கம் மற்றும் உப அங்க மந்த்ரங்கள் குறித்துக் கூறினேன்
அடுத்து ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்கள் குறித்துக் கூறுகிறேன் -கேள் —
கௌஸ்துபோ வ்யோம ஸம் பின்னஸ் பரமாத்மா தத பரம்
ஊர்த்வ அதஸ் அநல ஸம் பின்ன ஊர்ஜேந அபி ஸமன்விதஸ்–15-
ஸ்ருஷ்டி க்ருதஸ் ஸம்யுதோ மூர்த்நி கௌஸ்துபோ வ்யாபி ஸம் யுத
நமஸ் க்ருதிஸ் ஸ்தநஸ் பச்சாந்ததஸ் பச்சாத் ப்ரபாத்மநே -16-
கௌஸ்துபாய ததஸ் ஸ்வாஹா ப்ரணவாத் யஸ்து கௌஸ்துப
மந்த்ர ஷோடஸ வர்ண அயம் ஸர்வ கர்ம ப்ரஸாதக–17-
முதலில் கௌஸ்துபம் பற்றிக் கூறுகிறேன் -இதனால் கூறப்படுபவன் பரமாத்மா ஆவான்
அதன் மேலும் கீழும் அக்னி சமநிலையில் உள்ளது –
இது ஸ்ருஷ்டியின் பொருட்டே உள்ளது
இதன் மந்த்ரம் -ஓம் தம் ஹ்ரூர்ஹ தம் நம ப்ரபாத்மநே கௌஸ்துபாய ஸ்வாஹா என்பதாகும் –
உத்தரேத் பிரதமம் தாரம் தரேசம் தத உத்தரேத்
தததஸ் திருப்தி ஸம்ஜ்ஞம் ஸ வராஹம் தததோ ந்யசேத் –18-
மாயயா பூஷயேத் பச்சாத் வயாபிநா ச அங்க யேதத்
பஞ்சாத்மா வர்ண பிண்ட அயம் நமஸ்காரம் ததஸ் பரம் –19-
ததஸ் ஸ்தல ஜலோத்பூத பூஷிதே பதம் உத்தரேத்
வந மாலே ததஸ் ஸ்வாஹா மந்த்ரஸ் ஸர்வார்த்த ஸாதக –20-
ஏகோந விம்சத் யர்ணஸ் அயம் வந மாலா மயோ மஹான்–21-1-
முதலில் தாரகமாகிய ஓம் என்பது உள்ளது
இதனைத் தொடர்ந்து ல் என்பதும் -தொடர்ந்து வ என்பதும் உள்ளது
இதனைத் தொடர்ந்து பிந்துவும் நமஸ்காரமும் வருகின்றன
தொடர்ந்து ஸ்தல ஜலோத் பூத பூஷிதே -என்பதும்
அதன் பின்பே வந மாலே என்பதும்
இறுதியாக ஸ்வாஹா என்பதும் சேர்ந்து -சாதகனுக்கு அனைத்தும் அளிக்க வல்ல மந்த்ரம் ஆகிறது
இது -ஓம் ல்ஸ்வீம் ஸ்தல ஜலோத் பூத பூஷிதே வந மாலா ஸ்வாஹா -என்பதாகும்
378-
ஆதாயாதவ் து வைகுண்டம் ரேபம் ததுபரி ந்யசேத்
ஆனந்தே நான்விதம் பஞ்சாத் வ்யாபிநா சாங்க யேத்ததா –24-
கஸ்த கஸ்த பதம் தத்யான் நேமி த்வந்த மத பரம்
வரபாசாய வை ஸ்வாஹா ப்ரணவாத் யஸ்து பாசராட் –25
மந்த்ர பஞ்ச தசார்ண அயம் காமி நாம் க்ஷிப்ர ஸித்தி க்ருத் –26-1-
முதலில் வைகுண்ட என்பதில் உள்ள ண -மற்றும் ர -ஆகியவற்றைச் சேர்த்து- ர்ண -என்பதைக் கொள்ளவும்
அதில் பிந்துவைச் சேர்த்து -ர்ணம் -என்பதாகும்
அதன் பின்னர் கஸ்த கஸ்த என்பதைச் சேர்க்கவும்
பின் த த என்பதை இணைக்கவும்
அதனைத் தொடர்ந்து வரபாசாய ஸ்வாஹா என்பதைச் சேர்க்கவும்
14 அக்ஷரங்கள் கொண்ட இந்த பாசராட் என்னும் மந்திரமானது வெகு விரைவாகப் பலன் அளிக்கும்
இதன் முழு வடிவம் -ஓம் ர்ணம் கஸ்த கஸ்த த த வரபாசாய ஸ்வாஹா-என்பதாகும்
ப்ரண வாந்தே விராட் ஸம்ஜ்ஞம் வ்யாபி நா மூர்தி ஸம் யுதம் –26-2-
த்வயம் பிண்ட தயா யோஜ்யம் கமல மங்குசம்
வ்யாபி நா ஸம் யுதம் மூர்திநி த்ருதீயம் இதம் அக்ஷரம் –27-
பதம் நிசித கோணாய ச அங்கு சாய சாகி ப்ரியா
இதி பஞ்சத சார்ணஸ் அயமாம் குச சீக்ர ஸித்தித –28-
பிரணவத்தின் இறுதியில் விராட் மூர்த்தியைக் குறிப்பதான -ல்ரு -சேர்க்கப் பட்டு அதன் தலைப்பகுதியில் பிந்து இடப்படுகிறது –
அதன் பின்னர்- ர -என்பதும்- க்ரு- என்பதும் அதன் பின்னர் பிந்துவும் உள்ளன -இதுவே மூன்றாம் அக்ஷரமாக உள்ளது
அதன் பின்னர் -நிசித கோணாய -மற்றும் -அங்குசாய -என்பதுவும் -அதன் தலைப்பகுதியில் -ஸ்வாஹா -என்பதும் உள்ளன
இதுவே 14 அக்ஷரங்கள் கொண்ட அங்குச மந்த்ரம் ஆகும் –
இது வெகு விரைவாக பலன் அளிக்க வல்லது
இதன் முழு வடிவம் -ஓம் ல்ரும் க்ரும் நிசித கோணாய அங்குசாய ஸ்வாஹா -என்பதாகும்
அலங்காராஸ்த்ர மந்த்ராணாம் ஏதத் பஞ்சக மீரிதம்
ஆதாரஸந மந்த்ராணாம் ஸ்ருணு ரூபம் புரந்தர –29-
யத்விநா தாரிகா யாஸ்து பூரணம் நைவ ஜாயதே –30-1-
அடுத்து அலங்கார அஸ்த்ர மந்த்ரங்கள் ஐந்தும் ஒன்றும் உள்ளன
இந்திரனே ஆதார ஆஸன மந்த்ரங்களினுடைய ரூபம் குறித்து இப்போது நான் கூறக் கேட்ப்பாயாக
ஆனால் இத்துடன் தாரிகாவின் மந்த்ரங்களினுடைய ஸ்வரூபமானது பூர்ணமாக உள்ளது என்று பொருள் அல்ல –
அநல த்வயம் அத்யஸ்தஸ் ப்ராணோ மாயீ ஸ பிந்துமான் –30-2-
தத ஆதார சக்த்யை ச ப்ரணவாதிர் நமஸ் அந்திமஸ்
ஆதார சக்தி மந்த்ர அயம் விஜ்ஜே யஸ்து நவ அக்ஷர –31-
அக்னியைக் குறிக்கும் -ர -என்பதை நடுவில் கொண்டதாகவும் ப்ராணனைக் குறிக்கும் -ஈ -என்பதையைப் புள்ளியுடன் கொண்டதாகவும் –
ப்ரணவத்தைத் தொடக்கத்தில் கொண்டதாகவும் -நம என்பதை இறுதியில் கொண்டதாகவும் ஆதார சக்தி மந்த்ரம் உள்ளது –
இது ஒன்பது அக்ஷரங்கள் கொண்டதாக அறியப்படுகிறது
இந்த மந்திரத்தின் முழு வடிவம் -ஓம் ஹ்ரீம் ஆதார சக்த்யை நம -என்பதாகும் –
அநல த்வயம் அத்யஸ்தோ பிந்த்வந்த அப் யூர்ஜ ஸம் யுதஸ்
ததஸ் காலாக்நி கூர்மாய நம அந்தஸ் ப்ரணவாதிகஸ் –32
மந்த்ர காலாக்நி கூர்மஸ்ய விஜ்ஜேயஸ் அயம் தசாஷர –33-1-
இரண்டு அக்னிகளை -அதாவது இரண்டு ர என்னும் அக்ஷரம் -உள்ளடக்கியதும்
ப்ராணனுடன் கூடியதும் -ஹ
இறுதியில் உ என்பது பிந்துவுடன் -புள்ளியுடன் -சேர்க்கப்பட்டதும்
தொடர்ந்து நான்காவதாக காலாக்நி கூர்ம என்பதுடன்
நம இறுதியில் கொண்டதும்
மற்றும் ப்ரணவத்துடன் கூடியதும் -பத்து அக்ஷரங்களைக் கொண்டதாக இந்த மந்த்ரம் அறியப்படுகிறது
இந்த மந்திரத்தின் முழு வடிவம்–ஓம் ஹ்ரூம் காலாக்நி கூர்மாய நம-
கோபநே நாங்கிதம் ப்ராணம் மூர்திநி ச வ்யாபிநா யுதம் -33-2-
ப்ரணவாந்தே ஸமுத்த்ருத்ய ஹ்ய நந்தாய நமஸ் தநஸ்
அஷ்டாக்ஷரோ ஹ்யம் மந்த்ரோ நாக ராஜஸ்ய கீர்த்திதஸ் –34
அடுத்து ஹ என்னும் பிராணனை பிந்துவுடன் கூடியதும்
பிரணவம் மற்றும் நம என்பதை தொடக்கத்திலும் முடிவிலும் கொண்டதும்
அநந்தாய -என்பதைக் கொண்டதும்
எட்டு அக்ஷரம் கொண்டதும்
நாக ராஜனான ஆதி சேஷனைக் கொண்டதுமாக இந்த மந்த்ரம் உள்ளது
இந்த மந்திரத்தின் முழு வடிவம்-ஓம் ஹாம் அநந்தாய நம –
கமலம் ச அக்னி ரூபம் ச ப்ரதாநம் புருஷேஸ்வரம்
பிண்டீ க்ருத்ய சதுஷ்கம் து கோபந வ்யாபி ஸம் யுதம் –35-
வஸூ தாயை நம பச்சாத் ப்ரணவாதிர் மநுஸ் த்வயம்
விஸ்வம் பராய விஜ்ஜேய ஆதார பரி கல்ப்யதே –36-
தாமரை மற்றும் அக்னி ஆகியவற்றைக் குறிக்கும் அக்ஷரங்கள் ஒன்றாக இணைந்தும்
புருஷேஸ்வரம் என்பதைக் குறிக்கும் அக்ஷரம் சேர்ந்தும்
இத்துடன் புள்ளியும் சேர்ந்தும்
என நான்கு இணைப்புகள் இந்த மந்திரத்தின் தொடக்கத்தில் உள்ளன
அதன் பின்னர் வஸூ தாயை என்பதும்
தொடக்கத்தில் பிரணவமும் உள்ளது
இது -விஸ்வம்பரத்தின் -விஸ்வம் என்ற உலகில் -ஆதாரமாக அறியப்படுகிறது –
இந்த மந்த்ரம் ஓம் ஷம்லாம் வஸூ தாயை நம -என்பதாகும்
அம்ருதம் வருணம் ச அர்ண த்வயம் பிண்டீ க்ருதம் ஸஹ
கோபந வ்யாபி ஸம் யுதம் ப்ரண வான்தே சமுச்சரேத் –37-
ஷீரார்ணவாய ச நம ஸ அயம் மந்த்ரோ நவ அக்ஷர –38-1-
அம்ருதத்தைக் குறிக்கும் ஸ -மற்றும் வருணனைக் குறிக்கும்வ -மற்றும் புள்ளியுடன் கூடி
தொடக்கத்தில் ப்ரணவம்
அடுத்து -ஷீரார்ணவாய – நம-ஆகியவை சேர்ந்து ஒன்பது அக்ஷரங்கள் கொண்ட இந்த மந்த்ரம்
ஓம் ஸ்வாம் ஷீரார்ணவாய ச நம-
பவித்ரம் ஸோ தய வ்யாபி ஸம் யுதம் ப்ரண வாந்தகம் –38-2-
ஆதார பத்மாய நம பத்மஸ் யாயம் தச அக்ஷர
இத்தம் ஆதார ஷட் கஸ்ய மந்த்ர ஷட்கம் ப்ரகீர்த்தி தம் –39-
பவித்ரத்தைக் குறித்தும் அக்ஷரமான -ப –என்பதுடன் உ என்பதும் -இணைந்து -புள்ளி யையும் சேர்த்து
தொடக்கத்தில் ப்ரணவமும் தொடர்ந்து ஆதார பத்மாய நம சேர்ந்து பத்து அக்ஷர மந்த்ரம்
ஓம் பும் ஆதார பத்மாய நம -என்பதாகும்
இப்படி ஆறு ஆதார மந்த்ரங்கள் தொகுப்பு உள்ளது –
—-384
ஸோதயம் ஸாம்ருதம் ஹ்ரஸ்வம் ப்ரணவோபரி வின்யஸேந்
அவ்யக்த பத்மாய நமஸ் ஸ மந்த்ரஸ் அவ்யக்த பத்மகஸ் –45-
ப்ரணவத்தைத் தொடர்ந்து ஹ்ரஸ்வம் என்னும் -ப -உதயம் என்னும் உ -அம்ருதம் என்னும் ஸ மற்றும் பிந்து -புள்ளி -ஆகியவை அமைக்கப்பட்டு
தொடர்ந்து அவ்யக்த பத்மாய -என்பது வைக்கப் படுகிறது –
இம்மந்த்ரமானது அவ்யக்த பத்மகம் எனப்படும் -ஓம் ப்ஸூம் அவ்யக்த பத்மாய நம –
ஸூர்யா இந்து அக்னி பதேப்யஸ்து ப்ரத்யேகம் மண்டலாய ஸ
நம அந்தே ப்ரண வச்சாதவ் தே மந்த்ராய மண்டல த்ரயே –46
ஸூர்யன் இந்து மற்றும் அக்னி ஆகியவற்றின் மண்டல மந்த்ரங்கள் அடுத்து உள்ளன
இவற்றின் இறுதியில் நம என்பதும் -தொடக்கத்தில் ப்ரணவமும் என்பதாக இம்மூன்று மந்த்ரங்கள் உள்ளன
ஓம் ஸூர்ய மண்டலாய நம
ஓம் இந்து மண்டலாய நம
ஓம் அக்னி மண்டலாய நம –ஆகியவை –
ப்ரத்யகாத்ம பரா மர்சி ஸப்த ஸோம அத சர்கவான்
சித் பாச நாக்ய மந்த்ரஸ் அயம் த்ர்ய அக்ஷரஸ் பரிகீர்த்தித –47-
ப்ரத்யகாத்மாவை -சரீரத்தில் உள்ள ஆத்மாவை -குறிக்கும் சப்தமாக -அஹம் -என்பது உள்ளது
இதனைத் தொடர்ந்து சோமனைக் குறிக்கும் ஸ உள்ளது
இப்படியாக மூன்று அக்ஷரங்களைக் கொண்டதாக சித் பாசன மந்த்ரம் உள்ளது
அஹம் ஸ என்பதே அந்த மந்த்ரம் ஆகும்
இதி ஆச நாக்ய மந்த்ராணாம் கதிதா த்வேக விம்சதி
இதி அயம் பீட பூஜாந்தோ மந்த்ர ப்ராணோ மயேரிதி–48-
இப்படியாக ஆஸன மந்த்ரங்கள் -21 வகைகள் -அதாவது
16 ஆதா ரேச மந்த்ரங்கள்
1-அவ்யக்த பத்ம மந்த்ரம்
3 மண்டல மந்த்ரங்கள்
1-சித் பாசன மந்த்ரம் –என்பதாக 21- மந்த்ரங்கள் குறித்து உரைத்தேன் –
ரஹஸ்யம் பரமம் க்ருஹ்யம் இதா நீம் பரமம் ஸ்ருணு
க்ஷேத்ர ஸாத்யம் மந்த்ர சயம் விக்ந நிர் மதந ஷமம் –49-
இவற்றின் பின்னர் இந்த மந்திரங்களிலும் பரம ரஹஸ்யமான மந்த்ரத்தை நான் கூறுகிறேன் கேள்
ஷேத்ரபாலர்கள் குறித்த இந்த மந்த்ரங்கள் அனைத்து தடைகளையும் அழிக்க வல்லவை யாகும்
கருடம் காலமநலம் பிண்டீ க்ருத்யாங்க யேத் தத
சவ்யாபி நாதி தேவேந க்ஷேத்ர பாலயா வை நம –50-
ப்ரணவாத்யோ முநஸ் சாயம் ஷேத்ரஸ்ய நவ அக்ஷர –51-1-
கருடன் என்பதைக் குறிக்கும் -ஷ
காலத்தைக் குறிக்கும் -ம்
அக்னியைக் குறிக்கும் -ர
இவற்றைத் தொடர்ந்து எங்கும் வியாபிக்கும் தேவர்களைக் குறிக்கும் புள்ளி
இதன் பின்னர் ஷேத்ர பாலாய வை நம
தொடக்கத்தில் பிரணவம்
ஓம் ஷ்ரமாம் க்ஷேத்ர பாலாய வை நம -முழு மந்த்ரம் ஒன்பது எழுத்துக்கள் கொண்டது –
அநு தாரா ஸ்ரியை பச்சாந் நமஸ் த்வாதவ் தாரக –51-2-
ஷடக்ஷரஸ் ஸ்ரியோ மந்த்ரஸ் சண்டாதீந பராஞ்ஸ்ருணு –52-1-
தொடக்கத்தில் தாரகமான ஓம்
அதைத் தொடர்ந்து தாரகமான ஸ்ரீ
அதனைத் தொடர்ந்து ஸ்ரியை நம
இப்படியாக ஆறு அக்ஷரங்கள் கொண்ட மந்த்ரம் உள்ளது
ஓம் ஸ்ரீம் ஸ்ரியை நம
இதனைத் தொடர்ந்து சண்டாதி மந்த்ரத்தைக் கேட்ப்பாயாக
ஸ சஞ்சல அநலஸ் தாரஸ் கேவலஸ் த்வாதிநோ பவேத் –52-2-
சண்டாய நம இத்யேவ ஸப்த வர்ணோ மநூத்தம –53-1-
தொடக்கத்தில் ஓம் என்பதும்
தொடர்ந்து சஞ்சலத்தைக் குறிக்கும் ச என்பது
அக்னியைக் குறிக்கும் ர என்பது உடன் இணைந்து
சண்டாய நம என்பது -ஏழு எழுத்து மந்த்ரம் -ஓம் ஸ்ரோம் சண்டாய நம
ஸ பவித்ர அநலஸ் தார கேவலஸ் த்வாதிதோ பவேத் –53-2-
ப்ரசண்டாய நமோ மந்த்ர ப்ரசண்ட அயம் சதுர் யுக –54-1-
தொடக்கத்தில் ஓம் என்பதும்
தொடர்ந்து தூய்மையைக் குறிக்கும் ப என்பதும்
அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
ப்ரசண்டாய -ஓம் ப்ரோம் ப்ரசண்டாய நம -நான்கு யுகங்களிலும் எனது தீவிடமான செயல்பாடுகளைக் குறிக்கும்
ஸ ஸாஸ்வத அநலஸ் தார கேவலஸ் த்வாதிதோ பவேத்–54-2-
ஜயாய நம இத்யேவம் ஜயஸ்ய முநி வர்ணக –55-3-
தொடக்கத்தில் ஓம் என்பதும்
தொடர்ந்து சாஸ்வதத்தைக் குறிக்கும் ஜ என்பதும்
அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
ஜெயத்தை குறிக்கும் மந்த்ரம் -ஓம் ஜ்ரோம் ஜயாய நம -என்று முனிவர்கள் வர்ணிக்கிறார்கள் –
வராஹ அநல ஸம் யுக்தஸ் தார சுத்தஸ் ததாதிக –55-2-
விஜயாய நம ஸோயம் விஜயஸ்ய சதுர் யுக –56-1-
வராஹம் மற்றும் அக்னி ஆகியவற்றைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
அதன் பின்னர் விஜயாய நம -ஓம் வ்ரோம் விஜயாய நம –விஜயத்தைக் குறிக்கும் மந்த்ரம்
கோவிந்த ஸ அநலோ மாயீ வ்யாபிமாந் ப்ரணவாந்தர –56-2-
கங்காயை நம இதி ஏவம் கங்காயா முனி வர்ணிக –57-2-
தொடக்கத்தில் ஓம் என்பதும்
தொடர்ந்து கோவிந்தம் என்பதைக் குறிக்கும் க என்பதும்
அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
தொடர்ந்து ஈ என்பது அமைந்து
ஓம் க்ரீம் கங்காயை நம -கங்கையைக் குறிப்பதாக முனிவர்கள் வர்ணிக்கிறார்கள் –
ஸமாய ஸ அநல ஸூஷ்மோ வ்யாபிமான் ப்ரணவாந்தர –57-2-
யமுனாய நமச்சாயம் யாமுனேயச் சதுர் யுக –58-1-
தொடக்கத்தில் ஓம் என்பதும்
தொடர்ந்து மாயா என்பதைக் குறிக்கும் ய என்பது
அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
ஓம் ய்ரீம் யமுனாயை நம-யமுனையைக் குறிப்பதாக முனிவர்கள் வர்ணிக்கிறார்கள் –
சங்கரஸ் ஸ அநலஸ் ச ஊர்ஜோ வ்யாபிமாந் ப்ரண வாந்தக ஸ் –58-2-
ததச்ச சங்க நிதயே நம சோயம் நவாக்ஷர –59-1-
ஓம் என்பதைத் தொடர்ந்து சங்கா என்பதைக் குறிக்கும் ச என்பது
அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
தொடர்ந்து உ என்பது நெடிலாக அமைந்து
தொடர்ந்து அ என்பதும் புள்ளியும் சேர்ந்து
அதன் பின்னர் சங்க நிதயே நம என்பது ஒன்பது எழுத்துக்கள் கொண்ட மந்திரமாக
ஓம் ஸ்ரூம் சங்க நிதயே நம
பவித்ரஸ் ஸ அநலஸ் ச ஊர்ஜோ வ்யாபிமாந் ப்ரண வாந்தக ஸ் –58-2-
ததச்ச பத்ம நிதயே நம சோயம் நவாக்ஷர –59-2-
க்ஷேத்ரே சாத் பத்ம நியந்தம் மந்த்ராணாம் தசகம் த்விதம் –60-
ஓம் என்பதைத் தொடர்ந்து தூய்மையான அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
தொடர்ந்து உ என்பது நெடிலாக அமைந்து
அதன் பின்னர் பத்ம நிதயே நம என்பது ஒன்பது எழுத்துக்கு கொண்ட மந்திரமாக உள்ளது
ஓம் ப்ரூம் பத்ம நிதயே நம
இப்படியாக க்ஷேத்ரம் –
ஸ்லோகம் -49 தொடங்கி –
பத்ம நிதயே-ஸ்லோகம் -60 -வரை 10 மந்த்ரங்கள் கூறப்பட்டன
—–
கணே ஸாத்யாதி ஸித்தாந்த மத மந்த்ர கணம் ஸ்ருணு
ஊர்ஜ வ்யாபி ஸமா யுக்தோ கோவிந்த ப்ரணவாந்தக–61
அடுத்து கணேச மந்த்ரம் போன்ற ஸித்தாந்த மந்த்ரங்களுடைய தொகுப்பைக் கூறக் கேட்ப்பாயாக
ப்ரணவத்தைத் தொடர்ந்து கோவிந்த என்பதைக் குறிக்கும் க என்பதுடன்
ஊ என்பதையும் இணைந்து புள்ளி
ததோ கோவிந்த வைகுண்டவ் பவித்ர ஸ்ரக்தரஸ் ததா
ஜகத் யோநி கதஸ் சாங்கோ நர காலோ விஸர்க்க வான் –62-
அதன் பின்னர் கோவிந்த என்பதைக் குறிக்கும் க
வைகுண்ட என்பதைக் குறிக்கும் ண
பவித்ர என்பதைக் குறிக்கும் ப
ஸ்ரக்தா என்பதைக் குறிக்கும் த
இறுதியாக ஜகத் யோநி என்பதை விளக்கும் ஏ என்பதுடன் சேர்ந்த ய
தொடர்ந்து நர என்பதும்
காலத்தைக் குறிக்கும் விசர்க்கமும்
நவ அஷரோ ஹி அயம் மந்த்ரோ காண பத்ய ப்ரகீர்த்தித
ஷோடா ஸம் யோஜ்ய கோவிந்தம் யுகமாத்யைர் கோப நாதி பிர் –63-
அங்க ல்ருப்திர முஷ்ய ஸ்யாந் நம ஸ்வாஹாதி ஸம் யுதா -64-1-
இப்படியாக ஒன்பது எழுத்துக்கள் கொண்ட மந்திரமாக காண பத்ய என்பதும் உள்ளது
ஓம் கூம் கண பத்யே நம
மேலும்
ஓம் என்பது கோவிந்த என்னும் க என்பதுடன் பல வகைகளிலிம் இணைந்து
இறுதியாக ஹ்ருதயம் சிரஸ் சிகை ஆகியவற்றுடன் ஸ்வாஹ என்பதுடன் சேர்கிறது
இவை ஓம் காம் ஹ்ருதயாய நம –
ஓம் கீம் சிரஸே ஸ்வாஹா –
ஓம் க்ரூம் சிகாயை வஷட் -என்பது போன்றவை ஆகும்
ரேப ஸங்காதி தேவாட்யம் ஸோமம் வ்யாபி ஸமந்விதம் –65-2
சதுர்தம் ஸம்ஸ்மரேத் பீஜம் தத் இதம் பல ஸூதந
வைராஜ அநல சங்காட்யம் கோபநம் வ்யாபி ஸம் யுதம் –66-
ஸோம வர்ணம் ஸ்மரேச் சக்ர பஞ்சமம் பரம அத்புதம்
அப்ரமேயாதி தேவாதி யாவத் கருட வர்ணகம் –67-
யதா பாடம் சமுச்சார்ய வாகீஸ் வர்யை ததோ நம
ஏக ஷஷ்ட் யர்ணகோ மந்த்ரோ வாகீஸ் வர்யா அயம் ஸ்ம்ருத –68-
அதன் பின்னர் ர என்பதுடன் ய என்பதும்
ஆதி தேவனுடைய ஆகாய வர்ணமாகிய ஸ என்பது இணைகிறது
இத்துடன் பிந்துவும் இணைந்து மூன்றாவது பீஜம் உண்டாகிறது
இது -ஸ்ரயாம் -என்று ஆகிறது
பல ஸூதநா
அடுத்தது நான்காவது பீஜம் இவ்வாறு உண்டாகிறது
வைராஜம் மற்றும் அக்னியைக் குறிக்கும் ர உடன் ய -கோப நம் என்பதன் ஆதாரமாகிய பிந்து
சோம்னைக் குறிக்கும் வர்ணம் ஆகியவை சேர்ந்து
ஸ்த்ரயாம் -என்பது உண்டாகிறது
பின்னர் அ என்பது தொடங்கி ஷ என்பது முடிய உள்ள ஐந்தாவது பீஜம் உண்டாகிறது
இப்படியாக உள்ள அக்ஷரங்களுடன் அநு ஸ்வார உச்சாரணம் செய்யப்பட்டு
வாகீஸ் வர்யை நம -என்னும் மந்த்ரம் கூறப்படுகிறது
இப்படியாக 61 அக்ஷரங்களுடன் கூடிய வளாக வாகீஸ்வரி உள்ளாள் என்று அறிய வேண்டும்
ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் ஸ்ரயாம் ஸ்தரயாம் –ஆகிய ஐந்து பீஜங்கள் உள்ளன
இவற்றைத் தொடர்ந்து க முதல் ம முடிய உள்ள 25 ஸ்பர்ச எழுத்துக்கள் உள்ளன
அதன் பின்னர் அ தொடங்கி விஸர்க்கம் முடிய உள்ள 16 ஸ்வர எழுத்துக்கள் உள்ளன
அதன் பின்னர் ய தொடங்கி ஷ முடிய உள்ள 9 எழுத்துக்கள் உள்ளன
அதன் பின்னர் வாகீஸ் வர்யை நம என்பதில் 6 எழுத்துக்கள் உள்ளன
இப்படியாக -61- எழுத்துக்கள் -5+25+16+9+6அக்ஷரங்களுடன் கூடியவளாக
வாகீஸ்வரி உள்ளாள் என்று அறிய வேண்டும் –
குர்யாச் சதுர்த பீஜேந கோபநாதி விபேதிநா
அந்தர் ஜாதி யுதாம் ஸம்ய கங்க க்ல்ருப்திம் விசஷண–69-
கோப நாதி விபந்நஸ்ய பீஜஸ் ஆதி அந்தர் யோந்யே ஸேத்
பிரணவம் ச நமஸ் சைவ ததோ ஜாதிம் பிரகல்பயேத் –70-
அதைத் தொடர்ந்து நான்காக உள்ள ஸ்ரயாம் -என்னும் பீஜத்தின் பின்னர்
ஹ்ருதய -என்னும் அமைப்பு உள்ளது
கோபநம் என்பதற்கு ஆதாரமாகத் தனித்தனியே பிரிந்துள்ள -ஸ்ரயாம் -என்னும் பீஜத்தின் தொடக்கத்தில் பிரணவம் வைக்கப்பட்டு
இறுதியில் நம என்பதும் உள்ளது
ஒத்து ஓம் ஸ்ரயாம் ஹ்ருதயாய நம –என்னும் ஹ்ருதய மந்த்ரமாகிறது
இதன் பின்னர் சிரஸ் முதலான மந்த்ரங்கள் உள்ளன-
ப்ரணவ த்ரி தயம் வ்யாபி ஸம்யுத சோத யச்ச க
குரவே அத நம ஸ அயம் ப்ரதிதோ குரு பூஜநே –71-
அடுத்து மூன்று முறை பிரணவம் -எங்கும் வியாபித்து உள்ள பிந்து என்னும் புள்ளி –
க வர்ணத்தின் உகாரம் சேர்ந்து குரவே நம -என்பது உள்ளது
இது குருவைப் பூஜிக்கும் மந்த்ரம் ஆகிறது -ஓம் ஓம் ஓம் கும் குரவே நம
ப்ரணவ த்ரிதயஸ் யாந்தே பவித்ரோ வ்யாபி ஸம்யுத
பரம குரவே நம பிரதிதஸ்து குரோர் குரு –72-
அடுத்து மூன்று முறை பிரணவம்
எங்கும் வியாபித்துள்ள பிந்து -புள்ளி
பவித்ரத்தைக் குறிக்கும் பம் -என்பதன் பின்னர்
பரம குரவே நம -என்பது அமைகிறது
இது குருவின் குருவைப் பூஜிப்பதாகும் -ஓம் ஓம் ஓம் பம் பரம குரவே நம –
ப்ரணவ த்ரித யஸ் யாந்தே வ்யாப்ய ஆநந்த யுதஸ்து
பரமேஷ்டி மேநே அத ச நமோ மந்த்ரோ குரு குரோர் குரு –73-
அடுத்து மூன்று முறை பிரணவம் –
எங்கும் வியாபித்து உள்ள பிந்து புள்ளி
ஆனந்தத்தின் ஆகாரத்தைக் குறிக்கும் ப என்பதுடன்
பின்னர் பரமேஷ்டிநே நம -என்பது அமைகிறது
இதுவே குருவின் குருவைப் பூஜிப்பதாகும்
ஓம் ஓம் ஓம் பாம் பரமேஷ்டிநே நம
தார பஞ்சக மாஹ்ருதாம் வ்யோம ப்ராணோ பரி ந்யசேத்
கால அனலவ் து தததஸ் ஸர்வ லோகேஸ்வரோ பரி –74-
யதா க்ரம உதிதை வர்ணை பிண்டம் க்ருத்வா தத ஸ்வதா
பித்ருப்ய அத நம ஸ அயம் பித்ரு சங்கஸ்ய மந்த்ர ராட் –75-
அடுத்து
ஐந்து முறை பிரணவம்
தொடர்ந்து ஹ
அதன் முன்னாக ட
இவை இரண்டும் வ்யோம ஸூன்யத்தைக் குறிக்கும் பிந்துவுடன் அமைகிறது
அதனைத் தொடர்ந்து காலம் மற்றும் அக்னியைக் குறிக்கும் ம மற்றும் ர அமைகிறது
இது ஸர்வேஸ்வரனைக் குறிக்கும் உ என்பதுடனும்
பிந்துவுடனும் உள்ளது
இந்த வரிசையில் உத்பத்தியாகும் எழுத்துக்களின் பின்னே ஸ்வதா எண்பதுடனும்
தொடர்ந்து பித்ருப்ய நம -என்பது அமைகிறது
இது பித்ரு மந்திரங்களில் உயர்ந்ததாகும்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ட் ஹ்ம் ரூம் ஸ்வதா பித்ருப்ய நம –
ஷட் தாரா ஆதி தேவ அத வ்யோம வான் கேவல அத ஸ
ராமவான் தம நச்சாத சித்தேப்ய அத ததோ நாம –76-
மந்த்ர அயம் இதி ஸித்தா நாம் பகவத் பாவி தாத்ம நாம்
க்ஷேத்ரே ஸாத்யாதி சித்தாந்தான் வித்ந நிர்மத ந ஷமான் –77
அடுத்து ஆறு முறை பிரணவம்
அதன் பின்னர் எங்கும் வியாபித்துள்ள பிந்து புள்ளி –
ஆதிதேவனைக் குறிக்கும் ஆ என்பதுடன்
பிந்து இணைந்து
ஸித்தேப்யோ நம
இது பகவானை ஆத்மாவாகக் கொண்டு பூஜிப்பதாகும்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஆம் ஆதி ஸித்தேப்யோ நம
ப்ராண காலாதி தேவைச்ச வ்யாபி நாபி ச பிண்டகம்
அக்நேய நம இதி ஏவம் யமாய நம இதி அபி –71–
ப்ராணனைக் குறிக்கும் -ஹ
காலத்தைக் குறிக்கும் -ர
ஆதிதேவ ஆகாரத்தைக் குறிப்பதாக புள்ளி பிண்டகம் ஆகியவற்றுடன்
நம என்பது இணைந்து
ஓம் ஹ்ராம் அக்நேய நம மற்றும்
ஓம் ஹ்மாம் யமாய நம –ஆகிய மந்த்ரங்கள் உள்ளன –
நரஸ் ஸ பகவான் வ்யாபீ பிண்டோ நிர்ருதயே நம
யாது தாநேச மந்த்ரஸ் அயம் ஜலசஸ் யாவதாரய
நர என்பதைக் குறிக்கும் ந
பகவானைக் குறிக்கும் ல்ரு
தொடர்ந்து புள்ளி
தொடர்ந்து நிர் ருதயே நம –என்பது அமைகிறது
இது
ஓம் ந்ல்ரும் நிர் ருதயே நம –என்று ஜல அதிபதியான வருண மந்திரமாகும் –
–
ப்ராணம் வருணம் ஆனந்தம் வ்யாபிநம் பிண்டயேத் புத
வருணாய நம பச்சாத் வருணா அயம் மநூத்தம –73-
ப்ராணனைக் குறிக்கும் ஹ
வருணனைக் குறிக்கும் வ
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
தொடர்ந்து புள்ளி
இதன் பின்னர் வருணாய நம -மிகவும் உத்தமமான மந்திரமாகும் -ஓம் ஹ்வாம் வருணாய நம
ப்ராணம் ஸூஷ்மம் தத் ஆனந்தம் வ்யாபிநம் பிண்டயேத் புத
வாயவே நம இதி ஏவம் வாயவீயோ மநூத்தம –74-
ப்ராணனைக் குறிக்கும் ஹ
ஸூஷ்மத்தைக் குறிக்கும் ய
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
தொடர்ந்து புள்ளி -வாயவே நம -ஓம் ஹ்யாம் வாயவே நம
கர்மாம்சு வருண ஆனந்தான் வ்யாபிநா ஸஹ பிண்டயேத்
ஸோமாய நம இதி ஏவம் ஸும்யோ மநு ருதா ஹ்ருத –75
கர்மத்தின் அம்சமான த
வருணனைக் குறிக்கும் வ
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
தொடர்ந்து புள்ளி -ஸோமாய நம -கொண்டாடத்தக்க மந்த்ரம் -ஓம் த்வாம் ஸோமாய நம
ஸூர்யம் ஊர்ஜம் ததா சக்ரிணம் பிண்ட யேத் க்ரமாத்
ஈஸாநாய நம பச்சாத் ஈஸா நஸ்ய மநூத்தமம் –76-
ஸூர்யனைக் குறிக்கும் ஹ
மேற்பாகத்தைக் குறிக்கும் உ
சக்ரியைக் குறிக்கும் ச
தொடர்ந்து புள்ளி -பின்னர் ஈஸா நாய நம -உத்தமமான மந்த்ரம் -ஓம் ஹ்ஸூம் ஈஸா நாய நம
ப்ராணம் வைகுண்டம் ஆனந்தம் வ்யாபி நா பிண்டயேத் க்ரமாத்
அநந்தாய நம பச்சாத் நாக ராஜம் அநுஸ் த்வயம் –77
ப்ராணனைக் குறிக்கும் ஹ
வைகுண்டத்தைக் குறிக்கும் ண
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
தொடர்ந்து புள்ளி -அநந்தாய நம –நாகராஜனுக்கு அமைந்த உத்தமமான மந்த்ரம் -ஓம் ஹ்ணாம் அநந்தாய நம
ப்ராணம் கர்வம் தத் ஆனந்தம் வ்யாபி நா பிண்டயேத் க்ரமாத்
ப்ரஹ்மணே நம இதி ஏவம் ப்ரஹ்மணோ மநுத்தமம் -78
ப்ராணனைக் குறிக்கும் ஹ
கர்வத்தைக் குறிக்கும் க
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
தொடர்ந்து புள்ளி ப்ரஹ்மணே நம -என்பது ப்ரஹ்மத்தின் பொருட்டு அமைந்த
உத்தமமான மந்திரமாகும் -ஓம் ஹ்காம் ப்ரஹ்மணே நம
ஸர்வேஷாம் ப்ரணவ பூர்வம் ஆயுதா நாமதோ ஸ்ருணு
அநலம் ஜந்ம ஹந்தாரம் ப்ரதாநம் அநலோர்ஜகவ் –79
சர்கேண பிண்டயேத் ஸம்ஜ்ஞானம் நமஸ் குசில மந்த்ராட் –80-1
அக்னியைக் குறிக்கும் ர
பிறவிகளைப் போக்குதலைக் குறிக்கும் ஐ
பிரதானத்தைக் குறிக்கும் ம
அக்னியைக் குறிக்கும் ர
மேலே எழும்புதலைக் குறிக்கும் ஊ
முதலிலே பிரணவம்
அதன் பின்னர் குசிலாய நம
இப்படியாக குசில மந்த்ர ராஜ மந்த்ரம் -ஓம் ஜ்ரூம் குசிலாய நம
ஊர்ஜம் விஹாய தத் ஸ்தாநே மாயயா பரி பூஷிதம் –80-2-
ததேவ பிண்டம் ஸம்ஜ்ஞா ச நம ஸக்தி மநுஸ் த்வயம் –81-1-
மேலே கூறப்பட்ட மந்திரத்தில் தொடக்கத்தில் உள்ள ஊ என்ற இடத்தில் மாயயைக் குறிக்கும் ஈ அமைகிறது
அதன் பின்னர் வருகின்ற நம என்பதுடன்
சக்தி மந்த்ரம் உள்ளது -ஓம் ஜ்ரீம் சக்த்யே நம
அகண்ட விக்ரமம் காலம் லோகேஸம் பரமேஸ்வரன் -81-2-
பிண்டீ க்ருத்ய தத ஸம்ஞ்ஞா நமோ தண்டம் அநுஸ் த்வயம் -82-1-
பூர்ணமான வீரத்தைக் குறிக்கும் ட
காலத்தைக் குறிக்கும் ம
லோகத்துக்கு ஈசனாக உள்ளதைக் குறிக்கும் ஊ
பரமேஸ்வரனைக் குறிக்கும் விஸர்க்கம்
இத்துடன் தண்டாய நம என்பது இணைந்து ஓம் ட்மூ தண்டாய நம -என்னும் தண்ட மந்த்ரம் உண்டாகிறது
விஸ்வாப் யாயகரம் காலம் க்லேசம் பரமேஸ்வரம் –82-2
பிண்டீ க்ருத்ய ததஸ் ஸம்ஜ்ஞா நமஸ் கட்கம் அநுஸ் த்வயம் –83-1-
விஸ்வம் உண்டானதைக் குறிக்கும் ல
காலத்தைக் குறிக்கும் ம
லோகத்துக்கு ஈசனாக உள்ளதைக் குறிக்கும் ஊ
பரமேஸ்வரனைக் குறிக்கும் விஸர்க்கம்
இத்துடன் கட்காய நம என்பது இணைந்து ஓம் ட்ரூம் கட்காய நம -என்னும் வாளைக் மந்த்ரம் உண்டாகிறது
சந்த்ரீ சாந்த ஆதி தேவவ் ச ஸ்ருஷ்ட்டி க்ருத பிண்டிதா இமே –83-2-
பாசாய நம இதி ஏவம் பாச மந்த்ர அயம் அத்புத –84-2-
சந்த்ரியைக் குறிக்கும் ட
சாந்தத்தைக் குறிக்கும் ச
ஆதி தேவனைக் குறிக்கும் ஆ
ஸ்ருஷ்ட்டியைக் குறிக்கும் விஸர்க்கம்
இத்துடன் ஓம் பாசாய நம இணைந்து ஓம் ட் சா பாசாய நம -என்னும் பாசத்தைக் குறித்த அற்புதமான மந்த்ரம் உண்டாகிறது
அஜிதோ வருண ஆநந்தவ ஸ்ருஷ்ட்டி க்ருத் பிண்டிதா இமே –84-2-
த்வஜாய நம இதி ஏவம் த்வஜ மந்த்ர உதீரதே –85-1–
வேறே யாராலும் வெல்ல இயலாததைக் குறிக்கும் -ஜ
வருணனைக் குறிக்கும் வ
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
ஸ்ருஷ்ட்டியைக் குறிக்கும் விசர்க்கம்
இத்துடன் த்வஜாய நம -என்பது இணைந்து -ஓம் ஜ்வா த்வஜாய நம -என்னும் வெற்றிக்கொடியைக் குறித்த மந்த்ரம்
பரமாத்மா அநல உத்தாமாந் பிண்டித ஸ்ருஷ்டி க்ருதான் –85-2-
முஸலாய நம பச்சான் மௌஸல அயம் மநூத்தம –86-1-
பரமாத்மாவைக் குறிக்கும் ஹ
அக்னியைக்குறிக்கும் ர
தொடர்ந்து ஊ
ஸ்ருஷ்ட்டியைக் குறிக்கும் விஸர்க்கம்
இத்துடன் முஸலாய நம இணைந்து -ஓம் ஹ்ரு முஸலாய நம என்னும் மந்த்ரம்
அநலம் ஜன்ம ஹந்தாரம் உதயம் ஸ்ருஷ்டி க்ருதம் –86-2
பிண்டீ க்ருத்ய ததஸ் ஸம்ஜ்ஞா நம சூலம் அநுஸ் த்வயம் –87-1-
அக்னியைக் குறிக்கும் ர
ஜென்மத்தை வெட்டுவதைக் குறிக்கும் ஜ
தொடர்ந்து ஊ-விசர்க்கம் -சூலாய நம இணைந்து ஓம் ர்ஜூ சூலாய நம -என்னும் உத்தமமான மந்த்ரம்
கராலம் அநலா ரூட மோத நம் ஸ்ருஷ்ட்டி க்ருதம் –87-2-
பிண்டீ க்ருத்ய தத ஸம்ஜ்ஞா நமஸ் ஸீரம் அநுஸ் த்வயம் –88-1-
அக்னியைக் குறிக்கும் ர -தொடர்ந்து க -ஊ-விஸர்க்கம் -ஸி ராய நம சேர்ந்து
ஓம் க்ரோ ஸி ராய நம -என்னும் உத்தமமான மந்த்ரம் உண்டாகிறது
வருணம் ச நரம் சைவ ஸ்ருஷ்டி க்ருதம் –88-2-
பிண்டீ க்ருத்ய தத் ஸம்ஜ்ஞா நம பத்மம் அநு ஸ்தவம் –89-1–
வருணனைக் குறிக்கும் வ -நரனைக் குறிக்கும் ந -ஆ -விஸர்க்கம் -பத்மாய நம இணைந்து
ஓம் ந்வா பத்மாய நம -உத்தமமான மந்த்ரம் உண்டாகிறது
ஸர்வேஷாம் ப்ரணவ பூர்வோ விஷ்வக் சேந மநும் ஸ்ருணு –99-2-
அநல ப்ராண லோகேஸாந் வ்யாபிநா பிண்டியேத் க்ரமான்
வருணம் பூதாம் சைவ வ்யாபிநா பிண்டியேத் க்ரமான்–100-
பிண்டி அயம் ஜ்ஞாநத பஸ்ஸாத் விஷ்வக் ஸேநஸ்ய மந்த்ர ராட்
ப்ரணவாதி ஸ்த்வயம் மந்த்ர ஸர்வார்த்த க்ருது தீரித–101
இதுவரை ப்ரணவத்தை முதலில் கொண்ட மந்த்ரங்களைக் கூறினேன்
இனி விஷ்வக் சேனர் குறித்த மந்த்ரங்களைக் கேட்ப்பாயாக
அக்னியைக் குறிக்கும் -ர –ப்ரணவத்தைக் குறிக்கும் ஹ -தொடர்ந்து உ -புள்ளி –
அடுத்து வருணனைக் குறிக்கும் வ பூதரமாகிய ஒவ் -புள்ளி -ஜ்ஞானதாய நம என்பது
மந்திரங்களில் அரசனான விஷ்வக் சேன மந்திரமாகும்
இந்த மந்த்ரம் அனைத்துப் பொருள்களையும் அளிக்க வல்லதாகும்
இதன் முழு வடிவம் -ஓம் ர்ஹும் வவ்ம் ஜ்ஞானதாய நம -என்பதாகும்
ஊர்ஜ ஹீநம் தும் யத் பூர்வம் தேந ஆனந்தாதி யோகிநா
அங்க க்லுப்தி அமுஷ்ய ஸ்யாஜ்ஜாதி முத்ரா ஸமந்விதா –102-
இதற்கு முன்பாக ஹ்ரூம் என்பது பற்றி நான் உரைத்தேன்
அதில் உள்ள ஊ என்பது ஹ என்பதுடன் இணைந்து ஆ -ஆனந்தத்தைக் குறிக்கும்
இது விஷ்வக் சேனருடைய அங்க ந்யாஸ மந்திரமாகும்
இதன் முழு வடிவம் -ஓம் ஹ்ராம் ஹ்ருதாய நம -என்பதாகும்
ஸோமம் வருணம் ஈகாரம் வ்யாபிநா பிண்ட யேத் க்ரமாத்
ஸூரப்யை நம இதி ஏவம் தார பூர்வோ மனுஸ் த்வயம் –103
ஸூ ரப்யாஸ் கதிதஸ் ஸர்வ போக ஸம் பூர்ணார்த்தக –104-1
சோமனைக் குறிக்கும் ஸ -வருணனைக் குறிக்கும் வ -தொடர்ந்து ஈ -புள்ளி -தொடக்கத்தில் ஓம் -இறுதியில் ஸூரப்யை நம என்பது ஸூரபி மந்திரமாகும்
இதன் முழு வடிவம் -ஓம் ஹ்ராம் ஸூ ரப்யை நம
இந்த ஸூரபி மந்த்ரம் அனைத்து போகங்களையும் பூர்ணமாக அளிக்கும் –
ப்ரணவ த்வித யஸ் யாந்தே தாரிகா த்வயம் உத்தரேத் –104-2
தத பரம தாமா ச அவஸ்திதே மத் அநுக்ரஹா
அபியோ கோத்யதே ச இஹ ததைவா வதரேதி ச –105
இஹம் அபிமத ஸப்தம் ச ஸித்தேதி இதி ச த்ரயம்
ததோ மந்த்ர சரீரே ச தாரஸ் தரா நமோ நம -106-
பஞ்ச ஸத் வாரிம் சதர்ணோ மந்த்ர ஆவாஹ நார்த்தக –107-1-
இரண்டு பிராணவங்கள் தொடர்ந்து இரண்டு தாரக மந்த்ரங்கள் -அதனைத் தொடர்ந்து
பரம தாமா ச அவஸ்திதே மத் அநுக்ரஹ–அபியோ கோத்யதே ச –இஹ அவதரேஹ அபிமத ஸித்ததே மந்த்ர சரீரே –என்பதும்
அதனைத் தொடர்ந்து ப்ரணவமும் -அதன் பின்னர் ஹ்ரீம் நமோ நம என்பதும் கூறப்படுகிறது
இது 45 அக்ஷரங்கள் கொண்ட ஆவாஹந மந்திரமாகும்
இதன் முழு வடிவம்
ஓம் ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் பரம தாமா ச அவஸ்திதே மத் அநுக்ரஹ–அபியோ கோத்யதே ச –இஹ அவதரேஹ அபிமத ஸித்ததே மந்த்ர சரீரே –ஹ்ரீம் நமோ நம -என்பதாகும்
ப்ரணவ தாரிகா ப்ராணஸ்த்ரய ஸவ்யாபி நஸ் ததஸ்–107-2-
தஸ் த்ரச்ச தாரிகா பச்சாத் இதம் ஸப்தம் த்ரி உச்ச ரேத்
ஸ்ருணு வஹ்னி ஜாயா ச போக தானம் அநுஸ் த்வயம் –108-
ஓம் என்னும் பிரணவம் -அதனைத் தொடர்ந்து ஹ்ரீம் என்னும் தாரிக மந்த்ரம் -தொடர்ந்து பிராணனைக் குறிக்கும் ஹ ஹ ஹ -இவற்றில் புள்ளிகள்
தொடர்ந்து மீண்டும் மூன்று தாரிக மந்த்ரம் ஹ்ரீம் -தொடர்ந்து ஹிதம் ஹிதம் ஹிதம் -தொடர்ந்து அர்க்யம் க்ரஹாண -அமைகிறது
இது அர்க்க்ய மந்திரமாகும் -இதன் முழு வடிவம்
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹம் ஹம் ஹம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹிதம் ஹிதம் ஹிதம் அர்க்யம் க்ரஹாண ஸ்வாஹா -என்பதாகும்
ஓங்காரம் உத்தரேத் பூர்வம் விஷ்ணு வ்யோம அந்விதம் ததஸ்
தாரிகாம் உத்தரேத் பச்சாத் அபயோ விஷ்ணும் ததாவிதம்–109-
ததோ வ்யோம அந்விதம் ப்ராணம் ஸோம நாம ஸமந்விதம்
பரே ச பரமேச ச ப்ரஸீத ப்ரணவம் ததஸ் –110-
தாரிகா ச நமஸ் அந்தே ப்ரஸாத நமஸ் த்வயம் –111-1
முதல் ஓம் -தொடர்ந்து வ்யோமம் ஆகாசம் சூன்யம் ஆகிய இரண்டும் இணைந்த விஷ்ணுவைக் குறிக்கும் ஈ
அதனைத் தொடர்ந்து தாரிகையைக் குறிக்கும் ஹ்ரீம் -அதன் பின்னர் மீண்டும் விஷ்ணுவைக் குறிக்கும் ஈ
அதன் பின்னர் பிராணனைக் குறிக்கும் ஹம் -சோம்னிக் குறிக்கும் ஸ அதன் பின்னர் பரே பரமேச ப்ரஸீத
அதன் பின்னர் ஓம் -ஹ்ரீம் -நம -சிறந்த ப்ரஸாத மந்திரமாகும்
இதன் முழு வடிவம்
ஓம் ஈம் ஹ்ரீம் ஈம் ஹம்ஸ பரே பரமேச ப்ரஸீத ஓம் ஹ்ரீம் நம -என்பதாகும் –
ப்ரணவ தாரிகா சைவ ததோ பகவத் இதி ச –111-2-
மந்த்ர மூர்த்தே அத ஸ்வ பதம் ஸமா சாதய தத் த்வயம்
க்ஷமஸ்வ இதி த்விருச்சார்ய தாரஸ் தாரா நமோ நம –112-
முதலில் ப்ரவணமாகிய ஓம் -பின் தாரிகையைக் குறிக்கும் ஹ்ரீம் -அதன் பின்னர்
பகவதி மந்த்ர மூர்த்தே ஸ்வ பதம் ஸமா சாதய ஸமா சாதய-அதன் பின்னர்
இரண்டு முறை க்ஷமஸ்வ -ஓம் -ஹ்ரீம் நமோ நம -இது விஸர்ஜ மந்திரமாகும்
இதன் முழு வடிவம்
ஓம் ஹ்ரீம் பகவதி மந்த்ர மூர்த்தே ஸ்வ பதம் ஸமா சாதய ஸமா சாதய க்ஷமஸ்வ க்ஷமஸ்வ ஓம் ஹ்ரீம் நமோ நம –என்பதாகும்
வை சர்ஜ நம நுஸ் ஸ அயம் இதி ஏதே மந்த்ர நாயகா
கதிதா ஸூர சார்தூல ஸர்வ பாப மல அபஹா –113-
இந்திரனே இப்படியாக இந்த மந்த்ரங்களுடைய நாயகியாக உள்ள நான் அனைத்து மந்திரங்களையும் கூறினேன்
இவை அனைத்து தோஷங்களையும் பாபங்களையும் அபஹரிக்கும்
அபக்தாநாம் ச யே ந ஏவ ப்ரதேயோ க்ரூர கர்மணாம்
நாஸ்திகா நாம் அஸாதுநாம் தூர்தா நாம் வஞ்ச ஜூஷாம் –114
குரூரமான கர்மம் கொண்டவர்கள் -நாஸ்திகர்கள் -ஸாதுக்கள் அல்லாதவர்கள் -மற்றவர்களை தூஷிப்பவர்கள்
வஞ்சகர்கள் ஆகிய பலரும் பக்தர்கள் அல்லாதவர்களே ஆவர் -அவர்களுக்கு இதுவரை கூறியதை உபதேசம் செய்யக்கூடாது
பக்தாநாம் ஆஸ்திகா நாம் ச ஸ்ரத்தா ஸம்ய சேவிநாம்
மதீய க்ரம ஸக்தா நாம் ஸம்ஸ்க்ருதா நாம் விசேஷத –115
தத்வத ச உப ஸந்தா நாம் த்ருட ஸ்ரத்தா அவலம்பி நாம்
வைஷ்ணவா நாம் இதம் வாஸ்யம் அவாஸ்யம் இதரேஷு –116-
பக்தர்களாக உள்ளவர்கள் ஆஸ்திகர்களாகவும் வேதங்களை சிரத்தையுடன் கைக் கொள்ளுபவர்களாயும் வணங்கியவர்களாயும் உள்ளனர்
அவர்களுக்கு என் மீது பக்தியானது நிரந்தரமாக உள்ளது -அவர்கள் எப்போதும் என்னை சரியான முறையில் ஆராதிக்கும் விஷயங்களை அறிந்தபடி உள்ளனர்
சாஸ்திரங்களில் கூறப்பட்ட விதங்களில் எனது திருவடிகளை ஆடுகிறார்கள்
உறுதியும் ஸ்ரத்தையும் சேர்ந்துள்ள அவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று கூறப்படுகிறார்கள்
மற்றவர்கள் அவ்விதம் கூறப்படுகிறவர்கள் அல்லர்
அந்யதா வக்தி யோ மோஹாத் லோபாத் காமாத் அதாபி வா
அஞ்ஞாநாத் பால பாவாத் சா ஸ யாதி நரகான் பஹுன் –117–
மற்றவர்கள் மயக்கம் சுய நலம் காமம் அஞ்ஞானம் போன்ற பல தோஷங்களை அடைந்தவர்களாக
பலவிதமான நரகங்களிலும் புகுகிறார்கள்
தஸ்மாதா லஷ்யா வை ஸர்வம் குண ஜாதம் யதோதிதம்
ப்ரப்ரூயாத் உப சன்னாயா தர்மேண ந்யாய தஸ்ததா –118-
மற்ற சிஷ்யர்களுடைய குணங்களைக் குறித்து நான் கூறுகிறேன்
அவர்களுக்கு ஞானத்தின் மீது விருப்பம் -சரணம் புகும் பக்தி தர்ம நியாய வழியில் நிற்பது போன்றவை உள்ளன
ப்ரப்ரூ யாத்யோ ஹி அதர்மேண யோ வாதர்மேண ப்ருச்சதி
தாவுபவ் நரகம் கோரம் ருச்சத காலம க்ஷயம் –119-
சிலர் அதர்ம மந்திரங்களையும் அல்லது அதர்ம மார்க்கங்களையும் கைக் கொள்ளக் கூடும்
அவர்கள் காலம் முடிந்தவுடன் நரகம் புகுகிறார்கள்
ப்ருதிவீம் ரத்ன ஸம் பூர்ணம் தத்யாத் யத்யபி வாஸவ
நைவ தேயம் ஹி அபக்தாய நாப ரீக்ஷித சீலேந –120-
இந்திரனே இந்த உலகத்தில் உள்ள பக்தி அற்றவர்களுக்கு அவர்களைச் சோதிக்காமல் இந்த மந்த்ரங்களை உபதேசம் செய்தல் கூடாது
இதி மே பவதோ பக்திர் மயி சக்ர மஹீ யஸீ
தத்த்வதச் சோப ஸத் ரஸ்ய மயேஹ ப்ரீய மாணாய –121-
அங்க உப அங்காதி மந்த்ராணாம் மந்த்ர கோச ப்ரகாசித
முத்ரா கோசம் இதாநீம் த்வம் கதந்த்யா மே நிஸாமய –122-
இந்திரனே இதுவரை உனக்கு நான் மிகுந்த பக்தி தத்வம் உண்மையான ரூபம் உண்மையான அறிவதில் உள்ள ஆர்வத்தின் தன்மை
என்னைச் சரணம் புகுதல் போன்ற பலவற்றையும் கூறினேன் -அடுத்து அங்க உப அங்கத்துடன் கூடிய மந்த்ரங்களைக் கூற உள்ளேன்
—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply