நான்கு யுகங்கள் —

புராணங்களின் படி யுகங்கள் நான்கு.
கிருத யுகம்,
திரேதா யுகம்,
துவாபர யுகம்
மற்றும் கலியுகம்.
இந்த நான்கு யுகங்கள் சேர்த்து ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு யுகத்திலும் வாழ்பவர்களின் தோற்றமும்,குண நலன்களும் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

கிருத யுகம் – அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரிாக 9 அடி உயரமும், 1 லட்சம் ஆண்டுகள் வாழலாம்–இந்த யுகமானது 17,28,000 வருடங்கள் கொண்டது.

திரேதா யுகம் – நான்கில், மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள்.–மனிதர்கள் சராசரியாக 8 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10000 ஆண்டுகள் வாழலாம்.-இராமர் திரேதா யுகத்தில் திரு அவதரித்தார்

துவாபர யுகம் – சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள்.
மனிதர்கள் சராசரியாக 7 அடி உயரம் உள்ளவர்களாகவும், 1000 ஆண்டுகள் வாழலாம்.
கிருட்டிணர் மற்றும் பலராமர் ஆகியோர் துவாபர யுகத்தில்  திரு அவதரித்தார்கள் -.

கலியுகம் – நான்கில், ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள்.
மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 100 ஆண்டுகள் வாழலாம்.

இந்த யுகத்தில் மக்கள் அவரவர்தன் சுயநலத்திற்காக அதர்மவழியில் சென்று பாவங்களை செய்வதால்
பகை குணம் மிகுந்தும் காணப்படுவதால் வாழ்வதற்கே சிரமப்படுவர்.
இதன் காரணமாக திருமால் கல்கி அவதாரம் எடுத்து மனிதர்களை கொன்று குவித்து மீண்டும் இந்த உலகில்
சத்தியத்தினை நிலைநாட்டும் யுகமென்பதால் இது சத்திய யுகம் என்று கூறப்படுகின்றது.’
ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன.
இவற்றுட் சிறிய யுகமான கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது.
துவாபர யுகம் கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது.
இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்று மடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன.
கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.

பகுப்பு முறை
கால பிரிவு அளவு முறை
15 நுண் வினாடிகள் 1 காட்டை (3.2 வினாடிகள்)
30 காட்டை 1 கலை (96 வினாடிகள்)
30 கலை 1 முகூா்த்தம் (48 நிமிடங்கள்)
30 முகூா்த்தம் 1 அகோரத்திரம் ( நாள் )
15 அகோரத்திரம் 1 பட்சம்
2 பட்சம் 1 மாதம்
6 மாதம் 1 அயனம்
2 அயனம் 1 ஆண்டு

இவ்வாறாக காலத்தை நுண்பிரிவாகவும்,

பெரும் பிரிவு
  1. கிருத யுகம் – 17,28,000 ஆண்டுகள்
  2. திரேதா யுகம் – 12,96,000 ஆண்டுகள்
  3. துவாபர யுகம் – 8,64,000 ஆண்டுகள்
  4. கலியுகம் – 4,32,000 ஆண்டுகள் [ கலியுகம் 3102 BCE இல் தொடங்கியதாக நம்பப்படுகிறது ]

இந்த 4 யுகங்களும் சோ்ந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுா்யுகம்.
12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம்.
14 மன்வந்திரங்களைக் கொண்டது ஒரு கல்பம்.
இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன.

கல்பங்கள்
  1. வாமதேவ கல்பம்
  2. சுவேத வராக கல்பம்
  3. நீல லோகித கல்பம்
  4. ரந்தர கல்பம்
  5. ரெளரவ கல்பம்
  6. தேவ கல்பம்
  7. விரக கிருட்டிண கல்பம்
  8. கந்தற்ப கல்பம்
  9. சத்திய கல்பம்
  10. ஈசான கல்பம்
  11. தமம் கல்பம்
  12. சாரசுவத கல்பம்
  13. உதான கல்பம்
  14. காருட கல்பம்
  15. கெளரம கல்பம்
  16. நரசிம்ம கல்பம்
  17. சமான கல்பம்
  18. ஆக்நேய கல்பம்
  19. சோம கல்பம்
  20. மானவ கல்பம்
  21. தட்புருச கல்பம்
  22. வைகுண்ட கல்பம்
  23. லெச்சுமி கல்பம்
  24. சாவித்ரி கல்பம்
  25. கோர கல்பம்
  26. வராக கல்பம்
  27. வைராச கல்பம்
  28. கெளரி கல்பம்
  29. மகோத்வர கல்பம்
  30. பிதிா் கல்பம்

தற்போது நடந்து கொண்டிருப்பது சுவேத வராக கல்பம் ஆகும்.

மேற்கண்ட நான்கு யுகங்களும் இணைந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுர் யுகம் என்று பார்த்தோம்.
இப்படி 71 மகா யுகங்கள் கடந்தால் ஒரு மனுவந்தரம் என்று பெயர்.
மொத்தம் 14 மனுவந்தரங்கள் உள்ளன.
இப்போது நாம் இருப்பது 7-வது மனுவந்தரமான ‘வைவசுவதம்’ ஆகும்
சரி கல்ப காலம் என்பதைப் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம்.
ஒரு கல்ப காலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும்.
பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பு நிகழ்வும் இருக்காது.
எனவே பிரம்மனின் பகல் மட்டும் பிரம்மனின் ஒரு நாள் ஆகும்.
எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு.
பிரம்மனின் கல்ப காலத்தில் 14 மனுவந்தரங்கள் அடங்கும்.
ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒரு மனு, ஒரு இந்திரன் வீதம், 14 மனுக்கள் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள்.
(இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே.
ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார்.
இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).

2 மனுவந்தரத்திற்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும்.
இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”.
இந்த காலத்தின் அளவு, நான்கு கலியுகத்தின் காலம் அடங்கியது ஆகும்.
அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடங்கள்.
இதே போல் 14 மனுவந்தரத்திற்கு பின்பும் மீண்டும் ஒரு பெரிய இடைவெளி இருக்கும்.
அதுவே பிரம்மனின் இரவு ஆகும்.
பிரம்மனின் ஒரு பகல் என்பது 71 மகாயுகங்கள் X 14 மன்வந்தரங்கள் = 994 மகா யுகங்கள்
மற்றும் 71 X 15 ஸந்தியா காலங்கள் = 2 கோடியே 59 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். அதாவது 6 மகா யுகங்கள்.

ஆக பிரம்மனின் ஒரு பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர் யுகங்கள்).
இதையே பிரம்மனின் நாள் என்றும், கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர்.
இப்படி 360 கல்ப காலம் என்பது பிரம்மனுக்கு ஒரு வருடம் ஆகும்.
பிரம்மனின் 100 வருடம், ஒரு பிரம்மனின் ஆயுள்.
ஒரு பிரம்மனின் ஆயுள் முடியும்போது, பெரிய பிரளயம் ஏற்பட்டு, அவரும் கூட ஸ்ரீமன் நாராயணனின் நாபி கமலத்தில் ஒடுங்குவார்.
தற்போதைய பிரம்மனின் ஆயுள் சரியாக 1,97,29,44,456 மனித வருடங்கள்.
அதாவது தற்போது பிரம்மனின் வயது 51.
பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அனைத்தும் ஒடுங்கும் தருவாய் வர, இன்னும் 49 பிரம்ம ஆண்டுகள் பாக்கி யுள்ளது.

அத்ரி ஜமதக்னி பங்க்திரத வ ஸூ நந்த ஸூ நுவானுடைய யுக வர்ண க்ரம அவதாரமோ –
வ்யாசாதி வத் ஆவேசமோ –
மூதுவர் கரை கண்டோர் சீரியரிலே ஒருவரோ –
முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ
என்று சங்கிப்பர்கள்
தத்தாரியன் பரசுராமன்-பிராமணர் -கிருத யுகம்
சக்கரவர்த்தி திருமகன் -ஷத்ரியர் -த்ரேதா யுகம்
ஸ்ரீ கிருஷ்ணன் -வைஸ்ய-த்வாபர யுகம்
இவர் -கலி யுகம் -தமிழ் வேதத்தை வெளியிட்டு அருள
நித்யரோ முக்தரோ ச்வேததீப வாசிகளோ
சம்சாரி – ஸூ க்ருத பலமாக திருந்தினவரோ
நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே -என்பர் சம்ப்ரதாயத்தில்
திரு வநந்த ஆழ்வான் -முன்பே திருப் புளிய மரமாக
மாறன்
சடகோபன்
வகுளாபரணர்
பராங்குசர்
நம்மாழ்வார் -நம் சடகோபனை பாடினாயோ என்று விஞ்சிய ஆதாரத்தால் நம் பெருமாள் கேட்டதால் –
பதினாறு கலைகளும் நிரம்பிய பூர்ண சந்தரன் போலே
செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்
அசித்தாகிய சரீரத்தில் ஆத்மா சம்பந்தித்தால் –
அதை சார்ந்த சுக துக்கங்களை அனுபவித்துக் கொண்டு
அதனையே ஆஸ்ரயித்து இருக்கும்
சிறியதன் வயிற்றில் பெரியது பிறந்தால்
ஆதாமில் ஞானம் உண்டானால்
அணு ரூபம் ஆத்மாவில் விபு ரூபம் ஞானம்
அகார வாச்யமான பர ப்ரஹ்மத்தை அனுபவித்து அதன் பக்கலிலே பற்றும்-என்றுமாம்

முந்திய யுகங்களில் த்யான யாக அர்ச்சனங்கள் போலே
ஸ்தோத்ர மாத்ரத்தில் கலி யுகம் என்பதால்
மதுரகவி ஆழ்வார் கைத் தாளம் எடுத்து பண் இசையோடு
தேவில் சிறந்த திருமாலுக்குத் தக்க தெய்வக் கவிஞர்
பாவில் சிறந்த திருவாய் மொழி பகர் பண்டிதர்

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading