ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — நான்காம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்

—————————————————————-

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரம பததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

———————————————————————————————————————————-

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்-இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் –

முன் பாதத்தில்
ஸ்தூல தேகத்தில் இருக்கும் போது பாபங்கள் அஸ்லேஷமும் விநாசமும் வித்யா பலமாகக் காட்டி
இரண்டாம் பாதத்தில்
அர்ச்சிராதி கதிக்கு உபக்ரமாயும்
அழியும் நிலையில் உள்ள ஸ்தூல தேகத்தில் இருந்து உத் க்ராந்தியை -புறப்பாட்டை -முடிவாகவும் கொண்ட
வித்யா பலத்தைச் சிந்திக்கிறார் என்று பாத சங்கதி –

கதிக்குத் தொடக்கமான உத் கிராந்தி கூறப்படுவதால்
அதிகரண சங்கதி

ஆமாம்
வைராக்ய பாதத்தில் ஜீவனின் ஜாக்ரத் தசை முதலியன நிரூபிக்கப் பட்டமையால்
அத்துடனேயே இந்திரியாதிகளின் குழப்ப நிலையான மரணம் பற்றியும் பேச வேண்டி இருக்க
இங்கு தனியே யது பற்றிச் சொல்வதன் கருத்து யாது என் எனில்

ப்ரஹ்ம வித்தின் உத் க்ராந்தியில் மூர்த்தன்ய நாடி மூலமாக கமனம் சொல்வதற்காக
வைராக்ய பாதத்தில் பொதுவாக உத் க்ரமணத்தைக் கூறி
இங்கு விசேஷத்தைக் கூறியபடி யாம் –

முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –

11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–

————————————————————————————————————————

அதிகரணம் -1-வாகாதி கரணம்–2 ஸூத்ரங்கள் –
மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -2- மநோதிகரணம் – 1 ஸூத்ரம்-
மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -1 ஸூத்ரம்–
பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -4-பூதாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -7 ஸூத்ரங்கள்-
வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும்
மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு முன்பே பொதுவானது என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –1 ஸூத்ரம்-
தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–1 ஸூத்ரம் –
பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை

அதிகரணம் -8-ததோகோதி கரணம் –1 ஸூத்ரம்-
மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன் சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் –
சூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -10-நிசாதிகரணம் -1 ஸூத்ரம் –
இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி பிரமத்தை அடைவான் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் –ஸூத்ரங்கள்–
தஷிணாயநத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது

——————————————————————————————————

அதிகரணம் -162-வாகாதி கரணம் -4-2-1-

உத் க்ராந்தத்தைப் பற்றிய ஸ்ருதி வாக் இந்த்ரி யத்துக்கு மனஸ்ஸில் லயத்தைச் சொல்லுகிறதா –
என்று சம்சயம்
வாக்கானது மனத்தை மூலமாகக் கொள்ளாமையால் ப்ரக்ருதியை விட்டு வேறு ஒன்றில்
எதற்கும் லயம் கூடாமையாலே
வாக் வ்ருத்தி மாத்ரத்தின் லயத்தை இது சொல்கிறது
என்று பூர்வ பக்ஷம்
இதனை நிராகரிக்கிறார் –

மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது
என்று நிரூபிக்கப் படுகிறது

497- வாக் மனஸி தர்சநாத் சப்தாத் ச –4-2-1-

காண்கையாலும் வேதத்தில் ஓதப்படுவதாலும் –
சாந்தோக்யம் -6-8-6-அஸ்ய சோம்ய புருஷஸ்ய ப்ரயத வாங்மனஸி சம்பத்யதே மன ப்ராணே
ப்ராணா தேஜஸி தேஜ ப்ரச்யாம் தேவதாயாம் -என்று
உடலை விட்டுக் கிளம்பும் உபாசகனின் வாக்கு இந்த்ரியம் மனதை அடைகிறது –
மனம் பிராணனிலும் -பிராணன் தேஜச்சிலும்-தேஜஸ் உயர்ந்த வஸ்துவிலும் சேர்கின்றன -என்றது

இந்த்ரியமா– செயல்பாடா– சங்கை

பூர்வ பஷி செயல்பாடு என்பர் –
செயல்பாட்டுக்கு மனம் பிரதான கார்யம் என்பதால் –

அப்படி அல்ல
ஸ்வரூபமே இணைகிறது –
வாக் செயல்பாட்டை இழந்த பின்னரும் மனம் தொடர்ந்து இயங்குவதைக் காண்கிறோம்

பூர்வ பஷி வாதம் போலே
மனம் வாக் இந்த்ரிய காரணம் அல்ல
எனவே லயிக்கிறது எனபது பொருந்தாது –
சுருதி வாக்யத்தின் படி -சென்று சேருகிறது என்றே கொள்ள வேண்டும் –

வாக் மனஸி -வாக் இந்திரியம் மனஸ்ஸில் லயிக்கிறது
தர்சநாத் -வாக் இந்திரியம் ஒய்வு அடைகையில் மனத்தில் செயல் காணப்படுவதால் என்றபடி
வாக் வ்ருத்தி அனைத்துக்கும் லயம் கூறினாலும் இது பொருந்தும் என்றால்
அது அல்ல
சப்தாத் ச-வாங் மனஸி ஸம்பத்தே -என்று வாக் இந்த்ரியதிற்கே மனதில் லயத்தைக் கூறும் ஸப்தத்தால் என்றபடி –
வாக் வ்ருத்திக்கே லயம் என்ற பஷத்திலோ அதற்கான ஸப்தம் இல்லாமையாலே
அகாரணத்தில் ஸம்பத்தி -லயம் – வராது என்ற தோஷம் சமமாகையால் அந்த பக்ஷம் கூடாது
ஸம்பத்தி என்பது சம்யோகத்தைக் குறிப்பதால் அகாரணத்தில் லயத்தைக் கூறவில்லை
ஆதலின் விரோதம் இல்லை என்று கருத்து –

————————————————————————————————————————————

499- அத ஏவ சர்வாணி அநு-4-2-1-

எக் காரணத்தால் வாக் இந்த்ரியத்திற்கு மனசில் சம்யோகம் மட்டும் சம்பத்தில் என்ற சொல்லால் கூறப்பட்டதோ
லயம் என்று கூறப்பட வில்லையே
அதே காரணத்தால் அது சர்வ இந்திரியங்களும் வாக்கை அனுசரித்து
மனசில் சம்பந்திக்கின்றன என்னும் அர்த்தத்தைச் சொல்லும் –
ஸ்ருதி வசனம் இதுக்குப் பொருந்துகிறது என்று கருத்து

ப்ரசன உபநிஷத் -3-9-தஸ்மாத் உபசாந்தா தேஜா புனர்பவம் இந்த்ரியை மனஸி சம்பத்ய மானை–
உஷ்ணம் குறைந்து மனதுடன் இந்த்ரியங்கள் இணைந்து மறு பிறவி அடைகிறான் -என்கிறது

—————————————————————————————-

அதிகரணம் -163- மநோதிகரணம் -2-4-2-

வாங் மனஸி சம்பத்யயே -வாக் ப்ராணே -என்கிற ஸ்ருதி க்ரமத்தை அனுசரித்து சிந்திப்பதால்
சங்கதி வெளிப்படையாய் உள்ளது

மன ப்ராணே -என்னும் ஸ்ருதியில் -பிராண ஸப்தத்தால்-
அப்பு -நீர் -சொல்லப்படுகிறதா -பிராணன் தானா
என்று சம்சயம்

பிராணன் மனத்தில் இருந்து நேரில் இல்லாத போதிலும்
அன்ன மயம் ஹி சோம்ய மன -என்று
மனதிற்கு அன்ன விகாரத்வம் ஸ்ருதமாகையால்
அன்னம் என்பதன் பொருளான பிருத்விக்கு ஜலம் காரணமாகையாலே
ஆபோ மய பிராணா -என்னும் ஸ்ருதியால் ப்ராணனுக்கு ஜலமயத்வம் தோன்றுவதாலும்
பரம்பரையாக ப்ராணனுக்கு ப்ரக்ருதியான ஜலத்தில் பரம்பரையாகவே மனசின் லயம் யுக்தமாகையால்
பிராணன் என்ற சொல்லால் ஜலம் அப்பு சொல்லப்படுகிறது
என்று பூர்வ பக்ஷம்
இத்தை நிரஸிக்கிறார் –

மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

500-தத் மன பிராணா உத்தராத் —4-2-3-

சாந்தோக்யம் -6-8-6- மன ப்ராணே சம்பத்யதே -என்பதால்
முழுமையாக சேர்கின்றன செயல்பாடுகள் மட்டும் அல்ல –

இதற்கு பூர்வ பஷி –
மனம் உபாதான காரணமாக உள்ள பிருத்வீ தத்தவத்தின் மூலமாக
பிராணனின் உபதானக் காரணமான ஜல தத்துவத்தில் லயிக்கிறது என்று
பொருள் கொள்ள வேண்டும் என்பர்

சாந்தோக்யம் –
6-5-4-அன்ன மயம் ஹி சோம்ய மன –
மனம் அன்னத்தால் ஆனது -என்றும்

6-2-4-தா அன்னம ஸ்ருஜந்த–
அன்னத்தை நீர் உண்டாக்கியது –

6-4-4-ஆபோ மய ப்ராணா –
ஜல தத்வத்தில் இருந்து பிராணன் உண்டானது என்பர்

சித்தாந்தம்
மனம் அன்னத்தால் போஷிக்கப் படுகிறது –
பிராணன் ஜலத்தால் போஷிக்கப் படுகிறது என்று
வளர்க்கும் பொருள் அன்றி காரணப் பொருள் அல்ல

மனம் -அஹங்காரத்தின் மாறுபாடு என்றும்
பிராணன் ஆகாசத்தின் மாறுபாடு என்றும் சொல்வர்

ஆக
மனம் பிராணனுடன் சேர்க்கிறது என்பதே கருத்து –

தத் மன பிராணா-ஸர்வ இந்த்ரியங்களுடன் கூடிய மனனமானது ப்ராணனுடன் ஸம்யோகிக்கிறது
உத்தராத்-மன ப்ராணே என்ற அடுத்த வாக்கியமும்
முக்கிய ப்ராணனுடன் மனத்தின் சம்பந்தத்தைச் சொல்வதால் என்றபடி

இங்கு
அன்ன மயம் ஹி சோம்ய மன
ஆபோ மய ப்ராணா – என்ற ஸ்ருதியால்
மன ப்ராணன்களுக்கு மனமே ப்ரக்ருதி என்பதும் அப்பே ப்ரக்ருதி என்பதும் இவை சொல்லப்பட வில்லை
ஏன் எனில்
மனஸ்ஸு அஹங்காரத்தில் இருந்து தோன்றியதாலாலும்
அன்னத்தால் மனத்திற்குத் திருப்தியும்
ஜலத்தால் பிராணனுக்குத் திருப்தியும்
சொல்லப்படுகின்றன –
ஆகையால் முக்ய பிராணன் இடத்தில் மனஸ்ஸு சமயோகிக்கின்றது என்று தேறிற்று –

————————————————————————–

அதிகரணம் -164- அத்யஷாதி கரணம் –4-2-3-

மன ப்ராணே -ப்ராண தேஜஸி -என்ற ஸ்ருதி க்ரமத்தை அனுசரித்து சிந்திப்பதால்
சங்கதி ஸ்பஷ்டம்

பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –

501-ஸ அத்யஷே ததுபக மாதிப்ய —4-2-4-

ஜீவனுடன் பிராணன் ஒதுங்குகிறது –
சாந்தோக்யம் -6-8-6-பிராணஸ் தேஜஸி-என்பதால்
தேஜஸ்ஸில் ஒதுங்கும்
என்பர் பூர்வ பஷி –

அப்படி அல்ல

ப்ருஹத் -4-3-38-ஏவமேவ இமம் ஆத்மானம் அந்தகாலே சர்வே ப்ராணா அபி சமா யாந்தி -என்று
அரசனை வேலையாட்கள் பின் தொடர்வது போலே அனைத்து பிரானங்களும் ஜீவனை பின் தொடர்கின்றன –

இது போலே ப்ருஹத் -4-4-2-தம் உத்க்ராமந்தம் பிராண அநூதக்ரமாதி -என்று
அந்திம காலத்தில் வெளிக் கிளம்பும் ஜீவனைத் தொடர்ந்து பிராணனும் கிளம்புகிறது

பிராணஸ் தேஜஸீ-மூலம் பிராணன் ஜீவன் உடன் சேர்ந்து கொண்டு
அதன் பின்னர் தேஜஸ்ஸில் சேர்க்கிறது

யமுனை கங்கையில் சேர்ந்து
கடலில் சேர்வது போலே
ஸ்ருதிகளுக்கு விரோதம் வாராமைக்காக
ஜீவனிடம் பிராணனுக்கு சம்யோகத்தை அங்கீகரித்துப் பின்னர்
தேஜஸ்ஸில் ஸம்யோகம் சொல்வது பொருந்தும் என்று கருத்து –

——————————————————————————————————–

அதிகரணம் -164-பூதாதிகரணம் -4-2-4-

பிராணன் தேஜஸ் என்று ப்ராண சம்யுக்தனான ஜீவனுக்கு தேஜஸ்ஸிலே
ஸம்யோகம் -ஸம்பத்தி -சொல்லப்பட்டது
அந்த ஸம்பத்தி தேஜோ மாத்ரத்திலா
போதாந்தரங்களோடு சம்பந்தம் கொண்ட தேஜஸ்ஸிலா
என்ற சிந்தையால் சங்கதி

தேஜஸி -என்ற வசனத்தால் தேஜோ மாத்ரம்
என்று பூர்வ பக்ஷம்

இதனை நிரசிக்கிறார் –

ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ்ஸில் சேர்க்கிறது
என்று நிரூபிக்கப் படுகிறது –

502-பூதேஷு தச்ச்ருதே –4-2-5-

அனைத்து பூதங்களிலும் சேர்க்கிறது
தேஜஸ்ஸில் மட்டும் இல்லை –
ப்ருஹத் -4-4-5-ப்ருதிவீ மய ஆபோ மய தேஜோ மய –
இதன் படி ஜீவனுடன் கூடிய பிராணன்
பஞ்ச பூதங்களின் கூட்டத்தில் சென்று சேர்க்கிறது –

ப்ராண விசிஷ்ட ஜீவன் பூத ஸூஷ்மங்களில் ஸம் பன்னன் ஆகிறான்
ஸர்வ பூத மயத்வம் ஸ்ருதி ஸித்தமாகையால் -என்றபடி –

————————————————————————-

503-நைகஸ்மின் தர்சயதோ ஹி —4-2-6-

ந ஏகஸ்மின் -பிறவற்றுடன் கலவாத பூதங்கள் தனித் தனியே எக் காரியத்துக்கும் பயன்படாதவை யாதலின்
ஒவ்வொரு பூதத்தில் க்ரமமாக சம்பந்திக்கிறது என்பது கூடாது
தர்சயதோ ஹி-தனித்தனியே கார்ய அஷமங்கள் என்ற அர்த்தத்தை ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் காண்பிக்கின்றன –
ஆகையால் ப்ராணஸ் தேஜஸி -என்று தேஜஸ் ஸப்தத்தால் பூதாந்தரங்களுடன் கலந்த தேஜஸ்ஸே சொல்லப் படுகிறது –

பூதங்கள் தனித் தனியே தங்கள் செயலைச் செய்யும் வலிமை அற்றவை –

சாந்தோக்யம் -6-3-2-3-அநேந ஜீவே நாத்மநா அநு ப்ரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி
தாஸாம் த்ரிவிருத்தம் த்ரிவிருத்தம் ஏகைகாம் கரவாணி -என்று
ஜீவ சரீகனான என்னால் உள்ளே புகுந்து பெயர் மற்றும் சரீரம் அளிக்கப் படுகின்றன –
அவற்றை மூன்று மூன்று என நான் சேர்க்கிறேன் -என்று
பஞ்சீ கரணம் செய்த பின்னரே இவற்றை அறியலாம் –

இது போன்று ஸ்ரீ விஷ்ணு புராணமும்
நா நா வீர்யா ப்ருதக்பூதா தத தே சம்ஹதிம் விநா -நா சக்துவன் பிரஜா ஸ்ரஷ்டும் அசமாகம்ய க்ருத்சனச
சமேத்யே அந்யோந்ய சம்யோகம் பரஸ்பர சமாஸ்ரயா மஹதாத்யா விசேஷாந்தா ஹ்யண்டம் உத்பாதயந்தி தே -என்று
தேஜஸ் எனபது மற்ற பூதங்களுடன் ஒன்றாக உள்ள தேஜஸ் என்பதையே குறிப்பதாகக் கொண்டு
பிராணன் அனைத்து பூதங்களுடன் சென்று ஒடுங்குவதாகவே கொள்ள வேண்டும் –

—————————————————————————————————————————————————–

அதிகரணம் -165-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -4-2-5-

இந்த உத் கிராந்தி வித்வானுக்கும் அவித்வானுக்கும் சமமா
அல்லது வித்வானுக்கு மட்டுமா –
என்று சிந்திக்கப் படுகின்றது என்று சங்கதி –

வித்வானுக்கு இங்கேயே அம்ருதத்வ பிராப்தி என்று ஸ்ருதி கூறுவதால்
அவித்வானுக்குத் தான் என்று பூர்வ பக்ஷம்

அத்தை நிரசிக்கிறார் –

வெளிக் கிளம்புதல் -உத்க்ராந்தி என்பது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும்
மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு முன்பே பொதுவானது என்று நிரூபிக்கப் படுகிறது –

504-சமாநா ச ஆ ஸ்ருத்யுபக்ரமாத் அம்ருதத்வம் ச அநு போஷ்ய —4-2-7-

ப்ரஹ்ம ஞானிக்கு உக்ராந்தி இல்லை என்பர் பூர்வ பஷி –
அவன் சரீரத்தில் உள்ள போதே மோஷம் என்பதை
கட உபநிஷத் -6-14/ப்ருஹத் -4-4-7-யதா சர்வே பிரமுச்யந்தே காமா யேச்ய ஹ்ருதி ஸ்திதா –
அத மர்த்யோ அம்ருதோ பவதி அத்ர ப்ரஹ்ம சமஸ்நுதே-என்று
அனைத்து ஆசைகளும் விலகின உடனே மோஷம் அடைகிறான் -என்பதால் –

அப்படி அல்ல –
நாடி வழியாகவே சென்று மோஷம் அடைகிறான் என்பதை
கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-சதம் சைகா ந ஹ்ருதயச்ய நாட்ய தாஸாம் மூர்த்தானம் அபி நி ஸ்ருதைகா
தயோர்த்தவமாயன் அம்ருதத்வமேதி விஷ்வக் அந்யா உத்க்ரமேண பவந்தி -என்றும்

ப்ருஹத் உபநிஷத் -நே ந பிரத்யோத நைஷ ஆத்மா நிஷ்காமதி சஷூஷோ வா மூர்த்நோ வான்யேப்யோ வா சரீர தேசேப்ய-என்பதால்
ப்ரஹ்ம ஞாநிக்கு மூர்த்த்ன நாடி தலை மூலமும்
மற்றவர்களுக்கு கண்கள் மற்ற த்வாரங்கள் மூலமோ வெளிக் கிளம்புவதை உணர்த்தும்

அம்ருதோ இஹ பவதி -என்றது
இந்த சரீரம் மற்றும் இந்த்ரியங்கள் இவனை விட்டு நீங்காமல் இருந்த போதிலும்
புண்ய பாபங்கள் ஒட்டாத தன்மை மற்றும் அவற்றின் அழிவே அம்ருதத்வம் எனப்பட்டது

இத்தைக் கருத்தில் கொண்டே
யதா சர்வே பிரமுச்யந்தே -அனைத்தும் நீங்கிய பின் என்றும்
அத்ர ப்ரஹ்ம சமச்நுதே -இங்கேயே ப்ரஹ்மத்தை அடைகிறான் என்றது –

ஸ்ருத்-கதி
ஆ ஸ்ருத் யுபக்ரமாத்-அர்ச்சிராதி கதி ஆரம்பிக்கும் வரை
சமாநாச யுபக்ரமாத் -வித்வானுக்கும் அவித்வானுக்கும் உத் க்ராந்தி சமமாகும்
மூர்த்தன்ய நாடீ ப்ரவேஸாத் பூர்வம் -என்று கருத்து

அம்ருதத்வம் ச -அத மர்த்யோ அம்ருதோ பவதி -இங்கு கூறப்பட்ட அம்ருதத்வமானது
அநு போஷ்ய ச -ச என்று உறுதிப் பொருளில் வந்தது
சரீர இந்திரியாதி தாகம் இன்றி -அவை இருக்கும் போது காமாதி விமோக ரூபமாயும்
உபாசன நிஷ்பத்தி ரூபமாயும் உள்ள அம்ருதத்வம் தான்
இங்கு அடையப்படுவதே தவிர ஜீவன் முக்தி என்பது இல்லை –

வித்வானுக்கு அர்ச்சிராதி கதியாலே ப்ரஹ்ம பிராப்தி ஸ்ருதமாய் இருப்பதால்
இங்கேயே முக்தி சொன்னால் ஸ்ருதி விரோதம் வரும்

இதயத்தில் உள்ள காம க்ரோதிகள் எக்காலத்தில் விடப்படுகின்றனவோ அதே காலத்தில்
உபாசனம் ஆரம்பிக்கப் படுகிறபடியால்
காமாதி விமோசனத்தின் பிறகு புருஷன் இங்கேயே அம்ருதத்வம் பெற சாதனமான உபாசனத்தை அடைகிறான் –
பின் அர்ச்சிராதி கதியாலே ப்ரஹ்மத்தை அடைகிறான் -என்பதாகும்

இதில் மற்ற ஓரு விளக்கப்படி இங்கு தானே உபாசனத்தில்
நிரதிசய போக்யமான ப்ரஹ்மத்தை அனுபவிக்கிறான் என்றும் பொருள் –

—————————————————————————————————–

505-ததா பீதே சம்சார வ்யபதேசாத் —4-2-8-

சம்சாரத்தில் உள்ள போதே மோஷம் –
ப்ரஹ்மத்தை அடையும் வரையில் சம்சாரம் –
அர்ச்சிராதி மார்க்கம் வழியாக ஸ்ரீ வைகுண்டத்தை அடைந்த பின்னரே புருஷார்த்தம்
அது வரை சரீரத்தின் தொடர்புள்ள சம்சாரம் நீடிக்கும்

சாந்தோக்யம் –
6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்யே-என்றும்

8-13-1-அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ராஹோர் முகாத் ப்ரமுச்ய தூத்வா சரீரம்
அக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகம் அபி சம்பவாமி -என்றும் சொல்லிற்று –

தத் -அந்த அம்ருதத்வமானது -முன் சொன்ன பிரகாரமே தவிர வேறு பிரகாரம் அன்று
ஏன் எனில்
ஆ பீதே சம்சார வ்யபதேசாத்-ப்ரஹ்ம பிராப்தி வரை சம்சாரம் என்றே
சரீர சம்பந்தம் அடியாக வழங்கப் படுவதால் என்றபடி –

ஸ்தூல தேகத்தில் இருந்து உத் க்ராந்தனுக்கு சரீர சம்பந்தம் எப்படி என்றால் அது பற்றிக் கூறுகிறார் –

————————————————————————————

506-ஸூஷ்மம் பிரமாணத ச ததா உபலப்தே –4-2-9-

ஸூஷ்மம் -ஸூஷ்ம சரீரமானது அனுவர்த்திக்கிறது
இந்த அனுவர்த்தனம் அர்ச்சிராதி கதி பற்றிச் சொல்லியதால் மட்டும் தோன்றவில்லை
பிரமாணத ச -பிரமாணத்தாலும்
ததா உபலப்தே -ஸூஷ்ம சரீரம் உள்ளவனாகக் காணப்படுவதால் என்றபடி
சந்திரனுடன் சம்வாதம் ஸ்ருதமாகையால் ஸூஷ்ம சரீரம் தொடர்கிறது என்று கருத்து –

ஸூஷ்ம சரீரம் தொடர்கிறது –
அர்ச்சிராதி மார்க்கம் வழி செல்லும் உபாசகன் சந்தரனுடன் பேசுகிறான்

கௌஷீ தகீ -1-6-தம் பிரதிப்ரூயாத் –சத்யம் ப்ரூயாத் –
சந்த்ரனிடம் பேச வேண்டும் உண்மையை மட்டும் கூற வேண்டும் என்பதால்
ஸூஷ்ம சரீரம் உள்ளது –
சம்சார பந்தமும் உள்ளது என்று அறியலாம்

————————————————————————————-

507-நோப மர்த்தே ந அத–4-2-10-

இந்த காரணங்களால் –
கட -6-14/ப்ருஹத் -4-4-7-யதா சர்வே பிரமுச்யந்தே காமோ யேச்ய ஹ்ருதி ஸ்திதா அத மர்த்யோ
அம்ருதோ பவதி அத்ர ப்ரஹ்ம சமச் நுதே -என்றது
பந்தங்கள் நீங்கி அதன் பின்னர் உண்டாகும் மோஷம் குறித்து ஏதும் கூற வில்லை-

அத -முன் சொன்ன காரணங்களால்
நோப மர்த்தே ந அத-அதமர்த்யோ அம்ருதோ பவதி என்ற வசனம் சரீர உப மர்த்தத்தால் உண்டான
அம்ருத்வத்தைச் சொல்லவில்லை
உபாசன ஆரம்பாதி ரூப அம்ருதத்வம் பற்றியே சொல்கிறது – என்பதாம்

——————————————————————–

508-அஸ்ய ஏவ சோபபத்தேர் ஊஷ்மா -4-2-11-

ப்ரஹ்ம உபாசகனுக்கு ஸூஷ்ம உடல் உஷ்ணம் இருப்பதால்
ப்ரஹ்ம உபாசகனுக்கும் உக்ராந்தி உண்டு என்கிறது –

அஸ்ய -இந்த ஸூஷ்ம சரீரத்துக்கு
ஏவ ச உபபத்தேர் -ஓர் இடத்தில் இருப்பதாகிய உக்தியாலும் என்றவாறு
இத்தால் தேஹ சம்பந்த உபமர்த்தத்தால் உண்டான முக்தி அன்று
ஸூஷ்ம தேகம் உள்ளத்தில் பிரமாணம்
ஊஷ்மா-மரணத்துக்குத் தயாரான வித்வானின் ஸ்தூல சரீர ஏக தேசத்தில் தோன்றும்
ஊஷ்மாவானது -வெப்பமானது ஸ்தூல சரீர குணம் அன்று
ஏன் எனில்
ஸ்தூல தேகத்தில் -தேகாந்தரத்தில் ஊஷ்மா-புலப்படாமையால் -என்று கருத்து
இப்படி ஸித்தமான ஏதோ ஓர் இடத்தில் உள்ள ஊஷ்மாவினால் அனுமானிக்கப்பட்ட
ஸூஷ்ம சரீரத்துடன் உத் க்ராந்தியை அடைகிறான் என்பதாம் –

————————————————————————–

508-பிரதிஷேதாத் இதி சேத ந சாரீராத் ஸ்பஷ்டோ ஹி ஏகேஷாம் —4-2-12-

ஞானி அல்லாதவனது உத்க்ராந்தியை
ப்ருஹத் -4-4-2-ச ஏதா தேஜோ மாத்ரா சமப்யாததாநோ ஹ்ருதய மேவ அன்வக்ராமதி-என்று
வாக்கு ஆத்மாவை அடைந்து ஆத்மா இதயத்தை அடைகிறது -என்றது

முன்னர் -4-4-1-தே ந பிரத்யோ தே ந ஆத்மா நிஷ்க்ராமதி தமுத்க்ராமந்தம் ப்ராணோ நுத்க்ராமதி -என்று
இதயத்தில் உள்ள த்வாரம் பிரகாசிக்கிறது –
ப்ரஹ்மத்தால் பிரகாசம் பெற்ற த்வாரத்தைக் கொண்டு ஆத்மா வெளிக் கிளம்பும் போது பிராணனும் வெளிக் கிளம்பும் -என்றும்

இதை முடிக்கும் பொழுது -4-4-4-அந்யத் நவதரம் கல்யாண தரம் ரூபம் குருதே -என்று
பழைய பொன் மூலம் தட்டான் புது ஆபரணம் பண்ணுமா போலே ஆத்மா வேறு சரீரம் எடுக்கிறான் –

4-4-6-ப்ராப்யாந்தம் கர்மண தஸ்ய யத்கிஞ்ச இஹ க்ரோத்யயம் தஸ்மாத் லோகாத் புன –
ஏதி அஸ்மை லோகாய கர்மணே இது து காமாய மா ந –ஸ்வர்க்கம் அனுபவித்து திரும்புகிறான் என்றும்

4-4-6-அத ஆகாமயமா ந யோ அகாம நிஷ்காம அப்தகாம ஆத்மகாம ந தஸ்ய பிராண உத்க்ராமந்தி
ப்ரஹ்மைவ சந் ப்ரஹ்மாப்யேதி–
ப்ரஹ்ம ஞானிக்கி பிராணன் வெளிக் கிளம்புவது இல்லை

இது போன்று ஆத்ம பாதர் என்பவர் யாஜ்ஞ வல்க்யர் இடம் கேட்டு பெற்ற பதிலிலும்
பிராணன்கள் போவது இல்லை இங்கேயே சேர்க்கப் படுகின்றன என்பர்

இது தவறான வாதம் –

இங்கு பிராணன் ஜீவன் இடம் இருந்து வெளிக் கிளம்புவது இல்லை என்றே சொல்லப்பட்டது
சாரீரத்தில் இருந்து பிராணன் வெளிக் கிளம்புவது பற்றி இங்கும் ஏதும் கூறப்பட வில்லை

ஜீவன் அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று பிரமத்தை அடைகிற வரை பிராணன் பிரிவது இல்லை என்பதையே
ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி என்றது –

திரும்பவும் வித்வானுக்கு உத் க்ராந்தி கிடையாது என்று சங்கித்து விடை கூறப்படுகின்றது
இதி சேத் ந -முன் சொன்ன உத் க்ராந்தி வித்வானுக்கும் பொருந்தும் என்பதாம்
ஏன் எனில்
சாரீராத் -சாரீர குண ஜீவனிடம் இருந்து ப்ராணன்களுக்கு விசேஷம் ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி
என்றுள்ள ஸ்ருதியில் நிஷேதிக்கப் பட்டு இருப்பதால் என்பதாம்
தஸ்ய -அகா மயமானனான வித்வான்களின் பிரயாணங்கள் அவனை விட்டுப் பிரிவது இல்லை
ஆனால் தேவையான மார்க்கத்தில் செல்லும் வித்வானின் உபகாரங்களாகக் கூடவே போகின்றன
என்பது ஸ்ருதியின் பொருள்
இதனால் ஜீவனின் உத் க்ராந்தி நிஷித்தை அன்று என்பதாம் –
ஸ்பஷ்டோ ஹி ஏகேஷாம்-இவ்வர்த்தம் மாத் யந்தின சாமிகளின் பாடத்தில் ஸ்பஷ்டமாவே காணப்படுகிறது
ஆத்ம காம -பரம புருஷ பிராப்தி காமன் என்றபடி –

———————————————————————————

509-ஸ்மர்யதே ச–4-2-13

ஸ்ம்ருதியிலும் இப்படியே உள்ளது –
யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி -3-167-ஊர்த்வம் ஏக ஸ்திதஸ் தேஷாம் யோ பித்வா
ஸூர்ய மண்டலம் ப்ரஹ்ம லோகம் அதிக்ரம்யதேந யாதி பராம் கதிம்-என்றது

வித்வானுக்கு மூர்த்தன்யா நாடியால் உத் க்ராந்தி ஸ்ருதி ஸ்ம்ருதி சித்தம்

—————————————————————-

அதிகரணம் -166-பர சம்பத்த்யதிகரணம் -4-2-6-

இந்திரிய சமூகத்தோடும் பிராணனோடும் கூடின ஜீவனுக்கு உத் க்ராந்தி வேளையில்
தேஜஸ் முதலிய பூத ஸூஷ் மங்களில் ஸம்யோகம் சொல்லப்பட்டது
அந்த சம்யோகம் வித்யானுக்குக் கிடையாது என்று சங்கித்துப் பரிஹரிக்கப் பட்டது
இப்போது அந்த பூத ஸூஷ்மங்கள் ஜீவனுடன் தழுவியவையாய் -அவனவன் செய்த கர்மத்தையும் வித்யையும்
அனுசரித்துத் தங்கள் கார்யத்துக்காகப் போகின்றனவா
அல்லது பரமாத்மாவிடம் ஸம் பன்னங்கள் ஆகின்றனவா
என சிந்திக்கப் படுகிறது என்று சங்கதி –

பரமாத்மாவிடம் சம்பத்தி ஏற்பட்டால் ஸூக துக்க போகம் என்னும் கார்யம் இல்லாமையால் அந்த உபயோகத்தை அனுசரித்து
அவனவன் கர்மத்துக்கும் வித்யைக்கும் பொருத்தமாகவே பூத ஸூஷ்மங்கள் போகின்றன
என்று பூர்வ பக்ஷம்
எல்லா பதார்த்தங்களுமே பர தேவதா கார்யமாகையாலே தத் ஆத்மகங்கள் ஆகையால்
சேர வேண்டிய இடமும் தேஜ பரஸ்யாம் தேவதாயாம்-என்று சொல்லப்படுகின்றது என்று உப பத்தி

இத்தை நிரஸிக்கிறார்

தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

510–தாநி பரே ததா ஹ்யாஹ–4-2-14-

பூத ஸூஷ்மங்கள் அனைத்தும் பரமாத்மாவுடனே சேருகின்றன –

சாந்தோக்யம்-6-8-6-தேஜ பரஸ்யாம் தேவதாயாம்
இன்ப துன்பங்களால் வரும் களைப்பு உறங்கும் பொழுது போவது போலே
சிருஷ்டி காலத்தில் அனுபவித்த இன்ப துன்பங்களின் களைப்பால்
இளைப்பாறும் பொருட்டு பிரளய காலத்தில் பரமாத்மாவிடம் சென்று மறைவது போன்று
என்று கொள்ள வேண்டும்

உத் கிராந்தியால் ஏற்பட்ட ஆயாசம் தீருவதே ஜீவனுக்குப் பரமாத்மா சம்பத்தியான பலன்
என்று கல்பித்து ஸ்ருதி அர்த்தம் பொருந்தும் –

———————————————————————————————-

அதிகரணம் -167-அவிபாகாதி கரணம் -4-2-7-

கீழ்ச் சொன்ன பரமாத்மாவிடம் சம்பத்தி என்பது பிராகிருத லயம் போலே
காரண பத்தி ரூபமா அல்லது
வாக் மனஸ் சம்பாத்தி போலே பிரிக்க முடியாத தன்மையா என்று சம்சயம்

பரமாத்மா சர்வ காரணமாகையாலும்
அதில் சம்பத்தி செல்வதாலும்
காரணா பத்தியே என்று பூர்வ பக்ஷம்

இதனை நிரஸிக்கிறார்

பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை

511-அவிபாகோ வசநாத் —4-2-15-

பிரித்துக் கூற இயலாதபடி சேர்க்கை மட்டுமே -இப்படியே கூறப்பட்டது –
பூர்வ பஷி லயிப்பது போன்றே என்பர்
உபாதான காரணமாக பர ப்ரஹ்ம் என்பதால்

இது தவறு
லயம் என்றால் அழிவு
சம்பத்யதே -பிரிக்க இயலாதபடி சேர்க்கை என்றே கொள்ள வேண்டும் –

அவசனாத் -என்று இங்கு மறுபடி ஸ்ருஷ்டி பற்றிய வசனம் இல்லாமையால்
விட்டுப் பிரியாமையே ஸம்பத்தி என்று தாத்பர்யம் –

————————————————————————————

அதிகரணம் -168-ததோகோதி கரணம் -4-2-8-

இவ்வாறு கைமணம் தொடங்கும் வரை வித்வானுக்கும் அவித்வானுக்கும்
உத் கிராந்தி பிரகாரம் சமமாகவே கூறப்பட்டது
இப்போது வித்வானுக்கு ஒரு விசேஷம் கூறப்படுகிறது
என்று சங்கதி –

நாடிகள் மிக நுட்பமாய் இருப்பதால் பிரித்து அறிவது கடினம் -ஆதலின் நியமம் கூடாது
இந்த ஸ்ருதி வசனம் யதேச்சையாக ஏற்படும் ப்ரஹ்ம நாடீ வழியையே அனுவாதம் செய்கிறது
என்பர் பூர்வ பக்ஷி

இத்தை நிரசிக்கிறார் –

மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன் சரீரத்தை விட்டு
வெளியே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

512-ததோ கோக்ரஜ்வலநம் தத் பிரகாசி தத்வாரோ வித்யா சாமர்த்யாத் தத்தேஷ கஸ்ய நு ஸ்ம்ருதி
யோகாச்ச ஹார்த்தா நுக்ருஹீத க்சதாதிகயா–4-2-16-

வித்யையின் சாமர்த்தியத்தால்
தத்தேஷ தத் அ நு ஸ்ம்ருதி யோகாச்ச –அந்த வித்யைக்கு அங்கமான அர்ச்சிராதி கதி சிந்தனையால் ப்ரீதி அடைந்த பரமாத்மா
ஹார்த்தா நுக்ருஹீத-ஹ்ருதய கமல அந்தரவர்த்தியாலே அனுக்ரஹிக்கப் பட்டவனாய்
ததோக-அந்த ஜீவனின் ஸ்தானமாகிய ஹ்ருதயம்
அக்ர ஜ்வலநம் -முன்புறம் பிரகாசம் உள்ளதாகிறது
தத் பிரகாசி தத்வாரோ -அவ்வாறு ப்ரகாசப்படுத்தப்பட்ட நாடி துவாரம் உடையவனாய்
வித்யா சாமர்த்யாத் க்சதாதிகயா-மூர்த்தம் நாடியாலே செல்கிறான் -என்றவாறு –

ப்ரஹ்ம வித்யையால் மகிழ்ந்த எம்பெருமான் அருள -அவன் வசிக்கும் இதயம் ஒளி வீச –
அந்த ஒளி மூலம் காண்பித்துக் கொடுக்கப்பட்ட நூற்று ஒன்றாவது நாடியான
ஸூஷூம்நை நாடி மூலம் கிளம்புகிறான்

இந்த சிறப்பான உத்க்ராந்தி
கட -6-16/சாந்தோக்யம் -8-6-6-சதம் சைகா ச ஹ்ருதயச்ய நாட்ய –தாஸாநாம் மூர்த்தா நாம் அபி நிஸ்
ஸ்ருலதகா தயோர்த்தவாமாயன் அம்ருதத்வமேதி விஸ்வன் அந்யா உத்க்ரமேண பவந்தி -என்றது
மிகவும் நுண்ணியமான நாடி –

சர்வேஸ்வரனின் அனுக்ரஹம் அடியாகவே இவ்விதம் செல்கிறான் என்கிறது-

—————————————————————————————————————–

அதிகரணம் -169-ரச்ம்யநு சாராதி கரணம் -4-2-9-

ஹ்ருதயத்தில் இருந்து மூர்த்தம் நாடி வழியாக வெளிவந்த வித்வானுக்கு
ஸூர்ய கிரணங்களைத் தொடர்ந்து கமனம் சிந்திக்கப் படுகின்றது
என்று சங்கதி –

இரவில் இறந்த வித்வானுக்கு ஸூர்ய கிரணம் சம்பவிக்காது
ஆதலின் இந்த நியமம் கூடாது என்று பூர்வ பக்ஷம்

அத்தை நிரஸிக்கிறார்

ஸூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான்
என்று நிரூபிக்கப் படுகிறது

513-ரச்ம்ய நு சாரீ-4-2-17-

சாந்தோக்யம் -8-6-5-அத யத்ர தஸ்மாத் சரீராத் உத்க்ராமதி அதி ஏதைரவி ரச்மிபி ஊர்த்வமாக்ரமதே -என்று
ஏவகாரத்தால் ஸூர்ய கிரணங்கள் வழியாகவே செல்கிறான் –
இரவிலும் ஸூர்ய கிரணங்கள் உண்டே

நாடிகளுக்கும் ஸூர்ய கிரணங்களுக்கும் தொடர்பு –
சாந்தோக்யம் -8-6-2-தத் யதா மஹா பத ஆத்த –உபௌ க்ராமௌ கச்சதி இமம் ச அமும் ச ஏவ
மேவைத ஆதித்யச்ய ரச்மய உபௌ லோகு கச்சந்தி
இமம் ச அமும் ச அமுஷ்மாத் ஆதித்யான் ப்ரதா யந்தே தா ஆஸூ நாடீஷூ ஸ்ருப்தா
ஆப்யோ நாடீப்யோ ப்ரதா யந்தே தி அமுஷ்மின் ஆஹித்யே ஸ்ருப்தா -என்று சொல்லிற்று –

———————————————————————————————–

அதிகரணம் -170-நிசாதிகரணம் -4-2-10-

இரவில் இறந்தவனுக்கும் கதிக்கு சாதனமாக ஸூர்ய கிரணங்கள் இருக்கட்டும்
ஆயினும் ப்ரஹ்ம வித்துக்களுக்கு இரவில் மரணம் ஸாஸ்த்ர நிஷித்தம் ஆகையால்
அவர்களுக்கு இரவில் மரணம் சம்பாவிக்காது
என்ற சங்கையால் சங்கதி

இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி பிரமத்தை அடைவான் என்று நிரூபிக்கப் படுகிறது –

514-நிசி நேதி சேத் ந சம்பந்தச்ய யாவத்தேஹ பாவித்வாத் தர்சயதி ச –4-2-18

இரவில் மரணம் அடைந்தாள் மோஷம் இல்லை எனபது சரியல்ல –
கர்மத்தின் சம்பந்தம் சரீரம் உள்ள வரையிலும் தான்

பூர்வ பஷி
திவா ச சுக்ல பஷ ச உத்தராயண மேவ ச முமூர்ஷதாம் பரசஸ்தா நி விபரீதம் து கர்ஹிதம் -என்றதே

அப்படி அல்ல –
சாந்தோக்யம் -6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்யே -என்று
ப்ரஹ்ம ஞானிக்கு சரீரம் விடும் வரை மட்டுமே கால தாமதம் என்றதே-

நிசி நேதி சேத் ந -இரவில் மரித்தவனுக்கு முக்தி இல்லை என்பது சரி இல்லை
ஏன் எனில்
சம்பந்தச்ய யாவத்தேஹ பாவித்வாத் -அநாரப்த கார்யங்களான சஞ்சித கர்ம சம்பந்தங்கள்
வித்யையால் வசித்த போதும் பிராரப்த கர்மங்களின் சம்பந்தம் இறுதி வரை நிற்பதாதலின்
அவ்வுடலின் இறுதி இரவிலும் சம்பவிக்கலாம்
ஆதலின் இதற்கு மேலான பந்தகம் இல்லாமையாலும்
இரவில் இறந்தவனுக்கும் ப்ரஹ்ம ப்ராப்தியில் விரோதம் இல்லை
தர்சயதி ச–தஸ்ய தாவ தேவ சிரம் என்ற ஸ்ருதியே இவ்வர்த்தத்தைக் காட்டுகிறது
இரவில் மரணம் தடுக்கப்பட்டது அவித்வானுக்களுக்கே அன்றி ப்ரஹ்ம வித்துக்களுக்கு அல்ல –

———————————————————

அதிகரணம் -171-தஷிணாயநாதி கரணம் –4-2-11-

தஷிணாயணத்தில் இறந்தாலும் பந்த ஹேதுக்கள் இல்லாமையாலே ப்ரஹ்ம ப்ராப்தியில் விவாதம் இல்லை
தஷிணாயணத்தில் மரித்தவனுக்கு சந்த்ர ஸாயுஜ்ய பிராப்தி என்பது விஸ்ரம ஸ்தானத்தைக் குறிப்பதேயாகும்
வித்வானுக்குத் திரும்பி வருவது என்பது இல்லாமையாலே திரும்பி வருதல் என்னும் வசனம்
அவித்வான்களைப் பற்றியதே யாகும்

தஷிணாயணத்தில் இறந்தவன் திரும்பி வருவதாக ஸ்ருதி ஸ்ம்ருதி -கீதா வாக்கியங்கள்
உள்ளனவே என்பார் பூர்வ பக்ஷி

தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது –

515-அத ச அயநே அபி தஷிணே –4-2-19-

பூர்வ பஷி காட்டும் பிரமாணம் –
மஹா நாராயண உபநிஷத் -25-1-
அதயோ தஷிணே பிரமீயதே பித்ருணா மேவ மஹிமானம் கத்வா சந்திர மசஸ் சாயுஜ்யம் கச்சதி -என்றும்

ப்ருஹத் –
6-2-16-யதா தத்பர்ய வௌதி-அது முடிந்த பின்னர் –

5-10-5-அத ஏவமேவ அத்வானம் புநர் நிவர்த்தந்தே –
சம்சார மண்டலத்துக்கே திரும்புகின்றனர்

மேலும் பீஷ்மர் போல்வார் உத்தராயண காலத்துக்கு காத்து இருந்தனரே என்பர்

இது தவறு
சந்திர மண்டலம் செல்வது ஒய்வு எடுக்கவே –
இத்தை மஹா நாராயண உபநிஷத் 24-2/25-1-தஸ்மாத் ப்ராஹ்மணோ மஹிமாநம் ஆப் நோதி-
ஆகவே அவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் என்கிறது –

ஸ்ரீ கீதை –
8-23-யத்ர காலே த்வ நாவ்ருத்திம் ஆவ்ருத்திம் சைவ யோகிந ப்ரயாதா யாந்தி தம் காலம் வஷ்யாமி பரதர்ஷப -என்றும்

8-24-அக்னிர் ஜ்யோதி ரஹஸ் சுக்ல ஷண் மாஸா உத்தராயணம் தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோ ஜநா

8-25-தூமோ ராத்ரி ததா கிருஷ்ண ஷண் மாஸா தஷிணாயநம் தத்ர சந்த்ரமசம் ஜ்யோதி யோகீ ப்ராப்ய நிவர்த்ததே -என்றும்

8-26-சுக்ல கிருஷ்ணே கதீ ஹ்யதே ஜகதச் சாச்வதே மதே ஏகயா யாத்ய நாவ்ருத்திம் அன்யயா ஆவர்த்ததே புந-என்றும்

தஷிணா யானத்தில் மரணம் அடைந்தால் ப்ரஹ்ம பிராப்தி இல்லை என்பர் பூர்வ பஷி –

இதற்கு உத்தரம் அருளிச் செய்கிறார் மேல்

——————————————————————————————————-

516-யோகிந ப்ரதி ஸ்மர்யேதே ஸ்மார்த்தே சைதே–4-2-20-

இவை யோகிகள் குறித்து தேவயான மற்றும் பித்ருயான மார்க்கங்கள் பற்றி உணர்த்தவே கூறப்பட்டன –
இத்தையே ஸ்ரீ கீதையில் -8-26-
நை தே ஸ்ருதீ பார்த்தஜாநத் யோகீ முஹ்யதி கச்சன தஸ்மாத் சர்வேஷூ காலேஷூ யோக யுக்தோ பாவர்ஜுனா-என்று
யோகிகள் மயங்க மாட்டார்கள் நீ அர்ச்சிராதி மார்க்கத்தை எண்ணி இருப்பாயாக என்றான்

8-24-
அக்னிர் ஜ்யோதி –

8-25-தூமோ ராத்ரி —என்பவை
தேவயானம் பித்ரு யானம் பற்றியே குறிக்கும்

8-26-யத்ர காலேது –
அபிமான தேவதையான ஆதி வாஹிகர்களை கால பதம் குறிக்கும்

ப்ருஹத் -6-2-15-தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி –
அவர்கள் அர்ச்சையில் செல்கின்றார்கள் என்பதால்
அத்தையே எண்ணி இருப்பார்கள் –

யோகிந ப்ரதி -ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்களைக் குறித்து
ஸ்மர்யேதே ஸ்மார்த்தே சைதே-இந்த தேவ யானம் பித்ரு யானம் என்ற வழிகள் ஸ்மரிக்கப் படுகின்றன
தினம் தோறும் நினைக்கத் தக்கவைகளாக ஸ்ம்ருதிகள் கூறுகின்றன –

யத்ர காலேத்வநா வ்ருத்திம் ஆ வ்ருத்திஞ்சைவ யோகி ந -என்று தொடங்கி
நைதே ஸ்ருதீ பார்த்த ஜானன் யோகீ முஹ்யதி கச்ச ந
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு யோக யுக்தோ பவார்ஜுன-என்று
தினமும் சிந்திக்கத்தக்கவை என்று ஸ்ம்ருதியில் விதிக்கப்படுகின்றவை

இதனால் முமுஷுவுக்கு மரணகாலம் விதிக்கப்பட வில்லை

யத்ர காலே என்பதில்
காலே என்ற பதம் காலத்துக்கு அபிமானியான ஆதி வாஹிக தேவதையைக் குறிக்கிறது

இந்த ஸூத்ரத்தில் யோகி பதம் நான்கு வகை யோகிகளைக் குறிக்கிறது
முமுஷு யோகிக்கு -தேவயான சிந்தனமும்
ஐஸ்வர்யாத் யர்த்திக்கு யோகிக்கி -பித்ரு யான சிந்தனமும் என்று பிரிவு

யோக யுக்தோ பவார்ஜுன-என்கிற இடத்தில்
யோக சப்தம் மார்க்க அனுசந்தானம் ஆகிய யோகத்தைக் குறிப்பது என்பது திரு உள்ளம் –

—————-

அதிகரணம் -1-வாகாதி கரணம்–வாக்கு முதலிய பாஹ்ய இந்திரியங்களுக்கு மனஸ்ஸில் சம்பத்தியும்
அதிகரணம் -2- மநோதிகரணம் – இந்த்ரிய விஸிஷ்ட மனஸ்ஸுக்கு பிராண வாயுவில் ஸம்பத்தியும்
அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -ப்ராணன்களுக்கு தேஹாத் யக்ஷனான ஜீவனிடத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -4-பூதாதிகரணம் -ஜீவனுக்குப் பூத ஸூஷ்மத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -வித்வானுக்கும் மற்றோருக்கும் – அவித்வானுக்கும் உத் க்ராந்தி சமம் என்னும் ஸம்பத்தியும்
அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –பூத ஸூஷ் மம் தழுவிய ஜீவனுக்குப் பரமாத்மாவிடம் களைப்பாற ஸம்பத்தியும்
அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–பரமாத்மாவிடம் ஸம்பத்தி என்றது ஸம்பந்தமே என்றும்
அதிகரணம் -8-ததோகோதி கரணம் –வித்வானுக்கு ப்ரஹ்ம நாடீ வழியே உத் க்ராந்தியும்
அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -அர்ச்சிராதி கமனம் ஸூர்ய கிரணங்களை பற்றி என்றும்
அதிகரணம் -10-நிசாதிகரணம் -இரவில் ம்ருதனான வித்வானுக்கும் முக்தி உண்டு என்றும்
அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் –தஷிணாயணத்தில் ம்ருதனான முமுஷுக்கும் முக்தி உண்டு என்றும்

இப்பாதத்தில் விளக்கப்பட்டன –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading