ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –முதல் அத்யாயம் –முதல் பாதம் —

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———-

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம–
ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே
–ஸ்ரீ வேதாந்த தீப-முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே
–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

———

எம்பெருமானே உலகு உய்ய வேத வ்யாசராய் சாரீரீரக சாஸ்திரத்தை நான்கு அத்தியாயங்களாக அருளிச் செய்தார்
அதுக்கு போதாயன பகவான் அறுபதினாயிரம் படி வ்ருத்தி க்ரந்தமும்
கலியுக தொடக்கத்தில் டங்கர் ஆராயிரப்படியாக சுருக்கி அருளி
த்ரமிட முனிவர் அதற்கு பாஷ்யமும் அருளிச் செய்தனர்
நம் ஸ்வாமி அருளிச் செய்ததுக்கே ஸ்ரீ பாஷ்யம் என்று ஸ்ரீ சரஸ்வதி தேவியே திரு நாமம் சாத்தி அருளினாள்

ஸ்ரீ பாஷ்யம்
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே -மங்கள ஸ்லோகமே ஸ்ரீ பாஷ்ய சாரம்
சமன்வய -காரணத்வ
அவிரோதித்தவ -அபாத்யத்வ
உபாயத்வ
பலத்தவ –அதிகாரங்கள் நான்கும்

இரண்டாவது மங்கள ஸ்லோகத்தால்
இங்கு ப்ரஹ்ம விஷயமே விசாரம் என்றும்
அவனே நாம் அடையும் பயன் என்றும் விசாரிக்கப்படும் பொருள் என்றும் சம்பந்தம் காட்டி
போதாயனர் விஸ்தாரமாக அருளிச் செய்ததை -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் விளக்க
மங்களா ஸாஸனம் பண்ணி அருளுகிறார்

வேதார்த்த விசாரம் -ஒரே ஸாஸ்த்ரம்
4 அத்தியாயங்கள் –
1-சமன்வய -காரணத்வ
2-அவிரோதித்தவ -அபாத்யத்வ
3-உபாயத்வ
4-பலத்தவ –அதிகாரங்கள் நான்கும்

16 பாதங்கள்
1-ஜீவ மிக அஸ்பஷ்ட மாயும்
2-ஜீவ அஸ்பஷ்ட மாயும்
3-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
4-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
5-ஸாங்க்யாதி ஸ்ம்ருதி மூலமான தோஷ பரிஹாரம் காட்டுவது
6-ஸாங்க்யாதி பக்ஷங்கள் கண்டனம்
7-ஆகாசாதி த்ரவ்யங்களுக்கு ஸ்வரூப பரிணாம ரூபமான கார்யத்வம் கூறுவது
ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவ ரூப கார்யத்வம் கூறுவது
8-ஜீவ உபகரணமான இந்திரியாதிகளின் உத்பத்தி க்ரமம் கூறப்படுவது
9-வைராக்ய நிமித்தமாக புருஷனுக்கு ஏற்படும் தோஷங்கள்
10-ப்ராப்யத்தில் ஆசை தோன்ற ப்ரஹ்மத்துக்கு நிர்த்தோஷமும் கல்யாணைக தானத்வமும்
11-பகவானிடம் செய்யும் பக்தியின் பிரகாரங்கள்
12–பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மங்களை அங்கங்களாக விதித்தல்
13-உபாஸனா ஸ்வரூபமும் அநுஷ்டான க்ரமமும் விளக்கப்படுத்தல் -வித்யா மகிமையும் கூறுதல்
14-ஜீவன் உடலை விட்டுப் புறப்படுதல் -உத் க்ரமணம்
15-ஜீவனின் மோக்ஷ கதி சிந்தனம்
16-பிராப்தி -பலம் -மோக்ஷம் –

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வ நிஷ்டா –ஸ்லோகத்தால் ஸ்ரீ தேசிகன் 16 குணங்களுடன்
இப்பாதங்கள் விளக்குவதைக் காட்டி அருளுகிறார்

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1),
தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3);
நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1);
ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) –
ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) –
தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)-
மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.

இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது.
ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று 16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

முதல் அத்தியாயத்தில்-11+6+10+8=35 அதிகரணங்கள்

முதல் நான்கு அதிகரணங்கள் -ஒரே ஸூத்ரம் ஒவ்வொன்றும்
1-1-1- அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச –
1-1-2- ஜந்மாதி அஸ்ய யத–
1-1-3- சாஸ்திர யோநித்வாத்-
1-1-4-தத் து சமன்வயாத் –

முதல் இரண்டும் சித்த ரூபமான ப்ரஹ்மத்தில் பிரமித்திதி ஏற்படுத்தவும்
அடுத்த இரண்டும் ஸாஸ்த்ரமும் அதனால் ஏற்படும் புத்தியும் வீண் என்ற வாத நிரஸனம்

அதிகரணம் என்பது
1-விஷயம்
2-சம்சயம்
3-பூர்வபக்ஷம்
4-சித்தாந்தம்
5-பிரயோஜனம்
என்ற ஐந்து பொருள்களைக் கொண்டது

————

முதல் அதிகரணம் -ஜிஜ்ஞாஸாதி அதிகரணம்

இதில் ப்ரஹ்ம விசார ஸாஸ்த்ரம் விஷயம்
அது ஆரம்பிக்க வேண்டியதா இல்லையா என்று சம்சயம்
ஆரம்பிக்க வேண்டாம் என்பது பூர்வ பக்ஷம்
ஆரம்பிக்க வேண்டுவதே என்பது ஸித்தாந்தம்
ஸாஸ்த்ரத்தை நிர்ணயம் செய்வதே பலம்

ஸூத்ரம் -1- அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –1-1-1-

இதில் விஷய வாக்கியம்
பரீஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் –தத் விஞ்ஞானர்த்தம் ஸ குருமே வாபி கச்சேத் –என்பது
கர்மாக்களால் பெறப்படும் லோகங்களை எல்லாம் ஆராய்ந்த ப்ராஹ்மணன்
அக்கர்மங்களால் அக்ருதனான -செயலுக்கு விஷயமாகாத -எம்பெருமான் பெறப்பட முடியாதவன் என்று நிர்வேதம் பிறந்து
ப்ரஹ்ம நிஷ்டனான ஸ்ரோத்ரியனை ஆச்சார்யராக வரித்து சமித்தாதிகளைக் கையிலே உபஹாரமாகக் கொண்டு
எம்பெருமானை அறிந்து கொள்ள பிரார்த்திப்பது ஆகும்

இங்கு ஒருவன் ப்ரஹ்ம விசாரம் செய்வது என்பது அவனது ஆசையாலேயே ஏற்படக் கூடிதயதாகையால்
கிடைக்காத ஒன்றை கிட்ட அபூர்வ விதி ஆகாது
பின் என் என்னில்
ப்ரஹ்ம விசாரம் செய்ய விரும்புபவன் அத்தை ஆச்சார்ய முகேன
உபதேச பூர்வகமாகவே செய்ய வேண்டும் என்ற நியமத்தை விதிப்பதால்
நியம விதியே யாகும்

பூர்வ மீமாம்ஸையில் கடைசி ஸூத்ரம் –
ஸ விஷ்ணு ராஹ ஹிதம் ப்ரஹ்மேத்யா சஷதே தம் ப்ரஹ்மேத்யா சஷதே-என்று உள்ளது
அந்த ப்ரஹ்மத்தின் விசாரம் தொடங்குகிறது என்று இதில் வ்யாஸர்

அத -பிறகு
அத– இக்காரணங்களாலே
ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -ப்ரஹ்மத்தைப் பற்றி விசாரம் ஆராய்ச்சி செய்யத்தக்கது

கர்ம விசாரம் முடிந்து அவை அல்ப அஸ்திர பலன்களையே கொடுக்கும் என்றும்
ப்ரஹ்ம ஞானமே முடிவற்ற எல்லை இல்லா நிலையான பலனைக் கொடுக்கும் என்று
மேல் எழுந்தவாரி உணர்ந்து ப்ரஹ்ம விசாரத்தில் இழிகிறார் என்றவாறு

கர்ம விசாரம் செய்த பின்பே ப்ரஹ்ம விசாரம் என்பதற்கு -அத்வைதி பூர்வம் நடந்தது கர்ம விசாரமே அல்ல
1-நித்ய அநித்ய வஸ்து விவேகம்
2- சமதமாதி சாதன ஸம்பத்
3-இம்மை மறுமை பல போகத்தில் வைராக்யம்
4-மோக்ஷம் அடைய விருப்பம்
ஆகிய சாதன சதுஷ்டயமே பூர்வ விருத்தம் என்பர்

யாதவ பிரகாசரும் பாஸ்கரரும் முந்தையது தாப த்ரயத்தால் ஏற்பட்ட ஸ்ரமமே என்பர்
லகு பூர்வ பாசத்துக்கு லகு சித்தாந்தம் -மஹா பூர்வ பாசத்துக்கு மஹா சித்தாந்தம்
ப்ரஹ்ம ஆத்ம ஐக்ய ஞானமே உபாயம் என்றும்
நிர்விசேஷ ப்ரஹ்மமே ப்ராப்யம் என்றும்
இந்த ஐக்ய ஞானத்தால் அநிர் வஸநீய அஞ்ஞானமும் –
அதன் அடியாக பிரபஞ்சமும் நீக்கப்படுபவை என்றும் கூறுவார்
ஸ குண சாஸ்திரங்கள் குணங்களை அபேக்ஷிக்கையாலே துர்லபம் என்றும்
நிர்குண சாஸ்திரங்கள் பலம் மிக்கவை என்றும்

ஸத்யம் ஞானம் அநந்தம் -சோதக வாக்கியமும் நிர்குண ப்ரஹ்மத்தையே கூறும் என்பர்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவம் அத்விதீயம் ப்ரஹ்மம் என்பதில்
ஸதேவ -விஜாதீயங்களான அசேதனங்களை விட்டு பேதத்தையும்
ஏகமேவ -என்று சஜாதீயன்களான சேதனங்களை விட்டு பேதத்தையும்
அத்விதீயம் என்று ப்ரஹ்மத்திடம் உள்ள ஸத்யத்வம் ஞானத்வம் போன்ற ஸ்வ கத தர்மங்களில் நின்றும் பேதத்தையும்
விலக்கி நிர்விசேஷ ப்ரஹ்மமே நிரூபிக்கப் படுகிறது
எனவே யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வவித்
தஸ்மாத் ஏதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னஞ்ச ஜாயதே முதலிய வாக்கியங்களில் உள்ள குணங்களை இல்லையாக்கி
நிர்க்குண ப்ரஹ்மமே கூறப்படுகிறது என்று காரண வாக்யத்துடன் ஐக்ய அர்த்தம் கொள்ள வேண்டும் என்பர் –

பிரமாணம் தர்க்கம் உபபாத்திகளைக் காட்டி நம் சித்தாந்தமான
பக்தி ரூபா பன்ன ஞானமே முக்தி உபாயம் -வெறும் தத்வ ஞானம் மட்டும் அல்ல
அது ஆசையால் கிட்டும் கேள்வி அறிவாலே கிட்டக்கூடியது விதிக்க வேண்டாம் என்று மஹா சித்தாந்தம்

இதுக்கு
ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் -அம்ருதம் ஆகிறான் சர்வ பாதங்களில் நின்றும் விடுபடுகிறான்
போன்ற வாக்யங்களிலே தத்வ ஞானமே முக்திக்கு வழி என்ற சங்கை
ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம்
காரணந்து த்யேய -என்பதால்
ஞானம் வேதனம் சொற்களுக்கு த்யானம் உபாஸனம் என்றே கொள்ள வேண்டும்
பக்தி ரூப ஞானமே முக்திக்கு சாதனம்
தஸ்மின் த்ருஷ்டே பராவரே -இதில் த்ருஷ்டே தர்சன சமானாகார சாஷாத்காரம் பெற தியானமே வழி
பேதங்களை ஏற்கக்கூடாது என்னும் பூர்வ பக்ஷிகளின் வாதத்தைக் கண்டித்து ஏற்க வேண்டும் என்று ஸ்தாபிக்கிறார்
தர்மமும் தர்மியும் எப்போதும் பேதம் உள்ளவையே

சத்யம் ஞானம் அநந்தம் ஸ்ருதி சஜாதீய பேதங்களைக் கண்டிக்க வில்லை
ஸதேவ -என்று ஸத்கார்ய வாதம்
ஏகமேவ -ஸூஷ்ம அவஸ்தை -உபாதான காரணம் காட்டும்
அத்விதீயம் -தன்னைத் தவிர வேறு நிமித்தம் இல்லை
கீதா வசனம் விஷ்ணு புராண வசனங்களைக் காட்டி அவன் ஒருவனே சமஸ்தத்துக்கும் அந்தர்யாமி என்று
நிர்விசேஷ ப்ரஹ்ம வாதத்தைக் கண்டித்தார்

ஏழுவித அனுபபத்திகள்
1- ஆஸ்ரய அனுப பத்தி -ஞானத்தால் பாதிக்கப்படும் அவித்யை ஞான ஸ்வரூபமான ப்ரஹ்மத்தையே
ஆஸ்ரயிப்பது பொருந்தாதே
ஸ்வரூப ஞானம் அவித்யைக்கு விரோதம் இல்லை என்பர்
இவன் தேவதத்தன்-இவனே தேவதத்தன் என்ற ப்ரத்யபிஜ்ஜை நினைவு ரூபமான ஞானத்துக்கும்-
இரண்டு நபர்கள் இல்லை என்று ஸ்தாபிக்கும் ஞானத்துக்கும் வாசி உண்டே
நீங்கள்கூறும் உதாரணம் வேறு வேறு காலத்து ஞானம்
ஆனால் இங்கோ ஒரே விஷயம் -நிர்விசேஷ ப்ரஹ்மம் பற்றிய ஞானம்
ஸ்வரூப ஞானமே ஜகத் என்னும் பிரமத்தைத் தடுக்கும் என்று கண்டிக்கிறார்
2-திரோதான அனுப பத்தி -ப்ரகாசமே வடிவான ப்ரஹ்மம் அவித்யையால் மூடப்பட்டது என்பது பொருந்தாதே
3-ஸ்வரூப அனுப பத்தி -ப்ரஹ்மத்திடம் அவித்யை தோஷம் உண்மையா சத்தியமா
உண்மை என்றாலே இரண்டு வஸ்துக்கள் கொண்டதாகும் அசத்தியம் என்றால்
அந்த அவித்யை பார்வையா பார்ப்பவனிலா பார்க்கப்படுபத்திலா –
ப்ரஹ்மமே தோஷம் என்றால் தோஷ நிவ்ருத்தியே ப்ரஹ்ம நாசமாகும்
4-அநிர்வசனீயத்வ அனுப பத்தி -அத்வைதிகள் அவித்யை ஸத் என்றோ அஸத் என்றோ
சொல்ல முடியாமல் அநிர்வசனீயம் என்பர்
ப்ரதீதி -உள்ளத்துக்குப் புலப்படுதலைக் கொண்டே அது ஸித்திக்க வேண்டும்
அது ஸத் என்றோ அஸத் என்றோ தோன்றுவதால் அநிர்வசனீயம் இல்லை
சத்தும் அசத்தும் இல்லாதது தான் அவித்யையின் விஷயம் என்றால் தோன்றாதது கூட ப்ரதீதியில் விஷயம் ஆகலாம்
அப்போது விஷயம் எது என்ற வ்யவஸ்தையே அற்றுப் போகும்
5-பிராமண அனுப பத்தி பாவ ரூபமான அஞ்ஞானம் உண்டு என்று ஏற்றுக் கொள்ள
அறிவற்ற நான் என்னையும் பிறரையும் அறிந்திலேன் -என்கிற ப்ரத்யஷம் பிரமாணம்
இந்தப் ப்ரத்யக்ஷம் உண்டாவதற்கு முன் இல்ல அபாவ -இன்மையை -விஷயமாகக் கொண்டது என்றால் பொருந்தாது
ஏன் எனில்
ஞானத்தின் பிராக் அபாவத்தை அதன் சம்பந்தியான பிரதியோகி ஞானத்தைக் கொண்டே நிரூபிக்க வேண்டும்
க்யாதி வாதங்கள்
சிப்பியைப்பார்த்து வெள்ளி என்ற பிரமம் -அநிர்வசநீயமான வெள்ளி உண்டாகிறது என்னும் அத்வைதி வாதம் நிரஸனம்
அக்யாதி
அந்யதா க்யாதி
ஆத்ம க்யாதி
அஸத் க்யாதி –பஷன்களில் அந்யதா க்யாதி சிறந்தது என்று விளக்கல்
அக்யாதி யோடே கூடிய யதார்த்த க்யாதியே சிறந்தது என்பதே ஸ்ரீ மன் நாத முனிகள் உகந்தது
சிப்பியில் வெள்ளியின் அம்சம் உண்டே
ஸ்வப்ன பொருள்களும் ஸத்யங்களே
கண்கள் ப்ரவ்ருத்தி விரலால் தடைப்பட்டு இரண்டு சந்திரன்கள் என்கை
மாயாந்து ப்ரக்ருதிம் –மாயா -விசித்ரார்த்த ஸ்ருஷ்ட்டி =மித்யா ஞானம் அல்ல
6- நிவர்த்தக அனுப பத்தி
தத் தவம் அ ஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம
நிர்விசேஷ ப்ரஹ்மாத்மைகத்வ ஞானம் அவித்யை நிவ்ருத்தி செய்யும் என்பர்
இது தவறு
ஜகத்தின் சரீரியான ப்ரஹ்மத்தையே குறிக்கும்
அம்ச அதிகரணத்தில் விளக்கம் உண்டே
பாஸ்கரன் உபாதி பேத அபேத வாதி
யாதவப்ரகாசர் ஸ்வ பாவிக பேத அபேத வாதி
தார்க் கிகன் ஸ்வ நிஷ்ட பேத வாதி
பிரகாரம் அப்ருதக் சித்தம் என்று உணராமல் பிதற்றல்கள் இவை
7- நிவ்ருத்தி -அனுப பத்தி -ஐக்ய ஞானத்தால் பந்த நிவ்ருத்தி என்பது பொருந்தாது
பகவத் பக்தியாலேயே நிவ்ருத்தி என்பதே சுருதி சித்தம்
ஐக்ய ஞானத்துக்கும் ஞாதா தனியே இருக்க ஒண்ணாதே
ஞானம் ஞாதா ஜேயம்-மூன்றும் வேண்டுமே
ப்ரஹ்ம ஞானமே அநந்தமான ஸ்திர பலனைக் கொடுக்கும்

இனி ஸித்த வஸ்து ரூபமான ப்ரஹ்மத்தை போதிக்கும் சக்தி இல்லை என்னும் மீமாம்ஸகனை நிரசிக்கிறார்
ப்ரஹ்ம ப்ராப்திக்கு ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும் என்னும் வேத வாக்கியங்கள் பிரமாணங்களே
ப்ரஹ்ம விசாரம் தொடங்குவதில் எந்தவித விரோதமும் இல்லை –

1-அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச –1-1-1-

அறிவதில் ஆராய்வதில் உள்ள விருப்பம் -எதனை ஆராய்வதில் எதனால் –
அத -இந்த காரணத்தினால் -மோஷ பலனை அளிக்க வல்ல

ப்ரஹ்ம சப்தேன ச ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ –அனவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கண -புருஷோத்தம -அபிதீயதே –

அத -வேதத்தின் ஒரு பகுதியான கர்ம காண்டத்தை விசாரித்த பின்பு
அத -ப்ரஹ்ம ஞானம் இல்லாதவன் கர்மங்கள் அல்ப அஸ்திர பலன்களையே கொடுக்கும் என்பதால்
ப்ரஹ்ம ஞானம் அநந்த ஸ்திரம் ஆகையாலும்
ப்ரஹ்ம விஷயகமான மீமாம்ஸை -விசாரம் –
கர்த்தவ்ய -என்ற பதம் வருவித்துக் கொண்டு செய்யப்பட வேண்டும்
ப்ரஹ்ம -அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைக குணதானனாய் -ஸ்ரீயப்பதியான புருஷோத்தமன்
ஆகவே ப்ரஹ்ம விசாரம் செய்யத்தக்கதே –

அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
ப்ரஹ்ம சப்தேன ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ
அநவதிக அதிசய அசங்க்யேய புருஷோத்தம அபிபீதயதே
அநவதிக அதிசய -உயர்வற
அசங்க்யேய -உயர்
கல்யாண குண-நலம் உடையவன்
புருஷோத்தமன் -யவனவன்—

————

ப்ரஹ்மத்துக்கு லக்ஷணம் யாது என்ற கேள்வி எழ
இது தோன்றுகிறது

இரண்டாம் அதிகரணம் ஜந்மாத்யாதி அதிகரணம்

2- ஜந்மாதி அஸ்ய யத–1-1-2-

தைத்ரிய உபநிஷத் –
ப்ருகு தந்தை வருணனிடம் கேட்க வருணன் அளித்த பதில் –
யதோ வா இமாநி பூதா நி ஜாயந்தே -யேன ஜாதாநி ஜூவந்தி யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி
தத்வி ஜ்ஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்மேதி —என்பதே விஷய வாக்கியம்

உலகில் பிறப்பு முதலியவற்றுக்கு காரணமாய் இருத்தல்
இது ப்ரஹ்மத்துக்கு லக்ஷணமாக இருக்கலாமா கூடாதா சம்சயம்
ஸ்ருஷ்டி காரணத்வம்
ஸ்திதி காரணத்வம்
லய காரணத்வம்
என்று விசேஷணங்கள் பலவாய் இருப்பதால்
விசேஷ் யாமும் பலவாகி விடுமே
ப்ரஹ்மமும் பலவாகி விடுமே
ஆகையால் லக்ஷணம் என்று ஏற்க முடியாது -பூர்வ பக்ஷம்

ஜன்மாதி –அஸ்ய –யத –மூன்று பதங்கள்–
இந்த விசித்திரமான ஜகத்துக்கு -ஸ்ருஷ்டி ஸ்திதி -ப்ரளயங்கள் -எந்த ப்ரஹ்மத்தினிடம்
இருந்து உண்டாகின்றனவோ அவனே ப்ரஹ்மம் -என்றவாறு
ப்ரஹ்மம் -காரணப்பெயராகக் கொண்டால் உபய லிங்கமும்
இடுகுறிப் பெயராகக் கொண்டால் ஸ்ரீயப்பதித்வமும் ஸித்திக்கும்
ஜன்மாதி காரணத்வம் விசேஷணமாகவும் உபலக்ஷணமாகவும் கொள்ளலாம்
ப்ரஹ்ம வித்யைகள் பல உண்டே
உபாஸ்ய குண பேதத்தால் உபாஸ்யமும் பின்னமாகலாம்

காரணந்து த்யேய
சதவித்யையில் காரணத்வம் அறிய வேண்டும் என்பதால் விசேஷணமாக கொள்ள வேண்டும்
தஹர உபாஸனத்தில் ப்ரஹ்மத்தில் தோற்றம் ஏற்படுகையில் பொருந்தியும் இருப்பதால் காரணத்வம் உப லக்ஷணம் ஆகும்
இதில் அபஹத பாப்மத்வாதிகளே அறியத்தக்க ஆதாரம் ஆகையால் ஸ்ம்ருதி வ்யக்தி தோறும் தொடர்ந்து
விசேஷணம் ஆகின்றன என்று வித்யா பேதத்தாலே விஷயமும் வெவ் வேறு ஆவதால்
பாஷ்யத்தில் இரண்டு வகைகளும் காட்டப்பட்டது பொருந்தும்

யதோவா இமானி பூதாநி –சேதன அசேதனாத்மகமான ஸமஸ்த வஸ்துக்களுடைய ஸ்வரூபத்தை நிரூபிப்பது
ஸத்யம் ஞானம் அநந்தம் வாக்கியம் வேறுபட்ட ஸ்வரூபத்தை விளக்கும்
ஆகையால் இரண்டு லக்ஷண வாக்யங்களுமே பயனுள்ளவையே –

———-

உபாதான காரணமாயும் நிமித்த காரணமாயும் உள்ள ப்ரஹ்மமே வேதாந்த வாக்யங்களால்
விளக்கப்படுகிறது என்று கூறுவது பொருந்தாது
ஏன் எனில்
ப்ரஹ்மம் அனுமானத்தாலேயே ஸித்திப்பதால்
அந்த அனுமானமே தர்மியான ப்ரஹ்மத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய பிரமாணமாகையாலே
பிரபலமாதலின் வேறு ப்ரமாணங்களாலே சாதிக்க முடியாததையே ஸாஸ்த்ரம் ஸாதிப்பதில் பயன் உண்டு என்பதால்
அனுமான ஸித்தமான ப்ரஹ்மத்தை ஸாஸ்த்ரம் உபாதான காரணனுமாகும் என்று கூற ஒவ்சித்யம் இல்லை
ஆதலின் ஸாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தேவை இல்லை என்று பூர்வ பக்ஷம்
அந்த அனுமானத்தைக் கண்டித்து
ஸாஸ்திரமே பிரமாணம் என்றும்
அதனால் ஆரம்பிக்கப் பட வேண்டியதே என்றும்
அடுத்தபடி ஸாதிக்கிறார் –

3-சாஸ்திர யோநித்வாதிகரணம்-

சாஸ்திர யோநித்வாத்–1-1-3-

ஸாஸ்த்ரத்தையே ப்ரமாணமாகக் கொண்டது ப்ரஹ்மம் என்றவாறு

பூமி முதலியவை கர்த்தாவைக் கொண்டவை -செய்யப்படும் பொருளாய் இருப்பதால் –குடம் முதலியவை போலே –
செய்யப்படாதவைக்குக் கர்த்தா கிடையாது –ஆத்மாவைப் போலே
என்று இவ்வாறு அந்வய கேவல வ்யாதிரிகி அனுமானங்களால் ஜகத் காரணமான ப்ரஹ்மம் அறியக்கூடுமாதலின்
யதோவா இமானி -இத்யாதி வாக்கியங்கள் ப்ரஹ்மத்தை உள்ளபடி அறிவிக்க மாட்டா என்பது பூர்வபக்ஷம்

ஜகத் என்பது கார்யம் -செய்யப்படுவதே என்றாலும்
ஒரே காலத்திலே ஒரே புருஷனாலே சர்வ ஜகத்தும் படைக்கப்பட்டது என்பதில் பிரமாணம் இல்லாதபடியால்
விச்வாமித்திராதிகளைப் போன்ற ஜீவர்களுக்கே விசித்ர ஸ்ருஷ்டி சம்பவிக்குமாகையாலே
ஜீவனை விட்டு வேறான ஸர்வஞ்ஞத் வாதி குணங்களை யுடைய ப்ரஹ்மம் அனுமானத்தால் ஸித்திக்காது
அதற்கு ஸாஸ்திரமே பிரமாணமாக வேண்டும் என்பது ஸித்தாந்தம்

அனுமானாதிகளாலே உள்ளவாறு அறிய ஒண்ணாமையாலே
யதோவா இமானி -என்ற வாக்கியம்
உபாதான காரணமாயும் நிமித்த காரணமாயும் உள்ள ப்ரஹ்மத்தைப் போதிப்பதால் ஸாஸ்திரமே பிரமாணம் ஆகிறது –
ஆகவே ப்ரஹ்மம் ஸாஸ்த்ர யோனியாகிறது
பிற பிரமாணங்கள் போதிக்காது என்பதாம் –

————-

ப்ரஹ்மம் ஸாஸ்த்ரத்தால் மட்டுமே அறியக் கூடியதாய் இருப்பினும் –
ஸப்தம் ஸித்த வஸ்துக்களைப் போதிக்கும் திறனைப் பெற்று இருப்பினும்
ப்ரவ்ருத்தி என்பது -அறிய வேண்டும் என்னும் விருப்பத்துக்குக் காரியமாக இருப்பதாலும் –
அவ்விருப்பும் பிரயோஜனம் பற்றிய ஞானத்தைச் சார்ந்து ஆதலாலும் –
அந்த பிரயோஜனமும் அதற்கான சாதனங்களை அனுஷ்ட்டிப்பத்தைச் சார்ந்து இருப்பதாலும்
ஸித்த பரமான வாக்யத்துக்கு பிரயோஜனமான சுகமும் -துக்க நிவ்ருத்தி -அவற்றின் சாதனத்தை அனுஷ்டித்தல்
இவற்றின் விஷயத்தில் போதனத்தினால் ப்ரவர்த்தகத்வம் என்பது இல்லாததால்
ப்ரயோஜனத்தில் முடிவு பெறுதல் என்பது இல்லை
ஆதலால் வேதாந்த வாக்யங்கள் ஸித்தமான வஸ்துவைப் போதிக்கும் கருத்துடையவை அல்ல என்பது சங்கை
இத்தை நீக்கவே இந்த அதிகரணம் –

4-சமந்வயாதிகரணம்-

தத் து சமன்வயாத் –1-1-4–

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் போன்ற வாக்கியங்கள் ப்ரவ்ருத்திக்கும் நிவ்ருத்திக்கும்
விஷயமாகாத ப்ரஹ்மத்தை போதிக்க மாட்டா
ஆகையால் வேதாந்த அர்த்த விசார ரூபமான ஸாஸ்த்ரம் ஆரம்பிக்க வேண்டியது இல்லை
என்பது பூர்வ பக்ஷம்

வீட்டுக்குள் புதையல் இருக்கிறது போல் ஈடற்ற ஆனந்த ரூபமான ப்ரஹ்மத்தை
இந்த வாக்கியங்கள் போதிக்கும் சக்தி கொண்டவையே
ஆதலின் ஸாஸ்த்ர விசாரம் ஆரம்பிக்கத் தக்கதே என்பது சித்தாந்தம்

உபாசகனுக்கு பயனாக ப்ரஹ்மமும்-ப்ரஹ்மத்துக்கு பயனாக உபாசகனும் ஆவதால்
கர்மங்களையும் பலன்களையும் சொல்லும் வேதங்கள் பிரமாணங்கள் ஆகும்

தத் து சமன்வயாத் -மூன்று சொற்கள்
து பூர்வ பக்ஷ நிரஸனம்
தத் -சாஸ்திரத்தையே ப்ரமாணமாகக் கொண்டமை ஸம்மபவிப்பதே
சமன்வயாத்-ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
ஆனந்தோ ப்ரஹ்ம
முதலிய வாக்யங்களுக்கு ப்ரயோஜன பூதமான ப்ரஹ்மத்தை ஆனந்த ரூபமாக விளக்கும் தன்மையால்
சமன்வயம் -பொருத்தம் ஏற்படுவதால்
ஸாஸ்த்ர யோனித்வம் கூடும் –

——————-

இவ்வாறு நான்கு அதிகரணங்களால் ஸாஸ்த்ர ஆரம்பத்தைச் சரியானதே என்று நிலை நாட்டி
ப்ரஹ்ம விசாரத்தை தொடங்குகிறார்

5-ஈஷத் யதிகரணம்

இதில் எட்டு ஸூத்ரங்கள்

கீழே வேதாந்த வாக்யங்களுக்கு ப்ரஹ்மத்தை பரம புருஷார்த்த ரூபமாக விளக்குவது
சமன்வயமே பொருத்தமே என்பதை பூர்வ பக்ஷி மறுக்கிறார்
புருஷார்த்தம் அல்லாத பிரதானம் முதலானவற்றை காரணமாக விளக்குவதால் என்று ஆக்ஷேபித்து
இந்த அதிகரணம் தொடங்குகிறது என்பது சங்கதி –

5- ஈஷதேர் ந அ சப்தம் –1-1-5-

சாந்தோக்யத்தில் -ஸ்வேதகேதுர் ஹாருணேய ஆச -என்று தொடங்கும் ஆறாம் அத்தியாயத்தில்
ஜகத் காரணமாகக் கூறப்படும் ஸத் -என்பது
அனுமானத்தால் சித்திப்பதும் சாங்க்யர்கள் கூறும் பிரதானம் -பிரகிருதியா அல்லது ப்ரஹ்மமா என்று சங்கை
பிரதானம் தான் என்று பூர்வ பக்ஷம்

ஏன் எனில்
இதம் என்ற சொல்லால் கூறப்படும் சேதனர்களின் போக்யமான ஸத்வ ரஜஸ் தமோ மயமான ஜகத்துக்கு
அதே விதமான பிரதானம் காரணம் என்கை உசிதமானது
ஜகாத்தை விட விலக்ஷணமான ப்ரஹ்மம் காரணம் என்பது பொருந்தாது
பிரதானம் ஜகத்துக்குக் காரணம் என்பதற்கு அனுமானம்
இந்த ஜகத்து தன்னைத் தவிர வேறே அல்லாமல் தன்னையே உபாதான காரணமாகக் கொண்டது
காரியமாய் இருப்பதால் குடம் போல் என்பதும்
இந்த ஜகத்து தன் காரணம் ஒன்றை அறிவதாலேயே முற்றும் அறியப்படுவது -காரியமாய் இருப்பதால்
ஒரு மண் உருண்டையால் தொடங்கப்பட்ட குடம் போல் என்பதும் ஆகிய இரண்டு அனுமானங்களாலும்
சாதனமானவை என்பது பூர்வ பக்ஷம் –

பரம புருஷனே ஜகத் காரணம் என்றும் ஸத் என்றும் சொல்லப்படும் பர ப்ரஹ்ம ஸ்வரூபம்
அவனே ஸூஷ்ம சேதன அசேதனங்களுடன் சேர்ந்தவன் என்ற ரூபத்தால் காரணமானாலும்
ஸ்தூலமான சேதன அசேதனங்களுடன் சேர்ந்தவன் என்ற ரூபத்தால்
காரியமாகிய ஜகத்தின் ரூபத்தில் உள்ளவன் என்பதால் காரியமும்
காரியமும் காரணமும் ஒரே விதமானமையால் பரமபுருஷனே ஸத் எனப்படும்
ஜகத் காரணம் என்பது சித்தாந்த யுக்தி –

ஈஷதேர் ந அ சப்தம் –
இதில்
அ -சப்தம் மட்டும் ப்ரமாணமாகக் கொள்ளாத அனுமான பிராமண கம்யமான பிரதானம்
ந -ஸத் எனப்படும் ஜகத் காரணம் அன்று
ஏன் எனில்
ஈஷதேர்-நான் பலவிதமாக மாறப்போகிறேன் என்று சங்கல்பித்துக் கொண்டார்
தத் ஈஷதே பஹுஸ்யாம் ப்ரஜாயேய -என்ற சங்கல்பம்
அசேதனமான ஜகத்துக்குச் சேராதே என்பதால்
ஸர்வஞ்ஞத்வம் முதலியவற்றுடன் கூடிய ப்ரஹ்மமே ஜகத்தின் காரணமாகும் என்பதாம் –

——–

6- கௌண சேத் ந ஆத்ம சப்தாத் –1-1-6-

தேஜஸ் பார்த்தது தண்ணீர் பார்த்தது முதலிய வாக்கியங்களில்
ஈஷ என்ற வினைப்பகுதியால் சங்கல்பம் என்பதை உபசார வாக்காக -கௌணமாக -கொள்வது போல்
இங்கும் கொண்டால் பிரதானம் காரணம் என்பதில் தடை இல்லையே
ஈஷணம் என்பது ஸ்ருஷ்டிக்கு முந்திய நிலையாகிய முக்கியமில்லாத ஈஷணத்தைச் சொல்வது என்றால்

கௌண சேத் ந -அஃது இல்லை
ஏன் எனில்
ஆத்ம சப்தாத் -ஐததாம்யம் இதம் ஸர்வம் தத் ஸத்யம் ச ஆத்மா என்று –
சேதன அசேதன ரூபமான சர்வ ஜகத்துக்கும் ஸத் என்பதே ஆத்மா என்பதால்
பிரதானம் ஸர்வ ஜகத்துக்கும் அந்தர்யாமியான ஆத்மாவாய் இருத்தல் பொருந்தாது என்று கருத்து –

———

7-தந் நிஷ்டஸ்ய ச மோஷ உபதேசயாத் –1-1-7-

தந் நிஷ்டஸ்ய ச -சத்தே ஆத்மா என்றது -சந்திக்கும்
மோஷ உபதேசயாத் –புருஷனுக்கு உடலை விட்டதும் ப்ரஹ்மத்தை அடைதல் என்கிற மோக்ஷத்தை உபதேசிப்பதால்
அசேதனமான பிரதானம் காரணம் -காரணமே த்யானிக்கப் படுவதால் –
எதை உபாஸிக்கிறானோ அதே பலம் -தத் க்ரது -நியாயத்தால் –
தாப த்ரயங்களுக்கு காரணமான அசேதனத்தை அடைதலே -சம்பத்தியே -மோக்ஷம் -என்றதாகும்
பிரதானத்தைக் காரணமாக் கூறும் சாங்க்யர்களும் இதனை ஏற்பது இல்லையே என்று கருத்து –

யாதாக்ரது ரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -சாந்தோக்யம் -3-14-1–என்றபடி
பிரக்ருதியை எவ்வாறு உபாசிக்கிறானோ இறந்தபின் அப்படியே ஆகிறான் -எனவே சத் எனபது பிரகிருதி அல்ல-

சத் வித்யா பிரகரணத்தில்-சாந்தோக்யத்தில் –
ஆச்சார்யவான் புருஷ வேத -தஸ்ய தாவதேவ சிரம் யாவன்ன விமோஷ்யே அத சம்பத்ஸ்யே-என்று
சத் உபாசனமே மோக்ஷ உபாயமாக சொல்லப்பட்டது –
எவனுக்கு உபதேஷ்டாவான ஆச்சார்யன் இருக்கிறானோ அவனே ப்ரஹ்ம வித்தாவான் –
சரம சரீரத்தில் இருந்து விடுபடலாம் அளவே அவனுக்கு கால தாமதம் –
சரம சரீரம் விழுந்த உடனே சத் சப்த நிஷ்டானாய் ஜகத் காரண பூதனான பரம புருஷனை அடைகிறான்
சத் உபாசன நிஷ்டனுக்கு சரீரம் விழும் அளவு தான் மோக்ஷ ப்ராப்தியில் தாமதம் –
சரீரம் தொலைந்த உடன் முக்தன் ஆகிறான் –
அதனால் நாராயணனே ஸச் சப்த வாச்யன் என்று அறுதி விடப்படுவதால்
ப்ராக்ருதமான வஸ்து பிரதானம் அன்று என்பதே ஸூத்ரத்தின் தாத்பர்யம்

தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி -இத்யாதிகளால்–இதே தத் சப்தம் –
இதே தத் சப்தம் -தன்னிஷ்டஸ்ய -வாக்யத்திலும்
எனவே – நாராயண உபாசனமே மோக்ஷ உபாயம் -என்றதாயிற்று

————

8-ஹேயத்வா வச நாத் ச –1-1-8-

சத் என்பதை தாழ்வாகவும் தவறாகவும் சொல்ல வில்லை –
உபாசனை செய்யலாம் -எனவே அது ப்ரஹ்மமே

ப்ரதானமே ஸத் எனும் ஜகத் காரணமாகில்
மோக்ஷம் விரும்புகிற ஸ்வேதகேதுவுக்கு தன்னை பிரதான ஆத்மகன் என்று உபாஸிப்பது
மோக்ஷ விரோதியாதலின் அது விலக்கத் தக்கது என்று உபதேசித்து இருக்க வேண்டும் –
அவ்வாறு உபதேசிக்காமையாலும் பிரதானம் காரணம் அன்று –

———–

9-பிரதிஜ்ஞ்ஞா விரோதாத் –1-1-9-

சத் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்றோம் அதனால் அது பிரகிருதி இல்லை ப்ரஹ்மமே –
அறிவற்ற பொருள் அறிவுடையார்க்கு உணர்த்தாதே –

பிரதானம் காரணம் என்னில் செய்த ப்ரதிஜ்ஜையும் விரோதிக்கும் –
அதாவது முதலில் -யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி –என்று
காரணத்தை அறிந்தால் கார்யங்கள் அனைத்தும் அறியப்பட்டு விடும் என்று ப்ரதிஜ்ஜை செய்யப் பட்டது
ஸத் என்பது ப்ரஹ்மமே என்று கொண்டால் தான் இந்த ப்ரதிஜ்ஜை பொருந்தும்
பிரதானம் ஸத் என்னும் சொல்லின் பொருள் என்றால்
அந்த சேதனம் சேதனத்துக்குக் காரணம் ஆக மாட்டாதே என்பதால்
ஜகத் அத்தனையும் அறியலாம் என்ற ப்ரதிஜ்ஜை பொருந்தாது ஆகும் –

———–

10 –ஸ்வாப்யயாத்–1-1-10-

தூங்கும் பொழுது சத் உடன் கலக்கிறோம்
சத் ப்ரஹ்மமே

சாந்தோக்யம் -6-8-1-
யத்ரை தத் புருஷ ஸ்வ பிதி நாம சதா சோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வ மபீதோ பவதி
தஸ்மா தேநம் ஸ்வ பி தீத்யாஸ் ஷதே ஸ்வம் ஹயபீதோ பவதி –

ஸதா சோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வ மபீதோ பவதி-முதலிய வாக்யங்களில் ஸூஷுப்தி தசையில் ஜீவன்
ஸத்திலே லயித்து இருப்பதாகக் காண்கிறது
பிரளயம் என்பது காரியப்பொருள் காரணத்திலே லயம் அடைதலே
இதனாலும் பிரதானம் காரணம் அன்று
எங்கு இந்த ஜீவன் உறங்குகிறானோ என்னும் இடத்தில் புருஷ என்னும் சொல்
விழித்து இருக்கும் ஜீவனை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தைக் குறிப்பிடுகிறது
அந்த ப்ரஹ்மம் ஸூஷுப்தி காலத்தில்
மனுஷ்யாதி நாம ரூப சம்பந்தத்தை விட்டு வெறும் ஸத் என்ற சொல்லின் பொருளாகிறது என்பதாம் –

————-

11-கதி சாமான்யாத் –1-1-11–

ஐத் ரேய உபநிஷத் -1-1-
ஆத்மா வை இதம் ஏக ஏவாக்ர ஆஸீத் -ஆத்மா என்னும் பொருளாக இது -சத் -இருந்தது –
தைத்ரியம் -2-1-1-
ஆத்மன ஆகாச சம்பூத -இந்த பிரமத்தில் இருந்து ஆகாசம் யுண்டாயிற்று
இவற்றால் ஸ்ரீ மன் நாராயணனே சத் என்றும் உலகின் காரணம் என்றதும் ஆயிற்று –

கதி சாமான்யாத்-
கதியாவது -பிரவ்ருத்தி -அதாவது அர்த்த போதகத்வம் –
சாமான்யாத்-அது சாமானமாய் இருக்க வேண்டியது அவசியம் ஆகையால் -என்றவாறு
காரண வாக்கியங்கள் எல்லாம் ஒரே மிடறாக இருக்க வேண்டியதாகையாலே என்றவாறு
அத புருஷோ ஹ வை நாராயணோ காமயத -என்றும்
ப்ரஜாஸ் ஸ்ருஜ்யேதி-என்றும் –
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் –என்றும்
ந ப்ரஹ்மா நேசாநோ நேம த்யாவா ப்ருத்வீ -என்றும்
நாராயணனுக்கே ஜகத் காரணத்வம் ஓதப்பட்டுள்ளதே
ஸச் சப்த தேவதா வாக்கியங்கள் -சப்தங்கள் நாராயணன் இடமே பர்வசிக்கும் –
பிரதானம் பிரகிருதி ஸச் சப்த வாஸ்யம் அன்று-

இது போன்ற பல உபநிஷத் வாக்யங்களுக்கு எந்த கதியோ -நியாயமோ -அதே கதி
முன்பு ஸத் ஒன்றாய் இருந்தது முதலிய வாக்யத்துக்கும் சமானம்
அவற்றில் எல்லாம் பரம புருஷனே ஜகத் காரணம் என்று நிச்சயித்து இருக்கிற படியால்
பரம புருஷனே ஸத் என்ற சொல்லின் பொருளாம் –

———-

12- ஸ்ருதத்வாச்ச –1-1-12–

ஆத்மத பிராண ஆத்மத ஆகாச ஆத்மத ஏவேதம் சர்வம்–சாந்தோக்யம் -7-26-1- என்று
இந்த ப்ரஹ்மத்தில் இருந்து சுவாசம் ஆகாசம் அனைத்தும் உண்டானது என்பதால்-

அத சர்வஞ்ஞ -சர்வ சக்தி -சர்வேஸ்வரேஸ்வர-நிரஸ்த நிகில தோஷ கந்த -அனவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணவ் மஹார்ணவ -புருஷோத்தமோ நாராயண ஏஷ நிகில
ஜகத் ஏக காரணம் ஜிஜ்ஞ்ஞாஸ்யம் ப்ரஹமேதி ஸ்திதம்

இந்த ஸத் வித்யையிலும் ஸத் என்பதே ஆத்மா என்ற பெயருடன் நாம ரூபங்களை ஏற்படுத்தியது என்றும்
ஸர்வஞ்ஞன்–பாபங்கள் ஒட்டாதவன் -போன்ற பல கல்யாண குணங்கள்
இந்த ஜீவாத்மாவுடன் அனுபிரவேசம் செய்து நாம ரூபங்களை விளக்குகிறேன்
இந்த எல்லா பிரஜைகளும் சத்தை காரணமாக் கொண்டவையே
பாபம் அற்றவன் ஜரா மரணாதிகள் அற்றவன் முதலிய வாக்யங்களால் பொருத்தமாகக் கூறப்படுபவன்
ஸத் எனப்படும் ஸகல ஜகத் காரணமான பரம புருஷனே என்று ஸித்தாந்தம்

இந்த அதிகரணத்தால் கல்யாண குண பூர்ணனான பர ப்ரஹ்மமே ஸத் என்பதால்
நிர் குணம் நிர் விசேஷமாய் உள்ள ப்ரஹ்மம் என்ற அத்வைதி வாதம் நிரசிக்கப் பட்டது –

———–

6-ஆனந்த மயாதிகரணம்-

கீழே ஈஷணம் -சங்கல்பம் இல்லாத அசேதனத்தை விட ப்ரஹ்மம் விலக்ஷணம் என்று நிரூபணம்
ஈஷணம் சத்துக்கு வேண்டும் என்றால் அதுக்குத் தகுதி உள்ள ஜீவனே ஸத் என்றும் காரணம் ஆகட்டும்
அல்லது ஸத் வித்யையில்
அநேந ஜீவேந ஆத்மநா
தத் த்வம் அஸி என்று
விசேஷண விசேஷ்ய பாவ சாமானாதி கரண்யத்தால் ஜீவ ப்ரஹ்மங்களுக்கு ஐக்யம் சொல்லுவதாலும்
பக்தன் முக்தன் இரு நிலைகளை உடைய ஜீவனே காரணமாகட்டுமே
என்ற சங்கையை நிரஸிக்க
ஸத் எனப்படும் ப்ரஹ்மத்துக்கு ஜீவனைக் காட்டிலும் வேறு பாட்டை நிரூபிக்கிறார் இதில்
என்று அதிகரண சங்கதி –

13- ஆனந்த மய அப்யாசாத் –1-1-13-

தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஜ்ஞானமயா தன்யோந்தர ஆத்மாநந்தமய தே நைஷபூர்ண -ஆனந்த வல்லி–என்று
விஷய வாக்யம்

முந்திய வரில் ஆத்மாவிடம் இருந்து ஆகாயம் -ஆகாயத்தில் இருந்து காற்று -காற்றில் இருந்து அக்னி -அக்னியில் இருந்து நீர்
நீரில் இருந்து பூமி -பூமியில் இருந்து தாவரங்கள் -தாவரங்களில் இருந்து உணவு -உணவில் இருந்து உடல் –
விஜ்ஞான மயம் மட்டும் அல்ல ஆனந்தமே உருவாக ஓன்று உள்ளது –

ஆனந்த மயம் என்பது பக்தனும் முக்தனும் அல்லாத பரமாத்மாவா அல்லது ஜீவனா என்ற சங்கை
ஜீவனே என்று சாங்க்யன் -பூர்வபஷி
ஏஷ ஏவ சாரீர ஆத்மா
தத் த்வம் அஸி -என்பதாக ஜீவ ப்ரஹ்ம ஐக்யம் தோன்றுவதால் ஜீவனே என்பது பூர்வ பக்ஷம்
சாரீரத்வம் சரீர சம்பந்தம் ஜீவனுக்கே பொருந்தும் என்பர்

இவ்வாறு கூறும் சாங்க்யனை ப்ரஹ்மத்துக்கு அஞ்ஞானம் கூறும் அத்வைதி எதிர்க்க
நநுச ப்ரஹ்ம புச்சம் ப்ரதிஷ்டா என்று அத்தை சாங்க்யன் எதிர்க்க
அந்த சாங்க்யனையும் -நைவ -என்று தொடங்கி சித்தாந்தி கண்டிக்கிறார் –

இந்த அதிகரணத்தில் பூர்வ பக்ஷ ஹேதுக்கள் இரண்டு –
தத் த்வம் அஸி-என்றும் சாமானாதி கரண்யமும் -சாரீரத்வமும்
நிர் விசேஷமே பொருள் என்றால் பிரகரணத்தின் விரோதமும் –
இரண்டு பதங்களின் பரியாலோசனையுடன் சாமானாதி கரண்யம் பற்றி ஆலோசியாமையும் குற்றமாகின்றன
சாமானாதி கரண்யம் என்பதற்கு வையாகரணர் கூறிய லக்ஷணம் –
வெவ்வேறு பொருளுள்ள பதங்கள் ஒரே பொருளை விளக்கும் நிலை -என்றபடி
விசிஷ்டமான அர்த்தத்தைக் காட்டுவதாக சமர்த்திக்கின்றார்

அந்த லக்ஷணமாவது –
பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் ஸப்தானாம் ச ஏகஸ்மின்னர்த்தே வ்ருத்தி
அதாவது
ப்ரவ்ருத்தி என்றால் ஒரு சொல் இந்த அர்த்தத்தைப் போதிக்கும் என்ற நியதி
சிறப்பாக விசேஷ் யமான சொல்லின் பொருளையே விசேஷணமும் போதிக்கை தான் ப்ரவ்ருத்தி
அதுக்கு நிமித்தம் -த்வாரம் -விசேஷமான ஜாதி இனம் குணம் முதலியவை
அவற்றைக் குறிப்பிடும் சொற்கள் ஒரே விசேஷ் யமான அர்த்தத்தை
வ்ருத்தி -போதித்தல்

இந்த சாமானாதிகரண்யம் நிர் விசேஷத்தைப் போதிக்க மாட்டாது என்று கண்டித்ததுடன்
தன் மதத்தில் மீமாம்சகர் கூறும் அருணாதி கரண நியாயம் பொருத்தமாய் இருப்பதையும்
அவ்வதிகரணத்துக்கு நிரீஸ்வர மீமாம்சகன் அர்த்தத்தைக் கண்டித்து
தம் மதப்படியான பூர்வ பக்ஷ சித்தாந்தகளையும் கூறி அருளுதல்
பின்னர் தத் த்வம் இரு சொற்களுக்கும் விஸிஷ்ட அர்த்தமே பொருள் என்று நிறுவி
ஜாதி இனம் குணம் இவற்றைக் குறிக்கும் சொற்கள் கோ பசு முதலியவை குறிப்பிட்ட
வியக்தியை – பொருளை -விளக்கும் ஆற்றல் பெற்று இருப்பது போலவே
சரீரத்தைக் கூறும் சொற்களும் சரீரியான ஆத்மா வரை பொருளைக் காட்டுமவை எனக் காட்டல்
இவ்வாறு சாமானாதி கரண்யம் என்ற ஹேதுவைக் கண்டித்து
பின் சாரீரத்வம் -சரீர சம்பந்தம் -என்ற ஹேதுவையும் கண்டிக்கிறார்

பரம புருஷனே – தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா –தைத்ரியம்
ஞான மயன் ஆத்மா-ஜீவன் தான் அவனுக்குள்ளும் இருக்கும் ஆனந்த மயன் பரமாத்மா –
சாரீரம் எனப்படுபவன் ஆதலின்
அவனது ஆனந்தத்தை அளக்க இயலாது –

சைஷா நந்தஸ்ய மீமாஸ் ஸா பவதி –
மனுஷ்ய ஆனந்தத்தை விட பல கோடி நூறாயிரம் மடங்கு ஆனந்தம்

யஸ்யாத்மா சரீரம் சுருதி வாக்யத்தால்
அந்த பரம் பொருளுக்கு உடல் தொடர்பு உண்டே -எனவே
ஆனந்த மயனாக சொல்லப் படுபவன் பரம் பொருளே-

————-

14-விகார சப்தாத் ந இதி சேத் ந ப்ராசுர்யாத் –1-1-14-

ஆனந்த மய என்பதில் மய என்ற விகுதி புலப்படுதலால்-விகாரம் என்ற பொருளில் அவ் விகுதி உள்ளமையால்
நிர் விகாரமான ப்ரஹ்மத்தை ஆனந்த மயம் என்ற சொல் பொருந்தாது
இயற்கையாய் ஆனந்த ரூபமான ஜீவனுக்கு சுக துக்கங்களுக்குக் காரணமாக சம்சார நிலை விகாரமாதலின்
ஆனந்தமயன் என்பது ஜீவனே
பரம புருஷன் ஆனந்த மயன் அல்லன் என்றால்

இதி சேத் ந -இவ்வாறு கூறுவது பொருந்தாது
ப்ராசுர்யாத் –யாத்ரை முழுவதும் வண்டி மயம் போல் ப்ராசுர்யம்-மிகுதி என்ற பொருளிலும்
மயட் -என்ற விகுதி பயன்படுத்தப் படுவதால்
நிகரற்ற ஆனந்தம் நிறைந்தவனான பரம புருஷனே ஆனந்த மயன் ஆவான்

ஆனால் ஆனந்தம் பிரசுரம் -மிகுதி என்றால்
துக்கமும் ஸ்வல்பம் உண்டு என்று பொருளாகுமே
அப்போது ப்ரஹ்மம் துக்கம் கலந்து என்னலாகாதோ என்னில்
அப்படி அன்று
கிரணங்கள் மிகுந்தவன் கதிரவன் என்றால் இருளும் சிறிது கலந்தவன் என்ற பொருள் எப்படி ஆகாதோ
அப்படியே அபஹத பாப்மா விஜர முதலிய வாக்யங்களால் துக்கம் அல்பமும் ஒட்டாது என்று கருத்து –

———–

15-தத்தேது (ஹேது)-வ்யபதேசாத் ச-1-1-15–

ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்று அவன் ஆனந்தம் அளிப்பவன் என்றும்
கோ ஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-என்று
அவன் இல்லை என்றால் யாராலும் ஆனந்தம் அனுபவிக்க முடியாது என்றும் தைத்ரியம் கூறுவதால்
ஆனந்தம் அடையும் ஜீவனை விட ஆனந்தத்தில் காரணமான பரமாத்மா வேறானவன் என்றவாறு

———-

16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே–1-1-16-

தைத்ரியம் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்றும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் ப்ரஹ்மம் ஜீவனை விட உயர்ந்தது என்கிறது

ஜீவனுக்கு ப்ரஹ்மமே ப்ராப்யம் -என்று கூறி
ததேஷாப்யுக்தா -முதலிய ப்ராஹ்மணம் மந்த்ரவர்ணம் முதலிய வாக்யங்களாலே சொல்லி
அந்த ப்ரஹ்மமே ஆனந்த மயன் -ஜீவனில் வேறு பட்டவன் என்று உறுதி ஆகிறது

————–

இவ்வாறு ப்ரஹ்மத்துக்கு பக்தனான ஜீவனில் பேதத்தைக் கூறி
மேல் முக்த ஜீவனில் பேதத்தைக் காட்டுகிறார் –

17-ந இதர அநுபபத்தே –1-1-17-

தைத்ரியம் –
சோஸ்நுதே சர்வ காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்தேதி -என்று
மிகுந்த ஞானம் உள்ள ப்ரஹ்மத்தின் இடம் இருந்து ஜீவன் தான் விரும்பும் அனைத்தையும் பெறுகிறான் –
என்பதால் ஆனந்த மயன் ஜீவன் அல்ல –

இதர -பரமாத்மாவின் வேறுபட்ட முக்தாத்மாவும்
ந -மந்த்ர வர்ணத்தால் கூறப்படுபவன் அல்லன்
அநுபபத்தே –சோஸ்நுதே சர்வ காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்தேதி-என்று கூறப்படும் இயற்கையான விபச்சித்த்வம்
அதாவது இயற்கையான ஸத்ய ஸங்கல்பம் முக்தனுக்குக் கூடாததாலால்
ஸோ காமாயத பஹுஸ்யாம் ப்ரஜாயேய-என்று குறிப்பிடும் விபச்சித்வம்
முந்தைய நிலையில் சம்சாரியாய் இருந்த முக்தனுக்கும் பொருந்தாது என்று கருத்து –

———-

18-பேத வ்யபதேசாத் ச–1-1-18-

தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஜ்ஞான மயாத் அந்ய அந்த்ர ஆத்மா ஆனந்தமய –தைத்ரியம்- என்று
ஆனந்தமயன் விஜ்ஞான மயனை விட மாறுபட்டவன் என்பதால்-ப்ரஹ்மமே -ஜீவன் அல்ல என்றதாயிற்று –

தஸ்மாத்வா ஏதஸ்மாத்மான ஆகாசஸ் ஸம்பூத –போன்ற வாக்யங்களாலே
அன்னமயம் பிராண மயம் மநோ மயங்களைக் காட்டிலும்
வேறான விஞ்ஞான மயனான ஜீவனைக் காட்டிலும் வேறு பட்டவனாக
அந்ய அந்த்ர ஆத்மா ஆனந்தமய–என்று
பரமாத்மாவுக்கு பேதத்தைக் கூறுவதால் மந்திர வர்ணத்தில் கூறப்படும் ஆனந்தமயன்
ஜீவன் அல்லன் என்பது தெளிவாகிறது –

———-

19-காமாத் ச ந அநுமாநாபேஷா –1-1-19-

பஹூச்யாம் சங்கல்பத்தால் -உடல் புலன்கள் இல்லாமல் பிரகிருதி உதவி இல்லாமல் செய்பவன் –
என்பதால் ப்ரஹ்மமே-ஜீவன் இல்லை-

காமாச்ச –பஹுஸ்யாம் என்று அருளிய ஸங்கல்பத்தால் தான் விசித்திரமான ஜகத்தின் ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது
அதற்கு அனுமான அபேஷா ந –பிரதானத்தின் அபேக்ஷை இல்லை
சதுர்முகாதிகளுக்கு சரீர நிலையை அடைந்த பிரதானத்தின் சேர்க்கை தேவைப்படுவது போலே
பரமாத்மா சங்கல்பத்தால் ஸ்ருஷ்டிப்பதற்குப் பிரதானத்தின் தேவையில்லை –
ஆதலால் ஆனந்த மயன் என்பது ஜீவனின் வேறு ஆனவனே –

———–

20-அஸ்மின் அஸ்ய ச தத் யோகம் சாஸ்தி –1-1-20-

ஆனந்த மயனுடன் சேரும் பொழுது ஜீவனுக்கும் ஆனந்தம் உண்டாகும்

இவ்வாறு ஆனந்த மயன் முக்தனுக்குக் கிட்டிய வுடன்
தத் யோகம் -அந்த ஆனந்தத்துடன் சம்பந்தத்தை
சாஸ்தி -ஸாஸ்த்ரம் கூறுகிறது
ஸாஸ்த்ரமாவது –ரஸோ வை ஸ ரஸம் ஹ்யே வாயம் லப்தவா ஆனந்தீ பவதி -என்பது
ஆகையால் பக்த முக்த விலக்ஷணனான பரம புருஷனே ஆனந்த மயன் என்பதாகும்

முன் தத் ஹேது வ்யபதேசாத் -என்ற ஸூத்ரம்
உபாஸன தசையில் ஆனந்தப்படுத்துகிறான் என்பதைக் கூறியது
இதில் முக்தி தசையில் ஆனந்தப்படுத்துகிறான் என்பதைக் கூறுகிறது
ஆகையால் புநர் யுக்தி தோஷம் இல்லை –

———–

1-7-அந்தர் அதிகரணம்–ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .

ஸ்வல்ப புன்யர்களான ஜீவர்களால் ஸங்கல்ப மாத்ரத்தைக் கொண்டு
ஜகத் ஸ்ருஷ்ட்டியையும்
மிகுந்த ஆனந்தத்தையும்
பய அபய ஹேதுத்வமும் பெற முடியாமல் போகலாம்
ஆயினும் விலக்ஷண புண்யம் கொண்ட ஆதித்யன் இந்திரன் பிரஜாபதி முதலியோருக்கு
இந்த குணங்கள் சம்பவிக்கலாமே
என்ற சங்கையை இங்கு நீக்குகிறார் என்று சங்கதி

மேலும் இவ்வதிகரணத்தில் அந்தர்யாமி என்ற தன்மையால் மட்டும் சரீராத்ம பாவம் சொல்லப்பட வில்லை -பின் என் எனில்
பாணி பாத அஷி கேசாதிகளான பிரிவுகள் போல் சரீர சம்பந்தம் உள்ள புருஷன் கூறப்படுகிறான்
அந்தப் புருஷன் ஜீவன் தான் என்று பூர்வ பக்ஷம் தோன்றுவதே இங்கு சங்கதி

காரண வாக்கியங்கள் பரமாத்ம போதகங்கள் என்று ஸ்தாபிப்பதே இவ்விடம் பிரஸக்தம்
காரண வாக்கியம் இல்லாத அந்தராதித்ய வித்யா நிரூபணம் அயுக்தமே
ஆயினும் முன் அதிகரணத்தின் சேஷமாக நிரூபிப்பதில் தவறு இல்லை
எப்படி எனில்
ஆனந்தவல்லியில் -ஸ யச்சாயாம் புருஷே யச்சா ஸ ஆதித்யே ஸ ஏக -என்று
ஆனந்த மயனுக்கு ஆதித்யனின் உள் இருப்பு கூறப்பட்டது
சாந்தோக்யத்தில் சொன்ன ஆதித்ய மண்டை அந்தர்வர்த்தியான புருஷனுக்கு கர சரணாதி விஸிஷ்ட
தேஹ சம்பந்தம் சொல்லுகையாலே இரண்டு இடங்களிலும் ஒருவனே பேசப்படுபவன்
ஆகையால் ஆனந்தமயனும் ஜீவன் தான் என்கிற சங்கையை நிவர்த்திக்க
முன் அதிகரண சேஷமாக இங்கு நிரூபிக்கிறார் என்று விடை –

அதற்கு சேஷமாவது அங்கங்கு தேவையான பொருளை விளக்குதல்
அப்படி என்றால் வெவ்வேறு அதிகரணங்கள் என்று எவ்வாறு பேதம் கூற முடியும் எனில்
கூறிய நியாயத்துக்கு விஷயமான உபநிஷத்து மாறுபட்டதால் பேதம் வருவது பொருந்துமே

21-அந்த தத் தர்மோபதேசாத் –1-1-21-கண்கள் உள்ளும் சூரியன் உள்ளும் இருப்பவன் ப்ரஹ்மமே-

ய ஏஷ யந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ரூர் ஹிரண்ய கேசக ஆப்ரணகாத்
சர்வ ஏவ ஸூ வர்ண -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணி என்றும் –
ய ஏஷ அந்தர் அஷிணி புருஷோ த்ருஸ்யதே தஸ்யை தஸ்ய ததேவ ரூபம் யதமுஷ்யரூபம்
ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித-என்று பாபங்களால் தீண்டப்படாமல் இருப்பவன் -என்றும்
சைவ ருக் தத் சாமததுக்க்கம் தத்ய ஜூ ஸ் தத் ப்ரஹ்ம-என்றும்
இவை விஷய வாக்கியங்கள் –

இங்கு கீழ்ச் சொன்னபடி ஜீவர்கள் அல்ல ப்ரஹ்மமே-

அந்தஸ் -கண்ணின் உள்ளும் ஸூர்ய மண்டலத்தின் உள்ளும் இருப்பவனாகச் சொல்லப்படும் புருஷன்
ஜீவனைக் காட்டிலும் இதரனான பரமாத்மாவே
எப்படி என்றால்
தத் தர்மோபதேசாத் –ஸ்ருத் யந்தரங்களில் பிரசித்தமான பரமாத்மாவின் தர்மங்களை உபதேஸிப்பதால்
அவை -அபஹத பாப்மா -அஜர -அசோக —ஸத்ய காம –ஸத்ய ஸங்கல்ப -சர்வ லோக சர்வ காம நியந்த்ருத்வம் –
புண்டரீகாக்ஷத்வமும் திவ்ய மங்கள விக்ரஹம்முதலிய தர்மங்களும் உபதேசிக்கப்படுகின்றன
எனவே ஜீவ விலக்ஷண ஸ்ரீயப்பத்யே ஆதித்ய மண்டலத்தில் ஒளிரும் புருஷன்
இங்கு கூறும் சரீரம் கர்ம நிமித்தம் அன்று -அதுவே ஹேயமாகும் –
முமுஷுக்களுக்கு ஹேய நிவ்ருத்தமான திவ்ய மங்கள விக்ரஹம் என்பதேயாகும்
யதோவா இமானி பூதானி ஜாயந்தே ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம முதலிய பிராமண பலத்தாலே
ஸத்யத் ஞானத் வாதிகள் ஸித்திப்பது போல்
வித்யுத் புருஷாததி
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
அஜயமானோ பஹுதா விஜாயதே
அஜோபிசன் அவ்யயாத்மா
ஸம்பவாமி ஆத்ம மாயயா –முதலிய ப்ரமாணங்களால்
ஆஸ்ரிதர்களை அநுக்ரஹிக்க திவ்ய மங்கள விக்ரஹ ரூபமான தர்மமும்
தத் தர்ம உபதேசாத் -என்கிற பதத்தில் கருதப்படுகிறது என்று திரு உள்ளம் –

————-

22- பேத வ்யபதேசாத் ச அந்ய –1-1-22-

ப்ருஹத் ஆரண்யகாவில் –
ய ஆதிதயே திஷ்டன் ஆதித்யாத் அந்த்ரோயம் ஆதித்யோ நவேத யஸ்யா தித்ய சரீரம் ய ஆதித்யம் அந்தரோ யமயதி -என்று
யார் சூரியனில் அந்தர்யாமியாக உள்ளானோ -அவன் சூரியனுக்கு தெரியாமல் அப்படி உள்ளவன் யாரோ –
அவனுக்கு சூர்யன் உடம்பாக உள்ளான் -அவனே சூர்யனை வழி நடத்துகிறான்

ஸூபால உபநித்தும் இது போலே ஜீவர்களுக்குள் அந்தர்யாமாவாக உள்ளத்தை சொல்லும் –
அவனே பரம்பொருள் ஜீவன் அல்ல என்றதாயிற்று-

அபஹத பாபனான இப்பரமாத்மா
அந்ய–ஆதித்யாதி ஜீவர்களைக் காட்டிலும் வேறானவன்
பேத வ்யபதேசாத் ச
ய ஆதித்யே திஷ்டன் –யம் ஆதித்யோ ந வேத -யஸ்ய ஆதித்யச் சரீரம் -ய ஆதித்யம் அந்தரோ யமயதி
ய ஆத்மனி திஷ்டன்
யஸ்ய அக்ஷரச் சரீரம்
யஸ்ய ம்ருத்யுச் சரீரம் –என்று இப்படியாக ஹிரண்ய கரப்பான் முதலிய ஸகல ஜீவர்களையும் சரீரமாகக் காட்டி
நாராயணனை அந்தராத்மாவாகப் பேதப்படுத்திக் காட்டுவதால்
பரமாத்மா ஜீவனைக்காட்டிலும் அந்நியன் தான் என்பதாம் –

——–

இப்படி யதோவா இமானி பூதாநி ஜாயந்தே என்கிற வாக்யத்தால் ஜகத்தின் காரணம் ப்ரஹ்மம் எனப்பட்டது
அத்தகைய ப்ரஹ்மம் எது என்ற ஐயம் எழுந்தால்
ஸதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத்
ஆத்மாவா இதம் ஏகம் ஏவ அக்ர ஆஸீத் –முதலிய வாக்யங்களால்
சாமான்யங்களான -ஸத் -ப்ரஹ்மாதி சப்தங்களால் -ஸத் -ப்ரஹ்மாதிகள் காரணங்கள் என்று குறிக்கப்பட்டன

அடுத்து ஸ்ருதி லிங்க வாக்ய ப்ரகரண ஸ்தான சமாக்யைகளில் முந்தியது பிந்தையதை விட பலம் மிக்கது என்றபடி
லிங்கத்தை விட ஸ்ருதி பலம் மிக்கது என்றாலும் -விசேஷமான லிங்கத்தைக் காட்டிலும் ஸ்ருதி துர்ப்பலை யாதலின்
விசேஷ லிங்கங்கள் பிரதானாதிகளை விலக்குவனவாய் பிரபலமாய் இருப்பதால்
ஈஷத் அதிகரணத்தில் முக்கியமான ஈஷணமும்
ஆனந்த மய அதிகரணத்தில் ஆனந்த விசேஷமும்
அந்தராதித்ய அதிகரணத்தில் திவ்ய மங்கள விக்ரஹமும் ஆகிய
அர்த்த ஸ்வ பாவமான -லிங்கங்களாலே -அடையாளங்களாலே –
ப்ரஹ்மத்துக்கு -பிரதானம் -ஜீவாத்மா -இவை இரண்டிலும் இருந்தும் பேதம் தீர்மானிக்கப் பட்டது –

அப்படி இருப்பினும்
விசேஷ ஸ்ருதிக்கு விசேஷ லிங்கத்தை விட ப்ராபல்யம் இருப்பதால்
சர்வாணி ஹ வை இமானி பூதானி ஆகாசதேவ சமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யச்தம் யந்தி=போன்ற இடங்களிலே
ஆகாசம் போன்ற விசேஷ சப்தங்களாலே சொல்லப்பட்ட ப்ரஸித்தமான ஆகாசம் பிராணன் முதலியவை
காரண ப்ரஹ்மம் என்கிற சங்கையை நீக்கி
கல்பிக்கப்பட்ட யோக காரணப்பெயர் -கல்பிக்க வேண்டிய ரூடி இடுகுறிப்பெயரை பாதிக்கும் என்ற நியாயப்படி
யோக சக்தி-காரணத்தை அடிப்படையாகக் – கொண்டு
ஆகாசம் முதலிய சொற்கள் பரமாத்மாவையே போதிக்க வல்லவை
என்பதை கீழ் வரும் அதிகரணங்களால் விளக்குகிறார் –

———–

1-8-ஆகாசாதி கரணம் -ஆகாயம் எனப்படுவதும் ப்ரஹ்மமே –

23-ஆகாஸ தல் லிங்காத் —1-1-23-

சர்வாணி ஹ வை இமானி பூதானி ஆகாசதேவ சமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யச்தம் யந்தி என்று
ஆகாசமே மூல காரணம் என்றும் பரம ப்ராப்யம் என்றும் சொல்லிற்று
இதில் ஆகாசம் -பூத ஆகாசமா -அல்லது முன் லக்ஷணம் கூறப்பட்ட ப்ரஹ்மமா என்று சங்கை
பிரசித்தமான
ஆகாசமே என்று பூர்வ பக்ஷம்
ஈஷணம் -சங்கல்பம் பற்றிய லிங்கத்தை விட விசேஷ ஸ்ருதி பலம் வாய்ந்ததாகையாலும்
ஆகாசம் என்பது பூத ஆகாசத்தில் ப்ரஸித்தமாகையாலும்
ஸத் -ப்ரஹ்மம் -முதலிய சாமான்ய சப்தங்களும் பிரசித்த ஆகாசத்தையும் கூறுபவை என்பதே பூர்வ பக்ஷம் –

சித்தாந்தம்
ஆகாஸ -அசேதனமான ஆகாசத்தை விட வேறு பட்டவனாக பரமாத்மாவே ஆகாசம் என்று கூறப்படுகிறான்
தல் லிங்காத் —அந்தப் பரம புருஷனின் லிங்கங்கள் அடையாளங்கள் காணப்படுவதால் –
அவை யாவன
அனைத்துக்கும் காரணமாதல்
எல்லாவற்றையும் விட பழமை
அனைத்துக்கும் பரம அடைக்கலம் –முதலிய தர்மங்கள்
தஸ்மாத் விராட் அஜாயத
ஏகோஹவை நாராயண ஆஸீத் –முதலிய உபநிஷத் வாக்கியங்களில் கூறப்பட்ட
விராட் புருஷத்வம் -நாராயணத்வம் -முதலிய தர்மங்கள்
ஆ –நாற்புறமும்
காச -பிரகாசிப்பது
என்ற காரணப் பெயராகக் கொண்டு பரம புருஷன் தான் ஆகாசம் என்பதாம் –

இங்குள்ள சிறப்பாவது
காரணப்பெயரை -யோகப்பெயரை -விட இடுகுறிப்பெயரே -ரூடியே -மேலானது என்ற நியாயம் இருந்தாலும்
கல்பிதமான யோகம் கல்பிக்கப்பட இருக்கிற ரூடியைப் பாதிக்கும் என்ற நியாயத்தால்
இங்கு -யதேஷ ஆகாச ஆனந்தோ நஸ்யாத்-என்ற வாக்யத்தில்
ஆகாச சப்தத்துக்கு யோகத்தால் -காரணத்தால் -பொருள் கல்பிக்கப்பட்டு இருப்பதால்
இந்த யோகாசக்தி பொருளை ரூடி சக்தி பாதிக்க மாட்டாது –
ஆகையால் முன் கூறிய லக்ஷணங்கள் –
ஈஷணம் -ஆனந்த விசேஷம் திவ்ய மங்கள விக்ரஹம் -முதலான சிறப்பான லிங்கங்களால்
ஸத் -ப்ரஹ்ம -பொதுச் சொற்களும்
ஆகாசம் போன்ற சிறப்புச் சொற்களும்
ஸமஸ்த ஜகத் காரணனாய் -சர்வஞ்ஞாதி கல்யாண குணங்களை யுடைய பரம புருஷனையே
விளக்குகின்றன என்பது திரு உள்ளம் –

———-

அடுத்தபடி -ஆகாசம் என்பது பரமாத்மா என்ற காரணம் இருக்கட்டும் –
சகல ஜனங்களுக்கும் ஸ்திதியோ ப்ரவ்ருத்தியோ ப்ராணனைச் சார்ந்து இருப்பதால்
சாந்தோக்யம் முதல் அத்யாயம் ஒன்பதாவது கண்டத்தில்
பிரஸ்தோ தர்யோ தேவதா ப்ரஸ்தாவ மன்வாயத்தா -என்று தொடங்கி
இந்த பூதங்கள் அனைத்தும் ப்ராணனையே சார்ந்து இருக்கின்றவை என்று கூறப்பட்டு இருப்பட்டு இருப்பதால்
பிரசித்தமான பிராணனே ஜகத் காரணம் என்று கூறலாமே என்று மேற்கொண்டு அதிகமான ஓர் சம்சயம் தோன்ற
அதைக் கண்டிக்கவே இந்த அதிகரணம் –

1-9-ப்ராணாதி கரணம்–பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே

24-அத ஏவ பிராண –1-1-24-

சர்வாணி ஹ வா இமானி பூதானி பிராணமேவாபி சம்விசந்தி பிராணமப் யுஜ்ஜிஹதே –

தோன்றி மறையும் தன்மை பரம் பொருளுக்கே உண்டு-

அத ஏவ -பிரசித்தம் போலே நிர்தேசம் இருப்பதினாலேயே
பிராண -பிராண சப்தத்தால் சொல்லப் படுபவன்
அந்நிய -பிராண வாயுவில் காட்டில் வேறுபட்டவன் –

சர்வாணி ஹி வா இமானி பூதாநி ப்ராணம் ஏவ அபி சம்விசந்தி ப்ராணம் அப்யுஜ்ஜி ஹதே
சைஷா தேவதா ப்ரஸ்தாவம் அந்யாவத்தா –ஹை வை -பிரதித்தம் -சாந்தோக்யம்
பிராணன் இடத்திலே லயம் அடைகின்றன -பிராணன் இடத்தில் இருந்தே வெளிவருகின்றன
ப்ராணயதி– ஜீவயதி என்கிற வியுத்பத்தியால் பர ப்ரஹ்ம பர சப்தம்
உத்பத்தி ஸ்திதிகளை பிராண அதீனமாக கண்டாலும் சேதன ஸ்வரூபத்தின் ஸ்திதி
பிராண அதீனமாக அல்லாமையாலே இதுவும் பரமார்த்த பரமே

அத –ஆகாசத்தில் கூறியபடியே சகல ஜலத்தின் உள் நுழைதல் வெளியேறுதல் முதலிய பரமாத்ம லிங்கம் இருப்பதாலேயே
ப்ராண –பிராணன் என்ற சொல்லால் கூறப்படுபவனும்
பரமாத்மாவே என்று பொருள்
சேதனர்களிடம் பிரசித்தமான பிராணன் உள் நுழைவதும் வெளி ஏறுவதும் இருப்பினும்
அசேதனமான கல் மரக்கட்டை முதலியவற்றில் அது சம்பவிக்காது
ஆதலின் பரமாத்மாவுக்கே அது பொருந்தும் என்பதைக் கொண்டு
எதிலும் உள் நுழையவும் வெளியேறவும் வல்ல பரமாத்மாவே பிராணன் என்றதாகும் –

———-

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -ஜோதி என்பதும் ப்ரஹ்மமே –

இனி காரணத்வத்தை நிரூபிக்க வல்ல நிரதிசயமான தீப்தி -பிரகாசம் –
ஹித தமமான உபாசனத்துக்கு உரிய கர்மா -செயப்படு பொருள் என்னும் தன்மை
இவற்றுடன் கூடிய ஜ்யோதிஸ் என்பதும்
இந்த்ரன் பிராணன் முதலிய சொற்களும் கூறப்படுவதும்
உலகில் பிரசித்தமான ஒளி இந்திரன் இவற்றை விட்டு விலக்ஷணமான ப்ரஹ்மமே என்பதை
இந்த ஜ்யோதிர் அதிகரணத்திலும்
அடுத்த இந்திர பிராணாதி கரணத்திலும்
நிலை நாட்டுகிறார் என்று சங்கதி –

அது மட்டும் இன்றியே ஸ்ருதியிலே
ஆகாசாத் வாயு வாயுர் அக்னி -என்று கூறியுள்ள க்ரமப்படி
முதலில் ஆகாசம்
பின் வாயு -பிராணன் –
அடுத்து அக்னி –
என்ற க்ரமத்தைப் பின் பற்றி
ஆகாசாதி கரணத்தின் பின்
பிராணன் பற்றியும்
பின் ஜ்யோதிஸ் பற்றியும் விசாரிக்கிறார் என்றும் சங்கதி –

1-2-25-ஜ்யோதி சரணாபிதா நாத் —
ஜோதியும் ப்ரஹ்மமே -மற்றவை அதன் பாதங்களில் பணியும்-

அத்யதத பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ அனுததமேஷூ
உத்தமேஷூ லோகேஷூ இதம் வாவ ஸர்வத தத் யதிதம் அஸ்மின் அந்த புருஷே ஜ்யோதி –சாந்தோக்யம் -மூன்றாம் அத்தியாயத்தில்
மது வித்யைக்குப் பிறகு காயத்ரீ ஸப்தப் பொருளான பரமாத்மா ஜ்யோதிர் வித்யையிலே பேசப்படுகிறார்
இதுவே விஷய வாக்கியம்

இங்கு ஜ்யோதிஸ் என்பது பிரசித்தமான ஸூர்யாதிகளான ஜ்யோதிஸ் ரூபங்களைக் குறிப்பிடுகிறதோ
அல்லது உலக காரணமான எல்லையில்லா ஒளி வடிவமான பரமாத்மாவையே குறிப்பதா என்பதே சம்சயம் –

ஆகாசம் பிராணன் போன்ற வாக்கியங்களை போலே இதில்
நிகில ஜகத் ஏக காரணத்வம் போன்ற பரமாத்மாவின் சிறப்பான லிங்கம் ஏதும் இல்லாமையால்
இதம் வாவதத் என்று தொடங்கி புருஷனின் வயிற்றில் உள்ள ஜ்யோதியுடன்
இந்த ஜ்யோதியை ஒன்றாகக் கூறுவதால்
பிரசித்தமான ஜ்யோதிஸ்ஸாகவே இருக்கலாம் என்று பூர்வ பக்ஷம்
அதைக் கண்டிக்கிறார்

ஜ்யோதி -தேவ லோக சம்பந்தியாகக் கூறப்பட்ட ஏராளமான ஒளி உள்ள ஜ்யோதி என்பது பரம புருஷனே
ஏன் எனில்
சரணாபிதா நாத் –பாதோஸ்ய விச்வா பூதாநி த்ரிபதாஸ் யம்ருதம் திவி -என்று
சர்வ பூதங்களும் இந்த ஜ்யோதிஸ்ஸுக்கு ஒரு பாதமாகவும்
பரமபதத்தில் மூன்று பாதங்களும் இருப்பதாகச் சொல்வதால்
பிரசித்தமான எந்த சோதிக்கும் அது பொருந்தாது
பரமபுருஷனே ஜ்யோதிஸ் ஸப்த பொருளாவான்

இந்த தேவலோக சம்பந்தியான ஜ்யோதிசை ஜாடராக்னி சரீரமாகக் கொண்டது என்று உபாசித்தால்
ஆபி ரூப்யாதிகள் -பொருத்தமான அழகு போன்றவை ஸித்திக்கும் என்பதால்
கௌஷேய-வயிற்று ஜ்யோதிஸ்ஸுடன் ஐக்யம் கூறுகிறது என்று திரு உள்ளம் –

உயர்வற உயர்ந்த ஒளி உள்ளதாக ஓதப்பட்ட ஜ்யோதிஸ்ஸூக்கு –
பாதோஸ்ய சர்வ பூதாநி த்ரிபதாஸ் யாம்ருதம் தீவி -என்ற புருஷ ஸூக்த்தத்தின்
மந்திரத்தின் பொருள் நினைவூட்டப் படுகிறது –
ஆகையால் வேதாந்தமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமசஸ் து பாரே –
பரம புருஷன் பரமாக கொள்ள வேண்டும்
அஹம் வைச்வா நரோ பூத்வ பிராணி நாம் தேஹமா ஸ்ரீ தா -ஸ்ரீ கீதை –
உடம்பில் உள்ள அக்னியும் ப்ரஹ்மமே

————–

26-சந்தோ அபிதா நாத் ந இதி சேத் ந ததாசே தோர்ப்பண நிஹமாத் ததாஹி தர்சனம்–1-1-26-

காயத்ரி சந்தஸில் கூறப்படுபவன் ப்ரஹ்மமே-காயத்ரி போலே ப்ரஹ்மத்தையும் மனசில் கொள்ள வேண்டும் –
காயத்ரிவா இதம் சர்வம் -காயத்ரி சந்தஸ் பிரமத்தைப் போலே நான்கு பாதங்கள் உடையது –

சந்தோ அபிதா நாத் ந
அத்யதத பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே–இத்யாதி வாக்யத்துக்கு முன்பு காயத்ரி சந்தஸ்ஸை சொல்லி
பின்பு ததே தத் ருசாப் யுக்தம் –என்று கூறிய ருக்குக்கும் காயத்ரீ என்னும் சந்தஸ்ஸே விஷயமாகையாலே
இங்கு பரமபுருஷனைப் பற்றிய பேச்சே இல்லை என்று ஐயம் தோன்றிற்று
இதி சேத் ந -இவ்வாறு கூறுவது தவறு என்கிறார் –
ஏன் எனில்
ததாசே தோர்ப்பண –அவ்வாறு சித்தத்தாலே அனுசந்தானம் விதிக்கப்படுவதால்
அந்த காயத்ரியைப் போலவே பரம் ஜோதிசை நான்கு பாதங்கள் உள்ளதாக அனுசந்திக்கச் சொல்கிற படியால்
நிஹமாத் -நிச்சயிக்கப் படுவதனால் ஸப்த ரூபமான காயத்ரீ சர்வ பூதாத்மிகை என்பது பொருந்தாமையால்
பரம புருஷனை காயத்ரீ துல்யனாக நான்கு பாதம் உள்ளவனாக அனுசந்திக்க வேண்டும் என்று
நிச்சயிக்கிற படியால் பரம புருஷனே காயத்ரீ சப்தத்தின் பொருளாம்
ததாஹி தர்சனம்-அவ்வாறு நான்கு பாதங்கள் உள்ள காயத்ரியும் சில இடங்களில் காணப்படுகிறது
இந்த்ரச் சசீபதி வலே ந பீடித துச்சய வநோ வ்ருஷா ஸமித் ஸூ ஸஹி – என்று காணலாம் –

————-

27-பூதாதி பாத வ்யபதேசா அபபத்தே ச ஏவம்–1-1-27-

சாந்தோக்யத்தில்
பூதங்கள் பூமி உடல் இதயம் ஆகிய நான்கு பாதங்கள் உள்ளதாக சொல்வதால்
காயத்ரி என்றதும் ப்ரஹ்மமே –

பூத ப்ருத்வீ சரீரங்களைச் சுட்டி இது நான்கு கால் உள்ளது என்பதற்குப் பொருத்தம் வர வேண்டுமானால்
ஏவம் -இவ்வாறு ப்ரஹ்மமே காயத்ரீ என்ற சொல்லின் பொருள் என்றாலே பொருத்தம் ஏற்படும்
பூத ப்ருத்வீ சரீர ஹ்ருதயங்களை-என்பதில்
பூதம் -ஆத்ம வர்க்கம்
ப்ருத்வீ -இந்த லோகம்
சரீரம் -கர்மாக்களால் ஆர்ஜிதமான போகத்திற்கு உரிய இடமும் -அதன் உபகரணமும்
ஹ்ருதயம் -ஆத்மா தங்குவதற்கான இடம் –

———–

28-உபதேச பேதாத் ந இதி சேத் ந உபய அஸ்மின் அபி அவிரோதாத் –1-1-28-

பரம் பொருளின் மூன்று பாதங்கள் பரம பதத்தில் இருப்பதாகவும் 1-1-25- சொல்லி –
சாந்தோக்யம் பரோதிவ ஜ்யோதி -என்று
பரம பதத்துக்கு மேலே உள்ளதாகச் சொல்லப் பட்டுள்ளது –
இரண்டுக்கும் பேதம் இல்லை
மரத்தின் மேலே பறவை என்பதும்
மரத்தில் பறவை என்பதும் ஓன்று போலே –

உபதேச பேதாத்
பூர்வ வாக்கியத்தில் த்ரி பாத் ஸ்யாம்ருதம் திவி என்று த்யு லோகத்தை ஆதாரமாகவும்
இந்த வாக்கியத்தில் திவ என்று த்யு லோகத்தைக் காட்டிலும் என்று எல்லையாகவும் உபதேசம் வேறு வேறாய் இருப்பதால்
முன் வாக்கியத்தில் கூறிய ப்ரஹ்மம் இந்த வாக்யத்தில் தோன்றவில்லை

இதி சேத் ந-என்று கூறுவது சரியில்லை

உபய அஸ்மின் அபி அவிரோதாத் –இரண்டுக்கும் அர்த்த ஸ்வ பாவம் ஒன்றே யாதலின் நினைவுக்கு விரோதம் இல்லை
மரத்தின் நுனியில் பருந்து என்றாலும்
மரத்தின் நுனிக்கு மேலே பருந்து என்றாலும் போலே இங்கும் அர்த்தம் ஒன்றே யாதலின்
ஏதாவான் அஸ்ய மஹிமா பாதோஸ்ய விஸ்வா பூதாநி-என்ற புருஷ ஸூக்த நினைவாலே
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் -என்கிற எல்லையில்லா ப்ரகாசமுடைய புருஷோத்தமனே
அத யதத பரோ திவோ ஜ்யோதி என்று கூறப்படுகிறான் என்று திரு உள்ளம் –

ஸ்ரீ பாஷ்யத்தில் இவ்வதிகரணத்தின் அவதாரிகையில்-எல்லையில்லா பிரகாசம் என்னும்
லிங்கத்தாலே பூர்வ பக்ஷம் தோன்றுகிறது என்று காட்டி
பின்பு ப்ரசித்தவத் நிர்தேசம் இருந்தாலும் ஆகாசம் பிராணன் இவற்றைப் போலே
தன் வாக்கியத்தில் எடுக்கப்பட்ட பரமாத்மாவுக்கான லிங்கம் இல்லாமையால் என்று அருளியது
முன் பின்னாக முரணாக உள்ளதே என்னில்

அத யதத பரோ –என்னும் வாக்கியத்தில் காரணத்தைக் காட்டவல்ல
ஸர்வத ப்ரகாசமயமான தன்மை எனும் லிங்கம் உள்ளது
அப்படி இருந்தாலும் உபய லிங்கத்வாதிகள் கூடியதும் -பரமபுருஷனை நிலை நிறுத்தக் கூடியதுமான
ஜகத் காரணத்வம் என்னும் லிங்கம்
அத யத்த பாரோ வாக்கியத்தில் கிடையாது என்னும் பூர்வ பசியின் கருத்தால்
அருளிச் செய்வதால் முரண்பட்டு இல்லை
அப்படியான சிறப்பான லிங்கம் தன் வாக்கியத்தில் இருப்பதாகத் திரு உள்ளம் –

————

1-11-இந்திர பிராணாதி கரணம்-

இதில் காரணத்தோடு வியாப்தமான -முமுஷுக்களால் உபாஸிக்கத் தன்மை கொண்ட
இந்திரப் பிராணன் -என்று சொல்லப்படுபவனும் பரம புருஷனே என்று ஸ்தாபிக்கிறார்

1-1-29-ப்ராணா ததா அநுகமாத் –

ஹித தமமாக உபாசனம் செய்யத்தக்க இந்த்ர பிராணன் என்று
கௌஷீதகி ப்ராஹ்மணத்தில் சொன்னது ஜீவனா அல்லது பரமாத்மாவான என்று சம்சயம்
ஜீவன் தான் என்பது பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
இந்த்ர சப்தம் ஜீவனைக் குறிப்பதாகவே ப்ரஸித்தம்
தான் என்று குறிப்பிடும் இந்த்ரனாகவும் பிராணனாகவும் உள்ளது
பிரசித்தமான இந்த்ரனைக் குறிப்பது என்பது பொருந்தாது

பிராணனாக நான் உள்ளேன் என்று இந்த்ரன் கூறியதும் ப்ரஹ்மத்தை தான் –
கௌஷீதகி ப்ராஹ்மணத்தில்
தன்னை உபாசித்த ப்ரதர்த்தனன் என்பவன் இடம் –
சா ஹோவாச ப்ராணோஸ்மி ப்ராஜ்ஞாத்மா தம் மாம் ஆயுர் அம்ருதம் இத் உபாஸ்வ –
உயிராகவும் அமிர்தமாகவும் சொன்னான்
அதே கௌஷீதகி ப்ராஹ்மணத்தில்-
ச ஏஷ ப்ராணா ஏவ ப்ராஜ்ஞாத்மா ஆனந்தோஜரோம்ருத-என்று
பிராணன் ஆனந்தமாயும் இளமையுடனும் அழியாமலும் உள்ளதாக சொல்லி இருப்பதால்
பிராணன் என்றது இந்த்ரன் தனக்கு உள்ளே உள்ள ப்ரஹ்மத்தை தான்-

ப்ராணா –ப்ராணோஸ்மி ப்ராஜ்ஞாத்மா -என்று சொன்ன இந்த்ரப்ரண ஸப்த வாஸ்யன் ஜீவன் அல்லன்
அவனை விட விலக்ஷணமான பர ப்ரஹ்மமே ஆகும்
ஏன் எனில்
ததா அநுகமாத் –அப்படியே தொடர்வதால்
ச ஏஷ ப்ராணா ஏவ ப்ராஜ்ஞாத்மா ஆனந்தோ ஜர அம்ருத-என்று
ஆனந்தம் முதலிய தர்மங்களுக்கு தர்மியாகப் பிராணனைத் தொடர்வதாலே
ப்ரஸித்தமான இந்த்ரனுக்கு ஆனந்த் வாதிகள் கூடாமையாலே பரம புருஷனே
இந்த்ர பிராணன் என்ற சொல்லின் பொருள் ஆகும் –

————-

30-ந வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-1-1-30-

ஏஷ ஏவ சாது கர்ம காரயதி தம் யமேப்யோ லோகேப்ய உன்நிநீஷதி ஏவசாது கர்ம காரயதி தம் யமதோ நிநீஷதி-என்று
நன்மை தீமைகள் பரம் பொருளால் விளையும் என்றும் –
தத் யதா ரதஸ் யாரேஷூ நேமி ரர்ப்பிதா நாபாவர அர்ப்பித்தா ஏவ மேவைதா பூத மாத்ரா ப்ராஜ்ஞா மாத்ரா ப்ராணே அர்ப்பிதா-என்று
தேரின் சக்கரத்தில் உள்ள கம்புகள் சக்கரத்தின் நடுவில் சேர்க்கப் பட்டது போலே
அசேதனங்கள் சேதனங்களின் இடமும் சேதனங்கள்
ப்ரஹ்மத்திடமும் இணைக்கப் பட்டுள்ளன என்பதால் இந்த்ரன் பிராணன் ஆகியவை பரம்பொருளையே குறிக்கும்-

ந -இந்த்ர ப்ராண சப்தத்தின் பொருள் பர ப்ரஹ்மம் அன்று
ஏன் எனில்
வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் –தொடக்கத்தில் -மூன்று தலையுள்ள த்வாஷ்ட்ரனைக் கொன்றேன் என்று கூறி
விஸ்வ ரூப வதம் முதலியவற்றால் ப்ரஸித்தமான ஜீவ பாவத்துடன் ப்ரஞ்ஞாத்மாவான பிராணனாய் இருக்கிறேன்
என்று பேசும் தன் ஆத்மாவை உபாஸீ என்று உபதேஸிப்பதால் ஜீவன் தான் என்றால்
அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-பிராண ஸப்தத்தால் குறிப்பிடும் இந்த ப்ரஹ்மத்திடம் உள்ள குணங்கள் -தர்மங்கள் –

அத்யாத்ம தர்மங்கள் -அவற்றின் சம்பந்தங்கள் -அவற்றின் பூமா -மிகுதியாய் உள்ளது அல்லவா
உபக்ரமத்தை விட மஹா வாக்யம் பிரபலமாகையால் இந்த ப்ரதர்தன வித்யையில்
ஆதி முதல் அந்தம் வரை பரமாத்வாவின் சிறப்பான தர்மங்கள் பேசப்படுகின்றன
அதாவது ப்ரதர்தன் இந்த்ரனிடம் -நீயே மனிதர்க்கு ஹித தமமாய் எண்ணும் வரத்தைத் தருக–என்று கூறிப் பின்
அனைத்து நல்ல காரியங்களையும் நிறைவேற்றுபவனாகவும் தேரின் குடத்தில் -ஆரங்களில் -சக்ரம் நிலை பெற்றது போல்
உலகிற்கே ஆதாரமாய் இருப்பவனும் -ஆனந்த வடிவாய் ஜரை மரணம் முதலியவை அற்றவனாய் –
உலகின் தலைவனாய் ஸகல கல்யாண குணா கரனுமாக இந்த வித்யையில் சொல்லப்படுகையாலே
பரம புருஷனே இந்த்ர பிராணன் என்பது கருத்து

————

ஆனால் இந்திரன் தன்னையே உபாஸிக்கச் சொல்வதால் பொருந்துமோ
என்ற சங்கைக்கு மேலே விடை தருகிறார் –

31-சாஸ்திர த்ருஷ்ட்யா து உபதேச வாமதேவவத் –1-1-31-

வாசுதேவரைப் போலே இந்த்ரனும் வேதங்கள் மூலம் உண்டான ஞானத்தினால் இவ்வாறு கூறினான் –
சாந்தோக்யம் –
அநேன ஜீவேன ஆத்ம நா அநு பிரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று ஜீவன் மூலமாக
அசித்துக்களை ஆக்கிரமித்து பெயரும் ரூபமும் கொடுக்கிறேன் என்றும்
ப்ருஹத் ஆரண்யா காவில்-
ய ஆத்மினி திஷ்டன் ஆத்ம நோந்தர யமாத்மா ந வேத யச்யாத்மா சரீரம் ய ஆத்மாநமந்திரோ யமயதி -என்று
எந்த பரம்பொருள் ஜீவாத்மாவில் உள்ளதோ -எந்த பரம்பொருளை ஜீவாத்மா அறியவில்லையோ -யாருக்கு ஜீவாத்மா உடலாக உள்ளதோ –
உள்ளே புகுந்து ஜீவாத்மாவை யார் இயக்குகின்றானோ -என்று தனக்கு உள்ளே உள்ள பரம்பொருளை இந்த்ரன் குறிப்பிட்டான்-
ப்ருஹத் ஆரண்யா காவில் –
தத்தைதத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபதே அஹம் மநுரபவம் ஸூர்யச்யாஹம்-என்று
ப்ரஹ்மத்தை உணர்ந்த வாமதேவர் தானே மனுவாகவும் ஸூர்யனாகவும் –
பரம்பொருளே அந்தர்யாமியாகவும் உணர்ந்து -இப்படிக் கூறினார்-

து -சங்கையை நீக்குகிறது
உபதேஸ முமுஷுக்கள் தன்னை உபாஸிக்க வேண்டும் என்று உபதேசித்தல்
சாஸ்திர த்ருஷ்ட்யா–ஆத்மநி திஷ்டன் -ஆத்மநோ நந்தர -யம் ஆத்மா ந வேத –
யஸ்ய ஆத்மா சரீரம் -முதலிய ஸாஸ்திரத்தாலே
உபதேச -ஜீவ சரீரிகனான பரமாத்மாவை அறிந்து ஜீவனைக் குறிக்கும் அஹம் த்வம் முதலிய சொற்களும்
பரமாத்மாவையே போதிப்பது என்று அறிந்து
என்னையே அறிந்து உபாஸனை செய் என்று தன் ஆத்மாவைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவை உபாஸிக்கிறான் இந்த்ரன் –
வாமதேவவத் –வாமதேவர் என்ற மஹ ரிஷி இப்படியே ஸாஸ்த்ர கண்ணோட்டத்தாலே
அஹம் மனுரபம் ஸூர்யச்ச -நானே மனுவாகவும் ஸூர்யனாகவும் இருந்தேன் என்று இருக்கிறார்
அப்படியே இந்த்ரனும் கூறுகிறான் -என்றபடி
ப்ரஹ்லாதனும் இப்படியே எம்பெருமான் எங்கும் நிறைந்து இருப்பதால் அவனாகவே நானும் இருக்கிறான் –
என்னிடம் இருந்தே எல்லாம் தோன்றுகிறது
நானே எல்லாமுமாய் ஆவேன் என்று கூறுகிறான் என்று கருத்து
கடல் ஞாலம் செய் தேனும் யானே என்னும் என்றாரே ஆழ்வாரும் –

———-

இந்தப் ப்ரகரணத்தில் ஜீவாத்மாவைக் குறிக்கும் சொற்களாலும்
ப்ராணாதி சப்தங்களாலும்
உபாஸ்யமான பர ப்ரஹ்மத்தைச் சொல்லுகையில்
காரணத்தைச் சந்தேகம் தெளிவிப்பதன் மூலம் அருளுகிறார்

32-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத் ந உபாசாத்ரை வித்யாத் ஆஸ்ரிதத்வாத் இஹ தத் யோகாத் –1-1-32-

கௌஷீதகி ப்ரஹ்மணத்தில்-
ந வாசம் விஜிஜ்ஞா சீத வக்தாரம் வித்யாத் -என்றும்
த்ரிசீர்ஷாணம் த்வாஷ்ட்ரம் அஹம் அருன்முகான் யதீன் சாலாவ்ருகேப்ய ப்ராயச்சம் -என்றும்
இந்திரனைப் பற்றி சொல்லிற்று –
யாவதஸ்மின் சரீரே ப்ராணோ வசதி தாவதாயு -என்றும் பிராணனைக் குறித்தும் சொல்லிற்று
பரம்பொருளை உபாசிப்பது -தைத்ரியம்
ஆனந்தோ ப்ரஹ்ம-சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம- -உள்ளபடியே உபாசிப்பது ஒரு முறை –
ஜீவாத்மாவை உடலாக உடையவன் -என்று உபாசிப்பது ஒரு முறை –
பிராண வாயுவை உடலாக உடையவன் -அந்தர்யாமியாக உள்ளவன் என்பதையே சொல்லும் —

ஜீவ முக்ய பிராண லிங்காத் ந –த்வஷ்ட்ர வதம் முதலான ஜீவ லிங்கங்களாலேயும்
இவ்வுடலில் பிராணன் உள்ள வரையிலும் தான் ஆயுள் என்று கூறும் பிராண லிங்கத்தாலும்
பரமாத்ம விஷய சம்பந்தம் மிகுதி என்பது இல்லை

இதி சேத் ந -என்று கூறுவது தவறு

உபாசாத்ரை வித்யாத் –மூன்றுவிதமாக உபாஸிக்க வேண்டும் என்றே உபதேஸிக்கிறார்
மூன்று வித உபாஸனமாவது
1- ஸமஸ்த காரணனான ப்ரஹ்மத்தை சத்யத்வ ஞானாதிகள் உடையதாய் உபாஸிப்பது
2-போக்த்ரு வர்க்கமான- ஜீவர்களை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை உபாஸிப்பது
3-போக்ய போக உபகரணமான -அசேதனங்களைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை உபாஸிப்பது –
என மூன்று வித உபாஸனங்கள்

ஆஸ்ரிதத்வாத் –தைத்ய ஸ்ருதியிலும் ஆஸ்ரயிக்கப் படுகிறது
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-என்றும்
ஆனந்தோ ப்ரஹ்ம-என்றும் பகவத் ஸ்வரூப அனுசந்தானம் கூறப் படுகிறது
பின்னர் தத் ஸ்ருஷ்ட்வா ததே அநு ப்ரவிசேத் -என்று தொடங்கி
சேதன சரீரகமாயும் அசேதன சரீரிகமாயும் அனுசந்தானம் கூறப்படுகிறது

இஹ தத் யோகாத்-இந்த உபநிஷத்திலேயும் அந்த மூன்று வித உபாஸனங்களும் கூடும்
எப்படி என்றால்
என்னை உபாஸி -என்றதால்-என்னைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவை உபாஸி என்று
சேதன சரீரிக ப்ரஹ்ம அனுசந்தானமும்
ப்ராஞ்ஞாத்மாவான பிராணனாய் இருக்கிறேன் என்றதால்
அசேதன சரீரிக ப்ரஹ்ம அனுசந்தானமும்
சொல்லப் படுகின்றன
ஆனந்தோ -அஜரா -அம்ருத -என்று ப்ரஹ்ம ஸ்வரூப அனுசந்தானம் சொல்லப் படுகிறது
இவ்வாறு வேறு உபநிஷத்துக்களிலும் பரமாத்மாவின் சிறப்பான தர்மங்கள் சொல்லப்பட்டன
ஹிரண்ய கர்பாதிகளைக் குறிக்கும் சொற்களும் பரமாத்மாவையே குறிக்குமாம்

ஆகையால் இந்த்ர ப்ராண சப்தத்தால் குறிக்கப் படுபவன் ஜீவனை விட வேறுபட்ட பரமாத்மாவே என்று தேறிற்று –

இந்திர பிராண அதிகரணம் சம்பூர்ணம்

——–

இந்தப்பாதத்தில்
ஆகாசாதிகரணம் முதல் இறுதி வரை நான்கு அதிகரணங்களிலும்
ஆகாசம் -பிராணம் -என்ற சொற்கள் பிரித்துப் பொருள் கொள்ளும் காரணப் பெயராய்
யதேஷ ஆகாஸ ஆனந்தோ நஸ்யாத்–முதலிய ஸ்ருதிகளிலே க்லுப்தமான படியாலே
ரூடி சக்தியை விட்டு ஸர்வார்த்ர்யாமியாய் –ஸர்வ பிராணிகளையும் உயிரூட்டுபவனாய் உள்ளான் -என்பதாக
நிமித்த பேதம் காரணமாக ஸ்ரீ மன் நாராயணனையே போதிப்பவை என்றும்

ஜ்யோதிஸ் ஸப்தம் குஷி கதமான ஜ்யோதிஸ்ஸுடன் ஒன்றாக உபதேசித்து விசேஷ லிங்கம் இருந்தாலும்
ரூடி சக்தியால் பரம புருஷனையே குறிக்கிறது

இந்த்ர ப்ராணாதி ஸப்தங்களும் -த்வாஷ்ட்ர வதாதி லிங்கங்கள் இருப்பினும் அத்தகைய லிங்கங்களுடன் கூடிய
இந்த்ராதி சரீரகனான பரமாத்மாவையே போதிப்பன என்பதாக ஆச்சார்யர்கள் நிரூபித்து உள்ளனர்

பர வித்யாஸூ ஜீவோக்தி நிரூக்த்யாதே பராஸ்ரயா
தல்லிங்கா நந்யதா ஸித்தவ் தத் விஸிஷ்டாபி தாயினீ –என்று விளக்கினார்கள்
அதாவது
பரவித்யைகளில் காணும் ஜீவனைக் குறிக்கும் சொற்கள் பரமாத்மாவையே குறிப்பவை
அதன் லிங்கங்கள் மாற்ற முடியாமல் நிற்கையில் சேதனாதிகளைச் சரீரமாய்க் கொண்ட ப்ரஹ்மம்
என்ற பொருளைக் குறிப்பிடுவனவாம் என்றவாறு –

இந்தப்பாதத்தில் அதிகரணங்கள் -11-
முதல் நான்கும் உபோத்காதம் -முன்னுரை
அடுத்த ஏழிலும் ஸ்ரீயப்பதியின் கல்யாண குணங்கள் அனுபவிக்கப் படுகின்றன
1-ஈஷத் அதிகரணத்தில் -ஸ்வ இச்சையால் சர்வத்துக்கும் காரணத்வமும்
2-ஆனந்தமய அதிகரணத்தில் சுபமான குண கணங்களுடன் எல்லையில்லா ஆனந்தம் உடைமையும்
3-அந்தராதித்ய அதிகரணத்தில் கர்ம சம்பந்தம் அற்ற ஸுத்தமான திவ்ய மங்கள விக்ரஹ யோகமும்
4-ஆகாஸ அதிகரணத்தில் எல்லையற்று நாற்புறங்களிலும் பிரகாசித்தலும்
5-ப்ராண அதிகரணத்தில் சேதன அசேதன சகல ஜகத்தையும் உயிர் வாழ்விக்கும் திறனையும்
6-ஜ்யோதிர் அதிகரணத்தில் திவ்யமாய் நிகரற்ற ஜ்யோதிஸ் ஸ்வரூபமும்
7-இந்த்ர ப்ராண அதிகரணத்தில் இந்த்ரன் பிராணன் முதலியவற்றுக்கு அந்தராத்மாவாய் விளங்குவதுமாகிய
கல்யாண குணங்கள் ஏழும் உடைய பரம புருஷன் முதல் பாதத்தில் விளக்கப்படுகிறான் –

————

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-முதல் பாதம் -அயோக வ்யவச்சேத பாதம்-சம்பூர்ணம்-

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading