ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி/ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி- –2-5—அந்தாமத் தன்பு செய்து-சாரங்கள் —

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆகம்ய ஸூரி ஸஹிதஸ் சம பாக்ருத ஆர்த்தி
அத் உஜ்வலன் மரகத அசல சன்னிப அங்க
ஈச பிரபுல்ல கமல அஷி கர அங்க்ரி ராஸீத்
தத் பஞ்சமே ஸ கதயன் முநிர் ஆனந்த –15-

சம பாக்ருத ஆர்த்தி -அபாக்ருதம் பண்ணி-ஆர்த்தியை போக்கி

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

ஸ்வ பிராப்த்யா சித்த காந்திம் ஸூகடித தயிதம் விஸ் புரத் துங்க மூர்த்திம்
ப்ரீத் உன்மேஷாதி போக்யம் நவ கன ரஸம் ந ஏக பூஷாதி  த்ருஸ்யம்
பிரத்யாத ப்ரீதி லீலம்  துரபி லபரசம் சத் குண ஆமோத ஹ்ருத்யம்
விஸ்வ வியாவ்ருத்த சித்ரம் விரஜ யுவதி கண க்யாத ரீத்யா அனுபவ புங்க்த -2-5-

1-ஸ்வ பிராப்த்யா சித்த காந்திம் -அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு-
ஆஸ்ரிதரோடே ஸம்ஸலேஷிக்கை யாலே நிரதிசய தீப்தி யுக்தனுமாய்

2-ஸூகடித தயிதம் –திருவிடமே மார்வம்–பெரிய பிராட்டிக்கு வாஸஸ் ஸ்தானமான திரு மார்பை யுடையவனுமாய் –

3-விஸ் புரத் துங்க மூர்த்திம்–மின்னும் சுடர் மலைக்கு–தேஜிஷ்டமாய் மலை போலே வளர்ந்த திரு மேனியை யுடையவனுமாய் –

4-ப்ரீத் உன்மேஷாதி போக்யம் –அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே -ப்ரீதி அதிசயத்தாலே பிரதி க்ஷணம் அபூர்வவத் போக்யனுமாய்

5-நவ கன ஸரஸம் –காரார் கரு முகில் போல் என்னம்மான்–வர்ஷுக வலாஹகம் போலே காருண்ய ரஸத்தை வர்ஷிக்கும் ஸ்வபாவனுமாய்

6-ந ஏக பூஷாதி  த்ருஸ்யம் –பலபலவே யாபரணம் பேரும் பலபலவே-பஹு வித பூஷண நாமதே யாதிகளாலே பூஷிதனுமாய்

7-பிரத்யாத ப்ரீதி லீலம்  –பாம்பணை மேல் இத்யாதி -ப்ரஸித்தமாய் -ப்ரீதி ரூபமாண -வ்ருஷ கண தமந –
ஸப்த சாலை பஞ்ச நாதி லீலா வியாபாரங்களை யுடையவனுமாய்

8-துரபி லப ரசம் -என்னுள் கலந்தானை சொல் முடிவு காணேன்–ஆஸ்ரித விஷயத்தில் அநிர் வச நீயமான பிரமத்தை யுடையனுமாய் –

9-சத் குண ஆமோத ஹ்ருத்யம்–எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை-அஸந்கயேய கல்யாண குணங்களை
யுடைத்தவனாகையாலே நிகர் இல்லாத நீல ரத்னம் போலே ஹ்ருத்யனுமாய் –

10-விஸ்வ வியாவ்ருத்த சித்ரம் –ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்-லோகத்தில் காணப்படுகிற
ஸ்த்ரீ புருஷாதி விலக்ஷண -அத்தியாச்சார்யா ரூபனுமாய் இருக்கிற எம்பெருமானை

விரஜ யுவதி கண க்யாத ரீத்யா அனுபவ புங்க்த —அந்தாமத்து அன்பு செய்த -என்னும் தசகத்திலே ஆழ்வார் –
தம்மோடு வந்து கலக்கையாலே புதுக்கணித்த திவ்ய ஆயுத திவ்ய ஆபரணங்களை யுடையவன் ஆனான் -என்று அத்பரீதியோடே –
கோபால குலத்திலே வந்து பிறந்து தங்களோடு கலக்கையாலே மிகவும் நிறம் பெற்ற குண விக்ரஹாதிகளை யுடைய
ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்ரீ கோபிமார் அதி ப்ரீதியோடே அனுபவித்தால் போலே அனுபவித்து அருளினார் என்கிறார் –

——

ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை –ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் —

பிரவேசம்
ஆடியாடியில் ஆர்த்தி தீர
இவர் ஆசைப்பட்ட படியே நித்ய ஸூரிகளோடே வந்து கலந்த எம்பெருமானை
ப்ரீதி அதிசயத்தாலே அனுபவிக்கிறார் -அந்தாமத்து அன்பில் –

——–

அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம் பொன் திருவுடம்பே –2-5-1-

அழகிய பரம பதத்தில் செய்யும் விருப்பத்தைச் செய்து என்னுடைய ஹேயமான ஆத்மாவிலே வந்து சேர்ந்த ஸ்வாமிக்கு
அழகிய மாலையும் -ஒளி விடுகிற திரு அபிஷேகமும் -திருப் பாஞ்ச ஜன்யமும் -திருவாழியும் -திரு யஜ்ஜோபவீதமும் -திரு வாரமும் –
சிவந்த தாமரை போல் விஸ்த்ருதமான திருக் கண்களும் -சிவந்து கனிந்த திருப் பவளமாகிற செங்கமலமும் –
செந்தாமரை போன்ற திருவடிகளும் -செம்பொன் போன்ற திரு மேனியும் -உளவாயிற்று இன்றே -என்று
தம்மோட்டைக் கலவியால் வந்த அவனுடைய அவயவ ஆபரண ஆயுத சோபையை -அருளிச் செய்கிறார் –
அந்தாமத் தன்பு-இத்யாதியாலே –

——

திருவுடம்பு வான் சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-

ஸ்வரூப ரூப குண விபூதிகளில் நீங்கும் இடம் ஓன்று இன்றிக்கே என்னுள் கலந்தவனுக்குத்
திருமேனியானது ஆதித்யனைப் போலவே ஒளி விடா நின்றது –
திருக்கண்கள் செந்தாமரைப் போலே இரா நின்றது –
திருக்கைகள் கமலம் போலவே இரா நின்றது –
திரு மார்பு பிராட்டிக்கு இடமாயே இரா நின்றது –
திரு நாபீ கமலமானது பிரம்மாவுக்கு இடமாகவே இரா நின்றது –
எனக்கு ஸ்வாமியான உபகாரகனுக்கு நீங்கி உள்ள இடமும் ருத்ரனுக்கு இடமாய் இரா நின்றது –
ஓ இது என்ன ஆச்சர்யம் -என்று விபூதி சோபையை அருளிச் செய்கிறார் -திருவுடம்பு-இத்யாதியாலே –

——

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-

தன் சத்தைக்காக என்னுள் கலந்தவனாய் -பாத்தாலே விளங்கின சுடரை உடைய மலை போன்றவனுக்கு
கண் பாதம் கை இவை கமலம் போலே உஜ்ஜவலமாய் இரா நின்றது –
ஸ்திரமாய் பூர்ணமான ஸப்த லோகங்களும் தன் வயிற்றிலே சத்தை பெற்று இரா நின்றன
தன்னுள்ளே சம்பந்தியாது இருப்பது ஏதேனும் ஒரு பொருள் இல்லை என்று ஸர்வ சத்தா ஹேதுவான தான்
என்னுள் கலந்து சத்தை பெற்றான் என்கிறார் -என்னுள் கலந்தவன் -இத்யாதியால் –

———–

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-

எப்பேர்ப்பட்ட வஸ்துக்களும் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும்படி தனக்கு பிரகாரமாய் -தான் பிரகாரியாய் –
மரகத ஸைலம் போன்ற அசாதாரண விக்ரஹ யுக்தனாய் இருக்கிறவனுடைய கண் பாதம் கையாகிற கமலங்கள்
அப்போது அலர்ந்த தாமரைப் பூப் போலே இரா நின்றன –
நாள் தோறும் மாஸம் தோறும் வருஷம் தோறும் கல்பம் தோறும் கல்பம் தோறும் ஸர்வ காலத்திலும் அனுபவித்தாலும்
அவ்வவ காலம் தோறும் அபூர்வ ரஸமாய் எனக்கு அபர்யாப்தமான அம்ருதம் போலே இரா நின்றன -என்று
அவனுடைய நித்ய அபூர்வதையை அருளிச் செய்கிறார் எப்பொருளும் தானாய்-இத்யாதியிலே –

————

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–

எப்போதும் புஜித்தாலும் பின்னையும் திருஷ்ணையை விளைக்கும் அம்ருதம் போலே போக்யனாய்
அவஸ்துவான என் ஆத்மாவின் உள் கலந்து அத்தாலே காளமேகம் போலே
அத் யுஜ்ஜ்வலனாய் இருக்கிற என் ஸ்வாமியான கண்ணனுக்கு
சிவந்த பவளமானது ஜாதியாக வாய்க்கு ஒப்பாக மாட்டாது –
திருக்கண்கள் திருவடிகள் திருக்கைகள் இவற்றுக்குத் தாமரைப்பூ ஜாதியாக ஒப்பாக மாட்டாது –
இரட்டை மடிப்பிட்டுச் சாத்தும் படி பெரிய முத்து வடமும் நீண்ட முடியும் அப்படிப்பட்ட அரை நாணும்
பின்னையும் ஆபரணங்களும் பலவே -என்கிறார் -ஆராவமுதமாய்-இத்யாதியிலே –

————-

பலபலவே யாபரணம் பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-

திவ்ய அவயவங்களில் சாத்தும் திரு ஆபரணங்களும் அநேகமாய் இரா நின்றன –
அப்படியே திரு நாமங்களும் அநேகமாய் இரா நின்றன
தேஜோ மயமான திரு மேனிகளும் அநேகமாய் இரா நின்றன
பிரகாரங்களை அனுசந்திக்கில் –
கண்டும் -உண்டும் -கேட்டும் -தொட்டும் -மோந்தும் -அனுபவிக்கும் விஷயங்களும் அநேகமாய் இரா நின்றன
ஸப்தாதி விஷய ஞானங்களும் அநேகங்களாய் இரா நின்றன –
இவை எல்லாம் ஆருக்கு என்னில்
திரு அனந்தாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளினவனுக்கே –
ஓ ஆச்சர்யம் -என்கிறார் -பல பலவே -இத்யாதியாலே

பாம்பணை மேலாற்க்கு அனுபாவ்ய பிரகாரங்களை அனுசந்திக்கில்
இவை எல்லாம் பல பலவே -என்று அந்வயம் –

————–

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—

திருப்பாற் கடலிலே திரு அனந்தாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளிற்றும்
மூங்கிலை அணைந்து இருந்துள்ள தோள் அழகை யுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
ஏழு விருஷபங்களை ஊட்டியாக ஏக காலத்திலேயே நிரசித்ததும்
பூத்துப் பணைத்துச் சோலை போலே இருந்த மராமரம் ஏழையும் எய்ததும்
பூவோடு புனைபட்ட திருத்துழாய் மாலையை உடைய ஸ்ப்ருஹ ணீயமான திரு அபிஷேகத்தை யுடைய
என்னுடைய சமர புங்கவர் என்று இது எல்லாம் தமக்காகவே -என்கிறார் –பாம்பணை மேல்-இத்யாதியாலே –

———–

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-

பொன் முடியை யுடைய என்னுடைய போர் ஏறு போலே இருக்கிற என்னுடைய ஸ்வாமியை
தன் அழகுக்கு ஒரு முடிவு இல்லாது இருக்கிற குளிர்ந்த திருத் துழாய் மாலையை யுடையவனை
என்னுடைய நாஸத்தைக் காண மாட்டாதே காருண்யத்தாலே ஹேயமான என்னுள்ளே
ஒரு நீராகக் கலந்தவனைப் புகழ்கைக்கு நான் ஒரு அந்தம் காண்கிறிலேன்-
எத்தைத் தான் சொல்வது -சொல்லவல்ல நீங்கள் ஆகிலும் சொல்லீர் -என்கிறார் -பொன் முடி -இத்யாதியால் –

————

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –-2-5-9-

எனக்கு சேஷி யானவனை -என்னுடைய அந்தராத்மாவுக்கு அந்தராத்மா ஆனவனை –
அமர்யாதமான கல்யாண குணங்களையும் யுடைய என்னுடைய நீல ரத்னம் போலே
விளங்கா நின்று உள்ளவனைச் சொல்லீர்
விலக்ஷணமான அம்ருதமுமாய் -பெறுகைக்கு அரிய மோக்ஷ ஸூ கமுமாய்
தாமாரைப் பூவினுடைய பரிமளம் போலே போக்யமுமாய்
புருஷோத்தமனுமாய் இருக்குமவன் -என்கிறார்-சொல்லீர் என் அம்மானை -இத்யாதியாலே –

———-

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-

ஸ்த்ரீ புன்ன பும்ஸக பேத பின்னமான லௌகிக பதார்த்தங்களின் படி இன்றிக்கே புருஷோத்தமனாய்
லௌகிக ப்ரமாணங்களாலே காண்கைக்கும் அரியனாய்
அநாஸ்ரிதருக்கு உளன் அல்லனாய்
ஆஸ்ரிதர்களுக்கு இல்லை அல்லனாய்
பிரார்த்தித்த காலத்தில் ப்ரார்த்த நியாமான திருமேனியோடே அவதரிக்குமவனாய்
இந்நிலையில் கம்சாதிகளுக்கும் கிட்ட அரியனாய் இருக்கும் எம்பெருமானை
இன்னபடி என்று சொல்லுகை பெரிய ப்ரயாஸத்தை யுடைத்தானது -என்கிறார் -ஆண் அல்லன்-இத்யாதியாலே –

———–

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-

தன் படிகளைப் பேசப் புக்கால் பேசித் தலைக்கட்ட ஒண்ணாத படி இருக்கிற
கூத்தாடின ஸ்வாமியைப் பேசுகையிலே அபி நிவேசித்து இருக்கிற திரு நகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த அந்தாதியான ஆயிரத்தில் இப்பத்தையும்
சொல்ல வல்லார் உண்டாகில் வானவர் வைகுந்தத்தைப் பெறுவார் என்று
யுக்த அர்த்தத்தை நிகமிக்கிறார் -கூறுதல் ஓன்று–இத்யாதியாலே –

————–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -15-பாசுரம்–

அவதாரிகை –

இதில் ஆடியாடியில் -விடாய் தீர
அடியார்கள் குழாங்களுடனே வந்து கலந்த படியைப் பேசின
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இவருடைய ஆர்த்தி தீரக் கலந்து
வாட்டமில் புகழ் வாமனனாவன் –
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே அகப்பட்டு இடர் பட்ட ஆனையின் இடரைச்
சடக்கென வந்து போக்கினால் போலே
ஆடியாடி யிலே தாம் பட்ட இடர் எல்லாம் போம்படி
ஆசைப் பட்டபடியே அடியார் குழாங்கள் உடன் கூடி வந்து
சம்ச்லேஷித்து அருளக் கண்டு
தம்மோட்டைக் கலவியாலே
அவன் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பை
மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற
அந்தாமத்து அன்பில் அர்த்தத்தை
அந்தாமத்து அன்பாலே -அருளிச் செய்கிறார் –

அந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன்
வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் -சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே
வாய்ந்த வன்பை நாடோறும் வை–———–15-

வியாக்யானம்–
அந்தாமத்து அன்பால் –
அழகிய ஸ்ரீ வைகுண்ட தாமத்தில் பண்ணும் விருப்பத்தாலே –
அத்தேசத்திலும்
அத்தேசிகர் இடத்திலும் உண்டான அதி ச்நேஹத்தாலே –

அடியார்களோடு இறைவன் –
அடியார்கள் உண்டு –
அஸ்த்ர பூஷன பிரமுகராய் உள்ள நித்ய சூரிகள் –
அவர்களோடு கூட சர்வேஸ்வரன்
சபரிகரனாய் உளனாம் படி சம்ஸ்லிஷ்டனாய்-
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்காழி நூலாரமுள-என்றத்தை நினைக்கிறது –

வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் –
சர்வ ஸ்மாத் பரனான தான்
பரமபதத்தின் நின்றும்
பரமா பதமாபன்னரான–பெரிய ஆபத்தில் இருந்த -இவர் இருந்த இடத்து அளவும் வந்து
பரிபூர்ணமாக சம்ச்லேஷித்த ஔதார்யத்தாலே –

சந்தாபம் தீர்ந்த –
விசோதித ஜடஸ் ஸநாத-தஸ்தௌ தத்ர ஸ்ரியாஜ்வலன் -என்றும்
அதிவ ராமஸ் ஸூஸூபே-என்றும்
செந்தாமரை தடங்கண் செங்கனிவாய் செங்கமலம் செந்தாமரை அடிக்கள் செம்பொன் திரு உடம்பே -என்றும்
திரு உடம்பு வான் சுடர் –என்னுள் கலந்தானுக்கே -என்றும்
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம் மின்னும்
சுடர் மலைக்கு கண் பாதம் கை கமலம் -என்றும்
எப்பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும் -என்றும்
வாட்டமில் புகழ் வாமனன் மலை போலே பெருத்து
அவயவ சௌந்தர்யாதி களையும் யுடையனாய்
இருக்கிற படியை அனுபவித்து
சந்தாபம் ஆனது சவாசனமாக நிவ்ருத்தமான –

சந்தாபம் ஆவது
ஆடியாடி யில்
வாடுதல்
இரக்கம் இல்லாமல் தவித்து
வெவ்வுயிர்த்தல்
வாய் வெருவுதல்
உள்ளம் உக உருகுதல்
உள்ளுள் ஆவி உலருதல்
தன் நெஞ்சம் வேதல் துடக்கமானவை –
உள்ளுள் ஆவி உலர்ந்து -தீர -என்றும்
அல்லாவியுள் கலந்த -என்றும்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தான் -என்றும்
என்னுள் கலந்தவன் -என்றும் இறே இவர் அருளிச் செய்தது –
சந்தாபம் தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே வாய்ந்த வன்பை நாடோறும் வை –
வானோர் தனித் தலைவன்
அந்தாமத்து அன்பு செய்யும் படியான
ஆழ்வார் திருவடிகளிலே
உன் தன் மொய் கழற்கு அன்பை முயல்கின்றேன் -என்கிறபடியே
மனசே ஸூசங்கதமான சங்கத்தை நித்யமாக நிஷிப்தம் ஆக்கு
நிதியை அடியிலே இட்டு வைப்பாரைப் போலே
அன்பை அடியிலே இட்டு வை-

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading