ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
மோஷ ஆதரம் ஸ்புடம் அவேஷ்ய முநிர் முகுந்தே
மோஷம் பிரதாதும் அஸத்ருஷ பலம் ப்ரவ்ருத்தே
ஆத்மேஷ்ட மஸ்ய பத கிங்கரத ஏக ரூபம்
மோஷாக்ய வஸ்து நவமே நிரணாயி தேந –19-
———–
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
ஸ்ரத்தேய ஸ்வ அங்க்ரி யோகம் ஸூபம் அதி கரதம் ஸ்தோத்ர சாமர்த்ய ஹேதும்
ஸ்வ ஆர்த்தி கர உபகாரம் ஸ்ம்ருதி ரஸம் சமிதா அன்யாதரம் ப்ரீதி வஸ்யம்
பிராப்தௌ காலா ஷமத்வ ப்ரதம் அம்ருத ரஸ தியானம் ஆத்ம அர்ப்பண அர்ஹம்
வைமுக்யா த்வார யந்தம் வ்ருத பரி சரணம் சக்ர பாணிம் ஜகாத–2-9-
1-ஸ்ரத்தேய ஸ்வ அங்க்ரி யோகம் —நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து—ப்ரார்த்த நீயமான தன் திருவடிகள் சம்பந்தத்தை யுடையனுமாய் —
2-ஸூபம் அதி கரதம் —-நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா –தன் திருவடிகளைப் பிராபிக்கும் படிக்கு ஈடான ஞானம் ஆகிற கையைக் கொடுக்குமவனாய் –
3-ஸ்தோத்ர சாமர்த்ய ஹேதும்—-நின் கழல் எய்யாது ஏத்த அருளிச் செய்–தன் திருவடிகளையே
ஸர்வ காலத்திலும் ஏத்துகைக்கு சாமர்த்தியத்தை உண்டாக்குமவனாய் –
4-ஸ்வ ஆர்த்தி கர உபகாரம் —-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே–ஸ்வார்த்தமாகவே உபகரிக்குமவனாய் —
5-ஸ்ம்ருதி ரஸம் சமிதா அன்யாதரம் –மறப்பு ஓன்று இன்றி என்றும்—ஸ்வ விஷய ஸ்ம்ருதியாலேயே
அந்நிய விஷய ஆதாரத்தை சமிப்பிக்குமவனாய்
6-ப்ரீதி வஸ்யம் —என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க–ஸ்வ விஷயத்தில் ப்ரீதி உடைய பேர்களுக்கு வஸம் வதனுமாய் –
7-பிராப்தௌ காலா ஷமத்வ ப்ரதம் —வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்பேராதே நான் வந்தடையும் படி தாராதாய்—
ஸ்வ ப்ராப்தியில் கால ஷேப ஷமன் ஆகாதபடி பண்ணுமவனாய் –
8-அம்ருத ரஸ தியானம் —-வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே–அம்ருதம் போலே அத்யந்தம் போக்யமாகப் பிரகாசிக்குமவனாய் —
9-ஆத்ம அர்ப்பண அர்ஹம்—யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே—
நானும் என் உடைமையும் உன்னது -என்று ஸூ ரிகளாலும் ஏத்தப் படுக்கையாலே ஆத்மாத்மீயங்களை சமர்ப்பண யோக்யமானவனுமாய் –
10-வைமுக்யா த்வார யந்தம் —என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை வேறே போக எஞ்ஞான்றும் விடலே—
ஆஸ்ரிதரைத் தன் திருவடிகளில் நின்றும் விமுகராயப் போகாதபடி பண்ணுமவனாய் இருக்கிற – எம்பெருமானை
11-வ்ருத பரி சரணம் சக்ர பாணிம் ஜகாத–எம்மா வீட்டு திருவாய் மொழியிலே
கைங்கர்ய உத்தேச்ய பூதனாக ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
———-
ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை –ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் —
பிரவேசம் –
கீழில் திருவாய் மொழியில் நலம் அந்தம் இல்லாதோர் நாடு –2-8-4-என்று
இவர் அருளிச் செய்த பரமபதத்தை எம்பெருமான் இவருக்கு கொடுக்கப் பார்க்க
அந்தப் புருஷார்த்தத்தை சோதித்து -இங்கனே தர வேணும் என்கிறார் -எம்மா வீட்டில் —
—-
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-
எவ்வகையாலும் நன்றான மோக்ஷத்தின் இடையாட்டமும் சொல்லோம் நாம்
நீயே -அகவாய் சிவந்து புறவாய் ஸ்யாமமாய் -விகாசாதிகளுக்கு எல்லாம் தாமரை போலே இருக்கிற
திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க வேணும்
ஸீக்ரமாக இப்படிச் செய்ய வேணும் –
ஆணையினுடைய ஆர்த்தியைத் தீர்த்த உபகாரகனே
சேஷியான உன் பக்கலிலே -அடியேனான நான் -அபேக்ஷிப்பது
இதுவே என்கிறார் -எம்மா வீட்டுத் திறமும் செப்பம்-இத்யாதியாலே –
———
ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கை தா காலக் கழிவு செய்யலே –2-9-2-
சேஷமான நான் -புராண -பிராண -சேஷியான உன் பக்கலிலே எக்காலத்திலும் கொள்வது இதுவே –
மை தோய்ந்து இருந்துள்ள தேஜஸ்ஸை யுடைத்தான மணியினுடைய நிறம் போன்ற திரு நிறத்தை
என்னை அனுபவிப்பித்த என் ஸ்வாமியே
ஸ்வ யத்னத்தாலே ஒருவருக்கும் பிராபிக்க ஒண்ணாத திருவடிகளை
உன்னாலே பெற இருக்கும் நான் பிராபிக்க ஞானம் ஆகிற கையைத் தந்து அருள
விளம்பம் செய்ய வேண்டா என்கிறார்–ஈதே யானுன்னைக் கொள்வது- இத்யாதியாலே –
———
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3-
திருக் கையும் திருவாழியுமான அழகைக் காட்டி
நான் வேணுமாகில் தீ வினையைச் செய்யாதே கொள் -என்று கிருபை செய்யும் கிருஷ்ணனே
செறிந்த கோழைப் பையலார் வந்து கண்டத்தை அடைக்கும் போதும் உன் கல்யாண குணங்களை
இளையாதே ஏத்தும் படி எனக்கு அருள் செய்ய வேணும்
என்கிறார் –செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும்-இத்யாதியாலே –
———
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-
சர்வ காலத்திலும் எனக்கு ஆட் செய் என்று கொண்டு
என் ஹ்ருதயத்தில் வந்து இருந்து நிரந்தரமான ஸ்தாவரமான ப்ரதிஷ்டையாய் இருந்து
உனக்கே அநந்யார்ஹ சேஷமான என்னைக் கொள்ளுகையாகிற இதுவே எனக்கு விலக்ஷணமாக
எம்பெருமானை அநந்யார்ஹனான நான் கொள்ளும் விசேஷ பரம புருஷார்த்தம்
என்கிறார்–எனக்கே யாட்செய் எக்காலத்தும்- இத்யாதியாலே –
———
சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5-
ஸர்வ உத்க்ருஷ்டமான மோக்ஷம்
பரிமித ஸூகமான ஸ்வர்க்கம்
நிஷ்க்ருஷ்ட துக்கமான நரகம்
இவற்றை ஆத்மா சரீர வியாக சமயத்திலே பிராபிக்க -பிராபியாது ஒழிக
பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்க ஆஸ்ரித அநுக்ரஹ அர்த்தமாகப் பல பிறவிகளுடைய பெருமானை
நானும்-விஸ்ம்ருதி என்கிறது ஓன்று இன்றிக்கே
என்றும் அனுபவித்து மகிழக் கடவேன்-சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்–என்கிறார் இத்யாதியாலே –
————
மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6-
ஆனந்த பிரசுரராய் இருந்துள்ள தேவர்கள்
இந்திரிய விஷயமான அசித்து
ஸாஸ்த்ர ஏக கம்யமான சித் வஸ்து
தாஹகமான தேஜஸ்ஸூ பதார்த்தம்
இவற்றை உண்டாக்கின ஸர்வேஸ்வரனே
ஆநந்தியா நின்றுள்ள சிந்தையும் வாக் வ்யவஹாரமும் கொண்டு நான் ஆனந்திக்கு படி
உன்னை வணங்க நீ வர வேணும் என்கிறார்–மகிழ் கொள் தெய்வம்– இத்யாதியாலே–
———–
வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-
உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளின் கீழே புணரா வ்ருத்தி இல்லாத பேற்றை
நான் பெறும்படி உன்னை எனக்குத் தாராது இருக்கிறவனே
என்னுடைய ஹ்ருதயத்தில் உன்னைக் கொண்டு வந்து வைக்கும் இடத்திலே
ஏக தேசமும் திருப்தியை அடையாதபடி இருக்கிறவனே
எனக்கு எல்லாக் காலத்திலும் எல்லா அவஸ்தையிலும் வாராய் என்கிறார்–வாராய்- இத்யாதியாலே –
———-
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8-
எல்லாக் காலத்திலும் எனக்கு சேஷியாய் நான் சேஷமான முறை தப்பாமல் வந்து
என்னுடைய ஹ்ருதயத்திலே புகுரப் பெறில்
இக்காலம் எல்லாவற்றிலும் மற்று ஒன்றையும் வேண்டேன் –
பகவத் அனுபவத்தில் மிக்கராய் -வேதத்தில் விமலராக ப்ரதிபாதிக்கப் பட்டுள்ள நித்ய ஸூரிகளை
அநுபவியா நின்றுள்ள -அக்காரம் போலேயும் கனி போலவும் -நிரதிசய போக்யனான உன்னை
யான் வேண்டேன் என்கிறார்–எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் இத்யாதியாலே —
————–
யானே என்னை யறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-
யானே யேந கேந உபாயேந ஸ்வரூபத்தை அறிய மாட்டாதே
நான் என்றும் -என்னது என்றும் -அஹங்கார மமக வஸ்யனாய் -அநாதி காலம் இருந்தேன்
யான் என்கிறதும் என்னது என்கிறதும் நீர் இட்ட வழக்கு
பரம பதத்தில் உள்ளாராலே ஏத்தப்படும் நித்ய ஸூரி நிர்வாஹகனே –
என்கிறார் –யானே என்னை யறியகிலாதே-இத்யாதியாலே –
———-
ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10-
ஏறாகில் ஏழையும் வென்று -கம நீயமாய் -கட்டு உடைத்தான லங்கையை பஸ்மா சேஷமாம் படி
பண்ணின மிக்க தேஜஸ்ஸை யுடையவனே -உன்னைத் தெளிய மாட்டு கிறிலேன் –
உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை ஸீக்ரமாகக் கொக்குவாயும் படு கண்ணியும் போலே சேர்க்க வேணும்
நான் அந்நிய பரனாம் போம்படி ஒரு காலும் விட ஒண்ணாது என்கிறார் –ஏறேல் ஏழும் வென்று –இத்யாதியாலே —
———-
விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-
நிகமம்
ஒரு காலும் விடாதே திருவாழியைக் கையிலே உடைய ஸர்வேஸ்வரனை
அவனைக் கிட்டிப் பிரிவில் தரியாத பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த
ஆத்மாவுக்கு அநர்த்தம் வராதபடி ஹிதத்தை அருளிச் செய்த ஆயிரத்திலும் இவை பத்தும்
அப்யஸித்தார்க்கு -ஸ்ரத்தை பண்ணு மவர்க்கு அஹங்கார மமகாரங்கள் ஆகிற -அநர்த்த ரஹிதமான
மோக்ஷத்தைத் தரும் என்று உக்த அர்த்தத்தை நிகமிக்கிறார் –விடலில் சக்கரத் தண்ணலை–இத்யாதியாலே –
——-
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -19-பாசுரம்–
அவதாரிகை –
இதில்
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணின பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
பிறர்க்கு அவன் மோஷ பரதன் -என்னுமத்தை உபதேசிக்கிற அளவில்-2-8-
முதல்
நடுவு
இறுதி
இவர் மோஷத்தை ஸ்லாகித்துக் கொண்டு பேசுகையாலே
இவருக்கு மோஷத்தில் அபேஷையாய் இருந்தது -என்று
ஈஸ்வரன் அத்தைக் கொடுக்கப் புக –
தமக்கு உகப்பாகத் தரும் மோஷமும்
அஹங்கார கர்ப்பம் ஆகையாலே அபுருஷார்த்தம் -என்று அத்தை கழித்து –
பரமபதஸ்தனாய் ஸூகிக்கவுமாம்
சம்சாரஸ்தனாய் துக்கிக்கவுமாம்
எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை
தேவர்க்கு உறுப்பாம் அதுவே எனக்கு வடிவாம்படி பண்ணி அருள வேணும்
என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிற
எம்மா வீட்டில் அர்த்தத்தை –
எம்மா வீடும் வேண்டா –-என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-
எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த -நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –—19—
வியாக்யானம்–
எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த –
எவ்வகையாலும் விலஷணமான மோஷமும் வேண்டா –
சேஷ பூதனான எனக்கு
யாவந்ன சரனௌ சிரஸா தாரயிஷ்யாமி -என்னும்படி
சேஷியான தேவருடைய அங்க்ரி யுகளமே அமையும் என்று
உபய அனுகுணமாக முக்தியை ஆராய்ந்து தலை சேர
நிஷ்கர்ஷித்து அருளிச் செய்த –
வாய்ந்து- என்று
இவ்வர்த்தத்திலே பொருந்தி என்றுமாம் –
இது –எம்மா வீட்டை -அடியே துடங்கி அடி ஒத்தின படி –
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து –என்று துடங்கி
உன் பொன்னடிச் சேர்த்து -என்று இறே தலைக் கட்டுத் தான் இருப்பது –
தலைக்கு கட்டு -தலைக்கட்டினார் -சாடு
தாளிணையே -என்கையாலே
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்றது ஸூசிதம்-
திருமுடியை திருவடிகளுக்கு பாத பீடம் ஆக்குகிறது
அத்யந்த பாரதந்த்ர்யம் இறே –
நம்முடைய வாழ் முதலாம் மாறன் –
நம்முடைய ஸ்வரூப அனுரூபமான சம்பத்துக்கு அடியாம் ஆழ்வார்
ஆழ்வார் உடைய வாழ்வுக்கு அடி –தனியேன் வாழ் முதலே -2-3-5–என்கிற ஈச்வரனாய் இருக்கும்
இவருடைய வாழ்வுக்கு அடி ஆழ்வாராய் இருக்கும் –
மலர்த் தாளிணை சூடி –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -4-3-6–என்றும்
பாத பற்புத் தலை சேர்த்து -என்கிறபடியே
செவ்விப் பூ சூடுவாரைப்போலே
பூ போன்ற அடி இணையைச் சூடி –
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –
தத் இதர சேவை ஆகிற தாழ்ச்சி அற்று-தேவு மற்று அறியேன் -என்று அவனையும் தவிர்க்கிறார் –
(தாழ்ச்சி எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் வாழ்ச்சி என்றார் ஆழ்வார் –
இவர் அதையும் தவிர்ந்து –
கீழ்மை அற்று ஆழ்வார் மலர் தாளிணை சூடி இருப்பதே நம்முடைய வாழ் முதல் என்று அருளிச் செய்கிறார் )
ஆழ்வார் சேவையாலே
சத்தை பெற்று மனசே மயங்காமல்
மேன்மேல் எனக் கிளர்ந்து போரு –
—————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply