சிவனைத் துதித்து இந்திரன் எடுத்த விழா; பாரிஜாதம் பெற தூதாகச் சென்ற நாரதர்; பாரிஜாதத்தைக் கொடுக்காததற்கு காரணங்களை அடுக்கிய இந்திரன்.
வைஶம்பாயந உவாச
நாரதோ³(அ)த² முநிர்க³த்வா மஹேந்த்³ரஸத³நம் ப்ரதி |
தாம் ராத்ரிமவஸத்தத்ர த³த்³ருஶே ச மஹோத்ஸவம் ||2-69-1
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பிறகு மஹேந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்றார் நாரத முனிவர்; அங்கே அவர் (சிவனைக் கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற) விழாவைக் கண்டு அந்த இரவைக் கழித்தார்.
தத்ராதி³த்யா மஹாத்மாநோ வஸவஶ்ச ஸுரோத்தமா꞉ |
ராஜர்ஷயஶ்ச வித்³வாம்ஸ꞉ ஸ்வர்க³தா꞉ கர்மபி⁴꞉ ஶுபை⁴꞉ ||2-69-2
சிறப்புமிக்க ஆதித்யர்கள், தேவர்களில் சிறந்த வசுக்கள், புண்ணியச் செயல்களின் மூலம் சொர்க்கத்தை அடைந்தவர்களும், கல்விமான்களுமான ராஜரிஷிகள்,
நாகா³ யக்ஷாஶ்ச ஸித்³தா⁴ஶ்ச சாரணாஶ்ச தபோத⁴நா꞉ |
ப்³ரஹ்மர்ஷயஶ்ச ஶதஶோ தே³வர்ஶிமநவஸ்ததா² ||2-69-3
நாகர்கள், யக்ஷர்கள், சித்தர்கள், சாரணர்கள், தவத்துறவுகளை மேற்கொள்ளும் தவசிகள் {தபோதனர்கள்}, ஆயிரக்கணக்கான பிரம்மரிஷிகள், தேவரிகள், முனிவர்கள்,
ஸுபர்ணஶ்ச மஹாத்மாநோ மருதஶ்ச மஹாப³லா꞉ |
தி³வௌகஸாம் நிகாயாஶ்ச ஶதஶோ(அ)ந்யே ஸமாக³தா꞉ ||2-69-4
உயரான்ம சுபர்ணர்கள், பெருஞ்சக்திவாய்ந்த மருத்துகள் ஆகியோரும் நூற்றுக்கணக்கான தெய்வீக உயிரினங்கள் பிறரும் அங்கே கூடியிருந்தனர்.
உபர்யுபரி ஸர்வேஷாம் ஸோமதே³வோ மஹேஶ்வர꞉ |
தஸ்தா²வமிதவிக்ராந்த꞉ ஸ்வைர்க³ணை꞉ பரிவாரித꞉ ||2-69-5
எல்லையற்ற சக்தி கொண்ட தேவன் மஹேஸ்வரன் {சிவன்}, உமையின் துணையுடன் கூடியவனாகத் தன் தொண்டர்கள் {பூதகணங்கள்} சூழ அவர்கள் அனைவருக்கும் தலைமையில் அமர்ந்திருந்தான்.
தே³வர்ஷிபி⁴ர்முநிஶ்ரேஷ்டை²꞉ ஸம்வ்ருத꞉ ஸர்வபா⁴வந꞉ |
கல்பாந்தரஸஹஸ்ரேஷு க்ஷயோ யேஷாம் ந வித்³யதே ||2-69-6
யாநர்சயந்தி ஸததம் தே³வா தே³வேஶ்வரோபமா꞉ |
ஆத்மஜ்ஞா நாவலேபாந்தா⁴ யே ச த⁴ர்மபதி² ஸ்தி²தா꞉ ||2-69-7
உயிரினங்கள் அனைத்தின் பாதுகாவலனான அவன், ஆயிரக்கணக்கான கல்பங்களின் முடிவிலும் அழிவற்றவர்களாகத் திகழ்பவர்களும், இந்திரனுக்கு இணையான தேவர்களாலும் வழிபடப்படுபவர்களும், தன்னறிவு பெற்றவர்களும், செருக்கிலிருந்து விடுபட்டவர்களும், அறப்பாதையில் எப்போதும் நடப்பவர்களுமான முதன்மையான தேவரிஷிகளாலும் சூழப்பட்டிருந்தான்.(6,7)
ருத்³ராஶ்ச காஶ்யபா தே³வமத்⁴யுபாஸந்த பா⁴ரத |
ஸ்கந்த³ஶ்ச ப⁴க³வாநக்³நிர்க³ங்கா³ம் ச ஸரிதாம் வரா ||2-69-8
அர்சிஷ்மாம்ஸ்தும்பு³ருஶ்சைவ பா⁴ரிஶ்ச வத³தாம் வர꞉ |
நேதாரோ தே³வதே³வாநாமேதே ஹி தபஸாந்விதா꞉ ||22-69-9
ஓ! பாரதா, ருத்திரர்கள், கசியபரின் சந்ததியினர், ஸ்கந்தன், நெருப்பின் தேவன் {அக்னி}, ஆறுகளில் சிறந்த கங்கை, அர்சிஷ்மான், தும்புரு, நாநயமிக்கப் பேச்சாளர்களில் முதன்மையான பாரிசன் {பாரி}, தவத்தகுதிகளைக் கொண்டோர் {புண்ணியவான்கள்}, தேவ படையின் தலைவர்கள் ஆகியோர் அங்கே அந்தப் பரமசிவ தேவனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.(8,9)
ஏதாநநுவிதீ⁴யந்தே ஸர்வதே³வக³ணா ந்ருப |
த⁴ர்மநித்யாஸ்தபோநித்யா꞉ ஸதாம் மார்க³முபாஶ்ரிதா꞉ ||2-69-10
ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, அறவழிகளிலும், தவங்களிலும் அர்ப்பணிப்புள்ளவர்களும், நல்லோரின் பாதையைப் பின்பற்றுபவர்களுமான பிற தேவர்களும் ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்டவர்களான அந்தத் தலைவர்களைப் பின்பற்றினார்கள் (சிவனைத் துதித்தனர்)
யே த்விமே மாநுஷா தே³வாநர்சயந்தி ஶுபா⁴ர்தி²ந꞉ |
தாநர்சயந்தி ஹ்யமராஸ்தத² ராஜஞ்சு²பா⁴ர்தி²ந꞉ ||2-69-11
ஓ! மன்னா {ஜனமேஜயா}, நன்மையை விரும்பும் மனிதர்கள் பூமியில் தேவர்களை வழிபடுகிறார்கள், அதே மனிதர்கள், நன்மையை அடைய விரும்பும் தேவர்களால் சொர்க்கத்தில் வழிபடப்படுகின்றனர்
பித்ருக்ருத்யேஷு தே³வாநாம் ஸம்ந்யாஸம் யே த்வநுஷ்டி²தா꞉ |
ஸ்வாத்⁴யாயவந்த꞉ கௌரவ்ய ஸதா³ நியமசாரிண꞉ ||2-69-12
ஓ! கௌரவர்களின் வழித்தோன்றலே, சாத்திர விதிகளின்படி வாழ்பவர்களும், பித்ருக்களின் நன்மைக்காக அறச்சடங்குகளைச் செய்து தேவர்களைத் துதிப்பவர்களும்,, வேதங்களை அறிந்தவர்களுமான மனிதர்கள், மறுமையில் தேவர்களால் உயர்வாகக் கௌரவிக்கப்படுகின்றனர்.
க³ந்த⁴ர்வாதி⁴பதி꞉ ஶ்ரீமாம்ஸ்தத்ர சித்ரரதோ² ந்ருப |
ஸபுத்ரோ வாத³யாமாஸ தே³வவாத்³யாநி ஹ்ருஷ்டவத் ||2-69-13
ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, அங்கே கந்தர்வர்களின் மன்னனான சிறப்புமிக்கச் சித்திரரதன், தன் மகனுடன் கூடியவனாக தெய்வீக இசைக்கருவிகளை மகிழ்ச்சியாக இசைத்துக் கொண்டிருந்தான்.
ஊர்ணாயுஶ்சித்ரஸேநஶ்ச ஹாஹா ஹூஹூஸ்ததை²வ ச |
டு³ம்ப³ரஸ்தும்ப³ருஶ்சைவ ஜகு³ரந்யே ச ஷட்³கு³ணாந் ||2-69-14
ஊர்ணாயன், சித்திரசேனன், ஹாஹா, ஹுஹு, தும்பரன் {கும்பரன்}, தும்புரு ஆகியோரும், பிற கந்தர்வர்களும் ஆறு வெவ்வேறு குணங்களைப் பாடிக் கொண்டிருந்தனர்.
உர்வஶீ விப்ரசித்திஶ்ச ஹேமா ரம்பா⁴ ச பா⁴ரத |
ஹேமத³ந்தா க்⁴ருதாசீ ச ஸஹஜந்யா ததை²வ ச ||2-69-15
ஊர்வசி, விப்ரசித்தி, ஹேமா, ரம்பை, ஹேமதந்தா, கிருதாசி, சஹஜன்யை ஆகியோரும் பிற காரிகையரும் பல்வேறு வகையில் அங்கே ஆடிக் கொண்டிருந்தனர்.
ஜுஜோஷ ப⁴க³வாந்தே³வஸ்தது³பஸ்தா²நமாத்மவாந் |
வ்ருத்தேந துஷ்ட꞉ ஶக்ரஸ்ய ஜகா³ம ஜக³தோ க³தி꞉ ||2-69-16
தன்னை ஆள்பவனும் {ஆத்மஞானியும்}, சிறப்புமிக்கவனுமான சிவன், இந்தக் கௌரவங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான், மேலும் அந்த உலகத் தலைவன், சக்ரனின் வழிபாடுகளில் மகிழ்ந்தவனாகத் தன் வசிப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றான்
க³தே பூ⁴தபதௌ ஸர்வே ந்ருபா ஜக்³முர்யதா²க³தம் |
மஹேந்த்³ரேணார்சிதா தே³வா꞉ ஸ்வாநேவ நிலயாந்க³தா꞉ ||2-69-17
படைக்கப்பட்ட உயிரினங்களின் தலைவனான அவன் சென்றதும், (அங்கே கூடியிருந்த) மன்னர்கள், தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்; மஹேந்திரனால் கௌரவிக்கப்பட்ட தேவர்களும் தங்கள் தங்களுக்குரிய வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.
தத꞉ ஸர்வேஷு யாதேஷு ஸுகா²ஸீநம் புரம்த³ரம் |
ஸத³ஸ்யை꞉ ஸ்வை꞉ ஸஹாஸீநம் நாரதோ³(அ)பி⁴யயௌ முநி꞉ ||2-69-18
அனைவரும் சென்றபிறகு தன் சபை உறுப்பினர்களுடன் சுகமாக அமர்ந்திருந்த புரந்தரனிடம் நாரத முனிவர் சென்றார்
தமிந்த்³ர꞉ புஜயாமாஸ ஸமுத்தா²ய தபோத⁴நம் |
தி³தே³ஶ குஶக³ர்ப⁴ம் ச பீட²மாத்மாஸநோபமம் ||2-69-19
இந்திரன், தன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று தவமெனும் செல்வத்தைக் கொண்ட அந்த முனிவரை வரவேற்று தன் இருக்கைக்கு இணையான குசப்புல்லாலான இருக்கையை அவருக்கு அளித்தான்.
நாரதோ³(அ)த² மஹாதேஜா மஹேந்த்³ரமித³மப்³ரவீத் |
தூ³தோ(அ)ஹமமரஶ்ரேஷ்ட² விஷ்ணோரதுலதேஜஸ꞉ ||2-69-20
அப்போது, பெருஞ்சக்திவாய்ந்தவரான நாரதர், பின்வரும் சொற்களை மஹேந்திரனிடம் சொன்னார், {நாரதர்}, “ஓ! தேவர்களில் முதன்மையானவனே, நான் இப்போது ஒப்பற்ற வலிமை கொண்ட விஷ்ணுவிடம் {கிருஷ்ணனிடம்} இருந்து இங்கே தூதனாக வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக.
கிஞ்சித்கார்யம் புரஸ்க்ருத்ய ப்ரேஷிதோ(அ)ஸ்மி மஹாத்மநா |
ஆநர்தாதா³ர்திஹரணம் தஸ்யைவாநக⁴தேஜஸ꞉ ||2-62-21
எல்லையில்லா சக்திகளைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கவன், தன்னுடைய துன்பங்களில் {பிரச்சனைகளில்} ஒன்றை நீக்கும் பணியில் என்னை இங்கே அனுப்பியிருக்கிறான்” என்றார்.
ப்ரீதிவாக்யாநி ஹ்ருத்³யாநி ப்ரயுஜ்ய முநயே ததா³ |
தத꞉ ப்ரஹ்ருஷ்டோ ப⁴க³வாநப்³ரவீத்பாகஶாஸந꞉ ||2-69-22
சிறப்புமிக்கவனான அந்தப் பாகசாசனன் {இந்திரன்}, மகிழ்ச்சியுடனும், இனிய, ஏற்புடைய சொற்களுடனும் அந்த முனிவரிடம் பேசியவாறு,
கிமாஹ புருஷஶ்ரேஷ்ட²꞉ ஶீக்⁴ரமாசக்ஷ்வ மே முநே |
சிரஸ்ய க²லு க்ருஷ்ணேந ஸம்ஸ்ம்ருதோ(அ)ஸ்மி மஹாத்மநா ||2-69-23
“ஓ! முனிவரே, அந்த மனிதர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்} என்ன சொல்லி அனுப்பினான் என்பதைத் தாமதமில்லாமல் என்னிடம் சொல்வீராக; நீண்ட காலம் கழிந்து உயரான்ம கிருஷ்ணன் எங்களை நினைவுகூர்ந்திருக்கிறான்” என்றான்.
நாரத³ உவச
மஹேந்த்³ரேந்த்³ராநுஜம் த்³ரஷ்டும் க³தோ(அ)ஹம் ப்⁴ராதரம் தவ |
கத²ஞ்சித்³த்³வாரகாம் தத்ர காஶ்யபாநாம் யஶஸ்கரம் ||2-69-24
நாரதர், “ஓ! மஹேந்திரா {இந்திரா}, கசியபர்களின் மகிமையை அதிகரிப்பவனும், உன் தம்பியுமான உபேந்திரனைக் {கிருஷ்ணனைக்} காணவும், என் காரியம் ஒன்றிற்காகவும் நான் துவாரகைக்குச் சென்றேன்.
தம் து ரைவதகே(அ)த்³ராக்ஷம் ததா³ஸீநமரிம்த³மம் |
ருக்மிண்யா ஸஹிதம் வீரம் ஸ்துவந்தம் வ்ருஷப⁴த்⁴வஜம் ||2-69-25
பகைவரை அடக்குபவனான அந்த வீரன், தன் மனைவியான ருக்மிணியின் துணையுடன் ரைவதக மலையில் அமர்ந்து கொண்டு, காளையைச் சின்னமாகக் கொண்ட தேவனைத் {மஹேஸ்வரனை} துதித்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன்.
பாரிஜாததரோ꞉ புஷ்பம் தஸ்ய த³த்தம் மயாநக⁴ |
விஸ்மாபநார்த²ம் தே³வேஶ பத்நீநாமுருதேஜஸ꞉ ||2-69-26
ஓ! பாவமற்றவனே, தேவர்களின் ஆட்சியாளா, நான் அவனுடைய மனைவிகளை ஆச்சரியப்படுத்துவதற்காகப் பாரிஜாத மரத்தின் மலரை அவனிடம் கொடுத்தேன்.
தத்³த்³ருஷ்ட்வா தஸ்ய பத்ந்யஸ்து விஸ்மயம் பரமம் யயு꞉ |
ப³ஹுகாமப்ரத³ம் புஷ்பம் வ்ருக்ஷராஜஸமுத்³ப⁴வம் ||2-69-27
விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றவல்ல சிறந்த மரத்தில் விளையும் அந்த மலரைக் கண்டதும் கேசவனின் மனைவிமார் பேராச்சரியம் அடைந்தனர்.
கு³ணாஸ்தாஸாம் மயாக்²யா தாஸ்தஸ்ய புஷ்பஸ்ய மாநத³ |
ஸ்ருஷ்டிஶ்ச பாரிஜாதஸ்ய கஶ்யபேந மஹாத்மநா ||2-69-28
ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அம்மலரின் குணங்களையும், உயரான்ம கசியபரால் பாரிஜாத மரம் உண்டாக்கப்பட்டதையும் நான் அவர்களுக்கு விபரமாகச் சொன்னேன்.
அதி³த்யா கஶ்யபோ த³த்த꞉ புண்யார்த²ம் ச யதா² மம |
புஷ்பதா³ம்நா வேஷ்டயித்வா கந்டே² புண்யார்த²மாத்மவாந் ||2-69-29
தற்கட்டுப்பாட்டைக் கொண்டவரான கசியபர் மலர்மாலைகளால் கழுத்தில் கட்டப்பட்டு அதிதியின் புண்யக நோன்புக்காக எவ்வாறு என்னிடம் கொடையளிக்கப்பட்டார் (என்பதை அவர்களுக்கு நான் விவரித்துச் சொன்னேன்);
த்வம் ச த³த்தோ யதா² ஶச்யா தே³வாஶ்சாந்யே ஸுரேஶ்வர |
நிஷ்க்ரயஶ்ச யதா² த³த்த꞉ கஶ்யபாத்³யைர்மஹர்ஷிபி⁴꞉ ||2-69-30
சசியால் நீ எவ்வாறு கொடையளிக்கப்பட்டாய் என்பதையும், ஓ! தேவர்களின் தலைவா, அவ்வாறே பிற தேவர்களும் எவ்வாறு கொடையளிக்கப்பட்டார்கள் என்பதையும், கசியபரும், வலிமைமிக்கப் பிற முனிவர்களும் பிணை {மாற்றுக் கிரயம்} கொடுத்த பிறகு எவ்வாறு விடுவிக்கப்பட்டார்கள் என்பதை {நான் அவர்களுக்கு விவரித்துச் சொன்னேன்}.
தச்ச்²ருத்வா தஸ்ய பத்ந்யேகா ஸத்யபா⁴மேதி விஶ்ருதா |
புண்யகார்யம் மநஶ்சக்ரே த³யிதா தே யவீயஸ꞉ ||2-69-31
சத்யபாமா என்ற பெயரைக் கொண்ட உன் தம்பியின் அன்புக்குரிய மனைவியானவள், இதைக் கேட்டு அந்தப் புண்யக நோன்பைச் செய்யும் உறுதியை மனத்தில் அடைந்தாள்.
தயா சாப்⁴யர்தி²தோ ப⁴ர்தா தே³வ தே³வ்யா க³ணேஶ்வர꞉ |
ப்ரதிஜஜ்ஞே ஸ த⁴ர்மார்த²ம் யவீயாம்ஸ்தவ மாநத³ ||2-69-32
ஓ! தேவர்களின் தலைவா, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, பிறகு அந்த ராணி தன் நோன்புக்கு உதவி செய்யத் தன் கணவனை வேண்டினாள், உன் தம்பியும் அதைச் செய்வதாக உறுதியேற்றிருக்கிறான்.
ததோ மாமுக்தவாந்வீரோ விஷ்ணுர்ப³லவதாம் வர꞉ |
யதா²வத்ஸுரமுக்²யேஶ ப்³ருவதஹ் ஶ்ர்ருணு பா⁴வத꞉ ||2-69-33
ஓ! தேவர்களின் தலைவா, பலம்வாய்ந்தவர்களில் முதன்மையான விஷ்ணு, உன்னிடம் சொல்லுமாறு என்னிடம் சொன்னவற்றை இனி சொல்லப் போகிறேன், கவனமாகக் கேட்பாயாக
லாலநீயோ யவீயாம்ஸ்து ப்ரணிபத்யாச்யுதோ(அ)ப்³ரவீத் |
ஆநயேயம் ஸுரஶ்ரேஷ்ட² பாரிஜாதம் வரத்³ருமம் ||2-69-34
உன்னால் சீராட்டப்பட வேண்டிய உன் தம்பி அச்யுதன், உனக்குச் சொல்லியனுப்பியது பின்வருமாறு, “ஓ! தேவர்களின் தலைவா, மரங்களில் முதன்மையானதும், சிறந்ததுமான பாரிஜாதத்தை எனக்குக் கொடுப்பதே உனக்குத் தகுந்தது.
மநோரதோ²(அ)ஸ்து ஸப²லோ வத்⁴வாஸ்தே(அ)ஸுரஸூத³ந |
த⁴ர்மக்ருத்யே விஶேஷேண வத்⁴வாஸ்தே ஸுரஸத்தம ||2-69-35
ஓ! அசுரர்களைக் கொல்பவனே, உன் கொழுந்தியாளின் {தம்பியின் மனைவியுடைய} விருப்பம் நிறைவேறட்டும்; ஓ! தேவர்களில் முதன்மையானவனே, குறிப்பாக அவள் அறச்செயல் செய்ய விரும்புவதால் அது நிறைவேற்றட்டும்.
அயம் த³ர்ஶிதகல்யாணோ லோகோ லோகக³ணேஶ்வர |
பஶ்யந்த்வமரகல்யாணம் மத்ப்ரபா⁴வாச்ச மாநவா꞉ ||2-69-36
ஓ! படைக்கப்பட்ட உயிரினங்களின் தலைவா, சொர்க்கத்திலுள்ளோர் அந்த அருளப்பட்ட மரத்தைக் காணும் நல்வினை பெற்றவர்களாக இருக்கின்றனர்; என்னுடைய வழிவகையின் மூலமாக {என்னைக் கருவியாகக் கொண்டு} இனி பூமியின் மனிதர்களும் அதைக் காணும் அருளைப் பெறட்டும்” {என்று உனக்குச் சொல்லுமாறு கிருஷ்ணன் என்னிடம் சொல்லி அனுப்பினான்” என்றார் நாரதர்}”.
வைஶம்பாயந உவாச
வாஸுதே³வவச꞉ ஶ்ருத்வா மஹேந்த்³ர꞉ குலநந்த³ந |
நாரத³ம் வத³தாம் ஶ்ரேஷ்ட²மித³ம் வாக்யமதா²ப்³ரவீத் ||2-69-37
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! குலத்தை மகிழச் செய்பவனே, வசுதேவரின் மகனுடைய {கிருஷ்ணனின்} சொற்களைக் கேட்ட மஹேந்திரன், நாநயமிக்கப் பேச்சாளர்களில் முதன்மையான நாரதரிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்,
ப⁴ஜாஸநம் த்³விஜஶ்ரேஷ்ட² யுக்தமுக்தம் த்வயா த்³விஜ |
ஸந்தே³ஶம் ப்ரதிதா³ஸ்யாமி விஷ்ணோரதுலதேஜஸ꞉ ||2-69-38
{இந்திரன்}, “ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உமது இருக்கையில் அமர்வீராக; நீர் சரியாகவும் முறையாகவும் பேசினீர்; ஒப்பற்ற சக்திகளைக் கொண்ட விஷ்ணுவுக்கான பதில் செய்தியை நான் உம்மிடம் சொல்கிறேன்” என்றான்
ஆஸீநே நாரதே³ ஶக்ரோ லப்³தா⁴நுஜ்ஞோ(அ)த² நாரதா³த் |
ஸ்வமாஸநம் ததோ பே⁴ஜே தஸ்யைவ ஸத்³ருஶம் ப்ரபோ⁴ ||2-69-39
நாரதர், தமது இருக்கையில் அமர்ந்த பிறகு, நாரதரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவருடைய இருக்கை போன்ற இருக்கையிலேயே சக்ரனும் அமர்ந்தான்
உபவிஷ்ட꞉ ஸுரபதிரதோ²வாச தபோத⁴நம் |
நிரீக்ஷ்ய ஸ்வப³லம் வீர்யம் ஹர்ஷத³ம் வ்ருத்ரநாஶந꞉ ||2-69-40
இவ்வாறு அமர்ந்ததும், விருத்திரனைக் கொன்றவனும், தேவர்களின் தலைவனுமான அவன், தன் மகத்துவத்தின்[“உண்மையில் இங்கே சொல்லப்படுவது அவனது ஆற்றலும், சக்தியுமாகும்”] மீது பார்வையைச் செலுத்தி {தன் ஆற்றலையும், சக்தியையும் கண்டு} மகிழ்ச்சியால் நிறைந்தவனாக நாரத முனிவரிடம் பின்வருமாறு பேசினான்
ஶக்ர உவாச
மஹர்ஷே குஶலம் ப்ருஷ்ட்வா வக்தவ்யஸ்தே ஜநார்த³ந꞉ |
வசநாந்மம த⁴ர்மஜ்ஞ ஸர்வபூ⁴தஸுகா²வஹ꞉ ||2-69-41
இந்திரன் {நாரதரிடம்}, “வலிமைமிக்கவரும், அறம்சார்ந்தவருமான முனிவரே, அனைத்து உயிரினங்களின் மகிழ்ச்சிக்கான பிறப்பிடமாகத் திகழும் ஜனார்த்தனனின் உடல் நலத்தை வழக்கம் போல விசாரித்தபிறகு, நான் சொல்லும் இந்தச் சொற்களை நீர் அவனிடம் சொல்வீராக
மத³நந்தரமீஶஸ்த்வம் ஜக³தோ நாத்ர ஸம்ஶய꞉ |
த்வதீ³ய꞉ பாரிஜாதஶ்ச ரத்நாந்யந்யாநி சச்யுத ||2-49-42
“என்னை விட்டால் {எனக்குப் பிறகு} உலகத்தின் தலைவன் நீயே என்பதில் ஐயத்தின் நிழல்கூடப் படராது. ஓ! குற்றங்குறையற்றவனே, பாரிஜாதமும், சொர்க்கத்தின் மதிப்புமிக்கப் பிற உடைமைகள் அனைத்தும் உனதே.
த்வம் து பா⁴ராவதரணம் கர்தும் தே³வ மஹீம் க³த꞉ |
மாநுஷ்யம் ஸர்வவ்ற்^த்தாநாம் ஸ்தி²த꞉ கார்யஸ்ய ஸித்³த⁴யே ||2-69-43
ஓ! தெய்வீகமானவனே, பூமியின் சுமையில் இருந்து அவளை விடுவிக்கவே நீ அங்கே சென்றாய், உன் பணியின் வெற்றிக்காகவே நீ மனிதனைப் போல நடந்து கொள்கிறாய்.
த்வயி தீர்ணப்ரதிஜ்ஞே ஹி புந꞉ ப்ராப்தே த்ரிவிஷ்டபம் |
பூரயிஷ்யாமி வத்⁴வாஸ்தே இஷ்டாந்காமாநதோ⁴க்ஷஜ ||2-69-44
ஓ! அதோக்ஷஜா, பூமியில் உன் பணி நிறைவடைந்து நீ சொர்க்கத்திற்குத் திரும்பியதும், உன் (அன்புக்குரிய) மனைவியின் விருப்பங்கள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன்.
ஸ்வர்கீ³யாநி ச ரத்நாநி ந நேதவ்யாநி கேஶவ |
ஸ்வல்பார்தே² மாநுஷம் லோகமிதி பூர்வக்ருதா ஸ்தி²தி꞉ ||2-69-45
ஓ! கேசவா, சொர்க்கத்தின் மதிப்புமிக்கப் பொருட்களை ஓர் அற்பக் காரியத்திற்காகப் பூமிக்குக் கொண்டு செல்வது முறையானதல்ல, மேலும் இதுவே {இவ்வாறு கொண்டு செல்லாமலிருப்பதே} நீண்டகால நடைமுறையுமாகும்
உத்க்ரம்ய ஹி ஸ்தி²திம் தை³வீம் ப்ரவர்தாமி மஹாப³ல |
யத்³யஹம் கிம் ப்ரவக்ஷ்யந்தி ப்ரஜாபதிக³ணா꞉ ப்ரபோ⁴ ||2-69-46
ஓ! வலிமைமிக்கத் தலைவா, சொர்க்கத்தில் நிலவும் இந்த நீண்ட கால விதியை நானே மிறினால், பிரஜாபதிகள் என்ன சொல்வார்கள்?
ப்³ரஹ்மநா ஸஹ புத்ரேண ஸபௌத்ரேண மஹாத்மநா |
நியமா꞉ ஸர்வக்ருத்யாநாம் ஸ்தா²பிதா ஜக³தோ த்⁴ருவா꞉ ||2-69-47
உயரான்ம பிரம்மன், தன் மகன்கள், பேரப்பிள்ளைகளுடன் சேர்ந்து உலகங்களில் செய்யப்படும் அனைத்துச் செயல்களுக்குமான நிரந்தர விதிகளை ஏற்படுத்தியிருக்கிறான்
ப்ரஜாபதிக்ருதம் மார்க³மபாஸ்ய வ்ரஜதோ மம |
ஶ்ருத்வா ப்ரஜாபதிர்தீ⁴மாஞ்ச்சா²பமப்யுத்ஸ்ருஜேத்ப்ரபு⁴꞉ ||2-69-48
பிரஜாபதியான பிரம்மனால் இவ்வாறு விதிக்கப்பட்ட பாதையைக் கடந்து நான் நடக்கத் துணிந்தால், நுண்ணறிவுமிக்கவனான அந்தத் தலைவன் என் அத்துமீறலை அறியும்போது என்னைச் சபிப்பான்.
அஸ்மாபி⁴ர்பி⁴த்³யமாநம் ஹி மர்யாதா³ஸேதுப³ந்த⁴நம் |
பே⁴த்ஸ்யந்த்யஶம்கிதா தை³த்யா தை³த்யபக்ஷாஸ்ததா²பரே ||2-69-49
நிலைத்து நிற்கும் பழக்க வழக்கங்களின் விதிகளை நாமே உடைத்தால், தைத்தியர்களும், அவர்களைச் சார்ந்தவர்கள் சிறிதும் தயங்காமல் அவற்றை மீறுவார்கள்.
ஸ்த்ரீநிமித்தமிதோ நீதே பாரிஜாதே த்³ருமேஶ்வரே |
ஸ்வர்கௌ³கஸோ ப⁴விஷ்யந்தி விமநஸ்காஶ்ச மாநத³ ||2-69-50
சிறப்புமிக்கப் பாரிஜாதத்தை நீ உன் மனைவிக்காகப் பூமிக்கு எடுத்துச் சென்றால், ஓ! கௌரவங்களை அளிப்பவனே, சொர்க்கவாசிகள் மனச்சோர்வடைவார்கள்” {என்று நான் சொன்னதாகக் கிருஷ்ணனிடம் சொல்வீராக}
உபபோ⁴கா³ மநுஷ்யாணாம் விஹிதா யே ஸ்வயம்பு⁴வா |
தைஸ்து துஷ்யது மே ப்⁴ராதா ஸம்பஶ்யந்காலபர்யயம் ||2-69-51
ஓ! முனிவரே {நாரதரே}, காலத்தின் போக்கைக் காணும் என் தம்பி {உபேந்திரனான கிருஷ்ணன்}, படைக்கப்படாதவனான {சுயம்புவான} பிரம்மனால் மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட இன்பங்களில் மட்டுமே நிறைவடைய வேண்டும்.
இஹாபி தாத த்ரிதி³வே மம ய꞉ ஸ்யாத்பரிக்³ரஹ꞉ |
த்ரிதி³வஸ்தோ²(அ)பி தம் க்ருஷ்ண꞉ ஸர்வம் போ⁴க்துமிஹார்ஹதி ||2- 69-52
ஓ! ஐயா, கிருஷ்ணன் சொர்க்கத்தில் இருக்கும் வரை, இங்கே நான் கொண்டுள்ள உடைமைகள் அனைத்தையும் அவன் அனுபவிக்கத்தகுந்தவன்.
ஹ்ருஷ்டோ ஹ்யாமிஷபோ⁴ஜ்யாநாமபி⁴மாநாஜ்ஜநார்த³ந꞉ |
ததோ த⁴ர்மம் ஸமுத்ஸ்ருஜ்ய பாபமேவாநுவர்ததே ||2-69-53
ஜனார்த்தனன், ஊனுணவு உண்பவர்களுக்கு ஏற்படும் ஆணவத்தால் நிறைந்திருப்பதாலேயே, அவன் அறத்தைப் புறந்தள்ளி பாவத்தின் பாதையைப் பின்பற்றுகிறான்.
ஸ்த்ரீவஶ்யதா க்²யாப்யமாநா க்ருஷ்ணஸ்ய ஹி மஹாத்மந꞉ |
ஜக³த்யயஶஸா யோக³ம் ஜநயேதி³தி மே மதி꞉ ||2-69-54
மாநுஷ்யம் மாநுஷே ப்ராப்தோ யதே³தந்மது⁴ஸூத³ந꞉ |
குர்யாந்நிர்ப³ந்த⁴நீயம் யத்³ப்⁴ராத்ரா ஜ்யேஷ்டே²ந நாரத³ ||2-69-55
ஓ! நாரதரே, மனிதர்களின் உலகில் மனிதனாகப் பிறந்த கிருஷ்ணன், அண்ணனான என்னிடம் நடந்து கொள்ளும் நடத்தை, அதாவது தன் மனைவியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து கொண்டு அவன் என்னிடம் நடந்து கொள்ளும் விதம், நிச்சயம் அவனுக்கு இழிவையே உண்டாக்கும் என்பது என் கருத்தாகும்.(54,55)
ஸ்வர்க்³யரத்நவிலோபேந த⁴ர்ஷணா ஸ்யாந்மமாநக⁴ |
ஜ்ஞாதிதோ த⁴ர்ஷணா சைவ விஶேஷேணைவ க³ர்ஹிதா ||2-69-56
சொர்க்கத்தின் மதிப்புமிக்க உடைமைகளைக் கைப்பற்றுவது நேரடியாக என்னை அவமதிப்பதாகும்; உறவினர்களால் செய்யப்படும் அவமதிப்பு நிச்சயம் மிக இழிவானதாகும்
த⁴ர்மமர்த²ம் ச காமம் ச க்ரமேண மது⁴ஸூத³ந꞉ |
ஸேவத்வேஷ ஸதாம் த⁴ர்மாந்ஸ்தாபிதாந்பத்³மயோநிநா ||2-69-57
மதுசூதனன், அடுத்தடுத்து அறம், பொருள், இன்பத்தையும், தாமரையில் பிறந்த பிரம்மனால் நல்லோருக்கு விதிக்கப்பட்ட உடைமைகளையும் அனுபவிக்கட்டும்
மஹீதலம் பாரிஜாதமர்பயிஷ்யாம்யஹம் யதி³ |
பௌலோமீமாதி³த꞉ க்ருத்வா கோ நு மாம் ப³ஹு மம்ஸ்யதே ||2-69-58
இந்தப் பாரிஜாத மரத்தைப் பூமிக்கு எடுத்துச் செல்ல நான் அனுமதித்தால், புலோமனின் மகள் {இந்திராணியான சசி} தொடங்கிச் சற்றேனும் கூட யார் என்னை மதிப்பார்கள்?
பாரிஜாதம் மஹீப்ருஷ்டே² த்³ருஷ்ட்வா ப்ருஷ்ட்வா ச மாநுஷா꞉ |
ஸ்வர்கா³ர்த²ம் நோத்³க³மிஷ்யந்தி த்³ருஷ்ட்வா ஸ்வர்க³ப²லம் க்ஷிதௌ ||2-69-59
மேலும், பூமியின் பரப்பில் பாரிஜாத மரத்தைக் கண்டு தீண்டும் மனிதர்கள் பூமியிலேயே சொர்க்கத்தின் அருள்களை அனுபவிப்பதால் அதற்கு மேலும் சொர்க்கத்தை அடைய முயற்சிக்க மாட்டார்கள்.
பாரிஜாதகு³ணாந்மர்த்யா ஜுஷந்தி யதி³ நாரத³ |
தே³வதாநாம் மநுஶ்யாணாம் ந விஶேஷோ ப⁴விஷ்யதி ||2-69-60
ஓ! நாரதரே, பாரிஜாத மரத்தின் அருளை மனிதர்கள் அனுபவித்தால், அவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்கும்?
தத்ர யத்க்ரியதே கர்ம இஹ தத்³பு⁴ஜ்யதே நரை꞉ |
ஸ்வர்கா³ர்த²ம் ந யதிஷ்யந்தி பாரிஜாதகு³ணாந்விதா꞉ ||2-69-61
பூமியில் மனிதர்கள் செய்யும் செயல்களை {செயல்களுக்கான பலன்களை} அவர்கள் இங்கே அனுபவிக்கிறார்கள்; இனி பாரிஜாதமெனும் உடைமையால் அவர்கள் அருளப்பட்டால் சொர்க்கத்தை அடைய அவர்கள் ஒருபோதும் முயற்சிக்க மாட்டார்கள்
ஸர்வரத்நவர꞉ ஸ்வர்கே³ பாரிஜாதஸ்தபோத⁴ந |
துல்யம் தே³வஸமைர்மர்த்யை꞉ ஸர்வதை³வ ஜக³த்³ப⁴வேத் ||2-69-62
ஓ! முனிவரே, சொர்க்கத்தின் மதிப்புமிக்க உடைமைகளில் பாரிஜாதமே சிறந்தது, சொர்க்கத்தின் மகிமையாக இருக்கும் அஃது இங்கிருந்து அகற்றப்பட்டால், தேவர்களுடன் கூடிய சொர்க்கத்தைப் போலவே மனிதர்களுடன் கூடிய பூமியும் இருக்கும்.
யஜ்ஞைர்மர்த்யா ந யக்ஷ்யந்தி லப்³த⁴ஸ்வர்க³ப²லா பு⁴வி |
ந பூர்தாநி ப்ரதா³ஸ்யந்தி துல்யத்வமமரைர்க³தா꞉ ||2-69-63
மனிதர்கள் விரும்புவது போன்ற சொர்க்கத்தின் அருள்களைப் பூமியிலேயே அடைந்துவிட்டால் தேவர்களின் நிலைக்கு எளிதாக உயரும் அவர்கள் வேள்விகளையோ, அறக் கொடைகளையோ செய்யமாட்டார்கள்.
யஜ்ஞைர்ஜப்யாஹ்நிகைஶ்சைவ நித்யமாப்யாயயந்தி ந꞉ |
மாநுஷா꞉ ஸ்வர்க³மிச்ச²ந்த꞉ ஶ்ரத்³த³தா⁴நாஸ்தபோத⁴ந ||2-69-64
ஓ! முனிவரே, இப்போது மனிதர்கள், சொர்க்கத்தை அடையும் விருப்பத்தில் தினமும் வேள்விகளையும், ஜபங்களையும், அனிகங்களையும் {நித்ய கர்மங்களையும்} செய்து மதிப்புடன் எங்களை நிறைவடையச் செய்கிறார்கள்.
தத்ஸர்வம் ந கரிஷ்யந்தி பாரிஜாதகு³ணாந்விதா꞉ |
நிஸ்தேஜஸோ ப⁴விஷ்யாம தே க³தாஸ்தத்³விஹீநதாம் ||2-69-65
பாரிஜாத அருளைப் பெற்றுவிட்டால், இந்த நோன்புகளைப் பின்பற்றவும் அவர்கள் நினைக்க மாட்டார்கள்; அவை புறக்கணிக்கப்பட்டால், புண்ணியம் இழக்கும் நாங்களும் {தேவர்களும்} எங்கள் பலத்தை இழப்போம்[வேள்விகள் முதலிய கொண்டாட்டங்களில் எரிக்கப்படும் காணிக்கைகளே தேவர்களின் முக்கிய வாழ்வாதாரங்கள் என நம்பப்படுகிறது”].
இத꞉ ஸுவ்ருஷ்ட்ய ஸஸ்யைஸ்தே ஜீவந்தி புருஷா பு⁴வி |
ஆப்யாயயந்தஸ்தே(அ)ப்யஸ்மாந்தா³நைர்யஜ்ஞைஸ்ததை²வ ச ||2-69-66
இங்கிருந்து போதுமான மழையைப் பொழிவதன் மூலம் மனிதர்கள் பூமியில் உண்டு வாழும் தானியங்களை நாமே வளர்க்கிறோம்; அவர்களும் வேள்விகளையும், கொடை போன்ற அறச்செயல்களையும் செய்வதன் மூலம் பதிலுக்கு எங்களுக்கு நிறைவடையச் செய்கிறார்கள்.
ந பு³பு⁴க்ஷா பிபாஸா வா பா³த⁴தே யதி³ மாநுஷாந் |
ரோகோ³ ஜரா வா ம்ருத்யுர்வா த⁴ர்மஜ்ஞ ரதிரேவ ச ||2-69-67
தௌ³ர்க³ந்த்⁴யம் வா ஸுகோ⁴ரா வா ஈதய꞉ கர்மஸம்ப⁴வா꞉ |
கிமுத்³யோக³ம் கரிஷ்யந்தி பாரிஜாதகு³ணாந்விதா꞉ ||2-69-68
பாரிஜாதமெனும் அருளை அடையும் போது பசி, தாகம், நோய், மூப்பு, மரணம், நிறைவின்மை, நாற்றம், வருங்காலப் பயங்கரங்கள் ஆகியவை மனிதர்களைத் தாக்காதென்றால், அவர்கள் ஏன் சொர்க்கத்தை அடைய முயற்சிக்கப்போகிறார்கள்?(67,68)
ஸர்வதா² நயநம் தத்ர பாரிஜாதஸ்ய ந க்ஷமம் |
இதி வாச்யஸ்த்வயா விப்ர விஷ்ணுரக்லிஷ்டகர்மக்ருத் ||2-69-69
இந்தக் காரணங்களுக்காகப் பாரிஜாத மரத்தை அங்கே கொண்டு செல்வது நல்லதல்ல. ஓ! இருபிறப்பாள முனிவரே, பாவமற்ற செயல்களைச் செய்யும் விஷ்ணுவிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வாறே நீர் சொல்ல வேண்டும்.
யதா² யதா² ச தே ப்⁴ராதா துஷ்யத்யேதத்³விசாரயந் |
ததா² ததா² த்வய கார்யம் கார்யம் மத்ப்ரீதிமிச்ச²தா ||2-69-70
ஓ! முனிவரே, நீர் என்னை நிறைவடையச் செய்ய விரும்பினால், நீர் என் தம்பியான கேசவனை நிறைவடையச் செய்யும் அனைத்தையும் முதிர்ச்சியாகத் தீர்மானித்த பிறகு செய்வீராக.
ஹாராஶ்ச மணயஶ்சைவ சந்த³நாந்யகு³ரூணி ச |
வஸ்த்ராணி ச விசித்ராணி வத்⁴வாஸ்த்வம் த்³வாரகாம் நய ||2-69-71
யோக்³யாநி யாநி மர்த்யாநாம் யாவதி³ச்ச²தி கேஶவ꞉|
ந ஸ்வர்க³பரிமோஷம் து கர்துமர்ஹதி ஸாம்ப்ரதம் ||2-69-72
கேசவன் விரும்பினால், தன் மனைவியின் இன்பத்திற்காக மாலைகளையும் {ஹாரங்களையும்}, ரத்தினங்களையும், பொன்னையும், அகுர சந்தனத்தையும் {அகில், சந்தனக் கட்டைகளையும்}, அழகிய ஆடைகளையும், தேவர்களுக்குத் தகுந்த பிற பொருட்களையும் துவாரகைக்கு எடுத்துச் செல்லட்டும். ஆனால், இப்போது சொர்க்கத்தைக் கொள்ளையிடுவது அவனுக்குத் தகாது.(71,72)
த³தா³மி ரத்நாநி யதே²ப்ஸிதாந்யஹம்
ப³ஹூநி சித்ராணி விபூ⁴ஷணாநி ச |
ந பாரிஜாதம் ச கத²ஞ்சந த்³ருமம்
முநே பதா³ஸ்யாமி தி³வௌகஸாம் ப்ரியம் ||2-69-73
அவன் விரும்பும் ரத்தினங்களை நான் தருவேன், அனைத்து வகைகளிலான அழகிய ஆபரணங்களையும் நான் தருவேன், ஆனால், ஓ! முனிவரே, சொர்க்கவாசிகளின் பேரன்புக்குரிய உடைமையான பாரிஜாத மரத்தை நான் ஒருபோதும் அவனுக்குத் தரமாட்டேன்” என்றான் {இந்திரன்}”.
இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே விஷ்ணுபர்வணி
பாரிஜாதஹரணே இந்த்³ரவாக்ய ஏகோநஸப்ததிதமோ(அ)த்⁴யாய꞉
————–—————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply