கிருஷ்ணனின் எச்சரிக்கையை நாரதர் மூலம் கேள்விப்பட்ட இந்திரன்; போர் புரியாமல் பாரிஜாதத்தைக் கொடுப்பதில்லை என உறுதியுடன் சொன்னது
வைஶம்பாயந உவாச
தே³வராஜவச꞉ ஶ்ருத்வா நாரத³꞉ குருநந்த³ந |
ப்ரோவாச வாக்யம் வாக்யஜ்ஞோ த⁴ர்மாத்மா த⁴ர்மவித்தம꞉ ||2-70-1
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நன்மனம் கொண்டவரும், அறம் சார்ந்த அறிவுடனும், நாநயத்துடனும் பேசுபவருமான நாரதர், தேவர்களின் தலைவனுடைய {தேவேந்திரனுடைய} சொற்களைக் கேட்டு இவ்வாறு பேசினார்,
அவஶ்யமேவ வக்தவ்யம் ஹிதம் ப³லநிஷூத³ந |
மயா தவ மஹாபா³ஹோ ப³ஹுமாநோ(அ)ஸ்தி மே த்வயி ||2-70-2
“ஓ! பலனை {பலாசுரனைக்} கொன்றவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நான் உன்னிடம் அதிக அக்கறை கொண்டுள்ளதால் உனக்கு நன்மை விளைவிப்பதையே சொல்வேன்
உக்தோ மயா வாஸுதே³வோ ஜாநதா ப⁴வதோ மதம் |
ந த³த்த꞉ பாரிஜாதோ(அ)யம் ஹரஸ்யாபி த்வயா புரா ||2-70-3
நான் உன் மனநிலையை ஏற்கனவே அறிந்திருந்ததால், வலிமைமிக்கத் தேவனான சிவனுக்கும் பழங்காலத்தில் நீ பாரிஜாத மரத்தைக் கொடுக்கவில்லை என்பதை வசுதேவனின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} சொன்னேன்.
ஹேதவஶ்ச மயா தஸ்ய த³ர்ஶிதாஸ்தே ஸமாஸத꞉ |
ந சாவக³தவாந்தே³வ꞉ ஸத்யமேதத்³ப்³ரவீமி தே ||2-70-4
நான் அவனிடம் (பாரிஜாத மரத்தைக் கொண்டு செல்லக் கூடாததற்கான) எண்ணற்ற காரணங்களைச் சொன்னாலும் அவன் அவற்றில் எதையும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.
உபேந்த்³ரோ(அ)ஹம் மஹேந்த்³ரேண லாலநீய꞉ ஸதே³தி மாம் |
உவாச புண்ட³ரீகாக்ஷோ த³த்தமுத்தரமேவ ச ||2-70-5
அந்தத் தாமரைக் கண்ணன், “நான் இந்திரனின் தம்பி என்பதால் அவனால் பேணி வளர்க்கப்பட வேண்டியவன் {சீராட்டத்தகுந்தவன்}” என்று என்னிடம் மறுமொழியாகச் சொன்னான்
புந꞉ புநர்மயா வாஸ்ய ஹேதவோ தே³வ த³ர்ஶிதா꞉ |
ததோ ந பு³த்³தி⁴ர்வ்யாவ்ருத்தா வ்ருத்ரநாஶாய தஸ்ய வை ||2-70-6
ஓ! தேவா, ஓ! விருத்திரனைக் கொன்றவனே, நான் எண்ணற்ற காரணங்களை மீண்டும் மீண்டும் சொன்னாலும் அவனுடைய மனம் மாறவில்லை
அபி சாப்யுக்தவாந்தே³வோ வாக்யாந்தே மது⁴ஸூத³ந꞉ |
ப்ரத்யாஹ புருஷஶ்ரேஷ்டா²꞉ ஸரோஷமிவ வாஸவ ||2-70-7
மேலும், ஓ! தேவா, மனிதர்களில் முதன்மையான மதுசூதனன் தன் உரையின் இறுதியில் கோபத்துடன்,
ந தே³வக³ந்த⁴ர்வக³ணா ந ராக்ஷஸா
ந சாஸுரா நைவ ச பந்நகோ³த்தமா꞉ |
மம ப்ரதிஜ்ஞாமபஹந்துமுத்³யதா
முநே ஸமர்தா²꞉ க²லு ப⁴த்³ரமஸ்து தே ||2-70-8
“தேவர்களாலோ, கந்தர்வர்களாலோ, ராட்சசர்களாலோ, அசுரர்களாலோ, பன்னகர்களில் முதன்மையானவர்களாலோ என் உறுதி மொழி நிறைவேற்றப்படுவதைத் தடுக்க முடியாது; ஓ! முனிவரே உமக்கு அருள்கள் அனைத்தும் கிட்டட்டும்.
ஸ பாரிஜாதம் யதி³ ந ப்ரதா³ஸ்யதி
ப்ரவாச்யமாநோ ப⁴வதா புரம்த³ர꞉ |
தத꞉ ஶசீவ்யாம்ருதி³தாநுலேபநே
க³தா³ம் விமோக்ஷ்யாமி புரம்த³ரோரஸி ||2-70-9
இணக்கமான முறையில் உம்மால் இவ்வாறு கோரப்பட்டும் புரந்தரன் என்னிடம் பாரிஜாத மரத்தைக் கொடுக்கவில்லை என்றால், மணமிக்கக் களிம்புகளைக் கொண்டு சசியால் {இந்திராணியால்} பூசப்படும் புரந்தரனின் மார்பில் நான் என் கதாயுதத்தை வீசுவேன்” என்று சொன்னான்.
உபேந்த்³ரஸ்ய மஹேந்த்³ராயம் ப்⁴ராதுஸ்தே நிஶ்சய꞉ பர꞉ |
யத³த்ர மந்யஸே ந்யாய்யம் ஸம்ப்ரதா⁴ர்ய குருஷ்வ தத் ||2-70-10
ஓ! மஹேந்திரா, இதுவே உன் தம்பியான உபேந்திரனின் உறுதியான தீர்மானமாகும்; இனி நீ இக்காரியத்தில் எது முறையானதோ, எது நியாயமானதோ அதைச் செய்வாயாக
தத்த்வம் ஹிதம் ச தே³வேஶ ஶ்ரூயதாம் வத³தோ மம |
நயநம் பாரிஜாதஸ்ய த்³வாரகாம் மம ரோசதே ||2-70-11
ஓ! தேவர்களின் தலைவா, உன் நலனுக்கு உகந்த சொற்களை என்னிடம் இருந்து கேட்பாயாக; பாரிஜாதத்தைத் துவாரகைக்குக் கொண்டு செல்ல அனுமதிப்பதே உனக்குச் சிறந்ததென எனக்குத் தோன்றுகிறது” என்றார் {நாரதர்}.
நாரதே³நைவமுக்தஸ்து ஸுவ்யக்தம் ப³லதே³ஹபி⁴த் |
ரோஷாவிஷ்ட꞉ ஸஹஸ்ராக்ஷோ(அ)ப்³ரவீதே³தந்நராதி⁴ப ||2-70-12
ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நாரதரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அனைத்தையும் அழிப்பவனான அந்த ஆயிரங்கண் தேவன் {இந்திரன்}, கோபத்தால் தூண்டப்பட்டவனாகத் தனித்துவமான தெளிந்த குரலில் இவ்வாறு பேசினான்,
அநாக³ஸி மயி ஜ்யேஷ்டே² ஸோத³ரம் யதி³ கேஶவ꞉ |
ஏவம் ப்ரவ்ருத்த꞉ கிம் ஶக்யம் கர்துமத்³ய தபோத⁴ந ||2-70-13
“ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, அப்பாவி அண்ணனான என்னிடம் கேசவன் இவ்வாறு நடந்து கொள்ள விரும்பினால் உண்மையில் அவன் எனக்குச் செய்யக்கூடிய தீங்கென்ன?
ப³ஹூநி ப்ரதிலோமாநி புரா ஸ க்ருதவாந்மயி |
க்ருஷ்ணோ நாரத³ ஸோடா⁴நி ப்⁴ராதேதி ஸ்ம மயா ஸதா³ ||2-70-14
ஓ! நாரதரே, கடந்த காலங்களில் கிருஷ்ணன் எனக்கெதிரான செயல்கள் பலவற்றைச் செய்து என்னை அவமதித்துள்ளான்; அவன் என் தம்பி என்பதை நினைவில் கொண்டதால் மட்டுமே அவை அனைத்தையும் நான் பொறுத்தேன்.
கா²ண்த³வே சார்ஜுநரத²ம் புரா வாஹயதா ஸதா |
மதீ³யா வாரிதா மேகா⁴꞉ ஶமயந்தோ(அ)க்³நிமுத்³த⁴தம் ||2-70-15
காண்டவ வனம் எரிக்கப்பட்ட நிகழ்வில் அவன் அர்ஜுனனின் தேரைச் செலுத்தியபோது, பெருகும் காட்டுத் தீயை அணைக்க முயன்ற என் மேகங்களை அவன் தடுத்தான்.
கோ³வர்த⁴நம் தா⁴ரயதா விப்ரியம் ச க்ருதம் மம |
ததா² வ்ருத்ரவதே⁴ ப்ராப்தே ஸாஹாய்யார்த²ம் வ்ருதோ மயா ||2-70-16
கோவர்த்தன மலையை உயர்த்தியதன் மூலம் என் விருப்பத்திற்கு எதிரான இனிமையற்ற செயலை அவன் செய்தான். மேலும் விருத்திரனைக் கொல்லும் சமயத்தில் நான் அவனது உதவியைக் கோரியபோது,
ஸமோ(அ)ஹமிதி ஸர்வேஷாம் பூ⁴தாநாமிதி சோக்தவாந் |
ஸ்வபா³ஹுப³லமாஶ்ரித்ய வ்ருத்ரஶ்ச நிஹதோ மயா ||2-70-17
நான் பக்கச் சார்பற்றவன், அனைத்து உயிரினங்களையும் சமமாகப் பார்ப்பவன்” என்று எனக்கு மறுமொழி கூறினான். பிறகு நான் என் கரங்களின் வலிமையால் விருத்திரனைக் கொன்றேன்.
தே³வாஸுரேஷு ப்ராப்தேஷு ஸம்க்³ராமேஷு ச நாரத³ |
யுத்³த்⁴யத்யாத்மேச்ச²யா க்ருஷ்ணோ முநே ஸுவிதி³தம் தவ ||2-70-18
ஓ! முனிவரே, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் போர் நேரும்போதெல்லாம் கிருஷ்ணன் (என் அதிகாரத்தை முற்றிலும் புறக்கணித்துவிட்டு) தன் இனிய விருப்பத்தின்படியே எப்போதும் போரிட்டு வந்திருக்கிறான் என்பதை நீரும் அறிவீர்.
ப³ஹுநாத்ர கிமுக்தேந தஸ்மாத்³தி³ஷ்ட்யா ப்ரவர்ததாம் |
ஜ்ஞாதிபே⁴தோ³ ந ந꞉ கார்ய꞉ ஸாக்ஷீ த்வம் மம நாரத³ ||2-70-19
இக்காரியத்தில் அதிகம் பேசி பயனென்ன? எங்களுக்கிடையில் ஓர் இணக்கமான உணர்வைத் தக்கவைத்துக் கொள்ள நீர் முயற்சி செய்வீராக. ஓ! நாரதரே, நீரே என் சாட்சி; உறவினர்களுக்கிடையே ஒரு பிளவை ஏற்படுவது என் சிந்தனைக்கு அப்பாற்பட்டது.
மமோரஸி க³தா³ம் மோக்துமுத்³யதோ யதி³ கேஶவ꞉ |
அநுஶப்³த்³யாத² பௌலோமீம் கு³ண꞉ க இஹ த்³ருஶ்யதே ||2-70-20
கேசவன் என் மார்பில் தன் கதாயுதத்தை வீசத் தயாராக இருக்கலாம் (அஃது எதிர்பாராத செயலும் அல்ல); ஆனால் இது தொடர்பாகப் புலோமன் மகளின் {இந்திராணியான சசியின்} பெயரைச் சொல்ல எந்த உரிமையும் இருப்பதாகத் தெரியவில்லை {இது தொடர்பாக என் மனைவியின் பெயரைச் சொல்ல அவனுக்கு எந்த உரிமையுமில்லை}
உத³வாஸக³தோ தீ⁴மாந்பிதா ந꞉ கஶ்யப꞉ ப்ரபு⁴꞉ |
அதி³த்யா ஸஹ மே மாத்ரா தயோர்வாக்யமித³ம் ப⁴வேத் ||2-70-21
எல்லாம் வல்லவரான எங்கள் தந்தை கசியபரும், எங்கள் அன்னை அதிதியும் நீரில் {கடற்கரையில்} வசிக்கச் சென்றிருக்கிறார்கள். இக்காரியம் அவர்களின் முன்பு வைக்கப்பட வேண்டும்
அஜிதாத்மா மம ப்⁴ராதா ரஜஸா தமஸா வ்ருத꞉ |
காமேந ச ஸ்த்ரியோ வாக்யாதே³வ மாமுக்தவாந்கு³ரும் ||2-70-22
குறிப்பாக, தற்கட்டுப்பாடு இல்லாதவனும், அறியாமையும், ஆணவமும் நிறைந்தவனுமான என் தம்பி கிருஷ்ணன், தன் மனைவியுடைய தூண்டுதலின் பேரில் (மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய} தன் அண்ணனான என்னை நிந்திக்கிறான்-
தி⁴க்ஸ்த்ரிய꞉ ஸர்வதா² விப்ர தி⁴க்³ராஜஸமிதிம் ததா² |
யத்ராதி⁴க்ஷிப்தவாந்விஷ்ணுரேவம் மாம் ஸ்த்ரீஜிதோ த்³விஜ ||2-70-23
ஓ! இரு பிறப்பாளரே, விஷ்ணுவே கூடத் தன் மனைவியால் தூண்டப்பட்டவனாக இந்த நாளின் என்னை அவமதித்திருக்கிறான் என்பதால், ஓ! விப்ரரே, பெண்களுக்கு ஐயோ, ஆணவ செல்வாக்கிற்கு ஐயோ.
ந த்³ருஷ்டம் கஶ்யபகுலே வ்யபதே³ஶ்யம் மஹாமுநே |
நைவ த³க்ஷகுலம் த்³ருஷ்டம் மாதுர்மே யத்ர ஸம்ப⁴வ꞉ ||2-70-24
ந ஜ்யேஷ்ட²தா ந ராஜத்வம் தே³வாநாம் ப்ரதிமாநிதம் |
காமராகா³பி⁴பூ⁴தேந க்ருஷ்ணேந க²லு நாரத³ ||2-70-25
ஓ! வலிமைமிக்க முனிவரே, ஆசையாலும், காமத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணன், எங்கள் தந்தையான கசியபரின் குலத்தையோ, எங்கள் அன்னையான அதிதி உதித்த தக்ஷ குலத்தையோ, நான் அவனுடைய அண்ணன் என்பதையோ, நான் தேவர்களின் அரசன் என்பதையோ, தேவர்களிடம் எனக்கிருக்கும் மரியாதையையோ கொஞ்சமும் மதிக்கவில்லை.(24,25)
புத்ரதா³ரஸஹஸ்ரைர்ஹி ப்⁴ராதாநக⁴ விஶிஷ்யதே |
ஸத்³வ்ருத்தோ ஜ்ஞாநஸம்பந்ந இதி ப்³ரஹ்மா புராப்³ரவீத் ||2-70-26
ஓ! பாவமற்றவரே, நன்னடத்தையும், ஞானமும் கொண்ட தம்பி ஒருவன், ஆயிரம் மகன்களையும், மனைவியரையும் விட மதிப்புமிக்கவன் எனக் கடந்த காலத்தில் பிரம்மன் என்னிடம் சொன்னார்
நாஸ்தி ப்⁴ராத்ருஸமோ ப³ந்து⁴ராஹார்ய இதரோ ஜந꞉ |
இதி மாமப்³ரவீந்மாதா பிதா சைவ ப்ரஜாபதி꞉ ||2-70-27
சகோதரர்களைப் போன்ற நண்பன் வேறு எவனும் கிடையாது, வாழ்வாதரத்தை மட்டுமே தேடும் பயனற்றவர்களே மற்றவர்கள் என்று படைப்பாளர்களில் ஒருவரான என் தந்தையும், என் அன்னை அதிதியும் என்னிடம் சொன்னார்கள்[நம்பிக்கைக்குரிய உண்மையான நட்பும், அன்பும் சகோதரர்களுக்கிடையில் மட்டுமே இருக்கும். வேறு நபர்களுக்கிடையே அது வெறும் கேலிக்கூத்துக்காகவும், வணிகத்துக்காகவும், பராமரிப்பு மற்றும் ஆதரவுக்காகவும் மட்டும்தான் இருக்கும் என ஆசிரியர் இங்கே சொல்ல வருகிறார். மனைவியானவள், தன் கணவன் தன்னை ஆதரிக்கிறான் என்பதற்காகவே அவனிடம் அன்பு செலுத்துகிறாள். மூப்படைந்த பெற்றோர், தங்கள் மகன் தங்களைப் பராமரிக்கிறான் என்பதற்காகவே அவனிடம் அன்பு செலுத்துகிறார்கள்” ].
ஸோத³ரே து விஶேஷம் து பிதா மே கஶ்யபோ(அ)ப்³ரவீத் |
த்³ருப்தா மய விருத்³த்⁴யந்தே தா³நவா꞉ பாபநிஶ்சயா꞉ ||2-70-28
ஒரே கருவறையில் பிறந்த சகோதரர்களைப் போல உலகில் வேறு எந்த நண்பனுமில்லை என என் தந்தை கசியபர் சொன்னார். பாவத்தில் நாட்டம் கொண்ட தானவர்கள், என் சகோதரர்கள் இல்லை என்பதால் என்னுடன் போரிடுகிறார்கள்
காமமேதந்ந வக்தவ்யம் ஸ்வயமாத்மஸ்தவாந்விதம் |
ப்ராப்தஸ்த்வவஸரோ விப்ர யதி³ஹாத்³யோச்யதே மயா || 2-70-29
ஓ! விப்ரரே, இப்போது நான் சொல்லப்போவதில் தற்புகழ்ச்சி இருப்பதால் நான் இதைச் சொல்லக்கூடாது; இதற்காக என்னை மன்னிப்பீராக; அதற்கான சந்தர்ப்பம் நேர்வதால் மட்டுமே நான் இன்று இதைச் சொல்கிறேன்.
த⁴நுஜ்யாயாம் முநிஶ்ரேஷ்ட² சி²ந்நாயாம் ஹி புராநக⁴ |
த⁴ந்வீபி⁴ரமராணாம் ச வரதா³நாந்மஹாமுநே ||2-70-30
முற்காலத்தில், ஓ! முனிவர்களில் சிறந்தவரே, ஓ! பாவமற்றவரே, வரத்தைப் பெற்றவர்களும், திறமைமிக்கவர்களுமான வில்லாளிகளால் தேவர்களுடைய வில்லின் நாண் அறுக்கப்பட்ட போது,
உத்க்ருத்தஶிரஸோ விஷ்ணோ꞉ புரா தே³ஹோ த்⁴ருதோ மயா |
ஸந்தி⁴தே ச ஶிரோ யத்நாச்சி²ந்நம் ரௌத்³ரேந தேஜஸா ||2-70-31
தலையற்ற விஷ்ணுவின் உடலானது என்னால் ஆதரிக்கப்பட்டது. வெட்டப்பட்ட தலை ருத்திரனின் (சிவனின்) காந்தியால் (உடலுடன்) சேர்க்கப்பட்டபோது
அஹம் விஶிஷ்டோ தே³வாநாமித்யுக்த்வா புநரச்யுத꞉ |
த⁴நுராரோப்ய த³ர்பேண ஸ்தி²தோ நாரத³ கேஶவ꞉ ||2-70-32
ஒருபோதும் வீழாதவனான (அச்யுதனான) விஷ்ணு, தேவர்களைவிடத் தானே மேன்மையானவனென மீண்டும் சொன்னான். அப்போது, ஓ! நாரதரே, அந்தக் கேசவன் வில்லில் நாண்பூட்டி செருக்குடன் நின்றான்[“மதியில் சிறந்தவரே, முன் (தக்ஷ யஜ்ஞ ஸமயம்) தேவர்களது வரதானத்தால் வில் நாண் அறுக்கப்பட்டு (யஜ்ஞரூபி) விஷ்ணுவின் தலையும் அறுக்கப்படும் ஸமயம் அவன் உடல் என்னால் காக்கப்பட்டது. முயற்சி செய்து ருத்ர சக்தியால் அறுப்புண்ட தலை என்னால் சேர்க்கப்பட்டது. நாரதரே, மறுபடியும் அச்சுதன் கேசவன் தேவர்களில் சிறந்தவன் என்று தன்னைப் பாராட்டி சொல்லி வில்லை நாணேற்றி கர்வம் கொண்டிருந்தான்” ].
கிம் மாம் பிதா வா மாதா வா வக்ஷ்யதீதி மயா முநே |
ஸ்நேஹேந ச ஸ்தி²தம் விஷ்ணோ꞉ ஶரீரம் முநிஸத்தம ||2-70-33
ஓ! முனிவரே, நான் கிருஷ்ணனைப் புறக்கணித்தால், அன்னையும், தந்தையும் என்ன சொல்வார்களோ என்று நினைத்தும், அவனிடம் கொண்ட பழைய அன்பாலும் மட்டுமே நான் கிருஷ்ணனின் உடலில் அவதரித்தேன்.
ஐந்த்³ரம் வைஷ்ணவமஸ்யைவ முநே பா⁴க³மஹம் த³தௌ³ |
யவீயாம்ஸமஹம் ப்ரேம்ணா க்ருஷ்ணம் பஶ்யாமி நராத³ ||2-70-34
ஓ! நாரத முனிவரே, தம்பியான அவனை அன்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதாலேயே வேள்வியில் காணிக்கையளிக்கப்படும் இந்திரனின் பங்கை வைஷ்ணவமாக்கி {வைஷ்ணவ பாகமாக்கி} அவனுக்குக் கொடுத்தேன்.
ஸம்க்³ராமேஷு ப்ரஹர்தவ்யம் தேந பூர்வம் தபோத⁴ந |
ராஜா கிலாஹம் ஸமரே ப்ரஹராம்யக்³ரதோ த்⁴ருவம் ||2-70-35
எனினும், ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, அரசனான நானே இதுவரை பிற போர்களில் முதல் அடியை அடிப்பேன் என்றாலும், கெடுவாய்ப்பாக எனக்கும் அவனுக்கும் இடையில் போர் உண்டானால், அவனே முதல் அடியை அடிக்கட்டும்.
ப்ராது³ர்பா⁴வேஷு ஸர்வேஷு ஸ்வஶரீரமிவாநக⁴ |
யதோ ரக்ஷாமி த⁴ர்மஜ்ஞ கேஶவம் ப⁴க்திமாஶ்ரிதம் ||2-70-36
அறத்தின் சாரத்தை அறிந்தவரே, ஓ! பாவமற்றவரே, கிருஷ்ணனுடைய அனைத்து அவதாரங்களிலும் அவனுடைய மதிப்புக்குரிய மனிதர்கள் அனைவரையும் நான் பாதுகாத்திருக்கிறேன்
இத³ம் ப⁴ங்க்த்வா மதீ³யம் ச ப⁴வநம் விஷ்ணுநா க்ருதம் |
உபர்யுபரி லோகாநாமதி⁴கம் பு⁴வநம் முநே ||2-70-37
விஷ்ணு, என்னுடைய வசிப்பிடத்தை நொறுக்கி, அதிலுள்ள பொருட்களைக் கொண்டு உலகங்கள் அனைத்திலும் முதன்மையான தன் உலகை {வைகுண்டத்தை}, அல்லது தன் புவனத்தை அமைத்தான்
அவமாந꞉ ஸ ச மயா ப்ருஷ்ட²த꞉ க்ரியதே முநே |
லாலநீயோ மயா பா³ல இத்யேவம் ப்⁴ராத்ருகௌ³ரவாத் ||2-70-38
ஓ! முனிவரே, அதனால் நான் என் முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. என் தம்பியிடம் கொண்ட மதிப்பால் “கிருஷ்ணன் சிறுவன், அவன் என்னால் சீராட்டத்தக்கவன்” என்றே எப்போதும் நான் நினைத்து வந்திருக்கிறேன்.
பா³லோ(அ)யம் மம புத்ரேதி யவீயாநிதி நாரத³ |
பித்ரா மாத்ரா ச கோ³விந்தோ³ மாநீ ச பரிபா⁴ஷித꞉ ||2-70-39
ஓ! நாரதரே, என் தந்தையும், அன்னையும், “என்னுடைய மகனான இவன் சிறுவனாகவும், வயதில் இளையவனாகவும் இருக்கிறான்” எனச் சொல்வார்கள்.
இஷ்டஸ்தத்ர ஜநாநம் ச கேஶவ꞉ ஸுவிஶேஷத꞉ |
வயம் த்³வேஷ்யா ந ஸந்தே³ஹஸ்தத்ர ஸ்நேஹோ(அ)திரிச்யதே ||2-70-40
மேலும் கேசவன் என் அன்னைக்கு மிகவும் பிடித்தவன் என்பதால் எனக்கு அவனிடம் பொறாமை உண்டு. (என் அன்னையுடைய) அன்பின் ஆழம் கேசவனிடம் உச்சத்தை எட்டுகிறது என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
ஸர்வஜ்ஞோ ப³லவாஞ்சூ²ர꞉ பாத்ரம் மாநயிதா ததா² |
கேஶவேத்யேவ ச த்⁴யாநம் யத்தத்³விதத²தாம் க³தம் ||2-70-41
கேசவன் அனைத்தையும் அறிந்தவன், வலிமைமிக்கவன், வீரன், தக்க மனிதர்களை மதிப்பவன் என நான் நம்பிவந்தேன்; ஆனால் அந்த நம்பிக்கை இப்போது பொய்யாகிவிட்டது
க³ச்ச² நாரத³ வக்தவ்ய꞉ கேஶவோ வசநாந்மம |
ஆஹூதோ ந நிவர்தேயம் ஸமரம் ப்ரதி ஶத்ருபி⁴꞉ ||2-70-42
ஓ! நாரதரே, கேசவனிடம் நீர் சென்று என்னுடைய இந்தச் சொற்களைச் சொல்வீராக; “என் பகைவர்கள் அறைகூவி அழைக்கையில் போரில் நான் ஒருபோதும் புறமுதுகிடமாட்டேன்.
யதீ³ச்ச²ஸி ததா³க³ச்ச² ஸஹ்யம் தே யத்த்வமிச்ச²ஸி |
ப்ரஹரஸ்வ ச பூர்வம் த்வம் பா⁴ர்யாஜித யதே²ச்ச²ஸி ||2-70-43
நீ விரும்பினால் வருவாயாக, நீ விரும்பிய எதையும் நான் பொறுத்துக் கொள்வேன். ஓ! மனைவிக்கு அடங்கியவனே, நீ விரும்பினால் முதல் அடியை அடிப்பாயாக
ரதா²ங்க³நாத² ஶார்ங்கே³ண க³த³யா நந்த³கேந ச |
ப்ரஹராருஹ்ய க³ருட³ம் த்³ருடோ⁴ பூ⁴த்வா ஜநார்த³ந ||2-70-44
ஓ! ஜனார்த்தனா, உறுதியான கரத்துடன் கருடன் மீது அமர்ந்து வந்து உன் சாரங்க கதாயுதத்தாலோ, சக்கரத்தாலோ, வாளாலோ முதல் அடியை அடிப்பாயாக.
ப்ரஹ்ருதே ப்ரஹரிஷ்யாமி யதா² ஶக்த்யா ச கேஶவ |
அஹோ தி⁴க்³யதி³ மாம் ஸ்நேஹோ விக்லவம் ந கரிஷ்யதி ||2-70-45
ஓ! ஐயோ, ஓ! கேசவா, அவ்வாறு தாக்கப்பட்டால், தம்பியிடம் கொண்ட அன்பு என்னைத் தளரச் செய்யாமல் இருந்தால், நான் என் வலிமை அனைத்தையும் பயன்படுத்தி உன்னைத் தாக்குவேன்” {என்று நான் சொன்னதாக அவனிடம் சொல்வீராக}.
யாவந்ந ஸம்க்³ராமக³தோ ஜிதோ(அ)ஹம் சக்ரபாணிநா |
பாரிஜாதம் ந தா³ஸ்யாமி தாவத்³போ⁴ முநிஸத்தம ||2-70-46
ஓ! முனிவர்களில் சிறந்தவரே, சக்கரபாணியான கிருஷ்ணனால் போரில் நான் வெல்லப்படாத வரையில் பாரிஜாத மரத்தைவிட்டு நான் பிரியமாட்டேன்.
மாம் ஸமாஹ்வயதே ஜ்யேஷ்ட²ம் யவீயாந்ஸ தபோத⁴ந |
அஹோ தம் மர்ஷயிஷ்யாமி கிமர்த²ம் ஸ்த்ரீஜிதம் ஹரிம் ||2-70-47
ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, தம்பியான அவன் தன் அண்ணனான என்னைப் போருக்கு அறைகூவியழைக்கும்போது, மனைவிக்கு அடங்கியவனான அந்த ஹரியை என்ன காரணத்தினால் நான் மன்னிக்க வேண்டும்?(
அத்³யைவ க³ச்ச² ப⁴க³வந் த்³வாரகாம் க்ருஷ்ணபாலிதாம் |
விவாதே³ ஸம்ஸ்தி²த꞉ ஸோ(அ)த்³ய இதி வாச்யஸ்த்வயாச்யுத꞉ ||2-70-48
ஓ! சிறப்புமிக்க முனிவரே, கிருஷ்ணனால் பாதுகாக்கப்படும் துவாரகைக்கு இன்றே சென்று, போருக்கு நான் தயாராக இருப்பதாக அச்யுதனிடம் சொல்வீராக.
பலாஶபத்ரார்த⁴மபி த்வயாஜிதோ
ந பாரிஜாதஸ்ய தவ ப்ரதா³ஸ்யதி |
இதி ப்ரவாச்யோ மது⁴ஸூத³நஸ்த்வயா
வசோ மதீ³யம் ஸ்மரதா தபோத⁴ந ||2-70-49
ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, என் சொற்கள் அனைத்தையும் மனத்தில் சுமந்து சென்று, அந்த மதுசூதனனிடம் இவ்வாறு சொல்வீராக, “உன்னால் நான் வெல்லப்படும் வரை பாரிஜாத மரத்தின் ஒற்றை இலையையோ, ஏன் பாதி இலையையோ கூடப் பெறுவதற்கு உன்னை அனுமதிக்க மாட்டேன்” என்று சொல்வீராக
புந꞉ ப்ரவாச்யோ ப⁴க³வம்ஸ்த்வயாச்யுதோ
மம ப்ரியார்த²ம் க²லு நிர்விஶங்கிதம் |
ந மாயயா ஹர்துமிஹார்ஹஸி த்³ருமம்
ஸுயுத்³த⁴மேவாஸ்து தி⁴க³ஸ்து ஜிஹ்மதாம் ||2-70-50
ஓ! சிறப்புமிக்க முனிவரே, “வஞ்சகமாக மரத்தைக் களவு செய்தல் உனக்குத் தகாது; நியாயமான போர் நடைபெறட்டும்; கபட நடைமுறைகள் நிந்தனைக்குரியவை” என்று எனக்காக அச்யுதனிடம் அச்சமில்லாமல் சொல்வீராக” என்றான் {இந்திரன்}”
இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே விஷ்ணுபர்வணி
பாரிஜாதஹரணே இந்த்³ரவாக்யே ஸப்ததிதமோ(அ)த்⁴யாய꞉
————–—————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply