ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 68–(பாரிஜாதஹரணே க்ருஷ்ணப்ரதிஜ்ஞா)–பாரிஜாத மர வரலாறு |–

பாரிஜாத மரத்தை வேண்டி இந்திரனிடம் செல்லுமாறு நாரதரிடம் சொன்ன கிருஷ்ணன்; பாரிஜாத மரத்தின் வரலாற்றைச் சொன்ன நாரதர்.

வைஶம்பாயந உவாச
ததோ ஜிக³மிஷும் தத்ர நாரத³ம் முநிஸத்தமம் |
ப்ரோவாச ப⁴க³வாந்விஶ்ணுரப்ரமேயபராக்ரம꞉ ||2-68-1

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “எல்லாம்வல்லவனும், அளவில்லா சக்திகளைக் கொண்டவனுமான விஷ்ணு {கிருஷ்ணர்}, நாரதர் புறப்பட விரும்புவதைக் கண்டு அவரிடம் இவ்வாறு பேசினான்.

மஹர்ஷே த⁴ர்மதத்த்வஜ்ஞ ஸ்வர்க³ம் க³த்வா த்வயாநக⁴ |
த்³ருஷ்ட்வா ஸத³ஸ்யாந்தே³வஸ்ய த்ரிபுரக்⁴நஸ்ய தீ⁴மத꞉ ||2-68-2

{கிருஷ்ணன்}, “ஓ! பாவமற்றவரே, பெரும் முனிவரே, அறங்கள் அனைத்தின் உண்மை அறிந்தவரே, நீர் சொர்க்கத்திற்குச் சென்று, திரிபுரனை அழித்த நுண்ணறிவுமிக்கவனின் {சிவனின்} சபையினரிடம் பேசி,

அநாஜ்ஞயா மத்³வசநாத்³விஜ்ஞாப்ய꞉ பாகஶாஸந꞉ ||
ஸம்பா⁴வயித்வா ப்⁴ராத்ருத்வம் பௌராணம் வேத்ஸி யந்முநே ||2-68-3

பாகசாசனனிடம் {இந்திரனிடம்} நீர் அறிந்த வகையில் எங்களுக்கிடையில் இருந்த பழங்காலத்து சகோதர அன்பை நினைவூட்டி, அவனிடம் என் ஆணையாக இல்லாமல் வேண்டுகோளாக {பின்வருவனவற்றைத் தெரிவிப்பீராக},

யமஸ்ராக்ஷீந்முநிஶ்ரேஷ்டோ² ப⁴க³வாந்கஶ்யபஸ்தரும் |
பாரிஜாதம் புராதி³த்யா꞉ ஸுகா²ர்த²ம் த⁴ர்மஸத்தம꞉ ||2-68-4

முனிவர்களில் முதன்மையானவரும், அறம்சார்ந்தவரும், சிறப்புமிக்கவருமான கசியபரால் பழங்காலத்தில் அதிதியின் மகிழ்ச்சிக்காகப் படைக்கப்பட்ட அந்தப் பாரிஜாத மரத்தை,

ஸ புண்யமதிஸௌபா⁴க்³யம் த³தா³தி தருஸத்தம꞉ |
தவ த³த்தம் புரா தா³நம் வ்ரதேந தருமுத்தமம் ||2-68-5

அறத்தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அளவற்ற செழிப்பையும் அருளும் அந்தச் சிறந்த மரத்தை, அறத்தகுதிகளை வளர்த்துக் கொள்வதற்கான தங்கள் நோன்புகளை நிறைவேற்றுவதற்காக அறம்சார்ந்த தேவியராலேயே உமக்குக் கொடையாக அளிக்கப்பட்ட அந்த மரத்தை

தே³வீபி⁴ர்த⁴ர்மநித்யாபி⁴ர்த⁴ர்மார்த²மமரோத்தம |
த³த்தம் ஶ்ருத்வாபி⁴காங்க்ஷந்தி தா³தும் பத்ந்யோ மம ப்ரபோ⁴ ||2-68-6

கொடையளித்த கதைகளைக் கேட்ட என் மனைவியரும் கூட, ஓ! தலைவா, அறத்தையும், சிறப்பான செயல்களின் விளைவால் நேரும் அறத்தகுதிகளையும் {புண்ணியங்களையும்} ஈட்டுவதற்காகவும், என் நிறைவுக்காகவும் கொடையளிக்க விரும்புவதாக {இந்திரனிடம்} சொல்வீராக.

புண்யார்த²ம் தா³நத⁴ர்மார்த²ம் மம ப்ரீத்யர்த²மேவ ச |
ஆநாயயத்³த்³வாரவதீம் பாரிஜாதம் மஹாத்³ருமம் ||2-68-7

த³த்தே தா³நே புந꞉ ஸ்வர்க³ம் தரும் த்வம் நேதுமர்ஹஸி |
ஸ வாச்ய ஏவம் ப⁴க³வாந்ப³லபி⁴த்³ப⁴க³வம்ஸ்த்வயா ||2-68-8

மரங்கள் அனைத்திலும் சிறந்த பாரிஜாதத்தைத் துவாராவதிக்கு அனுப்புமாறு அவனிடம் கேட்பீராக; கொடைவிழா நிறைவடைந்ததும் அது சொர்க்கத்திற்கு மீளட்டும். பலனை {பலாசுரனைக்} கொன்றவனும், எல்லாம் வல்லவனுமான அந்தத் தேவனிடம் {இந்திரனிடம்} இவ்வாறே நீர் பேச வேண்டும்.(7,8)

ததா² ததா² ப்ரயத்நஶ்ச கார்யோ(அ)ஸ்மிந்முநிஸத்தம |
யதா² தருவரம் த³த்³யாத்பார்ஜாதம் ஸுரேஶ்வர꞉ ||2-68-9

ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, தேவர்களின் தலைவன் பாரிஜாதமெனும் அந்தச் சிறந்த மரத்தைக் கொடுக்கும் வகையில் நீர் முன் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்

தத்ர தூ³தகு³ணம் தாவத்பஶ்யாமஸ்தே தபோத⁴ந |
ஸம்பா⁴வ்யா ஸர்வக்ருத்யாநாம் ஸம்பத்³தி⁴ த்வயி மே மதா ||2-68-10

ஓ! தவமெனும் செல்வத்தைக் கொண்டவரே, தூதராகச் செயல்படும் உமது திறன்களையும் அது {அம்முயற்சிகள்} புகழ்பெறச் செய்யும்; உமது செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பதால் இது சாத்தியப்படும் என்பதை நான் அறிவேன்” என்றான் {கிருஷ்ணன்}.

ஏவம் நாராயணேநோக்தோ நாரதோ³ ப⁴க³வாந்ருஷி꞉ |
ப்ரஹஸ்யோவாச கேஶிக்⁴நமித³ம் வாக்யம் தபோத⁴ந꞉ ||2-69-11

நாராயணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், எல்லாம் வல்லவரும், தவத்தகுதியைக் கொண்ட பெரும் முனிவருமான நாரதர், கேசியைக் கொன்றவனிடம் இந்தச் சொற்களைச் சொன்னார்.

பா³ட⁴மேவம் ப்ரவக்ஷ்யாமி யது³முக்²ய ஸுரேஶ்வர |
ந து தா³ஸ்யதி தே³வேந்த்³ர꞉ பாரிஜாதம் கத²ஞ்சந ||2-68-12

{நாரதர்}, “நல்லது. ஓ! யதுக்களில் முதன்மையானவனே, தேவர்களின் தலைவனிடம் நான் இவ்வாறே பேசுவேன். இருப்பினும் அவன் நிச்சயம் ஒருபோதும் பாரிஜாத மரத்தைப் பிரியமாட்டான்.

மந்த³ரம் பர்வதஶ்ரேஷ்ட²ம் தா³நவைஸ்த்ரித³ஶைஸ்ததா² |
நிக்ஷிப்ய தோயதௌ⁴ பூர்வம் பாரிஜாத꞉ ஸமாஹ்ருத꞉ ||2-68-13

தானவர்களும், தேவர்களும், மந்தர மலையைப் பெருங்கடலின் நீரில் தள்ளி அதை {அந்த பாரிஜாத மரத்தை} அடைந்தனர்[“இது நிச்சயம் தேவர்களாலும், அசுரர்களாலும் பெருங்கடல் கடையப்பட்டதைக் குறிக்கிறது”].

மந்த³ராத்பர்வதஶ்ரேஷ்டா²ந்நயிதும் ப்ரேஷித꞉ புரா |
பாரிஜாதம் ஹரேணாபி லோககர்த்ரா ஜநார்த³ந ||2-68-14

ஓ! ஜனார்த்தனா, அந்தக் காலத்தில் உலகங்களின் படைப்பாளன் {சிவன்}, மலைகளில் சிறந்த மந்தர மலையுடன் சேர்த்து பாரிஜாத மரத்தையும் எடுத்துக் கொள்ள விரும்பினான்

ஸ்வயம் விஜ்ஞாபிதோ க³த்வா தத꞉ ஶக்ரேண ஶங்கர꞉ |
ஆக்ரீட³த்³ரும உத்³யாநே ஶச்யா꞉ ஸ்யாதி³தி யாசித꞉ ||1-68-15

அப்போது சக்ரன் தனிப்பட்ட முறையில் சங்கரனிடம் சென்று, அவனிடம், “இதுவே சசி {இந்திராணி} விளையாடுவதற்கான மரம், எனவே இஃது அவளது நந்தவனத்தில் இருக்கட்டும்” என்று கேட்டான். இவ்வாறே அவன் சங்கரனிடம் மன்றாடிக் கேட்டான்.

ததா²ஸ்த்விதி வரோ த³த்தோ மஹதே³வேந சாநக⁴ |
ந ச நீத꞉ பாரிஜாதோ மந்த³ரம் சித்ரகந்த³ரம் ||1-68-16

ஓ! பாவமற்றவனே, அந்த மஹாதேவன், “அப்படியே ஆகட்டும்” என்ற வரத்தை அவனுக்கு அருளி, அழகிய குகையால் அலங்கரிக்கப்பட்ட மந்தர மலைக்கு அந்தப் பாரிஜாத மரத்தைக் கொண்டு வராமல் இருந்தான்.

க்ரீடா³வ்ருக்ஷ꞉ ஸ ஶச்யேதி வ்யபதே³ஶேந மோக்ஷித꞉ |
மஹேந்த்³ரேண மஹாபா³ஹோ பாரிஜாதஸ்தத꞉ புரா ||2-68-17

ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இவ்வாறே கடந்த காலத்தில், சசிதேவி விளையாடுவதற்கான மரம் என்ற சாக்கைச் சொல்லி, அந்தப் பாரிஜாதத்தை மஹாதேவனின் பிடியில் இருந்து இந்திரன் காத்தான்

ப்ரியார்த²முமயா ஸாக்ஷாத்பாரிஜாதவநம் ஹர꞉ |
க³வ்யூதிஶதவிஸ்தீர்ணம் மந்த³ரஸ்யைவ கந்த³ரம் ||2-68-18

அதன்பிறகு அந்த ஹரன் {சிவன்}, தன் மனைவியான உமையை நிறைவடையச் செய்வதற்காக மந்தர மலையின் பள்ளத்தாக்குகளில் நான்கு மைல்கள் {நூறு கல்பூதி / 2 குரோசம்} பரப்பில் முழுமையாகப் பாரிஜாத மரங்களாலான ஒரு காட்டைப் படைத்தான்.

ந தத்ர ஸூர்யபா⁴꞉ க்ருஷ்ண ப்ரவிஶந்தி நகோ³த்தமே |
ந ச சந்த்³ரப்ரபா⁴ ஶீதா நைவ க்ருஷ்ண ஸதா³க³தி꞉ ||2-58-19

ஓ! கிருஷ்ணா, அந்தச் சிறந்த காட்டில், சூரியனின் கதிர்களோ, சந்திரனின் குளிர்ந்த ஒளிக்கற்றைகளோ, காற்றின் மூச்சோ கூட ஊடுருவிச் செல்ல முடியாது.

ஶீதோஷ்ணே ச²ந்த³தஸ்தத்ர ஶைலபுத்ர்யா ப⁴வந்தி ஹி |
ஸ்வயம்ப்ரப⁴ம் வநம் தத்³தி⁴ மஹாதே³வஸ்ய தேஜஸா ||2-68-20

மஹாதேவனுடைய சக்தியின் மூலம் அந்தக் காடு தன்னொளி பெற்றதாகவும், மலைமகளின் (துர்க்கையின்) விருப்பத்திற்கேற்ற வெப்பமும், குளிரும் அமையப் பெற்றதாகவும் இருந்தது.

வர்ஜயித்வா மஹாதே³வௌ ஸக³நௌ யது³நந்த³ந |
மாம் சாந்யஸ்தத்³வநம் தி³வ்யம் ந ப்ரயாதி கத²ஞ்சந ||2-68-21

ஓ! யதுக்களை மகிழச் செய்பவனே, அந்த வலிமைமிக்கத் தேவனையும், தேவியையும், அவர்களின் தொண்டர்களையும் {பூதகணங்களையும்}, என்னையும் தவிர வேறு எவராலும், எத்தருணத்திலும் அந்த அழகிய அடவிக்குள் {காட்டுக்குள்} நுழைய முடியாது.

ஸ்ரவந்தி தத்ர வார்ஷ்ணேய பாரிஜாதா꞉ ஸமந்தத꞉ |
ஸர்வரத்நாநி முக்²யாநி மநஸா காங்க்ஷிதாநி வை ||2-68-22

ஓ! விருஷ்ணிகளின் வழித்தோன்றலே, அங்கே உள்ள பாரிஜாத மரங்கள் மனத்தால் நினைத்தமாத்திரத்திலேயே அனைத்து வகை ரத்தினங்களையும் அனைத்துப் பக்கங்களிலும் பொழியும் தன்மை கொண்டவையாகும்.

க³ணாஸ்தாந்யுபபு⁴ஞ்ஜந்தி ப்ரவராணாம் மஹாத்மநாம் |
ஆஜ்ஞயா தே³வதே³வஸ்ய லோகநாத²ஸ்ய கேஶவ ||2-68-23

ஓ! கேசவா, உலகங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் இறைவனான சிவனின் அனுமதியுடன், அவனது சிறப்புமிக்கப் பணியாள் துருப்பினர் {பூத கணங்கள்} அந்த அழகிய அடவியை அனுபவிக்கின்றனர்.

பாரிஜாதாத்³ப³ஹுகு³ணம் ப²லம் தேஷாம் ததா² வநம் |
அபி⁴மாநம் ப்ரபா⁴ஶ்சைவ கு³ணா பூ⁴ரிகு³ணாஸ்ததா² ||2-68-24

அந்தப் பாரிஜாத மரக்காடும், அங்குள்ள கனிகளும், அவற்றின் ஒளியும், குணங்களும், சொர்க்கத்தில் உள்ள பாரிஜாதங்களைவிடப் பன்மடங்கில் சிறந்தவை.

மூர்திமந்தஶ்ச தே வ்ருக்ஷா꞉ ஸோமம் தே³வம் வ்ருஷத்⁴வஜம் |
உபதிஷ்ட²ந்தி ஸததம் ப்ரவரை꞉ ஸஹ கேஶவ ||2-68-25

ஓ! கேசவா, புனிதக் காளையைச் சின்னமாகக் கொண்ட அந்தத் தேவன், உமையுடனும், தன் தொண்டர்களுடனும் {பூத கணங்களுடனும்} அம்மரங்களுக்கு மத்தியில் செல்லும்போது, அவை மனித வடிவை ஏற்று அவனை அணுகி வழிபடுகின்றன.

ரௌத்³ரேந தேஜஸா ஜுஷ்டா து³꞉கை²ர்ஹீநா꞉ ஸுகா²ந்விதா꞉ |
தரவோ மந்த³ரே தே ஹி த³யிதா꞉ ஶைலகந்யயா ||2-68-26

ருத்திர சக்தி கலந்தவையும், தீய ஆதிக்கங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவையும், செழிப்பனைத்தையும் கொண்டவையுமான மந்தரத்தில் {மந்தர மலையில்} உள்ள அந்த மரங்கள், மலை மகளின் பேரன்புக்குரியவையாகும்.

ப்ரவிவேஶாந்த⁴கோ நாம கோ⁴ரஸ்தத்ர மஹாப³ல꞉ |
தை³தேயோ வரதா³நேந த³ர்பித꞉ பாபநிஶ்சய꞉ ||2-68-27

ஒருகாலத்தில், வலிமைமிக்கவனும், பயங்கரம் நிறைந்தவனும், கொடும் நோக்கங்களைக் கொண்டவனுமான அந்தகன் என்ற பெயரைக் கொண்ட தைத்தியன் ஒருவன், தன்னால் பெறப்பட்ட வரங்களின் மூலம் திமிர் பெருகியவனாக அந்தக் காட்டுக்குள் அத்துமீறி நுழையத் துணிந்தான்.

ஸ ஹதோ தே³வதே³வேந ஹரேணாமித்ரகா⁴திநா |
அவத்⁴ய꞉ ஸர்வபூ⁴தாநாம் வ்ருத்ராத்³த³ஶகு³ணம் ப³லீ ||2-68-28

அவன் விருத்திரனைவிடப் பத்து மடங்கு பலம்நிறைந்தவனாகவும், படைக்கப்பட்ட எந்த உயிரினத்தினாலும் கொல்லப்படமுடியாதவனாகவும் இருந்தாலும், பகைவரைக் கொல்பவனும், தேவர்களில் முதன்மையானவனுமான ஹரனால் கொல்லப்பட்டான்

ஏவம் து³ஹ்க²ம் ந தே தே³வ பாரிஜாதம் ப்ரதா³ஸ்யதி |
புஷ்கராக்ஷ ஸஹஸ்ராக்ஷ꞉ ஸத்யமேதத்³ப்³ரவீமி தே ||2-68-29

ஓ! தாமரைக் கண் தேவா, நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன், ஆயிரங்கண் தேவனான இந்திரன் பெருஞ்சிரமத்துடன் அடைந்த அந்தப் பாரிஜாத மரத்தை ஒருபோதும் உனக்குத் தர மாட்டான்

ஸததம் ஸஹிதோ தே³வ்யா ஶச்யா ஸ ஹி வரத்³ரும꞉ |
ஸர்வகாமப்ரத³꞉ க்ருஷ்ண ததே²ந்த்³ராய மஹௌஜஸே ||2-68-30

ஓ! கிருஷ்ணா, அந்தச் சிறந்த மரம் எப்போதும் சசிதேவியின் விருப்பங்களையும், பெருஞ்சக்திவாய்ந்த இந்திரனின் விருப்பங்களையும் நிறைவேற்றி வருகிறது” என்றார் {நாரதர்}.

ஶ்ரீப⁴க³வாநுவாச
முநே தத்³யுஜ்யதே ஸாது⁴ மஹாதே³வேந தீ⁴மதா |
யச்ச²சீகாரணம் க்ருத்வா ந நீதஹ் ஸ தரு꞉ புரா ||2-68-31

அந்த மங்கலத் தேவன் {ஸ்ரீபகவான்}, “ஓ! முனிவரே, வலிமைமிக்கவனும், நுண்ணறிவுமிக்கவனுமான மஹாதேவன், சசியைக் கருத்தில் கொண்டு அந்தப் பாரிஜாத மரத்தை எடுத்துச் செல்லாமல் இருந்தது அவனுக்குத் தகுந்ததே

ஸ ஜ்யேஷ்ட²꞉ ஸர்வபூ⁴தாநாம் லோகக்ருத்ப்ரப⁴வோ(அ)வ்யய꞉ |
பாராவர்யஸ்ய ஸத்³ருஶம் க்ருதவாநிதி மே மதி꞉ ||2-68-32

தவறிழைக்காதவனும், உலகங்களின் பிறப்பிடமும், மிக உயர்ந்தவனும், மிகப் பழைமையான படைப்பாளனுமான அவனுடைய {சிவனின்} உயர்ந்த மதிப்புக்கு இது மிகப் பெருத்தமானதே என நான் நினைக்கிறேன்.

அஹம் யவீயாந்தே³வஸ்ய ஸர்வதா² ப³லகா⁴திந꞉ |
லாலநீயஶ்ச ப⁴க³வஞ்ஜயந்த இவ ஸத்தம ||2-68-33

ஆனால், ஓ! சிறப்புமிக்க முனிவரே, ஓ! பக்திமானே, பலனை {பலாசுரனைக்} கொன்றவனை விட நான் இளையவன் {நான் இந்திரனுக்குத் தம்பி} என்பதால் (அவனுடைய மகனான) ஜயந்தனைப் போல நான் அவனால் பேணி வளர்க்கப்பட வேண்டியவன் {சீராட்டத் தக்கவன்}.

ஸர்வதா² ப⁴க³வாம்ஸ்தாவது³பாயைர்ப³ஹுவிஸ்தரை꞉ |
கரோது யத்நம் ப்ரீத்யர்த²ம் ஶக்தோ ஹ்யஸி தபோத⁴ந ||2-68-34

ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, அனைத்து வகையிலும் எங்களுக்கிடையில் (எனக்கும் இந்திரனுக்கும் இடையில்) இணக்கமான உறவுகளைப் பேண வேண்டியது உமது கடமையாகும்; உம்மால் அவ்வாறு செய்ய இயலும் என்பதை நானறிந்ததாலேயே அவ்வாறே செய்யுமாறு உம்மைக் கேட்கிறேன்.

மயா முநே ப்ரதிஜ்ஞாதம் புண்யார்த²ம் ஸத்யபா⁴மயா |
ஸ்வர்கா³தி³ஹாநயிஷ்யாமி பாரிஜாதமிதி ப்ரபோ⁴ ||2-68-35

ஓ! முனிவரே, ஓ! தலைவா, சத்யபாமாவின் புண்யக நோன்பை நிறைவேற்றுவதற்காக நான் சொர்க்கத்தில் இருந்து பாரிஜாத மரத்தைக் கொண்டு வருவேன் என உறுதியளித்திருக்கிறேன்

மயா தத³ந்ருதம் கர்தும் கத²ம் ஶக்யம் தபோத⁴ந |
நாந்ருதம் ஹி வசோ விப்ர ப்ரோக்தம் பூர்வம் மயாநக⁴ ||2-68-36

ஓ! முனிவரே, ஓ! பாவமற்றவரே, ஓ! இருபிறப்பாளரே, நான் ஒருபோதும் பொய் பேசியவனில்லை என்பதால் என்னால் எவ்வாறு என் உறுதிமொழியை உடைக்க முடியும்?

மயி ப⁴க்³நப்ரதிஜ்ஞே வை லோகாநாம் விப்லவோ ப⁴வேத் |
யந்மயா ஹி முநிஶ்ரேஷ்ட² லோகத⁴ர்மா கு³ணாந்விதா꞉ |
பரிவார்ய꞉ ஸ்தி²தௌ ஸர்வே ஸ கத²ம் ஹ்யந்ருதம் வதே³த் ||2-68-37

ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அறத்தையும், மக்களின் நற்குணங்களையும் பாதுகாப்பதைக் கடமையாகக் கொண்ட நானே என் உறுதிமொழியை உடைத்தால் உலகங்கள் தங்கள் முடிவை {அழிவைச்} சந்திக்கும்[“அப்போது அனைவரும் பொய் பேசுவார்கள் என்பதால் பூமியின் பரப்பில் இருந்து வாய்மை மறைந்துவிடும்”]. அனைவரும் எவனைச் சார்ந்திருக்கின்றனரோ அவனே எவ்வாறு பொய் பேச முடியும்? {அனைவரும் என்னையே சார்ந்திருக்கின்றனர்; அவ்வாறான நான் எவ்வாறு பொய் பேச முடியும்?}

ந தே³வக³ந்த⁴ர்வக³ணா ந ராக்ஷஸா
ந சாஸுரா நைவ ச யக்ஷபந்நகா³꞉ |
மம ப்ரதிஜ்ஞாமபஹந்துமுத்³யதா
முநே ஸமர்தா²꞉ க²லு ப⁴த்³ரமஸ்து தே ||2-68-38

தேவர்களாலோ, கந்தர்வர்களாலோ, ராட்சசர்களாலோ, அசுரர்களாலோ, யக்ஷர்களாலோ, பன்னகர்களாலோ என் உறுதிமொழியைக் குலைக்க முடியாது; இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன், ஓ! முனிவரே, உமக்கு நற்பேறு கிட்டட்டும்.

ஸ பாரிஜாதம் யதி³ ந ப்ரதா³ஸ்யதி
ப்ரயாச்யமாநோ ப⁴வதாமரேஶ்வர꞉ |
தத꞉ ஶசீவ்யாம்ருதி³தாநுலேபநே
க³தா³ம் விமோக்ஷ்யாமி புரம்த³ரோரஸி ||2-68-39

தேவர்களின் தலைவன் {இந்திரன்} உமது வேண்டுகோளின் பேரில் பாரிஜாத மரத்தைக் கொடுக்கவில்லை என்றால், மணமிக்கக் களிம்புகளைக் கொண்டு சசியால் {இந்திராணியால்} பூசப்படும் அவனது {இந்திரனின்} மார்பில் நான் என் கதாயுதத்தை வீசுவேன்

இதி ப்ரவாச்யோ யதி³ ஸாமபூர்வகம்
ப்ரயாச்யமாநோ ந தரும் ப்ரயச்ச²தி |
ஸுநிஶ்சயம் மத்³க³மநாய ஸர்வதா²
த்வயாபி கார்ய꞉ க²லு தத்ர நிஶ்சய꞉ ||2-68-40

இவ்வாறு இணக்கமான முறையில் கோரப்படும்போதும் அவன் பாரிஜாத மரத்தைவிட்டுப் பிரிய மறுத்தால் அங்கே என் வரவைக் குறித்த உறுதியடைந்து அவன் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதையும் நீர் அவனுக்குச் சொல்ல வேண்டும்” என்றான் {கிருஷ்ணன்}”.

இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே விஷ்ணுபர்வணி
நாரத³க்ருஷ்ணபா⁴ஷணே(அ)ஷ்டஷஷ்டிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading