ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -ஸ்லோகங்கள் -81-90-

வேதாந்த தேஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் –

வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் உடைய கடாக்ஷத்தினால்
வளர்க்கப் பட்ட ஞானத்தை உடையவரும்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்–ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய
கடாக்ஷத்துக்கு ஏக பாத்ரமாயும்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம் -ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றியவரும் –
குற்றம் அற்ற நற் குணங்களோடு கூடியவரும்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -பிரதிவாதிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும்
ஆச்சார்யரை பக்தியோடு ஸ்துதிக்கிறேன் –

————–

யத் உதிதா யதி பூபதி விம்சதிஸ் ஸமவதீரித ஸீது ஸூதா ரஸா
விசத யத் யகிலம் பவி நாம் ஹிதம் வர முனிஸ் ச தநோது ஸூபாநி ந –81-

எவரால் அருளிச் செய்யப் பட்டதும் -இனிமையில் தேன் அம்ருதம் இவற்றைத் தோற்கடிப்பதுமான
யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரம் சம்சாரிகளுக்கு ஓன்று விடாமல் எல்லா நன்மைகளையும்
தெளிவு படுத்துகிறதோ அந்த மா முனிகள் நமக்கு மங்களங்களை வளர்த்து அருளட்டும் –

——————-

மஹா யோகீ வக்தா அநிதர குண சாமான்ய மஹிமா
ச து ஸ்துத்ய ஸ்ரீ மான் அமித குண பூமா யதிபதி
அதோ நிஸ் துல்யா யா யதி நரபதேர் விம்சதி ரிதி
வியவஸ் யந்தஸ் சந்த கலி மிஹ ஜயந்த் யுஜ்ஜ்வலதி ய–82-

யதிராஜ விம்சதியை இயற்றி அருளிய மா முனிகள் மற்றவர்களுக்குப் பொருந்தாத மஹிமை மிக்க
குணங்களை உடையவர் ஆவார் –
ஸ்துதிக்கு விஷயமாக இருப்பவரோ பிராட்டியின் கிருபையைப் பெற்றவரும் அளவற்ற குணங்களுக்கு இருப்பிடமானவரும்
யதிகளுக்கும் ஸ்வாமியுமான -உத்தாரக ஆச்சார்யரான -எம்பெருமானார் –
ஆகையால் இந்த யதிராஜ விம்சதி ஒப்பற்றது என்று உறுதி கொண்ட ஒளி மிக்க ஸ்ரீ யை உடைய
விலக்ஷண அதிகாரிகள் இங்கு கலியை வெல்கிறார்கள் –

————-

த்ராஷாமதி ஷிபதி நிந்ததி மாகரந்த தாராம் ஸூதா ரஸ
ஜரீ மதரீ கரோதி யத் ஸம் ப்ரணீத மது லம் யதி ஸார்வ பவ்ம
ஸ்தோத்ரம் ச மே வர முனிர் வித நோ து பத்ரம் –83-

எந்த மா முனிகள் அருளிச் செய்த ஒப்பற்ற யதிராஜா விம்சதியானது த்ராக்ஷையைத் தோற்படிப்பதாய்
தேன் தாரையைப் பழிப்பதாய் அம்ருத ரஸ ப்ரவாஹத்தை தாழ்வுறச் செய்கிறதாய்
நன்கு அருளிச் செய்யப் பட்டதோ அந்த யதீந்த்ர ப்ரவணரான மா முனிகள்
அடியேனுக்கு அருளத் திரு உள்ளம் பற்ற வேண்டும் –

————-

ஸ்ரீ மத் ரெங்க ஸூதாபிதா நக ஸூத் யர்த்த அநு சந்த உஜ்ஜ்வலா
கோதா உதார வச ப்ரதர்ஸித குரு உபாயத்வ நிஷ்ட ஆஸ்ரயா
யத் ஸூக்திர் யதிராஜ விம்சதி நுதி வேதாந்த ஸிந்தோஸ் ஸூதா
ஸ்ரீ மத் ரம்ய வராய ஸம்யமவதாம் நாதாய தஸ்மை நம –84-

திருவரங்கத்து அமுதனார் என்னும் திரு நாமத்தை உடைய கவியினுடைய ராமானுஜ நூற்று அந்தாதியின்
அர்த்தத்தை அனுசந்தித்த சிறப்பை உடைத்தாய்
ஸ்ரீ கோதா தேவியின் உதார வாக்கான நாச்சியார் திரு மொழியில் காட்டி அருள பெற்ற
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்ற நிஷ்டையை ஏற்பதாய் -வேதாந்த பாற் கடலில் இருந்து
கடைந்து எடுத்த அமுதம் போன்றதாய் விளங்கும் யதிராஜ விம்சதி என்னும் ஸ்தோத்ர கிரந்தம் அருளிச் செய்து
அருளிய இந்த்ரியங்களில் அடக்கியவர்களில் ஸ்ரேஷ்டரான அந்த மா முனிகளுக்கு நமஸ்காரம் –
அடியேனுடைய ப்ரணாமங்களை சமர்ப்பிக்கிறேன் –

————–

யதி வர பக்தி பூர்த்தி கலி தார்த்தி சமாஹ்வய யத் க்ருதி ரஸா வேதிந
கில தரந்தி பாவார்த் யுததிம்
தம் அநு தினம் யதீந்த்ர பத பங்கஜ ப்ருங்க வரம்
வர முனிம் ஆஸ்ரயாசய விஹாய தத் அந்ய ருசிம் –85-

யதிகளில் ஸ்ரேஷ்டரான நம் ஸ்வாமி எம்பெருமானார் இடத்து முதிர்ந்த தமது பக்தியினால் தூண்டப்பட்டு –
பரம பக்தி தலை எடுத்து – ஆர்த்தி என்ற பெயரை உடைய எந்த பிரபந்தத்தில் ரஸத்தை அறிந்தவர்கள்
ஸம்ஸார தாபக் கடலைக் கடக்கிறார்கள் அன்றோ
நெஞ்சே யதிராஜருடைய திருவடித் தாமரைகளில் இருக்கும் தலை சிறந்த வண்டு போன்ற அந்த மா முனிகளை
தினம் தோறும் மற்றவற்றில் ருசியை அறவே விட்டு ஆஸ்ரயிப்பாயாக –

——————

ஸடாரி த்ருஷ்ட ஸாம வேத பாஷ்ய தர்சித அகில
பிராமண சங்கரஹோ மஹா உபகாரகோ மநீஷிணாம்
முதம் தநோதி யத் க்ருதிஸ் ஸமாஸ்ரயஸ்வ சாதரம்
மநோ ஹரோ பயந்த்ரு யோகி நம் தமன்வஹம் மன –86-

நம்மாழ்வாரால் காணப்பட்ட சாம வேத சமானமான திருவாய் மொழியின் பாஷ்யம் ஆகிற ஈட்டில்
காட்டி அருளப் பெற்ற அனைத்துப் பிரமானங்களுக்கும் எந்த மா நுனிகளால் அருளிச் செய்யப்பட்ட
எந்த தொகுப்பானது பகவத் விஷய அதிகாரிகளுக்கு மிகுந்த உபகாரத்தைச் செய்து ஆனந்தத்தை
உண்டாக்குகிறதோ மனசை வசீகரிக்கும் அந்த மா முனிகளை ஹே மனமே
தினம் தோறும் ஆதாரத்தோடு ஆஸ்ரயிப்பாயாக -அனு தினம் அனுசந்திக்கக் கடவாய் –

————-

ஸ்வ க்ருத ஜகத் குரு தத்வ த்ரிதய வ்யாக்யான மான ஸங்க்ரஹத
பவி நாம் க்ருத உபகாரோ வர யோகீ பாதுநஸ் ஸததம் –87-

ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியாருடைய தத்வ த்ரயத்துக்கு தாமே அருளிச் செய்த வியாக்யானம்
மற்றும் பிராமணத் திரட்டல் சம்சாரிகளுக்கு உபகாரம் செய்து அருளினவரான
யோகிகளில் ஸ்ரேஷ்டரான ஸ்ரீ மா முனிகள் நம்மை ரக்ஷித்து அருளட்டும் –

————————

யதீ யய உபதேஸ ரத்ன மாலயா பரிஷ் க்ருதா
யத் அங்க்ரி பத்ம சேகரா ஜயந்தி தேசிக உத்தமா
தம் ஆஸ்ரி தஸ்ய ஸூ ந்தரோ பயந்த்ரு யோகி சேகரம்
பவ ஆர்ணவ அபி கோஷ் பத த்வமேதி தத் ப்ரபா வத –88-

எவருடைய உபதேச ரத்ன மாலையை நன்கு அனுசந்தித்தவர்களாய் எவருடைய திருவடித் தாமரைகளை
தலைக்கு அணிகலனாகக் கொண்டவர்களாய் விளங்கும் ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்கள் சம்சாரத்தை வெல்கிறார்களோ
அந்த மா முனி ஸ்ரேஷ்டரை ஆஸ்ரயித்த வர்களுடைய ஸம்ஸார ஆர்ணவமும்
அந்த மா முனியின் பிரபாவத்தாலே குளப்படியாகும் தன்மையை அடைகிறது –

மன்னுயிர் காள் இங்கே மணவாள மா முனியாம்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை உன்னிச்
சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை
கரத்தால் தீண்டல் கடன் -எறும்பி அப்பா பாசுரம் அனுசந்தேயம் –

——————

சடாரி த்ருஷ்ட ஸாம வேத மௌலி ஸங்க்ரஹாத் மிகாம்
யத் யுக்திம் அன்வஹம் க்ருணன் வி முக்தி ஸம்பதாஸ் பதம்
ஸமேத தே ஸதாம் கணஸ் ஸ நஸ் ஸூபாநி சாதரம்
வரோ பயந்த்ரு யோகி ராட் தரங்க யத்வ நாரதம் –89-

நம்மாழ்வார் கண்டா சாமவேதத்தின் தலையான திருவாய் மொழிக்கு ஸங்க்ரஹமாக
எந்த மா முனிகளுடைய திருவாய் மொழி நூற்று அந்தாதியை
மோக்ஷமாகிய செல்வத்தைப் பெறக் காரணமாக மஹான்கள் குழாம் நாள் தோறும் ஆதாரத்தோடு
அனுசந்தித்து மென்மேலும் அனுபவிக்கிறார்களோ அந்த ஸ்ரேஷ்டரான மா முனிகள்
நமக்கு இடைவிடாமல் மங்களங்களை வளரச் செய்து அருளுகிறார் –

————–

துக்தோதந் வத்த வல மதுரம் ஸூத்த சத்துவ ஏக ரூபம்
ரூபம் யஸ் யஸ் புட யதி தராம் யம் பணீந்த்ர அவதாரம்
த்யாயந்தஸ்தம் வர வர முனிம் கே அபி தன்யா மஹாந்த
காலம் சர்வம் கலுஷ ரஹிதா ஹ்ருஷ்ட சித்தா ஹரந்தி –90-

எந்த மா முனிகள் பாற் கடல் போன்று வெண்மையாகவும் இனிமையாகவும் ஸூத்த ஸத்வமே
உருவெடுத்தவராகவும் -உத்தம நம்பி போன்ற அந்தரங்கங்களுக்கு காட்டி அருளிய
ஆதி சேஷ திரு அவதாரமே என்னும் உண்மையை மிகத் தெளிவாக்க காட்டுவதாக
திரு மேனியை உடையவரோ அந்த மா முனிகளை த்யானிப்பவர்களான சில மஹான்கள்
தன்யர்களாய் மனக்கலக்கம் அற்றவர்களாய் சந்துஷ்டியை உடையவர்களாய்
உள்ள எஞ்சிய காலத்தை எல்லாம் ஸூ கமாகவே கழிக்கிறார்கள் –

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading