வேதாந்த தேஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் –
வேதாந்ததே ஸிக கடாக்ஷ விவ்ருத்த போதம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் உடைய கடாக்ஷத்தினால்
வளர்க்கப் பட்ட ஞானத்தை உடையவரும்
காந்தோ பயந்த்ருய மிநஸ் கருணை ஏக பாத்ரம்–ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய
கடாக்ஷத்துக்கு ஏக பாத்ரமாயும்
வத்ஸ அந்வவாய மநவத்ய குணைரு பேதம் -ஸ்ரீ வத்ஸ குலத்தில் தோன்றியவரும் –
குற்றம் அற்ற நற் குணங்களோடு கூடியவரும்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் -பிரதிவாதிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும்
ஆச்சார்யரை பக்தியோடு ஸ்துதிக்கிறேன் –
————–
சட வைரிமு நே பரம் ந தைவம் விதிதம் யேந ததே கதை வதே ந
மதுரம் கவிம் ஆஸ்ரித ஸ் தமீட்யம் வர யோகீ விததாது பாவுகம் ந –61-
நம்மாழ்வாரை விட மேலான தெய்வம் எவரால் அறியப் பட வில்லையோ அந்த ஒரு தெய்வத்தை உடைய
தேவு மற்று அறியாமல் குருகூர் நம்பி பாவின் இன்னிசையைப் பாடித் திரிந்த
ஸ்துதிக்கத் தக்க ஸ்ரீ மதுர கவிகளை ஆஸ்ரயித்த மா முனிகள் நமக்கு நன்மைகளைத் தந்து அருள வேணும்
————
யத் பதாப்ஜ அநு பந்தஸ் ஸகல தநு ப்ருதாம் கல்பதே முக்தி ஸித்த்யை
யத் சம்பந்தாத் கரஸ்தாம மநுத ச யதிஷ் மாபதி ஸ்வஸ்ய முக்திம்
தஸ்மிந் கூராதி நாதே நிரவதிக குணே பக்திமாம் ரேட யந்தம்
முக்த்யை பக்த்யோ பஜந்தோ வர முனி மநகா தேஸிகா மே தயந்தாம் –62-
எவருடைய திருவடித் தாமரைகள் சம்பந்தமே எல்லா சேதனர்களுடையவும் முக்தி பெறுவதற்கு
சாதனமாக கருதப் படுகிறதோ அந்த ராமானுஜரே
தன்னுடைய மோக்ஷம் எவருடைய சம்பந்தத்தால் கைப்பட்டதாக எண்ணினாரோ
இதற்கு மேல் இல்லை என்னும்படியான குணங்களை உடைய அந்த கூரத்தாழ்வான் இடம்
இடைவிடாத பக்தியைப் பண்ணும் மா முனிகளை மோஷார்த்தமாக பக்தியுடன் ஆஸ்ரயிக்கும்
ஆச்சார்யர்கள் அடியேனுக்கு தயை பண்ணி அருள வேணும் –
அர் வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே
மூர்த் நா யஸ்ய அந்வய முபகதா தேஸிகா முக்தி மாபு
ஸோ யம் ராமாநுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் கரஸ் தாம்
யத் சம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூர நாத
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் அன்றோ –
—————————–
யதிபதி பத யுக்மம் தைவதம் யஸ்ய நான்யத் தமிஹ வடுக பூர்ணம் சாதரம் பாவ யந்தம்
ஸததம பிலஷந்தம் தஸ்ய நிஷ்டாம் கரிஷ்டாம் வர வர முனி வர்யம் சந்ததம் சிந்தயேயம் –63-
யதிராஜருடைய திருவடித் தாமரைகளைத் தவிர எவருக்கு வேறு தெய்வம் இல்லையோ
அந்த வடுக நம்பியை இங்கு பிரியத்தோடு எப்போதும் நினைப்பவரும்
அவர் தம் ஆழ்ந்த உறுதியை -அந்திம உபாய நிஷ்டையை -தமக்கு விரும்பும் முனிகளிலே
ஸ்ரேஷ்டரான மா முனிகளை எப்போதும் சிந்திக்கக் கடவேன்
————————
ஸடரிபு முனி த்ருஷ்ட ஸாம வேதம் வ்யவருணு த யோ யதிராஜ சாஸநே ந
தமிஹ சடஜிதாஹ் வயம் ஸ்ர யந்தம் வர முனி வர்ய முபாஸி ஷீய நித்யம் –64-
நம்மாழ்வார் கண்ட சாம வேத சம மான திருவாய் மொழியை நம் ஸ்வாமி எம்பெருமானாருடைய
திவ்ய ஆஜ்ஜையாலே எவர் ஆறாயிரப்படி வியாக்யானம் செய்து அருளினாரோ அந்த
திருக் குருகைப் பிரான் பிள்ளானை ஆஸ்ரயித்த வர வர முனியை எப்பொழுதும் ஆஸ்ரயிக்கக் கடவேன்
——————–
ஸடாரி த்ருஷ்ட வேத மௌலி பாவ ஸம் ப்ரகாஸ க்ருத்
க்ருதேத ரோக்தி மௌலி வேத்ய யோகி சேகர ஸதா
ஸமாதி ஸத் குணோததவ் நிமஞ்ஜ தீவ யஸ்ய தீ
வரோ பயந்த்ரு யோகி நம் நிரந்தரம் தமாஸ்ரயே –65-
ஒருவராலும் செய்யப் படாததும் நம்மாழ்வாரால் சாஷாத் கரிக்கப் பட்டதுமான திருவாய் மொழியின்
கருத்தை தெளிவாக வெளியிட்ட வேதாந்தி என்று அறியப் படும் சம தமாதி ஸத் குணக் கடலான –
க்ருதேத ரோக்தி மௌலி வேத்யர் -நஞ்சீயர் இடம் எப்பொழுதும் எவருடைய திரு உள்ளம்
ஆழ்ந்து இருக்கிறதோ அந்த மா முனிகளை இடைவிடாது ஆஸ்ரயிக்கிறேன்
————-
தத மது ரக பீர த்ராவிடாம் நாய பாஷ்யம் யது தி தமிஹ சந்த ஸந்ததம் சீல யந்தி
ஸ ஹி விஹரதி கிருஷ்ணோ தேசிகோ யஸ்ய சித்தே ச தி சது வர யோகீ பத்ர மவ்யாஹதம் ந –66-
ஒன்பதினாயிரம் போன்று இனிமையானதும் ஆழமானதுமான திராவிட வேத பாஷ்யமானது
எவரால் அருளிச் செய்யப் பட்டு அத்தை நல்லோர்கள் எப்பொழுதும் கௌரவிக்கிறார்களோ
அத ஆச்சார்யரான கிருஷ்ண ஸூரி என்னும் பெரிய வாச்சான் பிள்ளை எவருடைய திரு உள்ளத்தில் இன்புறுகிறாரோ
அந்த மா முனிகள் நமக்கு தடைவிடாத மங்களங்கள் அருள திரு உள்ளம் பற்ற வேணும் –
—————
ஸூதா சிந்தோர் இந்தோஸூ ஸூஹ்ருத திக பீரம் ஸூ மதுரம்
யதுக்தம் பாஷ்யம் தச் சட ஜித் உதிதாம் நாயா சிரஸ
ஸ கிருஷ்ணார்ய புஷ்ணன் ஹ்ருதி விஹரணம் யஸ்ய ஜயதி
ஸ்ரியம் சந்தன் யான்மே வர முனி வரஸ்ய ப்ரதிதி நம் –67-
நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட திராவிட வேதாந்தமான திருவாய் மொழிக்கு மிகவும் ஆழ்ந்ததாய் மிக்க இனியதாய்
அம்ருதக் கடலுக்கும் சந்திரனுக்கும் நட்ப்புடைத்தாய் விளங்கும் வியாக்யானமானது எவரால் அருளிச் செய்யப் பட்டதோ
அந்த கிருஷ்ணன் என்னும் பெரிய வாச்சான் பிள்ளை
எவருடைய திரு வுள்ளத்தில் ஆனந்தத்தை உண்டு பண்ணிக் கொண்டு
தாமும் ஆனந்தமாக விளங்குகிறாரோ அந்த வர வர முனி
தினம் தோறும் அடியேனுக்கு கைங்கர்ய ஸ்ரீ யை வளர்த்து அருளிச் செய்ய வேண்டும்
சந்திரன் ஸூர்யனது ஒளி வாங்கி பிரகாசிப்பது போல் திருவாய் மொழி அர்த்த விசேஷங்களை விளக்கியே
ஸ்ரீ கிருஷ்ண பக்தியை வளர்க்கும் தன்மையால் சந்திரனுக்கு மித்ரன் என்றவாறு –
————
நிகில நிகம மௌலி சார ஸாரம் ப்ரதயதி யத் த்ரவிடாக மாந்த பாஷ்யம்
ததிஹ ஜயதி யத் பிரசாத சீதம் ஹ்ருதய ஸதா வர யோகி நம் பஜஸ்வ –68-
எந்த திராவிட வேத வியாக்யான மானது அனைத்து வேதாந்த மிக்க சாரமாக விளங்குகிறதோ
அந்த இருபத்து நாலாயிர வியாக்யானமும் எவருடைய-பிரசன்ன மதுரமான வியாக்யானத்தால் –
பிரசாதத்தினால் குளிர்ந்து இங்கு பிரகாசிக்கிறதோ
அந்த மா முனிகளை என் மனமே எப்பொழுதும் ஆராதிப்பாயாக –
இது ஈட்டுக்கும் பொருந்தும்
——————–
ஸூதா சாரா காரம் ஸகல நிகமாந்தார்த்த முகுரம்
யத் யுக்தம் தத் பராங்குச நிகம பாஷ்யம் சரண யன்
ஸமிந்தே யத் சங்கஸ் ஸ விஹரதி கிருஷ்ணோ குரு வர
ஸதா யச் சித்தே தம் வர வரம் உபாஸே முனி வரம் –69-
நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட திராவிட வேதம் ஆகிய திருவாய் மொழிக்கு அருளிச் செய்யப்பட
எந்த வியாக்யானமான ஈடு முப்பத்தாறாயிரப்படி யானது -அம்ருத சாரமாய் வேதாந்தங்கள் அர்த்தங்களை எல்லாம்
தெளிவாகக் காட்டும் கண்ணாடியாய் ஸ்ரீ வைஷ்ணவ சமுதாயத்து தஞ்சமாய் விளங்குகிறதோ
எதனோடு சேர்ந்து கொண்டு அந்த ஆச்சார்ய ஸ்ரேஷ்டரான ஸ்ரீ கிருஷ்ண பாதர் என்கிற
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை எவருடைய திரு உள்ள கமலத்தில் எப்போதும் உல்லாஸமாக
ஆனந்தத்தை அளித்துக் கொண்டு விளங்குகிறதோ அந்த மா முனிகளை ஆஸ்ரயிக்கிறேன் –
—————-
ஸர்வஜ் ஜேந த்ருதா ஹி யேந சிரஸா சா கிருஷ்ண பாத உத்பவா
ஸ்ரீ பராங்குச வேத மௌலி விவ்ருதிஸ் ஸ்வர் வாஹிநீ ஸோ த ரீ
தாபம் ஸர்வ ம பாகரோ தி பவி நாம் தத்தே பராம் நிர் வ்ருதம்
ஸேவே தஸ்ய பாதாப்ஜ யுக்ம மநிசம் ஸுவ்ம்யோ பயந்துர் முநே –70-
எந்த பரம சிவனால் தலையால் தாங்கப் பட்ட ஆகாசக் கங்கை சம்சாரிகளுடைய எல்லா தாபங்களையும் போக்குகிறதோ
அதைப் போன்று நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள வேதாந்தம் ஆகிய திருவாய் மொழிக்கு விவரணமாய்
வடக்குத் திரு வீதிப் பிள்ளையிடம் இருந்து தோன்றிய
ஈடு -அது எல்லாம் அறிந்த ஸ்ரீ மா முனிகளால் திரு முடியில் தரிக்கப் பட்டு
கங்கையின் சகோதரி யாக சம்சாரிகளுடைய எல்லா தானங்களையும் போக்கி மேலான ஆனந்தத்தையும் அளிக்கிறதோ
அந்த ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கரான மா முனிகளுடைய திருவடித் தாமரை யுக்தத்தை எப்பொழுதும் சேவிக்கிறேன் –
——————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply