பரன் அடி மேற் குருகூர்ச் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரம்–1-1-11-
சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் சீர்த் தொடை ஆயிரம்-1-2-11-
அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை அமர் பொழில்
வளங் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் அமர்சுவை ஆயிரம்–1-3-11-
கண்ணனை வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற அந்தாதி ஆயிரம்–1-4-11-
மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம்-1-5-11-
மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த ஏதமில் ஆயிரம்-1-6-11-
குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரம்-1-7-11-
நீர் புரை வண்ணன், சீர் சடகோபன் நேர்தல் ஆயிரம்–1-8-11-
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
இச்சையில் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன் இச் சொன்ன வாயிரம்-1-9-11-
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியைத் தென் குருகூர்ச்
சடகோபன் சொல் பணி செய் ஆயிரம்-1-10-11-
—————————————
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே ஆராத காதல் குருகூர்ச் சடகோபன் ஓராயிரம் -2-1-11-
ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக் கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல் வாய்த்த ஆயிர-2-2-11-
குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக் குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன்
தெரிந்து உரைத்த குழாங்கொள் ஆயிர–2-3-11-
வாட்டம் இல் புகழ் வாமனனை இசை கூட்டி, வண் சடகோபன் சொல் அமை பாட்டு ஓர் ஆயிர–2-4-11-
கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக் கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன் கூறின அந்தாதி ஓர் ஆயிர-2-5-11-
கண்ணனைப் புகழ் நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிர-2-6-11-
வண்ண மாமணிச் சோதியை அமரர் தலை மகனைக் கண்ணனை நெடு மாலைத்
தென் குருகூர்ச் சடகோபன் பண்ணிய தமிழ் மாலை ஆயிர-2-7-13-
கருமேனி யம்மானை வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன் பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிர-2-8-11-
விடலில் சக்கரத்து அண்ணலை மேவல் விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல் கெடலில் ஆயிர-2-9-11-
பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல் மருள் இல்
வண் குருகூர் வண் சடகோபன் தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிர-2-10-11-
————————————-
வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனைச் சயப் புகழார் பலர் வாழும்
தடங்குருகூர்ச் சடகோபன் துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரம்-3-1-11-
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக் குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரம்–3-2-11-
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் கேழ் இல் ஆயிரம்-3-3-11-
கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன பாடல் ஓர் ஆயிரம்-3-4-11-
ஆர்த்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன் நேர்ந்த ஓர் ஆயிரம்–3-5-11-
வானவர் ஈசனைப் பண் கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக் கோன் சடகோபன் சொல் பண் கொள் ஆயிரம்–3-6-11-
அன்று ஐவர்க்கு அருள் செய்த நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் அடி ஆர்ந்த ஆயிரம்-3-7-11-
பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல் வலங்கொண்ட வாயிரம்-3-8-11-
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ்
வண் குருகூர்ச் சடகோபன் சொல் ஏற்கும் பெரும் புகழ் ஆயிரம்-3-9-11-
கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன பாடல் ஓர் ஆயிரம்-3-10-11-
————————————————-
அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய் கோலத்து ஆயிரம்-4-1-11-
மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் ஒலி புகழ் ஆயிரம்-4-2-11-
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல் செய்ய தாமரைப் பழனம்
தென்னன் குருகூர்ச் சடகோபன் பொய்யில் பாடல் ஆயிரம்-4-3-11-
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன் சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரம்-4-4-11-
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ்
குருகூர் நகர்க் காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரம்-4-5-11-
தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த வழுவாத தொல் புகழ்
வண் குருகூர்ச் சடகோபன் சொல் வழுவாத ஆயிரம்-4-6-11-
தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தனைக் குழுவு மாடம் தென் குருகூர்
மாறன் சடகோபன் சொல் வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரம்-4-7-11-
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங்குருகூர்ச் சடகோபன் செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரம்-4-8-11-
திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத் திருவடி சேர்வது கருதிச்
செழுங்குருகூர்ச் சடகோபன் திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரம்-4-9-11-
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான், நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன்
மாறன் சடகோபன் வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரம்-4-10-11-
————
கண்ணன் தன்னை ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரம்–5-1-11-
கண்ணன் தன்னைக் கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன் ஒலி புகழ் ஆயிரம்-5-2-11-
கண்ண பிரான் தன்னை விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரம்-5-3-11-
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல் நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரம்–5-4-11-
ஆழி அம் கையனையே அலற்றி நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன குறி கொள் ஆயிரம்-5-5-11-
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரம்–5-6-11-
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் செய்க ஆயிரம்-5-7-11-
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரம்-5-8-11-
நாமங்க ளாயிரமுடைய நம் பெருமானடி மேல்
சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த நாமங்க ளாயிரம்–5-9-11-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன் ஆக நூற்ற அந்தாதி ஆயிரம்-5-10-11-
—————-
குறளாய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன பண் கொள் ஆயிரம்-6-1-11-
வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டழு கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் ஏந்திய தமிழ் மாலை ஆயிரம்-6-2-11-
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த தாளிணையன் தன்னைக்
குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆணை ஆயிரம்–6-3-11-
கேசவன் அடி யிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன தூய ஆயிரம்-6-4-11-
சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன் முந்தை ஆயிரம்-6-5-11-
நல் வேங்கட வாணனைக் கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல் கட்டெழில் ஆயிரம்–6-6-11-
மது சூதனையே அலற்றிக் கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன பத்து நூறு–6-7-11-
மது சூத பிரான் அடி மேல் நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன தோற்றங்க ளாயிரம்-6-8-11-
திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் தெரியச் சொன்ன ஓராயிரம்-6-9-11-
அடியீர் வாழ்மின் என்றென் றருள் கொடுக்கும் படிக் கேழில்லாப் பெருமானைப்
பழனக் குருகூர்ச் சடகோபன் முடிப்பான் சொன்ன ஆயிரம்-6-10-11-
———————-
புண்டரிகக் கொப் பூழ்ப் புனற் பள்ளி அப்பனுக்கே தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரம்-7-1-11-
வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சட கோபன் முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம்-7-2-11-
வையம் காக்கும் ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன கேழில் அந்தாதி ஓர் ஆயிரம்-7-3-11-
குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும் ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல் நன்றி புனைந்த ஓர் ஆயிரம்-7-4-11-
இன்பக் கதி செய்யும் தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல் தெளிவுற்ற ஆயிரம்-7-5-11-
அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன மிக்க ஒர் ஆயிரம்-7-6-11-
கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன உட்கு உடை ஆயிரம்-7-7-11-
அரியை ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரம்-7-8-11-
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன் இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரம்-7-9-11-
தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன தீர்த்தங்கள் ஆயிரம்-7-10-11-
——————–
யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரம்-8-1-11-
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன தீதில் அந்தாதி ஓர் ஆயிரம்-8-2-11-
அருள் நீண் முடியானை வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன் உரையேய் சொல் தொடை ஓராயிரம்-8-3-11-
தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரம்-8-4-11-
அந்தண் குருகூர்ச் சடகோபன் செங்கேழ் சொன்ன வாயிரம்-8-5-11-
திருக் கடித் தானத்துறை திரு மாலை மதிட் குருகூர்ச் சடகோப சொல் பாலோடு அமுதன்ன ஆயிரம்-8-6-11-
திருமாலை அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன் முடிப்பான் சொன்ன வாயிரம்-8-7-11-
திருமாலால் அருளப் பட்ட சடகோபன் ஓரா யிரம்-8-8-11-
நேர் பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல் நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரம்-8-9-11-
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன் சொல்லப்பட்ட வாயிரம்-8-10-11-
———————
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரம்-9-1-11-
கடல் கடைந்தவன் தன்னை மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன் நாவில் பாடல் ஆயிரம்-9-2-11-
சீலம் எல்லை இலான் அடி மேல் அணி கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல் மாலை ஆயிரம்-9-3-11-
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன் நூறே சொன்ன ஓர் ஆயிரம்-9-4-11-
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத் தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரம்-9-5-11-
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல் வடிவு அமை ஆயிரம்-9-6-11-
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த அழிவு இல்லா ஆயிரம்-9-7-11-
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன் பண்ணார் தமிழ் ஆயிரம்-9-8-11-
அணி குருகூர்ச் சடகோபன் மாறன் அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரம்-9-9-11-
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல் பாடலான தமிழ் ஆயிரம்-9-10-11-
—————-
குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த வாயிரம்-10-1-11-
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரம்-10-2-11-
பொருநல் சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரம்-10-3-11-
வழுதி வள நாடன் சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரம்-10-4-11-
சடகோபன் நொடி ஆயிரம்-10-5-11-நொடி -சொல்லுதல் –
வளம் குருகூர்ச் சடகோபன் பாட்டாய தமிழ் மாலை ஆயிரம்-10-6-11-
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரம்-10-7-11-
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன் சொல்லார் தமிழ் ஆயிரம்-10-8-11-
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல் சந்தங்கள் ஆயிரம்-10-9-11-
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல் அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம்-10-10-11-
———————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply