ஆத்ம சமர்ப்பணம் பல ஆழ்வார் அருளிச் செயல்களில் —

வரன் -மாப்பிள்ளை
வரணம்-வரனாக வரிக்கும் பிரகாரம் -நாம் அனைவரும் ஸ்த்ரீ பிராயர்களே –
அவன் ஒருவனே புருஷோத்தமன்
கூலம்-கரை
அநு கூலம் -பிரதி கூலம் இரண்டும் கரைகள்-
சரணாகதன் அடையும் ஆறு குணங்கள்
1-அநு கூல்ய சங்கல்பம்
2-பிரதி கூல்ய வர்ஜனம்
3-கோப்த்ருத்வ வர்ணம்
4-மஹா விசுவாசம்
5-கார்ப்பண்யம்
6-ஆத்ம சமர்ப்பணம்

1-ஆநுகூல் யஸ்ய சங்கல்ப –
ஆநுகூல்யம் என்றது ப்ரியத்வம் -அதாவது —
ப்ரியோஹி ஜ்ஞானி நோத்யர்த்த மஹம் ஸ ஸ மம ப்ரிய-என்கிறபடியே அநந்ய பிரயோஜனன் ஆகை –
2-ப்ராதிகூல் யஸ்ய வர்ஜனம் —
என்றது அதி ப்ரவ்ருத்தி வ்யவசாய நிவ்ருத்தி
3-ரஷிஷ்யதீதி விஸ்வாசோ-
என்றது -த்ரிவித சங்கா ரஹிதமான பகவத் குண வத்தாத்யவசாயம்
4-கோப்த்ருத்வ வரணம் –
ஆவது அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட பிராப்திக்கு அவ்யவஹித உபாயமாக ஸ்வீகரிக்கை –
5–ஆத்ம நிஷேபம் -என்றது
ரஷ்யத் வேன சமர்ப்பிக்கை-அதாகிறது ஆத்ம ஆத்மீயமானநகில பர சமர்ப்பணம் –
6-கார்ப்பண்யம்-ஆவது க்ருபா ஜனன க்ருபண வ்ருத்தி நிரதத்வம்-

சாதன சப்தகம் -விவேகம் இத்யாதிகள் –
1. விவேக காய சுத்தி+ஆஹார சுத்தி – ஸத்வ சுத்தி.
2. விமோக : காம, க்ஷுத்ர விஷய நிவிர்த்தி.
3. அப்பியாச – ஆராத்யா தெய்வத்தின் மேல் மனதை ஒருமுகப் படுத்துதல்.
4. கிரியா – பஞ்ச மஹா யக்ஞ பாலனம்.
5. கல்யாண – சத்யம், நேர்மை, தயை, தானம், அஹிம்சை கடைபிடித்தல்.
6. அநவஸாத – மன அழுத்தம், சோகம், dejection, gloom இல்லாமை.
7. அனுர்தர்ஷ : – அதீத சந்தோஷம்/துக்கம் கொள்ளாமை .
உபாஸனா பலம் ஏற்பட இவை 7ம் அவஸ்யா பேக்ஷிதங்கள் .

1-மத் பக்த ஜன வாத்சல்யம்
2-பூஜா யாஞ்ச அநு மோதனம்–பிறர் செய்யும் கைங்கர்யம் உகந்து
3-ஸூயம் அப்யக்தம் சைவ–தானும் கைங்கர்யம் செய்து
4-மத் அர்த்த டம்ப வர்ஜனம்-இதுக்கு கர்வம் அடையாமல் -டம்பம் இல்லாமல்-
5-மத் கதா ஸ்ரவண ப்ரீதி
6-சுர நேத்ர அங்க விக்ரிதா
7-மம அநு ஸ்மரணம் நித்யம்
8-எச்சமாம் நோப ஜீவதி -ப்ரயோஜனாந்தரம் இல்லாமல் அஷ்டவித பக்தி இருந்தால் மிலேச்சராக இருந்தாலும்
தொழுமினீர் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்-ஆவோம் -கொடுமின் கொள்மின் நின்னோடும் ஓக்க அருளினீர்
இப்படிப்பட்ட பக்தர்களை தனக்கு ஆத்மாவாகக் கொள்கிறான்-

நவவித சம்பந்தம் உணர்ந்து -திருமந்திரத்தில் இந்த நவவித சம்பந்தமும் அறியலாம்-
1-ஸ்ரீ ரமா பதி பிதா-ஸர்வவித காரணத்வம்
2-படைத்து நிற்காமல் ரஷக-
3-அவனுக்கே அடிமை -சேஷி –
4-பர்த்தா-அநந்யார்ஹத்வம் -அவனுக்கே அடிமை
5-ஜேய அறியப்படுபவன் – நாம் அறிகிறோம்
6-அறிவு வந்தாலே நானே பகர்த்தா எண்ணம் வருமே ஸ்வாமி -சொத்து -அவன் அதீனம்
7-ஆதாரம் -ஆதேயம் -வீடு நிலம் போலே இல்லை -தங்குகிறான்
8-ரத்னம் போலே வைத்து -பிரிக்க இடம் உண்டோ என்னில் ஆத்மாச -பிரிக்க முடியாத –
9-போக்தா -பிரயோஜனமும் அவனுக்கே -படியாய் கிடந்தது பவள வாய் காண்போம்

பத்து குணங்களை ஆழ்வார் காட்டி அருளியதை அனுசந்தித்து நாமும் பக்தியை வளர்க்க வேண்டும்

1-பரத்வம்
2-காரணத்வம்
3-வியாபகத்வம்
4-நியந்த்ருத்வம்
5-காருணிகத்வம்
6-சரண்யத்வம்
7-சக்தித்வம்
8-சத்ய காமத்வம்
9-ஆபத் ஸகத்வம்
10-ஆர்த்தி ஹரத்வம்

——————

ஆத்ம சமர்ப்பணம் பல ஆழ்வார் அருளிச் செயல்களில் உண்டே –

வாக்கு தூய்மையில் படியே -அயோக்யதா அனுசந்தானம் பண்ணி இவர் அகலப் புக –
நாம் இருவரும்  ஏக தத்வம் என்னும்படி கலந்த பின் அது என் -என்று ஈஸ்வரன் சமாதானம் பண்ண –
சமாஹிதராய் -செய்த உபகாரத்துக்கு தோற்று -ஸ்தோத்ர ரூபத்தாலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறார் –

பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே
உன்னைக் கொண்டு என் நாவகம் பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 5-

உன்னில் இட்டேன் –
உன் திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம் பண்ணினேன் என்று ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறார்
நித்ய அஞ்சலி புடா ஹ்ர்ஷ்டா நம இத்யேவவாதி ந  -என்று
அனுபவ ஜனித ப்ரீதி தலை மண்டை இட்டால் பண்ணும் அது இறே

———–

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்

அந்த ராஜாக்களைப் போலே நாங்களும்–அநாதி காலம் பண்ணிப் போந்த–தேகாத்ம அபிமானத்தை விட்டு
தேகாத்பரனான ஆத்மாவின் பக்கல் ஸ்வா தந்த்ரியத்தையும் விட்டு–அநந்ய பிரயோஜனராய் வந்தோம் -என்றுமாம் –
ஈரரசு தவிர்ந்து -நீ தான் அரசன் ஒத்து கொண்டு வந்தோம்

1-தேகாத்ம அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
2-ஸ்வ ஸ்வா தந்த்ரிய அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
4-அந்ய சேஷத்வ நிவ்ருதியை உண்டாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே
5-ஜ்ஞாத்ருத்வ பிரயுக்தமான ஸ்வ ஸ்மிநிஸ்வ சேஷத்வ நிவ்ருத்தியை உண்டாக்கி -அதுக்கு இசைந்தவாறே
6-ஸ்வ ரஷண ஸ்வான்வயத்தை நிவர்த்திப்பித்து – அதுக்கு இசைந்தவாறே –
7-உபாயாந்தரங்களை விடுவித்து -அதுக்கு இசைந்தவாறே
8-தத் ஏக உபாயனாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே –
9-ஸ்வ வியாபாரத்தில் ஸ்வாதீன கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து -அதுக்கு இசைந்தவாறே
10-பாரதந்த்ரிய பிரதிபத்தியைப் பிறப்பித்து அதுக்கு இசைந்தவாறே
11-சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தன்னை அனுபவிப்பித்து –
12-அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யத்தை உண்டாக்கி
13-அக் கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை –
முழு நோக்கு பெறும் அளவானவாறே -என்றது-இவ்வளவான பாகம் பிறந்தவாறே -என்றபடி –
இப்படி அல்லது தேகாத்ம அபிமானத்துக்கு பரம பக்தி உண்டாக்கிலும் உண்டாகாது இறே

————–

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

பிராண நாதன் அவன் ஆனபின்பு
பிராணன்களைக் காக்க வேண்டிய கடமை
அவன் தலைப் பட்டதே அன்றி எனக்குப் பணியாமோ –

————

கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர்
செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–11-6-

கடைசியாக சரீரம் என்ற வஸ்து மீதம் இருந்தது அத்தையும் கொள்ளை கொண்டார் –
மெய் என்று ஆத்மாவையும் சொல்லக் கடவதாகையாலே
ஆத்மீயங்களை ஏற்கனவே கொள்ளை கொண்டவர்
இப்போது ஆத்மாவையும் கொள்ளை கொண்டார் என்னவுமாம்

————————–

காட்டி நான் செய் வல் வினைப் பயன்தனால் மனம் தனை
நாட்டி வைத்து நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டதன்றி என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே –திருச்சந்த விருத்தம்-99-

காட்டி நான் செய் வல் வினை–நான் செய்யும் பெரிய பாபங்களை எனக்கு நினைவு படுத்தி
பயன்தனால் மனம் தனை நாட்டி வைத்து-அந்த பாபங்களின் பயன்களை அனுபவிப்பதில் மனசை செலுத்தி
நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக-ஹிம்சைகளை செய்ய நினைத்து இருக்கிறார்கள் என்று
கேட்டதன்றி-நான் கேட்டு இருக்கிற படி யாமைக்காக
என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும் பூட்டி வைத்த வென்னை
என்னுடைய ஆத்மாவை உன் பக்கலில் சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இருக்கும் என்னை-
நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே-உன்னை விட்டுப் பிரித்திட வேண்டாம்-

—————————–

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -திருச்சந்த விருத்தம் -120-

தனக்கு அநந்ய சேஷமாய் -ஸ்ரீ கௌஸ்துபம் போலே -அபிமதமுமான என் ஆத்மாவானது –
அந்யோந்ய கார்ய காரண பவத்தாலே ஒழுக்கறாத -அவித்யா கர்ம வாசன ருசி ப்ரகர்தி
சம்பந்தங்களை யறுத்து –என்று காரணமான தேக சம்பந்தகளை சொல்லிற்றாய் –
தத் கார்யமான அஞ்ஞான கர்மங்கள் என்ன –
தத் ஆஸ்ரயமான வாசனா ருசிகள் என்ன -இவற்றையும் கூட்டி -எலாம் –அறுத்து என்கிறார்
யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத –நிரதிசய ஆனந்தமான கைங்கர்ய ரூப மோஷத்தைப் -பெற்றது

————

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்று –5-

பகவத் அதீயமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருந்தேன்
சோரேணாத்மாபஹாரிணா -என்கிறபடியே சர்வேஸ்வரனதான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன்
பகவச் சேஷத்வத்தளவிலும் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான ஆத்மவஸ்துவைக் கிடீர் நான் அபஹரித்தது
ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருக்கையும்
இதர விஷய பிரவணன் ஆகைக்கும் மேற்பட சதிர்க்கேடு இல்லை இறே
அவற்றை விட்டு பகவச் சேஷத் தளவிலும் நில்லாதே ஆழ்வார் அளவும் வருமவனாம் படியான சதிரை யுடையவன் ஆனேன்
ஆசார்யர்களை நம்பி என்கைக்கும் அவர்கள் அழைத்தால் அடியேன் என்கைக்கும் ஹேது ஸ்ரீ மதுர கவிகள் வாசனை யாய்த்து –
விலஷண த்ரவ்யம்
எண் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள் -என்றும் -நன்றாய் ஞானம் கடந்து -என்றும்
ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே நன் பொருள் என்கிறார்
நன்மையாவது -பஞ்ச பூதாத்மகம் வஸ்து -என்றும் -மேம்பொருள் –மேவிய பொருள் -என்றும்
சொல்லுகிறபடியே தேஹத்துக்கு வஸ்துதை உண்டே யாகிலும்-அது போலே
அநித்யமாய் அநவரத விகாராஸ் பதமாய் அத்யந்த ஹேயமாய் அஜ்ஞ்ஞானமாய் அஸூகமாய் அபோக்யமாய் இருக்கை அன்றிக்கே
நித்தியமாய் நிர்விகாரமாய் அத்யந்த விலஷணமாய் ஸ்வயம் பிரகாசமாய் ஸூகமாய்
ஸ்வபாவதோ போக்யமாய் இருக்கையாலே நன்பொருள் என்கிறார் –
ஆத்மாத்மீயங்கள் இரண்டும் ஆழ்வாராய்த்து –
அவர் தாமே யானே நீ என்னுடைமையும் நீயே என்று தத் விஷயத்திலே சமர்ப்பித்தால் போலே

————-

கனையார் கடலும் கரு விளையும் காயாவும்
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல கண்டோமே —11-7-7-

இனி அவனுக்கு இது சேஷம் -என்னும் இத்தை இசையும் இத்தனை

—————-

மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-

மாற்றமுள –
இவ்வாத்ம வஸ்துவானது கௌஸ்துபாதிகளோபாதி
நிர்தோஷமாய் உன்னாலே தரிக்கப் படுவது ஒன்றாய் இருக்க
இது அநாதி காலம் சம்சரிக்கும் படி விட்டு வைத்தாய் நீ
உன் பக்கல் நின்றும் அகற்றுகைக்கு பரிகரம் சப்தாதிகள் –
அத்தைப் பரிஹரிக்கும் நீ பூர்ணனாய் இருந்தாய் –
மமாயா துரத்தயா மாமேவ யே ப்ரபத்யந்தே –
நான் பிணைத்த பிணை ஒருவராலும் அவிழ்க்கப் போகாது
என்னையே கால் கட்டி அவிட்கும் அன்று கழிக்கலாம் என்றாய் இறே
பிள்ளை திரு நறையூர் அரையர் வார்த்தையை நினைப்பது-

———-

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே —11-8-9-

தய நீய தசையை ப்ராப்தனாய் இருக்கிற என் பக்கலிலே
கொள்வார் தேட்டமாய்
புறம்பு வழிந்து போம்படியான
உன்னருளைப் பண்ண வேணும் –

—————

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே —11-8-10-

ஒன்பது பாட்டிலும் இவருக்கு ஓடின வ்யசனமும்
வாசனையோடு கழியும் படி
அஹம் -என்று
ரஷகனான தன்னைக் காட்டினான் –

————-

அவன் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி,அனுசயிக்கிறார் –
தகழிவிரக்கம் கொள்ளுகிறார்

எனது ஆவியுள் புகுந்த பெரு நல் உதவிக் கைம்மாறு
என தாவி தந்தொழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே?
என தாவி ஆவியும் நீ, பொழில் ஏழும் உண்ட எந்தாய்!
எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே–-ஸ்ரீ திருவாய் மொழி-2-3-4-

———-

யானே என்னை அறிய கிலாதே,
யானே என் தனதே என்று இருந்தேன்;
யானே நீ:என்னுடைமையும் நீயே;
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே!–2-9-9-

———-

இத்தலையை உனக்கு ஆக்கி அத்தாலே கிருதக்கிருத்தியன் ஆனாயே!’ என்கிறார்.

ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே–4-3-3-

—————————-

பூதநாதிகளுடைய நிரசன சமயத்தில் ஸ்ரமம் தீர சிசிர உபசாரங்களைச் செய்யப் பெற்றிலேனே யாகிலும்,
சிசிர- குளிர்ந்த உபசாரத்தால் அல்லது செல்லாத உன்னுடைய ஸூகுமாரமான -மிருதுத் தன்மையை யுடைய
திரு மேனிக்குச் சாத்தும் மாலை என் சத்தையேயாய் -உயிரேயாய்-விடுவதே!’ என்கிறார்

மாய்த்தல் எண்ணி ‘வாய் முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத் தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத் தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே–4-3-4-

—————————

ஆத்மாத்மீயங்கள் அடைய — ஆத்மாவும் ஆத்மாவோடு சம்பந்தப் பட்ட பொருள்களும் ஆகிய அனைத்தும்
உன் அதீனமான பின்பு என்னால் செய்யலாவது ஒன்றும் இல்லை
நீயே ரக்ஷிக்க வேண்டும் -என்கிறார்

மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல் வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வங்கியர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-

———————

சர்வ சக்தி யோகத்தாலே நித்யமாக கல்பிதமான –
போக்ய – போக உபகரண -போக ஸ்தானங்களை உடையவன் ஆகையாலே –
சத்ய காமனான சர்வேஸ்வரன் -கீழ்
தமக்கு உண்டான வாசிகமான அடிமையையும் விஸ்வமரித்து -தன் அனுபவ அலாபத்தாலே
கலங்கி -தன்னுடைய குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ணி –
சம்சார தோஷ அனுசந் தானத்தாலே -அஞ்சின இவரைத் தரிப்பிக்கைக்காக –
பூர்வோக்த உபகாரத்தை ஸ்மரிப்பிக்க –
அத்தாலே க்ருதஜ்ஞராய் -அதுக்கு பலமாக –
இவர் ஆத்ம சமர்ப்பணம் பண்ண –
(பேர் உதவிக் கைம்மாறா தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை அற விலை செய்தனன் சோதீ – 8-1-10)
அத்தாலே தான் பெறாப் பேறு பெற்றானாய்-
இவருக்கு உண்டான ஆத்ம குணங்களாலே அதி ப்ரீதனாய் –
இவர் திரு உள்ளத்திலே இருந்து நிரதிசயமாக அனுபவிப்பித்து –( 8-6-8-7-)இனி
அயோக்யர் என்று அகலாதபடி ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தைப் பிரகாசிப்பிக்க –(8-8)
அதனுடைய யாதாத்ம்யத்தை அனுசந்தித்தவர்
கீழ் தம்முடைய பிராப்ய பிராபகங்களை கேட்டு உகந்தவர்கள் –
பிராப்யம் ஒன்றும் -பிராபகம் ஒன்றுமாய் -இரு கரையர் ஆகாதபடி –
பிராப்யமாக சொன்ன விஷயம் ஒன்றிலுமே அவர்களை தத் பரர் ஆக்குகிறார் என்கிறார் ..

வேந்தர் தலைவன் கன்யகா தானம் போலே ஆரத் தழுவி அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே-
அதாவது
உதவிக் கைம்மாறு என் ஆர் உயிர் என்ன -உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -7-9-10–என்று
கீழ் பிரதுபகாரமாக ஆத்மாவை சமர்ப்பிக்கத் தேடி அதின் பகவதீயத் அனுசந்தானத்தாலே
நிவ்ருத்தர் ஆனபடியும் அறியாதபடி -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தால் கலங்கி –

இயம் சீதா மம ஸூதா சஹ தர்ம சரீதவ -பிரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம்
க்ருஹ்னீஷ்வ பாணிநா-பால–73-26 -என்று சமர்ப்பித்தாப் போலே-( மமகாரம் விட்டவன் மமகாரம் )
பேர் உதவிக் கைம்மாறத் தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10–என்று
அமூர்தமாய் இருக்க செய்தே -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தாலே –

(உப பத்தேச ச பொருந்துகிறபடியால் ப்ராபகமான ப்ரஹ்மமே ப்ராப்யம் -வேத வியாசர் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
இங்கு பிராப்யமான அர்ச்சா திவ்ய தேசமே பிராபகம் –
பாகவதர்களே ப்ராபகம்–அவதியையும் தாண்டி ஒன்றாக -திவ்ய தேசமே இருக்குமானால்
பாகவதர்கள் இருக்கச் சொல்ல வேணுமோ – கிம் புன நியாயம் )

——————

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழா யானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான் —ஸ்ரீ முதல் திருவந்தாதி—-73-

இத்தால் இவை எல்லாம் அவனுக்கு கார்யதயா சேஷம்-அவன் சேஷி -என்கிறது-
தரித்தான் -என்றுமாம் –
இவை யாகில் தான் என்ற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாய் அந்வயிக்கும் படி சர்வ பிரகாரியாய் இருப்பான் ஒருத்தன் –
ஆதாரத்தைப் பற்றிலும் பற்று -ஆதேயத்தைப் பற்றிலும் பற்று-ரஷகத்வத்தைப் பற்றிலும் அவனையே பற்ற வேணும் –

————

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

கன்றையும் விளாவாயும் வந்த அஸூ ரர்கள் ஒன்றைக் கொண்டு ஒன்றை முடித்தவனே –
நம்முடைய விரோதி போக்கின படிக்கு திருஷ்டாந்தம் –
அவனுடைய மால் இவருடைய மாலுக்கு அடி –அன்பை அகம் சுரிப்படுத்த ஒண்கிறது இல்லை –
எனக்கு உன் பக்கல் ப்ரேமம் என்னளவு அன்று -இத்தை அமைத்து அருள வேணும்-
தன்னைக் காட்டினான் -அன்பைக் கொண்டு நமக்குக் கிஞ்சித்கரியும் என்ன –
அன்பே தகளி என்று கீழோடு கூட்டி பேசி தரிக்கப் பார்க்கிறார்
அன்றிக்கே –
ப்ரேமம் அளவிறந்தார் சாஷாத் கரிக்கும் இத்தனை இறே –
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று சாஷாத் கரிக்கிறார் –

————-

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று —ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி —59-

பகவத் விஷயத்திலே இவனுடைய இச்சையும் அநிச்சையும் இறே உஜ்ஜீவனத்துக்கும் விநாசத்துக்கும் ஹேது-
எங்கள் பெருமான் –ஒரு மிதுனம் இவருக்கு போக்கியம்-அஸ்மத் ஸ்வாமியாய் உள்ளான் –
போக்ய பூதனாய் மேன்மையை உடையனாய் வகுத்தவனுடைய திருவடிகளைப் பெற்று
ஸ்வரூப அனுரூபமாக வாழும் பிரகாரத்தை அறிந்தேன் –

———–

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

ஆபத்து உள்ள போதும் அல்லாத போதும் என்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் –
நமக்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும் அவனுக்கும் பிராட்டிக்கும்
ரஷணத்துக்கு பரிகரமான திரு ஆழியைக் கையிலே யுடையவன்-
சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான திருத்துழாய் மாலையை யுடைத்தாய் மலை போலே இருக்கிற திரு மார்வை யுடையவன்-
அவளை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் தான் –அவளை -அகலகில்லேன் -என்னும் –
ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்கா நின்ற உதாரமான தாமரை போலே இருக்கிற
ஒழுகு நீண்ட கண்ணை யுடைய நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் –
நமக்கு எல்லாக் காலத்துக்கும் அபாஸ்ரயம் –

————

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—நான்முகன் திருவந்தாதி -30-

கோயிலிலே வந்து ஸூ லபனானவன் என்னை அடிமை கொண்டான் –
இனி சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் –
அவன் என் ஹிருதயத்திலே நின்றான் இருந்தான் .
திருப்பாற் கடலிலே திரு அரவணை மேலில் கண் வளர்ந்து அருளுமோ –

——-

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

விஷயாந்தரங்களில் புகுந்து விகாரப்படும் நெஞ்சுடையேன் அல்லேன்
ஞானத்தில் பரம சிவனொடு ஒத்து இருப்பான் -என்னலாமாயினும்
ஈஸ்வரோஹம் என்னும் -அந்த ருத்ரன் நித்ய தாசனான -என்னோடு ஒவ்வான்
ஒலிக்கும் வீரக் கழலை அணிந்துள்ள ராஜாதி ராஜனான கண்ணபிரானையே
எந்நாளும் தொழும் படியாக ஆசைப்படுவதையே நித்ய கர்மயமாக ஏற்றுக் கொண்டு இருக்கிற அடியேன் –

————–

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

ஆட்பட்டு இருப்பது அனைவருக்கும் இயற்க்கை அன்றோ -அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்
அபிமான துங்கன் செல்வனைப் போலே நானும் உனக்கு பழ வடியேன் –
மாணிக்கத்தின் ஒளி அழுக்கினால் மழுங்கி இருந்து ஒரு நாள் அளவில் அழுக்கு நீங்கி
விளங்கினாலும் அவ்வொளி இயற்க்கை என்னத் தட்டில்லை —
இடையில் அடிமையை இழந்தால் -வயிறு எரிந்து -பொழுதே பல காலும் போயின என்று அஞ்சி அழுதேன் -என்றும்
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன நாள்கள் –என்றும் அன்று நான் பிறந்திலேன் -என்பர்
நிற்கும் இருந்தும் –எல்லா நிலைகளிலும் என்றபடி —நிற்கும் போதும் இருக்கும் போதும் நடக்கும் போதும் படுக்கும் போதும்
நாராயணா என்றால் உங்கள் தலையில் இடி விழுமோ -என்றானே ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் –

——————

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

எல்லாவற்றுக்கும் மேல் பட்டுள்ளதாய் -அடியார் குழாங்களுக்குத் தகுதியான இடமுடைத்தான
திரு நாட்டை கண்டு அனுபவிக்கலாம் படி இப்போது –
திரு நாட்டில் சேருவதற்கு பாங்காக-பரம பக்தி நிரம்பப் பெற்றேன்-
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்றால் போலே –
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் என்றுமாம் –

————

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99-

அப்ரதிஷேதத்துக்கு வேண்டுவதே இவன் பக்கலில் வேண்டுவது –பேற்றுக்கு அடியான ஜ்ஞானம்
அவன் பக்கலிலே உண்டு என்கிறார்
மதுரகவி பிரக்ருதிகள் அந்தரங்கர் கேட்க ஆழ்வார் அருளுகிறார் -தம்முடைய பரம சித்தாந்தத்தை
வெளி இடுகிறார் பரம ஔ தார்யத்தால் -இதில் –

——–

நளிர் மதி சடையனும் நான் முக கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்
அகப் படக் கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–7-

பகவத் ப்ராவண்யம் க்ரமத்தில் பிறக்கவுமாம் –
இவனுக்கு முந்துற வேண்டுவது தேவதாந்த்ர ஸ்பர்சம் அறுகை இறே –
இது உண்டானால் யோக்யதை கிடைக்கும் இறே
ஆகவே-ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்-

———-

கால ஷேப அர்த்தமாக-பகவத் குணாநுபவம் பண்ணியே ஆக வேண்டும் என்கிறார் –

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார்களந்த வல்வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

திருக் குணங்கள் நிரம்பிய ஸ்ரீ ஸூ க்திகளை-
ஸ்ரீ ராமாயணம்
மகா பாரதம்
ஸ்ரீ மத் பாகவதம்
ஸ்ருதிகள்
ஸ்ம்ருதிகள்
அருளிச் செயல்கள்
அனுசந்தித்து
கொடிய பாபங்களினால் யுண்டாகும்-மிக்க துன்பங்களை போக்கிக் கொள்ளார்கள் ஆகில்-ஒழியட்டும்
வேறு எதை அனுசந்தித்து இந்தப் போதை-போக்குவார்கள்

————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading