ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –96–வளரும் பிணி கொண்ட வல்வினையால்- இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

மறை நாலும் வளர்த்தனன் -என்றீர்
அவர் சேதனருக்கு உஜ்ஜீவன உபாயமாக வேதாந்த பிரக்ரியையாலே அருளிச் செய்தது பக்தி பிரபத்தி ரூப உபாய த்வயம் இறே-
அதில் ஸூகர உபாயமான பிரபத்தியிலேயோ உமக்கு நிஷ்டை -என்ன –
அதுவும் அன்று –தாம் அபிமத நிஷ்டர் என்னும் அத்தை அருளிச் செய்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டுக்கும் பொதுவாய் தண்டதரனான சர்வ ஸ்மாத் பரனிலும்-
அஞ்ஞான நிக்ரஹராய் – பரம பதத்தில் நின்றும் ரஷண ஏக தீஷிதராய் வந்து –அவதரித்த ஸ்ரீ எம்பெருமானார் –
நிர்ஹேதுக கிருபையை உடையவர் ஆகையாலே -சேதன சம்ரஷணார்த்தமாக வேத வேதாந்த பிரவர்த்தனம் பண்ணி அருளினார்
என்று இவர் அருளிச் செய்ய கேட்டு -அருகில் இருப்பார்
அந்த வேதாந்தந்களிலே-முமுஷூர்வை சரணமஹம் பிரபத்யே -என்று மோஷ அதிகாரிகளுக்கு சொன்ன
சரணாகதியில் நிஷ்டராய் இருந்தீரோ என்ன –
சரணா கதி பெருகைக்கு பிரதி பந்தங்களான பிரபல கர்மங்களாலே –அது தன்னிலும் -மகா விசுவாசம் கிடையாதே –
துர்கந்த பிரசுரமாய் -மாம்ஸா ஸ்ர்காதி மயமான சரீரம் கட்டுக் குலைந்து போம் அளவும் சுக துக்க அனுபவம் பண்ணிக் கொண்டு
சகாயம் இன்றிக்கே இருக்கும் எனக்கு
அந்த சரமோ உபாயமான ஸ்ரீ எம்பெருமானாரிலும் -சுலபமாய் -சேஷிகளாய் -எனக்கு ஸ்வாமியான அவர் தம்மையே
தந்தை நல் தாயம் தாரம் -இத்யாதிப்படியே சர்வ வித பந்துவாய் அத்யவசித்து –
தேவு மற்று அறியேன் -என்று இருக்கும் மகாத்மாக்களே வழித் துணையாய் -ரஷகராய் -இருப்பார் என்று அத்யவசித்தேன் –
ஆகையால் -நான் ததீய அபிமான நிஷ்டன்-என்று அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

மறை நாலும் வளர்த்தனன் என்றீர்
அவர் வேதாந்தத்தில் கூறிய முறையைப் பின் பற்றி உயிர் இனங்கள்
உய்வதற்கு உபாயங்களாக பக்தியையும் -பிரபத்தியையும் அன்றோ அருளிச் செய்தார் –
அவற்றில் எளிய உபாயமான பிரபத்தியையோ நீர் கைக் கொண்டது -என்ன
நான் பிரபத்தி நிஷ்டன் அல்லேன்
ஸ்ரீ எம்பெருமானாரைச் சேர்ந்தவர்களுடைய அபிமானத்திலே நிஷ்டை உடையேன் நான் என்கிறார் .

வளரும் பிணி கொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை யூன்
தளருமளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளரெம் மிறைவன் இராமானுசன் தன்னை வுற்றவரே – – 96- – –

பத உரை
வளரும் -முடிவின்றி மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வரும்
பிணி கொண்ட -துக்கத்தை உண்டு பண்ணுவதான
வல்வினையால் -வலிமை வாய்ந்த கர்மத்தினாலே
மிக்க நல் வினையில் -மிகுந்த -பரமமான -தர்மம் ஆகிற சரணா கதியில்
கிளரும் துணிவு -கிளர்ந்து எழுகின்ற நம்பிக்கை -மகா விசுவாசம்
கிடைத்தறியாது -நேரே அனுபவித்தில் பெற்று தெரிந்து கொள்ளாதது
முடை -கெட்ட நாற்றத்திற்கு
தலை -இடமான
ஊன் -மாம்ச பிண்டமான சரீரம்
தளரும் அளவும் -தளர்ந்து கட்டுக் குலைந்து போகும் வரையிலும்
தரித்தும் -பெரியோர் கொடுத்த பகுத்தறிவு என்னும் கோல் கொண்டு வழுக்கி விழாது தரித்து நின்றும்
விழுந்தும் -பண்டைய பழக்கத்தாலே கோலின்றி -சப்தாதி விஷயங்களிலே -விழுந்தும்
தனி திரிவேற்கு -துணை இன்றி தனியாக திரிகின்ற எனக்கு
எம் இறைவன் -எமக்குத் தலைவரான
இராமானுசன் தன்னை -ஸ்ரீ எம்பெருமானாரை
உற்றவர் -பற்றி இருப்பவர்கள்
உளர் -துணையாக உள்ளார்கள் .

வியாக்யானம் .
நிரவதிக துக்க அவஹமாய் -அநுபவ விநாச்யமாதல்-பிராயஸ் சித்த விநாச்யமாதல் செய்யாத பிரபல கர்மத்தாலே
பரம தர்மமான சரணாகதியில் மகா விசுவாசம் என்பது ஓன்று நேராக கிடையாததாய் –
துர்க் கந்த ஆஸ்ரய பூதமாய் -மாம் சாஸ்ருகாதி ரூபமான சரீரம் –
தளரா உடலம் -ஸ்ரீ திருவாய் மொழி -5 8-8 – – என்கிறபடியே –
பிராண வியோக தசாபன்னமாய் -கட்டுக் குலையும் அளவும்
வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம் -ஸ்ரீ திரு விருத்தம் – 100- என்றும்
பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி -ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி – -5 2-7 – என்றும்
கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி 4-6 6- – -என்றும் சொல்லுகிறபடியே –
அள்ளலும் வழுக்கலுமான -சம்சார விபூதியிலே -தார்மிகர் உபகரித்த த்யாஜ்ய உபாதேயம் ஆகிற ஊற்றம்கோல் கொண்டு தரித்தும் –
துர் வாசனா மூலமான அநவதாநத்தாலே –
கொடு வன் குழி -ஸ்ரீ திருவாய்மொழி -7 1-9 – யான
சப்தாதி களிலே விழுந்தும் -உறு-ஒரு -துணை இன்றிக்கே திரியா நிற்கும் எனக்கு –
என் தனிமை தீர எனக்கு துணையாய் ஒறு குழியிலே விழாதபடி தாங்களே பிடித்து நடத்தி -உஜ்ஜீவிப்பிக்கைக்கு
நமக்கு சேஷியான எம்பெருமானாரைத்
தேவு மற்று அறியேன் -ஸ்ரீ கண்ணி நுண் -2 -என்று பற்றி இருப்பார் உளர் .
அவர்கள் அபிமானமே எனக்கு உத்தாரகம் -என்று கருத்து .

எம்மிறைவர் இராமானுசன் தன்னை உற்றவர் -என்று பாடமான போது
எம்பெருமானாரை யல்லது அறியோம் என்று பற்றி இருப்பாராய்- நமக்கு சேஷிகள் ஆனவர்கள் என்று யோஜிப்பது .
பிணி -துக்கம்
நல்வினை– ஸூ க்ருதம்
கிளரும் துணிவு– மிக்க துணிவு
கிளர்த்தி -மிகுதி
முடை -துர் கந்தம்
மிக்க நல்வினையின் கிளரும் துணிவு -என்றும் பாடம் சொல்லுவர்
அப்போது பரம தர்மமான சரணா கதிக்கு அபேஷிதமான மகா விசுவாசம் -என்கை-

பக்தி -சாஸ்திரம் ஸ்ரீ பாஷ்யம் -ஸ்ரீ கீதா பாஷ்யம் – பிரபத்தி -கத்ய த்ரயம் -ஸ்ரீ அமுதனார் –
அளியல் நம் பையன் என்று ஸ்ரீ எம்பெருமானார் சிஷ்யர் அபிமானத்தில் ஒதுங்கி –
பிணி -சம்சாரம் ஆகிய நோய் -துக்கம் -கர்மம் -வளரும் பிணி -கார்ய ஆகு பெயர் மிக்க -வல் வினை –
தான் என் துணிவை கெடுத்தது -மிக்க நல் வினையிலும் -பர கத – சுவீகாரத்திலும் துணிவு போக்கிற்றே –
சம்சார சூழலில் இருந்தும் –சங்கம் -பற்று ஆசை புத்தி பேதலித்து -பயன் அறியாமல் ஸ்வரூப நாசம் –
சங்கம் பற்றுதல் -ஆசை உருவாக்கி -க்ரோதம் நிறைவேறாமல் -விவேக ஞானம் தொலைந்து சம்மோஹம் –
ஸ்ம்ருதி பிரம்சாத் புத்தி நாஸாத் -அழியும் வழி படிக்கட்டுக்கள் -வல்வினை -பிணி –காரியம் காரணம் -மிக்க நல்வினை -பிரபத்தி
வினை -கர்ம யோகமும் ஞான யோகமும்
நல் வினை -பக்தி யோகம்-சரணாகதி -மோக்ஷம் நிச்சயம் -சர்வேஸ்வரன் ரக்ஷகன் -இரண்டு மகா விசுவாசமும் வேண்டுமே –
இழையாது உன தாள் பிடிக்க பிரார்த்திப்பது இந்த விசுவாசம் குலையாமல் இருக்கவே ஸ்ரீ ஆழ்வார்கள் பிரார்த்தனை –
அந்திம ஸ்ம்ருதி வேண்டாமே பிரபன்னனுக்கு
முடை -நாற்றம் – ஊன்-மாம்சம் –சரீரம் – சேற்றில் உழன்று இருக்க-சம்சாரம் பாதை -சப்தாதி விஷயங்கள் குழி -என்றவாறு –
ஊன்று கோல் த்யாஜ்ய உபாதேய ஞானம் — -த்ரி தண்டம் கொண்டு இங்கு வந்து உத்தாரணம் செய்து அருள -திருவடி பற்றி உய்ந்தேன் –
மஹாத்மாக்களே துணை ரக்ஷகம்-ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -சாஸ்திர விரோதம் ஆகாதோ உபாயாந்தரமா இது –
ஸ்ரீ சர்வேஸ்வரனை தவிர்ந்து -கீழ் சொன்ன சரணாகதியில் அடங்கும் -திருவடி ஸ்தானீயர் என்றபடி –
வாய்க்கு வந்தபடி நாம் பேச -நம் பூர்வாச்சார்யர்கள் வந்த படி பேச வைப்பவனும் அவனே தானே –
ஆனுகூல சங்கல்பயாதிகள் அதிகாரி விசேஷணங்கள் -தானாக அமைய வேண்டும் –போஜனத்துக்கு சுத்து போலே –
பர கத சுவீகாரம் -மகா விசுவாசம் இல்லா விட்டாலும் -ஸ்ரீ ஆச்சார்யர் -நீ என்னை விட்டாலும் நான் விட்டேன் என்று கைக் கொள்ளுவார்கள்
ஸ்ரீ ஆழ்வான் திருவடி அடைந்து பிரபந்தம் தொடங்கிய ஸ்ரீ அமுதனார் இதில் மீண்டும் சொல்லி தலைக் கட்டுகிறார் -7-பாசுரம் -போலே இதிலும் –
தரிப்பது -சிரமம் பட்ட பின்பு தானே -விழுவது எப்பொழுதும் -தரிப்பது சில தடவை தானே –
அதனால் அல்பம் துக்க சாந்தி ஏற்படுத்த ஆசுவாசத்தை சொன்ன படி –

வளரும் பிணி கொண்ட வல் வினையால் –
அதத்தோ ஷேன பவேத்தரித்த்ரீ தரித்திர தோஷன கரோதிபாபம் –
பாபாதாவச்யம் நரகம் வ்ரஜந்தி புநர் தரித்திர புனரேவ பாபி -என்றும்
த்யாயதோ விஷயான் பும்சஸ் சங்கஸ் தேஷ பஜாயதே -சங்காத் சஞ்சாயா தேகாமா -காமாத் க்ரோதாபி ஜாயதே -க்ரோதாத் பவதி
சம்மோஹா -சம்மோஹாத் ஸ்மரதி விப்ரம -ஸ்மரதி ப்ரம்சாத் புத்தி நாச – புத்தி நாசாத் ப்ரணச்யதி -என்றும் சொல்லுகிறபடி –
மேன் மேலும் -பெருகி வருகிற -பிணி உண்டு வியாதி -தன் மூல துக்கம் -என்றபடி –
கொண்ட வல்வினையால் –
அந்த துக்கத்தையே சர்வ காலத்திலும் விளைக்க கடவதாய் –
அனுபவ ப்ராயசித்தங்களாலே நசியாதபடி -அதி பிரபலமான துஷ் கர்மத்தாலே –

வளரும் பிணி கொண்ட வல் வினையால்
பிணி -நோய் -இங்கு கார்ய ஆகுபெயரால் துக்கத்தை சொல்கிறது
புன புநரகம் யதிராஜ குர்வே-ஸ்ரீ யதிராஜ விம்சதி -என்றபடி -பாபம் செய்தால் பயமோ -அனுதாபமோ – வெட்கமோ ஏற்படாமையின் –
மீண்டும் மீண்டும் வினைகளைச் செய்த வண்ணமாய் இருத்தலின் -அதனால் விளையும் பிணியும் ஓய்வின்றி மேலும் மேலும் வளருவதாயிற்று –
பிணி கொண்ட வல்வினை –
பிணியை உண்டு பண்ணும் வல்வினை -என்றதாயிற்று –
வினைக்கு வலிமை அனுபவித்தோ பரிகரித்தோ போக்க ஒண்ணாமை –
பிரபத்தியில் மகா விசுவாசம் உண்டாகாமைக்கு இவ் வல் வினையே ஹேது என்க –

மிக்க நல் வினையில் கிளரும்-துணிவு கிடைத்தறியாது –
தாஸ்மான் நியாச மேஷாம் தபஸா திரிக்தமா ஹூ என்றும் –
சத் கர்ம நிரதாஸ் ஸூத்தாஸ் சாக்ய யோக விதச்த தா -நார்ஹந்தி சரணஸ் த்தச்யகலாம் கோடீ தமீ மபி –என்றும் சொல்லுகிறபடியே –
சர்வ உபாய உத்க்ரிஷ்டமாய் -உபாயாந்தாரங்களைப் போலே ஸ்வரூப விருத்தமாய் இருக்கை அன்றிக்கே –
ஸ்வரூப அனுரூபமாய் இருக்கை யாகிற நன்மையையும் உடைத்தான அஞ்சலி ரூப கிரியை யாலே –
மகா விசுவாச பூர்வகம் -தகேகோபாயதா யாச்னா -என்றும் –
விச்வாச பிரார்த்தனா பூர்வம் ஆத்மா ரஷாபரம் -என்றும் சொல்லுகிறபடி –
பரபக்தி பர ஞான பரம பக்தி பர்யந்தமாக பெருகி வருகிற ப்ராப்ய த்வரைக்கு உறுப்பான மகா விசுவாசம் என்பது ஒன்றும்
நேராக லபியாதபடி ஞான விதுரனாய் இருந்து வைத்து –
நல் வினை -ஸூக்ருதம் -அதாவது பிரபத்தி-
கிளரும் துணிவு -மிக்க துணிவு -கிளர்த்தி -மிகுதி —

மிக்க நல் வினையின் கிளரும் துணிவு –என்ற பாடமான போது –
பரம தர்மமான சரணா கதிக்கு -அபேஷிதமான மகா விசுவாசம் -என்கை –

மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத்தறியாது .
மிக்க நல்வினை –பிரபத்தி
வினை -கர்ம யோகமும் ஞான யோகமும்
நல் வினை -பக்தி யோகம்
சத்கர்ம நிரதாஸ் சுத்தா சான்க்க்ய யோக விதச்ததா நார்ஹந்தி சரணா சத்தச்ய கலாம் கோடி தமீமபி-என்று
நல்ல கர்ம யோகத்தில் மிக்க பற்று உடையவர்களும் –
அப்படியே சுத்தர்களான ஞான யோகம் கைப் புகுந்தவர்களும் .
பிரபத்தி நிஷ்டையில் உள்ளவனுடைய கோடியில் ஒரு அம்சத்துக்கும் தகுதி உடையவர்கள் ஆக மாட்டார்கள்
என்று பிரபத்தி -ஏனைய உபாயங்களை விட மிகவும் உயர்ந்ததாக கூறப்பட்டு இருத்தல் -காண்க –

மகா விசுவாசத்தை முன்னிட்டு நீயே எனக்கு உபாயமாக இருந்து காத்தருள வேணும் -என்னும் பிரார்த்தனையே –
பிரபத்தி யாதலின் அதனுக்கு -கிளரும் துணிவு –மகா விசுவாசம் -இன்றியமையாதது ஆயிற்று –
அது எனக்கு இல்லையே -பிரபத்தி நிஷ்டை எங்கனம் எனக்கு கை கூடும் என்கிறார் .
கிடைத்தறியாது –
மகா விசுவாசம் ப்ரபத்திக்கு தேவை என்பது கேட்டு அறிந்த விஷயமே யன்றி –
நேரே எனது அனுபவத்திற்கு கிடைத்தறிய வில்லை -என்கிறார் .

மிக்க நல்வினையின் கிளரும் துணிவு -என்றும் ஓதுவர்-
அப்பொழுது ப்ரபத்திக்கு தேவைப்படும் மகா விசுவாசம் -என்று பொருள் கொள்க –

முடைத்தலை ஊன் தளரும் அளவும் –
அமேத்யுபூர்ணம் கிர்மிஜந்துசம்குலம் ஸ்வபாவ துர்கந்தம் அசவ்சமத்ருவம் களேபரம் மூத்ரபுரீஷா பாஜனம் -என்கிறபடியே
ஸ்வபாவ துர்கந்த ஸ்த்தானமாய்-மாம்சாஸ்ர்க்பூய வின்மூத்ரா ச்நாயுமஞ்சாச்திதம் ஹதரூபான சரீரம் தளர்ந்து போம் அளவும் –
முடை-துர்கந்தம் –
முடை என்றும் ஊன் என்றும் -மாம்சமாய் -தத் பிரசுரமான சரீரத்தை சொன்னபடி –
ஊன உடல் சிறை -என்ன கடவது இறே –

தரித்தும் விழுந்தும் –
இப்படியான தசையிலே
சம்சார விஷ வ்ர்ஷஸ் யத்வே பலே ஹ்யம்ர் தோபமே -கதாசித்கே சவே பக்திஸ் தத்பக்தைர் வாசமாகம -என்றும் –
கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே -என்றும் –
மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலம் -என்றும்-சொல்லுகிறபடியே
அள்ளலும் வழு க்களுமான சம்சார விபூதியிலே யாதார்சிகமாக சஞ்சரித்து கொண்டு போருகிற சில
தார்மிகர் சம்சார கர்த்தத்திலே அழுந்திக் கிடந்த நான் உத்தரிக்கும் படி உபகரித்தும் –
த்யாஜ்ய உபாதேய விவேகம் ஆகிற ஊன்று கோலை உத்தம்கம்பமாக பிடித்துக் கொண்டு –
அத்தாலே அல்ப துக்க சாந்தி பிறந்து ஆஸ்வசித்தும் -பின்னையும் –
துர்வாசன மூலமான அனவதானத்தாலே கொடு வன் குழியான சப்தாதி விஷயங்களில் விழுந்தும் –

தனி திரிவேற்கு –
ஜீர்ணா தரிஸ் சரித தீவ பீர நீரா பாலாவயம் சகலமித்த ம நர்த்த ஹேது – என்றும் –
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் -என்றும் –
ந தர்ம நிஷ்டோச்மி -என்றும் -பவ துர்த்தி நேபதஸ் நலிதம் –என்றும் சொல்லுகிற படி-
சேதன ரூபமாய் யாதல் -அசேதன ரூபமாய் ஆதல் -ஒரு சஹாயாந்தரம் இன்றிக்கே இருக்கும் நமக்கு-

முடைத்தலை ஊன் —-தனிதிரிவேற்கு
முடைத்தலை ஊன் -வேண்டா நாற்றமிகு உடல் -என்றார் ஸ்ரீ ஐயங்காரும் ஸ்ரீ திருவரங்கக் கலம்பகத்திலே
ஊன் –மாம்சத்தை சொன்னது -ரத்தம் தசை எலும்பு முதலிய அருவருக்கும் பொருள்களை உடைமைக்கும் உப லஷணம்
ஊன் -சரீரத்திற்கு ஆகு பெயர் .
தளருமளவும் -தளர்தல் -கட்டுக் குலைத்தல்
தளரா உடலம் எனதாவி சரிந்து போம் போது –ஸ்ரீ திருவாய் மொழி – 5-8 8- – என்றபடி
ஆவி பிரியும் நிலையில் உடலம் கட்டுக் குலைக்கிற அளவும் -என்றபடி –

தரித்து விழுந்தும் தனி திரிவேற்கு –
இந்த சம்சாரம் -வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம் -ஸ்ரீ திரு விருத்தம் – 100- என்று சருக்கி விழும் சகதியாகவும் –
கொங்கை சிறுவரை என்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி — 5-2 7- என்றும்
கூடி யழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -4 6-6 – – என்றும் வழுக்கி விழும் குழியாகவும்
சொல்லப் படுதலின் – அதிலே திரிபவனுக்கு சில நல்லவர்கள் கொடுத்த விவேக ஞானம் ஊன்று கோலாய் –
விழாமல் தரித்து நிற்பதற்கு உதவும் —

சில வேளைகளில் அவனுக்கே -பண்டைய கெட்ட வாசனை -தலை தூக்கி
நல்லவர்கள் கொடுத்த ஊன்று கோலை இழந்து -அள்ளலும் வழுக்கலுமான -இந்த சம்சாரத்திலே
குலமுதலிடும் தீவினைக் கொடுவன் குழி -ஸ்ரீ திருவாய் மொழி – 7-1 9- – என்றபடி
சப்தாதி விஷயங்கள் ஆகிற குழிகளிலே விழுந்து அழுந்தும் படியான நிலை ஏற்படும் .
இங்கனம் தரித்தும் -விழுந்தும் துணை இன்றி -தனியே திரிகின்றவனான எனக்கு
விழாமல் காப்பதற்கு துணையாக இராமானுசன் தன்னை உற்றவர்கள் உள்ளார்கள் -என்கிறார் –

இராமானுசன் தன்னை உற்றவர் –
ஸ்ரீ ராமானுஜச்ய சரணவ் சரணம் பிரபத்யே -ராமாநுஜார்ய வசக பரிவர்த்தி ஷீய –நசேத் ராமானுஜேத் ஏஷா – இத்யாதிப்படியே
ஸ்ரீ எம்பெருமானாரை அத்யவசித்து இருப்பார் –

எம் இறைவர் —உளர் —
நம்முடைய தனிமை தீர நமக்குத் துணையாய் -சம்சாரம் ஆகிற-படு குழியில் விழாதபடி –
தாங்களாயே பிடித்து நடத்தி உத்தரிப்பிகும் அஸ்மத் ஸ்வாமிகள் ஆனவர்கள் –

எம் இறைவர் -என்றது -ஸ்ரீ கூரத் ஆழ்வானை-
வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் –என்று கீழேயும் அருளிச் செய்தார் இறே –
அன்றிக்கே –
எம் இறைவர் –இராமானுசன் -என்று
ஸ்ரீ எம்பெருமானாருக்கு விசேஷணம் ஆக்கவுமாம் –

எம் இறைவன் இராமானுசன் -தன்னை உற்றவரே –என்ற பாடமான போது
ஸ்ரீ எம்பெருமானாரை அல்லது அறியோம் என்று அற்று இருப்பவர்கள் நமக்கு சேஷிகள் என்று யோஜிப்பது –

கர்மேதி கேசித்த பரே மதி மித்ய தான்யே பக்திம்பரே பிரபத நம் ப்ரவதந்த்யுபாயம் -ஆம் நாயா சார ரஹீகாஸ்-
த்வமிதா நுபாவ ஸ்த்வாமேவ யாந்தி சரணம் சட ஜின் முதீந்திர -பராங்குச பஞ்ச விம்சதி -ஸ்லோகம் -என்றும்
சரம பர்வதத்தை பற்றினவர்களே-பெரியோர்கள் என்று அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

த்வத் தாஸ தாஸ கண நா சரமா வதவ் யஸ்தவத்தா-சதைகரசதாம் விரதாமமாஸ்து -என்று
ததீய சேஷத்வத்தை ஸ்ரீ ஜீயரும் பிரார்த்தித்து அருளினார் இறே –

உளர் எம்மிறைவன் –உற்றவரே
உற்றவர் உளர் என்று இயைக்க .
தனி திரிவேற்கு உளர் எனவே -என் தனிமை தீர -துணையாய் -குழியிலே விழாதபடி பிடித்து நடத்தி –
உய்விப்பவராய் -உளர் -என்றது ஆயிற்று –
உளன் கண்டாய் நன்னெஞ்சே -ஸ்ரீ முதல் திருவந்தாதி – 99- என்னும் இடத்தில் போலே
ஆபத்திற்கு உதவுவராய் கூடவே உள்ளனர் -என்றபடி –
இதனால் குழியைக் கடத்தும் ஸ்ரீ கூரத் ஆழ்வானை அண்டை கொண்டு -அவரது அபிமானத்திலே நிஷ்டை கொண்டு
உள்ளமையை குறிப்பிட்டார் ஆயிற்று .

எம் இறைவர் -என்றும் ஒரு பாடம் உண்டு
அப்பொழுது ஸ்ரீ இராமானுசன் தன்னை உற்றவர் எம் இறைவர் -சேஷிகள் -ஆக உள்ளனர் -என்று உரைக்க .

ஊன் தளருமளவும் விழுந்தும் -என்றமையின் ஊன் தளருகின்றதே யன்றிச் சப்தாதி விஷயங்களில் ஆசை தளருவதில்லை –
அதனால் குழியில் விழ நேருகிறது என்று ஆசையின் வலிமையை குறிப்பித்து அருளுகிறார் –
இங்கு -ஜீர்யந்தி ஜீர்யதே கேசா தந்தா ஜீர்யந்தி ஜீர்யத சஷூஸ் ச்ரோத்ரேச ஜீர்யதே ஆசைகா நிருபத்ரவா -என்னும் ஸ்லோகம்
முதுமை வுற்றவனுக்கு கேசங்கள் உதிர்ந்து -விடுகின்றன -பற்கள் விழுந்து விடுகின்றன –
கண் பார்வை மங்குகிறது -காதுகள் செவிடாகின்றன -ஆசை மட்டும் தடை இன்றி வளருகிறது – என்பது அநு சந்திக்கத் தக்கது –

தேவு மற்று அறியேன் என்று ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றிய உற்றவர் அபிமானமே
சம்சாரக் குழியில் விழாது என்னைக் காக்க வல்லது -என்பது இப்பாசுரத்தின் கருத்து —

பக்தி பண்ண சக்தி இல்லை– பிர பத்தி பண்ண விசுவாசம் இல்லை -பேறு தப்பாது என்ற துணிவு வேண்டும்-
எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் பெறுவது போல மகா விசுவாசம் வேணும்-
ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்–என்கிறார் இதில்–பர கத ச்வீகாரம்-தானே வைகுந்தம் தரும்–

———-

வட பாலை திரு வண் வண்டுர் –ஏறு சேவகனாருக்கு என்னையும் உழள் என்மீர்களே-பம்ப உத்தர தேசம் -நாயனார் –

பஷி தூது விட –உயிர் உடன் இருப்பதாக அர்த்தம் -திரு மாலை ஆண்டான் அர்த்தம் சொல்ல–
இன்றியாமை அவன் இருந்தால் நானும் இருக்கிறேன் ரஷிக்க வேண்டிய வஸ்துகளில் நானும் ஓன்று என்று
அறிவிக்க சொல்லி -ஸ்வாமி நிர்வாகம்-அடிபட்டு துடிக்கும் மான் போல பராங்குச நாயக–அறிவிப்பே அமையும்-

உளன் கண்டாய் நன்னெஞ்சே -முதல் திருவந்தாதி – 99- என்னும் இடத்தில் போலே
ஆபத்திற்கு உதவுவராய் கூடவே உள்ளனர்

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–திரு வாய் மொழி-–5-8-6-

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மா மாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே–5-8-8-

உண்ணி லாவிய ஐவ ராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணு கின்றாய்
எண்ணிலாப் பெரு மாய னே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே! என்னை ஆள்வானே!–7-1-1-

குல முதல் அடுந் தீவி னைக் கொடுவான் குழியினில் வீழ்க்கு மைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில முதல் இனி எவ்வுல குக்கும் நிற்பன செல்வன எனப் பொருள்
பல முதல் படைத்தாய்! என் கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9-

என் பரஞ்சுடரே! என்றுன்னை அலற்றி உன் இணைத் தாமரை கட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து ஏற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ!–7-1-10-

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே -திருவிருத்தம் –1-

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-

மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை
மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4 6-5 –

நாடும் நகரும் அறிய நாடு மானிடப் பேர் இட்டு
கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே
சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று
நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4 6-6 –

உற்ற உறு பிணி நோய்காள் உமக்கு ஓன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றம் கண் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர்
அற்றம் உரைகின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே -பெரிய ஆழ்வார் திரு மொழி– 5-2 6-

கொங்கை சிறுவரை என்றும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்தி கிடந்து உழல்வேனை
வங்கக் கடல் வண்ணன் அம்மான் வல்வினை யாயின மாற்றி
பங்கப் படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே -பெரிய ஆழ்வார் திரு மொழி -5 2-7-

மிக்க நல்வினையில் கிளரும் துணிவு கிடைத்தறியாது

இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே–5-8-8-

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!–5-8-9-

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென் றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திரு வேங்கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே–6-10-11-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading