ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
இப்படி எழுந்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் பாஹ்ய குத்ருஷ்டி நிரசன அர்த்தமாக
உபகரித்து அருளின ஜ்ஞானத்தால் பலிதங்களை அனுசந்தித்து ப்ரீதராகிறார் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
கீழ்ப் பாட்டிலே -ஸ்ரீ எம்பெருமானார் திவ்ய தேச யாத்ரை எழுந்து அருளினவாறே பிரதிவாதிகளுடைய
வாழ்வு வேருடனே நசித்துப் போன படியை சொல்லி -இதிலே -அவருடைய சமீசீன ஞானத்தாலே
பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு உண்டான விநாசத்தையும் -லோகத்தர்க்கு எல்லாம் உண்டான சம்ர்த்தியையும்
பலபடியாக அருளிச் செய்து கொண்டு பிரீதராகிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
வாதியர் வாழ்வு அற-ஸ்ரீ எம்பெருமானார் உதவிய ஞானத்தாலே விளைந்த நன்மைகளை கண்டு-
களிப்புடன் அவற்றைக் கூறுகிறார் .
வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழற்றது குற்றமெல்லாம் பத்திதா குணத்தினர்க் கந்
நாழற்றது நம்மிராமானுசன் தந்த ஞானத்திலே – – 65-
பத உரை –
நம் இராமானுசன் -நம் தலைவரான ஸ்ரீ எம்பெருமானார்
தந்த -உதவிய
ஞானத்திலே -ஞானம் காரணமாக
தொல்லை -பழைமை வாய்ந்த
வாதியர்க்கு -வாதத்தை கை கொண்டவர்களுக்கு
வாழ்வு அற்றது -வாழ்வு தொலைந்தது
என்றும் -அங்கன் அவர்கள் வாழ்வு தொலைதலினால்-எக்காலத்திலும்
மறையவர் தம் -வைதிகர்கள் உடைய
தாழ்வு -குறைபாடு
அற்றது -தீர்ந்தது
தாரணி -பூமி
தவம் பெற்றது -பாக்யத்தை அடைந்தது
தத்துவ நூல் -தத்துவங்களைப் பற்றி கூறும் சாஸ்த்ரங்களில்
கூழ் –சந்தேஹம்
அற்றது -தீர்ந்தது
குற்றம் எல்லாம் பதித்த -அனைத்து குற்றமும் தன்னுள் ஓட்டிப் பொதிந்துள்ள
குணத்தினர்க்கு-ஸ்வபாவம் உள்ளவர்களுக்கு
அந்நாழ் அற்றது -அக்குற்றம் தீர்ந்தது
வியாக்யானம் –
நம்முடைய நாதரான ஸ்ரீ எம்பெருமானார் உபகரித்து அருளின ஜ்ஞானத்தாலே –
பயிருள்ள வன்றே-களையும் உண்டாமா போலே பழையதாய்ப் போருகிற வாதங்களை யுடைய
பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு-வாழ்வு போயிற்று –
களை போனவாறே -மாய்ந்தவாறே -பயிர் தலைப் பெறுமா போலே-அவை போகையாலே –
சர்வ காலத்திலும் வைதிகரானவர்கள் -தங்களுடைய குறைவு போயிற்று .–
ஏத்த வல்லார் திரிதலால் தவமுடைத்து தரணி தானே -பெருமாள் திரு மொழி – 10-5 – – என்கிற படியே
பாஹ்யர் நிரஸ்தராய்–வைதிகர் தலைப்பெற்று பாகவத சஞ்சாரம் மிகுகையாலே பூமி பாக்யத்தை உடைத்தாயிற்று
தத்வ பரமான சாஸ்த்ரங்களில் சம்சயங்கள் எல்லாம் தீர்ந்தது –
சர்வ தோஷ லக்னமான ஸ்வபாவத்தைவுடையவர்களுக்கு அக்குற்றம் தீர்ந்தது
இது ஒரு ஜ்ஞான வைபவம் இருக்கும் படியே -என்று கருத்து
ஞானத்திலே -என்றது த்ருதீ யார்த்தே சப்தமி
தாழ்வு -குறைவு
தவம்-பாக்கியம்
கூழ்ப்பு -சம்சயம்
நாழ் -குற்றம்–
மருந்து விருந்து பொருள் அமுதம் எல்லாம் ஒன்றே –வாழ்வு தாழ்வு அற்றது -இரு வகைப் பட்டவர்களுக்கும்
மறையவர் தம் தாழ்வு அற்றது..இரண்டு இடத்திலும் அற்றது–இரண்டுமே என்றும் —
ஸ்ரீ ஸ்வாமி –ஸ்ரீ எம்பெருமானாருக்கு மட்டுமே பொருந்தும் –
நம் ஸ்ரீ ராமானுசர்–நாம் -சொத்து என்று உணர்ந்தால் போதும் சம்பந்தம் பெற-
புண்யம் போஜ விகாசாய பாப த்வாந்தஷயாயச ஸ்ரீ மான் ஆவிர்பூத் பூமௌ ராமானுஜ திவாகர-
இருட்டு போக -ஆத்ம ஞானம் வளர கைங்கர்ய செல்வம் வளர –
ஸ்வாமி ஞான வைபவதால் – கிடைத்த பஞ்சாம்ருதத்தை அருளிச் செய்கிறார் –
பரித்ராணாயா -த்ரயங்களும் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தியும் சொன்னபடி-
நம் இராமானுசன் தந்த ஞானத்தினாலே –
எங்களுக்கு வகுத்த சேஷியான ஸ்ரீ எம்பெருமானார் –
தம்முடைய கிருபா பரதந்த்ரராய்க் கொண்டு – நிர்ஹேதுகமாக உபகரித்து அருளின ஜ்ஞானத்தினாலே –
த்ர்தீயார்த்தே சப்தமி -என்கிற பிரக்ரியையாலே -ஜ்ஞானத்திலே -என்று நிர்தேசிக்கிறார் –
இனி அத்தாலே பலிதத்தை யருளிச் செய்கிறார் – வாழ்வு அற்றது என்று தொடங்கி-
வாதியர்க்கு –
பிரதிவாதிகளான சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிரபாகர பௌத்த சார்வாதிகளுக்கு –
தொல்லை-வாழ்வு அற்றது –
இவருடைய அவதாரத்துக்கு முற்காலத்திலே -பிரதிவாதிகளுக்கு வாழ்வு அற்றது-
வேதத்தை அங்கீகரித்து இருக்கச் செய்தே அதின் அர்த்தத்தை அறியாதே குத்ருஷ்டி கல்பநங்களாக சில கிரந்தங்களைப் பண்ணி –
லோகத்தை எல்லாம் மூலையடியே நடத்திக் கொண்டு போருகையும்-
வேதத்திலே சில தோஷங்களை ஆரோபித்து – அது அப்ரமாணம் என்று சொல்லுகையும் –
அப்படிப் பட்ட வாழ்வு
இவர் அவதரித்து உபகரித்த ஞானத்தாலே அடி யற்று போச்சுது –
வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு –
தொல்லை வாதியர்க்கு -தொன்மையான வதம் புரிபவர்களுக்கு -என்றபடி
தொன்மை வாய்ந்தது வாதம் -வாதியர் தொன்மை வாய்ந்தவர் அல்லர் என்று அறிக –
வாதம் புரிபவர் -தற் காலத்தவர் ஆயினும் அவர்கள் புரியும் அசத்கார்ய வாதம் முதலியன
வேதத்திலேயே எடுத்து களையப் படுதலின் –தொன்மை வாய்ந்தவை -என்க-
பயிர் உள்ள வன்றே-களையும் உண்டாமோ போலே அநாதி வைதிகக் கொள்கைக்குக் களையான அவைதிக வாதங்களும்
தொன்று தொட்டு வருமவை யாதலின் அவை தொன்மை வாய்ந்தன ஆயின –
வாதியர் தாங்கள் கைக் கொண்ட வாதம் பண்டையதாயினும் அது அடிபடவே தலை எடுக்க மாட்டாது நசிந்து ஒழிந்தனர்.
என்றும் –
என்கிற பதம் -காகாஷி அந்யோன்ய பூர்வோத்தர பதங்களுக்கு விசேஷணமாய் இருக்கிறது –
என்றும் தொல்லை தாழ்வற்றது –
அற்றது அற்றது -என்று –
ஆஸூ விஸ்மரசி தத்தமர்த்தி நே விச்மரஷ்ய ப்க்ர்திம் பரேணயத் காம விச்மரண ஸீலலீலயா -என்னுமா போலே –
இத்தால் -விரோதிகளானவற்றைப் போக்கடித்த ஆற்றலை சொல்லுகிறது –
சதுர்வேதிகளான ப்ராமாணிகருக்கு இவருடைய அவதாரத்துக்கு முற்காலம் எல்லாம்
பாக்ய குத்ருஷ்டிகள் லோகம் எங்கும் வியாபித்து இருக்கையாலே வைதிக மார்க்கம் எல்லாம் தலை சாய்ந்து
இருக்கையாகிற தாழ்வு என்றும் அற்றது –
தொல்லை என்று இங்கும் அனுஷ்டிக்கக் கடவது –
தொல்லையான தாழ்வு
அநாதி காலமே தொடங்கி இடைவிடாதே வந்த தாழ்வு –
தொல்லை என்றது வாதியருக்கு விசேஷணமாய்-
பழையதாய் போருகிற வாதங்களை உடைய பாஹ்ய குத்ருஷ்டிகள் -என்றுமாம் –
தாழ்வு -குறைவு –
தாழ்வு என்று மற்றது -இனி மேல் உள்ள காலத்தில் -ஒருநாளும் மறுவ விடாதே வாசனையோடு போயிற்று என்றபடி –
லோகத்திலே பயிரை உடையவன் கிரிஷி பண்ணினால் -அந்த பயிரிலே கட்டடங்க களை வியாபித்து
அத்தை தலை எடுக்க ஒட்டாதே இருந்தவாறே –
அந்தக் களையை விரகர் பிடிங்கிப் பொகட்டு அந்த பயிரை அபிவ்ருத்தமாம் படி பண்ணுமாப் போலே –
ஸ்ரீ ஈஸ்வரனுடைய கிருஷிக்கு விஷய பூதரான அனுகூலர் அடங்கலும் பாஹ்ய குத்ருஷ்டிகளாலே தலை சாய்ந்து போன பின்பு –
அவர்களை நிரசித்து -அந்த சேதனரை எல்லாம் அபிவ்ருத்தராம்படி பண்ணினார் காணும் –
என்றும் மறையவர் தம் தாழ்வு அற்றது –
என்றும் அற்றது என்று இயைக்க
களை எடுத்தவாறே பயிர் தலை நிமிர்ந்து ஓங்கி வளருவது போலே
துர்வாதம் தொலையவே வைதிகர் தலை நிமிர்ந்து ஓங்கி வளர்ந்தனர் -என்க –
தவம் தாரணி பெற்றது –
பூமியானது பாக்யத்தை பெற்றது –தவம் -பாக்கியம்
பரித்ராணாயா சாதூனாம் விநாசாய ச துஷ்க்ர்தாம் -என்ற அநந்தரம் இறே -தர்ம சம்ச்த்தாபனார்த்தம் -என்றது –
பிரதிவாதிகள் பராஜிதராய்க் கொண்டு பூமியிலே காணப் படாத பின்பு –
ஸ்ரீ பாகவதர்கள் தங்கள் குறை எல்லாம் தீர்ந்து பிரகாசித்தார்கள் ஆகையாலே –
பூமியிலே தர்மமானது எங்கும் ஒக்க வியாபித்தது –
புண்யம் போஜ விகாசாய பாப த்வாந்தஷயாயச ஸ்ரீ மான் ஆவிர்பூத் பூமௌ ராமானுஜ திவாகர -என்னக் கடவது இறே –
தவம் தாரணி பெற்றது –
தவம் -பாக்கியம்
தாரணி தவம் பெற்றது என்று கூட்டுக
துர்வாதம் தொலைந்து வைதிகர் தலை நிமிர்ந்து –
தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாம் திருவந்தாதி -16 – என்றபடி
பூமி எங்கும் திரிதலாலே அவர்கள் திருவடி சம்பந்தம் பெறுதலின் பூமி பாக்கியம் பெற்றது-என்றபடி
ஏத்துவார் திரிதலால் தவமுடைத்து இத் தரணி தானே-பெருமாள் திரு மொழி -10- 5- என்னும்
ஸ்ரீ ஸூக்தி இங்கு அனுசந்திகத் தக்கது
தத்துவ நூல் கூழ் அற்றது –
பராவர தத்வ யாதாத்ம்ய பிரதிபாதகமாய் இருந்துள்ள -சாஸ்திர ரூபமான வேதமானது –
குத்ருஷ்டிகளாலே கலக்கப்பட்டு இவ்வளவும் பஹூ நாயகமாய் வ்யபிசரித்து போய் –
இப்போது இவர் ஸ்ரீ பாஷ்யத்தை அருளிச் செய்கையாலே –
யஸ் சுருதி ஸ்ம்ருதி ஸூத்ராணாம் அந்தர்ஜுரம் அசீசமத் -என்கிறபடியே
லோகத்தார் எல்லாருக்கும் ஞான பிரதானத்தையும்
வேதங்களுக்கு யதாவர்த்தத்தையும் -பண்ணுகையாலே –
காலுஷ்யம் போய் நிச்ச்சம்சயமாக தத்வார்த்தங்களை பிரகாசிப்பிக்கும் ஆய்த்து –
கூழ்ப்பு -சம்சயம் –
இவருடைய உபதேசத்தாலே -பிரமாதக்களுக்கு த்த்வபரமான சாஸ்த்ரங்களிலே சம்சயங்கள் எல்லாம் போய்த்தின வென்றுமாம் –
தத்துவம் –தத்வம் -நூல் -சாஸ்திரம் –
தத்துவ நூல் கூழ் அற்றது
கூழ் -சந்தேகம்
நூலில் சந்தேகம் தீர்ந்தது -என்றபடி
குற்றம் எல்லாம் பதித்த குணத்தினருக்கு அந் நாழ் அற்றது –
யாவச்ச யச்சதுரிதம் சகலச்ய ஜந்தோ ஸ்தாவச்ச தத் தததி கஞ்சம மாஸ்தி சத்யம் -என்கிறபடியே
சமஸ்த துரிதங்களும் -வியாபித்து இருக்கிற குணங்களை உடையவர்களுக்கு
இவருடைய ஜ்ஞான பிரதான வைபாவத்தாலே -அவர்களுடைய பாபம் எல்லாம் நசித்தது –
ஷிப்ரம் பவதி தர்மாத்மா சஸ் வச்சாந்திம் நிகச்சதி -என்கிறபடியே
குணத்தில் உண்டான தோஷங்கள் எல்லாம் நிவர்த்தங்களாய் -ஜ்ஞாநாதிகர் ஆனார்கள் -என்றபடி –
நாழ் -குற்றம் -இது ஒரு வைபவம் இருக்கும்படி என்-என்று வித்தராகிறார் –
குற்றமெல்லாம் –அந் நாழ் அற்றது
குணம் -ஸ்வபாவம்
நாழ்-குற்றம் குற்றங்களையே இழைக்கும் ஸ்வபாவம் உள்ளவர்களுக்கு அக் குற்றங்கள் தொலைந்தன –
ஸ்ரீ இராமானுசன் தந்த ஞானத்திலான நலன்கள் எத்திறத்தன என்று வியக்கிறார் .
ஞானத்திலே -இல் ஐந்தாம் வேற்றுமை உருபு-எதப்பொருள் அது
கல்வியில் பெரியவன் கம்பன் -என்பது போலே–
எந்த ஒன்றை தெரிந்து கொண்டால் எல்லாம் அறிந்தது போல/உத்தாரகர்-ஞானம் பகிர்ந்து கொண்டால் பெருகும்–
உபதேச வேளை ஸ்ரீ கீதையில் பரித்ராணாம் முதலில் -பறை தருவான் போலே –
இங்கு அனுஷ்டான வேளை / கறவைகள் பின்பு சிற்றம் சிறுகாலை போலே
———–
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்பெருமானுக்கே காதல் செய் தொண்டர் –பெருமாள் -2-6-
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்–5-2-1-
இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே–5-2-4-
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-
—————–———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply