ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –
—————————————————————————
கர பதரிவ விஸ்வஸ் கச்சித் ஆச்சார்ய த்ருஷ்டயா
முஷித நிகில மோஹா மூல மந்த்ராதி போகஸ்
ஸ குண விஷய சித்தவ் சம்ப்ரதாயம் ப்ரயச்சந்
ஸூ சரித ஸிலஹாரீ ஸூரி ப்ருந்த அபிநந்த்ய –
ஒரு அதிகாரி தனது ஆச்சார்யனுடைய கடாக்ஷம் காரணமாக அனைத்து விஷயங்களையும் உள்ளங்கை
இலந்தப் பழம் போலே நன்றாக அறிகிறான்
இதனால் அனைத்து விதமான அஞ்ஞானங்களும் நீங்கப் பெறுகிறான் -மூல மந்த்ரம் முதலானவற்றுடைய
ஆழ்ந்த பொருளை எப்பொழுதும் எண்ணியபடியே இருத்தல் என்னும் அனுபவத்தை அடைகிறான் –
சிறந்த குணங்களைக் கொண்ட வேறு ஒருவனைச் சந்தித்தால் தன்னுடைய ஸம்ப்ரதாயத்தைக் குறித்து உபதேசிக்கிறான்-
சான்றோர்களுடைய பழக்கங்கள் என்பதான தானியங்களைப் பொறுக்கி எடுக்கிறான் –
இதனால் நித்ய ஸூரிகளின் கூட்டத்தால் கொண்டாடப்படுகிறான் –
கீழ் அதிகாரங்களில் உள்ள திரண்ட பொருள்கள்
1–இப்படி இஜ் ஜீவாத்மா நித்ய ஸூரி களோடு ஓக்க ஸ்ரீ பகவத் அனுபவ ரசத்துக்கு ஸ்வரூப யோக்யனாய் இருந்து வைத்து –
அநாதி காலம் இழந்து -ஓர் அளவிலே புரிந்து -சதாச்சார்ய சம்பந்தம் உண்டாய்த் தத்வ ஹிதங்களை அறியத் தொடங்கின படியும்
2–இவற்றை அறிவிக்கும் பிரமாணங்களில் ரஹஸ்ய த்ரயம் சார தமமான படியும்
3–இவற்றைக் கொண்டு அறியும் அர்த்தங்களில் ஈஸ ஈஸித்வயங்களினுடைய சரீர ஆத்ம பாவ சம்பந்தாதிகள்
பிரதான பிரதிதந்தரமாய் ஞாதவ்யங்களான படியும்
4–இஸ் சம்பந்தத்தோடே கூட ஞாதவ்யமாக பூர்வாச்சார்ய சங்க்ருஹீதமான அர்த்த பஞ்சகம் ரஹஸ்ய த்ரயத்தில் கிடக்கிறபடியும்
5–இவ் வர்த்த பஞ்சகத்துக்கு உள்ளே தத்வ த்ரயாதி விபாக சிந்தை பண்ணுவார்க்குத் தாத்பர்யமும்
6–இவ் வர்த்தக பஞ்சகத்தில் ஈஸ்வரனாக சாத்விக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவன் ஸ்ரீ யபதி என்னும் இடமும்
7–இத் தத்வ த்ரயங்கள் எல்லாம் தெளிந்தவன் முமுஷுவாய் மோக்ஷ உபாய உந் முகனாம் படியும்
8–அதிகாரி விபாகமும்
9–இவ் வாதிகாரிகளுக்கு அநு ரூபமான உபாய விபாகமும்
10–இவ் உபாயங்களிலே ஸ்வ தந்த்ர பிரபத்தி நிஷ்டனுக்கு அதிகார விசேஷம் இருக்கும் கட்டளையும்
11–ஸக்ருத் கர்தவ்யமான இவ் உபாயத்துக்கு அநு ரூபமாக விஹிதமான பரிகர விபாகமும்
12–முமுஷுக்கு பரிகரமான பர ந்யாஸ ரூப பிரதான கர்த்தவ்யத்தினுடைய சந்நிவேசம் இருக்கும் படியும்
13–இப்படி ச அங்க பிரபதன அனுஷ்டானம் பண்ணினவன் சர்வ ரக்ஷண அதி க்ருதன் பக்கலிலே
ந்யஸ்த பரனாகையாலே க்ருதக்ருத்யனாம் படியும்
14–இந் நிஷ்டை தனக்குப் பிறந்தமை கண்டு தான் தேறி இருக்கைக்கு அடையாளங்களும்
15–இவனுக்கு ஆர்த்தியில் மாந்த்யத்தாலே சரீரம் அநு வர்த்ததாகில் இங்கு இருந்த காலத்துக்கு ஸ்வயம் ப்ரயோஜனமாய்
ஸ்வரூப ப்ராப்த சேஷ வ்ருத்தி ரூபமான கைங்கர்யம் இருக்கும் படியும்
16-பகவத் கைங்கர்யத்துக்கு எல்லை நிலம் பாகவத கைங்கர்யமான படியும்
17-சாஸிதமான ஸ்வாமிக்கு அபிமதம் அல்லாதது கைங்கர்யம் அல்லாமையாலே யதா சாஸ்திரம் கைங்கர்யம் அனுஷ்ட்டிக்க வேண்டினபடியும்
18-இஸ் சாஸ்திரீய கைங்கர்ய ப்ரவ்ருத்தனுக்கு அபராதங்கள் புகாமைக்கும் -புகுந்தவை கழிகைக்கும் விரகுகளும்
19-இந் நிரபராத கைங்கர்யத்துக்கு ஸ்தாநமாக அநாபத்தில் உசிதமாவது பாகவத ஆஸ்ரிதமான பகவத் க்ஷேத்ரம் என்னும் இடமும்
20-இப்படி இருந்த இவ்வதிகாரிக்கு சரண்ய சங்கல்ப விசேஷத்தாலே ப்ரசஸ்த தேச காலாதி நிரபேஷமாக
ஸ்தூல சரீரத்தின் நின்றும் நிர்யாணம் இருக்கும் படியும்
21-இப்படிப் புறப்பட்டால்-பிதா யவ்வ்ய ராஜ்யத்துக்கு முடி சூட்ட அழைத்து வரவிட்ட ராஜ குமாரன் போமாப் போலே
பெரிய மேன்மையோடே பரமபத பர்யந்தமாக அர்ச்சிராதி மார்க்கத்தாலே போம் படியும்
22-இப்படிப் போனால் அங்கு பிறக்கும் ஸ்வச் சந்த கைங்கர்ய பர்யந்தமாக பரிபூர்ண அனுபவ ரூபமான முக்த ஐஸ்வர்யம் இருக்கும் படியும் –
23-இப்படி யுக்தமான ஞாதவ்யங்களில் பிரதானமான சித்த உபாயத்தையும்
24-கர்தவ்யங்களில் பிரதானமான ஸாத்ய உபாயத்தையும்
25-26-இவ் வுபாய நிஷ்டனுடைய ப்ரபாவத்தில் சாஸ்திரங்கள் இசையாத ஏற்றச் சுருக்கங்களையும் பற்றி
ஆஹார தோஷ ஹேதுக சம்சர்க்க யுக ஸ்வ பாதிகளாலே வரும் கலக்கங்களுக்குப் பண்ணும் பரிகார பிரகாரங்களும்
27-28-29-இவை எல்லாம் அனுசந்திக்கைக்கு முகமான ரஹஸ்ய த்ரயத்தில் பாத வாக்ய யோஜனைகளும்
30-இவ்வர்த்தங்களுக்கு எல்லாம் யதா சாஸ்திரம் சம்பிரதாய ப்ரவர்த்தனம் பண்ணும் ஆச்சார்யனுக்கு
உபதேசாதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி விஷயங்கள் இருக்கும் படியும்
31-இப்படி பரம உபகாரகனான ஆச்சார்யன் திறத்தில் தகுதியான பிரதியுபகாரம் இல்லாமையால்
நித்ய ருணியான சிஷ்யனுக்குச் செய்ய அடுக்குமவை எல்லாம்
32-ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ர ஸம்ப்ரதாயங்களாலும் -இவற்றுக்கு அநு கூலங்களான சமீஸீந நியாயங்களாலும் –
அஞ்ஞான சம்சய விபர்யங்கள் ஆகிற யதா ஸ்ருதம் யதா ஹ்ருதயம் உபபாதித்தோம்
இவ் வர்த்தங்களை எல்லாம் முற்பட சத் ஸம்ப்ரதாயமுடைய சதாச்சார்யன் பக்கலிலே சம்யக் உப சன்னனாய்
சிஷ்யஸ்தே அஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம்—ஸ்ரீ கீதை 2-7-என்று விண்ணப்பம் செய்து-
சாதரனாய் விசதமாக ஸ்ரவணம் பண்ணி இவற்றுக்கு உப யுக்தங்களான நல் வார்த்தைகளையும்
ஸூவ்யா ஹ்ருதாநி மஹதாம் ஸூஹ்ருதாநி ததஸ்ததா-ஸஞ்சின்வன் தீர ஆஸீத சிலஹாரீ சிலம் யதா—உத்யோக பர்வம் 34-34–என்கிறபடி
கீழே சிதறிய தானியங்களைக் கொண்டு உயிர் வாழ்பவன் அவற்றைப் பொருக்கி எடுத்து சேமிப்பது போன்று –
சிறந்த சொற்கள் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைத் திரட்டி எடுத்து கவலை இல்லாமல் வாழ வேண்டும் என்பது போன்று –
ஆய்ந்து எடுத்து அப்யாச பூயஸ்தையாலே தெளிந்து கொள்வது –
ஸூஷ்ம பரம துர்ஜ்ஜேய சதாம் தர்ம ப்லவங்கம –கிஷ்கிந்தா -18-15–என்று உயர்ந்தவர்கள் தங்களை அடியவர்களைக் காக்கும்
தர்மம் மிகவும் ஸூஷ்மமானது -என்றும்
தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயம் -வனபர்வம் -268-121–தர்மத்தின் தத்வம் மிகவும் ரஹஸ்யமானது -என்றும்
அணீயான் ஷூரதாராய கோ தர்மம் வக்தும் அர்ஹதி–உத்யோக பர்வம் -35–29-கத்தி நுனியைக் காட்டிலும் ஸூஷ்மாமா தர்மத்தை
யாரால் விளக்கும் தகுதி யாருக்கு உள்ளது என்றும்
ரிஷிகளுக்கும் கூட வருந்தி பத வின்யாசம் பண்ண வேண்டி இருக்கிற நிலங்களில்
மஹா ஜநோ யேந கத ச பந்தா -வனபர்வம் -268-121–சான்றோர்கள் எந்த வழியில் நடக்கிறார்களோ அதுவே
நமக்கும் சிறந்த வழியாகும் என்றும்
தர்ம ஸாஸ்த்ர ரதா ரூடா வேத கட்க தரா த்விஜா -க்ரீடார்த்தமபி யத் வ்ரூயு ச தர்ம பரமோ மத -என்று
தர்ம சாஸ்திரம் என்னும் தேரில் அமர்ந்து வேதங்கள் என்னும் வாளைக் கையில் பிடித்து நிற்கும் அந்தணர்கள்
விளையாட்டாகவே உரைப்பதும் கூட தர்மமே என்றும் சொல்லுகிறபடி
சுருதி ஸ்ம்ருதி சரணரான பூர்வாச்சார்யர்கள் கண்டக சோதனம் பண்ணி நடந்த வழியில் நடக்கையாலே நமக்கு வருவதொரு தப்பில்லை
இவ்வழி நடந்தவர்களுக்கு
அ விஸ்ராத்தம் அநாலம்பம் அபாதேயம் அதேசிகம் -தம காந்தாரம் அத்வானம் கதமேகா கமிஷ்யசி–சாந்தி பர்வம் -337-34-
இளைப்பாற ஏற்ற இடம் இல்லாமல் -பற்றிக் கொள்ள கைப்பிடி இல்லாமல் -பசியைத் தீர்க்க உணவும் இல்லாமல் –
வழி காட்டுபவர்களும் இல்லாமல் -இருளில் செல்ல வேண்டியதாக உள்ள நரக மார்க்கம் என்பதில்
நீ எவ்வாறு தனித்து செல்வாய் – என்றும்
நிஷ்பா நீயே நிராலம்பே நிச்சாயே நிரபாஸ்ரயே -த்ராகீ யஸ்ய சுபே மார்க்கே யமஸ்ய சதனம் ப்ரதி-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி காரிகை –
பருக நீரும் தாங்க கைப்பிடியும் ஒதுங்க நிழலும் தங்க இடமும் இல்லாமல் மிகவும் நீண்ட துக்கம் மட்டுமே அளிக்கும் உள்ள
யமன் இடத்து செல்லும் பாதையே எனக்கு அச்சத்தை உண்டாக்கும் பிறவிகளுடைய வரிசையாக உள்ளன -என்றும்
மஹரிஷிகள் நெஞ்சாறல் படும் வழிகள் காண வேண்டா
பஞ்சாக்னி வித்யையில் சொன்னபடியே -பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்டுப் பூட்டைக் குண்டிகை போலே-
ஏறுவது இழிவதாக தூமாதி மார்க்கத்தில் பரிப்ரமிக்கவும் வேண்டா
த்வம் நியஞ்சித் பிரு தஞ்சித் பிஸ் கர்ம ஸூத்ரோப பதிதை-ஹரே விஹரசி கிரீடா கந்துகைரிவ ஐந்துபி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
ஸர்வேச்வரனே கர்மங்கள் என்னும் கயிற்றால் கட்டப்பட்ட பந்துகள் போன்று கீழும் மேலும் எழும்படி உள்ள
ஜந்துக்களைக் கொண்டு நீ விளையாடுகிறாய் -என்கிற
பகவத் லீலா உபகரணமான தசை கழிந்து மற்றும் உள்ள அதிசய பலன்கள் பெறப் போகும் அதிகாரிகளுடைய வழிகளில் காட்டில்
புருஷார்த்த பூயஸ்தையாலும் புநர் ஆவ்ருத்தி இல்லாமையாலும்
தேப்யோ விசிஷ்டாம் ஜாநாமி கதிம் ஏகாந்திநாம் ந்ருணாம் –சாந்தி பர்வம் –358-6-அவனைச் சரணம்
புகுந்தவர்கள் வழி மேலானது என்றும்
உத்க்ரமாதி ச மார்கஸ்ய சீதி பூதோ நிராமய –சாந்தி பர்வம் -194-27-மேலே எழும் ஜீவாத்மா அந்த மார்க்கத்தில் சென்று
சம்சார துன்பம் நீங்கப் பெற்று என்றும்
தேவ யாந பர பாந்தா யோகி நாம் கிலேச சம்ஷயே -யோகிகளுக்கு கர்மங்கள் நீங்கிய பின்னர் தேவயானம் என்னும்
உயர்ந்த மார்க்கம் கிட்டுகிறது -இத்யாதிகளில் படியே அத்யந்த விசிஷ்டமாய் மிகவும் உயர்ந்ததாக உள்ளது -என்றபடி
ஆத்மா கேவலதாம் ப்ராப்தோ யத்ர கத்வா ந சோசதி–சாந்தி பர்வம் -196-11- ஜீவாத்மா துன்பம் நீங்கப்பெறும் இடம் இதுவே என்றும்
அத்யர்காநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந -ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ்ப்ரேஷம் தேவதாநவை -வன பர்வம் -136-18-
தேஜோமயமான அந்த திவ்விய ஸ்தானத்தை தேவர்கள் அசுரர்கள் காண இயலாது என்றும்
தத்ர கத்வா புநர் நேமம் லோகமா யந்தி பாரத -வனபர்வம் -136-23-எங்கு சென்றவர்கள் மீண்டும் திரும்புவது இல்லையோ என்றும்
ஏதே வை நிரயா ஸ்தாந ஸ்தாநஸ்ய பரமாத்மந -சாந்தி பர்வம் -196-6-இதுவே பரம ஸ்தானம் என்றும்
இத்யாதிகளிலும் சம்சார அத்வாவுக்குப் பாரம் -அக்கரை -என்றும் ஸ்ருதிகளில் ஓதப்படுகிற பரமபதத்தைப் பர்யந்தமாக யுடைத்தாய் –
பகவத் பிரசாத அவலம்பநமாய் பரிபூரணமான பரம புருஷார்த்தத்தைப் பெறப் புகுகிறோம் என்கிற சந்தோஷத்தை பாதேயமாக யுடைத்தாய் –
ததோகஸ் அக்ர ஜ்வலநம் தத் ப்ரகாசி தத்வாரோ வித்யா சாமர்த்யாத் தச்சேஷ கத்யநுஸ்ம்ருதி யோகாச்ச ஹார்த்த
அநு க்ருஹீத சதாதிகயா –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-2-16-
ப்ரஹ்ம வித்யையின் திறனாலும் அந்த வித்யைக்கு அங்கமாக உள்ள அர்ச்சிராதி மார்க்க சிந்தனா ரூபமான யோகத்தால்
ஹ்ருதய தாமரையில் உள்ள பரமாத்மாவால் அருளப்படுகிறான் -அவன் தேஜஸ் மூலம் காண்பித்துக் கொடுக்கப்பட்ட
ஸூஷூம்நா நாடி மூலம் கிளம்புகிறான் என்கிறபடியே
ஈசுவரனுடைய ஸுஹார்த்தத்தாலே காட்டப்படும் அர்ச்சிராதி மார்க்கத்தாலே
அவ்வோ தேவதைகள் தத்தம் எல்லைகள் தோறும் மங்கள ப்ரதீப பூர்ண கும்பாதிகளை முன்னிட்டு ச பரிகரமாய் எதிர் கொண்டு
ஸார்வ பவ்ம உபசாரங்களைப் பண்ணி வழி நடத்த -கர்மலோகத்தில் இருந்த நாள் இறை கொண்ட தேவதைகள் எல்லாம்
காணிக்கை இட்டுக் கொண்டு அநு வர்த்திக்க -அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத எல்லைகள் எல்லாம் கடந்து
நித்ய ஸூரிகள் திரளில் புக்கால் வாசி தெரியாதபடியான நிரதிசய பூர்த்தியைப் பெற்று
ததோ மஹதி பர்யங்கே மணி காஞ்சன சித்ரிதே–ததர்சி க்ருஷ்ணமாஸீநம் நீலம் மேராவிவாம்புதம்–
ஜாஜ்வல்யமாநம் வபுஷா திவ்ய ஆபரண பூஷிதம் –ப்ரீதி கௌசேய சம்விதம் ஹேம் நீவோபசிதம் மணிம்
கௌஸ்துபேந ஹ்யுரஸ் ஸ்தேந மணிநா அபி விராஜிதம் -உத்ய தேவோதயம் சைலம் ஸூர்யேநாப்தம் க்ரீடிநம்
நவ்பவ்ம்யம் வித்யதே தஸ்ய த்ரீஷூ லோகேஷூ கிஞ்சன –சாந்தி பர்வம் –
மாணிக்கம் பொன்னால் அலங்கரிக்கப் பெற்ற பெரிய கட்டிலிலே மேரு மலையில் மழை மேகம் பொருந்தியது போன்ற
ஸ்ரீ கிருஷ்ணனைக் கண்டார்கள்
அவனது திருமேனி திருப் பீதாம்பரத்துடன் கூடியதாயும் -நேர்த்தியான திவ்ய பூஷணங்கள் பூண்டதாயும்
ஸ்வர்ணத்தில் பதிக்கப்பட்ட நீல ரத்னம் போலே உள்ளது –
திருமார்பில் ஸ்ரீ கௌஸ்துபம் பிரகாசிக்க திருமுடியில் திரு அபிஷேகத்தில் பிரகாசிக்க
மலையில் உதிக்கும் ஸூர்யன் போன்று உள்ளது –
இவ்வித திவ்ய அழகுக்கு ஈடாக மூன்று லோகங்களிலும் யாருமே இல்லையே
தம் வைஸ்ரவண ஸங்காஸம் உபவிஷ்டம் ஸ்வலங்க்ருதம் ததர்ச ஸூத பர்யங்கே ஸுவ்வர்ணே சோத்தரச்சதே-
வராஹ ருதிராபேண சுசிநா ச ஸூகந்திநா -அநு லிப்தம் பரார்த்யேந சந்தநேந பரந்தபம்-
ஸ்திதயா பார்ச்வதச்சாபி வால வ்யஜன ஹஸ்தயா உபேதம் ஸீதயா பூயஸ் சித்ராய சசிநம் யதா –
தம் தபந்தமி வாதித்யம் உப பன்னம் ஸ்வ தேஜஸா –
வவந்தே வரதம் வந்தீ விந யஜ்ஜோ விநீதவத் –அயோத்யா -16-8-/11-
நேர்த்தியான விரிப்புடன் கூடிய ஸ்வர்ண கட்டிலில் அனைத்து திவ்ய ஆபரணங்களுடன் கூடியவனாக –
பன்றியின் குருதி போன்ற சிவந்த நறுமணம் கொண்ட சந்தனம் பூசியவனாக -அருகில் உள்ள
ஸ்ரீ சீதாபிராட்டி சந்திரனுடன் இணைந்த சித்திரை நக்ஷத்ரம் போன்று சாமரத்துடன் நிற்க –
குபேரன் போன்று அமர்ந்து இருந்த ஸ்ரீ ராமபிரானை ஸூமந்த்ரன் கண்டான்
ஸூர்யன் போன்ற தேஜஸ் கொண்டவனாயும் கேட்க்கும் வரங்கள் அளிப்பவனாயும் உள்ள
ஸ்ரீ ராமபிரானை ஸூமந்த்ரன் பணிந்தான்
என்று ஸ்ரீ மஹாபாராத ஸ்ரீ ராமாயணங்களில் சொல்லப்பட்ட அவதார ஆஸீகையாலே வ்யஞ்சிதமான
பரமபத பர்யங்கத்திலே எழுந்து அருளி இருக்கிற ச பத்நீகனான சர்வேஸ்வரன் தாளிணைக் கீழ்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்கிற மநோரதத்தின் படியே
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த்தை உசித சர்வ வித கைங்கர்யங்களையும் பெற்று வாழ்வார்கள்
இப்படி ஸ்ரீ யபதியான நாராயணன் திருவடிகளே உபாய தசையிலும் பல தசையிலும் உப ஜீவ்யங்கள்
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகள் ஸ்தோத்ரம் –
உறு சகடம் உடைய ஒரு காலுற்று உணர்ந்தன
உடன் மருதம் ஓடிய ஒரு போதில் தவழ்ந்தன
உறி தடவும் அளவில் உரலோடு உற்று நின்றன
உறு நெறி ஓர் தருமன் விடு தூதுக்கு உகந்தன
மற நெறியர் முறிய பிருதானத்து வந்தன
மலர்மகள் கை வருட மலர் போதில் சிவந்தன
மறு பிறவி அறு முனிவர் மாலுக்கு இசைந்தன
மனு முறையில் வருவது ஓர் விமானத்து உறைந்தன
அறமுடைய விசயன் அமர் தேரில் நிகழ்ந்தன
அடல் உரக படம் மடிய ஆடிக் கடிந்தன
அறு சமயம் அறிவு அரிய தானத்து அமர்ந்தன
அணி குருகை நகர் முனிவர் நாவுக்கு அமைந்தன
வெறியுடைய துவள மலர் வீறுக்கு அணிந்தன
விழு கரி ஓர் குமரன் என மேவிச் சிறந்தன
விறல் அசுரர் படை அடைய வீயத் துரந்தன
விடல் அரிய பெரிய பெருமாள் மென் பதங்களே –
இதி யதிராஜ மஹாநஸ பரிமள பரிவாஹ வாஸிதாம் பிபத
விபுத பரிஷத் நிஷேவ்யாம் வேதாந்த உதயந சம்பிரதாய ஸூதாம்
திரு மடைப்பள்ளி ஆச்சானுடைய சம்ப்ரதாயம் கொண்ட அமிர்தத்தை பருகுவீர்
கல கண்ட குண ஆஸ்வாத்ய காமஸ்ய அஸ்த்ரே நிஜாங்குரே
நிம்ப விருத்திபிஸ் உத்கீர்ணே ந ஸூத பரிதப்யதே
மா மரம் ஓன்று குயில்களால் நன்றாக சுவைத்து உண்ணப்படுவதும் -மன்மதனுடைய செயல்களுக்கு ஏற்றதாக உள்ளதும்
ஆகிய தனது தளிர் இலைகளைக் கொண்டு வாழ்கின்ற விலங்குகளால் அந்தத் தளிர்கள் உமிழப் பட்டாலும்
வருத்தம் அடைவது இல்லை –
அதே போன்று இந்த நூலை அஸூயை அடியாகத் தள்ளினாலும் எந்தக் குறையும் இல்லையே –
முன்பெற்ற ஞானமும் மோகம் துறக்கலும் மூன்று உரையில்
தன்பற்ற தன்மையும் தாழ்ந்தவர்க்கு ஈயும் தனித் தகவும்
மன்பற்றி நின்ற வகை உரைக்கின்ற மறையவர் பால்
சின்பற்றி என் பயன் சீர் அறிவோர்க்கு இவை செப்பினமே –
நிர்விஷ்டம் யதி ஸார்வ பவ்ம வசஸாம் ஆவிருத்திபிர் யவ்வனம்
நிர்தூத இதர பாரதந்தர்ய நிரயா நிதா ஸூகம் வாசரா
அ ங்கீ க்ருத்ய சதாம் ப்ரசத்திம சதாம் கர்வ அபி நிர்வாபித
சேஷ ஆயுஷி அபி சேஷி தம்பதி தயா தீஷாம் உதீஷா மஹே
யதிராஜர் ஸ்ரீ ஸூக்திகளைக் கற்று இளமைக்காலம் நன்றாக இனமாகவே கழிந்தது
சான்றோர்கள் அனுக்ரஹத்தால் மற்ற மதங்களுடைய செருக்கும் ஓடுக்கப்பட்டன-
இனி திவ்ய தம்பதிகளுடைய கருணையால் உண்டாகும் சங்கல்பத்தையே எதிர்நோக்கி நிற்கிறோம் –
செப்பச் செவிக்கு அமுது என்னத் திகழும் செழும் குணத்துத்
தப்பு அற்றவருக்குத் தாமே உகந்து தரும் தகவால்
ஒப்பற்ற நான்மறை உள்ளக் கருத்தில் உறைத்து உரைத்து
முப்பத்து இரண்டு இவை முத்தமிழ் சேர்ந்த மொழித் திருவே —
வேதாந்த தாத்பர்யம் -அமிர்தம் போன்ற இவை -முப்பத்து இரண்டு -பாசுரங்களும்
முத்தமிழுக்கும் அலங்காரமாக ஆகும்-
ஆஸ்திக்யவாந் நிசித புத்திர் அநப்ய ஸூயுர்
சத் ஸம்ப்ரதாய பரிசுத்த மநா சத் அர்த்தா
சங்கேத பீதி ரஹித ஸத்ருணேஷு அசக்த
சத் வர்த்தநீம் அநு விதாஸ்யதி ஸாஸ்வதீம் ந —
மறை உரைக்கும் பொருள் எல்லாம் மெய் என்று ஓர்வார்
மன்னிய கூர் மதி உடையார் வண் குணத்தில்
குறை உரைக்க நினைவில்லார் குருக்கள் தம் பால்
கோதற்ற மனம் பெற்றார் கொள்வார் நன்மை
சிறை வளர்க்கும் சில மாந்தர் சங்கேதத்தால்
சிதையாத திண் மதியோர் தெரிந்தது ஓரார்
பொறை நிலத்தின் மிகும் புனிதர் காட்டும் எங்கள்
பொன்றாத நன்னெறியில் புகுத்துவாரே —
இது வழி இன்னமுது என்றவர் இன்புலன் வேறு இடுவார்
இது வழியாம் அலவென்று அறிவார் எங்கள் தேசிகரே
இது வழி எய்துக என்று உகப்பால் எம் பிழை பொறுப்பார்
இது வழியா மறையோர் அருளால் யாம் இசைந்தனமே —
எட்டும் இரண்டும் அறியாத எம்மை இவை அறிவித்து
எட்ட ஒண்ணாத இடம் தரும் எங்கள் அம் மாதவனார்
முட்ட வினைத்திரள் மாள முயன்றிடும் அஞ்சல் என்றார்
கட்டெழில் வாசகத்தால் கலங்கா நிலை பெற்றனமே —
வானுள் அமர்ந்தவருக்கும் வைகுந்த வரும் நிலைகள்
தான் உளனாய் உகக்கும் தரம் இங்கு நமக்கு உளதே
கூன் உள நெஞ்சுகளால் குற்றம் எண்ணி இகழ்ந்திடினும்
தேனுள பாத மலர்த் திரு மாலுக்குத் தித்திக்குமே —
வெள்ளைப் பரிமுகர் தேசிகராய் விரகால் அடியோம்
உள்ளத்து எழுதியது ஓலையில் இட்டனம் யாம் இதற்கென்
கொள்ளத் துணியினும் கோது என்று இகழினும் கூர் மதியீர்
எள்ளத்தனை உகவாது இகழாது எம் எழில் மதியே —
ரஹஸ்ய த்ரய சாரம் அயம் வேங்கடேச விபச்சிதா
சரண்ய தம்பத விதாம் சம்மத சமக்ருஹ்யத-
நிகமந அதிகாரம் சம்பூர்ணம்
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் சம்பூர்ணம்
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரம் சம்பூர்ணம்
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply