ஸ்ரீ பெரிய ஜீயருரை-அவதாரிகை-
என்னுடைய நெஞ்சானது எம்பெருமானாருடைய சீல குணம் ஒழிய-வேறு ஒன்றை நினையாதபடி யாயிற்று-–
இது எனக்கு சித்தித்த பெரு விரகு ஒன்றும் அறிகிலேன் என்கிறார் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய அவதாரிகை
கீழில் பாட்டில் -நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று தம்முடைய மனசோடு கூடி உபதேசித்த வாறே-
மனசானது அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் பட்டு -அநந்ய சிந்தயந்தோமாம் -என்கிறபடியே-
அவர் திருவடிகளை அனுபவித்துக் கொண்டு -தத் வ்யதிரிக்தமானவற்றை விரும்பாதே இருந்தது –இது என்ன ஆச்சர்யம் -என்கிறார் .
அமுது விருந்து–அவதாரிகை –
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -என்றதும் என் நெஞ்சு எம்பெருமானாரது பழகும் தன்மையில்-மூழ்கி -சீல குணத்தில் ஈடுபட்டு
வேறு ஒன்றையும் நினைக்க கில்லாததாயிற்று –இச் சீரிய நிலை எய்துதற்கு-காரணம் ஏதும் தெரிய வில்லை என்கிறார் –
கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத வன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஓன்று அறியேன் எனக்குற்ற பேர் இயல்வே – 2-
கள்ளார் பொழில்
மது மிக்க பொழிலை உடைத்தாய் –
மது இருந்து ஒழுகின மா மலர் எல்லாம் -திருப்பள்ளி எழுச்சி–1-
மது ஒழுகின -கொட்டிண்டே இருக்கும் –
மா மலர் -ஜாதிக்கு எல்லாம் உப லக்ஷணம்
மா மலர்- புஷ்ப ஜாதி எல்லாம் செண்பக –எண் வகை- பந்து வெளியூர் வந்தவர் கண்டு மலருமா போலே –
செங்கழு நீர் ஆம்பல் கூம்பும்–பூ சூடல் எப் பொழுது மலரும் பூவை சூட்டுகிறார்-
கொழும் கொடி முல்லையின் கொழு மலர் அணவிக் கூர்ந்தது – குணதிசை மாருதும் இதுவோ –திருப்பள்ளி எழுச்சி–2–
கொடியில் மலரும் முல்லைகள்-செவ்வி மலரின் பரிமளத்தை -கொழுமை கொடிக்கும் முல்லைக்கும் —முகங்களில் அலை எரியா நின்றது –
குடத்தோடே நீர் கொட்டுவாரைப் போலே பரிமளம்
காலைப் பிடித்து உணர்த்துவாரைப் போலே -சேஷத்வம் அறிந்த காற்று அன்றோ -வருடி கொடுத்தாலே எழுந்து
காற்று போலே கூசி பிடிக்க வேண்டிய மெல்லடி -பொய்யான வியாஜ்யம் தானே -எழுந்து இருக்க-அறிவிப்பே அமையும்
பனி வாடை காற்றாக காலை பிடித்து உணர்த்தும் படி—
கிழக்கு திசை காற்று திருவடியில் விழுந்து -சேஷத்வ அனுரூபமாக -திருவடி கொள்ள தானே யோக்யதை-
கள்ளார் பொழில் தென் அரங்கன்
தென்–தர்சநீயமாய் இருந்துள்ள கோயிலிலே –கண் வளர்ந்து அருளுகையாலே –
அத் தேச சம்பந்தத்தை இட்டுத் தம்மை நிரூபிக்கலாம் படி இருக்கிற பெரிய பெருமாள்
பூகி கண்ட த்வய சசரசஸ் நிக்த நிரோபகண்ட ஆவிர் மோதாஸ் திமிதச குநா நுதித ப்ரம்ம கோஷாம்-என்றும் சொல்லுகிறபடி
மதுச்யந்தியான புஷ்ப விசேஷங்களால் வ்யாப்தங்களான உத்யானங்களாலே சூழப்பட்ட-
திருவரங்கத்தில் உள்ள பொழில்களில் தேன் மிக்கு உள்ளது –கள் -தேன்
இத்தால் மிக இன்பம் பயப்ப என்றபடி -பொழில் விடை ஆற்றுவது என்றபடி
தேனார் பொழில் சூழ் திரு வெள்ளக்குளத்துமானாய் அடியேனுக்கு அருள் புரியாயே -பெரிய திருமொழி -4-7-4-
தேமருவு பொழில் -என்னும் திரு மங்கை மன்னன் திரு வாக்கு இங்கே நோக்குதற்கு உரியது –
வண்டு- தேன் உண்டு பொழிலில் மதம் கொண்டு உலாவுவது போலே
பிராட்டி யாகிற தேனை உண்டு அரங்கன் என்னும் தெய்வ வண்டு இப் பொழிலில் மதம் கொண்டு உலாவி விளையாடுகிறது என்க –
நித்யம் த்வன் மதுபான மத்த மதுப-என்று பிராட்டியை தேனாக பட்டர் ஸ்ரீ குண ரத்ன கோசத்தில்-உருவகம் செய்து அருளிச் செய்கிறார் –
அடியார்கட்கு போக்யதை மிகுந்து விடாய் தீர்க்கும்-பரம பதம் போன்றது அரங்கனுக்கு இப் பொழில் –
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-
அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே–5-8-2-
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே -5-8-3-
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-4-
பொன்னருள் எனக்கும் ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே-5-8-5-
பேரருள் எனக்கும் அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6-
வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-7-
உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -5-8-8-
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே -5-8-9-
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை–5-8-10-
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் -என்றும்
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்-திரு மாலை-32-
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை கொண்டல் மீது அணவும் சோலை
குயிலினம் கூவும் சோலை அண்டர் கோன் அமரும் சோலை –திரு மாலை-14-
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ் சோலை தளர் விலர் ஆகில் சார்வது சதிரே–-ஸ்ரீ திருவாய் மொழி-2-10-1-
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ் சோலை அயன் மலை அடைவது அது கருமமே–-ஸ்ரீ திருவாய் மொழி-2-10-3-
தென்னரங்கன் –
அத்தாலே தர்சநீயமான திருவரங்கமே தனக்கு நிரூபகமாம்படி நித்ய வாசம் பண்ணுகிற ஸ்வாமி உடைய திருப்பதி – என்றபடி –
இவ்விடத்துக்கு இது முக்யமான திரு நாமம் -காணும் –
தென் -அழகு -பொழில் உடைத்தான அரங்கம் என்க –அரங்கன் -என்றது வேம்கடவன் என்பது போன்றது –
திருப்பதியை முன்னிட்டே-குறிப்பிடும்படி-அதனை அபிமாநித்தல் பற்றி இங்கனம் குறிப்பிட்டார் -என்க –
விண்ணும் மண்ணும உடைமை-பற்றி உபய விபூதிகளும் உடையான் என்பதை பார்க்கிலும் –
தென் அரங்கம் உடையான் என்பது-அவனுக்கு ஏற்றமாய் இருக்கிறது –
கமலப் பதங்கள்
விகாசாதிகளால் தாமரை போலே போக்யமான திருவடிகளைத் தங்கள் மனசிலே ஒரு காலும் வையாதே –
சாஸ்திர வச்யமான ஜன்மத்திலே பிறந்து வைத்து நிர் பாக்யராய் இருக்கும் அவர்களை விட்டு அகன்று-
கமலப் பதங்கள் –
கமலப் பதம் -தீர்த்த வாசகமாய் -பாவனமான -என்னுதல்-சம்சார தாபதப்தனுடைய ஸ்ரமஹரமான -என்னுதல் –
பாத கமலம் -என்னாதே முந்துற முன்னம் கமலம் என்றது -சர்வேஸ்வரன் திருவடிகளை சேவிக்கும் போது
பாவநத்வாதிகளுக்கு முன்பே போக்யதையைக் கண்டு முற்றூட்டாக அனுபவித்தவர் ஆகையாலே –
செவ்வி மணம் குளிர்ச்சி மலர்ச்சி-இவைகளால் தாமரை போன்றன திருவடிகள்
அரங்கன் -பதங்கள்- என்கையாலே ப்ராப்தமுமாய் –
கமலப் பதங்கள் -என்கையாலே ப்ராப்யமுமான திருவடிகள் -என்றபடி-
புண்டரீக பாத புண்ய கீர்த்தி நும் செவி மடுத்து உண்டு நும் உரு வினைத் துயருள் நீங்கி உய்ம்மினோ -திருச்சந்த -67-
அரங்கத்து அம்மான் திருக்கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே -அமலனாதி பிரான்-1-
வழி பட்டோடே அருள் பெற்று மாயன் கோல மலரடிக்கீழ் –திருவாய் மொழி -8-10-5-
உன் இணை மலர் தாள் என் தனக்கும் அது இராமானுச இவை ஈந்து அருளே -ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-70-
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே வீசு புகழ் எம்மா வீடு -திருவாய் மொழி நூற்றந்தாதி -18-
நெஞ்சில் கொள்ளா மனிசரை நீங்கி––
போக்யமான திருவடிகளைத் தங்கள் மனசிலே ஒரு காலும் வையாதே –
சாஸ்திர வச்யமான ஜன்மத்திலே பிறந்து வைத்து நிர்பாக்யராய் இருக்கும் அவர்களை விட்டு அகன்று-
விசித்ரா தேக சம்பந்தி ரீச்வராய நிவேதிதும் பூர்வமே வக்ர்தா பிரம்மன் ஹஸ்த பாதாதி சாயுதா -என்கிறபடியே
அலாப்யலாபமாக பகவச் சரண கமல பரச் சரணத்திற்கு இட்டு பிறந்த மனுஷ்ய தேகத்தை பெற்றும் –
திருவடிகளை நெஞ்சில் கொள்ளாதே இருக்கிற -கர்ப்ப நிர்பாக்யர் கோஷ்டியில் -நின்றும் நீங்கி அகன்று –
தங்கள் இதய தாமரையிலே -திருவடித் தாமரையை சேர்த்து வைத்து கொளாத மனிசர்களை –
மலரை மலரோடு சேர்த்து வைப்பது அன்றோ முறை –
நீங்கி –
கண்ணன் பால் சிந்தனையை செலுத்தாத மனிசரோடு வாசம் செய்யும் கொடுமை நல்லது அன்று –என்றபடி
எம்பெருமான் இடம் நெஞ்சு செலுத்தாதவர் பக்கல் இருப்பது தாங்க ஒணா வெப்பம்-விளைத்தலின் விலகினார் -என்க
பன்னரும் கொடு மனப்பாவி பாடிரேன்-என்று பரதன் இராமன் பால் பரிவு நீங்கிக் கொடிய-மனம் படைத்த பெற்ற தாயான
கைகேயியின் பக்கல் இருக்க மாட்டாது –
துன்னரும் துயர் கெடத் தூய கோசலை பொன்னடி தொழப் போனதாகக் கம்பன்-
நெஞ்சில் கொள்ளா மனிசரை நீங்கி-
தேவ பிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே––ஸ்ரீ திருவாய் மொழி-3-5-10-
நெடும் தகையை நினையாதார் நீசர் அன்றோ –
குறையல் பிரான் அடிக் கீழ்
திருக் குறையலூரை திரு அவதார ஸ்தலமாக உடையவராய் -திவ்ய பிரபந்த நிர்மாண முகத்தாலே லோக உபகரகாரகரான
திரு மங்கை ஆழ்வாரை உடைய திருவடிகளின் கீழ்
திருக் குறையலூரில் அவதரித்து-திவ்ய பிரபந்த நிர்மாணத் தாலும் -திரு அத்யயனத்துக்கு-ஏகாதசியிலே திரு நாள் நடப்பித்த படியாலும் –
அவ்விடத்திலே பெருமாளுக்கு அரணாக திரு மதிளை-நிர்மாணம் பண்ணி வைத்த படியாலும் -ருத்ர பஷபாதிகளான குத்ருஷ்டிகளுடன் தர்க்கித்து
அவர்களை-ஜெயித்து -அவர்களாலே பழிக்கப் பட்ட திவ்ய தேசங்களை நிர்வஹித்த படியாலும் -இப்படிகளாலே-உபகாரகரான
திரு மங்கை ஆழ்வார் உடைய –திருவடிகளின் கீழே –-
அடிக்கீழ் விள்ளாத வன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால் உள்ளாது என் நெஞ்சு ஓன்று அறியேன் எனக்குற்ற பேர் இயல்வே
விண்டு நீங்காத சிநேகத்தை உடையராய் இருந்துள்ள எம்பெருமானார் உடைய நிரவதிகமான சீல குணத்தை ஒழிய
என்னுடைய நெஞ்சானது-வேறு ஒன்றையும் சிந்திக்கிறது இல்லை –
இவ் ஆழ்வார் பிரதம பர்வ நிஷ்டர் ஆகையாலே -அணி பொழில் திருவரங்கத்து அம்மானை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பர்
இவ் எம்பெருமானார் சரம பர்வத்தில் ஊற்றமுடையவர் ஆகையாலே அவ் ஆழ்வாருடைய-திருவடிகளிலே –
ஒருக்காலும் விடாதே சக்தமான பக்தியை உடையராய் இருப்பர் –
இராம பிரானுக்கும் குறையல் பிரானுக்கும் தென் அரங்கன் கமலப் பதங்கள்
கீழ் விள்ளாத அன்பு -ராமானுசனுக்கோ-லஷ்மண னுக்கோ -இராம பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு –
இவ் இராமானுசக்கோ குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு-
திருநகரியில் இன்றும் திருமங்கை ஆழ்வார் அடிக்கீழ் எம்பெருமானாரை சேவிக்கிறோமே –
மிக்க சீலமல்லால் –
தாம் மகானுபவராய் இருந்து வைத்தும் -என்போலாம் மந்த மதிகளோடே -புரையறக் கலந்து
பரிமாறின சீல குணம் ஒன்றிலே ஈடுபட்டு -அது ஒழிய வேறு ஒன்றிலும் போக மாட்டாது-
இப்படி ப்ரவணனாய் ஆகுகைக்கு விரகு ஒன்றும் அறிகிலேன்-
பெருமாளுக்கு சீலம் -அவன் தம்பிக்கு அரசு ஈந்ததால் -இவரோ மாக வைகுந்தம் அருளிய மிக்க சீலம் அன்றோ –
பகு ஜன்மங்கள் தன்னில் தபோ ஜ்ஞான சமாதிகளை பண்ண வேண்டி இருக்க -அங்கன் இன்றிக்கே
சொல்லுவோம் அவன் நாமங்களே -என்று அத்யாவாஸ்யம் மாத்ரம் பண்ணின படி –எனக்கு –உற்ற -சித்தித்த
பேர் இயல்வே -சமஸ்த உபாயங்களை காட்டிலும் -பெரியதாய் விலஷணமான உபாய விசேஷம் –ஓன்று அறியேன் –
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன நெஞ்சு நிறைய பேரேன் என்று புகுந்தான் –
இங்கே-சொல்லுவோம் என்ற யுக்தி மாத்திரத்துக்கே பெற்றார் அமுதனார்
எத்தாலே இந்த சொல் சேர்த்தி லபித்தது –நான் ஒன்றும் அறிகிலேன் –
முந்துற்ற நெஞ்சே -நீ அறிந்தே ஆகில் சொல்லிக் காண்-
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற்பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் – ஸ்ரீ பெரிய திருவந்தாதி-1-
நெஞ்சமே! நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்– ஸ்ரீ திருவாய் மொழி -1-10-4-
என் நெஞ்சினாறும் அங்கு ஒழிந்தார்- இனி யாரை கொண்டு உசாகோ
நின் இடையேன் அல்ல என்று நீங்க….காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சம்-
கடல் கொண்ட வஸ்து திரும்பாதே..ராமன் பின் தசரதன் கண் போனதே
வரவாறு ஓன்று இல்லை வாழ்வு இனிது என்றது ஆயிற்று-
முதலில் நெஞ்சு ஒதுக்கி வைத்து உபதேசம்-அங்கே நெஞ்சே சொல்லுவோம் என்றார் என் நெஞ்சே சொல்லவில்லையே-
அடுத்து ராமானுஜர் திருவடி சேர்ந்ததால் என் நெஞ்சு.என்று சொந்தம் கொண்டாடுகிறார் இதில் –
கண்ண புரம் கை தொழும் பிள்ளையை -வாழ்த்திய பரகால நாயகி அன்னை போலே
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-
ஆழ்வாருக்கு அவன் அருளியது போலவே
கீழே மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுஜன் இங்கு குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத வன்பன்
எம்பெருமானாரே தம் சீல குணத்தினால் என் நெஞ்சைக் கட்டுப் படுத்தினார் என்பது கருத்து-
—————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply