ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்-3-10- புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப திரு நாமங்கள் -226-247/3-11–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி -248-271—

அக்ரணீர் க்ராமணீஸ் ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸ்மரணீ
சஹஸ்ர மூர்த்தா விஸ்வாத்மா சஹஸ்ர ராஷஸ் சஹஸ்ர பாத் –24-

ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா சம்வ்ருதஸ் சம்ப்ரமர்த்தன
அஹஸ் சம்வர்த்தோ வஹ்நி அநிலோ தரணீதர –25

ஸூ ப்ரசாத பிரசன்னாத்மா விஸ்வஸ்ருக் விஸ்வபுக் விபு
சத்கர்த்தா சத்க்ருதஸ் சதூர் ஜஹ்நுர் நாராயணோ நர –26

அசங்க்யேயோ அப்ரமேயாத்மா விசிஷ்ஸ் சிஷ்டக்ருச் சுசி
சித்தார்த்தஸ் சித்த சங்கல்பஸ் சித்திதஸ் சித்தி சாதன –27-

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர
வர்த்த நோ வர்த்தமா நஸ்ச விவிக்தஸ் ஸ்ருதிசாகர –28

ஸூ புஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸூதோ வஸூ
நைகரூபோ ப்ரருஹத்ரூபஸ் சிபிவிஷ்ட ப்ரகாசன–29

——————

3-1-பிரதம அவதாரம் விஷ்ணு -147-152- திரு நாமங்கள்–6 -திரு நாமங்கள்
3-2-வாமன அவதார பரமான -153-164 திரு நாமங்கள் —12-திரு நாமங்கள்
3-3- துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -165-170-திரு நாமங்கள்–6-திரு நாமங்கள்
3-4-ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் -171-181- திரு நாமங்கள்-11-திரு நாமங்கள்
3-5-குணங்களுக்கு ஏற்ற அவதார செயல்கள் -182-186-திரு நாமங்கள்–5 திரு நாமங்கள்
3-6-ஹம்ஸாவதாரம் -187-194-திரு நாமங்கள்-7 திரு நாமங்கள்
3-7-பத்மநாபாவதாரம்-195-199-திரு நாமங்கள்-5 திரு நாமங்கள்
3-8-நரசிம்ஹ அவதாரம் ——200-210—திரு நாமங்கள்—11 திரு நாமங்கள்
3-9-மத்ஸ்ய அவதார -211-225- திரு நாமங்கள் –15-திரு நாமங்கள்
3-10- புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப—226-247- திரு நாமங்கள் -22-திரு நாமங்கள்
3-11–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி -248-271-திரு நாமங்கள் -23-திரு நாமங்கள்
3-12-விஸ்வ ரூபம் —272-300-திரு நாமங்கள் -29-திரு நாமங்கள்

நரசிம்ஹ அவதாரம் ——–200-210——11 திரு நாமங்கள்
மத்ஸ்யாவதாரம் ———–211-225——15 திரு நாமங்கள்
உபநிஷத் திரு நாமங்கள் —226–246—–21 திரு நாமங்கள்
நாராயணன் ———————247–271—–25 திரு நாமங்கள் –
விஸ்வரூபன் ———————272–300—–29 திரு நாமங்கள் –

—————-

3-10- புருஷ ஸூக்த உபநிஷத் ப்ரதிபாதித விராட் ஸ்வரூப திரு நாமங்கள் -226-247-

அக்ரணீர் க்ராமணீஸ் ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸ்மரணீ
ஸஹஸ்ர மூர்த்தா விஸ்வாத்மா சஹஸ்ர ராஷஸ் ஸஹஸ்ர பாத் –24-

226-ஸஹஸ்ர மூர்தா –
தலைகள் பல பல – உடையவன் -தோள்கள் ஆயிரத்தாய்-முடிகள் ஆயிரத்தாய் -8-1-10-

அத ₂ஏதத்₃விதா₄வதாரோஜ் ஜீவிதாஸு புருஷ ஸூக்தாத்₃யாஸு பர வித்₃யாஸு யதா₂
ப்ரதிபாத்₃யதே ; ததா₂(அ)நுரூபாணி நாமாநி ஸஹஸ்ர மூர்தா₄தீ₃நி ।
ஸஹஸ்ர மூர்தா₄ ;
ம்ருர்தா₄க்ஷி பாதா₃꞉ ஜ்ஞாந கர்ம உப கரண உப லக்ஷணார்தா₂꞉ ।(கண் ஞானம் பாதம் கர்மம்  -இந்திரியங்கள் இல்லாமல் செய்பவன் அன்றோ)
ஸஹஸ்ர ஸப்₃த₃ஶ்ச தேஷாம் அஸங்க்₂யேயத்வ பர꞉,

விஸ்வத சஷுஸ் விஸ்வதோ முகம் –தைத்ரியம் –அனைத்துப் பக்கங்களிலும் கண்களும் முகங்களும் உள்ளவன்

ஸ்ரீ மத் பகவத் கீதை –13-13-ஸர்வதஸ் பாணீ பாதம் தத் – இத்யாதி ஞாபகாத்
அனைத்து திசைகளிலும் தனது கைகளையும் கால்களையும் ப்ரஹ்மம் கொண்டுள்ளது

அறிதல் செயல் புரிதல் இவற்றுக்கு உப லக்ஷணம் -திறன்களை எல்லையே இல்லை என்றவாறு

ஆயிரக் கணக்கான தலைகளை உடையவர் -ஞானத்தின் வடிவமான மத்ஸ்யாவதாரத்தில் வெளிப்படுத்தப் பட்டவையும்
புருஷ ஸூக்தம் முதலிய பர வித்யைகளில் கூறப் பட்டவையுமான ஸஹஸ்ர மூர்த்தா முதலிய திரு நாமங்கள் கூறப் படுகின்றன –
ஆயிரம் தலைகளை உடையவர் -தலை என்பது கண் பாதம் ஞானம் செயல்கள் உபகரணங்கள் முதலிய வற்றையும் குறிக்கும் –
ஆயிரம் -எண்ணற்றவை என்ற பொருளில் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயிரம் தலைகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான தலைகளை உடையவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

227-விஸ்வாத்மா –
எங்கும் உள்ளவன் -ஞான சக்திகளால் வியாபித்து

தைஶ் ச தத் கார்ய ஜ்ஞாந க்ரியா ஸாமர்த்₂ய அநந்த்யம் லக்ஷ்யதே இத் யபி₄யுக்தா꞉ ;
ஔசித்யாத்₃ பஹு ஸாஸ்த்ர ஸங்க₃தேஶ்ச ॥
ஆப்₄யாம் ஜ்ஞாந ஸஹ நாப்₄யாம் விஶ்வ வ்யாபநாத்
* விஶ்வாத்மா; யதா₂

ஸ பூமிம் விஸ்வதோ வ்ருத்வா –புருஷ ஸூக்தம் —அனைத்து திசைகளிலும் பூமியை வியாபித்து

யேந ஏஷ பூத திஷ்டதி அந்தராத்மா –தைத்ரியம் –
யார் எங்கும் வியாபித்து உள்ளானோ அவனே அனைத்தின் அந்தர்யாமியாகவும் உள்ளான்

யேந ஸர்வம் இதம் ப்ரோதம் –தைத்ரியம்
ப்ரக்ருதி காலம் சம்சார ஜீவன் முக்த ஜீவன் மற்றும் நித்ய ஸூரிகள் பலருக்கும் இவனே அந்தராத்மா
அனைத்தும் இவனால் பரவப்பட்டு உள்ளன-ஆகியும் ஆக்கியும் -அவையுள் தனி முதல் அம்மான்

அஹமாத்மா குடாகேச ஸர்வ பூதா –கீதை -10-20-
சோம்பலை வென்ற அர்ஜுனா -அனைத்து உயிரிகளின் இருதயத்தில் நானே உள்ளேன்

உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-

ஞான சக்திகளினால் உலகு எங்கும் பரவி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகிற்கு ஆத்மாவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகிற்குக் கட்டளை இடுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

————–

228-ஸஹஸ்ராஷ-
துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் -8-1-10

ஆயிரக் கணக்கான கண்களை உடையவர் -ஆயிரம் இந்திரியங்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயிரம் கண்களை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான கண்கள் உள்ளவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

229–ஸஹஸ்ரபாத்-
தாள்கள் ஆயிரத்தாய் -8-1-10-

இங்கு முன்னும் பின்னும் ஆயிரம் என்பது அளவற்றது என்பதைத் தெரிவிக்கும்
தலை கண் என்றதால் மற்ற ஞான இந்திரியங்களையும்
கால் என்றதனால் மற்றக் கர்ம இந்திரியங்களையும் உப லக்ஷண முறையில் குறிக்கும் –

ஆயிரக் கணக்கான பாதங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயிரம் கால்களை உடையவர் -விராட் ஸ்வரூபி –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான பாதங்களை உடையவர் –

—————

ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா சம்வ்ருதஸ் சம்ப்ரமர்த்தன
அஹஸ் சம்வர்த்தோ வஹ்நி அநிலோ தரணீதர –25-

————-

230-ஆவர்த்தன –
திருப்புவான் -சம்சார சுழலை சுழற்றுபவன் -கடீ யந்த்ரம் ஏற்றச்சால் போல் சுற்றி சுற்றி சுழற்றுபவன் –

ஸம்ஸார க₄டீ யந்த்ர பரி வர்தநாத்
ஆவர்தந ꞉ । யதா₂

தேநேதம் ப்ராம்யதே ப்ரஹ்ம சக்ரம் –மஹா பாரதம்
ஸம்ஸாரம் என்னும் சக்கரம் அவனால் சுழற்றப்படுகிறது

பிராமயன் ஸர்வ பூதாநி –கீதை -18-61-
தனது சக்தியால் இயந்திரம் போன்று சுழற்றுகிறான்

கால சக்ரம் ஜகத் சக்ரம் யுக சக்ரம் ச கேசவ ஆத்ம யோகேந பகவான் பரிவர்த்தயதே அநிசம் –மஹா பாரதம்
தனது யோக சக்தி மூலம் எம்பெருமான் காலம் உலகம் யுகம் என்ற சக்கரங்கள் ஆகியவற்றை இடைவிடாது சுழற்றியபடியே உள்ளான்

தஸ்மாத் விராட் அஜாயத –புருஷ ஸூக்தம் –இவனிடம் இருந்து விராட் புருஷன் தோன்றினான்

இத்யாதி₃நாபீத₃மேவோச்யதே–

கால சக்கரத்தான் -4-3-5-

ஏற்றச் சாலைப் போல் சம்சாரத்தைத் திருப்புவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார சக்ரத்தை திருப்பும் இயல்வுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நதிகளில் உள்ள நீரில் சூழல்களை உண்டாக்குபவர் -எல்லா இடத்திலும் இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

231-நிவ்ருத்தாத்மா –
ப்ராக்ருதங்களுக்கு அப்பால் பட்டவன் -சர்வ உத்க்ருஷ்டன் -பராத் பரன் –
மீண்டும் 453-(484)–604–780-வரும்

ததஸ் ஸம்ஸார மஹா விபூ₄தே த்ரிபாத்₃விபூ₄திகத்வேந நிவ்ருத்தம் உ த்₃க₃தம் ஸ்வரூபம் யஸ்ய ஸ꞉
நிவ்ருத்தாத்மா ।

த்ரிபாத் ஊர்த்வம் உதேத் புருஷ –புருஷ ஸூக்தம் –ஸம்ஸார மண்டலத்தைக் காட்டிலும் மூன்று
மடங்கு பெரிதாக உள்ள பரமபதத்தில் வீற்றுள்ளான்

பராத் பரம் யத் மஹதோ மஹாந்தம் -இத்யாதி₃ ॥-தைத்ரியம் –
உயர்ந்த வற்றை விட உயர்ந்தவனாகப் புகழப்படும் அனைத்தையும் விட உயர்ந்தவனாக

ப்ரக்ருதிக்கு மூன்று மடங்கான நித்ய விபூதியில் இருப்பதாகிய தம் ஸ்வரூபம் பிரவ்ருதியை கடந்ததாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார பந்தம் இல்லாத ஸ்வரூபம் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரளயத்தில் ஆத்மாக்கள் திரும்பும்படி செய்பவர் -அநிவ்ருத்தாத்மா-அழியாத சரீரம் உடையவர் -என்றுமாம் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

232-சம் வ்ருத
நன்கு மறைக்கப் பட்டவன் –

தஸ்யாம் அவஸ்தா₂யாம்
*। தமஸ꞉ பரஸ்தாத், இதி தாமஸாநாம் மூடா₄நாம் கூ₃ட₄த்வாத்
ஸம்வ்ருத꞉ ॥

தமஸஸ் பரஸ்தாத் –புருஷ ஸூக்தம் –தமஸ் என்னும் இருளுக்கு அப்பால் உள்ளவன்

அஹம் வேத்மி -விஸ்வாமித்ராதிகளுக்கு
உயர்வற உயர் நலம் உடையவன் -ஆழ்வார் உணர்ந்தார்
காணலுமாகான் உளன் அல்லன் இல்லை அல்லன் -2-5-10-

உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வது அரிது

தஸ்யாம் அவஸ்தா₂யாம்
*। தமஸ꞉ பரஸ்தாத், இதி தாமஸாநாம் மூடா₄நாம் கூ₃ட₄த்வாத்
ஸம்வ்ருத꞉ ॥-ஸ்ரீ பராசர பட்டர் –

பகலை நன்றாக உண்டாக்கும் ஸூர்யன் -–ஸ்ரீ சங்கரர் –

நற் குணங்களுடன் கூடியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

233-சம் ப்ரமர்த்தன –
நன்றாக அழிப்பவன்-அஞ்ஞானம் தமஸ் அழித்து-

ஸம் வரணம் தம꞉ ஸ்வ வித்₃யயா ஸம் ப்ரமர்த₃யதீதி ஸம்ப்ரமர்த₃ந –யதா

தம் ஏவம் வித்வான் அம்ருத இஹ பவதி –புருஷ ஸூக்தம்
இப்படியாக யார் எம்பெருமானை உபாஸனை செய்கிறானோ அவன் இங்கேயே இறவாமை அடைகிறான்

ய ஏவம் விது அம்ருதா தே பவந்தி அத இதரே துக்கம் ஏவ அபியந்தி –ப்ருஹத் ஆரண்ய உபநிஷத்
இப்படியாக உபாஸிக்கிறவர்கள் முக்தி அடைகிறார்கள்
உபாஸனை செய்யாதவர்கள் துன்பமான ஸம்ஸாரத்தை மீண்டும் அடைகின்றனர் –

ஞான தீபேந பாஸ்வதா

தெருளும் மருளும் போக்கி -தெருள் ஞானம் ரஜோ குண பிரம்மனிடம் இருந்து கேட்டதையும்
மருள் தமோ குண ஞானம் இருந்து கேட்டது
இரண்டையும் அழித்து
தீ மனம் கெடுத்து மருவித் தொழும் தந்தாய்

உணர்விலும் உம்பர் ஒருவனை என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -8-8-3-

தம்மை உபாஸனை செய்வதால் அந்தப் பிரக்ருதி என்னும் இருளை முழுதுமாக அழிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

ருத்ரன் எமன் முதலிய தமது பரிவாரங்களினால் உலகை சம்ஹரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களை நன்கு அழிப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

234-அஹஸ் சம்வர்த்தக –
பகலை காலத்தை நடத்துபவன் –ஆவர்த்தன கீழே பார்த்தோம் அதே போல் இங்கும்

அஹருப லக்ஷித கால பரி வ்ருத்தி ஹேது꞉
அஹஸ் ஸம்வர்தக꞉ ।
ண்வுல் । * யுவோர நாகௌ । யதா

அஷ்டாத்யாயீ –யுவோ அநாகவ் –-யு மற்றும் வு என்பதில் அந மற்றும் அக என்பது சேர்க்கப்படும் என்றது போல் இங்கு உள்ளது

ஸர்வே நிமேஷா ஜக்ஜிரே வித்யுதஸ் புருஷா அதி –தைத்ரிய நாராயண வல்லி
மின்னல் போன்று ஒரு நொடிக்குள்ளும் தோன்றி மறைகிற அனைத்தும் கூட மின்னல் போன்ற
ஒளியை யுடைய பரம் பொருள் இடம் இருந்தே உண்டாகின்றன

கால சக்ரம் இத்யாதி -மஹா பாரத உத்யோக பர்வம் –காலம் என்ற சக்கரத்தை அவனே சுழற்றுகிறான்

காலஸ்ய ஹி -மஹா பாரத உத்யோக பர்வம்–
காலம் போன்ற பலவற்றை தன் வசம் வைத்துள்ளான்

முக்கால ரூபேண -நித்யம் பகவத்  க்ரீடநகம் -காலம் அவனது லீலா உபகரணம்

அஸ்தி இத்யாதி ஷட் பாவ விகார காரிதம் -பிரகிருதி புருஷ சம்யோஜன வியோஜனம் நியஸ்ததி

அத்யாத்மம் கால தத்வீயம் அதி தைவதம் அஸ்ய வை ப்ரபவ அப்யவ மூர்த்திவை விஸ்வாத்ம பரமேஸ்வர
அதிபுதம் பரிஜ் ஜேயம் த்ரை லோக்யம் பூத பூர்வகம் கால ச அவ்யக்த தத் வஸ்ய ஹி அத்யாத்மத்வேந வர்த்ததே
அதி தைவதம் இஜ்யா ச தத் போகம் அதி பூததா –பவ்ஷ்கர ஸம்ஹிதை
அத்யாத்மம் கால தத்வம் -அதன் தோற்றம் அழிவுக்கும் காரணமாகவும் அனைத்து உயிர்களுக்கும் ஆத்மாவாகவும் உள்ள பரமாத்மா அதி தைவதம் ஆகிறான்-பஞ்சபூதங்களாலான மூன்று உலகங்களும் காலத்தின் அதிபூதம் ஆகும்
இது அனுபவிக்கப்பட வேண்டியது -அதி தைவதம் வணங்கப்பட்ட வேண்டும் –

கால சக்கரத்தாய் -7-2-7-காலம் அவன் அதீனம்

பகல் முதலிய கால சக்ரத்தை உருட்டுபவர் -முக் காலமானது லீலைக்கு உபகரணம் -ஷட்பாவ
விகாரம் -பிரகிருதி புருஷன் சேர்ந்து -உழன்று பிரிந்து -இருக்க காரணம் -ஸ்ரீ பராசர பட்டர் –

பகலை நன்றாக உண்டாக்கும் ஸூர்ய ரூபி –ஸ்ரீ சங்கரர் –

நாள்களை நடத்துபவர் -பக்தர்களை கைவிடாதவர் -உலகச் சுழற்சிக்கு முழு ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

235-வஹ்நி-வஹிப்பவன் –ஆகாசம் போல் இடைவெளியாய் இருந்து வஹிப்பவன்

தேச ₃ரூபேண விஶ்வம் வஹதீதி
வஹ்நி꞉ ।
* வஹி ஶ்ரிஶ்ருயு த்₃ருக்₃லாஹாத் வரிப்₄யோ நித் இதி நிப்ரத்யய ।
ப்ரத₂மஶ்ச தே ₃ஸ ꞉ பரமாகாஸ ꞉, ஆபேக்ஷிகோ (அ)ந்யோ
க₃க₃ந  தி₃கா₃தி₃ஸ் தத் கோணே । யதா₂

உணாதி ஸூத்ரம் –வஹி -ச்ரு -ச்ரி யுத்ருச்லாஹா த்வரிப்யோ நித் –
வஹி -ச்ரு -ச்ரி யுத்ரு க்லை போன்ற தாதுக்களுடன் நித் என்பது இணையும் -வஹ் +நி =வஹ்நி

அஸ்ய அம்ருதம் திவி -புருஷ ஸூக்தம் –அவனது பரமபதம் அழியாமல் நித்தியமாக உள்ளது

ஸ்வே மஹிம்நி ஸ்திதம் -விஷ்ணு தர்மம் -7-22-மேன்மை கொண்ட தனது பரமபதத்தில் உள்ளான்

பாத அஸ்ய இஹ அபவாத் புந இத்யாதி₃ । –புருஷ ஸூக்தம் -4-
அநிருத்தன் என்ற நான்காவது ரூபத்தில் இந்தப் பரம பதத்தில் எம்பெருமான் தோன்றினான்

தேஸோ ஹி நாம இஹேத₃ம் இத்யாத்₃யவக₃தி ஹேது꞉ ।
ஸ ச தத்₃த₃த்த ஏவ ப₃த்₃த₄முக்த நித்யேப்₄ய ॥

இந்தப் பொருள் இங்கே உள்ளது இந்த தேசம் போல் குறிப்பிட்டு கூற ஹேதுவாக தேசம்
இந்த இடம் பத்தர் முக்தர் நித்யர் மூவருக்கும் அவனால் அளிக்கப் பட்டதாகும்

ஒரு மூ யுலகும் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மால் -10-8-9-

தேச வடிவில் உலகத் தாங்குபவர் -பரமபதம் -முதன்மை அதில் -லீலா விபூதி -அடுத்து –
இங்கே இது என்கிற ஞானத்திற்கு காரணம் -இவை பத்தர் முக்தர் நித்யர் மூவகைச் சேதனர்க்கும் அவன் தந்ததே -ஸ்ரீ பராசர பட்டர் –

ஹவிஸ் ஸூக்களைத் தாங்கும் அக்னியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உலகை நடத்துபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

236- அநில –
ஜீவிக்கச் செய்பவன் காற்று-அநிலம்-பிராண வாயு நம்மை ஜீவிக்க செய்வதால்–மேலும் 818 வரும்

ஏவம் ஏஷாம் அநநாத் உஜ்ஜீவ நாத்₃
அநில ꞉ ।
*ஸலிகல்யநி, இத்யாதி₃ – ஜீவநாத்₃
அநில ꞉ ।
நேலச் । அஸ்ய கலைவ ப்ரஸித்₃தோ ₄(அ)நில

உணாதி ஸூத்ரம் –ஸலி -கலி -அநி ஆகிய தாதுக்களுடன் இலச் என்பது இணைகிறது

ப்ராணாத் வாயு அஜாயத -புருஷ ஸூக்தம் –இவனிடம் இருந்து பிராணனும் –அதில் இருந்து வாயுவும் தோன்றின

கோ ஹி ஏவ அந்யாத் கஸ் ப்ராண்யாத் –தைத்ரியம்
அவனைத் தவிர யாரால் அளிக்க இயலும் -பிராணன் இன்றி எவ்வாறு மூச்சு விட இயலும்

உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்தாய்

காண்கின்ற இக் காற்று எல்லாம் நானே என்னும் -5-6-3-
உலகு எல்லாம் ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்து உழலும் அம்மான் -10-8-1-

இப்படி யாவரையும் உய்விப்பவர் -இதனுடைய கலா மாத்ரமே காற்று என்று பிரசித்தமானது-காற்றும் அநிலம் எனப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

அநாதி யானவர் -ஒன்றையும் ஆதாரமாகக் கொள்ளாதவர் -பிராண ரூபியாக அன்னங்களைப் புஜிப்பவர்  -ஸ்ரீ சங்கரர் –

தனக்கு அடைக்கலம் ஒன்றும் தேவை இல்லாதவர் -தமக்கு பூமி ஆதாரமாக இல்லாமல் தாமே பூமிக்கு ஆதாரமானவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

237-தரணீ தர-
தரிப்பவைகளையும் தரிப்பவன்-

அந்யத் அபி தா₄ரகம் தா₄ரயதீதி
த₄ரணீத₄ர

ஸ தாதார ப்ருத்வீம் த்யாம் உத இமாம் -தைத்ரிய காட கம் -4-1-8-
பூமி ஸ்வர்க்கம் உள்ளிட்ட அனைத்தையும் அவனே தாங்குகிறான்

அத்ருதா அஸி வராஹேண –தைத்ரியம் -வராஹ வடிவில் பூமியை உயர்த்தினான்

ப்ருதிவீம் ச அந்தரிக்ஷம் சத்யாம் சைவ புருஷோத்தம மநஸைவ வீஸ்ருஷ்டாத்மா நயதி ஆத்ம வசம் வஸீ -மஹா பாரதம்
அந்தப் புருஷோத்தமன் தன்னுடைய ஸங்கல்ப லேச மட்டுமே பூமி ஸ்வர்க்கம் அந்தரிக்ஷம் போன்றவற்றை எல்லாம் அடக்கி தன் வசத்தில் வைத்துள்ளான்

விஸ்வம் பர -விஸ்வம் பர பரா -அவனையும் தாங்கும் ஸ்ரீ பாதுகை தாரணி தர தரா

நாகமேந்து மண்ணினைக் காத்து ஏகமேந்தி நின்றவன் -திருச்சந்த -6-

அனைத்தையும் தாங்கும் பூமியையும் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வராஹ அவதாரமாகவும்-ஆதிசேஷன் -அஷ்ட திக் கஜங்கள் ரூபமாக -வடிவில் பூமியைத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

பூமியைத் தாங்குபவர் -சிறந்த கோவர்த்தன மலையைத் தாங்குபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

ஸூப்ரசாத பிரசன்னாத்மா விஸ்வ ஸ்ருக் விஸ்வ புக் விபு
சத் கர்த்தா சத் க்ருதஸ் சாதூர் ஜஹ்நுர் நாராயணோ நர –26–நர-அடுத்த பேடிகைக்குப் போகும்

——————–

238-ஸூப்ரஸாத –
மிக்க அருள் புரிபவன் –

ஸ ஏவம் ஸம்விதா₄ய ஸம்முகே₂ஷு(விமுகர் இல்லாமல் ஆ முகராய் இருப்பவர் )
ஸுப்ரஸாத₃

தம் அக்ரதும் பஸ்யதி வீத சோக தாது ப்ரஸாதாத் -ஸ்வேதாஸ்வர -3-20-
இந்தப் பரம புருஷனை யார் ஒருவன் எப்போது காண்கிறானோ
அப்போதே அவன் அருள் மூலம் துன்பங்கள் ஏதும் இல்லாமல் உள்ளான்

ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ்–(ஆகதவ் –உபாகதவ்)தன்யோஹம் அர்ச்ச யிஷ்யாமீ த்யாஹ மால்ய உப ஜீவத -விஷ்ணு புராணம் -5-19-21
அனைவருக்கும் அருள் புரிகின்ற கிருஷ்ணனும் நம்பி மூத்த பிரானும் எனது இல்லத்துக்கு வந்துள்ளனர் –

அக்ரூர் மாலா காரர் –ஈரம் கொல்லி
நல் அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-

எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான்

தம்மை அடைந்தவர்களுக்கு மிக்க அருள் புரிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அபகாரம் செய்த சிசுபாலன் முதலியோர்க்கும் மோஷம் அளிப்பவர் -மங்களகரமான அருளை உடையவர் -ஸ்ரீ சங்கரர்

மங்கள கரமான மோஷத்தை அளிப்பவர் -மங்கள கரமான அருள் புரிவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

239-பிரசன்நாத்மா-தெளிவு -மனஸ் சந்துஷ்ட்டி இருந்தாலே கிட்டும் –

தத் காரணம் ப்ரஸந்நாத்மா –
ஸ்வத ஏவ அவாப்த காமதயா ராகா₃த்₃ய நுபப்லுத
மநா ꞉ । யதா

அவிஜி தத் ஸோ அபி பாஸஸ் ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப –சாந்தோக்யம் -8-1-5-
பசி தாக்கம் போன்ற எந்த வித தேவையும் அற்றவன்
விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றப் பெற்றவன்
உறுதியான மனம் கொண்டவன்–இந்த அஷ்ட குண சாம்யா பத்தி முக்தனுக்கும் கிட்டும்

சாந்தி ஸம் ருதம் அம்ருதம் இதி ச । –தைத்ரியம்
பரிபூரணமான அமைதி உள்ளவன் -அம்ருதம் போன்றவன்

அபூர்ண꞉ க்ருபணோ ஹி து₃ராராத₄꞉

தெளிவுற்ற சிந்தையன் -7-5-22
சமோஹம் சர்வ பூதேஷு -இளையவர்கட்கு அருளுடையாய் இராகவனே -பெருமாள் திருமொழி -8-9-

அவாப்த சமஸ்த காமன் -விருப்பு வெறுப்புக்களால் கலக்கம் அற்ற தெளிந்த மனம் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குறைவாளராயும் -கருமி யாவும் இருப்பவன் தானே ஆராதிப்பதற்கு அரியவன் –
ரஜோ குண தமோ குணங்களினால் கலங்காத மனம் உடையவர் -அனுக்ரஹிக்கும் தன்மை உள்ளவர் –ஸ்ரீ சங்கரர்

அருளை ஸ்வபாவமாக உடையவர் -அவாப்த சமஸ்த காமன் –தெளிந்த மனம் உள்ளவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

240-விஸ்வ ருக்
அனைத்தையும் படைப்பவன்-யோகபத்யம் அனுக்ரஹ கார்யம்

கு₃ணதோ₃ஷம் அந பேஷ்யா தா₃க்ஷிண்யாத் விஶ்வம் ஸ்ருஜதீதி
விஶ்வஸ்ருட் ॥

பாமரு மூ வுலகும் படைத்த பற்ப நாபா -7-6-1
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -3-2-1-
யாதும் இல்லா வன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -4-10-1-
புவனி எல்லாம் படைத்தவனே -பெருமாள் திரு -8-2 –

ஒன்றி ஒன்றி உலகம் படைத்தவன்

குணம் குற்றம் பாராமல் உயிர்கள் உய்வதைக் கருதி உலகைப் படைப்பவர் -விஸ்வ ஸ்ருட் -என்றும் பாட பேதம் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகத் தாங்குபவர் –உலகத்துக்கு பிரபு -விஸ்வ த்ருத்-என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –

உலகில் துணிவுள்ளவர் -விஸ்வத்ருத்-என்ற பாடம்- ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

241- விஸ்வ புக் விபு –
எங்கும் பரந்து இருந்து ரஷிப்பவன்

ததைவ ₂(கீழ் போல் கருணை அடிப்படையில் )வ்யாப்ய பு₄நக்தி – பாலயதீதி
விஶ்வ பு₄க்₃விபு₄꞉ ।
ஏகம் நாம । யதா₂

ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமானி க்ருத்வா அபிவதன் யதாஸ்த்தே –புருஷ ஸூக்தம்
தனது ஸங்கல்பம் மூலம் படைக்கப்பட்ட அனைத்தைக்கும் பெயர்கள் இட்டு -அவற்றை
அந்தப் பெயர் கொண்டு அழைத்து அவனுடன் உரையாடியபடி யார் உள்ளானோ

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இருந்து நின்ற பெரு மாயா -8-5-10
தானேயாகி நிறைந்து எல்லா யுலகும் உயிரும் தானேயாய் -1-7-2-

உலகு தன்னை வாழ நின்ற நம்பி
ஓர் ஆயிரமாய் உலகு அளிக்கும் பீடு உடையவன்

உலகங்களை வியாபித்துக் காப்பவர் -ஒரே திரு நாமம் -ஸ்ரீ பராசர பட்டர் –

விஸ்வபுக் –உலகை அழிக்கும் போது உண்பவர் -காப்பவர் –
விஸ்வபுக் –உலகை அழிக்கும் போது உண்பவர் -காப்பவர் –
விபு –ஹிரண்ய கர்ப்பர்-முதலிய பல உருவங்களாய் இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –
விஸ்வபுக் –உலகை அழிக்கும் போது உண்பவர் -காப்பவர் –
விபு –ஹிரண்ய கர்ப்பர்-முதலிய பல உருவங்களைக் கொண்டு -பரவி – இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

242-சத் கர்த்தா –
சத்துக்களை பஹூ மானிப்பவன்-

ஏவம் ஸர்பியோ த₃ண்டா₃பூபிகா ஸத꞉
ஸத்கர்தா । யதா₂

ஸஜ் ஜநஸ் ப்ரதி பூஜக –ராமாயணம் –சாதுக்களை ஆதரித்து மரியாதை செய்பவன்
தண்ட பூபிகா நியாயம்-(அபூபம் வடை தண்டு குச்சி)  -அனைவரையும் ரக்ஷிப்பவன் என்னும் போது ஸாதுக்களைக் கௌரவிப்பான் என்றும் சொல்லவும் வேண்டுமோ

தமர்கட்கு எளியான் -10-5-9-

பஹுஸ்ருதாநாம் வ்ருத்தானாம் உபாஸிதா பெருமாள்
நும் கால்கள் எம் தலை மேல் -நாரைகள் கால்களை தலை மேல் தாங்கும் ஆழ்வார்
ஆச்சார்யர் சத் கர்த்தா -அறு கால சிறு வந்தேன் உன்னைத் தொழுதேன்
இது வன்றோ எழில் ஆலி என்றானே

சத் புருஷர்களைப் பூஜிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்காரம் செய்பவர் -பூஜிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உண்மையான உலகுக்குக் கர்த்தா -துன்பம் முதலியன அற்றவன் -அனைத்து செயல்களையும் செய்பவன் –
அழிவில் விருப்பமுள்ள அசுரர்களை அழிப்பவன்-ஸ்ரீ சத்ய சந்தர்-

———————

243-சத் க்ருத –
சாதுக்களால் பூஜிக்கப் படுமவன்

தைஶ்வ -ஸத் க்ருத꞉ ।
ஸ ஹி தச் ச்₂ரத்₃தா₄ர்பிதேந ஸ்வல்பே நாபி க₂மஹிமாநு-
கு₃ணே நவா ப்ரதிபந்ந ப்ரத்யுபகார꞉ பரிதுஷ்யதி ।

அஹோ ஹி ஏகாந்தி ந ஸர்வான் பிரீணாத பகவான் ஹரி விதி ப்ரயுக்தாம் புஜாம் ச க்ருஹ்ணாதி சிரஸா ஸ்வயம் –ஸாத்வத ஸம்ஹிதை
தன்னிடம் மட்டுமே நின்று மற்றத் தெய்வங்களை நாடாமல் உள்ளவர்கள் அனைவரையும் ஸ்ரீ ஹரி மகிழ்விக்கிறான்
அவர்கள் செய்யும் பூஜையைத் தனது திரு முடியால் ஏற்றுக் கொள்கிறான்

சபர்யா பூஜித ஸம்யக் -பால காண்டம் -1-59-சபரியால் நன்றாகவே பூஜிக்கப் பட்டான்

மாலா காரணே பூஜிதா -விஷ்ணு புராணம் -5-19-29-மாலை கட்டுபவரால் வணங்கப்பட்டான்

செழு நிலத் தேவர் நான் மறையோர் திசை கை கூப்பி ஏத்தும் -8-4-8
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
சபரி மாலாகாரர் -போல்வார் இடம்-

திருமாலிருஞ்சோலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

சபரி போல்வார் ஸ்ரத்தையுடன் ஈடுபாட்டுடன் கிஞ்சித் கரித்த சிறிய பொருள்களையும் தம் மகிமைக்குத் தக்கவற்றைப் போலே ஏற்று மகிழ்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ரஹ்மாதிகளாலும் -பூஜிக்கப் படுபவர்களாலும் பூஜிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

உண்மையான செயல்களை உடையவர் -சத்க்ருதி -என்று பாடம் –
பிரத்யும்னனாக கருதி என்பவளை மனைவியாக அடைந்தவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

244-சாது –
ஆஸ்ரிதர் நியமனம் -தூது போதல்-தேரோட்டல்

தத₃பேக்ஷித தூ₃த்ய ஸாரத்₂யாதி₃ ஸாத₄ய தீதி
ஸாது₄꞉ ।
* க்ரு வா பா ஜி, இத்யாதி₃நா ஸாதே ₄ருண் ॥

உணாதி ஸூத்ரம் –க்ரு வா பா ஜி ஸாத் போன்ற தாதுக்களின் இறுதியில் உ சேர்க்கப் பட வேண்டும்

இன்னார் தூதன் என நின்றான்
இந்த்ரன் சிறுவன் தேர் முன் நின்றான்

அடியவர் விரும்பியபடி தூது சென்றும் தேர் ஒட்டியும் போன்ற வற்றைச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நியாமமாக நடப்பவர் -எல்லாவற்றையும் சாதிப்பவர் -சாதனம் எதுவும் இல்லாமல் சாதிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மற்றவர்களின் கார்யங்களை சாதித்துக் கொடுப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

245-ஜஹ்நு-
மறைப்பவன் -பிறர்களுக்கு அரிய வித்தகன் -1-3-1-

அப₄க்தேஷ் வாத்ம மாஹாத்ம்யம் அபஹ்நுத இதி
ஜஹ்நு꞉ இதி நைருக்தா꞉

சக்ரம் தத் வாஸூ தேவஸ்ய மாயயா வர்த்ததே விபோ சாபஹ் நவம் பாண்ட வேஷு சேஷ்டதே ராஜ தத்தம் –உத்யோக பர்வம் -6-72-
வாஸூ தேவனின் வியக்க வைக்கும் சக்தி மூலமாக அவனது சக்ரம் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் இருக்கும்
ஆக பாண்டர்வர்கள் உள்ளிட்ட அவன் அடியார்களுக்காக அனைத்தையும் செய்கிறான்

ஜஹ்னு மகரிஷி கங்கை நீரைக்குடித்து -கங்கைக்கு ஜாஹ்னவி பெயர்

அடியவர் அல்லாதவர்க்கு தம் மகிமையை மறைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்ஹார காலத்தில் எல்லாவற்றையும் மறைப்பவர் -பக்தர் அல்லாதவரைக் கை விடுபவர் –
பக்தர்களை உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அயோக்யர்களைக் கை விடுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————

246-நாராயண –நித்ய வஸ்துக்களின் ஆதாரம் –

ஏவ மேபி₄ர் அஸேஷைர் விஶிஷ்யோ பநிஷத்ஸு

நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்த்ரே சமீரித-ஆளவந்தார்

நாராயணாய வித்மஹே -தைத்ரியம் நாராயண வல்லி –6-1-26--நாராயணனை உபாஸனை செய்கிறோம்

நாராயண பர ப்ரஹ்ம –தைத்ரியம் -6-11-நாராயணனே பர ப்ரஹ்மம்

அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித

ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான நே மே த்யாவா ப்ருதிவீ–மஹா உபநிஷத் -நாராயணன் மட்டுமே
முதலில் இருந்தான்

அத புந ஏவ நாராயண –மஹா உபநிஷத் –-அதன் பின்னர் மீண்டும் நாராயணன்

சஷுஸ் ச த்ரஷ்டவ்யம் ச நாராயண –ஸூ பால உபநிஷத்
காண்கின்ற கண்களும் அந்தக் கண்களால் காணப்படும் பொருளும் நாராயணனே

அத திவ்யோ தேவ ஏக நாராயண –ஸூ பால உபநிஷத் –திவ்யமான ஒருவன் நாராயணனே

இதி ப்ரதி ஸாக₂ம்
பரஸ்ய வஸ்துநோ மூர்த்யந்தர வ்யாவர்தக தயா நிர்தி₃ஷ்டம் அஸாதா₄ரணம் நாமாஹ
நாராயண꞉।
ஶ்ரௌத நிருக்தம்
* யச்ச கிஞ்சித் இதி । அந்யத் அஷட் அக்ஷீணத்வாந் நாசஷ்மஹே ॥

யத் ச கிஞ்சித் –தைத்ரியம் –இந்த உலகில் எவை பார்க்கப்பட்டும் -எவை கேட்கப்பட்டும் -உள்ளனவோ
அவை அனைத்தின் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து உள்ளான்

ஷட் காதுகளால் -அறியக் கூடாத ரஹஸ்ய திரு நாமம் –
ஆச்சார்யன் சிஷ்யன் இருவருக்கும் மட்டுமே அறிந்து கொள்ள வேண்டியது என்றவாறு –

வண் புகழ் நாரணன் -10-9-1
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேத முயன் -2-7-2
நாடு நகரமும் நன்கறிய நமோ நாராயணாய
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -பெரிய திருமொழி -1-1-1-
நாராயணாவோ மணி வண்ணா நாகணையாய் -சிறிய திருமடல்
நானும் சொன்னேன் நமர்களும் உரைமின் நமோ நாரணமே -பெரிய திருமொழி -6-10-6-
நாராயணா என்று ஓதுவார் உரைக்கும் உரை உண்டே -முதல் திரு -95
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -இரண்டாம் திருவந்தாதி -81
நாமம் பல சொல்லி நாராயணா -மூன்றாம் திரு -8
நலம் திகழ் நாரணன் -பெருமாள் திருமொழி -10-11
இன்னம் பல உண்டே –

நார -அழியாத நித்ய வஸ்துக்களின் -ஆத்மாக்களின் கூட்டத்துக்கு
அயனம் -ஆதாரமாக இருப்பவர் -அந்தர்யாமியாய் அவற்றுள் இருந்து நியமிப்பவர் உபநிஷத்துக்களில் சாகைகள் தோறும் ஒதப்படுகிற பரம்பொருளின் தனித் திரு நாமம் –
மிக ரஹஸ்யமாகையால் விரித்துச் சொல்ல வில்லை -ஸ்ரீ பராசர பட்டர் –

நரர் -ஜீவர்களுக்கு பிரளயத்தில் ஆதாரமானவர் -நர -ஆத்மா -அதில் இருந்து உண்டான ஆகாசம் முதலியவை நாரங்கள் -அவற்றில் காரணமாக
வ்யாபிப்பவர் -அதனால் அவற்றைத் தமக்கு இருப்பிடமாக உடையவர் -பிரளய காலத்தில் ஜீவர்கள் சேருமிடமாய் இருப்பவர் -நரன் இடத்தில்
இருந்து யுண்டான தன்னார் -நாரம் -அத்தை இருப்பிடமாகக் கொண்டவர் நாராயணன் –மனு ஸ்ம்ருதி -நாராயணாய நம-
என்ற மந்த்ரமே கோரமான சம்சார விஷத்தை யுடனே போக்க வல்லது -இதை நான் மிக உயர்ந்த குரலில் கையைத் தூக்கிக்
கூறுகிறேன் -முனிவர்களே பணிவுடன் கேளுங்கள் -என்று ஸ்ரீ நரசிம்ஹ புராணத்தில் கூறப் பட்டுள்ளது – -ஸ்ரீ சங்கரர் –

குணங்களுக்கு இருப்பிடமானவர் -தோஷங்களுக்கு இருப்பிடம் அல்லாதவர் -அழிவற்றவர் -அனுபவிக்கத் தக்கவர் -தோஷங்கள் அற்ற
வேதங்களால் அறியப்படுபவர் -ஞானத்திற்குப் புகலிடமானவர் -முக்தர்கள் அடையும் இடமானவர் -நாரங்களின் கூட்டங்களுக்கு
வணங்கத் தக்க புகலிடமானவர் -முக்ய ப்ரானனான வாயு தேவருக்கு புகலிடமானவர்-
நாரம் என்னும் ஜகத்துக்கு ஆச்ரயமாக இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

247-நர –
அழியாதவன் -அழிவற்ற நித்ய வஸ்துக்கள்
நரனாக அவதரித்தவன் –

இத₃மேவ கூ₃ட₄ம் வ்யாசஷ்டே
நர꞉,(கீழ் சொன்ன நாராயண அர்த்தம் மறைத்து இங்கு விளக்கம் )
அநஶ்வர சித₃சித்₃விபூ₄திக இதி ॥

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணனே நரனே -நாச் திரு -2-1-
நர நாராயணனாய் உலகத்தற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திரு மொழி -10-6-1-

நாரணா என்றாலும் உகப்பானே –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் காரணன் –
அதே போல் நர சுருக்கி
எம்பெருமான் -எம்பெருமான் -எம்பார் போல் -இங்கும்

சேதன அசேதன விபூதிகள் அழியாமல் இருக்கப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் நடத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

மாறுதல் அற்றவர் -அழிவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————-

3-11–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி -248-271-

அசங்க்யேயோ அப்ரமேயாத்மா விசிஷ்ஸ் சிஷ்டக்ருச் சுசி
சித்தார்த்தஸ் சித்த சங்கல்பஸ் சித்திதஸ் சித்தி சாதன –27-

———

248-அசங்யேய-
எண்ணில் அடங்காதவன் -நித்ய வஸ்துக்களின் திரள் -சமூஹம் எண்ணிறந்தவை –

தத் ஸமூஹாஶ் (நரங்களின் கூட்டம் )ச அஸ்ய அஸங்க்₂யேயோ இதி
அஸங்க்₂யேய ꞉ ॥

எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன் -3-3-3-

ஒன்றே என்னில் ஒன்றேயாம் பலவே என்னில் பலவேயாம் ஆமே என்னில் ஆமேயாம் -கம்பர் –

பஹுஸ்யாம் ப்ரஜாயாயே -தனக்கும் தன் தன்மை அறியான் –

எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில- வண் புகழ் நாரணன் –
ஈறில -அஸங்க்யேய -நாராயணன் -நரன் -அஸங்க்யேய-மூன்று திருநாமங்களும் இதில் உண்டே

ரூபங்கள் குணங்கள் விபூதிகள் அனைத்துமே எண்ணிறந்தவை -அபரிமித அளவும் இல்லையே

அஸங்க்₂யேய நர ஸமூஹம்- எண்ணில் அடங்காத சேதன அசேதனங்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அளவிடக் கூடிய நாம ரூப பேதங்கள் அற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

எண்ண முடியாத குணங்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

249-அப்ரமேயாத்மா –
அனைத்திலும் உள்ளும் புறமும் வியாபித்து-அளவிட முடியாதவன் -பிரமேயம் புத்திக்கு எட்டுவது

தேஷாம் அஸங்க்₂யேயாநாம் ஏகைகஸோ (அ)ப்ய ப்ரமேயாநாம் அநவதி₄காநாம் அந்தர் ப₃ஹிஶ்ச வ்யாபநாத்–
அப்ரமே யாத்மா ॥

கரந்த சில இடம் தொறும் –இடம் திகழ்  பொருள் தொறும் -தனித்தனியே வியாபித்து -தொறும்-இதுவே இங்கு பட்டர் ஏகைகஸோ

எங்கும் உளன் கண்ணன் -2-8-9
கரந்து எங்கும் பரந்து உளன் -1-1-10
பரந்து தனி நின்றவன் -2-8-10-

எண்ணில் அடங்காப் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் பரவியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அளவிட்டறிய முடியாத ஸ்வரூபம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அளவிட்டறிய முடியாத ஸ்வரூப தேக ஸ்வ பாவங்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

250-விசிஷ்ட –
தனிச் சிறப்பு யுடையவன் -ஸ்வாபாவிக பராத் பரன் –விசேஷமான சிஷ்டன் -சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய்

ஸ்வத ஏவ தத₃ந பேக்ஷ வைலக்ஷண்யத்வாத்
விஶிஷ்ட꞉ ॥

உயர்வற உயரும் பெரும் திறலோன்
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லையே
வேத சார உபநிஷத் -சார தர அனுவாத -சார தம காயத்ரியின் முன் ஓதிய –
சிறப்பைச் சொல்லி நாராயணன்
வியாபக மந்த்ரம் -வ்யாப்தியைச் சொல்லி மேல் மேல் –வி சிஷ்டம்

பத்த முக்த நித்ய அனைத்து ஆத்மாக்களிலும் சிறந்தவர் சொல்லக் கூடாது அன்றோ
அவனோ விஜாதீயன்
இது ஆதேயம் கார்யம் அணு -அது ஆதாரம் காரணம் விபு
ஏகோகை நாராயண ஆஸீத்

அவை எல்லாவற்றையும் விடத் தனிச் சிறப்பு மிக்கவர் -வி லக்ஷணமாய் இருப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிற்கும் மேலானவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரமன் முதலியவர்களுக்கும் காரணமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

251-ஸிஷ்ட க்ருத் –
பிறரை உயர்த்துபவன் -சிட்டன் ஸ்ரேஷ்டன்

அபி து ஸ்வ ஸம்ப₃ந்தே ₄ந தான் ஸ்வ அநுகு₃ண கல்யாணான் குர்வன் அநா தேய தீ₃ப்தி꞉(மற்ற ஒன்றை எதிர்பாராத தூய்மை )
ஶிஷ்டக்ருத் ஸூசி꞉ ॥(இரண்டு திரு நாமங்களுக்கும் வியாக்யானம் இங்கு )

ப்ரஹ்மம் தானும் பெரியதாய் பிறரை பெரியவராக்கும் பெருமை இவனுக்கு உண்டே
அதே போல் இங்கும்

துயர் அறு சுடர் அடி -தான் துயர் அறுந்தும் நமது துயரை அறுத்தும்
அமலன் -தான் மட்டும் குற்றம் இல்லாதவன் என்று இல்லாமல்
தன்னை அண்டினவர்களையும் குற்றம் அற்றவனாய் ஆக்கி அருளும்

சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் -7-2-4-
தம்மையே ஒத்த அருள் செய்வர் -செய்வார்கட்கு உகந்து

தமது சம்பந்தம் பெற்றவர்களைத் தம்மிடம் சேரத் தக்க கல்யாண குணங்கள் உள்ளவர்கள் ஆக்குபவராய் -ஸ்ரீ பராசர பட்டர் –

கட்டளை இடுபவர் -நல்லோர்களைக் காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

திறமை உள்ளவர்கள் எல்லாரும் கூடிச் செய்ததை முடிக்க முடியாத போது அதை முழுமை செய்து முடிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

252- ஸூசி –
தூய்மை உடையவன் –தேஜஸ் -157 பார்த்தோம்
அரங்க மேய அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை –
தேவர்க்கும் அறியலாகா அந்தணனை

மணம் பூவை அண்டி இருக்கும் -மணம் பூவுக்கு சொத்து
ஒளி மாணிக்கத்துக்கு சொத்து
அவளால் ஏற்றம் என்றாலும் இவனது பெருமைக்கு குறை இல்லையே

தமக்குத் தாமே தூய்மை பெற்றவர் -ஸ்வயம் ஸூத்தமானவர் -பிறரால் பிரகாசம் உண்டு பண்ண வேண்டாதவர் –ஶிஷ்டக்ருத் ஸூசி -ஒரே திரு நாமம் -ஸ்ரீ பராசர பட்டர் –

மாயையாகிய குற்றம் அற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

தூய்மையானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

253-ஶித்தார்த்த –
எல்லாம் உடையவன் -அவாப்த சமஸ்த காமன்-ஸித்தி-பிராப்தி

அத₂ யதோ₂க்த உப பாத₃நம்
ஸித்₃தா₄ர்த₂꞉,
ஸ்வத ஏவ அவாப்த காமத்வாத் ॥

நிகரில் புகழாய்- உலகம் மூன்று உடையாய் என்னை யாள்வானே -6-10-10-

அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனன்

வேண்டியவை தமக்குத் தாமே அடைந்து இருப்பவர்-ஸத்ய காமர் அன்றோ -ஸ்ரீ பராசர பட்டர் –

அடைய வேண்டியவை எல்லாம் அடைந்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அடியவர் விருப்பங்களை வழங்க ஆயத்தமாக இருப்பவர் -சித்த புருஷர்களுக்குச் செல்வமாக இருப்பவர் –
அயோக்யர்களின் அழிவுக்கு காரணமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

254-ஶித்த சங்கல்ப –
நினைத்த படி நடத்த வல்ல சத்ய ஸங்கல்பன் –

தது₃பரி
ஸித்₃த₄ஸங்கல்பஶ் ச–
ஸ்வாதந்த்ர்யேண ப்ரயுக்த தயா ஸ்வேச்ச₂யா
ஸாதி₄த ஸர்வார்த₂ம் இத்யர்த₂꞉ ।

ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப இதி–சாந்தோக்யம் -8-1-5-
விரும்பியவற்றை உடனே அடைபவன் என்பதாலேயே ஸத்ய ஸங்கல்பனும் ஆகிறான்

எல்லையில் ஞானத்தன் –ஞானம் அக்தே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயன் -3-10-8
மழுங்காத ஞானமே படையாக உடையவன் -3-1-9-

நினைத்தவை நினைத்த மாத்திரத்தில் அடைந்து இருப்பவர் -ஸத்ய ஸங்கல்பர் அன்றோ -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் சங்கல்பங்கள் நிறைவேறப் பெற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

அடியவர் விருப்பங்களைச் செயல்படுத்த முனைபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

255- ஶித்தித-
சித்திகளை அளிப்பவன் –ஶித்தி த₃தா₃தீதி ஶித்தித-

அணிம க₃ரிமாத்₃யாஸ் ஸித்₃தீ₄ஸ் ஸாத₄கேப்₄யோ த₃தா₃தீதி
ஸித்₃தி₄த₃꞉ ॥

ஆய கொண்ட சீர் வள்ளல் ஆழிப்பிரான் -3-9-9-

அட்டமா சித்திக்கள்:
1. அணிமா
2. மஹிமா
3. லஹிமா
4. கரிமா
5. பிராத்தி
6. பிரகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம்

யோகிகளுக்கு அணிமா கரிமா முதலிய அஷ்ட சித்திகளைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவரவர் தகுதிப்படி கேட்ட பலன்களைத் தருபவர் –ஸ்ரீ சங்கரர் –

தகுதி யுள்ளவர்களுக்கு சித்தியைத் தருபவர் -அயோக்யர்களுக்கு சித்தியைத் தடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————-

256-ஶித்தி சாதந-
ஆறும் -உபாயமும் -இனிதாக உள்ளவன்-சாதனமான பக்தியே முக்தி போல் இனிக்கும் அன்றோ

இதி ந்யாயே நாநுஷ்டா₂ந வேலாயாம் அபி
ப்ரியங்கரத்வாத் ஸித்₃தி₄ரூபம், ஸ꞉
ஸித்₃தி₄ஸாத₄ந ꞉ ॥

யஸ்ய ஸாத₄ந மபி

யே து தர்ம்ய–கீதை -12-20- என்னையே பலனாக எண்ணி உபாஸனை செய்பவர்கள் எனக்குப் பிரியமானவர்கள்

யே து தர்ம்யாம் ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே.–
ஸ்ரத்ததாநா மத் பரமா பக்தாஸ் தேதீவ மே ப்ரியா—৷12.20৷৷

தர்ம்யாம்ருதமிதம்-இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை,
யதா உக்தம் பர்யுபாஸதே-யான் சொல்லியபடி வழிபடுவோர்,
ஸ்ரத்ததாநா-நம்பிக்கையுடையோர், மத்பரமா-என்னை முதலாகக் கொண்டோர்,
தே பக்தா: மே அதீவ ப்ரியா:-அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்.

தூய அமுதை பருகிப் பருகி மாயப் பிறவி மயர்வு ஒழித்தேன்
ஸூசகம் கர்த்தும் அவ்யயம்

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -6-7-10-
தேனே மலரும் திருப் பாதம் இறே

தம்மை உபாசிப்பதும் பலன் போல் ஸூகமாகத் தோன்றும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சித்திகளை நிறைவேற்றுபவர் –ஸ்ரீ சங்கரர் –

மோஷ ரூபமான பலனை சாதிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர
வர்த்த நோ வர்த்தமா நச்ச விவிக்தஸ் ஸ்ருதிசாகர –28-

ரிஷிகள் சாத்திய திரு நாமங்கள் –
பீஷ்மர் நான் அறிந்த உயர்ந்த பரமமானது திரு நாம சங்கீர்த்தனம்
வ்யாஸர் கோத்த திரு நாம மாலை-

——————-

257-வ்ருஷாஹீ
அடையும் நாள் நன்னாளாய் இருப்பவன்-வ்ருஷ -தர்மம் அஹஸ் -நாள் –ஹீ-உடையவன்

நிகி₂ ல மங்க₃ ல அங்க்ருரார்பண தி₃நத்வாத் வ்ருஷ ரூபம் த₄ர்ம ரூபம் அஹரஸ்ய ப்ரத₂ம அபி₄க₃மந
தி₃வஸம்
வ்ருஷாஹீ꞉ ।

அஷ்டாத்யாயீ –ராஜ அஹஸ் சஹிப் யஷ் டச் —ராஜன் -அஹன் -சகின் -டச் என்பதை சேர்த்துக் கொள்ளும்

அத்யமே சபலம் ஜன்ம ஸூப்ரபாதா ச மே நிசா -விஷ்ணு புராணம் -5-17-3-
இன்று என் வாழ்வின் பயன் அடைந்தேன் -எனது வாழ்வின்-நிசா- இரவு நீங்கியது-உன்னித்ர அத்ர பத்ராக்ஷம் -தாமரைக்கண்ணனை சேவிக்கப் போகிறேன்

தாஸ் நிசாஸ் தே ச திவஸா–விஷ்ணு புராணம்
நான் என்று எல்லாம் கிருஷ்ணனைக் காணவில்லையே அன்று அனைத்துமே இரவே
இனி அவன் உடன் உள்ள நாட்கள் மட்டுமே பகல் பொழுதாகும்-பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன்

எதாஹி ஏவ ஏஷ –அதச அபயம் கதோ பவதி–தைத்ரியம்
எப்போது உபாசகன் காண இயலாத அவனைக் குறித்த நினைவிலேயே உள்ளானோ அப்போதே அவன் ஸம்ஸார பயம் நீங்கப் பெறுகிறான் –

அடியேன் அரு வாணாள் செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே -5-8-3-ஆகிஞ்சன்யம் முன்னிட்டு வான மா மலையில் அநந்ய கதித்வம் முன்னிட்டு திருக்குடந்தையில்

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –இன்று யாம் வந்தோம் இரங்கு -மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள்

அக்ரூரர் பாரித்த படியே-

தம்மை முதன் முதலில் அடையும் தினமே எல்லா மங்களங்களுக்கும் வித்திடும் நாள் போலே இருப்பதால் அந்த ஆரம்ப தினம் தர்ம ரூபமாகவே சிறப்பாக இருக்கப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பகல் போலே பிரகாசிக்கும் தர்மங்களை உடையவர் -த்வாதசாஹம் முதலிய யஜ்ஞ விசேஷமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்மத்தின் மூலமாகப் பரவி இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

258-வ்ருஷப –
அனுக்ரஹத்தை பொழிபவன்

ஏவம் அபி₄க₃ச்ச₂தோ பக₄வத₃க்₃தா₄ன் வர்ஷதீதி
வ்ருஷப ₄꞉(அருள் மழை சம்சார அக்னியில் பொழிந்து தாபத்ரயங்களைப் போக்கி )
ருஷி வ்ருஷிப்₄யாம் க்ரித் இதி வ்ருஷேரேப₄ச் ப்ரத்யய ꞉ கித்₃வத்₃பா₄வஶ்ச ॥

உணாதி ஸூத்ரம் -ருஷிஸ் வ்ருஷிப்யாம் கித்–ருஷி
வ்ருஷி என்பதால் பின்னால் அப் என்ற ப்ரத்யயமும் கித் என்ற ப்ரத்யயமும் சேர்கிறது
வ்ருஷ் +அபச் +அ –வ்ருஷப

எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-

சம்சார மருகாந்தார துர்வ்யாதி வயாக்ரா பீஷனே
விஷய ஷூத்ர குல்மாட்யே த்ருஷாபாத பசாலி நி–ஸ்ரீ தேவ ராஜ அஷ்டகம் –4-

சம்சாரம் ஆகிய கொடிய காட்டிலே கொடிய நோய்கள் ஆகிற புலிகளினால் பயங்கரமாயும்
ஆசையாகிற மரங்கள் அடர்ந்ததாயும்
சப்தாதி விஷயங்கள் ஆகிய ஆகிய சிறு புதர்கள் நிறைந்ததாயும்

புத்ர தார க்ருஹ ஷேத்ர மிருக த்ருஷ்ணாம்பு புஷ்கலே
க்ருத்யாக்ருத்ய விவேகாந்தம் பர்ப்ராந்த மிதஸ் தத–5-

மக்கள் மனைவியர் வீடு நிலம் ஆகிய கானல் நிரம்பியனதுமான
இன்னது செய்யத் தக்கது இன்னது செய்யத் தகாதது என்கிற விவேகம் இன்றிக்கே
இங்கும் அங்கும் சுழன்று உழலுபவனாய்

அஜஸ்ரம் ஜாதத் த்ருஷ்ணார்த்தம் அவசன் நாங்க மஷமம்
ஷீண சக்தி பலாரோக்யம் கேவலம் கிலேச சம்ஸ்ரயம்–6-

எப்போதும் விடாய்த்தவனாய் உடல் இளைத்தவனாய் அசமர்த்தனாய்
சக்தி பலம் ஆரோக்கியம் இவை ஒன்றும் இல்லாதவனாய்
கிலேசங்கள் மிக இருக்கப் பெற்றவனாய்

சம்தப்தம் விவிதைர் துக்கை துர்வ சைரவ மாதிபி
தேவராஜ தயா ஸிந்தோ தேவதே ஜகத் பத்தி —7-

சொல்ல முடியாத இப்படிப் பட்ட பலவகை துன்பங்களினால்
தாபம் உற்றவனாய் இருக்கிற அடியேனை
கருணைக் கடலான தேவராஜனே தேவாதி தேவனே உலக்குக்கொர் முத்தைத் தந்தையே

த்வ தீஷண ஸூதா சிந்து வீசி விஷே பச்கரை
காருண்ய மாருதா நீதை சீதலைரபி ஷிஞ்சமாம் -8-

காருண்யம் ஆகிற காற்றினால் கொண்டு தள்ளப் பட்டவையும் குளிர்ந்தவையுமான
உன்னுடைய கடாஷ அம்ருத நதி பிரவாஹத் திவலைகளினால் நனைத்து அருள வேண்டும் என்கிறார்

சம்சாரத் தீயினால் தகிக்கப் பட்டுத் தம்மை வந்து அடைந்தவர் மீது அமுதமன்ன அருளைப் பொழிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் விரும்பியவற்றை வர்ஷிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அருளைப் பொழிபவர் -தர்மத்தால் பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

259-விஷ்ணு
எங்கும் பரந்து கருணை மழை பொழிபவன்-

ஏவம் வர்ஷன் வேவேஷ்டீதி
விஷ்ணு꞉ ।(இப்படியாக வர்ஷித்துக் கொண்டு எங்கும் வியாபிக்கிறார் -வியாபித்து வர்ஷிக்கும் வரை கால விளம்பம் பொறுக்காதே )
விஷல் வ்யாப்தௌ
* விஷே ꞉ கிச்ச இதி ணு꞉ ।
தைஸ்தைர் உப காரைர் அதி₄கேந ப₄க₃வதா ந்யூநாநாம் ஸ்வ வ்யதிரக்தாநாம் அவிநா பா ₄வஸ்
தார்கிக ப்ரஸித்₃தோ ₄(அ)த்ர வ்யாப்திர் அபி₄மதா ।

வியாப்யம் வியாபகம் – நெருப்பு புகை-புகையை விட்டுப் பிரிந்த நெருப்பு உண்டே -அதே போல் பரமாத்மா ஜீவாத்மா –
ஜீவாத்மா இருக்கும் இடம் எல்லாம் பரமாத்மா உண்டு
பரமாத்மா இருக்கும் இடம் எல்லாம் ஜீவாத்மா இருக்க வேண்டும் என்று இல்லையே
ஜீவாத்மாவை தவிரவும் பரமாத்மா உடைய வியாப்தி உண்டே-அருள் மழை எங்கும் உண்டே -வாங்கிக் கொள்பவர் குறைய இருக்கும்

எங்கும் தானாய நங்கள் நாதனே -1-9-9-எங்கும் தானான் -நாங்கள் நாதன் ஆவதற்காகவே -ஸத் பாவத்துக்காக வியாப்தி
2–பார்த்தோம் (விஸ்வம் குணங்களால் பூர்ணமாக விஷ்ணு வியாபித்தவர் அங்கு)-663 மீண்டும் வரும்

உணாதி ஸூத்ரம் –விஷே -கித் ச இதி ணு –-வியாபித்த படி இருத்தல் என்னும் பொருளில் -விஷல் என்பதுடன் ணு மற்றும் இத் சேர்கின்றன

ந தத் அஸ்தி விநா யத் ஸ்யாத் மயா பூதம் சராசரம் –கீதை -10-39-
இந்த உலகத்தில் எந்த வஸ்து என்னைப் பிரிந்து உள்ளதோ அப்படியான வஸ்து ஏதும் இல்லை
நான் இல்லாத பொருள் இல்லை -நான் எங்கும் உள்ளேன்
நெருப்புக்கு புகைக்கும் பிரியாத தொடர்பு போல் நானும் மற்ற ஸமஸ்த பொருள்களும் –

யச் சாபி ஸர்வ பூதாநாம் பீஜம் ததஹ மர்ஜுந.–
ந ததஸ்தி விநா யத் ஸ்யாந் மயா பூதம் சராசரம் ––৷৷10.39৷৷

அர்ஜுனா எல்லாப் பொருள்களுக்கும் ஆங்கு ஆங்கு யாது ஓன்று உபாதான காரணமாக உள்ளதோ அதுவும் நான்
அசைவனவும் அசையாதவனவுமான பொருள்களுள் அந்தர்யாமியான என்னை விட்டுப் பிரிந்து ஓன்று
இருக்குமோ என்று பார்த்தால் அத்தகையப் பொருள் ஒன்றும் இல்லை

அப்படி அருளைப் பெற்றவர்களை விட்டு நீங்காதவர் -கடாஷத்தைப் பொழிந்ததும் மற்றும் பல உபகாரங்கள் செய்தும்
தமது உயர்வையும் தாழ்வையும் பாராமல் என்றும் அவர்களை விட்டுப் பிரியாமல் பரவி இருப்பவர் –
தார்க்கிகர்களின் வியாப்தியானது இங்கே கருதப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

த்ரிவிக்ரம அவதாரம் மூலம் உலகங்களை வியாபித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

நதிகள் பாயும்படி செய்பவர் -காண முடியாதவர் -அறிய முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

260-வ்ருஷ பர்வா -தர்மம் படிகளால் அடையப்படுபவன் வர்ணாஸ்ரம கர்ம யோகம்

வ்ருஷா꞉-வர்ணாஶ்ரம த₄ர்மா꞉, தே தத் ஆரோஹண ஸோபாந பர்வாணீதி
வ்ருஷ பர்வா ॥

வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் தவிர வேறே உபாயம் இல்லையே

தம்மை அடைவதற்கு வர்ணாஸ்ரம தர்மங்களைப் படிகளாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்ம ரூபமான படிகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

புண்ய சாதனங்களான அமாவாஸ்யை முதலிய பர்வ தினங்களுக்கு யஜமானர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

261-வ்ருஷோதர –
தர்மமே உருவான திரு வயிற்றை உடையவன் –வ்ருஷ உதரம்

1-ஆராத₄காநாம் யதா₂ லப்₃த₄ ஹவிராதி₃பி₄ஸ் ஸுபூரத்வேந வ்ருஷோத₃ர꞉ ॥- 2-ஸர்வ ஆர்த ஆஸ் பத₃த்வேந தா₄ர்மிகோ த₃ரத்வாத்₃
வ்ருஷோத₃ர꞉ ॥

தாமோதரனை தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரம் அறிய-2-7-12
ஆராத்ய ஸூலபன்

பத்ரம் பலம் தோயம் புஷ்பம் அஸ்நாமி-சாப்பிடுகிறேன் -ஏற்றுக் கொள்கிறேன் -அனுபவிக்கிறேன் – -திருப்தி அடைகிறேன் –
தர்ம சிந்தனை பக்தியால் –யதா₂ லப்₃த-சமர்ப்பித்தால் வயிறு நிரம்பும் படி

1-அடியவர் இடும் எளிய உணவையும் ஏற்பதனாலும்-2-பிரளயத்தில் துன்புற்றவர்களை வைத்துக் காப்பதனாலும்
தரும மயமான வயிறு யுள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரஜைகளை வர்ஷிக்கும் -சிருஷ்டிக்கும் -வயிறு யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

திரி விக்ரமாவதாரத்தில் கங்கை நீரை பிரம்மாண்டத்தில் உள்ளவர்களுக்குத் தந்தவர் –
புண்ணிய தீர்த்ததால் மகிழ்பவர்-அருளைப் பொழிபவர் –
மற்றும் தோஷங்களுக்குத் தொலைவில் இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————–

262-வர்த்தந
வ்ருத்தி செய்பவன்

மாத்ருவத் தாநுத₃ரே க்ருத்வா வர்த₄ய தீதி
வர்த₄ந ꞉ ॥

வளர்ப்பவர் -முதலில் சொல்லி அடுத்து தான் வளருபவர் –
தான் வளர்ந்தவராக இருந்தாலும் -பிறரை வளர்த்தினால் தான் திருப்தி அடைபவன்

தானே தாரக போஷக போக்யம் –வர்த்தமாந-
வெறிதே அருள் செய்பவன் -(வர்தன) சிறியேன் உடைய சிந்தையுள் -மூ வுலகும் நெறியால் வயிற்றில் கொண்டு-(வ்ருஷ உதர) நின்று ஒழிந்தான் –

அவர்களைத் தாய் போல் வயிற்றில் வைத்து வளர்ப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அனைத்தையும் விருத்தி செய்பவர் -வளர்ப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தன்னைச் சார்ந்தவரை வளரச் செய்பவர் -உயர்ந்த செல்வத்தை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————-

263-வர்த்தமாந-

தான் வர்த₄யன் ஸ்வயமபி வர்த₄த இதி வா , ஏவம் ப்ராயைர் அபர்யவஸ் யத் ஸம் ருத்₃தி₄ரிதி வா
வர்த₄மாந ꞉ ॥

வளர்ச்சி அடைபவன் -ஆஸ்ரிதர்களுக்கு உதவியதால் வந்த புகர்
திகழும் தன் திருவருள் செய்து என்னுள் திகழும் மணிக்குன்றம் என்றே ஒத்து நின்றான் -8-7-5-

தளிர் புரையும் திருவடிகள் அன்றோ -தாவி அன்று உலகம் –சிக்கென செங்கண் மாலே –
அறிவித்ததும் அவனுக்கு சிவந்து மலர்ந்த திருக்கண்கள்
அந்தாம அன்பு செய்து –ஆவி உடன் சேர்ந்த அம்மானுக்கு -இப்பொழுது தான் திவ்ய ஆயுதங்கள் உள்ளனவாயின

அவர்களை வளர்ப்பதனாலேயே தாமும் வளர்பவர் இப்படி எல்லாருக்கும் எல்லாவற்றையும் அளித்தும் தமது பெருமையில் சற்றும் குறையாமல் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலக வடிவாக விருத்தி அடைபவர் –ஸ்ரீ சங்கரர் –

நாடோறும் விருத்தி ஆக்குபவர் – அல்லது இவ்வாறு அளவிட முடியாத சம்ருத்தியை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————

264-விவிக்த –தனிச் சிறப்பு உற்றவன் -அதி மானுஷ சீல வ்ருத்த -படி எடுத்து உரைத்துக் காட்டும் படி அன்றே

ஏவம் ஸர்வ லோகோத்தரஸ் காந்த வ்ருத்தாந்தத்வாத்₃
விவிக்த꞉ ॥

அத்விதீயன் -நிகரில் புகழாய் தன் ஒப்பார் இல் அப்பன் -6-3-9-

தமக்கே உரிய சிறந்த சரித்ரங்களை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலக வடிவாக இருந்தாலும் தனித்து நிற்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைக் காட்டிலும் வேறுபட்டவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————-

265-ஸ்ருதி சாகர
ஸ்ருதிகளுக்கு கொள்கலம் –குணங்களை ஆசையுடன் பாடும் வேதமாகிய ஸரித் நதிகள் அடையும் கடல் இவனே –

ஏவம் ப்ரகார கு₃ண ப்ரவணாநாம் ஶ்ருதீநாம் ஸாக₃ர இவ ஸரித் ஓகா₄நாம் பரமா
பர்யவஸாந பூ₄மிரிதி –
ஶ்ருதி ஸாக₃ர꞉ । 

நாராயண பரா வேதா -ஸ்ரீ மத் பாகவதம் -2-5-25–வேதங்கள் நாராயணனையே பேசுகின்றன

வேதைச்ச சர்வை அஹமேவ வேத்ய–கீதை -15-15- அனைத்து வேதங்களாலுமே அறியப்படும் பொருளே நானே ஆவேன்

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷

நான் எல்லா ஜீவர்களுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன்
அனைவருடைய நினைவும் வஸ்து நிர்ணயமும் மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன
எல்லா வேதங்களாலும் நானே அறியப் படுகிறேன் –
வேத விதிகளின் பலனை அளிப்பவனும் வேதத்தை அறிந்தவனுக்கு நானே

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை -பெரிய திருமொழி -2-3-2-
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான் -பெரிய திரு மொழி -9-4-9-
நாரணன் வேதமயன் -2-7-2-

நதிகளுக்கு கடல் போலே இக் குணங்களை உரைக்கும் ஸ்ருதிகளுக்கு முடிவான இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேதங்களுக்குக் கடல் போலே இருப்பிடமானவர் -எல்லா வேதங்களும் அவரையே சொல்லுகின்றன –ஸ்ரீ சங்கரர் –

வேதங்களைக் கொடுப்பவர் -வேதங்களைத் தம்மிடம் வைத்துக் கொள்பவர் -வேதங்கள் ஆகிற கடலை வெளியிட்டவர் -வேதக்கடல்
மற்றும் கோவர்த்தன மலை முதலியன மூலம் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

———————–

ஸூ புஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸூதோ வஸூ
நைகரூபோ ப்ரருஹத்ரூபஸ் சிபிவிஷ்ட ப்ரகாசன–29-

————-

266-ஸூ புஜ –
அழகிய புஜங்களை உடையவன்

ப்ரபந்ந ப ₄ரது₄ர்ய ஸோபநயோ₄பு₄ஜ꞉
ஸுபு₄ஜ꞉ ॥

கற்பக காவென நற்பல தோளன் -6-6-6
ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திரு மால்

பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு என்று உணர்ந்த -ப்ரபன்னர்களின் ரஷா பரம் தாங்கும் திருத் தோள்கள் —

ஸூந்தர தோளுடையான் — ஸூந்தர பாஹு ஸ்தவம் நூபுர கங்கை -சிலம்பாறு

ஷேமங்கர பாஹவா –மம துரம் -பட்டர்
அஹம் மத் ரக்ஷண பர -ரக்ஷண பலம் -நானும் என்னை ரசிக்கும் பொறுப்பும் பலமும் அவனது
ப்ராப்தாவும் பிராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனதே ஸ்ரீ பதி ரேவ

மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -பயம் தீர்க்கும் அதற்கும் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார்

சரணம் அடைந்தவர்களின் பாரத்தைத் தாங்குவதால் விளங்கும் கைகள் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைக் காக்கும் அழகிய புஜமுள்ளவர்–ஸ்ரீ சங்கரர் –

அழகிய தோள்கள் உள்ளவர் -இன்பத்தை அனுபவிக்கும்படி செய்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

267-துர்த்தர –
தடுக்க முடியாதவன்-

தாத்₃ருக்₃பு₄ஜவ லேந ஸம்வர்த ஸமுத்₃ர வேகோ ₃ பா₃ல க்ரீடா₃ஸைகத ஸேது பி₄ரிவ
பரைர் து₃ர் வார வேகோ ₃
து₃ர்த₄ர꞉ ।
* ஈஷது₃꞉ஸுஷு, இத்யாதி₃நா க₂ல் ||
ஏவம் து₃ர் லபோ ₄ து₃ர்க₃ம இத்யாத₃யோ(அ)பி ॥

வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி -பெரிய திருமொழி -9-1-4-

தாரணம் தாங்குவது -அவனைத் தடுக்க முடியாதே
கட்டடங்க ஆற்றல் வெள்ளம் -பிரதிகூலரால் எதிர்க்க முடியாதே
அருள் வெள்ளம் -அனுகூலரால் பொறுக்கவும் முடியாதே

மண்டோதரி வைய வந்த வாயால் வாழ்த்தி
கண் முன்னாள் சேவை சாதித்தாலும் புத்திக்கு எட்டவில்லையே -ஆகவே த்வம் -சுட்டுக் சொல்
த்வம் அப்ரமேயச்ச -துராதஸ்ஸ

இச் சிறந்த கை வன்மையினால் -பிரளய சமுத்ரம் போல் வேகம் உடைமையினால் பிறர் சக்திகள் மணல் அணைகள்
போலத் தடுக்க மாட்டாமல் உடைந்து போம்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்தை விரும்புகிறவர்கள் தியானிக்கும் போது மனத்தில் நிறுத்துவதற்கு அரிதாக இருப்பவர் –
பூமி முதலிய எல்லாவற்றையும் தாங்குகின்ற தம்மைத் தாங்குபவர் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

பிறரால் தாங்க முடியாதவராக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

268-வாக்மீ-
கொண்டாடும்படியான வாக்கை உடையவன்

ததா₂ ப்ரஸஸ்ய தயா வாக₃ஸ்யாஸ்தீதி
வாக்₃மீ ।

ப்ரஸம்ஸாயாம் வாஸோ க்₃மிநி꞉ ।
ப்ரஸஸ்யத்வம் ச வேதா₃த்மகத்வாத்₃ ஜித்வர மது₄ர க₃ம்பீ₄ர
ப்ரிய ஹிதத் வாச்ச । யதா

ஜித்வர–வெற்றி கொடுக்கும் –
மது₄ர -இனிமையாய் இருக்கும்
க₃ம்பீ₄ர-ஆழமாய் இருக்கும்
ப்ரிய -பிரியமாயும்
ஹிதத் வாச்ச -ஹிதமாகவும் இருக்குமே

உத்தர உத்தர உக்தவ் ச வக்தா வாசஸ்பதிர் யதா –அயோத்யா -1-17-
மற்றவர்களின் வாதங்களுக்கு ஏற்ற பதில் அளிக்க இராமன் வல்லவன் –
இத்தகைய நிலையில் அவனே வாசஸ்பதி யாவான்

வாக் விவ்ருதாச்ச வேதா —வேதங்கள் அனைத்தும் அவனது வாக்குகளே யாகும்

வாக்மீ ஸ்ரீ மான் -வால்மீகி ராமனுக்கும் ராமன் திருவடிக்கு-விரிஞ்சனோ –சொல்லால் தோற்றிற்றே
இங்கு கொண்டாடத்தக்கவர் -புகழக்கூடிய வாக்கு வேத வாக்குகள்-அவற்றை நாம் கொண்டாட வேண்டும்
அவர் பேச்சாற்றல் -அதனாலேயே வேதங்களை வெளியிட்டு அருளினார் என்றுமாம்-வேதமே இவர் வாக்கு

வேத நான்காய் -வேதமே உருவானவன்-மிக்க நான்மறையின் சுடர் ஒளியாலே பாஷ்யகாரர் வெற்றி

பூயஸ் கதய திருப்திர் ஹி ஸ்ருண்வதோ நாஸ்தி மே அம்ருதம் -கீதை -10-18-
மேலும் பேசுவாயாக -உனது அம்ருதம் போன்ற சொற்கள் எவ்வளவு கேட்டாலும் நான் திருப்தி அடைய மாட்டேன்

புத்திமான் மதுரா பாஷீ பூர்வ பாஷீ பிரியம் வத -அயோத்யா -1-13-
இராமன் புத்திமான் -இனிய சொற்களைக் கொண்டவன் –
முதலில் பேசத் தொடங்கி அனைத்து விதமான சொற்களையும் பேசக் கூடியவன் –

ஈர யந்தம் பாரதீம் அநீர்யாம் சங்கரீம் ஸ்ருஜ்ஜயாநாம் விபூஷப்தி க்ரஹணீயாம நிந்தாம் பரா ஸூ நாம் அக்ரஹணீய ரூபாம்
அவன் பாரதர்கள் மற்றும் ஸ்ருஜ்ஜயர்கள் ஆகியவர்களின் மென்மையான சரித்திரங்களை உரைக்கிறான்
அவை மகிழ்ச்சி அளிப்பவை யாகும் -உயர்ந்தவையுமாகும் –
மோக்ஷத்தை விரும்புவர்களுக்கு ஏற்றது -துன்பம் கொண்டவர்களுக்கு ஏற்றது

அமேத மேதஸ் வநஸ் (ஓகமேஸ்வந ) காலே பர க்ருஹா விபுலம் புஜம் அநர்ம க்ருதம் ஆத் ரஸ்தம்
அநி ரஸ்தம் அசம் குலம் ராஜீவ நேத்ரோ ராஜா நாம் ஹேதுமத் தாக்யம் அப்ரவீத்
தாமரைக் கண்ணன் நீளமான கைகளைக் கொண்ட அரசனின் கரங்களைப் பிடித்துக் கொண்டான்
சரியான காலத்தில் மழை அளிக்க வல்ல மேகங்களின் இடி குழப்பம் போன்று அவன் குரல் இருந்தது
அவை அச்சம் விளைவிப்பதாக இல்லை
அவை தெளிவாகவும் ஏற்கும்படியாகவும் இருந்தன

வேதம் அவன் வாக்கு -கீதாம்ருதம் பொழிபவன்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று -நடந்த நல் வார்த்தை அறிந்துமே
வார்த்தை அறிபவர் மாயவர்க்கு ஆள் அன்றி யாவரோ -7-5-9
தேசுடைய தேவர் திரு வரங்க செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே -நாச் 11-8-

வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு -அழகைக் காட்டி –
பெண்ணே உனது ஒசிந்த இடையைப் பிடிக்க அஷ்ட புஜ கரத்தன் நான் –

சொல் -வார்த்தை மெய்ம்மைப் பெரு வார்த்தை -பேச்சு மூன்று சரம ஸ்லோகங்கள் அருளிய வாக்மீ

சிறந்த வாக்கை யுடையவர் -சிறப்பாவது வேதத்தில் கூறப் பட்டதாகவும் வெற்றியை யுடையதாகவும் இனிமையாகவும்
கம்பீரமாகவும் பிரியமாகவும் ஹிதமாகவும் இருப்பதாகும் -ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் கேட்கக் கேட்க அமுதம் போன்ற இனிய வாக்குகளை உரைப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

வேத ரூபமான சிறந்த வாக்கை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வேத ரூபமான சிறந்த வாக்கை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

——————

269-மஹேந்திர
சிறந்த ஐஸ்வர்யம் உடையவன்
இந்திர – இதி பரம ஐஸ்வர்யே-

ஏவம் ஸர்வ தோமுக₂ம் ப்ரஸ்ருதத்வாத் பூஜ்ய பரம ஐஶ்வர்யோ
மஹேந்த்₃ர꞉ ॥
இதி₃பரம ஐஶ்வர்யே ;
* ருஜேந்த்₃ராக்₃ர இத்யாதி₃நா ரந் ப்ரத்ய யாந்தோ நிபாதித꞉ ॥

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்

இந்திர லோகம் ஆளும் அச்சுவை வேண்டேன்-இதி பரம ஐஸ்வர்யம் இந்திரா லோகா மாதா-ஸ்ரீ வைகுண்டத்தையே சொன்னவாறு

பொன் உலகு ஆளீரோ புவநி எல்லாம் ஆளீரோ

கொலு ஸ்ரீ நிவாஸன் -அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன் -அவன் ஐஸ்வர்யத்துக்கும் ஜீயர் பொறுப்பு-ராமானுஜர் ஏற்பாடு

யாவராலும் கொண்டாடப் படும் பரமேஸ்வரத் தன்மை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உயர்ந்த இந்திரர் ஈஸ்வரர்களுக்கும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர் –

விரும்பியவற்றைக் கொடுக்கும் மேன்மை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————-

270- வஸூ த-
தன்னைக் கொடுப்பவன்-

ஏவம் ஸத்யப் யநபி₄ப ₄வ நீயே மஹேந்த்₃ரத்வேந மஹத்த்வே லகு₄ப்₄யோ த₄நாயத்₃ப₄யோ
த₄நம் த₃தா₃தீதி
வஸுத₃꞉ । யதா₂
* தே ₃வேந்த்₃ரஸ் த்ரி பு₄வந மர்த₂மேகபிங்க₃꞉ இத்யாதி₃ ॥

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான்-கண்ணனைக் கொடுத்தால் எல்லாமுமாகுமே

ஞானம் பக்தி வைராக்யம் -தாஸ்ய ரஸம் அறிந்த புழு பிரமனை விட பெரியதாகும்

வேண்டிற்று எல்லாம் தரும் கோதிலா மணி வண்ணன் -வள்ளலே மது ஸூதா

தடையற்ற பெரும் செல்வம் இருந்த போதும் பொருளை விரும்பும் சிறியோர்க்கும் அப் பொருளைக் கொடுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

செல்வத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஜனங்களை அவரவர்க்கு உரிய இடங்களில் வைப்பவர் -தம் ஸ்வரூபத்தை மறைப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————–

271-வஸூ –
தானே தனமாய் உள்ளவன் வைத்த மா நிதி
உண்ணும் சோறு –

வஸூ தேவஸ் ஸர்வம் இதி –7-19-

இதி ப்ரகாரேண க₃ரீய ஸாம் ஸ்வயமேவ த₄நமிதி
வஸு꞉ ॥

தன்னைத் தந்த கற்பகம்
105 பார்த்தோம் மீண்டும் 701 வரும்-

வாஸூ தேவனே அனைத்தும் என்று உள்ளவனுக்குத் தானே பெரும் செல்வம் ஆகிறான்

உயர்ந்தவர்களுக்குத் தாமே செல்வமாக இருப்பவர் -அவர்கள் மற்றப் பொருள்களை பொருளாகவே நினைப்பதில்லையே –ஸ்ரீ பராசர பட்டர் –

தம் ஸ்வரூபத்தை மாயையினால் மறைப்பவர் -தாமே தனமாக இருப்பவர் -ஸூர்ய ரூபத்தால் ஆகாசத்தில் வஸிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எங்கும் வசிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————-

மேல் இவ்வாறு சொன்ன மஹிமைக்குத் தக்க விஸ்வ ரூப பரமான திரு நாமங்கள் கூறப்படுகின்றன

———

புருஷ சூக்தத்தில் விளக்கப்பட்ட திரு நாமங்கள் –

226-சஹஸ்ர மூர்தா –ஆயிரம் -எண்ணற்ற -தலைகளை உடையவர் –
227-விச்வாத்மா – தன்னுடைய ஞான சக்திகளால் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பவர் –
228-சஹஸ்ராஷ -எண்ணற்ற கண்களை உடையவர் –
229-சஹஸ்ரபாத் -எண்ணற்ற திருவடிகளை உடையவர் –
230-ஆவர்த்தன -சம்சாரச் சக்கரத்தை சுழற்றுபவர் -கால சக்ரம் -உலக சக்ரம் -யுக சக்ரம் -ஆகியவற்றை சுழற்றுபவர் –

231-நிவ்ருத்தாத்மா -பிரக்ருதியைக் காட்டிலும் மும்மடங்கு பெருத்த நித்ய மண்டலத்தை உடையவரானபடியால் மிகச் சிறந்த ஸ்வரூபம் உடையவர் –
232-சம்வ்ருத -பிரக்ருதியின் தமோ குணத்தால் அறிவு இழந்தவர்களுக்கு மறைந்து இருப்பவர் –
233-சம்ப்ரமர்த்தன -தன்னை உபாசிப்பவர்களுக்குத் தமோ குணமாகிய இருட்டை ஒழிப்பவர் –
234-அஹஸ் சம்வர்த்தக -நாள் பஷம் மாதம் முதலான பிரிவுகள் உடைய கால சக்கரத்தை சுழற்றுபவர் –
235-வஹ்நி- எங்கும் உள்ள பரம ஆகாச உருவத்தில் பிரபஞ்சத்தையே தாங்குபவர்
236-அநில- பிராண வாயுவாக இருந்து யாவரும் வாழும்படி செய்பவர் –
237-தரணீதர-தன் சங்கல்பத்தாலேயே பூமியைத் தாங்குபவர் –
238-ஸூ ப்ரசாத -தன்னை வேண்டியவர்களுக்காக அனைத்து பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுபவர்
239-பிரசன்னாத்மா -நிறைவேறாத ஆசையே இல்லாத படியால் நிறைந்த மனம் உள்ளவர் –
240-விஸ்வஸ்ருக் -ஜீவர்களின் குற்றம் பெறாமல் கருணையே காரணமாக உலகைப் படைப்பவர் –

241-விஸ்வ புக் விபு -ஒரே காப்பாளானாக உலகில் எங்கும் பரவி இருப்பவர் –
242-சத்கர்த்தா – மெய்யன்பர்களைப் பூசிப்பவர் –
243-சத்க்ருத -சபரி முதலான சாதுகளால் பூசிக்கப் படுபவர்
244-சாது -அடியார்கள் விரும்பிய படி தூது போவது தேர் ஓட்டுவது ஆகியவற்றைச் செய்பவர் –
245-ஜஹ்நு-பொறாமையும் பகைமையும் உள்ளோருக்குத் தன்னை மறைப்பவர் –
246-நாராயண -அழியாத நித்யமான சித் அசித் கூட்டத்துக்கு இருப்பிடம் ஆனவர் -அந்தர்யாமி யானவர் -‘
247-நர -தன் உடைமையாகிய சித் அசித்துக்களை அழியாமல் இருக்கப் பெற்றவர் –

——————————————————————

யானே நீ என்னுடைமையும் நீயே —

248-அசங்க்யேய-எண்ணிறந்தவர்-உடைமைகள் எண்ணிறந்தபடியால் –
249-அப்ரமேயாத்மா -எண்ணிறந்த பொருட்களின் உள்ளும் புறமும் வியாபிக்கிற படியால் அளவிட முடியாதவர் –
250-விசிஷ்ட -எதிலும் பற்று இல்லாதபடியால் -அனைத்தையும் விட உயர்ந்தவர் –
251-சிஷ்டக்ருத் -தன் அடியார்களை நற்பண்பு உடையவர்களாக ஆக்குபவர் –
252-சூசி -தானே தூய்மையாக இருந்தவர் -தன்னை அண்டியவர்களைத் தூய்மை யாக்குபவர் –
253-சித்தார்த்த -வேண்டியது எல்லாம் அமையப் பெற்றவர் –
254-சித்த சங்கல்ப -நினைத்தது எல்லாம் நடத்தி முடிக்கும் பெருமை உள்ளவர் –
255-சித்தித-எட்டு திக்குகளையும் யோகிகளுக்கு அருளுபவர்
256-சித்தி சாதன -இவரை அடைவிக்கும் வழியான பக்தியே இனிதாக உடையவர் –
257-வ்ருஷாஹீ -அவனை அடையும் நாளே நன்னாளான தர்மமாக இருப்பவர் –
258-வ்ருஷப – சம்சார தீயால் சுடப் பட்டவர்களுக்கு அருள் என்னும் அமுதைப் பொழிபவர் –
259-விஷ்ணு -அருள் மழையாலேயே எங்கும் இருப்பவர் –
260-வ்ருஷபர்வா -தன்னை அடைவதற்கு தர்மங்களைப் படிக்கட்டாக உடையவர் –
261-வ்ருஷோதர -தன் வயிறே தர்மமானவர் -அடியார்கள் அளிக்கும் நைவேத்யத்தால் வயிறு நிறைபவர் –
262-வர்தன -தாய் போலே தன் வயிற்றிலே வைத்து அடியார்களை வளர்ப்பவர் –
263-வர்த்தமான –அடியார்கள் வளரும் போது தானும் மகிழ்ந்து வளர்பவர் –
264-விவிக்த -மேற்கண்ட செயல்களால் தன்னிகர் அற்றவர் –
265-ஸ்ருதி சாகர -நதிகளுக்கு கடல் போலே -வேதங்களுக்கு இருப்பிடமானவர் –
266-ஸூபுஜ-அடியார்களின் சுமையைத் தாங்கும் மங்களமான தோள்கள் உடையவர் –
267-துர்தர -கடல் போலே தடுக்க முடியாத வேகம் உடையவர் –
268-வாக்மீ–வேத வடிவமான சிறந்த வாக்கை உடையவர் -வேதங்களால் துதிக்கப் படுபவர் -இனிமையாகப் பேசுபவர் –
269-மஹேந்திர-நிகரற்ற அளவிட முடியாத -அனைவரையும் ஆளும் செல்வம் உடையவர் –
270-வஸூத-குபேரனைப் போலே பொருட்செல்வத்தை விரும்புவோருக்கு அதை அருளுபவர் –
271-வஸூ -ஆழ்வார்கள் போன்றோர்களுக்கு தானே செல்வமாக இருப்பவர்

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading