பின்னை மணாளனை பேரில் கிடந்தானை
முன்னை அமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது ஆள் கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய்
மாதவன் தன்குழல் வாராய் அக்காக்காய் ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -2 5-1 – –
பின்னை மணாளனை -நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனானவனை –
இவ் அவதாரத்துக்கு பிரதான மகிஷி இவளே இறே
மேன்மைக்கு ஸ்ரீ யபதி போலே இறே நீர்மைக்கு இவளுக்கு வல்லபன் என்கிறதும் –
ஸ்ரீ நப்பின்னை பிராட்டியை திருமணம் புணர்ந்து -பின்னை அவளோடு கூட வந்து
கண் வளர்ந்து அருளிற்று ஸ்ரீ திருப் பேரிலே போலே காணும்
————————-
ஸ்ரீ மத் த்வாரகையிலே -பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய இருந்தவன்
வர்த்திக்கிற தேசம் இது என்கிறார் –
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய-
நரகாசுரன் திரட்டி வைத்த -ராஜ கன்னிகைகளாய் -அவனை நிரசித்த அநந்தரம்
அங்கு நின்றும் கொண்டு வந்து -திருமணம் புணர்ந்து அருளின பதினாறாயிரம் தேவிமார்
ஆனவர்கள் -தங்களுடைய பிரேம அனுகுணமாகவும் -ப்ராப்ய அனுகுணமாகவும் நித்ய பரிசர்யை பண்ண
துவரை என்னும் அதில்-
ஸ்ரீ மதுரையில் எழுந்து அருளி நிற்க செய்தே -இங்கு உள்ள எல்லாரையும் அங்கு கொடு
போய் வைக்க திரு உள்ளம் பற்றி -ஸ்வ சங்கல்ப்பத்தாலே உண்டாகினது ஆகையாலே
அத்யந்த விலஷணமாய்-ஸ்ரீ மத் த்வாரகை என்று பிரசித்தமான திருப் படை வீட்டிலே
நாயகராகி வீற்று இருந்த மணவாளர்-
அவர்களுக்குத் தனித் தனியே -என்னை ஒழிய அறியார்-என்னும்படி நாயகராய் கொண்டு
தன்னுடைய வ்யாவர்த்தி தோன்ற எழுந்து அருளி இருந்த மணவாளர் ஆனவர் –
மன்னு கோயில் –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருக்கும் மங்கள சூத்தரத்தை தரித்து –
தமக்கு
அனந்யார்ஹராய் -அநந்ய போகராய்-இருக்கும் அவர்களோடு கலந்து
அடிமை கொள்ளுகைகாக -அழகிய மணவாளப் பெருமாளாய்க் கொண்டு –
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே -நித்ய வாசம் பண்ணுகிற கோயில் –
————————
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மட மகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஓக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஓக்கலையானே –ஸ்ரீ திருவாய் மொழி –1-9-4-
திருமகள்
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு பிரதான மகிஷியாய் -பட்டத்துக்கு உரியவளாய் –
ந கச்சின் ந அபராத்யதி -என்று இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டியார்
மண் மகள்
முதலிலே குற்றம் பார்க்கக் கடவதோ -என்று அவனுக்கு பொறைக்கு உவாத்தாய்
பொறை விளையும்படியான ஸ்ரீ பூமிப் பிராட்டி
ஆயர் மட மகள்
அனுபவ ஸூகம் தானாய் தன் வடிவு அழகாலே துவக்கித் திரு உள்ளத்திலே
குற்றம் படாதபடி இருக்கும் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி
திருமகள் அவன் ஐஸ்வர்யம்
மண் மகள் அது விளையும் பூமி
ஆயர் மட மகள் அத்தைப் புஜிக்கிற போக்தாவானவள் -என்றுமாம் –
———
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை–வாசம் செய் பூங்குழலாள் என்கிறபடியே
விலக்ஷணமான மயிர் முடியை யுடையளாய் -தாமரைப் பூவில் பிறப்பாலே நிரதிசய போக்ய பூதையாய் நித்ய யவ்வன
ஸ்வபாவையான ஸ்ரீ மஹா லஷ்மிக்கும் இவளோடு ஒத்த ரூப வைலக்ஷண்யத்தை யுடைய ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு அபி ஜாதிரான
கோபாலர்க்கு ஸீரோ பூதையான நப்பின்னைப் பிராட்டிக்கும் அபி மதனான சர்வேஸ்வரனை யுத்தேசித்து
——————————
பின்னை கொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-
பின்னை கொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்–நிரதிசய போக்ய பூதையான நப்பின்னை பிராட்டியோ
பூமிக்கு நிர்வாஹிகையாய் ஸ்லாக்யையான ஸ்ரீ பூமிப் பிராட்டியோ -அவனுக்கு நிரதிசய சத்ருசையான ஸ்ரீ மஹா லஷ்மீயோ –
இப்படி பிறந்து இருக்கிறவன்
————————-
என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-
என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;–எனக்கு ஸ்வாமி நியான ஸ்ரீ லஷ்மீ யானவள் தனக்கு அபிமத
ஸ்தானமாகச் சேர்ந்த திரு மார்பை யுடையவனே -என்னும்
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;–அச்சேர்த்தி அழகோடு எனக்குத் தாரகமான பிராணனாய்க் கொண்டு
என் நெஞ்சிலே இருந்தவன் என்னும்
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்;–நீல வரை இரண்டு பிறை கவ்வி என்கிற கணக்கிலே
திரு வடிவுக்கு பரபாகமான உன்னுடைய திரு எயிற்றாலே பிரளயத்தில் முழுகி அண்ட கபாலத்தை நின்றும் இடந்து எடுத்து
உனக்கு அபிமதையாகக் கொண்ட ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு சத்ருச நாயகனே என்னும்
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்;–ருஷபங்களை சுல்கமாக நியமித்த அன்று
இடி போலே பயாவஹ த்வனியான ருஷபங்கள் ஏழையும் அபிமத விஷய கண்ட அஸ்லேஷம் போலே அநாயாசேன தழுவி
நிதி எடுத்துக் கொண்டால் போலே ஸ்வீ கரித்த சத்ருச கோப குலத்திலே பிறந்த நப்பின்னைப் பிராட்டிக்கு
ப்ரீதியே வடிவு கொண்ட பாவனானவனே என்னும்
இப்படி அவர்கள் பக்கலிலே உன் பிரணயித்தவத்தை பிரகாசிப்பித்தால் போலே இவளுக்கும் உதவுக்கைக்காக
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!–கட்டளைப்பட்ட ஸ்ரீ ரெங்க திவ்ய க்ஷேத்ரத்தை வாசல் ஸ்தானமாக அங்கீ கரித்தவனே
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–இவளுக்கு ஆர்த்தி பர்யவசான பிரகாரம் அறிகின்றிலேன்
————————-
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்–உன் அழகுக்கும் பெருமைக்கும் தகுதியான தேவிமாராவார் – –
உனக்கு நிரதிசய சம்பத் ரூபையான ஸ்ரீ லஷ்மியும் -ஸமஸ்த விபூத்ய அபிமானியான பூமியும் –
அதுக்கும் மேலே பின்னையும் இவர்களோடு கூட இருக்கிற நீ ஏவ -நியோயிக்க கைங்கர்யம் பண்ணுவார்கள் நித்ய ஸூரிகள்-
—————–
அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-
அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்–ஊர்த்வ லோகங்களிலும் பூமியிலும் பாதாளதிகளான ஸமஸ்த பிரதேசங்களிலும்
அனுகூலரான தேவர்களுக்கு பிரதிகூலரான அஸூரர்களும் தாதாவிதரான மனுஷ்யாதிகளும் எல்லாம்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி–அனுபாவ்ய மஹிஷ்யாதி விசிஷ்டனான உன்னை இவ்வித போக்யன் என்று
அறிய மாட்டாதே ரக்ஷகத்வ ஏகாந்தமான சர்வ சக்தி யோகாதிகளைச் சொல்லிக் கூப்பிட்டு
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்–புஷ்ப பரிமளம் வடிவு கொண்டால் போலே இருக்கிற ஸ்ரீ மஹா லஷ்மியும் –
கந்தவதி யாகையாலே போக்யத்தையே வடிவான பூமியும் –
அவ்வளவே அன்றியே ஆபி ஜாத்ய ஆட்க்ஹ்யக்யத்தை யுடைய நீளையும்
ஸுந்தர்ய ஸுகுமார்யாதிகளிலே அகப்பட்டு திரு மேனியை பிரியாமல் பொருந்தி அனுபவிக்கும்படியாய்
————————
கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை–அஸி தேக்ஷிணா-என்னும்படி வடிவு அழகுக்கு
நீயும் தகுதி இல்லாதபடியான அதிசயித வைலக்ஷண்யத்தை யுடைய
கமல வாசிநியான ஸ்ரீ மஹா லஷ்மியும் ஸ்ரீ பூமியும் தங்களுடைய ஸ்வாபாவிக மார்த்வத்தையுடைய திருக் கைகளால்
பிடிக்கும்படியான நிரதிசய ஸுகுமார்யத்தை யுடைய திருவடிகளை
———————
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்–பத்ம வாஸினீ யான ஸ்ரீ மஹா லஷ்மி பிராட்டியாருக்கும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியாருக்கும் போக்தாவாய்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்-லோகத்தில் பிராணிகள் தேவதைகள் எல்லார்க்கும் நிர்வாஹகனாய்
————————-
ஸமஸ்த ஜநநீம் வந்தே சைதன்ய ஸ்தந்யதாயி நீம் ப்ரேயஸீம்
ஸ்ரீ நிவாசஸ்ய கருணாமிவ ரூபினாம்-
வந்தே வருஷ கிரீஸஸ்ய மஹிஷீம் விஸ்வ தாரிணீம்
தத் க்ருபா பிரதிகாதா நாம் ஷமயா
வாரணம் யயா நிஸாமயது மாம் நீளா யத் போக படலைர் த்ருவம் பாவிதம்
ஸ்ரீ நிவாசஸ்ய பக்த தோஷஷ்வ தர்சனம்
ஸமஸ்த ஜநநீம் வந்தே சைதன்ய ஸ்தந்யதாயி நீம் -வித்யாதி தேவதை
ப்ரேயஸீம் -ப்ராதான்ய தாதார்த்தம்
ஸ்ரீ நிவாசஸ்ய கருணாமிவ ரூபினாம்-ந கச்சின் ந அபராத்யாதி -அர்த்தம்
வந்தே வருஷ கிரீஸஸ்ய மஹிஷீம் விஸ்வ தாரிணீம்
தத் க்ருபா பிரதிகாதா நாம்
ஷமயா வாரணம் யயா -பொறைக்கு உவாத்து என்ற அர்த்தம்
நிஸாமயது மாம் நீளா யத் போக படலைர் த்ருவம் பாவிதம் ஸ்ரீ நிவாசஸ்ய பக்த தோஷஷ்வ தர்சனம் -அனுபவ ஸூகம் தானாய் என்ற அர்த்தம்
———————–
இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன் நற் புவி தனக்கிறைவன்
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றை யோர்க்கெல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே––ஸ்ரீ பெரிய திருமொழி-2-3-5-
வியாக்யானம் –
இன் துணைப் பதுமத் தலர்மகள் – நெஞ்சுக்கு இனிய துணையாய் இருக்கிற பதுமத்தலர் மகள் உண்டு –
தாமரைப்பூவை உத்பத்தி ஸ்தானமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார் அவளுக்கு இன்பனானவன் –
தனக்குமின்பன் — எல்லார்க்கும் ஸ்ப்ருஹணீயையாய் இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியார் தான் -அகலகில்லேன் -என்று
விரும்பி வர்த்திக்கும்படி அவளுக்கு ஸ்ப்ருஹணீயனானவன் –
நற் புவி தனக்கிறைவன் – ஸ்ரீ சர்வேஸ்வரனான தனக்கும் கூட பொறைக்கு உவத்தாய் இருக்கிற
ஸ்ரீ பூமிப் பிராட்டியாருக்கு வல்லபனானவன் –
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை- தன்னையே துணையாக உடையாளான
ஸ்ரீ ஆயர் பாவை உண்டு -ஸ்ரீ நப்பின்னை பிராட்டி – அவளுக்கு ஸ்வாமி யானவன் –
மற்றை யோர்க்கெல்லாம் வன் துணை – இப்படி இருக்கையாலே அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன் –
பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும் என் துணை- ஆஸ்ரிதரான ஸ்ரீ பாண்டவர்களுக்காக
அவர்கள் வாயில் சொல்லி விட்ட வார்த்தையை அங்கே சென்று சொல்லுவது -இங்கே வந்து அறிவிப்பதாய் –
இப்படி ஆஸ்ரித விஷயத்தில் தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை எனக்கு அறிவித்தவன் –
எந்தை – எனக்கு ஸ்வாமியாய் –
தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே – என் குலத்துக்கு நாதன் ஆனவன் -.
———————
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் குல மன்னரங்கம் மழுவில் துணிய
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்காக கிற்பீர்
பூ மங்கை தங்கிப் புல மங்கை மன்னிப் புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-5-
ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் நித்யவாசம் பண்ணி
ஸ்ரீ புகழ் மங்கை எங்கும் உஜ்ஜ்வலமாய் வர்த்திப்பதும் செய்து புகழையும் காப்பையும் உடைய
பொழில் சூழ்ந்த ஸ்ரீ தில்லை –
—————–
பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசு இது வென்றால்
மா நிலமா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டுண்
பூ மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி
தே மலர் தூவ வருவான் சித்திர கூடத்து உள்ளானே —3-3-2-
இவன் கேவலம் பிள்ளை அல்லன்-ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபன் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நாயகன்
என்று நாட்டார் உடைய இந்திரியங்களைப் பிணைக்கும் வடிவை உடைய இடைப் பெண்கள் பாடி
செவ்வைப் பூவைத் தூவ வருமவன்
——————
கருமுகில் போல்வது ஓர் மேனி கையன் ஆழியும் சங்கும்
பெரு விறல் வானவர் சூழ ஏழுலகும் தொழுது ஏத்த
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத்
திருமகளோடும் வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-9-
காளமேகம் போலே இருக்கும் வடிவையும் கையில் திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் உடையனாய்
பெரிய மிடுக்கை உடைய ப்ரஹ்மாதிகள் சூழ்ந்து சேவிக்க சப்த லோகத்தில் உள்ளாறும் திருவடிகளில் விழுந்து ஏத்த
ஸ்ரீ பிராட்டிமார் மூவரோடும் கூட வருமவன்-
——————-
திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1-
பொறுப்பிக்கும் அவளும்-பொறைக்கு உவாத்தானவளும்-எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே
ஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள்
நமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட –
தேவர்களுக்கும் கூட கால் பொருந்த அரிதாம்படியான இஸ் சம்சார விபூதியிலே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான
ஸ்ரீ நித்ய சூரிகள் பொருந்தி ஆஸ்ரயிக்கும் படியாக இருக்கிற தேசம் –
————————
பார்வண்ண மட மங்கை பனி நன் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வகத்தில் இருக்கையை முன் நினைந்தவனூர்
கார் வண்ண முது நீர்க் கடல் மல்லைத் தல சயனம்
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே––ஸ்ரீ பெரிய திருமொழி -2-6-2-
முதல் தன்னிலே நம் குற்றம் அவன் திரு உள்ளத்திலே
படாத படி பண்ணும் ஸ்ரீ பூமி பிராட்டியாரும் –
அவன் தன் சர்வஞ்ஞத்வத்தாலே நம் குற்றத்தை கண்டானே ஆகிலும் -அவன் தன்னை –
ந கச்சின் ந அபராத் யதி-என்று பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும்
அவன் பக்கலிலே கிட்ட இருக்கையாலே
நமக்கு இனி இழக்க வேண்டாதபடி
சுலபன் என்று அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை
ஹிருதயத்தில் அனுசந்திக்கும் அவர்கள்
என்னை அடிமை கொள்ளுமவர்கள் என்கிறார்-
வியாக்யானம் –
பார்வண்ண மட மங்கை
பாரை வண்ணமாக உடையாளாய்
ஆத்ம குணத்தை உடையாளாய் இருக்கிற
ஸ்ரீ பூமி பிராட்டி –
பூமிக்கு அபிமானியாய் இருக்குமவள் இறே-
அவன் தனக்கு கூட பொறைக்கு உவாத்தாய் இறே இவள் இருப்பது –
தன் பக்கலிலே எல்லா பிரதி கூல்யத்தையும்
பண்ணிக் காலிட்டு துகையா நின்றாலும்
துகையா நின்றோம் என்று கூச வேண்டாதே இறே இருப்பது -ஷமை என்று இறே பேர் –
பனி நன் மா மலர்க் கிழத்தி –
பிறர் குற்றம் நெஞ்சில் படாதபடியான மார்த்தவத்தை உடைய தலைவி –
சர்வ கந்த -என்கிற வஸ்துவையும்
தன்னுடைய போக்யதையாலே துவக்கி
ஆஸ்ரிதர் குற்றம் நெஞ்சில் படாதபடி பண்ணுமவள்-
அழகிய தாமரைப் பூவில் -பரிமளம் உபாதாநமாக பிறந்தவள் –
இத்தால் சர்வேஸ்வரனுக்கு தன்னோடே பணி
போரும்படியான போக்யதையை உடையவள் என்கை –
இவர்கள் –
நீர் வண்ணன் மார்வகத்தில் இருக்கையை முன் நினைந்து –
கடல் போலே இருக்கிற குளிர்ந்த வடிவில் இடவருகிலும்
திரு மார்பிலும் எழுந்து அருளி இருக்கிற இருப்பை அனுசந்தித்து –
நமக்கு புருஷகார பூதைகளான நாய்ச்சிமார்கள் அங்கே
சேர இருந்தார்கள் என்று அனுசந்தித்தால் பின்னை
நமக்கு கிட்டுகைக்கு ஒரு குறை இல்லை இறே –
மாதா பிதாக்கள் சேர இருந்த இடத்தில்
பிரஜைகளுக்கு சென்று கிட்டுகையில் ஒரு அருமை இல்லை-
———————
பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசு இது வென்றால்
மா நிலமா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டுண்
பூ மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி
தே மலர் தூவ வருவான் சித்திர கூடத்து உள்ளானே –ஸ்ரீ பெரிய திருமொழி -3-3-2-
இவன் கேவலம் பிள்ளை அல்லன்-ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபன் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நாயகன்
என்று நாட்டார் உடைய இந்திரியங்களைப் பிணைக்கும் வடிவை உடைய இடைப் பெண்கள் பாடி
செவ்வைப் பூவைத் தூவ வருமவன்-
—————-
கருமுகில் போல்வது ஓர் மேனி கையன் ஆழியும் சங்கும்
பெரு விறல் வானவர் சூழ ஏழுலகும் தொழுது ஏத்த
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத்
திருமகளோடும் வருவான் சித்திர கூடத்துள்ளானே–ஸ்ரீ பெரிய திருமொழி -3-3-9-
காளமேகம் போலே இருக்கும் வடிவையும்
கையில் திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் உடையனாய்
பெரிய மிடுக்கை உடைய ப்ரஹ்மாதிகள் சூழ்ந்து
சேவிக்க
சப்த லோகத்தில் உள்ளாறும் திருவடிகளில் விழுந்து ஏத்த
பிராட்டிமார் மூவரோடும் கூட வருமவன்-
————————–
திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–ஸ்ரீ பெரிய திருமொழி 3-10-1-
திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ந கச்சின் ந அபராத்யதி -என்று-குற்றத்தைப் பொறுப்பிக்கும் ஸ்ரீ பிராட்டியும்
முதலில் குற்றம் தன்னை காண்கிறது என் பின்னைப் பொறுக்கிறது என் -என்று
குற்றம் கண்டு பொறுக்கையும் கூட மிகையாம்படி இருக்கிற ஸ்ரீ பூமி பிராட்டியும்
இரண்டு இடத்திலும் விளங்க –
குற்றத்தைப் பொறுப்பிக்கைக்கு ஸ்ரீ பிராட்டி –
குற்றம் கண்டு கைவிட ஒண்ணாத இடத்தில் குற்றம் கணக்கிடும் இதுக்கு பலம் என் -என்று இருக்கும் ஸ்ரீ பூமி பிராட்டி-
தீ வினைகள் போயகல –
இப்படிப் பட்ட ஸ்ரீ பிராட்டிமார் உடைய நித்ய சன்னதியாலே ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஆஸ்ரித விஷயத்து
சம்சாரேஷூ நராதமான் ஷிபாமி -என்கைக்கு-விஷயம் அற்று இருக்கும் ஆயிற்று –
பொறுப்பிக்கும் அவளும்-பொறைக்கு உவாத்தானவளும்-எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே
ஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள்
நமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட –
——————–
பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1-
வாரணி முலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
நித்தியமான யவனத்தை உடையவளாய் அத்தாலே ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு உள்ளத்தை தன் பக்கலிலே துவக்கி
ஆஸ்ரிதர் உடைய குற்றத்தை ந கச்சின் ந அபராத்யதி -என்னும் ஸ்ரீ பிராட்டியார் உடன் கூட
முதல் தன்னிலே குற்றத்தை காண்கிறது என்-பொறுத்தோம் என்று தலை துலுககுகிறது என் -என்று
இவ் வழியாலே அவன் தனக்கும் கூடப் பொறைக்கு உசாத் துணையாக இருக்கும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் கூட நிற்க-
ஸ்ரீ மண் மகளும் -உம்மைத் தொகை காட்டும் பிரதான்ய அர்த்தம் -முதல் தன்னிலே –
—————————–
தாராளன் தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேராளன் ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்
பாராளர் அவரிவர் என்று அழுந்தை ஏற்றப் படைமன்னர் உடல் துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —-6-6-9-
தாராளன் – உபய விபூதியினுடைய ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவன்
தண்ணரங்க வாளன் –ஜகத் ரஷணத்துக்கு உறுப்பாக கோயிலை வாசஸ் ஸ்தானமாக கொண்டு இருக்கிறவன் –
பூ மேல் தனியாளன் – தாமரைப் பூவை இருப்பிடமாக உடையளாய் அத்விதீயமான ஸ்த்ரீத்வத்தை உடைய
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் –
முனியாளர் ஏத்த நின்ற பேராளன் – கேவலம் ப்ரஹ்ம பாவனையேயாய் இருக்கிற
ஸ்ரீ சநகாதிகள் யேத்துகையால் வந்த பெருமையை உடையவன் –
ஆயிரம் பேருடைய வாளன் –அனுபவிப்பாருக்கு இழிந்த இடம் எங்கும்துறையாகும் படியாய் இருக்கிற
ஆயிரம் திரு நாமங்களை உடையவன் –
ஸ்ரீ பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர் –ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் உடைய
பெருமையைக் கேட்க வேண்டி இருப்பீர் –
———————
பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா மகள் மலர் மா
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய
எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம்
நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே –6-10-9-
——————–
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயன் அனையார் பயிலும் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-1-
செங்கமலத் திருமகளும் –
ஆஸ்ரிதர் உடைய சர்வ அபராதங்களையும் பொறுப்பிக்கும் பெரிய பிராட்டியாரும் –
புவியும்-
அப்பொறைக்கு உவாத்தான ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் –
செம்பொன் திருவடியின் இணை வருட –
ஸ்ப்ருஹநீயமாய்
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளை வருட –
——————
தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன்
திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன்
வண்டார் கூந்தல் மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கும்
கண்டான் கண்டுகொண்டுகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-1-
வண்டார் கூந்தல் மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கும்
அச் சேர்த்தியிலே அடிமை செய்ய வேண்டும் என்னும் அதுவும் உண்டாகப் பெற்றதாயிற்று –
வண்டார் கூந்தல் மலர் மங்கை-
தொழுவார் குற்றம் காண்கைக்கு அவசரம் இல்லாத படி மயிர் முடியாலே அவனை துவக்கும் பெரிய பிராட்டியார் –
வடிக்கண் மடந்தை –
ஒரு மயிர் முடி வேண்டாதே தன் நோக்காலே அவனை ஓடி எறிந்திட்டு வைக்கும் கண்ணை உடைய ஸ்ரீ பூமிப் பிராட்டி –
மா நோக்கும் கண்டான் –
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் -என்னுமா போலே
பிரஜைகளின் உடைய ரஷணத்துக்கு இவர்களும் தாமுமான சேர்த்தி உண்டாக வேணும் என்று பார்த்து வைத்தான் ஆயிற்று –
கண்டுகொண்டுகந்த -கண்ண புரம் நாம் தொழுதுமே –
அவனும் நாமும் இவர்களும் சேர வர்திக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் என்று உகந்த ஸ்ரீ திருக் கண்ண புரத்தை தொழுவோம் –
——————-
பெண்ணானாள் பேரிளம் கொங்கையின் ஆர் அழல் போல்
உண்ணா நஞ்சுண்டு உகந்தாரை யுகந்தேன் நான்
மண்ணாளா வாள் நெடும் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ண புரத் துறை யம்மானே —8-10-4-
மண்ணாளா வாள் நெடும் கண்ணி மது மலராள்-கண்ணாளா-
விஷம் தாரகமான உனக்கு ஆகாதார் இல்லை –
நீ கை விடப் பார்க்கும் அன்றும் விட ஒண்ணாத புருஷகாரம் உண்டு –
மண்ணாளா –
பொறை தானாய் இருக்காய்-
தான் பொறை யாளாய் இருக்கும் அளவன்றிக்கே-செய்த குற்றங்களை அவன் திரு உள்ளத்திலே படாத படி
ந கச்சின் ந அபராத்யதி – என்று அவனையும் பொறுப்பிக்கும் அவள் ஆயிற்று –
நோக்காலும் போக்யதையாலும் அவன் தன் வழியே போம்படி நியமிக்கும் அவள் ஆயிற்று –
—————————
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம்
தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே —9-10-2-
நம்முடைய துக்கங்களை எல்லாம் போக்குகைக்காக ஸ்ரீ பிராட்டிமாரோடே கூட ஸ்ரீ திருக் கோட்டியூரிலே
சந்நிஹிதன் ஆனான் என்கிறார் –
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை –
எனக்கு வகுத்த் ஸ்ரீ ஸ்வாமி யாகையாலே
நம்முடைய துக்கா வஹமான வியாதியைப் போக்கும் ஸ்வபாவனாய் —
இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம் செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான் –
இனிய நகையையும்
சிவந்த அதரத்தையும்
உடைய ஸ்ரீ பூமி பிராட்டியார் உடைய
செவ்வியை அனுபவிக்க வல்லனாய்
அத்தாலே
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு இனியன் –
ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றம் பொறுப்பிப்பாள் ஒருத்தியும்
பொறைக்கு உவாத்தாயிருப்பாள் ஒருத்தியும்
ஆக கூடி இனியனாய் இருக்கிறவன் –
————————–
தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ
நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே —10-4-7-
பூதனை கையிலே அகப்பட்ட உன்னை ஆராக நினைத்தாய் – நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய
ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் வல்லபன் ஆனவனே –
அப்படியே ஓர் ஏத்தம் போலே காணும் இவள் மகன் ஆனதுவும் –
————————–
மண் மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலைக் குழலூதி நஞ்சேரிக்கே அல்லிற்றான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ—-10-7-6-
———————
ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப
ஏடி இது என் இது என் இது என்னோ —10-8-9-
திரு மா மகள் மண் மகள் நிற்ப
அகலகில்லேன் இறையும் என்று அவர்கள் ஆசைப் பட்டு நிற்க –
ஆய் மடவாரோடு கூடி
ஆடி அசைந்து குரவை பிணை கோமளப் பிள்ளாய் –
என்றதுக்கு கருத்து
ஒரு வார்த்தை சொல்லுவார்களாக நினைத்து
வ்யதிரேகத்தால் தரியாதவர்கள் இருக்க
உன்னைக் கொண்டு கார்யம் இன்றிக்கே இருப்பார்க்கு அன்றோ
நீ உதவுவது -என்று சொல்லப் புக்காள்-
இவ்வார்த்தை சொல்லித் தலைக் கட்டினால்
பின்னை தனக்கு அவகாசம் அறும் -என்று பார்த்து
அதுக்கு முன்பே காலைப் பிடித்தான்
———————
இரு நில மன்னர் தம்மை யிரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே
செரு நுதலூடு போகியவராவி மங்க மழு வாளில் வென்ற திறலோன்
பெரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புல மங்கை கேள்வர் புகழ் சேர்
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயராகியவர் நம்மை யாள்வர் பெரிதே -11-4-6-
பெரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புல மங்கை கேள்வர் புகழ் சேர் –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபர்
ஸ்ரீ யபதி
ஈஸ்வரன் உடைய சர்வ இந்த்ரியங்களையும்
அபஹரிக்க வல்ல நீளைப் பிராட்டிக்கு வல்லவர்
யச்யஸா -என்னும்படி இவளை உடையவர் -என்னும்
பெரும் புகழை உடையவர் –
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயராகியவர் நம்மை யாள்வர் பெரிதே –
சர்வ லோகங்களையும் வயிற்றிலே வைத்து ரஷித்து
ரஷ்யத்தின் அளவில்லாத ரஷகத்வ பாரிப்பை உடையராய்
இப்படிக்கொத்தவர் நம்முடைய் ஆஸ்ரயணத்தின் சிறுமை பாராதே
யாவதாத்மபாவியாக நம்மை அடிமை கொள்வர்
———————–
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் திரு மகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் ——ஸ்ரீ முதல் திருவந்தாதி –42-
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்-திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் திரு மகள் மேல்-
ஸ்ரீ அனந்தாழ்வான் -திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் -மண்மகட்கே தீர்ந்தவாறு என் கொல் –
– ஆய்மகட்கே தீர்ந்தவாறு என் கொல் -என்று பணிக்கும் –
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த–திருப் பாற் கடலின் திவலை திரு முகத்தில் படும் படிக்கு ஈடாக
திரு வனந்த ஆழ்வான் மேல் கிடந்த
மாலோத வண்ணர் மனம் —-மாலோத வண்ணருடைய—திருமகள் மேல் வைத்த திரு உள்ளம்
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்–திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்-என்று -அருளிச் செய்வார் ஸ்ரீ பட்டர்
ஸ்ரீ பிராட்டியோடு கலந்த போது -புஷபாங்க ராகைஸ் சமம்-என்கிறபடியே அல்லாத பிராட்டிமார் உபகரண கோடியிலே நிற்பார்கள்
அல்லாத ஸ்ரீ பிராட்டிமாரொடு பரிமாறும் போது –இவள் தன் இடையிலும் முலையிலும் கலந்தால் போலே இருக்கும் போகம் தான்
உன்மஸ்தகம் ஆனால் வ்ருத்த கீர்த்த நாதிகளுக்கு கூட்டாய் நிற்பார்கள் -இத்தால் சொல்லிற்று ஆயிற்று இதர விஷயங்கள்
இருவருக்கும் போரா மையாலே சீறு பாறு என்கைக்கு உடலாம் -இங்கு போக்யதா அதிசயத்தாலே
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே திரண்டு அவகாஹிக்க வேண்டும் என்றதாயிற்று —
குற்றத்தை பொறுப்பிக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும்
பொறை விளையும் தரையான ஸ்ரீ பூமி பிராட்டியாரும் -குற்றம் கிளராத படி திரு உள்ளத்தை திரை கொள்ளும்
கோப குல அவதீரணையான ஸ்ரீ நப்பின்னை பிராட்டியாரும் சதாரமாக சம்ச்லேஷித்தால் புஷபாங்க ராகாதிகளோ பாதி
போக உபகரண கோடியில் நின்று ஸ்ரீ பிராட்டியோடே கலக்கும் இடத்தில் சாபத்ந்ய கந்தம் அற அல்லாத ஸ்ரீ பிராட்டிமார் எடுத்து
கை நீட்டுகையாலும் -அவர்களோடு கலக்கும் இடத்தில் தன் முலையிலும் இடையிலும் கலந்தால் போலே
ஸ்ரீ பிராட்டி நினைத்து இருக்கையாலும் -ஸ்ரீ பெரிய பிராட்டியார்க்கே அற்றுத் தீர்ந்ததாய் இருக்கிற படி எங்கனே தான்
–இத்தால் மூவர்க்கும் உண்டான ஐக ரஸ்யம் சொன்னபடி –
——————–
தாளால் சகட்முதைத்துப் பகடுந்தி
கீளா மருதிடை போய்க் கேழலாய் -மீளாது
மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்
பெண்ணகலம் காதல் பெரிது —ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி –54-
அங்கோர் மாதுகந்த மார்வற்குப்-ஸ்ரீ வராஹ ரூபியாய் மீளாத படிக்கு ஈடாக
பூமியைக் கீண்டு ஸ்ரீ பூமிப பிராடையை உகந்த மார்பர்க்கு
பெண்ணகலம் காதல் பெரிது —–பிராட்டி பக்கலிலே ஸ்நேஹம் பெரிது –
ஸ்ரீ யபதியான தன் பெருமை பாராதே வராஹ வேஷத்தை யுடையனாய்க் கொண்டு வடிவை அழிய மாறின அளவிலே மீளுகை இன்றிக்கே
அந்த பிரளயத்தில் முழுகி அண்ட பித்தியிலே ஒட்டிக் கிடக்கிற அத்விதீயமான பரப்பை யுடைத்தான பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி-
நாரீணாம் உத்தமையான பெரிய பிராட்டியார் இறையும் அகலகில்லேன் என்று விரும்பும் படியான திரு மார்வை யுடையவனுடையவனுக்கு
ஸ்ரீ பூமிப பிராட்டியுடைய அபரிச்சின்ன்ன போக்யமான திரு மேனியில் பிரேமம் கரை புரண்டு இருந்தது
பகடு -யானை -/ கீளா மருதிடைபோய் –கிழித்துக் கொண்டு மருதுகளின் நடுவே போய் என்னவுமாம் –
காதல் பெரிது -அவள் பக்கல் பிரேமத்தின் கனத்தாலே இ றே அவள் அபிமானித்த பூமியை எடுத்தது என்கை-
———————
குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—–ஸ்ரீ திரு விருத்தம் -3
பாசுரம் -3-குழல் கோவலர் மடப்பாவையும் -பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழிந்து உரைத்தல் -வெள்ளைச் சுரி சங்கு -7-3-
குழற் கோவலர் –
குழலை உடைய கோவலர் -என்றபடி-பிராமணர்க்கு சந்த்யா வந்தாதிகள் போலே இவர்களுக்கு இது ஜாதி பிரயுக்தம் –
அன்றிக்கே குழலை உடையவளுமாய்
மடப்பாவையும் –அவர்களுக்கு பவ்யையுமாய் இருந்துள்ள ஸ்ரீ நப்பின்னை பிராட்டி –
மண் மகளும் –ஸ்ரீ பூமிப் பிராட்டி
திருவும் –ஸ்ரீ பெரிய பிராட்டியார் –ஆஸ்ரிதர் குற்றத்தை பொறுக்கும் பிராட்டி –
குற்றம் காண்பான் என் பொறுப்பான் என்-என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி
ஸ்ரீ நப்பின்னை பிராட்டி ஷமை தான் ஒரு வடிவாய் இருக்கும் –
ஸ்ரீ பெரிய பிராட்டியார் இவனுக்கு சம்பத்தாய் இருக்கும் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி -அது விளையும் தரை
ஸ்ரீ நப்பின்னை பிராட்டி அதனை அனுபவிக்கும் போக்தா –
நிழற் போல்வனர்-
1-இவர்கள் மூவரும் அவனுக்கு நிழல் போலே இருப்பவர்கள் –
2-ஒருவருக்கு ஒருவர் நிழல் போலே இருப்பவர்கள் -என்றுமாம்
3-ஆஸ்ரயித்தாருக்கு நிழல் போலே இருப்பவர்கள் -என்றுமாம் –
——————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply