எட்டாம் பத்து -எட்டாந்திருவாய்மொழி-‘மாயா’-பிரவேசம் –
கீழில் திருவாய் மொழி, உருவு வெளிப்பாடாய்ச் சென்றது.
கைக்கு எட்டாமையாலே உருவு வெளிப்பாடு என்று அறிவர் அன்றோ?
இனி. சர்வேஸ்வரன் தான் நினைத்த காரியம் செய்து தலைக் கட்டிக் கொள்ளுமளவும் நம்மை இங்கே
வைத்திருப்பான் என்னும் இடமும் அறிவரன்றோ?
ஆகிலும், அவனை ஒழியத் தரிக்க மாட்டாதவர் ஆகையாலே, இதனை நினைத்து ஆறி இருக்கவும் மாட்டாரே!
விரோதியைப் போக்கித் தர வேணும்’ என்று இவர் விரும்பினாலும்,
அவனும் இவரைக் கொண்டு தான் நினைத்த பிரபந்தங்களைத் தலைக் கட்டிக் கொள்ளும் அளவும்
இவர் அபேக்ஷிதம் -விரும்பியதைச் செய்யானே!
இவர் அபேக்ஷிதம் -விரும்பியதைச் செய்யா திருக்கச் செய்தேயும்,
இவரை இங்கே வைத்து வாழ்விக்கும் உபாயங்களும் அறிந்திருக்குமே!
ஆகையாலே, சில பொருள்களை உயிர் போகாதபடி ஒன்றிலே கோத்திட்டு வைக்குமாறு போலே,
முடியவும் ஒட்டாதே வாழவும் ஒட்டாதே நடுவே இருத்தி நலிகிறபடி நினைத்து,
எனக்கு இதில் பொருந்தாமை உண்டாய் இருக்கச் செய்தேயும் இச் சம்சாரத்திலே வைத்து என்னை நடத்திக் கொடு போருகிற
இவ் வாச்சரியத்தை எனக்கு அருளிச் செய்ய வேண்டும்,’ என்ன ஒன்றைக் கேட்க,
வேறே சிலவற்றைச் சொல்லுவாரைப் போலே,
இது ஒன்று கண்டோ நீர் ஆச்சரியப்படுகிறது?
இவ்வளவு அல்லாத நம்முடைய விசித்திர ஜெகதாகாரதையை -உலக உருவமாய் இருக்குந் தன்மையைப் பாரீர்!’ என்று
தன்னுடைய ஆச்சரியமான உலக உருவமாய் இருக்குந் தன்மையைக் காட்டிக் கொடுத்தான்.
அங்ஙனம் காட்டிக்கொடுத்த அது தானும் இவர் நினைத்தது அன்றே யாகிலும்,
அவன் காட்டிக் கொடுத்தது ஆகையாலே. அதுவும் இவருடைய பிரீதிக்குக் காரணமாக இருக்கும் அன்றோ?
ஆக, இவர் ஒன்றைக் கேட்க, அவன் பல ஆச்சரியங்களைக் காட்டிப் பரிகரித்தான்.
அக்குரூரன், யமுனையிலே புக்கு முழுகினவாறே பிள்ளைகளை நீருக்குள்ளே கண்டு
அஞ்சிக் கரையிலே பார்த்தான்: அங்கேயும் கண்டான்;
நீரிற் புகுங்கண்டு தேரினைப் பார்க்கும் நிறுத்திய பொன்
தேரில் தொழும் பின்னை நீரினில் காணும் சிறந்த பச்சைக்
காரில் திறம் மெய் யரங்கனும் சேடனும் கஞ்ச வஞ்சன்
ஊரிற் செல உடன் போம் அக்கு ரூரன் தன் உண் மகிழ்ந்தே.’-திருவரங்கத்துமாலை
ஜகத் ஏதத் மஹாஸ்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத்மந:
தேந ஆஸ்சர்யவரேண அஹம் பவதா க்ருஷ்ண ஸங்கத:’-ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 19 : 7.
ஓ கிருஷ்ணனே! இந்த உலகமானது, மஹாத்மாவான எவனுடைய மிகப் பெரிய ஆச்சரிய ஸ்வரூபமா யிருக்கிறதோ,
அப்படிப்பட்ட மிகப் பெரிய ஆச்சரியச் செயலை யுடைய உன்னோடு சேர்ந்தேன்,’ என்று கொண்டு
கண்டு, அவன் ஆச்சரியப்பட்டால் போலே,
இவரும் அவனுடைய விசித்திரமான உலக உருவமாய் இருக்கும் தன்மையை அருளிச் செய்து
ஆச்சரிய மடைந்தவராகிறார்.
புகழும் நல் ஒருவன்’ என்ற திருவாய் மொழியும்,
நல்குரவும் செல்வும்’ என்ற திருவாய் மொழியும்,
இத் திருவாய் மொழியும் பொதுவாக நோக்க ஒன்றாக இருந்தனவே யாகிலும் ஒவ்வொன்றற்கும் வேறுபாடு சிறிது உண்டு என்க.
புகழும் நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழி ஐயத்திலே நோக்கு.
நல்குரவும், செல்வும்’ என்ற திருவாய் மொழி மாறுபட்ட ஐஸ்வர்யத்திலே நோக்கு.
இத் திருவாய்மொழி ஆச்சரியமாக உலக உருவமாய் இருக்கும் தன்மையிலே நோக்கு.
—————————–
விசித்திரமான காரிய காரணங்களை எல்லாம் விபூதியாக வுடையனாய் இருக்கிற இருப்பை
அநுசந்தித்து, ‘இவை என்ன படிகள்!’ என்று ஆச்சரியப்படுகிறார்.
மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-
மாயா –
மாயா!’ என்கிற இது, இத் திருவாய் மொழிக்காகச் சுருக்கமாய்-ஸங்க்ரஹமாய் – இருக்கிறது.
வாமனனே –
மாயன் என்கிற பதத்தில் சொல்லுகிற ஆச்சரியத்தினை அறிகிற இடமாய் –
வ்யாப்தி கிரஹண பூமியாய் -இருக்கிறது. என்றது, அன்றே பிறந்து அன்றே வளர்ந்து –பெரியதிருவந்தாதி.-
மஹாபலி பக்கலிலே சென்று. அவன் முன்னே நின்று,
தான் சொன்னவை எல்லாம் செய்ய வேண்டும்படி வார்த்தை அருளிச் செய்து,
சிற்றடியைக் காட்டிப் பெரிய அடியாலே அளந்து கொண்டு,
இப்படிச் செய்த செயல்கள்-பண்ணின வியாபாரங்களை – அனைத்தையும்
முன்னோட்டுக் கொண்ட வாமனனே!’ என்கிறார் என்றபடி.
மதுசூதா –
ஆச்சரியமான செயல்களுக்கு எல்லாம் ஸ்ரீ வாமனனைப் போலே யாயிற்று,
விரோதி நிரசனத்துக்கு -பகைவர்களை அழிப்பதற்கு மதுசூதனன் என்கிறது.
மதுசூதா நீ அருளாய் –
மது என்னும் அசுரனை அழித்தால் போலே, எனக்கு ஓடுகிற ஐயத்தையும்
நீயே போக்கித் தந்தருள வேணும்.
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய் –
கார்யகதமான வைசித்ரி -காரியத்தைப் பற்றி இருக்கிற விசித்திரத் தன்மை காரணத்திலேயும்
உண்டாய் இருக்கும் அன்றோ?
மேலும், ஒன்றின் படியாய் இராதே அன்றோ மற்றையது?
இப்படி வேறுபட்ட பிரகாரங்களை யுடையனவான பூத பஞ்சகங்களுக்கும் -ஐம் பெரும் பூதங்களுக்கும்
நிர்வாஹகனாய்.
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் –
காரிய வர்க்கத்திலும் தாய் செய்தது தமப்பன் செய்ய மாட்டான்;
தமப்பன் செய்யும் உபகாரங்கள் மக்கள் செய்ய மாட்டார்கள்;
மக்கள் செய்யும் உபகாரம் உறவினர்கள் செய்ய மாட்டார்கள்;
இப்படி சர்வ வித பந்துக்களுமாய் -எல்லா விதமான உறவினர்களுமாய்.
முற்றுமாய் –
அனுக்தமான சம்பந்திகளாயுள்ள -சொல்லப்படாத தொடர்பு பெற்றவைகளாயுள்ள
சேதன அசேதனங்கள் எல்லாவற்றிற்கும் நிர்வாஹகன் ஆனவனே!
நீயாய் –
ஜெகதாகாரனாய் -உலக உருவமாய் இருக்கும் அளவு அன்றே –
அசாதாரண விக்ரஹ யுக்தனாய் -தனக்கே உரியதான விக்ரகத்தோடு கூடி இருக்கும் இருப்பு?
இவர்க்குப் பரமபதத்திலே நித்ய ஸூரிகளுக்கு இனியனாய் இருக்கும் இருப்போடு,
உலக உருவமாக நிற்கும் நிலையோடு வாசி அறப் போக்யமாம்படி அன்றோ
இவர்க்குப் பிறந்த ஞானத்தின் வைஸத்யம் -தெளிவு இருக்கிறபடி?
நீ நின்றவாறு-
இப்படி இவை எல்லாமாய்க் கொண்டு நீ நின்ற பிரகாரம்.
இவை என்ன நியாயங்கள்-
இவை என்ன படிகள் தாம்?
முதல் திருவாய் மொழியிலே இவனுடைய -ஐஸ்வர்யத்தை -இறைமைத் தன்மையை அனுபவித்திருக்கச் செய்தேயும்,
இதற்கு முன்பு கண்டறியாதாரைப் போலே புதியராய் அனுபவிக்கிறாராயிற்று.
குணானுபவத்தில் க்ஷணம் தோறும் புதுமை பிறந்து
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமாய் –திருவாய் 2. 5 : 4.-அனுபவிக்குமாறு போலே யாயிற்று,
விபூதி அனுபவத்திலும் புதியராய் அனுபவிக்க வல்ல படி.
இவை என்ன நியாயங்கள் நீ அருளாய்-
இதனை அருளிச்செய்யவேணும்.
ஏதம் மே ஸம்ஸயம் க்ருஷ்ண சேத்தும் அர்ஹஸி அஸேஷத;
த்வத் அந்ய: ஸம்ஸயஸ்ய அஸ்ய சேத்தா ந்ஹ்யுபப்த்யதே’- ஸ்ரீ கீதை, 6 : 39.
ஏ கிருஷ்ணனே! என் சந்தேகத்தை அடியோடு போக்குதற்கு நீ தான் தக்கவன்;
இந்த சந்தேகத்தை நீக்குகின்றவன் உன்னை ஒழிய வேறு ஒருவன் இலன்,’ என்கிறபடியே,
அர்ஜுனனுடைய ஸம்சயத்தை -சந்தேகத்தைத் தீர்த்தால் போலே,
என்னுடைய சம்சயத்தையும் -ஐயத்தையும் தீர்த்தருள வேணும்.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply