‘சௌசீல்யத்தாலும்,-த்ரைவிக்ர க்ரமணம் உலகங்களை எல்லாம் மூன்று அடிகளால் அளத்தலாகிய-
அதி மானுஷ சேஷ்டிதங்களாலும்-மனிதர்கள் அளவுக்கு அப்பாற்பட்ட செயலாலும் இவனே ஈஸ்வரன் ’ என்கிறார்
(கர்ம வஸ்யருக்கு மந்தரோட்டை ஸம்ஸ்லேஷம் அவத் யாவஹம் ஒழிய குணம் அன்று இறே –
ஆகையால் ஸுசீல்ய குணம் ஈஸ்வரத்வ சாதகம் என்று கருத்து )
ஏறனைப் பூவனைப் பூமகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மால் தனின் மிக்கும் ஒர் தேவும் உளதே?–2-2-3-
ஏறனை –
சர்வேஸ்வரன் ‘கருட வாகனன்’ என்று இறுமாந்து இருக்குமாறு போன்று,
ஓர் எருத்தைத் தேடிக் கைக்கொள் ஆண்டிகளைப் போன்று இறுமாந்து இருப்பவன்.
(அபிமானிகளுக்கு முகம் கொடுக்கை இறே சீல குணம் -ஏறன்-பதம் ருத்ரனின் அபிமானம் தோற்ற அருளிச் செய்கிறார் )
பூவனை –
‘திருநாபிக் கமலத்தில்-அவ்யவதாநேந- நேரே பிறந்தவன் அன்றோ?’ என்று இறுமாந்து இருக்கும் நான்முகன்.
அதாவது,பத்ம யோனித்வத்தாலே – தாமரைப் பூவில் பிறந்தவனாதலின்-அஜன் – பிறப்பு இல்லாதவன்
என்று அபிமானித்து நினைத்திருப்பவன் என்றபடி.
பூமகள் தன்னை –
தாமரைப் பூவில் வாசனையும் உபாதானமாகப் பிறந்தவளாய்,-
போக்யதை ஏக வேஷமாய் – இன்பமே ஒரு வடிவு கொண்டவளாய்,
‘உனக்கு ஏற்கும்’ என்னும்படி-பிரதானம் – தலைமை தோன்ற, ‘பூமகள் தன்னை’ என்கிறார்.
மற்றும், அவர்களை ‘ஏறனை, பூவனை’ என்கிற-அநாதார யுக்தி – விருப்பம் இன்மையைப் புலப்படுத்துகிற
வார்த்தைகளாற் கூறியவதனானும் இவளுடைய முதன்மை தோன்றும்.
(ஸ்ரீர் யத் பதாம்புஜாஜஸ் சகமே துளஸ்யா லப்தவா அபி வக்ஷஸி பதம் கில ப்ருத்ய ஜூஷ்டம் –
யஸ்யாஸ் ஸ்வ வீக்ஷண க்ருதே து ஸூர ப்ரயாஸஸ் தத் வத் வரைஞ்சு தவ பாதாஜ ப்ரபந்நா -ஸ்லோகம்
தேவர்களுடைய சாதன அனுஷ்டானம் யாதொரு பிராட்டியுடைய கடாக்ஷத்தின் பொருட்டாய் இருக்குமோ என்றபடி
ப்ருத்ய ஜூஷ்டம் -ப்ருத்யராலே ஆசைப்படுமது என்றபடி
யதா சகமே -யாதொரு படி ஆசைப்படும் என்றபடி –ப்ராதான்யம் தோற்ற இருக்கிறவள் )
விண் தொழ வேறு இன்றித் தன்னுள் வைத்து –
அந்ய பரரான- வேறு பொருள்களிலும் மனத்தைச் செலுத்துகிற பிரமன் சிவன் இவர்கட்கும், –
அநந்யையான – வேற்றிடத்து மனத்தைச் செலுத்தாத பெரிய பிராட்டியாருக்கும் ஒக்க முகங்கொடுத்து வைக்கிற
சீலத்தை நினைத்து விண்ணினுள்ளார் தொழா நிற்பார்கள்.
ப்ரஹ்மாதிகள் -‘பிரமன் முதலானோர் எப்போதும் திருமேனியைப் பற்றி இருப்பார்களோ?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க,
‘ஒரோ ஆபத்துகளிலே திருமேனியிலே இடங்கொடுக்கிறான்;
அந் நீர்மையை விட மாட்டாமையாலே ஆழ்வார்கள் அதனையே வாய் புலற்றுகிறார்களத்தனை’ என்று அருளிச் செய்தார்.
வேறின்றி-
‘ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும் கூறாளும் தனி உடம்பன்’ என்கிறபடியே,
வேறுபாடு இன்றி உடம்பைக் கொடுத்துள்ளானாதலின், ‘வேறின்றி’என்கிறார்.
விண் தொழ
’கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ‘விண்’ என்பது இடவாகுபெயர்.
இங்குள்ளார் ‘ஜஸ்வரியம்’ என்றிருப்பார்கள்;
அங்குள்ளார் ‘சீலம்’ என்று தோற்று இருப்பார்களாதலின், ‘விண் தொழ’ என்கிறார்.
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட –
உபரிதன -மேலே உள்ள- உலகங்களை– ‘அப்பால் மிக்கு’ என்கிறபடியே,
விஞ்ச வளர்ந்து,பூமிப் பரப்பெல்லாம் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட.
(மேலுக்கு மேலாக நிமிர்ந்து -உபரிதன லோகங்களைக் கிட்டும்படி மிஞ்ச வளர்ந்த –
ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப -ஒண் மிதி -புஷ்ப ஸ்பர்ச ஸமான பாத தல ஸ்பர்சம் )
மால் தனில் –
இவ் வதி மாநுஷச் செயல்களை யுடைய சர்வேஸ்வரனைக் காட்டிலும் மிக்கும்.
ஓர் தேவும் உளதே –
ஒக்கப் பரிமாறாநிற்க, ‘கட்டக்குடி’ என்று கழிக்கலாம் தெய்வந்தான் உண்டோ?
‘எல்லார் தலைகளிலும் காலை வைத்தவனை ‘ஈஸ்வரன்’ என்னவோ,
இவன் காலிலே துகையுண்டவர்களை ‘ஈஸ்வரர்கள்’ என்னவோ?’ என்கிறார்.
(கட்டக்குடி -ஹீனமான குடி -அதி நிர்த்தன குடும்பி -கழிப்புண்ணும் குடி –
இவன் தரித்ரன் கொடுக்க மாட்டான் என்று கழி யுண்ணுமவன் )
—————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply