‘என்னைக் கருதி அவன் பிறந்த பிறவிகளுக்கு ஒரு முடிவு இல்லை,’ என்கிறார்.
———————–
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
என்னில் தானாய் சங்கே -என்றதைக் கடாக்ஷித்து அவதாரிகை –
——————-
ஆனான் ஆன் ஆயன், மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில், தானாய சங்கே–1-8-8-
ஆன் ஆயன் ஆனான் –
இடையனாய்ப் பிறந்து, பிறந்த மெய்ப்பாட்டாலே, முடி சூட இராதே, ஜாதிக்குத் தக்கதான
பசுக்களைக் காத்தலை -ஜாதி உசிதமான கோ ரக்ஷணத்தில் அதிகரித்தான் -மேற்கொண்டான்.
அவ்வளவிலேதான் விட்டானோ?
மீனோடு ஏனமும் தான் ஆனான் –
சர்வாதிகனான -எல்லாரினும் அறப் பெரியனான தான், இவற்றோடு ஒத்த ச ஜாதியன் ஆனான்.
இறைவன் ஒவ்வொரு கால விசேடத்திலே முறைப்படி பிறந்திருந்தும், அனுசந்தானத்தின் பதற்றத்தாலே
ஒரே காலத்தில் எடுத்த இரண்டு அவதாரங்கள் போன்று,‘மீனோடு ஏனம்’ என்று ஒரு சேர அருளிச் செய்கிறார்.
வடிவும் செயலும் சொல்லும் அவ் வக்குலத்திற்கு-தத் ச ஜாதியருக்கு அடுத்தவையாய் இருத்தலின், ‘ஆனான்; என்கிறார்.
இவை தாம் வித்யாவதாரங்கள். இவ் வவதாரங்களைப் பார்க்குமிடத்து,
மேற்கூறிய ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் அயர்வறும் அமரர்கள் அதிபதியைப் போன்று இருப்பது ஒன்று அன்றே?
இவற்றிற்குக் காரணம் என்? என்னில்,
தானாய சங்கே-
என் பக்கல் தனக்கு உண்டான-சங்காதிசயத்தாலே – அன்பின் மிகுதியே.
இனி, இதற்கு, ‘என்னைக் குறித்துத் தான் எடுத்த அவதாரங்கள்-மஹா ஸங்க்யை –
மகாசங்கம் என்னும் அளவே,’ என்று கூறலுமாம்.
இனி, ‘சங்கே’ என்பதற்கு, ‘மகாசங்கம் என்னும் அளவேயோ! முடிவு உண்டோ!
பஹு நி ‘பல’ என்னும் இத்தனை’ என்று கூறலும் ஒன்று.
————————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
ஆயன் ஆனான் -ஆனாயன் ஆனான் -ஆக்களை ரஷிக்கும் ஆயன் ஆனான் -ஆட்களுக்கு நாதன் -அவதாரத்தில் மெய்ப்பாடு –
கன்று மேய்த்து விளையாட வல்லானை -தடம் பருகு கரு முகிலை -தான் -கோபால பாலகன் -இவற்றோடு சஜாதீயனானான்
அவதார விஷயமான அனுசந்தானத்தாலே த்வாரா அதிசயத்தாலே மீனோடு ஏனமும் -ஒரு காலே அனுசந்தித்து –
உரு வெளிப்பாடு பர்யந்தமாய் -அத்தாலே ஏக காலத்திலே புத்தி பண்ணி –
மத்ஸ்ய அவதாரே மனும் பிரதி உபதிதேச -வராஹ அவதாரே ஸ்ரீ பூமி நீளா பிரதி உபதிதேசேதி பாவ
வித்யா ப்ரவர்த்த நஞ்ச சேதன விஷயீகரணார்த்தம் இதி ஹ்ருதயம் –
அவதாரங்களை எடுக்காமல் இந்த மூன்றையும் எடுத்து அருளியத்துக்கு தாத்பர்யம் –
சங்கு -மஹா சங்க்யா விசேஷம் -பேர் இலக்கமான சங்கம் -ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் பரங்குசார்ய நிமித்தம் –
ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை -பெரியாழ்வார் -1-7-11-
தான் ஆனாயன் ஆனான் மீனோடே ஏனமும் ஆனான் -என்னில் தானாய் சங்கே –
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply