ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-6-4-

தம்முடைய மனம் வாக்குக் காயங்கட்கு அவன் பக்கல் உண்டான-ப்ராவண்யம் – காதற்பெருக்கு-
காதாசித்கமாய் விடுகை இன்றிக்கே – ஒரு காலத்தில் தோன்றி மறைதல் இன்றி,
நித்திய சூரிகளைப் போலே யாத்திரையான படியைச் சொல்லுகிறார்.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

ஆடும் என் அங்கம் அணங்கே-என்றதை விவரிக்கிறதாய் அன்றோ இருக்கிறது –
இப் பாட்டுக்கு ஓரு வைஷம்யம் கண்டிலோமே என்கிற சங்கையிலே பிணங்கி அமரர் பிதற்றும் -என்கிற
விசேஷணத்தை கடாக்ஷித்து இது தானே யாத்திரையாக -என்று அருளிச் செய்கிறார்

———————-

அணங்கு என ஆடும் என் அங்கம் வணங்கி வழிபடும் ஈசன்
பிணங்கி அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையினானே–1-6-4-

அணங்கு என ஆடும் என் அங்கம் வணங்கி வழிபடும் ஈசன் –
தெய்வம் ஏறியது என்னலாம்படி ஆடுகிற என் அங்கம் வணங்கி அது தானே
யாத்திரையாய்ச் செல்லும்படி இருக்கிற ஈசன்.

பிணங்கி அமரர் பிதற்றும் குணம் கெழு கொள்கையினான் –
தாம் தாம் அகப்பட்ட குணங்களைச் சொல்லி, ‘நான் முந்துறச் சொல்ல, நான் முந்துறச் சொல்ல’ என்று பிணங்கி
நித்திய சூரிகள் ஜன்னி சுரம் வந்தவர்களைப்போன்று அடைவு கெடக் கூப்பிடுகிற குணங்கள் வந்து சேருகைக்கு இருப்பிடமானவன்.
அதாவது, ‘இரத்தினாகரம் போலே குணங்கள் சேருகைக்குக் கொள்கலமானவன்’ -ஆஸ்ரயமாக உள்ளான் என்றபடி.
இனி, ‘குணம் கெழு கொள்கையினான்’ என்பதற்கு,
குணங்கள் வந்து கெழுமுகையைச் ஸ்வபாவமாக உடையவன்’ என்று பொருள் கூறலுமாம். கெழுமுகை-சேர்கை.

சர்வஞ்ஞரானவர்கள் படுகிற பாடு என்னுடைய கரணங்களுக்கும் உண்டாகா நின்றது கிடீர் என்கிறார் –

———————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

வழிபடும்-பெயர் எச்சமுமாய் முற்று வினையுமாய் இருக்கும்
வணங்கி வழிபடுக்கைக்கு விஷயமான ஈசன் என்றவாறு –
கெழுமுகை -சேருகை / கொள்கை -ஆஸ்ரயிக்கைக்கும் ஸ்வ பாவத்துக்கு க்ரஹிக்கைக்கும் –
வழிபாடும் -வழி படா நிற்கிற -வர்த்தமானம்
என் அங்கம் -சரீரத்தைச் சொன்னது மநோ வாக்குகளுக்கும் உப லக்ஷணம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading