ஆஸ்ரயிக்குமவனுக்கு த்ரவ்யத்தில் குறை பார்த்து அகல வேண்டா -என்றார் முதல் பாட்டில் –
நான் அதிகாரி அல்லேன் -என்று அகல வேண்டா -என்கிறார் இதில்-
——————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
கீழ்ப் பாட்டில் ப்ரமேயத்தை அனுபாஷியா நின்று கொண்டு
எது வேது என் பனி என்னாது -என்றதைக் காடாக்ஷித்து சங்கதி அருளிச் செய்கிறார்
——————–
மதுவார் தண் அம் துழாயான் முது வேத முதல்வனுக்கு
எது ஏது என் பணி என்னாததுவே ஆட் செய்யும் ஈடே–1-6-2-
மது வார் தண் அம் துழாயான்-
‘‘புரிவதுவும் புகை பூவே’ என்றார் கீழே -;
‘மதுவார் தண் அம் துழாயான்’ என்கிறார் இங்கு; இது சேரும்படி என்?’ எனின்,
பூவாகில் மதுவோடே கூடியல்லது இராமையாலே சேரும்’ என்று சொல்லுவர்கள்;
‘வதுவார் தண் அம் துழாயான்’ என்று பாடமான போது சாலப் பொருந்தும்;
வதுவை-மணம்; ஆர்தல் -பூர்ணம் –
வதுவை -வது- என்று கடைக்குறைந்து நறு நாற்றத்தை யுடைய -துழாய் என்றுமாம் –
இது தமிழர் போரச் சேரும் என்பர்-
மது வார் தண் அம் துழாயான் –
ஒரு வாடல் மாலையைக் கொணர்ந்து திருக்குழலிலே வளையமாக வைத்தால்,
திருக்குழலின் பரிசத்தால் செவ்வி பெற்று, மது நிரம்பிச் சினையாறு பட்டு,-வார்ந்து – ஒழுகி வெள்ளமிடாநிற்கும்.
முது வேத முதல்வனுக்கு –
இவ் வொப்பனை அழகினைப் பேசும் போது இன்னமும் பாசி பூத்த வேதம் பேச வேண்டாவோ?’ என்பார்,
‘மதுவார் தண்ணந்துழாயான்’ என்றதனை யடுத்து, முது வேத முதல்வன்’ என்கிறார்.
நித்தியமாய்ப் புருஷனால் செய்யப்படாததாய் உள்ள வேதங்களால் சொல்லப்பட்டவனுக்கு.
வேத முதல்வன் என்பது, வேத ப்ரதிபாத்யனாய் –
சாஸ்த்ர யோநித்வாத் –‘வேத வாக்கியங்களையே பிரமாணமாகக் கொண்டவன்’ என்கிறபடியே,
வேதங்களால் சொல்லப்பட்டவன் என்கை.
‘மதுவார் தண் அம் துழாயான்’என்கையாலே, -சர்வாதிகன் -எல்லாரினும் அறப்பெரியவன் என்பதனைத் தெரிவித்தபடி,
‘முதுவேத முதல்வன்’ என்கையாலே, பரிபூர்ணன் என்பதனைத் தெரிவித்தபடி.
இவ்விரண்டும் -ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதற்கு உறுப்புகள்.
எது ஏது என் பணி என்னாததுவே ஆட் செய்யும் ஈடு –
‘முதுவேத முதல்வனுக்கு எது பணி?’ என் பணி ஏது?’ என்னாததுவே ஆட் செய்கைக்கு அதிகாரமாவது
அதாவது,
நித்திய சூரிகள் அலரோ அவனுக்குத் தகுதியாக அடிமை செய்ய வல்லார்? நான் செய்யுமது ஏது?’ என்று
தன்னைக் கொண்டு கை வாங்காது ஒழியுமதுவே ஆட் செய்கைக்கு அதிகாரம் என்றபடி.
அன்றிக்கே –
இதற்கு ‘இது அவ் விறைவனுக்குத் தகுதி அன்று,’ என்று சிலவற்றை விடாதே,-
சகல கைங்கர்யங்களிலும் அந்வயிப்பதே – எல்லாக் கைங்கரியங்களிலும் சேர்ந்து அடிமை செய்வதுமே
ஆட் செய்கைக்கு அதிகாரமாவது என்னுதல் –
——————
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
பூவாகில் -பொருள் இசை அந்தாதிக்குச் சேரும் –
வதுவார் என்ற பாடமானால் இயல் இசை அந்தாதிக்குப் போரச் சேரும் –
மது வார் -திருத்துழாய் செவ்வி பெற்று வார்த்து வெள்ளம் இடா நிற்கும் –
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் -/ தழைக்கும் துழாய் -ப ரிம்லா நா / சர்வே ஸாபி மது ஸ்ரவா /
வேத முதல்வன் -வேத பிரதிபாத்யன் -வேதத்தை உண்டாக்கியவன் –
ஞாபக ஹேதுவாக உடையவன் என்றவாறு -பூர்த்தியையும் சொல்லும்
ஸாஸ்த்ர யோநித்வாத் -சாஸ்திரம் யஸ்ய யோனி -காரணம் -பிரமாணம் -தத் ஸாஸ்த்ர யோனி தஸ்ய பாவ –
ஸாஸ்த்ர யோனித்வம் தஸ்மாத் ப்ரஹ்ம ஞான காரணத்வாத் சாஸ்த்ரஸ்ய தத் யோனித்வம் ப்ரஹ்மண-இத்யர்த்த
பணி ஏது-என் பணி ஏது-என்னாதே – -அயோக்கியா அனுசந்தானம் –
கிரியையினுடைய அயோக்கியா அனுசந்தானமும் -கிரியா தாரதம்யம்
ஈடு -அதிகாரம் –
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply