ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை -1-2-9-

இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்த ஞானம் உண்டாகவே தன் சிறுமை பார்த்து அகல வேண்டா என்றும்,
பஜனமாவது -வணங்குதலாவது – இவன், இறைவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு
உறுப்பு ஆக்குகை என்றும் அருளிச் செய்தார், கீழே இரண்டு திருப்பாசுரங்களால்;
‘இது தன்னரசு நாடாய்-ப்ராப்த விஷயம் – அடையத் தக்க பொருள் அவன் அல்லாமையால் -பஜியாது- வழி படாது இருக்கின்றேமோ!
பஜனை விரோதிகள் -வழிபட ஒட்டாமல் தடுக்கும் விரோதிகள்-கனக்க- மிகுதியாக இருத்தலால் அன்றோ
நாங்கள் வழிபடாது இருக்கிறோம்?’ என்ன,
‘நீங்கள் அவனைக் கிட்டவே அவை அடைய விட்டுப் போம்,’ என்கிறார் இத் திருபாசுரத்தில்.

————————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை

கீழ் இரண்டு பாட்டில் ப்ரதிபாதித்த பிரமேயத்தை அனுபாஷியா நின்று கொண்டு
இப்பாட்டில் ஒடுங்கலும் எல்லாம் விடும் என்கிற பதத்தைக் கடாக்ஷித்து சங்கதி – அருளிச் செய்கிறார்-
பஜன விரோதிகள் என்றது பஜன கார்ய விரோதிகள் -புருஷார்த்த விரோதிகள் என்றவாறு –
அவனைக் கிட்டவே -கிட்டுகை -ஆஸ்ரயணம் –

———————-

ஒடுங்க அவன் கண், ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை, விடும் பொழுது எண்ணே-1-2-9-

ஒடுங்க அவன் கண் –
அவன் கண் ஒடுங்க – பிரகாரமாக இருக்கும் நீங்கள் பிரகாரியாக இருக்கின்ற அவன் பக்கலிலே சென்று சேர,

ஒடுங்கலும் எல்லாம் விடும் –
ப்ராப்த்தத்தைச் செய்ய -செய்யத் தக்கனவற்றைச் செய்ய,
அப்ராப்தமானவை -தகாதவை எல்லாம் தாமாகவே விட்டு நீங்கும்;
ஆத்துமாவின் ஸ்வரூபத்துக்குத் தக்கவற்றைச் செய்யவே,-ஸ்வரூப அறுரூபமானவற்றைச் செய்யவே –
ஸ்வரூபத்துக்கு விரோதிகளாக உள்ளவை எல்லாம் விட்டுப்போகும் என்றபடி.
‘ஒடுங்கல்’ என்கையாலே இவை ஆத்துமாவிற்கிடப்பன அல்ல;
ஆத்துமாவிற்கு விரோதியாய்க் கொண்டு வந்தேறி என்னுமிடம் தோன்றுகிறது.
‘ஒடுங்கல்’ என்பதனை மெலித்தல் விகாரமாகக் கொண்டு-ஒடுக்கல்-
‘இவனுக்குக் குறைவைப் -சங்கோசத்தைப் -பிறப்பிக்குமவை’ எனலுமாம்.

எல்லாம் விடும் –
அவித்யா -அறிவின்மை, கருமம், வாசனை, ருசி இவையெல்லாம் அடியோடே விட்டுக் கழியும்
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் – ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன்துயரை யாவா மருங்கு.

‘மாடே வரப் பெறுவராம் என்றே வல்வினையார்’ என்னும் பாசுரங்களை யோஜித்துக் கொள்வது

‘இவை நீங்கினால், பின்னர் இவன் செய்யத் தக்க காரியம் -கர்த்தவ்யம் யாது எனின்,
பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்-‘
உபாசனத்தால் -பத்தியினால் வந்த ராஜகுலங்கொண்டு பலன் தப்பாது,
தன்னடையே வருகிறது,’ என்று ஆறியிருத்தல்
அன்றிக்கே, -ஹேதுவான காரணமான அறிவின்மை முதலியவைகள் கழிந்தனவாகில்,
அவற்றின் காரியமான இச்சரீரமும் ஒருபடி போய்,தண்ணீர் துரும்பு அற்றுப் பிராப்தி -பலன் கைப்புகுந்தது ஆவது எப்போதோ என்று
அதற்கு விரல் முடக்கி இருக்கும் இத்தனை.
‘ஆயின், கேவலனைப் போன்று உடலின் நீக்கத்தினை மட்டும் விரும்புவது என்?’ என்னில்,
இன்பத்தில் இச்சையுடைய ஒரு பெண் தன் உடம்பில் அழுக்கினைப் போக்கித் தன் கணவனோடு இன்பம் நுகர்தற்கு
உரிய காலத்தை எதிர் நோக்கிக்கொண்டு இருத்தல் போன்று,
இவனும் பேற்றுக்கு உறுப்பாக உடலை விட்டு உயிர் நீக்குங் காலத்தினை எதிர்பார்த்திருக்கக் கடவன்.
‘கொங்கை மேற் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள், தங்குமேல் என் ஆவி தங்கும்,’ என்று
அழுக்குக் கழற்றி ஒப்பித்துப் பார்த்து இருந்தாள் ஒரு பிராட்டி.
அப்படியே, அழுக்கு உடம்பு’ என்கிற இவ்வழுக்கு நீங்கி மோக்ஷமாகிய பலத்தை அடைதல்
எப்போதோ என்று பார்த்திருக்கும் இத்தனை.

ஆயின, கூற்றுவன் ஒருவன் இருக்க, பேற்றினை எதிர்பார்த்து இருத்தல் என்பது எவ்வாறு பொருந்தும்?’ எனின்,
ம்ருத்யும் ப்ரியமிவாதிதிம் (‘மனிதன் பாவத்தினைச் செய்தவனாய் இருத்தலின், யமனைக் கண்டு அஞ்சுகிறான்;
செய்யவேண்டுமவற்றைச் செய்து முடித்தவர்கள் யமனை அன்புள்ள விருந்தினைப் போன்று எதிர்பார்க்கிறார்கள்,’)
ஆதலின், பொருந்தும் என்க.
ஆயின்,க்ருதக்ருத்யா ( செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்தவர்க்கு )அன்றோ அது சாத்தியம்?’ எனின்,
சித்த சாதன பரிக்ரஹம் பண்ணினவர்கள் இறே
விது கிருஷ்ணம் ப்ராஹ் ணாஸ் தத்த்வதோ யே தேஷாம் ராஜன் சர்வ யஞ்ஞாஸ் ஸமாப்தா –
( ‘அரசனே சாஸ்திரங்களோடு கூடின எல்லா வேதங்களும், அறியத் தக்க எல்லாப் பொருள்களும், எல்லா யாகங்களும்,
யாகங்களில் ஆராதிக்கப்படுகின்ற எல்லாத் தேவர்களும் கிருஷ்ணனேயாவன் என்று எந்த அந்தணர்கள் கிருஷ்ணனை
உள்ளவாறு அறிகின்றார்களோ, அவர்கள் எல்லா யாகங்களையும் செய்து முடித்தவர்கள் ஆகின்றார்கள்,’ )என்கிறபடியே,
எம்பெருமாளையே பற்றுக்கோடாகப் பற்றின அடியார்களே யாவர்.

ஓர் அயனத்தின் அன்று ஸ்ரீ குன்றத்துச்சீயர் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே புக, அவருடைய சிறுபேரைச் சொல்லி,
‘சிங்கப் பிரான்! இன்று அயநங்காண்,’ என்ன, திருவுள்ளத்தில் ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாது இருக்க,
உயிர் உடலை விட்டு நீங்கும். அந்திம காலத்தில் பலம் கண்ணழிவற்ற பின்பு நடுவு விரோதியாய்ச் செல்லுகிற நாளில்
ஓரண்டு கழியப் பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ!’ என்று அருளிச் செய்தார்.
அன்றியே
ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு
‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ!
பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.

—————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை

ஒடுங்க சேர –
அப்ருதக் சித்த விசேஷணமான இவன் அவன் பக்கலிலே சேருகையாவது -ஈஸ்வரோஹம் -என்று இருக்கையைத் தவிர்க்கை -என்றபடி –
ஓடுங்கல்-என்று வந்தேறி -அப்ராப்தம் -பிரகாரத்வ அனுசந்தானம் விவஷிதம் –
விட்டுக் கழியும் -கார்யகரம் இன்றிக்கே ஒழியும்-
வானோ மறி கடலோ -இத்யாதி -பெரிய திருவந்தாதி -54-
நம்மோடு நெடுக்கப் பழகிப் போந்த பிரபல துக்கத்தை விளைக்கும் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களை நம்முடைய சமீபத்தில் கண்டிலோம் –
இது ஆகாசத்தில் பறந்து போயிற்றோ -திரைக் கிளப்பத்தை யுடைய கடலிலே புக்கதோ –
காற்றிலே உரு தெரியாதபடி சிதிலமாய்க் கரந்து போயிற்றோ -நெருப்பிலே தக்தமாய்ப் போயிற்றோ –
காட்டிலே மஹா பிரஸ்தானமாய்ப் போயிற்றோ -எங்கே ஒருங்கிப் போயிற்றோ –
மாடே வரப் பெறுவராம் என்றே வல் வினையார் காடானு மாதானும் கைக்கு கொள்ளார் ஊடே போய்ப்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன் பெரோத்தகி சிந்திக்கப் பேருந்து –பெரிய திருவந்தாதி -59-
மநோ ரதிக்கவே போகுமே -வல்வினையார் -அவித்யாதிகளுக்கும் உப லக்ஷணம் –

தண்ணீர் துரும்பற்று -பிரதிபந்தகம் போய்
அழுக்குக் கழற்றி போகத்தில் அந்வயிக்கப் பார்த்து இருந்தவர்களுக்கு பிரமாணம்
பிராயச பாப காரித்வாத் ம்ருத்யோருத் விஜதே ஜன-க்ருதக்ருத்யா பிரதீஷந்தே ம்ருத்யும்
ப்ரியமிவாதிதிம் -ஸ்ரீ மஹா பாரதம் ராஜ ஸூயே -சரீர நிவ்ருத்தி புருஷார்த்தமாக –
சித்த சாதனம் பரிக்ரஹம் பண்ணினவர்கள் க்ருதக்ருத்யர் -என்பதற்கு பிரமாணம் –
சர்வே வேதாஸ் சர்வ வேத்யாஸ் ச சாஸ்த்ராஸ் சர்வே யஞ்ஞாஸ் சர்வ இஜ்யாஸ் ச க்ருஷ்ண –

எண்ணே -முந்தின அர்த்தம் தேற்ற ஏகாரமாய் என்ன வேண்டும்
இரண்டாம் அர்த்தம் பிரிநிலை ஏகாரமாய் என்ன வேண்டாம் என்றாய் சிந்திக்கைக்கு விஷயம் உண்டோ என்றபடி –
தேற்றம் -நிச்சயம் -விநா ப்ரச்னம் -பிரிநிலை -வ்யதிரேகம்
ஆச்ரயண பலம் விரோதி நிவ்ருத்தி என்று இப்பாட்டுக்குப் பிரமேயம் –
அவன் கண் ஒடுங்க ஒடுங்கலும் இத்யாரப்ய அன்வயம்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading