ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-2-2–

பகவத் வ்யதிரிக்த விஷயங்களை விட்டு விட்டுச் சர்வேஸ்வரனான எம்பெருமான் பக்கலிலே
ஆத்ம சமர்ப்பணம் பண்ணப் பாருங்கோள்,’ என்றார் முதற்பாட்டில்;
பகவத் வ்யதிரிக்த விஷயங்களை விடச் சொல்லா நின்றீர் –
அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்தனவற்றை இப் போதாக விடப் போமோ?’ என்ன,
அவற்றினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் என்கிறார் இதில்.

———————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

முதல் பாட்டில் த்யாஜ்யத்தை அடங்க விடுங்கோள் என்று சொல்லி அனந்தரம் அல்ப அஸ்திரத்தவாதி தோஷங்களை
சொல்லுகிறதுக்கு பிரயோஜனம் சம்சாரிகளுக்குப் பிறந்த சங்கையை பரிஹரிக்கை என்கிறார் –

——————

மின்னின் நிலை இல, மன் உயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை, உன்னுமின் நீரே–1-2-2-

மின்னின் நிலை இல –
மின்னலைப் போன்றும் நிலையினையுடைய அல்ல.
மின்னல் – அற்பமாய் அஸ்திரமாய் -நிலை யற்றதா யிருக்கும்;
இவ் வுடலும், அங்ஙனம் நிலையற்றதாய் இருந்தும், நிலையான அறிவினைப் பிறப்பித்துக்
கேட்டோடே-அநர்த்தத்தோடே – முடித்து விடும்.
சந்தனம் என்ற மயக்கத்தாலே நாற்றம் குளிர்த்தி மென்மைகளைக் கொண்டு பாம்பின் மேலே கையினை வைத்துக் கொண்டு
ஒருவன் கிடந்து உறங்கா நின்றால், ஓர் -தார்மிகன் -அறவோன் ‘இது பாம்பு’ என்று அறிவித்தால்,
பின்னை அதனினின்றும் கை வாங்கி அல்லது நிற்க வொண்ணாதே!
அப்படியே,-இதர விஷயங்களில் போக்யதா புத்தி -பண்ணிப் போருகிற இவனுக்கு
‘அவை அற்பம், நிலையற்றவை’ என்று- தோஷ தர்சனம் – குற்றங்களைக் காணும் படி செய்யவே
விடத் தக்கனவாக இருக்குமாதலின், ‘மின்னின் நிலையில’ என்கிறார்.

மன் உயிர் ஆக்கைகள் –
உயிர் -மன்னுகிற -பொருந்தியிருக்கின்ற- சரீரங்கள் என்னுதல்;
நித்தியமான ஆத்மவஸ்து பரிக்ரஹிக்கிற தேகங்கள் —
நிலையுள்ள உயிர் மேற்கொள்ளுகின்ற சரீரங்கள் -என்னுதல்,
திறந்து கிடந்த வாயில்கள் தோறும் நுழைந்து திரியும் பொருள் போன்று, ஓர் உயிரே பல சரீரங்களை எடுத்தலின்,
‘உயிர் யாக்கைகள்’ என்கிறார். ‘எங்ஙனம்?’ எனின்,
மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை’ என்கிறபடியே,
‘ஓரலகு தானே காணி நிலையிலே நிற்பது கோடி நிலையிலே நிற்பது ஆமாறு போன்று,
ஓர் உயிர் தானே கர்மங்களின் வேறுபாட்டினால் தேவ சரீரம் முதலான சரீரங்கள் பலவற்றை மேற்கொள்ளுதல்.
அன்றியே – உயிர்-ஏக வசனத்தை – – தொகுதி ஒருமையாகக் கொண்டு-
ஜீவ அனந்தயத்துக்கும் உப லக்ஷணமாய் – பல ஆத்மாக்கள் பரிக்ரஹிக்கிற சரீரங்கள் என்றுமாம் –

என்னும் இடத்து –
பகவத் குணங்களை -பரிச்சேதிக்கிலும் -அளவிட்டு அறியினும்,- அளவிட்டு அறிய முடியாதபடி -தோஷாப் பரப்பு –
இவ் விடையாட்டத்து என்றபடி -குற்றங்களின் மிகுதி இருத்தலின், ‘என்னுமிடத்து’ என்கிறார்.

இறை உன்னுமின் –
இதில் அற்பத்தை ஆராயுங்கோள்.
நீரே –
இதற்கு ஒரு பிரமாண-அபேக்ஷையும் – விருப்பமும் வேண்டுவது இல்லை.
சதாசார்ய உபதேசமும் வேண்டா என்றபடி.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

மின்னின் நிலையில -பஞ்சமி வேத உறுப்புக்கு அநேக அர்த்தங்கள்
இங்கே உபமார்த்தே பஞ்சமி -யத்தவா மின்னில் காட்டிலும் –
கர்ப்பே அபி லீயதே பூயோ ஜாயமானோ அஸ்தமேதி ச -ஜாத மாத்ரோ அபி மிரியதே பால பாவே
அத யவ்வன -மத்யமஞ்ச வய ப்ராப்ய வார்த்தகே வா த்ருவா ம்ருதி-என்றும்
சம்பத ஸ்வப்னம் ஸங்காசா யவ்வனம் குஸூ மோபமாம்-தடிச் சஞ்சலமா யுஸ்ச கஸ்ய ஸ்யாத் ஜாநதோ த்ருதி-என்றும் அனுசந்தேயம்
மின்னைப் போலே அல்ப அஸ்திரத்வாதி ப்ரகாஸகத்வ குணம் உண்டு இறே மின்னுக்கு
அநாதி காலம் வாசிதங்களான வஸ்துக்களினுடைய தோஷங்களைத் தர்சித்தால் ஸூகமாக விடலாம் என்றபடி –
இதுக்கு அவதாரிகையோடே சேர்த்தி –
உயிர் மன்னுகிற ஆக்கைகள் -ஆத்மாவைப் பற்றி விடேன் என்று இருக்கிற சரீரங்கள் -என்றபடி –
மன்னுகை -காலத்தோடு பொருந்துதலாய் -கால விசேஷம் சொல்லாமையாலே சர்வ கால சம்பந்தம் சித்திக்கிறது –
உயிர் -ஏக வசனம் / ஆக்கைகள் -பஹு வசனம் -ஒரு ஆத்ம வஸ்து தானே அநேக சரீர பரிக்ரஹம் –
மகிழலகு -மகிழம் விரை -ஜ்யோதிர் வித்துக்கள் இவற்றை அலகாக வைத்து-காணி பத்து நூறு -கோடி ஸ்தானத்தில்
எண்ணுவது இதுக்கு த்ருஷ்டாந்தம்
உயிர் மன்னுகிற ஆக்கைகள் என்றுமாம்-
என்னுமிடம் -என்ற போதே -தோஷ பாஹுல்யம்-இது முதலான தோஷப்பரப்பு -என்றபடி
நீரே -ஏவகாரம் -தோஷம் ப்ரத்யக்ஷம் ஆகையால் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading