ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-1-10–

ஜகத்தை சரீரதயா சேஷமாக யுடையனாய் எங்கும் வியாபித்து -தாரகனாய் நியாமகனாய்ச் சேஷியாய் இருக்கும்
என்று கீழே அருளிச் செய்தார் .
இப்படி வியாபித்து நின்றால் அசித் சம்சர்க்கத்தாலே -சேதநனுக்கு ஒரு சங்கோசம் பிறவா நின்றது இறே –
அப்படியே அவனுக்கும் இவற்றோட்டை சம்சர்க்கத்தாலே சங்கோசம் பிறக்குமோ என்னில், அது செய்யாது;
அங்குசிதமாக வியாபித்து நிற்கும் என்று வ்யாப்தி சௌகர்யத்தை அருளிச்செய்கிறார்

———————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழே சொன்னார் -என்றது உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் –
சேதனனுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவம் -ஞான சங்கோசம் –
விபுவான ஸ்வரூபம் அணுவுக்குள்ளே வியாபித்தால் விபுவான ஆகாரத்துக்கு சங்கோசம் வாராது என்றபடி

————————–

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்து உளன்
பரந்த அண்டம் இதுஎன நிலம் விசும்பு ஒழிவறக்
கரந்த சில் இடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்
கரந்து எங்கும் பரந்து உளன் இவை உண்ட கரனே–1-1-10-

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்து உளன் –
பரந்து குளிர்ந்து இருந்துள்ள கடலில் ஜல பரமாணுக்கள் தோறும் வியாபித்து இருக்கும் .
நீர்ச் செறிவாலே திரண்டு தோன்றுகிறது, இத்தனையேயாம். பரமாணு சங்காதம் இறே
ஜ்யாயா நந்தரிஷாத் -என்கிற வஸ்து ஜல பரமாணுக்களிலே வியாபியா நின்றால்
அல்ப அவகாசமாய் நெருக்குப் பட்டு இருக்குமோ என்னில்

பரந்த அண்டம் இது எனப் பரந்து உளன் –
அந்த ஜல பரமாணுக்கள் தான் பரந்த அண்டம் இது எனவாயிற்று வியாபித்து இருப்பது .
ஓர் அண்டத்தைச் சமைத்து அவ்வண்டத்தில் ஒரு ஏகாகியை -ஒருவனைத் தனியாக வைத்தது போன்று இருக்கும்
இப்படி ‘ஆயின், தண்ணீரின் பரமாணுக்களில் வியாபித்து விடும் இவ்வளவேயோ?’ என்னில்,

நிலம் விசும்பு ஒழிவறப் பரந்து உளன்.
பூமியிலும் -அந்தரிக்ஷங்களிலும்- ஆகாயத்திலும் அவ்வாறே நிறைந்து நிற்கிறான்.
இம் மூன்றும் ஐந்துக்கும் உபலக்ஷணம்
ஆக, ஐம் பெரும் பூதங்களாலும் அமைந்துள்ள அண்டத்தை அருளிச் செய்தாராயிற்று.
இனி, அப் பூதங்களின் காரியமான பொருள்களில் நிறைந்திருக்கும் படியை அருளிச் செய்கிறார் மேல்:

கரந்த சில இடந்தொறும் –
இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்றிலே முடியும்படியாக-ஸூஷ்மமான -நுட்பமான-அல்ப சரீரந்தோறும்.
இடம் திகழ் பொருள் தொறும் –
அவ்வச் சரீரங்களில் ஞான ஆனந்தங்களோடு கூடி மிளிருகிற ஆத்துமா தோறும்.
கரந்து – வியாபித்த பதார்த்தங்களுக்குத் தெரியாதபடி அன்யை ரத்ருஷ்டனாய்
(தான் நிறைந்திருக்கும் பொருளுக்குத் தெரியாதவாறு மறைந்து, )

எங்கும் பரந்து உளன் –
சேதனன் சரீரத்தில் உடலில் வியாபிக்கும் பொழுது அதில் ஏக தேசத்தில் நின்று ஞானத்தாலே
எங்கும் வியாபிக்கக் கடவனாய் இருக்கும்
இவன் அவ்வாறு அன்றித் தன் சொரூபத்தாலே எங்கும் நிறைந்திருப்பன்.
‘ஆயின்,- எங்கும் நிறைந்திருத்தலை இறைவனுக்குக் கூறி, அணுவின் தன்மையினை உயிர்ப்பொருட்குக் கூறி,
இவ்வுயிர்க்குள் அவன் குறைவு அற நிறைந்திருப்பன் என்றால், அது கூடுமோ?’ என்னில்,

இவை உண்ட கரனே-‘
சிறிய வடிவினைக்கொண்டு பெரியவற்றை எல்லாம் தன் திருவயிற்றிலே வைத்தால், –
‘தயிர் உண்ட பொன் வயிறு இவ் வேழ் உலகும் உண்டும் இடம் உடைத்தால்’ என்கிறபடியே,
பின்னையும் அவ் வயிறே இடமுடைத்தாம்படி இருக்க வல்ல வரம்பில் ஆற்றலை யுடைய
சர்வ சக்தி சிறியனவற்றில் குறைவு அற இருக்க மாட்டானோ?’ என்கிறார்.

கரன் –
ஸூதிட பிரமாண சித்தன்– திடமிக்க பிரமாணங்களால் உறுதி செய்யப்பட்டவன்.-

இவை உண்ட கரன்,
பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்த அண்டம் இது எனப் பரந்துளன்;
நிலம், விசும்பு ஒழிவு அறப் பரந்து உளன்;
கரந்த சில இடந்தொறும் இடந்திகழ் பொருள் தொறும் எங்கும் கரந்து பரந்து உளன்,’ என்று அந்வயம் –

————–

கரந்த சில்-என்று மேலே கார்யத்தைச் சொல்லுகையாலே -பரந்த தண் பரவையுள்-என்று காரண ஜாலமான ஏகார்ணவம் –
அன்றிக்கே காரணபூதமான பஞ்சகத்துக்கும் உப லக்ஷணம்-அத்தாலே ஆரப்தமான அண்டம் என்றுமாம் – –
சாந்தோக்யம் சாண்டில்ய வித்யையில் -ஏஷ ம ஆத்மா அந்தர்ஹ்ருதயே ஜ்யாயாத் ப்ருதிவ்யா ஜ்யாயான் அந்தரிஷாத் ஜ்யாயாத்
திவோ ஜ்யாயான் அப்யோ லோகேப்யோ
கரந்த வென்றும் ஸூஷ்மமாய்-சில் என்று ஸூஷ்மமாய் -இடம் என்று சரீரமாய் அத்யல்ப சரீரம் தோறும் என்றபடி –
எங்கும் பரந்துளன் -பஹிர் வியாப்தியும் சொல்லுகிறது –
நித்யம் விபும் -ஏஷோர் அணுராத்மா-என்றும் இரண்டும் ஸ்ருதி சொல்லிற்றே-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading