ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –
——————————————————————————–
ய உபநிஷதாம் அந்தே யஸ்மாத் அநந்த தயாம்புதே
த்ருடித ஜநதா சோக ஸ்லோக ஸமஜாயதே
தமிஹ விதிநா கிருஷ்ணம் தர்மம் பிரபத்ய சநாதாநம்
சமித துரித சங்கா தங்க த்யஜ ஸூக மாஸ்மகே
துர் விஞ்ஞாநைர் நியமகஹநை தூர விஸ்ராந்தி தேசை
பால அநர்ஹை பஹூபி அயநை சோசதாம் ந ஸூ பந்தா
நிஷ் ப்ரத்யூகம் நிஜ பதமசவ் நேது காம ஸ்வபூம்நா
சத் பாதேயம் கமபி விததே சாரதி சர்வ நேதா
ஒண் டொடியாள் திருமகளும் தானுமாகி
ஒரு நினைவால் ஈன்ற உயிர் எல்லாம் உய்ய
வண் துவரை நகர் வாழ வசு தேவற்காய்
மன்னவர்க்குத் தேர் பாகனாகி நின்ற
தண் துளவ மலர் மார்பன் தானே சொன்ன
தனித் தருமம் தானே எமக்காய்த் தன்னை என்றும்
கண்டு களித்து அடி சூட விலக்காய் நின்ற
கண் புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே
————————
இங்கு மாம் -அஹம் -என்கிற பதங்களுக்கு அடைவே –
அவதார ரஹஸ்யத்திலும் -புருஷோத்தமத்வ ப்ரதிபாதன பிரகரணத்திலும் சொல்லுகிறபடியே
ஸுலப்யத்திலும்-ஸ்வா தந்தர்யத்திலும் -பிரதான்யேந நோக்கு –
அவதாரஸ்ய சத்யத்வம் அஜஹத் ஸ்வ ஸ்வ பாவத்வ
சுத்த சத்வ மயத்வம் சா இச்சா மாத்ர நிதாநதா
தர்ம க்லாநவ் சமுதய சாது சம்ரக்ஷணார்த்ததா
இதி ஜென்ம ரஹஸ்யம் யோ வேத்தி ந அஸ்ய புநர்பவ
இவ்வவதார ரஹஸ்ய ஞானம் சத்வாரக பிரபத்தி நிஷ்டனுக்கு உபாய பூரகம்
ஸ்வ தந்த்ர பிரபத்தி நிஷ்டனுக்கு ஸ்வ தந்த்ரனுடைய ஸுலப்யத்தைக் காட்டும்
இப்பிரகரணங்கள் இரண்டிலும் ஸித்தமான ஸுலப்யமும் ஸ்வா தந்தர்யமும் ஒன்றுக்கு ஓன்று துணையாய் இருக்கும்
1–ஸ்வ தந்த்ரஸ்ய அபி ந ஏவ ஸ்யாத் ஆஸ்ரயோ துர்லபஸ்ய து அஸ்வ தந்த்ராத் பலம் ந ஸ்யாத் ஸூ லபாத் ஆஸ்ரிதாத் அபி
2–அஸ்வ தந்த்ரே ந கைங்கர்யம் ஸித்யேத் ஸ்வைர பிரசங்கத துர்லபே சாத்யம் அபி ஏதத் ந ஹ்ருதயம் லோக நீதித-
ஆகையால் கேவல ஸூலபமான த்ருணாதிகளைப் போல் அன்றிக்கே
ஸ்லாத்யனுமாய் -துர்லபமான மேருவைப் போல் அன்றிக்கே
ஸூலபனுமாய் பரனுமான சரண்யன் ஆஸ்ரயணீயனுமாய்-ப்ராப்யனுமாய் ஆகிறான் –
இவ்விரண்டு பதத்திலும் சர்வ ரக்ஷகனான சர்வ சேஷி ரக்ஷணத்துக்கு அவசரம் பார்த்து நிற்கிற நிலையும் தோற்றுகிறது-
இப்படி அவசர பிரதீஷானான ஈஸ்வரன் -ரஷா அபேக்ஷம் பிரதீஷதே -என்கிறபடியே –
என்றோ நம்மை இவர்கள் அபேக்ஷிப்பது -என்கிற அபிப்பிராயத்தில் அபி முகனாய் நிற்கிற நிலை -மாம் -என்கிற பதத்தில் ஸூசிதம்
என்று நாம் இவர்களை அழுக்குக் கழற்றின ஆபரணத்தைப் போலே அங்கீ கரிப்பது -என்கிற அபிப்பிராயத்தாலே
ஸத்வரனாய்த் தன் பேறாகப் பலம் கொடுக்கிற நிற்கிற நிலை -அஹம் -என்கிற பதத்தில் காட்டப்படுகிறது –
இப்படி அகிஞ்சனான அதிகாரிக்கு யதாவிதி ரஷாபேஷை பூர்வக பர ந்யாஸத்தை ஒழிய வேறு ஒன்றால் அபேக்ஷை இல்லாத
சித்த உபாயத்தை -மாம் ஏகம் -என்று காட்டி
அதனுடைய வசீகரண அர்த்தமான சாத்திய உபாயத்தை -சரணம் வ்ரஜ – என்று விதியாலே காட்டுகிறது –
இப்படி விதிக்கிற பிரபத்தி ரூப வித்யைக்கு சரண்ய ப்ரசாதனமாகச் சோதிதத்வத்தாலே வருகிற உபாயத்வம் பக்தியோக துல்யம்
இதனாலே ப்ரசன்னனான ஈஸ்வரன் மோக்ஷத்துக்கு சாஷாத் உபாயம்
இவ்வித்யைக்கு விசேஷித்து -விவேத்யாகாரம் நிரபேஷ உபாயத்வம் –
இதுக்கு அபையுக்த ஆகாரங்கள் எல்லாம் -மாம் -ஏகம் -என்கிற பதங்களிலே விவஷிதங்கள் –
ஏஷ நாராயண –ஸ்ரீ மான் -இத்யாதிகளில் நிர்திஷ்ட பிரகாரனான சரண்யனைச் சொல்லுகிற -மாம் -என்கிற பதத்தாலே
திரு மந்த்ரத்திலும் த்வயத்திலும் ப்ரகாசிதமான
சர்வ ரக்ஷகத்வமும் -சர்வ சேஷித்வமும் -ஸ்ரீ யபதித்தவமும்- நாராயணத்வமும்
இவற்றால் ஆக்ருஷ்டமாய்ப் பரத்வ ஸுலப்யங்களுக்கு உறுப்பாய் வருகிற
ஸர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வாதிகளும் பரம காருணிகத்வ ஸுசீல்ய வாத்சல்யாதிகளும்
த்வயத்திலே த்வி வசனாந்த பதத்தாலே தோற்றின சுபாஸ்ரயமாய்ப்
பரத்வ ஸுலப்ய வ்யஞ்ஜகமான பார்த்த சாரதியின் உடைய திவ்ய மங்கள விக்ரஹ விசேஷமும் காட்டப்படுகின்றன
இங்கே நிகரில் புகழாய்-இத்யாதிகளில் சொல்லுகிற வாத்சல்ய ஸ்வாமித்வ ஸுசீல்ய ஸுலப்ய ரூபமான
இக்குண சதுஷ்ட்யமும் அடியிலே
அஸ்தாநே ஸ்நேஹாதிகளால் கலங்கின அர்ஜுனனை அநாதரியாமையாலும் –
மத்த பரதரம் நாந்யத் -என்று தானே அருளிச் செய்கையாலும்
ஹே கிருஷ்ண ஹே யாதவ -ரதம் ஸ்தாபய மே அச்யுத-என்னும்படி நின்று சாரத்யாதிகளைப் பண்ணுகையாலும்
காண வேண்டும் என்ன ஸ்வ வைஸ்ரூபத்தைக் காட்ட
மீண்டும் பழைய ஸும்ய விக்ரஹத்தைக் காட்ட வேண்டும் என்ன அப்போதே
சாரதி ரூபனாய்த் தோற்றி நிற்கையாலும் வியஞ்சிதமாயிற்று
யுக்தமான சரண்ய குணங்களில் ஆஸ்ரித சம் ரக்ஷணத்துக்குப் பிரதான தமங்கள்-
சர்வஞ்ஞ அபி ஹி விஸ்வேச சதா காருணீக அபி சன் -என்று பகவச் சாஸ்திரத்திலும்
த்வத் ஞான சக்தி கருணா ஸூசதிஷூ -என்கிற அபியுக்த வாக்யத்திலும் ஸங்க்ரஹிக்கப் பட்டன
இவை மூன்றிலும் ஞான சக்திகள் நிக்ரஹ அனுக்ரஹ சாதாரணங்கள்
ஸ்வாமித்வமும் லீலா உபகரணம் ஆக்குகைக்கும் போக உபகரணம் ஆக்குகைக்கும் பொதுவாகையாலே
ஞான சக்திகளை ரக்ஷண ஏகாந்தங்களாக நியமிக்க மாட்டாது
காருண்யமும் இதன் சுவடுகளான ஸுசீல்ய வாத்ஸல்யாதிகளும் அனுக்ரஹத்துக்கு ஏகாந்தங்கள்
இப்படி இக் காருண்யத்தினுடைய வாசியைக் கண்ட பூர்வர்கள்-
ஸோஹம் தே தேவ தேவேஸே நார்ச்ச நாதவ் ஸ்துதவ் ந ச-சாமர்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ப்ரஸீத மே -என்றும்
நின்னருளே புரிந்திருந்தேன் -என்றும்
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -என்றும்
உனது அருளே பார்ப்பன் அடியேனே -என்றும் –
திரு மா மகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் -என்றும்
உன் திருவருளால் அல்லது காப்பது அரிது -என்றும்
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் -என்றும்
ஆவா வென்று அருள் செய்து -என்றும்
க்ருபயா கேவலம் ஆத்ம சாத்குரு -என்றும்
கரீச தேஷாமபி தாவகீ தயா தாவத் வக்ருத் சைவ து மே பலம் மதம் -என்றும்
இப்பிரகாரங்களாலே இக் கிருபா குணத்தை தஞ்சமாக அனுசந்தித்து
சம்பந்தத்தையும் குணாந்தரங்களையும்
காருண்யத்துக்குச் சொல்லிற்றுச் செய்வனவாக்கித் தாங்கள் காருண்ய ஏகாந்திகளாய்ப் போனார்கள்
பிராட்டியும் குணாந்தரங்கள் இருக்க –
வாதாரர்ஹம் அபி காகுத்ஸ்த கிருபயா பர்ய பாலயத் -என்று அருளிச் செய்தாள்
கத்யத்திலும் –
மதீயயை தயையா-என்கையாலே இக் கிருபையின் பிரதான்யம் விலஷிதம்
இப்படி ஆஸ்ரித ரக்ஷணத்துக்குப் பிரதானமாயும் பரிகரமாயும் உள்ள சர்வ ஆகாரங்களாலும் விசிஷ்டனான தன்னை
அபிமுக ஸ்திதி யிலே-மாம் -என்று நிர்தேசித்து அருளினான்
———————–
ஏகம்–ஆறு அர்த்தங்கள் -உண்டே –
1–உபாயமும் பலனும் ஒன்றே ஆகும்
மாம் என்கிற பதத்திலே-ஏக வசனத்தாலே -ஏகத்துவம் தோற்றா நிற்கப் பின்பும்- ஏக -சப்தம் –
தன்னைத் தந்த கற்பகம்-திருவாய் -2-7-1- -என்கிறபடியே ப்ராப்யனானவன் தானே ப்ராபகன் ஆனபடியாலே-
உபாய -பல -ஐக்கியத்தைச் சொல்லுகிறது என்றும் யோஜிப்பர்கள் –
இதுக்கு மாம் ஏகம் ஏவ சரணம்–ஸ்ரீ மத் பாகவதம் -11-12-24- என்கிற சமண பிரகரண வாக்கியமும் அநு குணம்
ஏவகாரம் உண்டாய் இருக்க ஏக சப்தம் கிடந்தால் இதுக்கு அவதாரணம் ஒழிய வேறே பொருள் கொள்ளுகை உசிதம் இறே
2–ஜீவ ஸ்வ தந்த்ர கர்தவ்யம் விலக்குதல்
இங்கன் அன்றியே -முக்ய அந்யம் கேவலேஷூ ஏகம் -என்கிறபடியே
பஹு வர்த்தமான ஏக சப்தம் இங்கு கேவல பர்யாயமாய்
மாம் ஏவ யே பிரபத்யந்தே –தமேவ சரணம் கச்ச -இத்யாதிகளில் படியே
அவதாரண அர்த்தமாய் சரண குண புஷ்கல்யத்தாலே
ஸ்வ ஸ்வா தந்தர்யாதிகளை நிவர்த்திப்பிக்கிறது என்றும் சொல்லுவார்கள் -எங்கனே என்னில்
ஸ்வ ரக்ஷைக்கு உபயுக்தங்களான வசீகரணங்களை சாஸ்த்ர நியுக்தனான தான் அனுஷ்டிக்கையாலே
ரக்ஷையிலே தனக்கும் கர்த்தவ்யம் தோற்றி சித்த உபாய பூதனான சரண்யன் உடன் ஓக்கத் தன்னையும் உபாயமாக எண்ணப் புக-
இப்படி பிரசாக்தமான உபாய த்வித்வத்தைகே கழிக்கிறது ஏக சப்தம் – அது கழிந்தபடி என் என்னில்
கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வாத்–என்கிறபடியே ஜீவனுக்கு கர்த்ருத்வம் பிரமாணிகமே யாகிலும்
இது பராதீனமுமாய் -அல்ப விஷயமுமாய் -ப்ரதிஹதி யோக்யமுமாய் -இருக்கும்
ஆகையால் இவன் தானே உபாய அனுஷ்டானம் பண்ணிற்றும்-
வரத தவ கலு ப்ரஸாதாத்ருதே -சரணாமிதி வாசோ அபி மே நோதியாத் -என்று சொல்லுகிறபடியே
அவன் கடாக்ஷம் அடியாக வருகையால் அவனே பிரேரிதனாய்-அவன் ஸஹ கரியாத போது நீட்ட முடக்க மாட்டாதே
அவன் கொடுத்த கரண களேபரங்களைக் கொண்டு -அவன் காட்டின உபாயத்தை -அவன் துணை செய்து அனுஷ்ட்டித்து –
அவன் கொடுக்கப் புகுகிற பலத்துக்குச் சாதகம் போலே அண்ணாந்து இருக்கிற இவனை
ஸ்வாதீந சர்வ விஷய அப்ரதி ஹத கர்த்ருத்வம் யுடையவனோடே துல்யமாக
இரண்டாம் சித்த உபாயமாக எண்ணுகை விவேகியான முமுஷுவுக்கு உசிதம் அன்று என்று
ஏக சப்தத்தாலே சொல்லிற்று ஆயிற்று
3–இக்கட்டளையிலே ஸாத்ய உபாயமான பிரபத்தியையும் சித்த உபாயத்தோடு ஒரு கோவையாக எண்ணாமைக்காக
ஏக சப்தம் என்றும் சொல்லுவார்கள் — அது எங்கனே என்னில்
இப்பிரபத்தியும் பக்தியோகம் போலே ப்ரசாதனமாக விதிக்கப்பட்டு இருந்ததே யாகிலும்
சஹஜ காருண்யாதி விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய காலுஷ்ய சமானமாத்ரார்த்தமாய் சாஷாத் பலத்துக்கு
சஹஜ சாமர்த்திய காருண்ய விசிஷ்டனான இவன் நினைவே காரணமாம் படியாய்
அவன் தானே அத்யந்த அகிஞ்சனான பிரபன்னனுக்கு பர ஸ்வீ காரத்தாலே
பக்தியோகாதிகளான குருதர உபாயங்களின் நேரே நின்று இவ்வநு கூல்ய சங்கல்பாதி யுக்த பிரபத்தி மாத்ர வ்யாஜ சாபேஷனாய்
வேறே ஒன்றால் அபேக்ஷை இல்லாமையால் நிரபேஷ உபாயத்வமே இந் ந்யாஸ வித்யைக்கு வேத்யாகாரமாய்க் கொண்டு
த்வமேவ உபாய பூதோ மே பவ -என்று அபேக்ஷணீயனாய் இருக்க –
என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே என்றும்
இசைவித்து என்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -என்றும் சொல்லுகிறபடியே
உபாய பூதனான அவன் செய்விக்கச் செய்கிற
வ்யாஜ மாத்ரத்தை அவனோடு ஓக்க உபாயமாக எண்ணுகை உசிதம் அன்று என்று ஏக சப்தத்துக்கு தாத்பர்யம் –
இப்படி சித்த உபாயத்தைப் பற்ற -சாத்திய உபாயம் வியாஜ மாத்ரமாய் -இது பிரதானம் இன்றிக்கே நிற்கிற நிலையைப் பற்ற
சம்பந்த ஞான மாத்ரம் –
சித்த உபாய பிரபத்தி மாத்ரம் –
அநிவாரண மாத்ரம் –
அனுமதி மாத்ரம் –
அசித்வ வ்யாவ்ருத்தி மாத்ரம் –
சைதன்ய க்ருத்யம் –
சித்த சமாதானம் –
அதிகாரி விசேஷணம் –
என்று இப்புடைகளிலே அதிவாதம் பண்ணினார்கள் –
இவ் அந்ய பர யுக்தியைக் கொண்டு இவை தாமே அர்த்தம் என்று அறுதியிட ஒண்ணாது –
இவை எல்லாம் -சரணம் வ்ரஜ -என்கிற விதிக்கு விருத்தங்களாம் –
அதி பிரசங்காதி தோஷங்களும் உண்டு -அது எங்கனே என்னில் –
சம்பந்த ஞானம் மாத்ரம் என்றாலும் -சித்த உபாய பிரபத்தி மாத்ரம் என்றாலும்
இது வாக்ய மாத்ர ஜன்யமாகில் விதி விஷயமாக மாட்டாது –
அவிதேய ஞானத்தாலே மோக்ஷம் என்பார்க்கு உபாஸனாதி விதி விரோதம் பாஷ்யாதி சித்தம் –
தத்வ ஞானம் யுடையவனுக்குப் பின்பு கர்த்தவ்யமான ஞானாந்தரமாகில் பிரபத்தியினுடைய விதி லக்ஷண அனுஷ்டான வாக்யங்கள்
சொல்லுகிறபடியே இதன் ஸ்வரூபம் அங்கீ கரிக்க வேணும்
சித்த உபாய ஸ்வீ காரம் என்ற பாசுரத்துக்கும் சித்த உபாயத்தை அறிந்து அது தனக்கு கார்யகரமாம் படி பண்ணுகிற
விதி ப்ராப்த பரார்த்தநா பூர்வக பர ந்யாஸ ரூப அதிகாரி கிருத்யத்திலே இறே தாத்பர்யம்
அநிவாரணம் மாத்ரம் என்றது -விலக்காத மாத்ரமானால் -ரக்ஷகனான ஈஸ்வரனை இவன்
முன்பு பிரபலனாய் விலக்கினானாகில் ஈசுவரனுடைய ஈச்வரத்வம் சங்குசிதமாகும் –
அபராதத்தாலே நிக்ரஹத்தை யுண்டாக்கி விலக்கினானாகில் இவன் பண்ணுகிற பிரபத்தி ப்ரசாதனமே ஆக வேண்டும்
ஸ்வ ரக்ஷனார்த்த வியாபாரத்தால் விலக்கினானாகில் நிர் வ்யாபாரமான ஸூஷூப்தி பிரளயாதி அவஸ்தை களிலும்
வ்யாபாரிக்க யோக்யனாய் இருக்கிற ஜாக்ரத் தசையிலே விலக்காதே இருக்கும் போதும் ஈஸ்வரன் மோக்ஷ பிரதானம் பண்ணப் பார்க்கும்
அனுமதி மாத்ரம் என்றால் -அது உபாசகனுக்கும் துல்யம் –
அசித் வ்யாவ்ருத்தி மாத்ரம் பிரதிகூல தசையிலும் யுண்டாகையாலே இவ்வளவே ரக்ஷணீய தைக்கு உறுப்பாகாது –
சைதன்ய கிருத்யம் என்றால் உபாஸனாதிகளும் மற்றும் உள்ள சேதன விருத்திகளும் எல்லாம்
சைதன்ய கிருதயமாகையாலே இது ஒரு வாசி சொல்லிற்று ஆகாது
சேதனனுக்குத் தானே வருமதன்று விவஷிக்கில் உபதேசாதிகள் வேண்டாது ஒழியும் –
பல அனுபயுக்த சித்த சமாதான மாத்ரம் என்னில் தம் தம் ருசி அனுரூபமாகப் பிரதி புருஷம் வேறுபடும்
வ்ரஜ என்று விதேயமாய் பல தத் காமா நாதிகள் அன்றிக்கே இருக்கிற இத்தை அதிகாரி விசேஷணம் என்ன ஒண்ணாது
கர்த்தவ்யமாய் விதிக்கிற பிரபத்தி தனக்கே இப்படி ஏதேனும் ஒரு கண்ணழிவு பண்ணில்
உபாஸனாதி களையும் இப்படிக் கண்ணழிக்கலாம்
இப்போது இம்முகங்களாலே உபாஸனாதிகளில் காட்டில் ப்ரபத்திக்கு வ்யாவ்ருத்தி சொல்ல நினைத்தது தலைக் கட்டாது
ஸ்வ விஷய ஸ்வீ கார விசிஷ்டமாய்க் கொண்டு பல பிரதமாகா நிற்கச் செய்தே இஸ் சித்த உபாயம் ஸ்வீ காரத்தாலும் நிரபேஷம் என்று
புத்தி பண்ண வேண்டும் என்னில்
இது த்ருஷ்ட விதி போலே ஆரோபிமாதல் ஸ்வ வசன விருத்தமாதல் ஆம்
ஆகையால் ஈஸ்வரன் பிரசாத நீயனாய்ப் பிரதானமான சித்த உபாயம் -பக்தி பிரபத்திகள் இரண்டும் ப்ரசாதனங்களாய்க் கொண்டு
பிரதானம் அல்லாத சாத்திய உபாயங்கள் -இவை இரண்டத்து ஒன்றிலே யதாதிகாரம் நிலையாகக் கடவது –
அபேக்ஷித பலத்துக்கு உபாயமாக விதித்த சாதனாந்தரங்களை இடையிட வேண்டாதபடி பிரபத்திக்கு அநந்தரம்
பர ஸ்வீகாரம் பண்ணின சரண்யன் தனித்து நிற்கும் நிலையைப் பற்ற ஏக சப்தம் என்றும் சொல்லுவார்கள் –
அது எங்கனே என்னில்
ப்ரபத்தியும் பண்ணி -அநந்தரம் அது அடியாக உபாஸநாதிகளும் அனுஷ்ட்டித்தால் பல உபாயமாகக் கடவனான சரண்யன்
அகிஞ்சனனாய் விளம்ப ஷமன் அல்லாத இவன் திறத்தில் ப்ரபத்திக்கும் தனக்கும் நடுவே நிற்பதொரு சுமை சுமத்தாதே
இவன் சுமையைத் தன் குணங்களின் மேலே ஏறிட்டு
சரண்யன் த்வாம் பிரபன்னா யே த்யான யோக விவர்ஜிதா-தே அபி ம்ருத்யு பரிக்ரம்ய யாந்தி தத் வைஷ்ணவம் பதம் –
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-என்றும் சொல்லுகிறபடியே –
குண விசிஷ்டனான தானே
நிரபேஷ பல பிரதனாய் நிற்கும் நிலையை அனுசந்தித்திக் கொண்டு சரணமாக அடை என்று இங்கே சொல்லிற்று ஆயிற்று –
இப்படியே பரிபூர்ணனான தன்னைப் பிரபத்தி பண்ணும் போது ஆனுகூல்ய சங்கல்பாதிகளை ஒழிய வேறொரு பரிகரத்தை
இதிலே வித்யாந்தரத்தில் போலே சொருகிக் கொண்டு அதுவும் பிரசாதமான உபாய கோடியிலே நிற்கிறது என்னும்
நினைவைக் கழிக்கைக்காக ஏக சப்தம் என்றும் சொல்லுவார்கள் –
ஆஜ்ஜா அநுஜ்ஜைகளாலே அனுஷ்ட்டிக்கும் கர்த்த்யாந்தரங்களும் எல்லாம் ப்ரபத்திக்குத் துணை இல்லை –
இப்பிரபத்தியால் வஸீக்ருதனாய் பலம் தர இருக்கிற நான் ஒருவனே இஷணிக உபாயத்துக்குப் ப்ரதிபூவாய் நின்றேன் –
இப்பிரபத்தி பலத்தைப் பற்ற வேறொரு தேவை செய்ய வேண்டா –
அத்தேவையைத் துணையாகக் கொண்டு நான் உன்னை ரக்ஷிக்கப் புகுகிறேன் அல்லேன்-என்று தாத்பர்யம் –
இத்தால் ஆனுகூல்ய சங்கல்பாதி விஸிஷ்ட பிரபத்தி ஒழிய பிரபத்தி பரிகரம் என்று பேரிட்டுத் தனக்கு வேறொரு
சஹகாரி காரணத்தைக் கூட்ட வேண்டா என்று சொல்லிற்று ஆயிற்று
யேந கேநாபி ப்ரகாரேண த்வய வக்தா த்வம்-என்றும்
பிரபத்தி வாசைவ நிரீஷி தும் வ்ருணே-என்றும் சொல்லுகிறபடியே
பூர்ண பிரபத்திக்கு அபேக்ஷிதமான தெளிவு இல்லாவிடிலும் யதா கதஞ்சித் அனுஷ்டானத்தாலே
கார்யம் செய்கிற இவ்வுபாயத்துக்கு வேறொரு பரிகரத்தைத் தேடப் பிரசங்கம் இல்லை இறே-
தத் சாகர வேளாயாம் தர்மான் அஸ் தீர்ய ராகவ-அஞ்சலிம் ப்ராங்முக க்ருத்வா பிரதிசிஸ்யே ததே –
பஹும் புஜகா போகாபம் உபதாயாரி ஸூதந-என்று பெருமாள் சமுத்ரத்தைப் பற்ற சரணாகதி பண்ணின இடத்திலும்
ச ராஜா பரமாபந்நோ தேவ ஸ்ரேஷ்ட மகாத்ததா -சரண்யம் ஸர்வபூதேஸம் பக்த்யா நாராயணம் ஹரிம்-
ஸமாஹிதோ நிராஹார ஷட் ராத்ரேண மஹா யஸா -ததர்ச தர்சி நே ராஜா தேவம் நாராயணம் ப்ரபும் -என்று
சப்த வ்யாய உபாக்யானத்திலே ப்ரஹ்மதத்த சரித்திரத்திலும் சொன்ன பிரகாரங்கள் எல்லாம் ப்ரபத்திக்கு அங்கம் அல்ல –
இவ்விரண்டு இடமும் ச பரிகர ப்ரதிஸயநாதி பிரதானம் ஆகையால் அங்கு அந்த நியமங்கள் சொல்ல பிராப்தம்
இப்படி ஸூ க்ருத ப்ரமாணத்திலும் கண்டு கொள்வது –
இங்கு பிரபத்யத் யாதிகளில் சொன்ன ஆனுகூல்ய சங்கல்பாதி பரிகரங்கள் ஒழிய வேறு நியமங்கள் வேண்டா –
ஆகிஞ்சன்ய ஏகதநரான-திரௌபதீ தமயந்தீ -ராக்ஷஸீ- விபீஷண -ஷத்ரபந்து -முசுகுந்த -கஜேந்திர -பாண்டவ –
தேவ -ஸூமுக -திரிசங்கு -சுநச்சேப-கிராத -காக-கபோதாதிகள் சரணாகதர் ஆகிற போது
அப்போதைய ஆனுகூல்யாதிகளை ஒழிய வேறொரு இதை கர்த்தவ்யத்தையைச் சொல்லக் கண்டிலோம் –
க்ஷண கால சாத்யமாய் நிரபேஷமான பிரபத்தி மாத்ரத்தாலே கடுக
அவ்வவ் சரணாகதர்க்கு அவ்வோ அபேக்ஷித சித்தியும் கண்டோம் –
இப்படி மோஷார்த்த பிரபத்தியிலும் இவன் கோரின காலத்திலேயே பல சித்திக்கு குறையில்லை
இது மாஸூச என்கிற வார்த்தைக்கும் தாத்பர்யம்
பரித்யஜ்ய என்கிற இடத்தில் பரிகராந்தர நைரபேஷ்யம் சொன்ன பொருளிலே
ஏக சப்தத்தில் இந்த யோஜனை த்ருடீகரண அர்த்தமாகக் கடவது
இதுக்கு அர்த்தாந்தரம் விவஷிதம் ஆகவுமாம்
ஏக சப்தத்துக்கு இது பொருளானால் பரித்யஜ்ய என்கிற இதுக்கு அங்கு சொன்ன அர்த்தாந்தரங்களைக் கொள்ளவும் –
ச பரிகர பிரபதிக்கு உபாஸனாதிகளான அங்கிகளாயும்-இவற்றின் பரிகரங்களான தர்மாந்தரங்களையும் கழிக்கிற
இப்பொருள்களில் இந்த ஏக சப்தம் சரண்யனை விசேஷித்த படி என் என்னில்
அகிஞ்சனன் பக்கலில் இவை ப்ரசாதனமாய்க் கொண்டு சரண்யனோடு துவக்கு அற்றமை காட்டுகைக்காக
மாம் ஏகம்-என்கிறது
சர்வ தர்மான் -என்கிற கீழில் -சர்வ சப்தத்தையும் -சர்வ பாபேப்யோ -என்ற மேலில் சர்வ சப்தத்தையும் பார்த்து
இங்கு ஏக சப்தம் சர்வ சப்தத்துக்கு பிரதிசம்பந்தியாய் நிற்கிறது என்றும் சொல்லுவார்கள்
அப்போது ஸூ துஷ்கரேண சோசேத் யே யேந யேந இஷ்ட ஹேதுநா -ச ச ஸத்யஹ மேவேதி சரம ஸ்லோக ஸங்க்ரஹ
இத்தாலே என் சொல்லிற்று ஆயிற்று என்னில்
யத்யேந காம காமேந ந ஸாத்யம் சாதனாந்தரை-முமுஷூணா யத் சாங்க்யேந யோகேந ந ச பக்தித–
ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே யதி -தேந தேநாப்யதே தத் தத் ந்யாசே நைவ மஹா முநே –
பரமாத்மா ச தேநைவ ஸாத்யதே புருஷோத்தம -என்கிற கட்டளையில்
தனக்கு அபிமதங்களாய் இருப்பது ஏதேனும் ஒரு பலன்களை பற்ற அவற்றுக்கு அனுகுணமாக
தனித்தனியே சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட உபாயங்களிலே
ஞான அபாவத்தாலே ஆதல்
ஞானம் யுண்டாய் இருக்க சக்தி அபாவத்தாலே ஆதல் –
இவை இரண்டும் யுண்டாய் இருக்க விளம்ப அஷமத்வத்தால் ஆதல்-
சோகித்த அதிகாரியைப் பற்ற -அவ்வுபாயங்கள் ஒன்றிலும் நீ அலைய வேண்டா –
அவை தனித்தனியே தரும் பலன்களுக்கு எல்லாம் பிரபத்தி வஸீக்ருதனான நான்
ஒருவனுமே அமையும் -என்று சொல்லிற்று ஆயிற்று
பல ஒளஷதங்கள் தர வல்ல ஆரோக்யத்தை எல்லாம் இந்த சித்த ஒளஷதம் ஒன்றுமே தரவற்று ஆகையாலே
நீ ஒளஷதாந்தரங்களுக்கு அலமராதே இந்த ஒளஷதம் ஒன்றையுமே உபஜீவிக்க அமையும் –
இது உனக்கு ஒளஷதங்களால் கழிக்கப்படும் வியாதிகள் எல்லாவற்றையும் கழிக்கும் –
உனக்குப் பின்பு சர்வ போகங்களையும் புஜிக்கலாம்-
நீ ஆரோக்கியத்தையும் போகங்களையும் இழக்கிறோம் என்று வெறுக்க வேண்டா என்று
சொல்லுமா போலே இருக்கிறது இச் சரம ஸ்லோகம் –
சர்வ சப்த பிரதிசம்பந்தியான ஏக சப்தம் –
சித்த உபாய பிரதான்யத்தாலே -சரண்யனை விசேஷித்துக் கொண்டு நின்றாலும் –
ந்யாசே நைவ -என்கிறபடியே பிரபத்தி ஒன்றுமே சர்வ தர்மாந்தர ஸ்தானத்திலும் விதிக்கப்படுகிறது என்று லபிக்கும் –
இத்தால் த்ரிவர்கார்த்தங்களும் இப்பகவத் பிரபத்தி பண்ணலாம் என்றதாயிற்று –
அப்போது -த்வயாபி பிராப்தம் ஐஸ்வர்யம் யதஸ்தம் தோஷாயாம்யஹம் -என்றும்
நாஹம் ஆராதயாமி த்வாம் தவ பத்தோயம் அஞ்சலி -என்றும்
ஸ் த்வம் ப்ரஹர வா மா வா மயி வஜ்ரம் புரந்தர -நாஹம் உத்ஸ்ருஜ்ய கோவிந்தம் அந்யாம் ஆராதயாமி போ -இத்யாதிகளில் படியே
நித்ய நைமித்திகங்களில் விசேஷணமாய்ப் புகும் அளவே ஒழிய மற்றும் சர்வ அவஸ்தையிலும்
தேவதாந்த்ர ஸ்பர்சம் அற்று இருக்கை உசிதம் –
மோக்ஷத்துக்கு உபாயாந்தரங்களாய் உபாய விரோதிகளைக் கழிக்க வேண்டுவார்க்கும் இப்பிரபத்தி பண்ணலாம் –
பிராப்தி விரோதியைக் கழிக்க வேண்டுவார்க்கும் இப்பிரபத்தி தானே அமையும் என்று பிரபத்தியினுடைய
சகல அபிமத சாதனத்வம் இங்கே சொல்லிற்று ஆயிற்று –
இதில் பிரபத்தி உபாய விரோதியைக் கழிக்கும் கட்டளையை ஸ்ரீ கீதா பாஷ்யத்திலே த்விதீய யோஜனையிலே அருளிச் செய்தார் –
பிராப்தி விரோதியைக் கழிக்கும் கட்டளையை கத்யத்திலே அருளிச் செய்தார்
இவை இரண்டு இடத்திலும் ஒன்றை அநா தரித்து ஒன்றை அருளிச் செய்தபடி அன்று –
இரண்டு இடமும் சர்வ அபிமத சாதனமான இவ்வுபாயத்தின் பிரபாவத்துக்கு உதாஹரண பரம் —
பிரணவம் மந்த்ராந்தரத்தில் பிரவேசித்து நின்றும் ஸ்வ தந்திரமாயும் நிற்குமாப் போலே
இப்பிரபத்தி அதிகாரி விசேஷத்தில் பக்தி அங்கமுமாய் –
அதிகாரி யந்திரத்தில் ஸ்வ தந்திரமாயும் இருக்கை வசன பலத்தால் சித்தம் –
இப்படி நியதி அதிகாரமாக பக்தி பிரபத்திகள் விகல்பித்து நிற்கிற நிலை –
பக்த்யா பரமயா வாபி பிரபத்த்யா வா மஹா மதே–இத்யாதிகளிலே பிரசித்தம் -ஆகையால்
சம்யக் ஞானேந வா மோக்ஷம் பங்காயாம் மரணேந வா பிராணா மத்வாபி ஸூக்ருதாத் பக்த்யா வா லபதே நர -இத்யாதிகளிலே
சாஷாத் உபாயத்தோடே கூட பரம்பர உபாயங்களை எடுத்ததுவும்
அவற்றினுடைய ப்ராஸஸ்த்ய அதிசயம் தோற்றுகைக்காக வத்தனை –
ஆக -ஆறு விதமாக ஏக சப்தார்த்தங்கள் சுருக்கம் —
ப்ராப்யஸ்ய ஏவ ப்ராபகத்வம் ஸ்வ ப்ராதான்ய நிவாரணம்
ப்ரபத்தே வியாஜ்ய மாத்ரத்வம் அந்நிய உபாய அனன்வ
தத் அங்கைர் அபி அசம்பந்த சர்வ சாத்யேஷூ அபிந்நதா
இத்தம் அர்த்தா ஷட் ஆசார்யை ஏக சப்தஸ்ய தர்சிதா
ஆனால் கல்யாண குணங்கள் திவ்ய மங்கள விக்ரஹம் போலே பெரிய பிராட்டியார் உபாயமாக இருக்கும்
ஆகாரம் தவிர்க்க ஒண்ணாதே -அப்ருதக் ஸித்தம் அன்றோ –
கேசித் து இஹ ஏக சப்தம் சரண்ய ஐக்கியம் ப்ரசஷதே
விசிநஷ்டி ததா அபி ஸ்ரீ குண விக்ரஹவத் ப்ரபும்
ஈஸ்வரீ சர்வ பூதா நாம் இயம் பாகவத ப்ரியா
சம்ஸ்ரித த்ராண தீஷாயாம் ஸஹதர்ம ஸரீ ஸ்ம்ருதா
ஏவம் ஜகத் உபாதாநாம் இதி உக்தே ப்ரமாணத
யதா அபேக்ஷித வைசிஷ்ட்யம் ததா அத்ராபி பவிஷ்யதி
ஏக உபாஸித விதாநே அபி குணதீ நாம் யதா அந்வய
தத் ஏக சரண வ்ரஜ்யா விதாநே அபி அநுமந்யதாம்
ததா குணாதி வைஷ்ட்யே ஸித்த உபாய ஐக்யம் அக்ஷதம்
ஏவம் பத்நீ விசிஷ்டத்வே அபி அபீஷ்டம் ஸாஸ்த்ர சஷுணாம்
ப்ரபா ப்ரபாவதோ யத்வத் ஏக உக்தவ் இதர அந்வய
ஏவம் அந்யத்ர உக்தவ் ஸ்யாத் ஸஹ வ்ருத்தி அபிதாநத
ஸ்மரந்தி ச ஏநாம் முநய சம்சார அர்ணவதாரிணீம்
ஊசது ஸ்வயம் அபி ஏதத் ஸாத்வதாதிஷூ தாவுபவ்
உபாய உபேய தசயோ த்வயே அபி ஸ்ரீ சமந்விதா
இஷ்டா ச சேஷிணி த்வந்தே சேஷ வ்ருத்தி யதா உசிதா
அத அநந்யபர அநேக ஸ்ருதி ஸ்ம்ருதி அநு சாரத
பத்நீ உசிதவிஸிஷ்ட ஏவ ஏக பிரபத்தவ்ய இஹ உசித –
சரண -சப்தார்த்தம்
இங்குற்ற-சரண -சப்தம் -த்வய அதிகாரத்தில் சொன்ன பொருளை அனுசந்தித்துக் கொள்வது –
இந்த சரண வரணம் அர்ஜுனனைக் குறித்து உபதேசிக்கப்பட்டதே யாகிலும்
அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய -என்கிறபடியே
சர்வ விஷயம் என்னும் இடம் ஸ்வேதாஸ்வதர ஸ்ருதி பிரசித்தம் –
ஸ்ரீ கிருஷ்ணம் தர்மம் சநாதநம் -வன பர்வம் -71-123-
சரண்யம் சரணம் ச த்வாம் –யுத்த காண்டம்–120-18-
யோகோ யோகவிதாம் நேதா –ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமாவளி-18-19-
அம்ருதம் சாதனம் ஸாத்யம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம் 72-4—இத்யாதிகளிலும் சங்கோசம் இல்லாமையால் சர்வ விஷயத்வம் விவஷிதம்
இப்படி இவன் சரணமாக வரணீயனாம் போதைக்குத் தான் அநந்ய சரணனாகையே வேண்டுவது –
வ்ரஜ- சப்தார்த்தம்
வ்ரஜ-என்கிற சப்தம் ப்ரபத்யே -என்கிற இடத்தில் அறுதியிட்ட-ச பரிகர ஆத்ம நிபேஷத்தையே சொல்லுகிறது –
அவ்விடம் அனுஷ்டாதாவினுடைய அனுசந்தானமான படியால் உத்தமனாயிற்று
இவ்விடம் சிஷ்யஸ்தே அஹம் சாதிமாம் –ஸ்ரீ கீதை -2–7-என்கிற அபிமுகனாக நிற்கிறவனைக் குறித்து
விதிக்கிறதாகையாலே மத்யமானாயிற்று
இவ்வநுகூல சங்கல்பாதி அங்காந்தரங்களும் இங்கே ஸூசிதமான படியை த்வயத்தில் போலே உசித பதங்களில் கண்டு கொள்வது –
ஸக்ருத் க்ருத சாஸ்த்ரார்த்த என்கிற நிர்ணயத்துக்கு உபாசனத்தில் போலே இங்கு ஆவ்ருத்தி வேண்டும்படி அபவாதம் இல்லை –
இவ்வர்த்தம் -ஸக்ருத் ஏவ ப்ரபந்நாயை -இத்யாதி வசனத்தாலும் ஸூ ப்ரதிஷ்டிதம்
இப்படி மஹா உதாரனான சர்வ சக்தி பக்கலிலே பரந்யாசம் பண்ணுமவனுக்கு ஸ்வ அபிப்ராய விசேஷணம் ஒழிய
பல விளம்பத்துக்கு ஹேது இல்லை
ஆகையால் இந்நியாச வித்யைக்குப் பிராரப்த நிவர்த்தகத்வம் விசேஷம் ஆகிறது –
இவ்விடத்தில் சிலர் ஸ்வ தந்திரனைக் குறித்து அன்றோ ஒன்றை விதிப்பது –
அத்யந்த பரதந்த்ரனாக அத்யாத்ம சாஸ்திரங்களிலும் மூல மந்த்ராதிகளிலும் சிஷிதனான அதிகாரியைக் குறித்து
வ்ரஜ என்று ஒரு கர்தவ்யத்தை விதிக்கும்படி எங்கனே என் என்று சொல்லுவார்கள் –
இது பாரதந்த்ரத்தை பராமர்சியாமல் சொன்ன படி -எங்கனே என்னில்-
கர்த்தா சாஸ்த்ரார்த்தவத்வாத்- (2-3-40 )
பராத் து தத் ஸ்ருதே (2-3-33 ) என்று வேதாந்தத்தில் அறுதியிட்டபடி
இவனுக்கு பகவத் அதீன கர்த்ருத்வம் உண்டாகையாலே இவனைப் பற்றி விதிக்கக் குறையில்லை –
அசித்துக்கள் சப்தாதிகளை ஈஸ்வரன் யுண்டாக்க சுமக்கிறாப் போலே
இவ்வளவு ஸ்வாதந்தர்யத்தை எடுத்துச் சுமைக்கையும் இவனுக்கு பகவத் பாரதந்தர்ய காஷ்டை இருந்தபடி –
இவனுக்கு ஒரு வழியாலும் கர்த்ருத்வம் இல்லை என்னில் ப்ரக்ருதி அவித்யாதிகளுக்குக் கர்த்ருத்வம் சொல்லுகிற சித்தாந்த துல்யமாம் –
கர்த்ருத்வம் ஸ்வாதீனம் என்னில் சர்வாத்ம நியந்தா ஒருவன் என்கிற அர்த்தம் கிடையாமையாலே நிரீஸ்வர சித்தாந்தப்படியாம் –
ஈஸ்வர அதீனமாக வரும் கர்த்ருத்வம் தானும் ஞாத்ருத்வ மாத்திரம் என்னில்
புருஷார்த்த சம்பாதன ருசியும் தத் உபாய ப்ரவ்ருத்தியும் தவிரப் பிரசங்கிக்கும் –
ஞானமும் அதன் அவஸ்தா விசேஷமான இச்சையுமே உள்ளன –
வேறொரு வியாபாரம் இல்லை என்னிலும் த்ருஷ்ட அத்ருஷ்ட அர்த்தங்களான ஓர் உபாயங்களையும்
ஸ்வயம் பிரயோஜனமான கைங்கர்யங்களையும் அனுஷ்ட்டிக்க விரகில்லை
ஆகையால்
ஞான சிகீர்ஷா பிரயத்தனங்கள் -அறிவு -செயலில் விருப்பம்- முயலுதல் –மூன்றும் ஆத்மாவுக்கு உண்டு –
இதில் சிகீர்ஷா பிரயத்தனங்கள் -ஞானத்தினுடைய அவஸ்தா விசேஷங்கள் என்னுமிடத்தை
வேதாந்த ஸங்க்ரஹத்தில் அருளிச் செய்த லாகவே யுக்தியாலே கண்டு கொள்வது –
க்ரியாஸ்ரயத்வ ரூபமான கர்த்ருத்வம் சேதன அசேதன சாதாரணம் –
பிரயத்தன ஆஸ்ரயத்வ ரூபமான கர்த்ருத்வம் சேதன ஏகாந்தம் –
ப்ரயத்னமாவது சரீராதி பிரேரண ஹேதுவான புத்தி விசேஷம் –
ஞான மாத்ரத்துக்கு ஆஸ்ரயமான போதும்-போக மாத்ரத்துக்கு ஆஸ்ரயமான போதும்
க்ரியா ஆஸ்ரயத்வ மாத்ரமான சாமான்ய கர்த்ருத்வமே உள்ளது
ஒன்றைத் தன் புத்தியால் உத்பாதிக்கும் போது பிரயத்தன ஆஸ்ரயத்வ ரூபமான கர்த்ருத்வம் –
இப்படிப்பட்ட கர்த்ருத்வம் கைங்கர்ய மாத்திரத்திலே என்கையும் உசிதம் அன்று-
அங்கும் பகவத் ப்ரீதி என்று ஒரு பிரயோஜனத்தை உத்தேசித்து உபாய அனுஷ்டானம் பண்ணினானாய் இறே இருப்பது
ஆன பின்பு கர்த்ருத்வத்தில் பந்த ஹேதுவான ஆகாரம் த்யாஜ்யம் -அது எது என்னில் –
ஈஸ்வரன் கொடுத்த ஞான சக்த்யாதிகளையும் கரண களேபராதிகளையும் கொண்டு
அவன் ப்ரேரிகனுமாய்ப் பலியுமாய்க் கொண்டு சஹகரிக்கப் ப்ரவர்த்திக்கிற தன்னை
இதுக்கு விபரீதமாக அனுசந்திக்கையும்
இவ்வநுஸந்தானத்தில் திருத்தமுண்டே யாகிலும்
இதில் பிரயோஜனத்தி இடுக்கி அனுஷ்ட்டிகையும் பந்தகம்-
பக்தி ப்ரபத்திகள் தாமும் ப்ரயோஜனாந்தர பரனுக்கு பந்தகமாய் இறே இருப்பன –
ஆகையால் ஸ்வாபாவிக கைங்கர்யார்த்தியாய்-அநந்ய ப்ரயோஜனனாய் இருக்குமவனுக்கும்
பல தசையில் கர்த்ருத்வம் போலே உபாய தசையில் கர்த்ருத்வமும் விருத்தம் அன்று –
பல தசையில் விவித விசித்திர கைங்கர்ய கர்த்ருத்வம் கேவலம் ஈஸ்வர இச்சா வைசித்ரியோடே பொருந்தின ஸ்வ இச்சையால் இருக்கும்
சம்சார தசையில் உள்ள கர்த்ருத்வம் எல்லாம் கர்ம அனுரூபமாக ஈஸ்வரன் பரிணமிப்பித்த சத்வ ரஜஸ் தமஸ்ஸூக்களை
உபாதியாகக் கொண்டு பஹு விதமாய் இருக்கும் –
இதில் ரஜஸ்ஸாலும் தமஸ்ஸாலும் ப்ரயோஜனாந்தர சங்க ஹேதுவான சத்வத்தாலும் வரும் கர்த்ருத்வம் பந்தகம்
பகவத் பிராப்தியாலே சங்கத்தைப் புணர்க்கும் ப்ரக்ருஷ்ட சத்வ விசேஷம் அடியாக வரம் கர்த்ருத்வம் மோக்ஷ காரணம் –
இக்குணத்ரயத்தோடு துவக்கற்று இருக்கும் முக்த தசையில் கர்த்ருத்வம் –
இதில் சிகீர்ஷா பிரயத்னங்கள் ஞானத்தினுடைய அவஸ்தா விசேஷங்கள் என்னும் இடத்தை
வேதாந்த ஸங்க்ரஹத்தில் அருளிச் செய்த லாகவ யுக்தியாலே கண்டு கொள்வது –
க்ரியாஸ்ரயத்வ ரூபமான கர்த்ருத்வம் சேதன ஏகாந்தம் –
ப்ரயத்னமாவது சரீராதி ப்ரேரண ஹேதுவான புத்தி விசேஷம்
ஞான மாத்ரத்துக்கு ஆஸ்ரயமான போதும் –
போக மாத்ரத்துக்கு ஆஸ்ரயமான போதும் -கிரியாஸ்ரயத்வ மாத்ரமான சாமான்ய கர்த்ருத்வமே உள்ளது
ஒன்றைத் தான் புத்தியால் உத்பாதிக்கும் போது பிரயத்ன ஆஸ்ரயத்வ ரூபமான கர்த்ருத்வம் –
இப்படிப்பட்ட கர்த்ருத்வம் கைங்கர்ய மாத்திரத்திலே என்கையும் உசிதம் அன்று –
அங்கும் பகவத் ப்ரீதி என்று ஒரு பிரயோஜனத்தை உத்தேசித்து உபாய அனுஷ்டானம் பண்ணினாய் இறே இருப்பது
ஆன பின்பு கர்த்ருத்வத்தில் பந்த ஹேதுவான ஆகாரமே த்யாஜ்யம் –
அது எது என்னில்-ஈஸ்வரன் கொடுத்த ஞான சக்த்யாதிகளையும் கரண களேபராதிகளையும் கொண்டு
அவன் ப்ரேரகனுமாய்ப் பலியுமாய்க் கொண்டு சஹகரிக்கப் பிரவர்த்திக்கிற தன்னை இதுக்கு விபரீதமாக அனுசந்திக்கையும்
இவ்வநுஸந்தானத்தில் திருத்தம் உண்டே யாகிலும் இதிலே பிரயோஜனத்தை இடுக்கி அனுஷ்டிக்கையும் பந்தனம்
பக்தி பிரபத்திகள் தாமும் பிரயோஜனாந்தர பரனுக்கு பந்தகமாய் இறே இருப்பன
ஆகையால் ஸ்வாபாவிக கைங்கர்யார்த்தியாய் அநந்யபிரயோஜனனாய் இருக்குமவனுக்கும்
பல தசையில் கர்த்ருத்வம் போலே உபாய தசையில் கர்த்ருத்வமும் விருத்தம் அன்று-
பல தசையில் விவித விசித்திர கைங்கர்ய கர்த்ருத்வம் கேவலம் ஈஸ்வர இச்சா வைசித்ரியோடே
பொருந்தின ஸ்வ இச்சையால் இருக்கும் –
சம்சார தசையில் உள்ள கர்த்ருத்வம் எல்லாம் கர்ம அனுரூபமாக ஈஸ்வரன் பரிணமிப்பித்த
சத்த்வ ரஜஸ் தமஸ்ஸூக் களை உபபாதியாகக் கொண்டு பஹுவிதமாய் இருக்கும்
இதில் ரஜஸ்ஸாலும் தமஸ்ஸாலும் ப்ரயோஜனாந்தர சங்க ஹேதுவான சத்வத்தாலும் வரும் கர்த்ருத்வம் பந்தகம் –
பகவத் ப்ராப்தியில் சங்கத்தைப் புணர்க்கும் ப்ரக்ருஷ்ட சத்துவ விசேஷம் அடியாக வரும் கர்த்ருத்வம் மோக்ஷ காரணம்
இக்குணத் த்ரயத்தோடே துவக்கு அற்று இருக்கும் முக்த தசையில் கர்த்ருத்வம் –
இப்படி பக்த்யாதிகள் போலே-சரணாகதி தர்மமும் கர்தவ்யமாக விதிக்கப்படுகையால்
தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே -ஈஸ்வரனால் வரும் நன்மை முலைப்பால் போலே –என்ற ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ ஸூ க்திக்கு
பக்தி பிரபத்யாதிகள் எல்லாம் அவனாலே வருகின்றன வென்று நினைக்க வேண்டும் -என்று தன்னுடைய பராதீன கர்த்ருத்வத்திலே தாத்பர்யம் –
அந்நிய விஸ்வாஸ சித்த்யர்த்தம் பக்த்யுபாய விதிம் வதன்
சர்வ சாஸ்த்ரேஷ்வ விஸ்வாஸம் ஆதத்தே முக பேதேநே
மத்யோபஹத மாத்ரஸ்ய தீர்த்த த்ருஷ்டாந்த வர்ணனம்
அஹங்கார அந்வயே து ஸ்யாத் ப்ரபத்தாவபி பக்திவத் —
ஆகையால் ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வ–ஸ்தோத்ர ரத்னம் -65-இத்யாதிகள் முன்பு தாம் பண்ணின பிரபத்திக்கு
க்ஷமை கொள்ளுகிறபடி என்று சிலர் சொல்லுமதுவும்
அஹங்கார ஸ்பர்சாதி ஸங்க்யையைபி பற்றவாம் அத்தனை அல்லது யதா சாஸ்திரம் அனுஷ்டித்த பிரபத்தி அபராதமாய்
அதுக்கு க்ஷமை கொள்ளுகிறபடி அன்று –
அப்படியாகில் பிதாமஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத –ஸ்தோத்ர ரத்னம் -65-என்கிற பூர்வாச்சார்ய புரஸ்காராதிகளும்
தாம் செய்கிறது ஆகையால் இதுக்கு க்ஷமை கொள்ள வேண்டி அநவஸ்தையாம் –
இது ஸ்வ பர நிர்வாஹம் ஆகில் இது போலே முன்பு பண்ணின ப்ரபதமும் ஸ்வ பர நிர்வாஹம் என்னலாம்-
இங்குச் சொல்லும் குதர்க்கங்களாலே பூர்வர்கள் பண்ணின ப்ரபத்தியும் அபராதமாக அறுகையாலே
பூர்வர்களை முன்னிடவும் ஒண்ணாது ஒழியும்-
ஆகையால் இஸ் ஸ்தோத்ரத்திலே ஆதி அந்தங்களில் பண்ணின ஆசார்ய புரஸ்காரம்
இங்கு அருளிச் செய்கிற ப்ரபத்திக்கு அபேக்ஷிதம் ஆதலால்
வைகல்ய பரிஹார்த்தம் ஆதலால் -உபயுக்தமாய் வந்தது அத்தனை –
இவ் வாச்சார்ய புரஸ்காரத்தில் போலே பிரபத்தியாதிகளிலும் பராதீன கர்த்ருத்வம் தோஷம் அன்று —
இப்படி பராதீன கர்த்ருத்வம் ப்ராமாணிகம் ஆகையால் ஆத்மாவுக்குக் கர்த்ருத்வம் இல்லாமையாலே
ஸ்வரூபம் தெளிந்தவனை நிஷித்த கர்மங்களில் ஒன்றும் லேபியாது என்கிற பஷமும் நிரஸ்தம் –
முமுஷுவுக்குச் சொன்ன பால்யம் -பால்ய க்ருத்யங்களான காமசாராதிகள் அன்று –
ஸ்வ மாஹாத்ம்ய அநாவிஷ்கார மாத்திரம் என்னும் இடம் –
அநாவிஷ் குர்வன் நந்வயாத்–என்கிற-3–4-49-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்திலே சமர்த்திதம் –
அநிஷ்ட மிஷ்டம் மிஸ்ரம் ச -ஸ்ரீ கீதை -18-12-
யஸ்ய நாஹம் க்ருதோ பாவ -18-17—இத்யாதி வசனங்கள்
புத்தி பூர்வ உத்தராக விஷயங்கள் அல்ல என்னும் இடம் பஹு சாஸ்திரம் விரோதம் வாராமைக்காக-
பாஷ்யாதிகளிலே சமர்த்திக்கப் பட்டது –
ஹத்வா அபி -18-17–என்றதுவும் தர்ம யுத்தாதி விஷயம் —
உபபுக்தவ்ஷத ந்யாயாத் உத்தராபத்ய மர்தநம்
அநந்ய பர நிர்பாத ஸ்ருதி ஸ்ம்ருதி சதைர்ஹதம் –
மன்வாதிகளும் -ஜீவிதாத்ய யமா பன்ன யோ அன்னமத்தி யதஸ்தத –
ஆகாச இவ பங்கேந ந ச பாபேந லிப்யதே -என்றும்
ப்ரண சம்சயமா பன்னோ யோ அன்னமத்தி யதஸ்தத
லிப்யதே ந ச பாபேந பத்மபத்ர மிவாம்பசா-என்றும் நியமித்தார்கள்
இது ப்ரஹ்ம வித்துக்கும் துல்யம் என்னும் இடம் –
சர்வான்நா நுமதிச்சா ப்ரணாத்யயே தத் தர்சநாத் –என்கிற -3-4–28-என்கிற ப்ரஹ்ம ஸூத்ரத்திலே சாதிதமாயிற்று
ஆகையால் கர்த்ருத்வம் ஆத்மாவுக்கு இல்லை என்றாதல்
பாரதந்தர்ய ஞான மாத்ரத்தைக் கொண்டதால்
புத்தி பூர்வ உத்தராகம் ஒரு படிக்கும் லேபியாது என்கையும்
இத்தைப் பற்ற புன பிரபதனம் வேண்டா என்கையும் பர பக்ஷமாம் —
இவ்விடத்தில் சிலர் -வ்ரஜ -இத்யாதி விதிகளை அந்ய பரங்களாக்கி
யோ அந்யதா சந்தமாத்மாநம் அந்யதா பிரதிபத்யதே -கிம் தேன ந க்ருதம் பாபம் சோரேண
ஆத்ம அபஹாரிணா-உத்யோக பர்வம் -41-37-
யமோ வைவஸ்ததோ ராஜா யஸ்தவைஷ ஹ்ருதி ஸ்திதே -தேன சேதவிவாதஸ்தே மா கங்காம்
மா குரூன் கம–மனு ஸ்ம்ருதி -6–92-
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவம் ச சதா ஸ்மரா -ஸ்ரீ விஷ்ணு தத்வம் –
இத்யாதிகளிலே தாத்பர்ய கதிகளையும் பராமர்சியாதே இவற்றைக் கொண்டு சாஸ்த்ர ஜன்ய சம்பந்த ஞானம் ஒழிய
வேறு முமுஷுவுக்கு அநுஷ்டேயமாய் இருப்பதோர் உபாயம் இல்லை என்பார்கள் –
இது பக்தி பிரபத்தி யாதி விதி ஸ்வாரஸ்ய விருத்தம்
ராக ப்ராப்த ஸ்ரவண மனனங்களாலே ஸித்தமான சாஸ்த்ரா ஜன்ய ஞானத்தை விதிக்கவும் வேண்டா –
அவிதேய ஞானத்தை மோக்ஷ சாதனமாகச் சொல்லுவாருக்கு விதி விரோதாதி தோஷங்களும் வரும் என்று சாதித்தது இறே-
ஆன பின்பு சர்வ விதித்யாதி நிஷ்டரான முமுஷுக்களுக்கும் பொதுவாய்
பரம்பரயா உபகாரகமான ஜீவ பரமாத்ம சம்பந்த ஞானம் சாஸ்திரத்தாலே பிறந்தவனுக்கு
நம்முடைய ஸ்வாமியாய் நிரதிசய போக்யனான ஸ்ரீயபதியைப் பிராபிக்கைக்கு விரகு எது என்கிற
உபாய ஆகாங்ஷை பிறந்த அளவிலே
இங்கே அவ்வோ அதிகாரி விசேஷ அனுரூபமாக விதிக்கப்படுகிற ஞானானந்தரங்கள் பக்தி பிரபத்திகள் –
அவற்றில் பிரபத்தியாவது –
யஸ் ஸம் ரஷ்யதயா அர்ப்யதே -அஹிர்புத்ந்ய சம்ஹிதை -52-36–இத்யாதிகளில்படியே
சபரிகரமான ஸ்வ ரஷாபர சமர்ப்பணம்
இது சம்பந்த அனுசந்தான கர்ப்பமாக வேண்டும் என்கைக்காக சம்பந்த ஞானம் பிரபத்தி என்று சொன்னார்கள் அத்தனை –
இப் பரந்யாஸ ரூப பிரபத்தியின் ஸ்வரூப பரிகர அதிகாராதிகளை முன்பே பரக்கச் சொன்னோம் –
சாதனமும் நற்பயனும் நானே யாவன்
சாதகனும் என் வயமாய் என்னைப் பற்றும்
சாதனமும் சரண நெறி அன்று உனக்குச்
சாதனங்கள் இந் நிலைக்கோர் இடையினில்லா
வேதனை சேர் வேறு அங்கம் இதனில் வேண்டா
வேறு எல்லாம் நிற்கும் நிலை நானே நிற்பன்
தூதனுமாம் நாதனுமாம் என்னைப் பற்றிச்
சோகம் தீர் என உரைத்தான் சூழ்கின்றானே
———————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply