ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –191/192/193/194/195/196/197/198–

சூரணை-191-

பிரபந்த உதய ஹேது வைலஷண்யத்தால் வந்த ஆதிக்யம் சொல்கிறது மேல் —

அது
ஐவரை வெல்வித்துப்
பதிற்றைந்திரட்டி
படச் சொன்னது
இது
நாடாக தோற்றோம் என்று
ஐ ஐந்து முடிப்பான்
சொன்னது ..

அதாவது ..
அந்த பிரபந்தம்-
அன்று ஐவரை வெல்வித்த–திருவாய் -4-6-1-என்கிறபடியே –
த்ரௌபத்யா சகிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –பாரதம் ஆரண்ய –192-56- -என்று
ராஜ்ய ஆ காங்க்ஷிகளாய் சரணம் புக்கு நிற்கிற பாண்டவர்களையும் –
ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ணே -ஸ்ரீ கீதை -1–32 – என்ற அர்ஜுனனை –
கரிஷ்யே வசனம் தவ–ஸ்ரீ கீதை -18-73- -என்னப் பண்ணி யுத்தத்திலே மூட்டி -விஜயீகளாக்கி-
பதிற்றைந்திரட்டி படை வேந்தர் பட -பெரிய திருமொழி -2-4-4-என்கிறபடியே -அவர்களுக்கு
பிரதி பஷ பூதரான துர்யோனாதிகள் நூற்றுவரையும் முடிக்கைக்காக சொன்னது ..

இந்த பிரபந்தம் –
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7—என்று
வகுத்த சேஷி பக்கலிலே எல்லோரும் அபஹ்ருத சித்தராய் போம்படியாக –
(உபதேசம் கேட்டு நாடாக திருந்தி ஊரும் நாடும் உலகும் ஆழ்வாரைப் போலே ஆனதே )
முடிப்பான் சொன்ன ஆயிரம் –திருவாய் -8-7-11–என்கிற படியே
அதுக்கு விரோதியாய் இருந்துள்ள –(ஜன்மம் விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே -8-7-11)
பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் -திருவாய் -10-7 10–இத்யாதியால் சொன்ன
சதுர் விம்சதி தத்வாத் மகமான அசித்திலும் –
ஞான ஆனந்த லஷணமாய் கொண்டு ஸ்வ போக்யதையாலே தன் பக்கலிலே கால் தாழ்த்தப் பண்ணும் ஆத்மாவிலும்
உண்டான சங்கத்தை முடிப்பதாக சொன்னது என்கை ..
(அநந்தம் ஸ்திரம்-பகவத் அனுபவம் -அல்பம் அஸ்திரம் அசித் அனுபவம் -அநந்தம் அஸ்திரம் ஆத்ம அனுபவம் )

இத்தால் மோஷ சாஸ்திரமே ஆகிலும் உதிக்கிற போது அன்யார்த்தமாக உதித்த குறை உண்டு அதுக்கு –
மோஷார்தமாகவே உதித்த ஏற்றம் உண்டு இதுக்கு என்றது ஆய்த்து ..

—————————–

சூரணை -192-

உபக்கிரம உப சம்கார பிரகிரியையால் வந்த வைபவம் சொல்கிறது இதில் ..

அங்கு நம்பி சரண்
என்று தொடங்கி
முடிவில் அப்ரியம் என்றது ..
இங்கு பரமே என்று இழிந்து
பொலிக என்று உகந்தது ..

அதாவது
அந்த பிரபந்த்ததில் உபதேசம் தொடங்குகிற போது –
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயற்காகி–பெரிய திருமொழி –1-9-4-என்கிறபடியே ,
சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2-7-என்று
அர்ஜுனனுடைய அனுவர்தனம் கண்டு – ப்ரீதி யோடே உபக்ரமித்து —
(அனுவர்த்தன ப்ரசன்னாச்சார்யார்-என்றும் க்ருபாமாத்ர ப்ரசன்னாச்சார்யார் என்றும் உண்டே –
ஆசை யுடையார்க்கு கூற பேசி வரம்பு அறுத்தார் ராமானுஜர் )
நூனமச்ரத் ததாநோசி துர்மே தாச்சாசி பாண்டவ அபுத்த்யா அன்ன ஜாநீஷே தன்மே ஸூமஹத் அப்ரியம் –ஸ்ரீ அநு கீதை –
(அர்ஜுனா நிச்சயம் சிரத்தை இல்லாதவனாய் இருக்கிறாய்-கெட்ட புத்தியையும் யுடையவனாய் இருக்கிறாய் –
இக்காரணத்தால் அறிவின்மையால் அறியவில்லையோ அது எனக்குப் பெரிதும் விருப்பம் இல்லாதது ஆகும் )- என்று
அவன் பக்கல் அனவதானம்-( கவனக்குறைவு -) காண்கையாலே அப்ரியத்தோடே தலைக் கட்டிற்று —

இப் பிர பந்தத்தில் விமுகரைக் குறித்து கிருபையாலே உபதேசிக்கையாலே -(அங்கு அபிமுக்யர் அனுவர்த்தனம்)
உபதேச உபக்ரமத்தில்
ஏ பாவம் பரமே ஏழுலகும் ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் –திருவாய் -2-2-3- -என்று
அப்ரிதியோடே உபக்ரமித்து –
அவ் உபதேசம் கேட்டு ஜகத்தாக திருந்துகையாலே -இப்படி திருந்தினவர்களைக் கண்டு –
பொலிக பொலிக பொலிக –திருவாய் -5-2-1- -என்று
மங்களாசாசனம் பண்ணி –
உகந்து பணி செய்தேன்–திருவாய் -10-8-10- -என்னும் படி
ப்ரீதியோடே தலைக் கட்டிற்று என்கை ..

இத்தால் அர்ஜுனன் யுத்தே பிரவ்ருதனான மாத்ரம் ஒழிய
சித்த தர்ம பர்யந்தம் உபதேசித்த பலம் சித்திக்கப் பெறாமையாலே உபதேசம் ச பிரயோஜனம் ஆய்த்து இல்லை அங்கு –
அது ச பிரயோஜனம் ஆய்த்தது இங்கே என்றது ஆய்த்து-

——————————————-

சூரணை -193-

பிரதி பாத்ய அர்த்த கௌரவத்தால் வந்த வைபவம் சொல்கிறது இதில் –
(ப்ரதிபாத்ய சாம்யம் -189-பார்த்தோம் –
பெருமாள் சமுத்திரராஜன் இடம் சரண் அடைந்து வியர்த்தமானதே )

அதில்
சித்த தர்ம விதி ..
இதில்
விதி
அனுஷ்டானங்கள் ..

அதாவது-
அந்த கீதையில் –
மா மேகம் சரணம் விரஜ –ஸ்ரீ கீதை –18-66–என்ற சித்த தர்மம் மாத்ரமே உள்ளது ..
(ஸாத்ய தர்மங்களை விட்டு சித்த தர்மம் பற்ற விதிக்கிறான் )
இந்த பிரபந்தத்தில் –
திரு நாரணன் தாள் காலம்பெற சிந்தித்து உய்மினோ-திருவாய் -4-1-1 -என்ற விதியும் –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன்-6-10-10 -என்ற அனுஷ்டானமும்-
இரண்டும் காணலாம் என்கை ..
இத்தால்
விதி மாத்ரம் பிரதி பாதகமான அதில் (காட்டிலும் )
விதி அனுஷ்டானங்கள் இரண்டையும் பிரதி பாதிக்கும் இதுக்கு ஏற்றம் உண்டு என்றது ஆய்த்து ..

——————————————–

சூரணை -194-

இனி அந்த ஸ்ரீ கீதை தனக்கு உத்கர்ஷமும் இவர்
அங்கீகாரத்தாலே என்கிறது இதில் ..

பகவன்
ஞான விதி
பணிவகை என்று
இவர் அங்கீகாரத்தாலே
அதுக்கு உத்கர்ஷம் –

அதாவது
அந்தமில் ஆதி யம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று –திருவாய் -1-3-5–என்றும் –
ஞான விதி பிழையாமை –திருவாய் -5-2-9–என்றும் –
பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் கமல மலர் பாதம் –திருவாய் -10-4-9–என்றும்
பரம வைதிகரான இவர் அத்தை பிரமாணமாகக் கொள்ளுகையாலே ஆய்த்து
அந்த ஸ்ரீ கீதைக்கு உத்கர்ஷம் உண்டாய்த்து என்கை –
(வேதம் அத்யயனம் பண்ணா விட்டாலும் அதன்படி நடந்ததால் நம்மாழ்வார் பரம வைதிகர் )

புத்த முனியாயும் -கபில முனியாயும் சொன்ன பௌத்த சாஸ்திரமும் -சாங்க்ய சாஸ்திரமும் –
அவன் தான் அருளிச் செய்ததாய் இருக்கச் செய்தே -வைதிக பரிக்ரகம் இல்லாமை இறே
அப்ரமாணம் ஆய்த்து ..
இதி மோஹன வர்ஷ்மணா த்வயாபி க்ரதிதம் பாஹ்ய மதம் த்ருணாய மந்யே –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் –
(இப்படி பிறரை மயங்கச் செய்கின்ற தேவரீராலேயே செய்யப்பட வேதங்களுக்குப் புறம்பான
மதங்களை புல்லுக்குச் சமமாக நினைக்கிறேன் )-என்று
பகவத் யுக்தமே யாகிலும் வேத விருத்தமானது வைதிகர் அங்கீகரியார்களே ….
வேதா விரோதித்வம் பிரகாசிப்பது வைதிக பரிகிரகத்தாலே இறே ..
ஆகையால் அதுக்கு உத்கர்ஷம் இவர் அங்கீகாரத்தால் என்ன குறை இல்லை ..

இத்தால் அதுக்கு உத்கர்ஷம் இவர் பரிக்ரகம் கொண்டு சொல்ல வேணும் ..
இவர் வாக்கில் பிறந்த இதுக்கு அதுவும் வேண்டாம் என்று இவ் வழியாலும் ஓர் ஆதிக்யம் சொல்லிற்று ஆய்த்து ..
(இது ஆறாவது பெருமை
பெருமாளைப் பற்ற புருஷகாரம் வேண்டும்– பிராட்டியைப் பற்ற -ஆச்சார்யரைப் பற்ற அதுவும் வேண்டாமே -அதே போலே இதுவும் )

ஆக ஸ்ரீ கீதை யிலும் இதுக்கு உண்டான ஆதிக்ய ஹேதுக்கள் எல்லாம் சொல்லிற்று ஆய்த்து ..

———————————————–

சூரணை -195-

இப்படி ஈஸ்வர உபதேசத்தில் இவர் உபதேசத்துக்கு ஏற்றம் சொன்ன பிரசங்கத்திலே ,
பிரமேய பூதனான அவனோடே-பிரமாண – பிரமாதக்களையும் கூட்டி –
அவர்கள் எல்லார் உபதேசமும் சங்குசித விஷயம் –
இவர் உபதேசம் சர்வ விஷயம்-என்று
இவ் வழியாலே உபதேஷ்டாவான ஆழ்வாருக்கு ஓர் ஆதிக்யம் அருளி செய்கிறார் மேல் —

வேத வேத்ய வைதிக
உபதேசம்
ஆவித்யர் அளவிலே ..
அஜ்ஞர்
ஜ்ஞானிகள்
ஜ்ஞான விசேஷ யுக்தர்
சர்வஜ்ஞன்
என்னாமல் இவர் திருத்துவர்-

(பிரமாணம் -வேத உபதேசம் -ப்ரமேயம் -வேத்ய உபதேசம் -பிரமாதா -வைதிகர் உபதேசம் –
ஆவித்யர்-அறிவில்லா உலகோர்-)

அதாவது
வேத உபதேசம் –
ஹித அநுசான பரமான வேதத்தினுடையவும்
வேத வேத்யே பரே பும்சி -ஸ்காந்தம் ( வேதங்களால் அறியப்படும் பரம் புருஷன் ) -என்று
வேதைக சமதி கம்யனான ஈஸ்வரனுடையவும்-உபதேசம்
வைதிக உபதேசம் –
யேச வேத விதோ விப்ராயே சாத்யாத்ம விதோ ஜனா
( எந்த அந்தணர்கள் வேதத்தின் பூர்வ பாகத்தை அறிந்தவர்களோ -எவர்கள் வேதாந்தம் அறிந்தவர்களோ )-என்கிற படியே
வேதத்தில் பூர்வ உத்தர பாகார்த்த ஜ்ஞராய் –வைதிகர் என்று -நிரூபகமாக இருக்கும் மகரிஷிகள் உடைய உபதேசம்-

ஆவித்யர் அளவிலே
ஆவித்யா ப்ராக்ருத ப்ரோக்த -(தத்வம் ஹிதம் புருஷார்த்தம் என்னும் அவற்றின் ஞானம் இல்லாமையாகிற
அறியாமையோடு கூடிய இவ்வுலகோர் ஆவித்யர் என்று சொல்லப்படுவர் ) என்கிறபடியே
தத்வ ஹித புருஷார்த்த -ஜ்ஞான அபாவ ரூப -அவித்யா யுக்தரான சம்சாரிகள் மாத்ரத்தில்.(இம்மூவர் உபதேசம் ).

இவர் -ஆழ்வார் –
அஞ்ஞர்
தத்வ ஹிதாதிகளில் அஜ்ஞரான சம்சாரிகளோடு
ஞானிகள்
பகவத் உபாயத்வ நிஷ்டராய் இருக்கும் ஜ்ஞானிகள் ஆனவர்களோடு —
ஞான விசேஷ யுக்தர்
தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை சாஷாத் கரித்து –உபேய பரராய்-
தத் அனுபவமே யாத்ரையாய் இருக்கும் -ஜ்ஞான விசேஷ யுக்தரோடு —
சர்வஞ்ஞன் என்னாமல்
நைவ கிஞ்சித் பரோஷம் தே ( உனக்கு காணப்படாத பொருள் ஒன்றும் இல்லை )-என்றும் ,
யோ வேத்தி யுகபத் சர்வம்) யாவன் ஒரு பொழுதில் எல்லாவற்றையும் அறிகிறானோ ) -என்கிறபடியே
சர்வஜ்ஞனான ஈஸ்வரனோடு வாசி அற சர்வர்க்கும் வேண்டும் அம்சங்களை
உபதேசித்து இவர் திருத்துவர் என்கை ..

———————————————–

சூரணை -196-

எல்லார்க்கும் இவர் இப்படி அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ண வேணுமோ என்னும் அபேஷையிலே
கீழ் சொன்ன நாலு விஷயத்துக்கும் இவர் அறிவிக்க வேண்டும் அர்த்த விசேஷங்களை தர்சிப்பிகிறார் இதில் –

அறியாதார்க்கு உய்யப் புகும் ஆறும்
இக் கரை எறினார்க்கு இன்ப வெள்ளமும்
நிலை அறியாதார்க்கு ஆழங் காலும்
கரை ஏற்றும் அவனுக்கு நாலும் ஆறும்
அறிவிக்க வேணும் —

அறியாதார்க்கு உய்யப் புகும் ஆறும்
அதாவது-
செம் கண் அடியாரைச் சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார் -பெரிய திருமொழி -11-7-8–என்று
முதலிலே பகவத் ஞானம் இல்லாத சம்சாரிகளுக்கு –
அக்தே உய்யப் புகும் ஆறு –திருவாய் -4-1-11–என்று ,
திரு நாரணன் தாள்-4-1-1- -என்கிற இதுவே உஜ்ஜீவிகைக்கு உபாயம் என்று –
சம்சார நிஸ்தரண உபாயமும் –

இக் கரை எறினார்க்கு இன்ப வெள்ளமும்
அதாவது
அக்கரை என்னும் அனர்த்த கடலுள் அழுந்தி -உன் பேர் அருளால் -இக்கரை ஏறி இளைத்து
இருந்தேனை–பெரியாழ்வார் -5-3-7- -என்று
சம்சார சாகரத்தில் அழுந்துகிறவர்களுக்கு பகவத் ஏக உபாயத்வ ஞானம் பிறந்தால் –
இங்கே இருக்கச் செய்தே -அக்கரை இக்கரை -என்னும் படி -சம்சாரம் தூரமாய் –
பரம பதம் அசந்னமாம்படி இருக்கையாலே –பகவத் ஏக உபாயத்தில் வ்யவசிதராய் –
ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருதராய் இருக்கிறவர்களுக்கு வ்யாவசாயம் குலைந்து த்வரிக்கும் படி –
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேர் இன்பத்து வெள்ளத்தே -திருவாய்–7-2-11- -என்று பிராப்ய வைலஷண்யமும்

நிலை அறியாதார்க்கு ஆழங் காலும்
அதாவது
ஆற்றிலே இழிந்து போகா நிற்க செய்தே -நிலைக்கும் இடமும் நிலையாத இடமும் அறியாதாரைப் போலே –
பிராப்ய பரராய் அனுபவியா நிற்கச் செய்தே -அதில் நிலை கொள்ளலாம் இடமும் –
ஆழம்கால் படுத்தும் இடமும் அறியாதவர்களுக்கு –
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின் -திருவாய் –10-7-1-என்று –
சீல குணமான ஆழம் காலும் –

கரை ஏற்றும் அவனுக்கு நாலும் ஆறும்
அதாவது
சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜனம் த்வமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிணா-என்கிற படியே
சம்சார சமுத்ரத்தை கடத்தி -அக்கரைபடுத்தும் அவனுக்கு –
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் இத்யாதி –திருவாய் -10-7-10–
இத்யாதியாலே -சதுர் விம்சதி தத்வமும் அறிவிக்க வேணும் என்கை —

ஆக அறிவு கேடரை உபாயத்தில் மூட்டுவர் .
உபாயத்தில் ஊன்றுவாரை பிராப்ய பரர் ஆக்குவார் .
ப்ராப்யத்தில் அவஹாகிக்கும் அவர்களுக்கு ஆழம் கால் அறிவிப்பார் .
பிராப்தியை உண்டாக்கும் அவனுக்கு த்யாஜ்யத்தை அறிவிப்பார் என்றது ஆய்த்து —

————————————————-

சூரணை -197-

இவர்களுக்கு இவ் அர்த்தங்களை உறுப்பான ஹேதுக்களோடே இவை தன்னை
இன்னும் ஒரு பிரகாரேண வ்யக்தமாய் அருளிச் செய்கிறார் இதில்-

அவன் முனிந்தார்க்கு
தாம் கண்டது –
தம்மை முனிவார்க்குத்
தம் கண் –
காணாதது
காண்பார்க்குக் கண் மாறும் இடமும் –
ராகாந்தனுக்கு மாயா தோஷம்
இவர் காட்டுமவை —

(அவன் முனிந்தார்க்கு இவர் காட்டுமது தாம் கண்டது –
தம்மை முனிவார்க்கு இவர் காட்டுமது தம் கண் –
காணாதது காண்பார்க்கு இவர் காட்டுமது கண் மாறும் இடம் –
ராகாந்தனுக்கு இவர் காட்டுமது மாயா தோஷம்-என்றவாறு )

அதாவது
ஷிபாமி (தள்ளுகிறேன் ) -என்றும்
ந ஷமாமி ( பொறுக்க மாட்டேன் )-என்கிறவன்
முனிவுக்கு விஷயமாய் அஜ்ஞான சம்சாரிகளுக்கு
தாம் கண்டது –
அதாவது –
ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லது–திரு விருத்தம் -99- -என்று –
நிமக்த்த உத்தாரண கதனாய் -ஞான உபகாரனானவனை ஒழிய சர்வருக்கும்
உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று தாம் அறுதி இட்ட விலஷணமான அர்த்தமும் —

தம்மை முனிவர்க்கு
அதாவது
எங்கனயோ அன்னைமீர்கள் என்னை முனிவது நீர்–திருவாய் -5-5-1- -என்னும் படி
உபாயத்வ அத்யாவச்ய தசையில் நின்று ஸ்வ யத்ன பீருக்களாய் ,
பிராப்ய வைலஷண்யம் அறியாதே இத்தனை அதி பிராவண்யம் ஆகாது என்று ஹிதம் சொல்லுபவர்களுக்கு —
தம் கண்
அதாவது
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் -திருவாய் -5-5-2-என்று பிராப்ய வை லக்ஷண்ய அவஹாகியான
என் நெஞ்சினால் பார்க்க மாட்டீர்களோ என்று -தம்முடைய உள் கண்ணானான -பிராப்ய வைலக்ஷண்ய ஜ்ஞானமும் —

காணாதது காண்பாருக்கு
அதாவது
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின்–திருவாய் -10-7-1- -என்று கவிகளாய் –
(கவிகள் – கிராந்தி தர்சிகள்/ ரிஷி மந்த்ர த்ருஷ்டர் / முனி மனன சீலர் )
கூர்க்கக் காணும் அவர்கள் ஆகையாலே புறம்பு ஒருவர் காணாததும் காண வல்லவர்களுக்கு –
கண் மாறும் இடம்,
அதாவது
அவன்
சீல குணத்திலே கண் வையாதே கொள்ளும் கோள் என்று -கண் மாறும் இடமும் —

ராகாந்தகனுக்கு ( ஆசையால் கண் மூடப்பட்டவனுக்கு )
அதாவது
தம் பக்கத்தில் ராகத்தால் முன்னடி தோற்றாமையாலே த்யாஜ்ய தேக தோஷம் காண மாட்டாதவனுக்கு
மங்க ஒட்டு உன் மா மாயை–திருவாய் -10-7-10- -என்று
பிரகிருதி தோஷம் இவர் தர்சிப்பிக்குமவை என்கை ..

(அஜ்ஞர்–அறியாதார்க்கு -அவன் முனிந்தார்க்கு தாம் கண்டது -சம்சார நிஸ்தரண உபாயமும் -உய்யப் புகும் ஆறும்
அறிவு கேடரை உபாயத்தில் மூட்டுவர் .
ஜ்ஞானிகள்-இக் கரை எறினார்க்கு -தம்மை முனிவார்க்குத் தம் கண் – முனிவது-ஹிதம் பண்ணுவது —
தாய்மாருக்கு -சாதனஸ்தர் –இன்ப வெள்ளமும் -பிராப்ய வைலஷண்யமும் –உபாயத்தில் ஊன்றுவாரை பிராப்ய பரர் ஆக்குவார் .
ஜ்ஞான விசேஷ யுக்தர்-நிலை அறியாதார்க்கு -சாத்யஸ்தர்கள் -காணாதது காண்பார்க்குக் கண் மாறும் இடமும் –
சீல குணமான ஆழம் காலும் -ப்ராப்யத்தில் அவஹாகிக்கும் அவர்களுக்கு ஆழம் கால் அறிவிப்பார் .
சர்வஜ்ஞன்-கரை ஏற்றும் அவனுக்கு -ராகாந்தனுக்கு மாயா தோஷம்-நாலும் ஆறும்-சதுர் விம்சதி தத்வமும்-பிரகிருதி தோஷம்
பிராப்தியை உண்டாக்கும் அவனுக்கு த்யாஜ்யத்தை அறிவிப்பார் என்றது ஆய்த்து -தர்சிப்பார் -கண் சப்தார்த்தம் –)

————————————–

சூரணை -198-

ஆனால் அஜ்ஞருக்கு உபதேசிக்குமா போலே இவர்கள் எல்லாருக்கும் பலகாலம்
உபதேசிப்பாரோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் —

சாதன சாத்யஸ்த மத்யஸ்தரை விட்டு
அவற்றில் கலங்கும் ஜீவேஸ்வரர்க்கு

வீடுமின்
நினைமின்

பிடித்தேன்
விடுவேனோ
வைத்தெழ ஊது
வாடி நிற்க
கன்மமன்று
ஆன்பின் கை கழியேல்
உழி தராய்
என் சொற் கொள் என்று
இவர் பல காலும்
ஹிதாஹிதங்கள் சொல்லுவர் ..

( சாதன சாத்யஸ்தர்களாகிய மத்யஸ்தரை விட்டு அவற்றில் கலங்கும் ஜீவ-ஈஸ்வரர்களுக்கு –
கர்ம பரவசர்களுக்கும் ப்ரேம பரவசர்களுக்கும் -இவர் பல காலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவர் ..)

சாதன சாத்யஸ்த மத்யஸ்தரை விட்டு
அதாவது
சாதன சாத்தியங்கள் கைபட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டியது அல்பம் ஆகையாலே –
சாதனஸ்தராகவும் சாத்யஸ்தராகவும் ,
நடுவு சொன்ன ஞானிகளும் -ஞான விசேஷ யுக்தருமாகிய -அவர்கள் இருவரையும் விட்டு –

அவற்றில் கலங்கும் ஜீவர்கட்க்கு
அதாவது
கர்ம பரவசராய் -சாதன சாத்தியங்கள் இன்னது என்று அறியாதே -கலங்கி நிற்கிற சம்சார சேதனருக்கு –
வீடு முன் முற்றவும்–1-2–என்று தொடங்கி –
சுனை நன் மலர் இட்டு நினைமின் நெடியானே -10-5-10-என்னும் அளவும் –
த்யாஜ்ய உபாதேயங்களை -பல படியாலும் உபதேசிக்கையாலும் –

அவற்றில் கலங்கும் ஈஸ்வரனுக்கு
அதாவது
பிரேம பரவசனாய் -சாதன சாத்தியங்கள் இன்னது என்று அறியாதே -கலங்கும் ஈஸ்வரனுக்கு –
அயோக்யதா அனுசந்தானத்தாலே இவர் நம்மை விடின் என் செய்வது -என்று
அதிசங்கை பண்ணி அலமருகிற அளவிலே –
உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே -2-6-1–என்றும் ,
உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -2-6-10–என்று –
மாஸூ ச- என்பது-(ஆழ்வார் சர்வஞ்ஞனுக்கு சொன்ன மாஸூச தானே இது )
(கோவர்த்தனம் -ஊராக ரஷித்தது -உலகு அளந்து -உலகமாக ரஷித்தது–சிக்கென பிடித்துக் கொண்டேன்
என்றதும் மலர்ந்த செங்கண் மாலே -திருமாலையிலும் உண்டே -)

வைத்து எழ ஊது
அதாவது
தோகை மா மயிலார்கள் –செவி ஓசை வைத்து எழ ஆகள் போக விட்டு குழலூது -6-2-2–என்று
சாதன சாத்தியங்களை அறிவிப்பது —

வாடி நிற்க
அதாவது
மழறு தேன் மொழியாளர்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் குழறு பூவையோடும்
கிளியோடும் குழகேல் -6–2-5- என்றும் –

கன்மம் அன்று
கன்ம மன்று எங்கள் கையில் பாவை பறிப்பது -6-2-8–என்றும் –
ஆன் பின் கை கழியேல்
அதாவது
ஆன் பின் போகல் -10-3-8–என்றும் –
என் கை கழி யேல் –10-3-8–என்றும்
அக்ருதங்களை செய்யாதே கொள் என்பது –

உழி தராய்
அதாவது
நீ உகக்கும் நல்லவரோடும் உழி தராய் -10-3-8–என்றும்
அவத்தங்கள் விளையும் என் சொற் கொள் -10-3-10–என்றும்
கிருத்யங்கள் ஆனவற்றை செய் என்பதாய் —

இப்படி பல இடங்களிலும் உபதேசிக்கையாலும் –
பிரதம சரம யுக்தரான -அஜ்ஞா சர்வஜ்ஞர்களுக்கு- பலகாலங்கள் ஹிதாஹிதங்கள் சொல்லுவார் என்ற படி —

சாதன சாத்தியங்களில் கலங்கும் ஈஸ்வரனுக்கு என்று உபக்ரமித்து ,
பிடித்தேன் விடுவேனோ வாடி நிற்க -இத்யாதிகளை எல்லாம் அருளிச் செய்வான் என் என்னில் –
1-சாதன சாத்யஸ்தரை சொன்னதுக்கு பிரதி கோடியாக அவற்றில் கலக்கம் ஜீவ ஈஸ்வரர்களுக்கு –
இருவருக்கும் ஒரோ வழிகளால் உண்டு என்று தர்சிப்பதைக்கு சொன்னது இத்தனை ஒழிய ,
மேல் சொல்லுகிற ஹிதாஹிதங்கள் எல்லாம் அவ் இரண்டு விஷயமாகவே இருக்க வேணும் என்கிற
நிர்பந்தம் இல்லாமையால் விரோதம் இல்லை —
ஜீவ விஷயமான உபதேசம் தன்னிலும் அர்த்த பஞ்சகமும் உபதேசிக்கையாலே -அவை இரண்டுமே இருக்க
வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை இறே ..

2-அங்கன் இன்றிக்கே –
ஜீவ விஷயமான உபதேசத்திலும் -வீடு முன் முற்றவும் பக்தி ரூப சாதன உபதேச பரமாகையாலும் –
கண்ணன் கழலினை -பக்திமான்கள் பரிமாற்றம் இருக்கும் படி உபதேசதித்தது ஆகையாலும் ,
நடுவு உள்ள உபதேசத்தை ஆராய்ந்தாலும் -பக்தி பிரபத்தி ரூப சாதன உபதேசமும் ,
பகவத் அனுபவ கைங்கர்ய ரூப சாத்திய உபதேசமும் -பிரசுரமாய்
பிராப்யமான பர ஸ்வரூபத்தையும் –
ப்ராப்தாவான பிரத்யக் ஆத்மா ஸ்வரூபத்தையும் –
பிராப்தி விரோதி யுமையுமே உபதேசித்தவை ..
இந்த சாதன சாத்தியங்களுக்கு ஊன்றவைக்கு உடலாகையாலே — ஏதஸ் சேஷமாய் அறுகையாலும் ,
சாதன சாத்தியங்களில் கலக்கம் தீர்க்கையே உபதேசதங்களுக்கு பிரதானம் என்று ஒருங்க விட்டு-

ஈஸ்வர விஷயமான உபதேசமும் –
சாதன சாத்திய விஷயங்களில் கலக்கம் தீர்க்கையைப் பற்ற என்றே கொள்ள வேணும் ஆகில் –
பிடித்தேன் –விடுவேனோ -என்றிரண்டும் –
தனக்கு சாத்திய பூதரான இவரோடு வந்து சம்ஸ்லேஷித்து பெறாப் பேறு பெற்றானாய் இரா நிற்கச் செய்தே –
இவர் அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகலில் செய்வது என் -என்று
அதிசங்கை பண்ணை அலமாக்கிறத்தை நிவர்திப்பிக்கைகாக சொன்னவை ஆகையாலே –
சாத்திய விஷயமான கலக்கத்தை தெளிவிக்கைக்கு சொன்னவை ஆகலாம் ..

சாத்தியத்தில் கலக்கம் ஆவது -சாத்தியம் இன்னது என்று கலங்குகை ஆனாலும் –
சாத்திய வஸ்து விஷயமான கலக்கம் என்கிற மாத்ரத்தைக் கொண்டு -இப்படி யோஜித்தால் வரும் விரோதம் இல்லை ..

வைத்து எழ ஊது -என்கிற இது –
தனக்கு அபிமத விஷயங்களை பிரிந்து -கண்ணாம் சுழலை இட்டு-
அதஸ்மிம்ஸ் தத் புத்தி பண்ணி தங்கள் குழலை கொண்டாடினாகக் கருதி
நாங்கள் அவர்கள் அல்லோம் காண் -அவர்கள் பக்கல் போ -என்கிற நினைவாலே
தோகை மா மயிலார்கள் செவி ஓசை வைத்து எழ -என்று சாத்தியத்தையும் —
ஆகள் போக விட்டு குழலூது -என்று சாதனத்தையும் அவனுக்கு அறிவிக்கையாலே –
உபயத்திலும் கலங்கின அவனுக்கு சொல்லுகிறது என்னும் இடம் சம்பிரதிபன்னம்-

வாடி நிற்க -என்கிற இது
மழறு தேன் மொழியார்கள்-என்று தொடங்கி -உனக்கு அபிமதைகள் ஆனவர்கள் –உன்னைப் பிரிந்து உறாவிக் கிடக்க –
உனக்கு உபேஷா விஷயமான – எங்கள் பூவை கிளிகளோடே கலந்து பேச்சு கொள்ளாதே கொள் -என்கிறது ஆகையாலே –
சாதயத்தில் கலக்கம் கண்டு சொன்னதாம் இது –

கன்ம மன்ற -என்ற இது –
தங்களோடு இட்டீடு கொண்டு ,தங்கள் அபிசந்தையைக் குலைத்து –
தங்களை வசீகரிக்கைக்கு சாதனமாக நினைத்து -தங்களுக்கு அநிஷ்டம் என்று அறியாமல் –
கையில் பாவையைப் பறிக்கும் அவனை குறித்து -உனக்கு இது கார்யம் அன்று இது -என்கையாலே –
சாதனத்தில் கலக்கம் கண்டு சொன்னது ஆகலாம் –

ஆன் பின் போகல் கை கழி யேல் -என்ற இது
பசு மேய்க்க போன இடத்தே -தனக்கு என்ன தீங்கு வருகிறதோ என்றும்
பிரிவாற்றாமலும்
இத் தலை படுகிற கிலேசம் அறிந்தால் பிரியாதே –இத்தலையோடு கூடி இருக்கை புருஷார்தமாய் இருக்க –
ஜாதி உசித தர்மம் என்கிற மாத்ரமே கொண்டு -பசு மேய்க்க போக ஒருப்படுகிறவனைக் குறித்து –
ஆழும் என் ஆர் உயிர் ஆன் பின் போகல் -என்றும் –
கலவியும் நலியும் என் கை கழி யேல் -என்றவை ஆகையாலே –
சாத்தியத்தில் கலங்கினவனுக்கு சொல்கின்றவை ஆகலாம் —

உழி தரு -என்கிற இது –
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக உடையும் காட்டி –என்று வசிகர சாதனத்தையும் –
உகக்கும் நல்லவரோடு உழி தரு -என்று அபிமத விஷய சம்ஸ்லேஷமாகிற சாத்தியத்தையும் –
அவை அறியாமல் நிற்கிற இவனுக்கு அறிவித்த தாகவே இருக்கிறது ….

என் சொற் கொள் –என்கிற இது —
பசு மேய்க்க போக வேண்டா என்று விலக்குகிறது .. நமக்கு ஒரு தீமை வாராமைக்காகா என்று அறியாதே –
பரிவையான தன் வார்த்தையை அநாதிக்கிறவனைக் குறித்து –
அவத்தங்கள் விளையும் என் சொற் கொள் -என்றது ஆகையாலே
இதுவும் சாத்தியத்தில் கலங்கினவனுக்கு சொன்னதாக கொள்ளலாம் —

ஆன பின்பு -இவற்றில் கலங்கும் ஈஸ்வரனுக்கு பலகாலும் ஹிதாஹிதங்கள் சொல்லுவர் –
என்றதுக்கு அனுகுணமாக இச் சந்தைகளுக்கு எல்லாம் இப்படி யோசித்தாலும் குறை இல்லை-

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading