பரம புருஷ விஸ்லேஷ ஜெனித நிரவதிக வியசனத்தாலே மோஹ தசா பன்னரான ஆழ்வார் -அம்ருத கல்பமான குததீய
திவ்ய நாமங்களினுடைய ஸ்ரவணத்தாலே லப்த சம்ஞ்ஞராய் அந்த விஸ்லேஷ வ்யாஸனம் அஸஹமாநராய் –
காண வாராய் என்று எம்பெருமானைக் கூப்பிட்டு அழைக்கிறார் –
—————————————-
சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-
ஆர்த்தருடைய ஆர்த்தியை போக்காதாய் அல்லை-ஆர்த்தியை அறியாதாய் அல்லை
ஆர்த்தியைப் போக்க மாட்டாதாய் அல்லை –
என்று என்று காலம் தோறும் நான் இருந்து உன்னைத் தொழுது இரந்தால் கோல மேனி காண வருகிறிலை-
உன் பாடே என்னைக் கூவியும் கொள்ளுகிறிலை
இப்படி உன் கிருபைக்கு விஷயம் இல்லாதபடி என்னை அகற்றின இந்த மஹா பாவத்துக்கு எல்லாம் கீடாதிகளிலும்
அதி ஷூத் ரனான நான் ஆஸ்ரயமான படி எங்கனேயோ -என்கிறார்
————————————————-
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இ ராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என்கண் காணவந்து ஈயாயே.–4-7-2-
இதர விஷய வைராக்ய பூர்வகமாக சகல இதர வைத்ருஷ்ண்யாவஹமான த்வத் குண அனுபவ ஜெனித நிரவதிக ஆனந்த
மஹவ்கத்தை எனக்குத் தந்து அருளின என்னுடைய பரம உதாரனே -உன்னுடைய தாத்ருத்வ லக்ஷண ஸ்வரூபத்தை
அந்யதாகரித்துக் கொண்டும் ஆஸ்ரிதருடைய அபேக்ஷிதத்தைச் செய்து அருளா நிற்கும் ஆஸ்ரித வத்சலனேயோ
என்று என்று த்வத் ஸம்ஸ்லேஷத்தாலே போக்கக் கடவ அழகிய காலம் எல்லாம் நான் இருந்து ஓலம் இட்டால் என் கண்களுக்கு
உன்னைக் காட்டாது ஒழிகிறவனே-ஈண்டென வந்து என் கண்களுக்கு உன்னைக் காட்டித் தந்து அருளாய் -என்கிறார் –
———————————————
ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண்பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3-
மனுஷ்யாதி ரூபேண அபர்யந்த திவ்ய அவதாரங்களைப் பண்ணி ஆஸ்ரித பரித்ராணம் பண்ணுமவனே -என்று என்று கூவிக் கூவி
நெஞ்சுருகிக் கண் பானி சோரா நின்றால் உன்னைக் காண்கைக்கு பாக்யம் பன்னிற்றிலேன் ஆகில் -நான் நிராசனாய் இருக்கும் படியாக
என் கண் எதிரே வந்து நீ என்னைக் காண்கைக்கு பாக்யம் பண்ணிற்று இலை காண் என்று சொல்லாய் பிரானே என்று சொல்லி
பின்னையும் எம்பெருமான் ஒன்றும் சொல்லாமையாலே -இப்படி எம்பெருமான் என்னை உபேக்ஷிக்கைக்கு ஓர் ஒன்றே
கால தத்வம் எல்லாம் அனுபவித்தாலும் மாளாத பாபங்கள் எத்தனை யாயிரம் செய்தேனோ -என்கிறார் –
—————————————-
காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4-
ப்ரஹ்மாதிகளும் கூட ஆசைப்பட்டுக் காண மாட்டாது இருக்கிற பீடுடை அப்பனை-ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! –
காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
நின்று அருளாய் என்று என்று,
அதி ஷூத்ரனான நான் இங்கே கிடந்தது அழற்றுகிறது என் -என்ன நிரலஜ்ஜனோ -என்கிறார்
——————————-
அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–4-7-5-
இப்படி ப்ரஹ்மாதிகளுக்கும் கூட துர்த்தரசனாய் இருக்கச் செய்தே உன்னையே அப்பனே -ஆஸ்ரித விரோதி நிரசன அர்த்தமாக
திருவாழியை யுடையவனே -ஆஸ்ரித சமீஹித நிவர்த்தன சீலனே உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று அபேக்ஷித்து உன்வரவு பார்த்து இருப்பன்-என்ன சபலனோ என்கிறார்
————————————————-
நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6-
என்னுடைய ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கமின்றி எங்கும் ஸந்நிஹிதனாய் நின்று வைத்து
உன்னை எனக்குக் காட்டாது ஒழிகிறது உன்னைக் காட்ட நிலையாமை என்னும் இடம் அறிந்து வைத்து பின்னையும்
நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் நான் என்னுள்ளே ஆசைப்படா நிற்பான் -என்ன அஞ்ஞனோ என்கிறார் –
——————————————-
அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-
ஜென்ம ஜரா மரணாதி சம்சார துக்கம் அபீபவிக்கிறது என்னும் பயத்தால் கூப்பிடுகிறீரோ –
ஏன் தான் இப்படி ஆர்த்தராய்க் கிடந்தது நீர் கூப்பிடுகிறது என்னில் –
ஞான சக்தி பல ஐஸ்வர்யாதி குணங்களாலும் ஸுந்தர்ய ஸுகந்த்ய ஸுகுமார்யாதி கல்யாண குணங்களாலும் பரிபூர்ணனான
உன் திறத்தில் உள்ள விசத விசததர விசததம ப்ரத்யக்ஷ தாபன்ன நிரதிசய சக்தி ரூப ஞானத்தால்
என்னுடைய அந்த சாம்சாரி துக்கம் எல்லாம் நிரஸ்தம் ஆயிற்று இறே -அதுக்கன்று நான் இப்போது படுகிறது என்கிறார் –
—————————————–
கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக்கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8-
உம்முடைய சாம்சாரிக துக்கம் எல்லாம் போயிற்றாகில் மற்று எதுக்காகக் கூப்பிடுகிறது -என்னில்
உன்னை என் கண்களால் கண்டு கொண்டு என் கைகளார நின் திருப் பாதங்கள் மேல் எண் திசையுமுள்ள பூக்கொண்டு ஏத்தி
உகந்து உகந்து ஸ்ரீ வைஷ்ணவர்களோடே கூட நின்று பாடியாத வேணும் என்று ஆசைப்பட்டு இ றே கூப்பிடுகிறது
வண் துழாயின் கண்ணி வேந்தே! -நான் இப்படி பாடா நிற்கச் செய்தே வந்து அருளுகிறிலை என்று எம்பெருமானை இன்னாதாகிறார்
—————————————————-
இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9-
எம்பெருமானைக் காண்கைக்கு உபாயத்வேன பரிக்லுப்தமான கர்ம யோக ஞான யோக பக்தி யோகங்கள் ஒன்றும்
எனக்கு இன்றியிலே இருக்கச் செய்தே பகவத் குணங்களில் விழும் ஸ்வ பாவமாய் விழுந்தால் எம்பெருமான் தன்னாலும்
எடுக்க ஒண்ணாத வன்மையை யுடைத்தாய் இருந்த என் நெஞ்சம் காதல் கூர அதினாலே அறிவு அழிந்து தடவா நின்றேன் –
எங்கனே காணும்படி -என்கிறார்
——————————
சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-
சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்பப் பக்கம் நோக்கி நின்று சாலத் தளர்ந்தேன் –
பாவியேன் காணப் பெறுகிறிலேன் –
சர்வஞ்ஞனாய் சகல வேத வேத்யனாய் இருந்த எம்பெருமானை எனக்குத் தக்க சில ஞானக் கண்களாலே கண்டு தழுவுவன் –
நான் எங்கனே தரிக்கும் படி -என்கிறார்-
———————————–
தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11-
முடிவேன் என்றாலும் முடிய ஒட்டாது இருந்த காதலால் சொன்ன இத்திருவாய்மொழியை இந்த பாவ யுக்தமாக
பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவர் என்கிறார் –
———————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply