ஆசார்ய ஹ்ருதயஸ் யார்த்தாஸ் சகலா யேந தர்ஷிதா
ஸ்ரீ சாநு தாச மமலம் தேவ ராஜம் தமாஸ்ரயே-
————–
முதல் பாட்டில்
பகவத் பரத்வத்தால் சொல்லிற்று ஆகிறது
வேதார்த்தம் –
அதாவது
சர்வ ஸமாச்ரயணீய ஸ்தலம் -என்றும்
அவ தீர்ணனாவான் அழகே ருசி ஜனகன் -என்றும்
ருசி யுடையார் ப்ராப்ய த்வரையாலே அவன் தன்னையே மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ் விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் உத்தேச்யம் என்றும்
ப்ராப்யமாகிறது
அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமுமாய் -யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்
தத் சாதனமும் அவன் திருவடிகளே என்னலாயிற்று-
ப்ராப்ய ப்ராபக சங்க்ரஹம்-
——————-
இரண்டாம் பாட்டில் –
இவ்விஷயத்தில் இழிவார்களுடைய
விரக்தியையும்
சம்பாவித ஸ்வபாவத்தையும் சொல்லுகிறது
————————–
மூன்றாம் பாட்டில் –
பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழியவே-
ஆயுர் ஆசாஸ்தே -என்கிறபடியே
ஐஹிக பலன்களும் ஆநுஷங்கிக ஸித்தமாய்க் கொண்டு ஸித்திக்கும்-என்கிறது –
————————-
நாலாம் பாட்டில் –
அநந்ய பிரயோஜனனாய் பகவத் ஸமாச்ரயணம் பண்ணுமவனுக்கு
இந்த்ராதி தேவதைகள் நியாம்யராவார்கள் -என்று
இவ் வதிகாரிகளுடைய உத்கர்ஷம் சொல்லுகிறது –
————————-
அஞ்சாம் பாட்டில் –
இப்படி பகவத் பஜன அனுபவம் பண்ணுமவனுக்கு
உத்தர பூர்வாகயோ ரஸ்லேஷ விநாசவ்-என்கிறபடியே
பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்று சொல்லுகிறது –
————————–
மார்கழி -1-முதல் -மாயனை -5-என்னும் அளவும்
நாராயணனே -1-என்று தொடங்கி-
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -2-என்றும்
ஓங்கி உலகளந்த உத்தமன் -3-என்றும்
சார்ங்கம் உதைத்த சர மழை 4-என்றும்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -5-என்றும்
அடி பாட்டு சொல்கிறது
—————-
இனி மேல் பத்துப் பாட்டிலும்
பகவத் விஷயம் அபரிச்சின்னமாய் தனியாக அனுபவிக்க மாட்டாத சாபல்யத்தாலும்
பகவத் அனுபவம் பண்ணுவார்க்கு -தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்கிறபடியே
துணைத் தேட்டமாய் இருக்கும் என்னுமத்தைச் சொல்லுகிறது –
——
அதில் முதல் பாட்டில் -புள் -6-
பகவத் ஏக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய ப்ரயோஜனராய்
இவ்விஷயத்தில் தேசிகர் இன்றிக்கே இருப்பாரை
அவர்கள் பக்கல் பரிவாலே தேசிகராக்குகை ஸ்வபாவம் என்னுமத்தைச் சொல்லுகிறது –
————————
இரண்டாம் பாட்டில் –கீசு -7-
பகவத் விஷயமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவால் –
போதயந்த பரஸ்பரம் -என்கிறபடியே
அறிவிக்கையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –
————————
மூன்றாம் பாட்டில் –கீழ் வானம் -8-
பகவத் அனுபவத்தில் ப்ரத்யா சன்னராய் இருப்பார் திறத்தில்
சாபேஷாராய் இருக்கையும்
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனைக் கிட்டுகையும்-
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –
————————–
நாலாம் பாட்டில் –தூ மணி -9-
தத் தஸ்ய சத்ருசம் பவத் -என்று
பூர்வார்த்த நிஷ்டராய் இருப்பாரை பகவத் ப்ரேம அதிசயத்தாலே
தத் ஏக போகராய் இருக்குமவர்கள் போகார்த்தமாக ப்ரேரிக்கை-
அவர்களுக்கு ஸ்வரூபம் -என்கிறது –
————————-
அஞ்சாம் பாட்டில் –நோற்று -10-
ஞானீ த்வாத்மைவ மே மதம்
அஹம் ச ச மம ப்ரிய -என்று அவன் பக்ஷபாதத்தில் இருப்பார் திறத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நித்ய சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –
——————————————-
ஆறாம் பாட்டில் -கற்று -11-
பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த சந்தான ப்ரஸூதர் நமக்கு பூஜ்யர் என்றும்
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகை ஸ்வரூபம் என்கிறது –
—————————–
ஏழாம் பாட்டில் –கனைத்து -12-
பகவத் விஷயம் ஸஹ்யமாம் படி அவகாஹித்தவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
உத்தேச்யராம் அளவன்றிக்கே
தத் சம்பந்த சம்பந்திகள் உத்தேச்யர் என்று இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –
———————————-
எட்டாம் பாட்டில் –புள்ளு–13-
பகவத் அனுபவ ரூபமான ஞான பக்திகளால் பூர்ணராய் இருப்பார் இடத்திலும்
தாதர்த்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –
—————————-
ஒன்பதாம் பாட்டில் –உங்கள் -14-
பகவத் விஷயத்தில் மூட்டுகையிலே அதிகரித்த நிர்வாஹகர் முன்பாக
பகவத் அனுபவம் பண்ணுகை ஸ்வரூபம் -என்கிறது –
——————————–
பத்தாம் பாட்டில் –எல்லே -15-
ஸ்ரீ வைஷ்ணவ சமாஜ தர்சனம் அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால்
அந்த ஸமூஹமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம் -என்கிறது –
—————————————
நாயகனில் -16-
அம்பரமே –17 –
இவை இரண்டாலும் பகவத் விஷயத்தை கிட்டுவார்
தத் ப்ரத்யா சன்னரைப் புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம் -என்கிறது –
———-
உந்து மத களிற்றன் —18-
பகவத் விஷயீகாரம் பிராட்டி சாபேஷமாய் இருக்கிறது
————————–
குத்து விளக்கு -19-
பிராட்டியை புருஷகாரமாக வரித்தால்-
அவனும் அவளும் இசலி இசலிப் பரியும் பரிவையும் சொல்லுகிறது –
———
முப்பத்து -19-
அடிமை செய்யும் இடத்திலும்
இருவர்க்கும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்வதே முறையாகிறது –
———
ஏற்ற கலம் -20-
ப்ரபுத்தனாய் தங்கள் கார்யம் செய்கைக்கு –
ஏத்த வேழுலகும் கொண்ட -என்கிறபடியே
ஆஸ்ரிதரானவர்கள் நிர்மமராய்க் கொண்டு
அவன் குண கீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்யம் -என்கிறது –
——————————-
அங்கண் -21-
கீழில் பாட்டில்
தங்கள் அபிமான ஸூந்யதையைச் சொல்லிற்றாய் –
இப்பாட்டில் –
அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லுகிறது
அவனுடைய விசேஷ கடாக்ஷத்துக்குத் தங்களுடைய அநந்யார்ஹ சேஷத்வம் அநுசந்தேயம் -என்கிறது –
———————-
-22-
கர்ம பரதந்த்ரராய் இருந்துள்ள பிரயோஜனந்த்ர பரரில் காட்டிலும்
அநந்ய ப்ரயோஜனராய்
சாதனாந்தர நிஷ்டராய் இருக்குமவர்களில் காட்டிலும்
சித்த சாதனம் பண்ணினார்
குற்றம் போகத் தன் கைம்முதல் இல்லாமையால் ஈஸ்வரனே ப்ரபுத்தனாய்க் கொண்டு
சம்விதானம் பண்ண வேணும் என்று அபேக்ஷிக்க அவ் வதிகாரத்தைச் சொல்லுகிறது –
—————————-
மாரி -23-
அர்த்திகள் ஆஸ்தானத்தில் இருக்கிற ஸ்ரீயபதிக்கு
ஸ்வரூப அனுரூப குண விருத்தியை விண்ணப்பம் செய்ய வேணும் என்கிறது –
————————
அன்று இவ்வுலகம் -24-
அர்த்திகளாய்ச் சென்றாலும் தந்தாமுடைய புருஷார்த்தத்தை விஸ்மரித்து
மங்களாசாசனம் பண்ண வேண்டும்படியான விஷய வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது –
————————–
ஒருத்தி -25-
ஸ்வரூப லாபத்தோ பாதி
துக்க நிவ்ருத்தியும் தத் ஆஸ்ரயணத்தாலே -என்கிறது –
————————
மாலே -26-
போக உபகரண சித்தியும் அவனாலே என்கிறது
——————-
கூடாரை -27-
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -என்கிறபடியே
கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறுதியிட்டு
பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் உத்தேசியமான புருஷார்த்த ஸித்திக்கும்
அனுகுண அலங்காரம் அவனே பண்ண வேணும் என்கிறது –
———————-
கறவைகள் -28-
கீழ் அடங்க ஒரு அதிகாரிக்கு சம்பவிக்கும் ஸ்வ பாவங்களைச் சொல்லி
ஆகிஞ்சன்யத்தையும்
ப்ராப்தியையும் முன்னிட்டு
அவனே உபாயமாக வேணும் என்று அபேக்ஷித்து
ஷாமணம் பண்ணிக் கொண்டு தலைக் கட்டுகிறது –
————————————-
சிற்றம் சிறு காலே -29-
ஏவம் ஸ்வீ க்ருத சித்த உபாயனுக்கு
தத் க்ருத ஸ்வரூப அனுரூப பலமும் தத் விரோதி நிவ்ருத்தியும்
யா காஸ்சந க்ருதய-இத்யாதிப் படியே சொல்லித் தலைக் கட்டுகிறது –
———————————-
வங்கக் கடல் -30-
உக்தமான அனுஷ்டானம் இல்லாதவர்களுக்கு
அவர்கள் பாசுரமே பேற்றைக் கொடுக்கும் என்று சொல்லி நிகமிக்கிறது –
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply