ஸ்ரீ திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப-ஸ்ரீ திரு நாராயண புரத்து ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் -என்னும் ஸ்ரீ ஜனன்யாச்சார்யார் ஸ்வாமிகள் -வியாக்யானங்கள்-

ஈராயிரப்படி -அவதாரிகை –
கண்டாரை எல்லாம் எழுப்பிவிட்ட வ்யஸனம் தீர அவன் தன்னையே எழுப்புகிறார்கள் –
நப்பின்னை பிராட்டி -நான் உங்களில் ஒருத்தி அன்றோ –
நாம் எல்லாரும் கிருஷ்ணனை அர்த்திக்கக் கடவோம்-என்ன எழுப்புகிறார்கள் –
(சரணம் பற்ற நம்முடன் -கைங்கர்யம் கொள்ள அவனுடன் பிராட்டிக்கு –இரண்டு ஆகாரங்கள் உண்டே)

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி  யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-

பதவுரை

ஏற்ற கலங்கள்-(கரந்த பாலை) ஏற்றுக் கொண்ட கலங்களானவை
எதிர் பொங்கி-எதிரே பொங்கி
மீது அளிப்ப-மேலே வழியும்படியாக
மாற்றாத-இடை விடாமல்
பால் சொரியும்–பாலைச் சுரக்கின்ற
வள்ளல்-(பெண்களும் பேதைகளும் அணைத்துக் கொள்ளும்படி) நற்சீலத்தை யுடைய
பெரு பசுக்கள்-பெரிய பசுக்களை
ஆற்ற படைத்தான்–விசேஷமாகப் படைத்துள்ள நந்த கோபர்க்குப் பிள்ளை யானவனே!
அறிவுறாய்-திருப் பள்ளி யுணர வேணும்’
ஊற்றம் உடையாய்-(அடியாரைக் காப்பதில் ஸ்ரத்தை யுடையவனே!-வேதத்தால் ஸ்திரமாகப் ப்ரதிபாதிக்கப் படுபவன்
பெரியாய்–பெருமை பொருந்தியவனே!-வேதம் யதோ வாஸோ நிவர்த்தந்தே என்று சொல்லும்படி
உலகினில்-(இவ்) வுலகத்திலே
தோற்றம் ஆய் நின்ற-ஆவிர்பவித்த
சுடரே-தேஜோ ரூபியானவனே!-கண்ணுக்குப் புலப்படும் படி எளிமையைக் காட்டி அதனால் வந்த தேஜஸ்ஸூ
துயில் எழாய்-’
மாற்றார்–சத்ருக்கள்
உனக்கு வலி தொலைந்து–உன் விஷயத்தில் (தங்களுடைய) வலி மாண்டு (உபயோகமற்ற வலிவை யுடையராய்.)-வலி -கர்வம் மிடுக்கு
உன் வாசல் கண்-உன் மாளிகை வாசலில்
ஆற்றாது வந்து-கதி யற்று வந்து
உன் அடி பணியும் ஆ போலே–உன் திருவடிகளில் சரணாகதி பண்ணிக் கிடப்பது போல்
யாம்–நாங்கள்
புகழ்ந்து–(உன்னைத்) துதித்து
போற்றி-(உனக்கு) மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
வந்தோம்-(உன் திரு மாளிகை வாசலில்) வந்து சேர்ந்தோம்’
ஏல் ஓர் எம் பாவாய்-.

மாற்றாதே -இடைவிடாதே
பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்-கண்ணன் ஸ்பர்சம் -அவனைப் போல் வண்மை
ஆற்றப் படைத்தான் -நந்த கோபன் பெயர் சொல்லாமல் விளக்கம் -கல்யாணம் நெருங்குகிறதே —
மகனே அறிவுறாய்-பவ்யனாய் இருப்பானே -தாசரதி என்று உகக்குமா போல் இங்கும் –
நிகரில் புகழாய் -உலகம் மூன்றும் உடையாய் -என்னை ஆள்வானே –திரு வேங்கடத்தானே -நம்மாழ்வார் இந்த நான்குக்கும்
வாத்சல்யம் ஸ்வாமித்வம் ஸுலப்யம் ஸுசீல்யம் -ஆஸ்ரித ஸுவ்கர்ய குணங்கள் – நான்கையும் மேலே –
1-ஊற்றமுடையாய் -திட-த்ருட – பிராமண சித்தன் -வேதைக ப்ரதிபாத்யன் -திண்மை
2-பெரியாய் -யதோ வாசோ நிவர்த்தக்கே -வேதத்தால் எட்ட முடியாத பெரியவன்
3-உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே -சகல மனுஷ நயன விஷயதாங்கன்
4- சுடரே -அதீத உஜ்ஜ்வல்யம் -தேஜஸ்ஸே வடிவானவன் -பரஞ்சோதி -கண்களுக்குத் தோற்றினாலும் அழுக்கு ஒட்டாதவன் –
மாற்றார் உனக்கு வலி தொலைந்து -அஹங்காரம் மமகாரம் தொலைந்து
ஆற்றாது வந்து -கதி அற்று -உன்னால் அல்லால் வேறே புகல் இல்லாமல்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் –களை கண் மற்று இலேன்
உன் அடி பணியுமா போலே-ஸ்த்ரீத்வ அபிமானம் தொலைந்து வந்தோம்
மடல் எடுப்பது -வெட்கம் விட்டு -கடல் அன்ன காமத்வம் இருந்தாலும் கூடாதே – –
புருஷோத்தமன் அன்றோ – ஆகவே -வட நெறியே கொள்வோம்
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்–மங்களா சாசனம் ஸ்தோத்ரம் இரண்டையும் செய்யவே வந்தோம்

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப-
கலங்கள் இடுவார் தாழ்வே –
இட்ட கலங்கள் எல்லாம் நிரம்பி எதிர் பொங்கி வழிந்து வெள்ளமிடும் –

மாற்றாதே பால் சொரியும் –
கலம் இடுவார் இல்லை என்றால் அத்தால் தவிராது –
முலையில் கடுப்பு போகாது –

வள்ளல் –
அபேக்ஷையால் கொடுக்கும் அவனைப் போலே அவையும் அபேக்ஷித்ததற்காக செய்தது -என்கை
(கீதா சாஸ்திரம் சுரந்தது போல் )

பெரும் பசுக்கள்-
ஸ்ரீ சத்ருஞ்ஜயனைப் போலே இருக்கை –
கிருஷ்ண ஸ்பர்சத்தாலே வளர்ந்து அவன் ஏழு வயசிலே பதினாறு வயஸ்ஸூ குமாரன்
என்னும்படி இருக்குமா போலே இருக்கும் –
(பட்டத்து யானை போல் இவை பட்டத்து பெரும் பசுக்கள்
வள்ளல்-குணத்தால் வண்மை -உருவத்தால் பெருமை -வள்ளல் பெருமை –
மஹா பாரத் -அளவாலும் ஆளத்தாலும் -மஹத்வம் பாரம் இரண்டும் போல் இங்கும் )

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
மிகவும் படைக்கை –
கழியாரும் கனசங்கம்-என்று திரு நறையூரில் முத்தை எண்ணினாலும் எண்ணப் போகாது

கழியாரும் கனசங்கம்
(கழியாரும் கனசங்கம் வந்து எங்கும் நிறைந்து ஏறி வழி யார முத்தீன்று
வளம் கொடுக்கும் திரு நறையூர் -பெரிய திரு மொழி -6-9-2-)
கர்ப்ப கேதம் -பெரிய திருநாளுக்கு வருமா போலே
வழியார
தார்மிகர் இம்முத்தை வழித் துறை படக் குவிக்க -வழியை மலையாக்குவிக்கும்

ஆற்றப் படைத்தான் மகனே –
அவர் ஆர்ஜித்துப் படைக்க –
இவன் பிறந்து படைத்த சம்பத்து –
(கரூர் அருகில் தான் தோன்றி மலையில் தான் தோன்றி பெருமாள் பிரதிஷ்டை உண்டாம் )

மகனே –
பரமபதம் போல் தான் தோன்றி அன்று –
(பதிம் விஸ்வஸ்ய-தனது பெருமையில் தோன்றும் படி ப்ரதிஷ்டிதம் –
அங்கு அவாக்ய அநாதர-
வஸூ பிரத -சொத்தை தந்தைக்கு கொடுத்து
வஸூ பிரத-தனக்கு சொத்து -மகனாகப் பிறந்து )

அறிவுறாய் –
சர்வஞ்ஞனுக்கும் உணர்த்த வேண்டும்படி உள்ளுச் செல்லுகிற படி –
அக்குணங்கள் எல்லாம் இழக்கப் புகா நின்றாய் என்றபடி

1-ஊற்றமுடையாய் பெரியாய்
த்ருட பிராமண சித்தன்

2-பெரியாய்
அவை தனக்கும் அப்ராப்ய மனஸா ஸஹ-
யஸ்ய அமதம் தஸ்ய மதம் -என்று சொல்லுகிறபடி இருக்கை

(வேதைஸ் சர்வை அஹம் ஏவ வேத்ய
வேதத்தாலே நானே சொல்லப்படுகிறேன் -வேதம் என்னையே -வேதமே என்னைச் சொல்லும் –
சொல்லி அல்லி நில்லாது -ஏவம் மூன்று இடங்களிலும் கொண்டு கூட்டுப் பொருள்
பரன் இவன் திறம் தவிர மற்று இல்லையே
பன்னலார் பயிலும் பரனே பவித்ரனே -சொல்லி முடிக்க முடியாதே –
அஸங்க்யேய நிஸ் ஸீம கல்யாண குணங்கள்
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –
ஆனந்த குணம் ஒன்றையுமே சொல்லி முடிக்காமல் திரும்பிற்றே
தெரியாது என்று இருப்பவனே அறிந்தவன் ஆகிறான்
அறிந்தேன் என்பவன் அறியாதவன் ஆகிறான்
தெரிந்து முடிக்க முடியாது -அறிவுக்கு அப்பால் பட்டவன் என்றே தெரிந்து கொள்ள வேண்டும்- )

3-உலகினில்-தோற்றமாய் நின்ற
இப்படி பெரியனாய் இருந்து வைத்து இதர சஜாதீயனாய் அவதரித்த படி

4-சுடரே
மனுஷ்யத்வே பரத்வம்
(பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் –
அவஜாநந்தி மாம் மூடா –அவதார ரஹஸ்யம் அறிந்தவன் அதே பிறவியில் அவனை அடையலாம் )

இனி இரண்டாம் நிர்வாகம் இந்த நான்குக்கும் –

1-ஊற்றம்
மஹா ராஜர் பிராட்டி முதலானவர்கள் விட எண்ணிலும் விடாத ஊற்றம்
(தன் அடியார்–இத்யாதி பிராட்டி தான் சிதை குரைக்குமேல்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நல்லதே செய்தார்
இவன் அடியார் ஆனதே அவள் புருஷகாரமான பின்பே தானே )

2-பெரியாய்
தன் பேறு

3-உலகினில் தோற்றமாய் நின்ற
துர்யோதனாதிகள் உள்ளிட்டார்க்குப் பாண்டவ பக்ஷபாதி என்னும்படி இருக்கை

4-சுடரே
(அனைவரும் அறியும் படி ஆஸ்ரித பக்ஷ பாதன் -பாண்டவ தூதன் -பார்த்த சாரதி
திருவல்லிக்கேணி கண்டேனே மங்களா சாசனம் பண்ணும் படி
அங்கு பகல் விளக்கு பட்டு இருக்குமே )

துயில் எழாய்
இப்போது உணராமை யாலே

மாற்றார் உனக்கு
நாங்கள்-மாற்றார்களோ- வருமவர்களோ

வலி தொலைந்து உன் வாசல் கண்
ந நமேயம் து கஸ்யசித் ( உன்னை வணங்கேன் ராவணன் )-என்கை தவிர்ந்து
அம்புக்குத் தோற்றாரோ பாதி குணத்துக்குத் தோற்றோம்
அவர்களுக்கு முடிந்து பிழைக்கலாம்
சத்யேந லோகாந் ஜயதி தீனான் தாநேந— ராகவ

ஆற்றாது வந்து –
ஆள் பார்த்துழி தருவாய் (நான்முகன் )-என்று நீ வரக் கடவையாய் இருக்கிற
நாங்கள் வந்து

உன் அடி பணியுமா போலே
வணக்கம் ஸ்வரூபத்துக்கு என்று இருக்கை
(அடி பணிந்தது ஸ்வரூபத்தால் மட்டும் இல்லை -தரிக்கவே இவர்கள் )

போற்றி யாம் வந்தோம்
தோற்றார் அவனைப் புகழும் அத்தனை –
அபலைகளை வெல்லுகையும் ஒரு பணியோ –

புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-
படுத்தின பாடும் வென்று கொண்ட படியும் சொல்லிக்
கிட்டினார்க்குப் பல்லாண்டு பாடுகை ஸ்வரூபமாயிற்று –

——————————

(கண்ணனை நேராக எழுப்பி -அவன் கடாக்ஷம் பிரார்த்து -அவன் நடை அழகை பிரார்த்தித்து –
அவனுக்குப் பல்லாண்டு பாடி -மேல் அவனையே கேட்டு வந்தோம் -என்று ஐந்து பாசுரங்கள்
மேல் நோன்புக்கு உபகரணம் கருவிகள் பிரார்த்தனை -நோன்புக்கு -சம்மானம் பிரார்த்தனை –
சரணாகதி – -கைங்கர்ய பிரார்த்தனை மேல் நான்கு பாசுரங்கள்
நிகமத்தில் தானான தன்மையால் பலன் சொல்லி தலைக்கட்டுகிறாள்

இதில் போற்றி -பல்லாண்டு மங்களா ஸாஸனம் பண்ணவும் –
புகழ்ந்து ஸ்தோத்ரம் பண்ணவும் வந்தோம் என்கிறார்கள்
ஆற்றப் படைத்தான் மகனே புகழ்ந்து அழைக்கிறார்கள்-எம்பெருமானாரையும் -சம்பத் குமாரையும் -சொன்னவாறு

பசுக்கள் -கூரத்தாழ்வான் முதலியாண்டான் எம்பார் போல்வார்
சங்கு சக்கரம் கொடுத்து ஆச்சார்யர் -ஞானம் அருளி -திருவேங்கடமுடையான்
தாதா-திருமலை நம்பி -நடாதூர் அம்மாள்-ஆயி அம்மாள் என்று அபிமானித்து கூப்பிட்டான் அன்றோ )

———-

நாலாயிரப்படி-அவதாரிகை –

கீழே கண்டாரை எல்லாம் எழுப்பிவிட்ட வ்யஸனம் தீர அவன் தன்னையே எழுப்புகிறார்கள்
நப்பின்னை பிராட்டி -நான் உங்களில் ஒருத்தி அன்றோ –
நாம் எல்லாரும் கிருஷ்ணனை அர்த்திக்க வாருங்கோள்-என்ன அவனை எழுப்புகிறார்கள்

(சரணம் பற்ற நம்முடன் -கைங்கர்யம் கொள்ள அவனுடன் பிராட்டிக்கு –இரண்டு ஆகாரங்கள் உண்டே)

உகாவாதார் வீரத்துக்குத் தோற்று வருமா போலே
உகந்த நாங்கள் உன் நீர்மைக்குத் தோற்று வந்தோம் -என்கிறார்கள் –

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப-
கலங்கள் இடுவார் தாழ்வே –
இட்ட கலங்கள் எல்லாம் நிரம்பி எதிர் பொங்கி வழிந்து வெள்ளமிடும்
அவையும் கிருஷ்ணன் படியாய் இருக்கும் -(அர்ஜுனனுடைய ஒரு கேள்விக்கு 700 ஸ்லோகங்கள் பொழிந்தானே )
உதாரா -(ஜ்ஞாநீ த்வாத்தைவ மே மதம்)
ச சர்வான் -(அர்த்திவான் த்ருஷ்டா அயோத்யா காண்டம் )
ஏலாத கலங்கள் நிரம்பாது ஒழிகிறது பாலின் குறை அன்றே -அர்த்தியார் குறை இறே –
ஸ்வீ காரம் வேண்டுவது

(பிரார்த்திக்காத -இல்லை-ஏலாத என்றது -அவன் கொடுக்க இசையால் -; அபி முக்யம் இல்லாமல் இழக்கிறோம்
பலம் அனுபவ யோக்யதைக்கு தானே சரணாகதி-ஸ்வீ காரம் உபாயம் இல்லையே )

உதா₄ராஸ் ஸர்வ ஏவைதே–ஞாநீ த்வாத்மைவ மே மதம் |–
ஆஸ்தி₂தஸ் ஸஹி யுக்தாத்மா–மாமேவாநுத்தமாம் க₃திம் ||—18-

கலங்கள்
சிறியது பெரியது என்கிற நியமம் இல்லை –
கடலை மடுக்கிலும் நிறப்பும்-
அவன் குணத்தோ பாதி பரப்புண்டானாலும் நிறப்பும்

மாற்றாதே பால் சொரியும்
கலம் இடுவார் இல்லை என்றால் அத்தால் தவிராது –
முலையில் கடுப்பு போகாது –
போந்தனையும் நின்று பால் சொரியும்

வள்ளல் –
அபேக்ஷையால் கொடுக்கும் அவனைப் போலே இவையும் அபேக்ஷித்ததற்காக செய்தது -என்கை

அர்த்திக்கை உபாயம் ஆகாதோ என்னில்
ரக்ஷணம் அவனுக்கு ஸ்வரூபமானவோ பாதி ஸ்வரூபத்தில் புகலாம் இறே
(ப்ரபத்யே வர்த்தமானமாக இருப்பது )அர்த்தித்தவம் நித்தியமாக வேணுமோ என்னில்-முக்தனானாலும் வேணும்
இல்லையாகில் அது ப்ராப்யமாக மாட்டாது என்கை –
சம்சார போகம் சாவதியாகையாலே (அளவு பட்டது ஆகையால் )அர்த்தித்தவம் ஓர் அளவிலே பர்வசிக்கும் –
அங்கு நித்யமாகையாலே உள்ளதனையும் வேணும்
அகலகில்லேன் இறையும் –
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு –
கிருஷ்ணனைப் போலே பெண்ணுக்கும் பேதைக்கும் கட்டவும் விடவுமாம் படி பவ்யமாய் இருக்கும்

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலகமூன் றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஒன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.-6-10-10-பெரிய பிராட்டியாருடைய அர்த்தித்தவம் 

மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கரும் தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே !–9-3-4-நித்ய ஸூரிகளுடைய அர்த்தித்வம்

பெரும் பசுக்கள்
ஸ்ரீ சத்ருஞ்ஜயனைப் போலே இருக்கை –
கிருஷ்ண ஸ்பர்சத்தாலே வளர்ந்து அவன் ஏழு வயசிலே பதினாறு வயசுஸூ குமாரன்
என்னும்படி இருக்குமா போலே இருக்கும் –

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
மிகவும் படைக்கை –
கழியாரும் கனசங்கம்-என்று திரு நறையூரில் முத்தை எண்ணினாலும் எண்ணப் போகாது

கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி
வழியார முத்தீன்று  வளம் கொடுக்கும் திரு நறையூர்
பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற
அழலாரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே–6-9-2-

கழியாரும் கன சங்கம்-கர்ப்பிணிகளைப் போலே
கலந்து எங்கும் நிறைந்து ஏறி-பெரிய திருநாளுக்கு வருமா போலே
வழியார்-தார்மிகர் இம் முத்தை வழித் துறை படக் குவிக்க -வழியை மலை யாக்குவிக்கும்

ஆற்றப் படைத்தான் மகனே
அவர் ஆர்ஜித்துப் படைக்க –
இவன் பிறந்து படைத்த சம்பத்து -(நாம் ராமானுஜர் தாதை முறையாலே அங்கு சொத்து எதிர்பார்த்து உள்ளோம் )
பதிம் விஸ்வஸ்ய -இத்யாதிகளில் காட்டில் ஸ்ரீ நந்தகோபருடைய சம்பத்துக்கு இட்டுப் பிறந்த ஏற்றம்
பரம பதம் போலேயும் நாராயணத்வம் போலேயும் தான் தோன்றி அன்று

நந்த கோபன் குமரன் -முதலில் -இங்கு ஆற்றப்படைத்தான் மகன் -மேல் ஒருத்தி மகனாய் பிறந்து -ஒருத்தி மகனாய் வளர்ந்து

அறிவுறாய்
சர்வஞ்ஞனுக்கும் உணர்த்த வேண்டும்படி உள்ளுச் செல்லுகிற படி –
அக் குணங்கள் எல்லாம் இழக்கப் புகா நின்றாய் என்றபடி

ஊற்றமுடையாய் பெரியாய் –
த்ருட பிராமண சித்தன் -(சுடர் மிகு ஸ்ருதி )
நம்முடை நாயகனே நான் மறையின் பொருளே (வேதைக சமையன் )
அவை தனக்கும் அப்ராப்ய மனஸா ஸஹ-
யஸ்யாமதம் தஸ்ய மதம் -என்று சொல்லுகிறபடி இருக்கை

(அறிவுக்கு அப்பால் பட்டவன் என்று அறிந்தவனே அறிந்தவன் ஆகிறான் –
அறிந்தவன் என்று மார் தட்டுபவன் அறியாதவன் ஆகிறான்)

நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!*  நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்- 
தம்மனை ஆனவனே! தரணி தலமுழுதும்*  தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்* 
விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ் விடையும்*  விரவிய வேலைதனுள் வென்று வருமவனே!* 
அம்ம! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. -1-5

உலகினில்-தோற்றமாய் நின்ற
இப்படி பெரியனாய் இருந்து வைத்து இதர சஜாதீயனாய் அவதரித்த படி

சுடரே –
மனுஷ்யத்தவே பரத்வம்

ஊற்றம் –
மஹா ராஜர் பிராட்டி முதலானவர்கள் விட எண்ணிலும் (ஆஸ்ரிதர்களை )விடாத ஊற்றம்(விபீஷணன் -தன் அடியார் இத்யாதி )

பெரியாய் –
தன் பேறு-எல்லாம் செய்தாலும் ஆஸ்ரித விஷயத்தில் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்கை

உலகினில்-தோற்றமாய் நின்ற –
சிசுபாலன் – துர்யோதனாதிகள் உள்ளிட்டார்க்குப் பாண்டவ பக்ஷபாதி என்னும்படி இருக்கை

சுடரே துயில் எழாய்-
இப்போது உணராமையாலே அக் குணங்கள் எல்லாம் இழக்கப் புகா நின்றாய் என்கிறார்கள்

மாற்றார் உனக்கு
நாங்கள் வருமவர்களோ-
பண்டு ஹிரண்ய ராவணாதிகளாய் வந்தோம் நாங்கள் அன்றோ என்கை

வலி தொலைந்து உன் வாசல் கண்
ந ந மேயம் து கஸ்யசித் -என்கை தவிர்ந்து அம்புக்குத் தோற்றாரோ பாதி குணத்துக்குத் தோற்றோம்
அவர்களுக்கு முடிந்து பிழைக்கலாம்
சத்யேந லோகாந் ஜயதி-(தீனான் தாநேந ராகவ.-சிஸ்ரூஷையால் குருக்களை வெல்கிறார் )

ஆற்றாது வந்து –
ஆள் பார்த்துழி தருவாய் -என்று நீ வரக் கடவையாய் இருக்கிற நாங்கள் வந்து

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கொள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–-நான்முகன் -60

உன் அடி பணியுமா போலே
வணக்கம் ஸ்வரூபத்துக்கு என்று இராதே ஆற்றாமைக்கு என்று இருக்கை

போற்றி யாம் வந்தோம்
தோற்றார் அவனைப் புகழும் அத்தனை –
அபலைகளை வெல்லுகையும் ஒரு பணியோ

போற்றி  யாம் வந்தோம்
பெரியாழ்வாரைப் போலே யன்றோ நாங்கள் வந்தது என்கை
தம்மைப் பேணாதே அத் தலையைப் பேணுமவர்
நாங்களும் எங்களைப் பேணாதே உன் வாசலிலே வந்தோம் என்கை

புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-
படுத்தின பாடும் -வென்று கொண்ட படியும் சொல்லிக் கிட்டினார்க்குப்
பல்லாண்டு பாடுகை ஸ்வரூபமாய் விட்டது –

(பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான்
ஏலாப் பொய்கள் உரைப்பான்
சிற்றில் அழித்தது
குருந்திடை கூரை பறித்தது போல்வன செய்து எங்களை ஜெயித்தது சொல்லி)

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading