காத்யாயினி மஹா மயி குறித்து அன்று கோபிகள் பாவை நோன்பு –
அநுகாரம் முதிர்ந்து -அனுபவ பரிவாஹம் -பாசுரமாக -வெளி வந்தது –
அபேக்ஷை உள்ள தர்மம் -துணைத் தேட்டம் -தேர் பலரும் இழுக்க வேண்டுமே –
லௌகிக காமத்துக்குத் தான் தனிமை வேண்டும் -கூடி இருந்து குளிர வேண்டுமே –
ரகு குணம் ஜடபரதர் -சம்வாதம் -பாகவதர் ஸ்ரீ பாத தூளி மஹாத்ம்யம் உண்டே –
அஹங்காரம் போக்க இதுவே சிறந்த உபாயம் –
ஈராயிரப்படி -அவதாரிகை –
இதுக்கு எல்லாம் கடவளவாய்-எல்லாருக்கும் முன்னே நான் உணர்ந்து
எல்லாரையும் உணர்த்தக் கடவளாக ப்ரதிஜ்ஜை பண்ணினாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
(மண்டோதரி வியத்தமாக தான் உணர்ந்து- சதுஸ்லோகி
ஏஷ மஹா யோகி –ஸ்ரீ வத்ஸ வஷ -சங்கு சக்ர கதா தரா -என்று உணர்த்தினாளே
முனி வராய பராசரர் தத்வ த்ரயம் உணர்ந்து -ஸ்வரூபம் ஸ்வ பாவம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் மைத்ரேயர் வியாஜ்யமாக நமக்கு உணர்த்தினார்
வியாச பகவான் -சதுர்வித புருஷார்த்தங்கள் உணர்ந்து -மஹா பாரதம் -ப்ரஹ்ம ஸூத்ரம் -புராணங்கள் -அருளிச் செய்து உணர்த்தினார் –
ரிஷிகள் உபதேசம் அதிக்ருதா அதிகாரம் -எல்லாரையும் உணர்த்த மாட்டார்கள்
ஆழ்வார்கள் -உணர்ந்து –நம்மாழ்வார் –16- சம்வத்சரங்கள் -ஷோடச கலா -தியானித்து தான் உணர்ந்து -கடாக்ஷம் மூலமாகவே உணர்த்தி –
திருமழிசை ஆழ்வார் சாக்கியம் கற்று -தீர்த்தகரராய் திரிந்து –
வேத வேத்ய வைதிக உபதேசம் ஆவித்யர் அளவிலே ..
அஜ்ஞர் ஜ்ஞானிகள் ஜ்ஞான விசேஷ யுக்தர் சர்வஜ்ஞன் என்னாமல் இவர் திருத்துவர்-
அறியாதார்க்கு உய்யப் புகும் ஆறும் இக் கரை எறினார்க்கு இன்ப வெள்ளமும்
நிலை அறியாதார்க்கு ஆழங் காலும் கரை ஏற்றும் அவனுக்கு நாலும் ஆறும் அறிவிக்க வேணும்
உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தோறும் -திருவாய் மொழி மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தோறும் —
பதி தோறும் -புக்கு திரியும் குணம் திகழ் கொண்டல் ராமானுஜன்
இங்கு உணர்ந்த மெய் ஞானியர்-ஆழ்வார் -உணர்வு -ஞான விசேஷம் -சேஷி தம்பதி -மிதுனம் –
ஆனந்த மய ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -சர்வ கந்த சர்வ ரஸம் -பரம போக்கிய ஸ்வரூபம் ரூபம் -அறிவதே உணர்வு
அது முதிர்ந்து கனிந்து பக்தியாக பரிமளிக்கும்
உணர்வு எனும் பெரும் பதம் அறிந்தேன் -திருமங்கை
அறிவும் அன்பும் கலந்ததே -பக்தியே -உணர்வு –
யதா வஸ்தித ஞானம் -உண்மை அறிவு -பக்தி முற்ற -பக்தி ஸித்தாஞ்சனம் –
மெய் ஞானம் -உண்மையான அர்த்த பஞ்சக ஞானம் -அறிந்து -அவா உந்த -நமக்கு உணர்த்தி ஆழப் பண்ணுவார்கள் )
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-
பதவுரை
உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள்-உங்கள் (வீட்டுப்) புழைக்கடைத் தோட்டத்திலிருக்கிற தடாகத்திலுள்ள
செங் கழுநீர்-செங்கழுநீர்ப் பூக்களானவை
வாய் நெகிழ்ந்து-விகஸிக்க,
ஆம்பல் வாய் கூம்பின-ஆம்பல் மலர்களின் வாய் மூடிப் போயின;-நிலப்பூ கரு நெய்தல் பூ
(அன்றியும்,)
செங்கல் பொடி கூறை வெண் பல் தவத்தவர்–காவிப் பொடியில் (தோய்த்த) வஸ்திரங்களையும் வெளுத்த
பற்களையுமுடையராய் தபஸ்விகளாயிருந்துள்ள ஸந்நியாஸிகள்,
தங்கள் திருக் கோயில் சங்கு இடுவான்-தமது திருக் கோயில்களைத் திறவு கோலிட்டுத் திறக்கைக்காக
போகின்றார்–போகா நின்றனர்;
எங்களை-எங்களை
முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்-முந்தி வந்து எழுப்புவதாகச் சொல்லிப் போன நங்கையே!
நாணாதாய்-(‘சொன்னபடி எழுப்ப வில்லையே!’ என்னும்) வெட்கமுமில்லாதவளே
நா உடையாய்-(இனிய பேச்சுக் பேசவல்ல) நாவைப் படைத்தவளே!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தட கையன்-சங்கையும் சக்கரத்தையும் தரியா நின்றுள்ள விசாலமான திருக் கைகளை யுடையவனும்
பங்கயக் கண்ணனை-தாமரைபோற் கண்ணனுமான கண்ண பிரானை
பாட-பாடுகைக்கு
எழுந்திராய்-எழுந்திரு;
ஏல் ஓர் எம் பாவாய்!
இதில் ததீய ஞானம் உடைய -அனுஷ்டானம் இல்லாத ஒருத்தியை உணர்த்துகிறார்கள்
பாடும் பொழுது பங்கயக் கண்ணான் என்றே தான் பாடுவார்கள் –
நங்காய் -குண பூர்த்தி -விபரீத லக்ஷணையால் குத்தல் பேச்சு –
நாணாதாய்-செய்யாமலும் இருந்து -அனுதாபமும் இல்லாமல் -பச்சாத் தாபம் -பஸ்ஸாத் -பின்பு தாபப்படுத்தல் இல்லாமை –
வாவி -வாபி -சமஸ்க்ருதம் -குளம் –
செங்கழு நீர் -பகல் புஷ்பம் -செங்கழு நீர் -தாமரைப் பூ –
ஆம்பல் இரவு புஷ்பம் -கரு நெய்தல் -(அல்லி பூ -மவ்வல் -மல்லி பூ )
வாயைத் திறந்து பேசுவதையும் பேசாததையும் சொன்னவாறு
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-உள்ளே யாவது சத்வம் -ரஜஸ் வெளி விட வேண்டுமே
சைவ சன்யாசிகளையும் த்ரி தண்ட ஸ்ரீ வைஷ்ணவ சந்யாசிகள்
திருக் கோயில் சங்கிடுவான்–பாஞ்ச ஜன்யமும் சாவியும்
வாய் நெகிழ்ந்து வாய் கூம்பின காண்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
இப்படி பதங்கள் கூட்டி வியாக்யானம்
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-
இவள் வாசலிலே வந்து போது விடிந்தது காண் -எழுந்திராய் -என்ன
விடிந்தமைக்கு அடையாளம் என் என்ன –
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களும் வாய் பேசுவாராம் பேராது இருப்பாருமாய் வந்து நிற்கிறது
விடிந்தமைக்கு அடையாளம் அன்றோ -என்று
செங்கழு நீர் வளர்ந்தால் போலேயும் ஆம்பல் மொட்டித்தால் போலேயும் -என்று தாங்கள் வாயைச் சொல்ல
உங்கள் வாய் நீங்கள் வேண்டின போது அலர்ந்து மொட்டியாதோ என்ன
வயலில் அவையும் அப்படியே -என்ன
நீங்கள் போய் அலர்த்தியும் மொட்டிக்கப் பண்ணியும் வைத்தீர்கள் -என்ன
தோட்டத்து வாவியும் அப்படியே என்ன
வயலில் அணித்து அன்றோ உங்களுக்குத் தோட்டத்து வாவி என்ன
புழைக்கடைத் தோட்டத்து வாவியும் அலர்ந்து மொட்டித்தது -என்ன
அது உங்களுக்குக் கை வந்தது அன்றோ என்ன
அ ஸூர்யம்பஸ்யமாய் கிருஷ்ணனுக்கும் புகுரா ஒண்ணாத புழக்கடையில்
தோட்டத்து வாவியில் செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்தது -என்ன
(நாம் அவனை நோக்கி அத்வேஷம் மாறின உடனே ஆபி முக்கியாதிகளை தானே உண்டு பண்ணி
அருளி கைக்கொள்ளும் அவனைப் போலவே இவர்களும் அலரத் தொடங்கியதுமே -என்றவாறு )
அலரப் புக்க மாத்திரத்திலே கழிய எல்லாம் அலர்ந்தது என்றும் –
மொட்டிக்கப் புக்க மாத்திரத்திலே முட்ட மொட்டித்தது -என்றும் சொல்லுகிறீர்கள்
இது ஒழிய அடையாளம் உண்டானால் சொல்லுங்கோள் -என்ன
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-
அளற்றுப் பொடியிலே புடவையைப் புரட்டி ப்ரஹ்மசாரியம் தோற்றப் பல்லை விளக்கி
சபையார் பொடிகிறார்கள்-கோமுற்றவன் தண்டம் கொள்ளுகிறான் என்று
போது வைகிற்று என்று தபசிகளும் அகப்பட உணர்ந்தார்கள்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
அவர்கள் சொல்லும் பிரகாரம் —
சங்கு என்று குச்சியை (சாவியை ) சொல்லுகிறது –
சங்கு சமாராதனத்துக்கு உப லக்ஷணம்
(இப்பொழுது சொல்வது ஸ்ரீ வைஷ்ணவ திருக்கோயில் )
வெள்ளையை தவிர்ந்து காஷாயத்தை உடுத்து
போக உபகரணங்களைத் தவிர்ந்து தபஸ்சர்யை உடையராய் இருக்குமவர்கள்
சந்த்யா வந்தனாதிகள் சமைந்து அகங்களில் திரு முற்றத்திலே எம்பெருமான்களை
ஆராதிக்கும் காலமாயிற்று என்றுமாம்
இரண்டு பிரகாரத்தாலும்
சாத்விகரோடே
தமோ அபிபூதரோடு வாசியற உணர்ந்தது என்கிறார்கள்
தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச –
(வேதம் அறிந்தவர்கள் அனுஷ்டானம் பிரமாணம் வேதமும் பிரமாணம் அடுத்தது
பெரிய ஜீயர் -இன்றும் -காண்கிறோமே -தங்கள் திருக்கோயில் என்று
திருமலையைச் சொன்னவாறு என்பாராம் பெரிய திருமலை நம்பி -)
எங்களை முன்னம் எழுப்புவான் –
நேற்று எங்களை எழுப்புகிறேன் –
கிருஷ்ணன் பாடு கொடு போகிறேன் -என்றது கண்டிலோமே -என்கிறார்கள்
வாய் பேசும்
பொய் சொல்ல உகக்கும் கிருஷ்ணனோடு இறே பழகுகிறது –
பொய்யாய் நினைத்ததும் மேலே பிறர் அறிய வேணுமோ
நங்காய்
சொன்னத்தோடே சிலவாகிலும் கூட்டாதே இருப்பார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ -என்கை
(பேச்சு மட்டும் இருந்து அனுஷ்டானம் இல்லா விடில் நாய் வால் போலே வீணாகுமே )
எழுந்திராய்
இவர்கள் பேச்சே அமைந்தது இவளுக்கு –
எங்கள் குறை தீராய்-
நாணாதாய்
நீ இருந்த ஊரில் பூசணியும் காயாதோ என்கை –
நாவுடையாய்
வாயே இறே உனக்கு உள்ளது –
(நா அவகாரியம் -பெரியாழ்வார் செய்யக் கூடாததையும் அருளிச் செய்கிறார் )
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-
இவர்கள் தரிப்பிக்கைக்காக நாவால் உள்ள கார்யம் கொள்ளுங்கோள் என்ன –
அவன் திரு நாமங்களை பாடு என்கிறார்கள்
(வெள்ளைச் சுரி சங்கோடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் காடாகின்ற -திருவாய் 7-3-1 )
சங்கோடு சக்கரம்
இன்னார் என்று அறியேன் -இத்யாதி
பங்கயக் கண்ணானை
ஜிதம் தே புண்டரீ காஷ- நமஸ்தே விஸ்வ பவன -ஜிதந்தே –
சங்கு சக்கரங்களைக் கொண்டு திரு நாபி கமலம் போலே இருக்கை-
தூது செய் கண்கள்-9-9-9- இறே –
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் -1-7-5-
(பங்கயக்கண்ணன் என்கோ
தாமரைக்கண்ணன் என்றே தளரும்
தாயாய் அளிக்கும் தண் தாமரைக் கண்ணன்
ரக்ஷகமும் போக்யமும் பரத்வமும் தாமரைக்கண்கள் சொல்லுமே )
—————————————-
(திரு நாம சங்கீர்த்தனம் பாடவே அழைக்கிறாள்
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி கேசவனைப் பாட
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவிக்க
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவில
முகில்வண்ணன் பேர்பாட
தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாட
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாட
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட
என்று சொல்லிக் கொண்டு எழுப்புகிறார்கள்)
(செங்கல் பொடி கூறை வெண் பல் தவத்தவர்-எம்பார் தாமஸ ப்ரக்ருதிகளைச் சொல்வது என்றும்
தாமஸ ப்ரக்ருதிகளே எழும் நேரமானதே -தங்கள் திருக்கோயில் -அவர்கள் கோயில் என்பர்
பெரிய திருமலை நம்பி ஸ்ரீ வைஷ்ணவ சந்யாசிகள் -சங்கு -சாவி என்றும் –
கொல்லை மண்டபத்துக்கு -பெரிய ஜீயர் ஸ்வாமி சாவி போட்டு திறக்க -என்று நிர்வாஹம்)
(ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வநபாயிநீ |
ததாயத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விஶ்ரமஸ்தலீ ||–எம்பார் தனியன்ம்
பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய |
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத் ||–பெரிய திருமலை நம்பி தனியன்)
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணான் -இரண்டுக்கும் சம்பந்தம் உண்டே
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன்-7-3-1-)
ஸூர்யன் சந்திரன் போல் தாமரைக்கண்கள் மலரவும் குவியவும் இவை -ஆங்கு மலரும் குவியும்-மூன்றாம் திருவந்தாதி —67-)
நாலாயிரப்படி-அவதாரிகை –
இதுக்கு எல்லாம் கடவளவாய்-எல்லாருக்கும் முன்னே நான் உணர்ந்து
எல்லாரையும் உணர்த்தக் கடவளாக ப்ரதிஜ்ஜை பண்ணினாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்-
இவள் வாசலிலே வந்து -போது விடிந்தது காண் -எழுந்திராய் -என்ன
விடிந்தமைக்கு அடையாளம் என் என்ன –
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களும் வாய் பேசுவாரும் பேராது இருப்பாருமாய் வந்து நிற்கிறது
விடிந்தமைக்கு அடையாளம் அன்றோ -என்று
செங்கழு நீர் அலர்ந்தால் போலேயும் ஆம்பல் மொட்டித்தால் போலேயும் -என்று தாங்கள் வாயைச் சொல்ல
உங்கள் வாய் நீங்கள் வேண்டின போது அலர்ந்து மொட்டியாதோ என்ன
வயலில் அவையும் அப்படியே -என்ன
நீங்கள் போய் அலர்த்தியும் மொட்டிக்கப் பண்ணியும் வந்திகோள் -என்ன
தோட்டத்து வாவியும் அப்படியே என்ன
வயலில் அணித்து அன்றோ உங்களுக்குத் தோட்டத்து வாவி என்ன
புழைக்கடைத் தோட்டத்து வாவியும் அலர்ந்து மொட்டித்தது -என்ன
அது உங்களுக்குக் கை வந்தது அன்றோ என்ன
அஸூர்யம்பஸ்யமாய் கிருஷ்ணனுக்கும் புகுரா ஒண்ணாத (உங்கள்) புழக்கடையில்
தோட்டத்து வாவியில் செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்தது -என்ன
அலரப் புக்க மாத்திரத்திலே கழிய எல்லாம் அலர்ந்தது என்றும் –
மொட்டிக்கப் புக்க மாத்திரத்திலே முட்ட மொட்டித்தது -என்றும் சொல்லுகிறீர்கள்
இது ஒழிய அடையாளம் உண்டானால் சொல்லுங்கோள் -என்ன
(அபிசந்தி விராத மாத்திரம் -குற்றங்களை செய்யாமல் இருக்க சங்கல்பம் கொள்ள
சிந்திக்கும் பொழுதே எல்லாமே செய்ததாக அவன் கொள்ளுமா போலே)
சாத்விகாரோடே தமோ அபி பூதரோடே வாசியற உணர்ந்தது பார் என்கிறார்கள் –
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்-
அளற்றுப் (காவி)பொடியிலே புடவையைப் புரட்டி ப்ரஹ்மசாரியம் தோற்றப் பல்லை விளக்கி
சபையார் பொடிகிறார்கள்-கோமுற்றவன் தண்டம் கொள்ளுகிறான் என்று போது வைகிற்று என்று
அஸூசிகளும் அகப்பட உணர்ந்தார்கள்(பிரியமாக போவான் சாத்விகன் -இவர்கள் பயத்தால் போகிறார்கள் )
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
அவர்கள் சொல்லும் பிரகாரம் —
சிறு பதத் தூற்றத் துறையிலே ஒரு தபசி பரிசிலே ஏறி ஆற்றினுள்ளே புக்கு
காவேரி தேவிக்குச் சங்கு ஊதுகிறேன் என்று அங்கே ஊத-
பரிசிலே போகிற குதிரை மிதித்து அதில் ஏறின மனிச்சர் அடைய செத்துப் போச்சுது -என்று
எம்பார் அருளிச் செய்த வார்த்தை-
சங்கு என்று குச்சியை (சாவியை )சொல்லுகிறது -என்றுமாம்
வெள்ளையை தவிர்ந்து காஷாயத்தை உடுத்து
போக உபகரணங்களைத் தவிர்ந்து தபஸ்சர்யை உடையராய் இருக்குமவர்கள்
சந்த்யா வந்தனாதிகள் சமைந்து அகங்களில் திரு முற்றத்திலே எம்பெருமான்களை ஆராதிக்கும் காலமாயிற்று என்றுமாம்
சங்கு சமாராதனத்துக்கு உப லக்ஷணம்
தம பிரசுரர் லக்ஷணத்தையோ சத்வஸ் த்தரான நமக்குச் சொல்லுவது
தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச -என்று சத்வஸ்த்தர் படியைச் சொல்ல வேண்டாவோ -என்ன
சத்வ ஸ்த்தைகளான நாங்கள் சொன்னபடியையும் செய்கிறிலை என்கிறார்கள் –
நான் செய்தது என் என்ன
எங்களை முன்னம் எழுப்புவான் -வாய் பேசும்
நேற்று எங்களை எழுப்புகிறேன் -கிருஷ்ணன் பாடு கொடு போகிறேன் -என்றது கண்டிலோமே -என்கிறார்கள்
வாய் பேசும்
பொய் சொல்ல உகக்கும் கிருஷ்ணனோடு இறே பழகுகிறது –
பொய்யாய் நினைத்ததும் மேலே பிறர் அறிய வேணுமோ
நங்காய்
சொன்னத்தோடே சிலவாகிலும் கூட்டாதே இருப்பார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ -என்கை
எழுந்திராய்
இவர்கள் பேச்சே அமைந்தது இவளுக்கு -எங்கள் குறையையும் தீராய்-
இப்படிச் சொல்லி வைத்துச் செய்யப் பெற்றிலோம் என்னும் லஜ்ஜையும் கூட இன்றிக்கே இருப்பதே
நாணாதாய்
நீ இருந்த ஊரில் பூசணியும் காயாதோ என்கை(வெறும் வாய்ப்பந்தல் என்றபடி )
(தொட்டால் சுணை -அரிக்கும் சூடு சுரணை இல்லை -கொண்டு லஜ்ஜை இல்லை என்கிறாள்)
நாவுடையாய்
வாயே இறே உனக்கு உள்ளது(ஆர்ஜவம் இல்லையே மனஸ் வாக்கு செயல் மூன்றும் ஒன்றாக இருக்காமல் )
நாந் ருக்வேத விநீதஸ்ய –நா சாம வேத விதூஷா –இத்யாதி (விரிஞ்சனோ -கல்லாத கலை இல்லையே -திருவடி பற்றி வாக்மீ-என்று வால்மிகி கொண்டாடும் -பெருமாள்-பணிவு இருப்பதால் ருக் வேதம் அறிந்தவன் – அர்த்தம் தரிக்க இருந்தவன் ஆகையால் யஜுர் வேதம் அறிந்தவன் ஞானம் மிக்கு இருப்பதால் சாமவேதம் அறிந்தவன் -என்ற கொண்டாட்டம் போல் )இவள் எல்லாம் படுத்தினாலும் விட ஒண்ணாத நா வீறுடைமை
விண்ணப்பம் செய்வார் எல்லா அநீதிகள் செய்யிலும் சத்துக்கள் தலையால் சுமக்கிறது நா வீறு அன்றோ –
நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்-பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்-
இவர்கள் இது எல்லாம் சொல்லுகிறது தாங்கள் ஆர்த்தி இறே என்று பார்த்து –
இவர்கள் தரிப்பிக்கைக்காக நாவால் உள்ள கார்யம் கொள்ளுங்கோள் என்ன –
அவன் திரு நாமங்களை பாடு என்கிறார்கள்(வாஸா தர்மம் அவாப்நோதி -திருவடி இடம் பிராட்டி -)
ஏந்தும் தடக் கையன்
பூ ஏந்தினால் போலே திரு வாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி
அந்த ஸ்பர்சத்தாலே வளர்ந்த திருக் கை மலர்களை யுடையவனாய் இருக்கை-
(பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை )இன்னார் என்று அறியேன் -இத்யாதி -என்று மதி கெடுக்கும் கையில் திருவாழியையும் சொல்லுகிறது
இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் –10-10-9-
பங்கயக் கண்ணானை
ஜிதம் தே புண்டரீ காஷ-
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை என்னப் பண்ணும் கண்ணை யுடையவனை –
ஆங்கு மலரும் -இத்யாதி —
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைச் சந்திரன் என்றும் திரு ஆழி ஆழ்வானை ஆதித்யன் என்றும்
திரு நாபீ கமலம் மொட்டிப்பது அலருவது ஆமா போலே கண்ணாகிய தாமரையும் மொட்டிப்பது அலருவதாம்-என்கை –
சந்த்ர ஸூர்யர்களையும் தாமரைப் பூவையும் ஒரு கலம்பக மாலையாகத் தொடுத்தால் போலே இருக்கும்படியைச் சொல்லுகை –
(பத்ம நாபன் கையில் ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்ந்து கீழே பார்த்தோம்)
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனைத் துழாய் விரைப்
பூமருவு கண்ணி எம்பிரானைப் பொன்மலையை
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நா அலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே! வள்ளலே!–2-6-3-
ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து —மூன்றாம் திருவந்தாதி —67-
பங்கயக் கண்ணானை
கண்ணாலே நமக்கு எழுத்து வாங்கி நம்மை எழுத்து வாங்குவித்துக் கொள்ளுமவன்
தூது செய் கண்கள் இறே-9-9-9-
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான்-1-7-5-
(ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9–மாலைப்பூசல் )
(விடுவேனோ என் விளக்கை என்னாவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–விடவே செய்து-தூத்வ கிருத்யம் )
பாட
உன்னுடைய ப்ரீதிக்குப் போக்கு விட்டு எங்கள் வறட்சி கேட்டைத் தீராய் –
———————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply