ஸ்ரீ திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -தூ மணி மாடத்து– ஸ்ரீ திரு நாராயண புரத்து ஸ்ரீ ஆய் -என்னும் ஸ்ரீ ஜனன்யாச்சார்யார் ஸ்வாமிகள் -வியாக்யானங்கள் —

ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்சன” (தைத்ரீய உபநிஷத் 2:4:1) –
தூ மணி -நாம் சரணாகதி செய்து அவன் ஆனந்த மயன் என்று அறிகிறோம்
ஏஷ ஹ்யா -அவனே நம்மைப் பற்றி ஆனந்தம் ஊட்டுவது அடுத்த பாசுரம் –

ஈராயிரப்படி -அவதாரிகை
கீழில் பாட்டில் முக்தர் படி போலே இருப்பாள் ஒருத்தியை எழுப்பிற்று –
இப் பாட்டில் நித்ய முக்தர் படியே இருப்பார் ஒருத்தியை எழுப்புகிறது –
தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும்
இட்ட விடத்தே இருக்கும் ஸ்ரீ பரத ஆழ்வானையும் போலே –
(கோது காலமுடைய பாவாயுக்கும் மாமன் மகளுக்கும் வாசி
நிவ்ருத்தி மார்க்கம் இவளது )

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ
ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-

பதவுரை

தூ மணி மாடத்து–பரிசுத்தமான மாணிக்கங்கள் அழுத்திச் சமைத்த மாளிகையில்
சுற்றும்–நாற் புறமும்
விளக்கு எரிய–விளக்குகள் எரியவும்
தூபம் கமழ–(அகில் முதலியவற்றின்) வாசனைப் புகைகள் மணம் வீசவும்,
துயில் அணை மேல் கண் வளரும்–மென்மையான படுக்கையின் மீது நித்திரை செய்யா நின்ற,
மாமான் மகளே–அம்மான் பெண்ணே!
மணி கதவம்–மாணிக்கக் கதவினுடைய
தாள்–தாழ்ப்பாளை
திறவாய்–திறந்திடுவாயாக,
மாமீர்–அம்மாமீ!
அவளை–(உள்ளே உறங்குகிற) உன் மகளை
எழுப்பீரோ–எழுப்ப மாட்டீரோ?
உன் மகள்;–உன் மகளானவள்
ஊமையோ–வாய்ப் புலன் இல்லாதவளோ?
அன்றி–அல்லாமற் போனால்
செவிடோ–செவிப் புலன் இல்லாதவனோ? (அன்றி)
அனந்தலோ–பேருறக்க முடையவளாயிருக்கின்றாளோ? (அன்றி)
பெரு துயில்-பெரிய படுக்கையில்
ஏமப்பட்டாளோ–காவலிடப்பட்டாளோ? (அன்றி)
மந்திரம்பட்டாளோ–மந்திர வாதத்தினால் கட்டுப் படுத்தப் பட்டானோ?
மா மாயன்–‘அளவிறந்த ஆச்சரியச் செய்கைகளை யுடையவனே!’
மாதவன்–‘திருமகள் கேழ்வனே!’
வைகுந்தன்–‘ஸ்ரீ வைகுண்டநாதனே!’
என்று என்று–என்று பலகால் சொல்லி
நாமம் பலவும்–(எம்பெருமானுடைய) திரு நாமங்கள் பலவற்றையும்
நவின்று–(வாயாரக்) கற்றோம்;-நவின்று மாமீர் நீர் இவளை எழுப்பு என்றுமாம்
(இனியாகிலும் உன் மகள் உணரலாகாதா?)
ஏல் ஓர் எம் பாவாய்!

தூ மணி மாடத்து -தூய்மையான ரத்னங்களால் -சமைக்கப் பட்ட
ஏமப் பட்டாளோ-காவல் உண்டோ
மந்தரப் பட்டாளோ–
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று–
ஸுலப்ய -ஸ்ரீயப்பதித்தவ பரத்வ-சஹஸ்ர நாமங்கள்

தூ மணி மாடம்
துவளில் மா மணி மாடம்-(6-5-1-) -என்று
குந்தமுண்டாய் (குற்றமுண்டாய்) எடுத்துக் கழிக்க வேண்டாதே
எல்லா நன்மையுமுடைய மணிகளால் செய்த மாடம்
அது முக்தனுடைய அபஹத பாப்மத்வாதிகள் போலே –
இது அவனுடைய அபஹத பாப்மாத்வாதிகள் போலே –
திருத் தொலை வில்லி மங்கலத்துக்கு கழித்தவை கொண்டு செய்தது –
அந்தப்புரத்துக்கு நல்லது இட்டுச் செய்து அங்கு கழிந்தது இறே தந்தாமுக்கு மாளிகை செய்வது

சுற்றும் விளக்கெரியத்
தானுறுமாகில் நோற்று வருகிறான் -என்று இருக்கிறவள் இவள் –
மாணிக்கக் குப்பி போலே புறம்பே நிற்க உள்ளுள்ளது எல்லாம் தோற்றா நின்றது என்கை
ப்ரகாசத்துக்கு பிரகாசம் வேண்டாமையாலே விளக்கு மங்களார்த்தம்
புறம்புள்ள விளக்குகள் புகையா நிற்க என்றுமாம் –

தூபம் கமழத்
பரிமளம் ஸஹ்யமான படி எங்கனே தான் இவளுக்கு –
சீருற்ற வகில் புகை -(மாலைப்பூசல் மல்லிகை கமழ் -9-9-7)-இத்யாதிப்படியே இறே அவர்களுக்குச் செல்லுகிறது
புகை யுள்ளிட்டன வன்றிக்கே கந்தமே கமழ (சீர் உற்ற என்றதும் விளக்கம் )

துயில் அணை மேல்
மென் மலர்ப் பள்ளி வெம்பள்ளியாய் இறே (9-9-4-) இவர்களுக்கு இருக்கிறது –
இருவருக்குப் படுத்த படுக்கையிலே ஒருவருக்கு படுக்க -உறங்கப் -போமோ

கண் வளரும்
இளைய பெருமாளை போலே உறங்காமைக்குத் தாங்களும்
உறங்குகைக்கும் நீயுமாயிற்றே -என்கிறார்கள்

கண் வளரும்
இங்கனே யாகாதே ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுவது
படுத்த பைந்நாகணை இத்யாதிப்படியே (திருப்பல்லாண்டு -9-) தமப்பனார் பகவத் விஷயத்தில் சொல்லுவது எல்லாம்
ததீய விஷயத்திலே சொல்லுகிறாள் ( இவர்களும் மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் )

மாமன் மகளே –
இட்டீடு கொள்ளுகைக்கு விட ஒண்ணாத உறவை சம்பாதிக்கிறான்
(அகஸ்ய ப்ராதர் போல் -பேர் சொல்ல வேண்டாம் )

மணிக் கதவம் -தாள் திறவாய்-
எங்களுக்கு கதவும் சுவரும் தெரிகிறது இல்லை –
நீயே திற -என்கிறார்கள்
தேசிகர்க்கு அல்லது தாள் திறக்கத் தெரியாது என்கை
(ஆச்சார்யர் வழி காட்ட அன்றோ -அர்ச்சகர் மூலமாகவே கர்ப்ப க்ரஹம் செல்கிறோம் )

மாமீர்
அடியார் தம் அடியார் (3-7)
தொண்டர் தொண்டர் (7-1 )-என்று ஆழ்வாருடைய பாகவத சேஷத்வத்தில் எல்லை போலே
இவர்களும் இவளுடைய திருத் தாயாரான இவளை உறவாகச் சொல்லி தரிக்கிறார்கள்

அவளை எழுப்பீரோ
நீராகிலும் அவளை எழுப்பீரோ என்கிறார்கள் –
அவளை இவர்களுக்குத் தோற்றமோ என்னில் மாளிகையிலே தெளிவாலே தோற்றும்
தாயார் பாவஞ்ஜை யாகையாலே எழுப்பாள் -ஆகையால்

உன் மகள் தான்-ஊமையோ -என்கிறார்கள்

அன்றிக்கே
அன்றிச் செவிடோ
நாங்கள் சொன்ன வார்த்தை கேளாதபடி அந்நிய பரையானாளோ

வனந்தலோ
இரவு எல்லாம் கிருஷ்ணனுக்கு ஆடல் கொடுத்து இப்போதோ உறங்குகிறது

ஏமப் பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
ஆர்த்த நாதம் கேளாதபடி காவலிட்டுக் கொண்டு உணராதபடி உறங்குகைக்கு யாரேனும் மந்தரித்தார் உளரோ –
மந்த்ரம் இவளுக்கு பிரசித்தம் இறே
(ரஹஸ்ய த்ரயங்கள் -நமஸ் சபிதார்த்தம் அறிந்தவள் )
உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ (நாச்சியார் )-என்று மாயப்பொடி தூவினார் உண்டோ -என்கை

மா மாயன்
பெண்களுக்கு காணாச் சிறையாய்க் கிடக்குமவன்
(அடக்கமாய் -இஷ்ட விநியோக அர்ஹனாய் இருப்பானே )

மாதவன்
அதுக்கு குருகுல வாசம் பண்ணினவிடம்

வைகுந்தன்
பெண்களோடு ஓக்க ஆண்களை அடிமை கொள்ளுமவன்

என்றென்று-நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்–
மேன்மைக்கும் நீர்மைக்கும் ஏகாந்தமான திரு நாமங்களை அநேகம் சொன்னோம் -என்கிறார்கள்

நாமம் பலவும் நவின்று மாமீர் அவளை எழுப்பீரோ -என்று கிரியை யாகவுமாம் –
(மடக்கிளியை கை கூப்பி வணங்கினாள் -திரு நாமம் சொல்லி எழுப்பலாம் –
பாடி மாமீர் அவளை எழுப்பீரோ என்றபடி )

—————————————————–

(ஞானம் இடக்கை வலக்கை அறியாதவர்கள்
கர்மம் -கார்த்திகை கார்த்திகை மற்றும் குளிப்பார்கள்
ஆகவே கர்ம ஞான பக்தி இல்லாதவர்கள்
ஆனால் விசேஷ பகவத் அபிமானம் பெற்றவர்கள் -அனுபவத்துக்கு வேண்டிய ருசி மிக்கவர்கள் –
பெறுவதற்குத் தகுதியை விட அனுபவத்துக்கு அதிகாரம் வேண்டுமே -)

(தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயநாயா

அநந்ய சாத்யே-வேறே ஒன்றால் கிடைக்க மாட்டானே -அவனே அவனைத் தந்து அனுபவிக்கிறான்
துடிப்பு வேண்டுமே அனுபவிக்க
சித்த உபாயத்திலும் கைங்கர்யத்திலும் இரண்டு வகை என்பதை -8-9-10-மூன்றும் ஒரு கோவை
ப்ராப்யத்தில் இரண்டு வகை 8-9-
ப்ராபகத்தில் இரண்டு வகை 9-10-
ஜ்ரும்பணாஸ்ரமம் அடிபட்டு வெளியில் -மோஹனாஸ்ரமத்தால் அடிபட்டு உள்ளே
சோம்பரை யுகத்தி போலும் -வாழும் சாம்பார்
கூட சென்று கைங்கர்யம் செய்ய துடிப்பு இளைய பெருமாளுக்கு
பிரிந்து இருந்தாலும் பெருமாள் திரு உள்ளம் உகப்புக்காக கைங்கர்யம் பரதன்
கோது காலமுடைய பாவாய் இளைய பெருமாளைப் போல் மாமன் மகள் பரதனைப் போல்
துடிப்பு லஷ்மணன் பரதன் இருவருக்கும் உண்டே –
ஸ்வ கத ஸ்வீகாரம் மாமன் மகள்
பர கத ஸ்வீ காரம் நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற பாவாய் -)

( ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்சன” (தைத்ரீய உபநிஷத் 2:4:1)
தூ மணி -நாம் சரணாகதி செய்து அவன் ஆனந்த மயன் என்று அறிகிறோம்
ஏஷ ஹ்யா -அவனே நம்மைப் பற்றி ஆனந்தம் ஊட்டுவது அடுத்த பாசுரம் –
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று-மூன்று ஸஹஸ்ர நாமங்கள்
லோக நாத மாதவ பக்த வத்ஸல போல் இவையும்
மேன்மை ஸ்ரீ யபதித்தவம் எளிமை
இங்கு மாமாயன்-எளிமை முதலில் சொல்லி மேன்மை இறுதியில் சொல்லி இவற்றுக்கு நிதானம் ஸ்ரீயப்பதித்வம்
மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை -இவையும் ஒரு மூன்று உண்டே-

நாங்கள் நவின்றோம் என்றும் நவின்று மாமீர் நீர் இவளை எழுப்பு என்றுமாம்

தஸ்மிந் த்ருஷ்டே பராவரே இரண்டும் உண்டே -அருளிச் செயல்களில் எளிமை ஸ்வா பாவிகம் -பரத்வம் வந்தேறி)

——

நாலாயிரப்படி-அவதாரிகை –
கீழில் பாட்டில் முக்தர் போல் இருப்பாள் ஒருத்தியை எழுப்பிற்று –
இப் பாட்டில் நித்யர் படியையும்
மைத்துனர் முறைமையையும் உடையாள் ஒருத்தியை எழுப்புகிறது

தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும்
இட்டிடத்தே கிடக்கும் ஸ்ரீ பரத ஆழ்வானையும் போலே இருவரும்

(புதிதாக வந்தவர்கள் பரபரப்பாக இருப்பார்கள்
அங்கேயே உள்ளார் ஆறி இருப்பார்கள் அன்றோ –
ஆகவே முக்தர் நித்யர் படி என்கிறார்-இருவரும் ப்ராப்யத்தில் அனுபவத்தில் இருவகை தானே )

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ
ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-

தூ மணி மாடம்
துவளில் மா மணி மாடம் -(6-5-1)என்று குந்தமுண்டாய் -குற்றமுண்டாய் -எடுத்துக் கழிக்க வெண்டாதே
எல்லா நன்மையுமுடைய மணிகளால் செய்த மாடம்
அது ஜீவாத்மாவினுடைய அபஹத பாப்மத்வாதிகள் போலே –
இது அவனுடைய அபஹத பாப்மாத்வாதிகள் போலே –

திருத் தொலை வில்லி மங்கலத்துக்கு கழித்தவை கொண்டு செய்தது-ரசிகராய் இருப்பார் –
அந்தப்புரத்துக்கு நல்லது இட்டுச் செய்து அங்கு கழிந்தது இறே தந்தாமுக்கு மாளிகை செய்வது
நிர்தோஷமாய் உள்ளது எல்லாம் தெரியும்படி இருக்கிற ரத்ன மயமான மாடத்திலே-

சுற்றும் விளக்கெரியத்
மாணிக்கங்கள் ஒளியாலே பகல் விளக்குப் பட்டிருக்கச் செய்தேயும் –
மங்களார்த்தமாக விளக்கு எரிகிறது

புறம்பே நிற்கிறவர்களுக்கு உள்ளுள்ளது எல்லாம் தெரியும்படி எங்கனே என்ன
மாணிக்கக் குப்பி போலே புறம்பே நிற்க உள்ளுள்ளது எல்லாம் தோற்றா நின்றது என்கை

(மாலே மணி வண்ணா -திரு உள்ளத்தில் கோபிகள் மேல் இவனது அபிநிவேசம் நீரோட்டம் போல் தெரியுமே)

சுற்றும்
என்கிறது -இதஸ் தத -கிருஷ்ணன் கையைப் பிடித்துக் கொண்டு உலாவும் இடம் எல்லாம் எரிகை

(தானாக நடந்து போகும் விளக்கு போல் -சேர்த்திக்கு மட்டும் விளக்கு -நடத்திப் போகும் நில விளக்கு -சர விளக்கு -தொங்கும் விளக்குகள் போல் அல்லவே இங்கு)

எரிய
என்கிறது -எங்கள் அகங்கள் இருட்டிக் கிடக்க இங்கு
விளக்கு எரிகிறது வெறுமனே அன்று -என்கை
புறம்புள்ள விளக்குகள் புகையா நிற்க உள்ளுள்ள விளக்கு எரியா நின்றது என்கை –

தூபம் கமழத்
உணர்ந்த போதைக்குக் கண்ணுக்கு இலக்கு அன்றியே
க்ராண இந்த்ரியத்தாலே அனுபவிக்கும்படி இருக்கிற புகை

கமழ
பரிமளம் ஸஹ்யமான படி எங்கனே தான் இவளுக்கு –
சீருற்ற வகில் புகை -இத்யாதிப்படியே இறே அவர்களுக்குச் செல்லுகிறது

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-மாலைப்பூசல்

கமழ
புகை யுள்ளிட்டன வன்றிக்கே கந்தமே கமழ –

துயில் அணை மேல்
கிருஷ்ண விரஹத்தையும் மாற்றவற்றான படுக்கையிலே –
கிருஷ்ணன் வரிலும் இடம் பொரும்படியான படுக்கை
மென் மலர்ப் பள்ளி வெம்புள்ளியாய் இறே இவர்களுக்கு இருக்கிறது –

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

இருவருக்குப் படுத்த படுக்கையிலே ஒருவருக்கு படுக்க -உறங்க -போமோ
ப்ரஹ்மசாரி படுக்கையில் உறங்க மாட்டார்களே

கண் வளரும்
இளைய பெருமாளைப் போலே உறங்காமைக்குத் தாங்களும் உறங்குகைக்கும் நீயுமாயிற்றே -என்கிறார்கள்-
ஆர் தொடை குத்த உறங்குகிறது –
அங்குத்தைக்குத் தங்கள் ஒலியல் கொண்டு பரிசர்யை (மேல் உத்தரீயம் விசிறி போல் பரிமாறுதல் )பண்ண ஆசைப்படுகிறார்கள்

கண் வளரும்
இங்கனே யாகாதே ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லுவது
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு – இத்யாதிப்படியே தமப்பனார் பகவத் விஷயத்தில்
சொல்லுவது எல்லாம் ததீய விஷயத்திலே சொல்லுகிறாள்-

தொண்டனூர் நம்பி திருவடிச் சார்ந்தார் என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்ய –
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவர் அடிமை செய்து போந்த படியாலே
திரு நாட்டுக்கு நடந்தார் (திரு நாட்டை அலங்கரித்தார் )என்னுங்கோள் -என்றால் போலே
நஞ்சீயர் பிள்ளை ஏறு திருவுடையார் தாசரையும் அப்படியே அருளிச் செய்து அருளினார் –

மாமன் மகளே –
ஸ்வாமினியாயும்
தோழியாயும் அனுபவித்தது ஒழிய
இட்டீடு கொள்ளுகைக்கு விட ஒண்ணாத உறவை சம்பாதிக்கிறான்

பெரியாழ்வார் பெண் பிள்ளை திருவாய்ப்பாடியில் தனக்கு உஜ்ஜீவனமாக
ஒரு பிராகிருத சம்பந்தமும் உண்டாக்கிக் கொள்ளுகிறாள்

மாமான்
வைஷ்ணவர்களோடு எல்லா உறவும் ஸ்லாக்யமாய் இருக்கிறபடி
மாட மாளிகை சூழ் மதுரைப்பதி நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு (4-5)-என்று
ஸ்ரீ மதுரையிலே ஓர் உறவும் ஒரு மாளிகையும் சம்பாதித்தாள் இறே

அங்குத்தைக்கு உறவு ஸ்ரீ மாலா காரர் –
தானும் ஒரு மாலா காரர் மகள் இறே
கிருஷ்ண ராமவ் முதா யுக்தவ் மாலா கார க்ருஹம் கதவ்

(ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹவ் உபாகதவ் —மால்ய உப ஜீவன
-ஆகதவ் -உபாகதவ் -கேஹம் உபாகதவ் -ப்ரஸாதம் பரமவ் நாதவ் –
மாலாகார: க்ருபாகார: கோகிலஸ் வர பூஷண: I … மஹாதே’வி வஸேத்தஸ்ய க்ருஹே ஸதா)

மாமன் மகளே
தங்கள் சம்பந்தம் சொல்லாதே தங்கள் ப்ராதான்யத்தைச் சொல்லி இவளைச்  சேவிக்கிறார்கள் –
ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே சகேதி-என்னுமா போலே
அர்ஜுனனுக்கு கிருஷ்ணனோட்டை மைத்துனமை போலே இவர்களுக்கு மைத்துனமை

(ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம் –ஹே கரிஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி.–
அஜாநதா மஹிமாநம் தவேதம் -மயா ப்ரமாதாத் ப்ரணயேந வாபி–৷৷11.41৷৷-அபராத ஷாமணம்  -பண்ணுகிறான் )

அகப்படச் சொன்னவாறே உணர்ந்து -நீங்களே திறந்து புகுருங்கோள் என்ன
அது மாணிக்கக் கதவு காண் -அப்பியாசம் இல்லாதார்க்குத் தெரியாது காண் -என்று இவர்கள் சொல்ல

மணிக் கதவம் -தாள் திறவாய்-
துரியோதனன் நீருக்கும் பளிங்கு மண்டபத்துக்கு வாசி அறியாதே அகப்பட்டால் போலே அகப்பட ஒண்ணாது
எங்களைச் சிரிக்கவோ பார்க்கிறது –
எங்களுக்கு கதவும் சுவரும் தெரிகிறது இல்லை -நீயே திற -என்கிறார்கள்
தேசிகர்க்கு அல்லது தாள் திறக்கத் தெரியாது என்கை –

இப்படிச் சொல்லவும் இவள் பேசாதே கிடந்தவாறே
இவள் திருத் தாயார் இக்காலத்தில் (சிற்றம் சிறு காலை )வந்த பெண் பிள்ளைகளுக்கு
இவள் வாய் திறவாதே கிடப்பதே என்று நொந்தமை தோற்ற
அவள் உணர்ந்தமையை அறிந்த பெண் பிள்ளைகள்
மாமீர் அவளை எழுப்பீரோ
என்கிறார்கள் –

அடியார் தம் அடியார்
தொண்டர் தொண்டர் -என்று ஆழ்வாருடைய பாகவத சேஷத்வத்தில் எல்லை போலே
இவர்களும்-
ஒரு மாதுலனும் ஒரு மாமியாரும் -என்று –
சிற்றம் சிறு காலை  சம்பந்த சம்பந்தம் – சொல்லுகிறார்கள் –
அவள் தம் படி -அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்று இலள்-என்று பொகட்டுப் போவள் –

(அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால்
மின்னியும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ?–3-7-7-கள்வன் கொல் பதிகம்-அணி ஆலி புகுவர் கொலோ )

(பிள்ளையைக் கை தொழும் -அடியேனாய் இருக்கும் என்னை )தாய் என்று பழியிட்டு போக வேணுமோ
அடியேனாய் இருக்கிற என்னை என்னும் திருமங்கை ஆழ்வாரை வெட்டிமையர் என்றும்
எம்பெருமானாரை கோயில் அண்ணன் என்றும் ஆண்டாள் அருளிச் செய்யும்(கூரத்தாழ்வான் தர்மபத்னி இவ்வாறே எம்பெருமானைக் கூப்பிட )
அத்தை எம்பெருமானார் கேட்டருளி நான் அடியேன் அல்லேனோ –
என்னை இப்படி அருளிச் செய்வதே -என்றால் போலே இத்திருவாய்ப்பாடியும்

(அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற அடியேனை அண்ணன் என்று உறவு கொண்டாடி தள்ளி வைப்பதே-நான் அடியேன் அல்லேனோ -என்னை இப்படி அருளிச் செய்வதே என்றால் போலே)

அவளை எழுப்பீரோ
இவர்கள் தன் வாசலிலே நின்று அழைத்து நோவுபட இவள் பேசாதே கிடப்பதே என்று இவள்
நெஞ்சில் கிடக்கிறது முகத்திலே தோற்றின படியைக் கண்டு
நீராகிலும் அவளை எழுப்பீரோ என்கிறார்கள் –

அவளை இவர்களுக்குத் தோற்றமோ என்னில் மாளிகையிலே தெளிவாலே தோற்றும்
தாயார் தான் எழுப்பினாலோ என்னில் பாவஞ்ஜை யாகையாலே எழுப்பாள் –
இவர்கள் ஆற்றாமைக்கு உணராத இவள் இவளுடைய ஆந்ரு சம்ஸ்யத்துக்கு உணருமோ
ஆர்த்த த்வனி கேளாதவள் மத்யஸ்தர் வார்த்தையோ கேட்கப் புகுகிறாள் -என்னவுமாம் –
பின்னையும் உணரக் காணாமையாலே
ஆகையால் சிவிட்கென்று

உன் மகள் தான்-ஊமையோ –
என்கிறார்கள் -வ்யவஹார யோக்யை அன்றோ என்றபடி

அன்றிக்கே
அன்றிச் செவிடோ
நாங்கள் சொன்ன வார்த்தை கேளாதபடி அந்நிய பரையானாளோ

வனந்தலோ
இரவு எல்லாம் கிருஷ்ணனுக்கு ஆடல் கொடுத்து இப்போதோ உறங்குகிறது

ஏமப் பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
ஆர்த்த நாதம் கேளாதபடி காவலிட்டுக் கொண்டு -உணராதபடி உறங்குகைக்கு யாரேனும் சவித்தார் உண்டோ
மந்த்ரம் இவளுக்கு பிரசித்தம் இறே
உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ-என்று மாயப் பொடி தூவினார் உண்டோ -என்கை

திருத் தாயார் நீங்கள் இவளை எழுப்பும்படி அறிந்திலிகோள் -திரு நாமத்தை சொல்லுங்கோள் உணரும்படி என்ன

(இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன்-தன்னை   இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய்
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி  திசை நான்கும் ஆய் திங்கள் ஞாயிறு ஆகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே     -திரு நெடும் தாண்டகம்      (4)  )

(வண் துவாரபதி மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுது ஆடுமே போலேயும்
முளைக் கதிரை -கிளி பாட உணர்ந்தால் போலேயும்)

நாங்கள் சொல்லாத ஸ்ரீ சஹஸ்ர நாமம் உண்டோ என்கிறார்கள்

மா மாயன்
பெண்களுக்கு காணாச் சிறையாய்க் கிடக்குமவன்

மாதவன்
அதுக்கு குருகுல வாசம் பண்ணினவிடம் -லஷ்மீ பதி

(இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-குருகுல வாசம் பண்ணினவிடம் -லஷ்மீ பதி)

வைகுந்தன்
பெண்களோடு ஓக்க ஆண்களை அடிமை கொள்ளுமவன்-
அப் பெரிய மேன்மை யுடையனாய்
ஸ்ரீ யபதியாய் இருக்குமவன் கிடீர் பெண்களுக்கு எளியனாய் இருக்கிறான்

என்றென்று-நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்–
மேன்மைக்கு ஏகாந்தமான திரு நாமங்களை அநேகம் சொன்னோம்
நீர்மைக்கு ஏகாந்தமான திரு நாமங்களை அநேகம் சொன்னோம்
ஸ்ரீ யபதித்வத்துக்கும் ஏகாந்தமான திரு நாமங்களை அநேகம் சொன்னோம் -என்கிறார்கள்

எழுந்திராதாரை எங்களால் செய்யலாவது உண்டோ என்கிறார்கள்
உணராதாரை நீரைச் சொரிந்து உணர்த்துங்கோள் என்னுமா போலே

நாமம் பலவும் நவின்று மாமீர் அவளை எழுப்பீரோ -என்று கிரியை யாகவுமாம் –

(நவின்று -நவின்றோம் ஆனாலும் எழுந்து இருக்க வில்லை -என்றும்
நீர் நவின்று எழுப்பப் பாரும் என்றுமாம் –
ஓம் நமோ நாராயணாய–என்றதின் பின் – பவேத்- ஸ்யாம்-என்று கொண்டு அர்த்தம் கொள்ளுகிறோம் இது மந்த்ரம் ஆகையால்)

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading