ஸ்ரீ ராமானுஜர் நியமித்த எழுபத்து நான்கு சிம்மாசானாதிபதிகள் -ஸ்ரீ மா முனிகள் வைபவம் —

1-ஸ்ரீ பெரிய நம்பி திருக் குமாரர் -ஸ்ரீ புண்டரீக தாசர்
2–திருக் கோஷ்டியூர் நம்பி திருக் குமாரர் -ஸ்ரீ தெக்காழ்வான்
3—திருமாலை யாண்டான் திருக் குமாரர் -திரு சுந்தரத் தோளிணையான்
4—திருமலை நம்பி திருக் குமாரர் -ஸ்ரீ ராமாநுஜப் பிள்ளை
5—ஸ்ரீ கூரத் தாழ்வான் திருக் குமாரர் -ஸ்ரீ பராசர பட்டரும் ஸ்ரீ ராமப் பிள்ளையும்
6—ஸ்ரீ முதலியாண்டான் திருக் குமாரர் ஸ்ரீ கந்தாடை ஆண்டான்
7—ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
8—ஸ்ரீ கோ மடத் தாழ்வான்
9—திருக் கோவலூர் ஆழ்வான்
10—திரு மோகூர் ஆழ்வார்
11—திரு பிள்ளைப் பிள்ளை யாழ்வான்
12—ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்
13—ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
14—ஸ்ரீ அனந்தாழ்வான்
15—ஸ்ரீ மிளகு ஆழ்வான்
16—ஸ்ரீ நெய்யுண்ட ஆழ்வான்
17—ஸ்ரீ சேட்டலூர் சிறியாள்வான்
18—ஸ்ரீ வேதாந்தி ஆழ்வான்
19—ஸ்ரீ கோயில் ஆழ்வான்
20—ஸ்ரீ உக்கல் ஆழ்வான்
21—ஸ்ரீ அரணபுரத்து ஆழ்வான்
22—ஸ்ரீ எம்பார்
23—ஸ்ரீ கிடாம்பி ஆச்சான்
24—ஸ்ரீ கணியனூர் சிறியாச்சான்
25—ஸ்ரீ கொங்கில் ஆச்சான்
26—ஸ்ரீ ஈச்சம் பாடி யாச்சன்
27—திருமலை நல்லான்
28—ஸ்ரீ சட்டம் பள்ளி ஜீயர்
29—ஸ்ரீ ஈச்சம்பாடி ஜீயர்
30—திரு வெள்ளறை ஜீயர்
31—ஸ்ரீ ஆள் கொண்ட வில்லி ஜீயர்
32—திரு நகரிப் பிள்ளை
33—ஸ்ரீ காராஞ்சி சோமயாஜியார்
34—ஸ்ரீ அலங்கார வேங்கடவர்
35—ஸ்ரீ நம்பி கரும் தேவர்
36—ஸ்ரீ செருப்பள்ளி தேவராஜ பட்டர்
37—ஸ்ரீ பிள்ளை யுரந்தை யுடையார்
38—திருக் குருகைப் பிரான் பிள்ளான்
39—ஸ்ரீ பெரிய கோயில் வெள்ளாலார்
40—திருக் கண்ணபுரத்து எச்சான்
41—ஸ்ரீ ஆசூரிப் பிள்ளை
42—ஸ்ரீ முனிப் பெருமாள்
43—ஸ்ரீ அம்மங்கி பெருமாள்
44—ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்
45—ஸ்ரீ மாறொன்று இல்லா மாருதி யாண்டான்
46—ஸ்ரீ சோமயாஜி யாண்டான்
47—ஸ்ரீ ஜீயராண்டான்
48–ஸ்ரீ ஈயுண்ணிப் பிள்ளை யாண்டான்
49–ஸ்ரீ பெரியாண்டான்
50—ஸ்ரீ சிறியாண்டான்
51—ஸ்ரீ குஞ்சிப்பூர் சிறியாண்டான்
52—ஸ்ரீ அம்மங்கி யாண்டான்
53—ஸ்ரீ ஆளவந்தார் ஆண்டான்
54—ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
55—ஸ்ரீ தொண்டனூர் நம்பி
56—ஸ்ரீ மருதூர் நம்பி
57—ஸ்ரீ மழலூர் நம்பி
58—ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பி
59—ஸ்ரீ குரவி நம்பி
60—ஸ்ரீ முடும்பை நம்பி
61—ஸ்ரீ வடுக நம்பி
62—ஸ்ரீ வங்கி புரத்து நம்பி
63—ஸ்ரீ பராங்குச நம்பி
64—ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
65—ஸ்ரீ பருத்தி கொல்லை யம்மாள்
66—ஸ்ரீ உக்கல் யம்மாள்
67—ஸ்ரீ சொட்டை யம்மாள்
68—ஸ்ரீ முடும்பை யம்மாள்
69—ஸ்ரீ குமாண்டூர் பிள்ளை
70—ஸ்ரீ கிடாம்பி பெருமாள்
71—ஸ்ரீ குமாண்டூர் பிள்ளை
72—ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி
73—ஸ்ரீ கிடாம்பி பெருமாள்
74—ஸ்ரீ ஆர்க்காட்டு பிள்ளை –

—————————-

ஸ்ரீ கூரத் தாழ்வான் / ஸ்ரீ முதலியாண்டான் / ஸ்ரீ நடாதூர் ஆழ்வான் –ஸ்ரீ பாஷ்யத்துக்கு உசாத் துணை
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் –திரு வாராதன கைங்கர்யம்
ஸ்ரீ கிடாம்பி பெருமாள் ஸ்ரீ கிடாம்பி யாச்சன் –திரு மடப்பள்ளி கைங்கர்யம்
ஸ்ரீ வடுக நம்பி -எண்ணெய் காப்பு சாத்தும் கைங்கர்யம்
கோ மடத்து சிரியாழ்வான்–கலசப்பானை ஸ்ரீ பாத ரக்ஷை எடுக்கும் கைங்கர்யம்
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் -குருகுலம் நோக்கும் கைங்கர்யம்
ஸ்ரீ அம்மங்கி அம்மாள் பாலமுத்து காய்ச்சும் கைங்கர்யம்
ஸ்ரீ உக்கல் ஆழ்வான் -பிரசாத கலசம் எடுப்பர்
ஸ்ரீ உக்கல் அம்மாள் –திரு ஆலவட்டம் பரிமாறுவர்
மாருதிப் பெரியாண்டான் –திருக் கை சொம்பு பிடிப்பர்
மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான் -திரு மடத்துக்கு அமுது படி கறியமுது பாலமுது நெய்யமுது-முதலியன நடத்திப் போருவர்
ஸ்ரீ தூய முனி வேழம் -திருமஞ்சனம் எடுப்பர்
ஸ்ரீ திருவரங்கம் மாளிகையார் -ஸ்ரீ பண்டாரம் நோக்குவார்
ஸ்ரீ வண்டாரும் ஸ்ரீ சொண்டரும் கைக்காயிரம் பொன்னுக்கு ராஜ சேவை பண்ணி திரு மடத்துக்கு திருக்கை வழக்கு அருளுவர்
ஸ்ரீ ராமானுஜ வேளைக்காரர்-திருமேனி காவலாய்ப் போருவர்
ஸ்ரீ அளங்க நாட்டு ஆழ்வான் பிரதிபக்ஷ நிரஸனம் பண்ணிப் போருவர்
ஸ்ரீ அனந்தாழ்வான் -திருமலை திரு நந்தவன கைங்கர்யம்
திருக் குறுகைப் பிரான் பிள்ளான் -அபிமான புத்ரன் -ஆறாயிரப் படி அருளினார்

———————

ஸ்ரீ மன் நாத முனிகள்———–826——916——–90-
ஸ்ரீ உய்யக் கொண்டார் ———-886——991 ——105 —
ஸ்ரீ மணக்கால் நம்பி ————929—–1034——-105–
ஸ்ரீ ஆளவந்தார் —————–916-(976)—–1041——125-(65)
ஸ்ரீ எம்பெருமானார் ————-1017—–1037——120-
ஸ்ரீ எம்பார் ———————1026—–1140——114–
ஸ்ரீ கூரத் தாழ்வான் ————-1010—–1127——117–
ஸ்ரீ பராசர பட்டர் —————-1122—–1174——-52–
ஸ்ரீ நஞ்சீயர் ——————–1113—–1208——-95–
ஸ்ரீ நம்பிள்ளை —————–1147——1252——105
ஸ்ரீ வடக்குத் திரு வீதி பிள்ளை –1167——1262——95–
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை —-1167—–1262——-95—
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் —-1205—-1326——-121—
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை —1301—-1406——-97–

———————————————–

துலஸ்யம் ருத ஜந்மாசி சதாத்வம் கேசவபிரியே கேசவார்த்தம்லு நா மித்வாம் வரதா பவ சோபனே மோக்ஷ ஏக ஹேதோர் தரணி ப்ரஸூத விஷ்ணோஸ்
சமஸ் தஸ்ய ஜகத் ப்ரஸூத ஆராதநார்த்தம் புருஷோத்தமஸ்ய லு நாமி பத்ரம் துளஸீ க்ஷமஸ்வ -திருத் துழாய் பறிக்கும் பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தூரஸி தூர்வ தூர்வம்தம் தூர்வதம் யோஸ்மான் தூர்வதிதம் தூர்வயம்வயம் தூர்வா மஸ்மின் தேவானாம் அஸி –தூபம் கண்டு அருளும் பொழுது ஸ்லோகம்

யா ப்ரீதிர் விதுரார்பிதே முராரி போகுந்த்யர்ப்பித யாத்ருசீயா கோவர்த்தன மூர்த்னி யாச ப்ருதுகே ஸ்தன்யே யசோதரர்பிதே
பாரத்வாஜ சமர்ப்பிதே சபரி காதத்தேதரே யோஷிதாம் யா ப்ரீதிர் முனி பத்னி பக்திர் அசிதேப் யத்ரா பிதாம் தாம் குரு -என்றும
பிப்ரத் வேணும் ஜடர படயோ ஸ்ருங்க வேத்ரே சகஷே வாமே பாணவ் மஸ்ருண கபளம் தத்பலான் யங்குளீ ஷூதிஷ்டன் மத்யே
ஸ்வ பரி ஸூ ஹ்ருதோ காச யன்னர் மபிஸ்வை ஸ்வர் கேலோ கேமிஷதி புபுஜே யஞ்ஞபுக் பால கேளிம்-என்றும்
-அமுது செய்து அருளும் பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

——————

கோயில் திருமலை பெருமாள் கோயில் -பிரதானம் -திரு விருத்தம் இந்த மூன்றையும் மங்களாசாசனம்
நானிலம் வாய்க்கொண்டு நன்னீர் அறம் என்று கொத்து கொண்ட வேனிலும் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்கா வுது அம பூம் தென் இளம் சோலை யப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே–26-
தண்ணம் துழாய் வளை கொள்வது யாம் இழப்போம் நடுவே வண்ணம் துழாவி ஒரு வாடை உலவும் வள் வாயலகால்
புள் நந்துழாமே பொரு நீர்த் திருவரங்கா அருளாய் எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டு மின் அன்னவே -18-
முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய கலையோ வரையில்லை நாவோ குழறும் கடல் மண் எல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே –60-

பூவார் கழல்கள் -திருவேங்கடமுடையான் ஸ்ரீ சடாரி -/

—————————-

சாஷாத் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்ய மயீம் தநும்
மக்நான் உத்தரதே லோகான் காருண்யாத் சாஸ்திர பாணி நா –ஐயக்ய சம்ஹிதை

————————

கேழல் திகழ் வரக் கோலமொடு பெயரிய ஊழி ஒரு வினை உணர்த்தலின் –ஸ்ரீ வராஹ அவதாரம்
நீயே வளையொடு புரையும் வாலி யோற்கு அவன் இளையன் என்போர்க்கு இளையை -ஸ்ரீ பலராம அவதாரம் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
அவற்றுள் கீழ் ஏழ் உலகும் உற்ற அடியனை -திரு விக்ரமாவதாரம்
நின் புகழ புகைந்த நெஞ்சின் புலர்ந்த சாந்தின் பிருங்கலாதன் பல பல பிணி பட வலந்துழி–உறு வரை மார்பின் படி மதம் சாம்ப ஒதுங்கு
—-வெடிபட ஓடி தூண் தடியொடு–வக்கிர வாய்த்த உகிரினை –ஸ்ரீ நரஸிம்ஹாவதாரம்
இவை எல்லாம் – பரிபாடலில் உண்டே –

தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து சோவரணும் போர் மடியத் தொல்லிலங்கை
கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே -சிலப்பதிகாரம்

பாஞ்சராத்ம ஆகமம் -39-அவதாரங்களை சொல்லும் / அகிர்புத்யயை சம்கிதை –39-/ ஸ்ரீ மத் பாகவதம் –17-/ விஷ்வக்ஸேன சம்ஹிதை -36-
ஹம்ஸ/ ஹயக்ரீவ / நர நாராயண/மோகினி / தச அவதாரங்கள் -அருளிச் செயல்களில் உண்டே –

வையம் அளந்தான் தன் மார்பில் திரு நோக்காப் பெய் வளைக் கையாள் நப்பின்னை தானாம் -சிலப்பதிகாரம்
மா மணி வண்ணனும் தம்முனும் பிஞ்சையும் ஆடிய குரவை இஃதாம் -மணி மேகலை
நில மகட்க்கு கேள்வனும் நீண் நிரை நப்பின்னை இலவலர் வாய் இன்னம் அம்ருதம் எய்தினான் அன்றே -சிந்தாமணி
உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான் உத்தர மா மதுரைக் கச்சு -உபகேசி என்று நப்பின்னையை சொல்லும் பல பாடல்கள்

—————————-

-1323–உலுக்கான் படை எடுப்பு –1371–வரை
ஸ்ரீ முதலியாண்டான் வம்சத்தில் -திருக் கோபுரத்து நாயனார் -இவர் திருக் குமரர்கள் -பெரியண்ணன் / சிற்றண்ணன்/ தெய்வங்கள் பெருமாள் தோழப்பர்
பங்குனி உத்சவம் எட்டாம் நாள் -பன்றியாழ்வான் கோயிலிலே பொலியூட்டு மண்டபம் -பன்னீராயிரம் முடி திருத்திய பன்றி யாழ்வான் மேட்டுக் கலகம் -பிரசித்தம் இறே
பிள்ளை லோகாச்சார்யார் உடன் சென்றவர்கள் -கூர குலோத்தம தாசர் -திருக் கண்ணங்குடிப் பிள்ளை -திருப் புட் குழி ஜீயர்
-விளாஞ்சோலைப் பிள்ளை -நாலூர்ப் பிள்ளை -மணற் பாக்கத்து நம்பி -கொல்லி காவல தாசர் -கோட்டூர் அண்ணர்
-திருவாய் மொழிப் பிள்ளையின் திருத் தாயார் -சாத்விக அம்மையார் –திருக் கோபுரத்து நாயனார் -இவர் இடம் தான் கோயில் நிர்வாகம் –
ஜ்யோதிஷ்குடி -இயற்கையான குகையில் நம்பெருமாளுக்கு வியர்க்க -திருவாய் மொழிப பிள்ளை திருத்தாயாரை திரு ஆலவட்டம் இடச் சொல்ல
திவ்யமான திருமேனியும் புழுங்குமோ -என்ன
அம்மையே புழங்கும் காண்-வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து -12–6–என்று ஆழ்வார் திருமகளும் ஓதினார் காண் என்ன
-திருவால வட்டம் கைங்கர்யம் செய்ததும் வியவரை அடங்கிற்று –
திருமலை ஆழ்வார் -இப்பொழுது -40-திரு வயிறு -அனுவர்த்தித்து ரஹஸ்யார்த்தங்களை கூர குலோத்தம தாசருக்கும்
திருவாய் மொழிப் பொருள்களை உபதேசிக்கும் படி திருக் கண்ணங்குடிப் பிள்ளைக்கும் திருப் புட் குழி ஜீயருக்கும்
மற்றும் உள்ள அருளிச் செயல்களின் அர்த்தங்களை உபதேசிக்கும் படி நாலூர்ப் பிள்ளை இடமும்
ஸ்ரீ வசன பூஷண சாரார்த்தங்களை விளாஞ்சோலைப் பிள்ளையை உபதேசிக்கும் படியும் நியமித்து
விளாஞ்சோலை பிள்ளையை திரு வனந்த புரத்திலே வாழ் நாள் வரை கால ஷேபம்
தம் ஆச்சார்யர் திருத் தகப்பனார் வடக்குத் திரு வீதி பிள்ளை திருவடிகளை தியானித்து
அக்ஷய வருஷம் -ஆனி மாதம் –1323-ஜ்யேஷ்ட சுத்த துவாதசியில் -120-திரு நக்ஷத்தில் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் –
நம்பெருமாள் இங்கு இருந்து -திருமால் இரும் சோலை -ஒரு வருஷம் -இருந்து -அங்கு இருந்து -நத்தம் -திண்டுக்கல் -பழனி –
பொள்ளாச்சி -பாலக்காடு வழியாக கோழிக் கோடு
இன்றும் கோழிக் கோட்டில் கோவிந்த புறம் பகுதி உள்ளது -இங்கு நம்மாழ்வாரும் -எழுந்து அருள
நம் பெருமாள் தம்முடைய திவ்ய சிம்ஹாசனமான வட்ட மணை-முத்துச் சட்டை -திரு முன் பந்தம் பிரசாதித்து அருளினார்
தமிழ்நாடு கர்நாடக கேரளா -சங்கமிக்கும் ஓடம் -த்ரி கடம்ப புரம் -மருவி திருக் கணாம்பி -தேனை கிடம்பை –
இங்கு தான் ஒரே சிம்ஹாசனத்தில் நம்பெருமாளும் நம்மாழ்வாரும் ஒரு வருஷம் இருந்ததாகச் சொல்வர்
நாலூராச்சான் பிள்ளையை தேவ பெருமாள் திருமலை ஆழ்வாருக்கு ஈடு சாதிக்க அருளினார்
-1371–பரீதாபி வருஷம் -வைகாசி -17-நாள் நம்பெருமாள் திரும்பி வந்த நாள் என்பர் –

-1323-ஏப்ரல் ஜூலை -ஜ்யோதிஷ்குடி
-1323 –1325–திருமாலிரும் சோலை
-1325–1326–கோழிக் கோடு
-1326—1327-திருக் கடம்ப புரா-தேனை கிடாம்பி
–1327–1328-புங்கனூர் வழியாக – மேல் கோட்டை –
—1328—1343–மேல் கோட்டை -15-வருஷங்கள்
-1344—1370-திருமலை —20–வருஷங்கள்
—1371–செஞ்சி -அழகிய மணவாளம் கிராமம் -ஸ்ரீ ரெங்கம்

விஜய நகர மன்னரான -வீரகம் பண்ணனின் காலத்தில் -கோபணார்யன்-என்ற செஞ்சியை ஆண்ட மன்னவனால்-
திருமலையில் இருந்து செஞ்சிக்கு கொண்டு வரப்பட்டு
திருவரங்கத்தில் ப்ரதிஷ்டை செய்ததை கல்வெட்டு கூறுகிறது –

—————————————–

மா முனிகள் -கலி-4471-சாதாரண வருஷம்–1370 — -ஐப்பசி -26-நாள் வியாழக் கிழமை -திரு மூலம் நக்ஷத்ரம்
-அருணோதயம் போலே -1371-நம் பெருமாள் திரும்பி வர -1371-
திகழக் கிடந்தான் திரு நாவீறுடைய பிரான் –திருத் தந்தையார் / ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத் தாயார் –
சிக்கில் கிடாரம் -ஆழ்வார் திருநகரி -திருவவதாரம்
குரோதன வருஷம் -15-வயசில் -மகர மாதத்தில் -திருக் கல்யாணம் –
எம் அய்யன் இராமானுசன் -திருக் குமாரர் -அவரது திருக் குமாரருக்கும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -என்று திரு நாமம் –
இவரையே ஜீயர் நாயனார் என்பர் –இவர் தம்பிக்கு பெரியாழ்வார் அரையன் -திரு நாமம் –

ஸ்ரீ பெரிய நம்பி -ஸ்ரீ பராங்குச தாசரை -ஆஸ்ரயித்த ஸ்ரீ எம்பெருமானார் போலே-
ஸ்ரீ மா முனிகள் ஆஸ்ரயித்த -ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளையும் ஸ்ரீ சடகோப தாசர் எனப் படுவார் –
திருவாய்மொழிப் பிள்ளை திருவாராதன பெருமாள் -இனவாயர் தலைவன் –
-பெரியாழ்வார் போலே ஈடுபட்டு கம்பீரமான வியாக்கியானங்கள் இருவரும் அருளிச் செய்தார்கள்
சமஸ்க்ருத சாஸ்திரங்களில் பல காலும் கண் வையாமல் ஸ்ரீ பாஷ்யத்தை ஒருக்கால் கேட்டு நமக்கும் எம்பெருமானாருக்கும் பிரியமாகத்
திருவாய்மொழி முதலான அருளிச் செயலில் அநவரதம் பரிசீலனை பண்ணிக் கொண்டு பூர்வர்களைப் போலே
பெருமாளுக்கு மங்களா சாசனம் செய்து கொண்டு ஸ்ரீ ரெங்கத்திலே நித்ய வாசமாக எழுந்து அருளி இரும் என்று நியமித்து அருளினார்

ஒண்ணான வானமா மலை ஜீயர்-ராமானுஜ ஜீயர் – -பொன்னடிக்கால் ஜீயர் -நிழலும் அடி தாறுமாக இருந்தார் –
வாழி யுலகாசிரியன் வாழி யவன் மன்னு குலம்
-வாழி முடும்பை என்னும் மா நகரம்
வாழி மனம் சூழ்ந்த பேரின்பம் மல்கு மிகு
நல்லார் இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு –என்றும்
மணவாளன் மாறன் மணமுரை தான் வாழி
-மணவாளன் மன்னு குலம் வாழி -மணவாளன்
வாழி முடும்பை வாழி வடவீதி தான் வாழி
யவன் உரை செய்த நூல் -என்றும் தானியங்களை சாதித்து -ரஹஸ்யம் விளைந்த மண் என்று ஈடுபட்டார் –
இதுவோ பெரும் பூதூர் இங்கே பிறந்தோ
எதிராசர் எம்மிடரைத் தீர்த்தார் –இதுவோ தான்
தேங்கும் பொருநல் திரு நகரிக்கு ஒப்பான
ஓங்கு புகழுடைய வூர் -என்றும் அருளிச் செய்தார்

கிடாம்பி ஆச்சான் திருவம்சரான கிடாம்பி நாயனார் இடம் ஸ்ரீ பாஷ்யார்த்தம் கேட்டு அருளினார்
யதோத்தகாரி சந்நிதியில் ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளினார் -உபதேச முத்திரை உடன் இன்றும் அங்கே மா முனிகள் சேவை சாதித்து அருளுகிறார்
ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் ஜீயர் மடம்-7-பட்டம் சடகோப ஜீயர் –ச ப்ரஹ்மச்சாரி -இருவரும் திருவாய்மொழிப் பிள்ளை சிஷ்யர்கள்
-1425-வருஷம் -சந்நியாச ஆஸ்ரமம் -கைக் கொண்டார்
அவரது வாழி திரு நாம பாடல் –
மாசி தனில் விசாகத்தில் மகிழ்ந்து உதித்தோன் வாழியே
மகிழ் மாறன் மலர் அடியைப் போற்றுமவன் வாழியே
ஆசுகவி சுந்தர முனி அடி இணையோன் வாழியே
அழகிய மணவாள மா முனிக்கு ஆஸ்ரமம் அளித்த பிரான் வாழியே
மால் ஆதி நாதனையே தெய்வம் என்றான் வாழியே
தேசுடைய திருவரங்கர் திருவுடையோன் வாழியே
திகழ் சடகோப முனி திருவடிகள் வாழியே
கிடாம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார் -வடக்குத் திருவீதி பிள்ளை ப்ரசிஷ்யர் -உடைய கொள்ளுப் பேரர் திருக் குமாரர்
ஆதி வண் சடகோப ஜீயர் -சந்நியாச ஆஸ்ரமம் செய்ய வில்லை –

திரு ஆயி ஸ்வாமிகள் –
பூதூரில் வந்து உதித்த புண்ணியனாம் பூம் கமழும்
தாதாரு மகிழ் மார்பன் தான் இவனோ -தூதூர
வந்த நெடுமாலோ மணவாள மா முனிவன்
எந்தை யிவர் மூவரில் யார்
இயல் சாத்து பிரபந்தமும் மா முனிகளே அருளிச் செய்துள்ளார் –

மரு மலர் கமழும் சோலை மதுரை மா நகர் வந்து எய்தி
அருள் மொழி பெரிய நம்பி என்று எதிராசர்க்கு
அரும் பொருள் வழங்கும் எங்கள் ஏரி காத்து அருள்வார் கோயில்
திரு மகிழ் அடியில் செல்வீர் தீ வினை தீருமாறே–என்று ஸ்ரீ மதுராந்தகம் மங்களா சாசனம் மா முனிகள் சாத்தி அருளினார்

திருமங்கை ஆழ்வாரின் வடிவழகில் ஈடுபட்டு மா முனிகள் அருளிய வடிவழகு சூர்ணிகையும் தனிப்பாடல்களும்
அணைத்த வேலும் தொழுத கையும் -அழுந்திய திரு நாமமும்
ஓம் என்ற வாயும் உயர்ந்த மூக்கும் குளிர்ந்த முகமும்
பரந்த விழியும் பதிந்த நெற்றியும் நெறித்த புருவமும்
சுருண்ட குழலும் வடிந்த காதும் அசைந்த காதுகாப்பும்
தாழ்ந்த செவியும் சரிந்த கழுத்தும் அகன்ற மார்பும்
திரண்ட தோளும் நெளிந்த முதுகும் குவிந்த இடையும்
அல்லிக் கயிறும் அழுந்திய சீராவும் தூக்கிய கரும் கோவையும்
தொங்கலும் தனி மாலையும் தளிரும் மிளிருமாய் நிற்கிற நிலையும்
சாற்றிய திருத் தண்டையும் சாதாரண வீரக் கழலும்
தஞ்சமான தாளிணையும் குந்தியிட்ட கணைக் காலும்
குளிர வைத்த திருவடி மலரும் வாய்த்த மணங்கொல்லையும்
வயலாலி மணவாளனும் -வாடினேன் வாடி என்று
வாழ்வித்து அருளிய நீலக் கலிகன்றி மருவலர் தம் உடல் துணிய
வாழ் வீசும் பரகாலன் மங்கை மன்னன் வடிவே –

உறை கழித்த வாளையொத்த விழி மடந்தை மாதர் மேல்
உருக வைத்த மனம் ஒழித்து இவ்வுலகலந்த நம்பி மேல்
குறையை வைத்து மடல் எடுத்த குறையல் ஆளி திருமணம்
கொல்லை தன்னில் வழி பறித்த குற்றம் அற்ற செங்கையான்
மறையுரைத்த மந்திரத்தை மாலுரைக்க அவன் முன்னே
மடி ஒடுக்கி மனம் அடக்கி வாய் புதைத்து ஒன்றலர்
கறை குளித்த வேல் அணைத்து நின்ற விந்தை நிலைமை என்
கண்ணை விட்டு அகன்றிடாது கலியன் ஆணை ஆணையே

காதும் சொரி முத்தும் கையும் கதிர் வேலும்
தாது புனை தாளிணையும் தனிச் சிலம்பும்
என்னாணை ஒப்பார் இல்லையே

வேல் அணைத்த மார்பும் விளங்கு திரு வெட்டு எழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த வலச் செவியும்
தாளிணைத் தண்டையும் தார்க் கலியன் நன் முகமும்
கண்டு கழிக்கும் என் கண்

இதுவோ திருவரசு இதுவோ திரு மணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோ தான் வெட்டும் கலியன் வேலை வெட்டி (வெருட்டி) நெடுமாலை
எட்டு எழுத்தும் பறித்த விடம்

ஐயன் அருள் மாரி செய்ய அடியிணைகள் வாழியே
அந்துகிலும் சீராவும் மணியரையும் வாழியே
மையிலகு வேல் அணைத்த வண்மை மிகு வாழியே
மாறாமல் அஞ்சலி செய் மலர்க் கரங்கள் வாழியே
செய்ய கலனுடன் அலங்கல் சேர் மார்பும் வாழியே
திண் புயமும் பணிலம் அன்ன திருக் கழுத்தும் வாழியே
மையல் செய்யும் முக முறுவல் மலர்க் கண்கள் வாழியே
மன்னு முடி த் தெப்பாராம் வளையமுடன் வாழியே

ஸ்ரீ மதாலி ஸ்ரீ நகரீ நாதாய கலி வைரிணே
சதுஷ் கவி ப்ரதானாய பர காலாய மங்களம்
பத்மாநீ யுக்த குமுதவல்யா ப்ரியசீகீர்ஷாய
ஆராதித விஷ்ணு பக்தாயா பரகாலாய மங்களம்
கருணாகர காஞ்சீ ச ஸூகந்த புரா நாதத
நிவ்ருத்த ராஜ பாதாய பரகாலாய மங்களம்
ஸர்வஸ்வே விநியுக்தே அபி ராஜோ அர்த்தத்தை -ஸ்லோகங்கள்
பூஜிதாச் யுத பக்தாய பரகாலாய மங்களம்
ரங்கேச ராஜ்ஜோஸ் அர்க்த்தைஸ் சகலார்த்த அபஹாரிணே
தத் பக்த பூஜ நார்த்தம் து பரகாலாய மங்களம்
பக்தாராதன ஸூ ப்ரீதாத் ரங்க தாம்ந க்ருபாகராத்
ப்ராப்தாஷ்டாஷர மந்த்ராயா பரகாலாயா மங்களம்
ஸுவர்ண பாஹ்ய பிம்பேண ரங்கினோ கோபுராதிகம்
ஷட் கைங்கர்யம் க்ருதவதே பரகாலாய மங்களம்
ரங்காதி திவ்ய தேசான் ஷட் பிரபந்நைர் மநோரமை
பக்த்யாஸ்துவதே பூயாத் பரகாலாய மங்களம்

கலி -4533- பரிதாபி வருஷம் -திருப் பவித்ர திரு நாளிலே -ஆவணி -31-வெள்ளி கிழமை சுக்ல சதுர்த்தி ஸ்வாதி திரு நக்ஷத்ரம் -16–9–1432-தொடங்கி
அடுத்த-கலி -4534-பிரமாதீச வருஷம் ஆனி திரு மாதம் -பவ்ர்ணமி ஞாயிறு கிழமை திரு மூலம்வ -9–7–1433— ஈடு சாதித்து
-ஸ்ரீ சைல தயா பாத்திரம் -தனியன் அருள பெற்றார் -ஈட்டுப் பெருக்கர் பட்டம் –
நம் பெருமாள் மீண்டும் திருவரங்கம் எழுந்து அருளியதும் பரீதாபி வருஷம் -60-வருஷம் கழித்து ஈடு கேட்டு அருள ஆசை கொண்டார் –

பாராரு மங்கை திருவேங்கட முனி பட்டர் பிரான்
ஆராமம் சூழ் கோயில் கந்தாடை அண்ணன் எறும்பியப்பா
ஏராரும் அப்பிள்ளை அப்பிள்ளார் வாதி பயங்கரர் என்
பேரார்ந்த திக்கயம் சூழ் வர யோகியைச் சிந்தியுமே
வான மா மலை ஜீயர் பால்யம் தொடங்கி ஆஸ்ரயித்து சிஷ்ய ஸம்ருத்தியை பெருக்கினார்
கந்தாடை அண்ணன் -முதலியாண்டான் போலே திருப்பாதுகா ஸ்தானம்
எறும்பு அப்பா -வடுக நம்பி போலே தீவு மாற்று ஆர்யா அத்யந்த அபிமதரராய் இருந்தார்
பிரதிவாதி பயங்கர அண்ணன் -கூரத் தாழ்வான் போலே பிரதிபக்ஷ நிரசனத்துக்கு அசாத் துணையாக இருந்தார்
அப்பிள்ளை -அருளிச் செயல்கள் ஈடு ரக்ஷணம் உசாத் துணை /
ஐந்து திருவந்தாதிகளுக்கும்-முதல் மூன்று -நான்முகன் பெரிய -ஐந்துக்கும் -யதிராஜ விம்சதிக்கும் – உரை சாத்தி –
அப்பிள்ளார்-திரு மடம் நிர்வாகம் -அமுதுபடி பருப்பமுது-கறியமுது பாலமுது நெய்யமுது தயிரமுது-செய்து அருளினார்
பட்டர் பிரான் ஜீயர் -எம்பார் போலே -சர்வ வித கைங்கர்யங்களையும் செய்து அருளினார்
ஜீயர் நாயனார் பிள்ளான் போலே அத்ய யாரனீயராக இருந்து அருளினார் –

-1443–ருதிரோத்ரகாரி வருஷம் -மாசி -கிருஷ்ண பக்ஷம் -திருவோணம் கூடிய துவாதசி –16–2–1444-
ஆசிலாத மணவாள மா முனி யண்ணல் பூமி யுறு வைப்பசியில் திரு மூலம்
தேச நாளது வந்து அருள் செய்த நம் திருவாய் மொழிப் பிள்ளை தான்
ஈசனாகி எழுபத்து மூவாண்டு இவ்வுயிர்களையும் உய்வித்து வாழ்ந்தனன்
மாசி மால் பக்க துவாதசி மா மணி மண்டபத்து எய்தினான் வாழியே —

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading