ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம் கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம் –
பத்து அவதாரங்கள் -மூன்று பிரமாணம் / ஆறு த்ரவ்யம் / ஓன்று அத்ரவ்யம்
தர்ம பூத ஞானம் பார்த்து வருகிறோம் -பராக் அர்த்தம் / ஜீவன் பரமாத்மா ப்ரத்யக் தனக்கு பிரகாசம் —
ஞானம் வெளிப்பாடுகள் -ஞான பல இத்யாதி -கல்யாண குணங்கள் அவனது
ஜீவ பக்தியும் பிரபத்தியும் ஞானம் விசேஷம் -தானே -ஸூகம் – துக்கம் இவை போலே –
ஞானம் முதிர்ந்த நிலை பக்தி -/ நிவ்ருத்தி மகா விசுவாசம் -பிரபத்தி
கர்ம யோகம் ஞான யோகம் -ஆரம்ப விரோதிகள் -தொலைய –
சஹகாரிகள் —
சிலர் நேரே உபாயம் என்பர் –
பக்தி மனோ வாக் காயங்கள் -மூலம் -க
அஷ்டாங்க யோகம் -யமம் –நியமம் -ஆசனம் –சமாதி ரூபம்
யமம் -அஹிம்சை/ அஸ்தேயம் திருடாமல் / ப்ரஹ்மசர்யம் அபரிக்ரஹ்யம் பற்று இல்லாமல் /
நியமம் -நித்ய வேத உச்சாரணம் -பஞ்ச மகா யஜ்ஜம் / அருளிச் செயல்களும் வேத சாம்யம் தானே –
சரீர மனஸ் ஆத்ம சுத்தி –மூன்றும் வேண்டும் / துஷிடி திருப்தி -ஸந்தோஷம் இருப்பதை கொண்டு /
காய கிலேச ரூப தபஸ் -ஏகாதசி விரதம் போல்வன -/நியமித்து ஈடுபட்டு
ஆசனம் -உசிதமான இருக்கை -தியானத்துக்கு -பத்மாசனம் -போல்வன
பிராணாயாமம் பூரகம் கும்பகம் ரேசகம் மூன்றும் சமம் /
பிரதி அகாரணம் -புலன்களை இழுத்து ஆத்ம பரமாத்மா
தாரணை -நிலை பெற்று
த்யானம் -வேறு நினைவு இல்லாமல் ப்ரஹ்மம்
சமாதி -பகவத் வசீகரணம்
தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி நினைவின் தொடர் -எட்டு அங்கங்கள் –
ப்ரபன்னர் -ஸாத்ய பக்தி –கீழ் சொன்னது சாதன பக்தி -/முக்திக்கு சாதனம் -/அதுவே பிரயோஜனம் பிரபன்னனுக்கு –அதுவே சாத்தியம்
பகவத் கிருபையால் ஏற்பட்ட பக்தி ஸாத்ய பக்தி –கிருபையை ஏற்படுத்த சாதன பக்தி –
ஸாத்ய பக்தி –ஈஸ்வரனால் சாதிக்கப் பட்ட பக்தி -ஸாத்ய பக்தி -பல பக்தி என்றும் சொல்வர்
-பிரபன்னனுக்கு –சரணம் அடைந்த பின் மீதி உள்ள நாள்களுக்கு கால ஷேபம்-கைங்கர்யம் -அனுபவிக்க
-பிராப்ய ருசி வளர -ஸாத்ய பக்தி -ஸ்வயம் பிரயோஜன பக்தி -பண்ணும் இன்பமே -புருஷார்த்தம் –
அமுது செய்திடில் ஓன்று நூறு ஆயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்-என்பார்களே
-கொடுத்து கொள்ளாதே கொண்டத்துக்கும் கைக் கூலி கொடுக்க வேண்டும்
சாதன பக்தன் -பண்ண பண்ண-மாறலாம் –பரார்த்தமாக -ஸூ பிரயோஜனமாக இல்லாமல் -தானே பிரயோஜனமாக -ஸூயம் பிரயோஜனமாகும்-
பக்தியின் இன்மை தெளிவடைய வைக்கும் -ஸாத்ய பக்திக்கு வருகிறான் -பிரபன்னனுக்கு கிருபையால் வந்ததே இவனுக்கு பக்தியால் வந்ததே –
சாதன பக்தி -சர்வ அதிகாரம் இல்லையே
விவேக / விமோக –சாதன சப்தக ஜன்ய பக்தி –அப்பியாச / கிரியா / கல்யாண -இத்யாதிகள்
விவேக -துஷ்டமான அன்ன நிமித்த தோஷம் -மயிர் விழுந்து இத்யாதி
விமோகம் -லௌகிக விஷய பற்று இல்லாமல் /
அப்பியாசம் அடிக்கடி பகவத் சிந்தனை
கிரியா பஞ்ச மகா யஜ்ஜம் -பூத மனுஷ்ய ப்ரஹ்ம தேவதா பித்ரு –
கல்யாணம் உண்மையாக ஆர்ஜவம் கருணை அஹிம்சை தானம் பிறர் பொருள் ஆசை இல்லாமல் -முக்கரணங்கள் ஓன்று
அநவசாத அநு உத்ஹ்ருஷம் -வருத்தம் விருப்பு இல்லாமல் -ஏக்கம் இல்லாமல் –குதித்து அதி ஸந்தோஷம் இல்லாமல்
தரிசன சமானாதிகார மாக காட்டும் -பிரத்யஷஅவகாமம்-ஸூ சுகம்-அந்திம காலம் வரை பக்தி –
ஆபிராணாயாத் -அங்கும் பக்தி உண்டு அது பிராப்யமாகும்
மோக்ஷம் போவதில் வேறுபாடு பக்தனுக்கு பிரபன்னனுக்கும் தேக அவாஸேன முக்தி -தேவ பெருமாள் / பிராரப்த கர்ம அவ்சானே முக்தி -சாஸ்திரம்
பிரபன்னனுக்கு -சரீர அவசானத்தில் தொலைக்கிறார் என்றபடி –
பலனை அனுபவிக்க ஆரம்பம் ப்ராரப்தம் -சஞ்சித மூட்டை
ஆரம்பிக்காதவை –
சஞ்சிதம் -இருவருக்கும் போக்கி / சாதன பக்தன் ப்ராரப்தம் முடியும் வரை காத்து இருக்க வேண்டும் -அந்த ஜென்ம இறுதி –அந்திம ஸ்ம்ருதியும் இருக்க வேணும் –
உபாசன மஹாத்ம்யத்தால் பிராரப்த கர்மம் தொலைக்கிறான் இவன்
வர்த்தமான சரீர ஆரப்தம் -சரீராந்தர பிராரப்தம் -பிரபன்னனுக்கு வெட்டி விடுகிறார் -இந்த சரீர ஆரப்தம் அனுபவித்து தொலைக்க வேண்டும் –
அந்திம ஸ்ம்ருதியும் பிரபன்னனுக்கு வேண்டாம் -அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தேன் -அஹம் ஸ்மராமி மத் பக்தன் -என்றானே –
சரீரம் தொலைத்து கொடுக்கவில்லை தொலையும் பொழுது முக்தி கொடுக்கிறார்
உத்தராகம் தெரியாமல் செய்த வினைகளை போக்கி / தெரிந்து பண்ணியவற்றை -அனுதாபம் பட்டால் -வாத்சல்யம் காட்டி அத்தையும் போக்கி
-தெரிந்தும் பண்ணி அனுதாபமும் படாமல் –அனுபவித்தே முடிக்க வேண்டும் –
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -மோக்ஷ விரோத பாவங்கள் -பிரபன்னனுக்கு -வர்த்தமான பிராரப்த கர்மா தவிர /
ஸ்வா தந்திரம் இல்லாமால் மகா விசுவாசம் வேண்டும்
வேதன த்யான உபாசனம் பக்தி -பர்யாயம் -பர பக்தி பர ஞான பரம பக்தி அவஸ்தைகள் –
ஞானம் அறிகை/ த்ரஷ்டும் காண்கை/ அடைகை /ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் தசா வேறுபாடுகள் /
மார்க்க மதியத்தில் பர ஞானம் -சாஷாத்காரம் உண்டாகும் -/நானியாம் பரம பக்தியால் நைந்து –சூழ் விசும்பு தான் பர ஞானம் -முன்பு எல்லாம் பர பக்தி –
சங்கல்பத்தால் சாஸ்திரம் மீறி திருப் புளிய மரத்தடியில் ஆழ்வார்க்கு இந்த அவஸ்தைகள் கிடைத்தன –
மாதுளம் பழம் மாலை சாத்தி தங்கப் பட்டயம் சாத்தி திரு முடி சேவை -ஆழ்வாருக்கு –
கால விளம்பம் பொறுக்க மாட்டாமல் -பக்தி விட்டு பிரபன்னர் -என்ன ஒண்ணாது -சக்தி இருந்தாலும்
-புருஷோத்தம வித்யை -அவதார ரகஸ்யம் -இருக்கும் பக்தனுக்கு மறு பிறவி இல்லாமல் —
ஸ்வா தந்திரம் கேசமும் இல்லாமல் -ஸ்வரூப விருத்தம் என்பதால் ஈடுபடாமல்
பிரபத்தி ஸ்வரூப அனுரூபம் என்றவாறு
ஸாத்ய பக்தி உண்டு -சாதன பக்தி இல்லை என்றவாறு -சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் –
பூ தொடுப்பவர் சாதன பக்தன் ஸாத்ய பக்தன் பிரபன்னன் -நினைவு தானே -இவை எல்லாம் தர்ம பூத ஞான அவஸ்தைகள்
த்ரஷ்டவ்ய .-பார்த்த பின் கேட்டு மனனம் த்யானம் வேண்டுமா -அர்த்த கிரமப்படி மாற்றி -விதி ராக பிராப்தம் எவை
பண்ண விதிப்பது முதல் இரண்டும் -ராகம் அடுத்த இரண்டும் –
ஸ்ரோத்வயா விதி -/ மந்த்வயா -கேட்டதை உபாசனம் விதி /அப்புறம் -நிதித்யாஸனம் இடை விடாமல் -ராக பிராப்தம் / ஆசையால் தானே பார்ப்பான் –
ஸ்ரவணம் -தானே ஈடுபடுவான் -ஆசையால் கேளு விதியா ராக ப்ராப்தமா –வேதம் வாசித்து தானே வர மாட்டானா –
அனுவாதம் தான் விதி இல்லை முதல் இரண்டும் கூட -ஸ்ரவணா பிரதிஷடத்வாத் மனனம் -செய்வதை சொல்வதே -த்யானம் தான் விதிக்க பட வேண்டும்
வித்யை பேதம் -உபாசனம் ஐஹிக்க பலம் / மோக்ஷம் –உபகோஸல வித்யை /
மோக்ஷ ப்ரஹ்ம வித்யை உத்கீத வித்யை –/ அஷி வித்யை -சூர்யா மண்டை மதியம் /அந்தராதித்ய வித்யை
பூமா வித்யை குணங்கள் / சத் வித்யை / தஹர வித்யை -ஆத்மாவில் பஞ்சாக்கினி வித்யை –32-ஸ்ரீ வித்யை ராஜ கோபாலன் –
ந்யாஸ வித்யை -பிரபத்தி –அநந்ய சாத்தியே ஸூ அபிஷிடே-மஹா விசுவாச பூர்வகம் -தத் ஏக உபாயதா-உறுதி கொள்ளுதலே -பிரபத்தி
கத்யார்த்தா புத்யர்த்தா -புத்தி வியாபாரம் -ஞானம் தானே
ஆனு கூலஸ்ய சங்கல்பம் -இத்யாதி –அங்க பஞ்சகம் -பஞ்சாங்க வித்யை -/ பிரதி கூவலாஸ்ய வர்ஜனம் /கார்ப்பண்யம் -நியாசம்
–ஷட் அங்கம் ஆத்ம நிஷேப்பியம் -சேர்த்து -அங்கி அங்க பாவம்
யோஜனா பேதம் -நியாசம் அங்கி -தேசிகன் பக்ஷம் / அங்கம் எதிர்பார்க்க மாட்டான் சர்வ தரமான பரித்யஜ்யம் ஒன்றுமே வேண்டும் -தென்னாச்சார்யா சம்ப்ரதாயம்
அவகாத ஸ்வேதம் போலே சம்பாவித ஸ் வ பாவங்கள் -நெல் குத்த தானே வியர்க்குமா போலே இவை தானே வந்து விடும் –
மகா விசுவாசம் வலுக்க இவை தானே வரும் -அங்கம் எதிர்பார்த்தால் சாதனம் ஆகும்
விடுகை -ஒன்றே வேண்டும் -பரித்யஜ்ய என்பதால் -ஈஸ்வர ப்ரவ்ருத்தி -ஸூ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஏவ –
அந்திம ஸ்ம்ருதி நிரபேஷம் -ஸக்ருத் கர்தவ்யம் / ந்யாஸம் சரணாகதி சப்த வாஸ்யம்
ஞான விசேஷ ரூபம் -குரு முக -ரகஸ்யம் -சத் சம்பிரதாய பூர்வகம் —பால போதனாரத்தம் இது -இங்கே விரித்து சொல்ல முடியாது –
பர யுக்த உபாயம் நிரஸ்தம் -வேத பாஹ்யர் -சாருவாகம் -லோகாயுதன் -கண்டதே காட்சி கொண்டதே கோலம் –
அடுத்து ஞானம் க்ஷணிகம் -புத்தன் -க்ஷணிகமான ஞானமான ஆத்மாவே –
ஞான பரம்பரை முயல்கிறது என்றால் -நான் மோக்ஷம் போக வேறு ஒருவன் முயலுவது போலே ஆகும் –
சப்த பங்கி வாதம் ஜைனம் –முடிவு இல்லாமல் அநேகாந்தம் —
வைசேஷிகன் பாஷாணம் கல் போல் ஆவதே மோக்ஷம் என்பான்
நிரதிசய ஆஹ்லாத இன்பம் அன்றோ –
சாங்க்யன் -நிரீஸ்வர -பிரகிருதி புருஷன் மட்டும் -லோகம் இருவரே நடத்தும் -மோக்ஷம் சித்துக்கா அசித்துக்கா
மாயாவதி –லோகமே மீதியை -ப்ரஹ்மம் சத்யம் -ஜீவனும் ப்ரஹ்மம் ஓன்று கானல் நீர் -ப்ரஹ்மமே பிரமித்து உள்ளது
-அபேத ஞானமே மோக்ஷம் -வேதமே மாயை -உபாசனமும் மாயை -ஆச்சார்யனும் மாயை -அபாரமார்த்திகம் அனைத்தும்
-அபார ப்ரஹ்மம் -ஸ குண ப்ரஹ்மம் உபாசித்து நிர்குண ப்ரஹ்மம் அறிய
பாஸ்கரர் -யாதவ பிரகாசர் -கர்ம ஞான சமுச்சயம் மோக்ஷ உபாயம் என்பர் -உபாசனம் வேதம் சொல்லி -சாஸ்திர விரோதமாக பேசி –
சைவ பசுபதி –லிங்கம்வேவேரே அவாந்தர மதம் -பசுபதி ப்ராப்யம் -வேத விரோதம் பஸ்மம் தாரணம் வழி என்பர் -நிரசனம்
இப்படியாக தர்ம பூத ஞானம் நிரூபணம் –
ஞான சாரம் -சரணாகதி மற்று ஒரு –சாணப்பனார் கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே -அற்றே போகும் –
அடியே போற்றும் -மாம் ஏகம் -ஏவகாரம் எங்கும் –உண்டே -தேவதாந்தர சம்பந்தமும் பாகவத அபசாரமும் இருந்தால் கிடையாது
–கூட -பக்குவம் அடைய -விஷயாந்தர பற்றுக்கள் நீங்கி பக்குவம் அடைய காத்து இருந்தே பலம் கொடுக்கும் –
போக்ய பாக த்வரை -ஸ்ரீ வைகுண்டம் இருந்து / ஸ்ரீ வர குண மங்கை நின்று / திருப் புளிங்குடி கிடந்தது -ஆர்த்தி பூர்த்தி ஆனபின்பே –
அவா அற்று -ஆர்த்தி -தத்வ த்ரயம் விழுங்கி -ஆர்த்தி ஹரத்வம் -வீடு பெற்றார் –
சரணமாகும் –மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –தரணியாளன் -சரண்ய முகுந்த்வத்வம்
————-
ஆறு த்ரவ்யம் –நான்கு பார்த்தோம் -இனி ஜீவன் ஈஸ்வரன் -8-/-9-அத்ரவ்யம் -பத்தாவது பார்ப்போம்
ஜீவன் -தேக இந்திரிய மன பிராணம் தீ வியதிரிக்த -அணு-
ஞானம் உடையவை -ஜீவன் பரமாத்மா
சித்தும் அசைத்தும் சேஷம்
பரமாத்மாவும் அசைத்தும் தம் போலே ஆக்கும் தண்மை
-பிரத்யர்த்தவம் -தானே தனக்கு தெரியும் / சேதனத்வம் -அறிவுடைமை / ஆத்மத்வம் / கர்த்ருத்வாதி -கிரியாவுக்கு ஆஸ்ரயம்
-ஜீவன் தானே கர்த்தா -சாஸ்திரம் இவனுக்கு விதிக்கும் -/ ஈஸ்வரன் ரஷகத்வம் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் கர்த்ருத்வம் உண்டே
ப்ரத்யர்த்தம்–சுவாசமாய் ஸ்வயம் ஏவ -தனக்கு தானே பிரகாசிக்கும் -வேறு ஒன்றின் உதவி இல்லாமல்
விளக்கு தனக்கு விளக்கு தெரியாதே – -பராக்கு பிறருக்கு பிரகாசம்
ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கு மட்டும் இரண்டும்
சேதனத்வம் -ஞான ஆச்ரயத்வம் -ஞானம் உடைமை -ஞானத்தவம் -ஞானமாகவே இருக்கும் –
ஞானம் -ஞானமாக இருக்கும் ஞானம் உடையதாக இருக்காதே -தர்ம பூத ஞானம்
அசேதனம் இரண்டும் இல்லை
ஆத்மத்வம் -சரீர பிரதிசம்பந்த்வம் -எதிர்பார்த்து இருக்கும் -தந்தை மகன் இருந்தால் தானே -அதே போலே ஆத்மா -சரீரத்துக்கு அந்தராத்மா -என்றவாறு –
பரமாத்மா -ஆத்மாவை சரீரமாக கொண்டு
ஆத்மா தான் சரீரியாகவும் சரீரமாகவும் இருக்கும்
பரமாத்மா சரீரமாக இருக்க மாட்டார்
அசேதனம் சரீரமாகவே இருக்கும் –
நானே சரீரம் -தேகாத்ம அபிமானம் -தப்பு -அறிந்த ஞானி நான் சரீரம் என்றால் பரமாத்மாவுக்கு சரீரம் என்றால் தப்பு இல்லையே
இல்லதும் அல்லதும் அவன் உரு -உள்ளத்து அல்லது அவன் உரு -சர்வ விலக்ஷணன்–யானே நீ என் உடைமையும் நீயே
-யானே என்னை அறிய கில்லாதே யானே என் தனதே என்று இருந்தேன் முன்பு எல்லாம் –
ஸ்வரூப ஐக்கியம் சொல்ல வில்லை –யஸ்ய ஆத்மா சரீரம் -யஸ்ய பிருத்வி சரீரம் -நவேத –
-அஜடமாக இருந்தால் கவலை இல்லை -ஞானம் இருந்தும் அறிய வில்லையே ஐயகோ –
கர்த்ருத்வம் -சங்கல்ப ஞான ஆஸ்ரயத்வம் -இத்தை செய்வோம் என்கிற உறுதி எடுக்கும் ஞானத்துக்கு இருப்பிடமாக இருப்பது
ஏவம் சாமான்ய லக்ஷணம்
இனி விசேஷண லக்ஷணம் -இன்றியமையாது அசாதாரண லக்ஷணம் -தனித் தன்மை-
அணுவாக இருக்கும் பொழுதே சேதனமாக இருப்பர் / இயற்கையாவே சேஷத்வமாக இருந்து சேதனத்வம்
சேஷத்வயே சதி சேதனத்வம் -அடியேன் உள்ளான் -முதலில் -என்ற ஞானம் உள்ளவன் அடுத்து –
ஆச்சார்ய பூர்த்தி சிஷ்ய பூர்த்தி உள்ளவர் ஸ்ரீ கூரத் தாழ்வான் -அன்றோ –இரு கரையர் என்பர் இவர்களை ஸ்ரீ வடுக நம்பி –
-பொருவற்ற கேள்வியன் -மேன்மையர் கூட்டன் அல்லேன் -அமுதனார் –
அசித்வத் பாரதந்தர்யம் -சேஷத்வமே முக்கியம் -/ -8-8-முதல் -2–1 /2-பாசுரம் பரமாத்மாபுரம் -மேலே ஜீவாத்மா பரம் –
-யானும் தானாய் ஒழிந்தானே -இது கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் ஸூ த்ரங்களை ஒருங்க விட்டார்
யான் -தான் -ஸ்வரூப ஐக்கியம் இல்லையே -சரீராத்மா பாவம் சாமா நாதி கரண்யம்-தர்சனம் பேத ஏவ ச –
ஆய் –நீராய் நிலனாய் –சிவனாய் -அயனாய் -போலே -இங்கும் தானாய் -அனைத்தையும் -சரீரமாகக் கொண்ட நீயே
-இப்படிப்பட்ட ஆத்மாவுக்கு சரீரம் அன்றோ ஆத்மா -என்று ஆத்மாவின் பெருமையை சொல்லி -ஆழ்வாருக்கு உணர்த்தி –
உம்மை விடுவதாக இல்லை –உன்னை அல்லால் இல்லையே –சிக்கென செங்கண் மாலே -உம்மை விட்டேன்
-தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அவன் இடம் சொன்னது போலே –
சந்தர்ப்பம் இடம் சுட்டி பொருள் -சேஷத்வம் முன்னால்–அடியேன் உள்ளான் -உள்ளான் -வியாபகத்வம் -நான் அறிவது ஞாத்ருத்வம்
-அடியேன் உள்ளான் -சேஷத்வம் சொல்லி ஞாத்ருத்வம்
ஞானம் உடைய ஜீவாத்மா அடிமை
அடிமையான ஜீவாத்மா ஞானம் உடையவன் -இதுவே சரி –
ஜடப் பொருளும் அடிமை தான் -அடிமையான கல் போலே அடிமையான ஜீவாத்மா —
ரத்னமான சேஷத்வம் அறிவுள்ள ஜீவன் இடம் இருப்பதே பெருமை —ரத்ன பேட்டி -பேட்டி ரத்னம் போலே இவை இரண்டும் –
சேஷி உள்ளே இருக்கிறார் அறிந்து கைங்கர்யம் -செய்ய வேண்டுமே -உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –நல்ல நெஞ்சே –
இருப்பார் அறிந்தவன் உள்ளத்திலே பிரகாசிப்பார் -அப்ரஹ்மாத்வ தத்வம் இல்லை -சத்தைக்கு உள்ளே இருக்க வேண்டுமே –
ஏவம் ஆதேயத்தவ –ஆதாரம் அவன் / விதேயத்வம் / பராதீன கர்த்ருத்வம் / பரதந்த்ரமாக முக்யத்வம்
தேக இந்திரிய மனஸ் பிராணன் விலக்ஷணன்
மம சரீரம் -என்னுடைய என்பதால் தேக விலக்ஷணன்
சஷூசா பஸ்யாமி கண்ணால் பார்க்கிறேன் -மூன்றாம் வேற்றுமை உருபு -கருவி -கரணே த்ருதியீ —இந்திரிய விலக்ஷணன்
ஸ்ரோத்ர இந்த்ரியத்தால் கேட்டு -/ மனசால் நினைக்கிறேன் -வெண்ணெய் உன் என்னும் ஈனச் சொல் –நெஞ்சால் நினைப்பு அரிதால்
மம பிராணா -என்றும் சொல்கிறோமே –இயற்க்கை எய்தினார் -பஞ்ச பூதங்களில் -ஆச்சார்யர் திருவடி ஜீவாத்மா திருவடி சேர்ந்தார்
ஞானத்தை காட்டிலும் -அடியேன் ஞானத்தால் அறிந்தேன் -தீ புத்தி -விட வேறு -ஞானமாகவும் ஞானம் உடைமை -இரண்டும் உண்டே
தர்மிக் ஞானம் வேறே தர்ம ஞானம் வேறே -நான் நான் மட்டுமே தோன்றும் -பிரத்யக் –பேர் மறக்கலாம் அது என்னுடையது நான் மறக்காமல்
ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசம்
அணு பரிமாணம் -ஸ்தாபிப்பது -/ ஜைனர் சரீர பரிமாணம் என்பர் / சுருக்கம் வளர்ந்து -ஸ்வரூப விகாரம் இல்லையே –
சுக துக்க -ஸ்வ பாவ விகாரம் உண்டு -தன்மையில் தான் விகாரம்
உதக்ரந்தி -ஏவம் -பாவாதி ஒவ்டுலோமி சொல்லும் கருத்து ப்ரஹ்ம ஸூ த்ரம் –டங்கர் சுகதேவர் -போதாயனர் -பலர் உண்டே
கிளம்பி -உதக்ரந்தி பாதம் -4-அத்யாயம் -பல அத்யாயம் –ரஸ்மி ஸூ ர்ய கிரணம் -அர்ச்சிராதி -விபு என்றால் பிரயாணம் பண்ண முடியாதே
ஏஷோர் அணுராத்மா ஸ்ருதியும் சொல்லுமே
தர்ம பூத ஞான வியாப்தியால் சரீரம் எங்கும் வலிக்கும் பொழுது உணர்கிறோம் –
சகோதரி பிரவ்ருத்தி அநேக சரீரம் பொருந்தும் -ஆபாச விருத்திக்கு ஐம்பது சரீரம்
சொப்பனத்தில் நாமே பல கார்யம் செய்கிறோமே -ஆத்மா எங்கு -தட்டினால் எங்கு எழுந்து இருக்கிறார் -இங்கு தான்
அங்கு தர்ம பூத ஞானம் -பகவான் தான் ஸ்ருஷ்ட்டி -சொப்பனத்தில் கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்ட்டி
ஏகதா பவதி முக்தன் -கைங்கர்யத்துக்கு -தர்ம பூத ஞானம்
நித்யம் –க்ருத ப்ரநாசம்-செயல்கள் அழிய -கர்மத்துக்கு பலன் -அக்கருத்தை அப்யாமகம் -செய்யாததுக்கு அனுபவம் வருமே நித்தியமாக இல்லா விட்டால் –
தோஷம் வாராமைக்காக -புத்தன் ஞானம் க்ஷணிகம் அதுவே ஆத்மா -என்கிறான்-
பால்யத்தில் அறியாதவற்றை அறிந்தேன் -பூர்வ ஞானம் அனுசந்தான தொடர்ச்சி உண்டே -நித்யம்
ஜீவோ நஷ்ட -பிறந்தார் அளித்தார் என்பது -ஜாவஸ்ய தேக சம்பந்தத்தை -சொல்கிறோம் -வியோகம் நாசம் -ஸ்வரூபேண இல்லை நித்யமே
பிரதி சரிதத்தில் வேவ் வேறே ஆத்மா -நம் சரீரத்தில் பல ஆத்மாக்கள் -ஓன்று தான் கர்மா பலன் அனுபவிக்கும்
சமஸ்தானம் உருவ அமைப்பு -அசித்துக்குள்ளும் ஆத்மா உண்டு -மனுஷ்யன் சித் -கல் அசித் -தப்பான புரிதல்
-கல் போலே மநுஷ்யனும் அசித்தும் -உருவ அமைப்பு அசைத்து தான் -ஞானம் பிரகாசிக்காமல் கல் -பஞ்ச பூதத்தால் இவை ஆக்கப்பட்டு -அதனால் அசித்
ஜீவாத்மா -ஞானத்தால் லாக்கப் பட்டது -அதுவே உபாதானம் -ஜடம் இல்லை -அஜடம்-
கல்லுக்குள் ஆத்மா -ஞானம் பிரகாசிக்க வில்லை -என்றவாறு -மனுஷ்ய சரீரத்துக்குள் பதி ஞானம் -என்பது இல்லை
ஞானம் உள்ள பிறவி எடுக்க மனுஷ்ய சரீரம் எடுத்துக் கொண்டார் என்பதே சரி
கர்மா -வெளிச்சம் மறைக்க காகிதம் கொண்டு -வலிமையான கர்மா முழுவதும் மறைத்து -மறைக்கும் அளவால் வெளிச்சம் மாறுமே
பிறவியே கர்மா அனுகுணமாகவே தானே
-27-லட்ச்சம் பட்டாம் பூச்சி வகைகள் -அத்தனை துல்யமாக -கர்மா அளவு கொண்டு பிறவி கொடுக்கிறான் பரமாத்மா –
ஞான தாரதம்யத்தால் பிறவி –
கல்லுக்குள் மேலே கர்மா சேர்க்காமல் -கர்மா தொலையும் -பிராரப்தம் தொலையும் -மனுஷ்யன் தான் சேர்ப்பான் –
கல்ப கோடி காலம் அனுபவித்து முடிக்க முடியாத கர்மா அரை க்ஷணத்தில் சேர்க்கும் வல்லமை
மனுஷ்ய சரீரத்திலும் பல ஆத்மாக்கள் -ஓன்று மட்டுமே -கர்மா பலம் -மற்றவை கல்லுக்குள் வாழ்வது போலே -வாழும் –
சித்தான ஆத்மா மனுஷ்ய உடம்பில் -இருக்கும் -மனுஷ்ய சமஸ்தானமும் அசித்து தானே என்று உணர வேண்டும் –
ஆத்மா ஓன்று -ஜாதி ஏக வசனம் –ஜாதி நெல் போலே -சஜாதீயர் -வரீஹீ ராசி போலே
ஞான ஏக ஆகாரதயா-பண்டித சம தர்சன -வித்யா வினோத சம்பன்ன -ஸ்ரீ கீதை –
சரீரம் உடன் கூடி இருக்கும் பொழுது -விசிஷ்டா ஸ்வரூபம் நிஷ்க்ருஷ்ட -பிரிந்த ஸ்வரூபம் வாசி இல்லை -சரீரம் மூடி போலே
அஜன் நித்யன் சாஸ்வதன் புராணம் -ஏகோ பஹுனாம் -எண்ணிறந்த ஆத்மாவுக்கு -ஸ்வரூப ஐக்கியம் இல்லை -சேதன நாம் –
ஆத்யவதி ஞானம் -யேஷாம் ஆத்ம -எந்த எந்த ஆத்மாக்களுக்கு -அஞ்ஞானம் மூடி -கழிந்த பின்பு –
பல பல -கானல் நீர் போலே பொய் சங்கரர் -உபாதியால் பலவாக பிரமை -சந்திரன் கண்ணாடி குளம் கத்தி போலே
ப்ரஹ்மத்துக்கே அஞ்ஞானம் என்றால் யார் போக்க –
யேஷாம் -பன்மை -தோற்றம் உள்ளவர்களுக்கு -சாஸ்திர ஞானம் -வந்து –தேஷாம் -மீண்டும் பன்மை -அஞ்ஞானம் தொலைந்தவர்களுக்கு -ஒருமை இல்லையே –
பயிருக்கும் பிரகாசம் -ஆத்மாக்கள் அநேகம் -பின்னமே ஓன்று இல்லை –
ஸூ தா சூகி -இயற்கையாகவே சந்தோசம் -உபாதியால் -சம்சாரத்தால் -தூக்கி -கர்மம் -உபாதை வசத்தால்
அஹம் -கர்த்தா -போக்தா அனுபவிக்கிறார் -/சரீரீ -சரீரத்துக்கு -சரீரஞ்ச -பரமாத்மாவுக்கு
பிரகிருதி -சரீரம் -ஈஸ்வரன் உடன் சரீரம் -அஸ்ய ப்ரத்யக்ஷ -ஸ்ருதி -ஸூ யம் பிரகாசத்வம் சித்தம் -வேறு சக காரி வேண்டாம் -ஞானத்வாத் –
பக்ஷம் -சாத்தியம் -ஹேது -/ மழை / நெருப்பு / புகை போலே -ஆத்யா -சுயம் பிரகாசம் -ஞானத்வாத் –
விஞ்ஞானம் -சொல்லி விஞ்ஞாதா ஞானம் உடையவன் சொல்லாமல் ஸ்ருதி -ஞானமாகவே இருக்கிறான் ஞானம் உடையவனாயும் உள்ளான் -உப்புக்கட்டி போலே
உணர் முழு நலம் –முழு உணர்/ முழு நலம் -ஹார மத்திய மணி நியாயம்
உணர்வு ஞானம் நலம் பக்தி -அத்யந்த ஞான ஆனந்த மயன் என்றவாறு –அதனால் ஞானம் உடையவன் என்று சொல்லாமல் ஞானமாகவே சொல்லிற்று ஸ்ருதி –
தர்ம பூத ஞானம் போலே
ஞானத்தவ -அணுத்தவா -குற்றம் அற்ற -ஸ்வரூப நிரூபக தர்மம்
தேக பரிமாணம் ஜைன பக்ஷம் –இத்யாதி பல புற மதவாதிகள் -பக்ஷம் நிரசனம்
ஆத்மா -தர்ம பூத ஞானம்
அறிவு -அறிவை உடையவர் -அறியப் படும் பொருள் -/ ஞானம்-ஞாதா -ஜேயம் -மூன்றாகவும் ஆத்மா
தர்ம பூத ஞானம் -ஞானம் ஜேயம் -ஞாதாவாக இருக்க முடியாதே அசேதனம் தானே
பிரகிருதி -ஞானம் ஜாதா -இல்லாமல் ஜேயமாகவும் மட்டும் இருக்கும்
பரமாத்மாவும் ஆத்மாவை போலே -மேலே தாதா -கொடுப்பவராயும் -ஞானக் கை தா -அது அதுவே -ஸ்வாமி தாச பாவம் மாறாதே –
ஜீவாத்மா -8-அவதாரம் பார்த்து வருகிறோம் -/ அறிவு -அறியப்படும் பொருள் -அறிபவர் -ஞானம் -ஞாதா -ஜேயம் /-ஆத்மா மூன்றுமாக இருக்க /
தர்ம பூத ஞானம் -அறிவாளி ஞாதா வாக இருக்காது -பிரகிருதி ஞானம் ஞாதாவாக இல்லாமல் ஜேயமாகவே இருக்கும்
-1-புத்தன் -ஆத்மா க்ஷணிகம் -ஞானமே க்ஷணிகம் என்பான் -/-2-சாருவாகன் லோகாயுதன் -இனிமையாக பேசுவான் -கண்டதே காட்சி கொண்டதே கோலம் /
ஆகாசம் தவிர்ந்த பூத சதுஷ்ட்யம் -உடம்பே ஆத்மா என்பான்
-3-ஜைனன் தேக பரிமாணம் -யானையின் உடம்பில் யானையின் அளவு /
-4-சாங்க்யன் -ஈஸ்வர தத்வம் இல்லை -பிரகிருதி ஜீவன் -கர்த்ருத்வம் போக்த்ருத்வம் –சரீரத்தின் தன்மை ஆத்மாவுக்கு பிரதிபலிக்கும்
பாகவதம் தேவபூதிக்கு உபதேசம் -சேஸ்வர சாங்க்யன் -ஈஸ்வரனை ஒத்து கொண்டு –
-5-யாதவ பிரகாசர் ப்ரஹ்மத்துக்கு அம்சம் ஜீவன்
-6-பாஸ்கரன் -உபாதி சரீரம் –
-7-அத்வைதி -ப்ரஹ்மத்துக்கு அவித்யை அஞ்ஞானம் –
ஒரே தத்வம் -ப்ரஹ்மம் உண்மையா அஞ்ஞானம் உண்மையா -யார் போக்க -இத்யாதி வாதம் -அனுபவத்தி –
அந்தகாரண அவிச்சின்ன -மனசுக்குள் உள்ள பிரமம் பல ஜீவன் -வாசஸ்பதி மதம் -8-
ஆக எட்டு புற மதங்கள் நிரஸ்தம் /விபுத்வ வாத பக்ஷம் -ஆத்மா விபு -நாம் தர்ம பூத ஞானம் பிரசுரம் -/
அதிருஷ்ட ஜெனித-தேசாந்திர பலம் -நன்மை -இல்லாத இடங்களில் புகழ்ந்து -விருது கொடுப்பதால் -விபு என்பர் சிலர் -ஜீவ சம்பந்தம் அபாவத் –
நல்ல கார்ய பலமே அதிருஷ்டம் -எங்கேயோ எப்பொழுதோ ஆகும் -பகவத் ப்ரீதி ஜனக -ஜீவா கர்த்ருத்வ கர்மா விசேஷம் -தானே அதிருஷ்டம் –
ஈஸ்வரன் நித்யம் -அவர் திரு உள்ள உகப்பே காரணம் -/சங்கல்பம் ஏவ –விதி வாய்க்கின்றது காப்பார் யார் –இதனால் -பல உபலப்தி ந விரோதம்/
இருவர் விபுவாக இருக்க முடியாதே -இடிக்குமே/
ஜீவன் த்ரிவிதம் -பத்த முக்த நித்ய பேதாத் -கர்மம் அடியாக –
பத்தர் -அனுவ்ருத்த சம்சாரஹா -தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து ஈஸ்வர கைங்கர்யங்களை இழந்து இழந்தோம் என்ற நினைவும் இன்றிக்கே
-14-லோகத்தில் பிரம்மாதி கிரீட பர்யந்தம் -சேதன விசேஷங்கள்
உந்தி தாமரையில் தோன்றிய நான் முகன் -பூவில் நான்முகனைப் படைத்த தேவன் –
ருத்ரன் / சனகாதி /நாரதாதி தேவ ரிஷி /வசிஷ்டாதி ப்ரஹ்ம ரிஷி /புலஸ்ய தக்ஷ மரீசி காஸ்யப –நவ பிரஜாபதி /
திக்பலர்கள் / 14-இந்த்ரர்கள் -ஒரு பகல் பொழுதில் -14-உண்டே /மனுக்கள் / கின்னர்கர் வித்யாதரர்கள் /
திருப்பள்ளி எழுச்சியில் அனைவரும் பார்த்தோம் -/திருவடி இலங்கை எரிக்க அசோகவனம் ஏரியாதவற்றை பார்த்து பாட
-சேஷத்வ பாரதந்தர்யம் ஊறிய மனஸ் / தேவ யோனிகள் பலர்
மனுஷ்ய நான்கு வர்ணர் -பஹு விதம் -/திர்யக்குகள் பசு பஷி உஊர்ந்து வீட்டில் பூச்சு புழுக்கள் / ஸ்தாவரங்கள் மரம் புதர் கொடிகள் /
மரங்களுக்கும் ஓர் அறிவு உண்டே -நீர் இழுத்துக் கொண்டு சூரியன் நோக்கி வளர்ந்து
ஜராயு -பனிக்குடம் உடைந்து /முட்டை முளை விட்டு /வியர்வையில் இருந்து தொன்று
தேவர் மனுஷ்யர் -முதல் வகை –கர்ப்பப்பை -பிரேமா விதி விளக்கு ருத்ரன் புருவம் கோபம் -மானஸ புத்திரர் சிங்கள / சீதா பூமி
திரௌபதி அக்னி மதியத்தில் /பூத வேதாளங்கள் அயோநிஜை
திரியக்குகள் -கர்ப்பத்தில் / அண்டஜம் கோழி போல்வன / ஸ்வதஜா /ஸ்தாவரா -பூமியில் முளை விட்டு
பீஜாங்குர நியாயத்தால் பிறக்கிறார்கள் –கர்மா-விஷம ப்ரவாஹ -அவித்யா கர்மா ருசி வாசனை -அநாதிகால –
சக்கரமாக -மாறி மாறி பல பிறவிகள் –
கர்ப ஜென்ம பால யவ்வனம் ஜாகர் ஸ்வப்னா ஸூஷூப்தி மோர்ச்சா —ஜரா -மரண –ஸ்வர்க்க -நரக
-கமனாதி விவித விசித்திர அவஸ்தைகள் -இவை என்ன விசித்ரமே
அநாதி அனந்தர பிரகாரங்கள் –தாப த்ரயங்கள் -பகவத் அனுபவ விச்சேதம் -தடைப்பட்டு கிடப்பவர்கள் பத்தாத்மாக்கள்
சாஸ்திரம் வசப்பட்டு -/ படாமல் -இரண்டு வகை
தேவ மனுஷ்யர் -சாஸ்திர வஸ்யர் / திர்யக் ஸ்தாவரங்கள் -வஸ்யர் இல்லாமல்
இந்த்ரியங்களால் விவேக ஞானம் வேண்டுமே –
முமுஷூ புபுஷூ இரண்டு வகை சாஸ்திர வஸ்யர்
புபுஷூக்கள் தர்ம அர்த்த காமம் விருப்பம் / பொருள் இன்பம் -/ தர்ம பரர்கள்
கேவல -அர்த்த காமம் -தேகமே ஆத்மா என்பவர்கள்
தர்மம் -தேக ஆத்மா விவேகம் இருந்தவர்கள் தானே வருவார்கள்
தர்ம –அலௌகிக -வேற லோகம் -ஸ்ரேயாஸ் சாதனம் -தர்மம் -ஆத்மா உயர்ந்த பதவி அடையும் நம்புவான்
சாஸ்திரம் படித்து -வேதம் ஒத்து கொள்ள பட்ட ஹிதமே -இஷ்ட சாதனத்வம் தர்மத்வம் –
தானம் தீர்த்த யாத்திரை இத்யாதி -பர லோகம் ஓன்று உண்டு அறிந்தவர்
தர்ம பரர்கள் -தேவதாந்தரர் / பகவத் பிறர் -ப்ரம்ம ருத்ரர் அக்னி
ஆர்த்தோ ஜிஜ்ஜாசூ அர்த்தார்த்தி -ஐஸ்வர்யார்த்தி கைவல்யார்த்தி -தர்மம் எண்ணம் -பகவானை பற்றி
அண்டாதிபதியே -புகழ்ந்து -புது ஐஸ்வர்யம்
அசுரர் சத்ரவே நாம -விரோதி அழித்து மீட்டு கொடுக்க சொல்லி -ஜிஜ்ஜாசூ -கைவல்யார்த்தி –தேசிகர் பக்ஷம் -மாறி அடையலாம் -என்றாவது –
லோகாச்சார்யார் -பக்ஷம் -கைவல்யார்த்தியும் மோஷார்த்தி-போனவர் போனது தானே –
முமுஷுவுக்கு அறிய வேண்டிய ரகஸ்யத்ரய ஞானம் -கைவல்யார்த்திக்கு வேண்டாமே -அர்த்த சங்கோசம் -மா முனிகள்
முமுஷுக்கள் இரண்டு வகை -கைவல்யர் -மோக்ஷ பரர்கள் –
ஞான யோகத்தால் -சரீரம் தொலைந்து -அநு மாத்ர ஆத்மா தன்னை தானே அனுபவித்து -ஒன்றே -கைவல்யம் -கேவலம் -ப்ரஹ்ம அனுபவம் இல்லை
அண்டம் தாண்டி -விராஜா தாண்டி மூலையில் அனுபவம் நம் பக்ஷம் / தேசிகர் லீலா விபூதியில் /
ஏடு நிலத்தில் இடுவதில் முன்னம் அதனால் ஆழ்வார் கூப்பிடுகிறார் –
கர்மம் தொலைத்து -பகவத் அனுபவம் இல்லாத நிலை -விருப்பம் பட்டு -ஜீவ ஸ்வதந்திரம்/
சாஸ்திர வஸ்யர் -12-வயசுக்குள் இல்லை என்பர் -மரம் போலவே -வைதிக பிள்ளைகள் உள்ளே போக -அர்ஜுனன் உள்ளே போக வில்லையே
பிள்ளைகள் பக்தி பிரபத்தி தெரியாமல் / அர்ஜுனன் வைதிகர் -அறிந்தும் இச்சை ருசி இல்லாமல் பிரார்த்திக்காமல் இழந்தார்கள்
அர்ச்சிராதி மார்க்கம் –பதியால் கை விடப்பட்ட பத்னி நியாயம் போலே கைவல்யம் -உண்மை பத்னி விட்ட பதி இங்கு
பிரகிருதி மண்டலத்துக்குள் உள்ளான் -என்றால் திரும்பலாம் –
மோக்ஷ பரர்கள் இரு வகை -வேறு விதத்தில் -ஹிதம் பொறுத்து -பக்தர் பிரபன்னர்
அங்கங்கள் உடன் வேத வேதாங்கள் கற்று -பூர்வ உத்தர மீமாம்சை கற்று -சித் அசித் விலக்ஷண அதிசய ஆனந்த ரூப -நிகில ஹேய ப்ரத்ய நீக ப்ரஹ்மம்
-நிர்ணயம் -அடையும் பொருட்டு அங்கங்கள் உடன் பக்தி -கர்மா ஞான யோகங்கள் -ஸாத்ய உபாயம் –
த்ரை வர்ணம் அதிகாரி -வேதம் / ஸ்த்ரீகளும் அதிகாரிகள் இல்லை / ஆர்த்தித்தவம் -விருப்பம் வேண்டும் -சாமர்த்தியமும் வேணும் –
சூத்திரர்கள் அதிகாரிகள் இல்லை -அப சூத்ராதி அதிகரணம் –சொல்லுமே -/ பூர்வர்கள் -பக்தி பற்றாதது அதிகாரம் இல்லாமல் இல்லை
-ஸ்வாதந்தர்யம் -என்னுடைய கர்மா -நான் போக்குகிக் கொள்கிறேன் -பாரதந்த்ரயம் விரோதிக்குமே -ஸ்வரூப அனுரூபம் பிரபத்தி மட்டுமே
அனைவரும் அதிகாரிகள் -பசு மனுஷ பஷி வா —
ஜடாயு -கைங்கர்யம் / நம்பிள்ளை மரத்தை தொட்டு -ஆச்சார்ய அபிமானத்தால் உண்டே -/அர்த்தித்தவம் சாமர்த்தியம் இல்லாமல் அவராகவே செய்து
/ கைங்கர்யம் செய்ய ஞான அனுஷ்டானங்கள் –
பக்தி ஸ்வரூபம் -புத்தி பரிச்சேதத்தில் சொன்னோம் -ஞானம் அவஸ்தை தானே
சாதன ஸாத்ய பக்தி -வியாசாதிகள் சாதன பக்தர் / நாதாதிகள் ஸாத்ய பக்தர்கள் /பர பக்தி –ஏக ஸ்வபாவம் ஆக்க பிரார்த்தனை கத்ய த்ரயத்தில் –
பிரபன்னன்
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வம் / நோற்ற நோன்பு ஆராவமுது /இருவகை
தர்மம் அர்த்தம் காமம் கேட்பர் / சரணாகதி பண்ணி மோக்ஷம் -அபிலாஷை இப்படியும் இருக்குமே
சத்சங்கம் -நித்ய -அநித்ய பரவஸ்து விவேக ஞானம் சம்சாரம் நிர்வேதம் வைராக்யம் கொண்டு மோக்ஷ சித்யர்த்தம் ஆச்சார்யர் வேத பக்தர் –
குருவை அடைந்து புருஷகார பாதை மகா லஷ்மி –பக்தி உபாயாந்தரங்கள் சக்தி ஏவ பிராப்தி இல்லை என்று விட்டு –
ஆனுகூலஸ்ய சங்கல்பம் -இத்யாதி ஆறும் -இவை ஏற்பட வேண்டும் -அங்கங்கள் தேசிகன் -பிராந்தி கூலாஸ்ய வர்ஜனம்
-விசுவாசம் பிரார்த்தனை கைம்முதல் இல்லாமல் ஆத்ம சமர்ப்பணம் பண்ண வேண்டும்
பிள்ளை லோகாச்சார்யார் அங்கங்கள் எதிர்பார்க்காமல் -இவை சம்பாவித ஸ்வபாவங்கள் -பிரபன்னன் நிலையில்
இவை தன்னைடையே -நெல் குத்த வியர்வை தானே வருமே –
திருவடிகளை உபாயத்வேன ஸ்வீகரிக்கும் பிரபன்னன் –சர்வாதிகாரம்
த்விவிதம் -ஏகாந்தி / பரமைகாந்தி
ஏகாந்தி -வேற பலனும் -மோக்ஷமும் -/ பரமனை தவிர வேறே கேட்க்காமல் பரமை காந்தி –
தேவதாந்த்ர பஜனம் இல்லாதவர் இருவரும் -சாந்தீபன் போல்வார் -பிள்ளையை இவர் இடமே கேட்டாரே -/
மோர்காரி நாக பழக்காரி சிந்தையந்தி பெற்றார்கள் -கோதில் வாய்மையினார் -அத்தை கண்ணன் இடம் கேட்டதால் கோது இல்லையே /திருமேனி சேவித்து புத்தி மாறுமே
பிராப்ய ப்ராபக ஐக்கியம் -கண்ணே உன்னைக் காண கருதி –காண்பது புருஷார்த்தம் -கண்ணே உபாயம் /
பரமை காந்தி த்ருப்தன் ஆர்த்த —திருப்தர் -அவசியம் அனுபவிக்கும் பிராரப்தம் கர்மா முடித்து சரீர அவசானத்தில் -மோக்ஷம் அபேக்ஷை
பிரபத்தி உத்தர க்ஷணம் -நெருப்புக்குள் நடுவில் உஜ்ஜ்வல்யமான அக்னி மதியத்தில் இருப்பது போலே -சம்சாரம் -ஸ்திதி அதி துக்க -அஸஹ்யத்வாத் -ஆர்த்தன்/
முகுந்தன் திருவடிகள் -பிரபன்னனுக்கு -ஸ்வதந்த்ர பிரபத்தி -அங்க பிரபத்தி -பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க –
மரணமானால் வைகுந்தமா -மரணமாக்கி வைகுந்தமா –
முக்தன் –உபாய பரிக்ரஹம் அனந்தரம் -நித்ய நைமித்திய பகவத் ஆஞ்ஞா ரூப கர்மம் –பண்ணா விடில் குற்றம் –அனுக்ஞ்ஞா ரூப கர்மம் ப்ரீதிக்காக -/ஸ்வயம் பிரயோஜனமாக செய்து -இந்த எண்ணத்துடன் செய்ய வேண்டும் -/அறியாமையால் நழுவினால் தப்பில்லை –
பகவத் அபசாரம் பாகவத அஸஹ்ய அபசாரங்கள் தவிர்த்து
தேஹ அவசானத்தில் -புண்யம் மித்ரர் இடமும் -பாபங்கள் சத்ருக்கள் இடமும் -கொடுத்து –
வாக்கு மனஸ் எட்டாத ஹார்த்த–101 நாடி ஸூ ஷும்னா நாடி/ -சூர்யா க்ரனாத்வாரா அக்னி லோகம் கத்வா –ஜ்யோதிஸ் -அர்ச்சிராதி /
பகல் / சுக்ல பக்ஷம்/ உத்தராயணம் / சம்வத்சரம் -ஆதி / அபிமான தேவதைகள் – -12-லோகங்கள் சத்யா லோகம் வரை -மாதவன் தமர் எமர் -சத்கரித்து
மண்டலத்தை கீண்டு புக்கு –/ ஆதி வாஹிகர் –தாண்டி அழைத்து போகும் -உபசாரம் பெற்று -விரஜை-நீராடி -ஸூஷ்ம சரீரம் விட்டு – /
அமானவ கர ஸ்பர்சம் –பெற்று -/ அப்ராக்ருத திருமேனி பெற்று -/ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று / சேற்றை விலக்க ஒளி பிரசுரிக்கும் /
சதுர் புஜம் கொண்டு ஸாரூப்யம் / சாலோக்யம் சாமீப்யம் / சாம்யப்பத்தி / நகர பாலர்கள்/ த்வார பாலர்கள் -ஸ்ரீ வைகுண்டம் நுழைந்து
பதாகம் தோரணங்கள் -தீர்க்க பிரகாரம் -/ ஸஹித கோபுரம் -குறுகினர்/ அஸ்வத மரம் பார்த்து -சத்தம் மாலா ஹஸ்தா -உபசரித்த -ப்ரஹ்ம கந்தம்
சேவிக்க -பரஸ்பரம் மஹா மணி மண்டபம் -பர்யங்கம் சமீபம் -தர்மாதி பீடம் -எட்டு கால்கள் -சஹஸ்ர தள தாமரை/கூர்மாதீன திவ்ய லோகம்
-ஸ்ரீ பூமி நீளா சமேத – நடுவாக வீற்று இருக்கும் நாயகன் -/ திவ்ய ஆயுதம் கிரீடம் மகுடம் சூடாவதாம்சம் கேயூர கடக ஸ்ரீ வத்சம் கௌஸ்துபம்
உதர பந்தனம் பீதாம்பரம் –நூபுராதி திவ்ய பூஷணம் -கல்யாண குண சாகரம் -பாதேன பர்யங்கம் –
நீ யார் -அஹம் -சரீரம் பிரகாரம் -சம்பந்தம் நித்யம் ஞானம் இப்பொழுது -கடாக்ஷம் -அனுபவ ஜெனித பிரகர்ஷ -ஆனந்தம் உந்த மேலே ஆனந்தம்
-ஹர்ஷ பிரகர்ஷாத் -சர்வ கால –சர்வ தேச சர்வ வித கைங்கர்யங்கள் சர்வ அவஸ்த்தை உசித -எட்டு குணங்கள் உதித்தவனாய்
-முக்தன் -ப்ரஹ்ம சாம்யப்பத்தி போகத்தில் சாம்யம் –
சேர்ந்து இருந்து ப்ரஹ்மத்தின் குணங்களை அனுபவிக்கிறோம் -ஜகாத் வியாபார வர்ஜம் -போக மாத்ர சாம்ய லிங்கம் -ஐக்கியம் இல்லை –
பரமமான பதம் அடைகிறோம் -பிரயாணம் உண்டே -அத்வைதிகள் ஞான மாத்திரமே மோக்ஷம் -/
ஸ்வாமி சேஷி –தாசன் சேஷன் பாவம் மாறாது –நானாத்வம் சர்வ லோக சஞ்சாரம் உண்டு -முக்தனுக்கு -திரும்ப வர மாட்டான்
-அவன் அனுப்ப -வரலாம் கர்மத்தால் இல்லை -இச்சையால் -வருவது பொருந்தும் –
நித்யம் -எப்பொழுதுமே கர்மம் இல்லாமல் –சரீர வாசனை இல்லை -ஞான சங்கோசம் பிரசங்கம் ரஹிதம் அனந்தன் கருடர் விஷ்வக்சேனர்
-நித்ய இச்சையால் -நித்யராக இருப்பார்கள் -அநாதியாக-ஆதி அந்தம் இல்லை பகவத் அவதாரம் போலே இவர்களும் இச்சையால் ஆவிர்பவிப்பார்கள் —
————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply