இப்படி அவன் திரு நாமத்தை சொல்லுகைக்குத் தம் ஈடுபாட்டை அனுசந்தித்தவர் –
நெஞ்சே நீ முந்துற முன்னம் என்னைப் போல் கலங்கி தளராதே
அவன் ஸுந்தரியாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் என்கிறார்-
மதிக் கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக் கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக் கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்———51–
பதவுரை
நெஞ்சே–மனமே!
மணி வண்ணன் பாதம்–நீல மணி வண்ணனான எம்பெருமானது திருவடிகளை
மதி கண்டாய்–அநுஸந்திக்கக் கடவாய்-லாவண்யம் ஸூவுந்தர்யங்களை சொன்னவாறு –
பேர் ஆழி நின்று பெயர்ந்து–பெரிய திருப் பாற் கடலில் நின்றும் துயில் விட்டெழுந்து
கடல் கடைந்த–தேவர்களுக்கு அமுதங்கொடுக்க அக் கடலைக் கடைந்த
மதிக் கண்டாய்–சிந்திக்கக் கடவாய்
மற்று–இன்னமும்
அவன் பேர் தன்னை–அப் பெருமானது திருநாமங்களை
நீராழி வண்ணன் நிறம்–கடல் வண்ணனான அப் பெருமானுடைய திருமேனி நிறத்தை
மதிக் கண்டாய்–நினைக்கக் கடவாய்-
நெஞ்சே நீல மணி போலே இருந்து குளிர்ந்த வடிவை யுடையவன் திருவடிகளை புத்தி பண்ணு கிடாய் –
அதுக்கு மேலே அந்த சர்வேஸ்வரனுடைய அவ்வடிவழகுக்கு வாசகமான திரு நாமங்களை புத்தி பண்ணு கிடாய் –
தன் படுக்கையான பெரிய திருப் பாற் கடலில் நின்றும் பெயர்ந்து எழுந்து இருந்து நின்று –
பிரயோஜனாந்தர பரருக்கு அபேக்ஷித சம் விதானம் பண்ணுகைக்காக அந்தக் கடலைக் கடைந்தவனாய் –
அப்போது ஒரு வெண் கடலைக் கருங்கடல் கடைந்தால் போலே ஆகர்ஷகமாய் தோற்றுகிற
நிறைந்த நீரை யுடைய கடல் போன்ற வடிவை யுடையவன்
திரு நிறத்தை தேவர்களைப் போலே உப்புச் சாற்றை நச்சாதே
புத்தி பண்ணி அனுபவிக்கப் பார் கிடாய் –
(கண்டாய் -ஒவ்வொன்றையும் நன்றாக அனுபவித்து அனுசந்திக்க -சாத் மிக்க சாத் மிக்க-மீண்டும் மீண்டும் அருளிச் செய்கிறார் -)
(தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -விஸ்தாரமான திருமேனியோடே கண் வளரலாம் படியான பெரிய திருப்பாற் கடல்
கடல் கடையும் போதைக்கு ஒரு வெண் கடலை ஒரு கரும் கடல் கடைந்தால் போல் ரமணீயமாய்
கடல் போன்ற திரு நிறமுடையவனது அழகை பொறுக்கப் பொறுக்க அனுபவிக்கப் பாராய் என்கிறார் -)
——————————————————————————————————–
திரு உள்ளத்துக்கு உபதேசிக்க வல்லரான தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதி யுடைய வடிவு அழகையும்
பிராட்டி சம்பத்தால் வந்த மிக்க கிருபையையும் அனுசந்தித்து
இது ஓருவருக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார்
(அகல்விக்கத் தானும் கில்லான் -ஆழ்வாரை விட அவர் திரு உள்ளம் ஸ்ரேஷ்டம்
அத்தை யுடையவர் ஆகையால் ஆழ்வாருக்கும் ஸ்ரேஷ்டம்
மிதுன -சேர்த்தி –அவளாலேயே தர்மம் சாஸ்தாபனம் -இங்கே தர்மம்-ஆன்ரு சம்சயம் கிருபை –
கிருபையையும் அழகையம் -அளவிட்டு அறிய யாவராலும் முடியாதே-தானும் தன் தன்மை அரியான்)
நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52–
பதவுரை
நிறம் கரியன்–(காளமேகம் போல்) கருநிறமுள்ளவனும்
செய்ய நெடு மலராள் மார்வன்–சிவந்த நிறத்தையுடையளாய்ப் பெரிய தாமரைப் பூவை யிருப்பிடமாக வுடையளான
பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே யுடையனுமான எம்பெருமான்
அறம் பெரியன்–அருளில் பெருத்தவன்
ந்ருஸம் -கருணை இல்லாதவன் -ஆளவந்தார் நைச்யம் பாவித்து அருளிச் செய்துள்ளார் அன்றோ
ஆன்ரு சம்சயம் -தர்மம் -கருணை அதிசயம் –
மறம் புரிந்த வாள்–பகை பாராட்டின
அரக்கன் போல்வானை–வாட் கையனான இராவணன் போன்ற மஹா பலியை
(இராவனைப் போலவே தலை யறுக்க வேண்டியிருந்தும் அது செய்யாமல்)
வானவர் கோன் தானத்து–தேவேந்திரனுடைய லோகமான ஸ்வர்க்கம் போலே விலக்ஷணமான பாதாள லோகத்தில்
நீள் இருக்கைக்கு–நீண்ட காலம் வாழும்படியாக
உய்த்தான்–செலுத்தின அப் பெருமானுடைய
நெறி அது–அவ் வருள் வகையை
ஆர் அறிவார்–யார் தெரிந்து கொள்ள வல்லர்?-
(இந்திர லோகம் போல் பயப்பட வேண்டாத படி நீள் இருக்கையான பாதாள லோகம் என்றுமாம்
யார் அறிவார் -என்பதை ஒவ்வொன்றிலும் சேர்த்து அந்வயம்-அவனது கருணையின் பெருமை யார் அறியார்
அவளால் தான் இது என்பதை என்பதை யார் அறிவார்
மிதுனத்தில் அழகை யார் அறிவார் )
ஆஸ்ரிதருடைய சகல தாபங்களும் போம் படி ஸ்ரமஹரமான கறுத்த நிறத்தை யுடையவனாய் –
அந்நிறத்துக்கு பரபாகமான -சிவந்த நிறத்தை யுடையவளாய் -பெரிய தாமரைப் பூவை இருப்பிடமாக உடையளான
பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே யுடையவனாய் -அவளோட்டைத் தோயல் வாசியாலே ஆன்ரு சம்சயம் மிக்கு இருப்பவனாய்
திருவினைப் பிரிக்கை யாகிற குரூரமான செயலைச் செய்த சாயுதனான ராவணனோடு ஒத்து இருந்துள்ள மஹா பலியை
அழியச் செய்யாமல் அவனுடைய உதார குணமே பற்றாசாக -ராஜ்ய ஸ்ரத்தை பண்ணினவன் இழக்கிறது என் என்று
தன்னுடைய ஆன்ரு சம்சயத்தாலே தேவர்களுக்கு நிர்வாஹகனான இந்திரனுடைய ஸ்வர்க்கம் போலே விலக்ஷணமாய் இருக்கும்
பாதாள லோகத்தில் -அவனைப் போலே பரி கொடுத்து கண் பிசைய வேண்டாத படி –
நெடும் காலம் இருக்கைக்குப் பண்ணிக் கொடுத்த சர்வேஸ்வரனுடைய அந்த கிருபா பிரகாரத்தை –
ஆர் தான் அறிவார் -ஒருவராலும் அறியப் போகாது -என்று கருத்து –
(மிதுனச் சேர்த்தி அழகு –
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
நீலமுண்ட மின்னன்ன மேனிப்பெருமான் -திரு விருத்தம் -29-
தயா ஸ ராஜ ரிஷி ஸூத அபி ராமயா ஸமேயிவான் உத்தம ராஜ கன்யா
அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபுஸ் ஸ்ரீ யா விஷ்ணுர் இவாம் அரேஸ்வர -பால -77-80-
ஆன்ரு சம்ஸயம் பரோ தர்ம -ஸூ ந்தர -38-41-
அவள் சம்பந்த்தாலேயே பேர் அருளாளன் ஆகிறான் –
த்வத்த ஏவ மயா ஸ்ருத -ஸூ ந்தர -38-41- அவளுக்கும் அவன் உபதேசித்து அருளுவான்
அருளின் பெருமைக்கு உதாஹரணம் மேல் –
சுரி குழல் கனிவாய்த் திரு வினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன் -பெரிய திருமொழி -5-7-7-
கோபம் ஆஹாரயத் தீவ்ரம் -ஆரண்ய -24-34-
கோபஸ்ய வஸமே யிவான் -யுத்த -59-136-
யத்ராம்பு விந்யஸ்ய பலீர் மநோ ஜ்ஞாந் அவாப போகான் வஸூதாதலஸ்த
ததா மரத்வம் த்ரித ஸாதி பத்யம் மந்வந்தரம் பூர்ணம பேத ஸத்ரு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-30-
தான நீர் வார்த்ததாலேயே இவ்வுலகக போகங்களை அடைத்து மேலே ஒரு மன்வந்தர காலம் எதிரிகளே அற்றவனாய் மூ வுலகையும் ஆளும் தேவேந்திர பதவியும் பெற்றானே
நெறி என்று ஸ்வர்க்கம் போல் சிறந்த பாதாள உலகையும் அருளையும் காட்டும் )
———————————————————————————————————–
இப்படி ஆசூர பிரக்ருதிகள் அளவிலும் அனுக்ரஹ சீலனானவன் சர்வருக்கும் கண்ணாலே காணலாம் படி
வந்து நித்ய வாசம் பண்ணுகிற திருமலை கிடீர் நாங்கள் ஆதரிப்பது -என்கிறார் –
(கா மறு சீர் அவுணன் -அசுரர்களில் தாழ்ந்த நமக்காக அன்றோ திருவேங்கடத்தில் நித்ய வாஸம் செய்து அருளிகிறான்
நெறியார்-இதுவே நிரூபகம் கோயில் காப்பான் வாசல் காப்பான் போல் -இவர்களுக்கு -எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே போல் பாகவத உத்தமர்கள் வழியிலேயே ஊன்றி இருப்பார்களே)
நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிகள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–
பதவுரை
நெறியார்–திருமலை வழியிலேயே ஊன்றி யிருப்பவர்களுடைய
சூழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து அறியாது–கேச பாச மானது முன்னே முளைத்துப் பின்னே
தொங்கிக் கொண்டிருக்கவும் இது மநுஷ்ய வ்யக்தியென்று தெரிந்து கொள்ளாமல்
இள கிரி என்று எண்ணி–இது ஒரு சிறுமலை யென்று எண்ணிக் கொண்டு
பூங்கொடிகள்–பூங்கொடிகளானவை
பிரியாது–அவ்விடம் விட்டு நீங்காமல்
வைகும்–நித்ய வாஸம் பண்ணப் பெற்றதாய்
பொரு புனல் குன்று என்னும்–அலை யெறிகின்ற ஜல ஸம்ருத்தியை யுடைத்தான திருமலை யென்று ப்ரஸித்தமான
வேங்கடமே–திருவேங்கடமே
யாம் விரும்பும்–நாம் ஆசைப்பட வுரிய
வெற்பு–திருமலையாகும்.
திருமலை ஆழ்வார் உத்தேச்யமாக அனுசந்தித்து -மற்று ஓன்று அறியாதே (சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே -ஏவகாரம் -அவனும் வேண்டாம் )-வழி பட நெடும் காலம் ஆஸ்ரயிக்கிறவர்களுடைய
குழல் கற்றையிலே முன்னே முளைத்துப் பின்னளவும் வர வளர்ந்து -தாழ விழுந்து –
மூச்சு விடுதல் உடம்பு அசைத்தல் செய்யாதே இருக்கிற இருப்பைக் கொண்டு –
சில சேதனர் என்று அறியாதே சிறு மலைகளாய் இருக்கும் என்று புத்தி பண்ணி
அவ்விடத்தை விட்டு நீங்காதே -கண்ட இடம் எங்கும் பரந்து பூத்த கொடிகளானவை -நித்ய வாசம் பண்ணும் ஸ்தலமாய்
தன்னில் தான் திரை பொரா நின்றுள்ள (பொரு புனல் வேங்கடம் )ஜல ஸம்ருத்தியை யுடைத்தாய் அதி பிரசித்தமான
திருமலையே நாங்கள் பிராப்யமாகப் பற்றி இருக்கும் மலை-
(வெறியார் தண் சோலைத் திருவேங்கட மலை மேல் நெறியாய்க் கிடக்கும் நிலை யுடையேனாவேனே -பெருமாள் -4-8-
இதுவே உத்தேச்யம் என்று நெறியைக் கொண்டே இவர்கள் நிரூபகம் -)
—————————————————————————————————–
இப்படி தாம் அவன் உகந்து வர்த்திக்கும் திருமலை அளவும் விரும்புகையாலே
இவனும் தான் உகந்து வர்த்திக்கிற இரண்டு திருமலைகளில் பண்ணும் விருப்பத்தைத்
தம் திரு உள்ளத்தில் ஒன்றிலும் பண்ணிக் கொண்டு மேலே விழுகிற படியை அருளிச் செய்கிறார் –
(திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் –ஏறி வந்த ஏணி போல் -க்ருத்தஞ்ஞா கந்தம்)
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-
பதவுரை
வெற்பு என்ற–(தெற்கு) திருமலை யென்னப்படுகிற
இருஞ்சோலை–திருமாலிருஞ் சோலை யென்ன
வேங்கடம்–திருவேங்கடமென்ன
என்ன இவ் இரண்டும்–ஆகிய இத் திருமலைகளிரண்டும்
நிற்பு என்று–நாம் உகந்து வாழுமிடமென்று
நீ மதிக்கும் நீர்மை போல்–நீ திருவுள்ளம் பற்றி யிருக்குந் தன்மையை உடைத்தாயிருப்பது போலவே
உளம் கோயில்–(என்னுடைய) ஹ்ருதயமாகிற கோயிலும்
நிற்பு என்று–நீ உகந்து வாழுமிடமென்று
உள்ளம் வைத்து–பிரதிபத்தி பண்ணி
வெள்ளத்து இளம் கோவில்–திருப் பாற்கடலாகிற பாலாலயத்தை
கை விடேல் என்று–கைவிட வேண்டா என்ற
உள்ளினேன்–பிரார்த்திக்கின்றேன்.
(உள்ளினேன்-உள்ளம் வைத்ததாய் என்பதை நான் நினைத்தேன் என்றும்
கை விடேல் என்றும் உள்ளினேன்)
திருமால் இருஞ்சோலை மலை என்றும் திரு வேங்கடம் என்றும் திரு நாமத்தை யுடைத்தான
பெரிய திருமலை என்றும் சொல்லப் படுகிற இரண்டு ஸ்தானமும்
நாம் உகந்து வர்த்திக்கிற வாசஸ் ஸ்தானம் என்று நீ புத்தி பண்ணும் ஆதரிக்கும் ஸ்வ பாவம் போலே –
என்னுடைய ஹ்ருதயம் என்கிற வாசஸ் ஸ்தானமும் நீ உகந்து நித்ய வாசம் பண்ணும் ஸ்தானம் என்று
புத்தி பண்ணி என்னுடைய ஹிருதயத்தில் பண்ணுகிற அபிநிவேச அதிசயம் இருந்த படியால் அவ்வவ திருமலைகளில்
நிலை நிற்கும் படியும் -என் ஹிருதயம் திருந்தும் அளவும் வாசஸ் ஸ்தானமாக கர்ப்பித்ததான திருப் பாற் கடலாகிற
பாலாலயத்தையும் விடாத தேடுகிறாயோ என்று நினைத்து –
என் பக்கல் வருகைக்கு கிருஷி பண்ணின அவ்விடத்தை
க்ருதஜ்ஜத்தை தோற்றவும்-உன் உகப்பைப் பற்றவும் –
பிரானே கை விடாது ஒழிய வேணும் -என்று பிரார்த்தித்தேன் –
(மதுர கவி ஆழ்வார் கரிய கோலத் திருக் கோயில் காண்பது ஆழ்வார் திரு உள்ளம் உகப்புக்காக
ஆழ்வார் திரு உள்ளம் உகப்பதால் பெருமாளையும் இவற்றைக் கைவிடக் கூடாது என்கிறார்
மதுரகவி நிஷ்டையை அவனும் உகப்பானே)
(திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-பெரிய திருவந்தாதி –68-
நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–நான்முகன் திரு -36-
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே –பெரியாழ்வார் –5- 4-9 –
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் –
திருமாலிரும் சோலை மலையே–என்கிறபடியே -உகந்து அருளினை நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் –ஸ்ரீ வசன பூஷணம் –ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை -170-
அங்குத்தை வாசம் சாதனம் –இங்குத்தை வாசம் சாத்யம் –சூர்ணிகை-171-
கல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே-இது சித்தித்தால் –அவற்றில் ஆதாரம் மட்டமாய் இருக்கும் –சூரணை -174-
இளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று இவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –சூரணை -173-
ப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்–க்ருதஞ்சதையாலும்–பின்பு அவை அபிமதங்களாய் இருக்கும் —சூரணை -174-)
—————————————————————————————–
இப்படி தேவர் என் பக்கல் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தில் குறைவற்றேன்
தத் பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவர் தாமே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் –
(ஞானம் -மதி நலம் அருளினாய் -ஞப்த்தி பல முக்தி தலை சேர வேண்டாமோ -அதுக்குப் பலமாக பரம புருஷார்த்தமும் அருள வேண்டாமோ
இன்பக் கடலாழி நீ யருளிக் காண்–55–உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -நம்மாழ்வார் இந்த பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார்
ஏழு பிறப்பும் -அதிலும் எப்பொழுதும் -எல்லா நிலைகளிலும் ஸ்திரமாக -நின்று அருளிய படியால்
என்றும் மறந்து அறியேன் –இந்த அவஸ்தை உண்டாக்கி கூப்பிட வைத்து அருளினாய்)
(பிராட்டி சொல்ல ஸ்ரோத்வயா கேட்டுக்கொண்டு
மனனம் பண்ணி
யாதானும் பற்றி நீங்கும் விரதம் கொண்ட தப்பி ஒடம்ப பார்க்க
நிதித்யாசித்வய
ஏழு பிறப்பும் நினைத்தீர்
எப்பொழுதும் நினைத்தீர்
நிலை நின்று நினைத்தீர்
ஆக ஆத்மா கேட்டு மனனம் பண்ணி நிதித்யாஸவ்ய-பண்ணும் க்ருத்யம் நீயே ஏறிட்டுக் கொண்டாயே)
என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-
பதவுரை
வென்றி–ஜய சீலமாய்
அடல்–தீக்ஷணமான
ஆழி–சக்கரத்தை
அறிவனே–ஸர்வஜ்ஞனான பெருமானே!
ஏழ் பிறப்பும்–இப்படியிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்–ஒரு படிப்பட நின்று என்னைப் பற்றின நினைவு தப்பாமலிருந்ததனால்
என்றும் மறந்தறியேன்–உன்னை ஒருநாளும் மறப் பனல்லேன்
இன்பம் கடல் ஆழி–ஆநந்த ஸாகரத்தையும்
அருளிக் காண்–எனக்கு அருள வேணும்.
பிரபல பிரதிபந்தகங்களை அநாயாசேன போக்குகையாலே –
வரும் வெற்றி பெற்று யுடையனாய் யுத்த உன்முகனான திரு வாழியை -விரோதி நிரசன தவரையால்
எப்போதும் கையிலே கொண்டு இருக்குமவனாய் –
அஞ்ஞான அசக்தியாதிகளுக்கு கொள்கலமான என்னால் உன்னைப் பெற ஒண்ணாது –
ஞான சக்தி யாதிகளாலே குறைவற்ற உன்னாலே
உன்னைப் பெற வேணும் என்னும் இடத்தை பத்தும் பத்தாக அறிந்து இருக்கும் சர்வஞ்ஞனே–
இப்படி இருக்கிற நீ எல்லா ஜென்மங்களிலும்
எல்லா அவஸ்தைகளிலும் எதிர் சூழல் புக்கு இவன் நம்மை மறவாமல் பெற்றிடுவானுக்கு –
என்று நினைக்கும் நினைவு ஒருநாளும் மாறாதே
போருகிற ஸ்வ பாவத்தால் சர்வ காலத்திலும் தேவரீரை மறந்து அறியேன் —
இப்படி பேற்றுக்கு உறுப்பான ஞானத்தில் கண் அழிவு அறுத்துத் தந்த நீ
ஞான பலமாக ஒரு தேச விசேஷத்திலே போந்து பரி பூர்ணமாக உன்னை அனுபவித்து விளையக் கடவ
அபரிச்சின்னமான ஆனந்த சமுத்திரத்தை தந்து அருள வேணும் காண் —
கடல் என்றும் ஆழி என்றும்
மீ மிசைச் சொல்லாய்
மிகவும் நிரதிசய ஆனந்தத்தைச் சொன்னபடி –
(எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய -திருவாய் -2-7-6-என்கிறபடியே
எல்லாக் காலத்திலும் என்னைப் பற்றிய நிலையான நினைவு தன்மை உனக்கு இருக்கையாலே
நான் இப்பிறவியிலே உன்னை என்றும் அறியாத பெருமை பெற்றேன் –
என்னை நியமிக்க வல்ல உன்னாலே பெற்ற பேறு அன்றோ இது –
ஏழு பிறப்பு என்றது எக் காலத்தையும்
எப்பொழுதும் -எல்லா அவஸ்தைகளிலும் நிலைகளிலும் என்றவாறு
என்றும் மறந்து அறியேன் -என்னும்படியான ஞானத்தை விளைத்த நீயே அதன் பலனாக மோக்ஷத்தையும் தந்து அருள வேணும் –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -என்னுமா போலே –
இன்பக் கடல் ஆழி -பேர் இன்பம் -ஏஷ ஹ்யேவ ஆனந்தயாதி-தைத்ரியம் -7-1- இவனே ஆனந்தம் அடைவிக்கிறான் )
—————————————————————————————————————-
இப்படி பேறு அவனாலே என்று நிச்சயித்த பின்பு அருள் (அருளுவாய் )என்று கொண்டு வடிம்பிட்டு (மடி பிடித்து )நிர்பந்திக்கக் கடவதோ என்ன
ப்ரேமம் அடியாக வந்த இருட்சி (நமக்கோ அஞ்ஞானம் அடியாக வந்த இருட்சி )உடையாருக்கு பற்றாசும் அங்கே உண்டாய் இருக்க ஆறி இருக்கப் போமோ -என்கிறார் –
காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-
திருமாலை காண கழி காதல்–எம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று மிகுந்த விருப்பம்
கை மிக்கு காட்டினால் நாணப்பம என்றால்–மேன்மேலும் அதிகரித்தால்
அடங்கியிருக்க வேணுமென்றால் அடங்கி யிருக்க முடியுமோ?கருமாலை–கரிய திருமாலாகிய அப்பெருமானை
பொன் மேனி காட்டா முன்–அவனது அழகிய திருமேனி தானே காட்டிக் கொடுப்பதற்கு முன்னே-குணம் ஸ்வரூபம் காண முடியாதே -திருமேனி மூலமாகவே அறியலாம்
நாங்கள் திரு–நமக்குப் புருஷகார பூதையான் பிராட்டி
பேணி–விரும்பி
காட்டும்–காட்டிக் கொடுப்பள்-உக்கமும் தட்டொளியும் உன் மணாளனையும் தந்து -பிரார்த்திக்கும் படி உண்டே
காணக் காண பழைய நிலை கழிந்து மேன்மேல் என வளர்ந்து வருகிற ப்ரேமமானது என்னால் அமைக்க ஒண்ணாதபடி
கை கழிந்து விட்டால் -அவனே வந்து மேல் விழும் அளவும் நாம் பதறுகை ஸ்வரூப ஹானி என்று லஜ்ஜித்து
ஓர் இடத்தில் ஒதுங்கி இருக்க வேணும் என்று விசாரித்தால் –
அப்படி முறை (ஸ்வரூபம்)பார்த்து -தத் தஸ்ய சத்ருசம் பவேத் –என்று ஆறி இருக்கப் போமோ –
அதுக்கு மேலே ஸ்ரமஹரமான கறுத்த நிறத்தை யுடைய சர்வாதிகனாய் ஸ்ரீயபதியானவனை-
அத்யுஜ்ஜ்வலமாய் -ஸ்ப்ருஹணீயமான வடிவு காட்டுவதுக்கு முன்னே
நமக்கு ஸ்வாமி நியான பெரிய பிராட்டியார் -ஆதரித்துக் கொண்டு வந்து காட்டும் –
நகச்சின் நபராத்யதி -என்று மேல் விழுந்து சேர்க்கும் பிரபல புருஷ காரம் உண்டான பின்பு –
முறைக்குச் சேராது பதறுகை -என்று லஜ்ஜித்து ஆறி இருக்கப் போமோ -என்கிறபடி –
கண்டு அல்லது கழியாத காதல் -என்னவுமாம் –
(திருமேனி உபாயம் -உபாய பாவத்தை அவன் காட்டும் முன்பு பிராட்டி புருஷகாரம் பண்ண வேண்டுமே
திருமேனி உபாயம் என்பதுக்கு சிந்தயந்தி உதாஹரணம் -மானஸ ப்ரத்யக்ஷம் ஒன்றாலே பேறு பெற்றாள்
மாலாகாரர் -திரு மேனி காட்ட வந்தாயே -ஸூவுந்தர்ய ஸுசீல்ய குண ஆவிஷ்காரத்தால் அக்ரூர மாலாகார்களை பரம பாகவதர்களாக ஆக்கி அருளினாய் -கீதா பாஷ்யம் -)
(கழிய மிக்கதோர் காதல் காதலள்-திருவாய் -5-5-10-பேர் அமர் காதல் -பின் நின்ற காதல் -கழிய மிக்கதொரு காதல் -மூன்று திருவாய் மொழிகளில்
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் -திரு விருத்தம் – 97-காலம் கழிய கழிய காதல் மிக்கும் என்றும் -கண்டால் தான் கழியும் காதல் என்றுமாம்
புருஷகார பூதையான தாயாரும் அங்கே இருக்க -தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் -ஸூ ந்தர -39-30-என்று ஆறி இருக்க ஒண்ணாத தசை
சிந்த யந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்ச் வாஸ தயா முக்திம் கதான்யா கோப கன்யகா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-22-
ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ்
தன்யோஹம் அர்ச்சியிஷ்யாமீ த்யாஹ மால்ய உப ஜீவந -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-21-
ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண ஆவிஷ் காரேண அக்ரூர மாலாகாராதீந் பரம பாகவதான் க்ருத்வா -ஸ்ரீ கீதா பாஷ்ய ப்ரவேஸம்
கிம் ஏதத் நிர்த்தோஷ க இஹ ஜகதி –ஸ்ரீ குணரத்ன கோசம் -உசித உபாயங்களால் அவன் கோபத்தை ஆற்றுவாள்
தேந மைத்ரீ பவது -ஸூ ந்தர -21-21- அருள் உபதேசத்தாலும் அருள் நோக்காலும் இவனைத் திருத்துவாள்
அவனை அழகாலே திருத்துவாள் -இவனை அருளாலே திருத்துவாள்
இவளை உபாயமாகக் கொண்டால் உபாய நைரபேஷ்யத்துக்குக் குறை வருமே
லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமர் ஷிபி
மமாபி ச மதம் ஹ்யேதத் நான்யதா லக்ஷணம் பவேத் -ஸ்ரீ பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம்
ந கச்சின் ந அபராத்யதி -யுத்த -146-44-சேரவிடும் புருஷகார பூதையும் அங்கமு இருக்க ஆறி இருக்க ஒட்டுமோ -)
————————————————————————————————–
இப்படி பெரிய பிராட்டியாரோடே கூடி இருந்துள்ளவன் கிடி கோள்-சர்வ ஸமாஸ்ரயணீயன் -என்கிறது –
திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-
பதவுரை
திரு மங்கை–பெரிய பிராட்டியார்
நின்றருளும் தெய்வம்–நித்யவாஸஞ் செய்யப் பெற்ற எம்பெருமானை
நா வாழ்த்தும் கருமம்–நாவினாலே வாழத்துகையாகிற காரியத்தை
பாதம்–திருவடிகளையும்
பேர்–திருநாமங்களையும்
உரிமையால்–ஸ்வரூப ப்ராப்தியாலே
ஏத்தினோம்–போற்றுமவர்களாயிராநின்றோம்
கடைப்பிடி மின் கண்டீர்–உறுதியாகப் பற்றுங்கள்
நாம்–நாமோவென்றால்
இரும் தடக்கை எந்தை–மிக நீண்ட திருக்கைகளை யுடையனான எம்பெருமானுடைய (இவ்விஷயத்தை)
நால் திசையும்–நான்கு திசைகளிலுமுள்ளீர்!
கேட்டீரே–கேட்டீர்களோ?
ஸ்வ சம்பந்தத்தாலே அவனுக்கு சர்வ உத்கர்ஷத்தையும் யுண்டாக்க வல்ல ஸ்வ பாவத்தை யுடையளாய்
போக யோக்கியமான பருவத்தையும் யுடையளான -பெரிய பிராட்டியார் -இறையும் அகலகில்லேன் என்று
இடைவிடாமல் உறையும்படி இருக்கிற சர்வாதிகனானவனை –
நாவால் ஸ்தோத்ரம் பண்ணுகை யாகிற கார்யத்திலே ஒருப்படுங்கோள் கிடிகோள் –
முறை அறிந்த மாத்திரம் ஒழிய அவ் விஷயத்தைப் பற்றுகைக்கு ஈடான நன்மைகள்
ஒன்றும் அற்ற அயோக்யரான நாம் –
பணைத்து வளர்ந்த திருத் தோள்களை யுடைய என் ஸ்வாமி யானவனுடைய திருவடிகளை
நமக்கு வகுத்த சேஷி யன்றோ -என்கிற பிராப்தியாலே அவன் திரு நாமங்களைக் கொண்டு ஏத்தினோம் –
இவ் வர்த்தத்தை நாலு வகைப்பட்ட திக்கில் உள்ளார் எல்லாரும் கேட்டீர்களே –
கடைப் பிடிமின் கண்டீர் –
இத்தை ஓலக்க வார்த்தை என்று இராதே புத்தி பண்ணுங்கோள் கிடி கோள் -என்னவுமாம் –
(ஸ்ரீர் இத்யேவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம் -ஸ்ரீ சதுஸ்லோகி -1-
விஷ்ணோர் ஸ்ரீ -ஸ்ரீ விஷ்ணு புராணம்
உன் திரு -திருவாய் -10-10-2-
ஸ்வத ஸ்ரீ ஸ்தவம் விஷ்ணோ ஸ்வமஸி தத ஏவைஷ பகவான்
த்வதா யத்யர்த்தி த்வேப்ய பவத பராதீன விபவ
ஸ்வயா தீப்த்யா ரத்னம் பவமஹார்க்கம் ந வி குணம்
ந குண்ட ஸ்வா தந்தர்யம் பவதி ச ந சான்யா ஹித குணம் –ஸ்ரீ குணரத்ன கோசம்
ரத்ன பிரபா புஷ்ப பரிமள நியாயத்தாலே பர ப்ரஹ்மத்துவத்துக்குக் குறையில்லையே –
யுவதிஸ் ச குமாரிணி -யுவஸ்ய குமார –
அபாங்கா பூயாம் ஸோ யது பரி பரம் ப்ரஹ்ம தத பூத் —ஆழ்வான் அவளது பூர்ண கடாக்ஷத்தாலே பரம் பொருளானதே
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்னைஸ் தரந்தி -பட்டர்
அகலகில்லேன் இறையும் -6-10-10-)
———————————————————————————–
நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாய்த்து -சர்வேஸ்வரனுடைய கடாக்ஷத்தாலே -என்கிறார் –
நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58-
பதவுரை
வேம்பு பொருளின் நீர்மை ஆயினும்–(எம்பெருமானைப் பாடுவதானது) வேம்பு என்னும்
வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகத் தோன்றினாலும்
பொன் ஆழி–அழகிய திருவாழியை (கையுந்திருவாழியுமான சோத்தி யழகை)
பாடு என்று–பாடக் கடவாய் என்று
நா மங்கை–ஸரஸ்வதி யானவள்
நெஞ்சத்து–(நமது) நல்ல நெஞ்சிலே
ஒம்பி இருந்து–ஆதரித்து இருந்து நீர்மைக் கொண்டு
எம்மை–
ஓது வித்து–பகவத் விஷயத்தைப் பாடச் செய்ததனால்
நாம் பெற்று நன்மையும்–தாம் அடைந்த ஸுஹ்ருதமும் (எதனாலே வந்ததென்னில்)
அருள் நீர்மை தந்த அருள்–அருளையே இயல்வாக வுடைய ஸர்வேச்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது.
வேம்பாகிற பதார்த்தத்தினுடைய ஸ்வ பாவம் போலே -இவ் விஷயத்தை ஏத்துகை யாகிற இது
அத்யந்த விரசமாய் இருந்ததே யாகிலும்
ஸ்ப்ருஹணீயமான திரு வாழியும் கையுமான சேர்த்தி அழகை ப்ரீதிக்குப் போக்கு விட்டுப் பாடு -என்று
சரஸ்வதி யானவள் – நமக்கு இருந்து திருத்துகைக்கு நல்ல ஸ்தலமாய் இருந்தது என்று ஆதரிக்கும் படி
விலக்ஷணமான நெஞ்சிலே முகம் கருக நியமியாமல்
நம் நினைவிலே தன்னை அமைத்து ராஜ புத்திரர்களை பள்ளி ஓதுவிப்பாரைப் போலே
அனுவர்த்தித்துக் கொண்டு இருந்து நம்மை சந்தையிட்டு ஓதுவித்து நாம் அலாப்ய லாபமாகப் பெற்ற
அனுபவத்துக்குப் போக்கு வீடாகக் கவி பாடுகை யாகிற இந்த பரம புருஷார்த்தமும்
அருளுகையே ஸ்வ பாவமாக யுடையனான சர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக
சர்வ ஸ்வதானம் பண்ணின பிரசாதம் அடியாக வந்ததாய் இருக்கும் –
(லோகே வநஸ் பதி ப்ருஹஸ் பதி தார தம்யம் யஸ்யா
கடாக்ஷ பரிணாம முதா ஹரந்தி ஸா பாரதீ பகவதீ -ஸ்ரீ ஸ்தவம்
கருக்கோட்டியுள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருக்கோட்டி எந்தை திறம் -87-
ஸர்வ ரஸ -ஸர்வ கந்த
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே -திருவாய் -2-3-1-
வேம்பின் –பாடு என்று ஓதுவித்து -என்று அந்வயம் -ஸ்ரீ அப்பிள்ளை
வேம்பின் –பாடு என்று அருள் நீர்மை தந்த அருள் -என்று அந்வயம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை )
——————————————————————————————————–
இந்த லாபத்துக்கு அடியாக அடியிலே அவன் நிர்ஹேதுகமாக தம்மைக் கடாஷித்த படி -சொல்லுகிறார் –
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-
பதவுரை
அருள் புரிந்த சிந்தை–அருளோடு கூடின திருவுள்ளத்தை
அடியார் மேல் வைத்து–அடியவராகிய எங்கள் மேலே வைத்து
பொருள் தெரிந்து–அபதார்த்தமாகத் திருவுள்ளம் பற்றி
காண்குற்ற அப்போது–கடாக்ஷித்தருளுகிற காலத்திலே-பொருள் அல்லாத -நம்மை பொருளாக ஆக்கி -கடாக்ஷத்தாலே பொருள் ஆவோம்
இருள் திரிந்து–அஜ்ஞான விருள் நீங்கப் பெற்று
நோக்கினேன்–ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன்
நோக்கி–அப்படி ஆராய்ந்து
ஒண் கமலம் அது–அழகிய தாமரை மலர்களை என்னலாம் படி யுள்ள அத் திருவடிகளை
நினைந்தேன்–(ப்ராப்யமாக அநுஸ்ந்தித்தேன்
ஓர்ந்து–(இத் திருவடிகள் தவிர நமக்கு வேறு புகலில்லை யென்று நிரூபித்து
என்னையும்–ஆத்மாவையும்
அங்கு–அத் திருவடிகளிலே
ஒக்கினேன்–ஸமர்ப்பித்தேன்.-பிராபகமும் இதுவே –
அருளி அல்லது நிற்க ஒண்ணாத படி அருளிலே நோக்கான தேவருடைய திரு உள்ளத்தை -அருளுகைக்கு அடியான
சேஷத்வ ப்ராப்தியை யுடையரான -எங்கள் மேலே பரிபூர்ணமாக வைத்து -எங்களை ஒரு வஸ்து பூதராக நிரூபித்து
கடாக்ஷித்து அருளுகிற அந்த க்ஷணத்தில் அஞ்ஞானம் ஆகிற இருள் அடங்கலும் போன வழி தெரியாத படி சிதறிப் போய்
தேவர் சேஷீ நாம் சேஷம் -என்று இவருடைய ஸ்வரூபத்தையும் தெளியக் கண்டேன் –
(பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி என்றும்
அர்த்த பஞ்சக ஞானம் வந்த பின்பு என்றும்)
இப்படி இரண்டு தலையையும் யதாவாக தரிசித்து -தேவருடைய அழகிய தாமரை போலே நிரதிசய போக்யமான
அந்தத் திருவடிகளையே பரம பிராப்யமாக அனுசந்தித்தேன்
என்னோடு எனக்கு உரிமை இல்லாதபடி தேவர்க்கே அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கிற படியை உள்ளூற நிரூபித்து
ஸ்வ ரக்ஷணத்தில் இறங்குகைக்கு அநர்ஹனான என்னையும் தன்னைப் பெறுகைக்குத் தானே உபாயமான
அந்தத் திருவடிகளிலே நிஷேபித்தேன் -(நிஷேபம் ந்யாஸம் சரணாகதி பர்யாய சொற்கள் )
உபாயமும் தேவரீர் திருவடிகளே என்று அத்யவசித்தேன் என்றபடி
இத்தால் கிருபா பிரேரித ஹ்ருதயனாய்க் கொண்டு தம்மை அவன் நிர்ஹேதுகமாக கடாஷித்த படியையும்
கடாக்ஷ பலமாக ஸ்வரூப ப்ராப்ய ப்ராபகங்களை உணர்த்தி –
பதற்றம் துணிவுகள் தமக்கு உண்டாக்கின படியையும் சொல்லிற்று யாய்த்து –
அருளிலே நோக்கான திரு உள்ளத்தை எங்கள் மேல் வைத்து –
அத்தாலே நாங்கள் பதார்த்த விவேகம் பண்ணி தர்சிக்கிற போது என்னவுமாம் –
(பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -திருவாய் -5-7-3-
அசன்னேவ-இத்யாதி
யம் பஸ்யேந் மது ஸூதந –
பொருள் தெரிந்து -அர்த்த பஞ்சக ஞானம் பெற்று
ஸ்வத்மம் ஆத்மநீ ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யாம் ஹரி
நிக்ஷேபாபர பர்யாய ந்யாஸ –
த்வமே உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநா மதி ஸரணாகதி
இத்தால் கருணையாலேயே தூண்டப்பட்ட திரு உள்ளத்தை யுடைய அவன்
ஒரு கைம்முதலும் எதிர்பாராமல் இவரைக் கடாஷித்த படியையும்
அக்கடாக்ஷத்தாலேயே -அவன் ஸ்வரூபம் -ப்ராப்யம் -ப்ராபகம் -ஆகியவற்றை உணர்ந்த படியையும் –
அவனை அடையைப் பதற்றமும்
அவனே உபாயம் என்ற துணிவும்
உண்டானபடியை அருளிச் செய்தார் ஆயிற்று )
——————————————————————————————-
இப்படி சர்வேஸ்வரன் தன் பெருமை பாராதே எளியனாய் தம்மையே விஷயீ கரித்த நீர்மையை அனுசந்திக்கையாலே –
நிராங்குச ஸ்வ தந்த்ரனான மேன்மை அன்று அவனுக்கு நிலை நின்ற வேஷம் -ஆஸ்ரித பாரதந்த்ரயமே நிலை நின்ற வேஷம்
என்று அறிந்து இருக்குமவர்கள்– ஜகத்தை சர்வ காலமும் ரக்ஷிக்குமவர்கள் என்கிறார் –
(பிராட்டி புருஷகாரம் செய்யும் போது ஸ்வாதந்தர்யம் தலை சாயும் -ஆஸ்ரித பாரதந்தர்யமே நிலை நிற்கும்
எளிவரும் இயல்வினன் என்று சொல்லும் ஆழ்வார்களே மண் காப்பார் ஆவார்
அத்விதீயம் பரத்வம் ஒன்றை மட்டும் சொல்வார் அல்லர் -என்கிறார்)
ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60-
பதவுரை
ஓர் உருவம் அல்லை–(எம்பெருமானே) பரத்வமே வடியாக இருப்பவனன்று நீ,
ஒளி உருவம்–ஆஸ்ரித பரதந்த்ரமாய்க் கொண்டு ஒளி பெற்றிருக்கிற ஸ்வரூபம
நின் உருவம்–உனது வடியாம் (இப்படி ஆஸ்ரித பாரதந்திரியமே வடியாவிருக்கிற உன்னை)
இரு நிலத்தோர்–இப் பெரிய பூமண்டலத்திலுள்ளவர்கள்
ஈர் உருவன் என்பர்–பரத்வமாகிற பெரிய வடிவை யுடையனாகச் சொல்லு கின்றனர்
ஓர் உருவம்–ஆஸ்ரித பாரதந்திரிய மாகிய ஒரு வடிவே
ஆதி ஆம் வண்ணம்–எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவாயிருக்கு மென்பதை
அறிந்தாரவர் கண்டீர்–தெரிந்து கொள்ளுமவர்களே
நீதியால்–நியாயப்படி
நின்று–நிலைத்து நின்று
மண் காப்பார்–உலகத்தை ரக்ஷிக்க வல்லவராவர்.
உன் படி பார்த்தால் என்றும் ஒருபடிப்பட ஸ்வ தந்திரமாய் இருப்பதொரு ஸ்வரூபத்தை யுடையை அல்ல –
பக்தாநாம் தவம் பிரகாசாசே-என்கிறபடி
உன்னை ஆஸ்ரிதர் இட்ட வழக்காக்கி -அத்தாலே புகர் பெற்று
உஜ்ஜவலமாய் இருக்கிற ஸ்வரூபம் உனக்கு நிலை நின்ற ஸ்வரூபம் –
இப்படி இருக்கிற உன்னை இந்த ஆஸ்ரித பாரதந்தர்யத்தின் ஏற்றம் அறியாத மஹா பிரத்வியில் உள்ள வாய்கரையர் ஆனவர்கள்
நிராங்குச ஸ்வாதந்திரம் ஆகிற பெரிய ஸ்வரூபத்தை யுடையவன் -என்று இத்தை பெரிய ஏற்றமாகச் சொல்லா நின்றார்கள் –
ப்ரணத பரதந்த்ரம் மநுமஹே -என்னும் படி
ஆஸ்ரித பரதந்த்ரம் ஆகிற ஒருபடிப்பட்ட ஸ்வரூபமே சர்வ சத்தா ஹேதுவாய்க் கொண்டு
ஆஸ்ரிதற்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருக்கும் பிரகாரத்தை உள்ளபடி அறிந்து இருக்கும் மஹாத்மாக்களான அவர்கள் கிடீர்
ஈஸ்வரன் அரியன் -என்று ஜகத்தை வழியடித்து உக்கிர வாய்கரையரைப் போலே அன்றிக்கே
அவன் நீர்மையின் ஏற்றத்தைச் சொல்லி எல்லாரையும் பகவத் பிரவணராம் படி திருத்துகிற நியாயத்தாலே உருவ நின்று
ஜகத்தை தளிரும் முறியுமாம் படி ரக்ஷிக்கிறவர்கள் —
அன்றிக்கே
பஹுதா விஜாயதே -என்கிறபடி
ஆஸ்ரிதார்த்தமாக அவதரித்த தசையில் அநேகம் திரு மேனியை யுடையை யாகையாலே
ஒரு படிப்பட்ட விக்ரஹத்தை உடையை யல்லை-
(இந்த இரண்டாம் நிர்வாகம் இவர் வியாக்யானத்தில் மட்டும் உண்டு –
விபவம் தொடங்கி அர்ச்சாவதார பர்யந்தமாக கிருஷி பண்ணினவன் நீ அன்றோ என்கிறார்)
ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான –
இப்படி பல வடிவு எடுத்துக் கொண்டு பிறந்த இடத்திலும் ஸூ த்த சத்வ மயமாகக் கொண்டு
நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கும் உன் திரு மேனி –
இப்படி அசாதாரண விக்ரஹமும் -அவதார விக்ரஹமும் ஆகிற
இரண்டு விக்ரஹத்தையும் யுடையையாய் இருப்புதி-என்று
உன்னை நாட்டில் அறிவுடையார் சொல்லா நின்றார்கள் –
இதர சஜாதீயமாய் அவதரித்த அந்த அவதார விக்ரஹம் ஒன்றுமே
கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்தி ராபிசாப்யய -என்கிறபடியே
ஜகத் காரணமாய் இருக்கிற பிரகாரத்தை அறிந்தவர்கள் ஜகத்தை எப்போதும் ரக்ஷிக்குமவர்கள் -என்றுமாம் –
(நிரங்குச ஸ்வா தந்தர்யம் அவனுக்கு ஸ்வரூபம் அன்று ஆஸ்ரித பரதந்த்ரமே நிலை நின்ற ஸ்வரூபம் -என்கிறார் –
நித்யோ நித்யா நாம் சேதனஸ் சேதநா நாம் ஏகோ பஹு நாம் யோ விததாதி காமான் -கட -2-5-13-
ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வாம் ப்ரகாஸ ஸே -ஜிதந்தே
கிருபை தலை எடுக்கும் பொழுது ஸ்வாதந்தர்யம் தலை சாய்ந்து எப்போதும் உள்ள ஆஸ்ரித பாரதந்தர்யமே நிலை நிற்குமே
அன்யாதீ நத்வம் தவ கில ஜகுர் வைதிககிர
பரா தீநம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநு மஹே -வரத ஸ்தவம் -20-
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் -திருவாய் -4-3-8-
சேதனன் தன்னை சர்வேஸ்வரனுக்கு ஆக்க நினைக்கும் போது கர்மம் தடுக்கலாம்
இவன் அவன் இட்ட வழக்காகும் போது தடை ஒன்றுமே இல்லையே -ஆள வந்தார்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே –திருவாய் -4-3-11-
தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாந் திரு -14-
அர்ச்சாவதார பர்யந்தமான அவனது க்ருஷீ பலனே தம்மை பகவத் பிரவணர் ஆக்கி அருளிற்று என்கிறார்
அஜாய மானோ பஹுதா விஜாயதே
பிதா புத்ரேண பித்ரு மான்யோ நியோ நவ்
சதைக ரூப ரூபாய
ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந-
தத் ஈஷத பஹுஸ் யாம்
கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திர் அபி சாப்யய
ஜகத் காரணமாய் இருக்கிற பிரகாரத்தை அறிந்தவர்கள் எப்போதுமே ஜகத்தை ரக்ஷிக்குமவர்கள் என்றபடி -)
————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply