முதல் திருவந்தாதி– பாசுரங்கள் -11-20– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

இவனுடைய ரக்ஷகத்வத்தில் த்வரையைக் கண்டு தம்முடைய இந்திரியங்கள் வியாகுலமாம் படி சொல்லுகிறது –

இப்படி அவன் படிகளை அனுபவித்துக் கொண்டு போகிற வழியாலே -தமக்கு அவன் பக்கல் உண்டான
அபி நிவேசத்தைப் பேசினார் கீழ்

இப்போது கரணியான தம்மிலும் காட்டில் தம்முடைய கரணங்களுக்கு அவன் பக்கல் உண்டான
அபிநிவேச அதிசயத்தை பேசுகிறார் -(ஹ்ருஷீகேசன் அன்றோ அவன் அதனால் தான் இப்படி )

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ  பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி —11-

பதவுரை

வாய்–எனது வாயானது
அவனை அல்லது–ஸர்வேச்வரனைத் தவிர
வாழ்த்தாது–(மற்றொன்றைப்) புகழாது;
கை தாம்–கைகளானவை
உலகம் தாயவனை அல்லது தொழா–உலகங்களைத் தாவி யளந்து கொண்ட
திரு விக்கிரமனை யல்லது வேறொருவனைத் தொழ மாட்டா;
பேய் முலை நஞ்சு–பேயான பூதனையின் முலைகளில் தடவியிருந்த விஷத்தை
ஊண் ஆக–உணவாக
உண்டான்–அமுது செய்த கண்ண பிரானுடைய
உருவொடு பேர் அல்லால்–திருமேனியையும் திருநாமத்தையு மல்லது (மற்றெதையும்)
கண் கணா செவி கேளா–கண்கள் காண மாட்டா; காதுகள் கேட்க மாட்டா.

ஜிஹ்வே ! கீர்த்ய கேசவம் முரரிபும்-சேதோ பஜ ஸ்ரீ தரம்-
பாணித்வந்தவ ! சமர்ச்ச யச்யுதகதா-ச்ரோத்ரத்வயா !த்வம் ஸ்ருனு !
க்ருஷ்ணம் லோகைய லோசனத்வய !ஹரேர்க்ச்சாங்க்ரி யுக்மாலயம்
ஜிக்ர க்ராண !முகுந்த பாத துலசீம்-மூர்த்தன் நமா தோஷஜம்--.  -முகுந்த மாலை–16 ஸ்லோகம்

ஜிஹ்வே ! கீர்த்ய கேசவம் -வாராய் நாக்கே -கேசியைக் கொன்ற கண்ணபிரானையே ஸ்தோத்ரம் செய் -ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் ஈசன் -கேச பாசம் யுடையவன் –
முரரிபும்-சேதோ பஜ -வாராய் நெஞ்சே முராசூரனைக் கொன்ற கண்ணபிரானையே பற்று
ஸ்ரீ தரம்-பாணித்வந்தவ ! -சமர்ச்ச -இரண்டு கைகளே திருமாலையே ஆராதியுங்கோள்
யச்யுதகதா-ச்ரோத்ரத்வயா !த்வம் ஸ்ருனு !-இரண்டு காதுகள் -அடியாரைக் கை விடாத எம்பெருமான் சரித்ரங்களையே கேளுங்கோள்
க்ருஷ்ணம் லோகைய லோசனத்வய -இரண்டு கண்களே கண்ணபிரானையே சேவியுங்கோள்
ஹரேர்க்ச்சாங்க்ரி யுக்மாலயம் –இரண்டு கால்களே எம்பெருமானுடைய சந்நிதியையே குறித்து போங்கோள் –
ஜிக்ர க்ராண !முகுந்த பாத துலசீம்-வாராய் மூக்கே ஸ்ரீ கிருஷ்ணன் திருவடித் தாமரைகளில் சாத்தின திருத் துழாய் கந்தத்தையே அனுபவி
மூர்த்தன் நம அதோஷஜம்-வாராய் தலையே எம்பெருமானையே வணங்கு-

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும் என் நெஞ்சமே.–3-8-1-

முடியாத வாசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டவன் பால் -படியா ஓன்று
ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப
துன்னியதே மாறன் தன் சொல்——ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -28-பாசுரம்–

வாய் அவனை அல்லது வாழ்த்தாது –நீ அளவிதாம் படி அமையும் காண் என்றாலும் கேளாது
கை யுலகம்-தாயவனை அல்லது தாந்தொழ –திரு உலகு அளந்து அருளினவனுடைய நீர்மையைக் கண்டால்
நான் வேண்டாம் என்னிலும் தொழுது அல்லது நில்லாது
பேய் முலை நஞ்-சூணாக வுண்டான்–பேய் நஞ்சாகக் கொடுத்தால் -இவன் தாரகமாக யுண்டான்
அவள் தன் நெஞ்சில் தண்மையால் முடிந்தாள் அத்தனை –
உருவோடு பேர் அல்லால்-காணாக் கண் கேளா செவி ——அவன் உரு அல்லது கண்கள் காணா
அவன் பேச்சே அல்லது செவிகள் கேளா –
ஆஸ்ரித விஷயத்திலும் -சாமான்ய விஷயத்திலும் இருக்கும் இருப்பில் சர்வ இந்திரியங்களும் அபஹ்ருதமான படி –
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -தாம் புறம்பே வாழ்த்தப் பார்க்கிலும் -தாம் செய்யா
கை யுலகம்-தாயவனை அல்லது தாந்தொழ–தொழாதார் தலையிலும் இருந்து தொழுவித்துக் கொள்ளும் திருவடிகளை
யுடையவனை அல்லது -தாம் தொழா-அவனும் ஏற வாங்கிலும் -நானும் ஏற வாங்கிலும் –
பேய் முலை நஞ்-சூணாக வுண்டான்–கொடா விடில் பிழையேன் என்று கொடுக்க –
உண்ணா விடில் பிழையேன் என்று உண்டான் -அநந்யார்ஹம் ஆயிற்று –
உருவோடு பேர் அல்லால்-காணாக் கண் கேளா செவி -ஹ்ருஷீ கேசன் அன்றோ —

(முடியானே -திருவாய் -3-8-போலே இவரது கரணங்களின் அன்பு விஞ்சி இருக்கும் படியை அருளிச் செய்கிறார் இப்பாசுரத்தில் –
ஹ்ருஷீகேசன் ஆகையாலே எனது ஹ்ருஷீகங்களை இவ்வாறு நியமித்து அருளினான் என்கிறர்)

———————-

இப்படி அவன் படிகளை அனுபவித்துக் கொண்டு போகிற வழியாலே -தமக்கு அவன் பக்கல் உண்டான அபி நிவேசத்தைப் பேசினார் கீழ்
இப்போது கரணியான தம்மிலும் காட்டில் தம்முடைய கரணங்களுக்கு அவன் பக்கல் உண்டான அபிநிவேச அதிசயத்தை பேசுகிறார் -(ஹ்ருஷீகேசன் அன்றோ அவன் அதனால் தான் இப்படி )

என்னிலும் காட்டிலும் அவன் எங்குற்றான் என்று பார்க்கிற என்னுடைய வாக் இந்த்ரியமானது அவனை ஒழியப் புகழாது –
கைகளானவை தர தம விபாகம் பாராதே இருந்ததே குடியாக லோகத்தை அடைய அநாயாசேன அளந்து கொண்ட
சீலாதிகனாவனை ஒழிய தாம் தொழப் பாராது —
பூதனை யுடைய முலையில் விஷத்தை தாரகமாக விரும்பி
அமுது செய்தவனுடைய வடிவை ஒழிய கண் காணாது –
குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ஒழியச் செவி கேளாது —

————

(அடைய சாதனம் -சாதன பக்தி உபாயாந்தரங்கள்-தேஹமும் வேணுமே -பக்தி பண்ண
அவனை அடைய அவனே உபாயம் -அனுபவிக்க ருசி -ஸாத்ய பக்தி வேண்டும் -இதுவே ஆழ்வாரது நிலைப்பாடு
சாதன பக்தியை இகழ்ந்து பேசுகிறார் -மூன்றாவது நிர்வாஹம் -என்பரே -இத்தையா சாதனமாக சொல்லுவார் என்றபடி -)

தம்முடைய அனுபவமான பக்தியைச் சொல்லுகிறது (ஸாத்ய பக்தியை )என்னவுமாம் –
பக்தியை விதிக்கிறது என்னவுமாம் –

கீழ் ப்ராப்ய சிஷை பண்ணினார் –
இனி ப்ராபகம் சொல்லுகிறார் –

கீழ் ஸமாச்ரயணீயனாகச் சொன்னவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே தத் அனுரூபமான சாதனம் பக்தி -என்கிறார் –

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத்
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —12-

பதவுரை

ஏனம் ஆய் நின்றாற்கு–வராஹாவதாரம் செய் தருளித் தானே காரியங்களை கடத்துகிற பெருமானைப் பெறுவதற்கு
(இயல்வு ஏற்ற ஸாதனமாவது-,)
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும்–செவி தொடக்கமாகச் சொல்லப்படுகிற ஞானேந்திரியங்கள் ஐந்தும்
செம் தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும்–தேஜஸ் முதலான பஞ்ச பூதங்களினாலியன்ற தேஹமும்
அவியாத ஞானமும்–(இந்தக் கரண களேபரங்களாலே ஸாதிக்கப் படுவதாய்) இடை விடாது எம்பெருமானைச் சிந்திப்பதான பக்தியும்
வேள்வியும்–அந்த பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணமான அக்நிஹோத்ரம் முதலிய சடங்கும்
நல் அறமும்–(நாடோறும் பக்தியை வளர்க்கக் கடவதான) விவேகம் முதலிய நற்குணங்களும்-விமோகம் சாதன சப்தகங்கள் -(பக்தி வளர தயையும் தானமும் வேண்டுமே )
இயல்வு என்பரே–ஸாதனங்கள் என்று சொல்லுகிறார்களே (இது தகுதியோ? என்றவாறு-அவனே பிரார்த்திக்காமல் இடந்து எடுத்து அருளினானே )

அவியாத ஞானம் -நாஸம் அற்ற பக்தி ரூப பன்னமான ஞானம்
செந்தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும்-பஞ்ச பூதங்களிலான தேஹமும்
வேள்வியும் -அக்னி ஹோத்த்ரம் போன்ற பக்திக்கு சாதனமான கர்மங்களும் –
நல் அறமும் -பக்திக்கு விருத்தியைச் செய்யும் விவேகம் விமோகம் முதலான ஆத்ம குணங்களும்
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —என்பரே–
நிரபேஷ ரக்ஷகனான ஸ்ரீ வராஹ மூர்த்திக்கு சாதனம் என்கிறார்களே -என்ன அறிவு கேடு –

வேள்வியும் -பக்தி விவ்ருத்தி யர்த்தமாகவும் -பாப ஷயத்துக்காகவும் அனுஷ்டிக்கிற கர்மங்கள் –
அக்னி ஹோத்ராதி து தத் கார்யா யைவ தத் தர்ச நாத் —
ஆ ப்ராயாணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் (ப்ரஹ்ம ஸூத்ரம் நான்காம் அத்யாயம் முதல் பாதம் )-என்றும் –
யஞநேன தாநேந தபஸா அநாசகேன ப்ராஹ்மனோ விவிதி ஷந்தி(ப்ரஹ்மதாரண்ய )-என்றும் சொல்லுகிறபடியே
நல்லறம் -விவேகாதிகள் – என்பரே ஏனமாய் நின்றார்க்கு இயல்வு –

(தல் லப்தி-விவேகம் ஆகார சுத்தி -விமோகம் -விஷயாந்தர பற்று இன்மை -அப்யாசம் -பழக்கம் – கிரியா -பஞ்ச மஹா யஜ்ஜ்ங்கள் –
கல்யாணம் -சத்யம் ஆர்ஜவம் தயா தானம் அஹிம்சை அலோபம் பேராசை இல்லாமை
அநவசாதம் பெரும் துன்பம் இல்லாமை -அனுத்க்ருஷம் -பேர் ஆனந்தம் படாமை
இந்த ஏழும் நல்லறங்கள்)

ஏனமாய் நின்றாரைப் பெறுகைக்கு பண்ணும் பிரவ்ருத்தி இவை என்பர் –
ஆபத்தே அடையாளமாக தானே ரஷிக்கும் என்கையாலே –
அவன் உபாயமாகத் தன்னுடைய பக்தியைச் சொல்லுகிறது என்றுமாம் -(கர்மம் கைங்கர்யத்தில் பக்தி ருசி வளர புகும் )

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் –சர்வ இந்திரியங்களுக்கும் உப லக்ஷணம்
செந்தீ-புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் -ஆக இருபத்து நாலுக்கும் உப லக்ஷணம் –

அவியாத்-ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே–(பக்தி ரூபா பன்ன ஞானம் பதவுரையில் பார்த்தோம் )கர்ம யோக அந்தர் கதமான ஞானம் -ப்ரக்ருதி ஹேய தயா ஜ்ஜேயை(தாழ்ந்தது என்று அறியத்தக்கது )
ஆத்ம உபாதேயதயா ஜ்ஜேயன் -ஈஸ்வரன் உபாதேய தமனாய் கொண்டு ஜ்ஜேயன் -சஞ்சலம் ஹி மனஸ்
வேள்வி -கர்ம யோகம் – நல்லறம் ஆன்ரு சம்சயாதி தர்மங்கள் என்பர் -வேத சாஸ்திரங்களில் பிரசித்தி

ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —தளர்ந்த போது எடுக்குமவன் -என்று ஷேபமான போது பிரவ்ருத்தி கொண்டு
புகுவதைக் கை வாங்கின அன்று (சசால சாபஞ்ச -வெறும் கை வீரன் )எடுக்க இருக்க -ஞானப் பிரானை அல்லால் இல்லை –
அறிவானாம் -என்றால் போலே -இயல்வு -உபாயம்-

(சரீரம் ஆத்யம் கலு தர்ம சாதனம் -குமார சம்பவம் -5-33- சரீரமே முதல் தர்ம சாதனமாகும் –
தைல தாரா வத் அவிச்சின்ன ஸ்ம்ருதி ஸந்தான ரூபம் த்யானம் –
அக்னி ஹோத்ராதி து தத் கார்யா யைவ தத் தர்சநாத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4-1-15-
ஆ ப்ரயாணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4-1-12-
தமேதம் வேதா நு வசநேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி
யஜ்ஜேந தாநேந தபஸா நாஸகேந -ப்ருஹதாரண்யம் -6-4-22-
தல்லப்திர் விவேக விமோக அப்யாஸ க்ரியா கல்யாண அநவஸாத அநுத்தர் ஷேப்ய–என்கிறபடியே
1- அன்ன ஸூத்தியால் உண்டாகும் சரீர ஸூத்தி யாகிற விவேகம்
2-விருப்பங்களில் பற்று அற்று இருக்கை யாகிற வி மோகம்
3-பகவத் விஷயத்தில் பலகால் பழகுகை யாகிற அப்யாஸம்
4-பஞ்ச மஹா யஜ்ஜ்ங்களை முயன்ற வரை அனுஷ்டிக்கை
6-உண்மை நேர்மை இரக்கம் கொடை கொல்லாமை பேராசை இன்மை முதலிய கல்யாண குணங்கள்
6-மன வருத்தம் இன்மை
7- அதி சந்தோஷம் இன்மை –ஆகிய சாதன சப்தகம் -ஸூத்ரகாரர் அருளிச் செய்தவை -எம்பெருமானை அடைய உபாயம்
தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி
பக்த்யா த்வன் அந்யயா சக்ய -கீதை -11-54-
பக்தி க்ரீதோ ஜனார்தன
ஏனத் துருவாய் இடந்த பிரான் அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -திரு விருத்தம் -99–நம்மாழ்வார் சித்தாந்தமே இவருடையதுவும் -)

————-

கீழ் ஸமாஸ்ரயணீயனாகச் சொன்னவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே தத் அனுரூபமான சாதனம் பக்தி -என்கிறார் –

ஸ்ரோத்ர ஜிஹ்வா சஷூர் க்ராண த்வக்குகள் ஆகிற ஞான இந்திரியங்கள் ஐந்தும்
தேஜஸ் பிருத்வி வாயு ஜலம் ஆகாசங்கள் ஆகிற பூத பஞ்சகமும்
தத் உப லஷிதமான சரீரமும் –

இந்த கரண களேபரங்களால் சாதிக்கப் படுமதாய்-அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபமான பக்தி ரூபா பன்ன ஞானமும் –

பக்தி உத்பத்தி விவ்ருத்தி ஹேதுவாய் -பல சங்க கர்த்ருத்வ தியாக பூர்வகமாக பண்ணும் யாகாதி கர்மங்களும்
நாள் தோறும் பக்தியை வளர்க்கக் கடவ விவேக விமோதாதிகளும் –

ஆன்ரு சம்சய தாநாதிகளும் ஆகிற விலக்ஷண தர்மமும்
சர்வ ஸூலபனாய்-ஆபத் சகனாய் நின்ற சர்வேஸ்வரனுக்கு -சத்ருச சாதனம் என்று வேத வைதிக புருஷர்கள் சொல்லா நின்றார்கள்

பக்தித–என்றும் –
பக்த்யா த்வத் அநந்யா ஸக்ய-என்றும் சொல்லக் கடவது இறே

அங்கன் இன்றிக்கே
தமக்கு போக உபகாரணமான பக்தியை -உபாசகர் உபாயமாக அநுஸந்திக்கும் கட்டளையைச் சொல்லி
பக்தியை ஷேபித்து பிரபத்தியை அருளிச் செய்கிறார் ஆகவுமாம் –

அப்போதைக்கு –
ஏனமாய் நின்றார்க்கு நல்லறமான இவை இயல்வு என்பரே-தானே வந்து சந்நிஹிதனாய் ரக்ஷிக்குமவனைப் பெறுகைக்கு
இவற்றை சத்ருச சாதனம் என்று சொல்லா நிற்பார்கள் -என்ன அறிவிலிகளோ -என்று ஷேபமாகக் கடவது

ஞானப் பிரானை அல்லால் இல்லை (ப்ராப்யமும் ப்ராபகமும் அவனே )நான் கண்ட நல்லதுவே என்று இறே தம்முடைய சித்தாந்தம் –

———————————————————————————————–

வாயவனை யல்லது வாழ்த்தாது -என்னும்படியாய் இருந்தது -உம்மது–அல்லாதார்க்கு அவனை ஆஸ்ரயிக்கும் போது
அவதானம் வேணும் -எங்கனே கூடும்படி என்னில் –
பிரக்ருதயா இயற்கையாகவே அவனை ஆஸ்ரயித்து இருப்பர் நித்யர்கள் -அல்லாதாரும் ஆஸ்ரயிக்கும் படி தானே பிரதம பாவியாம் -என்கிறார் –

உபகரணங்களையும் கொடுத்து -ருசியையும் ஜநிப்பித்து-உபாயமுமாய் -தானே பல பிரதானம் பண்ணும் என்கிறார்

அவனை நேர் கொடு நேர் கிட்டிப் பரிமாறுகைக்கு அதிகாரிகள் நித்ய ஸூரிகளே —
இப்படி இருக்கச் செய்தேயும்
சம்சாரிகளான நம் போல்வார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி தன்னை ஸூலபனாக்கி வைக்கும் -என்கிறார் –

இயல்வாக யீன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் -இயல்வாக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் –13–

பதவுரை

ஈன் துழாயான் அடிக்கே செல்ல இயல்வு ஆக–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள
எம்பெருமானது-புருஷோத்தமானது- திரு வடிகளில் கிட்டுதற்குத் தகுதியாக
முன்னம்–அநாதி காலமாக
முயல்வார்–முயற்சி செய்பவர்கள்
(யாரென்றால்)
இயல் அமரர்–யோக்யதை யுள்ள நித்ய ஸூரிகளேயாவர்;
(நம் போன்றவர்களும் அவனை இழக்க வேண்டாதபடி)
இயல்வு ஆக–பொருத்தமாக
நீதியால் ஓதி–முறைமை தவறாமல் வேதத்தை அத்யயனம் செய்து
நியமங்களால் பரவ–(அந்த வேதத்தின் பொருளை உணர்ந்து அதிற் சொன்ன நியமங்களோடே தன்னைத் துதி செய்யுமாறு
அவர்–அந்த எம்பெருமான்
ஆதி ஆய் நின்றார்–முற்பட்டு ஸித்தராக இருக்கின்றார்.

(ராமானுஜர் ஆறு கட்டளைகள் -ஸ்ரீ பாஷ்யம் கற்று –தொடங்கி -திவ்ய தேச வாஸம் —
அடுத்து அடுத்து மேலே போவோமே
திருப்பாவை அனுசந்தானம் -பட்டர் -இதே போல் -அனைத்தையும் கொடுத்து கூட்டிப் போவான் அன்றோ -அனுபவத்துக்கு ருசி வளர – ஆதியாய் தானே நிற்கிறான் -)

இயல்வாக –சத்ருசமாக
யீன் துழாயான் அடிக்கே செல்ல-ஆக முதலியாகத் தோள் மாலை இட்டிருக்கிறவதுக்குப் போரும்படியாக
முயல்வார் இயல் அமரர் முன்னம்-இயற்றியை யுடையரான நித்ய ஸூரிகள் முன்னே மஹா யத்னம் பண்ணுவார்கள் –
விஷய பிரவணராய் அவனை அறியாதவர்களும்(நம் போல்வாரும் )
இயல்வாக-சத்ருசமாக
நீதியால் ஓதி -முறையால் திரு நாமங்களை சொல்லி(காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் )
நியமங்களால் பரவ-பரவும் படிக்கு ஈடாக -சாஸ்திரங்களில் சொல்லும் நியமங்களாலே பரவசமாகும் படிக்கு ஈடாக(பரவ -வாசிக -முக்கரணங்களுக்கும் உப லக்ஷணம் )
ஆதியாய் நின்றார் அவர்–அவர் தாமே –பிரதம ஸூஹ்ருதம் ஆனார் -(உபகரணங்களையும் கொடுத்து ருசியையும் பிறப்பித்து -அனைத்துக்கும் அவனே உபாயம் )

இயல் அமரர் –இயற்றியை யுடைய அமரர் –
முன்னம் -முந்துற முன்னம்
இயல்வாக–இதுவே யாத்திரையாக
யீன் துழாயான்-(ஆர்த்தமாக )பரி பூர்ணன்
அடிக்கே செல்ல–திருவடிகளுக்குச் சேர
முயல்வார்-யத்னம் பண்ணுவார் –
இயல்வாக-சத்ருசமாக
நீதியால் ஓதி -சாஸ்திர யுக்தமான படியே
நியமங்களால் பரவ-ஸ்ரவணாதிகளால் ஆஸ்ரயித்து (வாயினால் பாடி மனசால் சிந்தித்து தூ மலர் தூவித் தொழுது )
ஆதியாய் நின்றார் அவர் -அவர்களுக்கு உபேயத்துக்கு அடியானால் போலே (த்வயம் நித்ய அனுசந்தானம் இனிமையால் -அனுபவத்துக்கு நித்யர்களுக்கு )வேண்டினவிடத்துக்கு இவர்களுக்கு உபாயத்துக்கு அடியாக நின்றால் ஆஸ்ரயிக்க ஒண்ணாதோ –
அவனே இதுக்கும் வேண்டின பின்பு அவனையே பற்ற அமையாது என்றுமாம் –

(உபகரணங்களையும் தந்து அருளி -ருசியையும் உண்டாக்கி – உபாயவுமாகி பலனையும் தந்து அருளி -தன்னை அடையலாம் படி முற்படுபவனும் அவனே
ஸமஸ்த லோகங்களுக்கும் ஏக சக்ராதிபதி என்பதைக் காட்டவே தனி மாலை இட்டுள்ளான் –
மந்த்ரோ ஹீந ஸ்வர தோ வர்ண தோ வா யஜமானம் ஹிநஸ் தி -என்பதை அறிவானே
பூர்வா யோ தேவேப்யோ ஜாத –
மஹா புருஷ பூர்வஜ
ஆகையால் நமக்கும் அவனை ஆஸ்ரயிக்கக் குறையில்லை என்கிறார் -)

———–

அவனை நேர் கொடு நேர் கிட்டிப் பரிமாறுகைக்கு அதிகாரிகள் நித்ய ஸூரிகளே –இப்படி இருக்கச் செய்தேயும்-சம்சாரிகளான நம் போல்வார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி தன்னை ஸூலபனாக்கி வைக்கும் -என்கிறார் –

ஐஸ்வர்ய ஸூசகமான அழகிய திருத் துழாயை யுடையனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே கிட்ட -சத்ருசமாக உத்யோகிப்பர்
முந்துற முன்னம் அதுக்கு ஈடான யோக்யதையை யுடையரான நித்ய ஸூரிகள் -அல்லாத நம் போல்வாரும்
ஸ்வர வர்ணாதிகளுக்கு நழுவுதல் வாராத படி அழகிதாகக் கொண்டு
சாஸ்திர யுக்தமான விரத நியமாதி க்ரங்களோடே அத்யயனத்தைப் பண்ணி –
அதீதமான வேதத்தின் அர்த்தத்தை ஆச்சார்யன் பக்கலிலே கேட்டு மனனம் பண்ணி
அர்ச்சனை பிரணாம கீர்த்த நாதிகளோடேகூட அனவரத பாவனை பண்ணுகை யாகிற நியமங்களாலே
பக்தி பரவசராய் பரவும்படிக்கு ஈடாக அப்படிப் பட்ட பெருமை யுடையவர் –

பூர்வஜ -என்கிறபடியே
ருசி உத்பாதகராய்க் கொண்டு முற்பாடராய் நின்றார் —
ஆகையால் நமக்கு எல்லாம் ஆஸ்ரயிக்க குறையில்லை என்று கருத்து –

இயலமரர் –இயற்றியை யுடையரான -யோக்யதை யுடையரான நித்ய ஸூரிகள் -என்றபடி –

————————————————————————————————————

பிரக்ருத்யா ஆஸ்ரயிக்குமவர்களையும் சொல்லி -ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுமவனையும் சொல்லிற்று
இது ஒன்றும் பெறாதாரைச் சொல்லுகிறது –
அவனை வேண்டாதார் படுகிற பாடு பாரீர் -என்கிறார் –

இப்படி ருசி உத்பாதகனாய்க் கொண்டு முற்பாடானாய் நிற்கிறவனை விட்டு –
சம்சாரிகள் ஷூத்ர தேவதா ஸமாச்ரயணம் பண்ணா நின்றார்கள் என்னில் –
அவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும் அந்த ஆஸ்ரயணீயரான தேவதைகளுக்கும்
ஆஸ்ரயணீயன் அவனே -என்கிறார் –

(அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் -கம்பர்-நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் –
சதுர்முகன் கையில் சங்கரன் தலையில் சதுர் புஜன் தாள் -பார்த்தாலே அறிவோம்)

அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல் –14-

பதவுரை

அவர் அவர்–ராஜஸரும் தாமஸருமாகிய சில அதிகாரிகள்
தாம் தாம் அறிந்த ஆறு ஏத்தி–(தங்களுடைய ரஜஸ் தமோ குணங்களுக்குத் தக்கபடி) தாங்கள் எப்படி
அறிந்திருக்கிறார்களோ அப்படி வாய்விட்டுப் புகழ்ந்து
இவர் இவர் எம்பெருமான் என்று–தாங்களறிந்த சில தேவதாந்தரங்களையே கடவுளாகச் சொல்லிக் கொண்டு
சுவர்மிசை சார்த்தியும்–சுவரிலே சித்திர ரூபமாக எழுதியும்
வைத்தும்–பிரதிமையாக ஆங்காங்கு ஸ்தாபித்தும்
தொழுவர்–தொழுகின்றார்கள்;
(எவர் என்ன செய்தாலும்)
உலகு அளந்த மூர்த்தி–(எல்லாத் தெய்வங்களும் தன் காலின் கீழே அடங்கும்படி) உலகங்களை யளந்த ஸ்வாமியினுடைய
உருவே–திருமேனி யொன்றே
முதல்–முக்கியமானது

(யஜந்தே ஸாத்த்விகா தேவாந் யக்ஷ ரக்ஷாம்ஸி ராஜஸா–
ப்ரேதாந் பூத கணாம் ஸ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா–৷৷17.4৷৷

எந்த தேவதையை சேவிக்கிறான் -சாத்விகர் தேவர்களை வணங்குவார் -அவர்கள் இடம் இருப்பதை எதிர்பார்ப்பார்கள் -அதிலே ருசி
ஸ்ரீ மன் நாராயணன் -பரம சாத்வீகன் -தேவர்க்கும் தேவாவோ -மாக வைகுந்தம் அடைய எண்ணுவார்கள்
ராக்ஷஸர்கள் யஜ்ஜர்கள் ராக்ஷஸர்களை – அன்யா -வேறு பட்ட தாமஸர்கள் பூத கணங்கள் பிரேதங்களை
வணங்கி சா லோக்யம் சாமீப்யம் சாரூப்பியம் அடைய)

அவரவர் –ரஜஸ் பிரசுரரும் தமஸ் பிரசுரரும்
தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி-குணானுகுணமாக வெளிச் செறிந்த படி ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று -ரஜஸ் தமஸ் ஸூக்களுக்கு விஷயமானவரை என்னுடைய ஸ்வாமி என்று
சுவர் மிசைச்-சார்த்தியும் வைத்தும் தொழுவர் ——-சர்வேஸ்வரன் பக்கல் -எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பர்
என்கிற செயலில் பித்தியிலே எழுதியும் வைத்தும் தொழுவர் –
உலகளந்த-மூர்த்தி யுருவே முதல் —-இவர்களுடையவும் -ஆசிரயணீயங்கள் யுடையவும் தலையிலே அடியை வைத்தவனே பிரதானம் –
மூர்த்தி யுருவே முதல்–சர்வேஸ்வரனுடைய திரு மேனியே பிரதானம் –

அவரை வேண்டாதார் படும்பாடு மேல் அருளிச் செய்கிறார்

அவரவர் பின்ன ருசிகள் – தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி -சாஸ்திரத்தின் பின் செல்லார்
இவர் இவர்–சகர புத்திரர்கள் கண்டாரை -என் குதிரை பிடித்தாய் -என்று பிடிக்குமா போலே -தோற்றினாரை
உலகளந்த-மூர்த்தி யுருவே முதல் –சமாஸ்ரயிப்பார் தலையிலும் ஸமாச்ரயணீயர் தலையிலும்
ஓக்கத் திகைத்த சர்வேஸ்வரன் -உருவே முதல் -வடிவே முதல் –

(பிறப்பில் பல் பிறவிப்பெருமான் -அஜாய மானோ பஹுதா விஜாயதே -இவனதே அவதாரம்
கஹா அதிக கன்யதாம் ஏககா ஒருவனே
ஒருவன் திருவடி நீட்ட
மற்ற ஒருவன் கழுவி
மூன்றாமவன் தலையால் தாங்கி -அறிய வைத்தார்கள் -)

(ஸாத்விகஸ் ச து விஜ்ஜேய
லோகோ பின்ன ருசி
ஸத்வாத் சஞ்ஜாயதே ஞானம்
அஜாய மாநோ பஹுதா விஜாயதே
பிறப்பில் பல் பிறவிப் பெருமான்
பிறவாப் பிறப்பு இல்லை பிறப்பித்தார் இலையே
ஏக ப்ரஸீஸாத் பாதம் ஏக ப்ராசிஷளன் முதா அபரோப்யதான் மூர்த்நா கோ அதி கஸ்தேஷு கண்யதாம்
சங்கரன் தலையில் சதுர்முகன் கையில் சதுர் புஜன் தாளில் இத்யாதி )

———————

இப்படி ருசி உத்பாதகனாய்க் கொண்டு முற்பாடானாய் நிற்கிறவனை விட்டு –
சம்சாரிகள் ஷூத்ர தேவதா ஸமாச்ரயணம் பண்ணா நின்றார்கள் என்னில் –
அவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும் அந்த ஆஸ்ரயணீயரான தேவதைகளுக்கும்
ஆஸ்ரயணீயன் அவனே -என்கிறார் –

ரஜஸ் தமஸ் பிரசுரராய் பின்ன ருசிகளான அவ்வதிகாரிகள் -சாஸ்திர முகத்தால் அன்றிக்கே குணானுகுணமாக
தாம் தாம் அறிந்த பிரகாரங்களாலே வாய் விட்டுப் புகழ்ந்து தங்கள் உகந்த குணங்களை யுடைய ஐயன் துர்க்கை
தொடக்கமாக ருத்ரன் முடிவாக உண்டான இவர்கள் நமக்கு ஆஸ்ரயணீயரான ஸ்வாமிகள் என்று ஆதரித்துக் கொண்டு
ஒவ்வொரு தேவதைகளை ஓரோர் பித்திகளிலே சித்ர ரூபேண எழுதியும் க்ருஹம் தொடக்கமான
ஓரோர் இடங்களிலே ப்ரதிமா ரூபேண ப்ரதிஷ்டித்து வைத்தும் ஆஸ்ரயியா நிற்பார்கள் –

இவர்கள் இப்படிச் செய்தாலும் ஆஸ்ரயிக்கிறவர்களோடு -ஆஸ்ரயணீயராக இவர்கள் விரும்புகிற அத் தேவதைகளோடு வாசியற
எல்லோரும் தன் கால் கீழே துகை யுண்ணும் படி ஜகத்தை அடைய அளந்து கொண்ட சர்வேஸ்வரன் திருமேனியை பிரதானம் –

———————

(ஆத்ம ஞானமும் -அப்ரதிஷேதமும் -தானே வேண்டுவது -விலக்காமை அத்வேஷ மாத்ரமே கொண்டு அருள் பயன்பெறும்
அவன் அருள் எப்போதும் நித்யமாகவே இருந்தாலும்-கார்ய கரம் ஆவதுக்கு இதுவே வேண்டுவது-)

(சிலர் பரம சிவன் என்பர் -சிலர் பராசக்தி என்பர் -சிலர் மஹா கணபதி என்பர் -சிலர் ஸூ ப்ரஹ்மண்யன் -என்பர்
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு எளிது போல் -நீயும் நானும் கூடப் பரம் பொருள் தான் என்பாரும் உண்டே

ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ரா தே ஸர்வே ஸம் ப்ரஸூ யந்தே –விஷ்ணுவுக்கும் பிறப்பை ஓதும் வேத வாக்யம்
ஆகவே துரீய நான்காவது ப்ரஹ்ம வாதிகள் பரமசிவன் பார்வதியே என்பர்
பரம் பொருளை இந்த்ர ஸப்தத்தாலும் ஆகாச ஸப்தத்தாலும் வாயு சப்தத்தாலும் சொல்லி இருப்பதால்
பரமேந்திரன் பரம ஆகாசம் பரம வாயு தத்வங்களைக் கற்பித்து பரம் பொருள் என்பர் சிலர் )

அவ்வோ தேவதைகளும் ஆஸ்ரயணீயராய்ச் சொல்லா நிற்கச் செய்தே –
அவர்கள் அப்ரதானர் இவன் பிரதானன் என்று சொல்லுகிறது உம்முடைய பக்ஷத்தாலே இறே என்ன –
அர்த்த தத்வம் இருந்தபடியைப் பார்க்கலாகாதோ -என்கிறார் –

நீர் அவனையே பிரதானனாகச் சொல்லா நின்றீர் –
புறம்பே ஆஸ்ரயிப்பார் சிலரும் ஆஸ்ரயித்தார்க்கு பலம் கொடுப்பார் சிலருமாய் அன்றோ
நாட்டில் நடந்து போருகிறது-என்ன –
அவை யடங்கலும் வியர்த்தம் என்கிறார் –

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது ——–15-

பதவுரை

(உலகத்தில் பல பல தெய்வங்கள் வழங்கப் பட்டாலும்)
மூவரே–ஸ்ருஷ்டி ஸ்திதி (ஸம்ஹாரங்களுக்கு உரியவரான) பிரமன் விஷ்ணு ருத்ரன் என்கிற மூவருமே
முதல் ஆவார்–முக்கியரான தேவர்களாவார்;
அம் மூவர் உள்ளும்–அந்த த்ரி மூர்த்திகளுக்குள்ளே
மூரி நீர் வண்ணன்–கடல் வண்ணனாகிய திருமாலே
முதல் ஆவான்–தலைவனாயிருப்பவன்;
முதல் ஆய–உலகுக்கெல்லாம் காரண பூதனும்
நல்லான்–நற் குணங்களமைந்தவனுமான அப் பெருமானுடைய
அருள் அல்லால்–கிருபையானது நன்மையை விளைக்குமே யொழிய
நாமம் நீர் வையகத்து–ப்ரஸித்தமான கடல் சூழ்ந்த இப் பூமியில்
பல்லார்–அத் திருமால் தவிர மற்றும் பலருடைய
அருளும்–தயையும்
பழுது–பயனற்றதாம்

(அணைவது அரவணை மேல் –இருவர் அவர் முதலும் தானே –இணைவனாம் -)

முதலாவார் மூவரே –இருந்ததே குடியாக ஆஸ்ரயணீயர் அன்று இறே -மூவர் இறே பிரதானர்

அம் மூவருள்ளும் முதலாவான் –ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஜீவ வ்யவதாநத்தாலே -அந்தர்யாமியாயும்
தன் பக்கலிலே ஸ்வேன ரூபேண நின்றும் காரணம் ஆவான் -(அவர்கள் கர்ம வஸ்யர் -பரமாத்மா இவன் ஒருவனே )

மூரி நீர் வண்ணன்-பொன்னுருவும் தீயுருவும் ஆனவர்கள் அன்று -பரப்பை யுடைத்தான கடல் வண்ணன் -(குளிர்வித்துக் கொள்ளும் ஆஹ்லாத வண்ணன் இவன் ஒருவனே )

முதலாய–காரணமான

நல்லான் அருள் அல்லால்-அறவனானவன் அருள் அல்லால்(தர்மம் அறிந்தவன் -கிருஷ்ணன் தர்மம் ஸனாதனம் -ராமோ விக்ரஹவான் தர்ம -)

நாம நீர் வையகத்துப்-பல்லார் அருளும் பழுது ——அவனுடைய அருள் ஒழிய அல்லாதார் எல்லாருடைய அருளும் பழுது

அதிகாரிகள் ஆகையால் அவர்களை முற்படச் சொன்ன அத்தனை -பழுதாம் இடத்தில் அவர்களோடு அல்லாதாரோடு வாசி இல்லை
அவனுக்கு வசராய்க் கொண்டு பலம் தரிலோ என்னில் இரண்டும் வியர்த்தம் -(ஆரோக்யம் பாஸ்கரன் அக்னி செல்வம் பரமசிவன் ஞானம் -அந்தர்யாமியாய் இருந்து செய்விக்கிறான் )

முதலாய நல்லான் -பெற்ற தாய் ஆகையால் பரிவன்-தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-முலைப் பால் இருக்க விஷ பானம் பண்ணுவாரோ(காரணந்து த்யேய -நல்லான் மோக்ஷ பிரதன் )

நாமம் -நாம மாத்ரரான பல்லார் என்னுதல் –பிரசித்தமான நீர் வையகம் என்னுதல் –

பல்லார் -கீழ்ச் சொன்ன ப்ரஹ்ம ருத்ராதிகள் அகப்பட
தனித் தனியவும் திரளவும் பழுது -வியர்த்தம் –

———–

காமைஸ் தைஸ்தைர் ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்ந்தேந்யதே₃வதா:|–
தம் தம் நியமமாஸ்தா₂யா-ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா ॥—ஸ்ரீ கீதா 7-20-

உலகில் பலர் தமது முக் குண மய பொருள்கள் விஷயமான அநாதி வாசனையால் எப்போதும் சேர்ந்து இருக்கப் பெற்றவர்களாய்
தமது வாசனைகளுக்கு ஏற்ற அந்த அந்த முக்குண மயமான விரும்பப்படும் பொருள்களாலே கவரப் பெற்ற
என் ஸ்வரூப விஷயமான அறிவை உடையவர்களாய் –
அந்த அந்தப் பொருள்கள் கிடைப்பதற்காக என்னைக் காட்டிலும் வேறுபட்ட தெய்வங்களை அந்த அந்த தேவதைகளையே
மகிழ்விப்பதற்கு உறுப்பான நியமங்களைக் கைக் கொண்டு அவர்களையே ஆஸ்ரயித்து ஆராதிக்கிறார்கள் –
ஸ்வயா ப்ரக்ருத்யா – தமது (முக்குணமயப் பொருள்கள் விஷயமான) அநாதி வாஸனையாலே,
நியதா: – எப்போதும் சேர்ந்திருக்கப் பெற்றவர்களாய்
தை தை: – (தம் வாஸநாகுணமான) அந்த அந்த
காமை: – (முக்குணமயமான) விரும்பப்படும் பொருள்களாலே
ஹ்ருதஜ்ஞாநா: – அபஹரிக்கப்பெற்ற (என் ஸ்வரூப விஷயமான) அறிவையுடையவர்களாய்
(அந்த அந்த பொருள்கள் கிடைப்பதற்காக)
அந்யதே₃வதா: – என்னைக் காட்டிலும் வேறுபட்ட தெய்வங்களை
தம் தம் நியமமாஸ்தா₂யா – அந்த அந்த தேவதைகளையே உகப்பிப்பதற்கு உறுப்பான நியமங்களைக் கைக் கொண்டு)
ப்ரபத்ந்தே – அவர்களையே ஆஶ்ரயித்து ஆராதிக்கிறார்கள்.

ஆரோக்யம் பாஸ்கரன் -ஞானம் ருத்ரன் -மோக்ஷம் ஜனார்த்தனன் —
மந்தி பாய் –கங்கா தீரத்தில் இருந்தும் தாகத்துக்கு கிணறு வெட்டுவாரைப் போலே –

யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யார்ச்சிதுமிச்ச₂தி ।–
தஸ்ய தஸ்யா சலாம் ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம்யஹம் ॥—21-

எந்த எந்த தேவதாந்த்ர பக்தன் எனது சரீரமான எந்த எந்த தேவதையை நம்பிக்கையோடு ஆராதிப்பதற்கு
விரும்புகிறானோ -அந்த அந்த பக்தனுக்கு அந்த தேவதா விஷயமான நம்பிக்கையையே
இடையூறுகளால் அசையாததாய் நான் நிலை நிறுத்துகிறேன்

ய: ய: ப₄க்த: – எந்த எந்த தே₃வதாந்த்ர பக்தன்
யாம் யாம் தநும்- (எனது) ஶரீரமான எந்த எந்த தேவதையை
ஶ்ரத்த₄யா – விஸ்வாஸத்தோடு
அர்ச்சிதும் – ஆராதிப்பதற்கு
இச்ச₂தி – விரும்புகிறானோ
தஸ்ய தஸ்ய – அந்த அந்த பக்தனுக்கு
தாம் ஏவ ஶ்ரத்தா₄ம் – அந்த (தேவதா விஷயமான) விஶ்வாஸத்தையே
அசலாம் – (இடையூறுகளால்) அசையாததாய்
அஹம் – நான்-

அந்தர்யாமி நான் என்ற ஞானத்துடன் ஆச்ரயிப்பவர் சீக்கிரம் விட்டு என்னையே கேட்டு வருவான் -அப்படி இல்லாதவர்க்கும் –
அசைக்க முடியாத ஸ்ரத்தையை நானே உண்டாக்குகிறேன் –
நாஸ்திகன் ஆக்க கூடாதே –கிரமத்தில் வருவார்களே – -கொண்டி மாட்டுக்கு தடி கட்டுவாரைப் போலே
நாட்டினான் தெய்வம் எங்கும் –சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருக்கின்றார்களே –

ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ் தஸ்யாராதநமீஹதே.—
லபதே ச தத காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந்৷৷—7.22৷৷

அந்த அந்த தேவதாந்த்ர பக்தன் அந்த நம்பிக்கையோடு கூடியவனாய் அந்த அந்த தேவதைக்கு ஆராதனம் செய்ய முயல்கிறான்
அந்த அந்த தேவதை இடம் இருந்து என்னாலேயே கொடுக்கப்பட்ட தான் விரும்பிய அந்தப் பொருள்களை அடையவும் செய்கிறான்
என்னை உள்ளபடி அறியாமல் தேவதாந்த்ர பஜனம் -செய்பவருக்கும் பலனை நானே அளிக்கிறேன் –
என் சரீரத்தை தானே ஆஸ்ரயிக்கிறான் என்று நான் அறிவேன் —
கொடியை பந்தலில் ஏற்றுவது போலே -குச்சியில் ஏற்றி – துளி பக்தி பிறந்ததும் -இவர்களை ஆஸ்ரயித்து சில சில பலங்களை கொடுத்து –
அவரவர் இறையவர் குறையிலர் -அவரவர் -விதி வழி அடைய நின்றனர் –
அந்தர்யாமியாய் புகுந்து -மஹா க்ரமம்-அவன் திரு நாமம் –
சர்வ தேவதா நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி –ஆகாசம் நீர் கடலுக்கு போவது போலே –

அந்தவத்து ப₄லம் தேஷாம் தத்ப₄வத் யல்ப மேத₄ஸாம் |–
தே₃வாந் தே₃வ யஜோ யாந்தி மத்ப₄க்தா யாந்தி மாமபி॥—23-

புல்லறிவாளர்களான அவர்களுக்கு அவ்வாராதன பலன் அல்பமாகவும் முடிவுடையதாகவும் ஆகிறது
ஏன் எனில் தேவர்களை ஆராதிப்பவர்கள் தேவர்களை அடைகின்றனர் –
என்னுடைய பக்தர்களும் என்னை அடைகின்றனர்

யல்பமேத₄ஸாம் – புல்லறிவாளர்களான அவர்களுக்கு
அந்தவத்து ப₄லம் – அவ்வாராதன பலன் அல்பமாகவும் முடிவுடையதாகவும் ஆகிறது. ஏனெனில்
தே₃வயஜ: தே₃வாந் யாந்தி – தேவர்களை ஆராதிப்பவர்கள் தேவர்களையே அடைகிறார்கள்
மத்ப₄க்தா அபி மாம் யாந்தி – என்னுடைய பக்தர்களும் என்னையே அடைகினறனர்.-
என்னை பிரார்த்தித்து என்னையும் அடைகிறார்கள்
உம்மை தொகையால் -கீழ் அவர்கள் ஒன்றையே அடைகிறார்கள் -அபி சப்தம் -இத்தையே காட்டும் –
மோக்ஷம் பெற்றால் ஆரோக்யம் செல்வம் ஞானம் எல்லாமே கிடைத்ததாகுமே –
அவகாத ஸ்வேதம் போலே -நெல்லு குத்த வியர்வை தானே வருமே –
ஸூ ஆராதன் இவன் -அவர்கள் துராராதர்கள் -இந்திரன் -ஆத்ம ப்ரச்னம் -தலை குப்புற தள்ளி விட இவன்
ஐஸ்வர்யம் அக்ஷரம் பரமபதமும் கொடுத்தும்-வெட்கி இருந்து –
அடியார்க்கு என் செய்வான் என்றே இருப்பவன் -பெத்த பாவிக்கு விடப் போமோ –
என்னையும் –அடைந்து திரும்பாமல் பேரின்பம் பெறுகிறார்கள் –கீழே அடி பட்ட பந்து போலே திரும்ப வேண்டுமே —

(ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ரா தே ஸர்வே ஸம் ப்ரஸூயந்தே -அதர்வசிகை
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே -நாராயண மஹா உபநிஷத்
ஸோரோதீத் -ருத்ரன் அழுதான்
ஸோ அப்ரவீத் அநபஹத பாப்மா வாஹம்
வரம் வ்ருணை அஹமேவ பஸூநா மதி பதி ரஸாநீதி -பசுபதியாகக் கடவேன் என்று வரம் வேண்டினான்
ஸோ பிபேத் -யமனைக் கண்டு பிரமன் பயந்தான்
உஷஸி ரேதோ சிஞ்சத் -பிரமன் உஷஸீ என்னும் தனது தேவியிடம் வீர்யத்தை -ரேதஸ்ஸை விட்டான் –
ஆகவே பயமும் பிராக்ருதி சம்பந்தமும் அபூர்ணத்வமும் இவர்களுக்கு உண்டே
ச ப்ரஹ்ம ச சிவா
அவனே அவனும் அவனும் அவனும்
ப்ரஹ்மா நாராயண சிவஸ் ச நாராயண சக்ரஸ் ச நாராயண
சேந்த்ர
சஷுஸ் ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண
திஸஸ் ச நாராயண விதிஸஸ் ச நாராயண சர்வம் நாராயண
புருஷ ஏவேதம் ஸர்வம்
விஸ்வம் ஏதம் ஸர்வம்
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்
ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா திவ்யோ ஏக ஏவ நாராயண
அந்தர் பஹிஸ் ச நாராயண
அந்தர் பஹிஸ் ச தத் சர்வம் வியாப்ய  நாராயண ஸ்தித
விஸ்வ ஆத்மாநம் பாராயணம்
ஸ பூமிம் விஸ்வதோ வ்ருத்வா
தஜ்ஜலான்
அந்நியஸ் ச ராஜன்ச பர தத் அந்நிய பஞ்ச விம்சக தத்ஸ்த த்வாத் அநு பஸ்யந்தி ஹ்யேக ஏ வேதி ஸாதவ
ஸர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி ஸர்வ -கீதை -11-40-
ஸர்வ கத்வாத் அநந்தஸ்ய ஸ ஏவாஹம வஸ்தித –ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-19-35-
யதோ வா இமாநி
ஏகமேவ அத்வதீயம்
ஏக ஏவ நாராயண
ஏக ஏவாக்ர ஆஸீத்
ஈஸதே தேவ ஏக
ஏகஸ் ஸ்வதந்த்ரோ ஜகதோ பபூவ
ஏக ஸாஸ்த்தா ந த்வதீய அஸ்தி
ஏக ஏவ ஜநார்த்தன
நாராயண பரம் ப்ரஹ்ம
நாராயநாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயநாத் ருத்ரோ ஜாயதே
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லே கேவ
காரணந்து து த்யேய

யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யார்ச்சிதுமிச்ச₂தி ।–
தஸ்ய தஸ்யா சலாம் ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம்யஹம் ॥-ஸ்ரீ கீதை —7-21-
எந்த எந்த தேவதாந்த்ர பக்தன் எனது சரீரமான எந்த எந்த தேவதையை நம்பிக்கையோடு ஆராதிப்பதற்கு விரும்புகிறானோ -அந்த அந்த பக்தனுக்கு அந்த தேவதா விஷயமான
நம்பிக்கையையே இடையூறுகளால் அசையாததாய் நான் நிலை நிறுத்துகிறேன்

ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ் தஸ்யாராதநமீஹதே.—
லபதே ச தத காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந்৷৷—7.22৷৷
அந்த அந்த தேவதாந்த்ர பக்தன் அந்த நம்பிக்கையோடு கூடியவனாய் அந்த அந்த தேவதைக்கு ஆராதனம் செய்ய முயல்கிறான்
அந்த அந்த தேவதை இடம் இருந்து என்னாலேயே கொடுக்கப்பட்ட தான் விரும்பிய அந்தப் பொருள்களை அடையவும் செய்கிறான்
என்னை உள்ளபடி அறியாமல் தேவதாந்த்ர பஜனம் -செய்பவருக்கும் பலனை நானே அளிக்கிறேன் –
என் சரீரத்தை தானே ஆஸ்ரயிக்கிறான் என்று நான் அறிவேன் —
கொடியை பந்தலில் ஏற்றுவது போலே -குச்சியில் ஏற்றி – துளி பக்தி பிறந்ததும் -இவர்களை ஆஸ்ரயித்து சில சில பலங்களை கொடுத்து –
அவரவர் இறையவர் குறையிலர் -அவரவர் -விதி வழி அடைய நின்றனர் –
அந்தர்யாமியாய் புகுந்து -மஹா க்ரமம்-அவன் திரு நாமம் –
சர்வ தேவதா நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி –ஆகாசம் நீர் கடலுக்கு போவது போலே –

அந்தவத்து ப₄லம் தேஷாம் தத்ப₄வத் யல்ப மேத₄ஸாம் |–
தே₃வாந் தே₃வ யஜோ யாந்தி மத்ப₄க்தா யாந்தி மாமபி॥—23-

புல்லறிவாளர்களான அவர்களுக்கு அவ்வாராதன பலன் அல்பமாகவும் முடிவுடையதாகவும் ஆகிறது
ஏன் எனில் தேவர்களை ஆராதிப்பவர்கள் தேவர்களை அடைகின்றனர் –
என்னுடைய பக்தர்களும் என்னை அடைகின்றனர்

மூவருக்கும் முதலாவான் முந்நீர் வண்ணன் -கடல் நீர் வையகத்தை வியாபித்து இருப்பது போலவே ப்ரஹ்ம ருத்ராதிகளை வியாபித்து இருப்பவன் என்றும்
கடல் நீரே மேகமாகவும் நதிகளாகவும் உரு எடுப்பது போலவே விஷ்ணு முதலிய அவதாரங்களை எடுத்து
லோக ரக்ஷணம் பண்ணி அருளுகிறான் என்றும் காட்டி அருளுகிறார் – )

———–

நீர் அவனையே பிரதானனாகச் சொல்லா நின்றீர் –
புறம்பே ஆஸ்ரயிப்பார் சிலரும் ஆஸ்ரயித்தார்க்கு பலம் கொடுப்பார் சிலருமாய் அன்றோ
நாட்டில் நடந்து போருகிறது-என்ன –
அவை யடங்கலும் வியர்த்தம் என்கிறார் –

இவர் இவர் என்று இருந்ததே குடியாக ஆஸ்ரயணீயர் என்று பிரமியாதே ஸ்ருஷ்டியாதி கார்யங்களை
அதுக்கு அடைத்த வடிவு எடுத்து நடத்திக் கொண்டு போருகிற-ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதிகள் ஆகிற
மூவருமே ஜகத்துக்கு ப்ரதானர் ஆவர் –
அம் மூவர் தம்மில் சமர் என்றும் –
மூவரும் கூட ஓன்று என்றும்
மூவருக்கும் அவ் வருகே ஒருவன் பிரதானன்-என்றும் பிரமியாதே –
அந்த மூவரிலும் வைத்துக் கொண்டு பிரதானனாவான்

ப்ரஹ்மாதிகளை இடுக்கி ஸ்ருஷ்டியாதிகளை நிர்வகித்துப் போருமவனாய்-
சஞ்சரியா நின்றுள்ள கடல் போலே இருக்கிற வடிவையும் யுடையவன் ஆனவன் -(நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேக பாஸ்வதா )

(நாராயாணா பிரம்மா ஜாயதே -நாராயாணா ருத்ரோ ஜாயதே
அஜயமானோ பஹுதா விஜாயதே
பிறப்பிலி -பல் பிறவிப்பெருமான் –
அந்தர் பஹிஸ்ஸ ஸர்வம் நாராயணா

சமஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி பூநிலாய ஐந்துமாய்
வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி -நாராயணன் நான்முகனைப் படைக்க அவன் சங்கரனைப் படைக்க
ஸோரோதீத்–ரோதனம் -ருத்ரா -அழுதான் –

ஸோ அப்ரவீத் அநபஹத பாப்மா வாஹம் –பாபம் நீங்காதவன் -சிவ அபூத் –

ச பிரம்மா சேந்த்ர -சக்ரஸ்ய நாராயண -இந்திரனும் நாராயணனே -திசைஸ் ஸ நாராயண -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்

கண்ணனைக் கூவுமாறு அறிய மாட்டேன் –அனைத்தும் என்கோ -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்

சஷுஸ்  ஸ த்ரஷ்டவ்யஞ்ச நாராயணா -கண்ணும் காணும் பொருளும் நாராயணனே

ஸ பூமிம் விஸ்வதோ வ்ருத்வா -பூமி எங்கும் வியாபித்து உள்ளான்
தஜ் ஜலான் –
அந்யஸ்ய ராஜன் ஸ பர தத் அந்ய பஞ்ச விம்சக தத்ஸ தத்வா தத் அநு பஸ்யந்தி ஹ் ஏவேதி சாதவ -பாரதம்
ஜீவனும் பரமாத்மாவும் வேவ்வேறே தத்துவமாக இருப்பினும் அந்தர்யாமியாக இருப்பதால் இருவரையும் ஒருவராகவே நல்லோர்கள் காண்கிறார்கள் –

நம புரஸ்தாதத ப்ருஷ்ட தஸ்தே–நமோஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ.–
அநந்த வீர்யாமித விக்ரமஸ்த்வம் -ஸர்வம் ஸமாப்நோஷி ததோஸி ஸர்வ—৷৷-ஸ்ரீ கீதை -11.40৷৷

மூ வகையான அளவுகளும் இல்லாதவனே -தேவர்களுக்கு ஈசனே -உலகு அனைத்தையும் வியாபித்து இருப்பவனே –
நாம ரூபங்கள் அற்றதாய்க் காரண நிலையில் உள்ள மூல ப்ரக்ருதியும் –
நாம ரூபங்கள் உடையதாய் கார்ய நிலையில் உள்ள மூல பிரக்ருதியும் –
இந்த மூல பிரக்ருதியோடு கூடிய பத்த ஜீவ ஸ்வரூபமும் –
இவை அனைத்துக்கும் மேற்பட்டதான முக்தாத்ம ஸ்வரூபமும் நீயே –
ஆகையால் நீயே ஆதி தேவனாவாய் -புராண புருஷனாய் இருப்பவன் –
இந்த உலகுக்கு மேலான ஆதாரமாய் இருப்பவனும் நீயே

ஈச தேவ ஏக நாராயணா
சதேவ சோம்ய ஏகமேவ அத்விதீயதம்

ஸர்வ கத்வாத் அனந்தஸ்ய ஸ ஏவாஹம் அவஸ்தித -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-85-அநந்தன் எங்கும் பரவி இருக்கையாலே நானும் அவனாகவே இருக்கிறேன் –

யதோ வா இமாநி

ஏகஸ் ஸ்வ தந்தரோ ஜகதோ பபூவ -என்றும்
ஏக ஸாஸ்தா ந த்விதீயோ அஸ்தி ஸாஸ்தா -பாரதம்

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்

ஸர்வ அந்தர்யாமி -விஸ்மாத்மநம் -சரீரீ சரீரம் பாவம் -பிரகாரீ பிரகாரம் )

ஜகத் காரண பூதனுமாய் சர்வ விஷயமான வாத்சல்யத்தையும் யுடையனானவனுடைய
கிருபை ஒழிய -பிரசித்தமான நீரை யுடைத்தான ஜகத்தில் உள்ள பலருடைய பிரசாதமும் வியர்த்தம்

இவனை ஒழிந்த மற்ற இருவருடைய அருளோடு கீழ்ச் சொன்னவர்களோடு வாசியற சர்வமும் வியர்த்தம்
அன்றிக்கே –
நீர் சூழ்ந்த பூமியில் நாம மாத்ரமான பல்லார் அருளும் பழுது என்னவுமாம் –

தான் பலியாத அளவன்றிக்கே
பகவத் பிரசாதத்தையும் விலக்குவதாகையாலே-பழுது -என்கிறார்-

(பாணாசூர வ்ருத்தாந்தம் போல்வன அறிவோமே

ரஜஸ் தமஸ் -பிரசுரராகையாலே ஸம்ஸாரத்திலே பூண் கட்டவும் அல்ப அஸ்திர பலன்களையே இவர்களால் தர முடியும் -)

(மூவருள்ளும்-முதலாவான் மூரி நீர் வண்ணன் -என்கையாலே கடல் நீர் வையகத்தை வியாபித்து இருப்பது போலே
ப்ரஹ்ம ருத்ராதிகளை வியாபித்து இருப்பவன் என்றும்
கடல் நீரே மேகமாகவும் நதிகளாகவும் உரு எடுப்பது
போலே
தானே விஷ்ணு யாதி அவதாரங்கள் எடுத்து உலகோரை ரக்ஷித்து அருள்பவன் என்கிறார் -)

—————————————————————————————–

நல்லான் அருள் பெற்ற -எனக்கு சோகம் உண்டாயிற்று -என்கிறார் –
பண்டு உபாயாந்தரங்களிலும் தேவதாந்தரங்களிலும் ப்ரவணனாய் இழந்தேன் என்று சொல்லுகிறார் –

இதர தேவதைகளைப் பற்றி இவ்விஷயத்தை இழந்த நாட்டார் இழவைப் பரத்வ நிஷ்கர்ஷ முகத்தாலே பரிஹரித்தவர்
அநாதி காலம் இதர தேவதைகளையும் -இதர சாதனங்களையும் பற்றி
இவ் விஷயத்தை அகன்று திரிந்த தம் இழவை நினைத்து சோகிக்கிறார்

பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி———16–

பதவுரை

கடல் ஓதம்–கடலலையானது
கால்–தன் திருவடி வாரத்திலே
அலைப்ப–(துடைதட்டி உறங்கச் செய்வது போல) வீச
கண் வளரும்–யோக நித்திரை செய்கின்ற
செம்கண்–செந் தாமரை போன்ற திருக்கண்களை யுடையவரும்
அடல் ஓதம் வண்ணர்–அநுபவிக்க இழிந்தவர்களை அநுபவிக்க வொட்டாமல் அடர்கின்ற செளந்தரியமாகிற
அலைகளோடு கூடிய வடிவை யுடையவருமான பெருமாளுடைய
அடி–திருவடிகளை
அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மீது
கண்டு தொழுதேன்–கண்ணாரக் கண்டு (இன்று) ஸேவிக்கப் பெற்ற அடியேன்
பல பகலும்–“கீழ்க் கழிந்த கால மெல்லாம்
பழுதே போயின என்று–(இவ் விதமாகக் கழியாமல்) வீணாகக் கழிந்தனவே!” என்று
அஞ்சி அழுதேன்–மிகவும் சோகமுற்றுக் கிடக்கின்றேன்.

பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி அழுதேன் —
போன காலம் அநாதி –வரும் காலம் அநந்தம் –
இத்தோடு ஒத்த காலம் இறே போயிற்று என்று அழுதேன்

இழவுக்கு அழுதார் ஆகில் அச்சம் ஆவது என் –
வருமத்தை குறித்து அன்றோ அஞ்சிற்று என்னில் -அதிகாரி நான் ஆகில்
போன காலம் போலே ஆகிறதோ வருகிற காலமும் என்கிறார் –

காலேஷ்வபி ச ஸர்வேஷு திஷு ஸர்வாஸூ ச அச்யுத
சரீரே ச கதவ் சாபி வர்த்ததே மே மஹத் பயம் -ஜிதந்தே -1-9-

வர்த்ததே மஹா பயம்-ஜிதந்தே 9 மந்த்ரம் – -ஸ்ரீ வசன பூஷணம் காட்டும் பிரமாணம்

யஸ்ய ராமம் ந பஸ்யேத் து யம் ச ராமோ ந பஸ்யதி –நிந்திதஸ்ச வஸேல் லோகே ஸ்வாத்மாப் யேநம் விகர்ஹதே-(அயோத்யா-17-14 )என்று
சொல்லுகிறது பெருமாளுடைய ஒரு நாளைக்கு இழவுக்கு இறே

யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்த்யதே
ஸா ஹாநிஸ் தன் மஹச் சித்ரம் சாப்ராந்தி சா ச விக்ரியா –என்று ரிஷிகள் ஈடுபட ஆழ்வார்கள் அழ கேட்கவும் வேணுமோ-

கடலோதம் காலலைப்பக் –
(புஷ்ப்ப ஹாஸ -மலரின் மெல்லியவன் -ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் )திருவடிகளை -கடலோதமானது துடை குத்துமா போலே அலைப்ப(அதனாலேயே மெய் மறந்து கண் வளருகிறான் -கண் வளர்ந்து அருளும் போதும் வாத்சல்யத்தாலே ஜகத் ரக்ஷண சிந்தையிலே ஈடுபட்டுள்ளான் -)

கண் வளரும் செங்கண்-அடலோத வண்ணரடி——அரவணை மேல் கண்டு தொழுதேன்–
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே(வெளுத்த பாற் கடல் அரவணை -மேல் கறுத்த திருமேனி பரபாகம் )

(யதார்ஹம் கேஸவே வ்ருத்திம் அவசா ப்ரதி பேதிரே -பாரதம் -தங்களையும் மீறி கேசவன் இடம் மரியாதை செய்தனர்
அப்படி எதிரிகளையும் ஈடுபடுத்தும் வடிவு அழகு என்னை ஈடுபடுத்தச் சொல்ல வேணுமோ)

பழுதே –
பழுதும் பழுது அல்லாததும் கூடப் பெற்றேனோ

பல பகல் –
இழந்த அநாதி காலம் பலவாய் -அதுக்கு அநந்தரம் அனந்த காலமான படி

போயின –
போன நீர்களைக் கோலவோ–வரும் காலமும் பழைய காலமும் ஓன்று -பழைய நானே இன்னம்
அப்படி யாகில் செய்வது என் –என்கிறார் -காலேஷ் வபி ச –

அரவணை மேல் கண்டு –
பரியங்க வித்யையில் படியே பூர்ணமாகக் கண்டேன்

கண்டு தொழுதேன் -கண்டால் செய்யும் தொழில்
கால் அலைப்ப -சிறு திவலை துடை குத்த
செங்கண் –வாத்சல்யம் தோற்றுகை
அடலோதம் -நெருங்கின ஓதம் –

(யதார்ஹம் கேசவ வ்ருத்திம் தவஸா பிரதிபேதிரே -துரியோதனாதிகள் தங்களையும் மீறி மரியாதை செய்தார்கள் அன்றோ –
காலேஷ் வபி ச ஸர்வேஷு திஷூ ஸர்வாஸூ ச அச்யுத
சரீரே க கதவ் சாபி வர்த்ததே மே மஹத் பயம் -ஜிதந்தே -1-9-
யஸ் ச ராமம் ந பஸ் யேத்து யஞ்ச ராமோ ந பஸ்யதி
நிந்திதஸ் ச வஸேல் லோகே ஸ்வாத்மாப் யேநம் விகர்ஹதே -அயோத்யா -17-14-
யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்தயேத்
ஸா ஹாநிஸ் தன் மஹச் சித்ரம் சா பிராந்தி சா ச விக்ரியா – )

(ஆவியே! அமுதே! என நினைந்து உருகி* அவர் அவர் பணை முலை துணையாப்*
பாவியேன் உணராது எத்தனை பகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்* சூழ் புனல் குடந்தையே தொழுது*
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2))

————-

இதர தேவதைகளைப் பற்றி இவ் விஷயத்தை இழந்த நாட்டார் இழவைப் பரத்வ நிஷ்கர்ஷ முகத்தாலே பரிஹரித்தவர்

அநாதி காலம் இதர தேவதைகளையும் -இதர சாதனங்களையும் பற்றி-இவ் விஷயத்தை அகன்று திரிந்த தம் இழவை நினைத்து சோகிக்கிறார்

ஸுகுமார்ய அனுரூபமாக கடலின் சிறு திவலைகள் ஆனவை துடை குத்துவாரைப் போலே
அனுகூலமாகத் திருவடிகளை ஸ்பர்சிக்க –
அத்தாலே பள்ளி கொண்டு அருளுமவனாய் -வாத்சல்யத்தாலும் ஐஸ்வர்யத்தாலும் குதறிச் சிவந்த திருக் கண்களை யுடையனுமாய் –
அனுபவிக்கப் புக்கவர்களை அபி பவித்து எழ வீசுகிற ஸுந்தர்ய தரங்கங்களோடு கூடின வடிவை யுடையவனுமானுடைய திருவடிகளை –

(அரைச் சிவந்த ஆடை அலை வந்து திருவடியில் இருந்து கூட்டிப் போனதே
ஸுந்தர்ய அலைகள் மேல் அனுபவிக்க ஒட்டாமல் -அடலோத வண்ணர்)

வெளுத்த நிறத்தை யுடையனான திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே -ஞான சாஷாத்கார முகேன

(திருப்பாற் கடலிலே நேராகப் போனவர் அல்லவே -ஆகையால் ஞான சாஷாத்காரமே )கண்டு அனுபவித்து –
தத் அனந்தர பாவியான தொழுகையிலும் அந்வயிக்கப் பெற்றேன் —

இப்படி அனுபவத்தோடு அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகைக்கு-உறுப்பான கீழ்க் கழிந்த காலம் எல்லாம் ஓன்று ஒழியாத படி வ்யர்த்தமே போய் விட்டதே -என்று-கண்ண நீர் வெள்ளமிட இருந்து சோகித்தேன் –

கீழ் இழவுக்கு அடியான நம்முடைய கர்மம் இப்போதும் குறி அழியாதே கிடக்கையாலே
மேலுள்ள காலத்திலும் -இவ் வனுபவத்துக்கு குறைத்தல் வரில் செய்வது என் -என்று பயப்பட்டு அழுதேன் –

———————————————————————————————

சம்சாரத்தில் நினைத்த படி எல்லாம் அனுபவிக்கப் போமோ –
பரம பதத்தில் போனால் அன்றோ அனுபவிக்கலாவது -என்ன
இங்கே வெள்ளம் இட்ட அன்று தான் பெற்றேனோ -என்கிறார் –
பழுது என் என்னில் -இன்று கதை கேட்க இருந்தேன் என்பார் இறே

திருப் பாற் கடலிலே சென்று கிட்ட வேண்டும் படி தூரமாய் நான் இழந்தேனோ-
அவன் தானே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து தூளி தானம் பண்ணா நிற்கச் செய்தே கிடீர்-
நான் இழந்தேன் -என்கிறார் –

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடி யுகிரா
லீர்ந்தான் இரணியன தாகம் இருஞ் சிறைப் புள்
ளூர்ந்தான் உலகளந்த நான்று –17-

பதவுரை

இரணியனது–ஹிரண்யாஸுரனுடய
ஆகம்–மார்வை
வடி உகிரால்–கூர்மையான நகங்களாலே
ஈர்ந்தான்–கிழித்தெறிந்தவனும்
இரு சிறை புள் ஊர்ந்தான்–பெரிய சிறகை யுடைய கருடனை ஏறி நடத்துபவனுமாகிய எம்பெருமான்
உலகு அளந்த நான்று–உலகளந்த காலத்திலே
அடியும்–திருவடி
படி கடப்ப–பூமியை அளந்து கொள்ள
தோள்–திருத் தோள்கள்
திசை மேல் செல்ல–திக்குகளிலே வியாபிக்க
முடியும்–கிரீடமும்
விசும்பு–மேலுலகத்தை
அளந்தது–அளவு படுத்திக் கொண்டது
என்பர்–என்று ஞானிகள் சொல்லுவர்கள்.
(ஐயோ! நான் நேரில் ஸேவிக்கப் பெற வில்லையே!!)

அடியும் படி கடப்பத் -கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய் -4-3-6- -என்னும் (புஷ்ப ஹாஸ திருவடிகளைக் கொண்டு )திருவடிகளைக் கொண்டு காடுமோடையும் அளப்ப
தோள் திசை மேல் செல்ல–திருத் தோள்கள் திக்குகளில் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் –திரு அபிஷேகம் அண்ட பித்தி அளவும் நிமிர்ந்தது

வடியுகிரா-லீர்ந்தான் ஈராணியன தாகம்–கூரிய உகிராலே ஹிரண்யனுடைய மார்வைப் பிளந்தான்(ஆயுதம் தேவையாய் இருக்க வில்லையே -அதுவும் விளையாட்டாகக் கிழித்தவன் -ஈர்ந்தவன் )

இருஞ்சிறைப் புள்ளூர்ந்தான் உலகளந்த நான்று ——-பெரிய திருவடி முதுகில் இருக்கப் பொறாத மிருதுவான(புஷ்ப ஹாஸ )
திருவடிகளைக் கொண்டு உலகு அளந்த அன்று –

அடியும் படி கடப்ப-தோள் திசை மேல் செல்ல -முடியும் விசும்பு அளந்தது -என்கிறார்
நான் கேட்டார் வாய் கேட்டுப் போம் அத்தனை -(தாவி அளந்த தடம் தாமரை அடிகளில் தலை வைக்காமல் பாக்யம் கிட்டப் பெற்றேன் அல்லேன்-இன்று யாம் வந்தோம் இரங்கு -அன்று உலகம் அளந்த -சென்று இலங்கை செற்ற திருவடிகள்
திரிவிக்ரமன் ராமன் -நின்ற இடத்தில் இருந்து அளந்ததுக்கு மேல் சென்று இலங்கை செற்ற -நடந்தான் -பல்லாண்டு பாட வேண்டாமோ )

அடியும் படி கடப்ப-இத்யாதி –
சென்று காண வேண்டும் திருவடிகள் தானே வந்து பூமியை அகப் படுத்திக் கொண்டது
தோள் திக்குகளை எல்லை கண்டது –முடியும் அபரிச்சேத்யமான ஆகாசத்தை அளவு படுத்திற்று-
நின்றார் நின்ற படியே வெற்றி கொள்ளுமா போலே

வடிவு -இத்யாதி
ஓர் இடத்திலே விரோதி நிரசனம் பண்ணி -ஓர் இடத்திலே சென்று முகம் காட்டும் -அளவன்று இறே
ஜகத்துக்கு எல்லாம் ஏக காலத்திலே உதவின இது –

———

திருப் பாற் கடலிலே சென்று கிட்ட வேண்டும் படி தூரமாய் நான் இழந்தேனோ-
அவன் தானே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து (அடிப் பொடித் தானம் செய்த போதும் அன்றோ  )தூளி தானம் பண்ணா நிற்கச் செய்தே கிடீர்-நான் இழந்தேன் -என்கிறார் –

கூர்மையான திரு உகிராலே -அதுக்குத் தக்க -பரியனாக வந்த இரணியன் -தேவர்கள் வர பலம் -அநாயாசேன கிழித்துப் பொகட்டு

பெரிய திருவடியை மேற் கொண்டு ஸ்வைரமாக நடத்தி -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் கூப்பிட மிக த்வரையுடன் ஓடி வந்து

இந்திரன் கார்யம் செய்க்கைக்காக திரு வுலகு அளந்து அருளின காலத்திலே –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய் -4-3-6- -என்கிறபடியே
என் தலைக்கு அலங்காரமாக நான் ஆசைப்பட்டு இருக்கும் திருவடிகள் -காடும் ஓடையுமான பூமியை அளந்து கொள்ள

பிராட்டியை (அணைக்க)பரிஷ்வ்ங்கிக் கடவ திருத் தோள்கள் ஆனவை இடமடையும் படி திக்குகளின் மேலே வளர்ந்து செல்ல
திரு அபிஷேகமும் அபரிச்சேதயமான ஆகாசத்தை முசிவற நிமிர்ந்து அளவு படுத்திக் கொண்டது -என்று
தத்வ வித்துக்களான ரிஷிகள் சொல்லா நிற்பர்கள் –
தானே வந்து தலையிலே இருந்த அன்று இழந்து -இன்று -கேட்டார் வாய் கேட்பதே நான் -என்று வெறுக்கிறார்

(சஞ்சயன் கண்டு சொல்ல கேட்டான் த்ருதாஷ்ட்ரன் -இங்கு ரிஷிகள் கேட்டு சொல்ல கேட்ட வ்ருத்தாந்தம் இது)

(ஓர் இடத்திலே ஓர் அடியானுக்கு விரோதியை அழித்து உபகரித்த ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரத்தில் இழந்தது வியப்பில்லை
ஸ்ரீ கஜேந்த்ரனுக்குப் புள்ளூர்ந்து காட்சி அளித்து உபகரித்த போது இழந்ததும் வியப்பில்லை-
எல்லார் தலையிலும் திருவடியை வைத்து உபகரித்த திரிவிக்ரம அவதாரத்தில் அன்றோ இழந்தேன் என்கிறார் -)

———————————————————————————————

திரு உலகு அளந்தித்திலேயோ இழந்தது -அத்தோடு ஓக்க வரையாதே தீண்டிப் பரிமாறின
கிருஷ்ணாவதாரத்தில் இழந்திலேனோ-என்கிறார் -(உலகம் தீண்டிய திரிவிக்ரமன் -ஊராகத் தீண்டிய கிருஷ்ணன் )

கடலில் கிடையிலும் அங்கு நின்றும் வந்து ஞாலத்தூடே நடந்த இடத்திலும் இழந்த அளவோ –
இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும் படி இடைக் குலத்திலே வந்து பிறந்த இடத்திலும் இழந்தேன் இறே –
என்று சோகிக்கிறார் –

நான்ற முலைத் தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால் –18-

பதவுரை

(பேய்ச்சியான பூதனையினுடைய)
நான்ற முலைத் தலை–சரிந்து தொங்குகின்ற முலையிலுள்ள
நஞ்சு–விஷத்தை
உண்டி–(அவள் பிணமாய் விழும்படி) அமுது செய்து
உறி–உறிகளிலே வைத்த
வெண்ணெய்–வெண்ணெயை(க் களவு செய்து)
தோன்ற–இச் செயல் எங்கும் ப்ரஸித்தமாம்படி-தோன்ற–களவு வெளிப்படும்படி –
உண்டான்–அமுது செய்தவனாகி
வென்றி–ஜயத்தை யுடைய
சூழ்–எதிர்ப்பவர்களைத் தப்பாமல் தன் கையில் அகப் படுத்திக் கொள்ள வல்ல(சூழ்ந்து கொல்ல -சூழ்ச்சியால் கொல்ல )
களிற்றை–(கம்ஸனுடைய) யானையை
ஊன்றி பொருது–எதிர் நின்று யுத்தம் செய்து
உடைவு கண்டாலும்–அழித்தொழித்தவனும்
புள் வாய் கீண்டானும்–பகாசுரனுடய வாயைக் கிழித்து பொகட்டவனும் ( யாவனெனில்?)
மருது இடை போய்–இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனாய்
மண் அளந்த–உலகங்களை அளந்து கொண்டவனான
மால்–எம்பெருமானே யாவன்.

(இவ்வளவு சேஷ்டிதங்கள் செய்த கண்ணனே -ஸர்வ ஸூலபனே  மண் அளந்த மால் -சர்வாதிகன் -மால் -பெருமைக்கும் ஆஸ்ரித வ்யாமோஹமும்)

நான்ற முலைத்தலை–தொங்குகிற ஸ்தநத்தில் இருக்கிற
தோன்ற வுண்டான்-திருடி எல்லாரும் அறியும் படியாக அமுது செய்தவனும் –
வென்றி சூழ் களிற்றை-வெற்றியையும் சூழ்ச்சியையும் யுடைய குவலயா பீடத்தை –

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு –
இவன் தன்னுடைய வாயை முலையில் வைக்க ஸ்வரூபா பத்தியைப் பெற்றாள் அவள்(ஸ்வேந ரூபேண -ஆவிர்பாவம் -அபி நிஷ் பத்யதே –மூடிகள் விலகி -ஸ்வரூபாபத்தி -கிருஷ்ண சம்பந்தம் பெற்றுக் கொடுக்கும் -தாய் தன்மை கழிந்து பேய் தன்மை பெற்றதே இயற்கைத் தன்மை அவளுக்கு )
ஆரேனுமாக இவனை ஸ்பர்சித்தார்க்கு ஸ்வரூபாபத்தி தப்பாது -எல்லாருக்கும் வந்தேறி போம் -(நமக்கு சம்சாரம் கர்மா வந்தேறி )
ஸ்வேன ரூபேண அபி நிஷ் பத்யதே–என்கிறபடியே –

உறி வெண்ணெய்-தோன்ற வுண்டான் –
உறியில் சேமித்து வைத்த வெண்ணையைக் கண்டு எட்டி யுண்டு -களவு தோற்றும் படி உண்டான் -(தெய்வாதீனமாக தானே வெண்ணெய் தோற்ற -பொத்த உரலைக் கவிழ்த்து -தோன்ற உபாயத்தால் -கண்டு உண்டான்-சிசுபாலாதிகளுக்கும் தோற்ற அடியேன் இழந்தேனே )

வென்றி சூழ் களிற்றை —
வென்றி மிக்க களிற்றை-வெற்றியை யுடைத்தாய் இவனைச் சூழ்க்க நினைத்த களிற்றை -என்றுமாம் –

ஊன்றிப்-ஆனைப் பூசல் என்று இராதே கிட்டி -மருப்பொசித்த பாகன் (திருச்சந்த -52)-என்னும் படியே

பொருதுடைவு கண்டானும் –
பசலைக் கலம் போலே உடையும் படி கண்டவன் –
இடைவு கண்டான் -என்றுமாம் -(ஆயுதத்தை உருவினவுடன் உறை சுருங்கிப் போவது போலே கொம்பைப் பிடுங்கிய வுடன் ஆனையும் சுருங்கியது -சிதைந்து உழுத்துப் போம் படி பண்ணினான் )

புள்ளின் வாய் கீண்டானும்-மருதிடை போய் மண்ணளந்த மால் —
திரு உலகு அளந்து அருளின நீர்மை பின்னாட்டுகிறது-
கிருஷ்ணாவதாரத்துக்கும் திரு உலகு அளந்து அருளின இடத்துக்கும் 1-அழகும் 2-முஃத்யமும் 3-ஆஸ்ரித பக்ஷபாதமும்
உள்ளிட்டவை இரண்டு இடத்துக்கும் ஒத்து இருக்கும் –

நான்ற -இத்யாதி –
தன் க்ருத்ரிமான பால் போன வாறே அந்த முலை பையான படி —

தோன்ற யுண்டான் -சிசுபாலாதிகளும் ஏசும் படி -(களவு வெளிப்படும்படி )

வென்றி இத்யாதி –
வெற்றியையும் சூழ்ச்சியையும் யுடைய

ஊன்றி -தரித்து நின்று –
உடைவு -கருவிப் பை போலே ஆக்கின படி -மண்ணளந்த மால் -பின்னாட்டின படி –

——————-

கடலில் கிடையிலும் -(16)அங்கு நின்றும் வந்து ஞாலத்தூடே நடந்த இடத்திலும் (17 )இழந்த அளவோ –
இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும் படி இடைக் குலத்திலே வந்து பிறந்த இடத்திலும் இழந்தேன் இறே -என்று சோகிக்கிறார்

பேய் வடிவை மறைத்து தாய் வடிவு கொண்டு வந்த பூதனை யுடைய பாலின் கனத்தாலே சரிந்து நாலுகிற
முலையில் யுண்டான நஞ்சை -அவள் பிணமாய் விழும்படி அமுது செய்து -உறிகளிலே சேமித்து வைத்த
வெண்ணெயை சிசுபாலாதிகள் கோஷ்ட்டியிலும் பிரசித்தமாம் படி அமுது செய்து அருளினவனாய்-
வெற்றியை யுடைத்தாய் -எதிர்த்தவர்களை தப்பாமல் சூழ்த்துக் கொள்ள வல்ல குவலயா பீடத்தை
கஜ யுத்தத்துக்கு தேசிகரான வர்களை போலே உறைக்க நின்று பொருது தலை எடுக்க மாட்டாமல்
உரு அழிந்து உளுக்காம் படி பண்ணினவனும் -தன்னை விழுங்க வந்த பகாஸூரன் வாயை
கிழித்துப் பொகட்டவனும்-யமளார்ஜுனங்களின் நடுவே அவை வேர் பரிந்து விழுந்தபடி தவழ்ந்து
போய் பூமி முதலான லோகங்களை அளந்து கொண்ட சர்வாதிகன் கிடீர் –

பழைய பேய் வடிவை கொண்டு விழுந்தாள் என்றுமாம்-

———————————————————————————————–

அவதாரம் ஒழியப் பெற்றாரும் உண்டு கிடீர் -என்கிறார் –
நான் தீண்டப் பெறாதே மயங்கா நின்றேன் -நீ தீண்டப் பெற்று பரவசமாகா நின்றாய் –
பூமியைப் போலே ஒரு கால் இன்றியே
நித்ய சம்ஸ்லேஷம் பெறுவதே கடல் -என்று கொண்டாடுகிறார் –

காதா சித்கமான அனுபவம் கிடையாமையால் -நான் கண்ண நீர் விழ விடா நிற்க -அவனை மடியிலே சாய விட்டு
முழு நோக்குச் செய்து நித்ய அனுபவம் பண்ணி வாழுகிற நீ என்ன பாக்யம் பண்ணினாய் -என்கிறார் –

மாலும் கருங்கடலே என் நோற்றாய் வையகமுண்
டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக்
கரு மேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திரு மேனி நீ தீண்டப் பெற்று –19-

பதவுரை

வையகம்–இவ் வுலகத்தை யெல்லாம்
உண்டு–(பிரளயம் கொள்ளாதபடி) திரு வயிற்றினுள்ளே வைத்து
ஆலின் இலை–ஆலந் தளிரிலே
துயின்ற–சயனித்துக் கொண்டவனும்
ஆழியான்–கடலில் சயனம் என்றும் –ஆலிலை துயின்ற போதும் திரு வாழியை யுடையவனும் என்றும்
கோலம் கரு மேனி–அழகிய கறுத்த திருமேனியை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனுமான
மால்–எம்பெருமான்-ஆஸ்ரித வாத்சல்யம்
கண் படையுள்–உறங்குகையில்
என்றும்–எப்போதும்
திருமேனி–அவனுடைய திருமேனியை
தீண்ட பெற்று–ஸ்பர்சிக்கப்பெற்று
மாலும்–(அந்த ஸ்பர்ச ஸுகத்தினால்) மயங்கிக் கிடக்கிற
கரு கடலே–கரிய ஸமுத்ரமே!
நீ என் நோற்றாய்–(இந்தப் பாக்கியம் உனக்குக் கிடைக்குமாறு) நீ என்ன நோன்பு நோற்றாயோ?

(என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு யுடையாள் போல்)

மாலும்-மது பான மத்தரைப் போலே பிச்சேறா நின்ற
கருங் கடலே-பெற்ற பேறு உன்னுடம்பே கோள் சொல்லுகிறது இல்லையோ -இல்லையாகில் உடம்பு வெளுத்து இராதோ–
என் நோற்றாய்-ஆசையை விட்டு நானும் நோற்கும் படி சொல்லாய் –

(நிர்ஹேதுக கடாக்ஷமே எதிர்பார்த்து உள்ளவர் அன்றோ ஆழ்வார்கள்
கோர மா தவம் செய்து பெரிய பெருமாள் -மலைக்கு மேல் -அக்னியின் நடுவில் -கோயில் திருமலை பெருமாள் கோயில்
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பினால் -அன்றோ அவன் செய்யும் தவம் நம்மைப் பெற)

வையகமுண்-டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று ——–சிறு வயிற்றிலே பூமி எல்லாவற்றையும் அடக்கி -பவனான ஆலிலையில்
கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய திருமேனியைத் தீண்டப் பெற்று

மாலும் -மதுபான மத்தரைப் போலே பிச்சேறுகிற கடலே –

கருங்கடல் -உடம்பு வெளுக்க வேண்டாவே

(நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவேனோ -கண்ணன் திருமேனி ஒளி வீச பாற்கடலும் நீலக்கடல் ஆகுமே)

ஆழியான் -ஏகார்ணவத்திலும்(பிரளய காலத்தில் )-திருப் பாற் கடலிலும் துயின்ற -என்னுதல் –

ஆஸிலே கை வைத்து பிரளயத்தை இரு துண்டமாக விடுவேன் என்று இருக்கும் -என்றுமாம் –

பிராட்டிமாரோடு ஊடின போதும் உனக்கு பிரிவு இல்லை –

கடலும் எம்பெருமானும் -ஸ்ரீ பரத ஆழ்வானும் பெருமாளையும் போலே நிறம்

ப்ரஹ்ம பிராப்தி பலமாய்- கைங்கர்யம் ஆனுஷங்கிகம்  ஆனால் போலே -திருமேனி தீண்டுகை பிராப்தம் –
கைங்கர்யம் அவகாதத்தில் ஸ்வேதம் ( நெல் குத்த வியர்வை வருமா )போலே –உபாயத்திலும் ஸ்வரூப ஞானம் பிறந்தால் வியவசாயம் ஆனுஷங்கிகம் –

——————

காதா சித்கமான அனுபவம் கிடையாமையால் -நான் கண்ண நீர் விழ விடா நிற்க -அவனை மடியிலே சாய விட்டு
முழு நோக்குச் செய்து –நித்ய அனுபவம் பண்ணி வாழுகிற நீ என்ன பாக்யம் பண்ணினாய் -என்கிறார் –

ஜகத்தை அடைய பிரளயத்தில் அழியாத படி திரு வயிற்றிலே எடுத்து வைத்து ஓர் ஆலம் தளிரிலே -கண் வளர்ந்து அருளினவனாய்
பிரளயம் வரில் இரு துண்டமாக விடுகைக்கு பரிகரமான திருவாழியை யுடையனுமாய் -அழகிய கறுத்த நிறத்தை யுடைய திரு மேனியையும்
அதுக்குப் பகைத் தொடையாகும் படி வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த திருக் கண்களையும் யுடையனாய்-
ஆஸ்ரித வியாமுக்தனானவன் கண் வளர்ந்து அருளுகிற இடத்தில் -சர்வ காலத்திலும் அவன் திருமேனியை நீ அனுபவிக்கப் பெற்று-
அந்த ஸ்பர்ச ஸூகத்தாலே மயங்கா நிற்பதாய் -அவன் வடிவின் நிழலீட்டாலே கறுத்த நிறத்தை யுடைய கடலே-
இப் பேறு பெறுகைக்கு என்ன சாதன அனுஷ்டானம் பண்ணினாய் -அத்தைச் சொல்ல மாட்டாயோ

நானும் அனுஷ்ட்டித்துப் பார்க்கைக்கு -என்று கருத்து –

மால் -என்று பெருமையைச் சொல்லுகிறது என்றுமாம் –

கண் படையுள்
கிடந்ததோர் கிடக்கை -திருமாலை -அழகு முழுதும் காணலாமாம் படி
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட –நாச்சியார் -4- ஆசைப் பட்ட பேற்றை அன்றோ பெற்று இருப்பது
என்றும்
அன்புடையார் ஒரு நாள் ஒரு போது பெற ஆசைப்படும் பேற்றை அன்றோ எப்போதும் பெற்று இருப்பது
திருமேனி
பெரிய பிராட்டியார் ஆசைப்படும் பேற்றை அன்றோ பெற்று இருப்பது
தீண்டப் பெற்று
பார்ப்பது மட்டும் அல்லாமல் -எல்லாக் காலத்திலும் அவன் திருமேனியை அனுபவிப்பிக்கப் பெற்று
அந்த ஸ்பர்ச ஸூ கத்தாலே மயங்கா நிற்பதாய்
அவன் வடிவின் நிழலீட்டாலே கறுத்த நிறத்தை யுடைய கடலே
இப்பேறு பெறுகைக்கு என்ன சாதன அனுஷ்டானம் பண்ணினாய்
அத்தைச் சொல்ல மாட்டாயோ நானும் அனுஷ்ட்டித்துப் பெறுகைக்கு என்று கருத்து –

மால் -ஆஸ்ரித வ்யாமோஹமும் பெருமையும்-

மாலும் கரும் கடலே -திருப்பாற் கடலை கரும் கடல் என்னலாமோ என்னில்
நீலக்கடல் கடைந்தாய் -திருவாய் -10-10-7-என்றாரே -இவன் நிழலீட்டாலே ஆகுமே
பிரளய ஜலத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்-

——————————————————————————————-

பெற்றார் தளை கழல -என்கிற -இத்தால் கிருஷ்ணாவதாரத்தை சொல்லவுமாம்
வாமனாவதாரம் தன்னையே சொல்லுகிறது ஆகவுமாம் -(அதிதி கஸ்யபர் -ஸம்ஸார விலங்கு போக்கி அருளியவன் என்றுமாம் )

(புள்ளின் வாய் கீண்டான் பகாசுரன் என்று கொண்டும்
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்
புள்ளின் வாய் கீண்ட ஜடாயுவை முடித்த ராவணன் என்றுமாம் போல் இங்கும்)

(ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன ஆகதாம் மதுராம் புரீம்-அவதார கந்தம் -பீஜம் போல் பாற்கடல் -ஆழி எழ கோஷம் உண்டே )

படுக்கையாய் கிடந்த கடலுக்குத் தன்னைக் கொடுக்கச் சொல்ல வேணுமோ –
தேவதாந்தரங்களுக்கு தன்னைக் கொடா நிற்க என்கிறார்

கடல் அவனைப் பெற்று களித்த அளவேயோ-அப் படுக்கையை விட்டு -இங்கே வந்து அவதரித்த இடத்திலும்
சில பாக்யாதிகர் கிட்டி அனுபவிக்கப் பெற்றார்கள் கிடீர் -என்கிறார் –

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால்  நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று—20–

பதவுரை

பெற்றார்–மாதா பிதாக்களான வஸுதேவ தேவகிகளுடைய
தளை கழல–கால் விலங்கு அற்றுப் போம்படியாக(தந்தை தாய் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் )
பேர்ந்து–(திருப் பாற் கடலில் நின்றும்) பெயர்ந்து (க்ருஷ்ணனாக வந்து பிறந்தவனும்,
ஓர் குறள் உரு ஆய்–விலக்ஷண வாமந வேஷத்தை யுடையனாய்).
செற்றார் படி–ஆஸ்ரித விரோதியான மாவலி தன்னதென்று நினைத்திருந்த பூமியை
கடந்த–அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட
செம் கண் மால்–புண்டரீகாக்ஷனுடைய
நல் தாமரை மலர் சே அடியை–அழகிய தாமரைபோற் சிவந்த திருவடிகளை
வானவர்–இந்திராதி தேவர்கள்
கை கூப்பி–அஞ்ஜலி செய்து கொண்டு
நிரை மலர் கொண்டு நின்று–தொடை வாய்த்திருந்துள்ள பூக்களை ஸமர்ப்பித்துக் கொண்டு பணிந்து
ஏத்துவர்–துதிப்பர்கள்;
ஆல்–ஐயோ! (அப்போது அவர்களைப் போலே தாமும் துதிக்கப் பெற வில்லையே யென்கிற துக்கத்தைச் காட்டுகிறது.)

பெற்றார் தளை கழலப் -பேர்ந்து -பிறந்து -என்றுமாம் -ஆரேனுமாக ஸ்பர்சிக்கப் பெற்றார்க்கு –தளை கழல-(தந்தை கால் விலங்கற -பெரிய திருமொழி 8-5-1-)

பேர்ந்தோர் குறளுருவாய்ச்-செற்றார் படி கடந்த –செங்கண் மால்— இந்திரனுக்கு அன்று ஆகாத சத்ரு தனக்கு ஆகாதே

(வாமனனுக்கும் பொய்கை ஆழ்வாருக்கும்
பள்ளியில் ஓதி -இங்கு இல்லையே -எங்கும் உள்ள கண்ணன் என்ற மகனைக் காய்ந்த -ஆழ்வார் தமக்கு மகனாகக் கொண்டது போல்)

த்விஷத் அன்னம் நபோக்த்வயம்–யஸ்த்வாம் த்வேஷ்ட்டிச மாம் த்வேஷ்ட்டி –(மம பிராணா ஹி பாண்டவ )

(யஸ் த்வாம் த்வேஷ்ட்டி மாம் த்வேஷ்ட்டி யஸ் த்வாம் அநு ச மாமது
அபேத நாத்மநோ வேத்மி த்வாம் அஹம் பாண்டு நந்தன -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -37-2-)

மஹா பலி என்னது என்று அபிமானித்த பூமியை அளந்த சர்வேஸ்வரன் –

நற்றாமரை மலர்ச் சேவடியை –செவ்வி மாறாதே இருந்துள்ள திருவடிகளை
வானவர் கை கூப்பி-நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று–திரள நின்று பூவைக் கொண்டு ஏத்துவார் -என்றுமாம்
தொடுத்த மாலை கொண்டு ஏத்துவார் என்றுமாம் –

(த்ருஷ்ட்வா கிருஷ்ணம் )

பெற்றார் -(எடுத்த பேராளன் -)நிதி எடுக்கப் பெற்றார் என்னுமா போலே -என் பிள்ளை என்று அபிமானித்தால் தளை கழலா நின்றால்
அடியோம் என்றால் தளை கழலச் சொல்ல வேணுமோ –

பேர்ந்து -ஸ்ரீ வைகுண்டத்தில் நின்று என்னவுமாம் -திருப் பாற் கடலில் நின்றும் வந்தான் ஆகவுமாம் –

ஓர் குறள்-நாட்டில் வாமனர்கள் இவன் வளர்ந்து அருளின இடத்தோடு ஒக்கும் –

செற்றார் -தன்னைச் செற்றார் -மம பிராணா ஹி பாண்டவ —

படி கடந்த -இக் காடு மோடையும் அளந்த -பிறரது பெற்றால் போலே இருப்பதே -(உவந்த உள்ளதனாய் -அனைவரும் உகக்கும் படி )

செங்கண் -ஆஸ்ரிதர் அபேக்ஷிதம் முடிக்க பெறுகையால் -மால் -செய்தது போராது என்று இருக்கை

நல் தாமரை –
1-செவ்விக்கும் -2-அழகுக்கும்-3- குளிர்த்திக்கும் சத்ருசமான தாமரை தேடுகிறார் -(பரிஷ்காரம் பண்ணி இல் பொருள் உவமை )

வானவர் –
எட்டாத படி பரண் இட்டுக் கொண்டு இருக்கை(அவனது ஸுலப்யம் காட்ட வந்த இந்த பூமியில் இல்லாமல் )
கை கூப்பி -அவசா பிரதிபேதிரே (மறந்து கை கூப்பினார்களே )- நிரை மலர் -ஏற்கவே தொடை ஒத்த துளபம் கொண்டு இருந்தார்களோ(துளஸீ ப்ருத்யர் _

ஏத்துவரால் -இப்படிப் பிறந்தார் பெறாது ஒழிவதே -(ஆல் -வருத்தம் வியப்பு இரண்டும்)

நின்று-கிண்ணகத்தே எதிர்த்து நின்று -(கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் போல் அல்லவே வானவர்களுக்கு )

(த்விஷ தன்னம் ந போக் தவ்யம் ந விஷந்தம் நைவ போஜயத்
பாண்டவான் த்விஷஸே ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவ -உத்யோக -91-27-

த்ருஷ்ட்வா கிருஷ்ணம் ததா யாந்தம் ப்ரதிபந்தமி வவ்ஜஸா
யதார்ஹம் கேஸவே வ்ருத்தி மவஸா பிரதிபேதிரே)

————–

கடல் அவனைப் பெற்று களித்த அளவேயோ-அப்படுக்கையை விட்டு -இங்கே வந்து அவதரித்த இடத்திலும்
சில பாக்யாதிகர் (விபரீத லக்ஷணம் -தேவர்களுக்கு )கிட்டி அனுபவிக்கப் பெற்றார்கள் கிடீர் -என்கிறார் –

தன்னைப் பிள்ளையாகப் பெற்ற ஸ்ரீ வாஸூ தேவர் தேவகியாருடைய காலிலிட்ட விலங்கு நீங்கும் படியாகப்
பரம பதத்தின் நின்றும் போந்து -இங்கே கிருஷ்ணனாய் வந்து அவதரித்து

அவ்வளவு இல்லாமல்
அழகுக்கு அத்விதீயமாய் – கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம் படியான வாமன வேஷத்தை யுடையனாய் –
ஆஸ்ரிதனான இந்திரனை நெருக்குகையாலே (துன்பம் கொடுக்கை நாட்டைப் பறித்தல் )தனக்கு சத்ருவான மஹா பலி போல்வார் என்னது என்று
அபிமானித்திருக்கிற பூமியை அநாயாசேன அளந்து கொண்டவனாய் –

அத்தாலே வந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய்
ஆஸ்ரித வியாமுக்தன் ஆனவனுடைய அழகிய தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளை-

இந் நீர்மை ஏறிப் பாயாத ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கிற இந்த்ராதிகள் இச் செயலுக்குத் தோற்று அஞ்சலி பந்தத்தைப் பண்ணி
தொடை வாய்ந்து இருந்துள்ள செவ்விப் பூக்களை பரிமாறிக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணி ஆஸ்ரயிக்கப் பெறுவர்களாம்

பாவியேன் நாமே இழப்போம் (ப்ரயோஜனாந்தர பரர்கள் பெற நாம் இழப்பதே )-என்று வெறுக்கிறார் –

———————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading