ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –
கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு
———————————————————————————-
சிறப்புத் தனியன் –
சீராரும் வேதாந்த தேசிகர் கோன்
செழு மறையின் உட்பொருளைச் சிந்தை செய்தே
யாராய்ந்து வாழ்வுற விப்புவியோர் தங்கட்கு
அன்புடனே யாகார நியதி சொன்னான்
ஏராரும் எதிராசர் அருளினாலே
எதிர்ந்தவர்கள் சிங்கம் என இங்கு வந்தோன்
சீராரும் வேங்கடவன் தூப்புல் பிள்ளை
செழும் திருத் தாள் இணை மலர் என் சென்னி மேலே –
——————————————————————
ஆகாரத்து இரு வகையா நன்றும் தீதும்
அருமறை கொண்டு எதிராசர் இவை மொழிந்தார்
ஆகாத வழி விலக்கி யாக்கும் கண்ணன்
அனைத்து உலகும் வாழ்வு இது சாற்றி வைத்தான்
போகாத போக்குவிக்கும் முனிவர் சொன்ன
பொய்யாத மொழிகளையும் பொருந்தக் கேண்மின்
ஆகாத என்றவை தவிர்ந்து ஆம் அதுவே கொண்ட
வசகரனும் ஆகம் காத்து அருள் பெற்றான் –1-
அஜகரன் என்னும் அந்தணன் இப்படி அனுஷ்டித்து அருள் பெற்றான் -அஜகரன் -மலைப்பாம்பு -தாமாகவே வந்து விழுபவற்றையே
உணவாகக் கொண்டு பெற அரியதனவான உணவுகளைப் பெற முயலாது இருக்கும் -அப்படி வாழ்ந்த ஓர் அந்தணனுக்கும் அஜகரன் என்ற பெயர் வந்தது –
————————————————————————————————————————
வாயில் அல்லா வாயிலினால் வந்த சோறும் –புழக்கடை போன்ற தகாத வழிகள்
வரகுமுதலாகாது என்று உரைத்த சோறும் –வரகு போன்ற தானியங்களால் ஆனா சோறு
வாயினின்றும் விழுமவை தாம் பட்ட சோறும்
வாய்க்கொண்ட கவளத்தின் மிகுந்த சோறும்
தீயவர் கண் படும் சோறும் தீதற் சோறும் –தீய்ந்துபோனவை
சீரையுரை தும்மல் இவை பட்ட சோறும் -வஸ்த்ரம் எச்சில் தும்மல் –
நாய் முதலானவை பார்க்கும் தீண்டும் சோறும்
நாடூய்தல்லாச் சோறும் நண்ணாச் சோறே –2–அல்லா சோறு–ஏகாதசி போன்ற வ்ரத தினங்களில் சமைத்த சோறு -என்றவாறு –
———————————————————————————————————–
மனிசர் பசு முதலானோர் மோந்த சோறும்
மனிசர் தமில் ஆகாதார் தீண்டும் சோறும்
இனிமையுடன் ஆதரமில்லாதார் சோறும்
ஈ புழு நூல் மயிர் உகிர்கள் இருக்கும் சோறும்
முனிவர் எனும் துறவறத்தோர் ஈந்த சோறும்
முனிவர் தங்கள் பாத்திரத்தில் பட்ட சோறும்
மனிசர் எலி குக்குடங்கள் காகம் பூனை –குக்கடங்கள் -கோழி போன்றவை
வாய்க் கொண்ட கறி சோறும் மருவாச் சோறே –3-
———————————————————————————————–
அத்திகள் பேரார்க்கு இறலி வெண் கத்தாரி –அத்தி வகைகள் பேரரர்க்கு இறலி வெள்ளைக் கத்திரிக்காய்
ஆல் அரசி நறுவிலி புங்கு ஆயில் ஆரை
புத்திகொல்லி குறிஞ்சி தான்றி குசும்பை வேளை——புத்தி கொல்லி -திகைப்பூண்டு
புனமுருங்கை முருங்கை சுகம் முளரி உள்ளி புன முருங்கை —-சிகப்பு முருங்கை முருங்கை -நாட்டு முருங்கை –முளரி -தாமரைக் கிழங்கு
சிற்றவரை கொம்மட்டி பண்ணை தொய்யில் ——சிறிய அவரை தும்மட்டி பண்ணைக் கீரை தொய்யில் கீரை
சீங்காடன் தேறல் ஊவை பனை மயூரன் —–சீங்காடன் தேறல் காய் -ஊவைக் காய் -பனை -நாயுருவி
சுத்தியிலா நிலத்திலவை கடம்பு காளான் ——கடம்பு -நாய்க்குடை சுரைக்காய் –
சுரை பீர்க்குச் சணந்தின்னார் சுருதி யோரே –4—–சுரைக்காய் பீர்க்கு சணற் கீரை மற்றும் அசுத்த நிலத்தில் பயிரானவை –
———————————————————————————————-
சிறு கீரை செவ்வகத்தி முருக்கி ரண்டும் —-முள் முருங்கை புரசு
சிறு பசளை பெரும் பசளை யம்மணந்தாள்
பறித்து ஒருவர் கொடாது இருக்கத் தானே சென்று
பாய்ந்து எடுத்துக் கொள்ளுமவை பகிராக் கூறும்
குறித்தாலும் தின்ன ஒணாக் கைப்பு வரப்பும்
கூர்க்குமவை யழலுமவை கொடும் புளிப்பும்
கறிக்காய் இவை என்று கண்டு உரைத்தார்
கார்மேனி யருளாளர் கடகத்தாரே –5-
—————————————————————————-
மால் அமுது செய்யாமல் வந்த வெல்லாம்
வரு விருந்தில் வழங்காமல் வைத்த வெல்லாம்
காலம் இது வன்று கழித்த தெல்லாம்
கடையின் வரும் கறி முதல கழுவா வெல்லாம்
நூல் இசையா வழிகளினால் வந்த வெல்லாம்
நுகராததுடன் பாகம் செய்த வெல்லாம்
சீலமிலாச் சிறியோராக்கு இனவு நல்லோர்
செல மலங்கள் பட்டனவும் தின்னார் தாமே –6-
————————————————————————–
தேவர்களுக்கு இவை என்று வைத்த வெல்லாம்
சிவன் முதலாம் தேவர்களுக்கு இட்ட வெல்லாம்
ஆவி முதலான வற்றுக்கு ஆகா வெல்லாம்
மது விது வென்று அறிய வரிதான வெல்லாம்
நாவில் இடுவதற்கு அரிதாய் இருப்பது எல்லாம்
நன்று என்று தம் உள்ளம் இசையா வெல்லாம்
ஓவிய நாள் ஓவாத பூவும் காயும் —அகாலத்தில் பூக்கும் பூ காய்க்கும் காய்
உத்தமர்கள் அட்டூப்பு முகவர் தாமே –7–காய்ச்சிய உப்பில் அழுக்கான உப்பு –
——————————————————————————
கிளிஞ்சின் முதல் சுட்டன சுண்ணாம்பு தானும்
கிளர் புனலில் எழும் குமிழி நுரை கடாமும்
விளைந்ததனில் முதல் மாலுக்கு ஈயா வெல்லாம்
களைந்த மனத்தார் மற்றும் கழித்த வெல்லாம் –பலன் கொடுத்த பிறகு மறுபடியும் அதே காம்பில் இருந்து விளைந்தவை
கடியமுது இனியமத்தார் கழித்த வெல்லாம்
தெளிந்த புனல் திரு வேங்கடத்து மாறன்
திரு வாணை கடவாதார் தின்னார் தாமே –8-
——————————————————————————-
மோர் அலது சாரங்கள் வாங்கிற்று எல்லாம்
முழுப் பகலில் விளங்கனியும் தானம் தானும் –பகலில் விளங்கனியும் பொரியையும் உண்ணக் கூடாது
ஓர் இரவில் எள்ளுடனே கூடிற்று எல்லாம்
எள்ள தனில் எண்ணெய் தயிர் தரு பண்டங்கள் -இரவில் நல்லெண்ணெயும் தயிரையும் கலந்த வஸ்துக்களை உண்ணக் கூடாது
ஓர் தவத்தை மந்திரத்தை ஒலிப்ப வெல்லாம்
உண்ணாத நாட்களிலும் அந்திப்போது
உணார் அணனார் அடி பணியும் நல்லோர் நாளும்
நள்ளிரவில் ஊணும் இவை உண்ணார் தாமே –9-
——————————————————————————————
குளி முதலானவை செய்யாது உண்ணும் ஊணும்
கூட்டல்லாப் பந்தியில் ஊண் பிறர் கை யூணும்
நளி மதி தீ விளக்காக யுண்ணும் ஊணும்
நள்ளிரவில் விளக்கின்றி யுண்ணும் யூணும்
கிளி மொழியாள் ஊணா நிற்கக் கணவன் ஊணும்
கீழோரை நோக்கு ஊணும் இடக்கை யூணும்
ஒளி மறையோர் மற்றும் உகவாத ஊணும்
ஒளி யரங்கர் அடி பணிவார் உகவார் தாமே –10-
———————————————————————————–
எச்சிலில் வார்க்கும் நெய் இருபாகங்கள்
இரும்பாலும் கையாலும் இட்ட வெல்லாம் -இரும்பினாலும் கையாலும் பரிமாறும் வஸ்துக்களை உண்ண கூடாது
பச்சையலால் கடித்த குறை பழைய ஊசல் –பச்சையான பக்குவம் செய்யாத வற்றை கையால் பரிமாறலாம்
பிறர் அகத்துப் பாகம் செய்து எடுத்த வண்ணம்
நச்சினவை பழித்தவை மண் நாற்றம் தீது
நகத்தால் விண்டவை தாம் காணும் உப்பும்
பிச்சுளதாம் அவை காடி பின்ன பாகம் –பித்தம் தருமவை -காடி -தமக்கு வேற விருந்தினருக்கு வேற என்று பாகம் செய்தவை உண்ணக் கூடாது
பிசின் கடனில் சிவந்ததுவும் பிழை யூணாமே–11- மரத்தில் இருந்து பெருகும் பாலிலே பெருங்காயம் தவிர மற்றவற்றை உபயோகிக்கக் கூடாது –
———————————————————————————————–
தாதை நல்லாசிரியன் முதல் தமையன் எச்சில்
தரணி சுரர் சோமத்தில் அருந்தும் எச்சில்
மாதர்கட்கு கணவன் இதமான எச்சில்
மயிர் புழு நூல் விழுந்தாலும் புனித மண்ணின்
மாதவத்துக் கூ விளங்காய் முகவா சத்து
மாதுளங்காய் மரணம் வரில் கழித்த வெல்லாம் –ஆபத்துக் காலத்தில் விலக்கியவையும் உண்ணலாம்
ஓதி வைத்த வுண்ணா நாள் உகந்த வெட்டும்
உளவென்றும் கழித்த வற்றில் நன்றாம் ஊணே –12-
உபவாச தினங்களில் ஜலம் கிழங்கு நெய் பால் யாகத்தின் ஹவிஸ் நிமந்த்ரணம் குருவின் உபதேசம் மருந்து
-இவை எட்டும் விரதத்தை கெடுப்பான வாகா –
————————————————————————————————
மா கரும்பின் சாறு தயிர் பால் நெய் பாக்கு
வளை மிளகு தேன் ஏழாம் பனி நீராதி
யாகரசம் தூயதாகும் அறியா வெல்லாம்
அறியாதார்க்கு அறியும் அளவும் தூயவாகும் –எந்த பொருளும் அதன் தோஷத்தை அறியும் வரையில் உபயோகிக்க உரியதாம்
சாகரங்கம் தூயனவாம் உவாக்கள் கூடில்–பௌர்ணமியிலும் அமாவாசையிலும் சமுத்ரம் ஸ்நானம் செய்ய உரியதாகும்
சலம் எல்லாம் கங்கை யாதாம் உபராகத்தின் –க்ரஹண காலத்தில் எந்த ஜலமும் கங்கா ஜலம் போன்ற பெருமை யுடையதாம்
மாகரங்கள் பிண முதலாம் அனைத்தும் கொண்டு
வருபுனலும் தூயதாகும் வேகத்தாலே –13–
நதியின் வெள்ளம் குதிரை கழுதை பிணம் முதலிய அசுத்த வஸ்துக்களைக் கொண்டு வந்தாலும் வேகத்தாலே பரிசுத்தமாகி விடுகின்றது –
———————————————————————————————————–
தீயாலே நீர் ஒழிய வெந்த வெல்லாம்
தீயிடுதல் ஒழிந்திடவே பழுத்த வெல்லாம்
தீயாலும் நீராலும் வெந்த வற்றில்
ஏறவுலர் நெல்லு முதலான வெல்லாம்
உஊசாத மாவடகம் அப்பம் சீடை
யுரொட்டி முதலாம் அவற்றில் பழைய தேனும்
கூசாதே கொண்டிடுமின் புதியதேனும்
கொள்ளேன் மின் றன்னிரதம் குலைந்தக்காலே –14-
———————————————————————————
தலைப்பயனாம் விகாரங்கள் சாகடங்கள்
சக்கரங்கடனக் கடைத்த மருந்து தானும் –திரட்டுப்பால் தேன்குழல் முறுக்கு முதலியனவும் மருந்துகளும் பழையன வானாலும் உண்ணலாம்
கலக்கமிலா நன்னீரில் வைத்த சோறும்
கறி மோர் நெய் பால் தயிர்கள் கலந்த சோறும்
விளக்கமிலா மாக் கன்னல் கோதுமத்தால்
விளைவுறவாக்கிய நல விகாரம் தானும் –மா வெள்ளம் கோதுமை இவற்றால் செய்த பஷ்யங்களும் பழையன வாகிலும் உண்ணலாம்
இலைக்கறி போல் இவை அனைத்தும் பழைய வேணும்
எந்நாளும் வைத்து உண்ண இசைகின்றாரே –15-
—————————————————————————————–
தயிர் தன்னின் விகாரங்கள் பூவில் கையில்
பழத்தில்வரும் சாறு ஊசல் தூயவாகும்
உயிர் அழியாமைக்கு உண்ணா வஊசல் உண்ணில்
உறக் கழுவி நெய் தேன் இட்டு உண்ணலாகும்
பயின மறை நூல் உரையாத பழைய ஊசல்
பழிப்பிலாதநெய்யால் என்று உரைத்தான் சங்கன் –ஊசல் பண்டங்களை நெய் கலந்து உண்ணத் தக்கனவாம் என்று சங்க ஸ்ம்ருதியில் கூறப் பட்டுள்ளது
மயிர் முதலானவை பின்னும் பட்டதாயின்
மண்ணீர் மற்று உரைத்தவற்றால் வரங்களாமே–16-
—————————————————————————————–
ஒரு குளம்பில் இரு கன்றி யொட்டகப்பால்
உப்புடன் பால் மோருடன் பால் மாதர் தம் பால்
கருவுடைய வற்றின் பால் கன்று இல்லாப் பால்
மறு கன்றால் கரைந்திடும் பால் திரிந்திடும் பால்
திருமகளார் கணவன் அழாத தெய்வத்தின் பேர்
சின்னமுடை யாவற்றின் பால் செம்மறிப் பால்
பரிவதில் அந்தணர் விலைப்பால் செம்பினில் பால்
தீதாம் பால் இவை யனைத்தும் பருகாப் பாலே –17–
———————————————————————–
கங்கை யல்லது இரண்டா நாள் வைத்த நீரும்
கால் கழுவி மிகு நீரும் கலங்கல் நீரும்
தெங்கின் உள்ளதாய்த் தீயால் காய்ந்த நீரும்
சிறு குழி நீர் வழித் தண்ணீர்ப் பந்தல் நீரும்
அங்கை யுடை நீர் வண்ணான் துறையில் நீரும்
தாரையினால் எச்சில் இது வென்ற நீரும்
சங்கு காலமாக் கொண்டு பருகு நீரும்
தரையில் விழா மழை நீரும் தவிரும் நீரே –18–
——————————————————————————–
வெற்றிலை முன் தின்னாதே தின்னும் பாக்கும்
வெற்றிலையின் அடி நுனியும் நடுவில் ஈர்க்கும்
வெற்றிலையும் பக்குமுடன் கூட்டித் தின்னும்
விதவைக்கு முதல் முடிவாச்சிர மத்தார்க்கும்
வெற்றிலையும் சுண்ணாம்பின் இலையும் மற்றும்
விரதம் கொண்டு இடு நாள் வெற்றிலையும் பாக்கும்
வெற்றிலை தின்னா நிற்கப் பருகு நீரும்
விதையென வைத்தது தினலும் விலக்கினாரே –19-
————————————————————————————————–
சாதிகுணம் ஆச்சிரமம் அந்தேசம் காலம்
தருமங்கள் நிமித்தங்கள் முதலா வோதும்
பேத முதலாக வொரு திரவியம் தான்
பிரிந்து நலம் தீங்கினையும் பெற்று நிற்கும்
பாதமிசைப் பிறந்தோர்க்கு கபிலையின் பால்
பருகிடல் ஆகாது என்று மறையோர் சொன்னார்
ஆதலினால் ஓதி உணர்ந்தவர் பால் எல்லாம்
அடிக்கடியும் கேட்டு அயர்வு தீர்மின் நீரே –20-
—————————————————————————-
கங்கு இருளால் விடியாத வுலகுக்கு எல்லாம்
கை விளக்காம் இவை என்று கண்ணன் காட்டும்
பொங்கு புகழ் ஆகமங்கள் எளியச் சொன்ன
பொருள் இவை நாம் புண்ணியர் பால் கேட்டுச் சொன்னோம்
அங்குடலும் பொருளும் அல்லது அறியா மாந்தார்
வலை யுளகப்பட்டு வரம்பு அழியாது என்றும்
பங்கயமா துற்ற வருளாளர் தம் பால்
பத்தி மிகு பவித்திரங்கள் பயின்மின் நீரே –21–
———————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply