திரு த்வயச் சுருக்கு -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்- —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

———————————————————————————-

ஸ்ரீ த்வயச் சுருக்கு

மந்த்ர ராஜம் –10-அர்த்தங்களை -விளக்க –12-பாசுரங்கள் /
பத்ம ஸஹாய சரணாகதி மந்த்ர ஸம்ஸ்ருதி காள ராத்ரே ப்ரத்யுஷாதாம் பஜதி
அநே நைவ து மந்த்ரேன ஸ்வாத் மானம் மயி நிக்சிபேத்
மயி நிக்க்ஷிப்த கர்தவ்ய க்ருத கருத்யோ பவிஷ்யதி

ந வேதாந்தாத் சாஸ்திரம் ந மதுமதநாத் தத்வமதிகம் ந தத்பக்தாத் தீர்த்தம் ந தத்பிமதாத் சாத்விக பதம்
ந சத்வாத் ஆரோக்யம் ந பத்த பஜனாத் போத ஜனகம்
ந முக்த ஸுக்யம் ந த்வய வஸனாத் ஷேம கராணாம்

——————————————————

இன்னமுதில் பிறந்தாள் இதம் கேட்க யுரைத்த பிரான்
பொன்னருளால் மறை மௌ லியில் பூண்ட இரண்டு இசைத்துத்
தன்னுரை மிக்க தனம் இது எனத் தந்த வேதகத்தில்
துன்னு பொருள்கள் பத்தும் தொலையா நிதி யாகின்றவே –1-

வேதகத்தில் -சரணாகதியை அறிவிக்குமதான ஸ்ரீ த்வய மந்த்ரத்தில்
தொலையா நிதி யாகின்றவே –அழியாத சேம நிதியாக ஆகின்றன
மறை மௌ லியில் பூண்ட இரண்டு இசைத்துத் -கடக வல்லியில் இரண்டு இடத்தில் இருந்து ஓன்று திரட்டி
தன்னுரை மிக்க தனம் இது எனத் தந்த -தனது திவ்ய ஸூக்திகளில் இது சிறந்த தனம் போன்றதாகும் என்று கூறும்படியாக-

—————————————————————————-

அரு வுரு வானவை தன்னை அடைந்திடத் தான் அடைந்து
வெருவுரை கேட்டவை கேட்பித்து அகற்றும் வினை விலக்கி
யிருதலை யன்புதனால் எமை இன்னடி சேர்த்து அருளும்
திருவுடனே திகழ்வார் செறிந்தார் எங்கள் சிந்தையுளே –2–

அரு வுரு வானவை தன்னை அடைந்திடத் -சேதனம் அசேதனங்கள் ஆகிய அனைத்தும் தன்னை அடைந்து நிற்க
தான் அடைந்து -பிராட்டியாகிய தான் சர்வேஸ்வரனையும் சகல வஸ்துக்களையும் அடைந்து
வெருவுரை கேட்டவை கேட்பித்து-சேதனர்கள் பயத்தால் கூறும் வார்த்தைகளை கேட்டும் அவற்றை எம்பெருமானை கேட்ப்பித்தும்
அகற்றும் வினை விலக்கி
யிருதலை யன்புதனால் -சேதனர் எம்பெருமானார் இரண்டு பக்கங்களிலும் உள்ள அன்பினால்
எமை இன்னடி சேர்த்து அருளும் திருவுடனே திகழ்வார் செறிந்தார் எங்கள் சிந்தையுளே
ஸ்ரீ -ஆறுவித வ்யுத்பத்திகள் உண்டே –
ஸ்ரேயதே அடையப்படுகிறாள் -ஸ்ரீயதே -அடைகின்றாள் -அவனையும் அடைகிறாள் -சேதனர்களுக்குள் உள்ளும் புறமும் அடைகிறாள்
கேட்கிறாள்-கேட்ப்பிக்கிறாள்
கர்மங்களை நீக்குகின்றாள்-பரிபக்குவ நிலை கைங்கர்யம் செய்ய அருளுகிறாள்
இந்த மிதுனம் நம் மனத்தை விட்டு அகலாது நித்ய வாஸம் செய்து அருளுகின்றார்கள் என்றவாறு –

—————————————————————————————————

காரணமாய் இறையாய் கதியாய் அமரும் பதியாய்
ஆரணம் ஓதும் அனைத்து உறவாய் அகலா உயிராய்ச்
சீரணியும் சுடராய்ச் செறிந்து எங்கும் திகழ்ந்து நின்ற
நாரணனார் நமக்கே நல்கி நாம் தொழ நின்றனர் –4–

காரணமாய் -அனைத்துக்கும் த்ரிவித காரணமுமாய்
இறையாய் -ஆள்பவராய் -நியந்தா –
கதியாய் -உபாயமுமாய்
அமரும் பதியாய் – சகலமும் பொருந்தும்படி ஆதாரமுமாய்
ஆரணம் ஓதும் அனைத்து உறவாய் –அகலா உயிராய்ச்
சீரணியும் சுடராய்ச் -திருக் கல்யாண குணங்களுக்கும் அழகு செய்யும் ஜ்ஞான ஸ்வரூபராய்
செறிந்து எங்கும் திகழ்ந்து நின்ற -எங்கும் வியாபித்து பிரகாசிக்கும்
நாரணனார் நமக்கே நல்கி நாம் தொழ நின்றனர் –

——————————————————————————

வானமர் மன்னுருவாய் வகையால் அதில் நாலுருவாய்
மீனம தாமை கேழல் முதலாம் விபவங்களுமாய்
ஊனமர் உள்ளுருவாய் ஒளியாத அர்ச்சையுமாம்
தேனமர் செங்கழலான் சேர்த்தனன் கழல் எம்மனத்தே –5-

வானமர் மன்னுருவாய்-ஸ்ரீ வைகுண்டத்தில் அமர்ந்துள்ள நித்தியமான ரூபத்தை உடைய பர வா ஸூ தேவனாய்
வகையால் அதில் நாலுருவாய்-நான்கு வித வ்யூஹ ரூபத்தை யுடையவனாய்
மீனம தாமை கேழல் முதலாம் விபவங்களுமாய்
ஊனமர் உள்ளுருவாய் -அந்தர்யாமியாய்
ஒளியாத அர்ச்சையுமாம்
தேனமர் செங்கழலான் சேர்த்தனன் கழல் எம்மனத்தே
சரண சப்த்தார்த்தம் -சொல்லிற்றாயிற்று -பஞ்ச பிரகாரமாய் இருந்து அருளி தன் திருவடிகளை
நமது நெஞ்சில் வைத்து அருளினான் -என்றவாறு –

————————————————————————-

வேறோர் அணங்கு தொழும் வினை தீர்த்து எமை யாண்டிடுவான்
ஆறும் அதன் பயனும் தந்து அளிக்கும் அருளுடையான்
மாறிலதாய் இலகும் மது மெல்லடிப் போது இரண்டால்
நாறு துழாய் முடியான் நமக்குச் சரண் ஆயினனே –6-

நமக்கு உபாயமாக நின்று அருளுகிறான் என்றவாறு –

————————————————————————

பெறுவது நாம் பெரியோர் பெரும் பேறு என நிண்ட வெமை
வெறுமை யுணர்த்தி விலக்காத நன்னிலை யாதரிப்பித்து
உறுமதியால் தனை ஒண் சரண் என்ற வுணர்வு தந்த
மறுவுடை மார்பனுக்கே மன்னடைக்கலம் ஆயினமே –7-

ப்ரபத்யே -பத் -வினைப்பகுதி -சர்வேஸ்வரன் நம்மை ரஷிப்பான் என்கிற மஹா விஸ்வாசம்
உறுமதியால்-திடமான நம்பிக்கையால்
மன்னடைக்கலம் ஆயினமே-மிகவும் ரஷிக்கப்பட வேண்டிய வஸ்துவாக ஆனோம் –

————————————————————–

அருமறை யாதும் துறவோம் என வறிந்தார் கவரும்
கருமமும் ஞானமும் காதலும் கண்டு முயலகிலோம்
வருவதும் இந்நிலையாய் மயலுற்ற வெமக்கு உளதோ
திரு மகளார் பிரியாத் திருமால் இன்றி நற் சரணே –8-

அருமறை யாதும் துறவோம் என -சாஸ்திர ஆஜ்ஞ்ஞைகளை கை விட மாட்டோம் என்று நினைத்து
வறிந்தார் கவரும் -ஞானவான்கள் கைக் கொள்ளும்
கருமமும் ஞானமும் காதலும் கண்டு முயலகிலோம்-கர்ம ஞான பக்தி யோக உபாயங்களை அனுஷ்டிக்க
சக்தர்களாகி இல்லாமல் ப்ரவர்த்திக்க சக்தி அற்று இருக்கிறோம்
ஆகிஞ்சன்யத்தை வெளியிட்ட வாறு
வருவதும் இந்நிலையாய் மயலுற்ற வெமக்கு உளதோ -மேல் உள்ள காலங்களிலும் இதே நிலையாகி
செய்ய வேண்டியதை அறியாது மயக்கத்தை அடைந்த எங்களுக்கு
திரு மகளார் பிரியாத் திருமால் இன்றி நற் சரணே -பிரபத்தியே உபாயம் என்றவாறு –

————————————————————-

சுருங்கா வகிலம் எலாம் துளங்கா வமுதக் கடலாய்
நெருங்காது அணைந்து உடனே நின்ற நம் திரு நாரணனார்
இரங்காத காலங்கள் எல்லாம் இழந்த பயன் பெற ஓர்
பெரும் காதல் உதறி இனி மேல் பிரியாமை யுகந்தனமே –9-

அகிலம் எலாம் -ஸ்வரூபம் திருமேனி குணம் விபூதி ஆகிய அனைத்தும்
அமுதக்கடலாய் -அவற்றின் இனிமையையும்
நம் திரு நாரணனார் -சர்வ ஸ்வாமி
உத்தரவாக்யம் ஸ்ரீ மதே நாராயணாய -அர்த்தம் அருளுகிறார் –

——————————————————————–

கடி சூடு மூன்றும் கழல் பணிந்தார்க்குக் கடிந்திடவே
முடி சூடி நின்ற முகில் வண்ணனார் முன்னுலகு அளந்த
வடி சூடு நாமவர் ஆதாரத்தால் உடுத்துக் களையும்
படி சூடி யன்புடனே பணி செய்யப் பணிந்தனமே –10-

கடி சூடு மூன்றும் -வெறுக்கத் தக்க ஆத்யாத்மிக ஆதி பௌதிக ஆதிதைவிதம் -தாபத்த்ரயங்களையும்
ஆய சப்தார்த்தம் கைங்கர்யம் செய்பவனாக ஆக வேண்டும் -என்றவாறு –

———————————————————————

தனது அன்று இவை எனத் தான் அன்று என மறை சொன்ன வெலாம்
எனது என்றும் யான் என்றும் எண்ணுதலால் வருமீனம் எலாம்
மனது ஒன்றி இன்று நம வென்றதே கொண்டு மாற்றுதலால்
தனது அன்றி ஒன்றும் இலாத் தனித் தாதை சதிர்த்தனனே –11-

அஹங்கார மமகாரங்களை அழித்து– நம பதார்த்தம்- நெஞ்சில் பதியும் படி பண்ணி அருளினான் –
அத்தாலே அவனும் பெருமை பெற்றான் -சதிர்த்தனன்-

—————————————————————–

சேர்க்கும் திருமகள் சேர்த்தியில் மன்னுதல் சீர்ப் பெரியோருக்கு
ஏற்கும் குணங்கள் இலக்காம் வடிவில் இணை யடிகள்
பார்க்கும் சரண் அதில் பற்றுதல் நம் நிலை நாம் பெரும்பேறு
ஏற்கின்ற வெல்லைகள் எல்லாக் களையற வெண்ணினமே –12-

இலக்காம் வடிவில் இணை யடிகள் -ஆஸ்ரிதர்கள் தியானிக்க இலக்காகும் திரு மேனியில் ஒரு பாகமாகிய இரண்டு திருவடிகளும்
பார்க்கும் சரண் -சேதனர்கள் பிரதானமாக கருதும் உபாயமான ஸ்ரீ மன் நாராயணனும்
நாம் பெரும் பேறு ஏற்கின்ற வெல்லைகள் -நாம் அடையும் பிரதான பலனான ஸ்ரீ மன் நாராயணனும்
கைக்கொள்ளும் சரம புருஷார்த்தமான பகவத் பாகவத கைங்கர்யங்கள் முதலியன –

1-சேர்க்கும் திருமகள்-ஸ்ரீ சப்தார்த்தம்
2-சேர்த்தியில் மன்னுதல் -மதுப்பின் அர்த்தம்
3-சீர்ப் பெரியோருக்கு ஏற்கும் குணங்கள்-நாராயண சப்தார்த்தம்
4-இலக்காம் வடிவில் இணை யடிகள் -சரண பதார்த்தம்
5-பார்க்கும் சரண் -சரணம் பதார்த்தம்
6-அதில் பற்றுதல் -பிரபத்யே யார்த்தம்
7-நம் நிலை -அகிஞ்சனர் அநந்ய கதிகள் ஆகிய நம் நிலை
8-நாம் பெரும் பேறு -ஸ்ரீ மன் நாராயண பதார்த்தம்
9-ஏற்கின்ற வெல்லைகள் -ஆய சப்தார்த்தம்
10-எல்லாக் களையற-நம சப்தார்த்தம்
வெண்ணினமே–ஆக இந்த பத்து அர்த்தங்களையும் அருளும் ஸ்ரீ த்வய அனுசந்தானம் செய்வதே காலஷேபம் -என்றவாறு –

—————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading