ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ அர்ச்சிராதி –சதுர்த்த பிரகரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

—————————————————————————————————————

போர் மண்டலம் சங்கு தண்டு வில் வாள் புகராழி வெய்யோன்
கார் மண்டலம் சென்று காண்பார் தமக்குக் கதிரோளியோன்
ஏர் மண்டலம் தன்னை எய்தும் வழியை இனிதுரைத்தான்
பேர் மண்டல குருவென்னு முடும்பை பிறந்தவனே –

———————————–

சதுர்த்த பிரகரணம்
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல குழுமித் தேவர் குழாங்கள் கை தோழா எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனை –
காண்பது எஜ்ஞான்று கொலோ -காட்டினீர் -என்கிற இழவு தீர –
த்ருஷ்ட ஏவ ஹி நச்சோகம்-என்று இவன் மநோ ரதித்துக் கொண்டு சென்றபடியே கண்ணாரக் கண்டு -சமஸ்த பரிவாராய ஸ்ரீ மதே நாராயணாய நம-என்று –
ஹர்ஷ பரவசனாய் விழுந்து எழுந்து இருந்து பெரிய ப்ரீதியோடு சென்று -பாத பீடத்திலே அடியிட்டு -திவ்ய சம்ஹாசனத்திலே ஏற –
அவனும் இவனைக் கண்டு -அவாக்ய அநாதர -என்கிற ஆகாரம் குலைந்து -சந்த்றனைக் கண்ட கடல் போலே விக்ருதனாய்
-தன்னைப் பிரிந்து நெடுநாள் தரைக்கிடை கிடந்த இழவு தீர
அங்கே பிரதமாரோப்ய -என்கிறபடியே மடியிலே வைத்து -ஸ்ரீ பரத ஆழ்வானையும் அக்ரூரனையும் அணைத்தால் போலே அணைத்து பக்த்யதிசயத்தாலே
கோசி -என்கிறபடியே -நீ யார் என்று கேட்க -அஹம் பிரஹ்மாஸ்மி-என்று நான் ராஜகுமாரன் என்ன –
நீ இத்தனை காலமும் செய்தது என் என்று கேட்க -சாந்தேந்து மென்முலையார் தடம் தோள் புனர் இன்பம் வெள்ளம் தாழ்ந்தேன் -என்ன
நீ அத்தால் பெற்ற பலம் ஏது என்று கேட்க -அரு நரகு அழுந்தும் பயன் படைத்தேன் என்ன -பின்பு நீ செய்தது என் என்று கேட்க -போந்தேன் என்ன –
நீ போந்த விறகு என் என்று கேட்க -புண்ணியனே -என்ன -நீ அதினின்றும் போந்து செய்தது என் என்ன -உன்னை எய்தினேன் என்ன
நம்மைக் கிட்டினவிடத்தில் நீ பெற்ற பிரயோஜனம் என் என்ன -என் தீ வினைகள் தீர்ந்தேன் -என்ன
செய்தது வாய்த்துச் செல்வனாய்-நலமாந்தம் இல்லாதோர் நாட்டில் வர்த்திக்கப் பெறாதே –
இல்லை கண்டீர் இன்பம் என்கிற கொடு யுலகத்திலே நெடுகாலம் அலமர்ந்தாயே என்ன –

பலமுந்து சீரில் படியாதே -பன்மா மாயப் பல்பிறவியில் படிந்து நோவு பட்டாயே -ஈறில் இன்பத்து இரு வெள்ளத்தை இழந்து
தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்திலே ஆழ்ந்து நித்ய துக்கிதனானாயே-அதனைப் பிழை எனக் கருதி நம்மைப் பற்றி
நம்மைக் காண வேணும் என்று ஆசைப்பட்ட போதே வந்து முகம் காட்டப் பெற்றிலோமே –
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவன் என்கிறபடியே நாம் இருந்த தேசத்தை நோக்கி அழுவது தொழுவதாய்
-கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –
எந்நாள் யானுன்னை இனி வந்து கூடுவன் -என்பதாய்க் கொண்டு நோவு படும்படி தாழ்ந்தோமே
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -என்று கிலேசித்த நீ அதினின்றும் கரை ஏறி
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஜ்ஞ்ஞான்று கொலோ -என்கிற இழவு தீர நம்மைக் கிட்டப் பெற்றாயே
உள்ளுலாவி உலர்ந்து உலர்ந்து என்கிற தாபம் ஆறக் கூடி இருந்து குளிரப் பெற்றாயே
நம்முடைய ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்கள் சபலமாயிற்றதே –
ப்ரணஷ்டச்ய யதா லாப -என்கிறபடியே நமக்குக் கிடையாதது கிடைத்ததே -உன்னுடைய வரவாலே இத்தேசம் சநாதம் ஆயிற்றதே –
இக்கோஷ்டிக்கு நாயக ரத்னம் போலே இருக்க -நீ கிட்டி ஔஜ்வல்யத்தை உண்டாக்கினாயே-
நடந்த கால்கள் நொந்தவோ என்று -மநோ ஹரைஸ் சாடுபிரார்த்ரயன் முதா -என்கிறபடியே ஏத்தாளிகளைப் போலே ஏத்தி
ஒக மேக ஸ்தானத்திலே மயில் போலே ஆலிக்கும் படி பண்ணி நோய் எல்லாம் பெய்து ஓர் ஆக்கையிலே அகப்பட்டு -நெடும் காலம் நோவுபட்டு
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணனைக் கிட்டி உள்ள நோய்கள் எல்லாம் துரந்து-திருவருள் மூழ்கின இவனை –

நோய் விட்டுக் குளித்த புத்ரனைப் பிதா பார்த்துக் கொண்டே இருக்குமா போலேயும்
மாயக் கூத்தனுக்கு பிழைத்த ஆழ்வாரைப் பார்த்து கொண்டே இருக்குமா போலேயும்
லோசா நாப்யாம் பிபந்நிவ-என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் பெருமாள் பார்த்துக் கொண்டு இருக்குமா போலேயும்
என்னை நோக்காது ஒழிவதே என்கிற இழவு தீரத் தாமரைக் கண்களால் நோக்கி நெடுநாள் பட்ட விடாய் எல்லாம் மாற
ஒருங்கே மருந்து கிடந்தது அலர்ந்த மென் கால் கமலத் தடம் போலே இருக்கிற பெரும் கண் மலர்ப் புண்டரீகங்களை இவன் பக்கலிலே ஒருமடைப் பட வைத்து
எங்கும் பக்க நோக்கு அறியாதே -தாயே தந்தையில் -திரு மங்கை ஆழ்வார் மநோ ரதித்தால் போலேயும்
ஆராவமுதிலும் -இன்பம் பயக்க விலும் நம்மாழ்வார் மநோ ரதித்தால் போலேயும் இவன் மநோ ரதித்த மநோ ரதங்களை எல்லாம் சபலமாக்கி
உருக்காட்டாதே ஒளிப்பாயோ-என்கிற இழவு தீர -விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்கிறபடியே –

காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டி -நல்கி என்னை விடான் -என்கிறபடியே விடாதே –
ஏஷ சர்வஸ்வபூ தஸ்து -என்கிறபடியே விட்டு விட்டு அணைத்து-கிந்நு ஸ்யாச் சித்த மோஹோ அயம் -மருள் தானீதோ -என்கிறபடியே –
நிரதிசய வ்யாமோஹத்தைப் பண்ணி -பெரிய பிராட்டியார் திருக்கையிலே காட்டிக் கொடுக்க -கம்சவாத அநந்தரம்
கிருஷ்ணனைக் கண்ட தேவகியார் போலே விம்மிப்பாய்கிற ஸ்தன்யத்தாலே உடம்பு எங்கும் நனையும் படி அணைத்து –
உபய விபூதி ஐஸ்வர் யத்தையும் கொடுக்க -பூ வளரும் திருமகளால் அருள் பெற்று -மடியில் நின்றும் இழிந்து போந்து
செய்யவுடையும் திரு முகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு -என்கிறபடியே முன்பே போந்து முன்புத்தை அழகாய் அனுபவித்து
கிண்ணகத்தை எதிர் செறிக்க ஒண்ணாதாப் போலே நேர் நின்று அனுபவிக்க ஒண்ணாமை யாலே அட்டத்திலே போந்து அங்குத்தை அழகை அனுபவித்து
அது விட்டுப் பூட்டா விடில் தரிக்க ஒண்ணாமை யாலே பின்னே போந்து பின்புத்தி அழகை அனுபவித்து
பூர்வாங்கா ததி காபராங்க கலஹம் -என்று அதில் முன்பு தானே நன்றாய் இருக்கையாலே திரியவும் முன்னே போந்து –
சௌந்தர்ய தரங்க தாடக தாள சித்த வ்ருத்தியாய்-உத்தம்சிதாஞ்ஜலியாய் வளைய வளைய வந்து –
முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும் மேனியஞ்சாந்து-இலுசிய கோலம் இருந்தவாறும்
எங்கனே சொல்லுகேன் ஓவி நல்லார் எழுதிய தாமரை யன்ன கண்ணும் ஏந்து எழில் ஆக்கமும் தோளும் வாயும் அழகியதாம் இவரார் கொல் என்ன
அச்சோ ஒருவர் அழகியவா -என்று விஸ்மித ஹ்ருதயனாய் -அந்தாமத்தன்பு –முடிச்சோதி-தொடக்கமான வற்றில் நம்மாழ்வார் அனுபவித்தால் போலே
தன்னைப் பெற்ற ப்ரீதியால் வந்த செவ்வியை அனுபவித்து -யத்ர நாந்யத் பஸ்யதி-என்கிறபடியே புறம்பு ஒன்றில் நெஞ்சு செல்லாதே –

ஹாவு ஹாவு ஹாவு –அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத –
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே –
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே –
இசைவித்து என்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே –
பிறந்தும் செத்தும் நின்றிடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் -என்று
ப்ரீதிக்குப் போக்கு விட்டு வாயாரப் புகழ-ஸ்ரீ வைகுண்ட நாதனும் வானாட்மரும் குளிர் விழிகளாலே கடாஷித்து
சஸ்மிதமாக ஸ்நிக்த கம்பீர மதுரமான பேச்சாலே
முகப்பே கூவி -நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று இவன் அபேஷித்த படியே மலர்மகள் பிடிக்கும்
கமலமன்ன குரை கழல்களாலே உத்தமாங்கத்தை அலங்கரித்து
தன தாளின் கீழ்ச் சேர்த்து நித்ய கைங்கர்யத்திலே நியோகிக்க
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுகப் பெற்று -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் என்கிற அபிநிவேசாதிசயத்தாலே
நாநா தேஹங்களைப் பரிக்ரஹித்து -அசேஷ சேஷ வ்ருத்திகளிலும் அந்வயித்து
அஸ்தான ரஷா வ்யசநிகளான நித்ய ஸூ ரிகளோடே கூடச் சூழ்ந்து இருந்து மங்களா சாசனம் பண்ணி
சுழி பட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்து என்கிறபடியே
அம்ருத சாகராந்தர் நிமக்ன சர்வ அவயவனாய்க் கொண்டு யாவத் காலம் இருக்கும்

அர்ச்சிராதி முற்றிற்று

——————————————————————————–

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply