ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –
லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-
—————————————————————————————————————
போர் மண்டலம் சங்கு தண்டு வில் வாள் புகராழி வெய்யோன்
கார் மண்டலம் சென்று காண்பார் தமக்குக் கதிரோளியோன்
ஏர் மண்டலம் தன்னை எய்தும் வழியை இனிதுரைத்தான்
பேர் மண்டல குருவென்னு முடும்பை பிறந்தவனே –
———————————–
த்ருதீய பிரகரணம் –
உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு -சர்வ ஆஸ்ரய மயமான கோப்புடைய சீரிய சிங்கா சணத்திலே பன்னிரண்டு இதழாய்
-நாநா சக்தி மயமான திவ்ய கமலமாய் -அதில் திவ்ய கர்ணிகையிலே புஷ்ப சஞ்சய விசித்ரமான திவ்ய யோக பர்யங்கமாய் –
அதின் மேலே அநேகமாயிரம் சந்த்ரர்களை உருக்கி வார்த்தால் போலே குளிர்ந்த புகரை யுடைத்தான திருமேனியை யுடையனாய் –
கல்யாண குணங்களுக்கு அந்தம் இல்லாமையாலும் -சர்வவித கைங்கர்ய பரற்கு எல்லாம் படிமாவாய் இருக்கையாலும்
அனந்தன் என்றும் சேஷன் என்றும் திரு நாமத்தை யுடையனாய் -பகவத் அனுபவத்துக்குப் போக்குவீடாகப் பல வாய்த்தலைகளையும் யுடையனாய் –
விஜ்ஞான பலங்களுக்கும் சைத்ய மார்த்த்வ சௌரப்யாதி குணங்களுக்கும் கொள்கலமான திருவனந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே
ராஜதகிரி சிகரத்திலே அநேகமாயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே இருக்கிற பணா மண்டலங்களில் ஜ்யோதிர் மண்டலத்தின் நடுவே –
பதிம் விச்வச்ய-என்கிறவனுக்கும் தன் பூர்த்தியாலே பொறி புறம் தடவ வேண்டும் படியான பூர்த்தியையும்
வாசம் செய் பூம் குழலாள்-என்கிறபடியே நாற்றத்துக்கும் நாற்றம் கட்டலாம் படியான பூம் குழலையும் புண்டரீகாஷனையும் கூடக்
குடிநீர் வார்ப்பித்துக் கொண்டு ஒரு மூலையிலே குமிழ் நீரூட்டும் படியான -வடிக்கோல வாள் நெடும் கண்களையும்
போகத்துக்கு ஏகாந்தமான ஒப்பனை போலே பால்ய மத்யத்திலே மெய்க்காட்டுகிற யௌவனத்தையும்
பேசில் பிசகும்படியான சௌகுமார்யத்தையும்-பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு -என்கிறபடியே
அல்லாதவர்கள் பக்கல் போலே நூல் பிடித்துப் பரிமாற ஒட்டாத போக்யதா பிரகர்ஷத்தையும் -போக உத்போதகாத கேளியிலே
பகவத் வைஸ்வரூப்யத்தைச் சிறாங்கிக்கும் படியான பெருமையையும் யுடையளாய்-
திவ்ய பரிஜனங்களை தத்தத் அவஸ்த அனுரூபமாய் திவ்ய பரிசர்யையிலே நியோகியா நிற்பாளாய்-
சர்வாத்மாக்களுக்கும் என்றும் ஒக்கச் சார்வாய் -சீல ரூப குண விலாசாதிகளாலே
உனக்கு ஏற்கும் -என்னும் படி இருக்கிற ஒசிந்த ஒண் மலராளான பெரிய பிராட்டியார் வலவட்டத்திலே எழுந்து அருளி இருக்க –
அவளிலும் காட்டில் விஞ்சின ஷமாதயாதி குணங்களையும் -நாவால் தொகைக்க ஒண்ணாத அழகையும் யுடையராய் -அவளுக்கு
நிழல் போல்வனரான மற்றையிரண்டு நாய்ச்சிமாரும் இட வட்டத்திலே சேவித்து இருக்க –
இவர்களுக்கு நடுவே மூன்று மின் கொடிகளோடே கூடி தாமரை பூத்ததொரு காளமேகம் வெள்ளி மலையைக் கினியப் படிந்து இருக்குமா போலே
முடிச்சோதி யுனது முகச்சோதி மலர்ந்ததுவோ -என்கிறபடி திருமுக மண்டலத்திலே ஒளி வெள்ளமானது மேல் நோக்கிக் கொழித்தால் போலே யாய்
உபய விபூதிக்கும் நிர்வாஹகன் என்னும் இடத்தை கோட் சொல்லித் தரக் கடவதாய் -தன் புகராலே அல்லாத புகாரை யடைய முட்டாக்கிடுகிற –
விண் முதல் நாயகன் நீண் முடி -என்கிற திரு வபிஷேகத்தையும் -கண்டார் கண்ணும் நெஞ்சும் இருளும் படி இருண்டு சுழன்று
அஷ்டமீ சந்த்ரனிலே அம்ருத தாரை விழுந்தால் போலே திரு நெற்றியிலே சாத்தின திரு நாமத்தை
மறைப்பது காட்டுவதாய்க் கொண்டு அசைந்து விழுகின்ற பூம் தண் துழாய் விரை நாறுகிற நீலப் பனி இரும் குழல்களையும்
சௌகுமார்யாதிசயத்தாலே குறு வேர் பரம்பினால் போலே யாய் -நயந்தார்கட்கு நச்சிலையான திரு நெற்றியையும்
அலர்ந்து குளிர்ந்து இருக்கிற இரண்டு தாமரைப் பூக்களை மதத்தாலே அமுக்கு யாடுகிற இரண்டு வண்டு
ஒழுங்கு போலே இருக்கிற தன்கைச் சார்ங்கம் அதுவே போலே இருக்கிற திருப் புருவங்களையும் –
கலந்து பிரிந்தவர்களுக்கு இணைக் கூற்றங்களாய்-அல்லாதவர்களுக்கு தாயாய் அளிக்கக் கடவதாய் -சேதனர் பக்கல் வாத்சல்யாதி சயத்தாலூம் –
செய்யாளான பிராட்டியை எப்போதும் ஒக்கக் கடாஷிக்கை யாலும் உபய விபூதி ஐஸ்வர்யத்தாலும் சிவந்து
பதிம் விச்வச்ய -என்கிற பிரமாணம் வேண்டாதபடி -அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனனை-என்கிறபடியே -சர்வேஸ்வரத்வ சிஹ்னமாய்
வேறு ஒரு அழகில் செல்ல ஒட்டாதே தனக்கே அற்றுத் தீரும் படி பண்ணி -தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -என்கிறபடியே –
த்ரிபாத் விபூதியையும் எழுத்து வாங்கிக் கூப்பிடும்படி பண்ணக் கடவதாய் -குளிர்ந்து -செவ்வி பெற்று -பெரிய பெருமாள் திருக் கண்கள் போலே –
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி -இலங்கொளி சேரரவிந்தம் போன்று நீண்டு -மித உபபத்தஸ்-பர்தஸ் புரித சபரத்வந்த்வ லளிதங்களாய்-
அழகு ஓலக்கம் கிளம்பினால் அடையாளங்களான தூது செய் கண்களையும் –
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் -என்று நித்ய சந்தேக ஜனகமான கோல நீள் கொடி மூக்கையும் –
அதினுடைய பல்லவ உல்லாசம் போலே இருக்கிற திவ்ய கபோலங்களையும் அதினுடைய நவ கு ஸூமம் போலேயாய்-
பன்னிலா முத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து -என்கிறபடியே பூர்ண சந்தரன் முழு நிலாவைச் சொரிந்தால் போலே
திரு முத்தின் ஒளியை ப்ரவஹிக்கிற ஸ்மிதத்தையும்-கோலத் திரள் பவளக் கொழும் துண்டம் போலேயாய் –
பேச்சில் செல்ல ஒட்டாதே வாய்கரையிலே நீச்சாம்படி பண்ணி -நட்டாற்றிலே தெப்பத்தைப் பரிப்பாரைப் போலே
அனுபவ பரிகரமான சிந்தையைக் கவர்ந்து -கூப்பிடும் படி பண்ணக் கடவதாய் கள்வப் பணி மொழிகளுக்கு ஆகாரமா திருவவதரத்தையும் –
இலகு விலகு மகர குண்டலத்தன் -என்கிறபடியே பரீத் யதிசயத்தாலே சிற கம்பனம் பண்ணுகையாலே அசைந்து
திகந்தங்களிலே மூட்டி -தேஜஸ் ஸூ அலை எறிந்து லாவண்ய சாகரத்திலே ஏறித் தள்ளுகிற மின்னு மா மணி மகர குண்டலங்களையும்
காந்தி சைத்ய மார்த்த்வ சௌரப்யாதி குணங்களாலே சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து -என்கிறபடியே –
சகல கலா பூரணமாய் சர்வ ஆஹ்லாத கரமாய் -மறுக் கழற்றின சந்திர மண்டலத்தையும் தோற்ப்பிக்கக் கடவதாய் –
கிட்டினாரை பிச்சேற்றி மையல் ஏற்றி மயக்கும் மாய மந்திரமான கோளிழை வாண் முகத்தையும் –
நாய்ச்சிமாருடைய ஹஸ்த ஆபரணங்களாலே முத்ரிதமாய் -க்ரமுக தருண க்ரீவா கம்பு பிரதிமமான திருக் கழுத்தையும் –
நாய்ச்சிமாருடைய திருச் செவிப் பூக்களாலும் கர்ண பூஷணங்களாலும் விகசிதமான திருக் குழல் கற்றையாலும்
உண்டான விமர்த்தத்தாலே -சீதயா சோபிதம் -என்கிறபடியே அலங்க்ருதங்களாய்-
இரண்டு ஆட்டத்திலும் மரதக கிரியைக் கடைந்து மடுத்தால் போலே திண்ணியவாய்-உபய விபூதியையும் தன் நிழலிலே நோக்கக் கடவனாய்
-கணையத்துக்கு உள்ளே இருப்பாரைப் போலே தன்னை யண்டை கொள்ளுகையாலே –
சம்சாரத்திலே இருக்கச் செய்தேயும் நிர்ப்பரனாம் படி பண்ணி -அலம் புரிந்த என்கிறபடியே தனக்கு உபய விபூதியையும் வழங்கி
திவ்ய அஸ்த்ர புஷ்பிதங்களாய் இருக்கிற கற்பகக் காவன நற்பல தோள்களையும் –
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும் -இறையும் அகலகில்லேன் -என்னும்படி பிச்சேற்றக் கடவதாய்
அவள் திருவடிகளில் சாத்தின செம்பஞ்சுக் குழம்பாலும்-ஸ்ரீ பூமிப் பிராட்டியாருடைய கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பாலும் அலங்க்ருதமாய்
வனமாலா விராஜிதமாய் பெரிய பிராட்டியாருக்கு ஹிரண்ய ப்ராகாரமான கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் ஸ்ரீ கௌஸ்துபம் தொடக்கமான
குரு மா மணிப் பூண் குலாவித் திகழுகிற அழகிய திரு மார்பையும் –
காள மேகத்திலேமின்கொடி படர்ந்தால் போலே திரு மேனிக்குப் பரபாக ரசாவஹமாய் -அழகு வெள்ளத்துக்கு அணை கட்டினால் போல் இருக்கிற
வெண் புரி நூலையும் -உள்ளத்துள் நின்று உலாகின்றதே -என்கிறபடியே நித்ய முக்தருடைய திருவுள்ளங்களிலே அழகு செண்டேறுகிற
திருவுதர பந்தத்தையும் -சௌந்தர்ய சாகரம் இட்டளப் பட்டுச் சுழித்தால் போலே நெஞ்சையும் கண்ணையும் சுழியாறு படுத்துகிற திருவுந்தியையும்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் திருவாழி யையும் -சந்த்ராதித்யர்களாகக் கருதி -ஆங்கு மலரும் குவியும் -என்கிறபடியே
அலருவது குவிவதாய்- விதி சிவ நிதானமான நாமே பத்மத்தையும் –
துடிசேரிடையையும்-சந்த்யாராக ரஞ்ஜிதமான ஆகாசம் போலே இருக்கிற திருவரைக்குப் பரபாக ரசாவஹமாய் –
திருவரை பூத்தால் போலே இருக்கிற அந்தி போல் நிறத்தாடையையும் –
ரம்பா ஸ்தம்பாதி கம்பீரமான திருத் தொடைகளையும் -தாமரை நாளம் போலே கண்ட கிதங்களான திருக் கணைக் கால்களையும்
சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ரா லாஞ்ஜனமாய் -நாய்ச்சிமாரும் கூட கூசித் தொட வேண்டும்படி
அத்யந்தம் ம்ருதுக்களாய் -தேனே மலரும் என்கிறபடியே நிரதிசய போக்யங்களான துயரறு சுடர் அடிகளையும் –
லாவண்ய சாகரத்தினுடைய திரை ஒழுங்கு போலே இருக்கிற திரு விரல்களையும்
அதிலே அநேக சந்த்ரர்கள் தொற்றினால் போலே இருக்கிற திவ்ய நகங்களையும்
வயிர வுருக்காய் ஆண்களையும் பெண்ணுடை யுடுத்தி பந்துக்களோடு உறவு அறுத்து நாட்டைப் பகை விளைத்து
சேணுயர் வானத்து இருக்கும் தேவ பிரான் தன்னை குதிரியாய் மடலூர்த்தும் என்கிறபடியே கண்ட போதே கையும் மடலுமாய்க் கொண்டு
புறப்படும்படி பண்ணக் கடவதாய்
கண்ட போதே எல்லா விடாயும் கெட்டு-கண்ட கண்கள் மயிர் எறியும்படி இருண்டு குளிர்ந்து -சாம்யா பன்னரான
ஸூ ரிகளுடைய நெஞ்சையும் கண்ணையும் படை யறுத்து
இன்னார் என்று அறியேன் -பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில் -என்று மதி மயங்கும் படி பண்ணக் கடவதாய் –
சகல ஜன ஜீவாதுவாய் வைதக்த்ய வித்யாக்ருஹமாய் -மநோ ராதா நாம் அபூமியாய் -ஸ்ருத்யந்த வாக்ய சர்வஸ்வமாய்-
மாணிக்கச் செப்பிலேவ் போன்னையிட்டு வைத்தால் போலே இருக்கப் பொன்னுருவான திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய்
ஒன்றுக்கு ஓன்று தள்ளி இட்டளத்தில் வெள்ளம் போலே சுழித்து நின்று முழாவுகிற திவ்ய ஆயுத ஆபரணங்களுடைய சோதி வெள்ளத்தினுள்ளே
உன்நேயமான கரிய கோலத் திரு யுருவையும் -நித்ய ஸூ ரிகள் அடுத்தடுத்துப் பார்க்கிற பார்வையும் கூடப் பொறாது என்னும் படியான சௌகுமார்யத்தையும்
பெரிய பிராட்டியாருடைய வடிக்கோல வாள் நெடும் கண்களுக்கு நித்ய லஷ்யம் ஆகையாலே அரும்பு என்றும் அலர் என்றும்
சொல்லலாம் படியான செவ்வியையும் -கிண்ணகத்துக்கு பாடல் இட்டால் போலே இருக்கிற மெய்யமர் பல் கலன்கலையும் –
நித்ய ஸூ ரிகளைக் கொள்ளை யூட்டிக் கொண்டு விடாயர் முகத்திலே நீர் வெள்ளத்தை திறந்து விட்டால் போலே -சகல ஸ்ரமங்களும்
ஆறும் படி குளிர்ந்து தெளிந்து கனககிரியை யுருக்கிக் கடலிலே விளாசினால் போலே செம்பொனே திகழுகிற ச்யாமமான திருமேனி ஒளியாலே
விச்வமாப்யாயயன் -என்கிறபடியே சகல ஜகாத்தையும் ஆப்யாயனம் பண்ணி -தெருவெல்லாம் காவி கமழ-என்கிறபடியே
கண்டவிடம் எங்கும் புறப்பட்டு ப்ரவஹிக்கிற திருமேனியில் பரிமளத்தாலே ஸ்ரீ வைகுண்டத்தை எங்கும் ஒக்கப் பரிமளிதம் ஆக்கி
ஆலம் கட்டியை விட்டு எறிந்தால் போலே உடம்பு எங்கும் வவ்வலிடும்படி குளிர்ந்து அரை ஷணமாறில் நித்ய முக்தரை
ஒரு நீர்ச் சாவி யாக்குகிற கடாஷ அம்ருத வ்ருஷ்டிகளாலே
திவ்ய கோஷ்டியை தளிரும் முறியுமாக்கி காம்பீர்ய மாதுர்யாத்ய நவதிக குண கண பூஷிதங்களாய் -அதி மநோ ஹர திவ்ய பாவ கர்ப்பங்களாய்
பூ அலர்ந்தால் போல் இருக்கிற திரு முகத்தை எங்கும் ஒக்கச் செவ்வி பெறுத்துவனவான லீலா லாபங்களாலே ஸூரிகளுடைய
ஹ்ருதயங்களை உகப்பியா நின்று கொண்டு உபய விபூதியையும் ஆசன பலத்தாலே ஜெயித்து –
———————————————————————
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply