ஸ்ரீ யபதித்வம்-பஞ்ச பிரகார-அருளிச் செயல் ஸ்ரீ ஸூகதிகள் —
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு –வடிவாய் நின் வள மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு —
————————-
ஸ்ரீ யபதித்வம்-பஞ்ச பிரகாரத்தில் –
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை
அரங்கத்து அரவணைப் பள்ளியானை -4-10-10-பெரியாழ்வாரின் அறு சுவை அமுது இது
திருமாலிரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே ஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே -திருவாய்மொழி-10-7-8-
————————-
ஸ்ரீ யபதித்வம் –பரத்வத்தில் –
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று -திருப்பாவை-9-
திருக் கலந்து சேரு மார்ப தேவ தேவ தேவனே –திருச் சந்த விருத்தம் -103
தேவ பிரானுடை கரிய கோலத் திரு வுருக் காண்பன் நான் -கண்ணி நுண் சிறுத் தாம்பு –3
மாதவன் பேர் சொல்லுவதே யோத்தின் சுருக்கு –இரண்டாம் திருவந்தாதி–39
நாராயணன் என்னை யாளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் -நான்முகன் திருவந்தாதி –14
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது இருவரவர் முதலும் தானே -திருவாய்மொழி –2-8-1-
ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும் கூறாளும் தனி யுடம்பன் –திருவாய்மொழி-4-8-1-
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே –திருவாய்மொழி–4-9-10-
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பலநாள் அடியேன் இன்னம் தளர்வேனோ –திருவாய்மொழி–6-9-3-
திரு மா மகள் கேள்வா –பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே –திருவாய்மொழி–6-10-4-
திருமாலிரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே ஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே -திருவாய்மொழி-10-7-8-
உனக்கே ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ -திருவாய்மொழி–10-10-6-
ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடைய னானகுருவை அடைந்தக்கால்
மா நிலத்தீர் தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -உபதேச ரத்ன மாலை –61
—————————
ஸ்ரீ யபதித்வம் –வியூஹத்தில்-
அரவத்தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -5-2-10-
பரத்திலும் பரத்தை யாதி பௌவ நீரணைக் கிடந்து உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்துகந்து -திருச் சந்த விருத்தம் -29-
திருமகளும் மண் மகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்
திருமகள் மெல் பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த மாலோத வண்ணர் மனம் -முதல் திருவந்தாதி–42
சுடர்ப் பாம்பணை நம்பரனைத் திருமாலை அடிச் சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன் –திருவாய்மொழி–8-7-11
திருமாலிரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே ஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே -திருவாய்மொழி-10-7-8-
—————————————-
ஸ்ரீ யபதித்வம் –விபவததில்–
குருமா மணிப்பூண் குலாவித் திகழும் திரு மார்பிருந்தவா காணீரே -1-2-10-
பின்னை மணாளனை -2-3-5-
மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்துமுடன் வீழ -2-6-8-
பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டமைத்து வைத்தேன் -3-3-3-
என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக் குட்டச் செங்கண் மாலே -3-3-5-
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு விருப்புற்று அங்கே ஏக –வன்மையைப் பாடிப் பற-3-9-3-
சீற்றம் இலாதானைப் பாடிப் பற சீதை மணாளனைப் பாடிப் பற -3-9-4-
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும் வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டார் உளர் -4-1-4
திருமாலை நாடுதிரேல் வாரேறு கொங்கை யுருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு தேரேற்றி சேனை நடுவு போர் செய்ய -4-1-5
பல்லாயிரம் தேவிமாரோடு பௌவம் எறி துவரை எல்லாரும் சூழச் சிங்கா சனத்தே இருந்தானை -4-1-6-
உலகாண்ட திருமால் கோயில் திருவடி தன திரு உருவும் திருமங்கை மலர்க்கண்ணும் காட்டி நின்று -4-9-1–
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராடேலோ ரெம்பாவாய்–திருப்பாவை -20
நெய்வாய வேல் நெடும் கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை எம்மி ராமாவோ -பெருமாள் திருமொழி-9-2-
இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டவன் தம்பிக்கு அரசும் ஈந்து திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை –பெருமாள் திருமொழி-10-7-
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் ஆய நின்னை யாவர் வல்லார்-திருச் சந்த விருத்தம் -41
இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவி தனக்கு இறைவன்
தன்துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கேல்லாம் வன்துணை –பெரிய திருமொழி -2-3-5-
திவளும் வெண் மதி போல் திருமுகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த அவளும் நின்னாகத்திருப்பதும் அறிந்தும்
ஆகிலும் ஆசை விடாளால்–பெரிய திருமொழி -2-7-1-
ஆயர் பூம் கொடிக்கு இனவிடை பொருதவனிடம் -பெரிய திருமொழி-3-1-5-
பின்னை செவ்வித் தோள் புணர்ந்த வெந்தை-பெரிய திருமொழி- -4-5-3-
விண்ணவர் அமுதுணவமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -பெரிய திருமொழி–6-1-2-
திரு மறு மார்பன் கிடந்து திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தை சாடிய -பெரிய திருமொழி-10-7-9-
தழும்பிருந்த சாரங்க நாண் தோய்ந்த வா மங்கை தழும்பிருந்த தாள் சகடம் சாடி
தழும்பிருந்த பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல் -முதல் திருவந்தாதி–23-
நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்து பாயும் பனி மறுத்த பண்பாளா -முதல் திருவந்தாதி–86
நீ யன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே -இரண்டாம் திருவந்தாதி-30
நரம் கலந்த சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே அம் கண் மா ஞாலத்து அமுது –இரண்டாம் திருவந்தாதி–84-
நீண்ட திருமால் அனைத்து உலகும் உள் ஒடுக்கியால் மேல்-மூன்றாம் திருவந்தாதி – -93
வம்பவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த செம்பவளத் திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடி-திருவாய்மொழி – -3-5-4-
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇ கோளியார் கோவலனார் குடக் கூத்தனார்–திருவாய்மொழி -4-2-5
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை கோவை வீயச் சிலை குனித்தாய்–திருவாய்மொழி -4-3-1-
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை –திருவாய்மொழி -5-6-11-
திருமாலிரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே ஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே -திருவாய்மொழி-10-7-8-
——————-
ஸ்ரீ யபதித்வம் –அந்தராமித்வத்தில் –
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார் -4-4-5-
அரவத்தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -5-2-10-
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று -திருப்பாவை-9-
திரு மறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து -திருமாலை-40
திரு வார மார்பதன்றோ அடியேனை ஆட கொண்டதே-அமலனாதி பிரான்-5
திருமார்பனைச் சிந்தையுள் வைத்துமென்பீர்—பெரிய திருமொழி–3-2-2-
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் –பெரிய திருமொழி-3-2-7-
வந்து உனதடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னாருயிரே –பெரிய திருமொழி–3-5-1-
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய மைந்தா அம் தண் ஆலிமாலே –பெரிய திருமொழி -4-9-20
என்றும் மறந்து அறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை
என்றும் திருவிருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கருவிருந்த நாள் முதலாக் காப்பு -நான்முகன் திருவந்தாதி —92
திருநாரணன் சேர் திருநாவாய் அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே—திருவாய்மொழி -9-8-3-
திருமாலிரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே ஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே -திருவாய்மொழி-10-7-8-
நங்கள் பஞ்சித் திருவடிப் பின்னை தன காதலன் பாதம் நன்னா வஞ்சர்க்கரிய இராமானுசன் –இராமானுச நூற்றந்தாதி-28
——————-
ஸ்ரீ யபதித்வம் –அர்ச்சாவதாரத்தில் –
திருவுடையாள் மணவாளா திருவரங்கதே கிடந்தாய் -2-7-2-
திருப்பேர்க் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே -2-9-4-
திருக் கோட்டியூர் திருமாலவன் திரு நாமங்கள் எண்ணக் கண்ட விரல்களால் –4-4-3-
திருவாளன் திருப்பதி மேல் திருவரங்கத் தமிழ் மாலை -4-8-10-
திருவாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே-4-9-10-
வேங்கடத்துத் தன்னாகத் திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு என்னாகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாள் தோறும் -நாச்சியார் திருமொழி –8-4
தேட்டரும் திறல் தேனினை தென்னரங்கனை திருமாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனைவாழ்த்தி மால் கொள் சிந்தையராய் -பெருமாள் திருமொழி –2-1-
பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார் திரு நன் மார்வும் மரகத யுருவும் தோளும்-திருமாலை –20-
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான் அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம் –பெரிய திருமொழி –1-7-9-
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய மைந்தா அம் தண் ஆலிமாலே –பெரிய திருமொழி -4-9-20-
திரு மா மகள் மருவும் சிறு புலியூர்ச் சல சயனத்து அருமா கடலமுதே உனதடியே சரணாமே-பெரிய திருமொழி–7-9-9–
மலர்மகள் காதல் செய் கணபுரம்–பெரிய திருமொழி-8-7-4-
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ செங்கண் நெடுமால் திரு மார்பா
பொங்கு பட மூக்கில் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய் குட மூக்கில் கோயிலாகக் கொண்டு –இரண்டாம் திருவந்தாதி–97-
எந்தை ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திரு வல்லிக் கேணியான் சென்று -மூன்றாம் திருவந்தாதி -16
திரு நாரணன் தாள் காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ –திருவாய்மொழி -4-1-1-
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை யுறை மார்பா நிகரில் புகழாய் யுலகம் மூன்று உடையாய் என்னை யாள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே புகல் ஓன்று இல்லா வடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே –திருவாய்மொழி –6-10-10-
இன்பம் பயக்க எழில் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன் விளை–திருவாய்மொழி -7-10-1-
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு –திருவாய்மொழி -10-6-9
திருமாலிரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே ஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே -திருவாய்மொழி-10-7-8-
மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசன் –இராமானுச நூற்றந்தாதி- 10
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply